Monday, November 5, 2018

வரலாற்றில் தாவிய ஒரே ஜனாதிபதி மைத்திரி!

வரலாற்றில் பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று மாற்றுக் கூட்டணிக்குத் தாவிய ஒரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டப் பிரதிநிதிகளை நேற்று (04) சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ராஜபக்ச ஆட்சிக்கு எதிராகவே மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவி அமர்த்தினர். எனினும், ஜனாதிபதி மீண்டும் ராஜபக்ச ஆட்சியைக் கொண்டுவந்துள்ளார். இது மக்களுக்கு செய்த துரோகம்'' என்று பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்தத் தீர்மானம் 19ஆவது அரசியலமைப்பிற்கு அமைய 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

Read more...

சதியின் பொறியில் சாணாக்கியம் சிக்குமா ? மைத்திரி அருகிலிருந்து ஹக்கீமுக்கு போன் செய்த றிசாத்!

பாராளுமன்ற உறுப்பினர் வீ.சீ இஸ்மாயீல் அவர்கள் அண்மையில் தனது தலைவருக்கு தெரியாமல் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மகிந்தவிடம் சென்றதாகவும், அவரை மகிந்த திருப்பி அனுப்பியதாகவும் செய்திகள் வெளிவந்தது.

வீ.சீ இஸ்மாயில் அவர்கள் ஜனாதிபதி மைத்ரியைத்தான் சந்தித்திருந்தார். அதாவது வீ.சீ அவர்களுக்கு ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவு இருந்துவருகின்றது. ஜனாதிபதி ரஷ்யாவுக்கு சென்றபோதும் தன்னுடன் வீ சீ அவர்களை அழைத்து சென்றிருந்தார்.

மகிந்தவுக்கு ஆதரவு திரட்டுவதில் ஜனாதிபதியின் பங்கு பிரதானமானது. இந்த நிலமையில்தான் தங்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதிக்கு வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே வீ சீ யை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

இந்த விடயத்தை திரிபு படுத்தியவாறு மகிந்த அவர்கள் வீ சீயை திருப்பி அனுப்பியதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டது.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் வீ.சீ அவர்கள் பிரதி அமைச்சர் பதவியினை பாரம் எடுத்ததாகவும், சில காரணங்களுக்காக அது வெளியே கூறப்படவில்லை என்றும் காதும் காதும் வைத்தால்போல் உயர்மட்ட கதைகள் கூறுகின்றன.

இந்த தகவல் எப்படியோ றிசாத் பதியுதீனின் காதுகளுக்கு எட்டியுள்ளது. அதன்பின்பு உசாரடைந்த றிசாத் பதியுதீன் அவர்கள் உடனடியாக ஜனாதிபதியை ரகசியமாக சந்தித்திருந்தார்.

பல தடவைகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை ஜனாதிபதி தொடர்புகொள்ள முயற்சி செய்தும் தொடர்பினை ஏற்படுத்த முடியாதிருந்த நிலையில், றிசாத் வதியுதீன் அவர்கள் ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்தபோது தனது தொலைபேசி மூலமாக ரவுப் ஹக்கீமை தொடர்பு கொண்டிருக்கின்றார்.

றிசாத் வதியுதீன் ஜனாதிபதிக்கு அருகில் இருக்கின்றார் என்ற விடயம் தெரியாத ரவுப் ஹக்கீம் அவர்கள், றிசா பதியுதீனின் தொலைபேசிக்கு பதில் வழங்கியபோது தொலைபேசியை ஜனாதிபதியிடம் வழங்கியிருக்கின்றார் றிசாத் அவர்கள்.

இந்த இக்கட்டான நிலையில்தான் மறுக்கமுடியாமல் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ரவுப் ஹக்கீம் அவர்கள் உடன்பட்டார். அந்த பேச்சுவார்த்தையின்போது ரவுப் ஹக்கீம் தலைமையில் றிசாத் வதியுதீனும் செல்வதாகவே வெளியே செய்திகள் வெளிவந்தது.

இதற்கிடையில் அண்மையில் பசில் ராஜபக்சவுக்கும் றிசாத் பதியுதீனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் இரகசியமாக சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர் பௌசியின் இல்லத்தில் காலை ஆறு மணிக்கு நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை மிகவும் இரகசியமாக நடைபெற்றதனால் அதன் விபரங்கள் வெளியே வராவிட்டாலும், அவர்கள் என்ன பேசியுள்ளார்கள் என்பதனை ஊகிக்க கூடியதாக உள்ளது.

முஸ்லிம் காங்கிரசை பின்பற்றியே றிசாத் பதியுதீனும் செயல்படுவார் என்றே தலைவர் ஹக்கீம் அவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார். ஆனால் இன்று வரைக்கும் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது.

அதாவது பாராளுமன்றம் கூடுகின்றபோது அன்றைய நிலைமைக்கு ஏற்றவாறே மக்கள் காங்கிரஸ் வாக்களிக்கும். முன்கூட்டியே எந்தவொரு அமைச்சு பதவியையும் றிசாத் பதியுதீன் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்.

மகிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற்றால், சில மாதங்கள் சென்றபின்புதான் றிசாத் அவர்கள் அமைச்சர் பொறுப்பினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

தான் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயல்படுவதாக காட்டிக்கொண்டாலும், தனது அரசியல் நலனை மட்டும் முன்னிறுத்தியே றிசாத் அவர்கள் காய் நகர்த்துவதனை காணக்கூடியதாக உள்ளது.

இறுதியாக றிசாத் பதியுதீனின் நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் அவதானமாக செயல்படாதுவிட்டால் ஏமாற்றம் அடைவதனை தவிர எந்தவொரு நண்மைகளும் அடையப்போவதில்லை.

Read more...

சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார்! வெளிவிவகார அமைச்சர் குற்றச்சாட்டு

தனிக்கட்சிக்கு சாதகமாகவும் பக்கச்சார்பாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான சரத் அமுனுகம கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், பிரதமரின் ஆசனத்தைக்கூட தீர்மானிப்பதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

புதிதாக ஒரு தரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை, முன்னைய நிலையை ஏற்க வேண்டிய நிலை தமக்கு எற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையூடாக இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

நாடு குழப்பநிலையை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், இதுவரை காலமும் மௌனித்து இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும் மனசாட்சியின்படி செயற்படுவதும் எனது தேசிய பொறுப்பு என்பதை நினைவுகூருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்தும் நாடாhளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என தாம் உணர்வதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணான, சம்பிரதாயத்திற்கு விரோதமானது என பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில் புதிதாக ஒருதரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை முன்னைய நிலையை ஏற்க வேண்டியநிலை னனக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக சமூகத்தில் இடம்பெறக்கூடாத இந்தச் சம்பவம், ஆயுதமின்றி மேற்கொள்ளப்பட்ட வெறுக்கத்தக்க செயல் என்பதை இறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புவதாக சபாநாயகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஆளுங்கட்சியினரது ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, சபாநாயகரின் இந்தக் கருத்தை தாம் எதிர்ப்பதாக தெரிவித்தார்.

தனிப்பட்ட மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கான கருத்தாகவே சபாநாயகரின் இந்த அறிக்கை காணப்படுவதாகவும், ஒரு சபாநாயகர் என்ற வகையில் இவ்வாறு கூறுவது அவரது தகுதிக்கு ஏற்றவகையில் அமையாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சில பிரச்சினைகளில் அரசியலமைப்பில் உள்ள பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் சரத் அமுனுகம, எதிர்வரும் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை 14ஆம் திகதி கூட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு இடைக்கால வரவுசெலவுத் திட்டமே காரணம் என்றும் கூறினார்.

இந்த செயற்பாட்டிலுள்ள நடைமுறை விடயங்களை புரிந்துகொண்டு அதனை சபாநாயகர் விமர்சிக்க முடியாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா அரசியலமைப்புப்படி நாடாளுமன்றத்தை 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சபையில் பிரதமரின் ஆசனத்தை தீர்மானிப்பதற்குரிய அதிகாரம்கூட சபாநாயகருக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

அரசியல் தேவைக்காக நாட்டை வழிநடத்த முடியாது என்றும், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கலந்துரையாடலை நடத்திவிட்டு அதனை அறிக்கையிடவும் முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அரசியல் ரீதியான நெருக்கடியாக நிலமையை நாட்டிற்குள் ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை சபாநாயகரினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read more...

கைது செய்யப்பட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிணையில் விடுதலை.

சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷான் வித்தானகே ஆகியோருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இன்று பகல் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு முன்பாக ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன மீது கடந்த முதலாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷான் வித்தானகே தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்கான சட்டத்தரணி அஜித் பிரசன்ன இந்த முறைப்பாட்டை காயங்களுடன் சென்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வழங்கியிருந்தார்.

இதற்கமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இன்று பகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த நீதவான், சந்தேக நபர்கள் இருவருக்குமான பிணை அனுமதியை ஏற்றுக் கொண்டதோடு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.

Read more...

பூட்டிய அறையினுள் TNA - JVP பேச்சு.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, பிமல் ரத்னாயக்கவும், லால் காந்தவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜேவிபி யினருடன் சம்பந்தன்-சுமந்திரன் ஆகியோரால் பேசப்படும் விடயங்கள் யாது என இதுவரை சக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாதபோதும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தேடும் முயற்சியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.





Read more...

மஹிந்தவிற்கு பிரதமர் ஆசனம் வழங்கமாட்டேன். சபாநாயகர் பல்டி.

ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது தொடர்பான சட்ட மற்றும் அரசியல்யாப்பு ரீதியான முரண்பாடுகள் தொடர்ந்து வந்த நிலையில், பாராளுமன்று கூடுகின்றபோது புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் ஆசனத்தை ஓதுக்குவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

தீடிரென தனது முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சபாநாயகர் கருஜெயசூரிய , பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதன் அமர்வுகள் நிறுத்தப்பட்டவேளை காணப்பட்ட நிலையையே தொடரப்போவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போதைய பிரதமருக்கு பிரதமருக்கான ஆசனத்தை வழங்கப்போவதில்லை மேலும் தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மாற்றங்கள் சட்டவிரோதமானவை, பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு கடிதத்தினை வழங்கியதை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைகள் நியாயமானவை என நான் கருதுகின்றேன், இதன் காரணமாக கட்சியொன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

Sunday, November 4, 2018

மனித உரிமைகள் என்பது மேற்குலகின் மிரட்டும் ஆயுதமாக மாறியுள்ளது. நாலக்க தேரர்.

மேற்குலகின் பலம்வாய்ந்த நாடுகள் தங்களுக்கு கட்டுப்படாத நாடுகளை கட்டிப்போடுவற்காகவும் மிரட்டி அடிபணிய வைக்கவும் மனித உரிமைகள் என்ற விடயத்தை ஆயுதமாக கொண்டுள்ளனர் என பெங்கமுவ நாலக தேரர் கூறியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள அசமந்த நிலைதொடர்பாக விளக்கும் பொருட்டு உலக இலங்கையர் பேரவையினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில்:

பலர் இங்கு நடைபெற்றிருக்கின்ற மாற்றம் அரசியல்யாப்பிற்கு முரணானது, ஜனநாயக விரோதமானது என்று பேசுகின்றனர், ஆனால் மேற்குலகின் முகவரான ரணில் விக்கரசிங்கவை நீக்கவேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறான முடிவொன்றை எடுத்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்நாட்டிலே 2015ம் ஆண்டு ஏற்பட்டது வெளிநாட்டு சூழ்சியிலாலான ஆட்சிக்கவிழ்ப்பு. அதற்காக அமெரிக்கா பெரும்தொகையான பணத்தை செலவிட்டது. அவ்வாறானதோர் ஆட்சிக்கவிழ்ப்பு கடந்த 26ம் திகதி இடம்பெற்றுள்ளது, ஆனால் அது வேறுவிதமான நடந்தேறியுள்ளது. இவ்வாட்சிக்கவிழ்பு நாட்டை நேசிக்கின்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, பாராளுமன்றை கூட்டு என அமெரிக்க ராஜங்க செயலர் அரசாங்கத்தை கேட்கின்றார். அமெரிக்க ராஜாங்க செயலருக்கு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு உள்ள அதிகாரம் யாது? இவ்விடயத்தில் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிறேமதாஸ அவர்கள் இந்நாட்டில் ஜனாதிபதியாக இருந்தபோது கடும் நடவடிக்கைகளை எடுத்தார். தேர்தல் ஒன்று நடைபெற்றபோது, தேர்தல் நிலையம் ஒன்றுக்கு செல்ல முயன்ற பிரித்தானிய தூதரக அதிகாரி ஒருவரை அவர் நாட்டை விட்டு வெளியேற்றினார் என்பதை நான் இங்கு ஞாபகமூட்டுகின்றேன்.

வெளிநாட்டு சக்திகள் இந்நாடு பொருளாதார ரீதியில் முன்னேறுவதை விரும்பவில்லை. அவர்கள் எல்ரீரீயினர் அழித்தொழிக்கப்படுவதையும் விரும்பவில்லை. புலிகளை மஹிந்த ராஜபக்க அவர்கள் அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியிருந்தபோது, சர்வதேசம் அவர் மீது அழுத்தங்களை பிரயோகித்தது, ஆனாலும் மஹிந்த அவர்களை கணக்கிலெடுக்காது தான் நினைத்ததை செய்து முடித்தார். மஹிந்தவிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும்; மக்கள் அவர் இந்நாட்டுக்கு செய்த சேவைக்காக நன்றியுடையவர்களாக உள்ளனர். கடந்த தேர்தலில் அவரை தோற்கடிக்க வாக்களித்த மக்கள் இன்று வருந்துவதை நாம் காண்கின்றோம்.

அம்மக்கள் ரணில் விக்கரமசிங்க தூக்கியெறியப்பட்டுள்ளதையிட்டு பெரிதும் சந்தோஷமடைகின்றனர். பிரபாகரன் இறந்த செய்திகேட்டு இந்நாட்டு மக்கள் சந்தோஷமடைந்ததைவிட ரணில் தூக்கியெறியப்பட்டதையிட்டு சந்தோஷமடைகின்றனர் என மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து அதே ஊடகசந்திப்பில் பேசிய உலக இலங்கையர் பேரவையில் இணைப்பாளர்களில் ஒருவரான ஷாமேந்திர விக்ரமாராச்சி பேசுகையில் : :

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை ஒன்றிணைத்து உலக இலங்கையர் பேரவை திரு சுனில் சந்திரகுமார அவர்களின் தலைமையில் கீழ் நாட்டின் இறையாண்மை , ஒருமைப்பாடு நாட்டுக்காக பாடுபட்ட படைவீரர்களின் பாதுகாப்பு அவர்களின் கௌரவத்தை பாதுகாத்தல் என்ற கடமைகளை பாதுகாத்தல் என்ற நோக்கங்களை கொண்டு இயங்கி வருகின்றது.

2014ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்டஆட்சிமாற்றமானது உள்நாட்டு, வெளிநாட்டு சக்கிகளால் மேற்கொள்ளப்பட்ட சதியாகும். அதிகார மாற்றத்துக்கு பின்னால் இருந்த குறித்த சக்திகளுக்கு எதிராக ஒன்றுணைவதன் நோக்கத்தை நாம் நன்கு உணர்ந்திருக்கின்றோம்.

அவர்கள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக 30ஃ1 என்ற தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். அத்தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்த நாட்டை நேசிக்கின்ற பல்வேறு தேசங்களிலும் வாழுகின்ற மக்கள் இத்தீர்மானத்திற்கு எதிராக எம்முடன் இணைந்துள்ளதுடன் அத்தீர்மானத்தை நாம் ஐ.நா வில் சவாலுக்கு உட்படுத்தியிருக்கின்றோம்.

அரசியல், சமூக, பொருளாதார நிலவரங்கள் மோசமான நிலைக்கு சென்றுள்ள இந்நிலையில், இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகள் தலையிடுகின்றார்கள். சர்வதேச நாடுகளின் அதிகார கரங்களுக்குள் இந்த நாடு அகப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் கடந்த மூன்றரை வருடங்களாக ஆண்டவர்கள் நடந்து கொண்ட விதம் என்பது யாவரும் அறிந்தது. அவர்கள் பௌத்த மதத்தை நிந்தித்தார்கள், தேரர்களை சிறையிலடைத்தார்கள், மகா சங்கத்தினரை கோபத்திற்கு ஆளாக்கினார்கள். ஆட்சியாளர்களுக்கு நாம் ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பது மறந்திருந்தது. அவர்கள் வெளி சக்திகளின் ஏவலாளிகளாகவே செயற்பட்டனர்.

நாட்டு மக்கள் இந்த ஆபத்துக்களை சரியாக புதிந்து கொண்டு இச்செயற்பாடுகளுக்கு எதிராக எழுந்துவரவேண்டும். நாங்கள் நன்றியுள்ள சமூகமாக இருக்கவேண்டும். இந்நாட்டில் கொடிய யுத்தம் ஒன்று இடம்பெற்றது. அந்த யுத்தத்தை எமது படையினர் முடிவுக்கு கொண்டுவந்து, இன்றும் நாம் இவ்விடத்தில் சுதந்திரமாக பேசும் நிலையை உருவாக்கி தந்துள்ளனர். ஆனால் அவர்களது நிலைமை ஜெனிவாவில் மோசமாக உள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து எமது படையினருக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். நாம் அவர்களுக்காக வரும் மார்ச் மாதத்திலும் ஜெனிவாவில் பிரசன்னமாகி இருப்போம். அப்போது முடிந்தவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஊடகவியலாளர்கள் அவற்றினை அவதானித்து மக்களுக்கு நிலைமையை தெரியப்படுத்த வேண்டும்.

உலக இலங்கையர் பேரவையினராகிய எமக்கு எவ்வித கட்சி அரசியல் நோக்கங்களும் கிடையாது. நாங்கள் இந்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சகல விதமான அனர்த்தங்களுக்கும் எதிராக போரிடுவதே எமது நோக்கமாகும். எம்மிடம் ஜாதி, மத, பேதம் கிடையாது. நாம் இலங்கையர்களாக ஒன்றிணைந்துள்ளோம்.

நாம் இந்நாட்டின் மக்கள் யாவரையும் இலங்கையர்கள் என மதிக்கின்ற, நாட்டை முன்னேற்ற விரும்புகின்ற ஒரு தலைமைக்கு கட்சி பேதங்களன்றி என்றும் உறுதுணையாக இருப்போம்.

எனவே இந்நாட்டில் நாம் கௌரவத்துடன் வாழ்ந்து நாட்டை முன்னேற்ற எம்முடன் பலரும் இணையவேண்டும் என உலக இலங்கையர் பேரவையினராகிய நாம் மீண்டும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

Read more...

வியாழேந்திரனின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கப்போகின்றாராம் சம்பந்தன் !

பிரதி அமைச்சர் வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். .

அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமனற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் எமது கட்சியின் உறுப்பினரே மாறியுள்ளமை கேவலமான ஒரு செயல்.

வியாழேந்திரன் மீது ஏற்கனவே சந்தேகங்கள் இருந்தது, எனவே அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து. அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய தேர்தல் திருத்தச் சட்டங்களின் பிரகாரம், உறுப்பினர் ஒருவர் கட்சி தாவினால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்துச்செய்யுமாறு, குறித்த கட்சி தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரலாம்.

ஆனால் அந்த உறுப்பினர் ஓர் அமைச்சராக பதவிப்பிரமானம் செய்துகொண்டால், உறுப்புரிமையை நீக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றார் தேர்தல்கள் ஆணையாளர்.

இதன்பிரகாரமே கட்சி தாவுகின்றவர்களுக்கு உறுப்புரிமையை பாதுகாக்கின்ற கவசமாக அமைச்சர் பதவி வழங்கப்படுகின்றது.

Read more...

ஐக்கிய தேசிய கட்சிக்கு அஷ்கிரிய பீடத்தின் விசேட ஆலோனை...

தற்போது நாட்டில் நடைபெறும் அரசியல் மாற்றங்களை சமாதானமான முறையிலான பேச்சு வார்த்தைகள் மூலமாக தீர்த்து கொள்ளுமாறும், கலவரங்களை உருவாக்கி கொண்டால் சர்வதேச ரீதியான பல அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அஷ்கிரிய பீடம் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரிஎல்ல, பாட்டலி சம்பிக ரணவக்க, ரவி கருனாநாயக்க, அலவதுவல, தயா கமகே, லகீ ஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அஷ்கிரிய மா சங்கத்தினரை சந்திக்கச் சென்ற போதே மாநாயக்க தேரர் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியான அழுத்தங்களோ தலையீடுகளோ நாட்டினுள் வருமாயின் எல்லா கட்சியினரும் ஒன்றாக கரங் கோர்த்து செயற்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அஷ்கிரிய மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிடுகையில் 'சர்வதேச ரீதியான அழுத்தங்கள் ஏற்ப்பட்டால் இரு கட்சியினரும் பேதங்களை மறந்து செயற்பட வேண்டும் எனவும், ஜனநாயகத்தை பாதுகாக்க விரைவில் பாராளுமன்றத்தை கூட்டுவதே உசிதம் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பாதுகாப்பது மிக முக்கியமாகும். இது தொடர்பாக கௌரவ ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த பா, உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல :

வெகு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் நாட்டின் பிரதமர் யார்? என அறிவது அவசியமாகும். சர்வதேசத்தின் பார்வை எம் அரசியல் நடவடிக்கை மீது உள்ளது. பிரதமர் யார், யார் அமைச்சரவை என்பது தொடர்பான தெளிவற்ற நிலை உள்ளது. என அவர் தெரிவித்தார்



அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்து நல்லுபதேசங்களைப் பெற்றதன் பின் கண்டி தலாதா வீதிவழியே ஊர்வலமாகச் சென்று கோசங்களை எழுப்பினர்.

சூழ்சிகார அரசு எமக்கு வேண்டாம், பின்கதவு பிரதமர் எமக்கு வேண்டாம், கொலைகார ஆட்சி எமக்கு வேண்டாம், பொய்யன் எமக்கு வேண்டாம் சுனாமியன் எமக்கு வேண்டாம்... என்றெல்லாம் கோசம் எழுப்பினர். ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியை மேலே காணலாம்.




Read more...

மஹிந்த தரப்பினர் ஆட்சிப்பலத்துக்காக பிரபாகரனையும் விலை பேசுவார்களாம்! கூறுகிறார் முஜிபுர் ரஹ்மான்

தேசிய அரசாங்கத்தில் விடுதலை புலியாக தென்பட்ட வியாழேந்திரன், மஹிந்த அரசாங்கத்தில் தேசியவாதியாக மாறிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மஹிந்த அணியினர் ஆட்சி பலத்துக்காக பிரபாகரனையும் விலைபேசுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதியை பகடைக்காயாக பயன்படுத்தி மஹிந்த அரசியல் நாடகம் நடத்தி வருகின்றார்.

சர்வாதிகார ஆட்சியினை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காகவும் குடும்ப ஆட்சியில் இருந்த நாட்டை காப்பாற்றுவதற்காகவும் 62 இலட்சம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆனால் மீண்டும் அவர்கள் விரும்பாத ஆட்சியினை ஜனாதிபதி உருவாக்க நினைப்பாராயின் மக்களின் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Read more...

பாராளுமன்றை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானமாம். சபாநாயகரை எச்சரிக்கின்றது அரசு.

சபாநாயகர் தற்துணிவின் அடிப்படையில் பாராளுமன்றத்தை கூட்டின் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டு வரப்படும் என அரசாங்கத்தின் அரசியல் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆயினும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டள்ளமையானது ஜனாதிபதி மூலமாகும். ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கும் வரை பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர்க்கு எவ்வித அதிகாரம் இல்லை என அரசியல் ஆய்வாளர்களும் சட்டத்தரணிகளும் கூறியுள்ளனர்.

மேலும் அரசியலமைப்பின்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யின் அதிகாரத்தை மீறி யாரும் செயற்பட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சுகத கம்லத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தின் எதிர்வரும் அமர்வின் போது பெரும்பான்மை பலத்தை நீருபிக்க தற்போதைய பிரதமர், முன்னால் பிரதமர் ஆகியோரின் போட்டி பலமாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதேநேரம் ஆழும் கட்சியுடன் பலர் இணைந்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ரிஎன்ஏ குள்ளும் நாட்டை நேசிக்கின்றவர்கள் இருக்கின்றார்களாம்! கூறுகின்றார் கோத்தபாய ராஜபக்ச.

ரிஎன்ஏ என்பது என்றுமே எங்களுடன் இருந்த அமைப்பு அல்ல அவர்கள் தற்போது, ரணிலுக்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்கள். இருந்தபோதும் அங்கே இருக்ககூடிய இந்நாட்டை நேசிக்கின்ற சிலர் எம்முடன் இணைந்துள்ளார்கள், இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார் கோத்தபாய.

முப்பது வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் ஈடுபட்டு உயிரிழந்த படையினருக்கு சாந்தி செய்யும் நோக்கில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றிற்கு தலைமை தாங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு கருத்துரைத்த அவர் :

கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டின் படையினருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சகல சரத்துக்களும் அழிந்து கோகவேண்டும் என பிரார்தனை செய்கின்றேன் என்றும் உருவாக இருக்கின்ற அரசிடம் முதலில் அவற்றை துடைத்தெறியுங்கள் எனவும் வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் மக்கள் பிரதிநிதிகளை பணம்கொடுத்து வாங்குகின்றீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

அது பொய்யான கதை. ஆனாலும் கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா 400 மில்லியன் டொலர்களை செலவளித்ததாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் செயலர் தெரிவித்திருந்தார். நாங்களும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூருக்கு சென்று பணத்தினை பெற்று வந்ததை அவதானித்தோம்.

அத்துடன் தற்போதிருப்பது குறுகிய காலத்திற்கான அரசாங்கம் என்றும் பலமான அரசொன்றை நிறுவுவதற்காக மக்களிடம் சென்று அவர்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது எனது கருத்து என்றார்.

Read more...

நான்கு அமைச்சர்கள் பதிவிப்பிரமானம்.

புதிய அரசில் மேலும் நான்கு அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர். புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி 2 புதிய அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் மற்றும் 1 பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு,

அமைச்சர்கள்

பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு - தினேஸ் குணவர்தன

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு - வாசுதேவ நாணயக்கார

இராஜங்க அமைச்சா்

வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு - கெஹலிய ரம்புக்வெல்ல

பிரதி அமைச்சா்

கலாச்சாரம், உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்து அமைச்சு - அசோக பிரியந்த





Read more...

கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலையில் நாடுபூராகவும் பல்வேறுபட்ட தரப்பினர், ஆட்சி மாற்றத்தினை எதிர்த்தும் ஆதரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் இன்று கிளிநொச்சியில் ஐதேகவின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் மீறியதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சி கண்ணன் கோவில் முன்பாக ஆரம்பித்த எதிர்ப்புக் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்றது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "மீறாதே மீறாதே பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறாதே" எனும் கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்தோடு மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான கோசங்களையும் ஏழுப்பியவாறும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.




Read more...

எதிர் கட்சியில் அமர்ந்திருந்து, ஆழும் கட்சிக்கு ஆதரவு வழக்கப்போகிறாராம் ரத்ன தேரர்.

இன்றைய நாட்டின் நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரதமரை நியமித்தது ஜனாதிபதி சரியானது என்றும் அத்தோடு ஜனாதிபதிக்கு காணப்படும் நிறைவேற்று அதிகாரங்களை கொண்டு பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் அதுரலிய ரத்ன தேரர்.

மேலும் அவர் கூறுகையில், மக்கள் பெரிதும் மாற்றத்தையே விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பும் மாற்றத்தை முன்னைய அரசாங்கம் வழங்க தவறிவிட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் ஏனைய துறைகளும் சீரற்ற நிலை காணப்படுகிறது.

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும் பௌத்த மதத்தினையும் பாதிக்கும் வண்ணம் அரசியல் நடவடிக்கைகள் காணப்பட்டமையும் முன்னைய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.

மேலும் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்க்கு தாரை வார்த்து கொடுக்கும் செயற்பாடானது ஒரு பொழுதும் எம்மால் அனுமதிக்க முடியாது என ராஜகிரிய சதம் செவனயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார் ரத்ன தேரர்.

Read more...

இலங்கை மீதான ஆக்கிரமிப்பு குழுவுக்கு தலைமை தாங்கியவராம் சு. சுவாமி. போட்டுடைக்கின்றார் ஐ.தே.க எம்பி

பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் பெற்றதை அடுத்து அவருக்கான முதலாவது வாழ்த்தை ருவிட்டரில் வெளியிட்டவர் சுப்ரமணியன் சுவாமி. இவர் மஹிந்த ராஜபக்சவின் நெடுங்கால நண்பன் ஆவார்.

மஹிந்த ராஜபக்க பிரதமராக பதவியேற்றவுடன் தனது மகிழ்சியை தெரிவித்ததுடன், இலங்கையில் தமிழ் மக்கள் மஹிந்தவை ஆதரிக்கவேண்டும் என்றும், இனப்பிரச்சனைக்கு தீர்வாக பலமான மாநில சுயாட்சி முறையிலான தீர்வொன்றுக்கு செல்வதாயின் தனது ஆதரவை அளிக்க தயாரா இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுப்பரமணிய சுவாமி 1980 ல் இலங்கை மீது இந்தியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு குழுவுக்கு தலைமை தாங்கியவர் எனத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம்.

அவர் இது தொடர்பில் கூறுகையில் :

எமது நாட்டு ஜனநாயகத்திற்கு எதிரான இந்த சதிக்குப் பின்னால் ஒத்துழைப்பு வழங்குபவர்கள் யார் என்றால் புதுமையாக இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச ஒரு தேசப்பற்று, இனப்பற்றாளன் என்று முதன் முதலாக வாழ்த்து தெரிவித்திருக்கின்றார் பா.ஜ.க மூத்த உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி.

இந்த சுப்ரமணியன் சுவாமி என்பவர் யார் என்பது தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வாவின் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கையை ஆக்கிரமிப்பு செய்வதற்காக இந்திய அமைதி காப்பு படையினர் இங்கு வருவதற்கு முன்னர், அங்கிருந்து மிகப்பெரிய ஆக்கிரமிப்பை செய்வதற்கு படகொன்றின் மூலம் இலங்கைக்கு வந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தலைமைதாங்கியவர்தான் சுப்ரமணியன்சுவாமி. அவர்தான் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார்.

அதனை ஆழமாக சிந்திக்க வேண்டும். எமது நாட்டை பலவீனப்படுத்த எவ்வகையான நாட்டுத் தூரோகிகள் செயற்படுகிறார்கள். தேசப்பற்று என்ற பெயரில் இப்படி முன்வந்திருப்பவர்களையிட்டு கவலையடைகிறோம். பலதடவை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை எதிர்க்கும் எமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்தற்கு மஹிந்த தயாராம்.

இன்று பிரதமர் செயலகத்தில் தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலன்விரும்பிகள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்ததால் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றதாகக் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச இந்நாட்டு மக்கள் அனைவரும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சகலரும் அந்நியோன்னியத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசேடமாகத் தமிழ் மக்கள் பொய்ப்பரப்புரைகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்கெடுத்துச் சுபீட்சமான சகவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.

சில தனி நபர்களும் ஊடகங்களும் பதவிக்கு வரும் அரசாங்கங்களின் நற்பணிகளையும் விமர்சித்து தங்களின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அதற்குத் துணைபோய் விடாமல், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் புதிய அரசியல் பயணத்தில் கைகோர்த்துக்கொள்ள வருமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Read more...

Saturday, November 3, 2018

சரத்பொன்சேகாவின் பதவியை மீண்டும் பறிக்க திட்டம்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் குற்றவாளியாக்கப்பட்டார். அத்துடன் அவரது இரணுவ தரநிலைகள் பறிக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் என்ற பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் காணப்படும் சட்ட நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை பறிக்க முடியுமா என்று விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நாலக டி சில்வாவுடன் சரத் பொன்சேகாவும் இணைந்து செயற்பட்டதாக ஊழல் எதிர்ப்பு படையின் பணிப்பாளர் நாமல் குமார, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கூறியிருந்தார்.

இதற்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மீதான இந்த குற்றச்சாட்டு அரச விரோத சதித்திட்டம் என ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்களும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பீல்ட் மார்ஷல் என்ற பதவி என்பது இராணுவத்தின் செயற்பாட்டு ரீதியான பதவி என்பதால், சரத் பொன்சேகாவுக்கு முழுமையான இராணுவ பாதுகாப்பும் அலுவலகமும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் பதவி வகிக்கும் ஒருவர் அரசியலில் ஈடுபட முடியாது எனவும் அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் அந்த பதவியில் இருந்து விலகி விட்டு, அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது சட்டமாகும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அரச தலைவர்களுடனான சந்திப்பு, வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் சுதந்திர தினம் போன்ற நிகழ்வுகளின் போது பீல்ட் மார்ஷல் பதவிக்குரிய சீருடை அணிவதால், அந்த பதவி செயற்பாட்டு ரீதியான இராணுவப் பதவி எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதவியை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால், அந்த பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமும் முப்படை தளபதியான ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

சிவசக்தி ஆனந்தன் தொடர்பில் ஒருவர் சீஐடி யிடம் முறைப்பாடு மற்றுமொருவர் மான நஷ்ட வழக்காம்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், அவர்கள் அதற்காக நிதி மற்றும் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்ததுடன் சார்ள்ஸ் நிர்மலநாதன் 30 கோடி பணமும் அமைச்சு பதவியையும் பெற்று மஹிந்த அணியுடன் இணைவதற்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் சரவணபவான், வர்த்தக வாணிப அமைச்சை வேண்டியுள்ளதுடன் உதயன் பத்திரிகையூடாக அரசாங்கத்திற்கு பிரச்சாரம் செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி கருத்து உண்மைக்கு புறம்பானது எனக்கூறும் செல்வம் அடைக்கலநாதன் தான் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கோரி, மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யப் போவதாக கூறியிருக்கிறார்.
மானநஷ்ட வழக்கு தொடுப்பது குறித்து தனது சட்டத்தரணிகளோடு கலந்துரையாடி வருகின்றேன் எனக் குறிப்பிட்டுள்ள அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தனிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அதனை நிரூபிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறத்தில் சார்ள்ஸ் நிர்மலநாதன் சிவசக்தி ஆனந்தன் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவரது முறைப்பாட்டில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் எனது பெயர் குறிப்பிட்டு 30 கோடி பணமும் அமைச்சு பதவியையும் பெற்று மஹிந்த அணியுடன் இணைவதற்கு இருப்பதாக தனது உரையாடல் மூலம் கூறியிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினரின் குறித்த கருத்து எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அவருடைய இக்கருத்தால் நான் மன வேதனை அடைகின்றேன். ஆகவே அவரால் கூறப்பட்ட கருத்தினை விசாரித்து நீதியின் பிரகாரம் அவருக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு முறைப்பாடு செய்கின்றேன், என குறப்பிடப்பட்டுள்ளது.

Read more...

அத்துரலிய ரத்ன தேரர் நாளை...

ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரான அத்துரலிய ரத்ன தேரர் நாளை தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அவர் நாளை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டி, நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்தநிலை, இது தொடர்பில் தான் எடுக்கவுள்ள நிலைப்பாடு தொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மஹிந்த ராஜபக்ச அரசில் இருந்த தேரர், அரசினை விட்டுவெளியேறி 2014 ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பதும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக இரவு பகலாக மேடைகளில் முழங்கியவர் என்பதும் யாவரும் அறிந்தவிடயம்.

தற்போது அவர் தனது கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவுடன் முரண்பட்டு பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கிவரும் நிலையில், இவ்வறிப்பை விடுத்துள்ளார். அவர் எடுக்கவிருக்கும் தீர்மானம் தொடர்பில் பௌத்த சிங்கள மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றனர்.

Read more...

துணியில் புத்தரின் உருவப்படம். திருமலையில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் கைது!

திருமலை நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் புத்தர் உருவம் பதிக்கப்பட்ட துணி விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர் உட்பட்ட இருவர் திருமலை பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற பௌத்தர்கள் சிலரால் அங்கு புத்த பெருமானின் உருவப்படம் பொறிக்கப்பட்ட துணி விற்பனை செய்யப்படுவது அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அசமந்த நிலை ஏற்பட்டதுடன், ஓர் கலவரத்துக்கான முனைப்புக்கள் தோன்றியுள்ளது.

இது தொடர்பான தகவலறிந்த பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து, குறித்த வியாபரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

இலங்கையிலே புத்தபெருமானின் உருவம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்சைகள் எழுந்துள்ளமையும், அவ்வாறு அவற்றை தவறாக பயன்படுத்தியமை குற்றமென நீதிமன்று தீர்பளித்த சம்பவங்களும் யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் குறித்த வியாபாரிகள், தொடர்ந்தும் இவ்வாறு பொறுப்புணர்வற்ற செயற்படுகளில் இறங்குவது கண்டனத்திற்குரியதாகும். இவர்கள் நிச்சயமாக இனங்களுக்கிடையே முரன்பாடுகளை தோற்றுவிக்க முயலும் தீயசக்திகளின் நிகழ்சி நிரலின் கீழேயே செயற்படுகின்றார்கள் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்.

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு,

"கடந்த, ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை, பாராளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இம்மாதம் 2ம் திகதி பிற்பகல் 5 மணிக்கு கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

1. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19 ம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது.

ஆகையால் பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொருவரை பிரதம மந்திரியாக நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.

2. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக ஜனாதிபதி, விடுத்த பிரகடனத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக விரோத செயலாகவும் பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மையை பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதம மந்திரியாக அறிவித்துவிட்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டிய தேவையை தாமதிப்பதற்கும் முறியடிப்பதற்கும் எதுவாக செய்யப்பட்ட காலநீடிப்பே இதுவாகும்.

இக்கால நீடிப்பை உபயோகித்து மந்திரிப்பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு முறைகேடாக இழுத்தெடுத்து பாராளுமன்ற பெரும்பான்மையை கபடமாக பெற்றுக்கொள்வதற்கான இந்த ஜனநாயக விரோத செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு தனது எதிர்ப்பையும் தெரிவித்துகொள்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்த சதிமுயற்சிக்கு பலியானதை குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

3. மேற்சொல்லப்பட்ட காரணங்களுக்காக, அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் ´நடுநிலை´ வகிப்பதென்பது அராஜகம். வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக் கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு."

Read more...

வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனராம் . யாழ் நீதிமன்றில் சட்டத்தரணி

சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து „தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்" என யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்துள்ளார் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன்.

யாழ்ப்பாணம் - கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன், நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோதே சட்டத்தரணி மேற்படி வாதத்தை முன்வைத்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியான சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரிடமிருந்து கைப்பற்பட்டதான வாள் ஒன்றையும் பொலிஸார் மன்றில் சான்றுப் பொருளாகச் சமர்ப்பித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர்' என்றும் தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்கவேண்டும் என்றும் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

சட்டத்தரணியின் சமர்பணத்தை மறுத்துரைத்த பொலிஸார் :

சந்தேகநபரிடமிருந்து கைபேசி ஒன்றை கைப்பற்றினோம். அதில் அவர் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையில் வீதிச் சுற்றுக்காவலில் ஈடுபடும் இடங்களின் ஒளிப்படங்கள் இருந்தன.

சந்தேகநபர், மானிப்பாய் பகுதியில் எடுத்த அந்தப் படங்களை, வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு அனுப்பி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையில் ஈடுபடும் இடங்கள் தொடர்பில் அவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார் என்று நீதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபரை வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரால் முச்சக்கர வண்டியில் ஏற்றிவந்து இறக்கிய இருவர், விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் அவர்கள் மன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

இலங்கையில் சட்டத்தரணிகள் தொடர்சியாக குற்றவாளிகளுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றனர் என்பது வரலாறு. அவர்கள் பாரிய குற்றங்களை புரிந்தவர்களைகூட சட்டத்தின் ஓட்டைகளுடாக வெளியே கொண்டு வருகின்றனர் என்பதும் சட்டத்தரணிகளுக்கு பணமே பிரதானமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

புலமைப்பரிசில் பிஞ்சுகளை வதைக்கும் உளவியல். றிசாத் ஏ காதர்

இலங்கை தேசத்தில் கடந்த ஒக்டோபர் 05ம் திகதி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியிருக்கின்றது. ஏட்டிக்குப போட்டியாக பாடசாலைகள் சாதனைகள் நிகழ்த்தியதாக மார்தட்டிக்கொள்ளும் காட்சிகள் அரங்கேரத் தொடங்கியுள்ளது.

இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 355000 மாணவச் செல்வங்கள் தோற்றியிருக்கின்றனர். 340000 மாணவச் செலவங்கள் சித்தியடையத் தவறிய மாணவர்கள் என்கிற புள்ளி விபரக் கணிப்பு கல்வியலாளர்கள் மத்தியில் பேசு பொருளாக விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 15ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்கிற பரீட்சை முடிவுகளும், அதன் பின்னாலுள்ள விடயங்கள் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பிஞ்சு உள்ளங்களை தரப்படுத்தலின் ஊடாக, பிள்ளை உளவியலில் தோற்றுப்போகின்ற சமூகமாக இலங்கை தேசத்தின் வாழும் பலரும் ஆளாக்கப்பட்டுள்ள துர்பாக்கிய நிலை மேலோங்கியுள்ளது. பொதுவாக இப்பரீட்சைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் பிரசேதங்களில் கிழக்கு மாகாணம் பிரதான இடத்தினை வகிக்கிறது. அங்குள்ள கற்றல் சூழலிலிருந்து இக்கட்டுரையை பதிவு செய்வது பொருத்தமானதாகவிருக்கும்.

இலங்கையில் இப்பரீட்சை முறைமை அறிமுகப்படுத்தியமைக்கு இரு பெரும் பிரதான காரணிகள் உண்டு. முதலாவது மாணவர்கள் தொடரச்சியான கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்வதுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குதல் (இதில் பெற்றோர் யாராவது ஒருவர் அரசாங்க அலுவலராக இருக்குமிடத்து அந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை) இரண்டாவது சித்தியடைந்த மாணவர்களை நகர்ப்புறங்களில் அமையப்பெற்றுள்ள அரசாங்கம் தரப்படுத்தியுள்ள அதி சிறந்த பாடசாலைகளில் கற்பதுக்கான சந்தர்ப்பம் வழங்குவது. இவை இரண்டுமே இதன் இலக்கு. ஆனால் அதிகமாக சந்தரப்பங்களில் இவை இரண்டினையும் இழந்து நிற்கின்ற மாணவர்கள் அதிகம் பேர்.

குறித்த இரு விடயங்களும் இல்லாமல் போகிறது என்பதுக்காக கற்றல் நடவடிக்கையை கைவிடுதல் என்ற வகைக்குள் இக்கட்டுரை வாசகர்களை அழைத்துச் செல்லவில்லை. மாறாக அதிலுள்ள உளவியல்சார், மாணவர்களின் தரப்படுத்தல் அதன் பின்னாலுள்ள விடயங்களை பேசுவதே கட்டுரையின் நோக்கமாகும்.

முதலாவதாக வழங்கப்படும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு அரச அலுவலர்களின் பிள்ளையாயின் வழங்கப்படமாட்டாது. இது ஒருபுறமிருக்கு இரண்டாவது சந்தர்ப்பமான அதிசிறந்த பாடசாலை அனுமதியினை அதிகமான எந்தத்தரப்பினரும் பெற்றுக்கொள்வதில்;லை. குறித்த 5ம் தரப் பரீட்சைக்கு படாத பாடுபட்டு, கற்றுத் தேறி சித்தியடைந்த பெரும்பாலான மாணவர்கள் வேறு எந்தப் பாடசாலைக்கும் சென்று கல்வி கற்பதுக்கு விரும்பமற்றே அவர்களின் பெற்றோர்கள் இருக்கின்ற சூழல் நிறையவே. அவ்வாறு சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோரிடம் கேட்கப்படுகின்ற வினா உங்கள் பிள்ளைகளை எந்தப்பாடசாலையில் அனுமதிக்க உத்தேசம் என்று. அதற்கான பதில் 'சித்தியடைந்த பாடசாலையிலே எனது பிள்ளை கல்விகற்கட்டும் என்று கூறிவிடுவர்' அதற்கு பொருளாதார நிலையையும் காரணம் காட்டிவிடுவர். ஆனால் அந்தப் பரீட்சைக்கு தயார்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி சற்றும் சிந்திக்கத்தலைப்படவில்லை.

இது இவ்வாறிருக்க, இன்னுமொரு புறம், மாணவச் செல்வங்களுக்கான கற்றல் என்கிற வகையைத் தாண்டி பெற்றோருக்கான போட்டிப் பரீட்சையாகவே அநேகமான இடங்களில் பாரக்கக் கிடைக்கின்றது.
இதில் இன்னுமொன்றினையும் பதிவு செய்வது அவசியம். இவ்வளவு தூரம் இந்தக் கல்வித் திட்டத்துக்கு தங்களாலான பணிகளை சிறப்பாகச் செய்து, சிறுசுகளை வளப்படுத்திய ஆசான்கள் இதில் போற்றப்படவேண்டியவர்கயே. தங்களுக்கு வழங்கப்பட்ட பணினை எவ்வித தொய்வுமின்ற ஆற்றுகின்றவர்கள் அவர்கள். விமர்சனம் அவர்களுக்கு புறம்பானதே.

கல்வி என்பது தனது எதிர்கால வளர்ச்சி நிலைக்கு உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அல்லது எதாவது ஒரு உயர்நிலைப் பதவிக்குச் செல்வதுக்கு பயன்பெறுதல் வேண்டும். இவை இரண்டும் இதில் இல்லாமலாகிப்போன நிலைபற்றிப் பேசுதல் அவசியம்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு எந்தவொரு மாணவனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றதா என்கிற கேள்விக்கு பதிலளிக்கப்படுதல் அவசியம். அனேகமான பெற்றோர்களும், பாடசாலைகளும் 5ம் தரப் பரீட்சைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை பின்னரான காலங்களில் வழங்குவதே இல்லை என்கிற கசப்பான உண்மையை புரிந்துகொள்ளுதல் அவசியம்.
இயந்திரம் போல் இயங்கச் செய்து பெறுபேற்றை பெற்றுக்கொண்டதன் பிற்பாடு அதுமாத்திரமே பரீட்சையும், பெறுபேறும் என்கிற மனோநிலை அதிகமான பெற்றோருக்கு வந்துவிடுகின்றது. அதன் பிற்பாடுள்ள சாதாரண தரம், உயர்தரங்களில் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. அதனால் 5ம் தரத்தில் சித்திபெற்ற அதிகளவான மாணவர்கள் தத்தமது எதிர்காலத்தை தொலைத்தே வாழுகின்ற சூழல் அதிகரித்துப் போயிருப்பது கவலைக்குரியதே.

உயர் நிலையில் பதவி வகிக்கும் அதிகமானவர்கள் 5ம் தரப் பரீட்சையில் சித்தி பெறாதவர்கள் என்கிற புள்ளிவிபரத்தினையும் இவ்விடத்தில் பதிவு செய்வது சிறப்பே.

பாடசாலைகள் 5ம் தரத்துக்கு காட்டிய ஆர்வமும், முயற்சியும் பெறுபேறு கிடைக்கபபெற்றே கனமே கைழுவும் நிலையினையும் காணக்கிடைக்கிறது. சாதாரண தரத்துக்கோ, அல்லது உயர் தரத்துக்கோ அப்படியான ஒரு தியாகத்தை, முயற்சியை எடுத்திருப்பார்களா என்றால் ஒரு சில பாடசாலைகளைத் தவிற மற்ற அனைத்துப் பாடசாலைகளும் கேள்விக் குறிக்குள் அடங்கிக்கொளிகின்றது. ஆக, 5ம் தரம் பரீட்சையும், பெறுபேறும் ஒரு தரப்படுத்தல் அல்ல. அது வெறும் கொடுப்பனவுக்கான பரீட்சை என்பதனை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

அரசாங்கம் தனது வருடாந்த நிதி நிலமைக்கு ஏற்றால்போல் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்துக்கு அமைய வெட்டுப்புள்ளியை தீர்மானிக்கின்றது. சாதாரணமாக பரீட்சை ஒன்றில் 80புள்ளிகளைப் பெறும் மாணவன் விசேட சித்தி பெற்ற மாணவனாகக் கணிக்கப்படுகின்றான். அப்படியான சூழலில் இம்முறை கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் 163புள்ளியை வெட்டுப்புள்ளியாக அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அவ்வாறு 25மாவட்டங்களுக்கும் வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரு பாடங்களிலும் 80 புள்ளிகள் என மொத்தமாக 160புள்ளிகளைப் பெற்ற ஒரு மாணவன் சித்தி பெறவில்லை என்கிற வகைப்படுத்தலில் உள்ள நியாயங்கள் என்ன?

குறித்த மாணவன் சித்திபெறாதவார? ஊக்குவிப்புத் தொகை பெற தகுதியற்றவரா? இதுவே இன்றுள்ள மிக முக்கிய கேள்வி. ஆனால் இந்த மாணவனுக்கு வேறு சிறந்த பாடசாலைக்கு செல்வதுக்கான தகுதி உண்டா? இல்லையா என்பதுவும் அதற்குப் பின்னாலுள்ள கேள்வியே.

விளையாடும் மனோநிலை கொண்ட மாணவச் செல்வங்களின் முதுகுகளில் புத்தக மூட்டைகளை சுமத்திவிட்டுச் சிலாகித்துக்கொள்ளும் பெற்றோர்கள் ஒரு வகை கருணைக் கொலையாளிகளே. அநேகமான பாடசாலைகளில் 5ம் தரப் பரீட்சைக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பொருட்டு உள்ளகத் தரப்படுத்தல் நடைபெற்று அதி கூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை தேசிய ரீதியான பரீட்சைக்கு தயார்படுத்தத் தயாராகிவிடுகின்றனர் பாடசாலை நிருவாகம். ஓட்டுமொத்த மாணவர்களையும் இணைத்துக்கொண்டால் விகிதாசார ரீதியில் பாடசாலை பின்நகர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை ஆட்கொள்வதினால் இந்த விடயம் நடந்தேறுகின்றது. ஆனால் சாதாரண தர, உயர் தர பரீட்சைகளுக்கு இவ்விடயங்கள் பற்றிய யாரும் எந்த அக்கரையும் கொள்வதில்லை.

கல்வியை ரசித்து, ருசித்துப் படிக்கவேண்டிய வயதில் திணித்துக் கற்கவைக்கும் ஒரு கல்வியாகவே 5ம் தரக் கல்வியை கண்டுகொள்ள முடிகின்றது. சிறுவர் உரிமை, சமவாயம் பற்றிப் பேசுகின்ற சர்வதேசமும், தொண்டு நிறுவனங்களும் இது விடயத்தில் மௌனிகளாக இருப்பது ஏனோ? இந்தக் கல்வி முறை சிறுவர்களை வாட்டி எடுக்கின்ற கல்வி முறை, மாற்றம் வேண்டும் என்கிற குரல்களின் சத்தம் உரத்துச் சொல்லப்படவில்லையோ என்கிற சந்தேகம் வலுப்பெறுகின்றது.

ஆக, 5ம் தரப் பரீட்சை மீள் பரிசீலனைக்குட்படுத்தப்டுதல் வேண்டும். தரப்படுத்தல், வெட்டுப்புள்ளி விடயங்கள் மாணவச் செல்வங்களிக் மனதை பாதிக்காத வண்ணம் அமைதல் அவசியம்.
ஒரிரு புள்ளிகளினால் தகுதியற்றவர் என்கிற நிலைக்குள் வலிந்து தள்ளப்பட்ட அதிகமான மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் அழுது புலம்பி கவலை தோய்ந்த முகத்தோடு இன்னும் மீளாமலிருக்கின்ற சோகக் காட்சிகள் நிரம்பியே கிடக்கிறது.

பொதுவாக பரீட்சைக்கென்று ஒரு நியதி இருக்கின்றது. அந்த நியதி இங்கும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. சிலர் வெல்ல பலர் தோற்றகடிகப்படும் சித்தாந்தம் இங்கும் பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த சித்தாந்தம் சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதை எண்னுகிறபோதே கவலை கொள்ளச் செய்கின்றது.

வாழ்க்கையினை வெற்றித் கொள்ளத் தயாராகும் வயதினில் தோல்வியால் துவண்டுபோகின்ற நிலைக்குப் பிள்ளைகளைத் தள்ளிவிடும் பரீட்சைக்கு நம்மில் அதிகம்பேர் வரிந்துகட்டிக் கொண்டு வரிசையில் நிற்கும் நிலை பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

இந்தக் கல்வி முறையால் வருடாந்தம் இழந்த குழந்தைகள் எத்தனை , உள ரீதியாக பாதிகப்பட்ட குழந்தைகள் எத்தனை. அவ்வாறு இழந்ததுக்குரிய நியாயங்கள் என்ன? உயர் தரத்தில் தோற்றுப்போனதுக்கான தனது ஆன்மாவை இழந்தால் அது சிந்தனையின் முதிர்ச்சி அல்லது எதிர்காலம் பற்றிய அதீத பிரக்ஞை என்கின்றோம்.

ஐந்தாம் (5) தரத்தில் தனது ஆன்மாவை இழந்ததுக்கு எதனைக் காரணமாகச் சொல்லப்போகின்றோம். ஆக சுயமாக சிந்தித்து சரி பிழை, எதிர்கால இலக்கு என்பனவற்றை தீர்மானிக்க முடியாத ஒன்றுக்குகாகவா இத்தனை படையெடுப்புகளும் ஆரவாரங்களும்.

குழந்தை உலகைப் புரிந்து கொண்டு, அக்குழந்தைகளுக்காக வாழும் பெற்றோர்களாக வாழப்பழகுவோம். வலிந்து கற்பிக்கும் கல்விக்குள் எந்த ஆத்மார்த்தங்களும் இல்லை என்கிற உணர்வு மேலெழும் போதே இன்னும் ஒரு படி மேல்நோக்கி இச்சமூகம் நகரத்தொடங்கும்.

நன்றி தினகரன் - 2018.11.02

Read more...

வியாளேந்திரனுக்கு எதிராக புளொட் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போறாங்களாம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான வியாளேந்திரன் நேற்று அரசுடன் இணைந்து கொண்டதுடன் பிரதி அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார். இவர் புளொட் அமைப்பினூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுக்கொண்டவர் என்பது யாவரும் அறிந்தது. இந்நிலையில் வியாளேந்திரன் தமது கட்சியில் ஒழுங்கு முறைகளை மீறியுள்ளதாகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் புளொட் அறிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

பத்திரிகை அறிக்கை

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக வெளிநாடுகளுக்கு விஐயத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளை கொண்டிருந்த ச.வியாளேந்திரன், நாடு திரும்பியதும் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் எம்மால் புரிந்துகொள்ள முடியாதவையாகவுள்ளன. இன்று கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை.

இன்று நடந்த விடயங்கள் யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை எம்மால் நம்பமுடியாமல் உள்ளது. அண்மைய நாட்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது இன்றைய தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.

வியாளேந்திரன் அவர்கள் எமது கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட போதிலும்கூட, அவரது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் எவற்றிலும் கட்சி இற்றைவரையிலும் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததில்லை. மாறாக அவரை உற்சாகப்படுத்தியும் பூரண சுதந்திரம் வழங்கியுமே வந்திருக்கின்றது.

எமது கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் வியாளேந்திரன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே அவரது இன்றைய நடவடிக்கைகளை நாம் காண்கின்றோம்.

கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டிருக்கும் பா.உ ச.வியாளேந்திரன்மீது விரைவில் கட்சியின் மத்தியகுழுவினூடாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளோம்.

மேலும், எவரும் எதிர்பார்த்திராத வகையில் அமைந்த அவரது செயற்பாடு, கட்சியின் அங்கத்தவர்களும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களும், அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மீது பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.


ம.பத்மநாதன்,
நிர்வாகச் செயலாளர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
02.11.2018.


Read more...

Friday, November 2, 2018

நானே அமித் வீரசிங்கவை காட்டிக்கொடுத்தேன். அவன் 1000 விகாரைகள் மீது கல்வீச திட்டமிட்டிருந்தான். நாமல்.

கண்டி மாவட்­ட­மெங்கும் பர­விய இன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க, அப்­போது முழு நாட்­டிலும் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­ட­தாக, பொலிஸ் உள­வா­ளி­யான நாமல் குமார தெரி­வித்தார்.

அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் கைதான தினத்தில் நாட்டில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்தி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவும், 119 பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வுக்கு அழைத்து பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் இருப்­ப­தாக கூறி பதற்­றத்தை தோற்­று­விக்­கவும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

கண்டி - தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் 7 மாதங்­களின் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிணையில் வந்த அமித் வீர­சிங்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் பதி­ல­ளிக்கும் போதே நாமல் குமார இவற்றை வெளிப்­ப­டுத்­தினார்.

கண்டி, தெல்­தெ­னிய - திகன பகு­தி­களில் அரங்­கே­றிய இன வன்­மு­றைகள் தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தனது வீட்டில் வைத்து தான் உட்­பட 10 பேரைக் கைது செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட போதும் அன்­றைய தினம் மொத்தம் 11 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக அவ்­வி­வ­கா­ரத்தில் அமித் வீர­சிங்க தெரி­வித்­தி­ருந்தார். இதன்­போது 11 ஆவ­தாக கைது செய்­யப்­பட்ட நபர், ஜனா­தி­பதி மைத்­திரி - கோத்தா கொலை சதி குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய நாமல் குமார எனக் கூறிய அவர், அவரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இடை நடுவே விடு­வித்­த­தாக கூறி­யி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கவே நாமல் குமார மேற்­படி விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கண்டி - திகன இன வன்­முறை தொடர்பில் அமித் வீர­சிங்க கைது செய்­யப்­பட்ட அந்த இரவில் நாட­ளா­விய ரீதியில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்த திட்­ட­மிட்­டி­ருந்தார். இது குறித்து அவர் உள்­ளிட்டோர் கலந்­து­ரை­யாடும் போது மறு புறத்தில் என்­னூ­டாக அந்த தக­வல்­களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.

அதே போன்று எம்­மிடம் ஒரு குரல் பதிவு ஆதாரம் உள்­ளது. அதா­வது, அமித் வீர­சிங்க அன்­றைய இரவு நாட­ளா­விய ரீதியில் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டார். முஸ்லிம் பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் உள்­ள­தா­கவும் அவற்றை தாம் கண்­ட­தா­கவும் 119 பொலிஸ் அவ­சர அழைப்பு இலக்­கங்­க­ளுக்கு தகவல் கொடுத்து குழப்பம் ஏற்­ப­டுத்­து­வதே அந்த திட்­ட­மாகும். இது குறித்து நான் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலங்கள் வழங்­கி­யி­ருக்­கின்றேன். அவ­சியம் ஏற்­பட்டால் அந்த சாட்­சி­களை ஊட­கங்­க­ளுக்கு தரவும் தயா­ராக உள்ளேன்.

