Wednesday, December 26, 2018

சுனாமிப் பேரழிவு 14ம் ஆண்டாக நினைவு கூரப்படுகின்றது.

2004ம் ஆண்டு மார்கழி மாதம் உலகையே சோகத்தில் ஆழ்த்திய நாள். அன்றுதான் இயற்கை சீற்றம் கொண்டு மாபெரும் அழிவொன்றை மனித குலத்திற்கு கொடுத்தது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இலங்கையின் கரையோரம் எங்கும் வாழ்ந்திருந்த மக்கள் பறிகொடுத்தனர்.

இத்தாக்கத்தின் நினைவுகளை இன்று நாடெங்கிலுமுள்ள மக்கள் நினைவு கூறுவதுடன் உயிரிழந்த மக்களின் ஆத்த சாந்தி வேண்டியும் பிரார்த்தித்து நிற்கின்றனர்.

அந்த வகையில் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வினை யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகின் பிரதி பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.








இதேநேரம் யாழ் பல்கலைக்கழகத்திலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன் உட்பட விரிவுரையாளர்கள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.



மேலும் வடமராட்சி கிழக்கு- உடுத்துறை சுனாமி நினைவாலயத்திலும் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.


Read more...

தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள்! யாழ்ப்பாண ஆயர்

தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அரசியல் கட்சிகளிடமும் யாழ்ப்பாண ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு ஆயரால் அனுப்பிவைக்கப்பட்ட கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

2018ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதிலும் இன மத நிற மொழி வேறுபாடின்றி கொண்டாடப்படும் வேளை பாலக இயேசுவின் அன்பும் அருளும் ஆசீரும் இவ்விழாவை கொண்டாடும் அனைவரோடும் என்றும் இருப்பதாக என இறை ஆசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும்” (லூக்காஸ் 2:13-14) இந்த பெருவிழாக்காலத்தில் அவருக்கு உகந்தவர்களாகி எல்லோரிற்கும் அமைதி உண்டாக்கும் கருவிகளாகவே நாம் அழைக்கப்படுகிறோம்.

தேசிய ஜனநாயக முன்னனி உதயமாகி நிறைவேற்று அதிகாரத்திற்கு முடிவு கட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. இலங்கை நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் நீதியான சமத்துவமான அமைதியான வாழ்வு கிடைக்க அனைத்து அரசியல்வாதிகளும் உழைக்க வேண்டும். தனிப்பட்ட அதிகாரம் பதவி பட்டம் என்பன எல்லாம் இங்கு முக்கியமல்ல

கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி முதல் இலங்கை நாட்டை அச்சுறுத்திய “ஒக்ரோபர் 26 அரசியல் சூழ்ச்சி” என அழைக்கப்படும் அரசியல் முறுகல் நிலை ஓரளவு சுமூகமாக தீர்ந்துள்ளமை மனதிற்கு நின்மதி தருகிறது. ஜனநாயகம் வென்றுள்ளது என வரவேற்போம்.

இது ஒரு தேசிய பிரச்சினை என்கின்ற வகையில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் என்கின்ற வகையில் நாமும் இந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டுமென இறைவரம் வேண்டுமாறு இறைமக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பல பங்குகளில் வேண்டுதல் செய்தனர். எதிர்பாத்த பயந்த பயங்கர முடிவுகளும் இன்றி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இறைவனுக்கு நன்றி. இறை வரம் வேண்டிய அனைவருக்கும் அன்பான நன்றிகள்.

தேசிய ஜனநாயக முன்னனி உதயமாகி நிறைவேற்று அதிகாரத்திற்கு முடிவு கட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. இலங்கை நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் நீதியான சமத்துவமான அமைதியான வாழ்வு கிடைக்க அனைத்து அரசியல்வாதிகளும் உழைக்க வேண்டும். தனிப்பட்ட அதிகாரம் பதவி பட்டம் என்பன எல்லாம் இங்கு முக்கியமல்ல.

ஒக்ரோபர் 26 அரசியல் சூழ்ச்சி – இது ஒரு முடிவல்ல, மாறாக இது ஒரு ஆரம்பமே. எதிர்பார்த்து நம்பி இருந்த அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமலே போய்விட்டது. நல்லெண்ண அரசு நீதியாக செயற்படும் என நம்பி ஏமாந்து விட்டோம்.

ஆனால் தமிழ் அரசியற் கட்சிகள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் விலை போகாத வகையில் நாம் இன்று முன்பைவிட இன்னும் அரசியற் பலம் மிக்கவர்களாகவே உள்ளோம்.

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண இக்காலத்கைவிட மிக சிறந்த காலம் தோன்றப் போவதில்லை. இந்த நிலை தமிழ் மக்கள் இலங்கையின் பல பகுதிகளில் போர்க் காலத்தில் அனுபவித்த கோர அனுபவங்கள் வழியாகவே வந்தது என்பது உண்மை.

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் அரசியற் கட்சிகளுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பெயரால் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகிறோம். தயவு செய்து தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள்.

இப்போது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டு எட்டப்படாத எந்த முடிவும் வருங்காலத்தில் எட்டப்படும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது சாதகமற்ற உங்கள் எந்த நிலைப்பாட்டையும் இனியும் தமிழ் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என உறுதியாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.

இலங்கை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் வாழ்கின்றன என்பதை உறுதிப்படுத்தி அவர்களின் சம உரிமையோடு வாழக்கூடிய கூடிய சுதந்திர வாழ்விற்கான நீதியோடு கூடிய நிரந்தர தீர்வைக் கொண்டு வரக்கூடிய மாற்றப்பட முடியாத புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான செயற்பாட்டிற்காக அரசியல்வாதிகள் மட்டுமலல சம்மந்தப்பட்ட அனைவரும் கண்டிப்பாக பயணியாற்ற வேண்டுமென அழைப்புவிடுக்கிறோம்.

உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்ற வார்த்தைகளை எமதாக்கி வாழ அழைப்புவிடுத்து இறையாசீருடன் கிறிஸ்மஸ் 2019ஆம் புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். என்றுள்ளது

Read more...

Tuesday, December 25, 2018

தமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.

வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் முன் பதிவு செய்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற டீலை செய்து தமிழ் தலைவர்கள் தமது உயிர்களை பாதுகாத்துக்கொண்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் அங்கு பேசுகையில் கொழும்பில் கொல்லப்பட்ட ரவிராஜ் அவர்கள் பிரதி மேயராக வரும்வரைக்கும் புலிகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்ற விடயத்தினையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.

அங்கு அவர் மேலும் பேசுகையில் :

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை பார்த்தால், ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவதை பார்கின்றீர்கள். அந்த வகையில் கடைசியாக தனது உயிரை இழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள். அதற்கு முன்னர் திருகோணமலையில் பா.உ தங்கத்துரை அவர்கள். எமது பிரதேசத்தை சேர்ந்த ரவிராஜ் அவர்கள் குறிவைக்கப்பட்டிருந்தார். மேயர்களான சிவபாலன், சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்சியாக மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்கவேண்டுமாக இருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒரு டீலுக்கு போகவேண்டியிருந்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனச் சொல்லிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புக்களை பிடித்து இணைத்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தினுள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகளே எனப்புகுத்தி தம்மை உலக நாடுகளில் அங்கிகாரம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது.

அந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பூடாக புலிகள் தங்களுக்கான உலக அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்கள் எமது தலைவர்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொண்டார்கள். இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவான டீல்.

சயந்தனின் குறித்த துணிகரப் பேச்சானது நிச்சயமாக வரவேற்க வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது. சிறிதரன் போன்ற அரசியல் விபச்சாரிகள் இன்றும் புலிகளை வைத்து தமிழ் மக்களிடம் வாக்கு பிச்சை கேட்க செல்லுகின்றத தருணத்தில் இளம் அரசியல்வாதியாக உண்மையை நிமிர்ந்து நின்று சொல்லுகின்ற துணிவினால் எதிர்கால சந்ததி தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது.

சுயந்தனின் பேச்சை இங்கு கேட்கலாம்.


Read more...

கூட்டமைப்பு எம்பி க்கள் மூவரிடம் இரட்டைகுடியுரிமை. பதவி பறிக்க நீதிமன்று செல்கின்றது தாமரை மொட்டு.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எச்சரித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

'இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

ஆனால் அதனை இரகசியமாக வைத்திருக்கிறோம். புத்தாண்டில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

2015 ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட போது, கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

ஆனால் அவர்களின் பெயர்களை இப்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாது. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போதே அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்ததால் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

அதே சட்டம் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

மஹிந்தவுடனான கூட்டில் மாற்றமில்லை. இடையூறு ஏற்படுத்தினால் வெளியேற்றப்படுவீர்கள். மைத்திரி எச்சரிக்கை.

எதிர்வரும் தேர்தல்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு இடையூறு ஏற்படுத்தும், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐதேக அரசாங்கத்தில் இணைந்து அதனைப் பலப்படுத்த முனையும், அமைப்பாளர்கள், முதலில் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி அதனைச் செய்யலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடும், ஜனாதிபதியின் திட்டத்துக்கு கட்சியின் ஒரு பகுதி தொகுதி அமைப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், சுதந்திரக் கட்சி தனியான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர்.

சுதந்திரக் கட்சி பொதுச்செயலர் மீதும் கட்சியின் சில மூத்த அமைப்பாளர்கள் மீதும், அவர்கள், அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அமைப்பாளர்களுக்கான கூட்டம் திட்டமிடப்பட்டிருந்ததற்கு முன்பாகவே முடிவுக்கு வந்தது.

Read more...

மாத்தறை துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைது.

இன்று காலை தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மாத்தறை மாவட்டத்திற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த குழுவொன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விரைந்திருந்தது.

இந்நிலையில் அங்குலான பகுதியை சேர்ந்த கல்டமுல்ல கயன் என்றழைக்கப்படும் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இவன் கொழும்பில் இயங்கிய பிரபல தாதாவான அங்குலான ரொகா என்றழைக்கப்படுபவனின் சகாவான். அங்குலான ரொகா விளக்க மறியலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ரோகா உள்ளே உள்ளபோது அவனது கொந்தராத்து கொலைகளை இந்ந கயன் என்பவனே மேற்கொள்பவன் என்று அறியமுடிகின்றது.

மேற்படி கொலைகள் கொந்தராத்து கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரு மீன்பிடிக்குழுக்களுக்கிடையில் சற்று நாட்களுக்கு முன்னர் மோதல் ஒன்று இடம்பெற்றதாகவும் பின்னர் அவர்கள் இவ்வாறான கொலைக் கொந்தராத்தை வழங்கியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சந்தைக்கு மீன் கொள்ளவனவு செய்யச் சென்ற 23 வயது இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

நாமலின் நிலைமை சிக்கலாகின்றது. குற்றச்சாட்டுக்கள் புஷ்வானமாகுமா?

ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக தகவல்களை வெளியிட்டவர் மோசடி தடுப்பு படையணி என்ற அமைப்பொன்றின் தலைவர் நாமல் குமார. இவரது குற்றச்சாட்டின் பெயரில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர் டிஐஜி நாலக டி சில்வா கைது பெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாமல் குமாரவின் தொலைப்பேசியில் அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஹொங்கோங் எடுத்துச் சென்றனர். அங்கு அவர்கள் மீட்டெடுத்துவந்துள்ள ஒலிப்பதிவுகளில் ஜனாதிபதி மற்றும் கோத்தாபே ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய முயற்சித்தமைக்கான எவ்வித ஆதாரங்களும் குறித்த ஓலிப்பதிவுகளினூடாக கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றுக்கொண்ட ஒலிப்பதிவுகளை பல முறை மீளாய்வு செய்த போதும் ஜனாதிபதியின் கொலை முயற்சி; தொடர்பான எவ்வித ஒலிப்பதிவும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

நாமல் குமாரா மற்றும் பொலிஸ் அதிகாரி நாலக சில்வா ஆகிய இருவரினதும் உரையாடல்கள் உள்ள ஒலிப்பதிவுகள் பல இருந்துள்ளது. அவற்றில் சில உரையாடல்கள் 39-40 நிமிடங்கள் நீண்டதாக இடம் பெற்றுள்ளது.

நாமல் குமார தனக்கு பாதகமான சில உரையாடல் பதிவுகளை அழித்துள்ளதுடன் கொலை முயற்சி தொடர்பான தகவல் அடங்கிய உரையாடல்பதிவுகளை மாத்திரம் அழிக்காமல் வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள் நிரூபிக்க தவறும் பட்சத்தில் நாமல் குமாரவின் நிலைமை மோசமடையும் என்பதையும் பாரிய சட்டச் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பதையும் உறுதியாகக்கூறமுடியும்.

Read more...

Monday, December 24, 2018

எனக்கு சர்வதேச ரீதியில் நல்ல மதிப்புள்ளது. ஆனாலும் கட்சிக்குள் கழுத்தறுப்பு. நிதியமைச்சுக்காக அழுகின்றார் ரவி.

கட்சிக்குள்ளேயே தனக்கு கழுத்தறுப்பு நடந்ததாலேயே நிதி அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்று ஐ.தே.கவின் உப தலைவரான ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி நல்லாட்சி உதயமான பின்னர் நிதி அமைச்சராக ரவிகருணாநாயக்க நியமிக்கப்பட்டார். காலப்போக்கில் அவரிடமிருந்து நிதி அமைச்சுப் பறிக்கப்பட்டு, வெளிவிவகார அமைச்சு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பிணைமுறி விவகாரம் சூடுபிடித்ததால் தாமாகவே முன்வந்து அமைச்சுப் பதவியை துறந்து – ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பியாக செயற்பட்டார். 'சூழ்ச்சி'மூலம் ஆட்சி கவிழும்வரை எம்.பியாகவே செயற்பட்டார்.

எனினும், புதிய அரசில் ரவிக்கு நிதி அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்ப்புகள் வலுத்ததால் மங்களவிடமே நிதி அமைச்சு கையளிக்கப்பட்டது.இதுதொடர்பில் வினவியபோதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

'சர்வதேச மட்டத்தில் எனக்கு நற்பெயர் இருக்கின்றது. ஆனால், கட்சியிலுள்ள ஒருசிலர் அதை ஏற்கமறுக்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறானதொருநிலை ஏற்படுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரணம் அல்ல. கட்சிக்குள் இருக்கும் ஒருசிலரே சூழ்ச்சிசெய்தனர்.

எனினும், எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் எல்லாம் ஓரணியில் நிற்கும்போது, ஒற்றுமையை குழப்பும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.' என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார் என 'மௌபிம' என்ற சிங்கள பத்திரிகை இன்று (24) செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

வெள்ளமுள்ளி வாய்காலில் எதை நினைத்து பிரபாகரன் இறுதி மூச்சை விட்டாரோ, அதையே நிறைவேற்ற துடிக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக்க முயற்சிப்பவர்கள் பிரபாகரனின் இறுதி ஆசையை நிறைவேற்றத் துடிப்பவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

'எதிர்கட்சியில் இருந்து அல்ல மஹிந்தவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஏன் இந்த கோபம்? எம்பி பதவியில் இருந்தும் நீக்க மஹிந்த அப்படி இந்த நாட்டு என்ன துரோகம் செய்தார்? மஹிந்தவை விரட்டி சிறையில் அடைத்து கொலை செய்யும் தேவை யாருக்கு உள்ளது? 2009 காலை வெல்லமுள்ளிவாய்க்காலில் வானத்தை பார்த்தபிடி உயிர்விட்ட பிரபாகரன் அந்த நொடியில் தனது ஆத்ம சாந்திக்காக என்ன நினைத்திருப்பாரோ அதனையே இவர்கள் செய்ய பார்க்கின்றனர்" என்று டளஸ் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு கூடுதலாக 307 நாட்கள் மாத்திரமே இருக்க முடியும் என்றும் முத்தையாவின் கடையில் சென்று 50 ரூபாவிற்கு 07 பத்தி பைக்கட்டுக்கள் வாங்கி நாளுக்கு ஒன்று வீதம் கொழுத்தினால் இறுதி பத்தி முடியும்போது நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

Read more...

