Thursday, December 6, 2018

சிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு! நாளை சிறிசேன கையாலாம்.

இரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே திறந்துவிடவேண்டும் என எம்பி சிறிதரன் தலையால் கிடங்கு கிண்டினார்.

ஆனால் இரணைமடுக்குள அபிவிருத்தி பணிகள் ஆரம்பமானபோது, அதனை தடுத்து நிறுத்துவதற்கு பெரும்பாடுபட்டவர் சிறிதரன். அவ்விடயத்தை வைத்து கிளிநொச்சி யாழ்பாணம் என்ற பிரதேசவாதத்தைக்கூட ஏற்படுத்தியிருந்தார். இவ்விடயங்களை நினைவுகூர்ந்த ஆழுநர் அபிவிருத்திக்கு தடையாக நின்ற ஒருவர் கையால் அதை திறப்பது அபத்தம் என்றும் அறிவித்து விட்டார் என ஆழுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அத்துடன் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை இரணைமடுவுக்கு வரவழைத்து அவர் கையால் வான்கதவுகள் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அறிவித்தல்களும் விடுக்கப்படாதபோதும், இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.




Read more...

நாமல் குமாரவின் தொலைபேசிக்கு விடுதலை. ஹொங்கொங் பயணமாகின்றது.

ஜனாதிபதியின் கொலை முயற்சியை அம்பலப்படுத்திய மோசடி ஒழிப்பு முன்னணின் தலைவர் நாமல் குமாரவின் கையடக்க தொலைப்பேசி ஹொங்கொங் நாட்டின் கைப்பேசி நிறுவனத்திற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமாரவின் கையடக்க தொலைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகளில் சில அழிக்கப்பட்டுள்ளமையால் அவற்றை மீண்டும் பெற எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்திற்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை பிரிவினரால் நேற்றைய தினம் இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிவானுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இவ் விசாரணைக்கான முக்கிய சாட்சியாக உள்ள கையடக்க தொலைப்பேசியை நீதிமன்ற காவலிலிருந்து பெற்று தருமாறு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நீதிவான் கைப்பேசியை விடுவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதியின் கீழ் செயற்படுவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாம். சந்திம வீரக்கொடி

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் செயற்படுவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையென பாராளுமன்ற அமைச்சர் சந்திரம வீரக்கொடி தெரிவித்தார்.

அம்பலங்கொடையில் நடைப்பெற்ற நிகழ்வொன்றின் போது மேற்கண்டவாறு தெரிவிதுள்ளத அவர், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டவில்லையெனில் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை தற்போதைய அரசியல் நிலமையைக் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வினை காண வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி முன்னால் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Read more...

தீர்ப்பை ஒரு நாள் பின்தள்ளியது உச்ச நீதிமன்று. தொடர்கின்றது இடைக்காலத் தடை.

நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அரச நாளிதழுக்கு உச்ச நீதிமன்று இடைக்கால தடையுத்தரவு விதித்திருந்தது.

இவ் அரசநாளிதழ் அரசியல் யாப்பை மீறுகின்றது என்றும் ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரங்கள் 19ம் திருத்தின் பின்னர் இல்லை என்றும் 122 பாராளுமன்ற உறுப்பினர்களும் மேலும் சில தனிநபர்களும் சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்த 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகளே இவ்விடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தனர்.

அத்துடன் 4,5,6 திகதிகளின் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு 7 ம் திகதி இறுதித்தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்படும் என சற்றுமுன்னர் அறிவித்துள்ள உச்ச நீதிமன்று, நாளை 7 ம் திகதியும் விசாரணைகள் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இறுதி தீர்ப்பு எதிர்வரும் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாமே குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Read more...

பிரச்சினையை சுமுகமாக தீர்க்கட்டாமாம்! தங்களுக்கு இதில் ஒரு லாபமும் இல்லையாம். அழுகிறது அமெரிக்கா

தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

'இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.

அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.

நாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.

இந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

சிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

தற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கிறோம்.

எனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.

எமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.

தேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

உச்ச நீதிமன்றை சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு

நாட்டின் நிலைமைகளை ஸ்திரமற்றதாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்றை கலைப்பதாக வெளியிடப்பட்ட அரசநாளிதழ் மீதான மனு உச்ச நீதிமன்றில் இன்று மூன்றாவது நாளாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

இது குறித்த தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளதுடன் தீர்ப்பின் பின்னர் நாட்டில் பெரும் வன்செயல்கூட வெடிக்கலாம் என்ற நிலையில், உச்ச நீதிமன்றினைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் நாடு எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமைகளை எதிர்கொள்ள பாதுகாப்பு படையினர் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

TNA க்கும் UNP க்குமிடையேயுள்ள உறவு நாட்டுக்கு தெரியப்படுத்தப்படவேண்டுமாம். மஹிந்தானந்த அழுத்தகமகே

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் உடனடியாக நாட்டிற்கு வௌிப்படுத்த வேண்டும் என மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய போதிலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஒரு மாத காலமாக கூறி வந்தது.

திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு தேவையான 113-க்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேன்கூட்டை உடைப்பது கையை சுவைப்பதற்காக அல்லவென்பதை நாம் அறிவோம்.

அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் உடனடியாக நாட்டிற்கு வௌிப்படுத்த வேண்டும்“ என கோரியுள்ளார்.

Read more...

பெண்களின் அறைகளில் இரகசியக் கமரா பொருத்தி இன்பம் கண்ட ஆசாமியின் வாக்குமூலம்.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பெண்களுக்கென விடுதியொன்றை அமைத்து அவர்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் இரகசிய கமரா பொருத்தி செயற்பாடுகளை பதிவு செய்த ஆசாமி ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் தனது செயற்பாடு தொடர்பில் நீதிமன்றில் பரபரப்பு வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் தங்கும் விடுதி இயங்கி வந்தது. இந்த விடுதியை சம்பத்ராஜ் என்கிற சஞ்சீவி (48) நடத்தி வந்தார். இந்நிலையில், விடுதியில் பெண்களின் படுக்கை அறை, குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்திருந்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், அறைகளில் இருந்த ரகசிய கேமராக்களை கைப்பற்றினர்.

"வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடம் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன். கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். முன்பணமாக ரூ.50 ஆயிரமும், வாடகையாக மாதம் ரூ.24 ஆயிரமும் கொடுத்தேன். இது 2 ஆயிரத்து 100 சதுரஅடியில் 3 படுக்கை அறை கொண்ட வீடு ஆகும். இங்கு 7 பெண்கள் தங்கி இருந்தனர்.

எனது மனைவி சித்தா மருத்துவர். அவர் சித்தா மருத்துவம் பார்ப்பதற்காக படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீட்டில் போட்டிருந்தேன். ஹாலில் உள்ள ஒரு பகுதியை சித்தா மருத்துவத்துக்கான அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தேன். அங்கு தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அனுமதித்தனர். எனவே பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு அங்கு வந்துவிடுவேன்.

இது பெண்களின் அறைகளில் கேமராவைப் பொருத்த எனக்கு வசதியாகிவிட்டது. இதற்காக நண்பர் ஒருவர் மூலம் கேமரா தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டேன். ஆன்லைனிலும் படித்தேன். பின்னர் ஒவ்வொரு கேமராவையும் நானே ரகசியமாக பொருத்தினேன்.

இந்த கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன். அவற்றின் விலை தலா ரூ.2,500 ஆகும். இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தியிருந்தேன். இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டும் தானாக இயங்கி காட்சிகளை பதிவு செய்யும். மற்ற நேரங்களில் இயங்காது.

இந்த கேமராக்களில் மெமரி கார்டும் இருக்கும். வீடியோ காட்சிகள் அந்த கார்டில் பதிவாகி இருக்கும். 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை பராமரிப்பு பணி என்று அவர்களின் அறைக்குள் சென்று மெமரி கார்டை எடுத்து விட்டு, புதிய மெமரி கார்டை வைப்பேன்.

பின்னர் அந்த கார்டை எடுத்து லேப்டாப் அல்லது செல்போனில் போட்டுப் பார்ப்பேன். இந்நிலையில், வைஃபை (wifi) தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன கேமராக்கள் இருப்பதை அறிந்து, அவற்றை வாங்கி பெண்களின் அறைகளில் மாட்டினேன். எல்இடி பல்பு வடிவில் இந்த கேமராக்கள் இருக்கும்.

இந்த கேமராக்களில் மெமரி கார்டை கழற்றத் தேவையில்லை. வைஃபை மூலம் நேரடியாக எனது செல்போனுக்கு தொடர்பு படுத்தி பெண்கள் அறைகளில் நடக்கும் காட்சிகளை பார்ப்பேன்" என்று சஞ்சீவி வாக்குமூலம் அளித்தார் என்று போலீஸ் கூறியதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Read more...

இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக்கொள்கின்றாராம் சபாநாயகர். கெஹெலிய காட்டம்.

“தனக்கு இல்லாத அதிகாரங்களை இருப்பதாக காட்டிக் கொண்டு சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குகிறார்” என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல,

“சபாநாயகர் தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே ஊடகங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கிறார்.

இக் காலங்களில் பாராளுமன்றில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனினும் அவர் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்துள்ளார்.

பாராளுமன்றை கூட்டியமை சபையை ஒத்தி வைத்தமை விஷேட யோசனைகளை முன்வைக்கவுமே எனினும் சபாநாயகர் விருப்பமானவர்களுக்கு விருப்பமான முறையில் பாராளுமன்றில் உரையாற்றுவதற்கு இடமளித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஊடக செயற்பாடு குறித்தே பேசினர். ஊடக செயற்பாடுகளை தடை செய்யுமாறே கூறினார்.

இதனால் சபாநாயகர் அனைத்து அரச ஊடக நிறுவன தலைவர்களையும் பாராளுமன்றிற்கு அழைப்பதற்கு உத்தரவிட்டார். இது தான் இவர்களது ஊடக சுதந்திரமாகும்.

நேற்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் கூட ஏனைய நாட்களைப் போலவே அமைந்திருந்தன. அந்த செயற்பாடுகள் சட்ட விரோதமானவை.

சட்டவிரோதமாக செயற்படுகின்ற பாராளுமன்றிலேயே அனைத்து உரைகளும் இடம்பெற்றன. பாராளுமன்றம் கூட்டுவது மற்றும் யோசனைகளை ஒத்தி போடுகின்றனர்.

ஓத்திவைப்பு வேளை பிரேரணை என்ற பெயரில் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உரையாற்றினர். எனக்கு தெரிந்த வகையில் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் நேற்று மதியம் 12 மணிக்கு பாராளுமன்றிற்கு சென்றனர்.

எமது ஆட்சி காலத்தில் அரச ஊடகங்களின் செயற்பாடுகள் எந்த வித தடையுமின்றி சுதந்திரமாக இடம்பெற்றன.

அதில் தலையிடுவதற்கோ அழுத்தம் கொடுப்பதற்கோ நாம் இடமளிக்கவில்லை என்பதை சகலரும் அறிவர். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்களின் குழு ஒன்று ஊடக நிறுவனங்களுக்கு சென்றிருந்தது.

