Tuesday, June 2, 2009

கூலிக்கு பொதி சுமந்த கூட்டைமைப்பு கழுதைகள் தாம் இத்தனைகாலமும் பயங்கரவாதம் புரிந்ததாக ஏற்றுக்கொண்டுள்ளனர். -விருகோதரன்

இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனவர்ணிக்கப்படும் இலங்கைத் தீவை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதம் பூண்டோடு அழிக்ப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் இவ்வாறானதொரு கொடிய பயங்கரவாத இயக்கம் நிலைகொண்டிருந்தது என்ற வரலாறு மறைக்கப்பட வேண்டுமாயின் விரும்பியோ விரும்பாமலோ புலிகள் விட்டுச்சென்ற வடுக்கள் எச்சங்கள் யாவும் இல்லாது ஒழிக்கப்படவேண்டும்.

புலிகள் இத்தேசத்திற்குச் செய்த துரோகங்கள், காட்டுமிராண்டித்தனங்கள் மக்கள் மனதில் இருந்து அகற்றப்படமுடியாதவையாக இருந்தாலும், அவை அகற்றப்பட்டேயாக வேண்டும். புலிகளது வன்செயல்கள், காட்டுமிராண்டித்தனங்கள், அரசியல் அராஜகங்கள் மக்கள் மனங்களில் இருந்து நீக்கப்படாதவிடத்து அவ்வியக்கம் இலங்கைத்தீவில் இருந்ததற்கான தடயங்கள் நிலைத்து நிற்கும்.

புலிகள் எம்மக்களுக்கு விட்டுச் சென்றுள்ள துயர்களில் இருந்து அவர்கள் மீள்வதாயின் புலி எனும் நாமம் உச்சரிக்கப்படக் கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் நன்றாக அவதானிக்கப்பட்டு அவை புலிகளது பாணியில் அணுகப்படவேண்டும். அந்த வகையில் தமிழ் கூட்டமைப்பு எனும் புலிக் கூத்தமைப்பு இத்தேசத்தில் இருந்து விரட்டியடிக்கப்படவேண்டும்.

தமிழ் மக்களை என்றுமே தமது ஆயுதக்கொடும் பிடியில் வைத்திருக்க விரும்பிய புலிகள் மேற்படி பச்சோந்திகளின் கூட்டொன்றை அமைத்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டு வைத்தனர். இலங்கை மக்கள் முன் ஜனநாயக வழியல் சென்று தமக்கான அங்கீகாரத்தை பெற முடியாத புலிகளின் அழுக்குகளை தமது தோளில் சுமந்து திரிந்த கூட்டமைப்புக் கழுதைகள் புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் மக்களின் அன்றாட வாழ்வை அவலங்களுக்குள்ளாக்கினர்.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் காணும் பொருட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூட்டமைப்பினரை, அரசாங்கங்கள் வருந்தி அழைத்தபோதேல்லாம் புலிகளின் நலனில் நின்று, பயங்கரவாத இயக்கமான புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு பிரகடணப்படுத்தவேண்டும் எனவும் உலகின் முதல்தர பயங்கரவாதியும், உலகில் உள்ள போராட்ட வீரர்களின் வீரத்திற்கு மாசு கற்பித்து எதிரிகாலில் அட்டாங்க நமஸ்காரம் செய்த கோழையை தேசியத் தலைவனாக ஏற்றுக்கொள்ளவும் கூறினர்.

இறுதியாக யுத்தம் உக்கிரம் அடைந்து மக்கள் அவலங்களின் சிகரத்தை எட்டியிருந்தபோதும், அம்மக்களின் அவலங்களை உலகுக்கு எடுத்துரைத்து புலிகளுக்கு அனுதாபம்தேடி அலைந்தனரே அன்றி அம்மக்களின் துன்பதுயரங்களுக்கான தீர்வொன்றை காணவோ, புலிகளின் பிடியில் இருந்து தப்பித்து வந்த மக்களுக்கு வேண்டிய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ மறுத்திருந்தனர்.

வன்னியில் இருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற மேற்படி கழுதைகள் கொழும்பிலும் இந்தியாவிலும் பிறநாடுகளிலும் சுகபோகம் அனுபவிக்கையில் தென்பகுதி அரசியல்வாதிகள் அம்மக்களை நேசக்கரம் நீட்டி அரவணைத்தனர்.

புலிகளியக்கம் வேரோடு புடுங்கப்பட்டுள்ளது கண்ட கூட்டமமைப்புக் கழுதைகள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுமுகமாக கதையளக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியா சென்று கருணாநிதியைச் சந்தித்த அவர்கள், இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டனராம் எனவும் கதைவிட்டுள்ளனர். இந்திய அரசு கூட்டமைப்புக் கழுதைகள் சொல்லி இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. கூட்டமைப்புக் கழுதைகள் கோபாலசாமி, பழநெடுமாறன் போன்ற பச்சோந்திகளுடன் சேர்ந்து புலியை காப்பாற்ற தெருக்கூத்து ஆடியபோது இந்திய அரசு அதன் வைத்தியக் குழுவையும் நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது.

