Thursday, December 20, 2018

அமல்-எதுவரை? எழுகதிரோன்

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளட்) சார்பில் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் சதாசிவம் வியாளேந்திரன். கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது இளமானி பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர் அரசியலுக்கு புது முகமாகவே களமிறங்கினார்.

ஆனால் தனது முதல் வரவிலேயே அத்தேர்தலில் அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் ஓரங்கட்டி வெற்றியீட்டினார். அரசியல் அனுபவமும் மக்களிடையே பிரபலமும் கொண்டிருந்த கொண்ட செல்வராஜா, அரியநேந்திரன் போன்றவர்கள் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினர். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் வெற்றியீட்டிய போதிலும் கூட அவரால் குறைவான விருப்பு வாக்குகளையே (34039 ஆயிரம்) இத்தேர்தலில் பெற முடிந்தது.

இளம் வாக்காளர்களை கவர்வதிலும் இளம் சந்ததியினரின் தேவையறிந்து செயற்படுவார் என்கின்ற நம்பிக்கையை மக்களிடத்தில் பரப்புவதிலும் வெற்றியடைந்த சதாசிவம் வியாளேந்திரன் 39321 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

தனது இளம் பராயத்தையும் ஆரம்ப கல்வியையும் வெப்பவெட்டுவான் என்றழைக்கப்படும் பின்தங்கிய படுவான்கரை பிரதேசத்தில் கடந்துவந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான காலத்திலிருந்து தமிழரசு கட்சியினரின் மேட்டுக்குடி அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாதவராகவே தன்னை அடையாளப்படுத்தி வந்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளட்) சார்பிலான வேட்பாளர் இட ஒதுக்கீட்டின் ஊடாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இவர் போட்டியிட்ட போதிலும் இவருக்கோ இவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்குமோ முன் பின் புளட் அரசியலுடன் தொடர்புகள் இருந்ததாக அறிய முடியவில்லை.

வெளியேற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று பிரதமர் ரணில் விக்கரமசிங்காவை அப்பதவியிலிருந்து நீக்கி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.
இந்த சர்ச்சைகளுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமல் என்றழைக்கப்படும் சதாசிவம் வியாளேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். கூடவே மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய அமைச்சரவையில் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவி பிரமாணமும் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தேசிய அரசியலில் பாரிய குழப்பங்களுக்கு வழிவகுத்தது. அதே போல சதாசிவம் வியாளேந்திரனின் நடவடிக்கையும் வடக்கு-கிழக்கு மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

சதாசிவம் வியாளேந்திரனின் வெளியேற்றத்தை அடுத்து உடனடியாகவே நவம்பர் 4 ல் வவுனியாவில் கூடிய புளட்டின் மத்தியகுழு அவரை கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்தும் உறுப்புரிமையிலிருந்தும் விலக்கியது.
தமிழரசு கட்சியினர் வழமைபோலவே துரோக குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர். அத்தோடு அவர்களின் பின்னணியில் வியாளேந்திரனுக்கு எதிரான ஒரு சிறு ஆர்ப்பாட்டத்தையும் மட்டக்களப்பில் நடத்தினர். ஆனாலும் மட்டக்களப்பு சார்ந்த சமூக வலைத்தளங்களில் பங்கெடுக்கும் இளம் சமூகத்தினரால் அவரது நடவடிக்கை பற்றிய ஆதரவான கருத்துக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டு வந்தன.

அதிருப்திகள்

புளட் அமைப்பின் பிரதிநிதியாக இவர் இருந்தபோதும் அதன் தலைவர் சித்தார்தரை போல தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் விரோத அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஒருபோதும் கள்ள மெளனம் காத்து தலைமை விசுவாசத்தை காட்டவில்லை. மாறாக கிழக்கு மாகாணத்தின் சிக்கலான அரசியல் பிரச்சனைகளை கண்டுகொள்ள மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலை தொடர்ச்சியாக கண்டித்தும் விமர்ச்சித்துமே வந்திருக்கின்றார் வியாளேந்திரன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவுடன் உருவாகிய 'நல்லாட்சி' காலத்தில் மட்டக்களப்பில் தொடங்கப்பட்ட கல்குடா மதுபான தொழிற்சாலையும் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையும் அகற்றப்பட வேண்டும் என்பதில் இவர் தீவிர அக்கறை கொண்டிருந்தார். அவை தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பலவற்றிலும் கலந்து கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவமோ இது பற்றிய மக்களின் அபிலாசைகளை கண்டு கொள்ள மறுத்தது. ரணில் அரச சார்பு நிலைப்பாடு எடுத்தது.

மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதன் ஊடாக தமது குடும்ப வறுமையை போக்கி எதிர்கால வாழ்வை வளம்படுத்திக்கொள்ள முடியாத மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் வாழும் பல்லாயிரம் இளைஞர்களுக்கு உள்நாட்டு வேலைவாய்ப்புக்கள் மட்டுமே ஒரே தெரிவாக இருக்கின்றது. அதற்காகவே இன்றுவரை அவர்கள் படித்துவிட்டு அரச வேலைவாய்ப்புகளை நம்பியிருக்கின்றனர். இதன் பிரதிபலிப்பாக மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் பல வருடங்களாக உண்ணாவிரதங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் "நான் அரசிடம் வேலைவாய்ப்புக்களை கேட்டால் ஆயிரக்கணக்காக பெற்றுக்கொள்ளாலாம். ஆனால் அது எமது அரசியல் தீர்வுக்கான கருமங்களை பாதிக்கும் "என்று தமிழ் தேசியகூட்டமைப்பின் சம்பந்தன் சொல்லுவது போல ஒற்றைவழிப்பாதையில் குருட்டுத்தனமாக மக்களை அழைத்து செல்லவே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது. ஆனால் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் தத்தமது குடும்பங்களோடு வாழாது சொந்த நிலத்தில் மக்களோடு மக்களாக வாழும் வியாளேந்திரன் போன்ற இளந்தலைமுறை அரசியல்வாதிகள் இப்படி கண்மூடித்தனமாக செயற்பட முடியாது என்பதே களயதார்த்தமாகும்.

இத்தகைய மக்களின் தேவைகளை அணுகுதல் என்கின்ற அடிப்படையிலிருந்தே வியாளேந்திரன் போன்றவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமான விரிசலைகளை புரிந்து கொள்ள முயல வேண்டும். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேசப்படுகின்ற தேசியம், சுயநிர்ணயம் என்கின்ற வெற்று கோசங்களை விட வியாளேந்திரன் போன்றவர்களது தேர்தல் பிரச்சாரங்கள் பல்லாயிரம் இளைஞர்இயுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் பற்றிய உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை பேசாது மக்களிடம் வாக்கு கேட்கவோ இளைஞர்களை தன்னை நோக்கி ஈர்ந்திழுக்கவோ முடியாதென்பதை அவர் அறிந்திருந்தார். ஏனெனில் அவரின் பின்னால் அணிதிரண்டவர்கள் பாரம்பரிய தமிழரசு கட்சியின் வேட்டிகட்டிய வயோதிப தூண்கள் அல்ல. மாறாக ஆயிரமாயிரம் படித்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே அவர் தேர்தலை எதிர்கொண்டார். இப்படியாகத்தான் அவரது பாரிய வெற்றி சாத்தியமாயிற்று.

ஆனால் இந்த உறுதி மொழிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது என்பதை அவருக்கு காலமே உணர்த்தியது.

அவர் பாராளுமன்ற உறுப்பினராகியபோதும் வேலைவாய்ப்புக்கள் பற்றிய அவரது வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றமுடியாது போயிற்று. அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 'நல்லாட்சி' மீதான அரசியல் தீர்வு கனவுகளும் கானல் நீராகி கொண்டு போவதையிட்டு அவர் மட்டுமல்ல அனைத்து மக்களும் அதிருப்தி கொள்ளத்தொடங்கினர்.

மறுபுறம் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து நடாத்திய கூட்டாசியின் தோல்வியானது கிழக்குமாகாண தமிழர்களுக்கு பாரிய மனக்குறைகளை ஏற்படுத்தியுள்ளது. இனஉறவை வளர்ப்பதற்கு பதிலாக மென்மேலும் இனவிரிசல்களையே அது ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாகவும் கிழக்கு மாகாண தமிழர்கள் சமூக பொருளாதார அபிவிருத்தியில் மேலும் அடிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணருகின்றனர். இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பற்ற தன்மையே என்கின்ற குற்றச்சாட்டுக்கள் மக்களிடம் நிறையவே உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்கின்ற வகையில் எதிர்கால கிழக்கு மாகாண சபை பற்றிய மக்களின் ஆதங்கங்களையிட்டு கவனம் கொள்ள வேண்டிய தேவை வியாளேந்திரன் போன்றவர்களுக்கு உண்டு.

"கிழக்கு வடக்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டத்திலிருந்து அடுத்த தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கில் காட்டும் தீவிரம் கிழக்கில் காட்டவில்லை." என்கின்ற குற்றச்சாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வியாளேந்திரன் பகிரங்கமாகவே முன்வைத்தார்."யாழ்பாணத்திலோ கொழும்பிலோ இருந்து கொண்டு கிழக்கின் அரசியல் தலை விதியை யாரும் தீர்மானிக்க முடியாது" என்று அவர் முகத்திலறைந்தாற் போல் சொன்னார். அப்போதே அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேற தயாராகி விட்டார் என மட்டக்களப்பில் பரவலாக பேசப்பட்டமை நினைவு கூரத்தக்கது.

இந்த யதார்த்தத்தை சூழல்களை புறந்தள்ளிவிட்டு வியாளேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியமையை நோக்க முடியாது. இது வெறும் துரோகி, தியாகி வார்த்தை ஜாலங்களுக்கூடாக ஒற்றை பரிமாணமாக தீர்ப்பு சொல்லக்கூடிய விடயமல்ல .

ஏனெனின் அவரது வெளியேற்றத்தை தொடர்ந்து அவர் பிரதியமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார் என்பதை வைத்துக்கொண்டே வியாளேந்திரன் மீதான விமர்சனங்கள் வெளிவருகின்றன. அவர் பதவியை மட்டும் குறி வைப்பதாயின் புளட்டின் உபதலைவராகவும் கிழக்கில் புளட்டின் பிரதிநிதியாகவும் இருப்பவருக்கு காலமெல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் ஒதுக்கீடு கிடைக்கும். அவருக்கு இருக்க கூடிய தனிப்பட்ட செல்வாக்குடன் அவர் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

இலங்கையில் தமது சொந்த வாழ்வை வளம்படுத்திக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை விட சிறந்த தொழில்தரு நிறுவனம் இல்லாதிருக்கும் போது அவர் அதை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை.

கிழக்கின் தனித்துவ போக்குகள்

ஒரு பாரம்பரிய அரசியல் வரலாற்று தொடர்ச்சியுடன் வியாளேந்திரனின் வெளியேற்றம் அவதானிக்கப்பட்ட வேண்டும். கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் தமிழ் தேசியவாத முகாமிலிருந்து இத்தகைய வெளியேற்றங்கள் அதிசயமானவையோ புதியவையோ அல்ல. கிழக்கின் பல்லின சூழலின் சமூக பொருளாதார அரசியல் சிக்கல்களும் விசேடமானவை. வடக்கிலிருந்து எடுக்கப்படும் இவை சார்ந்த அரசியல் முடிவுகள் எப்போதும் தோல்வியையே தழுவி வந்திருக்கின்றன. கிழக்கு மாகாணசபையின் இரண்டாவது ஆட்சிக்காலம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

வடக்கு தலைமைகள் மீதான அதிருப்திகளை வெளிக்காட்ட காலத்துக்கு காலம் இது போன்ற வெளியேற்றங்கள் அவ்வப்போது இடம்பெற்றே வருகின்றன. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தமிழர் விடுதலை கூட்டணியில் சார்பில் தெரிவான எம்.சி.கனகரெத்தினம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறினார். அதன்பின்னர் மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார். அதனுடாக பெரும்பாலான வேலைவாய்ப்புக்களை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தார். ஆனால் அவரை தொடர்ந்து அரசியல் செய்ய முடியாதவாறு கொன்றழித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இளைஞர்களான உமா மகேஸ்வரன், பிரபாகரன், செல்லக்கிளி போன்றோரே துரோகி என்று அவரை சுட்டுக்கொன்றனர்.

அதேபோன்று பெருந்தலைவர் இராஜதுரை அவர்களை "1978ஆம் ஆண்டு சூறாவளி அழிவுகளை பார்வையிட வந்த பிரதமர் பிரேமதாசாவை வரவேற்க சென்றார்" என்கின்ற நொண்டி சாட்டை வைத்து அவரை அமிர்தலிங்கம் கட்சியிலிருந்து வெளியேற்றினார். இராஜதுரையும் அதன்பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைச்சரானார். அதனால் மட்டக்களப்பு பாரிய அபிவிருத்திகளை கண்டது. சுமார் பன்னிரு வருடங்கள் அவர் அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றினார். 1989ஆம் தேர்தலில் சுதந்திரமாக போட்டியிடக்கூடிய சூழ்நிலை இன்மையால் அவர் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை. அதன்பின்னர் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் இவர்களையெல்லாம் யாழ்ப்பாண மேட்டுக்குடி அரசியல் துரோகிகளாகவே சித்தரித்து வந்துள்ளது. தமது எழுபது வருடகால அரசியலின் அடையாளமாக ஒரு செங்கல்லைத்தானும் காட்டமுடியாதவர்கள். மாற்று வழியில் பயணித்து இந்த மண்ணை வளப்படுத்திய தலைவர்களை பார்த்து துரோகிகள் என்பது விந்தையானது.

தமிழரசு கட்சியோடு முரண்பட்டு கட்சி மாறி அரசியல் செய்வோரையும், தேசிய கட்சிகளில் இணைந்து பணி செய்பவர்களையும் தமிழரசு கட்சியினர் துரோகிகள் என தூற்றி வருவது வழமையானதுதான்.

ஆனால் அவர்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரித்து அதனை நாகரீகமாக எதிர்கொள்ள முடியாமல் வன்முறை மூலமும் பழிவாங்கலூடாகவும் தம்மை நிலைநிறுத்தி கொள்ளுவதே தமிழரசு கட்சியினரது மேட்டுக்குடி குணாம்சமாகும். ஆனால் இத்தகைய ஏக தலைமைத்துவ திணிப்பு என்பது எப்போதும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதே உண்மையாகும்.

டிசெம்பர் 16ஆம் திகதி புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமனமாகியுள்ளதோடு வியாளேந்திரனின் 50 நாள் அமைச்சர் அந்தஸ்தும் முடிவுக்கு வந்துள்ளது. வியாளேந்திரன் தற்போது தனிமனிதன். அரசியலுக்கு ஸ்தாபனம் என்பது மிக அவசியமாகும். ஏனெனில் தனிமரம் தோப்பாகாது என்பது அரசியலுக்கு அச்சோட்டாக பொருந்தும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள வியாளேந்திரன் தனது எதிர்கால அரசியல் தொடர்பில் எப்படியான பாதையை தெரிவு செய்ய வேண்டும்? என்கின்ற கேள்விக்கு அவர் விடையை கண்டடைய வேண்டும்.

இந்த இடத்தில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அளித்த பேட்டியில் அவர் தெளிவாக முன்வைத்த ஒரு கருத்து கவனம் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.. அதாவது "அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு போதும் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது அபிவிருத்தியையும் உரிமைக்குரல்களையும் ஒருமித்து சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இன்றுஏற்றப்பட்டுள்ளது".என்கின்றார் அவர்.

இந்த இடத்தில்தான் அபிவிருத்தியையும் உரிமையையும் இணைத்து பயணிக்க கூடிய ஓரசியல் போக்கு எப்படியிருக்க வேண்டும்?என்கின்ற கேள்வி எழுகின்றது. அதற்கு கடும்போக்கு தேசியவாதமோ, ஐக்கிய தேசிய கட்சியுடனான சரணாகதி அரசியலோ ஒரு போதும் முன்னுதாரணமாக இருக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறி பிரதியமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட போதிலும் அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபாலவோ அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகள் எதனதும் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். தேசிய கட்சிகளில் இணைந்திருந்து கொண்டு அபிவிருத்தியை நோக்கி மட்டும் திறம்பட செயற்பட முடியும். ஆனால் உரிமைசார் கேள்விகளை கறாராக முன்வைக்க முடியுமா? இல்லை என்பதை அதற்கான உறுதியான பதிலாகும். எனவே தேசிய கட்சிகளில் அவர் இணைவதற்கான முடிவு அவரிடம் இல்லையெனலாம்.

இளமையும் துடிப்பும் மிக்க வியாளேந்திரன் போன்றவர்கள் தமிழ் தேசிய போலிகளின் துரோக பூச்சாண்டிகளை கண்டு அஞ்சாது தமது அரசியல் பயணத்தை தொடரவேண்டும். தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புரைகளுக்கும் கிழக்கின் தனித்துவ அரசியலுக்கூடாகவே அவர் பதிலிருக்க வேண்டும். யாழ்பாணத்து மேட்டுக்குடி பிரச்சாரங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் அஞ்சாது ஒருகிழக்கின் மனிதனாக தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.

தமிழ் தேசிய போலிகளால் இதுவரை காலமும் துரோகிகள் என தூற்றப்பட்டவர்களான நல்லையாதான் மட்டக்களப்புக்கு முகவரியை தந்தவர் என்பதும், தேவநாயகம்தான் கிழக்கு பல்கலைக்கழகத்தை தந்தவரெவென்பதும், இராஜதுரைதான் இசை நடன கல்லூரியை தந்தவரென்பதும், சந்திரகாந்தன்தான் முப்பது வருட அழிவுகளிலிருந்து கிழக்கு மாகாணத்தை புதுப்பொலிவு காணச்செய்தவரென்பதும் வரலாறு கற்றுத்தந்த படமாகும். எனவே இந்த "துரோகிகள்" இல்லாது தமிழரசு கட்சியோடு மட்டும் குப்பை கொட்டிக்கொண்டிருந்தால் கிழக்கு மாகாணம் இன்று வெறும் மயானக்காடாகவே காணக்கிடைக்கும்.

கிழக்கின் அரசியல் சிக்கல்களுக்கு அந்த மண்ணிலே இருந்து உருவாகும் அரசியல் கட்சியினால்தான் ஒரு சரியான பாதையை காட்ட முடியும் என்பதை மக்கள் நன்கே உயர்ந்து வரும் காலமிது. அந்த வகையில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கையின்மையை வெளிக்காட்டியுள்ளனர்.

எனவே இந்த தேசியவாத போலிகளிடமிருந்து வெளியேறி கிழக்கு மாகாண அரசியலை பொறுத்தவரையில் வியாளேந்திரன் போன்றவர்கள் கிழக்கின் தனித்துவத்துக்கான தலைமையை பலப்படுத்துவது மட்டுமே அவர் முன்னுள்ள வரலாற்று கடமையாகும். தனித்துவ கட்சியுடன் பயணிக்கும் தலைமை மென்மேலும் பலம்பெறும் போது அபிவிருத்தி அரசியலோடு இணைத்து உரிமைசார் விடயங்களில் ஒரு பேரம்பேசும் சக்தியாக கிழக்கு மக்களால் எழுந்து நிற்க முடியும்.


நன்றி உண்மைகள்

Read more...

இரவு இராணிகளும் அன்ரன் பாலசிங்கமும்

நான் வாழும் மொன்றியால் நகரில் சென் கதரீன் வீதி, ரொறன்ரோ நகரில் குயீன் வீதி ஆகியவற்றில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை இரவு பகலாக காணலாம். இதில் பலர் விபச்சாரிகள் அல்ல. போதைப் பொருளுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் துன்பப்படும் பெண்களே அதிகம்.வேலையற்ற இவர்கள் போதைப் பொருள் வாங்க பணம் தேவைப்படுவதால் உடலை விற்பவர்கள். அவர்களுக்கு தேவை பணம் அல்ல. போதைப் பொருள். பணம் சம்பாதிக்க உடலை விற்பவளே விபச்சாரி.

இந்த வகையான பெண்கள் தமது போதைப் பழக்கத்தால் தம்மையும் சமூகத்தையும் அழிப்பதை உணருவது இல்லை. அதை உணர அந்தப் போதையும் விடுவதில்லை.

அன்ரன் பாலசிங்கமும் இதே வகையைச் சேர்ந்தவர்தான். அவருக்கு போதை அருந்துவது, சுகபோகமான வாழ்வு இவைகளே பிடித்தமானவை. இதற்காகவே புலிகளோடு ஒட்டிக் கொண்டார். இவரை சிலர் கலாநிதி என்றார்கள். சிலர் மாக்சிசவாதி என்றார்கள். தத்துவஞானி என்றார்கள். ஆனால் எதற்குமே பொருத்தமில்லாத மனிதராகவே வாழ்ந்தார்.

இவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பது புரியவில்லை. போராட்டத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? மாக்சிசத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

இவர் ஒரு மாக்சிசவாதி என்றால், புரட்சிவாதி என்றால் ரெலோ மீது தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த கொடூரமான சம்பவங்களை கண்டித்திருப்பார் அல்லது மன்னிப்பையாவது கோரியிருப்பார். ஏனைய அமைப்புகளையாவது இயங்க அனுமதித்து இருப்பார். இஸ்லாமிய மக்களை வெளியேற்றுவதை தடுத்திருப்பார்.

ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. புலிகள் எத்தனை அப்பாவி மக்களைக் கொன்றார்கள். எத்தனை கிராமங்களுக்கும் புகுந்து படுகொலைகள் செய்தார்கள். இந்த தவறுகளுக்கு நியாயம் சொன்னார். தவறுகளை கண்டுகொள்ளவே இல்லை. ஆரம்பம் முதல் தவறுகள் தொடர்ந்து கொண்டே வந்தன. இதை கண்டிக்கவோ, திருத்தவோ இல்லை.

பாலசிங்கம் செய்தது, சொன்னது எல்லாம் பிரபாகரனுக்கு எது பிடிக்குமோ, எப்படி பேசினால் பிடிக்குமோ அப்படி நடந்து கொண்டார். தனக்கு எது தேவையோ அவற்றை அவர் பெற்றார். இதேபோல தமிழர்களுக்கு எப்படிப் பேசினால் பிடிக்கும் என்பதையும் நன்கறிந்து இருந்தார்.

தனது அமைப்பை, போராட்டத்தை, மக்களை என்றைக்குமே பண்படுத்த முயலவில்லை. விரும்பியதும் இல்லை. ஒரு பயங்கரவாத அமைப்பாக தொடர்வதை வேடிக்கை பார்த்தார். ஒவ்வொரு பயங்கரவாத செயல்களுக்கும் நியாயம் தேடிக் கொடுத்தார்.

புலிகளைப் பொறுத்தவரை பல அராஜகங்களை செய்தார்கள். அத்தனைக்கும் மௌனமே அவரது பதிலாக இருந்தது. ஒரு சராசரி மனிதனாகக்கூட அவரால் செயற்பட முடியவில்லை. அவரை பிரபாகரனால் இயக்கப்பட்ட இயந்திரமனிதன் (றொபோ) என்றும் கூறலாம்.

அவருக்கு தமிழர் பிரச்சினையும் தெரியாது. இலங்கை அரசியலும் தெரியாது. பிரபாகரனுடைய உடல், உள மொழிகளை நன்கறிந்து பேசுகின்ற மனிதனாகவே இயங்கினார்.

இந்த சுய உணர்வற்ற மனிதனை உயர்த்துவதன்மூலம் சமூகத்தில் வரவேற்பை கைதட்டல்களை பெற முயலும் மனிதர்கள் இன்றும் உள்ளனர்.

தன்னுடைய போதை சுகபோக தேவைகளுக்காக தன்னிடம் உள்ள ஆங்கில அறிவை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் விற்ற அற்ப மனிதனே அன்ரன் பாலசிங்கம். போதைப் பொருள் வாங்க உடலை விற்று பணம் பெறும் பெண்களைப் போன்ற ஒரு மனிதனே அன்ரன் பாலசிங்கம்.

விஜய பாஸ்கரன்

Read more...

பொலிஸ் பரிசோதகரிடம் லஞ்சம் பெற முயன்ற பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்.

படைத் தலைமையகத்தில் கடமைபுரியும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் லஞ்சம் பெற முயன்று மாட்டிக்கொண்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் லஞ்சம் பெற முயன்ற குறித்த அதிகாரியை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த அதிகாரி இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தத்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேவை தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள தான் பரிந்துரை செய்வதாக தெரிவித்து, ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கேட்டு, பின்னர் அதனை ஒரு லட்சம் ரூபாவாக குறைத்து, அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதே குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதனால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு இலஞ்ச ஊழல் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

Read more...

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்தது.

இன்று காலை புதிய அமைச்சரவைக்கான 29 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க - தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

ஜோன் அமரதுங்க - சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர்

காமினி ஜயவிக்ரம பெரேரா - புத்த சாசனம் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

மங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்

லக்ஷ்மன் கிரியெல்ல - பொது முயற்சியான்மை, மலைநாட்டுப் பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்

திலக் மாரப்பன - வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர்

ராஜித சேனாரத்ன - சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

ரவி கருணாநாயக்க - மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

வஜிர அபேவர்தன - உள் விவகாரம், உள் நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்

ரிஷாத் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சர்

பாட்டளி சம்பிக்க ரணவக்க - பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

நவீன் திசாநாயக்க - பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர்

பி. ஹெரிசன் - விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்

கபீர் ஹாசிம் - பெருந் தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

ரஞ்சித் மத்தும பண்டார - பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர்

கயந்த கருணாதிலக - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்

சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்

அர்ஜுன ரணதுங்க - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

பழனி திகாம்பரம் - மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி

சந்திரானி பண்டார - மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் வறட்சி கால அபிவிருத்தி அமைச்சர்

தலதா அத்துகோரல - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

அகிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்

அப்துல் ஹலீம் - தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர்

சாகல ரத்னாயக்க - துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ - தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

மனோ கணேசன் - தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர்

தயா கமகே - தொழில், தொழிற் சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

மலிக் சமரவிக்ரம - அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர்.


Read more...

Wednesday, December 19, 2018

ஹக்கீம், சுமந்திரன் எழுப்பிய மஹிந்தவின் பா உறுப்புரிமைப் பிரச்சினை. வை எல் எஸ் ஹமீட்

ஐ ம சு கூட்டமைப்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக அங்கத்துவம் பெற்றதையடுத்து ஒரு மாதமுடிவில் சரத்து 99(13) இன் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தாமாக இழந்துவிடுவார்?

எனவே, தற்போது ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் அவரை கௌரவ என்று அழைப்பதா? அல்லது திரு என அழைப்பதா? என கேள்வியெழுப்பிய பா உ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து தேர்தல் ஆணையாளரை UPFA யாப்புடன் வரவழைத்து இது தொடர்பாக ஆராயவேண்டும்; என 18/12/18 பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இதேபோன்றதொரு கருத்தை பா உ, சுமந்திரனும் தெரிவித்திருந்தார்.

கட்சிமாறுவதால் 99(13) இன் கீழ் பதவியிழத்தல் எவ்வாறு நிகழலாம்; என முன்னைய ஆக்கத்தில் பார்த்தோம். இப்பொழுது இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் பின்னணியில் மேலும் ஆராய்வோம்.

99(13) (a) இன் பிரகாரம் ஒருவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பதற்கு:

முதலாவது தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட “கட்சியின் அங்கத்துவத்தை இழக்க வேண்டும்”. அவ்வாறு இழந்து ஒரு மாதமுடிவில் அவரது அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகும்.

இங்கு எழுகின்ற பிரதான கேள்வி ‘ ஒரு கட்சியின் அங்கத்துவத்தை 99(13) இன் பிரகாரம் ஒருவர் எவ்வாறு இழப்பார்?

(1) Resignation ராஜினாமா
(2) Expulsion ( கட்சியிலிருந்து) விலக்குதல்
(3) otherwise வேறு வகையில்

மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யவில்லை. எனவே, முதலாவது தலைப்பின் கீழ் பதவியிழக்க மாட்டார்.

அவர் அவரது கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. எனவே, இரண்டாவது வகையாலும் பதவியிழக்க மாட்டார்.

அவ்வாறாயின் இது மூன்றாவது வகையின் கீழ்தான் வரவேண்டும். அதாவது “ வேறுவகையில்” ( otherwise)

இந்த வேறுவகை என்பது எதைக்குறிக்கின்றது; என்பது வியாக்கியானத்தோடு சம்பந்தப்பட்டது. அரசியலமைப்புக்கு உத்தியோகபூர்வ வியாக்கியானத்தைத் தருகின்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு மாத்திரமே உண்டு. அவ்வாறு உயர்நீதிமன்றம் தீர்மானிக்காதவரை யாரும் பொருத்தமான வியாக்கியானத்தைச் செய்யலாம்.

பா உ ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் பேசும்போது, “விலக்கினால் மாத்திரம்தான் உயர்நீதிமன்றம் செல்லலாம்” என்று தெரிவித்தார். அவரது இந்தக் கூற்று பகுதியாக சரியானதாகும். முழுமையாக சரியென்று சொல்லமுடியாது.

ஏனெனில் கட்சி விலக்குகின்றபோது மாத்திரம்தான் அவ்விலக்கலுக்கு எதிராக அதாவது கட்சிக்கெதிராக ஒரு மாதத்திற்குள் 99(13) இன் கீழ் உயர்நீதிமன்றம் செல்லலாம். அவ்வாறு சென்றால் தீர்ப்பு வரும்வரை அவரது பதவி பறிபோகாது. ஆனால் பா உ ஹக்கீம் கூறுவதுபோன்று otherwise என்ற சொல்லுக்குள் இதனைக் கொண்டுவரலாம் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அந்த வெற்றிடத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம்தான் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 64 இன் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவித்தால் அவர்களுக்கெதிராக நீதிமன்றம் செல்வதை எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. அவ்வாறு செல்லமுடியாதென்றால் சகல கட்சிகளும் விலக்குதல் என்ற ஒன்றைச் செய்யாமல் otherwise என்ற சொல்லுக்குட்பட்டு அங்கத்துவத்தை இழந்தார்; என்று அறிவித்து இலகுவாக வேண்டாத பா உ க்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்.

அவர் தொடர்ந்து கூறும்போது ஒருவர் கட்சிமாறுகின்றபோது “தாமாகவே பதவியிழந்தவராக கருதப்படுவார்” என்று கூறுகின்றார். இந்த வியாக்கினம் பிழையானது. ஏனெனில் கட்சியின் அங்கத்துவத்தை இழந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்; என்பது 99(13) படி சரியாகும்.

இன்னொரு கட்சியில் இணைந்தால் தனது கட்சி அங்கத்துவத்தை இழப்பாரா? இல்லையா? என்று 99(13) கூறுகின்றதா? எதைவைத்து அந்த முடிவுக்கு வருவது. ஹக்கீம் அவர்கள் அதற்கும்மேல் ஒரு படிசென்று ipso facto பாராளுமன்ற அங்கத்துவத்தையே இழந்துவிடுவார்; என்பது என்ன அடிப்படையில் .

அது அவர்களுடைய கட்சி யாப்பையும் தீர்மானத்தையும் பொறுத்தது. இவர் கட்சியின் அங்கத்துவத்தை இழந்துவிட்டார்; என்று அவரது கட்சி அறிவித்தால் அங்கிருந்துதான் 99(13) செயற்பட ஆரம்பிக்கும். எவ்வாறு கட்சி அங்கத்துவத்தை இழப்பது என்பது அவர்களது கட்சிக்குரிய விடயம்.

தெரிவுக்குழு அமைத்தல்

நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மக்களால் நீதித்துறையினூடாக செயற்படுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாராளுமன்றத்தின், அல்லது அதன் அங்கத்தவர்களின் சிறப்புரிமை, அதிகாரம், immunity என்பன தொடர்பான நீதித்துறை அதிகாரத்தை நீதிமன்றம் செயற்படுத்த முடியாது. அதை சட்டத்திற்குட்பட்டு பாராளுமன்றமே செயற்படுத்த வேண்டும்; என்று சரத்து 4(c) கூறுகின்றது.

இதனைக் குறிப்பிட்டு மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினரா? என்பதைத் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழு ஒன்றை நியமித்து UPFA இன் யாப்பை ஆராயவேண்டும்; எனக் கூறுகின்றார்.

பாராளுமன்றத்திற்கு வேண்டிய தெரிவுக்குழுவை நியமிக்கின்ற அதிகாரம் இருக்கின்றது. ஆனால் தெரிவுக்குழு ஒரு கட்சியின் வேலையைச் செய்யமுடியுமா?

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சி மாறுவது பாராளுமன்றத்தின் அதிகாரத்தோடு, சிறப்புரிமையோடு, immunity யோடு சம்பந்தப்பட்ட விடயமா? அவர் 99(13) இன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தால், பா உ இல்லாத ஒருவர் பாராளுமன்றத்தில் இருப்பது சிறப்புரிமை மீறலில்லையா? என்ற கேள்வி எழலாம். அது அவரது பேச்சிலும் தொனித்தது, நிலையியல் கட்டளை 21 ஐ சுட்டிக்காட்டியபோது.

நியாயம். ஆனால் இங்கு கேள்வி மஹிந்த பா உ வா? வெளி ஆளா? என்பதல்ல. அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டது, எல்லோருக்கும் தெரியும். கேள்வி, அவர் தற்போது தனது பா உறுப்புரிமையை இழந்திருக்கின்றாரா? இல்லையா? என்பதுதான். அதைத் தீர்மானிப்பதற்கு எந்த சட்டத்தின்கீழ் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது?

UPFA ஒரு Alliance. பொதுவாக alliance களில் உள்ள கட்சிகள்தான் அங்கத்தவர்கள். அங்கத்துவக் கட்சிகள் தமது அங்கத்தவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்போது அது alliance ஐக் கட்டுப்படுத்துகின்ற சரத்துக்கள் அதன் யாப்பில் இருக்கும். மஹிந்த விடயத்தில் அவ்வாறு எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் நடக்கவில்லை. அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு எடுகோளுக்கு. ஶ்ரீ ல சு க, UPFA இன் ஓர் அங்கத்துவக் கட்சி. அதன்யாப்பின் பிரகாரம் கட்சிமாறுபவர்கள் அங்கத்துவத்தை இழப்பார்கள் என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அதை ஶ்ரீ சு கட்சி UPFA இற்கு அறிவித்து UPFA பா செ நாயகத்திற்கு அறிவித்து மஹிந்த பதவியிழக்கலாம். அதுவேறுவிடயம்.

அவர்கள் நடவடிக்கை எடுக்காதபோது தெரிவுக்குழு அதனைச் செய்து பா செ நாயகத்திற்கு அறிவிக்குமா?

எனவே, இவர்களது நிலைப்பாட்டிலுள்ள முதலாவது தவறு: “ otherwise “ ‘ வேறுவகை’ என்றுசொல்லுக்கு இவர்களாக, இன்னுமொரு கட்சிக்கு மாறினால் என்று பொருள் கொடுத்ததாகும்.

இரண்டாவது, ஒருவர் இன்னுமொரு கட்சிக்கு மாறினால் அவர் தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் அங்கத்துவத்தை இழப்பாரா? இல்லையா? என்பது அந்தக் கட்சிக்குரிய விடயம்.

ஒரு கட்சியின் வேலையை ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழு செய்யமுடியாது.

சுருங்கக்கூறின், ஆடை கழுவும்போது “ சவர்காரம் விடும் இடத்தில் இருந்து ‘ நீலம்’ தன் வேலையை ஆரம்பிக்கும்” என்று ‘ நீல’ விளம்பரத்தில் கூறுவார்கள். அதுபோல் ஒரு கட்சி “ இவர் எமது கட்சி அங்கத்துவத்தை இழந்துவிட்டார்” என்று அறிவித்தால் அந்தக் கணத்தில் இருந்துதான் 99(13) ஒரு பா உ விடயத்தில் செயற்பட ஆரம்பிக்கும்.

அந்தக் கட்சி அவ்வாறான அறிவிப்பைச் செய்வதற்கான அடிப்படைக்காரணிகள்தான், ராஜினாமா, விலக்குதல், வேறுவகை என்பனவாகும். ஒரு கட்சியின் அங்கத்துவம் என்பது அந்தக்கட்சிக்கு மட்டும் உரிய விடயம். அதில் வெளியார் தலையிடமுடியாது.

Read more...

பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட டெக் நிறுவனங்களுக்கு ஃபேஸ்புக் அளிக்கிறதா?

நியூயார்க் டைம்சின் அதிர்ச்சி ரிப்போர்ட்

சமூகவலைத்தள மிகப்பெரிய நிறுவனமான ஃபேஸ்புக், பயனாளர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்காக பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கத் தகவல்களை மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட மகா தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அளிப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பேஸ்புக் தான் ஒப்புக் கொண்ட தகவல்பகிர்வுக்கும் அப்பால் சிலபல தகவல்கள் தொழில் நுட்ப நிறுவனங்களிடம் பகிரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் தன் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை வாசிக்க நெட்பிளிக்ஸ், ஸ்பாட்டிஃபை ஆகிய நிறுவனங்களுக்கு வசதி செய்து கொடுப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் தேடல் எந்திரமான ‘பிங்’ பேஸ்புக் பயனாளர்களின் நண்பர்களின் தகவல்களை தங்கல் தேடல் எந்திரம் மூலம் அணுக பேஸ்புக் அனுமதிக்கிறது, அனுமதியின்றி இதைச் செய்வதாகத் தெரிகிறது. இதே போல்தான் அமேசானும் பயன்படுத்திக் கொள்ள பேஸ்புக் அனுமதிப்பதாக செவ்வாயன்று நியுயார்க் டைம்ஸ் அதிர்ச்சி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்காவுக்கு பகிரப்பட்ட மோசடியில் சிக்கித் தவிக்கும் பேஸ்புக், சுமார் 150 நிறுவனங்களுக்கு பேஸ்புக் பயனாளர்கள் தகவல்களைப் பெற வசதி செய்து கொடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தக ராட்சத நிறுவனங்கள், பொழுதுபோக்கு ஊடக நிறுவனங்கள், வாகனத் தயாரிப்பாளர்கள், மற்றும் ஊடக நிறுவனங்கள் சிலவற்றுக்கும் கூட பயனாளர்கள் தகவல்கள் அணுக முடிவதாக இருக்கிறது.

அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனின் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தை நடத்துபவரான டேவிட் விளாடெக், “சம்பந்தமில்லாத 3ம் நபர்கள் குறிப்பாக பெரிய நிறுவனங்கள் பயனாளர்களின் அனுமதி பெறாமல் தகவல்கள் பகிரப்படுகின்றன” என்றார்.

மேலும் இது குறித்த 270 பக்க அறிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பயனாளர்கள் தகவல்கள் பல நிறுவனங்களுக்குப் பகிரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வேடிக்கை என்னவெனில் பகிரமுடியாது என்று செயலிழக்கச் செய்தாலும் தகவல்கள் எப்படியோ கசிகின்றன. மார்க் ஸுக்கர்பர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனைவரது தகவல்களும் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த நிலையிலும் இது தொடர்வது கவலையளிக்கிறது என்று பெடரல் ட்ரேட் கமிஷன் உணர்கிறது.

நன்றி பிபிசி தமிழ்

Read more...

எனது பெற்றோர், கண்களை தானமாக வழங்கினர் - அதனால் இருவர் உலகத்தை பார்க்கின்றனர்.

மரணித்த போதும் தனது பெற்றோர் உலகை பார்த்துக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது பெற்றோர் தங்கள் கண்களை தானம் செய்தமையினால் அவர்களின் கண்கள் ஊடாக இருவர் இந்த உலகை பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த பின்னணியாக இருந்தாலும் உடற்பாகங்களை தானம் செய்ய வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற கண் தான நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்கள், இரத்தம், சிறுநீரகம் தானம் வழங்குவதற்கு மேலதிகமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடி தானம் ஒன்றை தனது மகள் பெயரில் ஆரம்பித்தேன்.

அதற்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமடைய செய்தது. இதன்மூலம் இலங்கையிலுள்ள தியாக குணமுடைய மக்களை நன்றாக உணர முடிவதாக குறிப்பிட்டார்.

தனது பெற்றோர் உயிரிழப்பதற்கு முன்னர் தங்கள் கண்களை தானமாக வழங்க எழுதி வைத்தனர். அதற்கமைய இன்று இருவர் உலகின் வெளிச்சத்தை பார்க்கின்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் உலகை பார்க்கின்றார்.

அதேபோன்று இலங்கையர்கள் தானம் வழங்க முன்வர வேண்டும் என சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

Read more...

இரண்டு பிரதமர் இழுபறி முடிந்த ஈரம் காய்வதற்குள் தொடங்கியது இரண்டு எதிர்கட்சி தலைவர் இழுபறி.

நாட்டின் பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கம் செய்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததில் நாட்டின் அரச யந்திரம் சுமார் 50 நாட்கள் செயலிழந்து கிடந்தது. அதற்கான தீர்வு உயர் நீதிமன்றத்தினூடாக கிடைக்கப்பெற்று நிலைமைகள் வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் புதிதாக எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பான சிக்கல் எழுந்துள்ளது.

முன்னாள் எதிர்கட்சித் தலைவரான இரா சம்பந்தனை சட்ட ரீதியாக ஒழுங்கு விதிகளை பின்னபற்றி பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் தவறியுள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச அப்பதவிக்கான தகுதியை இழந்து விட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இன்று பாராளுமன்றில் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் இன்று பாராளுமன்றில் இரா சம்பந்தன் பேசுகையில் :

தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க தங்களது அனுமதியை வேண்டுகிறேன்.

2015 ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் பாராளுமன்றம் செப்டம்பர் 2015 இல் கூடியபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இரண்டாவது அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதிகூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் என்னை மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டிருந்தார். அந்த தீர்ப்பினை சபாநாயகர் வழங்கிய போது அதுவே எனது இறுதி முடிவு எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

நேற்றைய தினம் டிசம்பர் 18 ஆம் திகதியன்று, மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று சபாநாயகர் மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக அறிவித்திருந்தார்.

இரண்டுமுறை மீளுறுதி செய்து எதிர்க்கட்சி தலைவராக நியமித்த என்னை பதவியிலிருந்து நீக்காமல் இந்த அறிவிப்பினை சபாநாயகர் செய்ததுமன்றி, இந்த செயலானது தற்போதைய பாராளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியினை தக்க வைத்திருப்பதாகவே புலப்படுகின்றது. மேலும் என்னை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதில் சபாநாயகரிற்கு பூரண திருப்தி இருக்கவில்லையா என்ற கேள்வியினை இது தோற்றுவிக்கின்றது.

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியைவிட அதிகளவு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொண்டுள்ளதனை கேள்விக்குட்படுத்த முடியாது. பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் என்னை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டீர்கள்.

இதற்கு காரணம் என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இந்த இரு கட்சிகளினதும் ஒரு சாரார் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தார்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகார தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மட்டுமல்லாது பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் ஒரு அமைச்சராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான இன்னும் பலர் அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தனர். அவர்கள் எல்லோரும் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள்.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுவதானது முறையற்ற செயலாக அமைந்திருக்கும். இந்த பின்னணியில் தான், உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் பாராளுமன்ற சம்பிரதாய மற்றும் சாசன முறைப்படி பாராளுமன்றில் இரண்டாவது பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படுவதனை நடைமுறைப்படுத்தி என்னை எதிர்க்கட்சி தலைவராக இரண்டுமுறை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியிலிருந்து பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. எமது அரசியல் யாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய உயர் மட்டதில் நீதித்துறையினால் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சில முடிவுகள் இந்த விடயங்கள் தொடர்பில் எட்டப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில்தான் மேற்குறித்த எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் தீர்மானமொன்றினை வழங்கியிருக்கின்றீர்கள். நீதிமன்ற தீர்ப்பிற்கமைய கடந்த 16 ஆம் திகதி பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை.

நேற்றைய தினம் 18 ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள் சபையிலே கடந்து வந்து அரசாங்க தரப்பில் அமர்ந்து கொண்டனர். அரசாங்கம் ஒன்று நியமிக்கப்படாத இந்த பின்னணியில் அவசரமாக இன்னொமொருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கான தேவை இல்லை என்பதனை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

தற்போது பதவியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரை நீக்காமல் அப்படியான அறிவிப்பினை செய்தமையானது விடயங்களை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. மேலும் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் அக்கட்சியிலிருந்து விலகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையானது வெற்றிடமாக உள்ளது என்ற குற்ற சாட்டும் உள்ளது.

சபாநாயகரால் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த குறித்த உறுப்பினர் அறிவித்த அந்த நாளில் பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லை என்பதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீங்கள் எடுத்த தீர்மானமானது அவசரமாகவும் எமது அரசியலமைப்பை மீறும் வகையிலும் இருக்கின்றதாகவே கருதப்படுகின்றது.

மேலே நான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் இலங்கை தனது மிக முக்கிய சட்டமான அரசியலமைப்பினை மதிக்காத ஒரு தோல்வியை நோக்கி நகருகின்ற நாடாக மாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

பிளவுபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டில் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள் இந்த நடவடிக்கையினை இந்த நாடு இன்றைக்கு இருக்கும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு மூல காரணமாக அமைந்த பெரும்பான்மைவாத சிந்தனையாகவே கருதுகிறார்கள்.

இந்த சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கிறது.

முழு நாட்டினதும் நன்மை கருதி எமது மிக பிரதானமான சட்டமான அரசியல் யாப்பின் புனித தன்மையை பாதுகாக்கும் முகமாக தேவையான மாற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானதொன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

டிஐஜி நாலக டி சில்வா வின் விளக்க மறியல் நீடிப்பு. ஹொங்கொங் சென்ற சிஐடி குழு நாடு திருப்பியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 02ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேநேரம், மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்த நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக கடந்த 8 ஆம் திகதி இரவு ஹொங்கொங் நோக்கி சென்ற குழுவினர் கடந்த 14 ஆம் திகதி நாடு திரும்பி வந்துள்ளனர்.

சிஐடி யினர் சந்தேகித்ததன் பிரகாரம், தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒலிப்பதிவுகள் பலவற்றை குறித்த தொலைபேசி நிறுவனத்தால் மீளப்பெற முடிந்துள்ளது.

அவ்வாறு மீளப்பெறப்பட்ட ஒலிப்பதிவுகள் அடங்கிய பென் டிரைவ் (Pநn னுசiஎந) இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த ஒலிப்பதிவுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சுக்கள். இரண்டாவது அமைச்சு யாருக்கு? உள்ளே குத்துவெட்டு.

மு.கா மூலமாக அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.

சிங்கள ஆட்சியாளர்களினால் இரண்டு அமைச்சர் பதவிகள் மு.காங்கிரசுக்கு வழங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஏனெனில் எத்தனை அமைச்சுக்களை வழங்க வேண்டுமென்று தீர்மானிப்பது மு.க தலைவரல்ல. மாறாக சிங்கள அரசாங்கமாகும்.

அப்படித்தான் மு.காங்கிரசுக்கு இரண்டு அமைச்சுக்கள் வழங்கப்பட்டால் தலைவருக்கு அடுத்ததாக இரண்டாவது அமைச்சர் பதவியை யாருக்கு வழங்குவது ? எந்த பிரதேசத்துக்கு வழங்குவது ? எந்த அடிப்படையில் வழங்குவது ? என்ற கேள்வியுடன் அவைகள் ஆராயப்பட வேண்டியவை.

முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகமான வாக்குகளை வழங்குகின்ற மாவட்டத்துக்கு அப்பதவி வழங்குவதுதான் நியாயம் என்றால் அது அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படல் வேண்டும்.

அப்படியல்லாமல் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய செய்வதற்காக அந்த பதவியை வழங்குவதென்றால், முதலில் திருகோணமலை மாவட்டத்தினையும், இரண்டாவது மட்டக்களப்பு மாவட்டத்தினையும் தேர்வு செய்யவேண்டும்.

திருகோணமலை மாவடத்தில் சுமார் 35 முஸ்லிம் கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், அரசியல் அதிகரமின்றியும் காணப்படுகின்றது.

அப்படியல்லாமல் இதுவரையில் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தின் மூலம் பிரதேச வேறுபாடுகள் பாராமல், முஸ்லிம் சமூகத்துக்கு திறமையாக செயலாற்றி கட்சிக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்த பிரதி அமைச்சருக்குத்தான் அது வழங்கப்படல் வேண்டுமென்றால் பைசால் காசிமே அதற்கு பொருத்தமானவர்.

தனக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சர் பதவி மூலமாக தனது சொந்த கிராமத்தில் பாரிய நிதியில் தனியான வைத்தியசாலையினை அமைத்து வருகின்றார்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசத்துக்கும், மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கலாக நாடுதழுவிய ரீதியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் சுகாதார துறையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அல்லது, கட்சியின் நீண்டகால சிரேஷ்ட உறுப்பினருக்குத்தான் அமைச்சர் பதவி வழங்குவதென்றால் அதனை சம்மாந்துறையின் மன்சூர் எம்பிக்கு வழங்கப்படல் வேண்டும்.

அவர் இதுவரையில் கட்சி மாறி சென்றதாகவோ, மு.கா தலைவருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்ததாகவோ பதிவுகள் இல்லை. தனது சிறுவயதிலிருந்து தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி வருகின்றவர்.

மேலே கூறப்பட்ட எந்த தகுதியும் பாராமல் மர்ஹூம் அஸ்ரப் பிறந்த மண்ணுக்குத்தான் வழங்குவதென்றால் அது ஹரீஸ் எம்பிக்கு வழங்கப்படல் வேண்டும்.

எனவே இங்கே பொறுப்புள்ள கட்சி போராளிகளும், சமூக நோக்கோடு நடுநிலையாக சிந்திக்கும் பகுத்தறிவு உள்ளவர்களும், தங்களை சார்ந்தவர்களுக்கு அதிகாரம் வந்தால் தாங்கள் வாகனம் ஓடலாம், அதிகமாக கொந்தராத்து செய்யலாம், அதிகாரத்தினை அனுபவிக்கலாம் என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள்.

மாறாக பொறுப்புள்ள பதவிகள் செயல்திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். அப்போதுதான் சமூகம் நண்மை அடையும் என்றே சிந்திப்பார்கள்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

Read more...

Tuesday, December 18, 2018

மஹிந்த ராஜபக்சவுடன் போபம் இல்லையாம் அவருடனுள்ள ஓநாய்களுடன் வேலை செய்ய முடியாதாம். சொய்சா.

ஐக்கிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜித் விஜிதமுனி செய்சா, லக்ஷமன் சேனவிரத்ன, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது ஆளும் கட்சியின் ஆசனங்களில் அமர்ந்தனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது விஜித் விஜிதமுனி செய்சா உரையாற்றுகையில்:

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமக்கு பொறுப்புள்ளது. சிறு கட்சிகளின் செயற்பாடுகளுக்கு நாம் பாராட்டு தெரிவித்தல் வேண்டும். எங்கள் கட்சி தலைவர் மைத்திரிபால சிரிசேன அவர்களுடனும் ஆலோசகர் மஹிந்த ராஜபக்ஸவுடனும் இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்வித தடையும் இல்லை. ஸ்ரீவங்கா சுதந்திர கட்சியினர் என்ற வகையில் எமக்கும் பொறுப்பு உண்டு.

நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் என்ற வகையில் மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளோம். நான் பிறப்பிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவன். நான் 1979ம் ஆண்டு அவிசாவெல்லை நகர சபையில் வேட்பாளராக நின்ற போது எவரும் எங்கள் கட்சி சார்பாக இருக்கவில்லை. எந்த தலைவரும் எமக்காக தேர்தல் களத்தில் இறங்கவும் இல்லை.

பிரஜாவுரிமை இரத்து செய்யப்பட்டிருந்த சிறிமாவே பண்டாராநாயக்க அம்மையாரை அமைச்சர் ஆக்க நடவடிக்கை எடுத்தோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரை ஜனாதிபதி ஆக்கினோம். அக்காலத்தில் நான் ஸ்ரீ.சு.கட்சியின் இளைஞர் இயக்கத்தில் இருந்தேன்.

ரஞ்ஞித் மத்தும பாண்டாரயும் நானும் கீரியும் பாம்பு போலவே இருந்தோம். இன்று நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அருகில் உள்ளோம். வந்த வெள்ளத்தில் இருவருமே ஒரே வாழைத் தண்டில் தான் ஏற வேண்டி இருந்தது.

மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் எனக்கு அமைச்சு பதவி வழங்கியிருந்தார். அவரை சுற்றியுள்ள ஓநாய்களுடன் அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியாது. நாம் எதிர்பார்ப்பது கட்சியின் நிறத்தை அல்ல. மக்களின் ஆதரவை மட்டுமே. எங்களது ஆட்சி காலத்தில் என்னை செயற்பட விடவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் என்னை சுதந்திரமாக செயற்பட விட்டனர்.

நாங்கள் 200 குளங்களை இக்காலத்திலேயே நிர்மாணித்தோம். ஆகையால் நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமை தவறாக எண்ண வேண்டாம் என அவர் உரையாற்றியிருந்தார்.

Read more...

எதிர் கட்சி தலைவர் பதவியை எவ்வாறு மஹிந்தவிற்கு வழங்க முடியும் கேட்கின்றார் சுமந்திரன்.

மஹிந்த ராஜபக்சவை எதிரர்கட்சித் தலைவராக நியமித்தமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமத்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்றில் பேசிய அவர்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அமைச்சரவையின் பிரதானியாகும். அப்படி என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எப்படி எதிர்கட்சியாகும் என அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியை விட்டு விலகி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சி ஒன்றில் உத்தியோகபூர்வமாக இணைந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வாறு உரிமை பெற முடியும். இது இரண்டும் எனது கேள்விகளாகும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாதென்பதனை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும் என சுமந்திரன் கூறியபோது குறித்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், அது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆராய்ந்த பின்னர் முடிவு வழங்கப்படும் என அறிவித்துளளார்.

இதேநேரம் அங்கு தொடர்ந்து, உரையாற்றிய சுமந்திரன்:


நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல. 19 ஆம் திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரம் ஒரு சிறியலவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே புதிய அரசியல் அமைப்பின் மூலமாக முழுமையாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று செய்த தவறை இனியொருமுறை செய்யாதிருக்க நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதே ஒரே வழிமுறை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளின் இனவாத செயற்பாடுகளை மக்கள் உதறித் தள்ளியுள்ளனர். எமது நாட்டினை மீண்டும் நாசமாக்க எந்த மக்களுக்கும் விருப்பம் இல்லை. இந்த நாட்டில் எவரும் இரண்டாம் தரப்பு மக்கள் அல்ல. அனைவரும் சமமானவர்கள். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் அது தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையும். பெரும்பான்மை மக்கள் உள்ளிட்ட எமது மக்கள் அனைவரும் இனவாதத்தை எதிர்த்துவிட்டனர்.

சகல மக்களும் சமமானவர்கள் என்பதை எமது மக்கள் நிருபித்துள்ளனர். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் இந்த விடயத்தை கருத்தில்கொள்ள வேண்டும். இப்போது நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அதனை நழுவவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

சக உறுப்பினர்களை தமிரசுக் கட்சியின் தவிசாளர் இரண்டாம் தர உறுப்பினர்களாக நடத்துகின்றாராம்! சாடுகின்றது த.தே. ம. மு

விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் சபையில் இரண்டாம் தர உறுப்பினர்களாக நடத்துகின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சி. புவனேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நேற்று (17) கிளிநொச்சியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில்,

சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த எட்டு மாதங்களாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களை அமுல்படுத்துவதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்களை விட தங்கள் கட்சிசார்ந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் பல குறைப்பாடுகளை சுட்டிக்காட்டிய போதும் அதனை கருத்தில் எடுப்பதாக தெரியவில்லை.

நிதி ஒதுக்கீடு, அபிவிருத்திப் பணிகள், தீர்மானங்கள், பிரேரணைகளை உள்ளிட்ட பல விடயங்களில் விகிதார மூலம் தெரிவாகி வந்துள்ள உறுப்பினர்களை தவிசாளர் இரண்டாம் தர உறுப்பினர்களாகவே நடத்துகின்றார்.
வட்டாரங்களின் அபிவிருத்திகள் மற்றும் சபையின் செயற்பாடுகளில் கட்சி நலன்சார்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்காது முப்பதைந்து உறுப்பினர்களையும் சமமாக கருதி சபையினை கொண்டு நடத்த வேண்டும் என்பதனையும் நாம் இச் சந்தர்ப்பத்தில் கோரிக்கையாக முன்வைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

மைத்திரியின் வாள் ஐ.தே.க பக்கமாம். வாசு

ஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப்போகின்றது. அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நினைத்த பிரகாரம் ஆட்சிசெய்ய முடியாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சிக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கினாலும் கடந்த காலங்கள் போல் அவர்களுக்கு செயற்படமுடியாது. அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி எதிராக இருக்கும்போது எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு நாங்களும் கடும் போராட்டங்களை மேற்கொள்வோம்.

அத்துடன் அரசியல் ரீதியில் ஜனாதிபதி நிர்க்கதியான நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். எனவே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்தாலும் ஜனாதிபதியின் அரச அதிகார வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கிப்போகின்றது. அதனால் ஐக்கிய தேசிய கட்சி நினைத்த பிரகாரம் செயற்பட ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என்றார்.

Read more...

எலும்புத்துண்டு பங்கீட்டில் ஐ.தே.கட்சியினுள் இழுபறி.

நிதியமைச்சர் யார் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் இழுபறி தொடர்வதாக அறியக்கிடைக்கின்றது. ஐதேகவின் முக்கிய தலைவர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இழுபறி இவ்விடயத்தில் போர் மூண்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை அடுத்து, நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ரவி கருணாநாயக்க மீண்டும் அந்தப் பதவியைப் பிடிக்க போட்டி போடுகிறார்.

அதேவேளை, ஏற்கனவே நிதியமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரவும், அந்தப் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார். இதனால் ஐதேகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை, இவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபரும் இணங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இழுபறிகளால், புதிய அமைச்சர்கள் நியமனம், நாளையோ அல்லது வார இறுதியிலோ தான் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Read more...

2009 இன் பின்னர் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் விபரம்.

வடகிழக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுத்திரின் பாவனைக்கும் மற்றும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடணம் செய்யப்பட்டிருந்த காணிகளில் 69754.59 ஏக்கர் காணிகள் 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

2018 நவமபர் 25 வரை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தனியார் மற்றும் அரச காணிகளாகவே காணப்பட்டன என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆண்டு படையினரின் பாவனையிலிருந்த காணிகளின் விபரங்கள்

யாழ்ப்பானம்-25202.88
கிளிநொச்சி-25948.49
முல்லைதீவு-11911.18
மன்னார்-2302.30
வவுனியா-7331.47
திருகோணமலை-1859.65
மட்டக்களப்பு-1592.29
அம்பாறை-8375.58

இவற்றில் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு

யாழ்ப்பானம்-22496.09
கிளிநொச்சி-24396.29
முல்லைத்தீவு-7126.69
மன்னார்-885.74
வவுனியா-6525.24
திருகோணமலை-98.18
மட்டகளப்பு-1040.29
அம்பாறை-7460.82

ஏக்கர் காணிகளும் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 263.55 ஏக்கர் காணிகளை 2018.12.31 இற்கு முன்னர் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தலைமையத்தின் ஊடாக விடுவிக்கப்படும் எனவும் இராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கபபடுகின்றது.

Read more...

எதிர்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச. சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மரபுகளுக்கு அமைய, அதிக ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய போதே, சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா.சம்பந்தனும், எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக இருந்த அனுரகுமார திசநாயக்கவும் பதவியிழந்துள்ளனர்.

முன்னதாக அதிபர் செயலகத்தில் இன்று முற்பகல் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை சபாநாயகருக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிபர் செயலகத்தில் இன்று முற்பகல் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்றும் மஹிந்த அமரவீரவை எதிர்கட்சி பிரதம கொரடாவாக நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியும் என்று கூறினார்.

Read more...

ஜனாதிபதிக்கு எதிராக கண்டனப் பத்திரிகை கொண்டுவர ரணில் எண்ணவே இல்லையாம். சஜித் பிறேமதாஸ

ஜனாதிபதிக்கு எதிராக கண்டன பத்திரிகையினை கொண்டுவர ஒரு போதும் நினைத்தது இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடந்த 16ம் திகதி பிரதமர் சத்திய பிரமானத்தின் பின்னர் ஜனாதிபதி ஆற்றிய உரையினை தொடர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில்:

நாங்கள் முன்னெடுத்துள்ள பாதையில் நாகரீகமாவும் பிரச்சினைகளின் போது தனிப்பட்ட முடிவுகளை எடுக்காமல் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் கலந்துரையாடி முடிவுகளை எடுத்து சிறந்த அரசியல்வாதிகளாக செயற்படுதல் வேண்டும்.

எமது கௌரவ பிரதமர் அவர்கள் ஒரு போதும் தங்களுக்கு எதிராக கண்டன பத்திரிகை முன்வைக்க எம்முடன் பேசியதில்லை. அது தொடர்பாக கலந்துரையாடவும் இல்லை. கடந்த காலங்களில் நடைப்பெற்ற அரசியல் சூழ்நிலைகளில் எம்மாலும் ஏனையோராலும் வன்மையான வார்த்தை பறிமாற்றங்கள் இடம் பெற்றன.

ஆயினும் தங்களை சிறைப்படுத்தவோ உடல் ரீதியான பங்கம் ஏற்படுத்தவோ தங்கள் குடும்பத்தினருக்கு பங்கம் விளைவிக்கவோ நாம் ஒரு போதும் எண்;ணியதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.


Read more...

Monday, December 17, 2018

ரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.

ரெலோ இயக்த்தின் தற்போதைய மற்றும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார் சோதிலிங்கம். முன்னாள் ரெலோ உறுப்பினரான அவர் அவ்வியக்த்தின் முறைகேடுகள் தொடர்பில் கடந்த சிலவாரங்களாக வாரந்தம் ஒரு கடிதத்தை தனது அமைப்பின் தலைமையை நோக்கி எழுதுகின்றார்.

இவ்வாரம் சோதிலிங்கம் ரெலோவின் தலைமையை நோக்கி எழுதியுள்ள கடிதத்தில் தான் அங்கம் வகித்த இயக்கம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும் வழங்க என்று கோருகின்றார்.

(த சோதிலிங்கம் எழுதும் ஆயிரம் கடித தொடர்)


எழுச்சி, 17/12/2018,
(கடிதம் 10, மாதம்12, கிழமை 04)

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

ரெலோவினால் தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் வேண்டும்.

இது போன்ற கருத்துப் பகிர்வுகள் உங்களில் பலருக்கு தலையிடி கொடுப்பதாக நீங்கள் பாவனை காட்டி ஒருவர் மீது இவர் ஏன் எழுதுகிறார் என்ற கேள்வியோ (அவரது எழுத்துரிமையை மறுக்கும் செயல்) சிலவேளை கோபமோ ஏற்படுகிறது என்றால் நீங்கள் இன்னமும் மனிதர்களை மதிப்பது பற்றி தெரியவில்லை, தமிழ் மக்களுக்கா போராாடவில்லை என்பதேயாகும், அல்லது உங்களில் சிலரது தனிப்பட்ட சுய நலத் தேவைகளுக்காகவே விடுதலை இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி செயற்ப்படுவதாகவே இருக்கும்.

அல்லது விடுதலைப்போராட்ட - அரசியல் கட்சிக்குரிய பெறுமதிகளையோ, அரசியலை மக்கள் நலன் பற்றி புரியாதவர்களாகவும் இருக்கலாம்.

விடுதலைப்போராட்ட இயக்கம் அல்லது அரசியல் கட்சி அல்லது பொது அமைப்பு ஒன்று தன்மீது விமர்சனங்களை வரவேற்க்க வேண்டும் தனது சரிபிழைகளை வெளியில் இருப்போர் அவதானித்து கூறுவதை அறிந்து தெரிய வேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும். இது பொது மக்களுக்காக சேவை செய்யும் அனைவரினதும் மிகவும் முக்கியமான அடிப்படை இதனை ஏற்றுக்கொள்ளாத கட்சி, இயக்கம் பொது அமைப்பு என்பது மக்களுக்கானது அல்ல அது சுயநலக்கும்பலின், கொலையாளிகளின் கூட்டமேயாகும்.

பொது அமைப்புக்கள் இயல்பாகவே தவறுகளை செய்யும் ஆனால் தவறுகள் பிழைகளால் வளர்க்கப்படுவதில்லை, தவறுகள் பிழைகளை திருத்தி, தாம் இயங்குப் மக்களின் அபிப்பிராயங்களை அறிந்து திருத்தியமைத்து இயங்குவதே முன்னேற்ற கரமானதும், அறமுமாகும்.

தமிழிழ விடுதலை இயக்கம் வரலாற்றில் பல தவறுகளை செய்துள்ளது தவறுகளில் உயிரிழப்பற்ற தவறுகளை பிரித்து மனிதர்களின் உயிர்வாழும் உரிமைகளை மறுத்த விடயங்களை இங்கே வெளிப்படுத்தி இவைகள் பற்றி கட்சி ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் இதன்மூலம் கட்சி தன்னைப் பலப்படுத்த வேண்டும்.

1) இந்தியாவில் இயக்கத்தின் உள்ளே நடைபெற்ற கொலைகள், யார் யாரையெல்லாம் கொலை செய்யப்பட்டுள்ள்ளார்கள், அதற்கான காரணங்கள் நியாயங்கள்.

2) இலங்கையில் இயக்கத்தினால் செய்யப்பட்ட உட்படுகொலைகள் கொலைகள், அதற்கான காரணங்கள் நியாயங்கள்.

இங்கே தோழர் நேருவை குறிப்பிடுகிறேன்.

3) இலங்கையில் மிதவாத அரசியலில் ஈடுபட்ட ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றோரது கொலைக்கான காரணங்கள், நியாயங்கள்.

4) வடமராட்சியிலிருந்து ரெலோவினை எதிர்த்து ஊர்வலமாக வந்த மக்கள் மீதான துப்பாக்கி பிரயோகமும் அதன் போது கொல்லப்பட்டவர்கள் விபரங்கள், காரணங்கள், நியாயங்கள்.

5) யாழ் வைத்திய சாலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் விபரங்கள், நியாயங்கள்.

6) இந்திய இராணுவத்தின் காலங்களில் நடைபெற்ற பொது மக்கள் மீதான கொலைகள்.

7) இந்திய இராணுவத்தின் காலத்தில் தலைமைக்கு ஆதரவளிக்காத அல்லது கொள்ளை கொலைக்கு ஆதரவளிக்காதவர்கள் கொல்லப்பட்திற்கான காரணங்கள், விபரங்கள், நியாயங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் தோழர் கிருட்டி (மட்டக்களப்பு), மற்றும் செந்தோழர், இவர்களின் உறவினர்கள் தோழர் கிருட்டியி்ன் சகோதரிகள் இன்றும் ரெலோ இதற்காரன நியாயம் வழங்கவில்லை கேட்பாரற்று கிடக்கும் நியாயம் என ஐரோப்பாவரை குரல் எழுப்புகிறார்கள்.

8)புலிகளுடன் தொடர்ந்து மோதிக்கொண்டிருந்தவர்களை ரெலோவினுள் சிலர் புலிகளுடன் ஏற்ப்பட்ட நட்புகள் காரணமாக புலிகளுக்கு இவர்களது நடமாட்டம் தெரிவித்து புலிகள் கொல்ல உதவப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள்.

9) விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பெயரில் கொல்லப்பட்ட 38 கிழக்கு மாகாணத் தமிழ் இளைஞர்கள் இவர்களின் கொலைகள் ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினருக்கு மட்டக்களப்பு மக்களால் வழங்கப்பட்ட தகவல்களும், ரெலோ இணையத் தளத்துக்கு (telo org) கிடைத்த உறுதி செய்யப்பட்ட தகவல்களும் வெளிவந்து பல காலங்கள் ஆகியும் ரெலோ பாராமுகமாக இருக்கின்றது.

இங்கே இந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய எனது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்களில் உள்ள கொலைகளுக்கு தமிழீழ விடுதலை இயக்கம் பொறுப்பாகும், இந்த கொலைகளில் தொடர்புபட்ட உறுப்பினர்கள் தனிப்பட பொறுப்பாளிகள் அல்ல, ஆகவே தமிழீழ விடுதலை இயக்கம் (இன்றய அரசியல் கட்சி) இந்த செயல்களுக்கான பொது மன்னிப்பை இலங்கை அரசிடமோ, சர்வதேச சமுகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்டவர்களின் உறவினரிடமிருந்தோ பெற வேண்டும் அல்லது அவர்களுக்குரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இதன் மூலமே தமிழீழ விடுதலை இயக்கம் தனது கடந்த காலத்திலிருந்து வெளியே வரமுடியும், அதுவே விடுதலைப்போராட்ட இயக்கத்துக்குரிய முக்கியமான குணாம்சமும் ஆகும்.

இதை தவிர்த்து இவைகள் எல்லாம் பழசு மறைத்து விட்டு போகலாம் என்ற எண்ணம் மக்களுக்கான பொது அமைப்பின் பொறுப்பான நடவடிக்கைகள் அல்ல என்பதை தெரிவிக்கின்றோம்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய பலர் ரெலோ உள்ளேயும் புலம் பெயர்ந்தும் இருக்கின்றார்கள். இந்த தனிநபர்கள் மீது இனிமேல் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கங்களும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எதிரகாலம் உள்ளதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

இங்கு குறிப்பிடப்பட்ட பல சம்பவங்களை தொகுப்பு செய்த Holland மனித உரிமைகள் அமைப்பு லண்டனில் ரெலோ பொறுப்பாளர் ஒருவரின் "தானே புலம் பெயர் ரெலோவின் பொறுப்பாளர்" என்ற வாக்கு மூலத்தையும் பெற்றுள்ளார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவும்

தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்றால் தனது அமைப்பினால் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், அல்லது அவர்களது பொது மன்னிப்பை பெற வேண்டும். தனிப்பட்ட ரெலோ உறுப்பினர்களை இந்த கொலைக் குற்றத்தில் தள்ளிவிட்டு தம்பிக்க கூடாது. இது விடுதலை இயக்கம் என்ற பெயருக்கும் அதன் இயங்கு முறைக்குமான அவமானமாகும்.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
10/12/2018.

இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும்:
தமிழீழ விடுதலை இயக்கம் ( uk,Canada,Swiss,France)

தொடர்புகளுக்கு
0784 6322 369(uk)
uktelo@gmail.com, telolondon@gmail.com.

Read more...

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கிவிட்டு இருத்தி வைத்து 41 நிமிடங்கள் போட்டுத்தாக்கிய மைத்திரி.

நேற்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதிவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் பதிவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன 41 நிமிடங்கள் பேசினார். அப்பேச்சில் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் நேரடியாக போட்டுத்தாக்கினார்.

அவர் அங்கு பேசுகையில் :

2015 ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெற்ற பெரு வெற்றியில் நாட்டு மக்கள் பல்வேறு நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தனர். சுமார் 04 வருடங்கள் கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக கடந்த காலத்தில் நாம் அரசாங்கம் என்றவகையில் பெற்றுக்கொண்ட வெற்றிகள், செய்த நல்ல பணிகள் பல உள்ள அதேநேரம், பல துரதிஷ்டவசமான நிகழ்வுகளும் உள்ளன. நாம் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதைப் போன்று எதிர்பார்த்த இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்ல முடியாமல் போன விடயத்தில் நாம் நாட்டு மக்களின் பக்கமே நிற்கிறோம். இந்த நிலைமையை எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் வெற்றிகொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது.

2015 தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமைச்சரவை நியமிக்கப்பட்டது முதல் எமது தேர்தல் உறுதிமொழிகள் மீறப்பட்டமை பற்றி நான் உங்களுக்கு கூறியுள்ளேன். விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் அமைச்சரவை ஒதுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிபுணர் குழுவொன்றை அமைத்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. என்றாலும் அந்த ஆவணங்கள் பார்க்கப்பட்டனவா? என்பது பற்றி எனக்கு தெரியாது.

