Wednesday, January 9, 2019

இனி பாடசாலையில் சட்டக்கல்வி

பாடசாலை பாட விதானத்தில் சட்டக் கல்வியைச் சேர்ப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த அனுமதி பெறப்பட்டமையானது அரசாங்கத்தின் முக்கிய வெற்றியாகும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதனிடையே, க.பொ.த. உயர்தர உயிரியல் பாடத்திற்கான புதிய பாடவிதானத்தைத் தயாரித்து, அதற்குரிய ஆசிரிய கையேட்டை ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வழங்கியிருப்பதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இதற்குரிய ஆசிரிய பயிற்சிகளும் நிறைவடைந்துள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்தி குணசேகர தெரிவித்துள்ளார்.


Read more...

இலங்கையின் பால்நிலைச் சமத்துவமற்ற ஊடகக்கல்வியும் ஊடகத்தொழிற்துறையும்

இன்று சகல துறைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள். பெண்ணால் எல்லா இடங்களிலும் இருக்க முடியும். ஆனால், பெண் அதிகாரத்தை அல்லது பெண்களால் நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாத ஓர் ஆணாதிக்க சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51 வீதமானவர்கள் பெண்கள். இலங்கைக்கு அதிகளவான அந்நியச் செலவாணியை ஈட்டித்தருபவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள். ஆனால், இலங்கையில் பால்நிலைச் சமத்துவம் என்பது பெயரளவிலேயே உள்ளது.

எமது நாட்டிலும் கூடப் பல பெண்களுக்கு கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன. பல பெண்களுக்கு தாம் விரும்பிய துறையை தெரிவு செய்து கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் எந்தத் துறையைத் தெரிவுசெய்து கல்வி கற்க வேண்டும் என்பதை குடும்பமும் சமூகமும் தீர்மானிக்கின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை ஊடகத்துறையைத் தமக்கான துறையாகத் தெரிவு செய்வதில் பெண்கள் பின்னிற்கிறார்கள் அல்லது ஊடகத்துறையைத் தெரிவுசெய்வதை அவர்கள் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகம் அங்கீகரிக்கவில்லை. அதையும் தாண்டி ஊடகத்துறையைத் தமது பட்டப்படிப்பிற்காகத் தெரிவுசெய்பவர்களில் பெரும்பாலானோர் தமது தொழில்துறையாக ஊடகத்துறையைத் தெரிவுசெய்வதில் பின்னிற்கின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் ஊடகக்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள நிலையில், அத்துறையில் கல்விகற்றவர்கள் அத்துறையில் ஈடுபடாது இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் இரண்டு தேசிய பல்கலைக்கழகங்களில் மாத்திரமே தமிழ்பேசும் மாணவர்களால் ஊடகத்துறைப் பட்டத்தைப் பெறமுடியும். யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமும் மற்றையது திருகோணமலை வளாகத்தில் ஆங்கில மொழி மூலமும். அது தவிர்ந்து தமிழ்பேசும் மாணவர்கள் ஊடகக் கல்வியைத் தொடரவேண்டுமாக இருந்தால் சிங்கள மொழிமூலமாகத்தான் களனிப் பல்கலைக் கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீபாளி வளாகம், ஸ்ரீஜெயவர்தனபுரப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் போன்றவற்றில் பட்டப்படிப்பைத் தொடரமுடியும. எதிர்காலத்தில் ஊவாவெல்லஸ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமொழிமூலமாக ஊடகத்துறைப் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஊடகத்துறைசார்ந்த முதுமாணிப் பட்டப்படிப்புக்களைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களும் இலங்கையில் மிக அரிதாகவே உள்ளது. இலங்கையின் சில அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊடகத்துறைசார்ந்த டிப்ளோமா பட்டங்களை வழங்குகின்றன.

இந்நிலையில் ஆங்கில மொழிமூலம் ஊடகத்துறைப்பட்டத்தை வழங்கும் திருகோணமலை வளாகத்தில் தமிழ்பேசும் பெண் மாணவிகளுடைய தொகை மிகக் குறைவாகவே உள்ளது. தற்போதைய கல்வியாண்டில் இரண்டாம் வருடத்தில் இரண்டு தமிழ்பேசும் பெண்களும், மூன்றாம் வருடத்தில் ஆறு தமிழ்பேசும் பெண்களும் கல்வியைத் தொடர்கின்றவேளை, நான்காம் வருடச் சிறப்புக் கற்கையில் எந்த ஒரு தமிழ்பேசும் மாணவியும் இல்லை. யாழ். பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டோமானால் அங்கும் குறைந்தளவிலான தமிழ்பேசும் பெண்களே ஊடகக் கல்வியைத் தொடர்கின்றனர்.

கல்வியில் மட்டுல்ல இலங்கையின் ஊடகத்துறையில் தொழில்புரிவதும் பெண்களுக்கு சவால்மிக்கதாகவே இருக்கிறது. ஊடக நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்கும் போதும், வேலைப் பகிர்ந்தளிப்பிலும் பால்நிலைச் சமத்துவத்தைப் பேண வேண்டும்.

2011ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 31 அச்சு ஊடக நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 192 பெண் ஊடகவியலாளர்களும் 464 ஆண் ஊடகவியலாளர்களும் இருப்பதாகக் கூறுகின்றது. அதாவது, 29.5 வீதமான பெண்களே ஊடகவியலாளர்களாக இருக்கிறார்கள். இதில் தமிழ்பேசும் பெண்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். அண்மைய ஆய்வுகள் ஆங்கில ஊடகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன.

ஊடகத்துறையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக, இலங்கையின் தமிழ் அச்சு ஊடகங்களில் பெண்களின் வகிபாகம் குறைந்த அளவில் உள்ளது. பெரும்பாலான அச்சு ஊடகங்கள் ஆணாதிக்கக் கட்டமைப்பின் கீழேயே இயங்கி வருகின்றன. அச்சு ஊடகங்களில் பெண் ஊடகவியலாளர்களின் நிலையை நோக்கினால் உயர் பதவிகளில் பெண்கள் அங்கம் வகிப்பதில்லை. ஊடகவியலாளர்களுக்கு மேலதிக கல்வி மற்றும் திறன் விருத்திக்கான வாய்ப்பு குறைவாகக் காணப்படுவதுடன் செயலமர்வுகளுக்கும் அனுப்பப்படுவதில்லை.

பெறுமானமுடைய உள்ளடக்கங்களில் பணியாற்ற அனுமதிப்பது குறைவு, தீர்மானம் எடுக்கும் வாய்ப்பு குறைவு, செய்திசேகரிப்பு மற்றும் செய்தித் தொகுப்பு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு என்பனவும் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. தமிழ் அச்சு ஊடகங்களில் பத்திரிகையாசிரியர் பதவி பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. நிருபர்களாகவோ, உதவி ஆசிரியர்களாகவோ தான் பெண்கள் பதவி வகித்து வருகிறார்கள். ஆளுமை நிறைந்த எத்தனையோ பெண்களுடைய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

தாக்கமிக்க துறைகளில் முக்கியமானவை ஊடகங்கள். அவற்றில் பெண்கள் கருத்தியல் ரீதியாக மிகக்குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றனர். அத்துடன், ஊடகங்கள் பெண்களுக்கு என்று ஒரு கட்டமைப்பினையும் ஏற்படுத்தி விடுகின்றமை நோக்குதற்குரியதாகும். பெண்களுக்கு அரசியல் கலாசாரம் பற்றி பேசத் தெரியாது. ஆனால், அதைப் பேணுவதற்கும் பின்பற்றுவதற்கும் பெண்தான் தேவை என்றவாறான ஒரு கட்டமைப்பை ஊடகங்கள் கொடுத்து வருகின்றன.

பெரும்பாலான ஊடகங்கள் சமாதானம் பற்றியோ அரசியல் பிரச்சினைகள் பற்றியோ பெண்களிடம் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வது குறைவாகவே உள்ளது அல்லது பெண்களுடன் கருத்துப்பகிர்வை மேற்கொள்வதில்லை என்றுதான் கூறவேண்டும். பெண்கள் தொடர்பாக வரக்கூடிய நிகழ்ச்சிகள், செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றில் பெண்களின் குடும்ப அலகு பற்றி மட்டுமே அழுத்தம் கொடுத்துப் பேசப்படுவதாகவுள்ளது. அழகுக்கலை, சமயற்கலை, கலை, கலாசாரம் போன்றவை சம்பந்தமான உள்ளடக்கங்களைத் தான் வெகுஜன ஊடகங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு வழங்குகிறார்கள்.

அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலோ, ஆய்வுகளிலோ, கட்டுரைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள் போன்ற கனதியான விடயங்களில் பெண்களின் பங்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது. நேர்காணல்களை செய்பவர்களாகவும் நேர்காணப்படுபவர்களாகவும் பெரும்பாலும் ஆண்களே இருக்கிறார்கள்.

ஊடக நிறுவனங்களில் பாலியல் ரீதியான சுரண்டல்கள், வன்முறைகள் போன்றவற்றை பெண்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. பெரும்பாலான பெண்கள் தமது தொழில் பாதுகாப்புக் கருதி தமக்கெதிரான வன்முறைகளையும் நிராகரிப்புக்களையும் சகித்துக்கொண்டு வாழப் பழகியுள்ளனர்.

செய்தி அறைகளில் சமத்துவம் நிலவவேண்டும். காலங்காலமாக ஊடகங்களில் நடைபெறும் ஒடுக்குமுறைகளைச் சகித்துக்கொள்ள ஆரம்பித்தோமானால் மாற்றம் ஏற்படவாய்ப்பில்லாது போகும். எனவே, செய்தி அறைகளில், ஊடக நிறுவனங்களில் பெண்கள் தமது உரிமைகள் நிராகரிப்புக்கு எதிராக தாமே குரல்கொடுக்க வேண்டும். தமது பிரச்சினைகளுக்காகப் பேசவேண்டும்.

ஊடகங்கள் சமூகத்தின் விம்பங்கள். ஊடக நிறுவனங்களிலேயே பால்நிலைச் சமத்துவம் இல்லாத போது அவர்கள் எவ்வாறு பால்நிலைச் சமத்துவம் பற்றிய புரிதலை சமூகத்திற்கு வழங்க முடியும். பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண் கல்வி என்பன அடிப்படை மனித உரிமையாகும். ஊடகத்தொழில் துறையில் மாத்திரமல்லாது ஊடகக்கல்வியிலும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளும் சவாலைப் பெண்கள் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும். பெண்கள் தமது துறைசார்ந்த ஆளுமையை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஊடகத்துறையில் ஆணாதிக்கத்தை மீறிச் சில பெண்களால் மாத்திரமே சாதிக்க முடிந்துள்ளது. ஆணாதிக்கவாத சமுதாயத்தால் நிராகரிக்க முடியாதவர்களாக நாம் மாறவேண்டும். பெண்கள் சிந்தனையாலோ, அறிவாற்றலாலோ அல்லது எந்த வகையிலும் ஆண்களைவிட குறைந்தவர்கள் அல்லர். இலங்கையில் ஊடகத்துறையில் பன்மைத்துவம் பேணப்படவேண்டும்.

Read more...

வாழ்க்கயின் வடிவத்தை மீளமைக்கும் வெள்ளமும் வறட்சியும்

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம்- அதுபோல் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.

அதுதான் இயற்கை நியதி. வறட்சி, வெள்ளம், புயல், என எந்த இயற்கை இடர் வந்தாலும் அது பணக்காரன் ஏழை என்று பார்ப்பதில்லை. பொதுவாகத்தான் பாய்கிறது. அதேபோல் நிவாரணப்பணிகளும் பொதுவாகப் பாய்வதில்லை. நிவாரணம் வழங்குதலில் உடனடி நிவாரணமாக வழங்கும் போது எல்லோரும் அதை பெற விளைவதில்லை. உண்மையிலேயே வீடுவாசல்களை இழந்து தவிப்பவர்கள் எங்காவது பொது இடங்களில் கும்பலாக தங்கியிருப்போர் மட்டுமே உடனடி நிவாரணமான சமைத்த உணவைப் பெறுகிறார்கள்.

இங்கே வசதி படைத்தோர் தற்காலிகமாக தமது உறவினர் வீடுகளிலோ, நண்பர் வீடுகளிலோ அல்லது தமக்கேயுரிய வேறு வீடுகளுக்கோ செல்கின்றனர். இப்படி மக்களோடு மக்களாக நின்று உணவைப் பெறுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

ஆனால் பணமாக வழங்கப்படும் நிவாரணத் தொகைமட்டும் இவர்களுக்கு அவசியமாகிறது. அதிலெல்லாம் இவர்களது கௌரவம் கரைந்து போவதில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு பிரமுகரின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. அதுமட்டுமல்ல அதனால் பெருமளவு பொருளாதாரச் சேதமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் அதற்காக எந்த மாற்றிடங்களுக்கும் போகவில்லை. இருந்த வீட்டிலேயே வெள்ளம் வடியும்வரை பார்த்திருந்துவிட்டு வெள்ளம் வடிந்த பின் தனது கட்டமைப்புகளை சீர்செய்து மறுபடி வெள்ளம் உள்நுழையாத வகையை தேடுகிறார். அசராத மனிதர். ஆனால் இவருக்கு பணமாக நிவாரணம் கிடைத்தால் அதை கட்டாயம் வாங்குவார்.

வெள்ளம் வடிந்தபின்னால் ஒவ்வொரு கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் மக்கள் நெருக்கியடித்து தமது பதிவை மேற்கொள்ள கோரிக்கை விடுகின்றனர். கிராம அலுவலர்களும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். தமது தொழிற்படு பரப்பெல்லைக்குள் பாதிக்கப்பட்ட இடங்களையும் குடும்பங்கள் பற்றிய விபரங்களையும் பிரதேச செயலருக்கு இவர்களே தெரிவித்தாக வேண்டும்.

இப்போதுதான் உடனடி உதவி பெற்றவர்களுக்கும் ஆறுதலாக நிவாரணம் பெறுவோருக்கும் இடையிலான எண்ணிக்கை பாரிய வித்தியாசத்தை காட்டவுள்ளது.

எவ்வளவு நீர் நெல்லுக்குப் பாய்கிறது. எவ்வளவு நீர் புல்லுக்குப் பாயப்போகிறது. நிகழ்வு நடந்த சில மாதங்களின் பின்புதான் இதற்கான நிவாரணத்தை அரசாங்கம் தரப்போகிறது. அதற்காக மக்கள் சிரமதான வேலைகளாக ஏதாவது கிராமத்தில் பொது வேலைகளை செய்ய கேட்கப்படுவர்.

முற்காலத்தே இதை சகாயவேலை என்பர். இந்த சகாயவேலை செய்ய ஆணுக்கு ஒரு ரூபா முப்பத்தைந்து சதமும் பெண்ணுக்கு ஒரு ரூபாவும் பதினான்கு வயதுக்குட்பட்ட பிள்ளையாயின் (அப்ப வேலை செய்யலாம்) எழுபத்தைந்து சதமும் ஊதியமாக பதியப்படும். (1960) நான்கைந்து மாதங்களுக்கு வேலை கிடைக்கும் சம்பளம் கச்சேரியிலிருந்து உத்தியோகத்தர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். செக்ரோல்படி சம்பளப்பண த்தை குடும்பத்தில் ஒருவர் வந்து பெறலாம். இந்த வேலையை கங்காணி செய்விப்பார். ஓவசியர் மேற்பார்வை செய்வார். இருவரும் கிராமத்தவர்களாக இருப்பர். கிராமத்தில் அனைத்து பிரசைகளுக்கும் சமமாக வேலை கிடைக்காது. நிரந்தர வருமானமுள்ள கடைக்காரர், அரசஊழியர்கள், வாகன சொந்தக்காரர் ஆகியோருக்கு இந்த வேலை இல்லை.

ஆனால் கங்காணி, ஓவசியர், ஆகியோர் சுமார் பத்துக்குடும்பங்களையாவது மேலதிகமாக பதிவில் போட்டிருப்பார்கள் அந்த சம்பளப்பணம் இந்த வேலைகளின் கணக்கு வழக்குகளை கணக்கு (விடும்) பார்க்கும் உத்தியோகத்தர்கள் அந்த சம்பளம் கொடுக்க வரும் நாட்களில் அவர்களுக்கு உணவு தண்ணி என தண்ணிபட்டபாடாக செலவாகும். அதெல்லாம் கேட்குமளவுக்கு படித்தவர்கள் அப்போது இல்லை.

நீளக்காற்சட்டை போட்டவர்களை மிக மரியாதையாக வணங்கித்தான் பழக்கம். இப்போது அப்படியல்லவே.

ஒருதடவை எமது மண்ணில் புயலடித்தது. அது ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு உடனடி நிவாரணமாக பைகளில் அடைத்த உணவுப் பொருட்கள் வந்தன. அனைவருக்கும் வழங்கினார்கள் அங்கே எந்த விதமான பெயர்ப்பதிவுகளும் இல்லை. இன்று யாரும் குடும்பங்களின் பதிவுகளில்லாவிட்டால் எதையும் பெற முடியாது.

ஒழுங்கான வடிகாலமைப்புகள் இல்லாத நிலையில் வெள்ளமும், காடுகளை அழிப்பதால் வறட்சியும் ஏற்படுகிறது என்று மற்றவர்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பவர்களால் அவற்றை செய்யாமல் இருக்க முடியவில்லை. நிவாரணங்கள். எமக்கான வாழ்வாதாரங்களாக ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுௗறுகளிலேயே தொடங்கியது. யுத்தத்தால் மாறி மாறி இடம்பெயர்ந்து தொடர்ச்சியாக இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நிவாரணம் வாங்கி வாங்கியே வாழ்ந்த மக்கள் நாங்கள் மீள் குடியேற்றத்தின் பின், ஆறுமாதங்கள் மட்டுமே நிவாரணம் பெற்றோம. ஆனாலும் என்ன அடிக்கடி வெள்ளமும் வறட்சியும் வந்து வந்து எமது வாழ்க்கையின் வடிவத்தை மீளமைத்துக் கொண்டேயிருக்கின்றன.

Read more...

Tuesday, January 8, 2019

பளையில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் பலி

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இன்று மாலை சம்பவித்த விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர். இராணுவத்தினரின் கனரக வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமிற்கு டீசல் அடிப்பதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியும், ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் பாரிய விபத்து சம்பவித்தது.

இந்த கோர விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பளை சேர்ந்த 36 வயதுடைய பி.ஜெயக்குமார், பளை மாசார் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கே. குகதாஸ், யாழ் - சுழிபுரம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய எஸ். ரதீஸ்வரன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை பொலீஸாரும் கிளிநொச்சி தடயவியல் பொலீஸாரும் மேற்கொண்டு வருகின்றனர் .

Read more...

நாடாளுமன்ற கலவரம் - ஒருவாரகாலத்திற்குள் அறிக்கை கோரல்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைமைகளின் போது இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், மோதல்கள் இடம்பெற்றதை அடுத்து, அது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, சம்பவம் தொடர்பான அறிக்கைகளை கோரியுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக, குழுவின் அங்கத்தவரான, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து வெளியிடப்பட்ட CCTV காணொளிகள், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனை உள்ளடங்கலாக இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த குழுவை நியமித்தார். குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ தலைமையில் இன்றைய கூட்டம் இடம்பெற்றது.

Read more...

வடமாகாண புதிய ஆளுநருக்கும், சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வட மாகாண ஆளுநராக பதவியேற்ற சுரேன் ராகவனின் முதலாவது இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும், அது குறித்து முதற்கட்டமாக எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம். ஏ சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், நாளைய தினம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு, அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக, ஆளுநரின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Read more...

விசேட நிபுணர்களின் வரைபு விரைவில் - எம்.ஏ. சுமந்திரன்.

புதிய அரசியலமைப்பு குறித்த விசேட நிபுணர்களின் வரைபு அறிக்கையை வெகுவிரைவில், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடமொற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியே, “புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர்களின் அறிக்கையை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்ததாக தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகளை அடுத்து மேற்படி அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது போனதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தற்போது இந்த அறிக்கையை வெகுவிரைவில் அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை தமது தரப்பு முன்னெடுத்து வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பை கொண்டு வர கூடாது என்று கூறி, நாட்டின் பல அரசியல்வாதிகள், எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் எதிர்ப்புக்களுக்காக, அரசியல்ப்பமைப்பு உருவாக்கத்தை நிறுத்தப் போவதில்லை என்று, எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து இவரும் போட்டியிடுவார் - டிலான் பெரேரா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் போட்டியிடப்போவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை குறிப்பிட்டார். தேர்தலொன்றின் மூலம் அரசாங்கத்தின் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராக உள்ளதாக கூறிய டிலான் பெரேரா, தங்களுக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, அமோக வெற்றியடையவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெகு விரைவில் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழும் காலம் வரப்போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது, நிரூபணம் - பிமல்

நாட்டின் அரசியல் நெருக்கடிகளை தீர்க்க,சர்வதேச நீதிமன்றங்கள் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை கூறினார். இலங்கை மீது சர்வதேச நாடுகள் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினரிடையே, தீவிரமாக விவாதங்கள் இடம்பெற்றன. ”சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. வடக்கு- கிழக்கில் பிரச்சினைகள் நடைபெற்றுள்ளமை உண்மையே. அதனை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் இன்று இலங்கையிலுள்ள பிரச்சினையை இலங்கையிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்பது நிரூபனமாகியுள்ளது. அந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை.

எமது நாட்டு பிரச்சனைகளை, நாமே தீர்த்துக் கொள்வது சிறந்ததாகும் என, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

அர்ஜுனுக்கு வழங்கியதை, அரசியல் கைதிகளுக்கு ஏன் வழங்கவில்லை? - சார்ல்ஸ் நிர்மலநாதன்

தமது குடும்பத்தாரை பிரிந்து 11 மாதம் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட அர்ஜுன் ஆலோசியஸுக்கு பிணை வழங்கிய போது, தங்களின் மனைவி, மக்களை பிரிந்து வாழும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்கப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

”அர்ஜுன் அலோசியஸ் குற்றமிழைத்தாரா? என்பது தொடர்பாகவோ அல்லது அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்தோ? நான் எந்த கருத்தையும் தெரிவிக்க போவதில்லை.

ஆனால், அவருக்கு பிணை வழங்குவதற்கான சட்டத்தரணியின் வாதம் தொடர்பிலேயே தாம் கருத்து வெளியிடப்போவதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிமோசடி குறித்த விசாரணைகளுக்காக அர்ஜுன் அலோசியஸ் 11 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தமது மனைவி,பிள்ளைகளை விட்டு பிரிந்திருப்பது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த, அர்ஜுன் ஆலோசியஸ், தமது குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்று கோரிய பிணை மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அர்ஜுன் ஆலோசியஸுக்கு பிணை வழங்கியதை நினைவூட்டிய சார்ல்ஸ் நிர்மலநாதன், 11 வருடங்களாக தமது மனைவி, பிள்ளைகளை பிரிந்து அரசியல் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கு. ஏன் பிணை வழங்க முடியாது” என கேள்வி எழுப்பினார்.

வெகு விரைவில் தமிழ் அரசியல் அகிதிகள் விடயத்திற்கு சரியான தீர்வொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே, தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் கூறினார்.

அத்துடன் மக்களின் பிரச்சனைகளுக்கு முடிவு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் செயல்படும் எனவும்,தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கூறினார்.

எது எவ்வாறாயினும் இலங்கைக்கான சட்டத்தை இயற்றுகின்ற சபையின் உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை கிடையாது என்பது தெரியாமல் போனது எவ்வாறு?

சட்டத்தை இயற்றுவதற்கு அறிவு இல்லாவிட்டாலும் இருக்கின்ற சட்டத்தை வாசித்து அறிவதற்கேனும் அறிவு வேண்டும்.

Read more...

இன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம். வை எல் எஸ் ஹமீட்

மஹிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுனவில் இணைந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிட்டார்கள்???

ஜனாதிபதியும் சில அமைச்சுக்களை வைத்திருப்பதால் அவரது கட்சியான UPFA யும் அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றது. இது கூட்டு அரசாங்கம். எனவே, மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரமுடியாது. சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்; என்ற சுமந்திரனின் விதண்டாவாதங்களை நம்பி நீண்ட அனுபவமுள்ள சம்பந்தன் ஐயாவும் தானே எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தைவிட்டு வெளியேறமாட்டேன்; என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கின்றார்.

இவ்விவகாரம் இன்றோ, நாளையோ பாராளுமன்றில் சூடுபிடிக்கலாம். இவை இரண்டும் சட்டத்திற்கு முரணான வாதங்களாகும். இவை தொடர்பாக ஏற்கனவே விரிவான ஆக்கங்கங்களை எழுதியிருக்கின்றேன்.

சுருக்கமாக, சரத்து 99(13) ஒருவர் ஒரு கட்சியின் அங்கத்துவத்தை இழந்தால் பாராளுமன்றப் பதவியை இழப்பார்; என்று கூறுகின்றது. அது ராஜினாமா, விலக்குதல் அல்லது வேறுவழியாக இருக்கலாம்.

இவர்கள் ராஜினாமா செய்யவுமில்லை. விலக்கப்படவுமில்லை. இவ்வழிகளில் அல்லது வேறு வழியில் அங்கத்துவத்தை இழந்தாரா? இல்லையா? என்பது அவர்களுடைய கட்சிக்குரிய விடயம்.

இங்கு அவர்களுடைய தேர்தலில் போட்டியிட்ட கட்சி UPFA. அவர்களுடைய சொந்தக்கட்சி SLFP. உதாரணமாக SLFP அவர்களை விலக்கினால்கூட அதனடிப்படையில் UPFA அவர்களை விலக்கினால்தான் அவர்களுடைய பதவிகளுக்கு பிரச்சினை வரும்.

சிலவேளை, SLFP விலக்கி அதனடிப்படையில் UPFA விலக்காவிட்டால் அவர்களது பதவிக்கு பிரச்சினை இல்லை. SLFP தேவையானால் UPFA இற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம், அது வேறுவிடயம்.

அதேபோன்றுதான் அவர்கள் நாளை SLFP நில் இருந்து ராஜினாமா செய்தால் அதனை அவர்கள் UPFA இற்கு அறிவித்து அப்போழுதும் அவர்கள் தங்களது UPFA அங்கத்துவத்தை அதனடிப்படையில் இழந்துவிட்டார்கள்; என்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்காவிட்டால் அப்பொழுதும் அவர்களது பதவி பறிபோகாது.

அதாவது, UPFA விலக்கவேண்டும் அல்லது அங்கத்துவத்தை இழந்ததாக அறிவிக்க வேண்டும்.
எனவே, SLFP விலக்கினாலும் அல்லது SLFP இல் இருந்து ராஜினாமா செய்தாலும் UPFA நடவடிக்கை எடுக்காதவரை அவர்களது பதவிகளுக்கு பிரச்சினை இல்லை; எனும்போது இவர்கள் கூறும் காரணம் எவ்வளவு சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

அதாவது, SLFP யாப்பில் “ இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றால் அவர் SLFP அங்கத்துவத்தை இழப்பார்” என்று ஒரு சரத்து இருக்கின்றதாம். இவர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்ததால் SLFP அங்கத்துவத்தை இழந்துவிட்டார்களாம். எனவே பாராளுமன்றப் பதவியும் வறிதாகிவிட்டதாம். எவ்வளவு பகுத்தறிவிற்கப்ப்பாற்பட்ட சோலிபுரட்டும் வாதம்.

SLFP யாப்பு என்பது சட்டமா? அது அவர்களுடைய கட்சிக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம். அதை அவர்கள் மீறினால் அவர்களுடைய கட்சி பார்க்கின்ற விடயம். வெளியில் உள்ளவர்கள் எவ்வாறு தலையிடமுடியும்?

உதாரணமாக, மஹிந்த ராஜபக்ச நாளை SLFP இல் ராஜினாமா செய்து அதனை அவரே பகிரங்கமாக அறிவித்தாலும் சிலவேளை அவரது ராஜினாமாவை அவரது கட்சி ஏற்றுக்கொள்ளாமல், UPFA இற்கு அறிவிக்காமல் இருந்தால் UPFA ஊடக செய்தியை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது.

அவர் தனது பாராளுமன்றப் பதவியை நேரடியாக ராஜினாமா செய்யவிரும்பினால் அரசியலமைப்பு சரத்து 66 இற்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அறிவிக்க வேண்டும்.

எனவே, SLFP யாப்பில் வேறுகட்சியில் அங்கத்துவம் பெற்றால் தனது அங்கத்துவத்தை இழப்பார்; என்று இருந்தால் அதுதொடர்பாக SLFP தீர்மானித்து UPFA இற்கு அறிவித்து UPFA நடவடிக்கை எடுக்காதவரை அவர்களது பாராளுமன்றப் பதவிக்கு எதுவித பிரச்சினையுமில்லை.

சுமந்திரனிடம் கேட்கப்படவேண்டிய மிகவும் இலகுவான கேள்வி: SLFP யின் யாப்பு சட்டமா? இல்லையெனில் அதனடியடிப்படையில் நடவடிக்கை எடுக்க அல்லது கோர அதன் அங்கத்தவரல்லாத ஒருவரால் முடியுமா? அவ்வாறுதான் அங்கத்தவராக இருந்தால்கூட அதை அவர் SLFP யின் உயர்பீடத்தில் பேசவேண்டும் அல்லது நீதிமன்றம் செல்லவேண்டும் SLFP அங்கத்தவர் என்ற முறையில்.

இவை எதுவுமில்லாத நிலையில் ஒருவர் விதண்டாவாதம் புரிகின்றார் என்பதற்காக சட்டம் வளைந்துவிடுமா?

அதேநேரம் ஜனாதிபதி UPFA தலைவர் என்ற முறையிலா அமைச்சுப்பதவிகளை வகிக்கின்றார்? ஜனாதிபதியையும் UPFA தலைவரையும் முடிச்சுப்போடுவதற்குரிய சட்ட அடிப்படையைக் என்ன? எனவே, இது முழுக்க முழுக்க விதண்டாவாதம். சம்பந்தன் ஐயா பழுத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கு இருக்கும் கௌரவத்தையும் இழக்கச் செய்யும் விடயம்.

த தே கூ இற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாலும் தனக்கு வாசியென்பதாலூம் ஐ தே க இதற்கு ஆதரவு வழங்கலாம்.

முஸ்லிம் கட்சிகள் எதற்காக தலையை நுழைக்க வேண்டும். நியாயம் என்பதாலா? அல்லது த தே கூ நன்றிக்கடன் பட்டதாலா? கிழக்கில் ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமனத்தைக்கூட ஜீரணிக்க முடியாதவர்கள்.

கடந்தமுறை இவ்விடயம் பாராளுமன்றம் வந்தபோது சில முஸ்லிம் பிரதிநிதிகள் நடந்துகொண்ட விதம் சற்று அதிகமாகவே இருந்தது எல்லோருக்கும் தெரியும்.

இப்பொழுதாவது சற்று நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளில் இனவாத முதலீடு செய்வதற்கு இனவாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நியாயத்திற்காகப் பேசினாலும் பரவாயில்லை. அநியாயத்திற்காக, சட்டத்திற்கெதிராக இவ்வாறான விடயங்களில் அவர்களின் விதண்டாவாதத்திற்கு துணைபோய் சமுகத்தை தயவுசெய்து இக்கட்டுக்குள் தள்ளாதீர்கள்.

Read more...

இறுதிப்போரில் பலியானவர்களை கணக்கிடுமாறு சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் இடப்பெற்ற இறுதிப்போரில் பெருந்தொகையானவர்கள் பலியாகியுள்ள நிலையில், பலியாகிவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுமாறு இரண்டு சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், போரின்போது பலியானவர்களின் முழுமையான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. குறித்த துல்லியமான விபரங்களை உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அத்துடன், மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழுக்கள் ஆகியன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

2009 ஆண்டு நிறைவுக்குவந்த போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணிப்பிடல் முக்கியமானது என்று, உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்திற்கான நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அளவிடும் பணிகளை இலங்கை மற்றும் வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் தரவு நிரற்படுத்தல் குழுக்களின் புரதிநிதி பற்றிக் போல் தெரிவித்துள்ளார். இதில் தமிழர்கள் மாத்திரமன்னரி சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம் போன்றோரின் எண்ணிக்கையும் மதிப்பிடப்படும் என்று அவர் மேலும் கூறினார்

Read more...

ஹிஸ்புல்லாக்கு பதில் இவர்தான் - தீர்ந்தது குழப்பம்

கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விலகியதையடுத்து, அவரது வெற்றிடத்திற்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதன் பின்னர் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அவரது வெற்றிடத்திற்கு ஒருவரின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு கோரிகை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்படுவதாக வர்த்தமானி வெளியிடப்பட்டு இந்த குழப்ப நிலைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

Read more...