ஊழல் வழக்கில் பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் அளவுக்கு அதிகமாக பணம், சொத்து குவித்து வைத்துள்ள உலக பிரபலங்களின் பெயர்களை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவி இழந்தார்.

இந்நிலையில், லண்டனில் பிளாட்டுகள் வாங்கியது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, ஊழல் செய்த வழக்கு ஆகியவை நவாஸ்க்கு எதிராக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் சமர்பிக்குமாறும் கூறிய ஆவணங்களை ஒப்படைக்க ஒருவாரம் அவகாசம் கேட்டு , நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் மனு அளித்தார். ஆனால் அதனை நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடந்தது. இதில் நீதிபதி அர்ஷத் மாலிக் அவர்கள் நவாஷ் ஷெரிப்புக்கு எதிரான ஆதாரங்களில் அடிப்படையில் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனை வழங்கப்படும்போது நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

குட்டிமணி-ஜெகன்-தங்கத்துரை யின் சட்டத்தரணிக்கு சிவாஜிலிங்கம் இருட்டடி போட்ட கதை கேளீர்.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இச்சம்பவங்களில் நடந்திருக்கக்கூடாத சம்பவங்களே அதிகம். ஆனாலும் ஒவ்வொரு அமைப்புக்களும் தங்களுக்கு சாதகமானவற்றை காவியங்கள்போல் மாற்றியமைத்து தொடர்ந்தும் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இச்சூழ்நிலையில் விடுதலைப்போராட்ட காலத்தில், இயக்கங்களாலும் அதன் உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்ட அருவருக்கத்தக்க செயற்படுகளை மக்களின் மீட்டலுக்கு கொண்டு வருதல் பொருத்தமானது என இலங்கைநெட் கருதுகின்றது. அந்த வகையில் ரெலோவின் சிவாஜிலிங்கம் தொடர்பான பதிவு இது.

குட்டிமணி, தங்கத்துரை , ஜெகன் உள்ளிட்ட ரெலோவின் முன்னணி உறுப்பினர்கள் பலர் பயங்கரவாத தடுப்புச் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக அன்றைய பெடரல் கட்சியின் முன்னணி வக்கீல்கள் பலரும் களமிறங்கியிருந்தனர்.

அவர்களில் குட்டிமணிக்கான சிரேஸ்ட சட்டத்தரணியாக செயற்பட்ட சத்யேந்திரத்தின் கனிஷ்ட சட்டத்தரணியாக நவரட்ணம் கரிகாலனும் ஜெகனுக்கான சிரேஸ்ட சட்டத்தரணியாக உருத்திரமூர்த்தியும் செயற்பட்டனர். வழக்கில் இவர்கள் தோற்றனர் என்பதும் சந்தேக நபர்கள் யாவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயம்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் இறக்க அங்கு ஓர் வெற்றிடம் உருவானது. அவ்வெற்றிடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளம்செயற்பாட்டாளராகவிருந்த நவரட்ணம் கரிகாலனை நியமிப்பது என கட்சி தீர்மானித்தது. கட்சியின் முன்மொழிவை ஏற்க மறுத்த கரிகாலன் அவ்விடத்திற்கு குட்டிமணியை நியமிக்குமாறு கட்சியை கேட்டுக்கொண்டார். அதன் பிரகாரம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வெற்றிடத்திற்கு குட்டிமணியை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணையகத்திற்கு அறிவித்தது. மரண தண்டனை கைதியாகவுள்ள குட்டிமணியை பாராளுமன்றுக்கு கொண்டுவந்து அவரூடாக உணர்ச்சி பேச்சுக்களை கொடுத்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்தல்தான் அதன் நோக்கம். இந்த கபட நோக்கத்தை அறிந்துகொண்ட பாராளுமன்ற செயலளார் நாயகம் 'குற்றவாளி ஒருத்தர் பாராளுமன்றுக்கு செல்ல முடியாது என்ற சட்டத்தின் சரத்துக்களை எடுத்துரைத்து தனது எதிர்ப்பை தேர்தல்கள் ஆணையகத்திற்கு அறிவித்திருந்தார். அத்துடன் தேர்தல்கள் ஆணையகம் குட்டிமணியை பாராளுமன்றிற்கு அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.

இதன்காரணமாக வெற்றிடத்திற்கு நீலன் திருச்செல்வத்தை நியமித்தது தமிழர் விடுதலைக் கூட்டணி.

இதன் பின்னர் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகளுக்கான அறையில் வழமைபோல் அரசியல் ரீதியான விவாதம் ஒன்று கரிகாலனுக்கும் உருத்திரமூர்த்திக்குமிடையே இடம்பெற்றது. அப்போது, 'பொத்தடா வாயை வண்.....ர பயலே என்றார் உருத்திரமூர்த்தி. கரிகாலன் உண்மையிலே பாராளுமன்ற பதவியை ஏற்றுக்கொள்ளாததற்கு காரணமே அதுதான். தான் பதவி ஏற்றால் ஊடகங்கள் தனது சாதியை இழுத்துப்பேசும் என்றும் அது பெரும் அவமானம் என்ற தாழ்வுச்சிக்கலாலேயே அவர் அந்த பதவியை ஏற்கவில்லை என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு தனது ஞாதியை சொல்லி பேசிய சக வக்கீலுடன் அதி உச்ச ஆத்திரம் கொண்டிருந்த கரிகாலனுக்கு சிவாஜிலங்கத்துடன் நல்ல பழக்கம் இருந்தது. அந்த பழக்கம் எவ்வாறு என்றால் குட்டிமணி குழுவினரின் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிவாஜிலிங்கம் அடிக்கடி கரிகாலனை சந்திக்க செல்வார். உருத்திரமூர்த்தி மீது ஆத்திரம் கொண்டிருந்த கரிகாலன் சிவாஜிலிங்கத்திற்கு கொந்தராத்து வழங்கினார்.

ஒரு நாள் உருத்திரமூர்த்தி கிறீன்லாண்டஸ் ஹொட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நுழைந்த சிவாஜிலிங்கம் உருத்திரமூர்த்திக்கு போட்டுப்பிடித்துவிட்டு மாயமாக மறைந்து விட்டார். இன்றுவரை உருத்திரமூர்த்திக்கு தெரியாது தான் வழக்காடிய ஒரு விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்தான் தனக்கு போட்டு பிடித்தது என்று.

கூலிப்படைகள் விடுதலை போராட்டம் என்ற போர்வையை எவ்வாறு போர்த்தியிருந்துள்ளார்கள் என்பது இப்போதாவது புரிகின்றதா?

இவ்வாறான சரித்திரங்களை எதிர்கால சமூதாயம் அறியவேண்டும் என்றால் இதை பகிருங்கள் அத்துடன் உங்களுக்கு தெரிந்தவற்றை இலங்கைநெட்டுக்கு அனுப்பி வையுங்கள்.



Read more...

இடுப்பில் சலங்கை கட்டி (அது) செய்யும் உடையார் கூட்டம்

வன்னியெங்கும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைகாரணமாக மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இன்னோரன்ன தேவைகளை வேண்டி நிற்கின்றனர். இந்த அவலநிலையிலும் தனக்கு புகழ் தேடும் இழிசெயலில் இறங்கியுள்ளான் கிளிநொச்சி மாவட்ட எம்பி சிறிதரன்.

ஓ**தாராம் உடையார் இடுப்பில் சலங்கை கட்டி என்ன நாட்டுப்புற பேச்சுநடையை ஒட்டிய சம்பவம் ஒன்றை இலங்கைநெட் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சிவஞானம் தனது ஒருமாத சம்பளத்தினை வெள்ளத்தினான் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சிறிதரனிடம் வழங்கியுள்ளார் என படத்துடன் செய்தியொன்று செத்தவீட்டு இணையத்தில் பிரசுரமாகியிருந்தது.



நாம் இங்கு கேட்கும் கேள்வியாதெனின் வட மாகாண அவைத்தலைவராகவிருந்த சிவிகே சிவஞானத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் எங்கே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் அவர்களை நிர்வகிக்கும் நிர்வாகத்தினர் யார் என்பதும் தெரியாதா? நேரடியாக அம்மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகத்தினரிடம் அவ்வுதவியை வழங்காது சிவஞானம் இப்பணத்தினை சிறிதரனிடம் வழங்கியதன் நோக்கம் என்ன?

மக்களின் இன்னல்களை வைத்து தங்களது வாக்கு வங்கியை தக்கவைக்கும் செயற்பாட்டை நிறுத்துவீர் என அரசியல்வாதிகளை இலங்கைநெட் வேண்டுகின்றது.

அத்துடன் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்ய செல்கின்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அவற்றை தனக்கூடாக செய்யவேண்டும் என்று சிறிதரன் ஓர் மறைமுக மிரட்டலை விடுத்துவருவதாகவும் அவ்வாறு தமது உழைப்பில் சிறிதரன் குளிர்காய்வதை விரும்பாதவர்கள் உதவி செய்யும் நோக்கத்தையே கைவிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் குறையும் நிலைதோன்றியுள்ளது.

Read more...

சினம்கொண்ட யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே யானை பாகன் பலி - பல வீடுகள் சேதம்

கரன்தெனிய பகுதியில் இடம்பெற்ற பெரஹரவில் யானை தாக்கியதில் பாகன் ஒருவன் உயிரிழந்துள்ளான்

நேற்று (23) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிதீகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த யானை அப்பகுதியில் இருந்த பல வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் மிருக வைத்தியர்கள் ஒன்றிணநை்து குறித்த யானையை பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கரன்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Read more...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் பார்வையிடச் சென்ற அமைச்சர் 10000 ரூ வழங்க உத்தரவு.

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேரில் சென்று பார்iவிட்டுள்ளார்.

பின்னர் இடர்முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட அமைச்சர், மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 10000 ரூ நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை காப்புறுதியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளாhர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் பல தற்காலிக வீடுகள் எனவும் அவற்றின் சேதம் மதிப்பிடுவது கஷ்டமாகையால் அவர்களுக்கு நிலையானதோர் நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பார்த்திபன் வேண்டுதல் விடுத்துள்ளார்.


Read more...

Sunday, December 23, 2018

அழுத்தங்களுக்கு அடிபணியாது கடமையினை நிறைவேற்றுவீர். அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி.

எந்தவொரு அழுத்தங்களுக்கும் அரசாங்க அதிகாரிகள் அடிபணியக் கூடாது என்றும் சட்டவிரோத செயற்பாடு மற்றும் முறைக்கேடு தொடர்பில் எந்த அழுத்தம் ஏற்பட்டாலும், அரசாங்க அதிகாரிகள் அதற்கு இடமளிக்க கூடாதென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நியமனங்களை வழங்கிய பின்னர் ஜனாதிபதி உரையாடினார். நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறி கொண்டாலும், சுத்தமான அரசாங்கம் என எங்களுக்கு இன்னமும் சான்றிதழ் ஒன்றும் கிடைக்கவில்லை.

சட்டவிரோத செயற்பாடு மற்றும் முறைக்கேடு தொடர்பில் எந்த அழுத்தம் ஏற்பட்டாலும், அரச ஊழியர் ரீதியில் அவற்றில் இருந்து விலகி நேர்மையாக பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.

யார் ஊழல் முறைக்கேடுகளில் ஈடுபட்டாலும் அது பொது மக்களுக்கு தெரியவந்து விடும். எனவே நேர்மையாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என நான் அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டு கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்ற சொல்லை நாம் எங்கு பயன்படுத்திய போதும் நாட்டின் அரச நிர்வாகம் தூய்மையானதொரு நிர்வாகம் என்ற சான்றிதழை இன்னும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும், நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கின்ற சிறந்த அரச நிர்வாகத்திற்காக உரிய முறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்துடன், தொடர்ந்தும் நாட்டு மக்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச வளங்களை சேதப்படுத்தி, மக்களின் பணத்தை திருடி மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் எப்போதும் இரகசியமாகவே இருக்காது என்றும், அது என்றைக்காவது ஒரு நாள் மக்களுக்கு தெரியவரும் என்றும், குற்றவாளிகள் உரிய தண்டனையை பெறவேண்டியிருக்குமென்றும் குறிப்பிட்டார்.

