Thursday, December 8, 2011

அழகுக் கலை நிலையங்களும் பதிவு செய்யப்பட வேண்டுமாம்

அழகுக் கலை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையங்களை சுகாதார அமைச்சில் பதிவு செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அழகு கலை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையங்கள் மீதான சோதனை நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இவற்றை சுகாதார அமைச்சில் பதிவு செய்வதற்கான திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தேசிய அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையினால் நாட்டிலுள்ள அழகு சாதன நிலையங்களும் விற்பனை கூடங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அழகு கலை நிலையங்களையும் அழகு சாதன பொருட்கள் விற்பனை கூடங்களையும் பதிவு செய்தல், அந் நிலையங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரம் அழகு கலை நிபுணர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கான தகுதிகள் உட்பட பல்வேறு விடயங்கள் இத்திட்டத்தின் கீழ் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன் பிரகாரம் கடந்த மாதம் 842 அழகு கலை நிலையங்களும் , 812 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 15 நிறுவனங்கள் பல்வேறு குறைபாடுகளை கொண்டதென இணங்காணப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com