பாராளுமன்றம் சம்பிரதாயங்களையும் நிலையியற் கட்டளைகளையும் மீறியே செயற்படுகிறது.”என தெரிவித்தார்.

Read more...

படகுடன் 234 கிலோகிராம் போதைப்பொருளை மடக்கிய அதிகாரிகள். இலங்கை வரலாற்றில் 2 வது பெரிய முறியடிப்பு.

போதைப்பொருள் தடுப்பு பிறிவினரால் நேற்றிரவு பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 234 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 2777 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களுடன் அவர்கள் பயணித்த படகும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read more...

ஜனாதிபதியின் குடியுரிமையும் பறிபோகலாம! விளக்குகின்றார் விஜித ஹேரத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமையை பறிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டரசாங்கத்திலிருந்து விலகி, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவையும் அமைச்சரவையையும் கலைத்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் அரசியல் களம் சூடு பிடித்ததுடன், நாட்டின் இயங்கு நிலையும் மந்த கதியடைந்தது. பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

இதற்கிடையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை காட்டத் தவறும் நிலை உருவாகியதையடுத்து நாடாளுமன்றத்தை தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைத்து, பொதுத் தேர்தலை அறிவித்தார்.

எனினும், ஜனாதிபதியின் இச்செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதேபோன்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் இயங்குவதற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பான வழக்குகள் வாதத்துக்கு வந்திருக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னெடுத்த அரசியல் மாற்றத்துடன் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய விஜித ஹேரத்,

உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினை வழங்கும் பட்சத்தில் அவர் குற்றவாளி என்பது சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இதனையடுத்து ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல அவரது குடியுரிமையை பறிக்க முடியும். அவர் செய்துள்ள தவறு சாதரணமானது அல்ல. அதனால் தான் ஜனாதிபதி அச்சத்தில் தடுமாறுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இதில் முதல் சரத்து நீக்கபட்டுள்ளது. இதனை எவ்வாறு நீக்க முடியும்? இவர்கள் டீல் ஒன்றினை போட்டுவிட்டனர்.

ஜனாதிபதியின் கதைக்கு இணைங்கி இவர்கள் இதனை செய்துள்ளார்கள். அவ்வாறு இவர்களால் அதனை செய்ய முடியாது. ஜனாதிபதி இப்பொழுது குற்றவாளியாகிவிட்டார்.

இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியுடன் டீல் போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர். அன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் இன்று மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தவர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே.

நிறைவேற்று அதிகார நாற்காலியில் மைத்திரி மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் நாட்டினை நாசமாக்குவார்கள் என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Wednesday, December 5, 2018

சபாநாயகரின் விஷேட செய்தி

2018-12-3ம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 26 ம் திகதியில் இருந்து நடந்த அரசியல் மாற்;றங்களை கவனத்தில் எடுப்பது எமது கடமையாகும். அதேபோல் பாராளுமன்றத்தில் செயற்பாடுகளை திரும்பி பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இதுவாகும்.

மேற்குறிப்பிட்ட மாற்றம் நடைப்பெற்ற மறுதினம் சபாநாயகர் கௌரவ ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது ஜனாதிபதியின் முடிவு பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரண்பட்டதாயினும் அவரின் விஷேட வேண்டுகோளுக்கு இணங்க பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்க பிரதம செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

புதிய அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை 7 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. உள்நாட்டிலும் சர்வதேசத்தின் பார்வைக்கும் வெளிப்படுத்துவது ஜனாதிபதியின் கடமையாகும்.

நவம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தாலும் அன்றைய தினம் தோல்வி கண்ட நிலையில் 14ம் திகதி மீண்டும் கூட்டப்பட்டபோது 122 உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்தனர். இந்நிலையிலேயே அமைச்சர்கள் பேரம் பேசப்பட்டனர். 300மில்லியனுக்கு மேலான பணத்திற்கு அமைச்சு பதவிகளை விற்கும் நிலையை உருவாக்கி இருந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையை விசாரணை செய்ய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை நியமித்தமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.

நவம்பர்14ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டமையானது 136 கட்டளைச் சட்டம் மற்றும் 143 கட்டளை சட்டத்தின் அடிப்படையிலேயே. ஆனாலும் 14 15 16 திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அமளிதுமளியால் வாக்கெடுப்பு குரல் முலமே நடைப்பெற்றது.

டீசம்பர் 3ம் திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பானது எமது எதிர்ப்பார்ப்பின் அடிப்படையிலேயே இடம் பெற்றுள்ளது. சிறந்த தீர்ப்பினை வழங்கிய உயர்நீதி மன்றத்திற்கு தலைவணங்குகின்றோம். இதன் மூலம் சபாநாயகருக்கும் பாராளுமன்றத்திற்கும் எதிரான விமர்சனங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் ஜனநாயக ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலேயே பாராளுமன்ற நடவடிக்கைகள் நடந்தேறியுள்ளன. தனிப்பட்ட நபரை அல்லது குழுவினரை பலப்படுத்துவதோ பலவீனப்படுத்துவதோ சபாநாயகரின் கடமை இல்லை. சபாநாயகரை பதவி நீக்க வேண்டுமாயின் முறைப்படி பதவி நீக்கலாமே ஒழிய ஆங்காங்கே விமர்சனம் செய்யத் தேவயில்லை.

இறுதியாக இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் அரசியல் சமூகம் எல்லாம் பின்னடைவை நோக்கிய சென்று கொண்டிருக்கிறது என்பதனை கௌரவ ஜனாதிபதி உட்பட அனைவரும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

தாய் நாட்டினை மீட்க ஜனநாயக ரீதியான அரசாங்கத்தை ஸ்தாபித்து சமாதானமான சூழ்நிலையை ஏற்படுத்துவது எமது கடமையாகும். எதிர்வரும் பாராளுமன்ற தொடரின் போது அமைதியான முறையில் செயற்பட கட்சி தலைவர்கள் கவனம் செலுத்தல் வேண்டும்.

மேற்குற்ப்பிட்ட எமது கருத்துக்கள் அனைத்தும் சுயநலத்திற்காகவோ பக்கசார்பிற்காகவோ முன்வைத்தவை அல்ல. மான்புமிகு ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டினை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே எம் எண்ணத்தில் உள்ளது.

சபாநாயகர் காரியாலயம்

Read more...

பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய சேவைகளுக்கு இடையூறு ஏற்றபடாதவாறு செயற்படுவீர். அரச ஊழியர்களுக்கு மைத்திரி

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும் உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் வழங்கினார்.

இன்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மையை ஒரு பிரச்சினையாகக் கருதாது பொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.

மக்களின் நலன்கருதி தனது வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சகல விசேட கருத்திட்டங்களும் 2019ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்துடனும் வலுவுடனும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முதன்மை செயற்திட்டமான கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளையும் எதிர்வரும் வருடம் வலுவுடன் நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், மாவட்ட மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள கிராமசக்தி ஒருங்கிணைப்பாளர்கள் தமது கடமைகளை உரியவாறு நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மரநடுகை செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை சாதகமாகக்கொண்டு அச்செயற்திட்டத்தை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதுடன், குறுகிய காலத்திற்குள் அடைந்துள்ள அதன் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

கடந்த மூன்றரை வருட காலமாக உரியவாறு கவனம் செலுத்தப்படாத வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் நியமிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி குறிப்பிடத்தக்க வகையில் செயற்பாடுகளை நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என தெரிவித்தார்.

25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக செயற்படும் ரணில் விக்ரமசிங்க, அதன் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை என்பதுடன், நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவர், முதலில் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


Read more...

ஜனாதிபதியின் அறிவித்தலுக்கு எதிரான சவாலை விசாரிக்க உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லையாம.! சட்ட மா அதிபர்

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்போது மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அரசியலமைப்பின் 38 (2) அ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக பாராளுமன்றத்தால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் நீதிமன்றில் கூறியள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை 07 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனு விசாரிக்கப்படுகிறது.

Read more...

விஜேகுணவர்தன வெளியே, நேவி சம்பத்தும் நாலக்க டி சில்வாவும் உள்ளே.

வெள்ளை வேனில் 5 மாணவர்கள் உட்பட 11 கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டில் கைதான முப்படைகளின் பிரதானி கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இன்று கொழும்பு கோட்டை நீதிமனறத்தில் நீதிவான் முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 10 இலட்சம் பெறுமதியான இரு சரீரபிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் முப்படைகளின் பிரதானி பாதுகாப்பு வழங்கினார் என்று கூறப்படும் லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத்தை தொடர்ந்தும் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்க மறியிலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இதேநேரம் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து 5 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தார்.

யாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­தால் அர­சி­தழ் அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சார்­பில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று தி.பிர­காஸ், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வா­கி­யி­ருந்­தார்.

சபை­யின் தவி­சா­ளர் தெரி­வில், அவர் கட்சி முடி­வு­களை மீறிச் செயற்­பட்­டார் என்று தெரி­வித்து அவ­ரைக் கட்சி உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­ய­து­டன், அவ­ரது சபை உறுப்­பி­னர் பத­வியை வெறி­தாக்க வேண்­டும் என்று தேர்­தல்­கள் அலு­வ­ல­கத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தது.

தன்னை உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கி­யமை தவறு என்று தி.பிர­காஸ் நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். அந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

வழக்கை மீளப் பெறு­வ­தாக முறைப்­பாட்­டா­ளர் பிர­காஸ் மன்­றில் தெரி­வித்­தை­ய­டுத்து வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

இந்த நிலை­யில் வலி­கா­மம் தெற்­குப் பிர­தேச சபை­யின் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் த.அகி­லன், தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சி­தழ் அறி­விப்­பைச் செய்­துள்­ளார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அந்த வெற்­றி­டத்­துக்­குப் புதிய உறுப்­பி­னரை நிய­ம­னம் செய்­ய­வேண்­டும்.

Read more...

நெருக்குவாரம் கொடுத்தால் பதவியை ராஜனாமா செய்துவிடுவாராம் ஜனாதிபதி.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, “தன்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், நாட்டுக்கு உரையாற்றிவிட்டு, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தனது பொலன்னறுவை விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்ய சென்று விடுவேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சி வசப்பட்டு கூறியதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இந்த கருத்தை ஜனாதிபதி கூறியபோது அந்த கலந்துரையாடலில் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம், பழனி திகாம்பரம், கபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம, கயந்த கருணாதிலக, அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.



Read more...

ஜனாதிபதி செயலாளரை கழுத்தில் பிடித்ததால் கிடைத்தது வெற்றி.

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இழுத்தடிக்காமல் விரைவாக நியமனங்களை வழங்குமாறு கோரி நேற்று 2018.12.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் முன்கூட்டியே ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்புக்களை பகிரங்கமாக அறிவித்திருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த சங்கத்தின் சில முக்கியஸ்தர்களை ஜனாதிபதியின் செயலாளர் அழைத்து வழக்கமான ஆறுதல் வார்த்தைகள் வழங்குவது போன்று இவர்களுக்கும் வழங்கியிருக்கின்றார்.

ஆனால் ஜனாதிபதியின் செயலாளரது வாய் மூலமான எந்தவித உத்தரவாதத்தினையும் ஏற்றுக்கொள்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துவிட்டார்கள்.

இறுதியில் வேறு வழியின்றி எழுத்துமூலமான உத்தரவாதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் வழங்கியுள்ளார். அதன்பின்பே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

கடந்த நல்லாட்சி காலத்தில் அதாவது 2௦17 ஆம் ஆண்டு கல்வியமைச்சினால் அரச பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டின் மூலம் வெற்றியீட்டிய 3850 விளையாட்டு வீரர்கள் நேர்முக பரீட்சை மற்றும் செயல்முறை பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் இவ்வாண்டு ஜூலை மாதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தது. இருந்தும், இதுவரை நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

அகிலவிறாஜ் காரியவசம் அவர்கள் கல்வியமைச்சராக இருந்த போது இது சம்பந்தமாக பல முறை கோரிக்கைகளை முன்வைத்திருந்தும் அவர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தபின்பே நியமனங்களை வழங்கமுடியும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





Read more...

Tuesday, December 4, 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மஹிந்தர் மேன்முறையீடு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் அமைச்சு பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமனறத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இடைக்கால உத்தரவானது அரசியல் அமைப்பிற்கு முரணானது என சுட்டிக்காட்டியதோடு இவ்வாறான தீர்ப்பளிக்க மேன்முறையீட்டு நீதி மன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இம் மனுவில் இலங்கை தமிழரசுக கட்சிய, ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்தோடு அவர் நாட்டின் ஸ்திரமான அரசியல் சூழ்நிலைக்கு பொதுதேர்தல் ஒன்றின் போது மக்கள் மத்தியில் வெற்றியினை ஈட்டி கொடுக்கும் வகிபங்கு ஊடகத்திடமே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்

Read more...

புலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண். இன்னும்மோர் யுத்தம் வேண்டாம். முன்னாள் புலிகள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி.

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை கைவிடுவீர் என்ற கோரிக்கையுடனும் முன்னாள் புலிகள் பெரும் பேரணி ஒன்றை கிளிநொச்சியில் நிகழ்த்தினர்.

வவுனதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் இப்பேரணி இடம்பெற்றுள்ளது. கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பித்து பொதுச் சந்தை வரை இடம்பெற்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளுடன் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டு யுத்தத்திற்கான எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையானது புலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண்ணை தூவும் விடயமாக பார்க்கப்படுகின்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம். இதற்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தில் பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். அவ்வாறு இடம்பெற்ற யுத்தத்தில் நாம் எதையும் சாதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்ள சமாதானமான சூழலை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் தமது சுய அரசியல் இலாபத்திற்காக இவ்வாறு சிலரால் திட்டமிட்டு நாட்டில் சமாதானமற்ற சூழலை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில்தான் மட்டக்களப்பில் பொலிசார் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் முன்னாள் போராளிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் நாமும் முன்னாள் போராளிகள்தான். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் சமாதானமற்ற சூழலை ஏற்படுத்த முயற்சிக்க மாட்டோம்.

புனர்வாழ்வு பெற்று வந்த எம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏனைய முன்னாள் போராளிகளிற்கும் இவ்வாறு வேலை வாய்ப்புக்களை வழங்கும் பட்சத்தில் அவர்களும் தமக்கான வாழ்வாதாரத்தினை முன்னெடுப்பார்கள்.

குறித்த சூழ்நிலையை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் முன்னாள் போராளிகள் ஒரு சிலரிற்கு பணம் கொடுத்து இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது எனவும் தெரிவித்தனர்.






Read more...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதிவாசிகளின் தலைவரின் அறிவுறுத்தல் கேளீர்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக செயற்படமுடியாவிடின் 2கோடி மக்கள் தொகையுள்ள இந்நாட்டினை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வது சிக்கலான விடயமாக இருக்கும் என கண்டியில் நடைப்பெற்ற தேசிய இயக்க பேச்சுவார்தையின் போது ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரீ வன்னிலஎத்தோ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற அமைச்சர்கள் கட்சி மாறிக் கொண்டும் பாராளுமன்றத்தில் கலவரங்களில் ஈடுபாட்டு கொண்டும் இருக்கிறார்களே ஒழிய மக்களின் சுபீடச்சத்தை பற்றி எண்ணுவார்கள் இல்லை.மேலும் அவர் குறிப்பிடுகையில் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை தீர்க்க தேர்தல் ஒன்றே சிறந்த வழி என வன்னிலஎத்தோ கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில் நாட்டின் இன்றைய சூழ்நிலையானது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த காலங்களில் நடைபெறாத அரசியல் நடத்தைகளே இப்பொழுது நடைபெறுகின்றது. பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களின் தீர்மானம் 2கோடி மக்களின் அபிவிருத்தியை தீர்மானிக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர்கள் பொறுப்பானவர்களாக சிந்தித்தல் வேண்டும். இச்சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருதல் அத்தியவசியமான ஒன்றாகும். தேர்தல் ஒன்றே சிறந்த வழியாகும் என நான் நம்புகின்றேன்.

எங்கள் சார்பாகவும் ஒரு பிரதிநிதி அரசியல் களத்தில் உள்ள நிலையில் இன்றைய சூழ்நிலையில் அவரும் கட்சி மாறிவிடுவாரோ என்ற அச்சம் தோன்றியுள்ளது என அவர்குறிப்பிட்டார்.

மேலும் அநுராதபுரத இலங்கை பௌத்த பிக்குகள் பல்கலைக்கழகத்தில் முன்னால் வேந்தர் தும்முல்ல சீலக்கந்த தேரர் கருத்து வெளியீடுகையில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் அராஜகமும் தலைதூக்கியுள்ளது. இவற்றையெல்லாம் மக்கள் அவதானித்த வண்ணம் உள்ளனர். அரசியல்வாதிகளும் கட்சி தாவிக் கொண்டிருக்கினறனர். மக்களுக்கு முன் உதாரணமாக அவர்கள் செயற்படுவதாக தெரியவில்லை.இவற்றை கருத்தில் கொண்டு உறுதியான தீர்மானத்திற்க வருவதே சிறந்தது என குறிப்பிட்டார்.

Read more...

செல்வம் அடைக்கலநாதன் பதவியிலும், கோடீஸ்வரன் ஒப்பந்த பணத்திலுமே அக்கறையாக உள்ளனராம். கணேஸ் வேலாயும்.

நாடும் மக்களும் எந்ந நிலைக்குச் சென்றாலும் பரவாயில்லை தனக்கு குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் அதற்குரிய சலுகைகளும் கிடைத்தால் போதும் என்ற மனநிலையுடன் செல்வம் அடைக்கலநாதன் இருக்கின்றார் எனக் கூறியுள்ள ரெலோவின் முன்னாள் முக்கியஸ்தர் கணேஸ் வேலாயுதம் மறுபுறத்தில் கோடீஸ்வரன் ஒப்பந்தம் செய்வதிலும் அரசிடம் தேங்கியுள்ள நான்கு கோடி ரூபாய் ஒப்பந்தப் பணத்தை பெறுவதிலுமே குறியாக இருக்கின்றார் எனக் குற்றஞ்சாடியுள்ளார்.

இன்றைய சூழலில் செல்வம் அடைக்கலநாதனிற்கு நல்லாட்சி அரசில் சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து, உடைகள் அனைத்தும் இலவசம் என்று குறிப்பிடும் கணேஸ் வேலாயுதம், அவர் வகிக்கும் பதவியின் ஊடாக 30க்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் அக்கருமத்தினை செய்யாமால், கிறிஸ்தவ மத குரு போன்று வெள்ளை உடையில் வலம் வருவதால் எதுவும் சாதிக்க முடியாது என்றும் சாடியுள்ளார் அவர்.


இதே நேரம் ரணில் விக்கிரமசிங்கவை தலைவராக்க கோரிய சத்தியக்கடதாசியில் நிபந்தனைகள் இன்றி செல்வம் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் கையொப்பம் இட்டது தொடர்பில் ரெலோ அமைப்பினர் தமது அதிருப்தியை தெரியப்படுத்தியுள்ளனர். நேற்று இடம்பெற்ற ரெலோ ஒன்று கூடலின்போது இது தொடர்பான காரசாரமான கருத்தாடல்கள் நிகழ்ந்ததாக அறியமுடிகின்றது.

Read more...

ஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து அட்டகாசம். STF வரவழைக்கப்பட்டது.

ரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பலவந்தமாக கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்துள்ள இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

கூட்டுத்தாபனத்தின் தலைவரோ பொறுப்புவாய்ந்த அதிகாரரிகளோ இல்லாத நேரத்தில் இவர்கள் நுழைந்ததால் அங்கு பதட்டநிலை உருவாகியுள்ளது. அதை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அரசு ஒன்று இல்லாத நிலையிலும் அதிகாரிகளுக்கு சரியான அறிவுறுத்தல்கள் இல்லாத நிலையிலும் இவ்வாறு அரசியல்வாதிகள் நுழைந்து சிக்கல்களை உருவாக்குவது கட்சிபேதங்கள் இன்றி கண்டிக்கத்தக்கதாகும்.

குறிந்த நிறுவனங்களின் தலைவர்கள் பக்கசார்பாக நடந்துகொள்வாகளாயின் அது தொடர்பில் எழுத்துமூலமாக தெரியப்படுத்தி நிலைமையை சீர்செய்துகொள்வதே இத்தருணத்தில் பொருத்தமானதாகும்.

Read more...

நாட்டில் அமைச்சுகளுக்கு செயலாளர்கள் இருக்கின்றார்களா? - வை எல் எஸ் ஹமீட்

பிரதமர், அமைச்சர்கள் இல்லாத சூழ்நிலையில் அமைச்சின் செயலாளர்கள் முழுமையாக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செயலாளர்கள் செயற்படமுதல் அமைச்சுகளுக்கு செயலாளர்கள் இருக்கின்றார்களா? என்பதில் தெளிவுவேண்டும்.

அரசியலமைப்பின் சரத்து 52(3) இன் பிரகாரம் அமைச்சரவை கலைகின்றபோது அமைச்சுச் செயலாளர்களும் பதவியிழந்துவிடுவார்கள்.

கடந்த 14ம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதோடு அமைச்சரவை கலைந்துவிட்டது; தற்போது பிரதமரோ, அமைச்சர்களோ இல்லை. எல்லோரும் பா உ களே! என்று சபாநாயகர் 15/11/2018 இல் பாராளுமன்றில் அறிவித்தார்.

அப்பொழுது அமைச்சரவை கலைந்தால் அந்த நிமிடமே செயலாளர்களும் பதவி இழந்துவிடுவார்கள். ஆனால் மஹிந்த தரப்பினர் தாமே தொடர்ந்தும் அரசாங்கம் என அடம்புடித்தனர். செயலாளர்களும் தொடர்ந்தனர். அதன்பொருள் செயலாளர்களும் அவர்களை அரசாங்கமாக ஏற்றுக்கொண்டார்கள்; என்பதாகும்.