வறுமையற்ற நாட்டையும் ஒழுக்கப் பண்பாடான சமூகத்தையும் கட்டியெழுப்புவது இன்று எம்முன் உள்ள முக்கிய சவாலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த சவாலை வெற்றிகொள்வதில் நாட்டின் அரச அதிகாரிகள் மீது தான் முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சுக்களிலும் அமைச்சுக்களின் கீழ் உள்ள அனைத்து திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக கண்டறிந்து அவற்றை சரியாக வழிநடத்துவது அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மாதத்திற்கு ஒரு தடவையாவது குறித்த நிறுவனங்களுக்குச் சென்று பணிக்குழாமினரை சந்தித்து அவர்களை வலுவூட்டுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் புதிய அமைச்சுக்களின் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

Read more...

அடித்தார் அசிட் கலா அந்தர் பல்டி. புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டியதில்லையாம் !!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்று காலத்திற்கு முன்னர் யாழ்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியதுடன் அலரிமாளிகைக்கு விஜயகலாவை அழைத்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியை ராஜனாமா செய்யுமாறு உத்தவிட்டார். பதவியிழந்த விஜயகலாமீது சாட்டுப்போக்குக்கு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அமைச்சரவையில் ராஜாங்க கல்வியமைச்சர் பதவி விஜயகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அசிட் கலா தான் ஒருபோதும் புலிகளை உருவாக்க வேண்டும் என கூறவில்லை எனவும் யாழ்பாணத்திலுள்ள நிர்வாக பிரச்சினை தொடர்பாக பேசியதை ஊடகங்கள் திரிவுபடுத்தி விட்டன என்றும் தெரிவித்துள்ளார்.






Read more...

ஆட்டத்தை தொடங்கினார் ரவி கருணாநாயக்க

மின்சக்தி அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமனம் பெற்ற மறுகணமே இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக தம்மிக பெரோராவை நியமிக்க தீர்மானித்து தம்மிக பெரோராவுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பதகுந்த வட்டாராங்களில் இருந்து தெரியவருகின்றது.

பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா ஹெலிஸ் நிறுவனம், சம்பத் வங்கி, பேன்ஏசியா வங்கி, ரோயல் செரமிக் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களின் பங்குதாராக உள்ளார். பல தனியார் நிறுவனங்களின் பங்குதாரரான இவரை அரச நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமிப்பதன் ஊடாக அங்கு பல்வேறு பட்ட மோசடிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உண்டென அவதானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறே பிரபல வியாபாரியான அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆழுநராக நியமித்து அவர் பில்லியன் கணக்கில் நாட்டு மக்களின் பணத்தை சூறையாடினார் என்பது யாவரும் அறிந்த விடயம

மின்சாரசபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் அழைப்பு விடுவிக்கப்பட்ட போதிலும் வெளிநாடு சென்றுள்ள தம்மிக்க பெரேரா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் அறியக்கிடைக்கின்றது.

Read more...

வருகின்றது மூன்று கூட்டமைப்பு.

எதிர்வரும் தேர்தல் காலங்களில் மூன்று கூட்டமைப்புக்கள் உருவாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி சிறுபாண்மைக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட இணக்கம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கட்சியின் புதிய பெயராக ஜனநாயக கூட்டமைப்பு என்ற பெயரில் எதிர்வரும் தேர்தலின் போது போட்டியிட தீர்மானித்துள்ளது.

அத்தோடு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஓன்றினைவதோடு சிறு கட்சிகளுடன் இணைந்து செயற்பட கலந்துரையாடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லாத புதுப்பெயரில் களமிறங்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

பிரதான கட்சிகளில் இருந்து விலகிய அரசியல் பிரமுகர்கள் ஒன்றினைந்து கூட்டனி ஒன்றை ஏற்ப்படுத்தி தேர்தல் களத்தில் போட்டியிட ஒரு தரப்பினர் திட்டமிட்டு வருகின்றனர். இத்தரப்பிற்கு பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமை தாங்குவார் என்று பேசப்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com