இலங்கையரை வாகனத்தால் மோதிய அவுஸ்திரேலியருக்கு 8 வருட சிறை.
இலங்கையர் ஒருவரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றத்திற்காக அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 08 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட அவுஸ்ரேலியர் 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜன் லோகேஸ்வரன் என்ற நபரை வாகனத்தால் அடித்துவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச்சென்றிருந்தார்.
பின்னர் கைதுசெய்யப்பட்ட இந்நபர் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கவில்லை என்றும் கெரோயின் அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியுள்ளார் என்றும் விசாரனைகளில் இருந்து தெரியவந்தது. இதனை விசாரித்த நீதிபதி இவருக்கு 08 வருட சிறைத்தண்டனை வழங்கிதுடன் 6வருடங்களுக்கு பிணை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்துள்ளார்.
குறிப்பிட்ட அவுஸ்ரேலியர் ஏற்கனவே 594 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்குது.
0 comments :
Post a Comment