புதுக்குடியிருப்பு அடர்ந்த காட்டினுள் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கண்டுபிடிப்பு!!
புலிகளினால் பல தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 13 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பின் அடர்ந்த வனாந்தரப்பகுதியினுள் எரிபொருள் தாங்கிகளுள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இவ் ஏவுகணைகளில் அவை எப்போது? ஏவரால்? ஏத்தாக்குதலுக்கு? பயன்படுத்தப்பட்டது என்பது எழுதப்பட்டுள்ளது.
அவ்வகையில் முதலாவது ஏவுகணைத் தாக்குதல் 1995ம் ஆண்டு 04ம் மாதம் 28ம் திகதி கடாபி என்பவரால் பிற்பகல் 04.10 மணியளவில் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து அவ்ரோ ரக விமானம் மீது மேற்கொள்ளப்பட்டதெனவும் தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதல்களின் விபரங்களும் குறிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஏவுகணைகள் கொண்டு 5 எம்ஐ24 விமானங்கள், 1 எம்ஐ5 விமானம், 2 அவ்ரோ விமானங்கள், 1 புக்காரா, 1 வை8, 1 வெல்12, அன்ரனோ போன்றவற்றிற்கும் கடந்த 2006.02.30 கடற்பரப்பில் டோரா படகொன்றிற்கும் புலிகள் தாக்குதல் நாடாத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment