Wednesday, May 29, 2013

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் தலைவன் பலி‘

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வடக்கு பாகிஸ்தானின் மிரான்ஷா பகுதியில் காஷ்மா என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று காலை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின.

அதில், அந்த வீடு இடித்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி வீட்டில் தங்கியிருந்த 6 பேர் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் 2ம் கட்ட தலைவனான வலி-யுர்-ரஹ்மான் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்கானிய தலிபான் இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தற்போதைய தலைவனாக ஹக்கீமுல்லா மெஹ்பூத் உள்ளான்.

அவனுக்கு அடுத்தபடியாக தலைமை பொறுப்பை ஏற்கவிருந்த விலி-யுர்-ரஹ்மான் இன்றைய அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தலிபான்களுக்கு ஏற்பட்ட கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன் பிறகு தற்போதுதான் முதன்முறையாக அமெரிக்காவின் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Read more...

இலங்கை விமானப்படையினால் காப்பாற்றப்பட்ட வன்னி இளைஞனின் கை.

கடந்த 25ம் திகதி அன்று வன்னியில் வறுமைக்கோட்டின் கீழ் நாளாந்த உழைப்பில் வாழும் இளைஞன் ஒருவன் வழமைபோல் வன்னியிலுள்ள மரச்காலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். மாலை 6.30 மணியளவில் அங்குள்ள இயந்திர வாள் இளைஞனின் கையை பதம் பார்த்தது. உடன் வேலை செய்தவர்கள் தோழுக்கு சற்று கீழ் அறுந்து தொங்கும் கையுடன் அவனை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அள்ளிச் சென்றனர்.

இளைஞனின் நிலைமையை பரிசோதித்த கிளிநொச்சி வைத்திசாலை வைத்தியர்களுக்கு இரு தெரிவுகள் இருந்தது. முதலாவது தெரிவு, நான்கு மணித்தியாலய நேரத்தினுள் விசேட சத்திர சிகிச்சை ஒன்று செய்தால் கையை மீண்டும் ஒட்டலாம். ஆனால் அதற்கான உபகரணங்கள் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் மாத்திரமே உண்டு. இரண்டாவது தெரிவு கையை அறுந்த இடத்தால் வெட்டி விடுவது.

வைத்தியசாலை நிர்வாகம் வன்னி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவை தொடர்பு கொண்டு நிலையை எடுத்துக்கூறியது. உழைக்கும் கரம் ஒன்று அறுத்தெறியப்பட்டால்;, அந்தக் கையில் தங்கிவாழும் உயிர்களின் எதிர்காலத்தை கேள்வி உள்ளாக்க விரும்பாத தளபதி உடனடியாக செயற்பாட்டில் இறங்கினார். விமானப்படைத் தலைமையகத்தை தொடர்பு கொண்டு விசேட உலங்கு வானூர்தி ஒன்றிற்கு ஒழுங்கு செய்தார். சில நிமிட நேரங்களில் வைத்தியசாலைக்கு அருகாமையில் இறங்கிய இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்தி அறுந்து தொங்கும் கைக்கு முதலுதவி வழங்கப்பட்டிருந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி நோக்கி பறந்தது. கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனுக்கு எயளஉரடயச ளரசபநசல செய்யப்பட்டதாகவும் அவன் தேறி வருவதாகவும் அறிய முடிகின்றது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள கிளிநொச்சி வைத்திசாலையின் பிரதான வைத்திய அதிகாரி, சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளுடனான புரிந்துணர்வுடனான ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என்றும் அவ்வாறு தாம் வன்னி இராணுவத் தலைமையகத்துடன் பேணிவரும் உத்தியோகபூர்வ ஒத்துழைப்புக்களால் குறித்த இளைஞனுக்கு உரிய உதவியளிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் லாபங்களுக்காக வடகிழக்கிலிருந்து வெளியேறவேண்டும் எனக் கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் இவ்வாறான அனர்த்தங்களின்போது இராணுவத்தினரே மக்களுக்கு உதவுகின்றனர் என்பது சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களது ஏகோபித்து கருத்தாக உள்ளது.






Read more...

தடுப்பில் உள்ள புலிகள் பெயர் விபரங்களை வெளியிட தயார்!

அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள், மற்றும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பாக விபரங்களை வெளியிட தயார் என இலங்கைக்கான ஐ.நாவின் பிரதிநிதிகளில் ஒருவரான ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இதுவரை புலிகள் இயக்கத்தில் இருந்து இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக அவர்களது உறவுகளால் சுமார் 3,200 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதாக தெரிவித்த ஆரியசிங்க, இதில் 2,729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்பட்ட 2, 729 முறைப்பாடுகளில் 1,101 முறைப்பாடுகள் குறித்து தாம் இதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் தமது தடுப்பில் உள்ள புலிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் குறித்த விபரங்களை வெளியிட தயார் என்று ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார்.

Read more...

பாசிக்குடா கடற்கரையை அழகு படுத்த நடவடிக்கை!.

சுற்றுலாப் பயனிகளின் வசதி கருதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வள நிலைய அதிகாரி ஏ.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைவாக பாசிக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாசிக்குடா கடற்கரையை அழகு படுத்தும் நடவடிக்கைக்கு, கல்குடா இராணுவம், கல்குடா பொலிஸார், சிறு வியாபாரிகள் சங்கம், சவாரி போட் சங்கம், ஹோட்டல் சங்கம், வாழைச்சேனை பிரதேச சபை, மீன் வியாபாரிகள் சங்கம் என்ப வற்றின் ஒத்துழைப்புடன் நேற்றைய தினம் சிரமதான பணி ஒன்று நடைபெற்றதாக குறிப்பிட்டார்.

Read more...

பிரான்ஸ் நாட்டு இளைஞனின் ‘ரொக்கெட் துவிச்சக்கரவண்டி’

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்கொய்ஸ் கிஸ்ஸி என்ற இளைஞர் ஒருவர் மணிக்கு 263 கி.மீ வேகத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.

சாதாணரமான துவிச்சக்கரவண்டியில் ஹைட்ரஜன் பேரொக்சைடில் இயங்கும் ரொக்கட் சாதனத்தைப் பொருத்தியுள்ளதுடன் இந்த துவிச்சக்கரவண்டியைக்கொண்டு பிரானஸின் வடகிழக்கு பகுதிலுள்ள மன்ச்ஹொவுஸ் என்ற இடத்திலுள்ள பழைய ரன் வே ஒன்றிலே இச்சாதனை நிகழத்தப்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் சென்ற இந்த துவிச்சக்கரவண்டிக்கு ‘ரொக்கெட் துவிச்சக்கரவண்டி’ என பிரான்கொய்ஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன் ஹைட்ரஜன் பேரொக்சைட் நிரப்பப்பட்டிருக்கும் ரொக்கெட்டே பயன்படுத்த பட்டிருப்பதால் எதுவிதமான தீங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கு முதல் 2002 ஆம் ஆண்டில் மணிக்கு 242.6 கி.மீற்றர் வேகத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்றமையே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வரலாம்! ஆனால் விசாரணைகள் தொடர்பில் மூச்சுவிடக்கூடாது! தே. தே. இ.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம் வடக்கு கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்ளலாம். அதேபோல் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் கலந்துரை யாடல்களை நடத்தலாம். ஆனால் அரசியல் கருத்துக்களை பேசும் அதிகாரம் அவருக்பு இங்கு கிடையாது அத்துடன் விசாரணைகள் தொடர்பில் மூச்சுவிடக்கூடாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா இந்தியா, உட்பட மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன எனவும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா இலங்கைகெதிராக முன்வைத்த பிரேரணையில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருந்தாகவும் அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தத்தை வழங்கவே ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை வருகின்றார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான அழுத்தங்களுக்கு அடி பணியாது அரசாங்கம் தைரியத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும், 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், பிரிவினைவாத சட்டங்களை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்த முடியாது எனவும் வசந்த பண்டார தெரிவித்தார்.

Read more...

தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே கனடா பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க முயற்சிக்கின்றது!

கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே தற்போதைய கனடிய அரசாங்கம் செயற் படுகின்றது என்றும், தமிழ் வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதையும், உள்நாட்டு அரசியல் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே கனடா இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகள் தலவைர்கள் மாநாட்டை புறக்கணிக்க முயற்சித்து வருகின்றது என இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலாகொட் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் சர்ச்சைகள் காணப்பட்டாலும், யுத்தத்தின் பின்னர் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென தான் எதிர்பார்கின்றேன் என தெரிவித்த மார்டின் கொலாகொட, கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை கனேடிய அரசாங்கம் மட்டும் புறக்கணிப்பது உள்நாட்டு அரசியலை கருத்திற் கொண்டே என தாம் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொலாகொட் இலங்கையில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

முஸ்லிம் - புத்தமதத்தினரிடையே மீண்டும் மேதல்!

பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் புத்தமதத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. புத்த மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் மசூதிகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், இதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் பர்மாவில் அவர்களிடையேயான மதக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more...

பட்டப்பகலில் 70 இலட்சம் கொள்ளை! வெள்ளை வானில் வந்தவர்களால் கைவரிசை!

வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நேற்றுப் பிற்பகல் 1.00 மணியளவில் ஆயுத முனையில் 70 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான ஏழு மில்லியன் ரூபா பணமே இவ்வாறு இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ஜா-எல பிரதேசத்திலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக அதன் பணிப்பாளர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றிலிருந்து 7 மில்லியன் ரூபா பணத்தை மீளப்பெற்றுக் கொண்டு தனது காரில் வந்துள்ளார். பணத்துடன் ஜா-எல பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைக்கு காரை செலுத்திச் சென்றுகொண்டிருந்த போது தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வானில் முகமூடிகள் அணிந்த நிலையில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நால்வர், காரை நிறுத்தி ஆயுதமுனையில் மேற்படி தொழிற்சாலையின் பணிப்பாளரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பாக மேற்படி தொழிற்சாலையின் பணிப்பாளர் ஜா-எல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

நாட்டிலுள்ள சிவில் சட்டத்தை மீறி ஊடகங்களுக்கு செயற்பட முடியாது! ஊடக ஒழுக்க நெறி ...... கெஹெலிய

ஊடக சுதந்திரம் முழுமையாக காணப்பட்ட போதிலும் நாட்டிலுள்ள சிவில் சட்டத்தை மீறி ஊடகங்களுக்கு செயற்பட முடியாது எனவும், ஊடகங்களின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் முரண்பாடுகள் தோன்றியுள்ளது என தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர், நாடு, இனம், சமூகம் மற்றும் மதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும், ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஊடக ஒழுக்க நெறி கோவையை தயாரிப்பதற்கான சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதுடன், ஊடக ஒழுக்க நெறி கோவை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் எனவும், ஒழுக்க கோவை தொடர்பில் குறித்த தரப்பினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் திருத்தங்களும் இறுதி சட்டமூல தயாரிப்பில் உள்வாங்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மையில் பௌத்த தேரர் ஒருவர் தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உள்ளுர் ஊடகமொன்றில் ஒளிபரப்பப்பட்டது எனவும், குறித்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர் தற்கொலை செய்ய முயன்றவரை தடுக்காதது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

Tuesday, May 28, 2013

இந்திரத்ன தேரர் ஒரு மாட்டுக்காகவா உயிர்த்தியாகம் செய்தார்....? - மேதானந்த தேரர்

'இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த உயர்மதபீடத்திற்கும் இழுக்கினையே ஏற்படுத்தினார்' என தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிடுகிறார்.

அவ்வாறு தீக்குளிப்பதனால் எவ்விதத் தீர்வும் கிடைக்காது என்றும் தேரர் சுட்டிக் காட்டினார்.

'முழு உலகிற்கும் அன்பினை எடுத்தோதிய புத்தபிரானை நினைவுறுத்தும் நந்நாளன்று, தேர ரொருவர் வெசாக் தினத்தில் புனித தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து நாட்டுக்கும், பௌத்த மதபீடத்திற்கும் இழுக்கையே தேடித்தந்தார். இந்நாட்டிற்கு பண்டைய காலந்தொட்டு, மத மற்றும் சமூகப் பிரச்சினைகள் மேலெழும்போது அதற்கு பரிகாரமாக இருந்தவர்கள் இளம் பௌத்த பரம்பரையினரே. அவ்வாறான பௌத்த பரம்பரையினருக்கு இந்நிகழ்வானது தீயதொரு வழிகாட்டலையே வழங்கியிருக்கிறது. அதனால் இவ்வாறான முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு இளம் பௌத்த பிக்குகளிடம் மிகவும் தாழ்வாகக் கேட்டுக்கொள்கிறேன்.

போதி மாதவன் தன்னுயிரை விலங்குகளின் உணவுக்காகத் தியாகம் செய்தார். அதுதான் நேரியது. இந்த இளம் துறவியின் தீக்குளிப்பு அவ்வாறனதென்று கருத முடியாது. இது புனித நடவடிக்கை எனக்கூறவியலாது. மாறாக இது தீக்குளிப்பின் மூலம் நிகழ்ந்துள்ளதொரு தற்கொலையே. சிலர் இதனை உயிர்த்தியாகம் எனக் கருதுகிறார்கள்...

அந்தத் துறவி யாருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தார்? மாட்டுக்காகவா? மற்றையது தனது உயிரை அழித்துக்கொள்ளும்போது ஒருவருக்கு அவர்மீது வெறுப்பும், குரோதமும் ஏற்படுகிறது... மிருகங்களைப் பற்றி அனுதாபம் ஏற்படுவதில்லை.

தன்னுயிரை அழித்து மாடுகளைக் கொல்வதையோ, ஏனைய விலங்குகளைக் கொல்வதையோ நிறுத்த முடியாது. அதுபோல அதனை சட்டத்தினால் மட்டும் இல்லாமற் செய்யவும் முடியாது. அதனால் மக்களுக்கு அதுபற்றிய தெளிவுறுத்தலை ஏற்படுத்த வேண்டும். எல்லா பௌத்த பிக்குகளும் ஒன்றிணைந்து பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளை அழிப்பதை நிறுத் த முடியும் என்று நான் நினைக்கவில்லை.

இந்த பிக்கு எல்லை மீறியிருக்கிறார். இந்த பிக்குவின் தீய நடவடிக்கையை சிலர் அடிநாதமாய்க் கொண்டு பல்வேறு கருத்துக்களைக் கூறிவருவதைக் காண்கிறேன். அவற்றை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலாது. இதன்மூலம் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது' என்றும் மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

M15 மற்றும் வுல்விச் கொலைகாரர்கள். By Chris Marsden and Julie Hyland

பிபிசி தலைமையகத்தில் அபு நுசய்பாவை கைது செய்த அசாதாரண முடிவு, பிரித்தானிய உளவுத்துறை அமைப்புக்களான M15ம் சிறப்புப் பிரிவும் மைக்கேல் அடெபோலஜோ மற்றும் மைக்கேல் அடெபோவேலைக் குறித்து ஒப்புக் கொண்டுள்ளதைத் தவிர அதிகம் அறிந்துள்ளன என்பதை தெரிவிக்கின்றன. அவர்கள்தான் ட்ரம் வாசிக்கும் லீ ரிக்பியை கொன்றவர்கள்.

தென்கிழக்கு லண்டனில் புதன் அன்று வுல்விச் தெருக்களில் ரிக்பி வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடைய கொலைகாரர்கள் வீடியோவில், இது ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரித்தானியாவின் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் கொலை என்று கூறினர்.

இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்து 24 மணி நேரத்திற்குள் அடெபோலஜோ M15 க்கு தெரிந்தவர், எட்டு ஆண்டுகளாக கண்காணிப்பில் உள்ளார் என்பது தெளிவாயிற்று. அதற்குப் பின் அடெபோவலேயும் பாதுகாப்புப் பிரிவினருக்கு நன்கு தெரிந்தவர் என்பது வெளிப்படையாயிற்று.

பிபிசியில் கைது என்பது நியூஸ்நைட் நிகழ்ச்சியின் முக்கிய பேட்டியை தொடர்ந்து வந்தது; இதில் நுசய்பா தன்னுடைய நெருக்கமான நண்பரான அடெபோலஜோவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சற்று விளக்கி ரிக்பி மீதான கொடூரத் தாக்குதலுக்கு இருந்திருக்கக்கூடிய உந்துதல் பற்றி விவரித்தார்.

பேட்டியின்போது அவர் அடெல்போலஜோ சமீப மாதங்களில் பலமுறை M15 ஆல் அணுகப்பட்டார் என்றும் தகவல் கொடுக்குமாறு கோரப்பட்டார் என்றும் தெரியப்படுத்தினார். நுசய்பா நிலையத்தை விட்டு நீங்கியதும் கைது செய்யப்பட்டார்—இது தொடர்பற்ற விவகாரம் ஒன்றை அடுத்து.

உண்மையில் நுசய்பாவின் பேட்டி மற்றும் இரு கொலைகாரர்களைப் பற்றி தெரியவந்துள்ள உண்மைகள், செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஊயரடுக்கின் கூற்றுக்களான கொலைகார நடவடிக்கைகள் எதிர்பார்த்திருக்கப்படமுடியாது இதற்கு விளக்கம் இல்லை என்பதை மறுக்கின்றன. இருவருடைய தனி வாழ்க்கை வரலாறுகளும் அதிருப்தி அடைந்த இளைஞர்களின் அடுக்கு முகப்புடன் பொருந்தியுள்ளன; இவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடையாளத்திற்கு ஆதாரம் எனக் கண்டு ஈர்க்கப்பட்டனர், அது ஒரு சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு எனக் கருதினர்—வேறு எந்த வெகுஜனத் தளம் உடைய முன்னேற்ற மாற்றீடு இல்லாத நிலையில்.

எப்படிப் பார்த்தாலும் அடெபோலஜோவும் அடெபோவலேயும் நைஜீரிய வம்சாவளியை கொண்டிருந்த லண்டன் இளைஞர்கள், கிறிஸ்துவப் பின்னணியில் இருந்தவர்கள்; சிறு பிராயத்திலேயே அற்ப குற்றங்களில் ஈடுபட்டவர்கள். 2003ம் ஆண்டு 19வயதான அடெபோலஜோ இஸ்லாமிற்கு மதம் மாறினார், ஜிஹாத்திற்கு வாதிடும் குழுக்களில் தொடர்பு கொண்டார்.

அதே ஆண்டில் பொய்கள், தவறான கருத்துக்களின் அடித்தளத்தில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் தங்கள் குற்றம் சார்ந்த படையெடுப்பு, ஆக்கிரமிப்பை ஈராக் மீது தொடங்கின; இதைத் தொடந்து “பயங்கரவாதத்தின் மீதான” போர் என்பது உள்நாட்டிலும் தொடர்ந்தது, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

அடெபோவலே இஸ்லாமிற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு மாறியதாகத் தெரிகிறது; அப்பொழுது 17 வயதான அவர், ஒரு இனவெறி உந்துதல் தாக்குதலை தொடர்ந்து மதம் மாறினார். அதில் ஒருவர் கொல்லப்பட்டார்; இவர் பலமுறை குத்தப்பட்டார். மனநிலை சரியாக இல்லாததாக்கியவர் அவரால் பாதிக்கப்பட்டவர்களை அல் குவேடா உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி, வெடிகுண்டுகள் போடச் சதி செய்பவர்கள் என்றும் கூறினார்.

