Thursday, December 13, 2018

தீர்ப்பு வெளியானது! பாராளுமன்றை கலைத்தது சட்டவிரோதம்.

ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது சட்ட விரோதமானது என்றும் அது அரசியல் யாப்பை மீறுவதாக அமைந்துள்ளது என சற்று முன்னர் உச்ச நீதிமன்று சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த . மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.

அதனடிப்படையில் குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பின்னிணைப்பு)

ஒக்டோபர் 26 - அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலக தீர்மானித்தது. இதனை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். தமது இந்த முடிவை சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

ஒக்டோபர் 26 - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார்.

ஒக்டோபர் 26 - புதிய பிரதமரின் பதவியேற்ப்பை அடுத்து, ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தின் 42 (4) சரத்தின் பிரகாரம் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் தன்னால் நியமிக்கப்படுவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஒக்டோபர் 27 - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டது.

ஒக்டோபர் 27 - உடனடடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் பிற்போடப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் இடம்பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 30 - பாராளுமன்றத்தை பிற்போடுவது சம்பந்தமாக வௌியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்தார்.

நவம்பர் 2 - பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நவம்பர் 9 - பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

நவம்பர் 9 - இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2 (இ) உப உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாக ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும். அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 12 - பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் வரும் வரையில் பொது தேர்தலை ஒத்தி வைக்குமாறும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நவம்பர் 12 - பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

நவம்பர் 13 - 19 வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் வேளையிலேயே இவ்வாறு சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது.

நவம்பர் 13 - பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 14 - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

நவம்பர் 14 - புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 15 - பாராளுமன்றத்தில் அமைதியற்ற நிலை தோன்றியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது.

நவம்பர் 15 - பாராளுமன்றம் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 16 - பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் பிரகாரம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 19 - உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் ​பெயர் குறிப்பிடப்பட்டிரிந்தது.

நவம்பர் 19 - பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த பிரேரணையை ஒப்படைப்பதாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். இதேவேளை குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 23 - பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். இந்நிலையில் மின்னணு வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் நவம்பர் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டது.

நவம்பர் 23 - கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என்று உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 04 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணை நாளான எதிர்வரும் 04, 05, 06 ம் திகதிகளில் இந்த மனுவை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

நவம்பர் 26 - மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்த செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு, நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் 26 - பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்தார். குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை கடந்த 14 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது.

நவம்பர் 27 - பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நவம்பர் 27 - ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

நவம்பர் 28 - ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. தம்பர அமில தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 53 பேர் பெயரிடப்பட்டனர்.

நவம்பர் 29 - பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர். பாராளுமன்றம் 30 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நவம்பர் 30 - பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆமோதித்து வழிமொழிந்தார்.

நவம்பர் 30 - அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். பின்பு பாராளுமன்றம் டிசம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 30 - மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். பின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

டிசம்பர் 03 - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 04 - மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

டிசம்பர் 05 - சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. பாராளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்தது. பாராளுமன்றம் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

டிசம்பர் 07 - பாராளுமன்றத்தை கலைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தீர்ப்பு வௌியாகும் வரை நீடிக்கப்பட்டது.

டிசம்பர் 07 - சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

Read more...

யாரை நம்புவது? ஒப்பந்தம் என்கிறது கூட்டமைப்பு, இல்லவே இல்லை என்கின்றது ஐ.தே.க.

பிரதம மந்திரியாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவேண்டும் என நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியை நிபந்தனைகள் இன்றி ஆதரிப்பது, பக்கசார்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுகம் தமிழ் மக்களும் எதிர்ப்பை தெரிவித்தபோது, தாம் எழுத்துமூலமான ஒப்பந்தத்துடனே ஆதரவினை வழங்கியுள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு ஊடகங்கள் எழுதித்தள்ளின.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், எழுத்து மூலமான எந்த உடன்படிக்கையும் இல்லை எனவும், நம்பிக்கை அடிப்படையிலான கொள்கை ரீதியான இணக்கப்பாடு மாத்திரமே இரண்டு தரப்புக்கும் இடையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் இரண்டு தரப்புக்கும் இடையிலான இணக்கப்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரதமருக்கு ஆதரவான நம்பிக்கை தொடர்பான தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் சரத் பொன்சேகாவும் தலையிட்டிருந்தார்.

இதனடிப்படையில், இலங்கையை ஒற்றையாட்சி நாடாக முன்னெடுத்து செல்லுதல், தற்போது உள்ளப்படியே பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளித்தல், வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது ஆகிய கொள்கை ரீதியான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதனை தவிர எழுத்து மூலமான எந்த உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் போலியான ஆவணம் வெளியாகியுள்ளது.

ரணில் - சம்பந்தன் உடன்படிக்கை மற்றும் யானை - புலி உடன்படிக்கை தொடர்பான கதைகளில் எந்த உண்மையுமில்லை என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பயங்கரவாத செயல்களுக்காக கைது செய்யப்பட்டிருப்போரை விடுவிப்பது ஆபத்தானது. சுசில் பிறேமஜெயந்த

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்காக விடுத்துள்ள நிபந்தனைகளில் மேற்படி நபர்களின் விடுதலையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது.

ஆனாலும் கடந்த காலங்களில் நீதித்துறை அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான தலதா அத்துக்கொரல முன்னாள் புலிகளில் அதி பயங்கரமான குற்றச்செயல்களை மேற்கொண்டடவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களை நீதிமன்ற நடைமுறைகளுக்கு புறம்பாக விடுதலை செய்துவிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. அத்துடன் விடுதலை புலிகள் இயக்க போராளிகளை சட்டத்திற்கு முரணாக விடுதலை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகள் என்று குறிப்பிடுபவர்களை விடுதலை செய்வது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் தமக்கு ஆதரவளித்தால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரணில் குறிப்பிட்டுள்ளமையாது பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகம் என்றார்.

Read more...

மன்னார் புதைகுழியால் அனந்திக்கு பயமாம்! கணவரின் செயல்கள் அம்பலமாகும் என்ற அச்சமாக இருக்கலாமா?

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் இரும்பு கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப் பெற்றது.

புலிகள் சிறைப்பிடித்து வைத்திருந்த பலரை இருப்பு கம்பிகளால் பிணைத்து வைத்திருந்தனர் என அவ்வாறு சித்திரை அனுபவித்து தெய்வாதீனமாக தப்பிய சிலர் கடந்தகாலங்களில் பகிரங்கமாக அறிவித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுவான் என்ற பாணியில் இக்கொலைகளுக்கு பொறுப்பானவர்களில் ஒருவரான எழிலனின் மனைவியான அனந்தி சசிதரன், எவ்வளவு கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று உண்மை வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உண்மைகள் வெளியானால் தனக்கு ஏதாவது சிக்கல் வராவிட்டாலும், வாக்கு பிச்சை எடுத்துக்கொள்ள முடியாது போகும் என்ற அச்சத்தில் தனக்கு ஏதும் தெரியாதவர் போல் நடிக்க முற்படுகின்றார் அனந்தி.

மன்னாரில் வைத்து இன்று (13) ஊடகங்கள் முன்னிலையில் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ள அனந்தி, இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது, இந்த சம்பவத்திற்கு யார் உரியவர்கள், யாரால் கொல்லாப்பட்டர்கள் என்ற உண்மை வெளிவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more...

நீதிமன்ற தீர்ப்பு சாதகமற்றதாயின் மஹிந்த-மைத்திரியின் அடுத்த நகர்வு என்ன தெரியுமா? வை எல் எஸ் ஹமீட்

பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தலாமா? பதில்: ஆம்

அவ்வாக்கெடுப்பில் மக்கள் பெரும்பான்மையாக “ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? பதில்: இல்லை

பாராளுமன்றத்தைக் கலைத்தது பிழை எனத்தீர்ப்பு வந்தால் பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தவும் மக்கள் “ ஆம்” என்று பதிலளித்தால் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி, மஹிந்த தரப்புடன் கலந்தாலோசனை நடாத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக சட்டத்தின் நிலைப்பாடு என்ன?

அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ளது. ஒன்று சரத்து 85இன் கீழ். இது binding referendum ( கட்டுப்படுத்தக்கூடிய சர்வஜனவாக்கெடுப்பு) எனவும் அடுத்தது சரத்து 86 இன் கீழ் non-binding referendum ( கட்டுப்படுத்தாத சர்வஜன வாக்கெடுப்பு ) எனவும் அழைக்கப்படும்.

Binding Referendum

இது அரசியலமைப்பின் சில சரத்துக்களைத் திருத்துவதற்கு 2/3 பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படும்; எனப்படும் வாக்கெடுப்பாகும்.

அதாவது, அமைச்சரவை சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடுவதாக தீர்மானிக்கின்ற, அல்லது உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்று தீர்மானிக்கின்ற எந்தவொரு சட்டமூலமும் முதலில் 2/3 ஆல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் அதற்காக நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு. இந்த வாக்கெடுப்பை நடாத்தாவிட்டால் அல்லது அதில் வெற்றிபெறாவிட்டால் அத்திருத்தம் சட்டமாகாது. இதனாலேயே இது ‘ கட்டுப்படுத்தும் வாக்கெடுப்பு’ எனப்படுகிறது. ( binding, non binding என்ற சொற்கள் அரசியலமைப்பில் இல்லை. ஆனால் பொதுவாக அவ்வாறுதான் அழைக்கப்படுகின்றன ).

Non-binding Referendum



இது ஜனாதிபதி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் கருதும் எந்தவொரு விடயத்தையும் மக்கள் அபிப்பிராயத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றிற்கு விடுவதற்கானதாகும். இது மக்களின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி அறிந்துகொள்ள உதவுமேதவிர வேறு எதையும் செய்யாது. இதற்கு அமைச்சரவையினதோ, பாராளுமன்றத்தினதோ அனுமதி தேவையில்லை. ஜனாதிபதியே தீர்மானிக்கலாம்.

அவ்வபிப்பிராயத்திற்கிணங்க ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அது சட்டத்திற்கமைவாகவே செய்யப்பட வேண்டும். மக்கள் ஆம் என்று அபிப்பிராயம் தெரிவித்தற்காக சட்டத்திற்கு அப்பால் எதையும் செய்துவிட முடியாது.

பாராளுமன்றம் 41/2 வருடம் முடிவடையாமல் கலைக்கப்பட முடியாதென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் 41/2 வருடத்திற்குமுன் கலைக்க முடியாது; என்பதுதான் சட்டம்; என்பது அதன் பொருளாகும். எனவே, மக்கள் “ ஆம்” என்றுதான் வாக்களித்தாலும் சட்டப்படிதான் நடவடிக்கையெடுக்க வேண்டும். எனவே, பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அல்லது சட்டத்தைத் திருத்த வேண்டும். அதற்கு 2/3 பெரும்பான்மை வேண்டும்.

இதன் சட்டத் தத்துவத்தைப் பார்ப்போம்

அதிகாரம் அடிப்படையில் மக்களுக்குரியது. அந்த அதிகாரத்தை மக்கள் அரசியலமைப்பினூடாக அரசிற்கு வழங்கி அதைப் பாவிக்கின்ற முறையையும் அதில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதற்கமைவாகத்தான் அதைச் செயற்படுத்த முடியும்.

ஒரு சாதாரண சட்டத்தை கொண்டுவர அல்லது திருத்த சாதாரண பெரும்பான்மை, அரசியலமைப்பின் சில சரத்துக்களைத் திருத்த 2/3 பெரும்பான்மை, இன்னும் சில சரத்துக்களைத் திருத்த 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவையென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

41/2 வருடத்திற்கு முன் கலைக்க முடியாது; எனத் தீர்ப்பு வந்தால் 2/3 ஆல் பாராளுமன்றம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் அல்லது சட்டத்தை திருத்தவேண்டும்; கலைப்பதற்கு. சட்டத்தைத் திருத்த 2/3 ஆல் முதலில் அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். உயர்நீதி மன்றம் சர்வஜன வாக்கெடுப்பு தேவையென்றால் அதன்பின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும். சரத்து 70 (1)ஐத் திருத்துவதற்கு பெரும்பாலும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படாது.

எனவே, சுருங்கக் கூறின் அரசியலமைப்பைத் திருத்தாமல் 41/2 வருடத்திற்குமுன் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதற்கு முதல் கட்டமாக என்ன என்ன சரத்துக்களை எவ்வாறு திருத்தப்போகின்றோம்; என சட்டமூலம் கொண்டுவரவேண்டும். 2/3 ஆல் நிறைவேற்ற வேண்டும். அதன்பின் தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லலாம். 2/3 ஆல் அவ்வாறு ஒரு சட்டமூலம் நிறைவேற்றாமல் வெறுமனே வாக்கெடுப்பு நடாத்த முடியாது. இதுதான் கட்டுப்படுத்தும் சர்வஜன வாக்கெடுப்பு . ( சரத்து 85)

கட்டுப்படுத்தாத சர்வஜன வாக்கெடுப்பு ( சரத்து 86 ) ஜனாதிபதி எப்போது விரும்பினாலும் நடாத்தலாம். ஆனால் அதற்கு எதுவித சட்டத் தத்துவமுமில்லை.

இங்கு ஒரு கேள்வியை எழுப்பலாம். மக்கள்தானே இறைமையுடையவர்கள். அவர்கள்தானே “ கலையுங்கள்” என்று அனுமதி கொடுக்கின்றார்கள். எனவே, கலைக்கமுடியாதா? என. இதற்குப் பதில் திட்டவட்டமாக “ முடியாது “ என்பதாகும்.

ஏனெனில் இந்த மக்கள் கலைக்கலாம் என்று தம் அபுப்பிராயத்தைத் தெரிவிக்கின்றார்கள்; என்பது உண்மை. அதன்பொருள் சட்டத்தை ஒதுக்கிவிட்டு அல்லது சட்டத்தை மீறி செய்யுங்கள்; என்பதல்ல. சட்டத்திற்குட்பட்டு தாராளமாக செய்யுங்கள் அல்லது அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்ட முறைப்படி சட்டத்தைத் திருத்திவிட்டு செய்யுங்கள்; என்பதாகும்.

மறுதலையாக இந்த சர்வஜன வாக்கெடுப்பின் பொருள் சட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டு செய்யுங்கள் என்பதான ஒரு நோக்கம் இருந்திருந்தால் அது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாறு இல்லையெனில் நாளை ஜனாதிபதி “ இந்த அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவருவோமா?” எனக்கேட்டு ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தினால் மக்கள் ஆம் என்றால் தற்போதைய யாப்பைத் தூக்கிவீசிவிட்டு ஜனாதிபதி தாமாக ஒரு யாப்பை உருவாக்க முடியுமா? முடியாது.

எனவே, மக்கள் ஒன்றை செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கின்றார்களே தவிர சட்டத்திற்கு வெளியே செய்யுங்கள்; என்று கூறவில்லை. மட்டுமல்ல, இங்கு தெரிவிக்கப்படுவது அபிப்பிராயம் அல்லது சம்மதமே தவிர “ ஆணை” அல்ல. ஏனெனில் சரத்து 86இல் அவ்வாறு எந்த ஆணை பற்றியும் குறிப்பிடப்படவில்லை. மட்டுமல்ல, 86 இருக்கின்ற அதே யாப்பில்தான் 85 ம் இருக்கின்றது. சட்டத்தை திருத்துவதற்காகத்தான் அது இருக்கின்றது. எனவே, 86 ஐக் கொண்டு சட்டத்தைத் திருத்த முடியாது.

19வது திருத்தத்திற்குமுன் இன்னொரு சர்வஜனவாக்கெடுப்பும் இருந்தது. அது 85(2) இல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஒரு சாதாரண சட்டமூலம் ( அரசியலமைப்பைத் திருத்துவதற்கானதோ அல்லது அரசியலமைப்பிற்கு முரணானதாகவோ அல்லாததாக இருத்தல் வேண்டும்) ஏதோவொரு காரணத்தால் பெரும்பான்மை இல்லாததன் காரணமாக பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் ஜனாதிபதி தனது தற்றுணிவு அதிகாரத்தில் அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடலாம். இந்த உப சரத்து இப்பொழுது நீக்கப்பட்டு விட்டது.

பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டமூலத்தையே இப்பொழுது வாக்கெடுப்புக்குவிட முடியாதபோது சட்டமூலமே இல்லாமல் ஒரு சர்வஜனவாக்கெடுப்பை நடாத்தி அரசியலமைப்பு சட்டத்தை மாற்றமுடியுமா?

எனவே, 85 இன் கீழான சர்வஜன வாக்கெடுப்புக்கு ஒரு சட்டமூலம் வேண்டும். அது 2/3 ஆல் நிறைவேறப்படவேண்டும். 86இன் கீழான சர்வஜன வாக்கெடுப்புக்கு அவ்வாறு எதுவும் தேவையில்லை. ஜனாதிபதி விரும்பினால் நடாத்தலாம். மக்கள் அபிப்பிராயத்தை அறியலாம். அதனால் மக்கள் அபிப்பிராயத்தை அறிதல் என்பதற்குமேல் வேறு பிரயோசனம் இல்லை. எதைச் செய்வதாயினும் சட்டப்படிதான் செய்யவேண்டும்.

எனவே, ஜனாதிபதி பாராளுமன்ற கலைப்புத் தொடர்பாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பைத் தாராளமாக நடாத்தலாம். எந்த சட்டத்தடையுமில்லை. ஆனால் அதைவைத்து பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியாது. கலைத்தால் மீண்டும் இதே நிலை ஏற்படும்.

வாக்கெடுப்பு நடாத்தும் முறை

இந்த இரண்டு வகையான சர்வஜன வாக்கெடுப்பையும் பொறுத்தவரை வாக்கெடுப்பு வெற்றிபெறுவதற்கு முதலாவது பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். அவர்களில் 50% வீதத்திற்கு மேற்பட்டோர் அதனை ஆதரித்திருக்க வேண்டும்.

சிலவேளை வாக்களித்தோர் 2/3 பங்கிற்கு மேற்படவில்லையாயின் அதாவது 2/3 இற்கு குறைவானோர் வாக்களித்தால் அவர்களுள் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையில் 1/3 பங்கிற்கு குறைவில்லாதோர் அதனை ஆதரித்திருக்க வேண்டும்.

உதாரணமாக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் ஒரு கோடி நாற்பது லட்சத்திற்கும் அதிகமென நினைக்கின்றேன். இலகு கணிப்பிடுதலுக்காக ஒரு கோடி இருபது லட்சமெனக் கொள்வோம்.

இவர்களில் எண்பது லட்சத்துக்கு மேல் வாக்களித்திருக்க வேண்டும். அவர்களில் 50% இற்கு மேல் ஆதரித்திருக்க வேண்டும்.

சிலவேளை வாக்களித்தவர்கள் எண்பது லட்சத்திற்கும் குறைவானால் அதாவது 70 லட்சம், 60 லட்சம் அல்லது 50 லட்சமானல் ஆதரித்தவர்களின் எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 1/3 பங்கிற்கு குறையாமல் இருக்கவேண்டும்.

உதாரணமாக பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் ஒரு கோடி இருபது லட்சம். அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகள் 50 லட்சம்; எனில் பதியப்பட்ட வாக்கின் 1/3 ஆனது 40 லட்சமாகும். எனவே, 50 லட்சம் வாக்களித்தவர்களுள் 40 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் ஆதரித்தால் மட்டும்தான் அது செல்லுபடியாகும்.

சுருங்கக்கூறின் பதியப்பட்டோர் ஒருகோடி இருபது லட்சமெனில் நாற்பது லட்சத்திற்கு மேற்பட்டோர் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரித்தால் மட்டும்தான் அது வெற்றிபெறும்.

இவ்விருவகையான வாக்கெடுப்பும் சரத்து 87 இற்கமைய உருவாக்கப்பட்ட சட்டம் Act No 7 of 1981 இற்கைமைய தேர்தல் ஆணையகத்தினால் நடாத்தப்படும்.

இலங்கையில் இதுவரை நடாத்தப்பட்ட ஒரேயொரு சர்வஜன வாக்கெடுப்பு

இந்த சர்வஜன வாக்கெடுப்பு சரத்து 85 இன் கீழான ( கட்டுப்படுத்தும்) சர்வஜன வாக்கெடுப்பாகும். இது 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு கொண்டுவரப்பட்ட நாலாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்காக நடாத்தப்பட்டது.

இது இடைக்கால ஏற்பாடான ( transitional provision) சரத்து 161 ( e) ஐத் திருத்துவதற்கானதாகும். இதனைத் திரும்பும்போது இது சரத்து 62(2) இல் தாக்கம் செலுத்தியது. சரத்து 62(2) ஒரு entrenched provision ஆகும். அதாவது சரத்து 83 இல் குறிப்பிடப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுகின்ற ஒரு சரத்தாகும்.

எனவே, இந்த நாலாவது அரசியலமைப்புத் திருத்தத்தை 2/3 ஆல் நிறைவேற்றியபின் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு சட்டமாக்கப்பட்டது. 86 இன் கீழ் இதுவரை ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஒரு கதை அடிபட்டது நடத்தபலபோவதாக, ஆனாலம் நடக்கவில்லை.

எனவே, மைத்திரி இன்னுமொரு பிழை செய்யப்போகிறாரா?.

Read more...

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிமுக்கய தீர்ப்பு 4 மணிக்கு.

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட உள்ளது.

இன்று (13) மாலை 4 மணிக்கு குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இணைந்து குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

வரலாற்று சிறப்பு மிக்க வழக்கின் தீர்ப்புக்காக அமைய உள்ள குறித்த தீர்ப்பிற்காக, உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Read more...

சபாநாயகர் அமைச்சின் செயலாளர்களை அழைத்து பேசியது தவறாம். வாசு.

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் அமைச்சு செயலாளர்களை கூட்டுதல் முடியாது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். என்.எம். பெரோரா மண்டபத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற அமைச்சு செயலாளரர்களை அழைத்து கூட்டங்களை நடத்த பாராளுமன்ற கபினட் அமைச்சரவை காணப்படுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் பாராளுமன்றத்தில் அமைச்சு செயலாளர்களை அழைக்க இயலாது என அவர் தெரிவித்திருந்தார்.

சபாநாயகர் அமைச்சின் செயலாளர்களை அழைத்து கபினட் ஒன்று நாட்டில் இல்லாத நிலையில் செயலாளர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்ததக்கதாகும்.

Read more...

Wednesday, December 12, 2018

ஜனாதிபதிக்கெதிரான கருத்து வெளியிட்டவர் மீது பொலிஸ் விசாரணைகளை ஆரம்பிக்கின்றது.

´புரவசி பலய´ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

உதய கம்பன்பில தலைமையிலான பிவித்துறு ஹெல உறுமய என்ற கட்சியின் செயலாளர் உப்புல் நிஸாந்த என்பவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் நிமித்தம் மேற்படி விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. இதன் பிரகாரம் நேற்று அவரிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

ரத்தனபிரிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் குறித்த கருத்துக்கள் தொடர்பில் கிடைக்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ஜனாதிபதி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பிரதேச சபையின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தொடர்ந்தும் பார்த்துக்கெண்டிருக்க முடியாது - உறுப்பினர் மோகன்ராஜ்

கரைச்சி பிரதேச சபையின் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் ஐயாத்துரை மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சட்டத்திற்கும், சுற்று நிருபங்களுக்கும், நடைமுறைகளுக்கும் மாறாக பல விடயங்கள் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதனை நாமும் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை. எனவே இவ்வாறான செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

நாம் மக்களுக்கு பொறுப்புச் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். சபையும் மக்களுக்கு பொறுப்புக் கூறும் விடயத்தில் இருந்து தப்பிக்க முடியாது எனத் தெரிவித்த மோகன்ராஜ்.

சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் வழங்குதல். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் விடயத்தில் சபையின் செயற்பாடுகள், சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள், சபையின் நிதிப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கரைச்சி பிரதேச சபை சட்டதிட்டங்களுக்கு புறம்பாக செயற்பட்டு வருகிறது. எனவே இச் செயற்பாடுகள் தொடர்பில் இனியும் நாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சபை மக்கள் நலன்சார்ந்து சட்டத்திட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல தவறும் பட்சத்தில் நாம் மக்கள் மத்தியில் இவ்விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

கஜேந்திரகுமாரின் தாயதிக்கட்சியானது ஒற்றையாட்சிக் கொள்கை கொண்டது. சமஷ்டி என்பது அப்பழுக்கற்ற போலி. புளொட்

கஜேந்திரகுமாரின் மூலக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது, அதன் நிறுவனரான ஜி.ஜி. பொன்னம்பலம் காலத்திலிருந்து, பின்னர் - குமார் பொன்னம்பலம் தலைமை ஏற்றிருந்த காலத்திலிருந்து இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை வகிக்கும் காலம்வரை ஒற்றையாட்சி முறையையே ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அந்தக் கட்சியின் யாப்பு அதனை தெளிவுபடுத்துகின்றது என்றும் கஜேந்திரகுமாரின் போலி முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார் புளொட் தலைவர் சித்தார்த்தன்.

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளை வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள கோரிக்கையானது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என விக்கினேஸ்வரனுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.


12.12.2018.
நீதியரசர் க. வி. விக்கினேஸ்வரன்,
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை

திரு. பூ. லக்ஸ்மன்,
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை

திரு. த. வசந்தராஜா,
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரiவை.

அன்புடையீர்!

திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழ் மக்கள் பேரவை இயக்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் தகுதியை இழந்திருக்கின்றது என்று எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கருதுகின்றது.

பின்வரும் காரணங்களுக்காக எமது கட்சி இந்த தீர்மானத்துக்கு வந்திருக்கின்றது.

1. தமிழ் மக்கள் பேரவையானது, தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான, நின்று நிலைக்கக்கூடிய, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க, ஒரு தீர்வை வென்றெடுப்பதற்கான பலமானதோர் அழுத்தக் குழுவாக இயங்குவதற்கான ஒரு மக்கள் இயக்கமாகவே உருவாக்கப்பட்டது. இவ்வாறான ஓர் அடிப்படையில் கூட்டிணையுமாறு அழைக்கப்பட்டதாலேயே, எமது கட்சி அதில் இணைந்து கொண்டது.

தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு பொது நோக்கம் இருந்தாலும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், அந்த பொது இலக்கைச் சென்றடையும் அணுகுமுறை தொடர்பாக வௌ;வேறான வழிமுறைகள் இருந்தன. அணுகுமுறை சார்ந்து வௌ;வேறான கொள்கைகள் இருப்பதனால்தான் வௌ;வேறு அரசியற்கட்சிகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை ஏற்று, ஆனால் ஒருங்கிணைந்து செயற்படவே தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட பொழுது – அதன் இணைத் தலைவர்களுள் ஒருவரான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன், அதில் இணைக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) மற்றும் எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (னுPடுகு) என்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவோம். ஆனாலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அங்கம் வகித்த தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்தது, ஒரு பொது நோக்கத்தின் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காகவே.

வடக்கு 'எழுக தமிழ்!', கிழக்கு 'எழுக தமிழ்!' ஏற்பாடுகள் மற்றும் இரண்டு 'எழுக தமிழ்!' நிகழ்வுகளுக்கான பிரகடனங்களை இரவு பகலாகத் தயாரித்தமை, பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை இரவு பகலாகத் தயாரித்தமை, அரசமைப்பு சபையின் வழிகாட்டல் குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கைக்கான பதில் அறிக்கை தயாரித்தமை என்பவற்றில் மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்தே கடுமையாக வேலை செய்தனர். ஏனெனில், ஒரு பொது நோக்கின் அடிப்படையிலேயே நாம் இணைந்திருந்தோம்.

விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஆதரவாக மக்கள் பேரவை முன்னெடுத்த போராட்டம் ஒன்றில், 'தலைமை ஏற்க வருக!' என்று விக்கினேஸ்வரன் ஐயாவை அழைக்கும் பதாகை ஒன்றை திரு. சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சேர்ந்து திரு. கஜேந்திரகுமார் தூக்கிச் செல்லும் காட்சிகளை நாம் எல்லோரும் கண்டோம்.

இவ்வாறெல்லாம் ஒன்றிணைந்து பணியாற்றிய பின்பு, திடீரென ஏனைய கட்சிகளைப் பேரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என உப்புச் சப்பற்ற காரணங்களையும், பொய் கதைகளையும் அடுக்குவது மட்டுமன்றி, விக்கினேஸ்வரன் ஐயாவும் தவறானவர் என்று சித்தரித்து, அவருக்கு போட்டியாக இன்னுமொரு மாற்று தேர்தல் அணியை பேரவைக்கு உள்ளே இருந்தே ஆட்களை எடுத்து உருவாக்க முனைவதானது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேரவைக்குள் இணைந்த நோக்கமே, அடுத்தவர்களைப் பாவித்து தமது கட்சியை வளர்ப்பதற்கு மட்டுமே என்பது புலனாகின்றது.

தொடக்கத்தில் இருந்தே, தமிழ் மக்கள் பேரவை என்பது தமது கட்சிதான் என்றவிதமான ஒரு கருத்துருவாக்கத்தை மக்களுக்குள் அவர்கள் செய்துகொண்டே வந்தனர். அதற்கும் ஒரு படி மேலே சென்று, நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்களைப் பெருந் தலைவராக உருவாக்கியதே தமது கட்சிதான் என்ற ஒரு விம்பத்தையும் உருவாக்க முனைந்தனர்.

தற்பொழுது – பேரவைக்கு எழுந்த மக்கள் பலத்தையும், விக்கினேஸ்வரன் ஐயாவின் பெரும் செல்வாக்கையும், எம் எல்லோரது உழைப்பையும் பாவித்து, தமது கட்சியையும் தமது மூலக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தையும் வளர்க்க முயற்சிக்கின்றனர். எல்லோரும் தமது கட்சிக்கு பின்னால் வந்து தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் அல்லது சிதைந்து அழிந்துவிட வேண்டும் என்ற நோகத்துடன் செயற்படுகின்றனர். தம்மோடு இணையாத எல்லோரையும் இந்தியாவின் விசுவாசிகள், அமெரிக்காவின் அடிவருடிகள் என்று, எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காது, வெறுமனே சகட்டுமேனிக்கு கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுவதும் அந்த நோக்கத்தின் ஓர் அங்கமே.

இந்த கீழ்தர அரசியலின் உச்சமாகவே – தற்போது, விக்கினேஸ்வரன் ஐயாவையும், வேறு எவருக்காகவோ வேலை செய்யும் அந்நிய அடிவருடி என்றவிதமாகக் கதைகளைக் கட்டி தமிழ் மக்கள் பேரவையையும் பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் இறங்கியுள்ளனர்.

2. இலங்கை நாடாளுமன்றம் அரசமைப்பு சபை ஆக்கப்பட்டு, புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் முயற்சியில், மாநிலங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் உபகுழுவின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றது தொடர்பில் திரு. கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியிருப்பது – அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றது.
குறித்த அந்த உப குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக இரண்டு விடயங்களை குறிப்பிடுகின்றது.
1. இந்த நாட்டில் 70 ஆண்டு காலமாக நீளும் தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு காரணம், இந்த நாட்டின் ஒற்றையாட்சி முறைமையே ஆகும்.

2. இந்த நாட்டின் இனப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வாக ஒரு சமஸ்டி ஆட்சிமுறையே அமைய முடியும்.
அரசமைப்பு சபையின், மாநிலங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் உப குழுவில் இருந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஏனையோர் சிங்களவர்கள். இத்தகைய ஒரு குழுவின் அறிக்கையில் இந்த இரண்டு விடயங்களையும் குறிப்பிட வைப்பதானது – வெறுமனே ஒலிவாங்கிகளுக்கு முன்னால் அமர்ந்திருந்து கதையளப்பது போன்ற இலகுவான காரியம் அல்ல.
மேலும், கஜேந்திரகுமார் எழுதியிருப்பதைப் போல புதிய 'ஒற்றையாட்சி அரசமைப்பு' எதுவும் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக நான் அறியவில்லை. இப்போதுதான் ஒரு புதிய அரசமைப்பு வரைபு எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது இனிமேல்தான் முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்பு – அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் விவாதிக்கப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு, பின்பு அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். பின்பு, அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். இவையெல்லாம் நடந்து முடிந்த பின்புதான் வந்திருப்பது 'ஒற்றையாட்சி' அரசமைப்பா அல்லது வேறு ஏதுமா என்பது தெரியவரும். இதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டி உள்ளது.
புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்க இலங்கை நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி, உண்மையில் தற்பொழுதும் கருத்தாடல் மட்டத்திலேயே உள்ளது. இதுவரையான கருத்தாடல்களின் அடிப்படையில் - வழிகாட்டல் குழுவால் ஓர் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு வரைபு உருவாக்கப்பட்டு வருகின்றது. இன்னமும், அது தனது இறுதி வடிவத்தைப் பெறவில்லை. மேலும், உருவாக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட ஓர் அரசமைப்பு வாக்களிப்பிற்காக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு, வாக்களிப்பும் நடந்து முடிந்த பின்புதான் - வந்திருப்பது எத்தகைய அரசமைப்பு என்பதும், அதனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்று வாக்களித்தாரா, மறுதலித்தாரா என்பதும் தெரியவரும். இதற்கு இடையில் - வெறும் பாதி வழியே கடந்திருக்கின்ற ஒரு முயற்சி பற்றி முடிவான ஒரு கருத்தை சொல்லுவது – கஜேந்திரகுமாரின் அரசியல் முதிர்ச்சியின்மையையும் அதிகப்பிரசங்கித்தனத்தையுமே காட்டுகின்றது.
அதே சமயத்தில் - எம்மீது குற்றம் சாட்டியிருக்கும் கஜேந்திரகுமார் அவர்களின் மூலக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது, அதன் நிறுவனரான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் காலத்திலிருந்து, பின்னர் - திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமை ஏற்றிருந்த காலத்திலிருந்து இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை வகிக்கும் காலம்வரை ஒற்றையாட்சி முறையையே ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த கட்சியின் யாப்பு அதனை தெளிவுபடுத்துகின்றது.

1972 இல் தந்தை செல்வநாயகத்தின் தலைவர் பொன்னம்பலம், பின்பு தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரின் இணைத் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டு, தமிழர்களுக்காக தனி நாடு அமைக்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அந்த கூட்டணியில் இணைந்ததே அல்லாமல், அது 'தனது ஒற்றையாட்சி' கொள்கையை கைவிட்டிருக்கவில்லை.

பின்னர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த தமிழ் காங்கிரஸ் கட்சி, ஒரு சமஷ்டி ஆட்சிமுறைபற்றி அப்போது பேசித்திரிந்து, நாடாளுமன்றத்தில் ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஏமாற்றியதே அல்லாமல், அப்போதும் அது தனது ஒற்றையாட்சி கொள்கையை கைவிட்டிருக்கவில்லை.

பின்பு, 2010 - இல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கவசப் பெயருடன், 'தமிழ் தேசம்' என்பதை தமது கொள்கையாக முன்னிறுத்தி தேர்தலுக்கு வந்த போதும், 'ஒற்றையாட்சி' முறையை ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கே அந்த கட்சி வாக்கு கேட்டது.

பின்பு – 2016 ஆம்; ஆண்டு, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு, 'தமிழ் தேசம்' அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிமுறை கோரி தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்ட போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தாய் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனது ஒற்றையாட்சி கொள்கையைக் கைவிட்டிருக்கவில்லை. அதாவது 'தேசம்' என்றும் 'சமஷ்டி' என்றும் மக்களை ஏமாற்றும் போலியான முகமூடி ஒன்றை போர்த்தியபடி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற நாமத்தில் தேர்தலுக்குச் சென்று, உண்மையில் 'ஒற்றையாட்சி' முறையை ஏற்றுக் கொண்டிருக்கும், 'தேசம்', 'சமஷ்டி' என்பவற்றை வலியுறுத்தாத சைக்கிள் சின்னத்துக்கே கஜேந்திரகுமார் வாக்குச் சேகரிக்கின்றார்.

சைக்கிள் சின்னம் அவர் பேசித்திரிவதைப் போல ஒரு மாற்றத்தின் சின்னம் அல்ல, அது உண்மையில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு வரலாற்று மார்க்கத்தின் சின்னமாகும்.

3. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது, பொய்யாகத் தங்களைத் தூய்மையானவர்களாகக் காட்டுவதற்காக தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளைக் கறை படிந்தவர்கள் போல சித்தரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது, பேரவை உருவாக்கப்பட்ட மூல நோக்கத்திற்கு எதிரான செயற்பாடு ஆகும். உண்மையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது, தங்களை வெளியில் காட்டிக்கொள்வது போல தூய்மையான கொள்கையுடைய ஓர் அமைப்பு அல்ல. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) கட்சியும், எமது கட்சியும் கொழும்பு கட்சிகளுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைத்தமை பற்றி கதையளக்கும் மக்கள் முன்னணி, தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் கொழும்பு கட்சிகளுடன் ஆட்சியமைக்க அனுமதி அளித்துள்ளது.

திரு. நடராசா விஜிதரன் என்பவர் திருக்கோவில் பிரதேச சபையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்க ஆதரவாகவும்,

திரு. நடராசா சசிதரன் என்பவர் பொத்துவில் பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க ஆதரவாகவும் வாக்களித்துச் செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்ணணியால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதவும் எடுத்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படாதது கட்சியின் அங்கீகாரத்தையே காட்டுகிறது.

உண்மையில் - சரியாக நோக்கினால், கிழக்கு மாகாணத்தில் தாங்கள் அதிஸ்டவசமாகப் பெற்றுக்கொண்ட இரண்டே இரண்டு உள்ளுராட்சி ஆசனங்களின் உறுப்பினர்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே கொழும்பு கட்சிகளிடம் சோரம் போயுள்ளது.

இந்த நிலையில் ஏனைய கட்சிகள் பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும், அந்நிய எஜமானர்களுக்காகவும் கொள்கை ஏதுமற்ற சோரம் போய்விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் அருகதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இழந்துள்ளது.

4. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அந்த அமைப்பு தமது கட்சியின் ஒரு முகவர் இயக்கம் போன்ற ஒரு தோற்றத்தையே தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்கள் மத்தியில் உருவாக்கிவந்தது. மக்கள் பேரவைக்குள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் உள்வாங்கப்பட்டவர்களையும் தமது கட்சிக்காக மட்டும் அவர்கள் செயற்பட வைத்தார்கள். ஆனால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் பேரவையிலிருந்த ஏனைய இரண்டு கட்சிகளும், மக்கள் பேரவையின் பெயரை தமது கட்சிகளின் வளர்ச்சி நலன்களுக்காகப் பயன்படுத்தியதில்லை. மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளின் உச்சமாக, கடந்த உள்ளுராட்சி தேர்தலின்போது – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என ஏற்கனவே இருந்த இரண்டு பெயர்களுடன் 'தமிழ் தேசிய பேரவை' என்ற புதிய பெயரையும் சேர்த்துக் கொண்டு தேர்தலில் இறங்கினார்கள். இது – தமிழ் மக்கள் பேரவை என நினைத்து மக்களைத் தமது கட்சிக்கு வாக்களிக்க வைக்கும் கபட எண்ணத்துடன் செய்யப்பட்டது என்பது சிறுபிள்ளைக்கும் புரியக்கூடியது.

இவ்வாறான செயற்பாடுகள் - தமிழ் மக்கள் பேரவை என்பது அமைப்பு ரீதியாகவும், பேரவையில் இருக்கும் வேறு உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியிலும், உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் பாகுபாடு காட்டி, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சார்பாக மட்டுமே செயற்படுகின்றனர் என்றும், இது விக்கினேஸ்வரன் ஐயாவின் கவனத்திற்கு எட்டாதவகையில் திட்டமிட்டு செய்யப்படுவதாகவும் ஒரு பலத்த சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியிலும், அங்கத்துவ கட்சிகள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துவிட விரும்புகின்றோம். இவ்வாறான பக்கசார்பான செயற்பாடுகளே, தமிழ் மக்கள் பேரவை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக எழுச்சிபெறுவதற்கு தடையாக இருந்து வருவதான கருத்தும் வெளியில் உண்டு.

இவ்வாறாக – தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான உருப்படியான ஒரு தீர்வைக் காண்பதற்கு ஒரு பலமான அழுத்தக் குழுவாக செயற்படத்தக்க ஒரு பெரும் மக்கள் இயக்கத்திற்குள் இருந்த ஒற்றுமையைச் சிதைத்ததுடன், அதன் முதன்மை இணைத் தலைவரான நீதியரசர் க. வி. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் நற்பெயருக்கும், செல்வாக்கிற்கும் பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டதுடன், எல்லோருக்கும் பொதுவான விக்கினேஸ்வரன் ஐயாவையும், தமிழ் மக்கள் பேரவை அமைப்பையும் தமது கட்சியின் முகவர்கள் போல தோற்றம் காட்ட முற்பட்டதனால் - தமிழ் மக்கள் பேரவையில் ஓர் அங்கமாக இருக்கும் தகுதியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொண்டிருக்கின்றதா என்பதனை தமிழ் மக்கள் பேரவை பரிசீலிக்க வேண்டும் என எமது கட்சி பரிந்துரை செய்கின்றது.

நன்றி,


த.சித்தார்த்தன் (பா.உ),
யாழ். மாவட்டம்,
தலைவர் - ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.

குறிப்பு : பேரவையின் உள்விவகாரங்கள் பகிரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் எமது பக்க நியாயங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்பதனால் இந்த கடிதத்தினை ஊடகங்களுக்கு அனுப்பிவைக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

Read more...

மஹிந்தவால் பிரதமராக செயற்பட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை எதிர்வரும் 14க்கு ஒத்தி.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவை சட்டவிரோதமானது என 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது உச்ச நீதிமன்று கடந்த வாரம் இடைக்கால தடை உத்தரவினை விதித்தது.

உச்ச நீதிமன்று அவ்வாறான தடையை விதித்து அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுடைய பதவியில் கடமையாற்ற விடாது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தர அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

Tuesday, December 11, 2018

தீர்ப்பினை விரைவில் அறிவிக்குமாறு நீதியரசர்களை ஜனாதிபதி கேட்கவுள்ளாராம்.

நாடாளுமன்றம் கலைத்ததுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பினை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் சட்டமா அதிபரிடனூடாக பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாராளுமன்ற அமைச்சர் விமல் வீரவங்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டனியின் பிரமுகர்களுடன் ஜனாதிபதியின் செயலகத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடவியளாலர் சந்திப்பின் போது விமல் வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினுடனான சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் நாட்டின் எதிர்காலம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

Read more...

20 வது திருத்த சட்டம் மீண்டும் களத்தில்

தற்போதைய அரசியல் சூழ்நிலை முடிவுக்கு வந்த பின் நிறைவேற்று அதிகாரம் தொண்ட ஜனாதிபதி முறைமையை முடிவுக்கு கொண்டு வரும் 20வது அரசியல் திருத்த சட்டத்தை முன்வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னனியில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க இவ்விரு கட்சியினரும் சம்மதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Read more...

ரணிலிற்கு எதிராக யாதுரிமை எழுத்தாணை பிறப்பிக்கப்படுமா?

தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து கொண்டு அரச நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி யாதுரிமை எழுத்தானை உத்தரவு பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிக்கான பெண்கள் அமைப்பின் துணை தலைவர் ஷேமிலா கோனவலவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற பொதுச் செயலாளர் உட்பட நால்வரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரச நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்க அவருக்கு அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் கீழ் உள்ள தனியார் நிறுவனத்தின் ஊடாக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் காசோலைகள் அச்சிடப்படுவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எனவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரராக கடமையாற்றி இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் ஒப்பந்த அடிப்படையில் வியாபாரத்தில் ஈடுபட்டதால் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

த.தே.கூ ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக தமது இருப்பை தக்க வைக்க முயற்சிக்கின்றது. டலஸ்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்குவதன் ஊடாக தமது அடுத்த இருப்பபை தக்க வைக்க முயற்சிக்கின்றது என்றும் அதை விடுத்து தமிழ் மக்களுக்காக அவர்கள் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும.

இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சர்களின் விலையினை 500 மில்லியனாக நிரூபித்ததன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதாக ஜனாதிபதி கூறினார்

ஆனால் ஜனாதிபதியின் கூற்றை திரிவுபடுத்தி மாற்று கருத்துக்களை உருவாக்கினர். தற்போதும் எமது கட்சி உறுப்பினர்களை பேரம் பேசும் செயற்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டு வருகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அடுத்த அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழ் மக்களை கருத்திற்கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் புலம்பெயர் விடுதலைப் புலிகளின் தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

மேலும் ரணிலுக்கு தொடர்ச்சியாக கூட்டமைப்பு ஆதரவினை வழங்கி வருமாயின் எதிர்க்கட்சியிலிருந்து முழுமையாக கூட்டமைப்பு விலக வேண்டியது அவசியம்” என டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Read more...

மன்னார் மாவட்டம் முசலிப் பிரிவு சிலாபத்துறையில் மதக் கலவரம். மறவன்புலவு சச்சிதானந்தம்.

இலங்கை வடக்கு மாகாணம் மன்னார் மாவட்டம் முசலி வட்டாட்சியர் பிரிவு. முசலியின் சிலாபத்துறைக்கு வடக்கே அரிப்பு செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்குடியிருப்பு என்ற சிற்றூர். நிலதாரிப் பிரிவின் பெயர் சவேரியார்புரம்.

வீடற்ற மக்களுக்காக அரசு அமைத்த நகர் புதுக்குடியிருப்பு. குடுபம்பத்துக்கு 20 பேர்ச்சுக் காணி. அதில் வீடு. இந்துக் குடும்பங்கள் குடியேறின. கிறித்தவக் குடும்பங்கள் குடியேறின. யாவரும் மீனவர் குடும்பங்கள். மேற்கே மன்னார் வளைகுடாக் கடல்.

ஊர்ப் பொது மன்றம் அமைக்க, வழிபாட்டிடங்கள் அமைக்க ஓர் ஏக்கர் காணியை அரசு ஒதுக்கியது. எவருக்கும் அங்கு குடியேற, கட்டடம் அமைக்க உரிமத்தை அரசு வழங்கவில்லை.

அடாவடித்தனமாக, கிறித்துவக் கொள்கைகளுக்கு முரணாக, அரசு உரிமம் இன்றி, கத்தோலிக்கர் அந்தப் பொது இடத்தில் அன்னை வேளாங்கண்ணிக்குத் தேவாலயம் ஒன்றைக் கட்டினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த ஊரில் விளையாட்டுத் திடல் அமைக்கப் பத்து இலட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியது. விளையாட்டுத் திடல் அமைப்பதற்குப் பதிலாக, கிறித்தவத் தேவாலயம் அமைந்த நிலத்தைச் சுற்றி மதில் அமைக்கக் கிறித்தவர் முயன்றனர்.

இந்துக்கள் ஒப்பவில்லை. விளையாட்டுத் திடலுக்கு ஒதுக்கிய நிதியில் தேவாலயச் சுற்று மதில் கட்டுவதா? இந்துக்களுக்கான அருள்மிகு நாகபூசணி அம்மன் கோயில் அமைக்க உள்ள இடத்தையும் கிறித்தவ தேவாலயத்துக்கு அபகரிப்பதா? அரசு நிதியை அபகரிப்பதா?

இந்துக் குடும்பங்கள் தமக்குள்ளே நிதி சேர்த்தனர். கன்கிறீட் தூண்கள் வாங்கினர். முட்கம்பிச் சுருள்கள் வாங்கினர். இந்துக் கோயிலுக்கான நிலத்துக்கு வேலி அமைக்க முயன்றனர்.

கத்தோலிக்க மத குருவான டெசுமன் பாதிரியாரின் தூண்டுதலை அடுத்துக் கத்தோலிக்கக் குண்டர்கள் இந்துக்களைத் தாக்கினர். கத்தோலிக்க இளைஞர்களும் காடையர்களும் தூண்களை உடைத்தெறிந்தனர். உழவு இயந்திரத்தைச் சேதமாக்கினர். எண்ணிக்கைச் சிறுபான்மையினரான இந்துக்கள் அஞ்சினர், அலறினர், ஆற்றாது அழுத கண்ணீருடன் காவல் நிலையம் சென்றனர். முறையிட்டனர்.

முறையீட்ட ஏற்ற காவல் நிலையத்தார், சிக்கலான நிலப்பகுதிக்கு வந்தனர். இந்துக்களுக்குப் பாதி நிலம், கிறித்தவர்களுக்குப் பாதி நிலம் எனத் தீர்த்தனர்.

மீண்டும் தம் எல்லைக்கு வேலி அமைக்க முயன்றனர் அருள்மிகு நாகபூசணி அம்மன் கோயிலார். ஆனால் கத்தோலிக்கக் குண்டர்கள் விடவில்லை. தாக்க வந்தனர். இந்துக்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் கோரினர்.

பிரதேசச் செயலர் வசந்தகுமாரிடம் இந்துக்கள் முறையிட்டனர். அவரும் பாதி நிலம் இந்துக்களுக்கே எனத் தீர்த்தார். அங்கு சென்ற பிரதேச செயலர் அல்லது வட்டாட்சியரைக் கத்தோலிக்கர் தாக்க முயன்றார்கள். அவரும் செய்வதறியாது பின்வாங்கினார்.

பாதுகாப்பற்ற சைவமக்கள் உலகச் சைவர்களிடம் ஆதரவு கேட்கிறார்கள்.

பெரும்பான்மையான சிங்கள மக்கள் சிறுபான்மையான தமிழர்கள் மீது தொடுத்த தாக்குதல் தொடர்பாக கத்தோலிக்க ஆயர் இராயப்பு மனித உரிமைகள் மீறல் எனக் குரல் கொடுத்தார்

இன்று மன்னார் கத்தோலிக்க ஆயர் தலைமையிலான டெசுமன் பாதிரியார் பெரும் எண்ணிக்கையில் உள்ள கத்தோலிக்க மீனவரைத் தூண்டி விட்டு அங்கு குறைந்த எண்ணிக்கையில் வாழும் சைவ மீனவரைத் தாக்குமாறு கூறுகிறார்.

மனித உரிமை மீறல் இல்லையா

மதக்கலவரத்தை தூண்டும் செயல் அல்லவா

அன்பைப் போதித்த இயேசு பிரான் பெயரில்

அறத்தைக் காட்டிய ஏசுபிரான் பெயரில்

வன்முறையை தூண்டுபவர் பாதிரியராக இருக்க முடியுமா

உலகச் சைவ மக்களே!

தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் முசலிச் சைவ மக்களுக்கு ஆறுதல் கூறுங்கள்

+94779527554 தொலைபேசி எண்ணில் அருள்மிகு நாக பூசணி அம்மன் திருக்கோயில் அடியவரான அம்மையாரை அழையுங்கள் மேலும் விவரங்களை அறியுங்கள்

மன்னாரில் பிருந்தாவன நாதனை +94776685966 அழைத்து மேலும் விவரம் அறியுங்கள்

முசலி வட்டாட்சியர் அல்லது பிரதேச செயலர் திரு வசந்தகுமார் அவர்களை+94776648714 அழையுங்கள் சைவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்குமாறு கோருக.

Read more...

Monday, December 10, 2018

ஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம் பெற்றார். அழகலிங்கம் ஜேர்மனி

சிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது. வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக இருக்கின்றன. நாட்டில் அரசியல் நெருக்கடி தேசிய மற்றும் வெளிநாட்டு தத்துவங்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே வந்தது.

வெளிநாட்டு சக்திகளுக்கு விட்டுக் கொடுக்காமல் அவர்களின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களுக்குப் பயப்படாமல் தேசியவாத கொள்கையில் இறுக்கமாக நின்று செயற்பட்டபோது பழைய ஏகாதிபத்தியத்தின் நிழல்கள் நம் வழியில் குறுக்கே வந்தன.

தற்போதைய நெருக்கடி நமது நாட்டின் விவகாரங்கள் மீது உலக சக்திகள் கவலைக்குரிய விதமாக நடந்ததால் ஏற்பட்டது. இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் அல்லது உலக வரைபடத்தில் அது இருக்கும் இடம் காரணமாகவே அது ஏற்பட்டது. நாம் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து கொள்ளாமல் சுயாதீனமாக முன்னேறுவதற்கான தத்துவத்தைப் பின்பற்றுவோமானால் வெளிநாட்டு சக்திகள் இயல்பாகவே ஒரு சவாலாக வந்துவிடும்.

ஜனாதிபதி சிறிசேனாவுக்குப் புலப்படாதது என்ன. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், அதன் சந்தை, அதன் நெருக்கடி, அதன் போர்கள் அனைத்தும் ஒரு சர்வதேச குணாம்சம் கொண்டது என்பது இப்பொழுதுபோல் ஒருகாலமும் மிகவும் தெளிவாகத் தெரிந்ததில்லை.

நாம்வாழும் இந்தச் சகாப்தம் ஓர் ஏகாதிபத்திய சகாப்தம். அதாவது நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உலகப் பொருளாதாரமும் மற்றும் உலகக் கொள்கைகளும் வந்த சகாப்தம். ஒரு நாடு தனது சொந்த நாட்டில் அபிவிருத்தியான நிலைமைகள் மற்றும் அரசியற் போக்குகளிலிருந்து தனது அரசியல் வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. தத்துவத்தையும் நடைமுறையையும் ஐக்கியப் படுத்துவதன் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் என்பதே மார்க்சியத்தின் கருத்தாகும்.

நடைமுறை இல்லாமல் கோட்பாடு வெறும் வெற்றுக் கோம்பையாகும். கோட்பாடு இல்லாத நடைமுறையானது குருட்டுத் தனமாகும். கோட்பாடு செயலுக்கு வழிகாட்டியாகும். தத்துவத்தையும் நடைமுறையையும் தொடர்ந்து ஒன்றோடு மற்றொன்று இசைந்து இணைந்துபோகச் செய்யவேண்டும். நடைமுறை அனுபவம் இல்லையேல், கோட்பாடு கண்டதே காட்சி கொண்டதே கோலமாகி மலடாகி விறைத்துச் சிதைந்துவிடும்.

கோட்பாட்டின் புறக்கணிப்பு இலக்கற்ற நடைமுறைக்கு வழிவகுக்கிறது. „உழைப்பாளர்களின் விடுதலை என்பது ஓர் உள்ளூர் பிரச்சனையோ அல்லது ஒரு தேசியப் பிரச்சனையோ அல்ல, ஆனால் அது ஒரு சமூக பிரச்சனை, நவீன சமுதாயம் இருக்கும் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது, மற்றும் அதன் தீர்வு மிக முன்னேறிய நாடுகளினிடையே உள்ள உடன்பாட்டையும் உடன் நிகழ்வையும் நடைமுறை மற்றும் கோட்பாட்டின் மீதான ஐக்கியத்தையும் பொறுத்திருக்கிறது.'

சர்வதேச தொழிலாளர்களின் சங்கத்தின் விதிகள்-1864-71 ஒரேயொரு கேள்வி: சிறி;சேனாவை ஏன் ஜனாதிபதி யாக்கினாhகள். ஏன் ஒரு றம்பண்டாவையும் முத்துமெனிகாவை ஆக்கவில்லை. காரணம் சிறீ சேனா ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாகச் சேவகஞ் செய்வார் என்ற அறிகையின் பேரிலும் , உத்தரவாதத்தின் பேரிலும்தான். முதலாளித்துவம் மிகக் கீழ்தட்டிலிருந்தவர்களை அரசியல் வானின் உச்சத்திற்கு உயர்த்தியிருக்கிறது.

அவர்கள் தங்களது முந்திய சமூகத்தட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பார்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் இந்த முதலாளித்துவ அமைப்புக்கு மிக விசுவாசமாகச் சேவகஞ் செய்வார் என்பதைக் கண்டதின் பேரில்தான்.

உதாரணம்: லவரியா விற்ற பிறேமதாசா ஜனாதிபதியாக உயர்த்தப் பட்டார். தேத்தண்ணிக் கடையில் தேத்தண்ணி ஆற்றிய மோடி பிரதமர் பதவிக்கு உயர்த்தப் பட்டார். பள்ளிக் கூடத்திற்குக் கள்ளமொழித்த பிரபாகரன் தேசியத்தலைவராக உயர்த்தப் பட்டார். கறுப்பின மனிதனா பறாக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தப் பட்டர்ர். மிகக் கீழ் மட்டத்திலிருந்த சோசலிசவாதி முசோலினி உயர்த்தப் பட்டார். கீழ் அடுக்கைச் சேர்ந்த கிட்லர் உயர்த்தப் பட்டார். எல்லோருமே கண்டு கேட்டிராத ஒடுக்குமறையளாராக நடந்து முதலாளிவர்க்கத்திற்கு அவர்களது விசுவாசத்தைக் காட்டினார்கள்.

கடாபி கொல்லப்படும்பொழுது ஒபாமாவும் கில்லரி கிளங்டனும் அந்தக் கொலையைத் தொலைக்காட்சியில் பார்ததுச் சிரித்து வயின் குடித்ததை தொலைக் காட்சியில் காட்டினார்கள். ஜனாதிபதி சிறிசேனாவின் ஏகாதிபத்தியம் பற்றிய சுவிசேசம் இலங்கை மக்களுக்குப் ஒரு பொழுதும் புதிதாக இருக்காது. அவர்கள் தற்காலிகமாக ஏமாற்றப் பட்டர்ர்கள். ஆனால் வெகுசீக்கிரத்தில் அந்த உறங்குநிலையிலிருந்து மீளுவார்கள்.

இன்றய பாராளுமன்ற நெருக்கடி பாராளமன்றத்தை இல்லாமற் செய்யவேண்டிய அவசியத்தைக் கற்கும் நெருக்கடி. சம்பந்தனாலும் சுமந்திரனாலும் ஒரு செக்கனில் அரசியற் சட்டத்தை மீறியதைக் கண்டதை ஏழு சுப்பிறீம் கோட்டு நீதிபதிகாளால் இரண்டு கிழமையாகியும் அரசியற் சட்டத்தை மீறினதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓரு சின்ன இராச தந்திரத் தவறு நடந்தால் இலங்கை இந்து சமுத்திரத்தில் தாண்டுவிடும்.

கிட்லர் ஒரு முறை சொன்னான் : இங்கிலாந்துக்குக் கீழே ஓர் ஒட்டை துளைத்து டைனமெற்றுகளைச் செருகிக் கொழுத்திவிட்டால் இங்கிலாந்து கடலுக்குள் தாண்டுவிடும். இங்கிலாந்து தாழா விட்டர்லும் இங்கிலாந்தின் கொலனி தாழுக்கூடும். இலங்கை இந்தியாவுக்கும் நண்பன். சீனாவுக்கும் நண்பன். அமெரிக்காவும் நண்பன். எல்லாருக்கும் நண்பன். ஒருவருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டான்.

Read more...

சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம்.

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், செயற்குழு செயலாளரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில் நேற்று (09) குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு முடிவுரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், அரசியல் நெருக்கடி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துள்ளது. அதேவேளை, எமது கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்து சிலர் வைத்திருக்கின்ற தப்பபிப்பிராயங்களையும் அது போக்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் மூலம் எதனை சாதித்தோம் என்று பலரும் கேட்கின்றனர். முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதில் நாங்கள் உடன்படுகிறோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதாக இருந்தால், இவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கில் சரியான திட்ட வரைபுடன் தேர்தலை அணுகவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எங்களுக்கு நிரந்தர உறவு என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்பதை வைத்து எல்லா கட்சிகளும் அரசியல் செய்கின்றன. எங்களது அரசியலை சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளுடன் சமாந்தரமாக பகிர்ந்துகொள்ளவேண்டிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது.

தேசிய கட்சிகளுடன் நாங்கள் உறவு கொண்டாடுகின்றபோது, தமிழ் கட்சிகளுடனான எங்களது உறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன. நாங்கள் எவ்வளவுதான் நெருக்கமாக நடந்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடன் முரண்பாடுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன.

எதிர்வரும் காலங்களில் தேர்தல்களுக்கு முன்னர் இல்லாவிடினும் தேர்தல்களின் பின்னராவது, மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படமுடியுமா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கின்ற காலம் வந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் நிர்வாக ரீதியில் விடை தேடவேண்டிய நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று, என்ன நிபந்தனைகள் விதித்தாலும் தமிழர் தரப்புடன் பேசாமல் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற யதார்த்தையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலையக கட்சிகளுடனும் சமாந்தரமாக பேசவேண்டும்.

தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றன. இவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் தீர்வை தந்துவிடும் என்ற இறுமாப்பில் எதனையும் செய்துவிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலுக்கு செல்வதற்குமுன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என எமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளன.

சிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, நாடுதழுவிய தேர்தலில் சாதிக்க வேண்டுமாயின் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பயணிக்க வேண்டும். எங்களது நீண்டகால பிரச்சினைகளை பிச்சைக்காரன் புண்போல வைத்துக்கொண்டு, தேர்தல் மேடைகளில் மாத்திரம் அவற்றை முழங்கிவிட்டுப் போகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கமுடியாது.

கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களின்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஆட்கள் இல்லாமல் வெளியிலிருந்து இருவரை இறக்குமதி செய்திருக்கின்றோம். அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சில மாற்றங்களைச் செய்யாவிட்டால், நாங்கள் சேர்ந்து போட்டியிடமாட்டோம் என்று தைரியமாக சொல்லியிருக்கிறேன். நாங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் வெல்லவேண்டுமாக இருந்தால், களத்திலிருக்கின்ற யதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் ஐக்கிய தேசியக் கட்சி மேடைகளில் காரசாரமாகப் பேசிவருவதால், அந்தக் கட்சியிலேயே சங்கமித்துவிடுவேனோ என்ற அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படியான அச்சம் யாருக்கும் வரத்தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் என்றும் முஸ்லிம் காங்கிரஸ்தான். எமது கட்சி தனது நல்லெண்ண சமிக்ஞைகளை அவர்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் கட்சிகளிடமும் சோரம்போகாது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில்தான் எமது கட்சியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் முட்டுக்கொடுக்கப்போய் மூன்று தடவைகள் கட்சி பிளவுகளை சந்தித்துள்ளது. இந்தமுறைதான் அப்படியான கண்டத்திலிந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரும் தப்பினோம்.

நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் வெறுமனே பயணிக்கமுடியாது. தேர்தல்களின்போது எங்களுக்கென தனியாதொரு யாப்பை கேட்டிருக்கிறோம். அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால், யார் ஆட்சிக் கதிரையில் அமர்வது என்ற தெளிவு இருக்கவேண்டும். யதார்த்தை உணர்ந்து புரட்சிகரமான மாற்றங்களை விரும்பும் சக்திகளோடு பயணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்றும் தயாராக இருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று சுதந்திரக் கட்சி செய்துள்ள இதே சதியைத்தான் அப்போது பிரேமதாசவுக்கும் செய்தது. மறைந்த தலைவர் அஷ்ரஃப், பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக அடுத்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பழிவாங்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சதிகளின் அங்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை.

சுதந்திரக் கட்சி செய்த சதியின் பின்னால், கடைசியில் முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்துகொள்ள வேண்டுமென தப்புக்கணக்கு போட்டார்கள். அவர்களது சதியின் பங்காளர்களால் நாங்கள் செல்லவில்லை. அதுமாத்திரமல்ல, எங்களுடன் முரண்பட்டிருந்தவர்களையும் அரவணைத்துக்கொண்டு அவர்களின் பக்கம் செல்லாமல் சதிகாரர்களின் வெற்றியை முறியடித்தோம்.

நாங்கள் கொண்டுவந்த 19 ஆவது திருத்தம் தனது சொந்த சுயலாப அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு சாதகமாக இல்லை என்பது இன்றுதான் சிலருக்கு காலம்கடந்த ஞானமாக உதித்துள்ளது. அதை சரிவர மக்கள் மத்தியில் சொல்லமுடியாமல், தேர்தல் வேண்டும் தேர்தல் வேண்டும் என்ற கோசத்தை மாத்திரமே முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இன்னும் பொறுமையாக இருந்திருந்தால் இந்த பதவி உங்களையே தேடி வந்திருக்கும் என்று நான் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாகச் சொன்னேன். அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. உலகெங்கிலும் இல்லாதவாறு பிரதமரும் அமைச்சரவையும் இல்லையென நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியது தாங்கமுடியாத ஒரு அவமானமாகும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பழிவாங்கியிருக்கிறார் என்பதையிட்டு நாங்கள் ஒருபக்கம் சந்தோசப்படலாம்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை கைவிட்டுவிட்டீர்கள் என்று நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்கமாக சொன்னேன். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில் தொழிற்சங்கங்களை தனது கைக்குள் வைத்திருந்தார். அவர் அண்மையில் பிரதமராக பதவியேற்ற அடுத்த மணிநேரத்தில் தொழிற்சங்கங்கள் அரச ஊடகங்களை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

நாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்த ஜனாதிபதி, தனது பலவீனங்களை மறைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மீது சொல்கின்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏறெடுத்தும் பார்க்கமுடியாது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அவருடன் இருந்திருக்காவிட்டால் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிபெற்றிருக்க முடியாது.

அதன்பின் ஏற்பட்ட பல முரண்பாடுகளை அடிப்படையாக வைத்து இல்லாத, பொல்லாத விடயங்களைச் சொல்லி, கடைசியாக எல்லாவற்றுக்கும் ஆப்பு வைப்பதாகச் சொன்னார். 225 பேர் கையொப்பமிட்டு தந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சொல்வதற்கு இந்த ஜனாதிபதி யார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஜனாதிபதியின் எதேச்சதிகாரமான இந்த அகங்காரப் பேச்சை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்க மீது எங்களது எந்த தனிப்பட்ட ஆர்வமும் கிடையாது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் நீதிக்காக போராடும் இயக்கம் என்ற வகையில் அவரை ஆதரிக்கின்றது. அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது, ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமாக நியமிப்பதற்கான பிரேரணைக்கு கட்டாயம் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

தற்போதைய நெருக்கடிக்கு நீதிமன்றின் தீர்ப்பு தீர்வினை கொடுக்காதாம். கூறுகின்றார் ஜீ.எல். பீரிஸ்

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு எவ்விதத்திலும் தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், மக்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் வாக்குரிமையின் ஊடாக தீர்வை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு மாத்திரமே மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இத் தீர்ப்பினை தொடர்ந்து நாட்டில் பிரதமர், அமைச்சரவை கிடையாது என்று மாறுப்பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும்.

தற்போதை அரசியல் நெருக்கடியின் காரணமாக அடுத்த வருடத்தில் அரச நிர்வாகத்தின் முன்னெடுப்புக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும். இதற்கு ஜனவரியில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் அல்லது நாட்டு நலனை கருத்திற் கொண்டு இடைக்கால வரவு, செலவு திட்டத்தினை முதல் காலாண்டிற்கு அமுல்படுத்த வேண்டும் என்றார்.

Read more...

Sunday, December 9, 2018

ரணிலையும் பொன்சேகாவையும் கைது செய்யட்டாம். சிங்கள தேசிய இயக்கம்.

ஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் முக்கிய சூத்திரதாரியாக இரு பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் அவர்கள் வேறு யாரும் அல்ல இந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவருமே என மோசடி ஒழிப்பு படையணியின் தலைவர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைப்பெற்ற கூட்டமொன்றில் பேசுகையிலேயே நாமல் குமார ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி தொடர்பான மேற்கண்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவினால் ஜனாதிபதியை கொலை செய்வது தொடர்பான ஒலிப்பதிவு அழிக்கப்பட்டுள்ளதாகவும் நாலக டீ சில்வா அவர்கள் தனக்கு பணம் கொடுக்க முயற்சித்ததாகவும் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாமல் குமாரவினால் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துவிட்டு சிங்கள தேசிய இயக்கத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாமல் குமாரதுங்கவின் கூற்றுபடி கொலை முயற்சிக்கான பிரதான காரணி ரணில் விக்கிரமசிங்க என்றால் அவருக்கு எதிராக ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? கொலை முயற்சிக்கான திட்டம் வகுத்தவர் சரத் பொன்சேகா என்றால் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

Read more...

நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வாராம் சிறிசேன.

நீதிமன்றம் தரும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனடிப்படையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (09) காலை பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிலர் தற்போதைய அரசியல் நெருக்கடியை கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினையாக பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தனக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தற்போது நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கும், நெருக்கடிகளுக்கும் வெளிநாடுகளின் தாக்கமே காரணம் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயக நாட்டில் ஜனாதிபதியாக நாட்டின் அனைத்து பலமும் தன்னிடம் உள்ளதை எண்ணி தான் கவலையடைதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

அட்டாளைச்சேனை கடற்கரை நிலங்கள், சட்டவிரோதமாக வேலியிட்டு அடைக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் - அஹமட்

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கரையோரை பாதுகாப்பு திணைக்களத்தின் கல்முனை அலுவலக அதிகாரிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் போன்றோரிடம், தாம் வேண்டுகோள் விடுத்தும், இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதி நிலங்களை சட்ட விரோதமாக இவ்வாறு வேலியிட்டு சில தனிநபர்கள் அடைத்து வருகின்றமையினால், அங்குள்ள மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை, ஓய்வெடுத்துக் கொள்ளும் வகையில் கடற்கரைக்கு வருகின்ற பொதுமக்களுக்கும், இந்த சட்ட விரோத நடவடிக்கையினால் பாரிய இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, கடற்கரைக்கு மிக சமீபமாகவுள்ள நிலங்களில், சிலர் தென்னை மரங்களை நட்டுள்ளமையினாலும், அவ்வாறு தென்னை மரங்கள் நடப்பட்டுள்ள கடற்கரை நிலங்களை குறித்த தனி நபர்கள் சொந்தம் கொண்டாடுகின்றமையினாலும், கடற்கரையில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஓரிருவர் இந்தப் பகுதியில் இவ்வாறு அரசுக்குச் சொந்தமான கடற்கரை நிலங்களை அபகரித்து வேலியிட்டமையினைத் தொடர்ந்து, தற்போது கணிசமானோர் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இவ்வாறு சட்ட விரோதமாக கடற்கரைக் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டினால், அந்தப் பகுதியில் வாடிகளை அமைத்து தொழில் செய்து வரும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, அரசுக்குச் சொந்தமான கடற்கரை நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் வேலியிடும் நபர்களுக்கு எதிராக, உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





Read more...

மஹிந்தவும் ரணிலும் ரகசியமாக என்ன பேசுகின்றார்கள் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு.

மஹிந்த ராஜபக்ஷ ரணில் இருவரும் பாராளுமன்ற நூலகத்தில் இரசிய பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தல் வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அவர்கள் கடந்த 6ம் கம்பாஹவில் நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் கடந்த 26ம் திகதி பிரமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததோடு ஜனநாயத்தை எட்டி உதைத்து வீசினார். இதற்;கு எதிர்ப்ப தெரிவிக்கும் வண்ணம் மக்கள் விடுதலை முன்னனியினால் நாடு ழுழுவதும் 'சர்வாதிகார வெறியை தோற்கடிப்போம், ஜனநாயத்தை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் நடாத்தப்படும் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் ம.வி.மு தலைவர் உரையாற்றுகையில்

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் போது விவாதத்தின் கணத்கெடுப்பு நடத்தியமையை வரலாற்றில் எழுத வேண்டும். மஹிந்த அவர்களுக்கு சார்பானவர்கள் 100 பேர் 102 பேர் என கணக்கிடுகின்றனர். ஆத்தோடு அவருக்கு சார்பானவர்கள் பராளுமன்றத்திற்து கூட வருவதில்லை.இதன் ழூலம் மஹிந்த அவர்களின் பலம் தெட்ட தெளிவான உள்ளது.

ஜனநாயகத்தின் காவல் தெய்வமாக ரணில் விக்கிரம சிங்க தன்னை கூறி கொள்ள முற்படுகிறார்.அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக புலம்பி திரியும் இவர் சிங்கபபுரிற்கு சென்று ஒப்பந்தங்களுக்கு கையெர்ப்பமிடும் போது எங்கே போனது அரசியலமைப்பு சட்டங்கள்? அதுமட்டுமா திருகோணமலை எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலங்கள் கொண்டு வந்த போது பொருளாதார கொள்கையை மீறியமை ஜனநாயகம் ஆகாது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றம் நாடக மேடையாகியுள்ளது. எல்லா செயற்பாடுகளிலும் குள்ள நரியாகவே செயற்பட்டு வருகிறார்.

யாருக்கும் நினைத்தப்படி அரசாங்கம் அமைக்க முடியாது. அனைவரும் பாராளுமன்றத்தினுள் 113 பெரும்பான்மையை பெற்றுக் கொண்டது பணத்தினால் தான். மக்கள் பிரதிநிதித்துவம் எங்கும் இல்லை. நாட்டினுள் நடைபெறும் இத்தகைய சூழ்;ச்சிகளையும் தேச துரோக செயற்படுகளையும் தொடர்ந்தும் நாம் அனுமதிக்க போவதில்லை.

ரணில் விக்கிரமசிங்க மஹிந்த இருவரும் 20 நிமிடங்கள் இரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மக்களுக்கு இவர்கள் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ம.வி.மு செயலாளர் விஜித ஹேரத் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலைத்துறையினர் சட்டத்தரனிகள் ஆகியோரும் உரையாற்றினர்.

Read more...

மத்திய கிழக்கில் வேலை தேடிச் சென்று வருடத்திற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை தெரியுமா?

கடந்த 11 மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களில் 222 பேர் இறந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. அதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களே இவ்வாறு இறந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சவுதி அரேபியாவில் 74 பேரும் குவைத்தில் 44 பேரும் இறந்துள்ளனர். 222 பேரில் 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 6 பெண்களாவர்.

இவர்களின் சிலர் இயற்கை மரணம் எய்தியும் வாகன விபத்துகளின் போதும் நோய்வாய்ப்பட்டும் இறந்துள்ளனர்.

மேலும் 18 இலங்கை தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

Read more...

Saturday, December 8, 2018

இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் கொண்டுள்ள நிலைப்பாட்டிலேயே சவூதியும் உள்ளது.

உலக இஸ்லாமியர்களின் மூன்று புனித ஸ்தளங்களில் ஒன்று மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். அங்கிருந்துதான் ரசூலுல்லாஹ் அவர்கள் புனித மிஹ்ராஜ் பயணம் சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள பாலஸ்தீன புனித பூமியை யூதர்களிடமிருந்து மீட்பது உலகின் அனைத்து முஸ்லிம்களினதும் கடப்பாடாகும்.

அந்தவகையில் யூதர்களிடமிருந்து பாலஸ்தீனை மீட்பதற்காக உலகின் சில இஸ்லாமிய நாடுகள் அதிக அக்கறை காட்டிவருகின்றது. அதில் ஈரான் காட்டிவருகின்ற தியாகங்கள் மிகப்பெரியது.

இதற்காக ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினை பயிற்றுவித்து ஆயுத, பொருளாதார உதவிகளையும் நீண்டகாலமாக ஹிஸ்புல்லாஹ் இயக்கத்துக்கு ஈரான் செய்து வருகின்றது.

அதுபோல் அங்கு யூதர்களின் நவீன ஆயுத தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்தவாறு யூத இராணுவத்துக்கெதிராக களத்தில் நின்று போராடுகின்ற ஹமாஸ் இயக்கத்துக்கும் ஆயுத, பொருளாதார உதவிகளை ஈரான் வெளிப்படையாக செய்து வருகின்றது.

ஆனால் இஸ்லாத்தின் காவலர்கள் என்று தங்களை உலகுக்கு காண்பிக்கின்ற சவூதி அரசாங்கமானது, யூதர்களுடன் போரிடுகின்ற ஹமாஸ் இயக்கம் மற்றும் ஏனைய ஜிஹாத் இயக்கங்களுக்கும் எந்தவித இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்வதில்லை.

யூதர்களுடன் நல்லுறவினை பேணிவருகின்ற மிதவாதிகளான அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு மாத்திரம் இஸ்ரேலின் அனுமதியுடன் நிதி உதவிகளை அவ்வப்போது சவூதி அரசு செய்துவருகின்றது.

இந்த நிதியினை வழங்குவதன் மூலம் முழு பாலஸ்தீனுக்கும் சவூதி அரேபிய அரசு உதவி புரிவதாக எடுத்துக்கொள்ள முடியாது.

யூத தேசத்தினை அங்கீகரிக்காததும், அமெரிக்காவுக்கு இசைந்து நடந்துகொள்லாமல் இறுக்கமான போக்கினை கடைப்பிடிப்பதுமே ஹமாஸ் இயக்கம் மீது சவூதி அரசு வெறுப்பாக இருப்பதற்கு காரணம் என்று நம்பப்படுகின்றது.

கடந்த பல மாதங்களுக்கு முன்பு கட்டார் நாட்டுக்கு எதிராக திடீரென சவூதியும், அதன் நேச நாடுகளும் பொருளாதார தடையினை விதித்திருந்தது.

அதில் சவூதி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டானது இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு கட்டார் அரசு உதவி வருகின்றது என்றும், குறிப்பாக ஹமாஸ் இயக்கத்திற்கு நிதி உதவி செய்து வருவதுடன், ஹமாஸ் இயக்க தலைவர்களுக்கு கட்டாரில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சவூதி குற்றம்சாட்டியது.

சற்றும் எதிர்பாராத சவூதி அரேபியாவின் திடீர் பொருளாதார தடை விதிப்பினால் கட்டார் சிறுது நிலைகுலைந்தது. உடனடியாக அந்நாட்டுக்கு உதவுவதற்காக துருக்கி, ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் முன்வந்து செயலில் இறங்கின. இதனை சவூதி அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சவூதியின் இந்த செயல்பாடானது உயிர் நண்பன் அமெரிக்காவையும், கள்ள உறவினை பேணிவருகின்ற இஸ்ரேலையும் திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

மத்தியகிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத்தளம் கட்டார் நாட்டிலேயே அமைந்துள்ளது. அப்படியிருந்தும் சவூதி, கட்டார் ஆகிய நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலையின்போது அமெரிக்கா நடுநிலை வகிக்காமல் அல்லது சமரசம் செய்ய முற்படாமல் நேரடியாக சவூதி அரசுக்கே தனது ஆதரவினை வழங்கியது.

சியோனிஸ்டுகளின் அடக்குமுறைக்கு எதிராகவும், புனித பூமியை மீட்பதற்காகவும், தங்கள் உயிர்களை தியாகம் செய்து புனித போர் செய்துவருகின்ற இஸ்லாமிய ஜிஹாதிய இயக்கங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் கூறி அவர்களை தடை செய்ததுடன், படை நடவடிக்கைகள் மூலம் அவர்களை அழித்து வருகின்றார்கள்.

அதே நிலைப்பாட்டினையே சவூதி அரசும் எடுத்துவருகின்றது. அவ்வாறாயின், சவூதி அரசுக்கும், இஸ்லாமியர்களின் எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையில் எந்தவித வேறுபாடுகளும் கிடையாது. அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் எண்ணங்களை சவூதி அரச குடும்பத்தினர் நிறைவேற்றி வருகின்றார்கள்.

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

Read more...

வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் காண்பியல் கண்காட்சி

கிளிநொச்சியில் எதிவரும் 09,10 ஆம் திகதிகளில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்களின் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் சிலர் இணைந்து வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள் என்ற ஒரு குழுவை 2017 மாசி மாதத்திலிருந்துசெயற்படுத்தி வருகின்றனர். இக்குழு தங்களது சுய அர்ப்பணிப்புடன் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் இக்குழுவின் ஊடாக முல்லைத்தீவிலும், கொக்கட்டிச்சோலையிலும், மட்டக்களப்பிலும் கண்காட்சிகள் நடதப்படடுள்ளன.

இதன் நோக்கம் பெண்களுக்கும், அனைவருக்கும் வன்முறைகளற்ற மகிழ்வான வாழ்வு அத்தோடு ஓவியத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் சமூக மாற்றத்திற்கான ஓவியங்கள் பற்றிய முன்னுதாரணங்களை வெளிப்படுத்தலும் ஓவியத்துறையில் ஊக்குவித்தலும் ஆகும் என இக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலா வாசுகி, ப.நிரஞ்சன், மு.தா.பா.ருக்சானா, கோ. மதீஸ்குமார், வெ. ஜதீஸ்குமார்,த.வினோஜா, க.துஸா, அ.கீதாநந்தி, தி.திசாந்தினி, பா.மேரிநிருபா, ப. ராஜதிலகன்,சு.நிர்மவாசன் ஆகிய ஓவியர்களின் ஓவியங்களே காட்சிப்படுத்தப்படவுள்ளன.


Read more...

மஹிந்த - மைத்திரி ஒரே சின்னத்தில் தேர்தல் களத்தில். மஹிந்தவே தலைவர்.

நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது வரும் பொது தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையும் ஒன்றினைந்து ஓரு சின்னத்தில் போட்டியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றன. ஆயினும் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீ.சு.கட்சியின் பொது செயலாளர் கருத்து வெளியிடுகையில் கூட்டமைப்பின் கட்சி தலைமை பொறுப்பை முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு எதிர்வரும் பொது தேர்தலில் இருக்கட்சிகளும் ஒன்றினைந்தே களமிறங்க போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

லஞ்ச ஊழல் வழக்கில் பொய் சாட்சி கூறிய பெண் சார்ஜன்டுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை.

ஊழல் வழக்கொன்றில் பொய் சாட்சி வழங்கிய குற்றத்திற்காக மாவனெல்ல பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலத்துங்க அவர்களால் 2 வருட கடூழிய தண்டனை வழங்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்தண்டனையை குறித்த காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதியின் பிள்ளை க.பெ.சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக பரீசீலனை செய்யுமாறு சட்டத்தரணியால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் குறித்த அதிகாரியின் குற்றம் தொடர்பில் பரீசீலனை செய்யக் கூடியதல்ல என நீதிபதி கூறியுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக குணவர்தன என்னும் நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தண்டப்பணமாக 2500ரூபா பெற்றுக்கொண்ட போக்குவரத்து அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டில் லஞ்சம் ஊழல் அதிகார சபையின் அதிகாரிகள் வழக்கு தொடுத்திருந்தனர்.

வழக்கின் போது குறித்த பெண் பொலிஸ் அதிகாரி சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்ததாகவும் லஞ்ச ஊழல் அதிகாரிகள் குப்பை தொட்டியில் இருந்தே பணத்தை எடுத்தனர் என்றும் தான் சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்ததாகவும் மன்றில் தெரிவித்திருந்தார் குறித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட.

சம்பவம் நடைப்பெற்ற பின் பிரதிவாதியுடன் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என கூறிய போதும் பெண் பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைப்பேசியில் 31 தடவை அழைப்பு ஏற்படுத்தியுள்ளதோடு குறுந்தகவல்களும் அனுப்பியுள்ளார் என்பதை வழக்கு தொடுநர் மன்றில் நிரூபித்தனர்.

அதை தொடர்ந்து பொய் சாட்சி கூறிய குற்றத்திற்காக கடூழிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com