Friday, October 5, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் கைக்கூலியே பொலிஸ் மா அதிபர். கூறுகிறார் வாசுதேவா

ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், பூஜித் ஜயசுந்தரவின் தேவைகளை ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி நிறைவேற்றிவருவதாக கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.

மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராவிடின், நாடு பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அண்மைக்கால செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசின் கீழ் நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரின் இவ்வாறான செயற்பாடுகளை முன்நிறுத்தி, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணாயக்கார கொழும்பு மரதானையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட வாசுதேவ நாணயக்கார..

“பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர கெட்ட சகுணத்திற்குள்ளாகியுள்ளார். அவரது செயற்பாடுகள் நடவடிக்கைகள் மாத்திரமல்லாது அவர் மீது தற்போது பண மோசடியொன்று தொடர்பிலும் குற்றச்சாட்டு எழும்பியுள்ளது.

கண்டி டிரின்ட்டி கல்லூரியில் கடமையாற்றிய அதிபர் மூலமாக 12 மில்லியன் ரூபா பணம் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவின் வங்கி கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணம் எவ்வாறு வந்தது? எதற்காக வைப்பிலிடப்பட்டது என பொலிஸ் மா அதிபரிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளது.

எனினும் சட்டத்தரணி தொலவத்த இந்த வழக்கு பிரதிகளை பார்த்து விட்டு, குறித்த வழக்கில் மிக முக்கியமாகக் கருதப்படும் சில விடயங்கள் உள்ள பக்கங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மிக முக்கியமாக கருதப்படும் வழக்கு விசாரணைப் பத்திரிகையிலிருந்து பக்கங்கள் காணாமல் போகின்ற வேளையில் அதன் பின்னால் பொலிஸ் மா அதிபரே நிற்கின்றாரா என்ற சாதாரண சந்தேகம் எழும்புகின்றது.

இவ்வாறான நிலையில் பொலிஸ் மா அதிபரை உடனடியாக பதிவியிலிருந்து விலகுமாறு அரச தரப்பினர் அழுத்தம் பிறப்பிக்க வேண்டும். அவர் விலக மறுப்பு தெரிவித்தாலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேசமயம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக த சில்வாவிற்கும் கொலை சதித்திட்டமொன்று தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நெருங்கிய நண்பரான அவரை பொலிஸ் மா அதிபர் பாதுகாத்து வருகின்றாரோ என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவின் தேவைகளை ஐக்கிய தேசியக் கட்சியும் நிறைவேற்றி வருகின்றனர்.

அதன் காரணத்தாலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொலிஸ் மா அதிபரை பாதுகாத்து வருகின்றார். பொலிஸ் மா அதிபரும் கடந்த காலத்தினைப் போலல்லாது அரசியல் பிரசாரங்களை முன்வைத்து அரசாங்கத்தினை வர்ணித்துள்ளார்.” எனக் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை உருவாகும் எனவும் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.

நடைமுறையிலுள்ள மைத்திரி-ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது சுதந்திரக் கட்சியினுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழேயே பயணிக்கின்றது.

அதனை தொடர்ந்து செயற்படுத்துவது தொடர்பிலேயே அவர்களது நோக்கம் தங்கியுள்ளது அவ்வாறான நிலையில் இந்த அரசாங்கத்தின் ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வருவது பிரதான பொறுப்பாகும்.

தொடர்ந்து இந்த அரசாங்கம் செயற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பூச்சியத்தை தொடும். அதனை நாட்டு மக்களினால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையுருவாகும் எனவும் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.

Read more...

பிரபாகரனுக்காக இன்று நீலிக்கண்ணீர் வடிப்போர் எவரும் அன்று அவரை காப்பாற்ற முன்வரவில்லையாம். சம்பிக்க ரணவக்க

“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்று, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

“அன்று, வடக்கிலிருந்த எந்த​வோர் அரசியல்வாதியோ அல்லது, தமிழ்நாட்டின் ஜெயலலிதாவோ கருணாநிதியோ, எவருமே, பிரபாகரனைக் காப்பாற்ற நினைக்கவில்லை. அவர்கள் அனைவருமே, வெளிப்படையாக ஒரு கொள்கையையும் உள்ளுக்குள் வேறொரு கொள்கையையுமே கொண்டிருந்தனர். எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கமானது, சிங்கள சமூகத்தால், தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று நினைக்கவில்லை. காரணம், தமிழ்ச் சமூகத்துடன் மிக நெருக்கமாகவே தான், சிங்களச் சமூகம் காணப்படுகின்றது. கலாசாரம், பண்பாடு, வழிபாடென, அனைத்து விடத்திலும், இவ்விரு சமூகங்களும் ஒத்துப்போகின்றன. இதனால், இவ்விரு சமூகங்களும், எந்தவொரு வேறுபாடுமின்றி, ஒற்றுமையாக வாழவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் ​நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பயணித்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தமிழ்மிர​ருக்குப் பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதியின் ஐ.நா பொதுச் சபை உரையானது, இலங்கை மீதான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு யோசனைகளை முன்வைக்கும் வகையிலும் அமையுமென, பாரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், இலங்கைப் பிரச்சினைகளில், சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என்ற வலியுறுத்தலை மாத்திரமே, ஜனாதிபதி தனதுரையின் போது முன்வைத்தார். இது குறித்து, அமைச்சரிடம் கேட்ட போது, அவர் தொடர்ந்து கூறியதாவது,

“இது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டமாகும். இதில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள், தங்களது நாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க, இந்தப் பொதுச் சபைக் கூட்டத்தொடரைப் பயன்படுத்துவது உண்மை. ஆனால், ஒரு நாடு அடைந்துள்ள அபிவிருத்தி, அந்த நாடுகளின் பொதுக் கொள்கைகள் தொடர்பில் பேசவேண்டும் என்பது தான் கட்டாயமாகும்.

“ஜனாதிபதியின் இம்முறை உரையானது, இலங்கையின் புதிய ஆரம்பம் தொடர்பிலும் அதன் தேவை தொடர்பிலுமே வலியுறுத்தப்பட்டது. அடுத்ததாக, எமது நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைகளை, வெளிநாடுகளின் தலையீடுகள் இன்றி, எமது நாட்டுக்குள்ளேயே அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கு இடமளியுங்கள் என்றும், ஜனாதிபதியால் வலியுறுத்தப்பட்டது. இது ​தான், எமது கொள்கைக் கட்டமைப்பாகும்.

“இலங்கை தொடர்பான மனித உரிமைக் குற்றச்சாட்டுகள், இந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டதன்று. அது தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், எதிர்வரும் 2019 மார்ச் மாதத்திலேயே இடம்பெறவுள்ளது. அதனால், அந்தக் கூட்டத்தொடரின் போது, இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில், சில விடயங்களை வலியுறுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

“இவ்வாறிருக்க, பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கையின் புதிய கொள்கைக் கட்டமைப்பொன்றே, ஜனாதிபதியால் இம்முறை முன்வைக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்குப் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரத்து 600 பேர், வெறுமனே விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளையும் பாதுகாப்புப் படையினரையும் ஒப்பிட முடியாது. இலங்கைப் படையினரென்பது, இலங்கை அரசாங்கத்தின் சட்டபூர்வப் படைத்தரப்பையே குறிப்பிடுகின்றது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமென்பது, உள்நாட்டிலும், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என, சர்வதே ரீதியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இது, வெறுமனே இவ்வாறு அறிவிக்கப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈயினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், இன அழிப்பு நடவடிக்கைகளைக் கொண்டே, சர்வதேச ரீதியிலான பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

“1987 ஒக்டோபர் மாதம் முதல், யாழ்ப்பாணத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் இந்த இன அழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பிற இனத்தவர்கள் எவரையும், யாழ்ப்பாணத்தில் அவ்வியக்கத்தினர் இருக்கவிடவில்லை. தமிழ்த் தலைவர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரையும், விடுதலைப் புலியினர் தான் படுகொலை செய்தனர். ஆனால், எந்தவொரு சிங்கள இனவாதியும், தமிழ்த் தலைவரையோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளையோ, இவ்வாறு படுகொலை செய்யவில்லை.

“எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மறுபுறம், இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 40 பேர், கைதாகி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில், இவர்கள் அனைவரும் சிறைத்தண்டனை அனுபவிக்கத் தொடங்கி, சுமார் 10 வருடங்களாகின்றன. எல்.ரீ.ரீ.ஈயைச் சேர்ந்த பலரும், பல வருட காலங்களாக, சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலரும், பல வருடங்களாக, சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

“யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், யுத்தச் சட்டங்களைக் கடைப்பிடித்து, யுத்தத்தில் ஈடுபடவில்லை. அவ்வியக்கத்தினரால், 9 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாடுகளின் அரச தலைவர்களைக் கொன்றிருக்கிறது. தவிர, தமிழ் மக்களை, பணயக் கைதிகளாக்கி, கிராமங்களிலிருந்து, சுமார் 3 இலட்சம் மக்களை, பலவந்தமாக அழைத்துச் சென்றனர். அந்த மக்கள், சுமார் இரண்டரை வருட காலமாக, பாரிய துன்பங்களை அனுபவித்தனர். இதனால், அம்மக்களுடைய வாழ்விடங்கள், வீடு வாசல்கள் எல்லாம் அழிந்தன. இவ்வாறான செயற்பாட்டை, சாதாரண யுத்தமென வரைவிலக்கணப்படுத்திவிட முடியாது. புலிகள் இயக்கத்தினர் தான், அம்மக்களை பலவந்தமாக அழைத்துச் சென்றனர். இதுவும் ஒரு யுத்தக் குற்றச்சாட்டாகும்.

“அதேபோன்று, இலங்கைப் படையினர், புலிகள் இயக்கத்துடனான யுத்தத்தின் போது, அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் படுகொலை செய்த பின்னர், தாம் வெற்றியாளர்கள் என்றும் தமிழ் மக்கள் தோல்வியடைந்தவர்களென்றும், அம்மக்களைக் கொலைசெய்யச் செல்லவில்லை. அம்மக்களை மீட்டு, அவர்களுக்கு உண்ண உணவு, அணிந்துகொள்ள ஆடையளித்தது மாத்திரமன்றி, அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் கூட, படைத்தரப்பினர் தான் செய்து வருகின்றனர்.

“உண்மையில், எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு உதவியவர்களுக்கு எதிரான யுத்த நீதிமன்றமொன்றை அமைத்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இலங்கை அவ்வாறு செய்யவில்லை. இந்த விடயத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவினால் தவறிழைக்கப்பட்டுவிட்டது. முறையான சர்வதேச விசாரணையின்றி, எல்.ரீ.ரீ.ஈயினர் அனைவரையும், கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி விடுவித்துவிட்டார். அது மாத்திரமன்றி, குறிப்பிட்ட சிலரை, இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சம்பளம் பெறுபவர்களாக நியமித்தார். கிழக்கு மாகாணத்தில், சுமார் 600க்கும் மேற்பட்டோரைக் கொலை செய்த ராம், நகுலன் போன்றவர்களும், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்தனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, வேடிக்கையாக இல்லையா?

“ கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், எவ்விதப் பிரச்சினையுமின்றி இருக்கின்றாரென்றால், ராம், நகுலுனும் வெளியே இருக்கின்றார்கள் என்றால், யுத்தத்தில் பங்குபற்றிய 12 ஆயிரத்து 600 பேரும் வெளியே இருக்கின்றார்கள் என்றால், நெடியவனையோ அல்லது ருத்ரகுமாரனையோ கைது செய்ய, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கான தேவையும் இல்லையென்றால், சிற்சில குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 60 பேரைத் தடுத்து வைத்திருப்பதில், எவ்வித அர்த்தமும் இல்லை. அதேபோன்று, இலங்கைப் படையினருக்குத் தண்டனை வழங்க, தமிழ்த் தரப்பினருக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை. அதேபோன்று, அரசியல் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் உட்பட, சுமார் 9 ஆயிரம் பொதுமக்களைப் படுகொலை செய்தவர்களை, அரசியல் கைதிகளென விழிக்கவும் முடியாது.

“இன்று, தமிழ்த் தரப்புக்காகப் பேசும் அனைவரும், ஒரு காலத்தில், தமிழ்ச் செல்வனின் அடிமைகளா இருந்தவர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அவர்களைத் தமிழ்ச் செல்வன், நாயை​ நடத்துவது போன்றே நடத்தினார். இதற்கான குரல் பதிவுகள் எம்மிடம் இருக்கின்றன. தேவையாயின் அவற்றை அம்பலப்படுத்துவோம். ஆனால் எமது சமூகத்தில், நாம் இந்தத் தமிழ்த் தலைவர்களை அவ்வாறு நடத்தியதும் இல்லை, நடத்தப்போவதும் இல்லை. சம்பந்தர் போன்றோரை, சிரேஷ்ட கொள்கைமிகு தலைவர்களாகவே நாம், கௌரவமாக நடத்துகின்றோம். அதனால் அவர்களும், பழிவாங்கும் செயற்பாட்டுக்குள் செல்லாதிருக்க வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று, சிங்களவர்களையும் முஸ்லிம்களையும், யாழ்ப்பாணத்துக்குள் அனுமதிக்கப் போவதில்லையென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முட்டாள்தனமாக கருத்தை முன்வைத்து வருகின்றார். காரணம், எந்தவொரு நபரும், தன்னார்வத்துடன் வடக்கில் சென்று குடியேற விரும்புவதில்லை. குடிநீரின்றி, வரட்சியால் வாடிப்போயுள்ள பிரதேசத்தில் சென்று குடியேற வேண்டுமென்ற எண்ணம், அவர்களுக்கு இல்லை. கொழும்பு நகரில், 33 சதவீதமானோர், தமிழர்களாகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பானத்தில் 11 சதவீதமான சிங்களவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இவை தான் இன அழிப்பு நடவடிக்கைகள். இவ்வாறான செயற்பாடுகள் தான், போர்க் குற்றங்கள்.

பிரபாகரனால், ‘கெங்கரு கோர்ட்’ என்ற நடைமுறையொன்று பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் அரசியல்வாதிகளில் எவரைக் கொலை செய்வதென்று தீர்மானிப்பதற்கே, இந்த கெங்கரு கோர்ட் பயன்படுத்தப்பட்டது. இதில், கொழும்பிலிருந்த சட்டத்தரணிகள் குழுவொன்று உள்ளடக்கப்பட்டிருந்தது. பிரபாகரன் மறைந்திருந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியைப் படையினர் கைப்பற்றிய போது, இது தொடர்பான சகல விடயங்களும், படையினரால் மீட்கப்பட்டன. இவ்வனைத்துச் சாட்சியங்களும், எம்மிடம் உள்ளன. இவற்றை நாம் வெளியிடத் தொடங்கினால், ஜனநாயகப் போர்வையைப் போர்த்திக்கொண்டுள்ளவர்கள், ஆடையின்றித் திரியவேண்டிய நிலைமை ஏற்படும். ரீ

“எது எவ்வாறாயினும், இந்தச் சகல விடயங்களையும், நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும். காரணம், நாடு என்ற ரீதியில், நாம் முன்னோக்கி நகர வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மறந்து, நாட்டை முன்னேற்றுவது தொடர்பில், அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அனைவருக்கும், ஜனநாயகம் கிட்டியுள்ளது. அந்த ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, நாட்டையும் மக்களையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல, தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். இதை, தமிழ் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதேபோன்று, அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களைக் குழப்பி, அதனூடாக வெற்றியை அடைந்துகொள்ள, ஒருபோதும் முடியாது”


Read more...

குமரப்பா-புலேந்திரனுக்கு தூபி அமைப்பதில் த.தே.கூ விற்கும் வல்வெட்டித்துறையினருக்குமிடையே மோதல்.


விரட்டியடிக்கப்பட்ட சிவாஜி.

இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் தற்கொலை செய்து கொண்ட குமரப்பா – புலேந்திரன் உட்பட்டோரின் நினைவால் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அத்தூபியானது கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் இடித்து நொருக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தூபியை மீளக்கட்டுவது என்ற தீர்மானம் வல்வெட்டித்துறை நகர சபையில் எடுக்கப்பட்டிருந்தது. அத்தீர்மானத்தில் புலிகளுக்கு தனியானதோர் தூபியும் மாற்று இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு பிறிதோர் தூபியும் கட்டுவதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

மாற்று இயக்கத்தினருக்கு வல்வெட்டித்துறையில் தூபி ஒன்றை கட்ட முடியாது என அனந்தராஜா தலைமையில் இயங்குகின்றது சுயேட்சைக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த எதிர்ப்புக்கு பின்னால் பிறிதொரு நோக்கமும் இருந்தது. அந்த நோக்கம் யாதெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படுகின்ற மாநகர சபையினால் புலிகளுக்கு தூபி கட்டப்படக்கூடாது என்பதும் புலிகளின் மொத்த வியாபாரிகளாக வல்வெட்டித்துறையினரே அமையவேண்டும் என்பதுமாகும்.

இந்நிலையில் இன்று காலை ஏலவே திட்டமிட்டதுபோல், சிவாஜிலிங்கம் தலைமையிலானோர் தூபிக்கான அடிக்கல்நாட்ட முற்பட்டபோது, சுயேட்சைக்குழுவினர் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். அங்கு பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது. இறுதியாக சிவாஜிலிங்கம் குழுவினர் தூபிக்காக வெட்டிய கிடங்கை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இச்சந்தர்பத்தில் அங்கே கூவிக்கொண்டு பொலிஸ் வண்டியொன்று வந்தது. அவ்வண்டியில் வந்திறங்கினார் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் குமாரசேன. அவர் குறித்த இடத்தில் பயங்கரவாதிகளுக்கு சிலை அமைக்க முடியாது என்ற நீதிமன்ற தடை உத்தரவை எடுத்து வந்திருந்தார். அனைவரும் நவ துவாரங்களையும் பொத்துக்கொண்டு அங்கிருந்து விலத்திச் செல்லவேண்டியேற்பட்டது .

மக்களின் தேவைகளை கிடப்பில்போட்டுவிட்டு புலிகளுக்கு விழா எடுப்பதிலேயே தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று செயல்படுகின்ற அரசியல்வாதிகளுக்கு , குமாரசேனா போன்ற அதிகாரிகள் மிகவும் துன்பகரமானவர்களாகவே எதிர்காலத்தில் அமையப்போகின்றனர் என்பது உறுதி.








Read more...

டக்ளசுக்கு முதலமைச்சராக வர விருப்பமாம்.

ஈபிடிபி என்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தனக்கு வட மாகாண சபையின் முதலமைச்சராக வர விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் தனது விருப்பை தெரிவித்துள்ள அவர் பன்னெடுங்காலங்களாக மத்தியின் நிர்வாத்தில் இருந்ததாகவும் தற்போது ஓர் மாற்றத்திற்கு காலம் கனிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உச்சக்கட்ட பிளவு காணப்படுகின்றது என்றும் அவர்கள் பொது வெளியிலே ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, அது தனக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கும் என நம்புகின்றார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான பிளவுகள் காணப்பட்டது, ஆனால் தேர்தலை எதிர்கொள்ளுகின்றபோது அவற்றை சமாளித்து த.தே.கூ வினர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என கேட்கப்பட்டபோது:

அக்காலகட்டங்களில் புலிகள் அமைப்பு இருந்தது. அவர்கள் இப்போது இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடையில் போட்டு இறுக்கிகட்டி வைத்த உருளைக் கிழங்கு போன்ற அமைப்பு. இப்போது மூட்டை அவிழ்த்து விடப்பட்டுள்ளது. உருளைக்கிழங்குகள் சிதறிக்கிடக்கின்றது. அவற்றை பொறுக்கி ஒன்று சேர்க்க எவரும் தற்போது இல்லை என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

டிஐஜி நாலக டீ சில்வா மற்றும் நாமல் குமாரவிற்கு நீதிமன்று அழைப்பாணை.

அரச தலைவர்களை கொல்ல பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வா ஆலோசனை வழங்கியதாக மோசடி எதிர்ப்பு படையணியின் தலைவர் நாமல் குமார குற்றஞ்சாட்டியதுடன் இது தொடர்பான ஒலிப்பதிவு பட்டிகளையும் வெளியிட்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விடயத்தை தற்போது நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவ்விருவரையும் எதிர்வரும் 8ம் திகதி திங்கட் கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more...

Thursday, October 4, 2018

மண்டையன் குழுவினர் சுட்டுபோட்ட உடலங்களை எண்ணி அடுக்கியதே தேசியத்துக்கான தகமையாம். சயந்தன்

இன்று வட மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர் சயந்தன், தான் சிறுவனாக இருந்தபோது மண்டையன் குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தில் சுட்டுப்போட்டிருந்த உடலங்களை தனது கையால் எண்ணி அடுக்கியதே தான் இன்று தமிழ் தேசியம் கதைப்பதற்கான தகமை என்று தெரிவித்துள்ளார்.

நேற்று சுரேஸ் பிறேமச்சந்திரன் தற்போது தமிழ் தேசியம் பேசுகின்றவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது என்ற கேள்வியை ஊடகங்களுடாக கேட்டிருந்தார். அக்கேள்விக்கு தான் சபையிலே பதிலளிக்க விரும்புவதாக தெரிவித்தே சயந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று தேசியம் என்ற சொல் ஊழல் மற்றும் வினைத்திறனின்மை என்பவற்றை மறைப்பதற்காகவே பயன்பட்டு வருவதாகவும் போலித்தேசியவாதியின் கைகளில் தமிழ்த்தேசியம் சிக்கிச்சின்னா பின்னமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more...