மதம்மாறிய காலத்தில் இருந்தே அடெபோலஜோ பாதுகாப்புப் பிரிவுகளின் கண்காணிப்பின்கீழ் உள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் பல பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் இருந்தார் எனக் கூறப்படுகிறது; ஆனால் உத்தியோகபூர்வ கூற்றுக்களின்படி, நிகழ்விற்குச் சற்று தொலைவில் இருந்தவராகத்தான் கருதப்பட்டார்.

இவர் சோமாலியாவிற்கு பயணிக்க முயன்றார் எனக் கூறப்படுகிறது; இது “தோள்பட்டையின்மீது” ஒரு தட்டினால் நிறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் நுசய்பா கருத்துப்படி அடெல்போலஜோ சோமாலியாவின் எல்லையில் இருக்கும் கென்யாவிற்கு சென்றிருந்தார், அங்கு அவர் கென்ய இராணுவத்தால் 2010ல் கைது செய்யப்பட்டார். அல் குவேடா சோமாலியில் நடத்த இருந்த குண்டு வெடிப்பில் சேர முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இவர், நாட்டை விட்டு அகற்றப்படுமுன் சித்திரவதைக்கு உட்பட்டார். (கென்ய அதிகாரிகள் இப்பொழுது அவர் கைது செய்யப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.)

இன்னும் பரபரப்பான தன்மையில் நுசய்பா நியூஸ்நைட்டிடம் நாடுகடத்தப்பட்ட பின்தான் M15 அவரை தகவல் கொடுக்குமாறு அணுகியது. பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அடெல்போலஜோவிடம் பேசினர்; அவர்களே M15 ஆல் தகவல் கொடுப்பதற்கும் பல குழுக்களில் ஊடுருவவும் தொந்திரவு கொடுக்கப்பட்டனர்.

அடெபோவலே பொலிசால் இரண்டு மாதங்களுக்கு முன்பு காவலில் வைக்கப்பட்டதும் இப்பொழுது உறுதியாகியுள்ளது—எதற்காக, இத்தனை நாட்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

இது ஒரு வடிவமைப்பைத்தான் தெரிவிக்கிறது.

பல ஆண்டுகளாக செய்தி ஊடகம் கடமையுடன் உத்தியோகபூர்வ பிரச்சாரமான பயங்கரவாதத்தின் முக்கிய ஆபத்து “தூய தோல்கள்” என்போரால் வருகிறது— தீவிர “தனி ஓநாய்களால்” பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரியாதவர்களால். உண்மையில், ஒவ்வொரு உண்மையான பயங்கரவாத நிகழ்வும் ஒவ்வொரு முக்கியமான கைதும், பயங்கரவாத சதிகளும், M15 க்கு நன்கு அறிந்தவர்கள்தான் தொடர்பு கொண்டிருந்தனர்.

உதாரணமாக, ஜூலை 7, 2005 லண்டன் தற்கொலைத் தாக்குதல்களில் மகம்மது சித்திக் கான் மற்றும் ஷஹீஸட் தன்வீரும் உளவுத்துறைக்கு நன்கு தெரிந்தவர்கள், தங்கள் தாக்குதலை அவர்கள் நடத்துவதற்கு ஐந்து மாதம் முன்னதாகவே கண்காணிப்பில் இருந்தவர்கள்தான்.

சில நிகழ்வுகளில் வலுவான சான்றுகள், M15 பயங்கரவாத திட்டங்களை அறிந்திருந்தனர், ஊக்கம் கொடுத்தனர் என்று கூட வெளிப்பட்டுள்ளன; இதில் 2007 உரப் பிரிவுச் சதித்திட்டமும் அடங்கும்.

M15 மேற்கொண்டுள்ள அணுகுமுறை ஒரு கூடுதலான விளக்கத்தையும் கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ வனப்புரையான “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதின் பின்னணியில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நெருக்கமாக அல்குவேடா வகைக் குழுக்களுடன் லிபியாவிலும் மாலியிலும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர நெருக்கமாக செயல்பட்டுள்ளன. இதைத்தான் அவை இப்பொழுது சிரியாவிலும் செய்கின்றன; அங்கு பிரித்தானியா, அசாத் ஆட்சிக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் இஸ்லாமியவாத ஆதிக்க அமைப்புக்களுக்கு உத்தியோகபூர்வமாக ஆயுதங்கள் வழங்க ஒரு சர்வதேசப் பிரச்சாரத்தை நடத்திவருகிறது.

ரிக்பீ மீதான மிருகத்தனத் தாக்குதலுக்கு ஒரு வாரம் முன்புதான், அடெபோலஜோ வுல்விச் தெருக்களில் வெளியே வந்து பகிரங்கமாக இளம் முஸ்லிம்கள் சிரியாவிற்குச் சென்று மேற்கத்தைய ஆதரவுடைய எதிர்தரப்புச் சக்திகளுடன் இணைந்து போரிட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் சிரியாவில் போராடும் 500 ஐரோப்பியர்களில் குறைந்தப்பட்டசம் 100 பேராவது லண்டனில் இருந்து வந்தவர்கள் என்றார்.
இதன் உட்குறிப்புக்கள் தெளிவு. சிரியாவில் கொலைகளுக்கு வலியுறுத்துதல் மற்றும் அத்தகைய செயல்களை பிரித்தானியாவில் செய்வதற்கும் இடையே சீனச் சுவர் ஒன்றும் குறுக்கே இல்லை. இம்மாதம் முன்னதாக, YouTube காட்சிகள் ஜிஹாதிய பாரூக் பிரிகேட் தலைவர், கலிட் அல் ஹமத் ஒரு சிரிய அரசாங்க சிப்பாயின் இதயம், நுரையீரல்களை வெட்டுவதைக் காட்டியது; அதே நேரத்தில் அவர் “எமது கோஷம், கண் பலிக்கு கண், பல்லுக்குப் பல்” என்றார்.

இதே சொற்கள்தான் லீ ரிக்பியை செயலற்றவராக்கும் முயற்சியை நியாயப்படுத்த அடெபோலஜோ புகைப்படக் கருவிக்கு முன் கூறியதும் ஆகும்.
கடமை நேரத்தில் இல்லாத ஒரு இளம் சிப்பாயை கொலை செய்வதை எதுவும் நியாயப்படுத்தாது. ஆனால் விமர்சகர்கள் இக்கொடூர நிகழ்விற்கு விளக்கம் நாட வேண்டும் என வலியுறுத்துவது இழிந்த, சுயதேவையுடையது ஆகும்; இது ஒருவகையில் விருப்பத்தையும் ஒரு மன்னிப்பு அளிப்படையும்கூடக் காட்டுகிறது. இன்னும் அதிக கொடூரங்களுக்கு இது வழிவகுக்கிறது.

வுல்விச் கொலை பல ஒன்றோடொன்று தொடர்புடைய காரணிகளின் பிணைப்புடைய விளைவு ஆகும்—உலகெங்கிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் நடத்தும் குற்றங்களுக்கு நோக்குநிலை தவறிய தனிநபர்களின் விடையிறுப்பு ஆகும். இழிந்த சமூகச் சூழல் இத்தகைய அதிருப்தியையும் ஆழ்ந்த விரோதப் போக்கையும் வளர்க்கிறது. இதைத்தவிர பொதுவாக அழுகிய உத்தியோகபூர்வ அரசியலும் வெகுஜன ஊடகமும் இதற்குக் காரணம் ஆகும்; அவை பிரித்தானியா ஒரு கொள்ளை முறைப் போரில் இருந்து மற்றொன்றில் பங்கு பெறுவதற்கு வாதிடுபவையாக உள்ளன.
இந்த நச்சுக் கலவைக்குள் பாதுகாப்புப் பிரிவினரின் முயற்சிகளான இந்நிலையினால் பாதிக்கப்பட்டவர்களை தேடிக் கண்டுபிடித்து தம் நோக்கத்திற்கு அவர்களைப் பயன்படுத்தும் செயல் உள்ளது.




Read more...

வெசாக் நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்ற சிறைக் கைதிகள் தப்பியோட்டம்!

வெசாக்கை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ் வொன்றிற்காக மாத்தறைக்கு அழைத்துச் செல்லப் பட்டிருந்தபோது சிறைக் கைதிகள் மூவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

வெலிக்கடை, காலி மற்றும் மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் குறித்த கைதிகளது தண்டனைக் காலம் நிறைவுபெற இன்னும் நான்கு வருடங்கள் எஞ்சியிருப்பதாகவும் தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தப்பிச் சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Read more...

முறையான வைத்திய சான்றிதழ் சமர்பிக்கப்படவில்லை! துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை விடுவிக்க முடியாது!

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கபூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்லவேண்டுமெனவும் அதற்கிணங்க நீதிமன்றத்தால் பறிமுதல் செய்த தனது கடவுச்சீட்டை இரு வாரங்களுக்கு வெளிநாடு செல்வதற்க்காக விடுவிக்குமாறு விடுத்த கோரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வைத்திய பரிசோதனைக்கு செல்வதற்காக முறையான வைத்திய சான்றிதழ் துமிந்த சில்வாவினால் முன்வைக்கப்பட்டவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக நீதவான் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தகது!

Read more...

பக்கவாத நோயினை குணப்படுத்துவதற்கான மருத்துவ சிகிச்சை இனங்காணப்பட்டுள்ளதாம்!பேராசிரியர் கீத் மூவர்

பக்கவாத நோயினை குணப்படுத்துவதற்கான முறைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான மருத்துவ சிகிச்சைகள் இனங்காணப்பட்டுள்ளன எனவும் பிரித்தானிய கிளாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் கீத் மூர் தெரிவித்துள்ளார். இம் மருத்துவ சிகிச்சை தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நரம்புகள் ஊடாக தடுப்பூசியினை ஏற்றி, மூளையின் செயற்பாடுகளை சீர் செய்ய, இந்த சிகிச்சை மூலம் முடிந்துள்ளதாக, பேராசிரியர் கீத் மூவர் தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோ வைத்தியசாலையில் 9 நோயாளர்களுக்கு இது தொடர்பாக சிகிச்சையளிக்கப்பட்டதுடன், இவர்களில் 5 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்த பேராசிரியர் எவ்வாறாயிருப்பினும், இந்த வெற்றி தொடர்பில் நிலையான தீர்மானங்களை எட்ட முடியாது என்றும், தெரிவித்துள்ளார்.

Read more...

மக்கள் வழங்கியதை மக்களே கவிழ்ப்பார்களா? மக்கள் அதற்கு தயாராக இல்லை! பிரியங்கர

மக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியினை கவிழ்க்க, மக்கள் எக்காரணம் கொண்டும் தயாரில்லை என, அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஆனமடுவ பங்கதெனிய பிரதான வீதியை காப்பட் இட்டு, அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரியங்கர , காப்பட் வீதியில் நடைபாதையாக செல்வதற்கு கூட, முடியாதுள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு, அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டக்கூடிய இயலுமை இல்லையென, வலியுறுத்தினார்

Read more...

ஆகஸ்டில் வருகின்றார் நவநீதம்பிள்ளை.

இலங்கை அரசங்கம் 2011ம் ஆண்டில் விடுத்த அழைப்பை ஏற்று, நவ நீதம் பிள்ளை எதிர்வுரும் ஓகஸ்ட் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக, ஐ.நா. விற்கான இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். நவநீதம் பிள்ளையின் விஜயத்தை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவு வலுவடையுமென்றும், ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 25ம் திகதி முதல் 31ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள நவநீதம் பிள்ளை இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களையும், நேரடியாக அவதானிக்கவுள்ளாராம்.

Read more...

சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடுகின்றன! முன்னாள் எல்ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் ......! ஹெட்டியாராச்சி!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் இலங்கையில் வாழ முடியாமல் வெளிநாடுகளில் புகழிடம் பெற முயல்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்த புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் சமூகத்தில் சுதந்திரமாக எவ்வித பிரச்சினைகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களின் நலன் குறித்து புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாகவும், இதுவரையில் எந்தவொரு உறுப்பினரும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முறைப்பாடுகளை முன்வைக்க வில்லையெனவும் புனர்வாழ்வு ஆணையாளர் தர்சன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான விதத்தில் இராணுவ கெடுபிடிகள் மற்றும் அழுத்தங்கள் புனர்வாழ்வு பெற்ற உறுப்பினர்கள் மீது திணிக்கப்படுவதாக செய்தி வெளியிட்டிருந்ததமை குறித்து புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், படையினரிடம் சரணடைந்த 11 ஆயிரத்து 593 எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், சுமார் 350 பேர் மாத்திரமே சமூகமயப்படுத்துவதற்கான எஞ்சியுள்ளதாகவும் அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படும் காலப்பகுதியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவுறுத்தல்களும் சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான கடனுதவி வீட்டுத்திட்டம் என்பன குறித்தும் அரசாங்கம் உதவியளித்து வருவதாகவும், இந்நிலையில் 3 ஆயிரத்து 800 முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் சிவில் பாதுகாப்பு பிரிவில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளதோடு தனியார் துறைகளிலும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புனர்வாழ்வு பெற்றமுன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களின் பொருளாதார சமூக நலன்தொடர்பில் ஆராய கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அரசாங்க அதிபர் அலுவலகங்களிலும் புனர்வாழ்வு ஆணையாளரின் உப அலுவலகமொன்று திறக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லையென புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் 4 சதவீதத்திற்கும் குறைந்த வட்டியுடன் சுயதொழிலுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதுவரை சுமார் 2 ஆயிரம் பேருக்கு சுயதொழில் கடனுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் இடமாற்றம்!

குற்றமிழைக்கின்றவரை இடம் மாற்றுவதன் மூலம் நியதாயத்தை பெற்றுக் கொள்ளமுடியாது! தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் - பெற்றோர்

ராகலையில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் தரம் 11ல் பயிலும் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த ஆசிரியர் தற்காலிகமாக பிறிதொரு பாடசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார் எனவும், அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் வலப்பனை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

குறித்த ஆசிரியர் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக தெரியவந்துள்ளதென குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு மாணவர்களை சீரழிக்க முயற்சிக்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறும் குற்றமிழைக்கின்றவரை இடம் மாற்றுவதன் மூலம் நியதாயத்தை பெற்றுக் கொள்ளமுடியாது எனவும் தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என்றும் பாடசாலை வளாத்தில் திரண்டிருந்த பெற்றோர் தெரிவித்தனர்.

எனினும், குறித்த ஆசிரியரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்போது தான் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்றும் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமையையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததாக வலப்பனை வலய கல்வித் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

Read more...

பஸ் டிக்கட்டுக்கற் முறையில் புதிய மாற்றம்! அறிமுகமாகின்றது முற்கொடுப்பனவு அட்டை

பஸ் டிக்கட்டுக்களுக்கு பதிலாக, முற்கொடுப்பனவு அட்டை முறையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அது குறித்து, பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுக முறையை முன்னெடுப்பதற்கு, மக்கள் வங்கி உதவ முன்வந்துள்ளதாகவும், அதன் தலைவர் காமினி செனரத்துடன் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றதாகவும், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முற்கொடுப்பனவு அட்டைகளை செலுத்தி, பஸ் வண்டிகளில் பயணம் செய்யும் முறை பல்வேறு நாடுகளில் அமுலில் உள்ளதாகவும், குறித்த முறையை இலங்கையில் அறிமுகப்படுத்துவது சிறந்தது எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படும் பஸ்வண்டிகளுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை, வெற்றியளிக்கும் பட்சத்தில் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இதேவேளை தூர இடங்களுக்கான பஸ் சேவையிலும் முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, May 27, 2013

மண்ணுக்காக போராடும் அமைப்பு : றோ வின் அடுத்த சீனி மிட்டாய்.

தம்மை அர்ப்பணிக்கிறதாம் தமிழ்தேசியக் கூட்டமைப்பு....!

இலங்கையில் இடம்பெற்ற அத்தனை அவலங்களுக்கும் வித்திட்டது இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையான றோ வும் என்பது மக்கள் மனதிலிருந்து என்றும் அகலாத வடு. 1980 களின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் எனும் சீனி மிட்டாயை திணித்தனர். இந்தியாவின் பசப்பு வார்த்தைகளை நம்பிய வடகிழக்கு இளைஞர் யுவதிகள் இந்தியா கபடநோக்குடன் வழங்கிய இராணுவப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டதுடன் இலங்கைக்கு எதிராக இந்தியா வழங்கிய ஆயுதங்களையும்தம் கைகளில் ஏந்தினர். ஒரு நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டிய இளைஞர் சமூகத்தை அந்த நாட்டுக்கு எதிராக போராடத் தூண்டி, ஆயுதங்களையும் ஆயுதப்பயிற்சிகளையும் வழங்கிய வரலாற்றுத் துரோகத்திலிருந்து இந்தியா ஒருபோதும் விடுபடமுடியாது!!

இந்தியா தமிழீழம் என்ற வார்த்தையை வெளியே தெரிவித்திருந்தாலும் நிபந்தனையுடனேயே பயிற்சிகளையும் ஆயுதத்தையும் வழங்கியது. என்ன அந்த நிபந்தனை? "இலங்கை அரசு தமிழீழத்தை உங்களுக்கு தந்தாலும் , அதை நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது!" இலங்கையிலே தமிழீழம் மலர்ந்தால் அது இந்தியாவின் இறைமைக்கு பாதிப்பாக அமையும் என்பது அந்த நிபந்தனைக்காக கூறப்பட்ட காரணம். ஆனால் இந்த விடயம் சாதாரண போராளிகளுக்கோ, மக்களுக்கோ கடைசிவரை சொல்லப்படவில்லை. ஏன்? இன்றும் தமிழக அரசியல்வாதிகள் , இலங்கைத் தமிழருக்கு இறுதித் தீர்வு "தமிழீழந்தான்" என்கின்றனர். இது கேலிக்குரியவிடயம்.

இந்தியாவின் இந்தக் கபடநாடகத்தை தமிழ் அமைப்புக்களிலிருந்த சிலர் உணரத் தொடங்கினார்கள். இந்தியா தமிழ் மக்களை அதாள பாதாளத்தில் தள்ளப்போகின்றது என்பதையும் , அந்த அபாயத்திலிருந்து தமிழ் மக்கள் மீள வேண்டுமானால், போராட்டம் சிறந்த பாதையில் செல்லவேண்டுமானால் இந்தியாவின் பொறியிலிருந்து விடுபட்டு இயக்கங்கள் சுயமாக தமது போராட்டத்தை முன்னெடுக்வேண்டும் என்றும் இந்தியாவின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்பட முடியாது என்றும் முடிவு செய்தார்கள். அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. (இது இயங்கங்களிலிருந்த ஒரு சில முன்நோக்கு கொண்டோரால் மாத்திரம் முயற்சிக்கப்பட்டது என்பதும் ஏனையோர் இன்றும் இந்தியாவின் முள் தின்னும் ஏவல் நாய்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

தமது தேவைக்காக வளர்க்கப்பட்ட தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தம் கைப்பொம்மைகளாக இருக்கப்போவதில்லை என்பதை ஆபத்தாக உணர்ந்த இந்தியா இவ்வியக்கங்களை அழித்தொழிப்பதை விட வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தது. இயங்கங்களிடையே உட்கட்சி முரணபாடுகளை தோற்றுவித்ததுடன் நின்று விடவில்லை. மேலும் சகல இயக்கங்களுக்கும் எதிராக புலிகளை ஏவியது. விடுதலை அமைப்பாக நின்ற புலிகள் இயக்கம் பாசிசக்கொள்கைளை வரிந்து கட்டியது. ஏகப்பிரதிநிதித்துவ மோகம் கொண்டு சகல இயக்கங்களையும் தடைசெய்து அதன் உறுப்பினர்கள் கொடூரமாக கொன்றொழித்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது. போராட்டம் பயங்கரவாதமாக மாற்றம் பெற்றது.

