Tuesday, April 30, 2019

தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளின் வலைப்பின்னல் சிஐடி கையில். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கைதுகளின் விபரம் இதோ!

உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் அனுசரணைப் பெற்ற மொஹம்மட் சஹ்ரானின் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவின் அனைத்து தொடர்புகளும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த தொடர்புகள் குறித்து முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனால் பல முக்கிய கைதுகள் சாத்தியப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழுவை பலவீனப்படுத்தி விட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசெகர சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகளின் அனைத்து தொடர்புகளையும் நாம் தற்போது விசாரணைகளில் முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளோம். அவர்களை முழுமையாக நாம் பலவீனப்படுத்திவிட்டோம். சி.ஐ.டி. மற்றும் சி.ரி.ஐ.டி. குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகள் மிக வெற்றிகரமாக இடம்பெறுகின்றன.

யாரும் வீணாக வதந்திகளை நம்பி அஞ்ச தேவை இல்லை. நாம் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படையினருடன் இணைந்து சோதனை நடவடிக்கைகளை தொடர்வோம். நாட்டில் பல பகுதிகளில் பல முக்கிய கைதுகள் சோதனைகளின் போது இடம்பெற்றுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் நாடளவைய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பல முக்கிய கைதுகள் இடம்பெற்றன.

தெஹிவளை கைதுகள்

தடைசெய்யப்பட்ட ஜமாத்துல் மில்லதுல் இப்ராஹீமீய்யா அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளையில் கைது செய்யப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான முக்கிய சந்தேக நபர்களான சாதிக் அப்துல்லாஹ் சாஹித் அப்துல்லாஹ் ஆகிய இருவரையும் விசாரணைக்குட்படுத்தியதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இம் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை - கவ்டான பகுதியின் ஹில் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர். பொறியியலாளர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகார தரத்தில் சேவையாற்றும் ஒருவரும் சமயல் காரர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.

கோட்டே மாநகர சபை உறுப்பினரும் சகோதரரும் கைது

கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர் ஹாஜா மிஹிதீன் அலி உஸ்மான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் வெலிக்கடை பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சோதனைகளின் போது கைது இவர்கள் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று வாள்கள், கத்தி, இரு தொலைபேசிகளுடன் அவர்கள் நாவல வீதி, பள்ளிவாசலுக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.

இவர்கள் தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் மாநகர சபை உறுப்பினரின் வீட்டிலேயே சோதனைகள் இடம்பெற்றதாகவும் பொலிசார் கூறினர்.

கட்டுபொத்த


கட்டுபொத்தை அலஹிட்டியாவ பகுதியில் 25 ஏக்கர் காணியில் அமைந்துள்ள தனி வீடொன்றில் இருந்து 4 வாள்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்காத போதும், சந்தேகத்துக்கு இடமான குறித்த வீடு தொடர்பில் இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.

கணகராயன் குளத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்

வவுனியா - யாழ். வீதியில் கணகராயன் குளம் பகுதியில் உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றின் பின்னால் வைத்து இராணுவத்தினர் பயன்படுத்தும் அழுத்தக் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டலின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதுக்கையில் இளைஞர் கைது

பாதுக்கை பொலிஸ் பிரிவில் வாடகை வீடொன்றில் வசித்த 28 வயது இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன் அவரது வீட்டை சோதனை செய்த போது 6 இராணுவ சீருடைகள் 8 தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வீட்டிலிருந்த திருகோணமலை பகுதியை பதிவாக கொண்ட லொறியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த ஆசிரியர் கைது

கற்பிட்டி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து மடிக்கனினி இன்றும் நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் மீட்டுள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெலிமடை சுற்றிவளைப்பு

வெலிமடை - சில்மியாபுர பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனைகளின்போது வீடொன்றிலிருந்து 35 மீட்டர் நீளமான குண்டு வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் நூல் கைப்பற்றப்பட்டுள்ளது.

அது தொடர்பில் 59 வயதான அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

டெட்டனேட்டர்களுடன் அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் கைது

பிரபல அமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலர் ஒருவர் 6 டெட்டனேட்டர்களுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வெலிமடையில் சிக்கிய தெளஹீத் உறுப்பினர்

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் வெலிமடை - பொரகஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடியே 48 இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தொகையுடன் அவர் இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டை சோதனைச் செய்தபோது வாளி ஒன்றுக்குள்ளும் பெட்டி ஒன்றுக்குள்ளும் இந்த பணம் சந்தேகத்துக்கு இடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. சந்தேக நபருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க பொலிசார் அவதானம்ச செலுத்தியுள்ளனர்.

பொலன்னறுவையில் சிக்கிய தேடப்பட்ட லொறி

பொலன்னறுவை - புலஸ்திபுர பொலிஸ் பிரிவில் சுங்காவில பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த சந்தேகத்துக்கிடமான லொறியொன்றினை பொலிசார் கைப்பற்றினர்.

இ.பி. பி.எக்ஸ். 23991 எனும் இலக்கத்தைக் கொண்ட டிமோ ரக லொறியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இந்த லொறி இரு மாதங்களுக்கு முன்னர் சுங்காவில நபருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் லொறியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களுடன் இந்த லொறி தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ள நிலையில் இந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தம்மிக வீரசிங்கவின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

யாழ். பள்ளிவசலில் மீட்கப்பட்டுள்ள இராணுவ சீருடை

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் ஜகட் ஒன்றும் கொமோண்டோ படையினர் பயன்படுத்தும் ஒரு வகை கவசமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயன்படும் இரு தோட்டகளும் மீட்கப்பட்டுள்ளன.

கலபிந்துனுவெவ சோதனை :

கலன்பிந்துனுவெவ பகுதியில் பொலிசார் முன்னெடுத்த சோதனையில் சிப்புக் குளம் பகுதியில் ஒருவர் 3 மீட்டர் நீளமான வாளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

வாரியபொலவில் சிக்கிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

வாரியபொல - பண்டார கொஸ்வத்த பகுதியில் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நல்வர் தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர்கள் என பொலிசார் கூறினர்.

150 இற்கும் மேற்பட்ட பொலிஸ், இராணுவத்தினர் வீடுகள் பள்ளிவாசல்களை இதன்போது சோதனை செய்துள்ளனர். இதன்போது அங்கிருந்து கடும்போக்கு கருத்துக்கள் அடங்கிய இருவெட்டுக்கள், கையேடுகள், மடிக்கணினி, வாள் கத்தி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பயங்கரவாத தாக்குதலில் தற்கொலை தாரிகள் பயன்படுத்திய வேன் கெக்கிராவையில் சிக்கியது

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அங்கு பாதுகாப்பு தரப்பினரை இலக்குவைத்து தாக்குதல் நடத்திய பின்னர் குண்டுகளை வெடிக்க வைத்து தர்கொலை தககுதல் நடத்தினர்.

இவ்வாரு அங்கு பதுங்கியிருந்ததாக கருதப்படும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரர்களான ரில்வான், சைனி உள்ளிட்டவர்கள் அவ்வீட்டுக்கு செல்ல பயன்படுத்திய வேன் பாதுகாப்பு தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வேனில் பயங்கரவாதிகள் அவ்வீட்டுக்கு வெடிபொருட்களுடன் வந்ததாக பொலிசார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வேனை கெக்கிராவை - மருதன்கடவல இஹல புளியன்குளம் பகுதியில் வைத்து கைப்பற்றினர். 250 - 5680 எனும் குறித்த வேனின் சாரதியாக கடமையாற்றிய அபுசாலி நசார் என்பவரையும் இதன்போது கெக்கிராவை பொலிசார் கைதுசெய்தனர்.

கல்முனை பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அந்த தகவல் கெக்கிராவ பொலிஸ் பொறுப்பதிகரைக்கு கொடுக்கப்பட்டு அதனூடாக இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

கெக்கிராவை பகுதியில் உள்ள மெளலவி ஒருவர் தனக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமையவே அவர்களை சாய்ந்தமருதுக்கு அழைத்து சென்றதாக சாரதி பொலிசாரிடம் கூறியுள்ள நிலையில் குறித்த மெளலவியைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சஹ்ரானின் நெருங்கிய சகா கைது

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மிக நெருங்கிய சகா ஒருவர் கல்முனை - மருதமுனை அஷ்ரப் வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என கருதப்படும் குறித்த சந்தேக நபரிடம் இருந்து சந்தேகத்துக்கிடமான 3 புத்தகங்கள், சிம் அட்டை, தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். ஆதரவாளர் கைது

அம்பாறையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளராக செயற்பட்டதாக நம்பப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். தலைவர்கள், தொடர் குண்டுவெடிப்பு காணொளிகள் என்பவற்றை பலருக்கு தொலைபேசியில் பதிவேற்றிக் கொடுத்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

வவுனியா, மன்னார் சுற்றிவளைப்புக்கள்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தககுதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடக்கில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், வடக்கில் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி வவுனிய மாவட்டத்தில் இராணுவம் முன்னெடுத்த சோதனைகளில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மன்னாரில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதான சஹ்ரானின் ஊடக செயலர்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்ட ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மதவாச்சி, தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் மொஹம்மட் என்பவரையே இவ்வாறு கைதுசெய்துள்ள மதவாச்சி பொலிசார், அவரை அனுராதபுரம் நீதிவான் ஜானக பிரசன்ன சமரசிங்க முன் ஆஜர்செய்து 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

6 பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரின் மனைவி 7 ஆவது பிரசவத்துக்காக காத்திருந்தபோது, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் காத்தான்குடி தேசிய தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டாளராக இருந்துள்ளதாகவும் பொலிசார் கூறினர்.

மின்சார தொழில் நுட்ப உத்தியோகத்தரான குறித்த சந்தேக நபர், மொஹம்மட் சஹ்ரானின் ஊடக செயலராக செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமேல், வட மத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன, அனுராதபுரம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் செனரத் பிரதாப் சந்துன்கஹவல, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் திலின ஹேவா பத்திரன அகியோரின் மேற்பார்வை ஆலோசனையின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கிழக்கு ஆளுநர் அலுவலக சேவையாளர்கள் கைது

இதைடையே காத்தான்குடி - ரெலிகொம் வீதியில் விஷேட சுற்றிவளைப்பு இடம்பெற்றது. இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின்போது, அப் பகுதியில் இருந்த அரசியல் அலுவலகம் ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 48 கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அங்கிருந்த கிழக்கு ஆளுநர் அலுவலகத்தின் கீழ் சேவையாற்றிய என்.எஹ்.எம். கரீம், எம்.ரி. நசார் என அறியப்படும் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் கிழக்கு ஆளுநர் அலுவலக அடையாள அட்டையும் இருந்துள்ளது.

சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவர் கைது


சாய்ந்தமருது வொலிவேரியன் குடியிருப்பு பகுதியில் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வீட்டை பயங்கரவாதிகளுக்கு வாடகைக்கு கொடுத்த நபரை அம்பாறை பொலிசார் கைது செய்து 72 மணிநேரம் தடுப்புக் காவலில் தடுத்து விசாரித்து வருகின்றனர்.

அப்துல் மஜீத் ஆதம் லெப்பை என்பவரையே பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தெளஹீத் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் மூவரின் கைது

தேசிய தெளஹீத் ஜமாத்தின் முக்கிய உறுப்பினர்கள் மூவர் மிரிஹானை விஷேட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிக முக்கிய நபர்களாக கருதி தேடப்பட்டு வந்த கல்கிசை, இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 4 மடிக் கணினிகள், 5 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரு தெளஹீத் ஜமாத்தினரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி


கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொட்டாஞ்சேனை – மெசஞ்சர் வீதியில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில், சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியதையடுத்து தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 2 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து இறுவெட்டுகளும், மடிக்கணினியும், கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(எம்.எப்.எம்.பஸீர் )

Read more...

கொழும்பின் பாதுகாப்புக்கு கூட்டு நடவடிக்கைகள் கட்டளை மையம்.

முப்படைகள் மற்றும் காவற்படையை இணைந்ததோர் கூட்டு கட்டளை மையம் ஒன்று கொழும்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டளை மையத்தின் கீழ் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து இராணுவ, கடற்படை, விமானப்படை, மற்றும் காவல்துறை பிரதேசங்களும், உடனடியாக கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகம், மேற்கு படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் மையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடற்படையின் றியர் அட்மிரல் டபிள்யூஏஎஸ்எஸ் பெரேரா, விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் டபிள்யூஎல்ஆர்பி றொட்றிகோ, காவல்துறையின் கண்காணிப்பாளர் அனில் பிரியந்த ஆகியோர், இந்த நடவடிக்கைப் கட்டளை மையத்தின் இணைப்பதிகாரிகளாக பணியாற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த இணைப்பதிகாரிகளில் ஒருவர் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பயணித்த ஹெலிப்கொப்டர் இயந்திரக்கோளாறு காரணமாக புலிகளின் பகுதியினுள் தரையிறங்கியபோது எவருக்கும் சேதம் ஏற்படாமல் பயணித்தவர்கள் அனைவரையும் காட்டுவழியாக வவுனியாவுக்கு கொண்டுவந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இந்த கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் செயற்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more...

மைத்திரியும் கொலைகளின் குற்றவாளியே. சாடுகின்றது ஆங்கிலப் பத்திரிகை.

உயிர்த்தெழுந்த ஞாயிறு இடம்பெற்ற தொடர்குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரியமுறையில் செயற்பட்டிருந்தால் இடம்பெற்ற உயிரிழப்புக்களை தடுத்திருக்க முடியும் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

இந்நிலையில் பல தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொள்கின்றனர். பொலிஸ் மா அதிபர் மீதும் பாதுகாப்பு செயலர் மீதும் பழியை சுமத்தியுள்ளார் மைத்திரிபால சிறசேன. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவிற்காக அந்தப்பக்கமே திரும்பிப்பாராமல் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஆகியோர் இருந்துள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை.

இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி அறிந்திருந்தாகவும் , அவர் உரியநேரத்தில் செயற்பட்டிருந்தால் தடுத்திருக்கமுடியும் என்றும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளர், மூத்த பிரதி காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அதிபரிடம் விரிவான அறிக்கையை வழங்கினார்.

அதிகாரபூர்வமான மற்றும் பல ஆதாரங்களை அவர் அறிந்திருந்திருந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

அவ்வாறான அறிக்கைகளில் ஒன்று, புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக, ஏப்ரல் 11ஆம் நாள் வழங்கப்பட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதி செய்தன.

இரண்டாவது அறிக்கை, ஐந்து நாட்களுக்குப் பின்னர், அரச புலனாய்வுச் சேவை தலைவரால் வழங்கப்பட்டது.

மூன்றாவது அறிக்கை, தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக, ஏப்ரல் 20ஆம் நாள் மாலை பாதுகாப்பு அமைச்சுக்கு, வழங்கப்பட்டது.

ஏப்ரல் 20ஆம் நாள் அறிக்கை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளிடம் இருந்த குறிப்பாக இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து கிடைத்திருந்தது.

கடைசிநேர அறிக்கைகள் கிடைத்தபோது, புலனாய்வு அறிக்கைகள் தொடர்பாக காவல்துறையை எச்சரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளிடம், நிலந்த ஜயவர்த்தன கோரியிருந்தார்.

இந்த எச்சரிக்கைகள் காவல்துறை மா அதிபருக்கு பரிமாறப்பட்டதாக அறியப்படுகிறது.

எனினும், குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேவாலயங்கள் குறிவைக்கப்படலாம் என்று புலனாய்வு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட போதும், அந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக தேவாலயங்களை எச்சரிக்க காவல்துறை மா அதிபர் தவறிவிட்டார்.

சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமானவர் என்று நம்பப்படும், அரச புலனாய்வுச் சேவையின் தலைவர், நிலந்த ஜயவர்த்தன சிங்கப்பூரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த அதிபர் மைத்திரிகால சிறிசேனவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக, சிறிலங்கா அதிபருக்குத் தெரியப்படுத்தி, நிலந்த ஜயவர்த்தன எச்சரிக்கை செய்திருந்தார்.

புலனாய்வுத் தலைவர்கள், குறிப்பாக அரச புலனாய்வுத் தலைவர், ஏனைய நிர்வாகிகள் மற்றும் அமைச்சின் ஏனைய முகவர் அமைப்புகளுக்கு அறிக்கைகளை வழங்குவதற்கு முன்னர், முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபருக்கு அனுப்புவது வழக்கம் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தெரிவித்தார்.

எனினும், புலனாய்வு அமைப்பிடம் இருந்து கிடைத்த உயர்மட்ட எச்சரிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக, சிறிலங்கா அதிபரிடம் இருந்து முப்படையினர் உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை.

புலனாய்வு அறிக்கைகள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும், குண்டுகள் வெடித்த பின்னர் சமூக ஊடகங்களில் பார்த்தே அதனைத் தெரிந்து கொண்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

அச்சுறுத்தல் தொடர்பாக பாதுகாப்பு செயலரோ, காவல்துறை மா அதிபரோ தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டியிருந்தார்.

தமது பொறுப்பை அவர்கள் நிறைவேற்றவில்லை என்று பதவி விலகுமாறும் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு முதல் முறையாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பினால், ஏப்ரல் 8ஆம் நாள் எச்சரிக்கை அனுப்பப்பட்டது. மறுநாள் அச்சுறுத்தல்கள் தொடர்பான முதலாவது கூட்டம் நடைபெற்றது.

அதேநாள், தேவையான நடவடிக்கைககளை முன்னுரிமை அடிப்படையில் எடுக்குமாறு, காவல்துறை தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு வழிகாட்டுதல்களை வழங்கியது.

எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலானது கடுமையானதாக, மிருகத்தனமானதாக, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கும் என்று, பாதுகாப்பு அமைப்புகளில் இருந்த யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை என்றும், செயற்பாட்டுத் தவறுகள் பல மட்டங்களில் இருந்தது என்றும் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறைபாடுகள் தொடர்பாக, அதிபர் விசாரணைக் குழு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரிடம் விசாரிக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த விசாரணைக்குழு முன்பாக, பாதுகாப்புச் செயலராக இருந்த ஹேமசிறி பெர்னான்டோவும், காவல்துறை மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தரவும் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ளனர். என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் எச்சரிக்கைகளை சிறிலங்கா அதிபர் முன்கூட்டியே அறிந்திருந்தார் என நேற்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிய செய்தி பொய்யானது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Read more...

Monday, April 29, 2019

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளை அழைத்து மஹிந்தர் மந்திராலோசனை.

பயங்கரவாத ஊடுருவல் நகர்வுகள் குறித்து ஆராயவும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆராயவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளையும் மற்றும் புலனாய்வு அதிகாரிகளையும் ஒன்றிணைத்த குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதுள்ள நிலைமைகள் குறித்தும் பாதுகாப்பு பலவீனத்தன்மை மற்றும் எவ்வாறான நகர்வுகளை கையாண்டு பாதுகாப்பை பலப்படுத்துவது என்ற காரணிகளை ஆராயும் வகையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் முன்னாள் பாதுகாப்பு உயர் பிரதானிகள் குழுவுடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் இந்த சந்திப்பை நடத்தியிருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு தளபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களை பயன்படுத்தி தற்போதுள்ள நிலைமைகளை ஆராய இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் நிலைமைகளை உடனடியாக அறியத்தர எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

இதில் பாதுகாப்பு பிரதானி ஜகத் ஜெயசூரிய, முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக, முன்னாள் விமானப்படை தளபதி ரோஹான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, அட்மிரல் ஜகத் கொலம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சந்திர பெர்னாண்டோ, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வகிஷ்த்த, முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் உள்ளடங்கிய வகையிலே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் புலனாய்வுத்துறை உயர் அதிகார்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர். இவர்களும் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Read more...

குண்டுகளை கண்டறிய தனது செல்லப்பிராணிகளான 5 நாய்களை இராணுவத்துக்கு பரிசளித்த சீமாட்டி

இலங்கையில் உருவாகியுள்ள வெடிகுண்டு பீதிகளை அடுத்து அவற்றை கண்டு பிடிப்பதற்காக சர்வதேச பல்கலைக் கழகம் ஒன்றின் விரிவுரையாளரான ஷிரு விஜேமான என்ற பெண் தனது நாய்களை இராணுவத்தினருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இவர் அளித்துள்ள 5 ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்கள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் தாய் நாய் வயது இரண்டு ஆண்டுகளும் மற்ற நாய்களின் வயது ஆறு மாதங்களும் ஆகின்றன. இவை அனைத்தையும் இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவை கொழும்புவின் நாரகென்பிட்டி பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கே வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தார்.

வெடிபொருட்களையும் போதை மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் ராணுவத்தினரின் செயல்பாடுகள் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் இந்நாய் சேர்க்கப்பட்டு இலங்கை ராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் மூலம் இந்நாய்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் இந்நாய்களுக்கு குறிப்பிட்ட முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Read more...

புர்க்காவை கை விட்டு பௌத்த பெண்களின் தேசிய உடையில் சென்று தாக்க திட்டமிட்டிருந்த முஸ்லிம் பெண்கள்..

நாட்டிலுள்ள மதத் தலங்களுக்குள் முஸ்லிம் பெண்களை சிங்களப் பெண்கள் போன்று வேடமிட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தது எனப் தேசிய புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். ஐ.எஸ்ஸின் வழிநடத்தலில் இயங்கும் தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களுக்குப் பயன்படுத்துவதற்காகத் தயார் நிலையிலிருந்த ஆடைகளை, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.

கடந்த 29ஆம் திகதி கிரிஉல்ல பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்கள் சிலரால் 9 வெள்ளை ஆடைகள் மற்றும் மேலும் சில ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக 29 ஆயிரம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆடை கொள்வனவு செய்யும் காட்சி அருகில் இருந்த சி.சி.ரி.வி. கமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது வீட்டில் இருந்து தற்போது 5 ஆடைகள் கிடைத்துள்ளன. ஏனைய 4 ஆடைகளைத் தேடும் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட வெள்ளை ஆடைகளை முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக அணிவதில்லை. எனவே, இதனை சிங்களப் பெண்கள் போன்று அணிந்து சென்று மதத் தலங்களுக்குள் தாக்குதல் மேற்கொள்வதற்காகவே மேற்படி ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



Read more...

பாதுகாப்புத்துறையில் அதிரடி மாற்றம். பூஜிதவிற்கு கட்டாய லீவு. புதிதாக சி.டீ. விக்ரமரத்ன.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆம் போகின்றேன் என்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தத்தில் பதவி விலகாமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூடியபோது பேசிய மைத்திரி : நான் பொலிஸ் மா அதிபரை பதவி விலகக்கூறினேன். ஆனால் அவர் விளையாட்டு காட்டப்பார்கின்றார். அவர் கடமையை சரிவரச் செய்திருந்தால் இத்தனை சேதங்களையும் தடுத்திருக்கமுடியும். எனவே கடமையைச் சரிவரச் நிறைவேற்றாது கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்படலாம் என ஒரு மிரட்டலை விட்டிருந்தார்.

அத்துடன் இன்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பியுள்ள மைத்திரி, பதில் பொலிஸ் மா அதிபராக பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவை நியமித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஷாந்த கோட்டேகொட நியமனம் பெற்றுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.




Read more...

எமது பாதுகாப்பை நாங்கள் கவனித்துக்கொள்வோம். நீங்கள் பொத்திக்கொண்டிருங்கள். இந்தியாவிற்கு மஹிந்த கன்னத்தில்.. !

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து மேற்குலகும் இந்தியாவும் இலங்கையினுள் நுழைவதற்கான பாதையாக இத்தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டுள்ள முனைகின்றது.

அந்த வரிசையில் அமெரிக்க எப்பிஐ மற்றும் சில புலனாய்வு நிறுவனங்கள் ஊடுருவின. அத்துடன் சிறிலங்காவுக்கு உதவி தேவைப்பட்டால், சிறப்பு படையான தேசிய காவல்படையை அனுப்புவதற்கு தயார் நிலையில் இந்தியா இருப்பதாக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயத்தினை அந்த அதிகாரி இந்திய சிஎன்என்-நியூஸ்18 செய்திசேவைக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த அதிகாரியின் உதவி முன்மொழிவு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிட் அந்த தொலைக்காட்சி கேட்டபோது,

சிறிலங்காவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எமது படையினரிடம் போதிய திறன் இருக்கின்றது உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை என கன்னத்தில் அறைந்தாற்போல் பதில் சொல்லியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்துரைக்கையில் :

'இந்த சதித் திட்டம் பற்றி முன்கூட்டியே தகவல்களை அளித்து இந்தியா உதவியிருக்கிறது.

ஆனால், தேசிய காவல் படை இங்கு வரத் தேவையில்லை. எமக்கு வெளிநாட்டுப் படையினர் உதவி தேவைப்படவில்லை.

இதனைக் கையாளும் திறன் எமது படையினருக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான அதிகாரத்தையும், சுதந்திரத்தையுமே கொடுக்க வேண்டியிருக்கிறது.' என்று தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, April 28, 2019

சஹ்ரானின் வாகனச் சாரதி, கபூர் மாமா கக்கியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்

தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் இதுவரை தீர்க்கப்படாது இருந்த முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானின் வாகன சாரதியாக கடமையாற்றிய கபூர் மாமாவைக் கைதுசெய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அது தொடர்பில் மேலும் இரு காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் நிந்தவூர் மற்றும், புத்தளம் - வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு கண்டறியப்பட்டன. அத்துடன் அவற்றிலிருந்து ஆயுதங்கள் பெருமளவில் மீட்கப்பட்டுள்ளன.

கபூர் மாமா எனப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை எனும் சந்தேக நபருக்கு மேலதிகமாக கைது செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் காத்தான்குடி - மூன்றை சேர்ந்த 34 வயதான அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தவ்ஸ் எனவும் மற்றையவர் காத்தான்குடி தெற்கை சேர்ந்த 30 வயதான ஹம்சா மொஹிடீன் மொஹம்மட் இம்ரான் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந் நிலையில் கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் பொலிஸ் காவலரணில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட்டும் ஒருவரை கழுத்தறுத்தும் கொலை செய்து அவர்களது கடமை நேர ரிவோல்வர் ரக துப்பாக்கிகளை கடத்திச் சென்றமை தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த மார்ச் 9 ஆம் திகதி, அமைச்சர் கபீர் ஹாசிம்மின் இணைப்பாளர்களில் ஒருவர் என கூறப்படும் மொஹம்மட் தஸ்லீம் என்பவரது வீட்டுக்குள் அத்துமீறி அவரைக் கொலை செய்ய முயற்சித்தமையும் இந்த சந்தேக நபர்களே என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி வவுணதீவில் பொலிசாரை கொலை செய்துவிட்டு அபகரித்து சென்ற துப்பாக்கிகளில் ஒன்று என மேலதிக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த மூன்று சந்தேக நபர்களிடமும் தொடர்ச்சியாக சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கண்கானிப்பில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷனை அபேசேகரவின் நேரடி கட்டுப்பாக்கில் விசாரணைகள் தொடர்கின்றன.

அதன் போது அண்மையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலை தாரிகள் உள்ளிட்ட இந்த சந்தேக நபர்கள் பயன்படுத்திய மேலும் இரு பாதுகாப்பு இல்லங்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் ஒன்று நிந்தவூரிலும் மற்றையது புத்தளம் - வணாத்துவில்லு பகுதியிலும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து வவுணதீவில் பொலிசாரை கொலை செய்த பின்னர் அபகரிக்கப்பட்ட ரிவோல்வர்களில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆடைகள் உட்பட 4 தோட்டக்கள் என பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் கபூர் மாமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில், வணாத்துவில்லுவில் உள்ள பாதுகாப்பு இல்லம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சென்ற அதிரடிப் படையும் சி.ஐ.டி.யும் அந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அவ் வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பீர்ப்பாய் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். அந்த பிளாஸ்டிக் பீர்ப்பாய்க்குள் இருந்து வவுணதீவு பொலிசார் கொலையின் பின்னர் அபகரிக்கப்பட்ட மற்றைய ரிவோல்வர் உட்பட எராளமான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சி.ஐ.டி.யால் மீட்கப்பட்டது.

அதில் ரீ 56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்கு பயன்படும் 24 தோட்டாக்கள், இரு மகசின்கள், வெளிநாட்டு தயாரிப்பு மைக்ரோ ரக துப்பாக்கி, உள் நாட்டு தயாரிப்பு 6 ரிவோல்வர்கள், வவுண தீவு பொலிஸாரிடம் அபகரிக்கப்பட்ட ரிவோல்வர்கள் என ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் நிந்தவூரில் மீட்கப்பட்டுள்ள சில புத்தகங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து முக்கிய தகவல்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் சி.ஐ.டி. அவற்றையும் தமது பொறுப்பில் எடுத்து ஆய்வு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன், அடிப்படைவாத அமைப்புக்கள் வளர்ச்சியடைகின்றது

மத போதனைகளை போதிக்கின்றோம் என்ற பெயரில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் இழுத்தடிக்கப்படாமல் தடை செய்து சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் என இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அடிப்படைவாத அமைப்புக்கள் வளர்ச்சியடைகின்றது என்றும், கிழக்கு மாகாணத்தில் பெரும்திரளான ஆயுதங்கள் காணப்படுகின்றமை பாரிய அழிவினை ஏற்படுத்தும் என்று நாங்கள் தொடர்ந்து குறிப்பிட்ட வேளை அரசாங்கத்தினால் இனவாதிகளாக சித்தரிக்கப்பட்டோம்.

தேசிய பாதுகாப்பிற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் இடையிலான வேறுப்பாட்டை தெரிந்துக் கொள்ளாமல் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமையின் விளைவையே இன்று நாட்டு மக்கள் எதிர்க்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

Read more...

தற்கொலைதாரிகள் சிலர் இந்தியாவிலேயே பயிற்சி பெற்றுள்ளனர்! மேலும் சிலர் பெறுகின்றனர். அதிரும் தகவல்

இந்தியா மீண்டுமொருமுறை தனது ஆட்டத்தை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் போராட்டம் ஆரம்பமானபோது, இந்திய தனது மண்ணில் கிளர்ச்சியாளர்களுக்கு நேரடியாக ஆயுதப்பயிற்சியை கொடுத்ததும், பின்னர் அது இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதும் யாவரும் அறிந்த விடயம்.

தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை வைத்து இந்தியா, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் அடிமை சாசனம் ஒன்றை எழுதிக்கொண்டார்கள் என்பதே இலங்கையின் நாட்டுப்பற்றாளர்களின் கணிப்பும் ஆதங்கமும்.

இந்நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையிலே இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள். இத்தாக்குதல் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு காலநேரத்தோடு மூன்று முறை அறிவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் பிரகாரம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தாக்குலில் நேரடியாக பங்கெடுத்தோர், அடுத்தடுத்த தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருந்தோர், அதன் வழிகாட்டிகள், அமைப்பின் உறுப்பினர்கள், உதவி-ஒத்தாசை புரிந்தோர், பயங்கரவாதிகளின் குடும்ப அங்கத்தினர் என பட்டியல் நீண்டு செல்கின்றது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தற்கொலைக் குண்டுதாரிகள் சிலர் இந்தியாவில் பயிற்சியினை பெற்றவர்கள் என்றும் இன்னும் சிலர் அங்கு பயிற்சிகளை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு இந்திய அரசு நேரடியாக பயிற்சிகளை வழங்கியது யாவரும் அறிந்தவிடயம். ஆனால் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு இந்திய அரசு நேரயான பயிற்சியினை வழங்கியதான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் இந்தியாவிலுள்ள சில அமைப்புக்களாலேயே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் அந்த அமைப்புக்கள் இந்திய அரசின் அனுசரணையுடன் செயற்படும் அமைப்புக்களா என்பதே தற்போது தேடப்படுகின்ற விடயமாகும்.

பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை வைத்துக்கொள்ளவிரும்பும் இந்திய அரசு பாக்கிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் நேபாளம் போன்ற நாடுகளை எவ்வாறு பிரித்தது என்றும், அது ஆசிய நாடுகளுள் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் விடயங்களும் யாவருக்கும் தெளிவானது.

இவ்வாறான சூழலில் மீண்டுமொருமுறை இந்தியா இலங்கையின் முதுகில் குத்துவற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளை தேர்ந்தெடுத்துள்ளதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

Read more...

புர்க்காவுக்கு தடை! மைத்திரியின் அதிரடி அறிவித்தல்..

முகத்தினை அடையாளம் காண்பதற்கு தடையாக இருக்கின்றவைக்கு தடைவிதிப்பதற்கான அறிவித்தலை வீடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நாட்டில் பாதுகாப்பு நிலைமைகளை சீராக பேணும்பொருட்டு அவசரகாலச் சட்டத்தின்கீழ் இவ்வறிவித்தலை அவர் விடுத்துள்ளார். இத்தடையானது நாளை 29ம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது.

இதேநேரம் தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் மிலத்து இப்றாஹிம் என்ற இரு அமைப்புக்களையும் பயங்கவாத அமைப்பாக தடைசெய்வதாக நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

சாய்ந்தமருதில் கொல்லப்பட்டதில் சஹ்ரானின் தகப்பனும் இரு சகோதரர்களும். மீட்க்கப்பட்டது மகளும் மனைவியும்.

ஈஸ்டர் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற கொடுரத்தின் மாஸ்டர் மைன்ட் என்று சொல்லப்படுபவர் சஹரான் ஹசிம். இத்தாக்குதலையடுத்து அவரது குடும்பத்தினரை தேடி படைத்தரப்பு வலைவிரித்து பலரை கைது செய்துள்ள நிலையில், நேற்று முன்தினம் சாய்தமருதில் வீடொன்றினுள் குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டவர்களில் சஹ்ரானின் தந்தையும் இரு சகோதரர்களும் அடங்குவதுடன் அதிசயிக்கத்தக்க விதத்தில் உயிர் தப்பியுள்ள சிறுமி அவனின் மகள் என்றும் பெண் மனைவி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை சஹ்ரான் ஹசீமின் மனைவியின் சகோதரான நியாஸ் ஷரீப் மற்றும் அவனின் மனைவியின் குடும்பந்தினர் உறுதி செய்துள்ளனர். அவனது மனைவியின் குருநாகலிலுள்ள வீடு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகங்கள் அங்கு நுழைந்து மீட்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை காண்பித்தபோது அவர்கள் அழும் காட்சியினை வீடியோவில் காணலாம்.

காத்தான்குடியில் அவர்கள் தேடப்பட்டபோது சாய்ந்தமருதுவுக்கு தப்பியோடி ஒரு வீட்டினுள் நுழைந்த அவர்களை மக்கள் காட்டிக்கொடுத்தபோது, அவ்வீட்டினுள் இருந்தவாறு அவர்கள் வெளியிட்ட விடியோவில் இருக்கும் மூன்று பேர் சஹ்ரான் ஹசீமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் எனவும் இவர் கூறியுள்ளார்.

சஹினி ஹசீம், ரில்வான் ஹசீம் ஆகியோர் சஹ்ரான் ஹசீமின் சகோதரர்கள். அவரது தந்தையான மொஹமட் ஹசீமும் அந்த வீடியோவில் பேசியிருப்பதாக நியாஸ் ஷரீப் கூறியுள்ளார்.

அதேநேரம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ள அப்துல் காதர் பாத்திமா சாதியா என்ற பெண் சஹ்ரானின் மனைவி என்றும் மொஹமட் சஹ்ரான் ருசெய்னா என்ற ஐந்து வயது சிறுமி அவனது மகள் என்றும் புகைப்படங்களைப் பார்த்து குருநாகலிலுள்ள அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேநேரம் இன்று இக்குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று தேடப்பட்டுவந்து நான்கு பிரதான நபர்கள் இரு வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Read more...

"எப்படி எல்லாம் வாழ்ந்தோம் தம்பி… இப்படிப் பண்ணீட்டாங்களே”

கொழும்பு மக்கள் குறித்து வானொலித் தொகுப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது

கொழும்பு. அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால் உலக அளவில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியிருக்கிற நகரம். குண்டு வெடிப்பு தொடர்பான காணொலிக்காட்சிகள் பதற வைக்கின்றன.

கொழும்பு எப்படி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது?

யாரிடம் என்ன விளைவை ஏற்படுத்த அதிர்ச்சியூட்டும் இந்தக் கொடுமைகள்?

இதே கொழும்பு நகரின் இன்னொரு பக்கத்தைப் பற்றி வானொலி மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகத் தன் வசீகரக் குரலால் பிரபலமடைந்த தொகுப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீதின் அருமையான பதிவு கீழே :

மணாவின் ‘ஊர் மணம்’ தொகுப்பிலிருந்து…


என்னைப் பொறுத்த வரையில் – வானொலி அறிவிப்பாளன் என்கிற முறையில் மக்களுக்குப் பரிச்சயமானவன். ஆனால் நான் எந்த ஊரில் பிறந்தவன் என்பது பல பேருக்குத் தெரியாது. இலங்கையிலுள்ள பலரே அவரவர் பகுதியைச் சேர்ந்தவன் என்று என்னை நினைப்பதுண்டு. அதற்குக் காரணம் என்னுடன் யார் பேசுகிறார்களோ அவர்களுடைய வட்டார மொழிக்கு நான் மாறிவிடுவதுதான் காரணம்.

கொழும்பில் பிறந்தவன் நான். அதில் என்ன மகிழ்ச்சி என்றால் இது இலங்கையில் வாழக்கூடிய பல சமூகங்களின் பிரதிநிதிகள் வாழக்கூடிய பகுதி. பல மதங்கள், கலாச்சாரம் சார்ந்தவர்கள் வாழக்கூடிய பகுதி. நீண்ட காலமாகவே தலைநகரமாக இருந்த பகுதி.

ஆசிய அளவில் மிகவும் முக்கியமான துறைமுகம் உள்ள பகுதி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் பிறந்து வளர்ந்ததால் இன, மொழி, மத பேத பாகுபாடுகள் எதுவும் தெரியாத நிலையிலேயே வளர்ந்தேன்.

‘தெமட்டக் கொடை’ – இது கொழும்பில் நான் பிறந்த பகுதி. “தெமிழகொடை” என்று சிங்களத்தில் சொல்வார்கள். தமிழர்களைக் கூட்டமாக வந்து கொட்டிய இடம் என்கிற அர்த்தத்தில் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.

