கச்சத்தீவை மீட்க கோரி மீனவர்கள் உண்ணாவிரதம்
கச்சத்தீவை மீட்கக்கோரி சென்னையில் மீனவமக்கள் உண்ணாவிரதம் நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும், சுதந்திரமாக மீன்பிடிக்க வகை செய்ய வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் மேம்பாட்டு சங்கம் சார்பில், சென்னை ராயபுரத்தில் இன்று உண்ணாவிரதம் நடந்தது. தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment