Saturday, February 23, 2019

மஹிந்த மைத்திரி கூட்டணியில் பசில் இல்லை - பசில் சந்திப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது - SB

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஷவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற முக்கிய சந்திப்பில், பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும், அவர் குறித்த சந்திப்பில் கலந்து கொல்லாமை தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் கட்சித் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இருப்பினும், இதற்கு விருப்ப இல்லாத சிலரும் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தை நல்ல எதிர்பார்ப்புடன் நிறைவு பெற்றது எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க
மேலும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் பலனாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான புதிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அமைக்க முடியுமாக இருக்கும் என எஸ்.பீ. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த சந்திப்பில், அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மூன்று பிரதான அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ள நிலையில், ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளனர்.

அத்துடன், புதிய அரசியல் கூட்டணி, யாப்பு தயாரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த குழு தீர்மானித்து, அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, புதிய கூட்டணியின் பெயர், சின்னம் என்பன தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எட்டவில்லை. அடுத்த கட்டமாக அது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் கூறினார்.

Read more...

Friday, February 22, 2019

மங்கள சமரவீர அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா? - சற்று முன் வெளியானது செய்தி

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, சற்று முன்னர் ஊடக அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை, அந்த பதவிக்கு அமர்த்துவதற்காகவே, அமைச்சர் மங்கள சமரவீர, தனது ஊடக அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ருவான் விஜேவர்த்தன, அந்த பதவிக்கு அமைச்சராக அன்றி, அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராகவே நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக இன்று இரவு ருவான் விஜேவர்த்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Read more...

30 வருட யுத்த தாக்கத்தில் இருந்து, இன்னும் மீண்டு வரவில்லை - சுரேன் ராகவன்

இலங்கையில் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் தாக்கத்தை, நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று, வட மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நெகிழ்வுத் தன்மையுடைய செயற்கைக்கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, ஆளுநர் சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார்.

''நாங்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியடைந்தாலும், இன்னொரு விதத்தில் மகிழ்ச்சியடைய முடியாத ஒரு நிகழ்வாக இது இருப்பது எங்களுக்கு புரிகின்றது. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த போரில் ஏற்பட்ட அனேக வேதனைகள் சித்தமாக நாங்கள் இன்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் மொழியை சேர்ந்தவர்கள், எங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த சிலரை இந்த நிலையில் பார்ப்பதற்கும், அவர்களின் வாழ்க்கை கதையை கேட்பதற்கும் கட்டாயப்பட்டுள்ளோம்.

எனவே தான் இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்த வரையில் சந்தோசம் கொடுக்கும் நிகழ்ச்சியாக அல்லாமல், ஓர் நம்பிக்கையை கொடுக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது. ஏனெனில் நீங்கள் திரும்பவும் வாழ்க்கையை பெற வேண்டும்.

அந்தளவுக்கு தைரியமாக ஒரு காரியத்தை குறித்து உங்களை அர்ப்பணித்து இருந்த காலம் இருக்கிறது. அந்த காலத்தை போலவே திரும்பவும் வாழ்க்கையை சீர்செய்து கொள்வதற்கான நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக நான் இதனை கருதுகின்றேன். ஏனெனில் யுத்த தாக்கத்திலிருந்து இன்னும் எவரும் மீண்டு வரவில்லை.

ஒரு சமுதாயத்தின் நாகரீகமென்பது அந்த சமுதாயத்தில் இருக்கின்ற வலுவற்றவர்களை, அது எந்தளவிற்கு தாங்கிக் கொள்கின்றது, எந்தளவிற்கு அது உள்வாங்கிக் கொள்கின்றது என்ற விடயமாகும்.

இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டது வெறுமனே ஒரு செயற்கையான பாதணி மட்டுமல்ல, ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயம் என்று நீங்கள் எண்ண வேண்டும்..

நான் ஆளுநராக வர வேண்டும் என்று கனவு காணவுமில்லை, சண்டைபோடவுமில்லை. நான் தற்செயலாக ஆளுநராக மாறினேன் என்று தான் சொல்ல வேண்டும் .

ஆனால் நான் ஆளுநராக இருக்கும் காலம் எவ்வளவோ, அதுவரை சமுதாயத்தின் விளிம்பிலே உள்ள மக்களுக்காக சேவை புரிய நான் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்” என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

Read more...

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை, ஒத்திவைப்பு - நீதிமன்றம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு நீதியரசர் சம்பத் அபேகோன் தலைமையில் சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தெரிவித்து, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட எதிர்ப்பு மனுவை தள்ளுபடி செய்தமைக்கு எதிராக, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ததாக, தலைமை நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்தார்.

எனினும் அந்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்ததாக விஷேட நீதாய மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி சம்பத் அபேகோன், திறந்த மன்றில் அறிவித்தார். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பில், கடற்படை சிப்பாய் கைது

வெள்ளை வேனில் வைத்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால், கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட 11 இளைஞர்களில், மூன்று இளைஞர்களைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து, சித்திரவதைக்குட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டிலேயே கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் 41 வயதான நந்தபிரிய ஹெட்டிஹந்தி எனும் சிப்பாயே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

குறித்த விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து, சட்ட மா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும், வழக்கின் 12 சந்தேக நபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

காவல்துறையினர் குறித்து, எம்மால் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது - சபாநாயகர்

காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை, எம்மால் ஒருபோதும் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கு உரிய அதிகாரம் உள்ளது என, நாடாளுமன்றில் இன்று பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கருத்துக்களை அடுத்து பதிலளித்து உரையாற்றுகையிலேயே சபாநாயகர் இதனை குறிப்பிட்டார்.

நாம் இத்தாக்குதல் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம். எமக்கு இவ்விவகாரத்தை நாடாளுமன்றின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்த எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.

ஆனால், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதை எம்மால் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இந்த தாக்குதலின் போது கதிரையால் தாக்கப்பட்டு உயிர் சேதமேதும் இடம்பெற்றிருந்தால், இதற்கு சபாநாயகர் என்ற முறையில் என்னால் விசாரணை மேற்கொள்ள முடியாது.

சபாநாயகரின் குறித்த கருத்தை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக நாம் நாடாளுமன்றில் விசாரணைகளை மேற்கொள்வோம். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால், பொலிஸார் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய இதன்போது குறிப்பிட்டார்,.

Read more...

ரத்கம கடத்தல் சம்பவம் தொடர்பில், தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் உப காவல்துறை அதிகாரி கைது

ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான விராஜ் மதுஷங்க எனும் உப பொலிஸ் அதிகாரியே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரி நிஷாந்த டி சில்வா கைது செய்யப்பட்டதுடன், அவர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் சிந்தக்க ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளனர்.

பொலிஸ் சீருடையில் வருகை தந்தவர்கள் துப்பாக்கி முனையில் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சதிஸ் கமகேவினால் கடந்த 5 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவ்வாறான கைது எதுவும் இடம்பெறவில்லையென கடந்த 14 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உள்ள விசேட பிரிவினரால் குறித்த வர்த்தகர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டதாக கடந்த வாரத்தில் அவர்களின் வீட்டிற்குக் கிடைத்த அநாமதேய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்போது, பொலிஸாரின் தாக்குதலில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றைய வர்த்தகர் அதனைக் கண்டதால் அவரையும் கொலை செய்ததாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

வட கிழக்கின் உடனடி அபிவிருத்திக்காக, நிதியமைச்சுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய, துரித அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பினர், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் உடனடி அபிவிருத்திகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில், உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

ஆறாவது மாதிரியில் இருந்த மரபணு பொருட்களை பிரித்தெடுக்க தாமதம் - அகழ்வுப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவின் பிளோரிடாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில், அனுப்பப்பட்ட எலும்புக்கு கூடுகளில், ஆறாவது எலும்பு கூடின் மாதிரிக்கான மரபணு பொருட்களை பிரித்து எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அந்த காபன் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது. இந்த காபன் பரிசோதனை அறிக்கை, நீதிமன்றம்,சட்ட வைத்திய அதிகாரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்க் என, காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 149 ஆவது நாளாக இன்றும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில், மன்னாரில் குறித்த பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படாத நிலையில், குறித்த புதைகுழியின் அகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும், மனித புதைகுழியின் அகழ்வுப்பணியின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பாகவும் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறித்த அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, காணமலாக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதி, காணாமலாக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட வளாகத்திலிருந்து இதுவரையில் 323ற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 314 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Read more...

மாணவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து, மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் சிலர், தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து இன்று காலை பாடசாலை வாயிற்கதவை மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை
முன்னெடுத்தனர்.

இதன்போது ''பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்கு, மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைது செய், முன்னேறும் வலயம், இது முதுகில் குத்தாதே'' உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.வகாப் தலைமையிலான குழுவினர், நிலைமைய ஆராய்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகாவித்தியாலயத்தின் விளையாட்டுப்போட்டி இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், அந்த மைதானத்திற்குள் நேற்று திடீரென புகுந்த கும்பல், அங்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முதலைக்குடா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் காயமடைந்து, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் மேலாதிக்க விசாரணைக்கான முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

குற்றங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்க வேண்டுமானால், மக்களே தீர்மானிக்க வேண்டும் - மனோ கணேசன்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்குற்றங்கள் தொடர்பில் மன்னிப்பு வழங்குவதாயின், பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியுமென, அரச கரும மொழிகள், மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட போதே, அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை என்பது மறக்கக் கூடிய விடயம் அல்ல. வரலாற்றை மறக்காமலிருந்தால் தான், மீண்டும் அவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும். ஆனால், மன்னிப்பதா? இல்லையா? என்பதை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே முடிவு செய்ய வேண்டும் என, மனோ கணேசன் தெரிவித்தார்.

Read more...

கிளிநொச்சி - தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி - தர்மபுரம் 2ஆம் யுனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பஸ்தர் ஒருவரின் சடலம், இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரம் மேற்கு 6 யுனிற்ரைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 28 வயதுடைய அரசசிங்கம் கௌரியனந்தம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளமையினால், இந்த சம்பவம் கொலையாகவிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Read more...

ஜனாதிபதி எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் தாமரை மொட்டுச் சின்னம் என்றாலும் போட்டியிட தயாராக இருப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அங்கம் வகிக்கும் கூட்டணி, எதிர்காலத்தில் நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து உருவாக்கும் விரிவான கூட்டணியின் கட்சித் தலைவர்கள், மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் போட்டியிடும் சின்னம் தீர்மானிக்கப்படும். எவ்வாறாயினும் சின்னமோ, நபரே முக்கியமல்ல. வேலைத்திட்டம் என்பதால், உரிய வேலைத்திட்டத்தின் கீழ் விரிவான கூட்டணி உருவாக்கப்படும் என்றும் கூறினார்.


இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன கூட்டிணைவது தொடர்பில் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் சில இதற்கு முன்னரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிலான் பெரேரா
கூறினார்.

Read more...

நாமல்குமார போன்று ரஞ்ஜன் ராமநாயக்க செயல்படுகின்றாரா? - இன்று ஒழுக்காற்று குழுவில் முன்னிலை

இன்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில், ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்பட்ட ஒழுக்காற்றுக் குழுவில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க முன்னிலையாகவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 24 பேர் கொக்கேன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, பெரும் பரப்பை ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்டிருந்தார். எவ்வாறானபோதிலும் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் இந்த விடயம் தொடர்பான உரிய ஆதாரம் இன்னும் சமர்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இவரின் கருத்தினால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர் குறித்து ரஞ்ஜன் ராமநாயக்காவை ஒழுக்காற்றுக் குழுவில் விசாரணை உட்படுத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள ஒழுக்காற்றுக் குழுவின் முன்னிலையாகுமாறு ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, கெக்கேயின் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் தொடர்பில் எந்தவித எழுத்து மூல அறிவிப்பும் தமக்கு கிடைக்க வில்லை என்று அறிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில் போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை குற்றவியல் விசாரணை பிரிவிடம் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இன்று ஒழுக்காற்றுக்குழுவில் முன்னிலையாகும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் விசாரணை இடம்பெறும்.

Read more...

இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு உதவி .

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில், யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் கையெழுத்திட்டனர்.

இந்த பூங்கா வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை மேம்படுத்த உதவும்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகும்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களும் கலந்து கலந்து கொண்டனர்.

இதுதவிர. இந்திய அரங்கத்தின் பங்களிப்புடன் வடக்கில்
46,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்திய அரசாங்கத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மானிய உதவியாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதேநேரம் 1990 இலக்க அவசர நோயாளர் அம்புலன்ஸ் சேவையும் வடக்கில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

யாழ். கலாச்சார மையம், 27 பாடசாலைகளுக்கான கட்டிடங்கள், 3000 மழை நீர் சேகரிப்பு தொகுதிகள் 600 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நாடு முழுவதும் 70 ற்கும் மேற்பட்ட மக்கள நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி ஏப்ரலில் வெளியாகும் - அமைச்சர் பி. ஹரிசன்

அரிசிக்கான நிர்ணய விலையை வெளியிட உள்ளதாக விவசாய, கிராமிய பொருளாதாரம் அமைச்சர் பி. ஹரிசன் அறிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதியுச்ச சில்லறை விலை ஏப்ரல் முதலாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படுமென அவர் கூறினார்.

நெற் செய்கையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த நிர்ணய விலை நிர்ணயிக்கப்படுவதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், ஒரு கிலோ சம்பா அரிசிக்கு 85 ரூபாவையும், நாட்டரிசிக்கு 80 ரூபாவையும் அதியுச்ச சில்லறை விலையாக அறிவிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more...

இன்று காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

19வது திருத்தச்சட்டம் ஊனமாகவே பிறந்துள்ளது - எனது அதிகாரத்தை தானம் செய்துள்ளேன் - ஜனாதிபதி

அரசியலமைப்புச் சபை ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படுத்தப்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சபையை நடைமுறைப்படுத்தும் போது, இந்த விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் இன்று அரசியலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். 19வது திருத்தத்தின் ஊடாக உருவான சுயாதீன ஆணைக் குழுக்கள் பிழையான வழியில் செல்லுமானால் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கும் நாடு, உரிய இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஆனால் 19வது திருத்த சடத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அதனை உரிய ஆதாரத்துடன் நிருபிக்க முடியும் என ஜனாதிபதி கூறினார். கடந்த 2015 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது எந்த பாகுபாடு இன்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

தேர்தலின் போது அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்துவோர், தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அத்தனை பேரின் ஆதரவும் எமக்கு கிடைத்தது.

இதன்போது தேசிய – சர்வதேச அரசியல் கொள்கையில் நல்லாட்சி என்ற கொள்கையின் கீழ் நாம் செயற்பட ஆரம்பித்து, 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தோம். தேர்தலில் வெற்றி பெற்று நான் ஜனாதிபதியாக தெரிவாகி பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலை ஓகஸ்டில் நடத்தினோம்.

கடந்த காலங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டமை காரணமாக, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட வாக்குறுதிக்கமைவாகவே 19 ஆவது திருத்த சட்டத்தை எம்மால் கொண்டுவர முடியுமாக இருந்தது. ஆனால் 19வது திருத்தச்சட்டத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன. லங்கா தீப பத்திரிகை கூறியது போல், 19வது திருத்தச்சட்டக் குழந்தை, ஊனமாகவே பிறந்துள்ளது.

இலங்கையில்தான் அதிகளவான தானங்கள் வழங்கப்படுகின்றன. இராணுவத்தினர் உயிர், உதிரம், அவையம் என பலதையும் தானம் செய்தனர். ஆனால் எவரும் தனது அதிகாரத்தை தானம் செய்தது இல்லை. நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களைய ஸ்தாபித்து எனது அதிகாரத்தை தானம் செய்துள்ளேன். எனினும், நான் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக கூறுகிறார்கள். நான் அவ்வாறானதொரு கருத்தை ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

அரசமைப்புச் சபைக்கு ஒரு வரையறை இருப்பதுபோல, சுயாதீன ஆணைக்குழுக்களின் வரையறை என்ன? என்றே நான் கேட்டிருந்தேன்

ஆனால், உயர்நீதிமன்ற நீதியரசர் பதவி தொடர்பில் நான் எதிர்ப்பினை வெளியிட்டதாக அவர்கள் கூறினார்கள். இதற்கு நான் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை கேட்டதாகவும் கூறுகின்றார்கள். உண்மையில், அந்த நியமனம் குறித்து எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாட்டுக்கு என்னை தவறாக சித்தரிக்கவே சிலர் முயற்சித்து வருகிறார்கள். இவற்றை நான் முற்றாக நிராகரிக்கிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Read more...

Thursday, February 21, 2019

விசாரணை அதிகாரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய யாழ்ப்பாணத்து ஊடக றவுடிஸம். பீமன்.