தற்போது நீதிமன்ற இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து அரசாங்கம் இல்லை. எனவே அதன்பொருள் செயலாளர்களும் இல்லையென்பதாகும்.

நீதிமன்றின் இறுதித்தீர்ப்பு கடந்த 14ம் திகதியிலிருந்து மஹிந்த தரப்பினர் சட்டவிரோதமான அரசாங்கமாகவே செயற்பட்டனர்; என்று வந்தால் செயலாளர்களும் சட்டவிரோதமாக செயற்பட்டதாக பொருள்படும். அந்தக்காலப்பகுதியில் அவர்கள் செலவழித்த பணம், செயற்பாடுகள் அனைத்தும் சட்டவிரோதமாகும். இதனால் அவர்களுக்கு பல பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

எது எவ்வாறிருந்தபோதிலும் தற்போது அரசாங்கம் இல்லாத நிலையில் செயலாளர்களும் இருக்கமுடியாது. எனவே எவ்வாறு செயலாளர்கள் செயற்பட ஜனாதிபதி உத்தரவு வழங்குவது? எவ்வாறு செயலாளர்கள் செயற்படுவது?

“ அமைச்சரவை கலைந்தால்தான் செயலாளர்கள் பதவியிழப்பார்கள். இங்கு அவர்களுக்கு தடையே தவிர நீதிமன்றம் அமைச்சரவையை கலைக்கவில்லை” என்ற ஒரு செயற்கையான வாதத்தை இவர்கள் முன்வைத்தாலும் வைக்கலாம்.

அமைச்சரவை கலைதல் என்பது அமைச்சரவை இல்லாமல் போதல் என்பதாகும். நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து அமைச்சரவை கலைந்துவிட்டது. இவர்கள் பிரதமரோ, அமைச்சர்களோ இல்லை; என்பதுதான் வழக்கின் அடிப்படையாகும்.

இவர்கள் இப்போது பிரமரோ அமைச்சர்களோ இல்லை. எனவே அமைச்சரவை இல்லை என்றால் செயலாளர்கள் இருக்கமுடியுமா?

எனவே, மைத்திரியின் தொடர் செயற்பாட்டினால் நாளை செயலாளர்கள் வீண்பிரச்சினைக்குள் மாட்டப்போகிறார்கள்.

தற்போது நாட்டில் பிரதமரும் இல்லை. அமைச்சர்களும் இல்லை. அமைச்சுச் செயலாளர்களும் இல்லை.

Read more...

பிறக்கப்போகும் பயங்கரவாத குழந்தைக்கு தகப்பன் ஐக்கிய தேசியக் கட்சி. ரோஹித்த அபயகுணவர்த்தன

2009 மே மாதத்திலிருந்து 2015 ஜனவரி 9 ம் திகதி வரை இந்நாட்டில் ஒரு பட்டாசு கூட வெடிக்கவைக்க தமது அரசாங்கம் இடமளித்திருக்கவில்லை என தெரிவித்துள்ள களுத்துறை மாவட்ட ஐ.ம.சு.முன்னணியின் பா.உ ரோஹித்த அபயகுணவர்த்தன 2015 ஜனவரி 9 பின்னர் ஆவா விலிருந்து எத்தனையே குழுக்கள் உருவாகியுள்ளதாகவும் அதனால் இந்நாட்டில் பிறக்கப்போகும் பயங்கரவாத குழந்தையின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் தகப்பன் பெயர் ஐக்கிய தேசியக் கட்சி என்று வைக்க வேண்டும்span என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபாகரனால் ஆயுதத்தை கொண்டு செய்து கொள்ள முடியாது போனதை இன்று சுமத்திரன் பேனாவை கொண்டு நிறைவேற்றுவதாகவும் கூறினார்.

Read more...

மைத்திரிபால உடனடியாக வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறவேண்டும். அனுரகுமார

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பாராளுமன்றை கலைத்ததான , பிரதமரை நியமித்த , அமைச்சர்களை நியமித்த என்ற மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை உயர் நீதிமன்று இடை நிறுத்தி வைத்துள்ளது.

எனவே தற்போது ஜனாதிபதி செய்யவேண்டியது யாதெனில் உடனடியாக மேற்படி வர்த்தமான அறிவித்தல்களை வாபஸ் பெற்று பெரும்பாண்மை இருக்கின்ற ஒரு தரப்பிடம் அரசாங்கத்தை பாரமளிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் தோழ்களில் கையை போட்டுக்கொண்டு நண்பர்களாக இப் பிரச்சினையை முடித்துக்கொள்வதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். இப்பிரச்சினை அரசியல் யாப்பு ரீதியாக தீர்க்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more...

நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டு உயிரைக் காத்துக்கொள்ளுங்கள். ஜனாதிபதிக்கு டலஸ்

நேற்று உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவைக்கான இடைக்கால தடையுத்தரவை அடுத்து நாட்டில் பிரதம மந்திரியோ அமைச்சரவையோ அற்ற நிலை காணப்படுகின்றது.

அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் நாட்டின் பொறுப்பை பிரதம மந்திரி ஏற்பார். ஆனால் இன்று நாட்டில் பிரத மந்திரி ஒருவர் இல்லை. இந்நிலையில், ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஒன்று ஏற்படுமானால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தனது பாதுகாப்பில் அதி உச்ச கவனம் செலுத்தவேண்டும் என வேண்டியுள்ளார்.

Read more...

Monday, December 3, 2018

சமாதானத்தை மீற இடமளியாதீர்! கிளிநொச்சியில் சுவரொட்டிகள்.

