Thursday, January 3, 2019

விரிவாக ஆராய வேண்டிய அவசியம் இல்லை - மாவை சேனாதிராஜா.

அண்மைக் காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த பிரச்சினை உள்ள நிலையில், தற்போது இரட்டை பிரஜாவுரிமை தொடர்பிலான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினtர்கள் பலர் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பதாக, பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எந்த உறுப்பினரும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பதாக தாம் இதுவரை அறிந்திருக்கவில்லை என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமை குறித்து கூட்டு எதிரணியைச் சேர்ந்த சிசிர ஜெயக்கொடி, குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஆனால் அவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாரும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை என தெரிவித்த மாவை சேனாதிராஜா, இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமானால் ஆதாரங்களை முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் இத்தகைய போலியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், விரிவாக ஆராய வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Read more...

முன்னாள் நிதியமைச்சருக்கும், இந்நாள் நிதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், மின்சக்தி, வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாயக்காவிற்கும் இடையில், கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவித்துள்ளன.

நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே, இவ்விருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த மாதம் 15 ஆம் திகதி பாரிய கடனை செலுத்தி முடிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளதாக கூறினார். இந்த கடன் தொகை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், பெறப்பட்ட கடனாகும். இந்த கடன் தொகையின் 83 சதவீதம் மஹிந்த தரப்பினர் பெற்றது என கூறிய மங்கள சமரவீர, இந்த கடனை செலுத்த தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக கடனை பெற தீர்மானித்துள்ளதாக, தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட மின்சக்தி, வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய சேமிப்பு வங்கியில் கடனை பெற்றால், நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பிரச்னை ஏற்படும், எனவும் அந்த தீர்மானத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும் எனவும் கூறினார். இதனை அடுத்து அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதேநேரம் சுகாதாரா அமைசர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிடுகையில், நிதி அமைச்சர் ஒருவர் இருக்கும் போது, அவரது செயல்பாடுகளை விமர்சிப்பது முறையற்ற நடவடிக்கை எனவும், நிதியமைச்சரின் தீர்மானத்திற்கமைய செயல்படுமாறும் கோரினார்.

Read more...

முதலில் ஜனாதிபதி தேர்தலா? அல்லது பாராளுமன்ற தேர்தலா? - ஐக்கிய தேசிய கட்சி.

தற்போதைய அரசாங்கத்தின் பலம், தேர்தலுக்கு பின்னரே நிரூபிக்கப்படும் என, பொது எதிரணி சூளுரைத்து வருகிறது. எனினும் தேர்தலில் அமோக வெற்றியுடன், அடுத்த ஆண்டும் நாமே ஆட்சியை அமைப்போம் என, இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டில் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என கூறிய நளின் பண்டார, மக்கள் அதற்கான ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் கூறினார். அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென, சிலர் கூறி வருகின்றனர். அதனாலேயே ஐக்கிய தேசிய கட்சி, தேர்தலை நடத்த விரும்பவில்லையென்றும் அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஆனால் தேர்தலை நடத்துவது குறித்து எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மக்களின் பலத்தை பெற்ற எமக்கு, தேர்தலின் பின்னர் அதிகார பலத்தை பெறுவது சுலபமான காரியம் என, நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலர், தற்போது அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்க தயாராகவுள்ளனர். எனவே இந்த பலத்தை கொண்டு, நிச்சயமாக தேர்தலில் பாரிய வெற்றியை எம்மால் பெற முடியுமென, இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Read more...

மஹிந்தவை தமிழ் தேசியக் கூட்டமைப்பே சிதைத்தது. அழுகின்றார் டிலான்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டமான ஒக்டோபர் 26 ஐ, நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் வசந்த பெரேராவுடன் தானும் சேர்ந்தே கொண்டுவந்ததாக தெரிவித்த டிலான் பெரேரா, அந்த முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைத்து விட்டதாக குற்றம் சுமத்தினார்.

இந்த திட்டத்தை இல்லாதொழித்தமையினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்திய பலர், எம்முடன் இணைய தயாராக இருந்தனர். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு பலத்தை வழங்கியமையினால், ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகி, எமது கட்சிக்கு வரப்போவதாக கூறிய பலர் கடைசி நேரத்தில் வராமல் போயுள்ளதாக டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த தரப்பினரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனமை குறித்து , விளக்கமளிக்கும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு கூறினார். நாட்டு மக்களின் நலனுக்காகவே, தான் உள்ளிட்ட நால்வரும் மஹந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு குறுக்கிட்டு எல்லாவற்றையும் குழப்பி விட்டதாக, டிலான் பெரேரா கூறியுள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த குழப்பத்தை விளைவித்ததால், தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நன்மை ஏற்பட போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பு உண்மையில் இந்த நியமன விடயத்தில் நடுநிலையாகவே இருந்திருக்க  வேண்டும். அப்படி நடுநிலையாக இருந்திருந்தால், எமக்கு வெற்றி கிட்டியிருக்குமென டிலான் பெரேரா கூறியுள்ளார்.

தற்போது புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என, ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்  தேசிய கூட்டமைப்பும், வலியுறுத்தி வருகின்றன. எனினும் புதிய அரசியலலமைப்புக்கு ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் ஆதரவும் அவசியமாகும். நாம் ஒரு போதும் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லையென, டிலான் பெரேரா கூறியுள்ளார்.

எமது ஆட்சிக்கு தடையாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு  வெகு விரைவில் வீடு திரும்பும் என, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

Read more...

வருட முடிவுக்குள் தடையவியல் பரிசோதனை நிறைவுபெறும்

2019 ம் ஆண்டுக்குள் முறி விநியோக மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் தடையவியல் பரிசோதனை நிறைவு செய்யப்படும் என, மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிணை முறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படும் தடையவியல் பரிசோதனைகளை துரிதமாக நிறைவுறுத்தும்படி முன்னதாக மத்திய வங்கியின் ஆளுநருக்கு அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய குறித்த தடையவியல் பரிசோதனை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

நாடாளுமன்றம் தீர்மானிக்கவேண்டாம் - மக்கள் முடிவெடுக்கட்டும் - அனுரகுமார

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, 20 ஆம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு உரித்தான நிறைவேற்று முறையினை நீக்கும்20 ஆம் திருத்தச்சட்டம் குறித்து, பிரதமர் தனது அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. பிரதமர் யார் என்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட இன்றைய நிலையில் ரணில் விக்கிரமசிங்க 20 ம் திருத்த சட்டம் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என்று நாடாளுமன்றில் நாம் அழுத்தம் கொடுக்கவுள்ளோம்.

20 ஆம் திருத்தச்சட்டம், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று அதன் அறிவுறுத்தல்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, குறித்த அறிவுலுத்தல்களில் அவதானம் செலுத்தி, நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் தொடர்சியாக நாடாளுமன்றில் பெரும்பான்மையைப் பெற நாம் முயற்சிப்போம். இந்த விடயத்தை செயற்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே சர்வஜன வாக்கெடுப்பிற்கு சென்றால் நல்லது என்றே நாம் கருதுகிறோம். மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை இதனூடாக நாம் அறிந்து கொள்ளமுடியும். அத்துடன் வெறும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்காமல், மக்கள் ஆணைக்கு வழிவிட நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குங்கள் என்று, ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்


Read more...

இரண்டு சந்தர்பங்களை கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர் - தவராசா குற்றச்சாட்டு

பேரம் பேசும் சக்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீணடித்து விட்டதாக வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர்
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு வரைவு வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு வரைவு வரும் என்று கூறிவருகின்றது. அரசியலமைப்பு வரைவு தொடர்பாக நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும். கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்கள் வீணடிக்கபட்டுள்ளன. அவற்றில் ஒன்று, ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட விடயத்தில் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தது.

இரண்டாவது சந்தர்ப்பம், அசாதாரண அரசியல் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கூட்டமைப்பு தமது ஆதரவினை வழங்கியமை. இந்த இரண்டு வாய்ப்புக்களையும் கூட்டமைப்பினர் பயன்படுத்த தவறிவிட்டனர். பேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை அவர்கள் வீணடித்துவிட்டார்கள். கூட்டமைப்பினரின் இவ்வகையான நடவடிக்கையினை எவராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் மக்களின் மிக நீண்டகால பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணிப்பிரச்சினை, போன்றவை இன்னமும் தீர்க்கப்படவில்லை.

ஆனால் இவை அனைத்தையுமே புறந்தள்ளி, கூட்டமைப்பு எந்த அடிப்படையில் தமது ஆதரவினை வழங்கினார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளதென என சி.தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பிரதமர் முன்வைத்த அமைச்சரவை பத்திரம் நிராகரிப்பு

எதிர்க் கட்சிக் காரியாலயத்துக்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான அனுமதியைக் கோரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரேரணை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இப்பிரேரணையை ஒப்படைப்பதற்கும்நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் வேண்டுகோளிற்கு அமையவே சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மீண்டும் 8-ல் ஆரம்பம்

நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் இரண்டாம் கட்டப் பணிகள், எதிர்வரும் 8-ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுமார் 10 நாட்கள் இந்த இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த பணிகள் எதிர்வரும்17 ம் திகதி வரை மேற்கொள்ளப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 29 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்காக 6 பாடசாலைகள் மூடப்படும் அதேநேரம் ஏனைய 23 பாடசாலைகள் மூடப்படாது.

இதனிடையே, கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த வருடம் 23 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 31 திகதி வரை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழ் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் சிறுவர் நீதி மன்றத்திற்கு அருகாமையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிபொருட்களை விசேட அதிரடி படையினர் கண்டெடுத்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலை அடுத்து, இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இதன் பிரகாரம், 1 கிலோ சி 4 வெடிமருந்து, 4 டெட்டேநெட்டெர்கள் ஆகியன உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சி 4 வெடிமருந்துகள் 7 பொதிகளில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

2019 -ம் ஆண்டின் பாதீட்டு அறிக்கையை மார்ச் 5 -ல் சமர்ப்பிக்க தீர்மானம்

2019 ம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

புதிய ஆண்டுக்கான பாதீட்டின் கணக்கு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கணக்கு அறிக்கையை எதிர்வரும் 8 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 4 வது பதவி ஏற்பு நினைவு தினம் எதிர்வரும் 8 ஆம் திகதியாக இருப்பதனால் அதற்கு முன்னர் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கட்சித் தாவலுக்கு பணம் வழங்க முயன்ற ஆதாரங்களை வெளிப்படுத்தினார் பாலித்த ரங்கே பண்டார

பணம் மற்றும் பதவிகளை வழங்கி கட்சித் தாவுதலை செய்ய முயன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ தே கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 26 -ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது சுமார் 51நாட்களாக ஜனாதிபதி மைத்திரி மற்றும் மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுபடி தனக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read more...

இனப்பிரச்சினைக்கு நான்காம் திகதிக்குள் தீர்வு - சம்மந்தன் மீண்டும் நம்பிக்கை

2018ஆம் ஆண்டு தீபாவளிக்குள் தீர்வு என்று கூறியமை ஒரு நம்பிக்கை அடிப்படையிலேயே. ஆனால் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென நம்புகின்றோம் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.

தீபாவளிக்குள் தீர்வு என்று கூறிவந்த அவரிடம் இந்த தீர்வு விடயத்தில் ஒன்றும் நடைபெறவில்லையே என்றுவினவிய போதே இவ்வாறு பதிலளித்தார். தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் ஜனநாயகத்தை விரும்புகின்ற அனைத்து மக்கள், சிவில் அமைப்புக்கள் ஒருமித்து நாட்டில் பெரியதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மூவின மக்களின் விருப்போடு தெரிவாகிய அரசு தமது ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயரைச் சூட்டிக் கொண்டது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அரசமைப்பை உருவாக்கும் பணிகள் இலகுவாக நடைபெறவில்லை. சில அரசியல் சூழ்ச்சிகளால் அதில் தடங்கல்கள் ஏற்பட்டன. புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை முறியடிக்கும் வகையிலேயே அரசியல் சூழ்ச்சி அமைந்தது. எனினும், ஜனநாயக ரீதியில் அரசியல் சூழ்சியில் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி, புதிய அரசமைப்புக்கான வரைவு, அரசமைப்பு நிர்ணய சபையினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என்று நம்புகின்றோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கட்சிகளை ஒன்றிணைத்து ஓரணியில் செயற்படுவோம் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


Read more...

Wednesday, January 2, 2019

புலிகளுக்கு பயத்தில் எங்கள் பாதுகாப்பில் இருந்தவர்கள் தான் எங்களுக்கு எதிராக பேசுகின்றனர். போட்டுடைக்கிறார் மஹேஷ்.

வடக்கில் யுத்தம் நடைப்பெறும் போது புலிகளுக்கு பயந்து ஒழிந்து கொண்ட சிலர் இன்று வடக்கிலுள்ள மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நிலவும் அந்நியோன்யத்தை சீர்குலைக்க முற்படுவதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திவயின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு போட்டுடைத்துள்ள அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வெள்ளத்தின் போது மட்டுமல்ல வடக்கில் ஏற்படும் சகல அனர்த்தங்களின் போதும் மக்களுக்கு உதவ இராணுவத்தினர் முன்வருவர் என்றும் முரண்பட்ட எண்;ணங்களைத் மக்கள் மத்தியில் உருவாக்க முயலும் சிலரின் இராணுவத்தினர் மீதான விமர்சனங்களை மக்கள் ஒரு போதும் நம்ப வேண்டாம் எனவும் கூறியிருந்தார்.

அத்தோடு இராணுவத்தின் பெயரை களங்கப்படுத்த முயல்பவர்கள் அன்று வடக்கில் இராணுவத்தினரின் பாதுகாப்பிலேயே இருந்தனர். இவ்வாறு பேசி திரிபவர்கள் வாய்ச் சொல் வீரர்கள் மட்டுமே எனவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

Read more...

நாமல் குமாரவை சுற்றி வளைக்கின்றது சீஐடி. மோசடிச் சான்றுதழ்

கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் நபராக காணப்பட்டவர் நாமல் குமார எனப்படும் மோசடி தடுப்பு படையணி என்ற பெயர் கொண்ட அமைப்பொன்றின் தலைவரான நாமல் குமார.

இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர் நாலக டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியிட்டிருந்தார். இத்தகவலின் அடிப்படையில் குறித்த டிஐஜி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் விளக்க மறியலிலும் வைக்கப்பட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

மேலும் நாமல் குமாரவினால் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் குற்றச் சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் பொலிஸ் துறை தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஊழல் ஒன்று தொடர்பாக குற்றப்புலனாய்வு துறைக்கு முறைப்பாட்டிற்காக சென்ற நாமல் குமாரவிடம் போலி கல்வி சான்றிதழ்கள் வழங்கியமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு இணைவதற்காக நாமல்குமாரவினால் வழங்கப்பட்டிருந்த கல்வி பொது சாதாரண பரீட்சையில் பத்து பாடங்களிலும் சித்தி என சான்றித்களில் குறிப்பிடப்படிருந்த போதிலும் உண்மையில் 3 பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்துள்ளதாக சீஐடி யினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

Read more...

அடுத்த முறையும் யானையின் முதுகிலேயே பயணம். மொட்டு மலராது என்கிறார் வேலுகுமார்.

அடுத்த தேர்தலில் தனிக் கட்சி அரசியலை விடுத்து, தோழமைக் கட்சிகளுடன் இணைந்தே புதிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்ப்பதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இணைந்து பயணிப்பதன் மூலமாகவே அர்த்தமுள்ள, நீடித்து நிலைக்கக் கூடிய ஆட்சியை கொண்டு நடத்த முடியுமென, அவர் கூறியுள்ளார். நேற்றைய தினம் கண்டி - திகன பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், கருத்து வெளியிட்ட போதே, வேலுகுமார் இதனை கூறினார்.

அரசியல் சூழ்ச்சி செய்து நாட்டின் அதிகாரத்தை தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் என மஹிந்த தரப்பினர், பெரிதும் முயற்சி செய்தனர். எனினும் நாட்டின் நலன் கருதி, பங்காளிக்க கட்சி உறுப்பினர்கள் இரவு-பகல் பாராமல் எமக்காக அயராது உழைத்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் இருந்த அனைத்து பங்காளி கட்சிகளும், பணத்தை பார்க்காமல் ஜனநாயகத்திற்கே முன்னுரிமை வழங்கின. இது உண்மையில் நாட்டுக்கே கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி, யாரிடமும் சென்று கெஞ்சித்தான் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற தேவைப்படும் இல்லை.

இங்கு கட்சி அரசியலுக்கும் அப்பால், நாட்டில் நல்லாட்சியொன்று மலர வேண்டும் என்பதற்காகவே மக்கள், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தனர். 19 ஆம் சீர்திருத்தத்தை கொண்டு வந்ததன் பின்னர், அமைச்சரவை 30 ஆக குறைக்கப்பட்டது. ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது என தெரிவித்த வேலுகுமார், இதை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் பங்காளிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்கவே, ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்த்துள்ளதாக வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஒரு போதும் ஏற்க மாட்டேன்.

எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் ஏற்க போவதில்லையென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை, எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டுமென, சபாநாயகர் கரு ஜெயசூர்யவிடம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

தற்போது நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி தன்மை நிலவுகிறது. ஒருபக்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என கோருகிறார். மறுபக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டுமென கோருகிறார். இந்த நிலையில் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் குமார வெல்கமவிற்கு பதவி வழங்கப்பட வேண்டுமென்று மற்றுமொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டில் ராஜபக்சவும்,சம்மந்தனும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக மோதி கொண்டிருக்கும் போது, தானும்
இந்த பிரச்சனையை தீவிரப்படுத்த விரும்பவில்லை என, கூறியுள்ளார்.

ஒருசில தவறான அரசியல் ஆலோசனைகளே, இந்த இரண்டு தரப்புக்களிலும் முரண்பாடுகள் இடம்பெற முதன்மை காரணமாக அமைந்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை தவிர்த்து வேறொருவரை சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவராக நியமித்தால், அப்போது தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு அந்த பதவியை வழங்குமாறு பரிந்துரைப்பேன் என கூறிய குமார வெல்கம, மஹிந்த ராஜபக்ச நாட்டு சூழல் அறிந்து செயல்பட கூடிய, அனுபவம் வாய்ந்த சிறந்த அரசியல் தலைவர் என்று குறிப்பிட்டார் .

அத்துடன் நாட்டில் சில அரசியல் குழப்பங்களுக்கு பின்னால் பெரும் சூழ்ச்சிக்காரர்கள் மறைந்திருப்பதாக குமார வெல்கம கூறினார். அவர்கள் விரைவில் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், தாம் எப்போதும் மஹிந்தவை விட்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை விட்டோ விலக போவதில்லை என்றும், தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்ற எண்ணம் இல்லையென்றும் தெரிவித்தார்.

Read more...

அரச நிறுவன தலைவர்களின் தகுதி குறித்து சோதனை.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் அண்மையில் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை நியமிக்கப்பட்டது. 29 அமைச்சர்களைக் கொண்ட இந்த அமைச்சரவையில் தமக்கு வாக்குறுதி அளித்தபடி, உரிய அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவில்லையென, பலர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களால் நியமிக்கப்பட்ட சகல அரச நிறுவன தலைவர்களின் தகுதி குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அரச தலைவர்களின் தகுதி குறித்து ஆராய்வதற்கென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்த குழுவினரின் அறிக்கை கிடைத்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களின் உயர் நியமனங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது செல்வாக்கை கொண்டு, வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அவ்வாறான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, தாம் இந்த குழுவை நியமித்ததாக, கூறியுள்ளார்.

எனினும் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தமது கீழுள்ள நிறுவனக்களின் உயர் அதிகாரிகளை நியமிக்க அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை கொண்டே அமைச்சர்கள் உயர் அரச தலைவர்களை நியமிக்கின்றனர். இந்த நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறுக்கிட்டு, அவர்களது தகுதி, அனுபவம் குறித்து எப்போதும் இல்லாதவாறு ஆராய்வது, அமைச்சர்களின் பலத்தை அபகரிக்கும் செயல் என, அரசாங்க தரப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்த விடயம் குறித்து தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அனைத்து அமைச்சர்களும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

அரசியல்வாதிகளை இனிமேல் நம்பப்போவதில்லை. சர்வதேசத்திடம் நீதிகோருகின்றனர்.

தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கும் அரசியல்வாதிகள், இப்போது தம்மைக் கைவிட்டு சென்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோரின் ; உறவினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், அரசியல்வாதிகளை இனி ஒருபோதும் நம்ப மாட்டோம் எனவும், சர்வதேசமே எங்கள் மீது கரிசனை கொண்டு இந்த வருடத்திலாவது, எமது உறவுகளை மீட்டு தர வேண்டும் எனவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர்.

வருடத்தின் முதல் நாளான நேற்று, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, இவர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.

தமது உறவுகளை எப்படியாவது காண வேண்டுமென, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்த வருடத்திலாவது ஏமாற்றம் இன்றி எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவதாக தெரிவித்தனர்.



Read more...

24 மணித்தியாலங்களில் மட்டும் 11 உயிரிழப்புக்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் கொலை மற்றும் வாகன விபத்துக்களில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதாக, காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ரத்தினபுரி - தெய்யத்தேக பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில், இரண்டு நபர்களால் தாக்கப்பட்ட ஒருவர் பலியானார். இந்த கொலைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானவர் 35 வயதானவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை காலி - ஹபராதுவ - அங்குனுக்கஹ பகுதியில் இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், இளைய சகோதரர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. இதேநேரம், காலி - குடுக்காம - குருந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நபர் ஒருவரின் உடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நேர்ந்த விபத்துக்களில் சிக்கி 8 பேர் பலியாகினர். நீர்கொழும்பு பிரதான வீதியின் தியகம்பல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகினர். பாரவூர்தியொன்றும், உந்துருளியொன்றும் மோதியதில் காயமடைந்த உந்துருளியின் சாரதியும், அவருடன் உடன் சென்றவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதே நேரம் கலேவெல - யட்டிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை அதிகாரியொருவர் பலியானார். அவர் செலுத்திச் சென்ற உந்துருளி, பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் நீர்கொழும்பு கல்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதான இளைஞர் ஒருவர் பலியானதுடன், மொரகஹகென பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலியாகினர். இதனிடையே நேற்றைய தினம் 29 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர், லக்சபான நீர்வீழ்ச்சியின் அபாயகர பகுதிக்குச் சென்று மூழ்கியதில் அவர் பலியானார். குறித்த பிரித்தானிய பிரஜை 29 வயதானவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

வடக்கு மக்களுக்கு ரெஜினோல்ட் குரே தான் வேண்டுமாம்.

கிளிநொச்சி மாவட்டத்தில், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திற்கு மீண்டும் ரெஜினோல்ட் குரேவை, ஆளுநராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியே, இந்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

ஆளுநர் ரெஜினோல்ட் குரேவின் கோரிக்கைக்கு இணங்க, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண
பொருட்களை ஏற்றிய தொடரூந்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு வந்த போது, இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாண தொண்டராசிரியர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வடக்கு மாகாணத்திற்கு ரெஜினோல்ட் குரேவை மீண்டும் ஆளுநராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதிக்கான மனுவொன்றை, போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தனர்.















Read more...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான திகதி அறிவிப்பு

தரம் 1-க்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 16 ம் திகதி முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களை பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பது தொடர்பில் மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read more...

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன 11 மாதங்களுக்கு பின்னர் பிணையில் விடுதலை

பிணைமுறி மோசடி குற்றசாட்டு சுமத்தி, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோருக்கு சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மத்தியவங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும், நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களது வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் மன்றுக்கு நேற்றைய தினமும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான 4 சரீர பிணையிலும் செல்வதற்கு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், சந்தேகநபர்கள் இருவரும் வௌிநாடு செல்வதற்குத் தடை பிறப்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை பிணைதாரர்கள் நால்வரில் இரண்டு பேர், இவர்களது நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும். சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வாறாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவுசெய்யப்பட்டு குற்றவாளியாக அடையாளப்படுத்தப்படும் வரை, எந்தவொரு சந்தேகநபரும் தான் நிரபராதி என்பதற்கான முழுமையான தீர்மானத்தில் இருக்க முடியும் என பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகளின் நோய் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் அறிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையை விசேட காரணியாக ஏற்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதாகவும் நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால் இந்த வழக்கை நிறைவுசெய்வதில் தாமதமடைவதாக தெரிவித்த பிரதம நீதவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


...............................

Read more...

புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

2019-ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டம், புதிய அமைச்சரவையின் 2 ஆவது கூட்டமாகும்.

அமைச்சுக்களுக்குரிய பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி வௌியிடப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

மஹிந்த தலைமையில் பெரமுன செயற்படும் - பசில் அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படுமென்று பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய ஆண்டுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு புதுவருஷ தினமான நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. பெரமுன கட்சி , நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும். இந்த நிலையில் நாட்டை கட்டியமைக்கவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இதனால் நாம் அதிகம் நாட்டுக்காக உழைக்கவேண்டும்.

மற்றைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மக்கள் நலம் சார்ந்த சேவைகளையே அனைவரும் எம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள். அனைவரும் எதிர்பார்ப்பது போன்றே மக்களுக்கு சேவைகளை வழங்கும் இயலுமை எம்மிடம் உள்ளது என்றும் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.


Read more...

அர்ஜுன ரணதுங்க விசாரணை மையம் - புதிய பேஸ்புக் பக்கம்

போக்குவரத்து துறையில் இடம்பெறும் ஊழல் தொடர்பில் முறையிடவும் போக்குவரத்து துறையின் சேவையை மேம்படுத்தும் நோக்கிலும் புதிய பேஸ்புக் பக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இதன் மூலம் போக்குவரத்து அமைச்சு பொது சேவை மற்றும் போக்குவரத்து சேவை தொடர்பான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

போக்குவரத்து துறையில் இருக்கும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளையும் சேவையை மேம்படுத்தும் பரிந்துரைகளையும் நேரடியாகவே பேஸ்புக் பக்கம் மூலம், போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பேஸ்புக் பக்கதிற்கு அர்ஜுன ரணதுங்க விசாரணை மையம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Read more...

Tuesday, January 1, 2019

யாழ் நீதிமன்ற நீதிவானாக பதவியேற்றார் அந்தோனி சாமி பீற்றர் போல்

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக, நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், வழக்கு விசாரணைகளையும் முன்னெடுத்தார்.

மலையகத்தை சேர்ந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சட்டத்தரணியாக 7 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால்மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இறுதியாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் கடமை புரிந்த பின்னர் தற்போது யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக நேற்று கடமைகளைப் பொறுப்பெடுத்தார்.

கடமைகளை பொறுப்பேற்ற நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் கருத்து வெளியிடுகையில், யாழ் மண்ணில் தமிழ் மொழியில் சேவையாற்ற கிடைத்ததில் பெருமைப்படுகிறேன், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.


Read more...

புதிய முறைப்பாட்டை பதிவு செய்தார் நாமல் குமார

நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிய முறைப்பாடு ஒன்றை, ஊழல் எதிர்ப்பு செயலணியின் பணிப்பாளர் நாமல் குமார நிதிக்குற்ற விசாரணனைப் பிரிவில் பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு, விவசாயிகளுக்கு உரம் வழங்கும்போது தவறான முறையில் நிதி கையாண்டுள்ளமை தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர் ஊழல் எதிர்ப்பு செயலணியின் பணிப்பாளர் நாமல் குமார, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பிலான கொலை சதித்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Read more...

சதித்திட்டம் நடந்த 56 நாட்களின் பாதிப்பை மதிப்பீடு செய்ய முடியாது - நீதி அமைச்சர் தெரிவிப்பு

அரசியல் சதித்திட்டம் நிகழ்ந்த 56 நாட்களில் நாடு முகம் கொடுத்த பாதிப்பை மதிப்பீடு செய்ய முடியாதென்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரசியல் அதிகாரங்களை தொடர்ந்து பேணும் நோக்கத்தோடு தீர்மானங்கள் எதையும் ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் மேற்கொள்ளாது. அதேநேரம் மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்தும் பாடுபடுவோம்.

அதிகாரங்களை கைப்பற்ற முடியாமல் போனவர்கள்நாட்டில் இனவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். எதிர்வரும் தேர்தல் காலங்களிலும் இவர்கள் சிங்களம், தமிழ், முஸ்லீம் என்றே செயற்படுவார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் எமக்கு கிடைக்காவிட்டாலும் நாம் இனவாத செயற்பாட்டில் ஈடுபடவோ அதற்கு துணைபோகவோ மாட்டோமென்று இரத்தினபுரியில் நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

Read more...

மங்கள சமரவீரவிற்கு எதிராக வழக்குத் தொடர்வேன் - பந்துல குணவர்தன காட்டம்

நிதி மற்றும் ஊடகத்துறை ஒரே அமைச்சின் கீழ் செயற்படுவது ஜனநாயக நாட்டில் சாத்தியமற்றது. இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், நாட்டின் பிரதமரோ ஊடகங்களை விமர்சித்து வருகின்றார். அமைச்சர் மங்கள சமவீரவிடம் ஊடகத்துறை இருப்பது ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாகஅமையும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கூறினார்.

ஒரு ஜனநாயக நாட்டில் நிதி மற்றும் ஊடகத்துறை ஒரே அமைச்சின் கீழ் செயற்படுவதை எதிர்த்து, கூட்டு எதிர்க்கட்சியினர் சார்பில் நான் வழக்கு தொடரவுள்ளேன். மங்கள சமரவீர ஊடகங்களை கட்டுப்படுத்துவதையும் விமர்ச்சிப்பதையும் நிறுத்தவேண்டும். ஆகவே ஜனாதிபதி இது தொடர்பில் ஆராயவேண்டும் என்ற கோரிக்கை விடுகிறேன் எனவும் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட எஸ்.பி திசாநாயக்க

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, எந்த கட்சியிலிருந்து வேட்பாளரை போட்டியிட வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களை இன்றைய தினம் சந்தித்தபோதே அவர் மேற்படி தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கத்தை மீளப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவினால் கொடுத்த வாக்குறுதிகளைநிறைவேற்ற முடியவில்லை. இதனால், அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா என்பதில் நம்பிக்கை இன்மை காரணமாகவே பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

இதனிடையே மாகாணசபைத் தேர்தலை நடத்தி மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என சந்திரிக்கா அம்மையார் கூறியுள்ளார். ஆனால் சந்திரிகா அம்மையார் கூறுவதுபோல் செய்தால் எல்லா விடயங்களுக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தலையாட்ட வேண்டியேற்படும். அதற்கு அவர்கள் இணங்கினால், தாராளமாக இணையலாம். இதற்கு நாம் எப்போதும் எதிர்ப்பினை வெளியிட மாட்டோம்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியினர் சிலரும் எங்களோடு இணைந்து செயற்பட தயாராகவே இருக்கிறார்கள். முஸ்லிம், தமிழ், மலையக கட்சிகளின் கூட்டணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் நாம் களமிறங்கவுள்ளோம். எனினும், ஜனாதிபதித் தேர்தலின்போது எந்தக் கட்சியிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள இருவருக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வொன்று ஏற்பட்டுள்ளது. இருவரும் என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் நாடாளுமன்ற் உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more...

பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள், இதைத்தான் ஆசைப்படுகிறார்கள் - கெஹலிய ரம்புக்வெல்ல.

ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுப் பதவி குறித்து பகிரங்கமாக பேசி வருகின்றனர். ஆனால், மக்களின் பணத்தை சூறையாடவும், அதிகார பலத்திற்குமே ஐக்கிய தேசிய கட்சியினர் ஆசைப்படுவதாக, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் புதிதாக அமைச்சரவை நியமிக்கப்பட்டது.எனினும் இந்த நியமனத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே பல முரண்பாடுகள் இருப்பதாக அவர் கூறினார். ஜனநாயகம் குறித்து பகிரங்க கருத்து வெளியிடும் ஐக்கிய தேசிய கட்சி, 50 கோடிக்கும், அமைச்சு பதவிக்கும் ஆசைப்படுகிறது. மாறாக மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த கவலையும் இல்லையென கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

தமக்கு அமைச்சு பதவி கிடைத்தவுடன், எப்படியாவது மோசடி செய்து பணத்தை சூறையாட வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் ஆசை என அவர் கூறினார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்த கெஹலிய ரம்புக்வெல்ல, அடுத்து வரும் தேர்தலில் மக்கள் பலம் எமக்கே கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Read more...

ஜனவரி 11 வரை தடை.

மாவனெல்ல பகுதியில், கடந்த தினம் புத்தர் சிலைகள் சில உடைக்கப்பட்டமை தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருவதுடன், அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சிலை உடைப்பு சம்பவத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் சிலர் முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடையை
விதித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தால் பௌத்தர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் இன முரண்பாடுகள் ஏற்படும் சாத்தியம் உருவாக்கலாம் என்பதாலேயே, இந்த தடை உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1979 / 15 ஆம் இலக்க குற்றவியல் அமுலாக்கல் சட்டத்தின் கீழ், மேற்படி திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை, இந்த மாதம் 11 திகதி நடத்துவகற்கு நீதிமன்றத்தால், குறித்த பிக்குமார்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com