டான் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கைக்குள்ளாகியிருக்கும் குகன் என்பவன் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நிலையில், அவ்விடத்திலிந்து வெளியேற்றப்பட்ட சம்பவமானது ஊடக ஒடுக்குமுறையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த காடையர் கும்பலொன்று அங்கிருந்த வாகனங்கள் சிலவற்றுக்கு தீயூட்டி சேதம் விளைவித்து சென்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோது, குற்றப்பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்த , நுழைவதற்கு அனுமதியற்ற அப்பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைய முற்பட்ட டான் ரீவி யின் படப்பிடிப்பாளரினாலேயே குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் காடையர்களின் கோழைச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில், ஊடகங்கள் காடையர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சமூக பொறுப்புணர்வுடன் பொலிஸாருக்கு உதவுவதை விடுத்து, கடமைக்கு குந்தகம் விளைவித்தல் கண்டனத்திற்குரியதாகும். யாழ்பாணத்தில் செயற்படும் காடைக்கும்பல்களுடன் தொடர்புகளை பேணிவரும் டாண் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனான குகன் என்பவன் கொள்ளைகள் மற்றும் வன்செயல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளுகின்றபோது, ஊடகவியலாளன் என்ற போர்வையில் அவ்விடத்தினுள் நுழைந்து பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் வேவு பார்த்து குற்றவாளிகளுக்கு தகவல் வழங்குவதாக பரவலாக பேசப்படுகின்றது.

தடயவியல் நிபுணர்கள் வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் வரை குறித்த பிரதேசம் „குற்றவியல் பிரதேசம், உள்நுழைதல் தடுக்கப்பட்டுள்ளது' என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் பார்வையாளர்களாக சில மீற்றர் தூரங்களுக்கப்பால் அவதானித்துக்கொண்டிருந்தபோது அவ்விடத்திற்கு விரைந்த டாண் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளன் அவ்வீட்டினுள் நுழைய முற்பட்டுள்ளான். அவனை தடுத்து நிறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி முயற்சித்தபோது அவன் உடைத்துகொண்டு உள்ளே நுழைய முயல்கையில் கதவு உராசியதில் உதட்டில் காயமேற்பட்டுள்ளது. அத்துடன் அவனை பின்நோக்கி நகர்த்திய பதில் பொறுப்பதிகாரி விசாரணைகள் முடியும்வரை குற்றப்பிரதேசத்தினுள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.



ஆனால் இங்கு எனக்கு ஏற்படுகின்ற சந்தேகம் யாதெனில் குறித்த அதிகாரியின் கோழைத்தனமா அன்றில் மனிதாபிமானமா மேற்படி நபரை சர்வ சாதராரணமாக அவ்விடத்திலிருந்து வெளியேற அனுமதித்தது. பொலிஸ் அதிகாரி அவ்விடத்தில் தனது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தான் என குகனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்திருந்தால் இன்று அவருக்கு குற்றவாளிக் கூண்டுக்கு ஏறும் நிலை ஏற்பட்டிராது.

நிலைமை இவ்வாறிருக்கின்றபோது தனது ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ள சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் உடனடியாக குகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் குகன் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உண்டு. அண்மையில் யாழ்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் விஜயகலாவின் அமைச்சரக ஊழியர் என அறியப்படும் நபருடன் இணைந்து பாரிய மோசடி ஒன்றை மேற்கொண்டமை நீதிமன்றில் அம்பலமானது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவன் நீதிமன்றில் கடும் உத்தரவின் பெயரில் பெற்றுக்கொண்ட பணத்தினை பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு வழங்கினான். இருந்தபோதும் அச்செயற்பாட்டினால் குறித்த இளைஞனுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் குறித்த மோசடியுடன் மின்னஞ்சல் ஊடாக வெளிநாடு ஒன்றிலிருந்து உதவிகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கிய முன்னாள் புலி உறுப்பினன் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞனை ஏமாற்றும் பிரதான புள்ளியாக செயற்பட்ட மோசடிப்பேர்வழியான பெண் இன்றுவரை யார் என்பது அடையாளம் காட்டப்படவில்லை. ஊடகம் என்ற போர்வைக்குள் இவர்கள் நுழைந்து நிற்பதால் பொலிஸ் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தயங்குகின்றதா அன்றில் குறித்த ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் பிரத்தியே ஒப்பந்தங்கள் ஏதும் உண்டா என்பது இங்கு எழுப்பப்படவேண்டிய கேள்வியாகவுள்ளது.

இவை யாவற்றுக்கும் அப்பால் குகன் தனது தந்தையார் காணாமல் போயுள்ளதாக சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளான். குறித்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவனது தகப்பன் மக்களிடம் பல்வேறு தேவைகளுக்காக பணம்பெற்றுவிட்டு அவற்றை திருப்பி கொடுக்காது ஏமாற்றியபோது, கடனாளிகளின் நெருக்குதலிலிருந்து தப்புவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு தகப்பனை ஒழித்து வைத்துள்ளதாக சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இவனுக்கு பொலிஸ் உயர் பீடங்களுடனுள்ள உறவு காரணமாக அந்த மோசடி முறைப்பாடும் கண்டும் காணாது விடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் சிலர் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி இரு மோசடி முறைப்பாடுகளுக்கும் பின்னணியில் இன்னுமோர் நிகழ்சிநிரல் உண்டென சந்தேகிக்கப்படுகின்றது. அதாவது மேற்குலக நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக தனக்கு இலங்கையிலே அச்சுறுத்தல் உண்டென நிரூபிக்கும் நோக்கிலேயே இச்செயற்பாடுகள் அமைந்துள்ளது. எனவே மேற்படி திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளாவிட்டால், மீண்டும் மேற்குலகில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது தடுக்க முடியாது போகும்.

Read more...

அரசியலமைப்புச் சபையில், எந்தவித சுயாதீன தன்மையும் இல்லை - மஹிந்த ராஜபக்ச.

தற்போதுள்ள அரசியலமைப்புச் சபையில் எந்தவித சுயாதீனத தன்மையும் இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்

இன்றைய தினம் நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசியலமைப்புச் சபையில் எந்தவிதமான சுயாதீனத் தன்மையும் இல்லை. காரணம் அந்த சபையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது பிரதிநிதிகளும் அடங்கியுள்ளனர்.

எனவே இந்த அரசியல் அமைப்புச் சபை, பக்கச் சார்ப்புடன் நடந்து கொள்கின்றது. இதனாலேயே அரசியல் அமைப்புச் சபையின் மீது, எமக்கு நம்பிக்கை இல்லை என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Read more...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிக்க, புதிய யோசனை ஒன்று முன்வைப்பு - சமிந்த விஜேசிறி

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஒன்றை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணைந்த மேலும் சில நிறுவனங்கள், வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களில் ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதியை, பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதன் மூலம், பெருந்தோட்ட மக்களின் வேதனை அதிகரிக்க முடியும் என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், அவர் பெருந்தோட்ட மக்களின் வேதனம் குறித்து கருத்து வெளியிட்டார். இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

வெவ்வேறு வர்த்தகங்களுக்காக, குறித்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இயங்கி வருகின்றன. எவ்வாறாயினும் பெருந்தோட்ட மக்களின் பங்களிப்புடனேயே, வெளிநாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எனவே அந்த நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி, பெருந்தோட்ட மக்களுக்கான தரமான வேதனத்தை வழங்க முடியும் என, அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத காணிகளை, மக்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் ஏதேனும், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் வடிவே சுரேஷ், பெருந்தோட்டங்களில் வெளியாள் உற்பத்தி முறைமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இது குறித்து, தாம் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சருடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக, ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஒன்றை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணைந்த மேலும் சில நிறுவனங்கள், வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களில் ஈட்டப்படும் வருமானத்தின் ஒரு பகுதியை, பெருந்தோட்ட மக்களுக்கு வழங்குவதன் மூலம், பெருந்தோட்ட மக்களின் வேதனை அதிகரிக்க முடியும் என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், அவர் பெருந்தோட்ட மக்களின் வேதனம் குறித்து கருத்து வெளியிட்டார். இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

வெவ்வேறு வர்த்தகங்களுக்காக, குறித்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இயங்கி வருகின்றன. எவ்வாறாயினும் பெருந்தோட்ட மக்களின் பங்களிப்புடனேயே, வெளிநாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

எனவே அந்த நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி, பெருந்தோட்ட மக்களுக்கான தரமான வேதனத்தை வழங்க முடியும் என, அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத காணிகளை, மக்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் ஏதேனும், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? என, நாடாளமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் வடிவே சுரேஷ், பெருந்தோட்டங்களில் வெளியாள் உற்பத்தி முறைமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இது குறித்து, தாம் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சருடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக, ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

Read more...

நாட்டில் இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, போதைப்பொருள் அல்ல - மஹிந்த தேசப்பிரிய.

நாட்டில் தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினை போதைப்பொருள் அல்ல. மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்களை புரிந்தவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்றமையே, இந்த நாட்டிலுள்ள முக்கிய பிரச்சினை என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய திட்டமிட்ட குற்றங்களை புரிந்தவர்கள், ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளாக உருவெடுத்து, மக்களை ஏமாற்ற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வரவுள்ள தேர்தலிலும், குற்றம் இல்லாதவர்கள் வேட்பாளராக போட்டியிட்டு, அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே அதற்கு இடமளிக்காது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

இந்த அரசாங்கத்தில், புதிதாக எந்தவொரு சர்வதேச முதலீடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை - மஹிந்தானந்த அளுத்கமகே

இலங்கையில், தற்போதைய அரசாங்கத்துக்கு கீழ் புதிதாக சர்வதேச முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென, போது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து கருத்து வெளியிட்ட போதே, மஹிந்தானந்த அளுத்கமகே இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளே, இதற்கு மிக முக்கிய காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முதலீடுகளே, இன்றும் நாட்டுக்கு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

இஸ்ரேலுக்கு சென்ற இலங்கைக் குழு, உரிய ஆவணங்கள் இருந்தும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது!

யாத்திரை நடவடிக்கைகள் நிமித்தம், இஸ்ரேலுக்கு சென்றிருந்த 18 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவொன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை, 18 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவொன்று, இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் குழுவினர், இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் திருப்பியனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் ஜெரூஸலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, யாத்திரைக்காக சென்றிருந்தாக தெரிய வந்துள்ளது.

குளியாப்பிட்டிய, வென்னப்புவ மற்றும் மீரிகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இருந்த போதும், குறித்த குழுவினர் இலங்கைக்கு திருப்பியனுப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கல்முனை மாநகர மேயருக்கு எதிராக, மக்கள் ஆர்ப்பாட்டம்.

தமது கடமைகளுக்கு அப்பால், கல்முனை மாநகர மேயர் அத்துமீறி செயற்படுவதாக தெரிவித்து, மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதி போது மக்கள் ஒன்றிணைந்து, இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கல்முனை மாநகர சபையினால் பெரியகல்லாறு பகுதியூடாக குப்பை கொண்டு செல்லும் பாரவூர்த்தியை, பிரதேச மக்கள் நேற்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக மாநகர சபை மேயருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மாநகர மேயருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஒன்றுகூடிய மக்கள் இன்று காலை, குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது குறித்த பகுதிக்கு விஜயம் செய்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், இந்த பிரச்சினை தொடர்பாக உரிய தீர்மானம் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

'' எமது எல்லையை உறுதிப்படுத்துங்கள், உங்கள் கழிவுகளை எங்கள் தலையில் கொட்டாதீர்கள், எமது குழந்தைகளை சுவாச நோய்க்கு பலியாக்காதே, பெரிய கல்லாறின் சூழல் சுற்றாடலை அசுத்தம் செய்யாதே'' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

Read more...

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய தலைவர், இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய தலைவரான ஷம்மி டி சில்வா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஷம்மி டி சில்வா சற்று முன்னர்,  தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று 10.30 க்கு ஆரம்பமானது.

விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேர்தலில், சுமதிபால தரப்பில் போட்டியிட்ட ஷம்மி டி சில்வா வெற்றி பெற்றார்.

இதன்போது ஷம்மி டி சில்வா 27 மேலதிக வாக்குகளுடன் 83 வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மனித உரிமைகள் ஆணைக்குழு பாதுகாப்பது, குற்றவாளிகளையா? அல்லது பொது மக்களையா? – ஜனாதிபதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதுகாப்பது, குற்றவாளிகளையா? அல்லது, பொது மக்களையா? என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு கூடிய போது, அரசியலமைப்புக் குழு தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அரசியலமைப்புச் சபை தொடர்பாக கடந்த உரையில் பேசப்பட்ட விடயத்தின் பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்து முன்வைத்த அறிக்கையை அவர் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் சிலரைத் தாக்கியமைக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பாக அவர்கள் முன்வைத்த கேள்விகள், இலங்கையில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதுகாக்கவா? அல்லது பாதாள உலக குழுவை பாதுகாக்கவா? என்ற கேள்வி தனக்குள் எழுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனதுரையில் குறிப்பிட்டார்.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று அங்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் நவீன நகரங்களாக மாற்றமடையும் என்று நாம் பெரிதும் நம்புகிறோம். இதற்காக சிறந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள நாம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.