பயங்கரவாதத்தை இலங்கையில் அழித்தொழிக்க உலக நாடுகள் அணிதிரண்டன, வல்லரசான சீனாவும் நட்பு நாடான பாகிஸ்தானும் இதற்குத் தனது உச்சகட்ட ஒத்துழைப்பை வழங்கின. சீனா, பாக்கிஸ்தானுக்கு போட்டியாக இந்தியா போருக்கான தனது சக்திக்கு மீறிய உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது. ஆனால், இந்தியா இலங்கைக்கு உதவி செய்ததன் நோக்கத்தை இலங்கை மக்களும் அதன் அரசாங்கமும் உணராமல் இல்லை.

இலங்கையிலே புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டமையால் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பை விட இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பு பேரிழப்பாகும். இந்தியா எத்தனை உத்திகளை மேற்கொண்டாலும், இலங்கை அரசும் அதன் மக்களும் இந்தியா இலங்கைக்கு செய்த துரோகங்களை மறப்பதற்கு தயாராக இல்லை. இந்தியாவுடனான தொடர்பினை துண்டிக்கவேண்டும் என்றும் மாறாக சீனா பாகிஸ்தானுடான உறவை மேம்படுத்தவேண்டும் என்றும் அரசின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்தியா இலங்கையினால் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்து கொண்டு , தனது காலை தொடர்ந்தும் இலங்கையில் பதித்து வைத்துக்கொள்வதற்காக தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கின்றது. அதன் பிரகாரம் தற்போது ‘இலங்கையில் மண்ணுக்காக போராடும் அமைப்பு’ எனும் பெயரில் புதிய அமைப்பொன்றை உருவாக்க முனைகின்றது. இந்த அமைப்பு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக நம்பப்படுகின்றது. இதற்கான மேற்பார்வைகளை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் துணைத்தூதுவர் மகாலிங்கம் மேற்கொள்வதாக அறியக்கிடைக்கின்றது.

இந்தியாவினால் தயாரிக்கப்படுகின்ற புதிய சீனி மிட்டாயை தமிழ் மக்கள் மத்தியில் விற்பனை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகின்றது. இந்தச் சீனி மிட்டாய் வலிகாமம் மக்களை இலக்காக கொண்டதாக உள்ளது.

‘வலிகாமம் மக்களின் காணிகளுக்காக போராடுவோம். அவர்களுக்காக 5000 வழக்குகள் பதிவு செய்வோம்’ என்றெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் கூறப்படுகின்றது. அதற்கு பின்னணியில் மேற்படி அமைப்பு உள்ளது. வலிகாமம் மக்களின் காணியில் என்னடா இந்தியாவுக்கு இவ்வளவு அக்கறை என்ற கேள்வி உங்களிடம் எழலாம். காரணம் இல்லாமல் இல்லை.

இலங்கை அரசாங்கம் யாழ்பாணத்தின் பாதுகாப்பு வலயத்தை விஸ்தீரணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன் நிமித்தம் வலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களிலுள்ள காணிகளை உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. அந்தக்காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட்டால், அங்கே இந்தியாவை கண்காணிப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்படலாம் என இந்தியா அச்சம் கொள்கின்றது.

எனவே இதை தடுப்பதானால் இராணுவ முகாம் விஸ்தரிப்புக்கு காணி கிடைக்கப்பெறுவதை தடுக்க வேண்டும் எனக் கருதுகின்றது இந்தியா. எனவே ஐயாயிரம் அல்ல, ஐம்பதாயிரம் வழக்குகளையும் முடிந்தால் தாக்கல் செய்யும். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகின்ற நன்மை எதுவும் இல்லை.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு கல்லில் இரு பெரிய மாங்காய்கள். ஒன்று எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் காணிக்காக போராடுகின்றோம் என வாக்குகளை அபகரித்து ஆசனங்களைக் கைப்பற்றி தொடர்ந்தும் கொழும்பில் உல்லாசம் அனுபவிக்கலாம்..... இரண்டாவது ஐயாயிரம் வழக்குக்கு என இந்திய அரசிடம் பண சூட்கேசுகளை பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல தமது எஜமானர்களுக்கு விசுவாசத்தை உறுதி செய்யலாம்....

Read more...

திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள்!

பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர். திருமணப்பதிவாளர் அலுவகத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக அங்கேயே புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தங்களது சொந்த நாட்டு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறியே இருவரும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் மிர்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 3 வருடங்களாக காதலித்து வருவதாகவும் பேர்மிங்காமில் கல்வி கற்கும் போதே பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

Read more...

குடும்ப பிரச்சனையால் இரு பிள்ளைகளுடனும் ஆற்றில் குதித்த தாய்! பிள்ளைகள் இருவரும் பலி!

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் மீராவோடை ஆற்றில் குதித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அவருடைய இரு பிள்ளைகளான இலக்சினி (வயது 07) மற்றும் மீனுஜா (வயது 03) ஆகிய இருவரும் பலியாகியுள்ளதுடன், தாய் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகிறது. பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மீராவோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Read more...

ஸ்ரீ.சு.கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின், பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும், வாகன சாரதியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தாக்குதலுக்கு இலக்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டகளப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிய நிலையில், வாகன சாரதியும், பொலிசாரும், வவுனியா பிரதேசத்தில் இரவு நேர உணவுக்காக சென்றபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் சிறிய காயங்களுக்குள்ளான சாரதி, தப்பிவந்து விபரங்களை தனக்கு தெரிவித்ததாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

15 பேர் கொண்ட குழுவினரே தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு உடனடியாக முறைப்பாடுகளை தெரிவித்ததாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

கொலையா அல்லது தற்கொலையா? எனது பெண்ணுக்கு துப்பாக்கி இயக்க தெரியாது இக்கொலையை கட்டாயம் ....

ஜோர்தான் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று கடந்த 6 ஆம் திகதி மரணமடைந்த நிலையில் குறித்த பணிப்பெண்ணின் சடலம் ஜோர்தான் நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டு நேற்று அதிகாலை விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தது. விமான நிலையத்தில் உறவினர்களினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது கறுவாக்கேணியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் மரணத்தில் வீட்டு எஜமான் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவத்த நாகேந்திரன் மங்களேஸ்வரி தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எனது குடும்பத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பிள்ளைகள். கணவன் நாளாந்த கூலித் தொழில் செய்பவர். அவரது உழைப்பு போதாது. பிள்ளைகளுக்கு வீடு கட்ட வேண்டும். என குடும்பத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே 2008ஆம் ஆண்டு நான் அந்நாட்டிற்கு முதலில் பணிப்பெண்ணாக சென்றிருந்தேன். அங்கு எனது வீட்டுக்காரர் என்னை நன்றாக கவனித்தார்கள். எனக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.

நான் மட்டும் உழைப்பது போதாது அம்மாவுடன் சேர்ந்து தானும் அங்கு வந்து உழைக்க வேண்டும் என விரும்பி தனது 18ஆவது வயதில் 2010ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் திகதி எனது மகள் மற்றுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக தொழில் புரிய 2ஆவது மகள் காந்திமதி அந்நாட்டிற்கு வந்திருந்தார்.

அவர் அமெரிக்க நாட்டவர் ஒருவரது வீட்டிலே தொழில் புரிந்தார். அந்த வீடு அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசம். வீட்டு எஜமானருக்கு இரண்டு ஆண்கள் உட்பட மூன்று பிள்ளைகள். வீட்டில் பிள்ளைகளோ மனைவியோ நிரந்தரமாக தங்குவதில்லை. இடையிடையே வந்து போவார்கள். அநேகமாக வீட்டில் எஜமானுடன் அவரது 2ஆவது மகன் தங்குவது வழக்கம. பெண்களே தங்குவது இல்லை. அந்த வீட்டில் ஏராளமான நாய்களும் பூனைகளும் வளர்க்கப்படுவதால் மகள்தான் அவற்றை பராமரிக்கவும் வேண்டும்.

அந்நாட்டில் நான் தங்கியிருந்த நாட்களில் மகளுடன் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு இருந்தது. மகள் தான் எஜமானாலும் அவரது மகனாலும் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி அழுவார். ஒரு தடவை முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளது. கையில் பிளேட்டினால் கீறப்பட்டுள்ளது. பீங்கானால் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என தான் அனுபவித்த கொடுமைகளை சொல்லி அழுத மகள் எதிர்வரும் ஜுலை மாதம் 3வருட ஒப்பந்தம் முடிந்தாலும் நாட்டிற்கு போக முடியாது எனக் கூறி தன்னை மிரட்டுவதாகவும் என்னிடம் கூறுவார்.

நான்கு வருடங்களில் அந்நாட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து நாடு திரும்புவதற்கு முன் மகளையும் அழைத்த போது தனது ஒப்பந்தம் எதிர்வரும் ஜுலையில் முடிவதால் அதன் பின்னர் வருவதாக கூறியிருந்தார். ஆனால் மகள் வரவில்லை அவரது சடலம்தான் வந்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்திலிருந்து வந்த தொலைபேசி தகவலில் ஆரம்பத்தில் மகள் இறந்து சடலம் வைத்தியசாலையில் இருப்பதாக மட்டும தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாம் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த 6 ஆம் திகதி வீட்டில் சிறிய பிரச்சினையொன்றில் அவரே சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். என தெரிவிக்கப்பட்டது.