அந்தப் பகுதியில் தமிழ் மகா வித்யாலயம் ஒன்றிருந்தது. நான் வளர்ந்த தோட்டம் கொழும்பில் மிகவும் பின்தங்கின, மின்சார வசதியில்லாமல் – தலைநகருக்குள் ஒரு கிராமமாக இருந்த பகுதி.

அதிலே இருந்தவர்கள் முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கள பௌத்தர்கள் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர்கள். குறிப்பாக வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால் தமிழ்நாட்டுக் கலாசாரச் சூழல் எனக்குப் பரிச்சயம்.

அங்கே சாதாரண தேவமாதா கோவில் இருக்கும். எளிமையான கோவில். இருந்தும் பிரம்மாண்டமாக விழாவை நடத்துவார்கள். அதில் எல்லா ஏழைகளுக்கும் அன்னதானம் – வாழையிலை போட்டு மணக்க மணக்க வழங்குவார்கள்.

எனக்குச் சிறுவயதில் சாப்பிட ஆசை. ஆனால் வீட்டில் விடமாட்டார்கள். அதனால் திருட்டுத்தனமாகப் போய் அந்த வாழையிலையில் உட்கார்ந்து சாப்பிடுவேன். தமிழ்நாட்டுக் கலாச்சாரம், கலை வடிவங்கள் எல்லாம் அவர்களிடம் இருக்கும்.

மின்சார வசதியில்லாத அந்தத் தோட்டத்தில் முதன்முதலில் ஒருவர் வானொலி வாங்கி வந்திருந்தார். கூடவே பெரிய சைஸில் ஒரு பேட்டரியும் இருக்கும். எப்போதாவது அதைப் போடும்போது தோட்டத்தின் எந்த மூலையிலிருந்தாலும் ஆர்வத்துடன் குழந்தைகளுடன் சேர்ந்து ஓடிப் போய்ப் பார்த்தப்படி ரசிப்பேன். அந்தக் கருவி அப்போது அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும்.

எங்கள் தோட்டத்திற்குப் பக்கத்திலேயே பௌத்த ஆலயம் இருக்கும். கிறிஸ்தவக் கோவில்கள் இருக்கும். மசூதிகள் இருக்கும். இனப்பிரச்சினை என்றாலே அப்போது என்னவென்று தெரியாது. “மகாதேசாபதி” என்று சொல்வார்கள் கவர்னல் ஜெனரலை. ‘சர் ஒலிவர்னே குணதிலக’ என்று அப்போதிருந்த மகாதேசாபதி எங்களது தோட்டத்திற்கு அருகிலிருந்த பெரிய தென்னந்தோப்புக்கு வருவார்.

வெள்ளைத் தொப்பி, வெள்ளை ஆடையுடன் பிரிட்டிஷ் பாணியில் உடையணிந்திருப்பார். சிறுவர்களுக்குச் சில்லறையெல்லாம் கொடுப்பார். அதை வாங்குவதற்கு நாங்கள் போய் நின்றது ஞாபகத்திற்கு வருகிறது.

அப்போது எனக்குப் பத்து வயதிருக்கும். அது முஸ்லீம் மக்களின் நோன்புக்காலம். அப்போது இஸ்லாமிய பக்திப்பாடல்களை இசைத்துக் கொண்டு அதிகாலையில் நோன்புக்கு மக்களை எழுப்புவதற்காக – ஒரு தடியுடன் ‘பக்கீர்’ என்பவர் வருவார்.

வந்து ஒவ்வொரு வீடாகத்தட்டிவிட்டுப் போவார். 1958-ல் கொழும்பில் இனக்கலவரம் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அந்தச் செய்தி தெரியாமல் அதிகாலை நோன்பை நினைவுபடுத்துவதற்காக எங்கள் பகுதிக்கு வந்த பக்கீர் ராணுவத்தால் சுடப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து கிடந்தார். சிறுவயதில் இனக்கலவரத்திற்கு அடையாளமாக என் மனதில் பதிந்துபோனது அந்தக் காட்சி.

கொழும்பில் யாழ்ப்பாணத் தமிழர்களின் கடைகள் இருக்கும். பெரும்பாலும் சுருட்டுக் கடைகள், அதுதான் அங்கு பிரபலம். சில கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டாலும், ஒரு வாரத்தில் அங்கு கலவரம் நடந்த சுவடே தெரியாத அளவுக்கு மறைந்துவிடும்.

எந்தச் சமயத்தில் கொழும்பில் எங்கு கலவரம் நடந்தாலும், அந்தப் பகுதியில் திரும்பவும் கூடுதலாகத் தமிழர்கள் வந்து குடியேறுவது வழக்கமாக இருந்தது. இப்போதும் தமிழீழம் கேட்கப்படும் பகுதியைவிட மூன்றில் இரண்டு மடங்கு தமிழர்கள் மற்ற பகுதிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது முக்கியம். வெள்ளவத்தை, பம்பளப்பட்டி பகுதிகளைப் போய்ப் பார்த்தால் குட்டி யாழ்ப்பாணம் என்றுதான் சொல்ல வேண்டும். முழுக்கத் தமிழர் கோவில்கள், கடைகள்தான்.

சிறுவயதில் வகுப்பில் சமயப் பாட்டு என்று ஒன்றுண்டு. என் வகுப்பில் நான் மட்டும்தான் இஸ்லாமிய மாணவன். அதற்கென்று தனி ஆசிரியர் கிடையாது. அதனால் இந்து சமய வகுப்பில்தான் உட்காருவேன். தேவார, திருவாசகமெல்லாம் தானாகவே மனனமாகிவிட்டது. இந்து மாணவர்கள் தேவாரம், திருவாசகத்தை வகுப்பில் ஒப்புவிக்கத் தயங்கும்போது நான் தயக்கமில்லாமல் சொல்வேன்.

பிறகு அகில இலங்கையில் ஆறுமுக நாவலரைப் பற்றி ஒரு பேச்சுப் போட்டி நடந்தபோது முதல் பரிசாக ஒரு தங்கப் பதக்கத்தை என்னால் பெற முடிந்தது. அது நடந்தது இலங்கையின் பிரபலமான விவேகானந்தர் மண்டபத்தில்.

எல்லா மதத்தவர்களும் சேர்ந்து கொண்டாடும் திருவிழாக்கள் இலங்கையில் அதிகம். “சிவன் ஒளிபாத மலை” என்பது இலங்கையின் உயரமான மலை. அதன் உச்சியில் ஒரு பாதச்சுவடு. அது சிவனுடைய பாதச்சுவடு என்று இந்துக்களும் நம்புகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆதாமின் முதல் சுவடு என்று நம்புகிறார்கள். பௌத்தர்கள் புத்தபெருமானுடையது என்று நினைக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து அங்கே போய் வழிபடுபவார்கள் என்பது தான் விசேஷம்.

இன்னொரு இடம் கதிர்காமம் முருகன் கோவில். தமிழ்க்கடவுள் முருகன் என்று சொல்லப்பட்டாலும், அவரைத் தலைக்கு மேல் வைத்துப் பூஜித்துக் கொண்டாடுகிறவர்கள் சிங்களவர்கள். காவடி எடுப்பவர்களில் 90 சதவிகிதம் அவர்கள்தான். அந்தக் கோவிலில் பூஜை கூட சிங்களவர்களே நடத்துகிறார்கள்.

முருகன் கோவிலுக்கு நேர் எதிரே ஒரு தர்ஹா. அதில் பால் குடி பாவா பள்ளிவாசல் இருக்கும். அதற்கு இந்துக்களும் போவார்கள். சிங்களவர்களும் வருவார்கள். இன்னொன்று தமிழர்களுக்கும் சிங்கவர்களுக்கும் ஒரே புத்தாண்டுதான்.

“தமிழ்ச் சிங்கள புத்தாண்டை” ஒரே நாளில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவார்கள். எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பௌத்த கோவிலுக்குள் பிள்ளையர் சிலை, விஷ்ணுசிலை, அம்மன் சிலை தாண்டி புத்தர் சிலை இருக்கும். பல பௌத்த ஆலங்களிலும் இதே நிலை.

வழிபாட்டு முறைகளில் இவ்வளவு தூரம் தமிழர்களும், சிங்களர்களும் ஒன்றிணைந்திருக்கிறபோது, ஊரடங்கு உத்தரவு போடக்கூடிய அளவுக்கு ஏன் இவர்களுக்கிடையே மோதல் வருகிறது என்று சிறுவயது மூளையோடு நான் யோசிப்பேன். கேள்விகள் கேட்பேன். “மதத்தில் முழுமையான நம்பிக்கை இருந்தால் இனத்தைப்பற்றியேப் பேசக்கூடாதுதானே? இனத்தைப் பற்றிப் பேசினால் மதமே வேண்டாமே!” இப்படிப் பல கேள்விகள். அப்போதிருந்த ஆசிரியர்களால் இதற்கு விடை சொல்ல முடிந்ததில்லை. ‘வன்முறை நமது உடம்பில் இருக்கிறதா? குழுவாக நாம் சேரும்போது உத்வேகத்துடன் அது வெளிப்படுகிறதா? அதற்கு இனம், மொழி என்று பல தலைப்புகளை நாமே வைத்துக்கொள்கிறோமா?’ இந்தக் கேள்விகள் இருக்கின்றன இப்போதும்.

வருஷத்துக்குக்கொரு தடவை “வெசாக்” பண்டிகை கொண்டாடுவார்கள். எல்லாரும் கலந்துகொள்வார்கள். நிறையப் பந்தல்கள், தோரணங்கள், தோரணங்களில் புத்தரின் ஜாதகக் கதைகளைச் சித்திரமாக்கியிருப்பார்கள். அதை நாடகமாக ஒலிபெருக்கிகளில் சொல்வார்கள்.

மின்சார பல்புகள் வினோதமான அலங்காரத்துடன் மினுங்கும். அதைப்போல கொழும்பின் இன்னொரு உற்சாகம் “வேல்விழா” செட்டியார் சமூகத்தினர் கொண்டாடுவார்கள். முருகனை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். இதிலும் எல்லோரும் சந்தோஷமாகக் கலந்துகொள்வார்கள். இந்தியாவில் இருந்தெல்லாம் சமய சொற்பொழிவாளர்கள், பக்திப் பாடல் பாடுகிறவர்கள், காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்னமௌலானா போன்ற நாதஸ்வர மேதைகள் எல்லாம் வருவார்கள்.

‘கப்பித்தாவத்தை கோவில்’ என்று கொழும்பில் ஒரு கோவில் உண்டு. அங்கு பித்துக்குளி முருகதாஸ் அடிக்கடி வந்து போவார். எனக்கு அவரது குரல் ரொம்பப் பிடிக்கும். சிவராத்திரி, நவராத்திரிக் காலங்களில் அவரது கச்சேரியை இரவு வரை நண்பர்களுடன் உட்கார்ந்திருந்து கேட்பேன். அவரது குரலும், ஆர்மோனிய இசையும் ஒன்றிணைவதைக் கேட்டு மெய்மறந்து போவேன். இனக்கல் வரமோ, மதத் துவேஷமோ இல்லாத எவ்வளவு அருமையான நாட்கள் அவை?

கொச்சிகடை பகுதியில் உள்ள அந்தோணியார் கோவில் மிகப் பழமையான ஆலயம். அதில் பல மதத்தவர்களும் கலந்துகொள்வார்கள். இவ்வாறு பல மத நிகழ்ச்சிகளில் மத வேறுபாடுகளை மீறி பலர் சந்தோஷமாகக் கலந்துகொள்கிற இடமும் கொழும்புதான். அந்த அளவுக்கு மத நல்லிணக்கம் இங்குள்ள மனதில் இயல்பாகப் படிந்திருந்தது.

இன்றைக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் கடைகள் நிறைந்திருக்கிற இடம் செட்டியார் தெரு. அந்தப் பகுதியில் சிவாலயம் உண்டு. முருகன் ஆலயம் உண்டு. கொழும்பு பனிரெண்டு பகுதியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம்கள் வாழக்கூடிய பகுதி. இலங்கையில் தமிழ்க் கிறிஸ்துவர்கள் உண்டு. சிங்களக் கிறிஸ்தவர்கள் உண்டு. ஆனால் சிங்கள முஸ்லீம்கள் எங்குமே இல்லை. தென்பகுதியில் வாழ்ந்தாலும் முஸ்லீம்களின் வீட்டுமொழி தமிழ்தான். அவர்களது மொழி வித்தியாசமாக இருக்கும்.

யாழ்ப்பாணத் தமிழில் பல தூய தமிழ்ச் சொற்கள் அழியாமல் இருக்கும். அகரம், இகரம், உகரம் உண்டு. அது, இது என்று சொல்வது போல இரண்டுக்கும் நடுவில் உள்ளதை “உது” என்று சொல்வது யாழ்ப்பாணத் தமிழிலேதான் உண்டு. கொழும்பில் இந்தியப் பேச்சுப் பாணி கலந்த மொழி நடை. அம்மம்மா – அப்பப்பா, என்று கூப்பிடுவது ஒரு தனி அழகு. தாத்தா, பாட்டியைத்தான் இப்படிச் சொல்வார்கள்.

மற்றவர்களைவிட தமிழில் எனக்குப் பற்று அதிகம் இருந்தது. அதற்குக் காரணம் எனக்குத் தமிழைக் கற்பித்த ஆசிரியர்களான ஆ.பொன்னுத்துரையும், பண்டிதர் சிவலிங்கமும். அவர்கள்தான் தமிழுணர்வை ஊட்டியவர்கள்.

தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டபோது எதிர்ப்பு எழுந்த மாதிரி, கொழும்பில் சிங்கள மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டபோது அதை எதிர்த்து நின்றவர்களில் நானும் ஒருவன். பிறகு இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதால் நமது மொழி தாழ்ந்துபோனதில்லை என்கிற உணர்வு வந்தது. மற்ற மொழிகளைப் படித்துப் புரிந்துகொள்ளும்போதுதான் நம் மொழியையும் எப்படி வளர்க்கலாம் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. கல்தோன்றாக் காலத்து மூத்த மொழி ஏன் அதே இடத்தில் நிற்கிறதே என்கிற ஆதங்கம் ஏற்படுகிறது.

இலங்கைத் தலைநகரான கொழும்பு நகருக்கு அழகைக் கூட்டுகிற மாதிரி எத்தனை இடங்கள்? காந்தியின் காலடி பட்ட விவேகானந்தா மண்டபம். இங்குதான் வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா வருவதற்கு முன்பே அதை நாடகமாக்கி அதில் கட்டபொம்மனாக நான் நடித்தேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வந்தபோது அங்கு லட்சக்கணக்கில் திரண்ட கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் சிங்களர்தான் பெரும்பான்மையினர். அவர்கள்தான் எம்.ஜி.ஆரைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு போனார்கள்.

அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் குதிரைப்படை வர வேண்டியதாயிருந்தது. மக்கள் திலகமும், நடிகர் திலகமும் அவர்களது கதாநாயகர்கள். எந்த அளவுக்கு இன ஒற்றுமை இருந்தது பாருங்கள்? 58-ல் இனக்கலவரம் வந்த பிறகும்கூட இந்த அளவுக்கு ஒற்றுமை இருந்தது.

பாரதி சொன்ன மாதிரி இந்த ஒற்றுமைக்கிடையில் அக்கினிக் குஞ்சை வைத்துவிட்டார்கள். வெந்து தணிந்தது காடு. ஆனால் மறுபடியும் 83-ல் துளிர்த்தது. கொழுந்து விட்ட தீ இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அதுதான் என்னுடைய மனத்தாங்கல்.

கலைகளின் கேந்திர ஸ்தலமான முருகன் தியேட்டர் இன்னொரு முக்கியமான இடம். டி.கே.எஸ். சகோதரர்கள். ஆர்.எஸ்.மனோகர் போன்றவர்கள் இங்கேயே தங்கி நாடகம் போட்டிருக்கிறார்கள். பல கலைகள் அரங்கேறின இடம் அது. அந்த இடத்தை இன்னும் அழியாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இதே மாதிரி டவர் மண்டபம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மியூசியமாகி இருக்கிறது.

அரசியல்வாதிகளும், மதவாதிகளும், இனத்துவேஷிகளும், மக்களைக் கூறு போட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மக்களை பிணைக்கக் கூடியது கலை ஒன்றுதான். 1983-ம் ஆண்டு இனக்கலவரம் வந்தபோது ‘இனி தமிழ் பேசி இங்கு இருக்க முடியுமா?’ என்று பலர் சந்தேகப்பட்ட காலமும் உண்டு.

ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அதே கொழும்பில் மே தினக் கொண்டாட்டம். கால்ஃப்பேஸ் என்கிற இடத்தில் அது நடந்தது. கொழும்பின் அழகான இடங்களில் இதுவும் ஒன்று. அந்த நிகழ்ச்சி அரசே நடத்தும் நிகழ்ச்சி. தமிழகத்திலிருந்து பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, கங்கை அமரன் குழுவினருடன் வந்திருந்தார்கள்.

ஒரு பாடல் இடையே வரும்போது ஒரு சிரேஷ்ட அமைச்சரின் பேச்சை நிறுத்தச் சொல்லிக் கூச்சலிடுகிறது கூட்டம். ஜனாதிபதி புரிந்துகொண்டு அவரது பேச்சை நிறுத்திக் கலைஞர்களைப் பாடச் சொன்னார். அப்போது எஸ்.பி.பி. ஒரு தமிழ்ப் பாடலைப் பாடின போது அங்கு திரண்டிருந்த சுமார் பத்து லட்சம் பேரும் அலைகள் ஆடின மாதிரி ஆடினார்கள். அதில் ஒன்பது லட்சம் பேராவது சிங்களர்களாக இருப்பார்கள்.

தமிழ்ப் பாடலுக்குச் சந்தோஷமாக ஆடினபோது மனதுக்கு நிறைவாக இருந்தது. “இப்படித்தானே இருக்க வேண்டும் சமுதாயம். எதற்காக இனக்கலவரம்,” என்று மனசுக்குள் அப்போது பெரிய தாகம். கலைக்கு எவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது? ஆகவே மக்கள் மத்தியில் இனத்துவேஷமோ, வெறுப்போ இயல்பாக இல்லை என்று தான் சொல்வேன்.

இப்போதுகூட கடைசியாக நடந்த ஆடி வேல் விழாவின்போது வெள்ளவத்தை பகுதியில் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை பிரதானப் பாதையில் மூன்று நாட்கள் முழுக்க விளக்குக் கம்பங்கள், ஒலிப்பெருக்கிகளில் தேவாரம், திருவாசகத்தைக் கேட்க முடிவது எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது?. ஏன் இப்படியே தொடர்ந்து இருக்கக்கூடாது? வன்முறையை யாரோ தூண்டிவிட, அதில் நாமும் பாதிக்கப்பட்டு,அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டுமா என்கிற கேள்வி இப்போதும் மனதில் எழுகிறது.

இம்மாதிரியான ஏக்கம் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்களுக்கும் இருக்கிறது. இதைப் பிரதிபலிக்கிற வகையில் ‘சரோஜா’ என்கிற திரைப்படம் வந்திருக்கிறது. ஒரு சிங்களச் சிறுமியும், தமிழ்ச்சிறுமியும் எப்படிப் பாசத்தால் இணைகிறார்கள்?, அவர்களை எப்படி ஒரு சிங்களத் தாய் தங்களது பிள்ளைகளாக வளர்க்கிறாள் என்பதைச் சொல்கிற படம் வர முடிகிறதே? (சில மிகைப்படுத்தல் இருந்தாலும்கூட!)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேர, சோழ, பாண்டியர் வழிவந்தவர்கள் என்று சொல்வதில்லையா? அந்தச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மத்தியில் எத்தனையோ சண்டைகள், உயிரிழப்புகள் நடந்திருக்கலாம். ஒவ்வொரு குடும்பத்திற்கு ஏற்பட்ட உயிரிழப்பும், இழைக்கப்பட்ட அநீதியும் அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டப்பட்டிருந்தால் இன்றைக்கு ஒற்றுமை சாத்தியமாகியிருக்குமா?

