Thursday, January 6, 2011

ஜன 9 புத்தளத்திலுள்ள யாழ் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்திற்காக பஸ்களில் புறப்படுகின்றனர்.

வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிப் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக புத்தளத்தின் பல பகுதிகளில் வசித்து வரும் முஸ்லிம்கள் தமது புத்தள பதிவுகளையும் தாங்கள் பெற்றுவந்த உலர் உணவு பங்கீடுகளையும் நிறுத்திவிட்டு வடமாகாணம் நோக்கி விசேட பேருந்துகளில் செல்லவுள்ளனர்.

மன்னார் ,யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களின் தகவல்களை பதிவு செய்யும் வேலை புத்தளத்தின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது. இன்று வரை மன்னாரை சேர்ந்தவர்கள் 500பேர் வரையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் 200 பேர் வரையும் குடும்ப ங்களாக தம்மை பதிவு செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

பதிவுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீள் குடியேற்ற நடவடிக்கைகளை சுமார் 21 அரச சார்பற்ற சிறிய அமைப்புகள் இணைத்து செய்து வருகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் என்ற கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் நோக்கி செல்லவுள்ளளர.; எதிர்வரும் ஞாயிற்று கிழமை இரவு புறபட்டு யாழ்ப்பாணம் செல்லும் இவர்கள் 11 ஆம் திகதி செவ்வாயன்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தமது பதிவுகளை மேற்கொண்ட பின்னர் மீண்டும் 11 ஆம் திகதி செவ்வாயன்று இரவு புத்தளம் நோக்கி திரும்புவார்கள் என்றும் பின்னர் அவர்கள் மேற்கொள்ளும் பதிவுகளின் அடிப்படையில் அரச அதிகாரிகளினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பிட, நிவாரண உதவிகள தொடர்பான உத்தர வாதம் கிடைத்த பின்னர் இவர்கள் திரும்புவர் எனவும் தெரியவருகின்றது.

புத்தளத்தில் உள்ள பல முஸ்லிம்கள் தமக்கு புத்தளப்பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் நிவாரணப்பொருட்கள் வட மாகாணத்திலும் கிடைக்குமா என்ற அச்சத்தில் அங்கு செல்ல நாட்டம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com