மேலும், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நகரமாக யாழ்ப்பாணத்தை மாற்றவும், நான் எனது அமைச்சு ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளேன்.

எதிர்வரும் மார்ச் மாதம் வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது நாம் பல திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். எமது காலத்தில் நாம் வடக்கில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கியுள்ளோம்.

மேலும், தீர்க்கப்படாமல் இருக்கும் இன்னும் சில பல பிரச்சனைகளையும், வெகுவிரைவில் அரசாங்கத்தின் ஊடாக நாம் மேற்கொள்வோம்.

ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தியது போல, அபிவிருத்தியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இதற்காக எமது ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கத் தயாராகவே இருக்கிறோம் என, யாழ்ப்பாணத்தில் வைத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Read more...

கடத்தப்பட்டவர்கள், கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – குற்றப் புலனாய்வு திணைக்களம்

வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர், திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான சாட்சிகள் உள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியது.

இது தொடர்பாக பலர் சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். கொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு, கோட்டை நீதவான் நிதிமன்றில் இடம்பெற்ற குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை குறிப்பிட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமான 2008, 2009 ஆம் ஆண்டுகளில், தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர், வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட புலனாய்வாளர்களையும் கைது செய்தது.

இந்த நிலையில் இதுதொடர்பண வழக்கு விசாரணையின் போது, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடத்தப்பட்ட 11 பேரில், ஐந்து பேர் திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக, சிலர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த சாட்சியாளர்கள் அந்த முகாம் அமைந்துள்ள இடத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு காட்டியுள்ளதாகவும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதியளிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது.

அதேநேரம், இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் உட்பட மூவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 6 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நீதவான் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

விக்னேஸ்வரனுக்கு எதிரான, நீதிமன்ற வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு - மேன்முறையீட்டு நீதிமன்றம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகள், எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி மற்றும் 31 ஆம் திதிகதிகளில் இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதியரசர் மஹிந்த சமயவர்தன முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அந்த பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

பஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விபத்துக்களைக் குறைக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

சிலாபம் – மஹாவெவ பகுதியில் கடந்த 18 ஆம் திகதி பேரூந்து ஒன்று வேகக் கட்டுப்பட்டை மீறி பயணித்து விபத்து உள்ளாகி 3 பேர் பலியாகியதுடன், 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மின்மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்தச் சம்பவத்தில் குறித்த பேரூந்து சாரதி அதிக வேகத்துடன் பேரூந்தை ஒட்டி சென்றமையே காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவது சம்பவிக்கும் பேரூந்து விபத்துக்களுக்கு முக்கிய காரணம் அதிகவேகம் என்பதனால், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர, அதிக வேகத்துடன் பயணிக்கும் பேரூந்துகள் தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறையிட முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read more...

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை உதவிக்கு விசேட பொலிஸ் குழு

ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணை நடவடிக்கைக்காக விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட திறமைகளுடன் கூடிய அதிகாரிகள் இந்த குழுவில் உள்வாங்கப்ப படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் உருவாக்கவுள்ள இந்த குழு, கடந்த நான்கு ஆண்டுகளில் இடம் பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும்.

இதனிடையே கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலனைக்குட்படுத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஆனபோதிலும் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் அதிகமானவை, ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவை என அதன் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆணைக்குழு, 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள், நம்பிக்கையை சீர்குலைத்தமை, சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, ஏமாற்றியமை, அதிகாரம், அரச சொத்துக்க​ள் மற்றும் சலுகைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, அரச சொத்துக்கள் மற்றும் வருமானங்களுக்கு பாரிய சேதம் விளைவித்தமை தொடர்பிலான உண்மைத்தன்மை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்

இது தொடர்பில் எழுத்துமூலமான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளிலும்,அனுப்பமுடியும்.
இதேவேளை, முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Read more...

வட கிழக்கு இளைஞர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தினாரா கோட்டா ? - ஏன் ? எதற்கு?

கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலருடன் கலந்துரையாடி உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வெளிச்சம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்தே விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் தொகுதி மட்டத்திலான செயற்பாட்டாளர்களுக்கான நியமனமும் மார்ச் மாதமளவில் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு மாகாணங்களை குறிவைத்து செயற்படுகின்றார் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com