வீரனை துரோகியாக்கி , துரோகியை வீரனாக்கி அரசு உலக சாதனை. ரணில்.
நாட்டினை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த வீரனை துரோகியாக மாற்றி இந்நாட்டின் அழிவுக்கு வித்திட்ட கே.பி எனும் துரோகியை வீரனாக மாற்றியமைத்து அரசு உலக சாதனை படைத்துள்ளது என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுப்பிறப்பை கட்சி முக்கியஸ்தர்களுடன் கொண்டாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறிய எதிர்கட்சித்தலைவர் அரசின் உலக சாதனைகளாக சிலவற்றை தெரிவித்துள்ளார். அதில் தென்னிந்தியாவிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்ததன் மூலமாக அரசாங்கம் புதிய உலக சாதனை புரிந்துள்ளதாக கேலி செய்துள்ள அவர் இந்த நாட்டில் இரண்டாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் தேங்காய் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாறுகள் உள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டில் இன்று மக்கள் வாழ்கைச்சுமையை தாங்க முடியாதவர்களாகவும் , ஊடகங்கள் பல்வேறு அழுத்தங்களை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment