டிசம்பரில் போர் வெடித்தால் தாக்குதல் தளபதி லண்டனிலிருந்து வருவாரா?
அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்கும் என்று நம்புகின்றோம் எனவும் தவறினால் எம் மக்களை அணி திரட்டி அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளத் தயங்கோம் எனவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நம் இளைஞர் சமுதாயம் மிகவும் எம்முடன் அணி திரள வேண்டும் எனவும் கோருகின்றோம் என கல்முனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது பா.உ மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியபோது இந்தியாவும் , அமெரிக்காவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை செவியில் பிடித்து இழுத்து கொண்டு மேசை அருகில் விட்டு பிரச்சினையை பேசி முடி என்று கூறியுள்ளது.
ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் தமது அரசியல் சுகபோக வாழ்கை அதோ கதியாகிவிடும் என்ற நடுக்கத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பேச்சிலிருந்து உடைத்துக்கொண்டு ஓடலாம் என வழிபார்த்துக்கொண்டு நிற்கின்றது.
இதற்கு ஏதுவாக தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் , கருத்துக்களையும் வெளிவிட்டுவரும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால் அடுத்தகட்ட நகர்வை தொடர்வோம் என்று வேறு மிரட்டுகின்றது.
இவர்கள் கூறும் அடுத்தகட்ட நகர்வு என்ன? மீண்டுமொரு முள்ளிவாய்காலா? இவ்வாறுதான் 83க் முற்பட்ட காலப்பகுதிகளில் மக்களை சூடேற்றி போரை அவர்களுக்கு பரிசாக வழங்கிவிட்டு கடந்த தாங்கள் 3 தசாப்தங்களின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் சொகுசாக களித்து வந்தனர். ஆனால் அந்த யுகத்திற்கு முடிவு வந்துள்ள நிலையில் தற்போது அடுத்த கட்ட நகர்வு என்று பழையகுருடி கதவ திறடி மக்களை கிலிகொள்ள வைக்கின்றனர். அச்சமூட்டுகின்றனர்.
கடந்த 3 தசாப்பங்களில் 3 தலைமுறைக்கான இளைஞர் யுவதிகளை தமிழ் சமூகம் இழந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், மாவை, சுரேஸ், செல்வம் உட்பட அனேகரின் முழுக்குடும்பமும் இந்தியா மற்றும் கனடா ஐரோப்பிய நாடுகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே மாவை டிசம்பரின் பின்னர் நகர்த்தவிருக்கும் அடுத்த கட்ட நகர்விற்கு இளைஞர்கள் அணிதிரளவேண்டும் எனக் கேட்கின்றார். அவ்வாறாயின் லண்டனிலுள்ள மாவையின் மகன் இங்குள்ள இளைஞர்களுடன் வந்து இணைவாரா? தனது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இங்குள்ள இளைஞர் யுவதிகளின் மன நிலையை பாதிக்ககூடிய போராட்டம் என்கின்ற வார்த்தை மக்கள் முன் எழுந்தமானமாக கொட்டுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைவரும் தமது பிள்ளைகளை நாட்டுக்கு கூட்டிவரவேண்டும்.
இலங்கையிலே தமிழ் இளைஞர் யுவதிகள் செத்து மடிந்து கொண்டிருந்தபோது மாவையின் மகன் இந்தியாவிலே உல்லாசமாக இளைஞர்களுடன் காலம் களித்த ஒரு நிகழ்வை இங்கு காண்கின்றீர்கள். இவ்வாறான பல பதிவுகளை இலங்கைநெற் வாசகர்களுக்கு கொண்டுவரக் காத்திருக்கின்றது. VIII
1 comments :
இந்தககூட்டத்தின் குடும்பம் முல்லிவாக்காலில் பாதிக்கபடவில்லை.
இன்னுமொரு முல்லவாக்கால் வந்தாலும் பாதிக்கபடமாட்டார்கள்.
இவர்கள் இப்படித்தான் பெசுவார்கள்.
பொதுமக்கழுக்கு அறிவு எங்கபொச்சுது?
முன்புதுவங்கி 30 வருடத்தின்பின் அதைவிடகெவழமாகியிடடாங்க .
பொதுமடாசாமி
நல்லமாட்டுககு ஒரு சூடு...............
Post a Comment