என்னை பொறுத்தவரை எனது மகள் தனக்குத் தானே வெடி வைத்து மரணமடைந்ததாக கூறப்படுவதை ஏற்க முடியாது. அவர் துப்பாக்கியால் சுடுவது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவரால் எப்படி தனக்குத் தானே வெடி வைக்க முடியும். ஏற்கனவே, இருவரும் கொடுமைக்காரர்கள். மகள் கொடுமைப்படுத்தப்பட்ட அடையாளங்கள் கூட அவரது முகத்திலும் தலையிலும் உள்ளன. எனவே என்னை பொறுத்தவரை வீட்டு எஜமான் மீதும் அவரது மகன் மீதும் தான் சந்தேகம் உள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக யஸ்வர்தன் குமார் சிங்ஹா நியமனம்!

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான யஸ்வர்தன் குமார் சிங்ஹா, நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும், அவருடைய நியமனக்கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும், இந்திய வெளிவிவகார செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மத்திய அரசாங்கத்தினால் அவருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கான இந்திய தூதுவர்களாக நியமனம் பெற்றவர்கள், தமது பதவிக்காலம் நிறைவடைந்தவுடன், இந்தியாவில் அவர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படுவதாகவும், ஏற்கனவே தூதுவர்களாக கடமையாற்றியவர்கள் இந்திய அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்துள்ளதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த வெற்றிகரமான வாய்ப்பு கிடைத்துள்ளது

இலங்கையின் பொருளாதாரத்துறை முன்னேற்றம் குறித்து, சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தும் வாய்ப்பாக, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை பயன்படுத்த முடியுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களாக நிலவிய, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் இலங்கையில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அது தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தும் திட்டங்கள் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டினூடாக வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

பிக்கு தீக்குளித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் விசாரணை

கண்டி தலதாமாளிகைக்கு முன்பதாக பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சமூகப்பொறுப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, செய்தியாளரிடம் ஊடகத்துறை அமைச்சும், குற்றப்புலனாய்வு துறையினரும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசுக்கொலை, மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பௌத்த பிக்கு தீமூட்டி உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், வீடியோ பதிவுகளை மேற்கொண்ட கண்டி பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து, ஊடகவியலாளர்கள் பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

Sunday, May 26, 2013

ஆப்கானிஸ்தான், ஈராக் போர்களுக்கு பதிலடியாக ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ சிப்பாய் லண்டனில் கொல்லப்பட்டார். By Robert Stevens

2வது பட்டாலியன் Royal Regiment of Fusiliers ஐ சேர்ந்த ட்ரம் வாசிப்பவரான லீ ரிக்பி, லண்டனின் வுல்விச் இராணுவப் பாசறைகளுக்கு அருகே புதன் அன்று கொலையுண்டது ஒரு கொடூரமான செயலாகும். ரிக்பி முதலில் காரில் இருந்து இருவரால் கீழே தள்ளப்பட்டார், அவர்கள் பின் ரிக்பியை கத்திகளாலும் ஒரு வெட்டுக் கத்தியாலும் தாக்கிக் கொன்றனர்.

கொலை செய்தவர்களில் ஒருவர் 28 வயது பிரித்தானியக் குடிமகன், நைஜீரியாவில் இருந்து வந்த Michael Adebolajo, என அடையாளம் காணப்பட்டார். மற்றவர் நைஜீரிய குடியுரிமை பெற்றவர் என்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவருமே பொலிசால் சுடப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர், ஒருவர் மோசமான நிலையில் உள்ளார்.

இன்னும் விளக்கப்படாத காரணங்களினால், பொலிஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு 20 நிமிடங்கள் ஆயின எனக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் Adebolajo பல அருகில் இருந்தவர்களிடம் பேசினான், தாக்குதல் ஆப்கானிஸ்தான், ஈராக் இன்னும் பிற இடங்களில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தியத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சீற்றத்தால் உந்துதல் பெற்றது என்பதை உறுதிப்படுத்திய நீண்ட உரை ஒன்றும் வழிப்போக்கரால் வீடியோக்காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

“இந்த நபரை நாங்கள் இன்று கொன்றதற்கு ஒரே காரணம் முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பிரித்தானிய சிப்பாய்களால் கொல்லப்படுவதால்தான்” என்றான். “தற்போதைக்கு ஒரு பிரித்தானிய சிப்பாய். இது, கண்ணுக்குக் கண், பல்லிற்குப் பல் என்பது போன்றது.”

“முஸ்லீம் நாடுகளில் ஷாரியாப்படி நாங்கள் வாழ்ந்தால் என்ன? அதன் பொருள் நீங்கள் எங்களைத் தொடர்ந்து, விரட்டியடித்து, தீவிரவாதிகள் என பெயர்சூட்டி கொல்ல வேண்டுமா? மாறாக நீங்கள்தான் தீவிரவாதிகள். நீங்கள்தான் ஒரு நபரைத் தாக்கும் என்றால் ஒரு குண்டை வீசுகிறீர்கள். அல்லது மாறாக உங்கள் குண்டு ஒரு குடும்பம் முழுவதையும் அழித்துவிடுகிறது?

Ingrid Loyau-Kennett, அடெபோலஜோவைச் சமாதானப்படுத்தி இன்னும் இறப்புக்களை தவிர்க்கும் முயற்சியில் அணுகியவர் கூறினார், “நாம் அவரிடம் ஐந்து நிமிடங்களுக்கும் மேல் பேசினேன். ஏன் இவ்வாறு செய்தார் என்று அவரைக் கேட்டேன். [பாதிக்கப்பட்டவர்] ஒரு பிரித்தானிய வீரர் என்பதால் கொன்றதாகவும், அவர் முஸ்லிம் பெண்களையும் குழந்தைகளையும் ஈராக், ஆப்கானிஸ்தானில் கொன்றவர் என்றும் அவர் கூறினார். அங்கு பிரித்தானிய இராணுவம் இருப்பது குறித்து அவர் கடும் கோபம் கொண்டுள்ளார்.”

ஒரு பக்தி நிறைந்த கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்த அடெபோலஜோ—தடைக்குட்பட்ட தீவிர இஸ்லாமியவாத அமைப்பு அல் முகஜிரோன் உடைய முன்னாள் தலைவர் அஞ்செம் சௌதரி கருத்துப்படி—2003ம் ஆண்டு இஸ்லாமிற்கு மதம் மாறினார்.

இப்பொழுது இருவருமே பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தெரிந்தவர்கள் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது, 2007ல் ஒரு இஸ்லாமிய ஆர்ப்பாட்டதிதல் பங்கு பெற்ற அடெபொலஜோ, சௌதரிக்கு அருகே நிற்பது வீடியோ காட்சி ஒன்றில் தெரிவதாக பிபிசி கூறியுள்ளது. புதன் மாலை பிபிசியின் நியூஸ்நைட் நிருபர் ரிச்சார்ட் வில்சன் “பிரித்தானிய ஜிஹாத்திய நிலைமையை நன்கு அறிந்த ஆதாரத்தை” மேற்கோளிட்டு, “கடந்த ஆண்டு இந்த இளைஞர் மறிக்கப்பட்டார் அல்லது கைது செய்யப்பட்டார்.... சோமாலியாவில் அல் ஷபாப்பில் சேர அவர் சென்றிருக்கையில்” என்றார்.

நேற்று பிபிசி இந்த நிகழ்வை ஆதாரப்படுத்தி, இது “மூத்த Whitehall ஆதாரங்களால் கூறப்பட்டது, சந்தேகத்திற்குரியவர்களில் ஒருவர் நாட்டை விட்டு நீங்க இருக்கையில் பொலிசால் கடந்த ஆண்டு தடுக்கப்பட்டார்” என்றது.

வியாழன் அன்று ரிக்பி கொலையில் சந்தேகத்திற்குரியவர்கள், “உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு M15 க்கும் பொலிசுக்கும் எட்டு ஆண்டிற்கும மேல் நன்கு தெரியும், ஆனால் ஒதுங்கி இருப்பவர்கள் என மதிப்பிடப்பட்டு, முழு அளவு விசாரணை அவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை” என்று கார்டியன் தகவல் கொடுத்துள்ளது. உண்மையில், “அடெபோலஜோ.... உளவுத்துறை அமைப்பின் கவனத்திற்கு வந்தபின் M15 கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னைத் துன்புறுத்தி வந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.”

இதைத்தவிர, M15 மற்றும் சிறப்புப்பிரிவு இரண்டும் இரு கொலைகாரர்களின் நண்பர்களை நன்கு அறிந்திருந்துள்ளன என்பதைக் காட்டும் வகையில் ஒரு 29வயது ஆணும் ஒரு 29 வயதுப் பெண்ணும், கொலை செய்ய சதி செய்ததாக, இரண்டு கைதுகள் நேற்று செய்யப்பட்டன.

லண்டனில் பட்டப்பகலில் ஒரு மனிதர் கொலையுண்டது, குருதி தெருவில் ஓடியது, தாக்குதலின் மிருகத்தனம், இவை அனைத்தும் மக்களிடையே உருவாக்கிய அதிர்ச்சி புரிந்துக் கொள்ளக்கூடியதுதான்.

ஆனால், அதே நேரத்தில், இச்செயல் வன்முறையானதாகவும் நோக்குநிலை தவறியதாகவும் இருந்தாலும், உலகத்தில் நடைபெறுவதுடனும், பிரித்தானிய அரசின் செயற்பாடுகளின் தன்மையுடனும் தொடர்பற்றது என எவரேனும் சந்தேகிக்க முடியுமா? ஒரு நபருக்கும் மேல் தொடர்பு கொண்டனர் என்னும் உண்மையே, இது ஒரு தனிப்பட்ட கிறுக்கனின் செயல் அல்ல என்ற உண்மையைக் காட்டுகிறது.

ஒரு செயலை விளக்குவது ஒன்றும் அதை நெறிப்படுத்துவது அல்ல, அதற்குச் சற்றும் அரசியல் ஆதரவைக்கொடுத்து விடுவதும் அல்ல. வுல்விச் கொலை பிற்போக்குத்தன பலாபலன்களைக் கொண்டது. இத்தகைய செயல்கள், மக்களை மழுங்க வைக்கும், மிக இழிந்த சக்திகளுடைய விளையாட்டு பொருட்களாக மாற்றும். அரசாங்கம் கொலையுண்ட நபர் குறித்த மக்கள் பரிவுணர்வை இன்னும் பயன்படுத்தி இராணுவம், பொலிஸ் இவற்றைக் கட்டமைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை ஆழப்படுத்தும்.