அன்றிலிருந்து இடம்பெற்றுவரும் நிகழ்வுகளில் குறிப்பாக நாம் எதிர்பார்க்காத பல துரதிஷ்டவசமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. நல்ல விடயங்கள் என்று பார்க்கின்றபோது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியமை, மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டமை, 19ஆவது திருத்தம், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டமை என்பனவற்றை குறிப்பிட முடியும். 19ஆவது திருத்தத்தின் நன்மையாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதிலுள்ள முன்னேற்றத்தை மட்டுமே நான் பார்க்கிறேன். மறுபக்கத்தில் அதனை நான் இன்று ஒரு அரசியல் பிரச்சினையாகவே காண்கிறேன். அதேபோன்று 19 ஆவது திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதை போன்று நாட்டின் ஏனைய பதவி நியமனங்களில் அரசியலமைப்பு சபை எவ்வளவு தூரம் பக்கசார்பற்றதாக, நியாயமானதாக இருந்தது என்பதில் எனக்கு பிரச்சினை உள்ளது. இன்று பிரதம நீதியரசரிலிருந்து சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், சுயாதீன ஆணைக்குழுக்கள் வரை அனைத்தையும் அரசியலமைப்பு சபையே நியமிக்கின்றது. நான் கண்ட முக்கியமான விடயம் என்னவென்றால் அரசியலமைப்பு சபையில் நீதித்துறை நியமனங்களின் போது நீதித்துறையில் உள்ள சிரேஷ்ட நீதிபதிகளின் பெயர்கள் முன்வைக்கப்படுகின்றபோது அவை நிராகரிக்கப்பட்டன.

நீதித்துறையில் சில நீதிபதிகள் தொடர்பில் அவர்களுக்கு சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதில்லை என என்மீது குற்றச்சாட்டு உள்ளது. அவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளாக காரணமாக பெயர்களையும் நான் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பியிருக்கிறேன் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அரசியலமைப்பு சபை அவற்றை நிராகரித்துள்ளது. இதன் மூலம் நீதித்துறையில் சிரேஷ்ட நீதிபதிகளாக இருக்கின்றவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே நீதிபதிகளை நியமிக்கின்றபோது அரசியலமைப்பு சபை பின்பற்றும் நடைமுறைகள் எவ்வளவு தூரம் பக்கசார்பற்றது, நடுநிலையானது என்பதில் பிரச்சினையுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கான பல விடயங்கள் என்னிடம் உள்ளன.

நாம் முகங்கொடுத்த மிக மோசமான அனுபவத்தை எடுத்துக்கொண்டால் அப்போதைய அரசாங்கத்தில் இருந்த பாரிய தவறுகளின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தோல்வியுறச் செய்து, 62 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். அந்த வகையில் அடிப்படையான விடயம் ஊழல், மோசடி என்பனவாகும். ஊழலுக்கும் மோசடிக்கும் எதிராகவே மக்கள் நேய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டது 2015 ஜனவரி 08 ஆம் திகதி தமது வாக்குகளின் மூலம் அவ்வாறு தெரிவுசெய்யப்பட்டு மூன்று மாதம் நிறைவடைவதற்கு முன்னரே இடம்பெற்ற மத்திய வங்கி கொள்ளை, 2015 ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் என்வனவற்றின் ஊடாக நாம் ஊழலுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் முழுமையாக வீண்போனது. அது மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக தகர்த்து, நல்லாட்சி அரசியல் எண்ணக்கருவையும் அழித்துவிட்டது.

நான் இன்று காலையில் மத்திய வங்கி ஆளுநருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய பரிந்துரையான தடையவியல் கணக்காய்வு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று கேட்டேன். இன்றுவரை அது செய்யப்படவில்லை. மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியின் பெறுமதி இவ்வளவுதான் என்று இன்னும் சரியாக கூறமுடியாதுள்ளது என ஜனாதிபதி ஆணைக்குழு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இது பல வருடங்களாக இடம்பெற்று வந்துள்ளது. 2007, 2008 ஆம் ஆண்டுகளிலிருந்து இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இடம்பெற்று வந்துள்ள இந்த மோசடியினால் ஆயிரம் பில்லியனுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் என்னிடம் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாலொன்றின்போது தெரிவித்தனர். இன்றுவரை எந்தவொரு கணக்காய்வின் மூலமும் இது பற்றி கண்டறியப்படவில்லை என ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியும். அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட போது நான் அதனை கடுமையாக எதிர்த்தேன். என்றாலும் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வாரத்தில் நன்றியுள்ள ஒருவன் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவுடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் அவசியமற்றது என்ற காரணத்தினால் அவரது அழுத்தமான கோரிக்கையின் பேரில் நான் அர்ஜுன மகேந்திரனை ஆளுநராக நியமித்தேன். அப்படி தெரிவு செய்யப்பட்ட அர்ஜுன மகேந்திரனின் இத்தகைய செயற்பாட்டினால் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று நாட்டில் பாரிய பிரச்சினையொன்று உருவானது. இது பாராளுமன்றத்திலும் நாட்டின் அரசியலிலும் முக்கிய பேசுபொருளாக மாறியது.

அந்த நிலைமையில் மத்திய வங்கியின் பணிக்குழாம் செயலிழந்த நிலையை அடைந்தது. அச்சந்தர்ப்பத்தில் நான் மத்திய வங்கிக்கு செல்வதற்கு தீர்மானித்தேன். நான் மத்திய வங்கிக்கு செல்ல தீர்மானித்ததன் பின்னர் நான் அங்கு செல்லப்போவதை அறிந்து பிரதமர் எனது வீட்டுக்கு வருகை தந்திருந்தார். அன்று என்னிடம் அவர் நீங்கள் மத்திய வங்கிக்கு செல்லப்போகின்றீர்களா? என கேட்டார். ஆம் நான் அங்கு செல்லப் போகிறேன் என கூறிய போது அதற்கு அவர் நான் அங்கு செல்வதை விரும்பவில்லை. மத்திய வங்கி எனக்குக் கீழ் உள்ளது என்றார். அதற்கு நான் உண்மைதான் ஜனாதிபதி என்ற வகையில் நான் அங்கு செல்ல முடியும் தானே எனக் கூறிச் சென்றேன். நான் அங்கு செல்கின்றபோது பிரதமருடன் அர்ஜுன மகேந்திரனும் அங்கிருந்தார். அர்ஜுன மகேந்திரன் எனக்கு வழங்கிய வெற்றிலையை நான் ஒரு கையினால் எடுத்துக்கொண்டு அவரது முகத்தையும் பார்க்காமல் உள்ளே சென்றேன். இந்த நிகழ்வின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அர்ஜுன மகேந்திரன் இன்று இல்லை. அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை.

இந்த மோசடி தொடர்ந்து ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் வந்தன. அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றன. அமைச்சர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டார்கள் எனக் கூறி தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில் பிரதமரினதும் அமைச்சர்களினதும் தொலைபேசிகள் ஒட்டக் கேட்கப்படவில்லை என ஆணைக்குழு அறிவிப்பு செய்தது. பேர்பசுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் இன்று சிறையிலிருக்கும் சந்தேக நபர்களின் தொலைபேசிகளை பரிசீலனை செய்தபோது அமைச்சர்களினதும் தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளமை பற்றி தெரிய வந்தது. எனவே இன்று கூட ஆயிரம் பில்லியனுக்கும் அதிகம் எனக் கூறும் இந்த மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன்.

நான் மஹிந்த ராஜபக்ஷவை ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமாராக நியமித்தேன். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது கட்டாயம் எனக் குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்த இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு திருத்தச் சட்டத்தில் சில வசனங்களே திருத்தப்பட வேண்டியிருந்தது. பாராளுமன்றத்திற்கு அது அனுப்பப்பட்டு 05 மாதங்களுக்கும் அதிகமாக அலுமாரியிலேயே வைக்கப்பட்டிருந்தது. நான் இது பற்றி பல தடவை நீதியமைச்சர் தலதா அதுகோரளவிடம் கூறினேன். அமைச்சர் கிரியெல்லவிடமும் கூறினேன். மிகுந்த சிரமத்துடனேயே அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. என்றாலும் இறுதியில் அது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அத்திருத்தம் காலவறையறையின்றி பிற்போடப்பட்டது. அவ்வாறு பிற்போடப்பட்டமையினால் அச்சட்டம் திருத்தப்படப்போவதில்லை. இன்னும் 15, 20 ஆண்டுகளுக்கு ஆயிரம் பில்லியனுக்கும் அதிகம் எனக் கூறப்படும் இந்த மோசடி பற்றி விசாரணை இடம்பெறப்போவதில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்போவதும் இல்லை. அந்த நிதியை மீட்கவும் முடியாது. இது இன்னும் பாரதூரமான பிரச்சினையாகும்.

அதேபோன்று அமைச்சரவையின் தீர்மானத்திற்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட சீ.சீ.எம் தொடர்பிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. உண்மையில் நான் பிரதமருக்கு எவ்வளவு தூரம் நன்றிக்குரியவனாக இருந்தேன் என்றால் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் பிரதமர் எடுத்துக்கொண்டு செயற்பட்டார். நான் அதுபற்றி கேட்கவில்லை. அரச தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போதும் சர்வதேச ஒப்பந்தங்களின் போதும் அவர் அவ்வாறு செயற்பட்டார். 19ஆவது திருத்தத்தில் பிரதமருக்கு இல்லாத அதிகாரங்களை ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தினார். நான் அதன்போது நன்றியுள்ள ஒருவன் என்ற வகையில் அமைதியாக இருந்தேன்.

சிங்கப்பூர் ஒப்பந்தம் பற்றி நான் ஆணைக்குழு ஒன்றை அமைத்தேன். அதன் பரிந்துரைகள் கடந்த வாரம் எனக்கு கிடைக்கப் பெற்றன. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது பற்றி அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் இப்போது அதுபற்றி விரிவாக விளக்கப்போவதில்லை. அந்த அறிக்கையில் குறிப்பாக அந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் வர்த்தகம், துறைமுகம், கைத்தொழில், நிதி உள்ளிட்ட குறித்த அமைச்சுக்கள் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய பல்வேறு நிறுவனங்கள் அந்த பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளாது இருப்பது பாரிய தவறு என இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. எனது கருத்து அதனை அரச தலையீட்டுடன் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதாகும். அது திருத்தப்பட வேண்டும். அந்த திருத்தங்களின் போது நிபுணர்களை கொண்டு முழுமையாகவே நீக்கப்பட வேண்டுமா? திருத்தங்களுடன் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது பற்றி சட்ட, பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என்றே நான் பார்க்கிறேன். எனவே இந்த நிலைமைகளில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் நாம் இந்த அனுபவங்களுடன் முன்னோக்கி செல்வதற்கான முறைமை எத்தகையது என்ற விடயம் பற்றியதாகும்.

இவ்வாறு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் நிறைவேற்றுத்துறையும் சட்டவாக்கத் துறையும் இதனை தீர்த்துக்கொண்டு இருந்தால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எமக்கு 07 வாரங்கள் எடுத்திருக்காது. இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக கூட்டப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களிலும் நீங்களும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சபாநாயகரும் பங்குபற்றிமைக்காக நான் மகிழ்ச்சியடைவதுடன், எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியும் வருகை தந்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் சகோதர கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினர். அது ஜனநாயக நாடொன்றில் உள்ள சுமுகமானதொரு நிலைமையும் முக்கியமானதொரு பண்பும் ஆகும் என்று நான் கருதுகிறேன்.

அரசியல் மேடைகளில் எதனைக் கூறியபோதும் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக மனிதாபிமான நிலைமை உள்ளது. என்றாலும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்கத்திற்கும் இடையில் அந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதில் நாம் தோல்வியுற்றோம். எனவே இது நீதிமன்றத்திற்கு சென்றது. நீதித்துறை வழங்கிய தீர்ப்பு குறித்து பொதுமக்கள் என்ன கூறுகின்றார்கள்? சட்ட நிபுணர்கள் என்ன கூறுகின்றார்கள்? என்பது பற்றி நான் கேட்டுப்பார்த்தேன். வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை, கலைக்கப்பட்டமை, பிரதமர் நியமனம், பிரதமர் நீக்கப்பட்டமை குறித்து என்மீது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக விமர்சனங்கள் முன்வைக்க்படுகின்றன. ஏனென்றால் நான் ஒரு சட்டத்தரணி அல்ல என்பது முழு நாட்டுக்கும் தெரியும். நான் அந்த வர்த்தமானி அறிவித்தலை எனது சுயவிருப்பத்தின் பேரில் வெளியிடவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகள், நாட்டின் முன்னணி சட்டத்துறை நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாடித்தான் அந்த வரத்தமானி அறிவித்தலை தயாரித்தார்கள். அப்படியில்லாமல் இது சிறு பிள்ளைகள் செய்த விடயம் அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றபோது எனது தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நாட்டின் முன்னணி சட்ட நிபுணர்கள் ஆவர். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

கடந்த காலங்களில் வர்த்தமானிகளை வெளியிட்டு நான் செய்தது சிறுபிள்ளைத்தனமான செயலாக இருந்திருந்தால் அந்த வர்த்தமானியை பாதுகாப்பதற்காக சட்ட நிபுணர்கள் முன்வந்திருக்க மாட்டார்கள்.
விசேடமாக பாராளுமன்றத்தை கலைத்ததற்காகவும் மீண்டும் தேர்தலுக்கு செல்ல வேண்டாமென்றும் நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்கள். தேர்தல் தேவையில்லை என்று நீதிமன்றத்திற்கு சென்றீர்கள். ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு பின்னணியில் ஊழல் சூழ்ந்திருக்கும் இந்த பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதியதோர் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று மக்களிடையே ஒரு கருத்து உருவானது. அது ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளர்கள் மத்தியிலும் ஏற்பட்டதென்பதை நான் அறிவேன். ஊழலை மேற்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியினரையும் வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று அவர்கள் தெரிவித்தார்கள்.

நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறாக அமைந்தலும் மக்களின் விருப்பத்தின்படி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த வழி என்னவென்றல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதேயாகும். நீதிமன்ற தீர்ப்பால் மக்கள் ஆணையை இழந்துவிட்டோம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது எனது கருத்தல்ல. நான் மதகுருக்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களினிடையே கருத்துக்களை கேட்டறிவேன். அதன்போது மீண்டும் ஒரு தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்ற கருத்தை பெரும்பான்மையானவர்கள் முன்வைத்தனர். தேர்தல் வேண்டாமென்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு நீதிமன்றத்திற்கு மனுதாக்கல் செய்தனர். எதிர்காலத்தில் இவ்வகையான சூழ்நிலைகளை தடுக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே நான் உங்களிடம் இதை சுட்டிக்காட்டுகின்றேன்.

நான் உங்களுக்கு மற்றுமொரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஊழலை ஒழிப்பது தொடர்பாகவே பேசி வந்தேன். மத சக்திகள், மொழி தொடர்பிலான சக்திகள், கலாசார மற்றும் சமூக சக்திகள் மிகவும் வலுவானதென்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நாட்டின் அநேகமான சந்தர்ப்பங்களில் ஆட்சி அமைப்பதற்கும் ஆட்சியை கவிழ்ப்பதற்கும் அரசியல் நிலைப்பாடுகளைவிட கலாசார நிலைப்பாடுகள் உறுதுணையாக அமைந்துள்ளதென்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த காலங்களில் பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும்போதும் பெரஹரவின்போது யானைகளின் பற்றாக்குறையினால் பலவித பிரச்சினைகள் ஏற்படும்போதும் அந்த பிரச்சினைகள் விகாரைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் அல்ல, சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என்று நான் தெரிவித்தேன். அப்போது நான் தெளிவாக கூறினேன். யானைகளை விடுவிப்போம். அதற்கான சட்ட அனுகூலங்களை கண்டறிவோம். தொடர்ச்சியாக பிக்குகளை கைது செய்யாதீர்கள். இறுதியில் ஒட்டுமொத்த பிக்கு சமூகத்தையும் நாம் இழந்துவிட்டோம்.

மற்றுமொன்றை நான் தெளிவாகக் கூற விரும்புகின்றேன். தீவிரவாத அமைப்பை தோற்கடித்து நாட்டுக்கு வெற்றியை ஈட்டித்தந்த முப்படையினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாமென்று நான் தொடர்ச்சியாக தெரிவித்தேன். ஆனால் அதற்கு செவி சாய்க்கவில்லை. எமது இராணுவம் ஒழுக்கமிக்க இராணுவமாக இருக்கும் காரணத்தினால் இந்த அனைத்தையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசத்தின் நிலைப்பாட்டின்படி நாம் இராணுவத்தினருக்கு தண்டனை வழங்க வேண்டும். எமது இராணுவத்தினரை அழித்த பிரபாகரனின் தரப்பினருக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இல்லை.

அவர்கள் உலக நாடுகளில் வசித்து வருகின்றார்கள். எல்ரீரீஈயின் உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் சர்வதேசம் எங்கள் தரப்புக்கு மாத்திரமே விரலை நீட்டுகின்றது. இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதென்றும், சர்வதேச போர் நியதிகளை மீறி இருக்கின்றோம் என்றும் எம்மீது குற்றம் சாட்டுகின்றனர். அப்படியென்றால் எமது முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டின் ஜனாதிபதி முதல் பொதுமக்கள் வரை சுமார் ஒரு இலட்சம் பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியென்றால் அந்த குற்றங்களை புரிந்துவிட்டு உலக நாடுகளில் தலைமறைவாக இருப்பவர்களை இலங்கைக்கு வரவழைத்து தண்டனை வழங்கும் செயற்திட்டமொன்று எங்காவது உள்ளதா? சர்வதேசம் அதைப்பற்றியும் வாய் திறப்பதில்லை. எமது நாட்டிலும் இந்த கருத்து முன்வரவில்லை. இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதாக இருந்தால். அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்படியில்லை என்றால் இரு குழுவினருக்கும் தண்டனையை வழங்காது ஒரு புரிந்துணர்விற்கு வரவேண்டும்.

எனது கருத்து என்னவென்றால் அப்படியாயின் அனைவரின் மீதும் வழக்கு தாக்கல் செய்யவேண்டும். அப்படி இல்லையென்றால் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இராணுவத்தை விடுவிக்க வேண்டும். தற்போது எல்ரீரீஈயினருடன் தொடர்புடைய தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல கலந்துரையாடல்களை முன்வைத்தோம் தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றால் எமது இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகளிலிருந்து அவர்களையும் விடுவிக்க வேண்டும். அதுதான் நியாயம். ஒரு தரப்பினரை மாத்திரம் நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுசெல்லக் கூடாது.

அண்மையில் கடாபியை போன்றே என்னையும் இழுத்து சென்று கொலை செய்ய வேண்டுமென்று உங்கள் தரப்பினர் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோன்று மஹகமசேகர வீதியில் அமைந்துள்ள எனது இல்லத்தை தீ வைத்து என்னையும் பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டுமென்றும் ஊடக சந்திப்புகளை மேற்கொண்ட அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் கருத்து முன்வைத்திருந்தனர். இதுவரையில் இந்த நாட்டில் எந்த அரச தலைவர்களுக்கும் அந்த மாதிரியான சொற்பிரயோகங்களை பயன்படுத்தியதில்லை.

ஜெ.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அவரது ஆட்சி காலத்தில் அநேக போராட்டங்களை முன்னெடுத்து சிறைக்கு சென்றவன் நான். பண்டாரநாயக்க அம்மையாரின் குடியுரிமையை இரத்து செய்தபோதே ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் இந்திய இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்தார். நாங்கள் அதற்கு எதிராக வீதியில் உறங்கினோம். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் நாட்டின் மக்கள் ஜே.ஆர்.ஜயவர்தனவின் வீட்டை சுற்றி வளைப்பதாகவோ இன்று எனக்கு முன்வைத்த கருத்துக்களையோ அன்று முன்வைக்கவில்லை.

சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாருக்கு எதிரான விடயங்கள் நாட்டில் எவ்வளவு இடம்பெற்றன? ஆனால் கடாபிக்கு இடம்பெற்றதை போன்று நடக்க வேண்டும் என ஒருவரும் கூறவில்லை. மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாட்டில் பாரிய எதிர்ப்பு அலைகள் ஏற்பட்ட போதிலும் ஜனநாயக ரீதியிலேயே அவர் தோல்வி அடையச் செய்யப்பட்டார். கடாபியை போன்று இழுத்துச் செல்ல வேண்டும் என ஒருவரும் கூறவில்லை. அப்படியாயின் ஏன் எனக்கு மட்டும் கூறுகின்றனர்? எனக்கு அவ்வாறு செய்யமுடியும் என்பதாலேயே கூறுகின்றனர். நான் அந்தளவிற்கு எளிமையானவன் என்பதாலேயே கூறுகின்றனர். ஜே.ஆர். ஜயவர்தன முதல் இதுவரை காணப்பட்ட எந்த தலைவருக்கு அவ்வாறு கூறியிருப்பினும் அவ்வாறு கூறியவர்கள் இல்லாது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் என்னைப் போல் எளிமையானவர்களின் வீட்டினை சுற்றிவளைக்கவும் தீயிட்டுக் கொளுத்தவும் என்னை இழுத்துச் செல்லவும் முடியும் எனவும் அவர்கள் அறிவார்கள்.

எனது அரசியல் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு மத்தியில் நாட்டில் சிறந்த பண்பான சமூகத்தினர் ஒருபுறத்தில் ஒன்றுசேர்வதைப் போன்று குற்றவாளிகள், பாதான உலகத்தினர் மற்றும் மிலேச்ச குணமுடையவர்களே அத்தகைய கூற்றுக்களை தெரிவித்துள்ளனர். என்னைக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் நீங்கள் இவ்வாறு கருத்துக்களை வெளியிடவில்லை. அது தொடர்பிலேயே பிரச்சினை உள்ளது. அந்த கொலை திட்டமிடல் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் அதனுடன் தொடர்புபட்டுள்ளன. தற்போது சிலகாலம் பொலிஸ் எனது பொறுப்பில் காணப்படுவதால் அந்த விசாரணைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆயினும் துரதிஷ்டவசமாக நாட்டின் ஜனாதிபதி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெறும்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் எவரும் அங்கு சமூகமளித்திருக்கவில்லை. நான் அது தொடர்பில் அவர்களிடம் விசாரித்தபோது தவறுதலாக வருகைதர முடியாது போய்விட்டது மன்னித்து விடுங்கள் என நூறு தடவைகள் மன்னிப்பு கேட்டார்கள். மன்னிப்பு கேட்பதல்ல முக்கியம் நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பிலான விசாரணை தொடர்பில் அவர்களது கவனயீனமே இவ்விடத்தில் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். எவ்வாறாயினும் அந்த விசாரணைகளில் தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கு ஏற்ப பல தெளிவாகியுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கூறுவதாயின், நாட்டின் தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் மிக உன்னத நோக்கத்துடனேயே நான் அதனை வெளியிட்டேன். நாட்டின் அரசியலமைப்பினை மீறிச் செயற்பட வேண்டுமென்ற தீய எண்ணத்துடன் அதனை நான் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பாரியதொரு அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனை தீர்ப்பதற்கான சிறந்த வழி தேர்தலொன்றை நடத்துவதாகும். பாராளுமன்றத்தின் 122 உறுப்பினர்களே இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால் இந்த நாட்டில் 155 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த 122 பேரை விடவும் நாட்டின் 155 இலட்சம் வாக்காளர்களே மக்களின் இறைமை தொடர்பில் தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றும் அதுவே உலகத்தினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையாக அமையும் என்றும் நான் கருதியதாலேயே அந்த முடிவினை மேற்கொண்டேன். மிகத் தூய்மையான எண்ணத்தோடு நான் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகளுக்காக எனக்கு தண்டனை கொடுப்பதாயின், எனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாயின் அதுபற்றி நான் வருந்தப் போவதில்லை. ஆயினும் இவ்விடயம் வரலாற்றில் குறிப்பிடப்படும். வேறு எவரும் குறிப்பிடவில்லையாயின் நானே அவற்றை எழுதுவேன். தற்போது நான் இவற்றையெல்லாம் எழுதி வருகின்றேன். அந்த புத்தகத்தை ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பெப்ரவரி மாதத்தில் வெளியிட முடியுமென்று நினைக்கின்றேன். அந்த புத்தகத்தில் நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கியிருந்தாலும் எனது நிலைப்பாடு என்ன? 155 இலட்ச மக்களின் ஆணை 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கைவிட பெரிது என்று நான் எண்ணியது தொடர்பிலும் இந்த புத்தகத்தில் எழுதுவதற்கு நான் எண்ணியுள்ளேன்.

நான் எனது அரசியல் வாழ்க்கையில் ஐந்து, ஆறு முறைகள் செத்து பிழைத்தவன். முதல் முறையாக 1971ல் ஜே.வி.பிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத என்னை சேகுவேரா ஆதரவாளன் என்று அடித்து இழுத்து சென்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒன்றரை வருடங்கள் அடைத்து வைத்தார்கள். அந்த சந்தர்ப்பத்தின்போது முதன்முறையாக இறைவன் என்னை காப்பாற்றினார்.

“தர்ம வழியில் வாழ்பவனை தர்மமே காக்கும்” நான் ஆன்மீக வழியில் வாழ்பவன். இதற்கு முன்னைய ஜென்மங்களிலும் அவ்வாறான வாழ்க்கையைதான் நான் வாழ்ந்திருப்பேன் என்று நம்புகின்றேன். அதனால்தான் நான் உயிர் பிழைத்தேன் என்பதை நான் அறிவேன். எல்ரீரீஈ.யினர் என் மீது ஐந்து தடவைகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆனாலும் எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால்தான் “தர்ம வழியில் வாழ்பவனை தர்மமே காக்கும்” என்று நான் தெரிவித்தேன். என்னை கொலை செய்ய வந்த எல்ரீரீஈ. தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் பொலன்னறுவையிலேயே சயனைட் சாப்பிட்டு மரணமடைந்தனர். என்னை கொலை செய்வதற்காக வந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை அண்மையில் நான் விடுதலை செய்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக பொரலஸ்கமுவையில் என்மீது தாக்குதல் மேற்கொண்டபோது எனக்கு எவ்வித சேதமும் ஏற்படாவிட்டாலும் அப்பாவி மக்கள் சிலர் அந்த தாக்குதலால் மரணமடைந்தனர். அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு வரும்போது ராஜகிரிய என்.எம்.பெரேரா உருவச்சிலை அமைந்திருக்கும் சந்தியில் எல்ரீரீஈ.யினர் என்மீது எவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பதை பிரதமரும் நீங்கள் அனைவரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன். நான் அந்த இடத்தில் சிக்கிக்கொண்டேன். என் மனைவியும், பிள்ளைகளும் வருகை தந்த வாகனம் சம்பவ இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தபோது எல்ரீரீஈ.யினர் அந்த வாகனத்திலேயே ஏறி தப்பி சென்றனர். அந்த வாகனத்தை மல்வான பிரதேசத்தில் விட்டுவிட்டு சென்றிருந்தனர். இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1971ல் எனது வயது 19 ஆகும். தற்போது எனது வயது 67 ஆகும். 19 வயது முதல் பல சந்தர்ப்பங்களில் உயிர் தப்பியுள்ளேன். ஐந்து சந்தர்ப்பங்களில் இறைவன் என் உயிரை காப்பாற்றியுள்ளார்.

அதனால் கடாபியை போன்றே என்னையும் இழுத்துச் சென்று கொலை செய்யலாம் அது தொடர்பில் எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை. இராணுவத்தையோ அதிரடிப்படையினரையோ அனுப்பி அவர்களை சுட்டுக்கொள்ள மாட்டேன். எந்த சந்தர்ப்பத்தில் என்மீது தாக்குதல் மேற்கொள்ள வந்தாலும் நான் பிரதான வாயிலை திறந்துவிடுவேன். இராணுவத்தினரையும் அதிரடிப்படையினரையும் வெளியேறச் சொல்லிவிடுவேன். கொலை செய்ய வந்தவர்கள் என்னையும் என் வீட்டையும் கொளுத்திவிட்டு செல்லலாம். அரச சார்பற்ற நிறுவனத்தினருக்கும் இங்கு அமர்ந்திருக்கும் அவ்வாறான கருத்துக்களை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் இதை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இத்தகைய அனுபவங்களுடன் நாம் எவ்வாறு முன்னோக்கி பயணிக்க வேண்டுமென்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். இத்தகைய பிரச்சினைகளுடன் அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல போகின்றோமா? உங்களிடையேயுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசியின் ஊடாக அழைப்பினை மேற்கொண்டும் நேரடியாக சந்தித்தும் ஒன்றிணைந்து பயணிப்போம் என்று தெரிவித்தனர். ஆனால் அந்த பயணத்திற்கான உத்தரவாதம் எதுவென நான் அறியமாட்டேன். பிரச்சினைகளை தோற்றுவிப்பது எனது எண்ணம் இல்லை. பிரச்சினைகளின் மூலம் நாடு வீழ்ச்சியை சந்திக்கின்றது. தற்போது நிலவும் ஊழல் சூழ்நிலை மிக வலிமையடைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பாராளுமன்றத்தில் ஊழல் செய்யும் அரசியல் குழுவொன்று உள்ளது. அமைச்சரவையிலும் ஊழல் செய்பவர்கள் இருக்கிறார்கள். நாம் மக்களுக்கு வழங்கிய நல்லாட்சி அரசியல் வாக்குறுதிகள் கண்ணெதிரே அழிக்கப்பட்டுள்ளன. இந்த செயலுக்கான குற்றவாளி நான் இல்லை என்பதை தெளிவாகக் கூறிகொள்ள விரும்புகின்றேன். நான் அனைத்து அர்ப்பணிப்புகளையும் மேற்கொண்டேன். ஆனால் அவை அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எனக்கு வாக்களித்த பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளர்கள் இவற்றை அறிய மாட்டார்கள். அவர்கள் இந்த அரசியல் சாக்கடையை பற்றி எதையும் அறிய மாட்டார்கள். அவர்களுக்கு அதைப்பற்றி தெரிந்திருந்தால் போராட்டங்களுக்கோ ஊர்வலங்களுக்கோ கூச்சலிடவோ முன்வந்திருக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

இலங்கை ஒரு அதிர்ஷ்டமான நாடு என்பதை நாம் அறிவோம். ஆனால் அத்தகைய மகத்துவம் பெற்ற இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டியமைப்பதற்கு ஊழலை தவிர்த்து செயற்படும் எத்தனை அரசியல்வாதிகள் உள்ளார்கள்? ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு தேவையானவர்கள் யார்? அவர்களின் ஒன்றுகூடுதல் மிகவும் அவசியமாக உள்ளது. சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப, அபிவிருத்தியை உருவாக்க, ஊழல் அற்ற ஆட்சியை கொண்டுசெல்வதற்காக நாம் முன்வைத்து தோல்வியடைந்த நல்லாட்சி கொள்கைகளை மீண்டும் செயற்படுத்த வேண்டும். நாட்டை நேசிக்கும் நாட்டின் கலாசார பெறுமதிகளை தர்ம நெறிகளுடன் கூடிய சமூக கட்டமைப்புக்கு மதிப்பளிக்கும் நாடுகள்தான் உலகில் வளர்ச்சியடைந்திருக்கின்றன.