அதே மாதிரி இலங்கையிலும் வன்முறையை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டிவிடக்கூடாது என்கிற எண்ணம் எங்களிடத்தில் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் அந்த நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நாங்கள் சிங்களக் கலைஞர்களுடன் சேர்ந்து போவோம். இலங்கையில் ‘பைலா’ என்பது பிரபலமாக இசைவடிவம். அது போர்த்துக்கீசியரால் அறிமுகப்படுத்தப்பட்டு சிங்கள இசைவடிவத்துடன் ஒன்றிவிட்டது. அதில் பிரபலமானவர் எம்.எஸ்.பெர்னாண்டோ என்கிற சிங்களக் கலைஞர்.

எழுபதுகளிலிருந்து எண்பதுக்களுக்குள் அவர் யாழ்ப்பாணத்துக்குப் போனபோது அவரைத் தோளில் வைத்து உற்சாகமாக வரவேற்று அழைத்துப் போயிருக்கிறார்கள் தமிழர்கள். பெரிய கொண்டாட்டமான வரவேற்பு. அவர் சாவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைச் சந்தித்தபோது கண்கலங்கச் சொன்னார்.

“எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி! இப்படிப் பண்ணிட்டாங்களே? இதற்கு யார் காரணம் அரசியல்வாதிகளா? மதத்தலைவர்களா? அல்லது இனத்துவேஷம் பிடித்தவர்களா? முன்பிருந்த மாதிரியான காலம் திரும்பவும் வராதா?

இந்தக்குரலும், அதிலிருந்த ஏக்கமும், பரிதவிப்பும் அவருக்கு மட்டுமல்ல. இன்று இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களரிடமும் இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மை.

Read more...

சகல தகவல்களும் கிடைத்து விட்டது. ஒரு வாரத்தில் கதையை முடிக்கின்றோம் என்கின்றார் கிழக்கு தளபதி.

தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் அடுத்தகட்டத் தலைவர் எனக் கூறப்பட்டு வரும் நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தித் தற்கொலைதாரிகளின் முழு விவரங்களையும், தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான சகல விவரங்களையும் வாரித் திரட்டியுள்ளது சி.ஐ.டி.

இதனையடுத்து அடுத்து வரும் சில நாட்களுக்குள் பயங்கரவாதக் குழுக்கள் முழுமையாகக் கிழக்கு மாகாணத்திலிருந்து இல்லாதொழிக்கப்படும் என கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டியினர் திரட்டிய விவரங்களின்படி ,மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸார், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இப்ராஹிம் இல்ஹாம் அஹ்மத், தெமட்டகொடை வீட்டில் பாத்திமா ஜெப்ரியா, தெஹிவளையில் அப்துல் லத்தீப் ஜெமீல், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அலாவுதீன் அஹ்மத் முவாத், கிங்ஸ்பரி ஹோட்டலில் மொஹம்மட் முபாரக் ஆகியோர் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர் என அறியப்பட்டுள்ளது.

தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் உறவினர் என்றும் தேசிய தெளஹீத் ஜமா அத்தின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கவிருந்தார் எனவும் கூறப்படும் நவ்பர் மௌலவி என்பவரிடம் நடத்தப்படும் விசாரணைகளில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

2017 மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றையடுத்து தலைமறைவான சஹ்ரான் , புத்தளம் வனாத்திவில்லு லெக்ரோவத்த பாழடைந்த இடமொன்றில் அடிப்படைவாதக் கருத்துக்களைப் பயிற்றுவித்து வந்தார் எனத் தெரியவந்துள்ளது.

இவருடன் இணைந்து செயற்பட்டார் எனச் சொல்லப்படும் சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா ஆகியோரையும் பொலிஸ் தேடுகின்றது.

சஹ்ரானுடன் முகநூலில் நெருக்கமாக இருந்தவர்களின் பின்னணி குறித்தும் தேடப்படுகிறது.

சஹ்ரான் பாவித்ததாகச் சொல்லப்படும் தொலைபேசியின் சிம் அட்டை மருதமுனை ஒருவரின் பெயரில் இருந்துள்ளது. அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் உறவினர் ஒருவர் ஏமனில் இருக்கிறார் எனவும், அவர் ஐ.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

ஏமனில் உள்ள உறவினருக்கு சிம் அட்டையை மருதமுனைவாசி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அவர் அந்த சிம்மை சஹ்ரானுக்கு வழங்கியுள்ளார். இது பற்றி விசாரணைகள் நடக்கின்றன.

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்கத் தனி குழு ஒன்று செயற்படுகிறது. பள்ளிவாசல்களில் கத்தி மற்றும் வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து விசாரணைகள் நடக்கின்றன.

மாவனல்லை புத்தர் சிலை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கப் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தற்பாதுகாப்புக்கு இந்த வாள்கள் வழங்கப்பட்டதாகக் கைதானார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளியில் ஒருவரிடம் மட்டும் 200 வாள்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 300 வாள்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை பள்ளிவாசல்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கான பணத்தை தெமட்டகொட வர்த்தகர் ஒருவர் வழங்கினார் எனக் கூறப்பட்டிருப்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

முக்கியமான சந்தேகநபர்கள் சிலர் மலேசியா செல்ல முயன்று சிக்கியுள்ளனர் எனவும் பொலிஸ் கூறுகின்றது.

இன்னும் சில தினங்களில் கிழக்கு மாகாணம் சல்லடை போடப்பட்டு அங்குள்ள தீவிரவாதிகளை முற்றாக அள்ளி எடுப்பதற்கான திட்டங்களை சர்வதேசப் புலனாய்வு அமைப்புக்களின் உதவியுடன் இலங்கைப் படைகள் செயற்படுத்தவுள்ளன எனக் கூறப்படுகின்றது.

இதேநேரம் “தற்கொலை செய்வதையோ அல்லது தற்கொலை தாக்குதல்களையோ இஸ்லாத் அனுமதிக்கவில்லை என்று கூறினாலும் அவர்களில் சிலர் தீவிர அடிப்படைவாதத்துடன் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல்போனது.” – இவ்வாறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் வழங்கியபோது தெரிவித்ததாக பொலிஸ் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமா அத் – அரசியல் பிரிவு மற்றும் இராணுவப்பிரிவு என்று இயங்கியதாகவும் அதில் இராணுவப்பிரிவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் தீர்மானித்ததாகவும் கைதானோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் மேல்மட்டத்திடம் கூறியபோது அது கணக்கில் எடுக்கப்படவில்லை என்றும், தற்கொலை தாக்குதல் நடத்துவதை பெருமையாக சிலர் கருதினார்கள் என்றும் கைதான சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிந்தது .

தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ள கைதானவர்கள் – ஆயுதங்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் முக்கியமான 4 நபர்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர்.

அதுபோல் இந்தத் தகவல்களின் பிரகாரம் தற்கொலைத் தாக்குதலுக்காகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 34 பேரை சந்தேகத்தில் கைதுசெய்துள்ள பொலிஸ், அவர்களிடம் இருந்தும் பல முக்கிய தகவல்களைப் பெற்றுள்ளது.

தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர் முக்கியமான தற்கொலைதாரிகள் அனைவரும் சம்மாந்துறை வீடொன்றில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதாகவும், அதற்கு முன்னர் பெருமளவிலானோர் காத்தான்குடி வீடொன்றில் ஒன்றாக உணவருந்தியதாகவும் தெரியவந்துள்ளது.

Read more...

Saturday, April 27, 2019

3 சக்திவாய்ந்த மனித வெடிகுண்டுகளுக்கு மத்தியில் உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை வாப்பாவைத் தேடுகின்றது.

கல்முனை பிரதேசத்தில் நிகழவிருந்த மா பெரும் அனர்த்தம் ஒன்று சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மனிதாபிமானியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நடந்தது என்ன ?

பயங்கரமான சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இருதய பிரச்சினை உள்ளோர் இறுதியிலுள்ள படங்கள் வரை செல்லவேண்டாம்..


சாய்ந்தமருது வொல்வேரியன் பிரதேசத்திலுள்ள சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள வீடொன்று மாதமொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபா ஐம்பதாயிரம் ரூபா முற்பணம் செலுத்தி பெறப்பட்டுள்ளது.

குறித்த வீடு கடந்த 17ம் திகதி அனுமினியம் மற்றும் பிளாஸ்ரிக் பாத்திரங்கள் விற்பனை செய்யும் வியாபாரி என்ற பெயரில் 1982 ம் ஆண்டு பிறந்;த மொஹமட் நவாஸ் என்பவராலேயே பெறப்பட்டுள்ளது.

இருந்தபோதும் வீட்டிற்கு பேசப்பட்டதிலும் அதிகமான ஆட்கள் குடியிருக்க திடீரென வந்திருந்தமை உரிமையாளரின் சந்தேகத்திற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை ஒன்றின் பின்னர் அவசரமாக வான் ஒன்றில் பலர் வந்துள்ளனர். இதையடுத்து பிரதேச மக்களுக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.