உண்­மையில் அமித் வீர­சிங்க நானும் அவ­ரது வீட்டில் இருந்த போது தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் குறித்து கைது செய்­யப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்தார். இதனை அவர் கூறத் தேவை­யில்லை. நானே கூறுவேன். ஆம் நான் அவ­ரது வீட்டில் தான் இருந்தேன். இந்த கும்­பலின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்­னையே உள­வா­ளி­யாக அனுப்­பி­யி­ருந்தார். அங்­கி­ருந்த வண்­ணமே மேற்­படி அனைத்து தக­வல்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தேன். இந் நிலையில் அமித்தின் வீட்டைச் சுற்­றி­வ­ளைத்த பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் என்­னையும் சேர்த்துத் தான் கைது செய்து ஜீப்பில் ஏற்­றினர். எனினும் அவர்­க­ளுக்கு என்னை தெரி­யாது. அனை­வ­ரையும் அவர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் அழைத்துச் சென்ற போது அமித் உள்ளிட்ட 10 பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிய அவர் என்னை பிறிதொரு வாகனத்தில் ஏற்றி கைவிலங்கை அகற்றி என்னை விடுவித்தார். இது ஒன்றும் அமித் வீரசிங்க கூற வேண்டியதில்லை. நானே பல முறை கூறியிருக்கின்றேன் என்றார்.

Read more...

ரணில் விக்கரமசிங்கவை கைது செய்யக்கோருகின்றார் அரவிந்தன்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச சொத்துக்களை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி வருகின்றமையினால் ஜனாதிபதியும், பிரதமரும் அவரை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

அட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டின் பிரதமராக நியமித்து "மஹிந்த ராஜபக்ஷ பிரதமர்" என முழு நாட்டுக்கும் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவற்றைப் பொருட்படுத்தாது அலரிமாளிகையை தமது கைக்குள் வைத்துக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்.

எனவே அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொள்கிறேன்.

இன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

அதே நேரம் மத்திய வங்கி கொள்ளையை ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கியவர்களை செய்துள்ளார்கள். அத்தோடு ஊழியர் சேமலாப நிதி மோசடி தொடர்பாகவும் அவருக்கு நெருக்கமானவர்களே செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு குற்றச் செயல்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் உறுதுணையாக இருந்ததால் அவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் என்ற வகையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது உருவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் வடக்கு மக்களின் உரிமையையும் அபிவிருத்திகளையும் வென்றெடுக்க முடியும்.

எனவே சம்பந்தன் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வரவேண்டு மென கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

புலிகளினால் விதைக்கப்பட்டவை ஹலோ ட்றஸ்ட் (Hallo Trust) இனால் அறுவடை செய்யப்படுகின்றது.

புலிகள் அமைப்பு வன்னியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பிரதேசமெங்கும் வெடிபொருட்களை புதைத்திருந்தனர். அவற்றை தற்போது பல்வேறு அமைப்புக்கள் இணைந்த நீக்கி வருகின்றது.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,மாவட்டங்களில் கடந்த 16 வருடங்களான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமானது கடந்த மாதம் மாத்திரம் 171475 சதுர மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது.

மனித வலு மூலம் 120365 சதுர மீற்றர் பரப்பளவிலும், இயந்திர வலு மூலம் 51110 சதுர மீற்றர் பரப்பளவிலும் கண்ணி வெடிகள அகற்றப்பட்டுள்ளது

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் மனிதாவிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமானஹலோ ட்ரஸ்ட் இலங்கை உட்பட 23 நாடுகளில் தனது கண்ணிவெடி அகற்ரல் செயற்பாட்டை செய்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

கனடா அமரிக்கா யப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் நிதி பங்களிப்பில் புதிய தொழில் நுட்ப முறைகளை கையாண்டு கண்ணிவெடி அகற்றி வருகிறது. வடமாகாணத்தை சேர்ந்த 452 ஆண் 296 பெண்களுமாக மொத்தமாக 748 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்

இதன் அடிப்படையில் கடந்த மாதத்தில் மாத்திரம்

மனித வலு 120365 ச.மீ (சதுர மீற்ரர்)
இயந்திர வலு 51110 ச.மீ
யுத்த பிரதேச துப்பரவு 22750 ச.மீ
தனிமனித மிதிவெடி 1498
வாகன எதிர்பு மிதிவெடி 01
வெடிக்காத வெடிபொருள் 209
ஆபத்து குறைந்த வெடிபொருள் 14
சிறிய வகை துப்பாக்கி ரவைகள் 3000 என்பன மீட்கப்பட்டுள்ளன.


மேலும் கடந்த 16 வருடங்களில் மாத்திரம்

மனித வலு 12948807 ச.மீ (சதுர மீற்ரர்)
இயந்திர வலு 2345968 ச.மீ
யுத்த பிரதேச துப்பரவு 16537 இ840 ச.மீ
தனிமனித மிதிவெடி 231981
வாகன எதிர்பு மிதிவெடி 998
வெடிக்காத வெடிபொருள் 28395
ஆபத்து குறைந்த வெடிபொருள் 45969
சிறிய வகை துப்பாக்கி ரவைகள் 744794 என்பனவும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. 2020 கண்ணிவெடி அற்ற நாடு' என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.








Read more...

ஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி: அமெரிக்காவிடம் கூறிய சவுதி இளவரசர்.

ஜமால் ஒரு ஆபத்தான இஸ்லாமியவாதி என்று சவுதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக் கொள்வதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் வெள்ளை மாளிகைக்கு தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மருமகனான குலஷ்னரிடம் சவுதி இளவரசர் பேசியுள்ளார். அந்த உரையாடலில் ஜமால் ஆபத்தான இஸ்லாமியவாதி என்றும், அவர் முஸ்லிம் பிரதர்வுட் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் சவுதி இளவரசர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜமால் கொலை விவகாரத்தில் அமெரிக்கா - சவுதி இடையே உள்ள விரிசலை சரி செய்ய இந்த உரையாடலில் இளவரசர் முயன்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

முன்னதாக, துருக்கியைச் சேர்ந்த ஹட்டிஸ் சென்ஜிஸ்ஸை, சவுதி பத்திரிகையாளர் ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற ஜமால் மாயமானார்.

இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவியேற்றார். எஸ்.பி நாவின்னவும் பல்டி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திந்திரன் சற்று முன்னர் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி யின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

புளொட் அமைப்பின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வியாழேந்திரன் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் வெளிநாடு ஒன்றில் இருந்திருந்தபோதும், இன்று காலை நாட்டிற்குள் வந்தவுடன் நேரடியாக மஹிந்த தரப்பினரை சந்தித்து, தற்போது கிழக்கின் அபிவிருத்திக்கான பிரதி அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பா.உ எஸ்பி நாவின்ன உள்நாட்டலுவல்கள் , கலாச்சார மற்றும் பிரதேச அமைச்சராக பதிவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.



Read more...

பாதுகாப்பு பிரதானியை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு.

11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் கமான்டர் சந்தன பிரசாத் எனப்படும் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தாரென, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்யுமாறு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று (02), உத்தரவிட்டுள்ளார்.

ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்கு முன்னர் அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் வங்கி கணக்கிலிருந்து நேவி சம்பத்திற்கு பணம் பரிமாறப்பட்டுள்ள விடயம் தொடர்பிலும், ரவீந்திர விஜேகுணவர்த்தன மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

நாங்கள் ஐவரும் ரணில் விக்கிரமசிக்கவிற்கே ஆதரவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் றிசார்ட் பதுயுதீன் தெரிவித்துள்ளார். இன்று சபாநாயகரை சந்தித்த பின்னர் மேற்படி நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :

ஜனாதிபதி அவர்கள் தவறான செயலை செய்திருக்கின்றார். அவர் மக்கள் வழங்கிய வாக்குகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். எங்களுடடைய கட்சி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வாக்களிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும், மஹிந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் அதேநேரம் மஹிந்த பக்கம் சாயவேண்டும் என கட்சிக்கும் அழுத்தம் கொடுத்துவருவதாக அறியக்கிடைக்கின்றது.

இதேநேரம் முஸ்லிம் காங்கிரஸின் இரு உறுப்பினர்கள் மஹிந்த தரப்பினருடன் பேச்சு நடாத்தி வருகின்றார்கள் என்ற செய்தியை அக்கட்சியின் தலைமைப்பீடம் மறுத்துள்ளது.


இதற்­கி­டையில் மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வாகச் செயற்­படும் சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஒருவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் எம்.பி.க்களையும் சந்­தித்து மஹிந்த தரப்­புக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டி­யதன் தேவை குறித்து வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக இரு கட்­சி­களின் வட்­டா­ரங்­களும் உறு­திப்­ப­டுத்­தின.

மேற்­படி இரு கட்­சி­க­ளையும் மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரும் சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் தான் ஈடு­பட்­டுள்­ள­தாக முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார்.

இதேநேரம் கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்கினாலும் அவர்கள் செய்யும் ஒப்பந்தத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என மக்கள் மத்தியிலிருந்து பலமான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.



Read more...

மஹிந்தவிற்கு அமெரிக்க பீதியை கொடுக்கும் தயான் ஜெயதிலக.

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதாக அவர் அந்த மின்னஞ்சலில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு அமெரிக்கா முயன்று வருகின்றது எனவும் அதனை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக தயான் ஜயதிலக்க கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com