அவ்வாறான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான குழுவினர்கள் எங்கே உள்ளார்கள் என்ற ஒரு பிரச்சினை எழுகின்றது. இதை தனியொரு நபரால் செய்ய முடியாது. இதற்கு ஒரு சிறந்த குழு தேவையாக உள்ளது. மக்களுக்கு தலைமையேற்க சிறந்த குழுவொன்று அவசியமாக உள்ளது. நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என்று நான் தெரிவித்ததை அடிப்படையாகக்கொண்டு சிலர் கேள்வி எழுப்பலாம். என்னை தரக் குறைவாக பேசலாம். எனது பேச்சை கேலிக்குள்ளாக்கலாம். ஆனால் அது எனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடாகும். அதன் தீவிரத்தன்மை காரணமாகவே நான் அவ்வாறு தெரிவித்தேன். அப்போது நீங்கள் பாராளுமன்றத்தில் 117 பெரும்பான்மையை நிருபித்துக் காட்டினீர்கள். பிரதமரை நியமிப்பதற்காக ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை வழங்கவோ கட்டளையிடவோ அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை. நான் அறிந்த வரையில் நீதிமன்றத்திற்கும் அந்த அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் தெளிவாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஒழுக்கத்திற்கும் மதிப்பளித்து பாராளுமன்றத்திலும் 117 வாக்குகளின் மூலம் பெரும்பான்மையை நிருபித்ததால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க நான் முடிவு செய்தேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. இன்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்து அவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டுமென்று நான் முடிவெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயக சமூகத்தின் சிறப்பம்சமாகவே இந்த செயற்பாட்டை நான் கருதுகின்றேன்.



Read more...

மீண்டும் ஒரு முறை ஆட்சியை மாற்றுவோம் மஹந்தர் சூழுரை!

எதிர்பாராத வேளையில் நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றியதைப் போல எதிர்காலத்திலும் எதிர்பாராத திருப்பு முனையை நாட்டில் ஏற்படுத்துவேன் என நேற்றைய தினம் தங்கல்ல கார்டன் இல்லத்தில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பின் போது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொது தேர்தல் ஒன்றினையே மக்கள் எதிர்பார்த்தனர். அதனாலேயே நான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். இந்நிலையிலேயே உயர்நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது இதன்காரணமாக நான் பதவியை இராஜினாமா செய்தேன்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று பிரதமாhக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள். அத்தோடு நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அன்று கூறியதுவாறு அரசாங்கத்தை மாற்றியது போல் மீண்டும் ஒரு முறை சந்திக்க நேரிடும் என்பதனை பிரதமர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

Read more...

பாரளுமன்றில் காடைத்தனம் புரிந்தோரை கண்டு பிடிக்க விசேட குழு

பாராளுமன்றத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக் குழுவினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக் குழுவின் இருவரினால் சி.சி.ரி.வி காணொளிகள் தனித்தனியாக பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியவர்களினால் குறித்த காணொளிகள் பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த மோதல் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை தனியார் ஊடகங்களின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகங்களில் இருந்து பெறப்படும் காணொளிகள் பாராளுமன்ற சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மற்றும் விஷேட பொலிஸ் குழுவினால் பரிசீலிக்கப்பட தீர்மானித்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் சமல் ராஜபக்ஷ, சந்திரசிறி கஜதீர, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர்.

Read more...

அன்ரன் பாலசிங்கம்! அறியாத வரலாறு. By நட்சத்திரன் செவ்விந்தியன்

இப்போது சில நாட்கள் "ரணில் ஒரு நரியன்" என்று அன்ரன் பாலசிங்கம் உரையாற்றுகிற ஒரு வீடியோ முகநூலில் உலாவருகிறது. இந்த உரையை வழங்குகிறபோது பாலசிங்கம் வன்னியில் செத்துப்பிழைத்து தாய்லாந்து வழியாக லண்டன்சீமைக்கு நடைப்பிணமாக வந்தவர். அவரது மதியுரைஞர் வாழ்நாள் முழுக்க சாராய புகையிலை போதையில் இருந்தவர் சலரோக/சக்கரை நோய் முத்தி தன் சிறுநீரகங்களை இழந்து இரவல் சிறுநீரகங்களில் பிழைத்த பாலசிங்கத்தின் உடல் மொழியை கவனியுங்கள். எவ்வளவு கஸ்ரப்பட்டு அந்த உரையை வழங்குகிறார். இப்போது பாலசிங்கம் உயிர்வாழ்வதற்கு வழங்கப்பட்ட குளிசைகளின் போதையில் இவ்வுரையை வழங்குகிறார். அவரது நாக்கு மட்டுமல்ல உடலும் தள்ளாடுகிறது. கடல்வழியாக தாய்லாந்து வழி லண்டன்போன பிற்காலத்தில் பாலசிங்கம் வழங்கிய பல உரைகள் சபை நாகரீகமற்ற பேச்சுக்கள். ஒரு ராசதந்திரியின் பண்புகளற்றவை. கருணா தாய்லாந்தில் சரக்கடித்ததால்தான் பின்னர் பிரிந்தார்/ ஆனந்த சங்கரியின் உடும்பு றச்சியும் இரண்டு கிழவிகளும்/ சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை இந்த வகையான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான குடிகாரனின் கள்ளுக்கடை #ஓத்தா பேச்சுக்கள்.

அன்ரன் பாலசிங்கத்தை மதிப்பிட அவரின் சிறுவயது வரலாற்றிலிருந்து தொடங்குவோம். ஒரு கரவெட்டி கத்தோலிக்க வெள்ளாடிச்சிக்கும் மட்டக்களப்பு சைவக்குருக்களின் மகனுக்கும் பிறந்த பாலசிங்கம் கத்தோலிக்கராக தாயால் கரவெட்டியில் வளர்க்கப்பட்டவர். தந்தை சிறுவயதிலேயே பாலசிங்கத்தின் தாயைவிட்டு பிரிந்துவிட்டார். கரவெட்டி அம்பம் சிறு ஆஸ்பத்திரியில் Mid wife ஆக தொழில் செய்து கஸ்ரப்பட்டுத்தான் தாயார் பாலசிங்கத்தையும் உடன்பிறப்புக்களையும் வளர்த்தார். நெல்லியடி St Anthony's church அக்காலத்தில் வெள்ளாள கத்தோலிக்கர் ஆதிக்கம் மிக்கது. தாயார் வெள்ளாடிச்சி என்றாலும் ஒரு மட்டக்களப்பானை கட்டியவர் என்பதால் பாலசிங்கம் குடும்பம் வெள்ளாள கத்தோலிக்க குடும்பங்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டது. பாலசிங்கம் குடும்பம் தேவாலயத்துக்கு வருவது மட்டுந்தான். இவர்கள் சக வெள்ளாள குடும்ப நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை.(முக்கியமான இத்தகவலை எனக்கு தந்தது இப்போது புலம்பெயர்ந்து வாழும் அதே கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்) இந்த பாரபட்சம்தான் அன்ரன் பாலசிங்கத்தின் பொதுவாழ்வில் பின்னாட்களில் பெருந்தாக்கம் செலுத்தியது.

தேவாலயத்துக்கருகிலுள்ள Sacred Heart பாடசாலையில் அக்கால ஆங்கிலமுல matriculation சாதாரண தரம்வரைதான் பாலசிங்கம் படித்தார். வறுமையும் சமுகப்பாரபட்சமும் குடும்பத்தை கடுமையாகப் பாதித்தது. இளவயதிலேயே பாலசிங்கம் மதுவுக்கும் சிகரெட்டுக்கும் அடிமையாகிவிட்டார். சிறுவயதிலேயே மேற்படிப்பு படிக்காமல் பத்திரிகையாளராக வேலைசெய்ய கொழும்புபோனார். சுய படிப்பு வாசிப்பு மூலமே புத்திஜீவியானவர் பாலசிங்கம். பாலசிங்கத்தின் கொழும்பு புத்சிஜீவி நண்பர்களில் ஒருவர் பின்னாளில் பேராதனை பல்கலைக்கழக தத்துவவியல் விரிவுரையாளரான சா.வே. காசிநாதன். மற்றவர் செய்தி என்ற வார இதழின் ஆசிரியர். பாலசிங்கம் பிரித்தானிய தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராக ஆனபின்னரே அவர் வாழ்வில் திருப்புமுனையானது. இடையில் அவர் முதல் காதல் மனைவி மரணம். இதோடு பாலசிங்கத்துக்கு லண்டன் போகவாய்ப்பு வருகிறது. ஆனால் இதற்குமுதலே காசிநாதன் கலாநிதிப்படிப்புக்காக லண்டன் போய்விட்டார். தனக்கு A/L படிப்பு பல்கலைக்கழக படிப்பு என்பன உரிய காலத்தில் இலங்கையில் வறுமைகாரணமாக மறுக்கப்பட்டதும் கரவெட்டில் இருந்த பாரபட்சமும் அவரை ஒரு நிரந்தரமான காழ்ப்புமிக்க மனிதனாக்கிவிட்டது. பின்நாட்களில் லண்டனில் பாலசிங்கம் கலாநிதிப்படிப்புக்கு பதிவுசெய்த வாய்ப்பு வந்தபோதும் அவரது காழ்ப்பு விலகவில்லை.

யாழ் குடாநாட்டை ஒரு மாநிலமாக எடுத்தால் இவர் வளர்ந்த கரவெட்டி ஒரு Province ஆகிறது. யாழ்ப்பாணம் Cosmopolis. பாலசிங்கத்தின் காழ்ப்பிலிருந்து அவரது Personal Agenda வருகிறது. ஈழ கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் தான் பெரும்பான்மை என்றாலும் டச்சுக்காலத்திலிருந்து Cosmopolitan களான அங்கிலிக்கன் மற்றும் ரோமன் கத்தோலிக்கரல்லாதவர்களே புலமைசார் செல்வம்சார் மேட்டுக்குடிகளாக இருக்கிறார்கள். அமெரிக்கன் மிசன் ஆரம்பித்த அப்போது பல்கலைக்கழகத்துக்கு சமனாக இருந்த வட்டுக்கோட்டை கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி இவற்றை அடியொற்றி வந்த சீ.வை தாமோதரம்பிள்ளையிலிருந்து வந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்(ஹண்டி பேரின்பநாயகம்), ராஜினி திராணகம, நீலன் திருச்செல்வம்( இந்து ஆனாலும்) லக்ஸ்மன் கதிர்காமர், ராஜன் ஹுல் வரையான நவீன புலமைத்துவ பாரம்பரியத்தில் புலிகளுக்கிருந்த வெறுப்பு பிரபாகரனால் வந்ததல்ல. பாலசிங்கத்தின் personal Agenda வின் ஆன விளைவு. பாலசிங்கம் புலிகளின் சிந்தனையில் 1983 ஜூலையின் பின் தாக்கம் செலுத்தமுன் புலிகள் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டிய துரையப்பா தியாகராஜா முதலியவர்களுத்தான் கொன்றார்கள். பாலசிங்கத்தின் பின் தான் புலிகள் St.John's College அதிபர் ஆனந்தராஜ், சாம் தம்பிமுத்து, ராஜினி திராணகம, நீலன் திருச்செல்வம், கதிர்காமர் போன்றவர்களைக்கொல்கிறார்கள்.

புரியவில்லையல்லவா! தெளிவாக விளக்குகிறேன். பாலசிங்கம் அசலான ஒரு புத்திஜீவி. தீலிரமான வாசகர்/படிப்பாளி. லெனினையும் ஸ்ராலினையும் மாவோவையும் தெளிவாகப்புரிந்து கடந்து இடதுசாரியத்தை புரிந்தவர் பாலசிங்கம் என்பதை அவரது புலி அரசியல் சாராத கட்டுரைகளின் தொகுப்புமூலம் அறியலாம். அவரது எழுதி சமர்ப்பிக்கப்படாத கலாநிதி பட்ட தலைப்பையும் ஆராய்ந்து பாருங்கள். சி.சிவசேகரம் போன்ற கட்டுப்பெட்டி மார்க்சியர் அல்லர் பாலசிங்கம். இப்படியானவர் ஏன் அக்காலத்திலிருந்த இடதுசாரி இயக்கங்களான EROS, EPRLF என்பவற்றிலும் தலமை தீவிர இடதுசாரித்தனமாக இல்லாவிட்டாலும் பெரும்பாலான தொண்டர்கள் இடதுசாரிகளாக இருந்த PLOTE, TELO என்பவற்றில் சேராமல் அப்பட்டமான வலதுசாரியான புலிகளில் போய்ச்சேர்ந்தார். பின் புலிகள் வலதுசாரிகளைவிடமோசமாகி பாசிஸ்டுகள் ஆனபின்னும் அதனை நியாயப்படுத்தினார்? வலதுசாரியான பிரபாகரனை சந்திக்கமுதல் EROS ஸ்தாபகர் ரட்ணசபாபதி, EPRLF பத்மநாபா ஆகியோரை லண்டனில் சந்தித்திருந்தபோதும் அசல் இடதுசாரி புத்திஜீவியான பாலசிங்கம் புலிகளில் இணைந்தார். காழ்ப்புதான் வேறொன்றுமில்லை.(#தொடரும்)

Tamil Tigress: The fake memoirs எனும் முகப் புத்தகத்திலிருந்து



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com