புலி சந்தேக நபர்களை விடுதலை செய் - அமெரிக்கா
கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா இலங்கையை கேட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க்டோனர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசு புலிப் பயங்கரவாதிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் புதிதாக உள்ளடக்கவுள்ள ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் அவதானமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment