Saturday, December 8, 2018

எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற விடுங்கள் - யாழில் பெண்கள் ஊர்வலம்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர்-25 முதல் டிசம்பர்- 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினம் வரை அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேற்படி தினங்கள் குறித்து பெண்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையம் [ஜெசாக் ] முன்னெடுத்துள்ள “எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள்” எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை(07) யாழில் இடம்பெற்றன.

யாழ்.நகரிலுள்ள பிரதான பஸ் நிலைய முன்றலிலிருந்து ஆரம்பமான மௌன ஊர்வலம் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தினைச் சென்றடைந்தது.

இந்த மெளன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் “பெண்களுக்கான வன்முறை என்பது மனித நேயத்தின் பற்றாக்குறை”, ”எனது கனவு ஒரு வன்முறையற்ற சமூகம்”, “மகிழ்வான வேலைத்தள சூழலுக்கூடாக ஆரோக்கியமான சூழலினை உருவாக்குவோம்” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நாவலர் கலாசார மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பானது.

அதிதிகளின் உரைகளுடன் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதி ஊடாக யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்,நீதிமன்றம்,பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

பாறுக் ஷிஹான்

Read more...

நல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.

ஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட்சியில் பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட 'மக நெகும' எனும் நிறுவனத்தின் பல்வேறு பதவிகளையுடைய அதிகாரிகள் என குறிப்பிட்டு வெளிநபர்கள் 44 பேருக்கு 25000-25லட்சம் வரை பணம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 'மார்க சதிய' செயற்திட்டத்தின் முகாமையாளர், கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கும், உதவி செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் வெளி நபர்கள் 19 பேரையும், விற்பனை பிரதிநிகள் மற்றும் விற்பனை முகவர்கள் 23 பேருக்கும் 2016 ஜனவரி தொடக்கம் 2018 மார்ச் வரை பணம் வழங்கப்பட்டுள்ளது.

அததோடு கண்டி மாவட்ட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.புஸ்பகுமார எனும் நபருக்கு 25000ரூபா பணமும் 300 லீற்றர் எரிபொருளுடன் வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. மார்க சதிய செயற்திட்ட முகாமையாளர் என குறிப்பிடப்படும் எச்.எம்.ஜயவீர பண்டார எனும் நபருக்கு மாதந்தம் 50000 ரூபா பணமும் 300 லீற்றர் எரிப்பொருளும் வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.

50000ரூபாய் பணம் பெற்றுக் கொண்டோர் விபரம்

சொய்சா - நாவீன்ன, மஹரகம
ரவி ஹர்ஷன - இம்புல்கஸ்வௌ, கெக்கிராவா
மஹ்மத் வீரக்கோன் தோட்டங்கள், கண்டி
சாமர ரொட்ரிகோ - குணதிலக் சாலை, வாதுவா
ஹேரத் - ஹிடடுவ, எஹெகெவவ, கல்கமுவ
அகரவிதி - தெஹிவளை
எஸ்.என். திக்கம்புர - வனாரத்த மவத, கல்கிஸை
புல்லக்குளம் - கோட்டே ரோடு, ராஜகிரிய
ஜயசிங்க - புதிய வீடமைப்பு வளாகம், ஹலீலா
கிருஷ்ணா - பாலெல்கந்த ரோடு, வலஸ்முல்ல
டிபி ரத்னாயகே - குணசேகர வீதி, ஹபரதுவ
எஸ்.டி.வி இராஜபக்ஷ - கொந்தாரே பிரேமமலகா மாவத்தை, சீதுவ
பொலாயெத்தே - வீரபன, ஒபாத்தா
பெரேரா - ஜெயந்தி மவதா, பியகம
. களுஆராச்சி - ஆர்டிகர்கேவ, கெகிராவா
கே.என். சமரக்கோன் - தலங்கம வட, மாலபே
என் உதய சாந்தா - மகாவத்த, குடமடுவ, பிலியந்தலை
பொன்ஷேகா -குருப்பு சந்தி, பொலன்னறுவை
முதுகலை சாமந்தி குமார - நவகமுவ தெற்கு, ரனால

மாதம் 25000 பெற்றுக்கொண்டோர் விபரம்.

சந்தமாலி பிலாப்பிட்டி - நீலம்பே கிராமம், நீலம்பே
டிஎம். சுரேந்திர பண்டார - மகாகண்டா, ஹிந்தாலா
அபேரத்ன - ஹந்தகல, கண்டி
விஜேசிங்க - கித்துதன்ன, மைலாபிட்டிய
ஹெமலி ஜயவர்தன - பாலகொல்ல, கெங்கேல்ல
பிரசாத் லியனகே - அடிப்படை சாலை, போரல்லா
லக்மணி தாவிபாரா - ஜால்டாரா, ஹன்வெல்லா
ஜி. டிஸ்சுகட்டுரியாச்சாச்சி - உதகமுல்ல, நுகேகொட
அரியவன்ஸா - பாபிலாய, மகுலுடெனியா
என்.ஏ.அபயசேகர - கோயில் சாலை, மகரகம
அபேவர்தனா - டன்ட்யூர், கண்டி
பெரேரா - கோஹோல்வில்லா சாலை, களனி
தெரெஸ் பெர்னாண்டோ - மிர்ஷிவத், பிலியந்தலை
சமரசேகர - கலாவைலவத்த, ஹோமம
லக்மால் ஹெட்டியாராச்சி - கிளாஸ் எஸ்டேட், உல்பன்
பண்டார சுபிசிஹே - பம்பரபேத, ஹன்னஸகிரிய
பண்டார ஹேரத் - தம்பகஹவெல, பாராடுனு ஓயா
ப்ருமுமுனி - உடவெல, கஹாலலிய்யா
திரு. கே.எம்.என்.நானகங்க கொங்கா - அமுனுகம, இம்புல்கொட
எஸ். மொஸ்ஸெனா பேக்கர் - சோய்சா வீட்டு வளாகம், மொரட்டுவை
ஆர் . நிமல் ஜெயசிறி - தலுபிட்டிய கடவத்த
நிஹோஹேலா - ஹீனதிக்கும்பூரா, பலா
எல்ஜி தயாசிறி - வெகுகுமாரா ரோடு, பலாவ

Read more...

கிழக்கின் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதேன்? வடக்கில்போல் வழங்குவீர் உடனடியாக நியமனத்தை.

தீர்வு கிடைக்காவிடின் காலவரையறையற்ற போராட்டம் வெடிக்குமாம். எச்சரிக்கின்றார் தன்னானந்த தேரர்


வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டமை போன்று கிழக்கு மாகாண சபை வேலையற்ற பட்டதாரிகளுக்கும் போட்டிப்பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் 3 ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க ஆளுநர் ரோகித போகல்லாகம நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேலையற்ற ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத் தலைவர் தன்னானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

இறுதியாக நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டி பரீட்சையில் 40 புள்ளிக்கு மேல் பெறுபேறுகளை பெற்ற வடக்கு மாகாண பட்டதாரிகள் சிலருக்கு 3 ஆம் கட்டமாக தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நியமனம் அண்மைக்காலமாக வழங்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. எனவே இதனை போன்று கிழக்கு மாகாணத்திலும் ஆளுநர் ரோகித பொகல்லாகம இவ் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

யுத்தம் சுனாமி போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வேலையற்றுள்ள வடக்கு கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாகாண சபையின் ஊடாக வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்.

இந்த விடயத்தை கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் முன்னெடுப்பதாக தெரியவில்லை.

ஆனால் வடக்கில் கட்டம் கட்டமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டு வருவதை வரவேற்கின்றோம். எனினும் கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் நியமனம் வழங்குவது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அகமட் காலத்தில் எமது பட்டதாரிகள் பலருக்கு தகைமை இருந்தும் இந்நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கையில் ஆளுநர் மேற்கொள்ளாது பட்டதாரிகளின் திறமை, ஆண்டு, நடந்து முடிந்த போட்டி பரீட்சை அடிப்படையில் குறித்த நியமனத்தை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப்பரீட்சை கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற நிலையில் தகைமைப்புள்ளிகளை பெற்ற பலர் முன்னாள் முதலமைச்சரினால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். எனவே கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு இவ்விடயத்தில் கவனம் எடுப்பது நன்று.

இப்பரீட்சைக்கு ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் தோற்றியுள்ள நிலையில் வெறும் 400க்கும் உட்பட்டவர்களே தெரிவாகி இருந்தனர். ஆனால் 2 ஆம் 3 ஆம் கட்டம் தகைமை உள்ளவர்கள் இப்பதவிக்கு உள்ளீர்க்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பெயர்களை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பியும் எதுவித பதிலும் இதுவரை இல்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
அவ்வாறு இல்லாவிடின் 40 புள்ளிகளை பெற்ற அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் குறித்த நியமனங்களை வழங்குதல் வேண்டும் இதில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளின் பிரச்சனைகள் உள்ளன.

அவ்வாறு இல்லாவிடின் நாங்கள் சாத்வீகமான போராட்டம் ஊடாகவே தான் எமக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்

Read more...

ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார்? ( சுலோகம் - ஆச்சரியம் ) அடுத்த தேர்தல். ( பாகம் - 1 ) - சஹாப்தீன் நானா

நமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல. புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.

அரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கின்றது. யார் நல்லவர் என்பதுதான் இந்தப்படத்தின் பெயர். நமது நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும் மிக மிக நல்லவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

இவர்கள் பிறக்கும்போது, தாய் தந்தையர்களால் வளர்க்கப்படும்போது, அரசியலில் கால் வைக்கும்போது அனைவரும் மிக நல்லவர்களே.

அன்புடையீர் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் மேல்படி தேர்தல் தொகுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றீர்கள் என்று, பாராளுமன்றத்தில் இருந்து அரச இலட்சினை தாங்கிய ஒரு கடிதம் வரும், வந்ததும். நம்மாளுக்கு முதல் கிளு கிளுப்பு வரும்.

அப்புறம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு நேர் பின்னே "மாதிவெல" இல் அமைந்துள்ள கட்டிடத்தில் உங்களுக்கு ஒரு வீட்டு தொகுதி சகல செளபாக்கியங்களுடனும், அத்துடன் ஒரு சமையல் ஆள், ஒரு உதவியாள் , இரண்டு அரச பாது காப்பு உத்தியோகத்தர்கள் என இன்னொரு மடலும் அல்லது அவசர ஈமெயிலும் வரும்.

அந்த கிளு கிளுப்பு இப்போது, மத மதப்பாக மாறும். இந்த மத மதப்பு மாற முதல், இலவச எரிபொருள், ஐந்து வருடத்துக்கு சொகுசாக ஓடுவதற்கு வாகனம், அதற்கு ஒரு சாரதி என்று இன்னொரு மடலும் அந்த வாகனத்தை இறக்குமதி செய்ய "கோட்டா"வும் பல்லை இளித்து கொண்டு வந்து நிற்கும்.

சிறிலங்காவில் ஏதோ ஒரு கிராமத்தில், அல்லது நகரத்தில், அன்பான தாய் தந்தை, அருமையான அயலவர்கள், துடிப்பான ஆசிரியர்கள், சுகமான நண்பர்கள் என வாழ்ந்த இவருக்கு : குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எதுவுமே இப்போது கண்ணுக்கு தெரியாது.

இது வேறு நிலம், ஆறாவது நிலம். பணமும் பணம் சார்ந்த இடமும். மதுவும் மது சார்ந்த இடமும். மாதும், மாதுக்கள் சார்ந்த இடமும். வரட்டு கெளரவமும், வங்குரோத்து தனமும் சார்ந்த இடமும். என்றும் சொல்லலாம்.

நான் வேற, நான் வேற ஆள், என்னுடைய தகுதியே வேற, என்னை யாருமே கட்டுபடுத்த முடியாது என்ற ஒரு வைரஸ் உடம்புக்குள் ஏறி சாஸ்டாங்கமாக உட்கார்ந்து கொள்ளும்.

கொழும்பு புறப்படுவார். கொழும்பில் இரண்டு குரூப் இப்போது இவரை வரவேற்க காத்திருக்கும்.

ஒன்று : கொழும்பில் வாழும் இவரது முன்னாள், இந்நாள் நண்பர்கள், உறவினர்கள். வாமச்சான் நம்ம வீட்டில தங்கலாம், நம்ம மச்சான் வீட்டில தங்கலாம் என்று வெள்ளை கொடி காட்டுவார்கள்.

மற்றது நம்பர் டூ : நண்பர்களின் நண்பர்கள். நிச்சயமாக இவர்கள் வியாபார மற்றும் பிழைப்பை நோக்கமாக கொண்ட கொழும்பையும் - உலகையும் உள்ளங்கைக்குள் வைத்துள்ள வெறி பிடித்த ஒரு கூட்டம். எதையும் செய்யும் என்னவும் செய்யும்.

பணத்தை நீராக கொட்டும், தேவையானால் தலைகளையும் தீர்த்தும் கட்டும். ஆனால் இது மிக, மிக சாந்தமான கூட்டமாகத்தான் வெளியே காட்டிக் கொள்ளும்.

இதற்குள் அனைத்தும் அடங்கும், வெளிநாட்டு சக்திகள், வெளிநாட்டு உளவாளிகள், துறைமுகம், விமான நிலையம், பாதுகாப்பின் அதி உச்ச அதிகாரிகளின் உள்வீட்டு தொலைபேசி இலக்கங்கள் வரை சுண்டு விரல் நுனியில் இருக்கும். அந்த அளவுக்கு செல்வாக்கனவர்களாக இருப்பார்கள், இவர்களில் நிறைய பேர் படிக்காத மேதைகள்.

