Friday, November 9, 2018

விக்கியின் நிலைமை மோசமடைகின்றது. உயர் நீதிமன்றும் கைவிரித்தது.

வடக்கு போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரன், முன்னாள் முதலைமைச்சர் விக்கினேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தன்னை பதவி நீக்கம் செய்தது தவறானது என டெனீஸ்வரன் நீதிமன்று சென்றிருந்தார். அவரது மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்று பதவி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்றும் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்தும் செயலாற்றலாம் என்றும் தீர்ப்பளித்தது.

மேற்படி தீர்ப்புக்கு எதிராக விக்கினேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விக்கினேஸ்வரனின் மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு சரியானது என நேற்று நிராகரித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தன்னை அமைச்சராக செயற்படவிடாது, நீதிமன்றை அவமதிக்கின்றார் என்று டெனீஸ்வரன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவ்வழக்க எதிர்வரும் 10 ம் திகதி விசாரணைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

குறித்த நேரத்துக்குள் பணியை முடிக்காத ஊழியர்களை சிறுநீர் குடிக்க வைத்த கொடுமை!

சீனாவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை செய்து முடிக்காத தொழிலாளர்களை சிறுநீரை குடிக்க வைப்பது, மொட்டை அடிப்பது என தனியார் நிறுவன அதிகாரிகள் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குயீஸோஹு மாகாணத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று பணியாளர்களை மிக மோசமாக நடத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இந்த உள்புற அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் சரியான முறையில் விதிமுறைகளை கடை பிடிக்காத ஊழியர்களுக்கு நாள்தோறும் கடுமையான தண்டனைகளை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், அளவுக்கு அதிகமான அபராதம் விதித்ததுடன், கொடூரமான தண்டனைகளையும் வழங்கியுள்ளது. குறைந்த சம்பளத்துக்கு அளவுக்கு அதிகமான நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சவரம் செய்து கொள்ளாதது, ஷு அணிந்து வராதது போன்ற காரணங்களுக்காக ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை அந்த நிறுவனம் பிடித்தம் செய்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை செய்து முடிக்காத ஊழியர்ளை சிறுநீரை குடிக்கச் செய்வது, கழிவறை தண்ணீரை குடிக்க வைப்பது, கரப்பான் பூச்சிகளை உயிருடன் சாப்பிட வைப்பது போன்ற தண்டனைகள் இந்த நிறுவனத்தில் சகஜமாக வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மற்ற ஊழியர்கள் கண் முன்பு இந்த தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடுமையான தண்டனைகளால் பணியில் இருந்து விலகிய சில ஊழியர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை மொபைல் போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். அதன் பிறகே அந்த நிறுவனத்தின் அடாவடி செயல் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் ஊழியர்களை கொடூரமாக நடத்திய மூன்று மேலாளர்களை கைது செய்தனர். சக தொழிலாளர்களிடம் மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு 10 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை பாரளுமன்றில் என்ன செய்யவேண்டும் என விசேட வகுப்பெடுக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகள், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை நீக்குவதற்ககாக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும், உடனே பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தாமதிக்குமானால் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கின்ற நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், முதலீட்டாளர்கள் இலங்கையை நாடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Read more...

Thursday, November 8, 2018

நாங்கள் மஹிந்தவிற்கோ ரணிலுக்கோ ஆதரவில்லை. ஆனால் ஜனநாயகத்திற்காக போராடுவோம். விஜித ஹேரத்

நாம் பக்க சார்பும் இல்லை மகிந்தவிற்கு ஆதரவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பெலவத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து பேசுகையில் :

நாட்டில் நடைபெறும் ஆட்சி சூதில் பிரதமர் ஆவதற்கு ரணிலுக்கோ மகிந்தவிற்கோ ஆதரவு அளிக்க போவது இல்லை.

ஜனநாயகத்தை காக்க பாராளுமன்றத்தினுள்ளும் வெளியேயும் நாம் போராடுவோம்.

ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக இனம், மதம், மொழி, அரசியல் முரண்பாடுகள் அத்தனையும் கடந்து பலமிக்க மக்கள் கூட்டத்தினை ஒன்றினைத்து போராடுவோம்.

ஜனவரி 8 ம் திகதி ஆதரவு அளித்த மக்களின் அபிலாஷைகள் தூக்கி எறியப்பட்டன. சுபீட்சமான அரசாங்கத்தை எதிர்பார்த்த மக்களுக்கு கிடைத்து ஏமாற்றமே.

இந்நிலையில் தற்போதைய பிரதமரின் நியமனமானது, அரசியல் யாப்பிற்கும், அரசியல் கலாச்சாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் முற்றிலும் முரணாகும்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானத்தின் படி நியமிக்கப்பட்ட பிரதமரையோ அமைச்சர்களையோ நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவது இல்லை.

இன்று கோடிகணக்கான பணத்திற்கு அமைச்சர்கள் விலைப்பேசப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Read more...

14 க்கு முன்னர் பாராளுமன்றை கூட்டமாட்டோம், ஆனால் 14ல் பிற்போடுவோம். லக்ஷ்மன் யாப்பா

எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டபடாது எனவும், 14ம் திகதி அமர்வின் பின் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் எனவும் புதிய அமைச்சரவையின் அமைச்சர் லக் ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் காரியாலயத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் , பாராளுமன்ற அமர்வின் போது கௌரவ ஜனாதிபதி அவர்களின் கொள்கை பிரகடனம் மட்டுமே முன் வைக்கப்படும், எனவும் ஏனைய கருமங்கள் எதுவுமே நடைபெறாது எனவும் கூறினார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில் பாராளுமன்றம் அமர்வின் பின் நடைபெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தின் போது ஏனைய அரசியல் நடைமுறைகள் பற்றி ஆராயப்படும் எனவும், நாட்டின் நிலவும் குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

Read more...

தலைவருக்கு வேண்டாமென்றால் எங்களுக்கு கபினட் வேண்டும். விமலின் சகாக்கள் ஒப்பாரி.

தேசிய சுதந்திர முன்னனி தலைவர் விமல் வீரவங்ச அமைச்சு பதவி எதுவும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கட்சி உறுப்பினர்கள் தலைவருக்கு அல்லாவிட்டால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு கபினட் வழங்கவேண்டும் என முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

நான் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற உறுதியில் இருக்கும் கட்சி தலைவர்க்கு மதிப்களித்து, அவருக்கு பதிலாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு பெற்றுக் கொடுப்பதே கட்சியின் உறுதி தன்மையினை காக்கும் என கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க கட்சிக்கு இருக்க கூடிய மிகப் பெரிய பலமே அமைச்சர் பதவியாகும் என்று தெரிவிக்கும விமலில் கட்சிக்காரார்கள் கட்சியின் சார்பாக அமைச்சு பதவி வகிக்காவிடின் கட்சியின் பலம் இழக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

Read more...

Wednesday, November 7, 2018

முவர் பதவியேற்றனர்.

மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் பங்குபற்றியிருந்தார்.

1. சமல் ராஜபக்ஷ - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
2. எஸ். பி. திஸாநாயக்க - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்
3. பவித்ரா வன்னியாரச்சி - பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்


இதேநேரம் ஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானியாக எச்.எம்.பி. ஹிட்டிசேகர ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான அவர், இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.







Read more...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்துள்ளாராம் மனோ கணேசன்.

சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் மைத்ரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி நிராகரித்திருக்கின்றது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் – சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே நேரடியாகவே தமது இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்தியதாக மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இதில் தானும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இனைத் தலைவர்களான திகாம்பரம்,பெரியசாமி ராதாகிருஸனண் உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் இந்த சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்துள்ள அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரி தங்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள மனோ, இந்த அழைப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமித்த மைத்ரிபால சிறிசேன தற்போது, மஹிந்தவிற்கு நாடாளுமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.

இதற்கமையவே இந்த சந்திப்புக்களை அவர் நடத்தி வருகின்றார். எனினும் மஹிந்தவின் பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு தேவையான நாடாளுமன்றில் 113 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாகியுள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன நவம்பர் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தச் சந்திப்பின் எம்மிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.

“முதலாவதாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார்.

இரண்டாவதாக, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கோரினார்.

மூன்றாவதாக, ஒருவேளை வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டாம், அவருடன் இணைந்து செயற்பட முடியாது என்று கோரினார்.


எனினும், இந்த மூன்று கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டோம். மகிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.

Read more...

“நடுத்தர வர்க்கம் ஒரு முற்போக்கான வர்க்கமல்ல” டேவிட் நோர்த், டெய்லி மிரர் நேர்காணலில். By Hafeel Farisz

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், லியோன் ட்ரொட்ஸ்கியையும் மற்றும் அவரது சர்வதேசியவாதத்தின் மீது தனது சித்தாந்த அடித்தளத்தைக் கொண்ட நான்காம் அகிலத்தின் தத்துவார்த்த தலைவருமான டேவிட் நோர்த், டெய்லி மிரர் பத்திரிகையுடனான உடன் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். புத்தக ஆசிரியரும் சர்வதேச சோசலிஸ்டுமான அவர் பல தரப்பட்ட விடயங்கள் குறித்து பேசினார், அவற்றின் தொகுப்பு கீழே பதிவிடப்படுகிறது.

கேள்வி: டேவிட், உங்களை இந்த நேர்காணலுக்கு வரவேற்கிறோம், இது மாதிரியான ஒரு நேர்காணல் இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். தொடக்கக் கேள்வியாக, இலங்கையின் “இடது” அதாவது சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து பேசும்போது, அவர்கள் தத்துவத்தில் தான் குறியாக இருக்கிறார்கள் என்பது முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஒரு தத்துவமானது இலங்கையில் பரந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் தோல்வி கண்டு வந்திருக்கிறது. அந்த செய்தி அவர்களுக்கு சென்று சேர்ந்திருக்கவில்லை என்பதை நீங்கள் உணர முடியும். நாம் இடது என்று கருதுகின்றவர்கள் ஏன் இன்னும் தத்துவார்த்தக் குமிழியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்கள் கேள்வியை முன்வைக்கும் விதத்தை நான் வெளிப்படையாகவே விமர்சனத்துடன் அணுக வேண்டியிருக்கிறது. அது ஒருவர் அரசியலை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பதில், அரசியலுக்கும் தத்துவத்திற்குமான உறவை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்திருக்கிறது. நான் இப்படிச் சொல்கிறேன். நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த தத்துவம் பற்றி விரிவுரைகளை நடாத்துவதற்காகத் தான் நான் இலங்கை வந்திருக்கிறேன்.

ஒரு அரசியல் கட்சியைக் கட்டியெழுப்புவதென்பது மிகவும் சிக்கலானதொரு நிகழ்ச்சிபோக்கு. அது, ஒரு தொழிலதிபர் விடுதியைக் கட்டுவது போன்றதல்ல. ஒருவர் அரசியலைக் கையாளும்போது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட மிக மிக சிக்கலான நிகழ்ச்சிபோக்குகளை அவர் கையாளுகிறார். எழுகின்ற புறநிலை நிகழ்ச்சிபோக்குகளையும், பரந்த மக்களின் அரசியல் அனுபவம் தொடர்பான விடயத்திலான வெவ்வேறு தாக்கங்களையும் கூட ஒருவர் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இப்போது, எம்மை பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டு தான் வரலாற்றில் மிகவும் புரட்சிகரமானதாகும்.

அதனை உலகப் புரட்சியின் நூற்றாண்டு என்றும் நீங்கள் சொல்லலாம். பாரிய சோசலிச இயக்கம் தொழிலாள வர்க்கத்தை தழுவிக் கொண்டிருந்தது.

சந்தேகத்திற்கிடமின்றி ரஷ்யப் புரட்சிதான் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வு ஆகும்.

அக்டோபர் புரட்சியும், போல்ஷிவிக்குகள் அதிகாரத்துக்கு வந்து வரலாற்றின் முதன்முதல் தொழிலாளர் அரசு நிறுவப்படுவதில் முடிவடைந்ததும் ரஷ்யாவை உருமாற்றி சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்ததுடன் மட்டுமல்ல அது தீவிரமான உலகளாவிய பின்விளைவுகளையும் கொண்டிருந்தது. அரசியல் உலகெங்கிலும் மாற்றம் கண்டது. இது உலக சோசலிசப் புரட்சியின் தொடக்கமென போல்ஷிவிக்குகள் நம்பினார்கள், பல அடிப்படையான அம்சங்களில், அவர்களின் நம்பிக்கை சரியானதாகவே இருந்தது.

பரந்துபட்ட மக்கள் ஸ்தாபக அரசியல் கட்சிகளுடன் மோதலுக்குச் செல்லவிருக்கிறார்கள் என நாங்கள் நம்புகிறோம், எமது வேலை அதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இப்போது அது உத்தரவாதமான வெற்றி அல்ல என்றாலும் அது ஒரு முன்னோக்கிய பாதையை காட்டுகிறது.

இருந்தும், நூற்றாண்டின் முடிவுவாக்கில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு விட்டிருந்தது என்பதை அறிவோம். பாரிய சமூகப் புரட்சிக்குள் சென்ற சீனாவும் முதலாளித்துவத்தின் மீட்சிக்குள் சென்றது என்பதையும் அறிவோம்.

இது எவ்வாறு விளக்கப்பட முடியும்? அதாவது பரந்துபட்ட மக்கள் குறித்து நீங்கள் கேட்கிறீர்களாயின், அவர்கள் இப்போதுள்ள உலகமான, பாரிய சமத்துவமின்மையும் சொத்து ஒரு மிகச்சிறு உயரடுக்கிடம் குவிந்திருப்பதாகவும் இருக்கின்ற உலகுடன் அதிகமான அளவில் அதிருப்தியுற்று இருக்கின்றனர். இருந்தாலும் சோசலிச இயக்கத்தின் தலைவிதி குறித்த புரிதலின்றி எப்படி அவர்கள் சோசலிசத்தை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியும்?

அதைக் குறித்த எந்த விவாதமும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் தலைவிதியை முன்கொண்டு வருகிறது. அது இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரம்மாண்டமான அரசியல், தத்துவார்த்தப் போராட்டமாக இருந்தது. உலகின் சோசலிசப் புரட்சியில் இருந்து தனிமைப்பட்டு தனியொரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டியெழுப்பி விட முடியும் என்று கூறியதொரு அதிகாரத்துவத்தின் பிரதிநிதியாக ஸ்ராலின் அதிகாரத்துக்கு வந்தார். 1917 இல் போல்ஷிவிக் புரட்சிக்கு வழிவகுத்திருந்தவற்றுக்கு நேர்மாறாக இருந்த இந்த கொள்கைகளில் இருந்து பிறந்தவை உலகெங்கிலும் சோசலிசத்தின் தலைவிதியுடன் பிணைந்து கொண்டன. இது நாடு மாற்றி நாடாக தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்விகளை உருவாக்கியது.

ஜேர்மனியில் பாசிசம் அதிகாரத்துக்கு வந்தது, உலகப் போர் வெடித்தது. தொழிலாள வர்க்கம் பாரிய தோல்விகளை சந்தித்தது. அந்த சமயத்தில், ட்ரொட்ஸ்கிசம் ஒரு சில நாடுகளில் மட்டுமானதாக, ஒரு சிறு சிறுபான்மையாக இருந்தது. ஆயினும், நான்காம் அகிலம் தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த முன்னோக்கினை புறநிலை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன. ஆகவே இந்த படிப்பினைகளை விளக்குகின்ற, அவற்றை உட்கிரகிப்பதன் மூலமாக ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப இயலுகின்ற ஒரு வரலாற்று நிலைப்பாடு முக்கியமானதாகும். இவை சிக்கலான பிரச்சினைகள் ஆகும். இது புரட்சிக்கு திரும்பக் கொடுக்கும் செய்தி என்ன? தொழிலாள வர்க்கத்திற்கு அதை திரும்பக் கொண்டுவரப் போகின்ற ஆற்றல்மிக்க சக்திகள் என்ன? நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகப் பொருளாரத்தின் அடிப்படையான புறநிலை சக்திகளும் அரசியல் சக்திகளது நிலைமுறிவும் தான்... அவையாகும்.

கேள்வி: ஆனால் நீங்கள் கூறுகின்ற இந்த அத்தனை புறநிலை சக்திகளும் அதற்கு நேரெதிரானதற்கு வழிவகுத்துக் கொண்டிருப்பதைத் தானே நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். வலதுசாரி இயக்கங்களின் எழுச்சியை மற்றும் அவை உலகெங்கிலும் பூகோளமயமாக்கலின் நிராகரிப்பை?

பதில்: முதலில் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருப்பது அடிப்படையாக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியை ஆகும். முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைமுறிவையை நாம் இப்போது கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம். இதுவே நான்காம் அகிலத்தின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்தது, ஏனென்றால் அச்சமயத்தில் பேரிடருக்கு இட்டுச் சென்ற முதலாளித்துவ ஜனநாயகம் பாதுகாக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது. ஆயினும் நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலாளித்துவ ஜனநாயகத்தின் முறிவு என்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு ஆழமான மற்றும் அடிப்படையானதொரு நோயின் ஒரு வெளிப்பாடே ஆகும்.

இப்போது, வலதுசாரிகள் எவ்வாறு வேகம் பெற்றுக் கொண்டிருக்கின்றன? ஏனென்றால் “இடது இயக்கங்களாக” கூறப்பட்டவை உண்மையாகவே இடதுகளாக இல்லாத காரணத்தால்; இது உண்மையில் அடிப்படையாக தொழிலாள வர்க்கத்தை கைவிட்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் கைவிட்டிருக்கின்ற அத்துடன் அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் அரசியலைக் கையிலெடுத்திருக்கின்ற கட்சிகள் அனைத்தின் மீதுமான ஒரு குற்றப் பத்திரிகையாகவே இருக்கிறது. அடையாள அரசியலை பிரச்சாரம் செய்கின்ற சமூக அடுக்கை பகுப்பாய்வு செய்து பார்த்தால், அது உண்மையில் நடுத்தர வர்க்கத்தின் அரசியலாகவே இருக்கிறது. அவர்கள் உண்மையாகவே தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினைகளைப் பற்றி கவனமெடுப்பதில்லை. அமெரிக்காவில் நிலைமையை எடுத்துப் பாருங்கள்.

ட்ரம்ப் எப்படி அதிகாரத்திற்கு வந்தார்? ஒரு முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் தொழிலாள வர்க்கத்துக்கென எந்த வேலைத்திட்டமும் இல்லை, அது சந்தைப் பொருளாதாரத்திற்கும் அமெரிக்காவின் இராணுவவாதத்திற்குமே ஆதரவளிக்கின்றது.

போர் சீனாவுடன் புரிய வேண்டுமா அல்லது ரஷ்யாவுடனா என்பதுதான் டொனால்ட் ட்ரம்ப்புடன் அவர்களுக்கு இருக்கும் ஒரே கருத்துவேறுபாடாகத் தெரிகிறது. தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளைக் குறித்து எவரொருவரும் பேசுவதில்லை. வேலைவாய்ப்பின்மை, சமூக சமத்துவமின்மை குறித்து அவர்கள் எங்கே பேசுகிறார்கள்? இந்த வெற்றிடத்தை வலதுசாரி கூறுகள் சுரண்டிக் கொள்கின்றன. பாலின அரசியலை இடதுகள் பேசுகின்ற ஒவ்வொரு சமயமும், அவர்கள் பேசுவது நடுத்தர வர்க்கங்களது பிரச்சினைகளை என்பதால், அது தங்களுக்கே உதவிகரமாக ஆகிறதென்று, ஸ்ரீவ் பானன் சமீபத்தில் கூறினார்.

பிரட் காவனோ (Brett Kavanaugh) குறித்த சர்ச்சையை எடுத்துப் பாருங்கள். அவர் முற்றிலும் கடுமையான ஒரு பிற்போக்குவாதி, சித்திரவதை வேலைத்திட்டத்தை வடிவமைக்க உதவியவர், வலதுசாரி அரசியல்வாதிகளில் மிகமோசமான வகையைச் சேர்ந்தவர். ஆனாலும் ஜனநாயகக் கட்சியினர் 35 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அல்லது நடந்திராத ஒரு சம்பவம் குறித்த குற்றச்சாட்டை வைப்பதற்கு ஏன் தெரிவுசெய்தனர். ஏன் அவர்கள் அதனைச் செய்ய வேண்டும்? ஏனென்றால் ஆழமான வர்க்க காரணிகளின் அடிப்படையில் கவனாவை எதிர்ப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்திற்கு அவர்கள் கோரிக்கை விடவில்லை. மாறாக அதி ஜனநாயக விரோதமான ஒரு பாலியல் அரசியலில் மூழ்கிக் கிடக்கும் ஒரு உயர்-நடுத்தர வர்க்கத்து அடுக்கிடம் அவர்கள் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தனர். அது பரந்த மக்களுக்கு கோரிக்கை விடுகின்ற ஒரு அரசியல் அல்ல.

போர் சீனாவுடன் புரிய வேண்டுமா அல்லது ரஷ்யாவுடனா என்பது தான் டொனால்ட் ட்ரம்ப்புடன் அவர்களுக்கு இருக்கும் ஒரே கருத்துவேறுபாடாக இருப்பதுபோல் தெரிகின்றது. தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகளைக் குறித்து எவரொருவரும் பேசுவதில்லை.

கேள்வி: மறுபடியும் எனது அடிப்படைக் கேள்விக்கு திரும்புகிறேன், ஏன் உங்களது மார்க்சிச, லெனினிச சக்திகள் இன்று பரந்த மக்களை ஈர்க்க முடியாதிருக்கிறது?

பதில்: கடந்த ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் நாங்கள் மிகப்பெருமளவுக்கு உள்நுழைந்திருக்கிறோம். அத்தனை பெரிய சக்திகளிடம் இருந்துமான தொடர்ச்சியான தடைகளைத் தாண்டியும் உலக சோசலிச வலைத் தளம் உலகின் மிகவும் பரவலாக வாசிக்கப்படுகின்ற ஒரு வெளியீடாக இருக்கிறது. ஒரு உலகளாவிய பார்வையாளர்களுக்கு நாங்கள் பொறுப்பேற்று வந்திருக்கிறோம், இன்னும் அது பாரிய எண்ணிக்கையாகவில்லை தான் என்றாலும் வருங்காலத்தில் அது அவ்வாறு ஆகும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. 30 வருடங்களாக தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களால் அடக்கப்பட்டு வந்திருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீன இயக்கத்தையும் தடுப்பது என்பது ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காக இருக்கிறது. இப்போது 30 ஆண்டுகளில் முதல்முறையாக, வர்க்கப் போராட்டத்தில் ஒரு மீளெழுச்சியையும் தொழிலாள வர்க்கம் தீவிரப்பட்டு செல்வதையும் நீங்கள் காணமுடியும். அமெரிக்காவில் சூழ்நிலை மிகவும் முரண்பாடான ஒன்றாக இருப்பதை நீங்கள் அறியலாம். பேர்னி சாண்டர்ஸ் என்ற நபரை எடுத்துப் பாருங்கள், எனது கண்ணோட்டத்தில் அவர் ஒரு சோசலிஸ்ட் அல்ல, ஆனால் அவர் அரசியல் புரட்சி குறித்து பேசுகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அவர் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் டொனால்ட் ட்ரம்ப்பை எளிதாக தோற்கடித்திருப்பார், ஆனால் ஜனநாயகக் கட்சிக்கு எந்த உருப்படியான சீர்திருத்த வேலைத்திட்டத்திலும் ஆர்வமில்லை என்பதால் அவர் வேட்பாளராகவில்லை. ஆயினும் அவர் பெருமளவில் திசைதிருப்பும் ஒன்றாக இருந்தார், ஏனென்றால் அவர் ஜனநாயகக் கட்சி என்ற ஒரு பெரும் கட்சியை சார்ந்தவராக இருந்தார். சமூக நிகழ்ச்சிப்போக்குகள் மிகவும் சிக்கலானவை என்பதை உங்களுக்கு காட்டுவதற்காகவே இதை எழுப்பினேன், சோசலிசத்தை நோக்கி எந்த அனுதாபமும் இருக்காது என்று கருதப்பட்டு வந்திருக்கின்ற நிலமான அமெரிக்காவில், சோசலிஸ்டாக தன்னை சொல்லிக் கொள்கின்ற ஒரு மனிதரால் அவர் பெற்ற அளவுக்கான ஆர்வத்தைத் திரட்டுவதற்கு இயன்றது. உண்மையில் அவர் ஒரு சோசலிஸ்டா அல்லது இல்லையா என்பது முற்றிலும் வேறொரு விடயம். இப்போதைய பிரச்சினை என்னவென்றால், சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி காணுகின்ற நிலையில், புதிய நிலைமைகள் எழும். நாம் இப்போது கண்டுகொண்டிருப்பது சமூக சக்திகளின் ஒரு மறுஅணிதிரளலாகும்; பழைய ஒழுங்குமுறை நொருங்கிக் கொண்டிருக்கிறது.

கேள்வி: இந்த இடத்தில் குறுக்கிடுகிறேன் டேவிட், எப்போதுமே இதுதானே கம்யூனிஸ்டுகளின் அழைப்பாக இருந்து வந்திருக்கிறது? புரட்சி தவிர்க்கமுடியாதது என்றும் வெகுவிரைவில் நடக்கவிருக்கிறது என்றும்; இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகமயமாக்க மேலாதிக்கத்தை தொடர்ந்து வந்த சமூக நிலைமைகள் அத்தியாவசியமாக சோசலிசப் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும்; இலங்கையில் கூட 60கள் மற்றும் 70களில் நடந்தவை நடக்கின்ற வரை, இதுதானே சுலோகமாக அல்லது நம்பிக்கையாக இருந்தது?

பதில்: அரசியல், தலைமையில் இருந்து சுயாதீனமாக அது தவிர்க்கமுடியாது நடந்தேறி விடும் என்ற அர்த்தத்தில் நீங்கள் சோசலிசம் தவிர்க்கமுடியாததா என்று கேட்கிறீர்களாயின், இல்லை சோசலிசம் தவிர்க்கமுடியாதது அல்ல. தவிர்க்க முடியாதது என்னவென்றால், முதலாளித்துவத்தை ஆளுகின்ற விதிகளின் செயற்பாடுகளின் மூலமாகவே முதலாளித்துவம் தீவிரமானதும் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதாகும். நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது வர்க்கங்களுக்கு இடையிலான, சமூக சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலின் சமூக நிகழ்ச்சிபோக்குகள் குறித்ததாகும். ஆளும் உயரடுக்கினர் அவர்களது குழப்பங்களில் இருந்து மீளுகின்ற வழிகளைத் தேடுவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். பிரச்சினை என்னவென்றால், முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாக அவர்கள் காண விழைகின்ற தீர்வுகள் மனிதகுலத்திற்கு உதவுவதாக இல்லை, பொதுவாக பேரழிவுகரமான பின்விளைவுகளையே கொண்டதாய் இருக்கின்றன.

கேள்வி: ஏற்கனவே நாம் அதனை ஸ்தாபித்திருக்கிறோம்...

பதில்: ஆம் செய்திருக்கிறோம். ஆயினும் நாம் என்ன அனுபவத்தை பெற்றிருக்கின்றோம் என்றால், இப்போதிருக்கும் அமைப்புமுறையில் ஒரு குறுகிய நலனைக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகள், ஒரு உண்மையான சோசலிச இயக்கம் எழுந்து விடுவதைத் தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன. இப்போது புரட்சிகர சக்திகள் தாமாகவே இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியில் வருவதற்கான ஒரு வழியைக் காணுகின்ற முயற்சிக்கு முன்முயற்சி எடுத்தாக வேண்டியிருக்கிறது. 1990களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இது நடப்பதை நாங்கள் கண்டோம். இணையத்தை தழுவிக் கொண்ட முதன்முதல் வெளியீடுகளில் ஒன்றாக நாங்கள் இருந்தோம். எமது அமைப்பின் ஸ்தாபகம் தொடங்கி நாங்கள் பத்திரிகைகளை அறிமுகப்படுத்தி வந்திருக்கிறோம், இணையம் ஒரு பரவலான வாசகர்களை சென்றடைவதற்கான வாய்ப்பை வழங்கியதை நாங்கள் கண்டோம், ஆகவே அதனை கைகளில் எடுத்துக்கொண்டோம்.

கூகுளின் கடுமையான தணிக்கையை -அதனை நாங்கள் ஆவணப்படுத்தியிருக்கிறோம்- தாண்டியும், எங்களுக்கு உலகெங்கிலும் பரவலான வாசிப்பு இருக்கிறது. எங்களது வாசகர் எண்ணிக்கை இப்போதும் நீடிக்கிறது. பரந்த மக்கள் ஸ்தாபகமான அரசியல் கட்சிகளுடன் மோதலுக்கு வரப் போகிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம், அதனை அடிப்படையாகக் கொண்டே எங்களது வேலைகள் அமைந்திருக்கின்றன. அது உத்தரவாதமான வெற்றியை இப்போது காட்டவில்லை என்றாலும் கூட ஒரு முன்னோக்கிய வழியை அது காட்டுகிறது. இரண்டு காரணிகளை நாங்கள் கணக்கில்கொள்கிறோம். ஒன்று, முதலாளித்துவ அபிவிருத்தியின் புறநிலைக் காரணிகள், இரண்டாவது அந்தக் காரணிகள் இப்போது நாம் கண்ணுற்றுக் கொண்டிருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கலில் சென்று முடியவுள்ளது.

இந்த அமைப்புமுறைக்குள்ளாக, சோசலிச அமைப்புமுறையிலான ஒரு புதுப்பித்த ஆர்வம் வரவிருக்கிறது. ஒரு போராட்டம் அதன் பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்பதை தொழிலாளர்கள் ஏறக்குறைய உள்ளுணர்வுரீதியாக புரிந்துகொள்கின்றனர். ஆர்ப்பாட்டம் செய்து விட்டு பின் வீட்டுக்குப் போய் ஒரு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்ற ஒரு நடுத்தர வர்க்க மாணவரின் கண்ணோட்டமல்ல இது. வேலைகளும், வாழ்க்கைகளும் ஆபத்தில் இருக்கின்றன என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு அரசியல் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கட்சி எவ்வாறு தன் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது? முதலாவதாய் அதற்கு போராடுவதற்கு திறமிருக்கிறது, ஒரு சரியான வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்கு திறமிருக்கிறது என்பதை விளங்கப்படுத்துவதன் மூலமாகவும், அத்துடன் அதன் வரலாற்றில் அது கோட்பாடுகளைத் தாங்கிப் பிடித்து வந்திருக்கிறது என்று விளங்கப்படுத்துவதன் மூலமாகவும். ஆகவே இப்போது அமெரிக்காவில் மேலும் மேலும் அதிகமான மக்கள் எங்களது வேலைத்திட்டத்தில் ஆர்வம் கொள்வதை நாங்கள் காண்கிறோம்.

அவர்கள் ஒரு சோசலிசக் கட்சியுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை ஒரு வருடத்திற்கு முன்பாக அவர்களால் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடிந்ததில்லை என்று அவர்களில் பலரும் எங்களிடம் சொல்லியிருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது தெரியும், இந்த வாதத்தையும் நான் மிக அடிக்கடி கேட்டுமிருக்கிறேன், ஆனாலும் அரசியல் ஒரு மிக மிக சிக்கலானதொரு களம். நாங்கள் வெற்றிகரமாக இருந்திருக்கவில்லை என்று சொல்கிறீர்கள், நான் அதில் உடன்படவில்லை.

கேள்வி: அது ஒரு சிக்கலான நிகழ்ச்சிப்போக்கு என்ற உங்களது வாதத்தை ஏற்றுக் கொள்வோம். ஆனாலும் பரந்த மக்களிடம் நல்லபிப்பிராயம் பெறுகின்ற சக்திகளை உலகெங்கும் காண்கிறோம். என்னுடைய முக்கியமான சங்கடம் என்னவென்றால் கடுமையான இடதுகளிடம் இருந்தான தத்துவார்த்த தூய்மை மீதான வலியுறுத்தல். இப்போது கோர்பின் உதாரணத்தை, அல்லது பிரான்சில் மெலோன்சோன் உதாரணத்தை, இன்னும் சாண்டர்ஸின் உதாரணத்தையும் கூட எடுத்துப் பார்க்கலாம், அவர்கள் பரந்த மக்களிடம் ஈர்ப்பைப் பெற முடிந்திருக்கிறது. ஆனாலும் கூட, கடுமையான இடதுகள் தத்துவார்த்த தூய்மை மீதே தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருப்பதாக, அவர்களை நிராகரிப்பதாக தெரிகிறது. இலங்கையை எடுத்துப் பார்த்தீர்களென்றால் சோசலிச சமத்துவக் கட்சி எந்த வெற்றிகளையும் அடைந்திருக்கவில்லை. அதன் தூய்மை குறித்து உங்கள் முதுகை நீங்களே தட்டி பாராட்டிக் கொள்ளலாம், ஆனால் உண்மை என்னவென்றால் அவை எந்த வெற்றிகளையும் அடைந்திருக்கவில்லை.

பதில்: இந்த விவாதத்தை நான் வரவேற்கிறேன் என்பதை நான் சொல்லியாக வேண்டும். நான் மனம் புண்படவில்லை, இது மிக அடிப்படையான மற்றும் அதிமுக்கியமான பிரச்சினை. இடதுகளின் பிரச்சினை என்பது, தத்துவார்த்த தூய்மையைத் தவிர்ந்த வேறெதுவுமில்லை என்பதை முதலில் நான் தெளிவாக்க விரும்புகிறேன்.

சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகின்றதான கோட்பாடற்ற கூட்டணிகளை ஸ்தாபிப்பது, ஒரு அரசியல் சூழ்நிலை குறித்த சரியான புறநிலை மதிப்பீட்டிற்கு பொருந்தியிராத எளிமையான மற்றும் துரிதமான தீர்வுகளை தேடுவது அதுவே உண்மையான பிரச்சினை. கோர்பின் அல்லது சாண்டர்ஸ் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பரந்துபட்ட மக்கள் தீவிரமயப்பட தொடங்கும்போது, பரந்துபட்ட மக்களின் கோபத்தை, இறுதியில் ஸ்தாபகத்திற்கு சவால் விடுவதாய் அமையாத அரசியல் பாதைகளில் திருப்பிவிடுகின்ற பாதுகாப்பு வழிமுறைகள் (safety models) எழத் தொடங்குகின்றன என்பது இப்போது நன்கறிந்ததாக இருக்கிறது.

பரந்துபட்ட மக்கள் அரசியலுக்குள் பெருமளவுக்கு தத்துவார்த்த அறிவை சுமந்து கொண்டு வருவதில்லை, அரசியல் வரலாறு அல்லது நிகழ்ச்சிபோக்குகள் குறித்த விழிப்பு இன்றியே வருகிறார்கள் என்று நீங்கள் சொல்வது சரிதான். பரந்த மக்கள் அவ்வாறு தொடங்குவதில்லை, அவர்கள் ஆரம்பத்தில் ஏமாற்றுக்காரர்களுக்கு தங்கள் விசுவாசத்தை கொடுக்கலாம். ஒரு மனிதர் புற்றுநோயால் தாக்கப்பட்டிருக்கும்போது அவர் ஏறக்குறைய எவர் சொல்வதையும் கேட்பதற்கு தயாரிப்புடன் இருப்பார். அத்துடன், வகைவகையான சிகிச்சைகளும் பிரபலமடைகின்றன. அவற்றின் பின்னால் போவது ஒரு நல்ல அரசியல் கட்சியின் கடமையாக இருக்காது. ஒரு ஸ்தூலமான உதாரணத்தை எடுத்துப் பார்ப்போம், சிரிசா (கிரேக்க இடது சாரி கட்சி) அரசியல் புரட்சியின் வாக்குறுதியுடன் வந்தது. நாங்கள் அதனை எதிர்த்தோம், சிரிசா மக்களை காட்டிக் கொடுக்கும் என்று முன்னராகவே நாங்கள் கூறினோம். அது நடந்தேற பல வருடங்கள் ஆகவில்லை, வாரங்களே பிடித்தது. அதன் பின்விளைவுகளை நாம் கண்டோம். ஜெரிமி கோர்பினும் அதேபோன்றதொரு இன்னொரு உதாரணம், அவர் தாக்குதலுக்கு உள்ளாகும்போது பதுங்குவதுதான் அவரது பிரதிபலிப்பாக இருக்கிறது. வலதுசாரிகள் தான் இப்போதும் தொழிற் கட்சியை (Labour Party) கட்டுப்படுத்துகின்றனர், அவர்கள் தான் எப்போதும் கட்டுப்படுத்துவார்கள். பரந்துபட்ட மக்கள், தங்களுக்கு தொடர்ச்சியாக கல்வியூட்டி தங்களின் நம்பிக்கையை வென்றெடுக்க விழைகின்ற ஒரு கட்சியின் ஊடாக கற்றுக் கொள்கின்ற சமயத்தில், அவர்கள் இந்த அனுபவங்களைக் கடந்து செல்கின்றபோது, தங்களின் தவறுகளின் ஊடாகக் கற்றுக்கொள்கின்றனர். நான் இப்போது உங்களிடம் முன்வைக்கும் கேள்வி என்னவென்றல், மாற்றீடு என்ன? என்பதுதான். ஏனென்றால் உங்கள் வாதத்தை நீங்கள் முன்வைக்கும்போது “உங்களால் தோற்கடிக்க முடியவில்லையா அப்படியானால் அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்” என்பது தான் அதற்கு அடிப்படையாக இருக்கிறது.

இப்போது இலங்கையில் உள்ள எமது சோசலிச சமத்துவக் கட்சித் தோழர்கள் குறித்து நீங்கள் சொன்னீர்கள், அவர்களை நான் பாதுகாத்தாக வேண்டும். அவர்கள் பரந்த மக்களின் நம்பிக்கையை இன்னும் வென்றெடுக்க முடிந்திருக்கவில்லை என்பது உண்மையே, ஆனால் அவர்களின் நிலைப்பாடுகள் என்னவாக இருந்து வந்திருக்கின்றன? அவர்கள் தமிழ் தேசியவாதத்தை எதிர்த்தனர், சிங்கள பேரினவாதத்தை எதிர்த்தனர். ட்ரொட்ஸ்கி ஒருமுறை சொன்னார், “மற்றவர்களுக்கு நாம் பொறுப்பெடுக்க முடியாது, நமக்கு மட்டுமே நாம் பொறுப்பெடுக்க முடியும்”. ஒரு கோட்பாட்டுரீதியான நிலைப்பாடு ஒரு குறுகிய நடைமுறைவாத பலனாக உடனடியாக மாற்றம்காணவில்லை என்ற உண்மையானது ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான வாதமாகி விடாது. நீங்கள் வரலாற்றில் திரும்பிப் பார்த்தால், 1914 இல் லெனின் போரை எதிர்த்தபோது அவர் ஒரு சிறிய சிறுபான்மையின் பகுதியாக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும், இப்போது நீங்கள் அதனை திரும்பிப் பார்த்தால், ஆதரவுகுறைந்த ஒரு நிலைப்பாட்டை பாதுகாப்பது அதிலும் ஒரு சிறுபான்மையில் இருந்து கொண்டு அதனைச் செய்வது என்ற என்ன ஒரு அரிய நிலைப்பாட்டை அவர் எடுத்தார் என்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப்பாருங்கள்.

நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பது வர்க்கங்களுக்கு இடையிலான, சமூக சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலின் சமூக நிகழ்ச்சிபோக்கு குறித்ததாகும். ஆளும் உயரடுக்கினர் அவர்களது குழப்பங்களில் இருந்து வெளியேறுகின்ற வழிகளைத் தேடுவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். பிரச்சினை என்னவென்றால், முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாக அவர்கள் காண விழைகின்ற தீர்வுகள் மனிதகுலத்திற்கு உதவுவதாக இல்லை, பொதுவாக பேரழிவுகரமான பின்விளைவுகளையே கொண்டதாய் இருக்கின்றன.

கேள்வி: இந்த நேர்காணலின் ஆரம்பத்தில் நான் கேட்ட பதில் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை...

பதில்: அதை நான் சொல்லிக் கொண்டு தான் வந்திருக்கிறேன், நீங்கள் தான் செவிமடுத்திருக்கவில்லை....

கேள்வி: உள்ளூர் இயக்கங்கள் உண்மையான சர்வதேசியமயமானவையாக இருப்பதில் இருந்து வெகுதூரத்தில் இருக்கின்றன, முற்போக்கு அரசியலில் இருந்து வெகுதூரத்தில் இருக்கின்றன என்பது, நடுத்தர வர்க்கத்திடையே, குறைந்தபட்சம் இலங்கையிலேனும் என்று கூறலாம், மார்க்சிச-லெனினிச இயக்கங்களுக்கு எதிரான பிரதான வாதங்களில் ஒன்றாக இருக்கிறது. இடது என்று சொல்லப்படுவனவற்றின் சமீபத்திய போராட்டங்களை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்களென்றால், சர்வதேச அல்லது முற்போக்கு சித்தாந்தத்தின் அல்லது தொழில்நுட்பத்தின் மிக அடிப்படையானதொரு கூறு இல்லாதிருக்கிறது. இந்த வார்த்தையை பயன்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டும், ஆனால் அது உண்மையாக என்னவாய் இருக்கிறதென்றால், ஒரு உயிரினமாக நாம் அத்தனை முன்னேற்றங்களையும் கண்டிருக்கிற போதிலும், சோசலிசம் கிராமம் போன்ற ஒன்றாக இருக்கின்றது. இது எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: நீங்கள் பேசுவது, போலி இடது என்ற சர்வதேச நிகழ்வுப்போக்கின் இலங்கையிலான ஒரு வெளிப்பாட்டைக் குறித்ததாகும். ஃபிராங்க்பேர்ட் சிந்தனைப் பள்ளியின் ஒரு இழையாக அடையாளம் காணத்தக்க ஒரு போலி இடது குறித்து நான் பேசுகிறேன். அது அறிவொளியின் நிராகரிப்பில், விஞ்ஞானத்தின் நிராகரிப்பில் வேர்கொண்டதாகும். இன்று மார்க்சிசம் மேலாதிக்கம் செலுத்தவில்லை, பகுத்தறிவின்மைவாதத்தின் பல்வேறு வடிவங்களே; அவை முன்னேற்றத்திற்கு விரோதமானவையாக உள்ளன என்று நீங்கள் சொல்வது சரியே. நடுத்தர வர்க்கம் எப்போதுமே இந்த வகையான தத்துவங்களின் பக்கமே ஈர்த்துசெல்லப்படுகின்றது. ஏனென்றால் அவை ஒரு முற்போக்கான வர்க்கமல்ல, அவற்றிடம் ஒரு முன்னோக்கு கிடையாது. ஆகவே இந்த கருத்தியல்களைப் பற்றி புரிந்துகொள்வது முக்கியமானது என்று கருதுகிறேன்.

Read more...

இன்று நாட்டு மக்களுக்கு தேவைப்படுவது ஜனநாயகம் அல்ல, மூன்று நேர உணவு. முத்தையா முரளிதரன்.

அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னர் முதலில் இலங்கை மக்கள் மூன்று வேளை உணவையும், தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என கிரிக்கட் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசில் நிலைமைகள் தொடர்பில் லண்டன் பிபிசி யின் சிங்கள சேவைக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர், மனித உரிமைகள் தொடர்பிலும், கடந்த காலங்கள் தொடர்பிலும் விவாதிக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள், மக்களது அடிப்படை தேவைகள் குறித்து அவதானம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த கோரிக்கை தொடர்பில் வடக்கு, தெற்கு என்று எந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகளும் அவதானம் செலுத்துவதில்லை.

மக்களது அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல், ஜனநாயகம், மனித உரிமை போன்ற விடயங்கள் குறித்து வாதிடுவதால் என்ன நன்மை ஏற்படும் என்று தமக்கு புரியவில்லை என்றும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

Read more...

ஜனாதிபதியின் கட்டளைக்கு மட்டுமே கட்டுப்படுவாராம் பூஜித.

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அளவை அதிகரிக்குமாறு முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சரின் மேற்படி வேண்டுதல் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக எடுத்துச் சென்றிருந்தனர்.

மேற்படி வேண்டுதலை நிராகரித்துள்ள பொலிஸ் மா அதிபர், பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் ஒழுங்கு நியதிகளின் பிரகாரம், முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை முன்னர் இருந்த அளவுக்கு அதிகரிக்க முடியாது என கூறியுள்ளார்.

அத்துடன் சட்டம் , ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வகிப்பதால் அவரின் உத்தரவுகளையே பின்பற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்களை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தாக்குதல்: 8 போலீஸார் பலி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸார் 8 பேர் பலியாகினர். இந்த வாரத்தில் மட்டும் தலிபான்கள் நடத்திய இரண்டாவது தொடர் தாக்குதல் இதுவாகும்.

இதுகுறித்து ஆப்கான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு தலிபான்கள் நடத்திய தாக்குதலில் போலீஸார் 8 பேர் பலியாகினர். திங்கட்கிழமை ஃபராஹ் நகரின் எல்லையோரத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் பலியாகினர். 20 பேர் கடத்தப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆதிக்கம்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவதாக அமெரிக்கா சமீபத்தில் வெயிட்ட அறிக்கையில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

ரணில் விக்கிரமசிங்கிவிற்கு பயமில்லையாம்! சொல்கின்றார் சஜித் பிறேமதாஸ.

ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீங்கியதன் பின்னணி தொடர்பில் விளக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை பதவி நீக்கம் செய்வதற்கு முன்னர் கரு ஜெயசூரிய மற்றும் சஜித் பிறேமதாஸ ஆகியோரை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியதாகவும் அவர்கள் உதடுகளை நடுங்கிக்கொண்டு ஐயோ எங்கள் தலைவருக்கு எதிராக எங்களால் முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

அவ்வாறு தன்னிடம் ஜனாதிபதி வேண்டியது உண்மைதான் என்று தெரிவித்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிறேமதாஸ, தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பயந்து இதனை நிராகரிக்கவில்லை என்றும் மாறாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது கொள்கை அடிப்படையில் சிறந்த விடயமல்ல எனக் கருதியதாலேயே அவ்வாறு நிராகதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


அலரிமாளிகையில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ள சஜித் பிரேமதாச, கொள்கை அடிப்படையில் சிறிசேனவின் இந்த வேண்டுகோளை நான் நிராகரித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கா ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படவேண்டும் என்பதே அவ்வேளை எனது நோக்கமாகயிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

த.தே.கூ - மைத்திரி சந்திப்பு! சமஸ்டி இல்லையென்றது பொய்யாம்.

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் இன்று காலை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தனது நிலைமையை விளக்கிய மைத்திரிபால சிறிசேன, தான் சமஸ்டியும் இல்லை வட-கிழக்கு இணைப்பும் இல்லை என்று கூறியதாக வெளியான செய்தி பொய்யானது என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சந்திப்பில் ஜனாதிபதி தனது திடீர் முடிவுக்கான காரணத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விரிவாக விளக்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனது தரப்பால் மேற்கொள்ள கூடிய விடயங்கள் தொடர்பில் உறுதியளித்துள்ளதாக அறியமுடிகின்றது.

த.தே.கூட்டமைப்புக்கு விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன, 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு வாரத்திலேயே தனக்கும், ரணிலுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும், அரசாங்கத்தை தொடர முடியாத நிலைமையிலேயே ரணிலை நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லையென கூறியதான செய்தியை வெளியிட்டது யார் என, செய்தியை வெளியிட்ட பத்திரிகையிடம் வினவியதாகவும், ஆனால் செய்தி மூலத்தை அவர்கள் வெளியிடவில்லையென்றும் பூசி மெழுகியுள்ள அவர் தனது அடுத்த பகிரங்க உரையில், இந்த விடயத்தை சுட்டிக்காட்ட ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பபை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார். இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள்.

இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு ததேகூ வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

Read more...

கோத்தபாயவின் வாகனம் விபத்து. தம்பதியினர் எவ்வித சேதமுமின்றி தப்பியுள்ளனர். சாரதி கைது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை, மெதமுலவிலுள்ள அவர்களது பூர்வீக இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த வாகம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இருவரும் எவ்வித சேதம் இன்றி தப்பியுள்ளனர்.

காலி மாவட்டத்தின் ஹக்மன தெனகம என்ற இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லான்ட் மாஸ்டருடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. லாண்ட மாஸ்டருடன் மோதிய ஜீப் வண்டி பாதையிலிருந்து விலகி மரத்துடன் மோதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான லாண்ட் மாஸ்ரரின் சாரதி காயமடைந்த நிலையில் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கோத்தபாயவின் வாகனச் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தந்தையான அமரர் டீ.ஏ. ராஜபக்சவின் சிராத்த தினத்தை முன்னிட்டு, பௌத்த பிக்குகளுக்கு அவர்களது இல்லத்தில் தானம் வழங்குவதற்காக சென்றுகொண்டிருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்திற்குள்ளான ஜீப் வண்டி மற்றும் லாண்ட மாஸ்ரர் ஆகியவற்றை மேலதிக விசாரணைக்காக பொலிஸார் கையகப்படுத்தியதையடுத்து , பிறிதொரு வாகனத்தை வரவழைத்துக்கொண்டு தனது பயணத்தை தொடர்ந்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.

Read more...

Tuesday, November 6, 2018

மட்டக்களப்பு மக்களை விற்று 20000 கனடிய டொலரை (ரூ 2620000.00) ஆட்டையை போட்டது கனடிய தமிழ் காங்ரஸ்.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் பண்ணை ஒன்றை அமைத்து அங்குள்ள முன்னாள் புலிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேலைவாய்பு வழங்கவென கனடிய மக்களிடம் 80000 கனடிய டொலர்களை (ஒரு கோடி ஐந்து லட்சம் ரூபா) சேகரித்த கனடிய தமிழ் காங்கிரஸ், 20000 கனடிய டொலர்களை ஆட்டையை போட்டுள்ளது.

அண்மையில் கட்சி மாறிய எஸ் வியாழேந்திரன் கனடாவிற்கு சென்றிருந்தபோது, அவரை முன்னிறுத்தி கனடா வாழ் தமிழ் மக்களிடம் பணத்தினை வசூலித்த, கனடா தமிழ் காங்கிரஸினர், வியாழேந்திரன் கட்சி மாறிவிட்டார் என்றவுடன் ஆட்டையைபோட்டுள்ளனர்.

இது தொடர்பான உண்மைகளை கனடா வாழ் இலங்கையரான கதி செல்வக்குமார் முகப்புத்தகத்தில் வீடியோ பதிவு ஒன்றினூடாக போட்டுடைத்துள்ளதுடன், கனடிய தமிழ் காங்கிரஸ் காரர்களிடம் காரசாரமான கேள்விக்கணைகளையும் தொடுத்துள்ளார்.



செல்வகுமாரால் இவ்விடயம் அம்பலப்படுத்தப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த முதலாம் திகதி கனடிய தமிழ் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது அவ்வறிக்கையில் :

கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணைத் திட்டத்துக்காகச் சேகரிக்கப்பட்ட நிதி கனடிய வங்கி ஒன்றில் பிரத்தியேக கணக்கில் சேமிப்பில் உள்ளது. இப் பணம் பேரவையின் வேறெந்தச் செலவீனங்களுக்காகவோ அல்லது சிறீலங்காவிலுள்ள தனிப்பட்ட அல்லது அமைப்புக்களின் தேவைகளுக்கோ பாவிக்கப்பட மாட்டாது என்பதைக் கனடிய தமிழர் பேரவை உறுதி செய்கிறது. அத்தோடுஇ பண்ணை நிலத்துக்கான பத்திரம் கிடைத்தவுடன் கனடா - மட்டக்களப்பு நட்புறவுப் பண்ணையின் செயற்பாட்டை கனடிய தமிழர் பேரவை நேரடியாகவோ அல்லது பேரவையின் நம்பிக்கையான உள்ளூர் தொண்டு நிறுவனம் மூலமாகவோ ஆரம்பிக்கும்.

கனடா - மட்டக்களப்பு பண்ணைத் திட்டம் மட்டுமல்லாது எமது இதர பல திட்டங்களையும் செவ்வனே முடித்து வைப்பதில் கனடிய தமிழர் பேரவை மிக உறுதியுடன் உள்ளது.

கனடிய தமிழர் சமூகத்தின் உதவியுடன் எமது தாய் நாட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்தும் அயராது உழைக்கும்.
மேலதிக விளக்கம் மற்றும் தகவல்களுக்கு 416-240-0078 என்ற இலக்கத்தைத் தயவு செய்து அழைக்கவும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடங்களாக இப்பணம் எதற்காக பிரத்தியேக கணக்கில் வைக்கப்பட்டது என்பதை கனடிய பேரணையினர் விளக்குவார்களா?

மேலும் இப்பணத்தை அவர்கள் படுவான்கரை மக்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அன்றில் படுவான்கரை மக்கள் கனடிய தமிழ் பேரவையினருக்கு எதிராக தெருவில் இறங்கி எதிர்பினை தெரிவிப்பதுடன் நின்றுவிடாது நேரடியாக கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்துக்குச் சென்று மோசடி பேர்வழிகள் தொடர்பில் முறையிடவேண்டும்.

அத்துடன் இப்பணம் எந்த முகவர்களுக்கும் செல்லாதவாறு படுவான்கரை பிரதேச மக்கள் தாங்களே ஓர் அமைப்பை உருவாக்கி, குறித்த பணத்தை கனடிய காங்கிரஸினரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

உருவாக்கப்படுகின்ற அமைப்பு அங்குள் பல கிராமங்களையும் இணைத்ததாகவும் , வெளிப்படைத் தன்மையை கொண்டதாகவும் , மக்களுக்கு பொறுப்புக்கூறக்கூடிய பொறிமுறைகளை கொண்டதாகவும் அமைந்திருக்கு வேண்டும்..

இது தொடர்பாக படுவான்கரை மக்களை விழிப்பூட்டும்பொருட்டு சமூக வலத்தளங்களில் பகிந்த கொள்ளுமாறு இலங்கைநெட் வினயமாக வேண்டுகின்றது.

Read more...

சைக்கிள் கடை மீது ஈபிஆர்எல்எப் - புளொட் கூட்டுத்தாக்குதல்.

தமிழ் மக்கள் பேரவையில் ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட் அங்கம் வகிக்க முடியாது என கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்து அக்கட்சிகளை விசனமடையச் செய்துள்ளது.

மேற்குறித்த கருத்து தொடர்பில் ஆத்திரமடைந்துள்ள மேற்படி கட்சிகளின் தலைவர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்தன் ஆகியோர், கஜேந்திரர்களின் பொட்டுவித்தைகளை புட்டுவைத்து வருகின்றனர்.

இவ்வார ஞாயிறு மஞ்சரிக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் வழங்கியுள்ள செவ்வியில் :

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் வெளிநாட்டிலிருந்து யார் மூலம் இலங்கை திரும்பி வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.' என போட்டுடைத்துள்ளார்.

அவர் வழங்கியுள்ள நீண்ட செவ்வியில் தெரிவித்துள்ளமை வருமாறு:

ஆயுதப் போராட்ட காலத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த கஜேந்திரகுமாரோ, பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் மாத்திரம் அங்கம் வகித்த கஜேந்திரனோ, தங்களை மட்டும் தேசிய வீரர்களாகவும், ஏனையவர்களை துரோகிகளாகவும் சித்தரிப்பது அசிங்கமானது.

'வேறு யாரும் இருந்தால் நாங்கள் வர மாட்டோம், கொள்கை ரீதியாக அவர்கள் தவறானவர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்ற இந்த வசனங்கள் எல்லாம் மிக மிக சிறுபிள்ளைத்தனமான வாதங்கள். ஏனெனில் முன்னணியோ அல்லது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸோ இருவரை தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு முழுமையான வரைபடத்தை வெளியிடவில்லை.

நாங்கள் இதனை எவ்வாறு செய்யப் போகின்றோம் என்று கூறவில்லை. உள்நாட்டில், வெளிநாட்டில் என்ன செய்யப் போகின்றோம், எவ்வாறு உரிமைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்று இன்னும் கூறவில்லை. வெறுமனே சுமந்திரன் மீதும் சம்மந்தன் மீது குற்றச்சாட்டுக்களை மட்டும் வாசித்துக் கொண்டிருக்காமல் மாற்று வழி முறைகள் என்ன என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். அந்த மாற்று வழிமுறைகள் தெளிவுபடுத்தாமல் தான் இன்றுவரை அவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்பொழுது இன்னுமொரு படி மேலே சென்று தாங்கள் மாத்திரம் தான் சரியானவர்கள், கொள்கை வாதிகள், ஏனைய எல்லோருமே துரோகிககள் என்ற தொனியில் இருந்து இவர்கள் பேசுவது அநாகரிகமான, அசிங்கமான ஒரு நிலைப்பாடு. அவர்கள் முன்வைக்கக் கூடிய கேள்விகள் பலவற்றுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கின்றேன். தேவை ஏற்பட்டால் இன்னுமொரு தடவை கூட நான் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.

ஒரு விடயத்தை நாங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கட்சியினுடைய செயலாளர் கஜேந்திரன் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து யுத்த காலத்தில் வெளிநாட்டிற்குச் சென்று யார் மூலம் திரும்ப இந்த நாட்டிற்குள் வந்தாரென்பதும், அவரது சகோதரன் வெள்ளைவானில் கடத்தப்பட்டு யாருடைய உதவியுடன் அவர் உயிருடன் திரும்பி வந்தாரென்பதும், எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் அவர்கள் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதும், இன்னும் பல விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் நாங்கள் இவை எதனையும் பற்றி பேசவில்லை. தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்வது மாத்திரம்தான் எமது நோக்கம். ஆகவே நாங்கள் வேறு வேறு கொள்கையில் பிறழ்வுபட்டுப் போகின்றோம் என்று இவர்கள் பேசுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் 1979 ஆம் ஆண்டு தொடங்கியது. எங்களுக்கு நாற்பது வருட கால அரசியல் அனுபவம் இருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெறுமனே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டும் நம்பி வந்த கட்சி அல்ல. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அரசிலுக்கு வந்த கட்சி. தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அவற்றைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய கட்சி.

அந்த கட்சியிலுள்ள ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும், மற்றையவர் வெளிநாட்டில் கற்றவராகவும் இருந்தார்களே தவிர, இவர்கள் விடுதலைப் போராட்டத்தில் என்ன பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றார்கள்?

பல்கலைக்கழகத்தில் மாணவர் அணித் தலைவராக இருந்ததென்பதைத் தவிர ஆயுதப் போராட்டத்தில் கஜேந்திரனோ அவரது குடும்பத்தினரோ என்ன பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றார்கள்?

ஆனால் நாங்கள் மிக ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஆயுதப் போராட்டத்தில் அங்கம் வகித்து ஒர் அரசியல் போராட்டத்தில் அங்கம் வகித்து பல்வேறுபட்ட தரப்புக்களுடன் பேசி போராட்டத்தை முன்கொண்டு சென்றதில் மிகப் பெரிய பங்கு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்களை நோக்கி விரல் நீட்டுவதற்கான எந்தவித யோக்கியமும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிற்கோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று சொல்பவர்களுக்கோ கிடையாது.

நாங்கள் அமைதியாக கூட்டாகச் சேர்ந்து தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவு ஒரு விரிவான கூட்டாகச் செய்ய முடியுமோ அவ்வாறு சேர்ந்து செய்ய வேண்டுமென்று தான் நாங்கள் யோசிக்கின்றோம். அது அவர்களுக்கு சரியில்லாது விட்டால் அது குறித்து அவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

அதைவிடுத்து, நாங்கள் தமிழ் மக்கள் பேரவையில் இருக்கக் கூடாதென்று கூறுவதற்கோ அல்லது முதலமைச்சருடைய ஒரு அணியில் நாங்கள் இருக்கக் கூடாதெனக் கூறுவதற்கோ இவர்களுக்கு எந்தவிதமான யோக்கியமும் கிடையாது.
இவர்கள் தங்களை மிகப் பிரமாண்டமாக சக்தியாக யோசிப்பார்களாக இருந்தால் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை மக்கள் அவர்களுக்கு அதற்கான பாடத்தைக் கற்பிப்பார்கள். அதற்குப் பிறகு தாங்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்' என்றும் தெரிவித்தார்.

இதேநேரம் 'கஜேந்திரகுமார் சின்னப் பையன்இ அவரது கருத்துக்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை' என கூறியுள்ளார் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.

இன்று அவரது வாசஸ்தலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஏனைய கட்சிகள் அனைத்தையும் துரோகிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டு வருவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தமிழ் மக்கள் பேரவையில் நாங்கள் உட்பட பல கட்சிகளும் பொது அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. அதே போன்று கஜேந்திரகுமாரின் கட்சியும் அங்கம் வகிக்கின்றன. எங்களை வெளியேற்றுமாறு கஜேந்திரகுமார் கூறியுள்ளதாக அறிந்தோம். ஆனால், வெளியேறுமாறு பேரவையைச் சேர்ந்த யாரும் எங்களுக்கு சொல்லவில்லை.

பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் நாங்கள் ஆதரவு அளித்திருக்கின்றோம். எம்மைப் போன்று சுரேஸ் பிறேமச்சந்திரனின் பங்கும் அளப்பரியது. ஆகவே பேரவை என்பது தனியே ஒரு கட்சியல்ல. அது பல கட்சிகள் பொது அமைப்புக்கள் இணைந்த கூட்டு ஆகும். ஆகவே அது ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல.

கஜேந்திரகுமார் தான் எம்மை வெளியேற்றுமாறு கோரியிருக்கின்றார். அவர் ஒரு சின்னப் பொடியன். அவரின் கருத்துக்களை சீரியசாக எடுக்கத் தேவையில்லை.

கஜேந்திரகுமார் எம்மை பலரையும் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை இன்னும் மக்களுக்குச் சொல்லவில்லை. முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றுமே செய்யாமல், மற்றயவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதால் மட்டும், தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கலாம் என்றோ, தன்னுடைய அரசியலை முன்னெடுக்கலாமென்றோ அவர் நினைக்கக் கூடாது.

தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்யப் போகின்றார்?. அகிம்சை ரீதியாக அல்லது ஆயுத ரீதியாகப் போராடப் போகிறாரா? அல்லது இதனையெல்லாம் விடுத்து தொடர்ந்தும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு மட்டுமே இருக்கப் போகின்றாரா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.

கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்துள்ளதை போல, அவரது கட்சிக்கும் வாக்களித்திருக்கின்றனர். ஆகவே வாக்களித்த மக்களுக்காவது தாம் என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பற்றி எதையும் கூறாமல், தொடர்ந்தும் மற்றவர்கள் என்ன செய்கின்றார்கள், ஏன் அவ்வாறு செய்கின்றார்கள் என விமர்சித்துக் கொண்டு இருக்கப் போகிறாரா?

தொடர்ந்தும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டு தான் இருக்கப் போகிறார் என்றால் அது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எனவே, தான் என்ன செய்யப் போகின்றார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு அதனை அடைவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

Read more...

ஒவ்வொரு தீபாவளியிலும் அடுத்த தீபாவளிக்கிடையில் என மக்களை ஏமாற்றுகின்றேன். ஆண்டவா நல்ல புத்தியைத் தா! சம்பந்தன்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது. அக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், „கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி மாளிகையில் இவ்விழாவில் கலந்து வருகின்றேன். ஒவ்வொரு வருடமும் அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென வலியுறுத்தி வருகின்றேன். இம்முறையும் அதனையே உரத்து வலியுறுத்த விரும்புகின்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு பேசுகையில் :

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் அதற்கு எங்கள் எல்லோருக்கும் இறைவன் நல்ல புத்தியை வழங்கவேண்டுமெனவும் இறைவனை வேண்டியுள்ளார்.

கடந்த காலங்களில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தற்போதைய சந்தர்ப்பத்தினை மைத்திரிபால சிறிசேன தவற விடக்கூடாதென கேட்டுக் கொள்கின்றேன்.

அவருக்கு தார்மீகக் கடமையொன்று இருக்கின்றது. ஏனெனில் அவரை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்களது பங்களிப்பு இருக்கின்றதை அவர் மறந்திருக்க மாட்டார்.

தற்போது மாறியிருக்கின்ற அரசியல் சூழல் தொடர்பில் தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் காத்திரமான செயற்பாடுகளை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Read more...

கட்டாருக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை.

கட்டாருக்காக உளவுபார்த்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்ட பஹ்ரைனின் எதிர்க்கட்சித் தலைவர் ஷெய்க் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எதிரி நாட்டுடன் இணைந்து சூழ்ச்சியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பஹ்ரைன் மேல் நீதிமன்றத்தின் முதல் விசாரணைப் பிரிவினால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டு சில மாதங்களின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

பஹ்ரைன் 2017 ஆம் ஆண்டு கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்தது. மாற்றுக் கருத்துடையோர் மீது பஹ்ரைன் அடக்குமுறைகளை பிரயோகித்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு நீதியை பரிகாசம் செய்யும் நடவடிக்கையாகும் என மன்னிப்புச் சபை விபரித்துள்ளது.

மாற்றுக் கருத்துக்களை மௌனிக்கச் செய்வதற்கு பஹ்ரைன் அதிகாரிகள் இரக்கமற்ற, சட்டத்திற்குப் புறம்பான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை இத்தீர்ப்பு வெளிப்படுத்துவதாக மன்னிப்புச் சபையின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான பணிப்பாளர் ஹேபா மொரயெப் தெரிவித்தார்.

அமைதியான முறையில் தனது கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம் ஷெய்க் அலி சல்மான் தன்னளவில் ஒரு கைதியாகவே இருக்கிறார். தற்போது தடை செய்யப்பட்டுள்ள அல்-வெபாக் இயக்கத்தின் தலைவரான அலி சல்மான், கட்டாருடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சி செய்தார் என 2011 ஆம் ஆண்டு அவர் மீதும் சக எதிர்க்கட்சித் தலைவர்களான ஹஸன் சுல்தான் மற்றும் அலி அல் அஸ்வாட் ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

கட்டார் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் ஈரானுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதாகவும் குற்றம் சுமத்தி பஹ்ரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளைத் துண்டித்தன. இக்குற்றச்சாட்டுக்களை கட்டார் மறுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே அலி சல்மான் மீதான குற்றச்சாட்டுக்களும் தீவிரமடைந்தன.

அதேவேளை, தமது இயக்கத்தை நசுக்குவதற்கும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சிறையிலிருக்கும் தமது தலைவரை நீண்ட காலத்திற்கு தடுத்து வைத்திருப்பதற்குமே பஹ்ரைன் அரசாங்கம் முயன்று வருகின்றது என அல்-வெபாக் இயக்கம் தெரிவித்துள்ளது.

சுன்னி பிரிவினால் ஆட்சி செய்யப்படும் பஹ்ரைனில் பெரும்பான்மை ஷீயா சமூகத்தினரால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதிலிருந்து அங்கு அமைதியின்மை நிலவுகின்றது. எனினும் அண்டை நாடுகளின் விசேடமாக சவூதி அரேபியாவின் உதவியுடன் பஹ்ரைன் அரச குடும்பமான அல் கலீபா போராட்டங்களை அடக்கி வருகின்றது.

அலி சல்மான் இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி விடிவெள்ளி

Read more...

தான் போக வழியில்லை மூஞ்சூறு விளக்குமாற்றையும் தூக்கிச்சாம்! நக்கீரன்

கனடாவில் இருந்து வெளிவரும் ஈழமுரசு தனது சென்றவாரப் பதிப்பில் (ஒக்தோபர் 25 - நொவெம்பர் 01) முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பற்றிய செய்திகள், கட்டுரைகளுக்கு மொத்தம் 40 பக்கங்களில் 15 பக்கங்களை ஒதுக்கியிருந்தது. அந்தப் பங்கங்களில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதல் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு, அவர் பற்றிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அவருக்குச் சாமரம் வீசும் மு. திருநாவுக்கரசு, யதீந்திரா மற்றும் நிலாந்தன் ஆகிய மூன்று பேர்களது கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்தது போலவே விக்னேஸ்வரனுக்கு பாமாலை பாடி பூமாலை சூடியுள்ளார்கள். அவரிடம் காணப்படும் கரும்புள்ளிகளுக்கு வெள்ளையடித்து விட்டுள்ளார்கள்.

முதல் பக்கத்தின் தலைப்பு "துவண்டு போகாத தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் நிமிர்ந்து நின்ற விக்னேஸ்வரனின் ஐந்தாண்டுக் காலம்."

இந்தத் தலைப்பு விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியது மாதரி இருக்கிறது!

குறைந்த பட்சம் வட மாகாண சபையின் இறுதி அமர்வில் விக்னேஸ்வரன் அவர்களது 5 ஆண்டுகால ஆட்சியின் கோலத்தைப் பற்றி விமர்ச்சித்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களது பேச்சைப் போட்டிருக்கலாமே? ஏன் போடவில்லை அதுதானே ஒரு வார ஏட்டின் ஊடக அறம்?

விக்னேஸ்வரனின் ஆட்சி வினைத்திறன் அற்ற ஆட்சி என்பதே எல்லாத் தரப்பினரதும் தீர்ப்பாகும்.

அவரது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 444 தீர்மானங்களில் ஒரு சிலவற்றைத் தவிர ஒரு மாகாண சபையின் ஆட்சிக்கு உட்பட்டதல்ல.

மு.திருநாவுக்கரசு, யதீந்திரா, நிலாந்தன் போன்றோர் விக்னேஸ்வரனின் இருண்ட ஆட்சிக்கு, தன்முனைப்பு ஆட்சிக்கு எவ்வளவுதான் சோப் போட்டுக் கழுவினாலும் அழுக்குப் போகாது.

இந்த எழுத்தாளர்கள் கோட்டானை மாங்குயில் என்றும் வான்கோழியை தோகை மயில் என்றும் நரியைப் பரியென்றும் பூனையைப் புலி என்றும் மாற்றிக் காட்டி போற்றித் துதிக்கிறார்கள்.

விக்னேஸ்வரன் ஒரு நன்றி கெட்ட மனிதர். நாலு கால் விலங்கிடம் இருக்கும் நன்றி உணர்வு இந்த இரண்டு கால் மனிதரிடம் இல்லை.

(1)ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர். அன்னமிட்ட கையைக் கடித்தவர்.

(2) பதவிக்கு வந்த காலம் முதல் தனக்கு மட்டும் எல்லாத் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடிப்படை அரசியல் இல்லாத கற்றுக் குட்டிகள் என்ற ஆணவத்தோடு நடந்து கொண்டவர்.

(3) இரண்டு ஆண்டுகள் மட்டும் பதவியில் இருப்பேன் அதன்பிறகு வேறு யாராவது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவர் இப்போது மேலும் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கப் படாத பாடு படுகிறார்! புதுக் கட்சி கூடத் தொடங்கியிருக்கிறார்.

(4) ஐநாமேம்பாட்டு நிறுவனம் (UNDP) வட மாகாண விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள அ.டொலர் 150 மில்லியனைக் (ரூபா 25,500 மில்லியன்) அன்பளிப்பாகக் கொடுக்க 2015 இல் முன்வந்தது. ஆனால் தனது மருமகனுக்கு அந்தத் திட்டத்தில் சிறப்பு அதிகாரிப் பதவி கொடுக்க விண்ணப்பித்து அது மறுக்கப் பட்ட போது அந்த உதவி நிதியை வேண்டாம் என்று புறந்தள்ளினார். இதன் மூலம் ஏழை, எளிய தமிழ் விவசாயிகளது வயிற்றில் அடித்த பாவத்தைத் தேடிக் கொண்டார்.

(5) தமிழ் அரசுக் கட்சி சார்பாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் குருகலராசா பதவி விலகின இடத்துக்கு ததேகூ ஒருவரை பரிந்துரை செய்யுமாறு விக்னேஸ்வரன் கேட்டார். எழுத்தில் தரும்படி கேட்டார். அதை வாங்கி வைத்துக் கொண்டு தனது அடிவருடிகளில் ஒருவரான சர்வேஸ்வரனுக்கு கல்வி அமைச்சர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார். அனந்தியையும் தன்னிச்சையாக அமைச்சர் பதவியில் அமர்த்தினார்.

(6) ஒரு அமைச்சரை நியமிப்பதற்கு முதலமைச்சரது பரிந்துரை தேவை. அதன் அடிப்படையில் ஆளுநர் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறார். தன்னை நீதியரசர் என்று சொல்லிக் கொள்ளும் விக்னேஸ்வரன் தனது விருப்புப்படி டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து கடித மூலம் விலக்கினார். தன்னை விலத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார். நீதிமன்றம் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது செல்லுபடியாகாது, முதலமைச்சர் எழுதிய கடிதம் சட்ட வலுவற்றது, டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் அவருக்கு இடைஞ்சல் செய்யக் கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. இதனை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார். அதன் காரணமாக டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். டெனீஸ்வரனிடம் தனது தவறை ஒப்புக் கொள்ள விக்னேஸ்வரன் பிடிவாதமாக மறுக்கிறார். எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறும் வழக்கு விசாரணை அன்று மேன்முறையீடு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்புப் பற்றி விக்னேஸ்வரன் எழுப்பிய ஆட்சேபனை தொடர்பாக தீர்ப்பளிக்க இருக்கிறது.

(7) முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், முதலமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. எதிர்க்கட்சித் தலைவரை அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

(8) அரசாங்கத்திடம் ததேகூ நா.உறுப்பினர்கள் சலுகைகளைப் பெறுவதாக குற்றம்சாட்டும் முதலமைச்சர் விமானத்தில் யாழ்ப்பாணம் - கொழும்பு - யாழ்ப்பாணம் பயணம் செய்ய முன்னாள் ஆளுநர் சி.ஏ. சந்திரசிறியிடம் கெஞ்சிக் கூத்தாடி சலுகை பெற்றுள்ளார். அவரது விமானப் பயணம் தொடர்பாக ரூபா 22 இலட்சம் செலவழித்துள்ளார். எனது பதவிக்கு அ.டொலர் 40,000 பெறுமதியான வாகனம் அல்ல அ.டொலர் 65,000 பெறுமதியான வாகனம் வேண்டும் என்று அடம் பிடித்தார்.

(9) விக்னேஸ்வரன் ஆளுநர்களோடு சண்டை, நீதிமன்றத்துக்குப் போகும் அளவுக்கு மாகாண சபை செயலாளரோடு சண்டை., சக அமைச்சர்களோடு சண்டை, பிரதமரோடு சண்டை, சம்பந்தன், சுமந்திரன் இருவரோடும் ஓயாத சண்டை. எனக் காலத்தைக் கடத்தினார்.

(10) கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நாலு பேருக்கு வேலை கொடுக்கிற மாதிரி ஒரு ஆடைத் தொழிற்சாலை தன்னும் கட்ட முடிந்ததா?

(11) இப்போது அரசியல் தீர்வுதான் முக்கியம் பொருளாதார மேம்பாடு அப்புறம் என்று விக்னேஸ்வரன் புது வியாக்கியானம் செய்கிறார். இது அவரது மேல்தட்டு கனவான் மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது. போரினால் நொந்து நொடிந்து போயுள்ள எமது மக்களுக்குக் குடியிருக்க வீடு, குடிக்கத் தண்ணீர், உடுக்க உடை, படிக்கப் பள்ளிக் கூடங்கள், நோய்க்கு மருந்தகங்கள் வேண்டாமா?

விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியைக் கடந்த ஒக்தோபர் மாதம் 24 ஆம் நாள் தொடங்கியுள்ளார். அந்தக் கூட்டத்தில் தானே தலைவர் என அறிவித்தார். உறுப்பினர்களே இல்லாத கட்சியில் இவர் எப்படி தலைவரானார்? அப்படியென்றால் துணைத் தலைவர் எங்கே? செயலாளர் எங்கே? பொருளாளர் எங்கே? பொதுக் குழு எங்கே? செயல் குழு எங்கே? கூட்டணியில் இருக்கும் மற்றக் கட்சிகள் எவையெவை? தலை முதல் அடிவரை எல்லாமே அவரா? இது எந்த நாட்டு சனநாயகம்?

ஒரு கட்சியை உருவாக்கி அதனை நடாத்துவது தோசைக்கு மா அரைக்கிற வேலை அல்ல! அதற்கு நேரம் வேண்டும். காலம் வேண்டும். உழைப்பு வேண்டும், நிதி வேண்டும், ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் வேண்டும்.

அகவை எண்பதைத் தொட்டுவிட்ட , அவ்வப்போது மருத்துவ மனையில் படுத்துக் கொள்ளும் வினைத் திறனற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் ஒரு புதிய கட்சியை நடத்த முடியுமா?

இது தான் போக வழியில்லை மூஞ்சூறு விளக்குமாற்றையும் தூக்கிச்சாம் என்பது போல் இல்லையா?




Read more...

பிரதியமைச்சர் பதவியை துறந்து ரணிலுடன் இணைந்தார் மனுஷ நாணயக்கார.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஷ நாணயக்கார அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மனுஷ நாணயக்கார இன்று காலை தனது பதவியை இராஜனாமா செய்து, ரணில் தரப்பிற்கு தாவியுள்ளார்.

பதவியை துறந்து அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , மனோ கணேசன் உட்பட் பல ஐ.தே.க பிரபலங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் காணொலி ஒன்றினூடாக மக்களுக்கு தனது முடிவு தொடர்பாக தெரிவித்துள்ள அவர்,

இந்த ஆட்சி மாற்றம் நிகழ்திருக்கின்ற விதத்துடன் மனச்சாட்சியுடன் இணைந்து கொள்ள முடியாத நிலையில் எனது பதவியை ராஜனாமா செய்துள்ளேன். அத்துடன் இந்நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்ற பெரும்பாலான மக்கள் பாராளுமன்றின் மேன்மையை காக்க வேண்டுகின்றார்கள், அந்தவகையில் அம்மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதத்தில் நாளையிலிருந்து என்னால் செய்யக்கூடிய சகலவற்றையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.





Read more...

சினந்து வெறுப்பைச் சிந்தி நீ என விழித்தாயா? உமுறுகிறார் மறவன்புலவு.

வவுனியா நகர மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், ஜனாதிபதியை நீ என விழித்திருந்தது தொடர்பில் பல்வேறு தரப்பினர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் சிவசேனா வின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், சுமந்திரன் இந்துக்களை மதம்மாற்றுவதற்கான வேலைத்திட்டத்துடன் தமிழரசுக் கட்சியினுள் நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவ்வறிக்கை வருமாறு:

ஊடகங்களுக்குச் செய்தி அறிக்கை

1. எங்களுடைய உப்பைத் தின்றுவந்து எங்களுடைய கட்சியிலிருந்து ஒருவரைத் திருடி அரை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்திருக்கின்ற மோசமான செயலை செய்திருக்கின்ற ஜனாதிபதி நீ

2. உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்க போகிறோம்.

3. எங்களுடைய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்?..

4. காப்பற்றியது நாங்கள் அல்லவா.. சூழ்ச்சி செய்கின்ற
கபடமான ஜனாதிபதியாக நீ மாறியிருக்கின்றாய்.

5. இது உன்னுடைய அழிவுக்கு ஆரம்பம் -

1 - 5 பத்திகள் திரு சுமந்திரன் அவர்களின் வவுனியா உரையின் ஒரு பகுதி வீரகேசரியில்.

நீ என்ற உச்சரிப்பின் தொனிதான் சிக்கலானதாக உள்ளது.

இக்காலத்தில் நீ உன்னை போன்ற சொற்களைக் கணவனும் மனைவியும் பரிமாறும் சிற்றின்ப நேரங்களையோ, கடவுளும் அடியவனும் பரிமாறும் பேரின்ப நேரங்களையோ அறியாதவல்லர் தமிழர்.

தமிழர் சார்பாளர் ஒருவர் சினந்து வெறுப்பைச் சிந்தியாவாறு, சிங்களத் தலைமைச் சார்பாளரை நீ என விளித்தல், தமிழரின் மரபல்ல. முதிர்ச்சியற்ற வெறுப்பைத் தூண்டும் பேச்சு. ஆற்றாமையின் உச்ச வெளிப்பாடு.

சினம் என்னும் சேர்ந்தரைக் கொல்லி என்ற குறள் வரி தெரிந்தவர் இவ்வாறு பேசார்.

மத்தியூ 5.43 “You have heard that it was said, ‘Love your neighbor[i] and hate your enemy.’ 44 But I tell you, love your enemies and pray for those who persecute you, இதை உணர்ந்து படித்தவர் தந்தை செல்வா, அவர் இவ்வாறு பேசார் ஒருவேளை சோற்றுக்காக உணராமல் படித்தோர் நீ எனச் சினந்து வெறுப்பை உமிழ்வர்.

7.15 “Watch out for false prophets. They come to you in sheep’s clothing, but inwardly they are ferocious wolves. திரு. சம்பந்தன் அவர்கள் முன்பும் ஆத்திரேலியப் பேச்சுக்காகத் திரு. சுமந்திரனைக் கண்டித்தவர். இப்பொழுதும் அவர் இத்தகைய உரையை ஏற்கார்.

1960இன் இரண்டாவது தேர்தலில் 1971இல் தமிழரசுக் கட்சி சொல்லியதால் சிங்கள மக்கள் தமக்குத் தாமே தமிழர் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்தார்கள். சிங்கள மக்களை ஒன்றிணைத்த தமிழர் ஆதரவில்லாத ஆட்சியை 2018க்குப் பின் வரும் தேர்தலில் சிங்களவர் தேர்வார்கள்,

1960இல் வந்த ஆட்சி, 1971இல் வந்த ஆட்சி தமிழரைத் திட்டமிட்டு நசுக்கிய ஆட்சிகள். 2018க்குப் பின்னரும் தமிழரை நசுக்கும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கச் சிங்களவரைத் தூண்டிய திரு. சுமந்திரன் அவர்களுக்கு நன்றி.

மன்னாரில் முருங்கன்பிட்டியில் 50 குடும்பங்கள், செட்டியார் மகனில் 15 குடும்பங்கள் கடந்த இரு ஆண்டுகளில் மதமாறக் காரணமாகப் பணத்தை அள்ளிக் கொடுத்த மெதடிசுத்த திருச்சபையின் துணைத் தலைவர், வன்னி முழுவதும் இத்தகைய மதமாற்றக் கொடுமைகளில் ஈடுபடும் மெதடிசுத்த திருச்சபை.

தெற்காசிய நாடுகள் சாத்தான்களாகிய புத்தர்களின் இந்துக்களின் பிடியில் உள்ளன. அவர்கள் அனைவரையும் மீட்டுக் கிறித்தவத்துக்குக் கொணர 1334 மில்லியன் அல்லது 1.4 பில்லியன் அல்லது 133 கோடி இலங்கை ரூபாய்களை ஆண்டு வருமானமாகப் பெறும் பிரித்தானியத் தலைமையக நிறுவனம் மாணவர்களுக்கான அனைத்துலக மதமாற்ற அமைப்பின் "International Fellowship of Evangelical Students" (IFES) in UK இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் கொண்ட தெற்காசியச் செயலாளர்,https://ifesworld.org/en/regions/south-asia உடுவில் மகளிர் கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர், திருமதி சாவித்திரி சுமந்திரனின் கணவர்,

திரு சுமந்திரன் அவர்கள்
1. இந்துக்களைத் தீவிர்மாக மதமாற்றத் தமிழரசுக் கட்சிக்குள் ஊடுருவியவர்.
2. சிலுவைக்கு வாக்களியுங்கள் என நாவாந்துறையிலும் கரையூரிலும் பாசையூரிலும் சுவரொட்டி ஒட்டி 2015 தேர்தலில் வாக்குக் கேட்டவர்.
3. தமிழர் நகரில் மாநகராட்சி முதல்வராகத் திட்டமிட்டுக் கிறித்தவரைக் கொண்ர்ந்து உலகுக்குத் தமிழர் முகம் கிறித்தவ முகம் எனக் காட்ட முயல்பவர்.
4. தந்தை செல்வாவின் தூய பராம்பரியம் அறியாதவர்.

இப்படித்தான் பேசுவார்.

Read more...

ராஜபக்ஷ ஆட்சி காலத்து குற்றங்களுக்கான ஆவணங்களை மறைக்கும் முயற்சியாம்! ஆஜித் பி பெரேரா

அரசியல் யாப்பிற்கு முரணாக பிரதமராக பதவி ஏற்றதோடு, ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நடைப்பெற்ற குற்றங்களுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் மறைக்கப்படும் ஆபத்தான நிலை உருவாகி உள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் அஜித் பி பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இக்குற்றங்களை விசாரிக்கும் அரசின் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும், ஏனைய நீதி துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் விஷேட அதிரடிப்படை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டதாக அமைச்சர் அஜித் பீ பெரேரா , அலரி மாளிகையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், பிரஜைகள் இறைமையினை பாதுகாக்கும் நிறுவனத்திற்கு இத்தகைய நிலை உருவாகி உள்ளமையானது பிரஜைகளின் உரிமைகளுக்கு சவாலாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

அத்தோடு, ராஜபக்ஷ ஆட்சி கால குற்றங்களுக்கான ஆவணங்கள் மறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு எதுவும் நடைப்பெற்றாமல் இருக்க குற்றவியல் விசாரனை குழுவிற்கும் அதிகாரிகளுக்கும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொலிஷ் மா அதிபர்க்கு வேண்டுகோள் விடுத்தார்.

தக்க பாதுகாப்பு வழங்க விடின் நாட்டின் ஜனநாயகத்தின் மீது உள்ள கடைசி நம்பிக்காயும் இழக்க நேரிடும் என அமைச்சர் அவர்கள் கூறினார்

Read more...

பொலிஸ் திணைக்களத்திலும் ஆட்சிமாற்றம் நிகழலாம். போட்டியும் சூடுபிடித்துள்ளது.

பொலிஷ் மா அதிபர் சுஜித்ஜயசுந்தர தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தமையும், தற்போதுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவராகவும் அவர் காணப்படுகின்றார்.

இந்நிலையில் அவர் பதவியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அப் பதவிக்கு யார் தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பான பல கதைகள் இலங்கை பொலிஷ் திணைக்களத்தில் பரவிய வண்ணம் உள்ளன.

பொலிஷ் திணைக்களத்தினுள் உள்ள சிரேஷ்ட பொலிஷ் அதிகாரிகளுள் முன்னிலை வகிப்பவர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஷ். எம். விக்ரம சிங்க ஆவார். இவருக்கு அடுத்தப்படியாக பொலிஷ் திணைக்கள நிர்வாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன ஆவார். இவர்களுள் ஒருவர் இப் பதவிக்கு தெரிவு செய்யப்படலாம் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இவர்களுள் எதிர் வரும் ஏப்ரல் 22ம் திகதி எஷ். எம். விக்ரம சிங்க அவர்கள் ஓய்வு பெறவுள்ளார். சி. டி. விக்ரமரத்ன அவர்கள் 2023 மார்ச் 26 ம் திகதி ஓய்வு பெறுவார்.

இவர்களில் எவரை சுயாதீன ஆணைக்குழு பரிந்துரைக்கும் என்பதில்தான் விடயம் தங்கியுள்ளது. அரசாங்கம் மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் சுயாதீன ஆணைக்குழுக்களில் எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை என்பதும் இங்கு அவதானிப்புக்குரியது.

Read more...

Monday, November 5, 2018

நீதித்துறையில் நிலவும் வீண் காலதாமதங்கள்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாதிருப்பதைப் பார்க்கிலும் குற்றமிழைக்காத நிபராதிகள் தண்டனை அனுபவிப்பது மிகவும் அநீதியானது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்.

குற்றவாளிகள் தங்களுக்குரிய தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வது, இல்லையேல் அவர்களுக்கான தண்டனை தாமதமடைவது போன்றனவெல்லாம் நீதித்துறையில் நிலவுகின்ற குறைபாடுகளாலேயே ஏற்படுகின்றன. எந்தவொரு நாட்டினதும் அரசியலமைப்பிலும் சட்டம் வலுவானதாகவே இருக்கின்றது. ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே குறைபாடுகள் காணப்படுகின்றன.இக்குறைபாடுகளில் பிரதானமானது காலதாமதம் ஆகும்.

எமது நாட்டின் நீதித்துறையிலும் இவ்வித காலதாமதம் நீண்ட காலமாகவே நிலவி வருகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதில் ஏற்படுகின்ற தாமதம் நீதித்துறையில் உள்ள பெரும் குறைபாடாக உள்ளது.

இத்தாமதமானது வழக்குகளுடன் சமபந்தப்பட்டோருக்கு வீணான காலதாமதத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. நீதி கிடைப்பதற்கான தாமதம், பாதிக்கப்பட்டோருக்கு மனஉளைச்சலை உண்டாக்குகின்றது. அத்துடன் வழக்குத் தவணைகளுக்கு ஒவ்வொரு தடவையும் சென்று வரும் போது அவர்கள் பணச் செலவையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வழக்கின் மனுதாரரும் எதிர்மனுதாரரும் நீதிமன்றத்தில் தங்களுக்காக சட்டத்தரணியை அமர்த்திக் கொள்ளும் போது பணத்தை வாரியிறைக்க வேண்டியுள்ளது.இது வறிய மக்களைப் பொறுத்த வரை பெரும் பாதிப்பு மிகுந்தது.

வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதென்பது மனுதாரருக்கும் எதிர்மனுதாரருக்கும் பணவிரயத்தையும் காலவிரயத்தையும் ஏற்படுத்துவதாகும். தீர்ப்பு தாமதமடைவது அவர்களுக்கு பல வகையிலும் பாதிப்புகளை உண்டாக்குகின்றது.

இவ்விடயம் சம்பந்தமாக எமது நாட்டின் புதிய பிரதம நீதியரசரான எச். என். ஜே. பெரேரா சமீபத்தில் வேதனையுடன் சுட்டிக்காட்டியிருந்ததையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்வது பொருத்தமாகும்.

புதிய பிரதம நீதியரசராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட அவர், நீதித்துறையில் நிலவுகின்ற தாமதங்களையே பெரும் குறையாக தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

உரிய காரணங்களின்றி வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு செல்வதில் தனக்கு உடன்பாடு கிடையாதென பிரதம நீதியரசர் தனது உரையின் போது சுட்டிக் காட்டியிருந்தார். வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அவற்றுக்கான தீர்ப்பை விரைவில் அளிக்க வேண்டும் என்பதே பிரதம நீதியரசரின் எண்ணமாக இருக்கின்றது.

இலங்கையின் நீதிமுறைமையில் காணப்படுகின்ற இவ்வாறான குறைபாடுகள் காரணமாக நீதிமுறைமை மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து கொண்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.


அதுமட்டுமன்றி, நீதிபதிகள் அனைவரும் தங்களது கடமையின் தார்மிகப் பொறுப்பை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டு பணியாற்ற வேண்டுமென்ற ஆலோசனையையும் நீதியரசர் கூறி வைத்திருக்கிறார்.நீதித்துறை பரிசுத்தம் மிகுந்ததாகவே நோக்கப்படுகிறது.

ஜனநாயக நாடுகளைப் பொறுத்தவரை நீதித்துறையானது எந்தவொரு உயர்மட்ட தலையீடுமின்றி சுயாதீனமாக இயங்குவதற்கு வழியேற்படுத்தப்படுவது அவசியம். அப்போதுதான் நீதித்துறை மீது மக்களுக்கு பூரணமான நம்பிக்கை ஏற்படும். அதேசமயம் பணவசதியற்ற வறிய மக்களும் தமக்கான நீதியை பெரும் பணச்செலவின்றி பெற்றுக் கொள்வதற்கான சௌகரியம் நாட்டில் நிலவுதல் வேண்டும்.இதற்கெல்லாம் வழியேற்படுத்திக் கொள்வது அரசாங்கத்தின் கடமையாகின்றது.

எனினும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்வதென்பது பெரும் பணச்செலவு மிக்கதென்ற அபிப்பிராயம் எமது நாட்டு மக்களிடம் நிலவி வருகின்றது.இதற்கான காரணம் காலதாமதம் ஆகும்.

நீதி கோரி வழக்கொன்றைத் தாக்கல் செய்கின்ற போது, இறுதித் தீர்ப்புக் கிடைப்பதற்கு வருடக்கணக்கான காலம் எடுக்குமென்று மக்கள் சலிப்படைந்து கொள்கின்றனர். வழக்குகள் தாமதமடைந்து கொண்டு செல்கின்ற போது, சட்டத்தரணிகளுக்கான கட்டணம், போக்குவரத்துச் செலவு என்றெல்லாம் பெரும் பணச்செலவை எதிர்கொள்ள நேரிடுமென்ற அச்சம் சாதாரண மக்களுக்கு ஏற்படுகின்றது.

இதன் காரணமாக அம்மக்கள் தாங்கள் எதிர்கொள்கின்ற சிறிய பிரச்சினைகளுக்குக் கூட நீதிமன்றங்களின் உதவியை நாடுவதற்குத் தயங்குகின்றனர். இதுவே நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதற்கான காரணமாகவும் அமைந்து விட்டது.

இது ஒருபுறமிருக்க, நீதிமன்ற நடவடிக்கைகளை எவரும் அர்த்தமற்ற வகையில் விமர்சனம் செய்வது தவறு. அதற்கு பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் களம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் தவறு.

இவ்வாறு நீதிமன்ற செயற்பாடுகளை எவரும் தாராளமாக விமர்சனம் செய்வது நீதித்துறையை அவமதிப்பதற்குச் சமம். அதுமாத்திரமன்றி நீதித்துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் வழியேற்படுத்தி விடும். வெகுஜன ஊடகங்கள் இவ்விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.ஊடகங்கள் சிலவற்றின் போக்கு இவ்விடயத்தில் கண்டிக்கத்தக்கது.

சாதாரண மக்கள் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு நியாயம் தேடுவதற்கான ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக நீதிமன்றங்களையே நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கையை குலைத்து விடுதல் கூடாது!

Read more...

தமிழா நீ என்னை நம்பு.. நான் உன்னை நம்புகின்றேன்.. தமிழில் மஹிந்தர்

என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள், நான் உங்களை நம்புகின்றேன், நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும், இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அரச ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.

அபிவிருத்திக்காவும் மக்களின் நலன்களுக்காகவும் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.

நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நான் ஜனாதிபதியின் இடத்தில் இருந்திருந்தால் இவ்வாறான முடிவொன்றை எடுத்திருக்க மாட்டேன். நாம் ஒன்றிணைந்தது நாட்டு நலன்கருதியே.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிள்ளைகளின் உரிமையை விற்க ஆயத்தமானார்.

அனைத்திற்கும் வரிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம்’ என தெரிவித்துள்ளார்.



Read more...

அன்ரன் பாலசிங்கத்திற்கு நற்சான்றுதல் வழக்குகிறார் அதாஉல்லா!

புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாபெரும் குள்ள நரி எனத் தெரவித்திருந்தார். அவ்விடயத்தை அவர் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார் என்று தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பி வந்த இவர் ஊடகங்களுக்கு கருத்து கூறியபோதே இவ்வாறு கூறினார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு,

நான் ஒரு நபரை மிக மிக அதிகமாக திட்டி இருக்கின்றேன் என்றால் அது ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே ஆகும். ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டின் மீது எவ்வித அக்கறையும் கிடையாது. நாட்டு மக்கள் மீது எவ்வித கரிசனையும் கிடையாது. மேற்குலகத்தின் நலன் சார்ந்த விடயங்களில் மாத்திரமே அவரின் கவனம் இருந்து வருகின்றது. நாட்டு மக்களுக்கு இடையில் வேண்டும் என்று திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி மோத விட்டு அதில் குளிர் காய்பவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சாரதியாக உள்ள வரை ஐக்கிய தேசிய கட்சி என்கிற வாகனத்தில் ஏற மாட்டார் என்று எமது பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப் தெரிவித்து உள்ளார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் சுயநல முஸ்லிம் அரசியல் தலைமைகள் ரணில் விக்கிரமசிங்கவின் செல்ல பிள்ளைகளாகவும், எடுப்பார் கை பிள்ளைகளாகவும் இருந்து இயங்கி வருவதை கண்கூடாக காண முடிகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவை நான்தான் மிக மோசமாக திட்டி உள்ளேன் என்று இது வரை காலமும் நம்பி இருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை அண்மையில் பொய்த்து விட்டது. ஏனென்றால் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் மிக மோசமாக ரணில் விக்கிரமசிங்கவை திட்டி தீர்த்து உள்ளதை காணொளிகள் மூலமாக கடந்த நாட்களில் பார்த்து பிரமித்து போனேன். ரணில் விக்கிரமசிங்க மாபெரும் குள்ள நரி என்பதை பாலசிங்கம் மிக நன்றாக அறிந்து வைத்து இருந்துள்ளார்.

விடுதலை புலிகளின் போராட்டம் வழி தவறி போனதற்கு அமெரிக்காவே காரணம் ஆகும். புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த யுத்தம் உண்மையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த யுத்தமே ஆகும். எமது நாடு அமைதி பூங்காவாக விளங்குவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. அமெரிக்காவின் நலன்களை முன்னெடுப்பவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்த கால பகுதியில் எமது நாடு காலனின் பிடியில் சிக்கி இருந்தது. அது இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சாபம் பிடித்த காலமாகவும் விளங்கியது. ஆகவேதான் நாம் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இல்லாத புதிய அரசாங்கத்தை உருவாக்க அவர் பிரதமரான நாள் தொட்டு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டோம். அதை முன்னிறுத்தியே பாலமுனை பிரகடனத்தை நிறைவேற்றினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பையும், இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் ஒன்றுபடுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒருமைப்படுத்தி பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இல்லாத ஆட்சி ஒன்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்து வெற்றி கண்டு உள்ளோம். பாலமுனை பிரகடனத்தில் நாம் முன்வைத்த விடயங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றன.

இந்நாடு வனப்பும், செழிப்பும் நிறைந்தது. இந்நாட்டு மக்கள் அனைவரும் நல்லவர்கள். இலங்கையர் என்கிற தேச பற்றுடன் நாம் எல்லோரும் வாழ்கின்ற நற்காலம் முகிழ்க்க வேண்டும். நமது பிரச்சினைகளை நாமே தீர்த்து கொள்ள முடியும். வெளி சக்திகளை இதில் தலையிட இடம் கொடுக்க முடியாது. மூன்று இனங்களையும் சேர்ந்த புத்திஜீவிகள் ஒன்றாக ஒரு மேசையில் கூடி பேசி அரசியல் தீர்வுக்கான குறிப்பாக அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை எட்ட முடியும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இதற்கான செயல் திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

(எஸ்.அஷ்ரப்கான்)

Read more...

புலிகளின் தளபதி ஒருவரின் தந்தையை நிர்வாணமாக்கி நடக்கவிட்டவராம் சிவசக்தி ஆனந்தன். சொல்றார் சிறிதரன்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணியின்) பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். இவர் அண்மையில் மஹிந்த பக்கம் தாவுகின்றார் என தமிழ் ஊடகங்கள் புரளி கிளப்பி விட்டிருந்தது.
அதேநேரம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலன் மற்றும் சரவணபவான் ஆகியோரும் அரசுடன் பணத்திற்காக இணையவுள்ளதாகவும் அதற்காக அவர்கள் வேண்டி நின்றவற்றையும் போட்டுடைத்திருந்தார் எம்பி ஆனந்தன்.

சிவசக்தி ஆனந்தனது மேற்படி கருத்தை மறுத்துரைத்துள்ள கிளிநொச்சி எம்பி சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் புலிகளின் தளபதி ஒருவரின் தந்தையை இந்தியாவில் தெருவொன்றில் நிர்வாணமாக நடக்கவிட்டவராம் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

இன்று பத்திரிகைகள், தொலைகாட்சிகள், ஊடகங்கள் எல்லாம் பல்வேறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது. இந்த மண்ணிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், வவுனியாவில் தன்னை முதன்முதல் கரும்புலியாக ஆகுதியாக்கிய மாப்பாணர் மகன் போர்க் அவர்களின் தாய் தந்தையர்களை தெருவிலே பிச்சை எடுக்கவைத்த பாராளுமன்றஉறுப்பினர், பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தந்தையை படுகொலை செய்து மலக்குளிக்குள் போட்ட அந்தபாராளுமன்ற உறுப்பினர், ஈரோஸ் போராளிகள் 13 பேரை இந்த வுனியாவில் வைத்து உமியுடன் கொளுத்திய அந்த பாராளுமன்ற உறுப்பினர், மூத்த போராளி அமுதனின் தந்தையை இந்தியாவில் வைத்து நிர்வாணமாக்கி நடக்க வைத்த அந்தபாராளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார் சாள்ஸ், சிறிதரன், சரணவணபவன் போன்றோர் மகிந்தவிற்கு ஆதரவளிக்க போகின்றனர் என்று.

இந்திய ராணுவம் வந்தபோது அவர்களோடு நின்றுபல படுகொலைகளை செய்தீர்கள், இலங்கை ரானுவத்துடன் ஒட்டுக்குழுவாக இருந்து உங்களை வளர்த்துகொண்டவர்கள் என்றார் சிறிதரன்:

எது எவ்வாறாயினும், சிறிதரன் மீதும் இவ்வாறான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளின் விமானப்பிரிவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை சிறிதரன், கோத்தபாயவிற்கு மாட்டிவிட்டதாக புலிகள் தரப்பு குற்றஞ்சுமத்துகின்றது.

அதேநேரம், சிறிதரன் கிளிநொச்சியில் பாடசாலை அதிபராக இருந்தபோது, புலிகளின் வலுக்கட்டாய ஆட்சேர்ப்புக்கு துணைபுரிந்தாக ஐ.நா குற்றஞ்சுமத்தியுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com