Thursday, August 25, 2011

வடக்கு,கிழக்கு,தெற்கில் தோன்றிய இனவாதி- களாலேயே நாடு அழிவுப்பாதைக்கு சென்றதாம்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறுகிறார்
வடக்கு, கிழக்கு பகுதிகளில் உருவாகிய இனவாதிகளினதும் தெற்கில் தோன்றிய இனவாதிகளினது செயற்பாடுகள் காரணமாகவே நாடு அழிவுப் பாதையில் சென்றது. ஆனாலும் பிரதான இரண்டு கட்சிகளும் ஒரு கோணத்தில செயற்பட்டு வந்தன என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறினார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை( 19) இடம் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்கவின் வாழ்க்கை வரவாறு அடங்கிய திஸ்ஸ என்ற பெயரிலான நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,

அண்மையில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது, நான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றியிருந்தேன். அதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் மோசமான முறையில் எனது மகனை விமர்சித்தனர். எனக்கும் இந்த நாட்டில் உரிமை இருக்கிறது. ஜனநாயக ரீதியிலேயே நான் எனது கருத்தை தெரிவி த்திருந்தேன். நான் இன்னும் சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக இருக்கின்றேன். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மற்றும் ஆலோசகர் என்ற அடிப்படையிலேயே இந்நிகழ்வில் நான் கலந்து கொள்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியில் நான் ஒரு போதும் இணையமாட்டேன். நான் பிறந்ததும் இறப்பதும் சுதந்திரக் கட்சியில்தான். ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இன்னொரு கட்சி முக்கியஸ்த்தரின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதில் எந்தவித தப்பும் இல்லையென நான் கருதுகிறேன்.

நாட்டை சிறந்த முறையில் கட்டி எழுப்பவும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும் பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 1994 ஆம் ஆண்டில் நான் நாட்டின் தலைவராக பதவி ஏற்ற போது பல சவால்கள் பிரச்சினைகள் இருந்தன. அப்போது எம்முடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல முறை அழைப்பு விடுத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டு கட்சிகளும் ஒன்றிணைய முடியவில்லை. நாட்டில் ஜனநாயகம் பலப்பட வேண்டுமாக இருந்தால் ஒரு கட்சி இருப்பது நல்லதல்ல. இரண்டு கட்சிகள் இருக்க வேண்டும. அதாவது எதிர்கட்சி பலமுடையதாக இருக்க வேண்டும் என்றார்.

2 comments :

Anonymous ,  August 25, 2011 at 1:37 PM  

Respected Madam,your most respected father laid the first foundation for
the greater mistake..Opportunists added fuel to the burning fire.Now it is burning.Some Opportuninsts had a good time and gone,still some are having a enjoyable time on regard to this issue.Madam,
You would have solved it during your time,as you were the most senior executive of your government

Anonymous ,  August 25, 2011 at 3:22 PM  

Dear Madam,
Do not worry about a few people in the government has to say about Vimukthi's comment. The person who made this comment is a minister who uses his power to molest young girls
who want to become actresses and get his henchas to give some minor roles for them in state ITN & Rupavahini dramas including the prostitute who was caught recently
Anshka Sonali.The mistake you was making Mahinda the president. L.M.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com