நம்ம ஆள், நமது தொகுதி பா.உ நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் தங்கினாலும், எண்ணி ஒரு பத்து நாளில், நம்பர் டூக்களுடன் இணைந்து கொள்வார். அல்லது இணைக்கப்படுவார். அது அவருக்கே தெரியாது.

இவருக்குரிய அரச வாகனம் வரும் வரை, பாராளுமன்றத்துக்கு செல்ல அதி உச்ச வாகனம், கலதாரி மெரிடியன் அல்லது சினமன் கார்டன் அல்லது ஹில்டன் போன்ற ஹோட்டல்களில் ரூமும் சாப்பாடும் வழங்கப்படும்.

நம்மாளுக்கு உலகின் அதிஉச்சம் படமாக ஓடும்....... ஊரில், கிராமத்தில் இருமலுக்கு அசமதாகமும், சூடமும் ( கற்பூரம் ), நல்லெண்ணையும் பாவித்தவர். ஹில்டன் ஹோட்டல் லாபியில் ஹாட் சவர் சூப் (Hot Sawer Soup )பும், பிராந்தியில் ஜின்ஜெறேலும் ( Gingerale) கலந்து குடித்து கொண்டிருப்பார்.

உடம்பில் ஒரு மிடுக்கு ஏறும், முன்னாள் நண்பன், இந்நாள் நண்பன், ஊரான், உறவினன், படிப்பித்த வாத்தியார் முதல் கண்டவன் நிண்டவன், படித்தவன், பாமரன், வல்லான் ,சுள்ளான் எல்லாருமே, சேர் போடுவார்கள்.

சேர் ......!!!!!!
சேர் ...............!!!!!!!!!!!!!!!!
சேர் ..................!!!!!!!!!!!!!!!!!!!!!
சேர் ...........................!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த வார்த்தை காதுகளை தாண்டி, செவிப்பறைகளையும், தொண்டை குழிகளையும் தாண்டி, அடிவயிறை ஜில்லென்றாக்கி, நாடி நரம்புகள் அனைத்தையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுக்கும்........

வாவ் ........எவ்வளவு சுகம் .......என்ன கிளுகிளுப்பு....
இது; இந்த "சேர்" ( Sir) நாம் சாகும் வரை தேவைப்படும்.

இது நாம் ஆசிரியர்களுக்கும், படித்தவர்களுக்கும், மரியாதைக்குரியவர்களுக்கும் சொல்லும் கம்பீரமான, அன்பான, நேர் கொண்ட பார்வையுடைய சேர் கிடையாது.

நாம் கூனிக்குறுகி, நமது சகல கெளரவங்களையும் விட்டு கொடுத்து, ஏதோ ஒரு தேவைக்காக போடும் "சேர்"

இது இந்த சேர் ஒரு பா.உ க்கு சாகும் வரை தேவைப்படும். இதனால்தான் இன்று நமது நாட்டில் இவ்வளவு களேபரங்கள்
08--12--2018 ( தொடரும் )...


Read more...

Friday, December 7, 2018

பசிக்கொடுமையால் உணவு கேட்டு பொலிஸ் நிலையம் சென்ற சிறார்கள். தாய்கு 12 மாத தடுப்பு காவல் உத்தரவு.

பொத்துவில் கிராமத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மூவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்டுள்ளனர். தாம் மூவரும் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை என்று கூறிய வேளையில் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரி நிசாந்த குமாரசிங்க உடனே சிறுவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி பற்றி விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குழந்தைகளின் தந்தை வெளிநாடு ஒன்றில் கடமை புரிகின்றார். ஆனாலும் தாய் குழந்தைகளை பராமரிக்கும் கடமைகளை நிறைவேற்றவில்லை.

குழந்தைகள் இது தொடர்பில் கூறுகையில், தாய் தங்களை பராமரிப்பதில்ல்லை என்றும் தாய்க்கு மாத்திரம் யாரோ ஒருவர் உணவு வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பிள்ளைகளின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

12மாதக் காலம் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்று குழந்தைகளை அவரக்ளின் மாமாவிடம் சிறுவர் பிரிவு அதிகாரிகளின் கண்கானிப்பில் இருக்க உத்தரவிட்டது.

13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் 07 வயதுடைய பெண் பிள்ளையொருவருமே பசியென பொலிஸ் நிலையம் சென்றவர்களாகும்.

Read more...

மைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்

கிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்பிளையாகவும் வேசமிட்டுப் பழகியவர்கள். கிளிநொச்சியில் எந்த முதலீடும் இல்லாது அரசியல் செய்யும் இடமாக மாவீரர் துயிலுமில்லம் மற்றொன்று கர்ணனின் நாகஸ்திரம் போல் சிறிதரனின் நாகஸ்திரம்.

இவ்வாறே எவ்வித உழைப்பும் இல்லாமல் இரணைமடுக்குளத்தை வைத்து அரசியல் லாபம் தேட முற்பட்டு சிறிதரன் அம்மணமாகி நிற்கின்றார். இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டால் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் சொண்டு செல்லப்பட்டு விடும் என்ற ஒரே காரணத்திற்காக குளத்தின் அபிவிருத்தியையே நேரடி மற்றும் மறைமுக அழுத்தங்களால் சிறிதரன் தடுத்துக்கொண்டிருந்தார் என்பது ஊர் அறிந்த உண்மை.

இத்தனை எதிர்ப்புக்களையும் தாண்டி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில், குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்புக்காக திறக்கப்படுவதை ஒரு பெரிய விடயமாக்க அங்கே ஒரு போட்டோ சூட்டிங் நடாத்தி தனது அண்ணனின் இணையங்களின் ஊடாக மக்களின் காதுகளில் பூச்சுத்துவதற்காக ஒற்றைக்காலில் நின்றார் சிறிதரன்.

இதற்காக இவர் கிளிநொச்சி அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுத்தபோதும், சிறிதரனின் பருப்பு அரச அதிகாரிகளிடம் வேகவில்லை. அதற்கு காரணம் நல்லாட்சி இருந்தபோது நாங்கள் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் அரசாங்கம் எங்களுடையது என்று சொல்லிவந்த நிலையில் தற்போது அரசாங்கமே இல்லையென்றால் நம்ம ஊர்காரன் சும்மா ஆட்களா ஆழுநரிடம் கண்ணை காட்டிவிட்டு கம் என்று இருந்து விட்டனர். விடயத்தை வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே கையிலெடுத்ததால் நாகஸ்திரம் மைத்திரியின் கைக்கு இன்று சென்றுள்ளது


மத்திய அரசின் அபிவிருத்தி திட்டங்கள் வரும்போது நாங்கள் தேசியக் கொள்கையுடன் பயணிக்கின்றோம், எமக்கு அபிவிருத்தி தேவையில்லை , எமக்கு கொள்கை தான் முக்கியம் என முளக்கமிடும் சிறிதரன் அபிவிருத்திகள் முடிந்ததும் , அதனை திறந்துவிடுவதற்காக முந்தியடிப்பதை பலரும் அவதானித்தன் பலனாகவே இம்முறை இவ்வாறு மூஞ்சையில் குத்துவாங்கியுள்ளார்.

இங்கு மிகவும் கேவலமான விடயம் யாதெனில், குறித்த குளத்தின் நீரினை பாசனத்திற்காக திறந்துவிட்டபோது அதில் பங்கெடுக்காத சிறிதரன், குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து பாதுகாப்பு ஏற்பாடாக திறந்து விடப்படுகின்றபோது முண்டியடித்துக்கொண்டதற்கான காரணம் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வருகின்றது என்பதாகும்.

இச்செயற்பாட்டினால் சில வேளைகளில் தாழ் நிலப்பரப்பில் வாழுகின்ற மக்களுக்கு பாதிப்புக்கள்கூட வரலாம் வயல்களும் அழியலாம். இது தொடர்பாக கருத்துரைத்த வயோதிப மாது, சிறிதரன் தண்ணியை திறந்து விட்டு நாங்கள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னர், வெள்ளநிவாரணம் என அரிசி பையையும் கமறாவையும் தூக்கிக்கொண்டுவருவான், அப்போது என் விளக்குமாறு பதில் சொல்லும் என்றார். இந்த இழிசெயல்களுக்காகவே சிறிதரன் இங்கு கமக்கார அமைப்பு , சமாசம் என்ற அமைப்புக்களுள் தனது எடுபிடிகளை புகுத்தி நாடகமாடுகின்றான் என்றார்.

அவ்வாறானதோர் நாடகத்தையே இன்றும் ஜனாதிபதி அங்கு வருவதற்கு முன்னர் ஆடினார் சிறிதரன். தனது அடியாட்கள் சகிதம் வந்து அவ்விடத்திற்கு வந்திருந்த மக்களிடம் தான்தான் சகலதும் செய்துள்ளதாக நாடகமொன்றை ஆடி படப்பிடிப்பையும் மேற்கொண்டுவிட்டு ஜனாதிபதி வருகின்ற சத்தம் கேட்டவுடன் மாயமாய் மறைந்து விட்டார்.


சிறிதரனின் இச்செயற்பாடு தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை எறிந்த வண்ணம் உள்ளனர். சிறிதரனின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் பொன்காந்தன் தனது முகநூலில்: ஊடகமொன்றில் செய்தி பார்த்தேன் இன்று மைத்திரி இரணைமடுவை கற்பழித்தபோது சிறீதரன் மக்களோடு நின்று ரசித்தார். அவர் தனது வாக்குக்காக மதவாச்சிக்கு இங்கால மக்களோட நிற்பார். அங்கால ரணிலோட நிற்பார். துயிலுமில்லத்தை தாவரவியல் பூங்காவாக்க சிறீதரன் முன் மொழிவார் அங்கயன் வழி மொழிவார். பிறகு இன்று அங்கயன் மைத்திரியோட பக்கத்தில நிற்பார் , சிறீதரன் மக்களோட நிற்பார். கடவுளே! இந்தக்கோமாளியின் அரசியல் சித்;தாந்தத்தை விசேடமாக படிக்கவேணும். உனக்கு பின்னால எவ்வளவு சிங்கக்கொடி பறக்குது அதை பாத்தாவது உனக்கு மானம் இருக்கா எண்டு பார்!

இவ்வளவு கொடி பறக்க நீ தான் காரணம் ஸ்ரீ தரன் இரணைமடுவை அரசியல் இலாப பொருளாய் சிங்களவர்களுக்கு அறிமுகம் செய்தது நீ என்று பதிவிட்டிருந்தார்

இபொழுது சிறிதரனின் கபட நாடகம் மக்களுக்கு புலப்பட தொடங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.


Read more...

19 ஆபத்தில்! ஓழிப்போம் என்கிறது ஒருதரப்பு, காப்போம் என்கிறது மறுதரப்பு.

அரசியல் யாப்பின் 19 திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கிருந்த நிறைவேறு அதிகாரங்கள் சில ஒடிக்கப்பட்டது. அதுவே இன்று நாட்டில் சர்சையுமாகியுள்ள நிலையில், தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை இல்லாதொழிப்போம் என பாராளுமன்ற அமைச்சர ல்ஸ்மன யாபா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லை தாமரை தடாகத்தில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் மத்திய நிலையத்தில் நடைப்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

19வது சீர்த் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வாக்களித்ததை இட்டு தற்போது கவலை தெரிவிப்பதகாவும் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியையும் மாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாம் இச்சீர்திருத்தத்திற்கு சார்பாக வாக்களித்தமைக்கான காரணம் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் இன்றைய அரசியல் நடவடிக்கைகள் மக்களின் வாக்குரிமையை இழக்கச் செய்துள்ளதோடு ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

வரும் பொது தேர்தலில் தமது கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்று 19வது சீர்திருத்தத்தை மாற்றி நாட்டினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மக்களுக்கு கொடுத்த ஆணையின் பிரகாரம் ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொருட்டு கொண்டுவரப்பட்ட 19 ம் திருத்தச் சட்டத்தை தாங்கள் பாதுகாப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.


மறுபுறத்தில் 19வது திருத்த சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதன் ஜனநாயக குணாம்சங்களை பாதுகாத்து நாடாளுமன்ற நடைமுறைக்கமைய திருத்தங்களை மேற் கொள்ள தான் தாயார் என கௌரவ ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

19வது திருத்த சட்டம் நாட்டில் நிலவும் ஜனநாயக ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிறைவேற்றப்பட்டது. இதனூடாவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை ஜனநாயக ரீதியிலான நிறுவன கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளினை இலங்கை சழூகம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

புலிகள் வேண்டும் என்ற விஜயகலாவின் வழக்கு எதிர்வரும் 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.

புலிகளால் யாழ்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட மகேஸ்வரனின் மனைவி விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என தெரிவித்து சட்டச் சிக்கலை எதிர் நோக்கியுள்ளார். சர்சைக்குரிய இக்கருத்துக்கு எதிராக திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு அழைக்கப்பட்ட போது , வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலேனை கேட்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்று விசாரணைகளை மேற்கொள்ளும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சட்ட மா அதிபருக்கு நினைவூட்டல் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



Read more...

அன்ரன் பாலசிங்கத்தின் பாணியில் ரணிலை சாடுகின்றார் அனுர! குள்ளநரியாம்

ரணில் விக்ரமசிங்க குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்று தற்போது செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாதவரால் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்

மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பாட்டில் கம்பஹாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டின் போலி காவல் தெய்வமாக மாற முயற்சி செய்கின்றார். ரணில் விக்ரமசிங்க எந்த ஜனநாயகத்தை பாதுகாத்தார்.

சிங்கப்பூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு அதை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டார். சீனர்களுடன் கைகோர்த்துக் கொண்டார்.

அன்று அவருக்கு ஜனநாயகம் தெரியவில்லை. அவர் ஜனநாயகத்திற்கு அமைய செயற்படவில்லை. நாடாளுமன்றிலும் ஜனநாயகத்திற்கு அமைய செயற்படவில்லை. நாடாளுமன்றை கேளிக்கையிடமாக பயன்படுத்தினார்.

எனினும், இன்று நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் கதைக்கின்றார். ரணில் பொறுப்புடன் செயற்படவில்லை. இன்று ஜனநாயகத்தின் போலி காவல் தெய்வமாக மாற முயற்சி செய்கின்றார்.

கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாதவரால் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியுமா? குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்று தற்போது ரணில் செய்படுகின்றார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையிலே இடம்பெற்ற சமாதானப்பேச்சுகளிலிருந்து புலிகள் வெளியேறியபோது, அதற்கு காரணமாக ரணிலை சாடிய புலிகளின் அரசியல் ஆலோசர் ரணில் விக்கிரமசிங்க ஓர் குள்ளநரி என குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Read more...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டு மாநகர சபையில் கண்டன தீர்மானம்.

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 12 ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வின்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரினால் குறித்த கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த படுகொலை சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரேரணை முன்வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதன்போது மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த படுகொலையினை வன்மையாக கண்டித்ததுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

அரசியல் குழப்பத்தினை மேற்கொண்டுள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுவதனால் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Read more...

கிளிநொச்சியில் மைத்திரிக்கு ஆலாத்தி! இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்தார் !

இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கிளிநொச்சி பெண்கள் ஆலாத்தி எடுத்து வரவேற்க அவர் இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

குறித்த இரணைமடுக்குளமானது யுத்தகாலத்தில் செலற்றுக்கிடந்ததுடன் யுத்தத்தின் கோரத்தினால் பாதிப்படைந்திருந்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குளத்தின் பெயர் கல்வெட்டினை திறந்து வைத்ததோடு, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகனிடம் இரணைமடுகுளத்தின் ஆவணத்தையும் கையளித்துள்ளார்.

மேலும் விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் நிகழ்வையும் அரிசியிட்டு ஆரம்பித்து வைத்தார்.

இரணைமடுகுளத்தின் தற்போதைய நீர் மட்டம் 36 அடியை எட்டியுள்ளது. இந்தநிலையில் ஒரு வான்கதவினை ஆறு இஞ்சி அளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.


இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 8500 ஏக்கர் பரப்பளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இனிவரும் காலங்களில் 12500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர்களான மகிந்த சமரசிங்க முன்னாள் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






Read more...

சிறைசெல்வதிலிருந்து தப்பிக்கவே மஹிந்தர் பிரதமர் பதவியை ஏற்றாராம். அனுரகுமார

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியை ஏற்றுக்கொண்டது சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்கவே என மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'முறையற்ற அரசியல் கலாசாரத்தை முறியடித்து ஜனநாயகத்தை காப்போம்' தொனிப்பொருளில் வாரியப்பொலவில ;நடைப்பெற்ற கூட்ட்த்தின் போதே இவ்வாறு தெரிவி;த்தார்.

மேலும் அவர் கூறுகையில் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது பாராளுமன்றத்தில் அவரை கேலியாக இழிவான முறையில் பேசினர். இந்நிலையில் அவரை கண்டதும் மிகவும கவலையடைந்தோம். ஏன் இவர் இத்தனை எதிர்ப்பிலும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எம் எல்லோர் மனதிலும் எழுந்தது.

ரணில் ஆட்சியினை பொறுப்பேற்ற 3 வருடங்களில் நாட்டை சீரழித்தார். மிகுதியான காலத்தில் ராஜபக்ஷ அவர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும். மஹிந்த அவர்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் போயிருந்தல் நாட்டை மீட்க முடியாமல் போயிருக்கும் என மஹிந்த தரப்பினர் கூறுகின்றனர். இன்று ரூபாவின் விழ்ச்சி கண்டுள்ள நிலையில் பொருளாதாரத்தின் வீழ்;ச்சியையும் நாம் காண்கின்றோம். நாட்டை மீட்க வந்தவர்கள் 179 இருந்து 182 ரூபாவிற்கு டொலரின் விலை உயர்ந்த போது என்ன செய்தார்கள். வடக்கில் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ள இனவாதம் நாட்டை காப்பற்ற பதவியேற்றவர்களின் எண்ணங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

மைத்திரி அவர்கள் குருணாகலில் தென்னந் தோப்பு ஒன்றில் மறைந்திருந்தே ஜனவரி 8ம் திகதி தேர்தல் முடிவை கேட்டார் என்று பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தேர்தலில் தான் தோற்றால் குடும்பத்துடன் மண்ணோடு மண்ணாக போக நேரிடும் என மறைமுகமாக மஹிந்த அச்சுறுத்தலினை குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சம்பவங்களின் பின்னரே சட்டபுர்வமற்ற திருமணத்தைப் போல இக்கூட்டனி இணைந்துள்ளது.

இந்நிலையில் வரும் சட்டரீதியான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க மஹிந்த உட்பட தரப்பினருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. விரைவாக முடிவெடுக்காவிடின் மஹிந்த அவர்களின் தேர்தல் நடவடிக்கைகள் சிறையிலேயே நடைபெறும் என குறிப்பிட்டார்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றிணைந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக நியமிப்பதில்லை என்ற தீர்மானத்துடன் ஜனாதிபதி உறுதியாக செயற்படும் நிலையில், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விலகி கொள்ளாத நிலையிலும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனாலேயே இவ் ரகசிய வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பிற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள 80 கூட்டiணியின் உறுப்பினர்களும் இணைந்து இதன் போது வாக்களித்த்ல் வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அதன்மூலமாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் யார் என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எதிர்பார்ப்பதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஜனாதிபதிக்கு எதிராக கண்டனநியாய பத்திரம் சமர்ப்பிக்க அனுர-ராஜித தீர்மானம்!

ஜனாதிபதிக்கு எதிராக கண்ட நியாயப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அநுர-ராஜித இருவரும் கலந்துரையாடி முடிவெடுத்துள்ளனர் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியினால் தேர்தல் அறிவிக்கப்படல், பாராளுமன்றத்தை கலைத்தல், பொதுசன அபிப்பிராயத்திற்கு விடல் போன்ற தீர்மானங்களை தடுப்பதற்காகவே இந்நியாய பத்திரம் முன்வைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

Read more...

Thursday, December 6, 2018

ஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி!

அரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் இன்று (வியாழக்கிழமை) சகல திணைக்களங்களின் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தனியார் ஹோட்டல்களை, குறிப்பாக சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக அரசின் கீழ் இயங்கும் பல கேட்போர் கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அரச வைபவங்களையும் நிகழ்ச்சிகளையும் சொகுசு ஹோட்டல்களில் நடாத்துவதன் ஊடாக ஏற்படும் வீண் விரயத்தினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

சிங்கள மொழியே இந்நாட்டின் முடிவு செய்யும் மொழியாம். சொல்கின்றார் கம்பன்பில

இலங்கையில் எழுந்துள்ள அரசியல்யாப்பு சர்ச்சை விவகாரம் உச்ச நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் பல்வேறு கோணங்களில் வாதங்களையும் , அர்த்தங்களையும் கற்பிக்கின்றனர்.

இந்நிலையில் மனுதாரர்கள் எதையும் தெளிவாக புரிந்து கொள்ளாமலே மனுவை முன் வைத்துள்ளனர் என்று நகைக்கின்றார் பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்பில.

33(2)உறுப்புரையின் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு; பாராளுமன்றத்தை கூட்டுதல் கலைத்தல் ஒத்திவைத்தல் ஆகியவற்றிற்கான அதிகாரம் உண்டு என்று திட்டவட்டமாக கூறும் அவர் மனுதாரர்கள் இதனை புரிந்து கொள்ளவில்லை என்கின்றார். அரசியல் யாப்பின் மும்மொழிகளிலும் சிற்சில முரண்பாடுகள் காணப்படுவதாக, அதன் அர்த்தங்கள் வேறுபடுவதாக குறிப்பிடும் அவர், அவ்வாறான முரண்பாடு தோன்றும்போது சிங்கள மொழியில் சொல்லப்பட்டிருப்பதே செல்லுபடியாகும் என்கின்றார்.
அதாவது சிங்கள மொழியில் பாராளுமன்றை „கலைக்கலாம்' என்று சொல்லப்பட்டுள்ளதாக அவரது வாதம் அமைகின்றது.

பாராளுமன்றத்தை கலைத்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தினால் முன் வைக்கப்பட்ட மனுவிசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

70(1)உறுப்புரையின் படி யாப்பின் அடிப்படையில் அதிகார பிரியோகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எவ்வித நிபந்தனையும் இன்றி பாராளுமன்றம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பது தெளிவாக புரிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com