Monday, December 3, 2018

ஆறடிக்குள் மஹிந்த தன்னை குடும்பத்துடன் புதைப்பார் என்றது தேர்தல் மேடைக்கதையாம்! மைத்திரி நீண்ட செவ்வி

கடந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஆறடி குழிக்குள் தள்ளி இருப்பார் எனக் கூறியது அரசியல் ரீதியில் பிரசாரக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தவிர அதில் எந்த உண்மையும் இல்லை.

என்னைக் கொல்வதற்கு ராஜபக்ஷ முயற்சித்தமைக்கான எந்த அறிக்கையும் இல்லை. அது அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அரசியல் மேடைகளிலேயே அதனைக் கூறினேன் என சிரித்தவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய கேள்விகளும் பதில்களும் வருமாறு:

கேள்வி: உங்களுடைய செயற்பாட்டால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது?

பதில்: அப்படி ஒன்றும் இல்லை. நாடு அராஜக நிலைமைக்கு செல்லவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. வன்முறைகளோ, பிரச்சினைகளோ இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

கேள்வி: நீங்கள் அப்படிf் கூறினாலும் ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த முடிவை பெரும்பாலான மக்கள் விமர்சிக்கின்றார்களே?

பதில்: அப்படியானால் ரணில் விக்கிரமசிங்க நாட்டை அழிப்பதற்கு நான் இடமளித்திருக்கவேண்டுமா? இவர்களின் ஊழல்களைப் பார்த்துக்கொண்டு நான் குருட்டுத்தனமாக இருந்திருக்கவேண்டும் என்கிறீர்களாக நான் அந்த விடயங்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன். எனக்கும் ரணிலுக்குமிடையில் பிரச்சினைகள் இருந்தது ரகசியமானதல்ல. கடந்த மூன்று வருடங்களாக பல ஆரோக்கியமற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. சதித்திட்டங்கள், ஊழல்கள் இடம்பெற்றன. இந்த அரசியல் குழப்பத்தை ரணில் விக்கிரமசிங்கவே ஏற்படுத்தினார். நான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றியிருக்கின்றேன்.

கேள்வி: மூன்றரை வருடங்கள் கடக்காமல் இதற்கு முன்னரே நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?

பதில்: நான் பொறுமைகாத்து வந்தேன். ஐ.தே.க. முன்னணிக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன். என்னுடைய அதிகாரங்களையும் விட்டுக்கொடுத்தேன். ஆனால் அவர் (ரணில்) என்னுடைய அதிகாரங்களையும் பயன்படுத்தினார்.

கேள்வி: உங்கள் அதிகாரங்களை விட்டுக்கொடுத்ததை நினைத்து கவலை அடைகிறீர்களா?

பதில்: இல்லை. ஆனால் யாரிடம் அதிகாரங்கள் செல்கின்றன என்பதை பார்க்கவேண்டும்.

கேள்வி: உங்களின் இந்த முடிவுக்கு உடனடி காரணம் என்ன?

பதில்: எனக்கெதிரான கொலை சதி முயற்சி,

கேள்வி: நீங்களும் கோத்தபாயவும் இணைந்து செயற்பட்டதால் உங்களை கொல்ல சதி செய்யப்பட்டதாக நாமல் குமார கூறினார். அவ்வாறான பேச்சுக்கள் ஏதும் இடம்பெற்றதா?

பதில்: அதனை நீங்கள் நாமல் குமாரவிடம்தான் கேட்கவேண்டும்.

கேள்வி: ஆனால் மக்கள் இதனைத்தான் கூறுகின்றனர். உங்களை கொல்வதற்கான சதி உண்மையெனில் கதையின் மறுபக்கமும் வெளிவரவேண்டுமல்லவா?

பதில்: அது தொடர்பில் எனக்குத் தெரியாது. நாமல் குமாரதான் அதனைக் கூறியிருக்கின்றார். அதனால் அவரிடமே விளக்கம் கேட்கவேண்டும்.

கேள்வி: இது தொடர்பான விசாரணையில் நீங்கள் திருப்தி அடையவில்லையா?

பதில்: ஆம், நான் முழுமையாக விசாரணை தொடர்பில் அதிருப்தியடைந்தேன்.

கேள்வி: விசாரணைகளை யார் தடுத்தார்கள்?

பதில்: சம்பந்தப்பட்டவர்கள்தான், அதனால்தான் அவர்களை பதவி நீக்கினேன். இவ்வாறான நிலைமைகளே இதற்கு காரணமாகின.

கேள்வி: நீங்கள் பொலிஸ்மா அதிபரை குற்றம்சாட்டுகின்றீர்களா?


பதில்: ஆம். அவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன. தற்போது அவரும் விசாரிக்கப்பட்டுள்ளார். விசாரணை முடிவதற்கு முன்னர் அதுதொடர்பில் அவர் எப்படி முடிவுக்கு வரமுடியும்.

கேள்வி: சி.ஐ.டி. அதிகாரி நிசாந்த சில்வாவின் மாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்ட இரண்டு கடிதங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: ஆம். இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும். அவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: முதலில் ரணிலை நீக்கி மஹிந்தவை பிரதமராக நியமித்தீர்கள், பின்னர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தீரகள், இறுதியாக கலைத்தீர்கள் சற்று விளக்க முடியுமா?

பதில்: புதிய அரசாங்கம் வரவு, செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காகவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஏனைய கட்சி பாராளுமன்றத்தில் பிரேரணைகளை சமர்ப்பிக்க முற்பட்டன. இந்த நிலையில் பாராளுமன்றம் செல்ல முடியாது. அதனால் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

கேள்வி: எனினும் உங்களது அரசாங்கத்தால் பெரும்பான்மையை காட்ட முடியாதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்: அவர்களிடம் பெரும்பான்மை பலத்தை முறையாக காட்டுமாறு கோரியிருக்கின்றேன். முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நான் அரசியலமைப்பை மீறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி: சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டுகின்றது. நீங்களும் அதனை கூறுகின்றீர்களா?

பதில்: இல்லை நான் அவரை விமர்சிக்கவில்லை. அது தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும்.

கேள்வி: அப்படியானால் சபாநாயகர் தொடர்பில் உங்களிடம் முறைப்பாடு இல்லை.

பதில்: என்னுடைய கருத்தின்படி 14 ஆம் திகதி சபாநாயகரினால் நிலையியல் கட்டளைகள் முறையாக பின்பற்றப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது.

கேள்வி: சபாநாயகர் நிலையில் கட்டளைகளை மீறுவதாக ஆளும்கட்சி கூறுகிறது. அப்படியானால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரலாம் தானே?

பதில்: சபாநாயகர் நிலையியல் கட்டளையை மீறவில்லை. வாக்கெடுப்பானது மூன்று முறைகளில் நடத்தலாம். தற்போது அவர்கள் அதனை செய்கிறார்கள்.

கேள்வி: நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றால் மஹிந்த தீர்மானம் எடுப்பார் எனக் கூறியிருந்தீர்கள், அதன் மூலம் நீங்கள் அர்த்தப்படுத்தியது என்ன?

பதில்: பெரும்பான்மையை காட்டும் தரப்பிற்கு அரசாங்கம் அமைக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். அதுதான் அரசியலமைப்புக்குட்பட்ட நடவடிக்கையாகும்.

கேள்வி: அப்படியானால் மஹிந்த பதவி விலகுவாரா?

பதில்: அந்த முடிவைய அவர்தான் எடுக்கவேண்டும். முதலில் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும். அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிடின் பெரும்பான்மையைக் காட்டும் தரப்பிற்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவேண்டும். அது ஜனநாயக மரபுமட்டுமல்ல. அரசியலமைப்பு ரீதியானது.

கேள்வி: மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: அப்படி நடந்தால் எவ்வாறு பணியாற்றுவது என்று அவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவேன்.

கேள்வி: ஆனால் ரணிலுடன் பணியாற்றமாட்டேன் என்று கூறியிருக்கின்றீர்களே?

பதில்: அதனை நான் முன்னர் கூறினேன், தற்போதும் கூறுகிறேன், எதிர்காலத்திலும் கூறுவேன். ரணில் விக்கிரமசிங்கவுடன் பணியாற்ற முடியாது.

கேள்வி: ஐ.தே.மு. பெரும்பான்மையை நிரூபித்து ரணிலைத்தான் பிரதமராக்கவேண்டும் என்றால் என்ற செய்வீர்கள்?


பதில்: ஒரு தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்கின்றது என்பதற்காக குறிப்பிட்ட ஒருவரைத்தான் பிரதமாரக்கவேண்டும் என்று ஏற்பாடுகள் எதுவும் இல்லை. பிரதமராகப் போகின்றவர் ஜனாதிபதியின் இணக்கத்தையும் பெறவேண்டும்.

கேள்வி: உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை இதில் காட்டுவதுசரியா?

பதில்: நான் தனிப்பட்ட பிரச்சினைகளை கையாள்வதாக கூறுவபவர் ஒரு முட்டாளாகவே இருக்கவேண்டும்? ரணிலின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கை இலங்கைக்கு பொருந்தாது. அவர் உள்நாட்டு கைத்தொழில், விவசாயம் என்பவற்றை கவனத்தில் கொள்ளமாட்டார். வெளிநாட்டவர்களுடனான காணிக்கொடுக்கல் வாங்கல்கள் ஊழல்மிக்கவையாகவே உள்ளன.

கேள்வி: கருவும் சஜித்தும் உங்கள் மேல் நம்பிக்கையில்லாதன் காரணமாகவே பிரதமர் வாய்ப்பை மறுத்தார்களா?

பதில்: அவர்கள் மீது ரணில் மீதுள்ள பயத்தினாலேயே மறுத்தார்கள்.

கேள்வி: இந்த நிலைமை நீடித்து உங்களால் பிரதமரை நியமிக்க முடியாவிடின் இந்த நாட்டுக்கு என்னநடக்கும்?

பதில்: இந்த நிலைமைகள் விரைவில் சீராகிவிடும். யாரும் இதுதொடர்பில் கவலையடையவேண்டாம்.

கேள்வி: கருவும் சஜித்தும் மறுத்ததால் மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தீர்கள், அது சரியான முடிவா?

பதில்: காரணம் வேறுயாரும் இருக்கவில்லை.

கேள்வி: உங்கள் உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக நீங்கள் கூறிவந்தீர்கள், அப்படி குற்றம்சாட்டிய ஒருவரை நீங்கள் பிரதமராக நியமித்துள்ளீர்களே?

பதில்: அது அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அரசியல் மேடைகளிலேயே அதனைக் கூறினேன். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது பாரிய சதி

கேள்வி: கடந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ஆறடி குழிக்குள் இருந்திருப்பீர்கள் என்று கூறியிருந்தீர்களே?


பதில்: என்னைக் கொல்வதற்கு ராஜபக்ஷ முயற்சித்தமைக்கான எந்த அறிக்கையும் இல்லை. அவை அரசியல் ரீதியில் பிரசாரக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்.

கேள்வி: மஹிந்தவை பிரதமராக நியமிக்க எவ்வளவு காலம் சிந்தித்தீர்கள்?

பதில்: இரண்டு வாரங்கள்

கேள்வி: மஹிந்தவுடன் சிறப்பாக வேலைசெய்ய முடியும் எனக் கருதுகின்றீர்களா?

பதில்: அதனை தற்போது கூற முடியாது. திருமணம் தொடங்கும் போது அது எப்படியிருக்கும் என்று கூற முடியாது. திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்றபின்னரே அந்த வாழ்க்கை குறித்து கூற முடியும்.

கேள்வி: நீங்கள் அனைத்து விடயங்களையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றீர்களா?

பதில்: நான் எதற்கும் பதற்றம் அடைவதில்லை. நாட்டில் அராஜகமும் இல்லை. வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. பிள்ளைகள் பாடசாலை செல்கின்றார்கள். மக்கள் தமது தொழில்களை செய்கின்றார்கள். அமைச்சுக்கள் தொழில் பெறுகின்றன. மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றார்கள். அப்படியானால் அராஜகம் எங்கே இருக்கிறது.

கேள்வி: எனினும் சர்வதேச ரீதியில் நன்மதிப்பு இழக்கப்படுகின்றதா? இதுவரை எந்தநாடும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. எந்தவொரு வெளிநாட்டு பிரதமரை சந்திக்கவில்லையே?

பதில்: அது ஒரு தவறான கருத்து. அதிகமான வெளிநாட்டு தூதுவர்களை நான் சந்தித்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் 70 இராஜதந்திரிகளை சந்தித்தேன். ஐ.நா. பிரதிநிதியையும் சந்தித்தேன். நாம் தனிமைப்படுத்தப்படவில்லை.

கேள்வி: நான் உங்களை கூறவில்லை. உங்களால் நியமிக்கப்பட்ட பிரதமரை யாரும் சந்திக்கவில்லையே?

பதில்: காலப்போக்கில் அது சரியாகிவிடும். இந்த விடயங்கள் பாராளுமன்ற குழப்பங்கள் எல்லாம் பல நாடுகளில் இடம்பெறுகின்றன. இது இலங்கையில் மட்டும் இடம்பெறவில்லை. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யாவைப் பாருங்கள். அங்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

கேள்வி: நீங்கள் செய்த விடயங்களுக்காக மக்கள் ஆணையைப் பெறுவதற்காக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தலாமே?

பதில் : எனக்கு இன்னும் ஒருவருடம் இருக்கும்போது நான் ஏன் முட்டாள்தனமான முடிவை எடுக்கவேண்டும். ஜனாதிபதி தேர்தல் உடனடியாக ஒருபோதும் நடத்தப்படமாட்டாது.

கேள்வி: அடுத்தவருடத்திற்கான பட்ஜட் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. மக்கள் எப்படி இயல்பு வாழ்க்கையை வாழ முடியும்.


பதில்: அதுதொடர்பில் கவலை வேண்டாம். டிசம்பர் 31 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அனைத்துப் பிரச்சினைகளும் இந்த மாத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும்.

கேள்வி: . இந்த நாட்டின் உயர் இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். முப்படைகளின் தளபதி என்ற வகையில் என்ன செய்யப்போகின்றீர்கள்?

பதில்: இது நீதிமன்றம் முன்வைத்துள்ள விடயம் நான் ஒன்றும் கூறக்கூடாது.

கேள்வி: அவர் இன்னும் இந்தப் பதவியை வகிக்க முடியுமா?

பதில்: அவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும். நீதிமன்ற முடிவின் அடிப்படையிலேயே எனது முடிவுகள் இருக்கும்.

கேள்வி: உங்களுக்கு எதிரான கொலை சதி விவகாரத்தில் சரத் பொன்சேகா உங்களை விமர்சித்து பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: நான் பொன்சேகா போன்று செயற்பட முடியாது. விசாரணைகள் இடம்பெறுகின்றன. தேவையானால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி: 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்.

பதில்: அந்த நாள் வரும்போது என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.

கேள்வி: நீங்கள் செய்வதற்கு அதிக பணிகள் இருப்பதாக முன்னர் கூறியிருந்தீர்களே ?

பதில்: ஆம் செய்வதற்கு இன்னும் பல பணிகள் உள்ளன.

கேள்வி: பாராளுமன்ற கலைப்பு குறித்த வர்த்தமானியை மீளப்பெறப்போகின்றீர்களா?

பதில்: அதனை என்னால் செய்ய முடியுமா என்று விசாரிக்கவில்லை.

கேள்வி: உங்கள் தரப்பிற்கு பெரும்பான்மை இருப்பதாக கூறப்பட்டது. அந்த பெரும்பான்மைக்கு என்ன நடந்தது.?

பதில்: அதனை நீங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.

கேள்வி: யார் அவர்கள்?

பதில்: இது ஒரு குழுவாக பேசப்பட்ட விடயம். ராஜபக்ஷ தரப்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியது.

கேள்வி; உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவார்களா?


பதில்: அப்படி ஒரு எண்ணம் இல்லை. யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை.

கேள்வி: ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரப்படுகின்றது? அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில் நான் அதுதொடர்பான கோரிக்கையை பெற்றிருக்கிறேன். அதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பியிருக்கிறேன்.

கேள்வி: துமிந்த சில்வாவிற்கும் பொது மன்னிப்புவழங்குமாறு கோரிக்கை வந்திருக்கின்றதா?

பதில்: இல்லை.

கேள்வி: அவ்வாறு கோரிக்கை வந்தால் பரிசீலிப்பீர்களா?

பதில்: எனக்கு அப்படியொரு கோரிக்கை வரவில்லை. வராமல் நான் எதுவும் கூற முடியாது.

கேள்வி: மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது.?

பதில்: அந்த விசாரணைகளை நிறுத்துமாறு ஐ.தே.க. எனக்கு அழுத்தம் கொடுத்தது. அவர்கள் இன்னும் அதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் தற்போது அழுத்தம் இல்லை. விசாரணைகள் தொடரும்.

கேள்வி: பாராளுமன்ற தேர்தல்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே முடிவா?

பதில்: ஆம். பாராளுமன்றத் தேர்தலுக்கு உடனடியாகவே செல்லவேண்டும். தேர்தல் நடந்தால் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள்.

Read more...

மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட இடைக்கால தடை உத்தரவு.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

சிறிசேன உனக்கு சொல்கின்றேன், செவ்வாய்கிழமைக்கு முன்னர் தீர்வு தராவிட்டால், தெருவுக்கு இழுத்து வீசுவேன். ஹரீன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன்னர் தீர்வொன்றை வழங்காவிட்டால், அவரை வீட்டிலிருந்து இழுத்துவந்து தெருவில் வீசுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டு கூறியுள்ளார்.

மக்கள் பேரணி ஒன்றின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து பேசுகையில்,

மக்களே நாம் இன்று மேற்கொள்ளுகின்ற போராட்டமானது இந்த நாட்டை கொண்டு செல்வதற்கான சட்டத்தை காப்பதற்கான போராட்டம். அன்புள்ள தாய்மாரே தந்தையரே நாம் இராப்பகலாக இப்போராட்டத்தை மேற்கொள்வது அதிகார மோத்தால் அல்ல. ஆனால் நாம் அதை காப்பதற்காக கதிரையில் அமர்த்திய நபர் அதை மீறும்போது நாம் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்.

நாம் இன்று தெருவழியாக வந்தபோது இதையே நாட்டு மக்களும் வேண்டுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்டோம். எனவே மக்களே இறங்குங்கள் அனைவரும் தெருவுக்கு என அழைப்பு விடுத்தார் ஹரேன் பெர்னான்டு.

Read more...

Sunday, December 2, 2018

எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி வாபஸ் பெறமாட்டாராம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் பாரளுமன்றை கலைப்பதாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பல்வேறுப்பட்ட எழுமானங்கள் கூறுப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த சந்தர்ப்பத்திலும் வாபஸ் பெறமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடனான தேசிய அரசாங்கத்தை தொடர முடியாது என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளார்.

எனினும் ஐ.தே.கவின் தொடர்ச்சியான முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான தீர்மானத்தை அறிவித்தார் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Read more...

என்ன தியாகம் செய்தார்கள்? விஜய பாஸ்கரன்

துரையப்பா கொலையின் பின்னால் பலர் கொல்லப்பட்டனர். இதில் தமிழர்கள் சந்தோசப்பட்டதும் அந்தக் கொலையாளிகளைப் போற்றியதும் உண்மை. இவர்களை அடையாளம் தெரியாமல் ,தெரிந்தும் கைது செய்ய முடியாமல் தடுமாறியதும் வரலாறு.

ஆனால் அதே அவர்களே தங்களை அழித்தார்கள். காட்டிக் கொடுத்தார்கள். இந்த வரலாற்றை மக்கள் இன்னமும் உணரவில்லை.

மட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல் என்பவரை பிரபாகரனே சமாதானமாக பேசிக்கொண்டே சுட்டுக் கொன்றார். இதே பிரபாகரன் நடவடிக்கைகள் சரியில்லை நான் விலகப் போகிறேன் என்ற பற்குணம் என்றவரை நட்பாகப் பேசிக்கொண்டிருந்தே கொலை செய்தார். ஜெயம் என்பவருக்கு பான்ரா குளிர் பானத்தில் விசம் கலந்து கொல்ல யோசனை வழங்கினார். இது தவறிப் போனது. கொடிகாமம் கண்ணாடி பத்மநாதன் எனபவரை அவரது குருவான செட்டி தனபாலன் மூலமாக கொலை செய்தார். இதே செட்டியை குட்டிமணி கொலை செய்தார். செல்லக்கிளி என்பவரை திருநெல்வேலி தாக்குதலின்போது பிரபாகரனே கொன்றதாக நம்பப்படுகிறது. மனோ மாஸ்ரர், ஒபரோய் தேவன் போன்றவர்களையும் புலிகளே கொன்றனர்.

இவர்கள் எல்லாம் யாருக்காக இறந்தார்கள்? யாருக்காக கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? மக்களுக்காகவா?

1982 இல் கந்தர்மடம் பாடசாலையில் காவலுக்கு நின்ற மூன்று இராணுவ வீரர்களைக் கொன்றார்கள். அதன் பதிலடியாக அங்கே 300 ஏழைகளின் குடிசைகள் எரிக்கப்பட்டது. அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஈழ மாணவர் பொது மன்றமும் உதவியது. புலிகள் வரவே இல்லை. இந்த தாக்குதல் மக்களுக்காகவா? இல்லை தங்கள் வீரம் பறைசாற்ற நடந்த தாக்குதல்.

1983 இல் தமது சகா சார்ள்ஸ் அன்ரனி கொலைக்குப் பழிவாங்க திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 இராணுவத்தைக் கொன்றனர். அதன் விளைவு 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் யாழ் நகரில் கொல்லப்பட்டனர். நாட்டில் இனக் கலவரம் ஏற்பட்டு நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் அகதிகளானார்கள். வெலுக்கடை சிறையில் 55 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் சுய கௌரவத்துக்காக நாடேஅழிந்தது.

இதைத் தொடர்ந்து பொலிகண்டியில் வைத்த கண்ணிவெடியின் விளைவாக 50 இற்கும் அதிகமான பொதுமக்கள் வல்வெட்டித்துறையில் பலியானார்கள். இதைப் படம் பிடித்து ரணகளம் என்ற பதிப்பாக வெளியிட்டு அனுதாபம் தேடி பணம் சம்பாதித்தனர்.

முல்லைத்தீவு, மன்னார், திரகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தாக்குதல்களை நடாத்தி தமிழ் கிராமங்களை காலிகளாக்கினார்கள். பல ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். புலிகள் எங்கே மக்களுக்காக போராடினார்கள்? மக்களைப் பாதுகாத்தார்கள்.

பொதைமக்களின் நல்ல கார்களை, வீடுகளை பலவந்தமாக பறித்து ஆடம்பரமாக உலாவந்தார்கள். மக்களுடம் நகை, பணம் எனகப்பம் கேட்டார்கள். உணவுகளைப் பறித்தார்கள் .இவர்களா மக்களுக்காக வாழ்ந்தவர்கள். போராளிகள்?

இந்திய இராணுவத்தை எதிர்க்க ஆர்பார்பாட்டம் செய்ய வருமாறு அழைத்து அந்த மக்களிடையே ஒழிந்து நின்று இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்தினார்கள். ஒரு வலிந்து சண்டையை மக்களுக்குள்ளே நின்று உருவாக்கினார்கள். மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த மோதலின் பின் பாதுகாப்புக்காக வைத்தியசாலையைத் தளமாக்கி தாக்குதல் நடாத்தினார்கள். வைத்தியசாலை, நோயாளிகள், பொது இடம் எதைப் பற்றியும் கவலைப்படாத இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள்?

இிந்திய இராணுவத்தோடு மோதமுடியாமல் நகரை விட்டே ஓடினார்கள். யாழ் பல்கலைக் கழகத்தை தளமாக்கி இந்திய இராணுவத்துடன் மோதினார்கள். வைத்தியசாலையும், பல்கலைக்கழகமும் என்னவென்று தெரியாத இவர்களுக்கா நாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டும்? இந்த நகரில் அவதிப்படும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்வதையே தடுத்தார்கள்.

மானிப்பாய் மெமோரியல் வைத்தியசாலைக்குள் இருந்து உடுவிலில் இருந்த இந்திய இராணுவ முகாம்மீது செல் தாக்குதல் நடாத்தினார்கள். இதற்குப் பதிலடியான தாக்குதலால் பல உயிர்கள் பலியாகின. வைத்தியசாலையும் சேதமடைந்தது. பல இடங்களில் துப்பாக்கி முனையில் உணவுகளைக் கொள்ளையடித்தனர். இவர்களா நமக்காக போராடினார்கள்.?

இந்திய இராணுவத்தோடு வலிகாமத்தில் மோதமுடியாமல் தோல்வி கண்டு வன்னிக் காடுகளுக்குள் ஓடி ஒழிந்த இவர்களா மாவீரர்கள்? இலங்கை இராணுவ முகாம்களில் பதுங்கி இருந்து இந்திய இராணுவத்தோடும் சக அமைப்புகளோடும் மோதிய இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக போராடினார்கள்.

பிரமேதாசாவோடு உறவாடி இராணுவ வாகனங்களில் கொழும்பு நகரில் உலா வந்தார்கள். இராணுவ உதவி பெற்று முள்ளிக்குளத்தில் புளொட் முகாம்களை தாக்கி பலரைக் கொன்றார்கள். அதே பிரேதாசாவோடு முரண்பட்டு யுத்தம தொடங்கினார்கள். திருகோணமலையில் ஒரு சில நிமிடங்களிலேயே மக்களே உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு தப்பி ஓடினார்கள். அவ்வளவு மக்கள் அக்கறை, வீரம், இவர்களுக்கு ஒரு அஞ்சலி, மரியாதை.

வடக்கில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களின் சொத்துகளை கொள்ளையடித்துவிட்டு விரட்டி அடித்தார்கள். கிழக்கிலே குழந்தைகளைக்கூட இரக்கமின்றி பள்ளிவாசல்களில் கிராமங்களில் படுகொலை செய்தார்கள். இவர்களா போராளிகள்? இவர்களா மனிதர்கள்? மிருகங்கள். இவர்களுக்கு எதுக்கு மரியாதை?

சந்திரிகா காலத்தில் இலங்கை இராணுவத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் வலிகாமத்தை விட்டே ஓடினார்கள். ஓடும்போது பல இலட்சம் மக்களை துப்பாக்கி முனையில் தென்மராட்சிக்கு கடத்தினார்கள். மக்களின் சொத்துக்களை திருடி மக்களுக்கே விற்றார்கள். தென்மராடசியில் இராணுவம் புகுந்தபோது மக்களை விட்டு இரவோடு இரவாக வன்னிக்கு ஓடினார்கள். இவர்கள் மாவீரர்கள்? மக்களுக்காக போராடியவர்கள்.

மாவிலாற்றில் வலிந்த யுத்தம் ஒன்றை உருவாக்கி மூதார் பிரதேச மக்களை ஓட வைத்தார்கள். இறுதியில் அவர்களும் முள்ளி வாய்க்கால்வரை பயந்தே ஓடினார்கள்.

எத்தனை இஸ்லாமிய மக்களை சிங்கள மக்களை ஏன் சொந்த இனத்தையே கொன்று குவித்த இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக போராடினார்கள். உயிர் விலை அருமை தெரியாமல் வாழ்ந்த இவர்கள் மனிதர்களே அல்ல.

இறுதி யுத்தத்தில் பல லட்சம் மக்களை கேடயமாக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் அஅழியக்கூடிய காரணமாக இருந்த இவர்களுக்காக கண்ணீர் சிந்துவதே கேவலம். முட்டாள்தனம்.

இிவர்கள் தம்முடைய ஆதிக்கத்தை நிறுத்தவே சண்டையிட்டார்கள், இறந்தார்கள். அதிகமான மக்களை, தமிழர்களை கொன்றதும் இவர்களே.

Read more...

பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் திணேசின் பூதவுடல் பூரண பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீடியோ

வவுனதீவுப் பிரதேசத்தில் கடமையிலிருந்தபோது கடந்த 29.11.2018 அன்று மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெரியநீலாவணை என்ற கிராமத்தை சேர்ந்த கணேஸ் டினேஸ் என்ற பொலிஸ் கொஸ்தாபலின் பூதவவுடன் இன்று முற்பகல் 10 மணியளவில் பெரியநீலாவணை பொது மயாணத்தில் பூரண பொலிஸ் மரியாததையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறுதிநிகழ்வுகளில் பொலிஸ் சம்பிரதாயப்படி உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண ஆழுநனரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நுல்லடக்க நிகழ்வின்போது இலங்கை ஜனநாயக சோசலிக குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ் மா அதிபரின் இரங்கல் உரைகள் வாசிக்கப்பட்டது.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






Read more...

தற்போதைக்கு பிரதமர் பதவியை ஏற்க மாற்டாராம் சஜித் பிறேமதாஸ

தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதான கூறியுள்ளார்.

“இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை,

ஆனால் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவின் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடும்.

எனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

வடபகுதியை அச்சுறுத்தும் 3 கிறிமினலகள் வாள்களுடன் கைது. பாறுக் ஷிஹான்

பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் 3 அடி நீளமுள்ள 7 வாள்களுடன் வெள்ளிக்கிழமை(30)இரவு சுன்னாகம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

அண்மையில் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்கப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபர்கள் மூவருக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் கைதான சந்தேகநபர்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கடந்த சில தினங்களால் 20 இற்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆவா குழுவைச் சேர்ந்த இம் மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவரும் கொக்குவிலை பகுதியை சேர்ந்த 24 வயதுக்குட்பட்டவர்களாவர்.கைதானவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆவா குழுவின் தலைவர் எனப் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட மோகன் அசோக் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Read more...

Saturday, December 1, 2018

அர்ஜூன மகேந்திரன் புலிகளுக்கு வரி அறவிடாது கொள்கலன்களை அனுப்பினாராம். திவய்ன

மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜூன மகேந்திரன் இலங்கை முதலீட்டு சங்கத்தில் தலைவராக செயற்பட்ட போது அவரினால் முன்னெடுக்கப்பட்ட ஊழல் வெளிப்பட்டடுள்ளது. எவ்வித வரி அறவீடும் சோதனையும் இன்றி பல கொள்கலன்களை எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்காக வன்னி பகுதிக்கு கொண்டு செல்ல இவரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன என திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னி விடுவிக்கப்பட்டவுடன் இது தொடர்பான தகவல்கள் வெளிவந்த விசாரணைகளை ஆரம்பமாகியிருந்தபோதும், குறித்த காலத்தின் பின் மழுங்கடிகப்பட்டுள்ளன. நோர்வே அரசினால் வழங்கப்பட்ட வானொலி தொடர்பாடல் அலைவரிசைக்கு தேவையான இணைப்பு கருவிகள் கொண்ட கொள்கலன் ஒன்றிற்கு இறக்குமதி வரி செலுத்தாமை தொடர்பாக சுங்க அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இக்கொள்கலன் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்திற்காக இராணுவத்தினரிற்கு தெரியாத வண்ணம் வன்னி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு;ள்ளதாக குற்றம் சாட்டப்ட்டுள்ளது.

Read more...

தங்களது மூன்றரை வருட ஆட்சியில் எந்த பொலிஸாரும் கொல்லப்படவில்லையாம். ரஞ்சித் மத்துமபண்டா

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடைப்பெற்றது. ஆனால் இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளை சுட்டு படு கொலை செய்யும் அளவிற்கு ஆட்சி என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரா பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

வவுனத்தீவு வீதி சோதனை சாவடியில் இருந்த பொலிஸார் இருவர் இனந்தெரியாத நபர்களால்சுட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

சுட்டு கொலை செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் தமிழர். இவர்கள் இருவரினதும் தூப்பாக்கிகளும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஒருவரின் கையும் வெட்டப்பட்டுள்ளது. இத்தகைய அசம்பவிதங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவில்லை. 2007 ம் ஆண்டில் 11 சிறுவர்கள்; காணாமல்போனது தொடர்பாக முதல் முறைப்பாடு செய்யப்பட்டது. அன்றை கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இது தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்தார். கடத்தப்பட்ட சிறுவர்கள் எல்.டி.டி.ஈ அல்ல கொழும்பிலுள்ள சிறுவர்கள் என கூறப்பட்டது. இச் சந்தர்ப்பத்திலேயே மேற்குறிப்பிட்ட தளபதியை ராஜபக்ஸ அரசாங்கத்தில் கைது செய்தனர்.

நாட்டில் மாவீரர் தினத்தை நடத்த விடமாட்டோம் என கூறினர். ஆனால் இன்று 38 இடங்களில் மாவீரர் தினம் நடைப்பெற்றது. ஆனால் இதற்கு பதில் சொல்ல அரசியலில் உள்ள எந்த தேரரும் முன்வரவில்லை என அவர் ராஜபக்ஸா-மைத்திரி ஆட்சியை வசைப்பாடினார்.

Read more...

போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த பிலிபீன்ஸில் 2 வருடங்களில் 5000 என்கவுண்டர். இதோ இலங்கையும் முயற்சிக்கலாம்.

பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிராக அந்நாட்டு ரோட்ரிகோ டியுடெர்ட் அதிபர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். இந்நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 5,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், 'பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அந்நாட்டில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டவுடன் என்கவுன்ட்டர் செய்ய உத்தரவிட்டதன் பேரில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 5,000க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மாயமாகி உள்ளனர்.

கடந்த சில மாதங்களில் இந்த எண்ணிகை அதிகரித்துள்ளது. 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது பிலிப்பைன்ஸ் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வருடங்களாக போதைப்பொருள் கடத்தலை சுட்டிக்காட்டி பிலிப்பைன்ஸ் அரசு நடத்திய என்கவுன்ட்டர்களில் இந்த ஒரு வழக்கு மட்டுமே நீதிமன்றத்தால் அரசுக்கு எதிராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

டியுடெர்டின் இந்தச் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இவ்வாறானதோர் கடுமையான முறையை பரீட்சித்துப்பார்க்க முடியும் என்ற எண்ணம் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

நவதாராண்மைவாத உலகமயமாக்கல் எதிர் ஒரு இறையாண்மையுள்ள திட்டம் - தயான் ஜயதிலக

ஸ்ரீலங்கா மற்றும் உலகின் பெரும் பகுதிகள் எதிர்கொண்டுள்ள உண்மையான தெரிவுகள் எவை? முக்கிய பிரச்சினைகளாக உள்ளவை எவை மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வுகள் எவை?

இன்று ஸ்ரீலங்காவில் நாம் சாட்சியாகவுள்ள பிரச்சினை ஒரு அரசியல் நெருக்கடி, அது பெரிய மற்றும் ஆழமான நெருக்கடியின் செறிவான வெளிப்பாடாகும். இது ஒரு குறிப்பிட்ட மாதிரியின் நெருக்கடியாகும். இந்த மாதிரியின் நெருக்கடி ஸ்ரீலங்காவில் தேசிய ரீதியாக உள்நாட்டில் உள்ளது. அந்த நெருக்கடி உலகளாவிய ரீதியாகவும் உள்ளது.

இந்த வகையான நெருக்கடி நவ தாராண்மைவாத உலகமயமாக்கலில் உள்ளது. நவ தாராண்மைவாத உலகமயமாக்கல் என்பது அப்படியான சாதாரண உலகமயமாக்கல் அல்ல. கம்யுனிசஅறிக்கையை வாசிக்கும் எந்த ஒரு வாசகருக்கும் முதலாளித்துவம் எப்போதும் உலக மற்றும் உலகளாவியது என்பதை அறிய முடியும். ஒருவேளை சமீபத்தைய தசாப்தங்களின் மிகச் சிறந்த மார்க்சிச அரசியல் பொருளாதார வல்லுனரும் சமீபத்தில் காலஞ்சென்றவருமான சமீர் அமீன், ‘காலனித்துவ உலகமயமாக்கலுக்கும்’ மற்றும் காலனித்துவத்துவ காலத்துக்கு முந்தைய வலுவான அணிசேரா இயக்கத்தைச் சேர்ந்த ‘பேரம்பேசும் உலகமயமாக்கலுக்கும்’ இடையில் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தியிருந்தார் மற்றும் தற்போதைய தாராள அல்லது நவ தாராண்மைவாத உலகமயமாக்கல் முதலாளித்துவ மையங்களால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்படுகிறது.

நவ தாராண்மைவாத மாதிரியை சுதந்திர சந்தை அடிப்படைவாதம் மற்றும் தனியார்மயம் ஆகியவற்றில் ஒன்றாகச் சுருக்கிக் கொள்ளலாம், இதில் எல்லைகள் மற்றும் தேசிய இறையாண்மை என்பன அழிக்கப்பட்டு விட்டன, அதன்படி அனைத்து வடிவத்திலான தேசிய கட்டுப்பாடுகள், வரையறை, ஒழுங்குகள், எதிர்ப்புகள் மற்றும் ஏகாதிபத்திய கட்டுப்பாடுகளுக்கான தடைகள் என்பனவற்றை சீர்குலைத்து விடுகின்றன. ஸ்ரீலங்காவில் அதன் சிறப்பான பிரதிநிதித்துவம் இரண்டு முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது (இரண்டாவது தவணையில் மங்கள சமரவீரவுடன் இணைந்து).

இந்த மாதிரி நிறுவப்பட்டது மற்றும் உலகளாவிய சோஷலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மட்டுமே நிறுவப்பட முடிந்தது. ஸ்ரீலங்காவை எடுத்துக்கொண்டால் ஜேஆர் ஜெயவர்தனாவின் திறந்த பொருளாதாரத்தில் தொடங்கி, பிரேமதாஸ, மகிந்தராஜபக்ஸ, சந்திரிகா, மற்றும் ரணில் ஆகியவற்றின் ஊடாக பெருமளவு பொறுப்பற்ற தன்மையுடைய ஒரு நேர்கோட்டு தொடர்ச்சியைக் காணலாம். ஜேஆர் ஜெயவாதனாவின் கீழ் 60 விகிதமான பொருளாதாரம் அரசாங்கத்தின் கைகளில் இருந்தது வெறுமே ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல - அவர் சொன்னது போல பிரமாண்டமான மாகாவலி திட்டம் ஒரு அடையாளம் - மற்றும் உண்மையான தாராண்மைவாத பொருளாதார நிபுணர் கலாநிதி சானக அமரதுங்க அடிக்கடி புகார் தெரிவித்துள்ளார்.

ஜேஆர் மற்றும் ரணில் - மங்கள மாதிரிகளுக்கு இடையேயுள்ள கடுமையான வேறுபடுத்திக்காட்டும் முரண்பாடுகளுக்கான சான்றுகள் ஜேஆருக்கு மிகவும் நெருக்கமான அவரது பேரன்களில் ஒருவரான பிரதீப் ஜெயவர்தனா 2017ல் வழங்கிய ஒரு நேர்காணலில் வந்துள்ளது. “ஐதேகவின் முக்கிய மதிப்புகள் அழிக்கப்பட்டு விட்டன” என்று தெரிவித்த அவர் மேலும் வலியுறுத்தியது: “பொருளாதாரத்தின் தாராள மயமாக்கல் செயல்முறைகளில் சமூக பாதுகாப்பு வலையமைப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அரச கட்டுப்பாடு பேணப்பட வேண்டும் என்பது எனது பாட்டனாரின் கருத்தாக இருந்தது…. தனியார்துறை வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் விவாதம் கிடையாது, ஆனால் அரச கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை என்பன முக்கியமான பகுதிகள் ஆகும்…”(சிலோன் ருடே).

இப்போது அது தாராளமய உலகமயமாக்கல் போல் தோன்றவில்லை அல்லவா?

பொருளாதாரத்தைப் போலவே அரசியலிலும் நேர்மாறான மாற்றங்கள் ஏற்படும். ஜூலை 1983ல் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவாதனா அமெரிக்கத் தூதரக முதற் செயலாளர் கெவின் ஸ்கொட்டை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் பிரதிநிதி என்று அறிவித்து 24 மணி நேரத்திற்குள் அவரை விமானம் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பியதின் பின்னர் ஒரு மதுபான விருந்தில் வைத்து ஒரு விமர்சனக் குறிப்பை வெளியிட்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அதேபோல ஜனாதிபதி ஜெயவர்தனாவும் மற்றும் பிடல் கஸ்ட்ரோவும் நண்பர்களாக இருந்தபோது, இருவரும் ஹவானா வீதிகளில் ஒன்றாக நடந்து சென்றதும் தற்செயல் அல்ல. ஜேஆர் ஜெயவர்தனா, லங்கா - சோவியத் நட்புறவுச் சங்கத்தின் அங்கத்தவராக இருந்த முதலாவது ஜனாதிபதி மட்டுமல்ல, இலங்கை தேசிய காங்கிரசில் கம்யுனிஸ்ட் கட்சிக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும் என்கிற பிரேரணையையும் அவர்தான் முன்மொழிந்தார் - இது 1944 -1947ல் நடந்தது. டிஎஸ். சேனநாயக்கா இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகி ஐதேக வினை ஆரம்பிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். 1977ல் திறந்த பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த N;ஜஆரின் நிதிமந்திரியாகத் தெரிவானவர், முன்னாள் சுதந்திர தீவிரவாதியும், ஒருவேளை 1960களில் கியுபாவில் வைத்து சே குவெராவைச் சந்தித்த ஒரே ஒரு இலங்கையருமான அவர் - ரொணி டீ மெல் ஆவார். அது ரணில் மற்றும் மங்கள நடைமுறைப்படுத்தும் நவதாராண்மைவாத அதிர்ச்சி வைத்தியம் போலில்லாமல் கவனமாகச் சீரமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திறந்துவைப்பு ஆகும்.

பிரேமதாஸவைப் பொறுத்தவரை அவரது வீடமைப்பு, ஜனசவிய, இலவச பாடசாலைச் சீருடை மற்றும் இலவச மதிய உணவு (இந்த திட்டம் ஜேஆர் ஜனாதிபதியாக இருந்தபோது பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்டது) போன்ற திட்டங்கள், அதேபோல 200 ஆடைத் தொழிற்சாலைகளில் உள்ளடங்கிய தொழிலாளர் நிலமைகள் மற்றும் உணவு பற்றிய கடுமையான நிபந்தனைகள் போன்றவைகளும் உள்ளடங்கும். எப்படியாயினும் அவை நவதாராண்மைவாதத்துடன் எத்தகைய தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை மற்றும் உண்மையில் அதற்கு நேர்மாறானது. தனது முன்மாதிரி என அவர் பகிரங்கமாக பெயர் தெரிவித்தது மலேசியாவின் மாகாதீர் முகமதினையே. 1988ல் பிரேமதாஸவின் தேர்தல் வெற்றியீட்டிய தேர்தல் அறிக்கை ஹொங்கோங்கில் வைத்து சுசில் சுரிஸ்வர்தனா (ஒரு தீவிரவாத சிந்தனையாளர்) என்பவருடன் இணைந்து எழுதப்பட்டது, பின்னர் சீனாவின் டெங் ஹசியோ பெங்கினைச் சந்தித்தார், சீனாவுக்கு மாவோவின் காலத்தில் அவர் விஜயம் செய்திருந்தார் 1957ல் அதுபற்றிய ஒரு கையேட்டையும் எழுதியிருந்தார் (இதே பயணத்தில்; அவர் சோவியத் ஒன்றியத்துக்கும் விஜயம் செய்திருந்தார்).

திரும்பவும் ஜனாதிபதியும் மற்றும் ஐதேகவின் தலைவருமான திரு.பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டுக்கு பிரதம விருந்தினர்களாக சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஒரு உயர்மட்ட தூதுக் குழுவினை அழைத்தார். இதுவும் தற்செயலாக நடந்த ஒன்றல்ல.

மகிந்த ராஜபக்ஸவைப் பொறுத்தமட்டில், பொது உட்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தியது கட்டளைகளின் உயரங்களைத் தக்கவைத்ததுடன் அரசின் கைகளில் நாட்டின் மூலோபாய சொத்துக்களை வைத்திருத்தலும் ஆகும், சமூக நலன்புரி திட்டங்களை தொடர்ந்து நடத்தியதுடன் மற்றும் அரசின் உடமைகளை மீட்பதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது செயற்பாடு உண்மையில் நவதாராளவாதத்திற்கு வெகு தொலைவில் உள்ளதாக இருந்தது.

இதற்கு முற்றிலும் முரண்பாடாக ரணில் விக்கிரமசிங்கா ஐதேகவினை சர்வதேச ஜனநாயக சங்கத்துடன் (ஐ.டி.யு) இணைத்தார், இந்தச் சங்கம் உலகளாவிய உரிமையின் கூட்டிணைப்பாகும், அதில் அவர் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இந்த ஐ.டி.யு ரீகன் மற்றும் தச்சர் ஆகியோரால் நிறுவப்பட்டது, அதன் இணைத் தலைவர்கள் அமெரிக்க குடியரசுக் கட்சியினர் மற்றும் ஐக்கிய இராச்சிய கன்சர்வேட்டிவ் கட்சியினர். இதன் காரணமாக நவதாராண்மைவாத உலகமயமாக்கலின் மிகச்சிறந்த முன்னோக்கு மற்றும் இலட்சியம் அவரிடம் காணப்படுவதில் அதிசயம் இல்லை. அதிர்ஷ்டவசமாக இதுபோலப் பேசும் ஒரு பிரதமரையும் மற்றும் கட்சித் தலைவரையும் ஸ்ரீலங்கா மட்டுமே உற்பத்தி செய்துள்ளது:

“….. அமெரிக்க திறைசேரியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு நிபுணர் அரசாங்கத்துக்கு இந்த முறையை அறிமுகப்படுத்தினார்” என்று சொன்ன விக்கிரமசிங்க தொடர்ந்து கூறுகையில் “ உலகளாவிய பொருளாதாரத்துடன் ஒருங்கிணைவதற்கு நாங்கள் பாரியளவிலான பொருளாதார தாராளமயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று சொன்னார். உலக நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மற்றும் இதர ஆவணங்கள் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை பற்றி காண்பிப்பதற்கு பிதமரினால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. (‘பிணைமுறி ஆணைக்குழுவின் முன்பாக ரணில் உறுதியளித்தது’ - டெய்லி எப்ரி 21 நவம்பர் 2017).

எனது கருத்து மிகவும் தெளிவானது. ஸ்ரீலங்காவுக்கு ஏன் ஐதேக வுக்கு கூட திறந்த பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் என்பனவற்றுக்குள் ஒரு சாத்தியமான மாதிரி உள்ளது, ஆனால் ரணில் மற்றும் மங்களவின் நவ தாராண்மைவாத உலகமயமாக்கல் திட்டம் ஒரு நவதாராண்மைவாத மாதிரி அல்ல. திறந்த பொருளாதாரம் மற்றும் நவதாராண்மை மாதிரி என்பன சம எல்லையுடையவை அல்ல. திறந்த பொருளாதாரம் என்ன வகையானது என்பது கேள்வி? ரணிலின் நவதாராண்மைவாத மாதிரி அல்லது சில தோல்வியுற்ற அல்லது சோதிக்கப்படாத மாதிரி என்பன முற்றிலும் உலகமயமாக்கலுக்கும் மற்றும் திறந்த பொருளாதாரத்துக்கும் வெளியே உள்ளன என்று சொல்வதைத் தவிர ஸ்ரீலங்காவாசிகளுக்கு வேறு தெரிவு இல்லை. இது ஒரு தவறான தெரிவு அது ஜேஆர், பிரேமதாஸ மற்றும் மகிந்த ஆகியோரின் பங்களிப்பு மூலம் உருவான தெளிவான அபிவிருத்தி வெற்றிகளை அலட்சியம் செய்கிறது.

உலகளாவிய ரீதியிலும் இது சரியானது. பிரச்சினை உலகமயமாக்கல் அல்ல ஆனால் எந்த வகையான உலகமயமாக்கல், எந்த மாதிரி என்பனதான் பிரச்சினை. சாத்தியமான, தெளிவான தெரிவு ஒன்று இருக்கவேண்டும் அது உலகமயமாக்கலுக்கு மாற்றீடாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை, ஆனால் உலகமயமாக்கலின் நவ தாராண்மைவாத மாதிரிக்கு மாற்றீடாக இருக்கவேண்டும். மேற்கில் அப்படியான ஒரு தெரிவு உள்ளது, பெயரளவில் அது ஜெரமி கோர்பைன மற்றும் தொழில்கட்சியால் முன்வைக்கப் படுகிறது. அது இன்னமும் பரீட்சித்துப் பார்க்கப்படாத ஒரு பதில். ஆனால் ஈரோஏசியா மற்றும் உலகளாவிய தெற்கு என்பனவற்றில் பரீட்சித்துப் பார்க்காத பதில்களுக்கு நேரம் இல்லை. இங்கு பெரும்பான்மையான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எங்களுக்கு ஏற்கனவே மாற்றீடான ஒரு உலகமயமாக்கல் உள்ளது, இது உலகமயமாக்கலுக்கு மாற்றீடு அல்ல - முதல் கூறியதுதான் எங்களுக்குத் தேவையானது மற்றும் அது வெற்றிகரமானது என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

அதற்காக நீங்கள் எனது வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சமீர் அமீனின் வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஜோர்ஜ் மொன்பியாட் போன்ற காடியன் கட்டுரையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் சமீர் அமீன் மிகவும் அறிவார்ந்தவர், இப்படித்தான் புரொட்லைன் சஞ்சிகை சமீர் அமீனை விபரிக்கிறது, “சமீர் அமீன் உயிரோடிருக்கும் இன்றைய உலகின் மிகச்சிறந்த தீவிர சிந்தனையாளர்களில் ஒருவர். குறைந்தபட்சம் கடந்த ஐந்து தசாப்தங்களாக மாற்றீடான ஒரு சிறந்த உலகத்தைப் பற்றிக் கனவு காண்பவர்களுக்கு உத்வேகம் மிக்க ஒரு ஆதாரமாக விளங்குபவர். ஆழமான அசல் மற்றும் தத்துவரீதியான கண்டுபிடிப்பு மிக்க ஒரு மார்க்சீய சிந்தனையாளர்…” என்று.

மற்றும் இப்படித்தான் சமீர் அமீன் மாற்றிடுகளை அடையாளம் காண்கிறார்: ஒரு “இறையாண்மைத் திட்டம்”: “தேசிய அளவிலான நடவடிக்கைகளின் ஆரம்ப உருமாற்றத்தின் மூலோபாயத்தை பின்வரும் வாக்கியத்தின்படி சுருக்கிக் கொள்ளலாம்: நிறுவப்பட்ட உலகமயமாக்கலின் விரிவாக்கத் தேவைகளை ஒருதலைப்பட்சமாக சரிசெய்வதை மறுக்கவேண்டும், இந்த இறையாண்மைத் திட்டங்களில் வேலை செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதின் மூலம் மாற்றீடு செய்வதுடன் , உலகளாவிய அமைப்பை இந்த தேசிய திட்டங்களின் விரிவாக்க தேவைகளுக்கு ஏற்ப சரிசெய்வதற்குக் கட்டாயப்படுத்த வேண்டும்.”

சமீர் அமீன் சீனாவில் உள்ள வெற்றிகரமான ஒரு இறையாண்மைத் திட்டத்தை பெயரிட்டு அடையாளம் காட்டுகிறார்: “… இறையாண்மைத் திட்டங்களின் பாதையில் உண்மையாகவே ஈடுபட்டு வரும் ஒரே நாடு சீனா, மற்றும் இது ஒரு ஒத்திசைவான திட்டம்: இது சுய மையமான (ஒரே நேரத்தில் ஏற்றுமதியை நோக்கி தீவிரமாக திறக்கப்பட்ட) விவசாய அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்ட நவீன மற்றும் முழுமையான தொழில்துறை முறைமைக்கு ஏதுவான முறையில் விவசாயிகளுக்கு சொந்தமில்லாத சிறிய பண்ணைகளை நவீனமயப்படுத்தும் திட்டமிட்ட நடைமுறையை அது வெளிப்படுத்துகிறது - இதன்படி அனைவருக்கும் நிலம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது”.

இந்த வருடத்தின் சமீர் அமீனின் கடைசி நேர்காணல் ஒன்றில் சீனாவின் ஒப்பீட்டு வெற்றியைப் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“சீனா மற்று இந்தியா ஆகியவற்றை ஒப்பிடுகையில் அது தொடர்பில் மிகவும் முக்கியமானது, சீனாவில் வருமான வளர்ச்சி மற்றவர்களைவிட (பெரும்பான்மையினரைவிட) ஒரு சிலருக்கு சில மடங்கு அதிகமாக இருந்தாலும் கூட கிட்டத்தட்ட அனைத்து மக்களுக்கும் உண்மையில் ஒரு வருமான வளர்ச்சி இருக்கிறது. எனவே சீனாவில் பெருகிவரும் சமத்துவமின்மை வறுமைக் குறைப்புடன் சேர்ந்துள்ளது. இந்தியா பிரேசில் மற்றும் தெற்கில் உள்ள அநேகமான எல்லா நாடுகளிலும் இது இப்படியில்லை. இந்த நாடுகளில் வளர்ச்சி (மற்றும் சில விடயங்களில் கணிசமானளவு உயர் வளர்ச்சி) ஒரு சிறுபான்மையினருக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. (ஈகுவற்றோறியல் கினியா போன்ற நாடுகளில் 1 விகிதத்தில் இருந்து இந்தியா போன்ற நாடுகளில் 20 விகிதம் வரை சில விடயங்களில் இது வித்தியாசப்படுகிறது). ஆனால் இந்த வளர்ச்சி பெரும்பான்மையினருக்கு அவர்கள் இயலாத நிலையில் இருந்தால்கூட அவர்களுக்குப் பயனுள்ளதாக இல்லை.”

இதனால்தான் சீனா ஒரு மாற்றீடான பொருளாதார மாதிரியாக உள்ளது, இந்த நேரத்தின் மாற்றீடான மாதிரி. அது நாட்டுக்கும் அதேபோல மொத்தமாக அனைவருக்கும் வேலை செய்கிறது. நவதாராண்மை மாதிரி, அல்லது நான் இன்னும் அதிகமாகப் போனால், மேற்கத்தைய அல்லது உலக நாணய நிதியத்தால் இயக்கப்படும் மாதிரிகள் இப்படியில்லை, அவற்றில் நெருக்கடி மற்றும் சிதைவு உள்ளது.

ஸ்ரீலங்கா சீனாவின் பொருளாதார மாதிரியை எங்கள் அளவு அனுமதிக்கும் எல்லைக்குள் மற்றும் எஞ்சியிருக்கும் எங்கள் தேர்தல் ஜனநாயக அமைப்புக்குள் ஏற்றுக்கொண்டு பின்பற்றவேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிப்பதாக பெருமையுடன் ஒப்புக் கொள்கிறேன். இதன் கருத்து சீனாவின் அரசியல் மாதிரியை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்பதல்ல - ஒரு வலுவான ஒற்றையாட்சி(உள்ளுர் சுயாட்சி உட்பட) அரசு மற்றும் ஒரு ஜனாதிபதி முறையை தக்க வைத்துக்கொள்வதைத் தவிர, குறிப்பாக வெஸ்ட் மினிஸ்டர் மாதிரி அதன்; பிரிக்ஸிட் பற்றிய விரிசல்களையும் மற்றும் இயல்பற்ற செயற்பாடுகளையும் தினசரி எங்கள் தொலைக்காட்சி திரைகளில் காண்பிக்கும் நேரத்தில்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்.

Read more...

Friday, November 30, 2018

த. தே. கூட்டமைப்பினர் மக்களை மாத்திரமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களையும் எமாற்றி விட்டார்களாம். சுரேஸ் பிறேமச்சந்திரன்

தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு, ஜக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளமையானது , கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பாக அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இது நாங்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், ஒரு அரசியல் சாசன அடிப்படையில் நாட்டை நிர்வகிக்கும் நிலையை உருவாக்குவதற்கும், மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்தியமை மற்றும் பிரதமர் ஆக்கியமை தவறு என்ற அடிப்படையில் தான் நாங்கள் நீதிமன்றம் செல்ல இருக்கின்றோம்.

அதற்காகதான் சத்தியக் கடிதாசி தேவை. யார் ஆட்சி அமைக்கிறார் என்பது எமக்க பிரச்சினை அல்ல என்று இதுவரை கூறிவந்த சம்பந்தன் நேற்று மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அல்லது ஐக்கியதேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு இருப்பதாக தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரிடமும் கையெப்பமிட்ட அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இது உண்மையாகவே தமிழ் மக்களை ஊடகச் செய்திகள் மூலம் ஏமாற்றுகின்ற வகையிலும் மாறி மாறி மாறுபட்ட கருத்துக்களை கூறிவந்தவர், இதிலும் குறிப்பாக தாங்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறிவந்தவர், சத்தியக்கடதாசியில் கையொப்பமிட மாட்டோம் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிவந்த நிலையில், இல்லை அது ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அல்ல நீதிமன்ற செல்வதற்கான கடிதம் என்று கூறியவர்கள் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இல்லாமல் மீண்டும் ரணில்விக்கிரம சிங்கவை பதவியில் அமர்த்துவதற்கான முடிவு எடுத்து அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொழுத்தையும் பெற்று அனுப்பியுள்ளார்.

ஆகவே வெறுமனே மக்கள் மாத்திரம் ஏமாற்றவில்லை தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

Read more...

கொலைசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகித்தர்களுக்கு பதவி உயர்வு.

வவுனதீவு பொலிஸ் காவல் நிலையலத்தில் கடமையிலிருந்தபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள கணேஸ் தினேஸ் , கமகே நிரோசன் என்ற இரு பொலிஸ் காண்டபிள்களும் சார்ஜன்ட் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடமையிலிக்கும்போது உயிரிழக்கும் பாதுகாப்பு படையினர் அடுத்த தரத்திற்கு தரமுயற்தப்படுவது நடைமுறையாகும். அந்த அடிப்படையில் இதற்கான அனுமதி பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றது.

Read more...

மைத்திரி - சம்பந்தன் சந்திப்பு - பழைய குருடி கதவ திறவடி என்று முடிந்துள்ளது.

நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதம மந்திரி அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரத்து பிரேரணையை தொடர்ந்து சபாநாயகர் மைத்திரபால சிறிசேனவை சந்தித்தார்.

பின்னர் இன்று பிற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் ஏனைய ஐக்கிய தேசியக் முன்னணியின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசிவிட்டு மீண்டும் பேசுவோம் என அனுப்பி வைத்தார் மைத்திரி சபாநாயகரை.

இன்று பிற்பகல் 6 மணிக்கு திட்டமிட்டதுபோல் சம்பந்தரை சந்தித்துள்ளார் மைத்திரி. அப்போது சிறைக்கைதிகள் விவகாரம் பேசப்பட்டதாம். அதன் பிரகாரம் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து எதிர்வரும் 3 ம் திகதி பேசுவோம் என சம்பந்தரை அனுப்பி வைத்துள்ளார் மைத்திரி.

இவ்வாறே இவ்விடயம் எதிர்வரும் 7ம் திகதி வரை இழுபட்டுச் செல்லும் என்று பொதுவாக அனைவராலும் நம்பப்படுகின்றது.

Read more...

3 கோடியே 20 லட்சத்தை ஏப்பம் விட்ட அனந்தி சசிதரன். டிமோகிறேசி அட்மினிஸ்டேட்வாம்! வெள்ளையடிக்கிறது ஊதுகுழல்

வடமாகாண சபையில் சிறிதுகாலம் அமைச்சராக செயற்பட்ட அனந்தி சசிதரன் அந்த குறுகிய காலத்தினுள் 3 கோடியே 20 லட்சங்களை தவறான வழியில் செலவு செய்துள்ளதாக அல்லது மோசடி செய்துள்ளதாக விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளார்.

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநராக செயற்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சந்திரசிறி செயற்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அச்செயற்திட்டத்தின் ஊடாக நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் ஊடாக அவசர தேவைகளை எதிர்நோக்குகின்ற நோயாளிகள் மற்றும் பிறதேவைகளை எதிர்நோக்குகின்ற வட மாகாண மக்களுக்கு நிதிஉதவி செய்யப்பட்டது.

நல்லாட்சியில் இராணுவ மேஜர் ஜெனரல் வீட்டுக்கு அனுப்பப்பட்டதுடன் அவரது செயற்திட்டத்தினையும் சவப்பெட்டியில் அடைத்து மாகாண சபை என்ற மயாணத்தில் புதைத்தனர் நல்லாட்சியின் பங்காளிகள்.

ஆனாலும் இராணுவ மேஜர் ஜெனரலின் எண்ணக்கருவில் உருவான அந்நிதியத்தின் பணத்தை செலவிடுவது எவ்வாறு என திட்டம் வகுத்து கொண்டனர். வட மாகாண சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் வரையறுத்துக்கொண்டனர்.

புலிப்பொண்டாட்டி வரையறைகளுக்கு கட்டுப்படுவாரா? இல்லையே.. கட்டாக்காலிபோல் செயற்பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளார். அவர் களவு செய்து பக்கெட்டுக்குள் பணத்தை போட்டுவிட்டார் என விசாரணை முடிவுகள் வரும்வரை இலங்கைநெட் ஆல் சொல்ல முடியாது. அதற்காக புலிப்பொண்டாட்டி ஆட்டையை போடாதவர் இல்லை என்றும் கூறமுடியாது. இவர் புலம்பெயர் புலி அமைப்புகள் பலவற்றிடம் ஆட்டையை போட்டுள்ளதாக அவர்கள் பல்லை நறும்பிக்கொண்டு இருக்கின்றனர். அத்துடன் ஒரு அமைப்பிடம் எடுத்துவிட்டு அதைவிட மேலதிகமாக மற்றவர்களிடம் எடுப்பதற்காக சிற்சில சித்துவிளையாட்டுக்களும் காட்டியுள்ளாராம். அவையளும் இவள் வரட்டும் இந்தப்பக்கம் என்று காத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில், எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பாணியில் எழுதிக்கொண்டிருக்கும் இணையத்தளம் ஒன்று புலிப்பொண்டாட்டி செய்தது தவறுதானாம், ஆனாலும் அதை பாதிக்கப்பட்ட முன்னாள் புலிகளுக்கு கொடுத்திட்டாவாம் என்று வெள்ளையடிக்க முற்பட்டுள்ளார்கள். தென்பகுதியில் கொள்ளையடிப்பவர்களும் தூள் வியாபாரம் செய்பவர்களும் மாட்டிவிட்டால் இறுதியாக சொல்வது தன்சல் கொடுத்துவிட்டோம் அல்லது பன்சலை கட்டிவிட்டோம் என்றுதான். ஏன் புலம்பெயர் தேசத்திலும் கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள் வடகிழக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள். பயனடைந்தவர்களின் பெயர், ஊர், விபரம் கேட்டால், அது வந்திட்டு தார் றோட்டாலை போய் , கிறவல் றோட்டுக்குள்ளாலை திருப்பி, என்று பதில்வருகின்றது.

முன்னாள் புலிகளுக்கோ அல்லது அவர் கள்ள உறவு வைத்திருக்கும் முன்னாள் ஒட்டுக்குழுக்கள் என்போருக்கோ கொடுக்கலாம், ஆனால் அதை அவர் அவரது சொந்தப்பணத்தில், அல்லது புலம்பெயர் தேசத்தில் பெற்றுக்கொண்டு புலிப்பணத்திலேயே வழங்கவேண்டும். களவு பிடிபட்டுவிட்டால் யாருக்கு கொடுத்தது என்பதெல்லாம் செல்லுபடியற்றது. யாருக்கு கொடுக்கவேண்டுமானாலும் அதற்கென ஒரு சட்ட ஒழுங்கு உண்டாயின் அந்த சட்ட ஒழுங்கு கடைப்பிடிக்கப்படாவிட்டால் அது களவு என்பதை நிழல் அரசாங்கத்தில் இருந்து வந்து ஜனநாயகம் பேசுகின்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் எவ்வளவுதான் ஜனநாயகம் மாதிரி பேசிக்கொண்டு வெள்ளை அடிக்க முற்பட்டாலும் உங்களிடமிருந்து இன்னும் பாசிசத்தின் துற்நாற்றம் போகவில்லை என்பதை இலங்கைநெட் உணர்கின்றது.

குறித்த இணையத்தளம் புலிப்பொண்டாட்டியை காப்பாற்றுவதற்கு அவருக்கு துணைபோன அரச ஊழியர்களை பலிக்கடாவாக்க முனைகின்றனர். அதுவும் அதுவொரு democracy administrative என்று புதியதோர் சொற்பதத்தை அறிமுகம் செய்துள்ளனர். இலங்கையின் administrative system த்தில் இப்படி ஒரு அட்மினிஸ்டேட்டிவ் இருக்கெண்டு இப்பதான் அறிந்திருக்கிறது இலங்கைநெட். விளங்கக்கூடிய பாஷையில் சொல்வதானால் தற்கொலைக்கு தற்கொடை என்று புதுப்பெயர் கொடுத்து ஊரவனின் பிள்ளையை கொல்லக்கொடுத்த அதே மெதெட்தான் இது. அங்கே அதை செய்தவர்கள்தான் இங்கே இதையும் செய்கின்றாகள். அதுவும் சிறந்ததோர் செயற்பாடுதான், புலிகள் எப்போதும் பயன்படுத்திவிட்டு நடுத்தெருவில் விட்டுவிடுவார்கள் என்பதை இவர்களுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளும் இதனூடாக உணர்ந்து கொள்ளட்டும்.

இதில் இன்னுமொரு விடயத்தை இலங்கைநெட் சுட்டிக்காட்ட விரும்புகின்றது. அரசியல்வாதிகளின் ஊழல் என்பது அவர்களை மிரட்டி அடிபணிய வைக்கும் File (கோப்பு) லாகவே இலங்கையில் காணப்படுகின்றது. முறைப்பாடு ஒன்று கிடைத்துவிட்டால், விசாரணையை ஆரம்பிப்பார்கள், பின்னர் அதைவைத்து அரசியல் பேரம் பேசுவர். கட்சி மாறக்கேட்பர். அரசாங்கம் அமைப்பதற்கு உதவி கேட்பர்.

எனவே இவ்விடயங்களிலிருந்து ரெஜினோல்ட் கூரே விடுபட்டு நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு மக்கள் பணம் திருடப்பட்டிருந்தால் அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் தகுந்த தண்டனையை புலிப்பெண்டாட்டிக்கு வழங்கவேண்டும் என்று இலங்கைநெட் கேட்டுக்கொள்கின்றது.

மேலதிகமாக தேவைப்பட்டால் புலிப்பெண்டாட்டி அப்பளம் கொம்பனி ஒன்று அமைப்பதாக மோசடி ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது சம்பந்தப்பட்டவர்களை ஆழுநரின் அலுவலகம் நோக்கி கண்ணை சிமிட்டி விடலாம்.

Read more...

வவுணதீவில் இரு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் கழுத்தறுத்துக் கொலை. பொலிஸ் உயர் மட்ட குழு ஸ்தலத்தில்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸ் கொஸ்தாபல்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குனரை இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் ஓரிரு தினங்களில் குற்றவாளிகள் மற்றும் பின்னணி தொடர்பில் கண்டு பிடிக்க முடியும் என்று கூறினார்.

சம்பவத்தை தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் பொலிஸ் மா அதிபர் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்தின சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட அணி ஒன்றை நியமித்துள்ளதுடன், தேவை ஏற்படி விசேட அதிரடிப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு பணித்துள்ளதாக இலங்கைநெற் அறிகின்றது.

சம்பவத்தில் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணேஸ் தினேஸ் மற்றும் காலிப் பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடை வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன எனும் இரு கொஸ்தாபல்களே மரணமடைந்துள்ளனர்.



கொலை சம்பவம் இடம்பெற்றுள்ள பகுதி




பொலிஸ் உயரதிகாரிகள் ஸ்தலத்தில்

Read more...

அமைச்சர்களுக்கான நிதியையும் தடுத்தது பாராளுமன்று.

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடைசெய்யக் கோரிய பிரேரணை இன்று பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவினால் முன்மொழியப்பட்டு ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வழிமொழியப்பட்டது.

பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 0 வாக்குகளும் பதிவாகின. அதாவது ஆழும் கட்சியினர் வாக்கெடுப்பினை பகிஸ்கரித்தனர்.

இத்துடன் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெற்று அடுத்த அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்றைய பாராளுமன்ற அமர்விலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பிரதமருக்கான செலவினங்களை தடை செய்யும் பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று அமைச்சர்களுக்கான இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர் சிக்கல்களை உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை.

Read more...

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டிய கட்டுரைப்போட்டி முடிவுகள்.

மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டி வரோட் என்றழைக்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையம் – வன்னி என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

தரம் ஒன்று தொடக்கம் 10 வரையிலான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பிரிவு, உயர்தர வகுப்பு மாணவர்கள் பிரிவு மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான திறந்த பிரிவு என மூன்று பிரிவுகளாக இந்தக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் பரிசுக்குத் தெரிவானவர்களின் விபரங்கள் வருமாறு:

தரம் ஒன்று தொடக்கம் 10 வரையிலான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பிரிவில்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் அணுகும் வசதிகள் என்ற தலைப்பிலான கட்டுரை எழுதிய :

வவுனியா பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கஜேந்திரநாத் லாவண்யா முதலாமிடத்தையும்
யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவபாலன் கரிஸ் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் :

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள், அணுகும் வசதிகள் என்ற தலைப்பிலான கட்டுரை எழுதிய :

கட்டுரைக்கு வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த நிவேதிகா விஜயசிவா முதலாம் இடத்தையும்,

கண்டி தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியைச் சேர்ந்த அப்துல் ரஸாக் பாத்திமா இரண்டாம் இடத்தையும்

கண்டி தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் முஹிபுல்லா பாத்திமா நிவஸ்லா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மூன்றாம் பிரிவாகிய 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில்

மாற்றுத்திறனாளிகளுக்கான அரச, அரசசார்பற்ற, சமூகத்தின் கடமைகளும், பொறுப்புக்களும்

என்ற தலைப்பிலான கட்டுரைக்கு

கொட்டாஞ்சேனை கொலேஜ் வீதியைச் சேர்ந்த சரவணமுத்து நாகராசா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

வவுனியா உக்குளாங்களம் மனோகரன் தினுஜா இரண்டாம் இடத்தையும்,

மட்டக்களப்பு, வாழைச்சேனை, கொண்டயன் கேணி யோகராசா யோகதாசன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த கட்டுரைப் போட்டியில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் கி.உதயகுமார்,

வவுனிய, முஸ்லிம் மகாவித்தியாலய ஆசிரியை திருமதி றஸ்மியா,

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய ஆசிரியை திருமதி வ.ஜெகநாதன் நடுவர்களாகப் பணியாற்றி இருந்தனர்.

ஆக்கங்கள் எழுதி அனுப்பிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும், நடுவர்களாகப் பணியாற்றிய பெருந்தகைகளுக்கும் வரோட் நிறுவனம் தனது நன்றியறிதலைத் தெரிவித்துள்ளது.


மாணிக்கவாசகம் - வவுனியா

Read more...

Thursday, November 29, 2018

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் ரகசியக் கணக்கிலிருந்து மாதாந்தம் ரூபா 95000. நீதிமன்றில் சாட்சியம்!

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நிதி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய முதித தமானகம சாட்சி வழங்கியிருந்தார்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னின்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எழுப்பிய குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போது சாட்சிக்காரரான முதித தமானகம, 2015 ஆண்டின் பின்னர் வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரருக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம 125,000 ரூபா வழங்க நிறுவனத்தின் நிர்வாகிகள் யோசனை ஒன்றை முன்வைத்தாக தெரிவித்துள்ளார்.

இதற்கு தான் மறுப்பு தெரிவித்தாகவும், பின்னர் மாதாந்தம் 95,000 ரூபா பணம் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் இரகசிய கணக்கு ஒன்றின் மூலம் வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்பர அமில தேரர் காலஞ்சென்ற சோபித தேரரின் சமூக நீதிக்கான அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவர் என்பதும் தொடர்சியாக மோசடிக்கு எதிராக குரலெழுப்பி வருபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் நிறுவனத்தில் கடமையாற்றாத 39 பேருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மேலதிக விசாரணை நாளைய தினம் இடம்பெற உள்ளது.

Read more...

பாராளுமன்றை முறைப்படி கூட்டும்வரை தாங்கள் பங்கேற்க மாட்டார்களாம். வாசு

பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம் என ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று -29- இடம்பெற்ற ஆளும் தரப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் தொடர்ந்தும் சட்ட விரோதமான முறையில் அரசியலமைப்பு மற்றும் நிலையியல் கட்டளைக்கு முரணான வகையிலேயே கூடி வருகின்றது எனவும் இதன்போது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தினேஸ் குணவர்தன , நிமல் சிறிபால டி சில்வா , சுசில் பிரேமஜயந்த , விமல் வீரவன்ச , மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹிலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

Read more...

நாட்டு மக்களிடம் மைத்திரிபால பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். விமல் ரத்நாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள போவதில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரி - மகிந்த சூழ்ச்சி திட்டத்தை தோற்கடிப்பதாக நாங்கள் கூறினோம்.

மேற்குலக நாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்தாலும் மாலைத்தீவு, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் கூட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை. கறுப்பு ஊடகங்கள் நாட்டை ஆட்சி செய்கின்றன.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு மர முந்திரி பருப்புக்களை விநியோகிக்கும் நபரை விரட்டவும் ஒஸ்ரியாவின் தூதுவரை பதவி நீக்கவுமே ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது புற்றுநோயாக மாறியுள்ளது. மற்றுமொருவர் கட்சி தாவ தயாராக இருப்பதாக தெரிகிறது.

அவரது பாட்டனார் கங்காருவா? ஜனாதிபதி இரண்டாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட மேற்கொண்ட சூழ்ச்சியால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்துவாரா? கட்சி தாவாமல் இருக்க பணத்தை பெற்றனரோ தெரியவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது குமார வெல்கம போன்ற ஒருவர் தேவை” எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புதிய அரசாங்கத்தில் நாங்களும் இணைகின்றோம் ! தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ கடிதம்

பாராளுமன்றில் பெரும்பாண்மையை கொண்டிருக்கக்கூடியவர் என தாங்கள் நம்பும் ஒருவரை பிரதமராக நியமிக்க கோரும் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு தமது ஆதரவை வழங்குவதாக எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இன்று ஜனாதிபதிக்கு தமிழரசுக் கட்சியினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதன் ஊடாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பங்காளிகள் ஆகியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த ஒக்டோபர் மதம் 26 ஆம் திகதியிலிருந்து நடந்த அனைத்து சம்பவங்களினதும் பின்னணியின் அடிப்படையில் மேற் குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் அக்கறைக் கொண்டு, இக் கடிதத்தை எழுதுகின்றோம்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அவர் நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் இந்தக் காலப் பகுதியில் பல தடவைகள் பாராளுமன்றம் கூடியுள்ள போதிலும் அவரால் தனக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பிக்கையை உள்ளது என்பனை நிரூபித்துக் காட்ட முடியாத ஒருவராக காணப்படுகின்றார்.

அதேவேளை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மீது பிரதமராக இருப்பதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கடந்த 14, 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

'குரல்' அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள் 122 உறுப்பினர்களின் கையொப்பங்களினுடன் ஜனாதிபதி ஆகிய உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இது தொடர்பிலான சபாநாயகரின் அறிக்கைகளும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளாரா? என்ற வினாவுக்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து எதிராகவே உள்ளது. அதுமாத்திரமன்றி சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர், பிரதமராக தான் இருப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கையினைப் பெற்றுள்ளார் என்பதனை நிரூபித்துக் காட்ட இயலாது போயுள்ளது.

இந்நிலையில் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு எதிராக கடந்த 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களானது, இந்த நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றோ இருக்கின்றதா என்ற முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

இந் நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை நாம் மிகவும் மரியாதையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

இதனால் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுவதனை உறுதி செய்யும் வகையில் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நாம் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணித் தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு ஆதரவளிப்போம் என்பதுடன், ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக் கூடியவர் என நீங்கள் கரும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும், தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

மேற் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதியாகிய தங்களுக்கு தெரியப்படுத்துவதை எமது கடமையாக கருதுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், சித்தார்த்தன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவமோகன், சீனித் தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன், கோடீஸ்வரன் மற்றும் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Read more...

மத நல்லிணக்கம் பேண மறுக்கும் ஆசிரியர். மறவன் புலவு சச்சிதானந்தன்

சாவகச்சேரி இந்துக் கல்லூரி. இந்துக்களின் மரபுகளைப் கல்லூரி பேணும் கல்லூரி. அருள்மிகு அய்யப்ப வழிபாடு. அஃதே இலங்கையில் அருள்மிகு அய்யனார் வழிபாடு. இலங்கைத் தீவு எங்கும் அருள்மிகு அய்யனாருக்கு ஆயிரக்கணக்கான கோயில்கள். நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் அய்யனார்கோயிலடி என்று இருக்கும்.

அருள்மிகு அய்யப்பனுக்குக் கார்கால நோன்பு, கார்த்திகையில் தொடங்கும் தைப்பொங்கல் வரை நீளும்.

வேண்டுதல்களை நிறைவேற்ற அருள்மிகு அய்யப்பன் நோன்பு இருப்பார்கள்.

இலங்கை அரசு இந்த மரபை ஒப்புக்கொண்டுள்ளது. அரசு ஊழியர் இக்காலத்தில் சீருடைகளைத் தவிர்க்கலாம். மழிக்காத முகம், நீறு அணிந்த நெற்றி, கார் நிற உடைகள், காலணி இல்லா நடைகள், சுவாமி ஆகிவிடும் அடியவர்கள்.

இலங்கைக் காவல் துறை ஊழியர்கள் வழமையான சீருடைகளைக் கைவிடலாம். காலணிகளைக் கைவிடலாம். கார் நிற உடைகளை அணியலாம். விடுப்பு எடுக்கலாம். பம்பை, சபரி மலை போய் வரலாம்.

சபரிமலை வழிபாட்டுப் பயணிகளுக்கு இந்திய அரசின் நுழைவு உரிமத்தைக் கட்டணமின்றி வழங்குவர்.

இலங்கைக் கல்வி அமைச்சில் இந்த நோன்பு கால மரபுகள், வழமைகள் ஒப்புக்கொண்ட விதிகள்.

ஆனாலும், கிறித்தவர்களுக்கு அருள்மிகு ஐயப்பன் சாத்தான் அல்லவா? சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியர் வினோத் கிறித்தவர்!

விடத்தல்பளை செல்வராசா பிரகாசம். (அவரின் தொலைப்பேசி +94 775085413) பன்னிரண்டாம் வகுப்பு மாணவன். 19 வயது. 12ஏ பிரிவு.

27 11 2018 காலை தேர்வு எழுதக் கல்லூரிக்கு வருகிறான்.

பிரகாசரின் தந்தையார், 'சுவாமி நன்றாகத் தேர்வு எழுதிவிட்டு வாருங்கள்' எனத் தன் மகனை வாழ்த்தி அனுப்புகிறார்

ஏனெனில் மாணவன் பிரகாசம் ஆண்டுதோறும் அருள்மிகு ஐயப்பன் நோன்பு கைக் கொள்பவன். அக்காலத்தில் அவனைச் சுவாமி எனவே வீீீட்டில் அழைப்பர்.

தேர்வு எழுத மேசையில் பிரகாசன் அமர்கிறான். வினாத்தாளைக் கொடுக்கின்றார் ஆசிரியர் வினோத். (அவரின் தொலைப்பேசி +94 770272554)

அவருக்கு மாணவன் சாத்தானாகத் தெரிகிறான். ஏனைய மாணவர்கள் முன்பு வினாத்தாளை கிழித்து வீசுகிறார். முகத்தை மழிக்காத அரும்பு முடிகள் வினோதரின் கண்களை உறுத்தின.

'நோன்பு முடிந்த பின்பு தேர்வு எழுத வா' என்று காட்டமாகக் கத்துகிறார்

மாணவனைத் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியே அனுப்புகிறார்.

மாணவனின் பெற்றோர் சிவசேனையிடம் முறையிடுகின்றனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் நிலையத்தினர் இந்துக் கல்லூரி முதல்வரின் அறைக்குச் செல்கின்றனர்.

அடுத்த அரைமணி நேரத்தில்,
பிரதேச சபை உறுப்பினர்
வலையக் கல்வி அலுவலர்
எனப் பலரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதல்வரின் கவனத்தை ஈர்க்கின்றனர்.

அடுத்த தேர்வு நாள் இன்று 29.11.
சாவகச்சேரி வலயக்கல்வி அலுவலகம் மாணவன் பிரகாசரைத் தொலைப்பேசியில் அழைக்கிறது.

இன்று 29.11 தேர்வு எழுதப் போகுமாறு கூறுகிறது எழுதாத தேர்வை மற்றும் ஒருநாள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்கிறது.

இந்துக் கல்லூரிக்குள் ஊடுருவிய கிறித்துவர் இந்து மரபுகளை உடைக்கிறார். முதல்வருக்கே தெரியாமல் நடவடிக்கை எடுக்கிறார்.

சைவ உலகம் பார்த்துக்கொண்டிருக்கலாமா? கொடுமை செய்த கிறித்தவ ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாவகச்சேரி வலையக் கல்வி அலுவலகத்துக்கு முறையிடுவது சைவ உலகத்தின் கடனாகும்.

பெற்றோரின் முறையீட்டைத் திரு மோகன் அவர்களிடம் சொன்னேன். பணியில் இருந்தார். எனினும் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் நண்பர்கள் பல முனைகளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதல்வருக்கு அழுத்தம் கொடுத்தனர்.

சாவகச்சேரி காவல் நிலையத்திலிருந்து என் வேண்டுகோளை ஏற்று இருவர் முதல்வரிடம் நேரில் சென்று சென்று விவரம் கேட்டனர்.

திரு மோகன் அவர்களுக்கும் காவல் நிலைய அன்பர்களுக்கும் சைவ உலகம் என்றும் கடப்பாடு உடையது.

Read more...

வசீம் தாஜூதீன் கொலை விசாரணையில் 1200 பேரிடம் வாக்குமூலம் பதிவு. 22 லட்சம் தொலைபேசி அழைப்புக்கள் சோதனை.

போதாக்குறைக்கு நாசாவின் உதவியும் கோரப்படுகின்றது.

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29) விசாரணைக்கு வந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக படுகொலை சம்பவத்தின் சாட்சிகளை மறைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தது சம்பந்தமாக குற்றம்சாட்ட முடியும் என்று இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு மனிதக் கொலை சம்பந்தமானது என்றும், கொலைச் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைக்க முடியாவிடின் வேறு வழக்கு தொடருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து நீதவான் வினவிய போது பதிலளித்த இரகசியப் பொலிஸார்,

இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை 1200 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 22 இலட்சம் தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்த இரகசியப் பொலிஸார், இது ஒரு சிக்கலான விசாரணை என்றும் தெரிவித்தனர்.

வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பின் தொடர்ந்து சென்ற வாகனங்கள் மற்றும் நபர்கள் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த இடத்தால் பயணித்த நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் செயற்கைக்கோள் புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு நாசா நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றம், இரகசியப் பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விசாரணைகள் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கையை சமர்பிப்பதற்கு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 திகதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Read more...

மைத்திரி-கரு சந்திப்பு நிறைவு பெற்றது. கட்சித் தலைவர்களுடன் தனித்தனியே சந்திப்பாம்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதிசெயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பானது இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் விதமாகவே அமைந்திருந்து.

சுந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டபோதும் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது. அத்துடன் நாளை 30.11.2018 மீண்டும் சந்தித்து பேசுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read more...

கௌரவத்துக்குரிய சுமந்திரன் கவனத்துக்கு! விஜய பாஸ்கரன்

மக்களுக்காக மக்களைக் காக்கப் போராடுபவனே போராளி, மாவீரன். புலிகள் யாருக்காகப் போராடினார்கள்? எங்கே எந்த இடத்தில் மக்களைக் காப்பாற்றினார்கள். மக்களுக்காக எங்கே உயிரிழந்தார்கள். அவரகள் உயிரிழந்தது இராணுவத்துடனான மோதல்களில் மட்டுமே. இராணவத்திடம் சிக்காமல் தவிர்க்க தற்கொலைகளும் செய்தார்கள். இவர்களுக்காக மக்கள் ஏன் கண்ணீர் சிந்தவேண்டும்? இவர்களால் மக்களே பலிக்கடாக்கள் ஆனார்கள். இந்த உண்மைகளை தெரிந்தும் சுமந்திரன் பேசலாமா?

சொந்த சகோதரர்களை, சக போராளி அமைப்புக்களின் உறுப்பினர்களை எப்படி எல்லாம் கொன்றனர் என்பதை சுமந்திரன் அறியாதவரா?
உயிரோடு நெருப்பிலே போட்டு எரித்தவர்களை கயவர்களை நினைவுகூர வேண்டும் என சட்டம் படித்த சிறந்த சட்டத்தரணியான சுமந்திரன் வாதம் பண்ணுவது நியாயமா?
இந்தக் கொடுமைகள் எதுவும் சுமந்திரன் அறியாதவரா?
புலிகளுக்காக நியாயம் பேசும் இவர் நல்ல சட்டத்தரணியாக இருப்பாரா? என்ற சந்தேகம் வருகிறது.

புலிகளுக்கு மக்கள்மீது அக்கறை இருந்ததா? மக்களைப் பலிகொடுத்து சர்வதேச அனுதாபங்களை தம்பக்கம் திசை திருப்ப எத்தனை கூத்தாடினார்கள். அதேநேரம் இராணுவத் தாக்குதல் நடாத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப எவ்வளவு நாடகம் போட்டார்கள். பல நூறு மக்களைப் பலிகொடுத்து ஒரு சில இராணுவத்தை கொன்று வீரம் பேசிய கோழைகளே புலிகள். இதை சுமந்திரன் அறியாதவரா?

இராணுவத்துடனான புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்ற கல்லூரி அதிபர் ஆனந்தராசாவைக் கொன்றார்கள். அடுத்த சில மாதங்களில் அதே ராணுவத்தோடு கைகுலுக்கி சந்தோசம் கொண்டாடினார்கள். நண்பர்களானார்கள். ஒரு கல்வியாளன் கொலைக்கு காரணமான புலிகள் எப்படி சுமந்திரனுக்கு மாவீரர்களாக தெரிகிறார்கள். சுமந்திரன் முட்டாள் அல்ல. ஆனால் மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார்.

மக்கள் பாதுகாப்புக்காக எச்சரிக்கையுடன் கூடிய அபாய மணியை புளட் யாழ் கோட்டையை அண்மித்த பகுதிகளில் அமைத்தது. அது மக்களுக்கு அபாய எச்சரிக்கை கொடுத்தது. அதை துப்பாக்கி முனையில் அகற்ற வைத்தவர்கள் புலிகள். மக்கள்மீது அவ்வளவு அக்கறை.

யாழ் பல்கலைக்கழக வாசலில் பிரதான அலுவலகம் திறந்தார்கள். அது பல்கலைக் கழகத்துக்கு ஆபத்து என்பது தெரியாதா? தெரிந்தே புலிகள் செய்தனர். இவர்களுக்கா மக்கள் நலனில் அக்கறை? இவர்களுக்காகவா சுமந்திரன் பேசுகிறார்.

வேம்படி மகளிர் கல்லூரி, மத்திய கல்லூரி அருகில் இருந்து கோட்டைக்கு செல் அடிக்கும்போது திருப்பி அடிக்கப்படும் பதில் குண்டுகள் கல்லூரிகளை மாணவர்களை பாதிக்கும் என உணராமல் உயிரிழப்புகளை விரும்பி மோசமாகவே நடந்த புலிகளுக்கு சுமந்திரன் நியாயம் பேசுகிறார்.

அனுராதபுர நகரில் நுழைந்து அப்பாவிச் சிங்கள மக்களை வீதி வீதியாக சுட்டுக்கொன்றது வீரமா? கென் பாம், டொலர் பாம் படுகொலைகள் வீரமா? இதெல்லாம் சுமந்துரனுக்குத் தெரியாதா? மனச்சாட்சியே இல்லையா?

எத்தனை எல்லைக் கிராமங்களில் அப்பாவி சிங்கள இஸ்லாமிய விவசாயிகள் புலிகளால் கொல்லப்பட்டனர். இவை தெரிந்தும் சுமந்திரன் இப்படிப் பேசலாமா?

இந்திய இராணுவத்துடனான மோதல்களை யாழ் வைத்தியசாலையை தளமாக பயன்படுத்தி பல உயிருழப்புகளுக்கு காரணமான புலிகள் மக்களுக்காக போராடினார்களா? வைத்தியசாலை, பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம் எதுவென பகுத்தறியாமல் தமது நடவடிக்கைகளை செய்த புலிகளுக்காக சுமந்திரன் பேசுவது எந்த வகையில் நியாயம்?

பூர்வீகமாக வடபகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய தமிழர்களை ஒரே நாளில் சொத்துக்களை சூறையாடிவிட்டு விரட்டிய புலிகள் போராளிகளா? காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் புலிகள் நடாத்திய கோர வெறியாட்டம் சுமந்திரன் அறியாதவரா? அப்பேர்ப்பட்ட கொடூரமான கொலைகார கும்பலுக்காக பாராளுமன்றத்தில் சுமந்திரன் பேசுகிறார். இத்தனை அராஜகங்களையும் சுமந்திரன் நியாயம் என்கிறாரா?

சமாதானம் பேசிக்கொண்டே படுகொலைகளை நம்பிக்கைத் துரோகமாக செய்தவர்கள் புலிகள். எந்த வகையிலும் நம்ப முடியாத புலிகளுக்காக பிரபல சட்டத்தரணி சுமந்திரன் பேசுவது அவமானம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுகளை புலிகள் நினைத்திருந்தால் எண்பதுவீதம் குறைத்திருக்கலாம். அந்த படுகொலைகளுக்கு அரசாங்கத்தைவிட புலிகளே பொறுப்பு. இதுவும் சுமந்துரனுக்குத் தெரியும்.

புலிகள் கோலோச்சிய காலத்தில் எங்கே எப்ப குண்டுகள் வெடிக்கும் என்று தெரியாது. அவர்கள் இராணுவத்தையும் கொல்வார்கள். பொதுமக்களையும் கொள்வார்கள். அப்படி ஒரு வாழ்க்கை.

பொதுமக்கள் நடமாடும் மத்திய வங்கியை குண்டு வெடிக்க வைத்து அழித்தார்கள். கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கினார்கள். எப்போதுமே மக்களை கேடயமாக்கி தமது வீரத்தை பறைசாற்றிய புலிகள் கோழைகளே. தங்களைக் காக்க மக்களைக் கேடயமாக பயன்படுத்திய புலிகளை சுமந்திரன் அறியாதவர் அல்ல.

நாளைய தேர்தலை எண்ணி இத்தனை தவறுகளையும் கண்டும் காணமல் சுமந்திரன் பேசுவது அவரது சட்டத்தரணித் தொழிலுக்கு அழகல்ல. அவரது கட்சி தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் தங்கதுரை, சரோஜினி யோகேஸ்வரன் போன்றவர்களை கொலை செய்ததும் இதே புலிகளே. இதையும் சுமந்திரன் அறிவார்.

சுமந்திரன் தனது சட்ட அறிவை நியாயத்துக்காக பயன்படுத்த வேண்டும். அநியாயத்துக்காக, அக்கிரமத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அது தொழில் தர்மம் அல்ல. மனிதாபிமானமும் அல்ல. இதற்காக சுமந்திரன் வெடகப்படுவார் என நம்புகிறேன். முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றுக்குள் மறைக்க முடியாது. சட்டம் படித்த சுமந்திரனுக்கு நாங்கள் சொல்ல வேண்டியதில்லை................................

Read more...

பொதுத் தேர்தலை நடாத்துவீர். கிளிநொச்சியில் மக்கள் பேரணி

நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த சூழ்நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையில் இழுபறிநிலை காணப்படும்போது, பொதுத்தேர்தலை நடத்துமாறு வலுயுறுத்தி மகிந்த கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி காக்கா கடை சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை பேரணியாகச் சென்ற மக்கள், பொதுத் தேர்தலை நடத்து, சபாநாயகரே பதவி விலகு, வேண்டும் வேண்டும் மகிந்த வேண்டும், ரணிலே வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பினர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட மக்களுடன், வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தர்மபால செனவிரத்ன உள்ளிட்டோரும் இப்பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





Read more...

இலங்கை தொடர்பில் பாரிய தவறிழைத்துவிட்டோம். பிரித்தானிய நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டது FACEBOOK

இலங்கை தொடர்பில் தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு பாரதூரமான தவறாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிங்களத்தில் பரவிய இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக பதிவுகளின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவை உங்களது நிறுவனத்தின் நியதிகளுக்கு புறம்பானது அல்லவா என எட்வின் எழுப்பிய கேள்விக்கு, ரிச்சர் அலன் ஒஆம்ஒ என ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான முகப்புத்தக பதிவுகள் பரவியதனால் பல உயிர் இழப்புக்களும், உடமைச் சேதங்களும் ஏற்பட்டதாக எட்வின் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பதிவுகளினால் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் இலங்கையில் முகப்புத்தகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு இறுதியில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முகப்புத்தக பதிவுகளை நீக்குமாறு, அப்போது இருந்த இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் வேண்டிக் கொண்ட போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் என்ன என அவர் வினவியுள்ளார்.

அதற்கு முகப்புத்தக பணியாளர் ஒருவரின் கவனயீனமே இதற்கான காரணம் என ரிச்சர்ட் அலன் பதிலளித்துள்ளார்.

Read more...

பிரதமர் காரியாலயத்திற்கான நிதியை நிறுத்தும் பிரேரணை நிறைவேறியது.

பிரதமர் செயலகத்துக்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை இன்று முற்பகல் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்மீதான விவாதத்தின் முடிவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். எந்தவொரு வாக்குகளும் எதிராக அளிக்கப்படவில்லை.

ஆழும் கட்சியினர் பாராளுமன்றை பகிஸ்கரித்துவரும் அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச தரப்புக்கு தாவிய அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி சுதந்திரமான உறுப்பினராக செயற்பட்ட அத்துரலிய ரத்தன தேரரும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றனர். இவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதேவேளை, மகிந்த தரப்புக்கு தாவி அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டபின், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்பி வந்த வசந்த சேனநாயக்க, இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அரசியலமைப்பிற்கு முரணான வகையில், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, பிரதமர் செயலகத்தையும், அரசாங்க வளங்களையும் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, பிரதமராக பதவியேற்ற பின்னர், கடந்த காலத்தில், உள்நாட்டில் உலங்குவானூர்திகளில் மேற்கொண்ட பயணங்களுக்காக, 800 மில்லியன் ரூபாவை செல்லவிட்டிருப்பதாகவும், அவர் தகவல் வெளியிட்டார்.

இந்தநிலையில், சட்டவிரோதமாக பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள, மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடு இடைநிறுத்துவது முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com