அரசாங்கம் வெலிஓயாவை பிரித்து சிங்கள மக்களை குடியமர்த்துகிறது-த.தே.கூ
முல்லை தீவு மாவட்டத்திற்குள் வெலி ஓயா என்ற பெயரில் புதிய பிரதேச செயலாளர் பிரிவை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெலி ஓயா உள்ளடங்கும் முல்லை தீவு மாவட்டத்தில் கரகுரேபத்து பிதேச செயலாளர் பிரிவிற்குள் மக்கள் வசிக்காத பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியமர்த்தி இந்த புதிய பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்குவதற்கு அரசு தயாராவதாக சுட்டிக்காட்டியுள்ள கூட்டமைப்பு இது தொடர்பாக அனுராதபுரம் மற்றும் முல்லை தீவு மாவட்ட செயலாளர்களிடையே பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை வெலிஓய பிரதேசத்தின் நிருவாக விடயங்கள் அனுராதபுர மாவட்ட செயலாளர் மூலமாக செயற்படுத்தப்பட்டது. ஆயினும் அந்த பிரதேசம் முல்லை தீவு மாவட்டத்திற்கு உரியதாகும்.
1 comments :
They have pledged to go on with racial discrimination.They believe this is the best tool for them to pretend as the guardians and protectors of tamils.Racialism cannot bring prosperity to the country.A cosmopolitan society is the only remedy to have a prosperous Srilanka.Unfair opinion of a people who belong to different race reflects badly on every tamils live in Srilanka.We look for people truly with cosmopolitan outlook to have a better Srilanka
Post a Comment