திருமணம் செய்யும் 60 சதவீதமானோருக்கு 3 வருடங்களில் திருமணம் கசக்கிறதாம்
இலங்கையில் திருமணம் செய்யும் 60 சதவீதமானவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் திருமணம் கசப்பதாகவும், அதிக எண்ணிக்கையானோர் விவாகரத்து செய்வதாகவும்,பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் முன்னாள் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி ரொஜி ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விவாகரத்து செய்யம் பெரும்பாலான தம்பதிகள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டிய காலத்தில் உணர்வுபூர்வமாக சரியாக புரிந்து கொள்ளாமை , ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் நடக்காமை , பொறுமையாக நடந்து கொள்ளாமை , பாலியல் தேவைகளை சரியாக புரிந்து கொள்ளாமை , மற்றும் பாலியல் தொடர்பாக பிழையாக புரிந்து கொண்டுள்ளமையே இது போன்ற விவாகரத்துக்கு பிரதான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நாட்டில் விவாகரத்து புரிவோர் வீதாசாரம் சீக்கிரமாக அதிகரித்து வருவதாகவும் , மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அதிக எண்ணிக்கையானவை விவாகரத்து தொடர்பானவை எனவும் சட்டத்தரணி ரொஜி ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment