Saturday, January 5, 2019

திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்து வைத்தார் மைத்திரிபால சிறிசேன!

இலங்கை பௌத்த மக்களின் புனித நூலான திரிபீடகம் இன்று தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத் நிகழ்வானது ஜனாதிபதி தலைமையில் மாத்தளை அலுவிகாரையில் இடம் பெற்றது.

2500 வருடங்களாக பௌத்த தேரர்களினாலும் பௌத்த மக்களினாலும் பாதுகாக்கப்பட்டு வந்த இத் திரிபீடகமானது கௌதம புத்தரின் போதனைகளை உள்ளடக்கிய நூலாகும். இப் நூலினை பாதுகாக்கும் நோக்குடன் மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனை, வழிகாட்டால்களின் படி தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்படுகிறது.

உலகில் உள்ள புனித நூல்களில் திரிபீடகமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. திரிபீடகமானது முன்று பிரிவுகளான ஒழுக்க பீடகம், சுத்த பீடகம், அபிதம்ம பீடகம் ஆகியவற்றை கொண்டிருப்பதினாலேயே திரிபீடகம் எனும் நாமம் சூட்டப்பட்டுள்ளது.

மஹா சங்கத்தினரால் பேணப்பட்டு வந்த இத்திரிபீடகமானது முதன் முறையாக முதலாவது கிறிஸ்து வருடத்தில் மாத்தளை அலுவிகாரையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பின் 1956ம் ஆண்டு காலப்பகுதியில் முழுமையான நூலாக அச்சிடப்பட்டது. பாளி மொழியில் அமைந்துள்ள இந்நூலானது ஆரம்ப பௌத்த நம்பிக்கைகளை கொண்டதாக காணப்படுகிறது.

1500 த்திற்கு மேறப்பட்ட மஹா சங்கத்தினருடன் நிகழ்வு நடைபெற்ற அதேநேரம் நாடளாவிய ரீதியில் உள்ள விகாரைகளில் விசேட பூசைகள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரையை சேர்ந்த மகா நாயக்கர் வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அனுநாயக்கர் வண. நியங்கொட விஜத்தசிறி தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச மகா நாயக்க தேரர் உள்ளிட்ட நாடு பூராவும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகா சங்கத்தினர் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



Read more...

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில், சுற்றாடல் சார்ந்த பிரச்சனைகள் இல்லை - மின்சக்தி அமைச்சர் ரவி .

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் சுற்றாடல் ரீதியான எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த செயல்திட்டத்தில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் அது குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த பணிகளை திறன்பட செயல்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என குறிப்பிட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க, வெகு விரைவில் இந்த நிலையத்தின் பயனை மக்கள் அடையமுடியும் எனவும் கூறினார்.

தமது அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் , மின்னுற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

இது முக்கியமான மின்னுற்பத்தி நிலையம் என்பதுடன் நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு அதிகளவான அலகுகள் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.

தான் பதவியேற்றதுடன் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமையை ஆராய வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சார சபையின் செயற்றிறன் அடிப்படையில் இங்கிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு தெரிந்தவகையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Read more...

பரந்த கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்வோம் - மஹிந்த ராஜபக்ச.

அடுத்து வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் பரந்த கூட்டணியாக ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் .

இந்த பரந்த கூட்டணியில் சிறிலங்கா சுதந்திர கட்சியும் உள்ளடக்கப்படும் என, அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தான்டு கொண்டாட்டங்களை தமது அலுவலக காரியாலயத்தில் நடாத்திய பின்னர், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போதே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நாட்டு மக்களின் ஆதரவு எம்மிடமே உள்ளது. அந்த அதிகாரமே, எம்மை பலமான கூட்டணியாக்கியுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச வெகு விரைவில் மக்களின் விருப்பம் நிறைவேறும் எனவும் கூறினார்.

Read more...

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய நீதிமன்று அனுமதி.

ஜனாதிபதி மற்றும் பிரமுகர்கள் சிலரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக நாமல் குமார வெளியிட்ட ஒலிப்பதிவுகள் தொடர்பில் விசாரணை செய்துவரும் சீஐடி யினர் பொலிஸ் மா அதிபரின் நாமலுடனான உரையாடல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் பிரகாரம் பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள நீதிமன்றின் அனுமதியை இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்றேட் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வேண்டியதன் பிரகாரம் அதற்கான அனுமதியை நீதிமன்று வழங்கியுள்ளது.

நாமல் குமாரவின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகள் ஹொங்கொங் நகரிலுள்ள தொலைபேசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து பெற்றுவரப்பட்டது யாவரும் அறிந்ததே. இவ்வாறு பெற்றுவரப்பட்டுள்ள ஒலிப்பதிவுகளில் எதிர்பாராத ஒலிப்பதிவுகளும் அடங்கியுள்ளதாக சீஐடி தகவல்கள் தெரிவிக்கின்றது.

Read more...

கள்ள மண் ஏற்றிய பிரதேச சபை வாகனமும் சாரதியும் பொலிஸ் கூண்டில்..

மஹியங்கணை பிரதேசத்தில் சட்டவிரோமாக மணல் தோண்டி விற்கும் வியாபாரத்திற்கு பிரதேச சபை வாகனம் பயன்படுத்தப்பட்டமை கையும் களவுமாக மாட்டியுள்ளது.

பிரதேச சபை தவிசாளரின் உத்தரவின் பேரில் இடம்பெற்றுவந்த சட்ட விரோத செயற்பாட்டை முறியடித்த பொலிஸார் குறித்த வாகனத்தை சாரதியுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

வாகனம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது, அவ்வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், பொலிஸார் கடமையை நிறைவேற்றியுள்ளனர் என தெரியவருகின்றது.

மேற்படி பிரதேச சபை தவிசாளரால் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டு சட்ட விரோத வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Friday, January 4, 2019

தயாசிறியும், டிலானும் தமிழ் மக்களின் தீர்வுக்காக உழைத்தவர்கள். அவர்கள் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் . வேண்டுகிறார் சுமந்திரன்

"இதுவரைக்கும் அதிகாரப் பகிர்விற்கு ஆதரவாக குரல் கொடுத்து செயற்பட்டது போன்று தொடர்ந்தும் செயற்பட வேண்டுமென்றும், எல்லா முயற்சிகளுக்கும் உங்களுடைய ஆதரவை வழங்க கொடுக்க வேண்டுமென்றும் வினயமாகக் கேட்டுக் கொள்வதுடன், அரசியல் சூழ்ச்சியை நாங்கள் தடுத்த ஒரு காரணத்திற்காக உங்களுடைய கொள்கையை நீங்கள் தயவுசெய்து மாற்ற வேண்டாமென்றும் கோருகின்றோம்“ என்றும் ன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல், அழகுக்கலை பயிற்சியை பூர்த்தி செய்தவர்களிற்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று (4) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு சமஷ்டியை கொடுக்கவும் ஆதரவளிப்பதாகவும், தமிழர்களிற்கு அர்தமுள்ள அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமென்றும் கூறி வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய என்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்களும், நான் தமிழர்களின் அரசியல் தீர்வை குழப்புவதாக கூறுவது வேடிக்கையானது“ என்று எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றியபோது- “விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல விளையாட்டுகளிலே ஈடுபடுகிற பொழுது நெறிமுறைகளை அனுசரித்து தான் அந்த விளையாட்டுகளிலே ஈடுபடுகிறோம். எல்லா விளையாட்டுக்களிலும் சில சட்டதிட்டங்கள் உண்டு. அதற்கமைய அந்த நெறிகளைப் பின்பற்றாமல் ஒரு விளையாட்டிலும் பங்கு பற்ற முடியாது. இல்லா விட்டால் அது விளையாட்டாகவே இருக்காது. அப்படிச் செய்கிற போது அதிலே நடுவர்களும் இருப்பார்கள். அந்த நடுவர்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவங்கள் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒவ்வொருக்கம் இருக்க வேண்டும்.
ஆனாலும் நடுவரும் விதிமுறைகளின் அடிப்படையில் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அதைவிடுத்து நடுவரும் தான் நினைத்தபடி தீர்ப்பைச் சொல்ல முடியாது.

விதிமுறையொன்று இருந்தால் அது அனுசரிக்கப்பட வேண்டும். அதனை மீறினால் மீறியதாக நடுவரே சொல்லுவார். ஆனால் அதில் நடுவரே விதிமுறைகளை மீறீனால் அது மிகவும் ஆபத்தானதொரு சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும்.

எங்களுடைய நாட்டிலே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் நடந்தது அது தான். எப்படியாக ஆட்சி முறைகள் நடைபெற வேண்டுமென்று விதிமுறைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அதற்கு அரசமைப்பு என்று இருக்கின்றது. ஐனநாயகப் படிமுறைகளுக்க அமைவாக என்னென்ன வழியாக எவரெவர் பதிவிகளில் அமர்த்தப்பட வேண்டும். அவர்கள் எப்பொழுது பதவிகளில் இருந்து நீக்கப்படலாம், எப்பொழுது கலைக்கப்படலாம் என்றெல்லாம் தெட்டத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

அதனை எவரெவர் நடைமுறைப்படுத்த முடியுமென்பதையும் அவர்களுக்குரிய அதிகாரங்கள் என்ன என்பதும் அங்கே எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் அவை மீறப்பட்ட சம்பவங்களை எங்களுடைய நாட்டில் ஒக்ரோபர் 26 ஆம் திகதியிலிருந்து காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு மீறப்பட்ட போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது.

ஒரு விளையாட்டிலோ அல்லது விளையாட்டுப் போட்டியிலோ நடைமுறை அல்லது விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கபட வேண்டியது அத்தியாவசியம். ஏனென்றால் அது அந்தவேளையிலே சீர் செய்யப்படாவிட்டால் அதற்குப் பிறகு விதிமுறையென்ற ஒன்று இருப்பது தேவையற்ற விடயமாகப் போய்விடும்.

ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு என்பதும் தேவையற்றதொன்றாக மாறிவிடும். அதற்கு நாங்கள் இடங்கொடுக்க முடியாது. ஐனநாயகம் பேணப்பட வேண்டுமாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி நாட்டிலே இருக்க வேண்டுமாக இருந்தால் எழுதப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது.

அதனை மீறுகிற பொழுது அதற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க முடியுமென்றும் அந்த விதிமுறைகளில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கமைய அந்த நடவடிக்கைகளை நாங்கள் முன்நின்று எடுத்தோம். அது அத்தியாவசியமான அடிப்படைச் செயற்பாடு. அதைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையிலே சுமத்தப்பட்டிருந்தது. அதனை நாங்கள் செவ்வனவே நிறைவேற்றியிருக்கின்றோம்.

ஆனால் அதனை நாங்கள் நிறைவேற்றிய காரணத்தினாலே சிலருக்கு ஒரு கசப்பு ஏற்பட்டிருக்கிறது. தவறான வழிகளிலே பதவிகளைக் கைப்பற்ற முனைந்தவர்கள், ஐனநாயக விரோதச் செயற்பாடுகளிலே ஈடுபட்டவர்கள், நாடாளுமன்றத்திலே பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அதிகாரத்திலே நிலைத்திருக்க விரும்பியவர்கள் நீதிமன்றங்களின் ஊடாக அவர்கள் தடுக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது.

அந்த மன உளைச்சலின் வெளிப்பாடுகளை அண்மைய நாட்களில் நாங்கள் காணக்கூடியதாகவும் இருக்கிறது. நானும் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளைப் பார்க்கின்றபோது சுமந்திரன் சுமந்திரன் என்று பலருடைய விமர்சனங்கள் நாளாந்தம் வந்து கொண்டிருக்கின்றது. அதற்கு ஒரே ஒரு காரணம்- விதிமுறைகள் மீறப்பட்ட பொழுது அதனைத் தட்டிக் கேட்டது தான். தவறாகச் செயற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியாதது தான் அதற்காண காரணங்களாக இருக்கின்றன.

ஆகையனாலே அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்று சொன்னால் எதையாவது பேச வேண்டுமென்பதற்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது. ஆனால் இன்று காலை பத்திரிகைகளின் முதற் பக்கங்களில் என்னுடைய நண்பர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் சில கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றனர்.

ஆகவே அதற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் நான் சொன்னதைப் போல அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அரசியலிலே நண்பர்களும் கிடையாது. எதிரிகளும் கிடையாது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த இருவரையும் நண்பர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் என்று அழைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கின்றது.

இந்த நாட்டிலே அதிகாரப் பகிர்வு சரியான முறையிலே செய்யப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கும் அரசியல் அதிகாரங்கள் சரியான முறையிலே கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிலே நிலைத்து நிற்கின்றவர்கள் இவர்கள் இருவரும் தான். எப்போதெல்லாம் அதிகாரப் பகிர்வு சம்மந்தமான பிரச்சனை எழுகின்ற போதும் அதற்கு அதரவாக குரல் கொடுக்கின்றவர்களும் இவர்கள் இருவரும் தான்.

சந்திரிக்கா அம்மையாருடைய காலத்திலே வெள்ளைத் தாமரை இயக்கமென்று சொல்லி அவர் அதிகாரப் பகிர்வு சம்மந்தமான பிரச்சாரத்திலே முன்னின்று செயற்பட்டவர் டிலான் பெரேரா. அந்தக் காலத்திலே பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் உதவியாளனாக அதிகாரப் பகிர்விற்காக உழைத்தவர் தயாசிறி ஜயசேகரா. அன்றிலிருந்து இன்று வரைக்கும் அதிகாரப் பகிர்வு கிரமமாக சரியானதாக அர்த்தமுள்ள முறையிலே செய்யப்பட வேண்டுமென்று விரும்பியவர்கள்.

புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்த போது அது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போதும் இவர்கள் இருவரும் பயனுள்ள உரைகளை ஆற்றியிருக்கின்றார்கள். அதிலும் டிலான் பெரேரா சமஷ்டி என்று சொல்லப்பட்டால் நான் அதற்கு ஆதரவும் கொடுப்பேன். ஆனால் அப்படியாகச் சொல்லப்படவிட்டாலும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இருக்கு என்று பேசிய ஒரேயொரு சிங்கள அரசியல் வாதி.

ஆனால் நேற்றைய தினம் இவர்கள் இருவரும் நாட்டிலே புதிய அரசமைப்பு உருவாகுவதை சுமந்திரன் தன்னுடைய அவசரத்தினாலே குழப்புகின்றார் என்றதொரு கருத்தினை சொல்லியிருக்கின்றார்கள். தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் காலத்திலே இது செய்யப்பட முடியாது என்ற தோரணையிலும் அப்படிச் செய்ய முடியாமல் போய் விட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சியென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்யப் போகிறது என்றும் அவர்கள் கனவு கண்டு ஒரு பெரிய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.

ஆகையினால் அவர்களுக்கு நான் ஒரு விடயத்தைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். அதாவது இதுவரைக்கும் முறையான அதிகாரப் பகிர்விற்கு ஆதரவாக நீங்கள் செயற்பட்ட அதே விதமாக தொடர்ந்தும் நீங்கள் செயற்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். அதனையே உங்களிடத்தே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நான் உங்களோடு முரண்பட விரும்பவில்லை.
ஆகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே இருக்கின்ற மிக முற்போக்கான நீங்கள் இருவரும் அதிகாரப் பகிர்விற்காக குரல் கொடுத்து அது காலதாமதம் இல்லாமல் நிறைவேறுவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் உங்களுடைய ஆதரவையும் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

அதை எப்படியாகச் செய்து முடிக்க வெண்டும் என்பதைக் குறித்து உங்களை வெளியே விட்டு நாங்கள் செயற்பட விரும்பவில்லை. உங்களுடனும் பேசித் தான் இவற்றைச் செய்ய விரும்புகின்றோம். ஆகையினாலே நாட்டிலே ஏற்பட்ட இந்த அரசியல் சூழ்ச்சியை வெற்றியடைய விடாமல் நாங்கள் தடுத்த ஒரு காரணத்திற்காக நீங்கள் உங்களுடைய கொள்கையை தயவு செய்து மாற்ற வேண்டாம்“ என்று தெரிவித்தார்..

Read more...

ஜமால் கொலை குறித்த சவுதியின் விசாரணை: ஐ.நா.விமர்சனம்

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சவுதியில் நடக்கும் விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல் இல்லை என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவினா கூறும்போது, ”ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 சவுதி அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருக்கிறார். சவுதியில் இந்த விசாரணை முறையானதாக நடைபெறுகிறதா? என்ற தகவலை இதுவரை பெற முடியவில்லை.

சவுதியில் நடக்கும் இந்த சுதந்திரமான விசாரணை சர்வதேச அளவிலான தலையீடுகளுடன் நடக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் மரண தண்டனையை விரும்பாது” என்று தெரிவித்துள்ளார்.

ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

இந்த நிலையில் அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகம்து பில் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது.

முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. ஆனால் இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறிய சவுதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.


நன்றி பிபிசி

Read more...

நாமல் குமாரவின் வாய்க்கு போட்டது நீதிமன்று போட்டது பூட்டு. போலி சான்றிதழ் உண்மை.

ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்து நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றையே ஏற்படுத்தியிருந்தார் நாமல் குமார எனப்படும் நபர்.

மேற்படி சதி தொடர்பாக தொடர்சியாக அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுவந்த நிலையில், இன்றிலிருந்து மேற்படி சதிகள் தொடர்பாக அவர் பொது இடங்களிலோ அன்றில் ஊடகங்களுக்கோ கருத்து வெளியிடக்கூடாது என நீதிமன்று தடை உத்தரவு விதித்துள்ளது.

பிரமுகர்கள் கொலைச் சதி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று நீதிமன்றில் விடுத்த வேண்டுதலை அடுத்தே நீதிமன்று இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாமல் குமார தொடர்ந்தும் மேற்படி கொலை சதி தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுவருவதானது விசாரணைகளுக்கு தடையாகவுள்ளதாக சீஐடி யினர் மன்றுக்கு தெரியப்படுத்தினர்.

இதேநேரம், நாமல் குமார விமானப்படையில் இணைவதற்கு போலிக் கல்விச் சான்றுதலை வழங்கியதாக சீஐடி யினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாமல் குமாரா தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தான் போலிச் சான்றுதழ் வழங்கியது உண்மை என்றும் அதற்காக தனக்கு நீதிமன்று எந்த தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறைப் பகுதியிலுள்ள கிராமப் பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற நாமல்குமார க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 3 பாடங்களே சித்தியடைந்திருந்த நிலையில், எட்டுப்பாடங்களும் சித்தியடைந்துள்ளதாக போலிச் சான்றிதழ் தயாரித்து 2010 ம் ஆண்டு விமானப்படையில் இணைந்துள்ளார்.

பின்னர் 2012 விமானப்படையிலிருந்து விலகி இலங்கை இராணுவத்தின் பொறியில் பிரிவில் இணைந்து ஒன்றரை வருடங்கள் சேவை செய்துவிட்டு இராணுவத்தை விட்டு தப்பியோடியவர் என்று தகல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இவை அனைத்துக்கும் நாமல் குமார தண்டனை பெறலாம் என நம்பப்படுகின்றது.

Read more...

பொன்சேகாவுக்கு பீல்ட மார்ஷல் கொடுத்ததே மைத்திரி விட்ட மாபெரும் தவறு. பாலித்த தேவாரப்பெரும

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய தவறொன்றை புரிந்துவிட்டதாக அமைச்சர் பாலித்த தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார். சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற பாலித்த தெவரப்பெரும, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து வெளியிட்ட கருத்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவை ''பீல்ட் மார்ஷல்'' என்று தரம் உயர்த்தியமை மிகப்பெரும் தவறு என கூறிய பாலித்த தெவரப்பெரும, பீல்ட் மார்ஷலுக்குரிய எந்தவித தகைமையும் சரத் பொன்சேகாவிடம் இல்லையெனவும் தெரிவித்தார்.

அத்துடன் சரத் பொன்சேகா இலங்கையின் ஜனாதிபதியாக நியமிக்கப்படாமை, இலங்கையின் அதிஷ்ட்டமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் சரத் பொன்சேகாவினால் 400 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததாக அமைச்சர் பாலித்த தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமது கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம், மக்களுக்கு பெரும் ஆபத்தை தரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது சரத் பொன்சேகா, தமக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லையென, அதிருப்தி அடைந்துள்ளார். அத்துடன் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என பலர் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் பாலித்த தெவரப்பெரும, வேண்டுமானால் தமது அமைச்சு பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க முடியும் என கேலியாக குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இந்த ஆண்டுக்கான பாதீட்டின் இலக்கு.

இந்த ஆண்டு முன்வைக்கப்படவுள்ள பாதீடு, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான அரச நிதியை பலப்படுவதை இலக்காக கொண்டே முன்வைக்கப்படும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படவுள்ள நிலையில், நிதியமைச்சு இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு சிறப்பான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சு, அந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாவும் கூறியது.

அரசாங்கத்தின் வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியில் 17 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துக் கொள்வதற்கான யோசனையும், இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் மீண்டுவரும் செலவுகளை மொத்த தேசிய உற்பத்தியில் 15 சதவீதத்திற்கு மட்டுப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் முதலீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதத்தை பேணுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் நிதி நிலையை பலப்படுத்துவதாக அமையுமென நிதியமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்த சட்டமூலம், எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

19 இன் பின்னும், ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளதா?

இலங்கையில் அண்மைக்காலமாக ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, முக்கிய நியமனங்ளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பல எதிர்ப்புக்களின் மத்தியில் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், 19 ஆம் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து விட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். மறுபக்கம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்த இந்த திருத்தம், உடன் நீக்கப்பட வேண்டும் என, பிறிதொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த பரபரப்பை தாண்டி, தற்போது நாட்டின் ஜனாதிபதி அமைச்சர்களுக்கான விடையதானங்களை ஒதுக்குவதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு உரிய விடயதானங்கள் வழங்கப்படவில்லை என்று பரவலாக செய்திகள் வெளியாகின. எனினும் இது குறித்து தாம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பற்றிய பல கேள்விகள் எம் மத்தியில் எழுக்கின்றன. 19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதியிலும், இன்று வரை ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி வருவதாக அறியமுடிகிறது.


அரசமைப்பின் 43 ஆவது உறுப்புரையில், இது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி காலத்துக்கு காலம், பிரதமரின் கலந்தாலோசனையுடன், தாம் அவசியமென கருதினால் அமைச்சரவை எண்ணிக்கை, அமைச்சர்களின் விடையதானங்கள், உள்ளிட்ட தீர்மானகளை தீர்மானிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அமைச்சரவை தீர்மானங்கள் பற்றி, பிராமருடன் ஜனாதிபதி கலந்தாலோசனை செய்ய வேண்டும் என கூறப்பட்டாலும், அது ''அவசியப்பட்டால்'' மட்டுமே என்ற ஒரு பதம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 43 ஆவது உப பிரிவில், ஜனாதிபதி எந்த நேரத்திலும் அமைச்சரவையின் விடயங்களின், பணிகளினதும் குறித்தொதுக்குதல்களை மாற்ற முடையும் என கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் தமது அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என 19 ஆம் திருத்தத்திலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த அதிகாரங்களை கொண்டே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது அமைச்சரவை விடையதானங்கள் உள்ளிட்ட விடயங்களில் தமது அதிகார பலத்தை காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அரசியல் அமைப்பின் 19 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்ட போதிலும், சில முக்கிய தீர்மானங்களின் போது, தீர்மானம் எடுக்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

சிறார்கள் தொற்றா நோய்க்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்து வருகின்றது. சுகாதாரத்துறை எச்சரிக்கை

நாட்டிலுள்ள சிறார்கள் பலர், தொற்றா நோய்க்கு உள்ளாகும் நிலை தற்போது அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டிலுள்ள பல சிறார்களிடம் இது குறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக, சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பாடசாலை மாணவர்களில் 13 வயது முதல் 16 வயதான மாணவர்களை அடிப்படையாக கொண்டு, இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் திலக் ஸ்ரீவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த மாணவர்களில் சுமார் 20 சதவீதமானவர்கள் எந்தவித உடற்பயிற்சியும் இன்றி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் இது குறித்து தாம் அதிக கவனம் செலுத்துவதாகவும், தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் திலக் ஸ்ரீவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு தொடர்பான விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

புதிய ஆளுநர்கள் பதவியேற்றனர். கிழக்கை ஆளப்போகின்றார் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அதன்படி மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி, மத்திய மாகாண ஆளுநராக சத்தேந்திர மைத்ரி குணரத்னவும், வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்கவும், வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன பண்டாரவும், கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஓன்பது மாகாணங்களுக்குமான முன்னாள் ஆளுநர்களிடம் ஜனாதிபதி ராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஐவர் இன்று நியமனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியவருகின்றபோதும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சார்பான ஒருவரை நியமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் அறியக்கிடைக்கின்றது.






Read more...

ஐஸ் கிரீம் தந்த பொட்டம்மான்.

கருணாவின் திருமணம் வன்னியில் பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் ஒரு கொலையை கொண்டாடும் பொருட்டு அங்கிருந்தவர்களுக்கு ஐஸ் கிறீம் பெட்டி ஒன்றை கொடுத்ததாக பிள்ளையானால் எழுதப்பட்டுள்ள வேட்கை என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்புத்தகத்தில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நான் 1993ஆம் ஆண்டுதான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் சென்றேன். பின்னர் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி,வன்னி பிரதேசங்களிலும் நான் பல வருடங்களை கழித்துள்ளேன். கருணாம்மானின் திருமணம் கூட இங்குதான் நடைபெற்றது. அப்போது நான் கருணாம்மானுக்கு நெருங்கிய அணியில் இருந்தேன். அவரது கட்டளையின் கீழியங்கும் பல வேலைகளை மேற்பார்வைசெய்வதும் எனது பணிகளில் ஒன்றாயிருந்தது. அந்த வேளையில்தான் கருணாம்மானின் திருமணம் நடைபெற்றது. கிழக்குபோராளிகளை ஒருங்கிணைத்து ஜெயந்தன் படையணி ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில நாட்களின் பின்னரே அம்மானின் திருமணமும் இடம்பெற்றது என்பது ஞாபகம்.

தலைவர் தலைமையில் அவரது கையாலே தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடைபெற்றது. எல்லோருக்கும் விருந்து நடைபெற்று கொண்டிருந்தது. தலைவர் பிரபாகரனும் பொட்டம்மானும் ஏனைய தளபதிகள் அனைவரோடும் இருந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அவ்வேளையில்தான் பொட்டம்மானுக்கு செய்தி தொடர்பு ஒன்று வந்தது. அவர் சற்று வெளியேறி தகவலறிந்து கொண்டு வந்து தலைவரின் காதுக்குள் ஒரு இரகசிய செய்தி சொன்னார். பின்னர் அவரே ஐஸ் கிரீம் கப்புகள் நிறைந்த பெரியதொரு தட்டினை தூக்கிக்கொண்டு எங்களிடம் வந்தார்.

"இன்று ஒரு சந்தோசமான நாள் தேவையான ஐஸ் கிரீம் சாப்பிடுங்கோ" என்கிறார். நானும் மேலதிகமாக இன்னுமொரு ஐஸ்கிரீமை பொட்டம்மானின் தட்டிலிருந்து எடுத்துக்கொண்டேன்.

இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கரும்புலித்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது அதன்பின்னர்தான் தெரிந்தது. அது ஒரு மே தின நாள்.

Read more...

சீலரத்ன தேரரும் நிவாரணப் பொதிகளுடன் கிளிநொச்சியில்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் முண்டியடித்து உதவி வருவது யாவரும் அறிந்தது.

அவ்வாறு முண்டியடிப்பவர்களில் பெரும்பாலானோர், அரசியல் பிரச்சாரமாகவே அக்கருமத்தை மேற்கொள்ளும் இத்தருணத்தில் பௌத்த துறவியான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் இன்று பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

உலர் உணவுப் பொதிகளுடன் சென்ற அவர் அங்கு குழுமியிருந்த மக்களுடன் பேசுகையில்,

இங்குள்ள மக்கள் இத்தனை கஷ்டங்களை சுமந்தவர்களாக வாழ்கையில், இம்மக்களின் வாக்குகளில் தெரிவான பிரதிநிதிகள் என்னதான் செய்கின்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கு ,மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுபினர்களின் பிள்ளைகள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நல்ல கல்லூரிகளில் கல்வி கற்கின்றார்கள், ஆனால் அந்த வசதியை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் மக்களது பிள்ளைகளை இவர்கள் திரும்பியும் பார்கிறார்கள் இல்லை எனக் கூறியுள்ளார்.








Read more...

அம்மையாரை சீண்டுகிறார் S .B - அந்தரிக்கும் கொழும்பு

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் அமைப்பாளர் பதவியை நீக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் பொருளாளர் எஸ்.பீ. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்தத் தகவலை கூறினார். குறித்த அமைப்பாளர்களுடன் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைபட்டு, இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

மொட்டுக்கு தாவினார்கள் 4 பேர் - ஆட்டம் கண்டது சுதந்தர கட்சி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நால்வரும் மொரட்டுவ மாநகர சபையில் தம்மை இணைத்து கொண்டுள்ளதாக குறித்த தகவல் குறிப்பிட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 23 உறுப்பினர்களைக் கொண்ட மொரட்டுவ மாநகரசபையில், தற்போது இவர்களின் இணைவுடன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது மொரட்டுவ மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சியின் 16 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 4 உறுப்பினர்களும் சுயேட்சை குழுவின் உறுப்பினர் ஒருவரும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சரத் பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி - கசிந்தது தகவல்

நாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி ஒன்று வழங்கும் வாய்ப்பு உள்ளதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் நகரில் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. தற்போது 30 அமைச்சர்கள் என்ற மட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்த நிலையில் அமைச்சர்களின் எண்ணைக்கையை 32 ஆக அதிகரிக்க, சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Read more...

கொஹாகொட குப்பைமேட்டு விடயத்தில் ஜனாதிபதி விசேட கவனம் - மக்களின் குற்றச்சாட்டுக்களுக்கு விடிவு கிடைக்குமா?

கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டு விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 2017 ம் ஆண்டு மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்த சம்பவம் முழு இலங்கையும் அதிர வைத்திருந்தது. இந்த மாதிரியான
அசம்பாவிதங்கள் மீண்டும் நாட்டில் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டு விடயத்தில் துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

கொஹாகொட கழிவு முகாமைத்துவத்தின் நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல் தொடர்பில், நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கண்டி நகரசபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் குப்பைகளை வௌியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேட்டினால் அந்த பகுதியில் வசிக்கும் பொருளாதார நிலையில் நிறைந்தசவால்களை எதிர்நோக்கி வாழும் அப்பகுதி மக்கள், இந்த குப்பை மேடு தொடர்பில் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில் இந்த குப்பைமேடு தொடர்பில் தற்போது ஜனாதிபதி தலையிட்டு, குப்பைகளை மீள்சுழற்சி முறையொன்றினூடாக வௌியேற்றுவதற்கான வேலைத்திட்டமொன்ற செயற்படுத்துமாறு நகரசபை மற்றும் மாகாணசபைகளை பணித்துள்ளார். இந்த வேலை திட்டத்தை முன்னெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.


Read more...

Thursday, January 3, 2019

ஜெனிவாவில் மங்கள மேற்கொண்ட காட்டிக்கொடுப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சஜித் பிறேமதாஸ

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகவோ அல்லது எமது நாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் தலைவர்களில் ஒருவரான சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார்.

உலக இலங்கையர் பேரவையைச் சேர்ந்ததோர் சஜித் பிறேமதாஸ நேற்று முன்னதினம் 1 திகதி சந்தித்துப் பேசியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில், பேரவையின் பிரதானிகளில் ஒருவரான பயஸ் தர்மதாஸ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிறேமதாஸவின் மேற்படி கூற்று தொடர்பில் தமது திருப்தியை வெளியிட்டுள்ளார்.

சஜித்தின் மேற்படி திடமான கூற்றானது மங்கள ஜெனிவாவில் மேற்கொண்ட விடயத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

கோத்தாவின் வழக்கு எதிர்வரும் 11 ம் திகதிக்கு ஒத்தி.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபே ராஜபக்ஸ உட்பட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்விசாரணைக்காக எதிர்வரும் 11ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் மெதமுலன வீரகெடிய பிரதேசத்தில் டி.எ.ராஜபக்ஸ நினைவு நூதன சாலையின் கட்டுமான பணிக்காக அரச நிதியிலிருந்து கிட்டதட்ட 34 மில்லியன் செலவிட்டப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டின் அடிப்படையில் முன்னால் பாதுகாப்பு செயலாளர் உட்பட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரச உடமையை தவறாக பயன்படுத்தினார்கள் என்ற பாரிய குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் அலி சப்ரி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்குமாறும் குறித்த ஆவணங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணை செய்ய குறித்த வழக்கை 11 ஆம் திகதி ஒத்துவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றை வழக்கிற்கு பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷ சமூகமளிக்கவில்லை எனவும் கடந்த வழங்கின் போது வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் அவர் வெ ளிநாடு சென்றுள்ளதாகவும் பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Read more...

தொழிற்சங்கத்தினரின் ஜனாநாயக உரிமையை தடுக்கக்கோரி பிரத முகாமையாளர் கோப்பாய் பொலிஸில்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் மேற்கொள்ளவுள்ள பாரிய தொழிற்சங்க போராட்டங்களை தடுத்து நிறுத்துமாறு, வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத் தலைவர் அருளானந்தம் அருட்பிரகாஷிற்கு எதிராக கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதம முகாமையாளர் கே.கேதீசனால் நேற்றைய தினம் (02) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் கோப்பாய்ப் பொலிஸாரால் வரவழைக்கப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணையின் இறுதியில் பொலிஸார் தெரிவிக்கையில்,

பொலிஸ் இராணுவம் கடற்படை தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுபடுவதற்கு அனுகூலமான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது உங்களுக்கான கொடையாகும்.

நீங்கள் முன்னறிவித்தலுடன் போராட்டம் செய்கின்றீர்கள். தகுந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றீர்கள். எனவே நீங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸ் தரப்பிலிருந்து நாங்கள் எவ்விதமான இடையூறுகளையும் மேற்கொள்ள மாட்டோம்.

ஆனால் மக்களுக்கான சேவையினை செய்வதற்கு மனம் விரும்பி வருகின்ற சாரதி காப்பாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் விடுக்கப்படக் கூடாது எனவும் ஆலோசனை வழங்கினர்.

தொழிற்சங்கத் தலைவர் என்ற வகையில் நாளை(4) மேற்கொள்ளவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு எவரையும் அச்சுறுத்தி அறைகூவல் விடுக்கவில்லை என போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத் தலைவர் அருளானந்தம் அருட்பிரகாஷ் பொலிஸாருக்குப் பதிலளித்தார்.

Read more...

சிறையிலடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் முதுகில் டக்கிளசும் ஏறுகின்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் விளைவாக, தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படும் நிலை ஏற்படலாம் என E.P.D.P யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த குழப்பக்கர சூழ்நிலையில் இருந்து எமது மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் தலைமைகளிடமும் இருக்க வேண்டும் என, E.P.D.P செயலாளர் நாயகம் கோரிக்கை முன்வைத்துள்ளார். தாம் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் பயங்கரவாதிகளின் விடுதலை மட்டுமன்றி, தமிழ்மக்களின் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் தீர்வு காண E.P.D.P முடிந்தவரை முயற்சிக்கும் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும், பொறுப்புடன் செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read more...

வடக்கு கல்வி, பெரும் அபாயத்தில் உள்ளது!

வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்கும் போது, அரசியல் தலையீடுகள் அதிகளவில் காணப்படுவதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலை வட மாகாணத்தில் தொடருமாக இருந்தால், வடக்கு கல்வி பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என, அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வட மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரிய சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் அதிகளவில் உள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, வட மாகாண கல்வி திணைக்களத்திடமும், வட மாகாண கல்வி அமைச்சிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளதாக, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் வாடா மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டதுடன், பல பரீட்சைகள் நடத்தப்பட்டன. எனினும் அந்த நியமங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. அத்துடன் ஆசிரிய நியமனங்களை முன்னெடுக்கும் போது, தகுதியில்லாத சிலருக்கும் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

அரசியல் தலையீடுகளையும் தாண்டி, உயர்நிலை அதிகாரிகளும், பொருளாதார முக்கியஸ்தர்களும் சில ஆசிரிய நியமனங்களை தீர்மானிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து பல ஆசிரியர்கள், உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Read more...

2018 போன்றே 2019 அமையும் - பசில் ராஜபக்சவின் எதிர்வுகூறல்!

சிறிலங்கா பொதுஜன பெரமுன, எந்த கட்சியுடனும் இணைவதற்கு தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களிடம் கருத்துரைத்த போதே, பஷில் ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டு தேர்தலுக்கான காலமென பொதுஜன பெரமுன எதிர்வு கூறியது. அதேபோன்று தேர்தல் இடம்பெற்று நாங்கள் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டோம். அதே போன்று 2019 ஆம் ஆண்டும் தேர்தலுக்கான ஆண்டாகவே அமையப்போவதாகவும், இந்த ஆண்டிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகப்பெரும் வெற்றியடையும் என, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ எதிர்வு கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மக்களுக்கு தேவையான ஒரு அரசாங்கத்தை அமைத்து, லஞ்சம், ஊழலை இல்லாதொழிப்பதுடன் சமாதானமாக பயணிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.,

இந்த ஆண்டும் அனைத்து மக்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவளிப்பார்கள் என நம்மிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி எமக்கே கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். இந்த வெற்றி கூட்டணியில் பெரமுனவுடன் யார் வந்து இணைந்தாலும், அவர்களுடன் சேர்ந்து பயணிக்க, தாம் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com