அடெபோலஜோவின் அறிக்கை, சாட்சிகள் Loyau-Kennett இன் குறிப்புக்கள் மற்றும் பின்தொடர்ந்த நிகழ்வுகள் செய்தி ஊடகம் மற்றும் அரசியல் உயரடுக்கின் சில பிரிவுகள், கொலைக்கும் பிரித்தானிய வெளியுறவுக் கொள்கைக்கும் இடையே இருக்கும் வெளிப்படையான தொடர்பை மறுக்கும் முயற்சிகளை நிராகரிக்கின்றன.

தாக்குதல் பற்றிய செய்தியைக் கேட்டவுடன் பாரிசில் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் பேச்சுக்களுக்குச் சென்றிருந்த பிரதம மந்திரி டேவிட் காமெரோன் திரும்பிப் பறந்து வந்து, அரசாங்கத்தின் நெருக்கடி COBRA குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பின் அவர் விடுத்த அறிக்கையில் ரிக்பியின் மரணம், பிரித்தானிய நடவடிக்கைகள் ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக நடப்பதுடன் தொடர்பற்றது எனத் தெரிவித்தார்.

இத்தாக்குதல்கள் “முற்றிலும், தூய அளவில்” தனிப்பட்ட தொடர்புடைய நபர்களின் பொறுப்பாகும். “பிரித்தானியா தன் சர்வதேசப் பங்காளிகளுடன் உழைக்கிறது, உலகம் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு; அது மற்ற மதத்தை சேர்ந்தவர்களைவிட அதிக முஸ்லிம்களை இப்பிராந்தியத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. வேறுமாதிரி நினைத்தால் அது உண்மையைத் திரிப்பது ஆகும்.”

லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் கூறினார்: “இக்கொலையை இஸ்லாம் மதத்தின் மீது சுமத்துவது முற்றிலும் தவறானதாகும்; ஆனால் இக்கொலைக்கும் பிரித்தானிய வெளியுறவுக் கொள்கைக்கும் அல்லது பிரித்தானியப் படைகளின் செயல்களுக்கும் இடையே பிணைப்பைக் காண்பதும் அதேவகையில் தவறாகும்; படையினர் தங்கள் உயிரைக் கொடுத்து சுதந்திரத்திற்காக பிற நாடுகளில் செயல்படுகின்றனர்.”

“இக்குற்றம் முற்றிலும், பிரத்தியேகமாக அதைச் செய்தவர்களுடைய மறைந்துள்ள, சிதைக்கப்பட்டுள்ள மனங்களில்தான் உள்ளது.”

“இத்தகைய அறிக்கைகள் எவரையும் நம்பவைக்கவில்லை. வுல்விச்சில் நடந்த கொடூர நிகழ்வுகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலான இராணுவச் செயல்களுக்கு ஒரு பதிலடி; நிகழ்வுகள் நூறாயிரக்கணக்கானவர்களை கொன்றுள்ளது, முழு நாடுகள் அழிக்கப்பட்டுள்ளன, தெற்கு லண்டனில் காணப்பட்டதைவிட குறைவற்ற மிருகத்தனச் செயல்களை அந்நாடுகள் கண்டுள்ளன.

இத்தகைய குற்றம் நிறைந்த வன்முறையுடன் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என அழைக்கப்படுவதின் ஒரு பகுதியாக, முறையான தவறுகள் உடைய ஒரு பகுதியாக குறிப்பாக முஸ்லிம்கள் இலக்கு கொள்ளப்படுகின்றனர்—இதில் கடத்தல்கள், விசாரணையின்றிக் காவலில் வைத்தல், பிரித்தானியா, அமெரிக்கா ஆகியவை நடத்தும் சித்திரவதை ஆகியவை அடங்கும்.

அடெபோலஜோ மற்றும் அவருடைய உடந்தையாளரின் செயல்கள் “பயங்கரவாதம்” என விவரிக்கப்படுகின்றன. ஆயினும்கூட சிரியாவில் இதே மாதிரியான சிந்தனைப்போக்கு, அரசியல் கருத்து உடைய சக்திகள் “சுதந்திரத்திற்காக போரிடுபவர்கள்” எனப் பாராட்டப்படுகின்றனர், குறுங்குழுவாத கொடுமைகளை இழைப்பதற்கு நிதியங்களும் ஆயுதங்களும் கொடுக்கப்படுகின்றனர்; இதையொட்டி ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளைமுறை வடிவமைப்புக்கள் பெருகுகின்றன.

உலகெங்கிலும் மிருகத்தன அரச வன்முறை வாடிக்கையாகி விட்ட ஆண்டுகளில் இத்தகைய நபர்களின் பார்வை நச்சுப்பிடித்துக் கனிந்துள்ளன. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தன் குற்றங்களைக் குறைவின்றி தொடர்வதற்காக அவர்களுடைய செயல்கள் விளங்க முடியாதவை என்று அறிவிக்கப்படுகின்றன.

இந்த இலக்கை ஒட்டி செய்தி ஊடகம் கொலையை எதிர்கொள்கையில் நாடு இராணுவத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறது. சன் பத்திரிகை தலையங்கமாக, “நேற்று ஒரு இளைஞர் கொடூரமாக நாட்டிற்குப்பணி புரிந்ததற்காக கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று நாம் தீவிரவாதிகளை மீறி, நம் ஆயுதப்படையுடன் தோளோடு தோள் உராய்ந்து நிற்கவேண்டும்” என்று எழுதியுள்ளது.

தொழிற் கட்சியின் நிழல் பாதுகாப்பு மந்திரி ஜிம் மர்பி “முழு ஆதரவையும்” அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் உறுதியளித்து, ஆயுதப்படைகள் குறித்துக் கூறினார்: “அவர்கள் நம்மைக் காக்கிறார்கள், இன்று நாம் ஒவ்வொருவரும் உரத்த ஆதரவுத் தகவலை அளிக்க வேண்டும், நன்றியை அனைத்து படையினருக்கும், நம் சிறுநகரங்கள், நகரங்கள், உள்ளூர், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.”

சிப்பாய்கள் பொது இடங்களில் தங்கள் சீருடையை “எச்சரிக்கை கருதி” மறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என கொலையை தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு அமைச்சரகத்தால் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. COBRA கூட்டத்தில் காமெரோன் தானே அந்த முடிவைத் திரும்பப் பெற ஒப்புதல் கொடுத்து, சிப்பாய்கள் பொது இடங்களில் தங்கள் சீருடைகளை அணியலாம் என்று கூறினார்.

இதேபோல்தான் உடனடியாக, உறுதியாக, பயங்கரவாதத்திற்கு எதிராக என்ற பெயரில், நிறைய ஜனநாயக விரோத சட்டங்கள் வலுப்படுத்தப்படும். முன்னாள் தொழிற் கட்சி உள்துறை மந்திரி ரீட் பிரபு உடனடியாக தகவல் தொடர்பு சட்ட வரைவை இயற்ற வேண்டும் என்று கோரினார். இந்தச் சட்ட வரைவு, உள்நாட்டுத்துறை மந்திரிக்கு, ஒரு குடிமகன் பற்றிய எத்தகவலையும் குறிப்பிட்ட நோக்கம் இன்றி தக்கவைத்துக் கொள்ளும் அதிகாரத்தை கொடுக்கிறது. இந்த நடவடிக்கைகள் நீதித்துறையின் பரிசீலனைக்கு உட்படாது, அனைத்துவகை தொடர்பிற்கும் பொருந்தும், அனுப்பப்படும் தகவல்கள், ஆன்லைன் சமூகச் செய்தி ஊடகம், தொலைபேசி உரைகள் என. ரீட்டின் கோரிக்கை கார்லைல் பிரபு, லிபரல் டெமக்ராட்டாலும் எதிரொலிக்கப்பட்டது; அவர் முன்னாள் அரச பயங்கரவாத எதிர்ப்பு பரிசீலனையாளர் ஆவார்.

Read more...

பாரிஸில் துப்பாக்கியுடன் ரோந்து சென்ற ராணுவ வீரர் மீது தாக்குதல்! தாக்கியவர் மாயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், மக்கள் நடமாட்டம் ஜேஜே என்றிருக்கும், பிசியான வர்த்தக ஏரியாவில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரெஞ்ச் ராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான Cédric Cordier என்ற பெயருடைய இந்த ராணுவ வீரர், வேறு வீரர்களுடன் ரோந்து சென்றுகொண்டிருந்தார். பாரிஸில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளதால், உல்லாசப் பயணிகள் அதிகம் நடமாகும் இடங்கள், வர்த்தக மையங்கள், மற்றும் நகருக்குள் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக ராணுவத்தினர் ரோந்து செய்வது தற்போது நடைமுறையில் உள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ரோந்து சென்றுகொண்டிருந்த ராணுவ வீரரே தாக்கப்பட்டுள்ளது அங்கே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸில் உள்ள La Défense ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியுள்ள ஷாப்பிங் ஏரியாவிலேயே மூன்று ராணுவ வீரர்களும் ரோந்து செய்துகொண்டிருந்தனர். மாலை 6 மணிக்கு, அப்பகுதியில் ஜன நடமாட்டம் மிக அதிகமாக இருந்தது.

அப்போது, ராணுவ வீரரை பின்புறமாக அணுகிய நபர், தனது கையில் இருந்த கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தியுள்ளார். கழுத்தில் குத்திய நபர் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கூட்டத்துக்குள் கலந்து மறைந்து விட்டார். கழுத்தில் காயமடைந்த ராணுவ வீரர் தற்போது வைத்தியசாலையில் உள்ளார்.

தாக்குதல் நடந்தபோது ராணுவ வீரர் யூனிபார்மில் இருந்தார். அவரது கையில் எந்திரத் துப்பாக்கியும் இருந்தது. அவருடன் ரோந்து சென்ற மற்றைய இரு வீரர்களும் துப்பாக்கி வைத்திருந்தனர்.

அப்படியிருந்தும், ராணுவ வீரரை குத்திய நபரால் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது.

அந்தப் பகுதியில் அப்போது இருந்தவர்களின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர், கூர்மையான பொருள் ஒன்றால் கழுத்தில் குத்தியுள்ளார். அது ஒரு பாக்ஸ்-கட்டர் என்கிறார்கள் சிலர்.

குத்திவிட்டு மாயமாக மறைந்த நபர், அந்த ஷாப்பிங் ஏரியாவில் உள்ள செக்யூரிட்டி கேமராக்களில் பதிவாகியுள்ளார். அதன்படி அவர் சுமார் 1.9 மீட்டர் உயரமுடைய நபர் என்று தெரியவந்துள்ளது. ராணுவ வீரரை தாக்க வந்தபோது, கருப்பு நிற பான்ட்ஸ், மற்றும் ஜெர்சி அணிந்திருந்தார்.

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் Jean-Yves le Drian உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று ராணுவ வீரரை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ராணுவ வீரர் தாக்கப்பட்டதன் காரணம், அவர் ராணுவ வீரராக இருந்ததால்தான். தனிப்பட்ட Cédric Cordier என்ற நபரை தாக்கவில்லை. ராணுவ யூனிபார்மில் அவர் இருந்ததால் தாக்கப்பட்டுள்ளார்” என்றார்.

நேற்றிரவு எதியோப்பியாவுக்கு புறப்பட்டு சென்ற பிராஸ் ஜனாதிபதி François Hollande, “சில தினங்களுக்கு முன் லண்டனில் பொது இடத்தில் ராணுவ வீரர் தாக்கப்பட்டதற்கும், இதற்கும் தொடர்பு உள்ளதா என்பதை தற்போது கூறமுடியாது” என்று கூறியுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம், இன்னமும் தெரியவில்லை. மாலி நாட்டில் பிரான்ஸ் நாட்டு ராணுவம், அங்குள்ள தீவிரவாத அமைப்புக்கு எதிராக யுத்தம் புரிவதால், பிரான்ஸில் தாக்குதல்கள் நடத்தப்படும் என அங்குள்ள தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மாலியில் எச்சரிக்கை விடுத்த அமைப்பு, அல்-காய்தாவின் வட ஆபிரிக்க பிரிவு என்பதால், அந்த எச்சரிக்கை பிரான்ஸால் சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதையடுத்தே, பாரிஸில் ராணுவ வீரர்களின் ரோந்து நடக்கிறது. ராணுவ வீரர் மீது தாக்குதல் நடந்ததும் அதனால்தான் போலிருக்கிறது.



-நன்றி விறுவிறுப்பு



Read more...

இலங்கையில் கடந்த ஆண்டு 20 பேர் பலவந்தமாக காணாமற் போயுள்ளனர்!

இலங்கையில் கடந்த ஆண்டில் இருபது பேர் பலவந்தமாக காணாமற் போயுள்ளதாக லண்டனைத் தலைமையகமாக கொண்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு காணாமற்போனவர்களில் அரசியல் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடங்கியுள்ளனர்.

இலங்கையில் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும், அதிகார துஷ்பிரயோகம், மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூட வலியுறுத்தும் நீதித்துறையினரும் அச்சுறுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் 2013ம் ஆண்டுக்கான அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத தடுத்து வைப்பு, சித்திரவதை, காணாமற்போதல்கள் என்பன தொடர்வதாகவும், இத்தகைய குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்த போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை.

பொறுப்புக்கூறல் தொடர்பான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையோ, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பரிந்துரைகளையோ நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Read more...

கோதாபாய வரம்பு மீறி அரசியல் பேசுகிறார் - மனோ கணேசன்

கோதாபய ராஜபக்ஷ இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை. ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரே அந்தஸ்த்தின் காரணமாக கோதாபய தன்னை ஒரு உப ஜனாதிபதியாக உருவகித்து கொண்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் இன்று வரம்பு மீறி பகிரங்கமாக அரசியல் பேசுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இவருக்கு நான் கடந்த மாதமே ஒரு பிரபல சிங்கள ஊடகம் மூலமாக ஒரு ஆலோசனை சொன்னேன். அதை மீண்டும் இப்போது சொல்கிறேன். கோதாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினாராக பதவி ஏற்கட்டும். அதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ஆகட்டும். அரசியலமைப்பை திருத்தி உப ஜனாதிபதியாககூட ஆகட்டும். அதுபற்றி நாம் கவலைப்பட போவதில்லை. ஆனால் பாராளுமன்ற வாத விவாதங்களில் கலந்துகொண்டு பதில் சொல்லும் கடப்பாடு இல்லாத இடத்தில் இருந்துகொண்டு அவர் அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும்கூறியதாவது,

வரையரையுடன்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரங்களே மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பையும், அதில் உள்ள 13ம் திருத்தத்தையும் வாசித்தால் இந்த உண்மை விளங்கும். அதற்கு மேலாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தின் மேலாதிக்கமும் இருக்கின்றன. இந்த நிலையில், நாட்டின் அரசியலமைப்பை முறையாக வாசித்து புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அல்லது வேண்டுமென்றே அதை திரித்து சொல்பவர்களுக்கு கௌதம புத்தனின் போதனைகள்தான் ஞானோதயம் தர வேண்டும்

உண்மையில் மாகாணசபை அதிகாரங்கள் போதாது என்று தமிழ் அரசியல் கட்சிகள் சொல்கின்றன. மாகாணசபைகளை ஒரு ஆரம்பமாககூட ஏற்றுக்கொள்ள கூடாது என தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சாரார் கருதுகின்றார்கள். இந்நிலையில் இருப்பதையும் குறைக்கும் யோசனைகளை பகிரங்கமாக விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர, பொதுபல சேனாவின் ஞானசார கலபொட தேரர் ஆகியோருடன் சேர்ந்து கோதாபய ராஜபக்சவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். உண்மையில் இவர்கள் அனைவரையும் பின்னால் இருந்தபடி இவர்தான் தூண்டி விடுவதாக நாம் சந்தேகிகின்றோம்.

மக்களை பிழையாக வழி நடத்தும் இந்த முட்டாள்தனமான பிற்போக்கு கருத்துகளுக்கு நாம் பலமுறை பதில் சொல்லிவிட்டோம். இந்த கருத்துகள்தான் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தோன்ற காரணமாக அமைய போகின்றன.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பிரிப்பதன் மூலமே நாட்டு பிரிவினையை தவிர்க்க முடியும் என்பது இந்த நாட்டின் வரலாறு எடுத்துக்காட்டும் படிப்பினை. அண்டை நாடு இந்தியாவின் வரலாற்றை பார்த்தும் இதை நாம் அறிந்துகொள்ள முடியும். வரலாற்றில் இருந்து பாடம் படிக்க முடியாத நபர்கள்தான், அதிகாரம் பகிர்வதை எதிர்க்கிறார்கள். இவர்கள்தான் இந்த நாட்டில் இன்று உண்மையான பிரிவினை வாதிகள்.

கோதாபய ராஜபக்சவுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது. ஆனால் அவர் இன்று ஒரு அரசாங்க அதிகாரி. இந்த பதவி நிலையை மறந்துவிட்டு அவர் தொடர்ச்சியாக அரசியல் கருத்துகளை சொல்லிக்கொண்டே இருப்பது மக்களுக்கு தவறான செய்தியை வழங்குகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தேசிய பட்டியலில் தற்காலிகமாக பலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒருவரது பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்டு கோதாபய ராஜபக்ச பாராளுமன்றம் செல்ல வேண்டும் என நான் விரும்புகின்றேன். அவர் பாராளுமன்றம் வர வேண்டும் என நான் சொல்ல முடியாது. ஏனென்றால் நான் அங்கு இல்லை. இன்று பாராளுமன்றத்தில் சிறப்பான எம்பீக்கள் இருக்கின்றார்கள். பாராளுமன்றம் சென்று தனது இந்த கருத்துகளை கோதாபய ராஜபக்ச சொல்வாரானால், அவற்றுக்கு உரிய பதில்களை, அதிகார பகிர்வை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வழங்குவார்கள்.

உண்மையில் கோதாபய ராஜபக்ச பாராளுமன்றம் சென்று பாதுகாப்பு அமைச்சையே பொறுப்பேற்று, பாதுகாப்பு அமைச்சராக முடியும். பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் பங்குபற்ற முடியும். இதை செய்யாமல் தான் மட்டுமே பங்குபற்றும் அரசாங்க ஊடகங்களில் தோன்றி கருத்துகள் கூறுவதையும், பாதுகாப்பு அமைச்சு நிகழ்வுகளில் அரசியல் கருத்துகளை சொல்வதையும் கோதாபய ராஜபக்ச நிறுத்த வேண்டும்.

Read more...

மேலாடைஇன்றி நியோர்க்கில் நடமாட பெண்களுக்கு அனுமதி!

நியூயோர்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹோல்லி வேன் வோஸ்ட், நியூயோர்க் நகரிலும் தனக்கே உரிய பாணியில் சுற்றி வந்த போது மேலாடை அணியாதது குற்றம் என பொலிஸார் அவரை கைது செய்த நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம், முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன் என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, நியூயோர்க் நகரில் பணியாற்றும் 34,000 பொலிஸாருக்கு நகர பொலிஸ் தலைமையகம் நேற்று முன்தினம் விடுத்துள்ள அவசர உத்தரவில் பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம் என உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com