வவுனதீவுப் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் வன்னியிலிருந்து சென்றவர்கள் தொடர்பு பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலும் , விஸ்வமடு, வட்டக்கச்சி என பல இடங்களில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது

குறித்த சுவரொட்டிகளில்

நாட்டின் சமாதானத்தை மீறுவோர்கள் நாட்டின் துரோகிகள்

பாதாள மற்றும் வன்முறைக் காரருக்கு இடமளிக்க வேண்டாம்

சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒன்று சேருங்கள்

சமாதானத்தை மீற இடமளிக்க வேண்டாம்


என்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது

இச் சுவரொட்டிகள் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

30 வருடகால யுத்தத்தை அனுபவித்த மக்கள் அதிலிருந்து மீண்டு மீண்டும் ஒரு யுத்தத்திற்குள செல்ல விரும்பவில்லை என்பதை குறித்த சுவரொட்டிகள் எடுத்துரைக்கின்றது.





Read more...

ஜனாதிபதி- ஐ.தே. முன்னணியிடையேயான பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.

இன்று பிற்பகல் 8.00 மணியளவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் ஜனாதிபதிக்குமிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஜனாதிபதியை சந்தித்த ஐ.தே.முன்னணியினர் ரணில் விக்கரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரியபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து லக்ஸ்மன் கிரியல்ல, நாம் எமது முன்னணியின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்களை நியமிக்குமாறு வேண்டினோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். பிரதமராக பெரும்பாண்மையானோர் யாரை விரும்புகின்றார்களே அவரையே ஜனாதிபதியால் நியமிக்க முடியும். ஜனாதிபதி விரும்புகின்றவரை அல்ல என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மிகக்குறுகியே நேரத்திலேயே நிறைவு பெற்றுள்ளமை அவதானிக்க முடிந்துள்ளது.

அதேநேரம் இன்றைய சந்திப்பு வெற்றியளிக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை சந்திக்கப்போவதில்லை என முன்னணி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

நாளையிலிருந்து கம்பி எண்ண உள்ளவர்கள் யார் தெரியுமா?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சர்களுக்கும் எதிராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது சகாக்களும் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்று பிரதம மந்திரியாகவும் அமைச்சர்களாகவும் செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.

இத்தடையுத்தரவை அடுத்து பெரும்பாலான அமைச்சர்கள் இன்று பிற்பகலே தமது பெட்டிகளை அங்கிருந்து கட்டிக்கொண்டு வெளியேறியதாக அறிய முடிகின்றது. இருந்தபோதும் ஒரு சில அமைச்சர்கள் இன்று இரவுவரை அமைச்சுக்களில் தங்கியிருப்பதை அவதானித்த எதிராளிகள் அது தொடர்பான வீடியோக்களை பதிவு செய்துவருவதாகவும் தொடர்ந்தும் அவர்கள் அமைச்சகத்தினுள் சென்று செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியதாக வழக்குதாக்கல் செய்யலாம் என்றும் நம்பப்படுகின்றது.

Read more...

ஆழும் கட்சிக்கு ஆதரவளிப்பதென்றால் எதிர்கட்சி பதவியை துறவுங்கள். வாசு ஆவேசம்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியாயின் அவர்கள் எதிர்க்கட்சி பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரளிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பொறுப்பை வகிக்கும் கட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவளிப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களிலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தீர்மானங்களை ஆதரித்தே வந்துள்ளது.

Read more...

பொட்டு அம்மான் இறந்துவிட்டாராம், கருணா சொல்வது பொய்யாம். துளசி

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் புரளியை கிளப்பிக்கொண்டிருக்கின்றார் புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை இராணுவத் தளபதியாகவிருந்து பின்னர் அரசின் பக்கம் சாய்ந்து கொண்ட கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.

கடந்தவாரம் அவர் ட்விட்டரில் இட்டபதிவு ஒன்றில் பொட்டு அம்மான் எனப்படும் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் நாட்டைவிட்டு தப்பியோடி நோர்வேயில் பகுங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்து பல்வேறு சர்சைகளை கிளப்பியிருந்த நிலையில், பொட்டு இறந்தவிட்டதாக ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள வவுனியா ஊடகமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர்,

தற்போது நாட்டில்; ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க பலர் முனைகின்றார்கள். இன்று பொட்டம்மானை கொண்டுவந்திருக்கிறார்கள் இனிவரும் காலங்களிலே தளபதிகளான பால்றாஜ், கிட்டு, செல்லகிளி போன்றவர்களையும் கொண்டுவரக் கூடியவாய்புகள் இருக்கிறது.;.

தற்போது புலம்பெயர் தேசத்திலே இருக்ககூடிய காகித புலிகள் தலைமைசெயலகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், என்ற பெயர்களில் இயங்கிவருகிறார்கள். தலைமைசெயலகம் என்பது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கைவேலியில் மாத்திரமே இருந்தது. வெளிநாடுகளில் அதனை நிறுவச்சொல்லி எமது தலைவர் ஒருபோதும் கூறவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது கட்டமைப்புகளை கலைத்துவிட்டு இங்கு வருகைதந்து மக்களிற்கு தேவையான விடயங்களை செய்யுமாறுகேட்டுகொள்கிறோம்' என க.துளசி பகிரங்கவேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை தமிழர்களின் பேரம்பேசும் சக்தியாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நீண்டகாலமாக சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற திட்டங்களை தாம்வழங்கியிருப்பதாகவும் கூறிய துளசி, அவர்களின் விடுதலைதொடர்பாக ஓரிரு தினங்களில் கூடடமைப்பின் தலைவர் சம்பந்தன் முக்கியமான செய்தியைவெளியிடுவார் என்று தாங்கள் எதிர்பார்கிறோம்' என்றும் கூறியுள்ளார்.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com