இலங்கையில் பயங்கரவாதம் முடிவுற்று அபிவிருத்தியை நோக்கி நகர்கின்ற வேளையில் இந்தியா தனது பூரண ஆதரவை இலங்கை அரசிற்கு வழங்கும் என உத்தரவாதம் அளித்திருக்கின்ற நிலையில், இந்தியாவில் கிடக்கின்ற தெருத்தேங்காய்களை அள்ளிக்கொண்டுவந்து வவுனியாவில் உள்ள வழிப்பிள்ளையாருக்கு அடித்து மேலும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியும் என கூட்டமைப்பு கழுதைகள் கருதுகின்றனர்.

மேலும் முப்பது வருடகாலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட அமைப்பொன்றின் 9000 உறுப்பினர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கும்படி கழுதைக் கூத்தமைப்பின் தலைவர் சம்பந்தன் சம்பந்தமில்லாமல் கேட்டுள்ளார். சாமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஐரோப்பிய நாடுகளின் சிறந்த அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளால் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகையில் சமாதானம் என்ற சொற்பதத்திற்கு பாசிசஅர்த்தம் கற்பிக்கும் முகமாக தமக்கு ஒவ்வாதவர்களை சுட்டுத்தள்ளிய புலிகளுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு கொடுத்துவிட்டால் அவர்கள் திருந்தி விடுவார்கள் என எதிர்பார்க்கும் கழுதைகளின் தலைவரின் அறிவை எந்த அளவுகோல் கொண்டு கணிப்பிடுவது என்பது தெரியாமலிருக்கின்றது.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களோடு மக்களாக எஞ்சியுள்ள புலிகளை மக்கள் காட்டிகொடுத்து அவர்களை தம்மில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்ற நிலையில், சம்பந்தனின் இம்முயற்சி இரு சுயநல நோக்கங்களை கொண்டது. ஓன்று அவர்கள் விடுபட்டால் கடந்தமுறை தாம் புலிகளின் ஆயுதபலம் கொண்டு பாரளுமன்றம் சென்றதுபோல் விடுதலைபெறும் புலிகைளக் கொண்டு மக்களை விரட்டி வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் செல்வது. இரண்டாவது தடுத்துவைக்கப்பட்டுள்ள 9000 இற்கு மேற்பட்ட புலிகளின் உறவினர்களுக்கு இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கின்றோம் எமக்கு வாக்குப்போடுங்கள் என அவர்களை ஏமாற்றுவது.

அத்துடன் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள கூத்தமைப்பு எம்பி சிறிகாந்தா குத்துக்கரணம் அடித்து ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு தாம் இனிமேல் உழைக்கப்போவதாக கூறியுள்ளதன் மூலம் தாம் இத்தனைகாலமும் அரசியல் தீர்வுக்கு உழைக்கவில்லை பயங்கரவாத தீர்விற்கே உழைத்தார்கள் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார்.

மேலும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கின்றோம் என கூறியிருப்பதானது, இத்தனை காலமும் இலங்கை அரசு நாடுபிளவு படுகின்றதோர் தீர்மானத்தை முன்வைத்த காரணத்தினாலேலே தாம் அப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாது இந்தியாவில் உள்ள பச்சோந்திக்கூட்டங்களுக்கு தமிழ் மக்களின் பணத்தை தாரைவார்த்து தெருக்கூத்து நாடாத்தியதாக அர்த்தப்படுத்தப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் இன்று மரணித்துப்போன புலித்தலைமை தவிர எஞ்சியுள்ள புலிகளுக்கு மக்கள் தமது தண்டனைகளை கொடுத்துவருவது இடைத்தங்கல் முகாம்களில் இடம்பெறுகின்ற நாளாந்த செயற்பாடுகள் மூலம் தெளிவாகின்றது.

புலிகளுக்காக கூலிக்கு பொதி சுமந்த கூட்டைமைப்பு கழுதைகள் தாம்
இத்தனைகாலமும் தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்களுக்கும் பாவங்களுக்கும் பிராயச்சித்தமாக இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்காக தமது தோள்களில் நீர் பீப்பாக்களைச் சுமந்து, அங்குள்ள மலசல கூடங்களில் உள்ள கழிவுகளை அகற்றி உடலை வருத்தி உழைப்பதன் மூலம் பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளலாம். VIII

1 comments :

Rasber June 3, 2009 at 5:23 AM  

Ananda Sankaris, Karuna Ammans and other tamil parties should stop criticizing LTTE as they are totally eliminated and Prabha is dead. Its not respectful talking about a dead person. If you agree it or not, he has been a great leader than you. So, atleast, stop accusing others for your plight and take some initiative to unite all tamils in Lanka for resolving the ethnic problems. I've been reading all the anti-LTTE websites and you people are wasting your time pointing fingers at dead LTTE which is futile. I would suggest you people to spend your time wise in finding a solution together.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com