அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 773 சிவிலியன்கள் வருகை.
புலிகளின் பிடியிலியிலிருந்து தப்பி 773 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக களமுனையிலுள்ள படைவீரர்கள் தெரிவித்தனர்.கடந்த மூன்று நாட்களுக்குள்ளேயே மேற்படி தொகையினர் அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை முல்லைத்தீவு புதுமாத்தளனிலிருந்து 112 சிவிலியன்கள் விஸ்வமடு நோக்கி தப்பி வந்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பி வந்த மேற்படி சிவிலியன்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக 60 பேர் பலத்த சூட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காயங்களுடன் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இவர்கள் படையினரைத் தேடி வந்துள்ளனர். படையினர் உடனடி யாக வைத்தியர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கிய பின்னர் காயமடைந்த 60 பேரும் கிளிநொச்சி வைத்திய சாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
விஸ்வமடு நோக்கி நேற்று வந்த 112 சிவிலியன்களும் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்டவர்களென்றும் மோதல்கள் காரணமாகவே முல்லைத்தீவு நோக்கி சென்றி ருந்ததாகவும் விஸ்வமடுவிலுள்ள படைவீரர்கள் தெரி வித்தனர்.
கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் 661 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்துள்ளனர். மேற்படி சிவிலியன்களுள் 621 பேர் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள படையினரிடம் வந்து சேர்ந்து ள்ளனர்.
ஏனைய 40 பேரும் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை வந்தடைந்திருப்பதாகவும் பிரிகேடியர் கூறினார். முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடை ந்திருப்போர் வவுனியாவிலுள்ள நலன்புரி கிராமங்க ளுக்கும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளோர் அங்கிருக் கும் நலன்புரி கிராமங்களிலும் குடியமர்த்தப்படவுள்ளனர்.
முல்லைத்தீவில் பல்வேறு முனைகளினூடாகவும் முன்னேறி வரும் படையினர் புலிகளை ஒழிப்பதற்காக கடும் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக கூறிய பிரிகேடியர் நேற்று வரை 45 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
0 comments :
Post a Comment