ரெலோவினுள் பிளவு வலுப்பெறுகின்றது: மட்டு - அம்பாறை கொலைப்பட்டியல் லண்டனிலிருந்து வெளியாகியது.

ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் மூத்த இயக்கமாகும். அந்த இயக்கமே முதன் முதலாக புலிகளால் தடை செய்யப்பட்டது. ரெலோவின் தலைவர் சிறிசபாரட்ணம் கொலை செய்யப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார் செல்வம் அடைக்கலநாதன்.

குடந்த 30 ம் திகதி மட்டக்களப்பில் ரெலோவின் தேசிய மாநாடுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரெலோவின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த மாநாடு கத்தோலிக்க பள்ளி ஒன்றிலேயே இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பில் ஒன்றுகூடல் நடைபெற்றிருக்கின்றநேரம் புலம்பெயர்ந்து வாழுகின்ற ரெலோ வினர் அதன் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கைநெட் உடன் பேசிய மூத்த உறுப்பினர் ஒருவர், பிளவு வலுப்பெற்று செல்வதற்கான காரணங்கள் தொடர்பில் கூறுகையில்,

ரெலோவினுள் ஆரம்பகாலங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் எவற்றுக்கும் தீர்வு காணப்படவில்லை.

ரெலோவினுடைய சொத்துக்கள் எதற்கும் கணக்கு தலைமையினால் காட்டப்படவில்லை.

புலம்பெயர்ந்து வாழுகின்ற முன்னாள் ரெலோ உறுப்பினர்களின் உறுப்புரிமைக்கான உத்தரவாதம் கிடையாது. ஆனால் அவர்களது பணம் தேவைப்படுகின்றது.

ரெலோ வினுள் இடம்பெற்ற உள்வீட்டு படுகொலைகளுக்கான எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு நீதிவழங்கப்படவில்லை.

ஆயிரக்கணக்கான எமது சகபோராளிகள் புலிகளினால் கொல்லபட்டுள்ளார்கள். இக்கொலைஞர்களை ரெலோத் தலைமை மாலை சூட்டி மாவீரர்கள் என்று கௌரவிக்கின்றது.

ரெலோவின் சார்பில் உயிரிழந்த தோழர்கள் மதிப்பளிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்பான எந்த ஆவனமும் தலைமையிடம் இல்லை.

ரெலோவின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதன் மீது போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பரவலாக காணப்படுகின்து. எனவே அவர் ரெலோவின் தலைமையிலிருந்து நீக்கப்பட்டு ரெலோவிற்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற காரணங்களை பிரதான மாக குறிப்பிட்டார்.

அத்துடன் மட்டக்களப்பில் கூடிய ரெலோவினர் அந்த மாவட்டத்தில் ரெலோவினரால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு இதுவரை எந்த நீதியும் வழங்கவில்லை என்றும் அங்கு ஜனாவின் தலைமையில் இயங்கியவர்களால் கொல்லப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றையும் வழங்கினார்.

அத்துடன் குறித்த பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் சிலர் நஞ்சூசி ஏற்றப்பட்டு கொல்லப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவலை வழங்கினார் அந்த மூத்த உறுப்பினர்.