இரண்டு நிலைப்பாட்டில் அமைச்சர் சுஜீவ சேனசிங்க

அமைச்சர்களை நியமிப்பதில் எழுந்துள்ள குழப்பநிலைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தையே நாடுவோம் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த குழப்பநிலைக்கு உரிய தரப்பினர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் இந்த பிரச்சினைக்கான தீர்வினை நீதிமன்றமே வழங்கவேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை பெற்றுக்கொள்ளும் நிலைபாட்டில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. ஆகவே நாட்டினது அபிவிருத்தியினை கருத்திற்கொண்டு அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இருப்பினும், மறுபுறம் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கவேண்டுமானால் அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதே சிறந்தது என்றும் கருதுவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த உறவும் இல்லை அடித்து கூறுகிறார் ஜயதிஸ்ஸ

ஐக்கிய தேசிய கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி இணைத்து செயற்படுவதாக கூறப்படும் விடயத்தில் எந்தவித உண்மையும் இல்லை. மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலம்தொட்டு அது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றது என்று நேற்று ஊடகம் ஒன்றிக்கு பிரத்தியேக செவ்வி வழங்கும்போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் மக்கள் விடுதலை முன்ணனி உறவை பேணி வருவதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்த குற்றசாட்டு முற்றிலும் உண்மையற்றது. ஒரு சமயம் சட்ட விரோத கடவுச்சீட்டுடன் விமல் வீரவன்ச கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுவித்தமையை அமைச்சர் லட்சுமண் கிரியெல்லவும் ஏற்றுக்கொண்டார்.

மறுபுறத்தில் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது மக்கள் விடுதலை முன்ணனி அதில் தன் நேரடி எதிர்ப்பை வெளியிட்டு இருந்தது. இதை முழு நாடும் அறியும். இந்த சமயத்தில் மஹிந்த ராஜபக்சவோ அவரின் தரப்பினரோ வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை. இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய காட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணி உறவை பேணுகிறது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பினார்.

Read more...

பவ்ரல் அமைப்பு பிரதமருக்கு விடுத்த கோரிக்கை எது தொடர்பில்?

மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவேண்டும் என பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி நேற்று பிரதமருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையினை ஜனாதிபதியிடம் விரைவாக சமர்ப்பித்து, பிரதமர் என்ற ரீதியில் மாகாணசபை தேர்தலை விரைவுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கம் என்ற அடிப்படையில் மக்களின் தேர்தல் உரிமைகளுக்கு நாட்டினது தலைவர் என்ற வகையில் வாய்ப்பளிக்க வேண்டும்.

தற்போது நாட்டை ஆளுகின்ற பொறுப்புவாய்ந்த தலைவர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக் கூறவேண்டியதுடன், மக்களது தேர்தல் உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

ரம்புட்டான் தொடர்பில் விவசாய அமைச்சு எடுத்த முடிவு

விவசாயத் திணைக்களத்தின் பழக்கிராம திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ரம்புட்டான் செய்கை மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்கீழ், மலேஷியன் மஞ்சள் மற்றும் சிவப்பு ரம்புட்டான், மல்வானை ரம்புட்டான் உள்ளிட்ட ரம்புட்டான் வகைகளின் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இதனால் ரம்புட்டான் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, ஒரு ரம்புட்டான் மரம் நடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் பலனை தர ஆரம்பித்துவிடும். ரம்புட்டான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புட்டான் மரம் ஒன்று பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான காய்களை தரும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் ரம்புட்டான் மரத்தில் அதிகம் ஏற்படுவதில்லை .இருப்பினும் மிக குறைந்த அளவிலே இம்மரத்தின் கிளைகளிலும் காம்புகளினும் பூஞ்ச காளான் நோய் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Read more...

காமினி செனரத் மீதான வழக்கின் மேலதிக விசாரணை இன்று

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, நேற்று கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு, நீதிபதிகளாக மனு சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.நேற்றைய விசாரணையின் போது, கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் மேனக ராஜகருணவிடம், சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை காரணமாக காமினி செனரத் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அங்கொடயில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த அசம்பாவிதம் சுமார் இரவு 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர் குறித்து எந்த தகவலும் இன்னும் அறியப்படவில்லையென பொலீசார் கூறுகின்றனர். அத்துடன் உயிரந்தவரின் சடலம் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read more...

4 பேருக்கு உடனடி நியமனம் - அரசியல் அமைப்புச் சபை தீர்மானம்

இந்த வரத்திற்கான முதலாவது அரசியல் அமைப்புச் சபை கூட்டத்தில் 4 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சபை கூட்டம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியிருந்தது. இதன்போது உயர் நீதிமன்றத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை, அரசியலமைப்புச் சபையில் ஆராயப்பட்டது.

இதன்படி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் மூவரும், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இந்த நாடு பிளவுபட நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அனுர குமார.

மக்கள் விடுதலை முன்னணி அரசியலில் இருக்கும் வரை இந்நாடு பிளவு படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் தலைவர் அநுர குமார திஸாநாயக்க என கூறியுள்ளார்.

பொலநறுவையில் இடம்பெற்ற புத்திஜீவிகள் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அங்கு பேசுகையில் :

நாம் 78ம் ஆண்டின் அரசியல் யாப்பினை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் சிறுபாண்மையோரின் உரிமைகள் பாதுகாக்கும், அவர்களை அடையாளப்படுத்தும் புதிய யாப்பு முறைமை வேண்டும். இவ்வாறான யாப்பு ஒன்றிற்கு நாம் முன்னின்று ஆதரவளிப்போம்.

பெப்பரவரி 4ம் திகதி நாட்டை பிளவுபடுத்தும் யாப்பொன்று வரப் போகிறது என எல்லோரும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நாம் மக்களிடம் உறுதியாக கூறுவது மக்கள் விடுதலை முன்னனி அரசியல் களத்தில் இருக்கும் வரை நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம்.

ஜனாதிபதி முறை நீக்கம் தொடர்பாகவோ புதிய தேர்தல் தொடர்பாகவே அதிகார பிரிவு தொடர்பாகவோ எவ்வித முடிவும் இது வரை அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் முன்வைக்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்ட மூலத்தை முன்வைத்து பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அரசியலமைப்பு மாற்றப்படும். இல்லாவிட்டால் தோற்று போகும். அரசியல் அமைப்பொன்றை நடைமுறைப்படுத்த கிட்டதட்ட ஒருவருட காலமாவது தேவைப்படும்.

அண்மையில் மாத்தறையிலிருந்து பெலியத்தவரையில் 27 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தமை தொடர்பாக எல்லோராலும் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது. அதன் செலவு டொலர் பில்லியன் 270. அதேவேளை நாம் கடனுக்காக வருடமொன்றிற்கு டொலர் கோடி 590 ரூபாவை செலுத்துகின்றோம். நாம் அபிவிருத்தி என்று சொல்லிக் கொண்டு மேற்கொள்ளும் பாதைகள் கட்டிடங்கள் அனைத்தினதும் பின்புலத்தில் பாரிய கடன் சுமை காணப்படுகின்றது. இப்பாரிய கடனை சுமந்து கொண்டு தான் நாம் அவற்றையெல்லாம் அனுபவிக்கின்றோம்.

Read more...

இராணுவத்தினரால் கைதுசெய்யப்படவுள்ளார் நாமல் குமார.

நாமல் குமாரவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியை கொல்ல மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதியின் பிரதான சாட்சியாக காணப்படும் நாமல் குமார இராணுவத்திலிருந்து தப்பியோடிய குற்றசாட்டின் அடிப்படையில் இராணுவத்தினால் கைது செய்யப்படவுள்ளார்.

இவர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய குற்றசாட்டு தொடர்பாக விஷேட இராணுவ விசாரனை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனடிப்படையில் நாமல்குமார கைது செய்யப்படலாம் எனவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரேகேடியர் சுமித் அதப்பத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்படுமோ அதே அடிப்படையிலேயே நாமல் குமாரவும் விசாரிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரனைகள் நிறைவடையும் தறுவாயில் இருப்பாதால் அதன் பின் இராணுவத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் nதிரிவித்திருந்தார்.

மேலும் நாமல் குமார போலியான சான்றிதழ்களை தான் வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளதோடு அதற்காக இராணுவத்தினால் வழங்கப்படும் தண்டனை எதவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.

Read more...

Monday, January 7, 2019

பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு 11 வரை விளக்கமறியல்

கொழும்பு மாநகர சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் கே. ஜி. குலதிஸ்ஸ, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 28 திகதி தெமட்டகொட பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இவர் இன்று கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் ஒன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை அமைதியின்மையுடன் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கட்சி தாவலுக்கு கடுமையான சரத்து - ஜேவிபி

புதிதாக கொண்டுவரப்படவுள்ள 20 ஆம் திருத்தச் சட்டத்தில், அதி முக்கியமான சரத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதாக,ஜேவிபி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் லால் காந்த இதனை கூறினார்.

20 ஆவது திருத்தத்சட்ட மூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் சரத்து மட்டுமன்றி, கட்சித் தாவலுக்கு எதிரான கடுமையான சரத்தையும் தமது தரப்பு இணைத்துள்ளதாக, லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இல் இருந்து குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் லால் காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

“அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எந்தவொரு யோசனைக்கும், ஜே.வி.பி. ஒத்துழைக்க போவதில்லை என்று கூறிய அவர், புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்பதில் தமது தரப்பு கொள்கை ரீதியாக இணங்கும் என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போது நாடாளுமன்றின் உள்ள குழப்ப நிலையின் காரணமாக இந்த திருத்தத்தை கொண்டு வர முடியுமா? என்பது எமக்குத் தெரியவில்லை. இதனாலேயே நாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் சட்டத்திருத்தத்தை தனியாகக் கொண்டுவரத் தீர்மானிதுள்ளோம் என்று லால் காந்த கூறினார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாட நாம் தயாராகவே இருக்கிறோம். ஆனால், இதுவரை இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று கூறிய லால் காந்த, மக்களின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கே, முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Read more...

கொலை சூழ்ச்சியின் விசாரணைகளில், அழுத்தங்களை கொடுக்க கூடாது - வாசுதேவ

நாமல் குமார தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

முதலில் “நாமல் குமாராவால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து, விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னரே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இதற்போது இந்த சம்பவம் குறித்த விசாரணைகளில் ஏதேனும் சதித்திட்டம் இருக்கலாம் என்று வாசுதேவ நாணயகுமார சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டும். மாறாக அவர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வது சாட்சிகளை வலுவிழக்கச்செய்யும் செயல் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளின் போது, நாமல் குமாரவுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், பொலிஸார் தமது விசாரணைகளை முன்னெடுக்கும் போது, அழுத்தங்கள் கொடுக்காமல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என, வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள், உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலத்தை, தோண்டியெடுக்க வேண்டும்.

ஒன்பது வயதான சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சிறுமியின் உடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் கொலை செய்ய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறிய காவல்துறையினர், அது குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டனர். அத்துடன் குறித்த சிறுமியை அவரது தாயும், தாயின் கள்ளக் காதலரும் இணைந்து கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் 26 வயதானவர் என்றும், அவரது கள்ளக் காதலர் 30 வயதானவர் என்றும் கூறப்பட்டுள்ளது. வவுனியா - செட்டிக்குளத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய், தமது கணவரைப் பிரிந்து, ஹாலிஎலவில் உள்ள கள்ளக் காதலருடன் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டதுடன், அவரது கள்ளக் காதலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .

இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கிய சிறுமியின் தாய், தனது தங்கையிடம், ஐந்து வருடங்களுக்கு முன்னர் மகளை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

சமஷ்டி ஆட்சி - ஒற்றையாட்சி குறித்து விளக்குகிறார் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒருமித்த நாடு என்று கூறிக்கொண்டிருப்பது ஒற்றை ஆட்சியே அன்றி, சமஷ்டி ஆட்சியல்ல என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, அவர் இதனை கூறினார். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறாக கையாண்டு, மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா, இதனால் நாடு பெரும் பிரச்சனைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் நிலையை பற்றி கவனம் செலுத்தாத தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமது சுயநலன்களை நிறைவேற்றி கொள்ளவே, அதிக அக்கறை கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார். கிடைத்த சந்தர்ப்பங்களை தமது விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஒருமித்த நாடு என்பது சமஷ்டி என்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் ஒருமித்த நாடு என்பது ஒற்றையாட்சியே என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் டக்ளஸ் , சித்தார்த்தன் , செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு அரசியல் யாப்பு தொடர்பில் விளக்கம் இல்லையென சுமந்திரன் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

வட- கிழக்கு இணைப்பு குறித்து பேச சுமந்திரன் உள்ளிட்ட எவருக்கும் எந்த அருகதையும் இல்லை. கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

காரைதீவில் ஊடகவியலாளர்களை நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் குறிப்பிடும் போது,

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித்தும் சிந்திப்பவர்களாக இல்லை. சம்பந்தன் ஐயாவின் இருப்பிடமாக திருகோணமலை இருப்பினும்கூட அவரின் இருதயத்தில் வடக்குக்கு மாத்திரம் இடம் இருக்கின்றது என்பதை அவருடைய செயற்பாடுகள், செயலின்மைகள் ஆகியன மூலமாக மிக நீண்ட காலமாகவே அவதானித்து வந்திருக்க முடிகின்றது. தேர்தல் காலங்களில் மாத்திரம் கிழக்கு மாகாணத்துக்கு வந்து கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற பிற்பாடு இம்மக்களை கறிவேப்பிலைகளாக ஒதுக்கி தள்ளுகின்ற நடைமுறையைதான் இவர்களின் அரசியல் வழிமுறை கொண்டிருக்கின்றது. இதுவே ஆளுனர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட விடயத்திலும் நடந்தேறி உள்ளது.

வட மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறை செலுத்தி உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையீடு காரணமாகவும்தான் வட மாகாண ஆளுனரை ஜனாதிபதி நியமிப்பதில் தாமதம் நேர்ந்து உள்ளது. இது தொடர்பாக சுமந்திரன் எம். பி போன்றவர்களின் கருத்துகள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் வெளியாகி உள்ளன. ஆனால் கிழக்கு மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக நியமனத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகள் எந்தவொரு கருத்து நிலைப்பாட்டையும் இது வரை வெளியிடவே இல்லை. இந்த இரட்டை வேடத்தை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆகவேதான் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் எவருக்கும் கிடையாது என்று அடித்து கூறுகின்றேன்.

எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுனர் பதவிகளுக்கு மிக பொருத்தமானவர்களையே அடையாளம் கண்டு நியமித்து உள்ளார் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமனம் பெற்று உள்ள முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களுக்குமான ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியாக ஆளுனர் ஹிஸ்புல்லா செயற்படுவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் எல்லா விடயங்களிலும் இன சமத்துவத்தை பேணி நடக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

(எஸ்.அஷ்ரப்கான்)

Read more...

ராஜபக்ச குடும்பத்தை சிறையில் அடைக்க, தீவிர முயற்சி.

மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரை சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைபிடிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, பேராசிரியர், ஜி.எல். பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இந்த அரசாங்கம் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டதாகும்.
இந்த அரசாங்கத்துக்கு சில செயற்பாடுகள் இருக்கின்றன. இவை மக்கள் முற்றாக நிராகரித்தவையாகும். இதனை மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை.

ஸ்திரமாக முடிவுகளை எடுக்கும் அரசாங்கம் அன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கட்டுப்பட்ட அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் இருப்பதாக கூறிய ஜி.எல்.பீரிஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் , நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே அரசாங்கத்தை வழிநடத்திக்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தினார்.

அத்துடன் மக்களை ஏமாற்றி புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து, தமக்கேற்றவாறு ஆட்சியை அமைத்துக் கொள்ள இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். .

அத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தரப்பினர், மஹிந்த மற்றும் கோட்டாவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள்.

அதுமட்டுமன்றி, யஸ்மின் சூகாவும் இலங்கை இராணுவத்தின் 57 தலைவர்களை சர்வதேச நீதிமன்றின் ஊடாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

ராஜபக்ச குடும்பத்தினரை சிறை பிடிப்பதன் மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒருபோதும், இடமளிக்கப்பட மாட்டாது என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தோல்வியடைந்த பொறிமுறையாக மாறியமைக்கு, இரு பிரதான கட்சிகளே பொறுப்பு கூற வேண்டும் - வேலுகுமார்.

கூட்டு ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு , நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இவ்வாறு கூறினார். “தொழிலாளர்களுக்கு அனுகூலம் கிடைக்கும் வகையிலேயே கூட்டு ஒப்பந்த முறைமை உருவாக்கப்பட்டது. இந்த கூட்டு ஒப்பந்தம், சிறப்பானதொரு சம்பள நிர்ணய முறையாகவும் உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், கூட்டு ஒப்பந்தம் இலங்கையில் ஏன் தோல்வி அடைந்துள்ளது? என்பது குறித்து விரிவாக நாம் ஆராய வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், ஆரம்பகாலம் முதலே குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு, தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் தற்போது அடிப்படைச் சம்பளமானது ஆயிரத்தை தாண்டியிருக்கும்.

எனினும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை மிக குறுகிய அளவிலான சம்பளமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். இதை ஆட்சியிலுள்ளவர்களும் கண்டுகொள்ளவில்லை.

அப்போதே கூட்டு ஒப்பந்தத்தில் அரசு தலையிட்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்களை வழங்கியிருந்தால், இவ்வாறு கூட்டு ஒப்பந்தம் தோல்வி அடைந்திருக்காது என வேலுகுமார் கூறியுள்ளார்

இந்த பொறுப்பை ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும், எதிரணியுமே ஏற்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கூறியுள்ளார்.

Read more...

வட மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேன் ராகவன்.

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று பதவியேற்றுள்ளனர். அதன்படி வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் பதவியேற்றுக் கொண்டார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக சுரன் ராகவன் பணியாற்றிய நிலையில், தற்போது வட மாகாணத்திற்கான ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

இவர் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார். 2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் MA பட்டம் பெற்ற இவர் 2008ஆம் ஆண்டு PHD முடித்தார். பின்னர் 2008-2011களில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் சுரேன் ராகவனுக்கு வழங்கப்பட்டது.

கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினை வென்ற இவர், நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். அத்துடன் இவர் ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

பௌத்த சிந்தனைவாதியான இவர், பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள், பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை நினைவூட்டத்தக்கது.

Read more...

ஆபத்தான கம்பளிப்பூச்சி - எச்சரிக்கை செய்தி

சேனா கம்பளிப்பூச்சி வகையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

குறித்த சேனா கம்பளிப்பூச்சி வகை பயிர் செய்கையை பெருமளவில் பாதிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையை பேராதனை பல்கலைக்கழகம் தயாரித்து, விவசாய அமைச்சிடம் கையளித்துள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நைஜீரியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த கம்பளிப்பூச்சி, இலங்கையின் மூன்று மாவட்டங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஒரு வகையான இடைவிடாத வாசனையை கொண்டிருக்கும் இந்த வகை புழுக்கள் ஆபத்தானவை. இந்தப் புழு ஒரு தடவையில் 200 முட்டைகள் இடும். ஆரம்ப பருவத்தில் பச்சையாக இருக்கும் இந்த வகை கம்பளிப்பூச்சிகள், பின்னர் பழுப்பு நிறமாக மாற்றம் அடையும்.
இதன் உடல் முழுவதும் பருக்கள் போன்று காணப்படும். தலையின் கீழ் 'ய' எழுத்து போன்று வடிவம் காணப்படும். பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிக ஆபத்து வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இன்று முதல் மதீப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

வடக்கில் அண்மையில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த அறிவித்தலை கலாநிதி வீரக்கோன் தெரிவித்துள்ளார். இந்த பணிகளை விவசாய அமைச்சு அதிகாரிகள் மற்றும் காப்புறுதி பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டர் விவசாய நிலத்திற்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது. இந்த இழப்பீட்டு தொகை நியாயமான முறையில் வழங்கப்படும் என்றும் கலாநிதி வீரக்கோன் தெரிவித்தார்.

வடக்கில் அண்மையில் மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற பிரதேசஙளில் உள்ள பயிர் நிலங்கள் பெரும் சேதங்களை எதிர்நோக்கி இருப்பது சுட்டி காட்டப்பட்டுள்ளது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com