அத்துடன் அண்மையிலிருந்த பள்ளிவாயலுக்கு அவர்களில் ஒருவர் தொழுகைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவரிடம் பிரதேசவாசி ஒருவர் எங்கிருந்து எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்ற கேள்வியை கேட்டபோது அவரால் வழங்கப்பட்ட பதில் திருப்திகரமாக அமையவில்லை.
அத்துடன் விரைந்து சென்ற பிரதேசவாசி தெருவில் நின்ற போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரிடம் சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பாக கூறியுள்ளார்.

பொலிஸார் அங்கு விரைந்தபோது, அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக பின்வாங்கிய போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

பொறுப்பதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்ததுடன் அவ்விடத்திற்கு அதிரடிப்படையினர் விரைந்தபோது தற்கொலை அங்கிகளை அணிந்திருந்த 3 தற்கொலைதாரிகள் சுற்றுவட்டமெங்கும் துப்பாக்கி பிரயோகம் செய்த வண்ணம் இருந்துள்ளனர்.

இறுதியாக அங்கிருந்து இரவு எட்டு மணிக்கு 3 பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது. அந்த மூன்று தற்கொலைதாரிகளும் குண்டுகளை வெடிக்கச்செய்து கொண்டுள்ளனர்.

குறித்த குண்டு வெடிப்புக்களின் பின்னர் வீட்டினுள் நுழைந்த படையினர் தற்கொலை தாரிகள் என்று சந்தேகிக்கப்படும் 3 ஆண்களின் உடலங்களையும் 3 பெண்களின் உடலங்களையும் 6 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டுள்ளனர். மேலதிகமாக துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட ஒருவரது உடலம் தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்பாரிய மூன்று குண்டுவெடிப்புக்குள்ளிருந்தும் 3 வயது சிறுமியும் அவளது தாயாரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியை படையினர் வெளியே கொண்டுவந்து முதலுதவி செய்யும்போது என்னுடைய வாப்பா எங்கே என தந்தையை தேடும் காட்சி மனதை உருக்குகின்றது.

இதேநேரம் தாயார் பலத்த காயங்களுக்குள்ளகியுள்ளதாக அறியமுடிகின்றது. இவர்கள் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் இருந்த இடத்திலிருந்து பதினைந்து லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்காக அவர்கள் பலகோடி ரூபாய்களை செலவிட்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. அவ்வாறானால் இவர்களின் பின்னால் இருக்கக்கூடிய பணபலம் பற்றி ஊகித்துக்கொள்ளமுடியும்.

மேலும் இங்கு பயங்கரவாதி ஒருவன் பயன்படுத்திய ரி56 ரக துப்பாக்கி வவுனதீவில் கொலை செய்யப்பட்ட பொலிஸாருடையது என சந்தேகிக்கப்படுகின்றது. (இவ்விடயம் இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை)
















Read more...

நிந்தவூரில் வெடிகுண்டு நிரப்பிய வாகனம். வெடிக்க வைக்க திண்டாடுகின்றது STF

நேற்று சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை தொடர்ந்து நிந்தவூரில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்கியிருந்த வீடொன்று கண்டு பிடிக்கப்பட்டன் அவ்வீட்டின் அருகில் வெடி குண்டு நிரப்பிய வாகனம் ஒன்று தரித்து நிறுத்தப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்திலுள்ள குண்டினை வெடிக்க வைக்கும் பொருட்டு பிரதேசத்திலுள்ள மக்கள் யாவரும் வெளியேற்ளப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள் பள்ளிவாயல்களிலும் பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவ்விடத்திற்கு செல்லும் அரசியல்வாதிகளை பார்த்து மக்கள் ஆத்திரமடைவதை அவதானிக்க முடிகின்றது.

செயற்கை அதிர்வினை செலுத்தி குண்டினை வெடிக்கவைக்க விசேட அதிரடிப்படையினர் பலமுறை முயன்றும் அது பயனளிக்காத நிலையில் நாளை மாற்று முறை ஒன்றினை பயன்படுத்தி வெடிக்க வைக்க உள்ளதாக அறியமுடிகின்றது.

நாளை சிறியரக குண்டு ஒன்றினை வாகனத்தின் கீழே வைத்து வெடிக்கவைத்து குண்டினை நாசம் செய்யும் முறையினை கையாளவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது:

கல்முனை பிரதேசத்தில் பாரிய அழிவினை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட குண்டு வாகனமே இதுவென அறியமுடிகின்றது.

இக்குண்டு நிரப்பிய வாகனம் மற்றும் 7 மேற்பட்ட தற்கொலைத்தாக்குதல்கள் கல்முனையில் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

குறித்த பயங்கரவாத குழுவினரால் இவ்வாறான புதிய வாகனங்கள் பல அண்மையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







Read more...

சாய்ந்தமருதில் வெடித்துச் சிதறிய பயங்கரவாதிகளின் இறுதி ஆசை மனைவி மாரை சுவர்க்கத்தில் சந்திப்பதாம். வீடியோ வெளியானது.

இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றை நேற்று விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். சாய்ந்தமருது வொலிவோரிய சுனாமி வீட்டுத்திட்டத்தில் உருவான குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த குறித்த பயங்கரவாதிகள் படையினரால் சுற்றிவளைக்குப்பட்டதை தொடர்ந்து தங்களது உடல்களில் தற்கொலை அங்கிகளை அணிந்தவாறு துப்பாக்கி பிரயோகித்தை மேற்கொண்டிருந்தனர் என்பது யாவரும் அறிந்தது.

இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டபோது குறித்த வீட்டினுள் தங்கள் மனைவியர் குழந்தைகளுடன் இருந்தவாறே இந்ந வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அங்கே எந்த குற்றமும் செய்யாத பச்சைக்குழந்தை ஒன்று பயங்கரவாதி ஒருவனின் மடியிலிருந்தவாறு அவனது கையிலுள்ள ரி56 துப்பாக்கியை தொட்டு விளையாடும் காட்சி மனதை உறுக்குவதுடன் அவர்களது மனைவியர் பின்னாலிருந்து அழுவதையும் கேட்க முடிகின்றது.

இவர்களின் ஒருவனின் கையிலுள்ள நான்கு விரல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.







Read more...

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்ய அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குடிமக்களைக் கண்காணித்தல் மற்றும் புலனாய்வு சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரவதை நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

டிசம்பர் மாதமளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நூறு சதவீதம் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவு, அது அடிப்படையற்றது என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறிய தடையெ என்றும், அது அமெரிக்க அதிகாரிகள் குடியுரிமையை நீக்குவதே என்றும், அது வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் வெற்றிபெற்றால் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்து பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பதே தனது முதன்மை நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்................................

Read more...

Friday, April 26, 2019

மைத்திரிக்கு கம்பியை நீட்டிவிட்டாரா பூஜித ஜெயசுந்தர

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு போதிய தகவல்கள் இருந்தும் அது குறித்து செயற்படாது அனர்தத்திற்கு வழிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் அரச மற்றும் பாதுகாப்பு தரப்பினர்.

இது விடயத்தில் ஆழும் மற்றும் எதிர்கட்சியினர் நேரடியாக பொலிஸ் மா அதிபர் மீது குற்றஞ்சுமத்தியுள்ளதுடன் அவர் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் அவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்றும் வேண்டுதல் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலரை பதவிகளை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டிருந்தார்-

இதன் பிரகாரம் பாதுகாப்பு செயலர் ராஜனாமா செய்து கொண்டுள்ளார்.

அத்துடன் இன்று பூஜித ராஜனாமா செய்வார் என ஜனாதிபதி ஊடகங்களின் பிரதானிகளிடம் தெரிவித்திருந்ததுடன், ஜனாதிபதி செயலகமும் அத்தகவலை உறுதி செய்திருந்தது.

இந்நிலையில் இதுவரை பொலிஸ் மா அதிபர் ராஜனாமா செய்து கொண்டுள்ளதாக உத்தியோக பூர்வமான அறிவித்தல் வெளிவரவில்லை.

மாறாக அததெரண ஊடகம் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு வினவியபோது, இதுவரை அவ்வாறான முடிவு எதையும் தான் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரிடமிருந்து வாய்மூலமான உறுதிமொழியேனும் இன்றி இன்று காலை அவ்வாறானதோர் அறிவிப்பை விடுத்திருக்க மாட்டார் என நம்பமுடியும்.

எனவே ராஜனாமா கடிதத்தை அனுப்புகின்றேன் என தெரிவித்து விட்டு கம்பியை நீட்டிவிட்டாரா என்ற சாதாரண சந்தேகம் ஒன்று இங்கே எழுகின்றது.

இதேநேரம் பூஜித ராஜனாமா செய்ய முயற்சித்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்யவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவ்வாறு அவரை பதவி நீக்குவதானால் பொலிஸ் சேவைகள் அணைக்குழு அல்லது பாராளுமன்றில் பெரும்பாண்மை வேண்டும்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் பல பாரளுமன்ற உறுப்பினர்கள் பூஜித பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், எதிர்கட்சியினர் பாராளுமன்றில் அதற்கான கோரிக்கையை விடுத்து வாக்கெடுப்புக்கு செல்வார்களாயின் ஐக்கிய தேசியக் கட்சியினரின் பொலிஸ் மா அதிபர் மீதான அதிருப்தியாளர்களின் வாக்குகளுடன் பிரேணை நிறைவேற்றப்படும் என்பது உறுதியானது.

எனவே அவ்வாறு விரட்டியடிக்கப்படும் வரை ஆசனத்தை பிடித்துக்கொண்டு இருக்கப்போகின்றாரா கௌரவமாக செல்லப்போகின்றாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more...

அஷ்ரப் வைத்தியசாலையில் 5 உடலங்கள்..

சற்றுமுன்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் உயிரழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை அஷ்ரப் வைத்திசாலைக்கு 5 உடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவர்களில் இரு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குகின்றனர்.

இதேநேரம் பாதுகாப்பு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பாவித்து வருகின்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com