TELO வினால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பெயர் விபரம்.�

1. லிங்கன் நல்லதம்பி :கறுவாக்கேனி.வாழைச்சேனை 1988.4.2�
2. கலா பொன்னம்பலம் சதானந்தரத்தினம். ஆரையம்பதி.1988.4.19�
3. குருசாமி.கா.இரத்தினசிங்கம். களுதாவளை. 1988.8.14�
4. வினோபா, கா.ஜெகதீஸ்வரன்.களுவாஞ்சிகுடி. 1988.8.14�
5. அருணா,தியாகராசா சதீஸ்வரன்.ஆரயம்பதி,1988.9.13�
6. சின்னத்தம்பி.சதாசிவம் சகாராச .தாழங்குடா.1988.10.22�
7. தாயாளன்.கணபதிப்பிள்ளை கோபாலரெத்தினம்,துறைநீலாவணை.1989.7.16�
8. சீராகரன் நீலாவணை 1989.7.16�
9. முகிலன்.இராசமாணிக்கம் ஜீவராசா. கோட்டைகல்லாறு,1989.11.5�
10. அரசன்,தங்கராசா கிருஸ்ணபிள்ளை,கரைதீவு,1988.4.19�
11. ஜெயம்.கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். வீரமுனை.1989.8.30�
12. குரூஸ்.நல்லதம்பி பாக்கியராசா,காரைதீவு.,1989.1.9�
13. றமணன்,கணபதிப்பிள்ளை இலட்சுமணன்.பொத்துவில்.1988.3.17�
14. நிதி,செல்வநாயகம் கருணாநிதி.தம்பிலுவில்லு,1988.3.19�
15. அரசன்,தங்கராசா கிருஸ்ணபிள்ளை,காரைதீவு,1988.4.19�
16. இராசாத்,காரைதீவு.1988.5.17�
17. றொசான்உலகசேகரன் பத்மநாதன்.சல்லித்தீவு.1988.5.27�
18. நேசன்.காரைதீவு.1988.5.27�
19. தீபன்.சிக்கநாதன் சின்னவத்தை.1988.6.1�
20. சுந்தர்,சின்னத்தம்பி சிவானந்தசிங்கம்,காரைதீவு.1988.6.19�
21. தாடி,பொன்னபம்பலம் நாதன்.காரைதீவு,1988.10.27�
22. குமார்.முருகேசு உதயகுமார்,அக்கரைபற்று,1988.10.27�
23. சுதா,கனசூரியர் திருச்செல்வம்.கல்முனை.1988.10.27�
24. அகஸ்ரின்,சம்சுதீன் அபுல்கசன்.அக்கரைப்பற்று,1988.10.27�
25. சத்தீயன் ,ஞானமுத்து சிவானந்தராசா,திருக்கோவில்.1989.3.22�
26. நளின்.பிரதாப்குமார் அஜித்குமார்.பொத்துவில்.1989.8.21�
27. அலன்.சின்னத்தம்பி செல்லத்துரை.நற்பட்டிமுனை.1989.8.21�
28. ஜெயம் கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம். சம்மாந்துரை.1969.8.30�
29. குரூஸ் நல்லதம்பி பாக்கியராசா காரைதீவு 1989.9.11�
30. தேவா சாமித்தம்பி கிருஷ்ணமூர்த்தி.,பாண்டிருப்பு.1989.9.19�
31. யோகன்.வடிவேல் வேல்ராஜன்.திருக்கோவில்.1989.11.5�
32. க.பாபு அக்கரைபற்று. 1989.11.12.�
33. குமாராசாமி கிருபாகரன்.செட்டிபாளையம்.�
34. கந்தையா வாலு. செட்டிபாளையம்.1990�
35. குமாரசுவாமி கோபாலப்பிள்ளை. செட்டிபாளையம்.1990.9.15�
36. தருமலிங்க.மாங்காடு 1989�37. அமிர்தலிங்கம் 1989�38. பெரியப்பா. செட்டிபாளையம்.1990.9.15�
39. க.மனோகரன்.செட்டிபாளையம்.1989

Read more...

மல்லிகை மொட்டுவின் தலைமைப் பதவியை ஏற்க மஹிந்தர் தயாராம்.

ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தான் தயாரா இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

நேற்று முன்தினம் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற பொது எதிரணியினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் கேட்டபோது, கட்சியின் தலைமைத்துவத்தை பாரமெடுப்பதற்கான காலம் கனித்துள்ளதாக தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.

ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணியின் தலைவராக பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உள்ளார். கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மாதங்களில் கூடவுள்ளது. அதன்போது ஜீ எல் பீரிஸ், மஹிந்த ராஜபக்சவிடம் தனது கட்சியின் தலைமைப்பதவியினை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுதல் விடுக்கவுள்ளார் என கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்த இலங்கைநெட் அறிந்து கொள்கின்றது.


Read more...

இதோ படியுங்கள் தமிழில் குற்றப்பத்திரிகை. சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்தோரின் வேண்டுதல் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக புலிகளியக்கப் பயங்கரவாதிகளான கிளிநொச்சியைச் சேர்ந்த காராளசிங்கம் குலேந்திரன், ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார் மற்றும் லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியயோரை 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தமை யாவரும் அறிந்த விடயம்.

எம்.ஏ. சுமந்திரனை கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த 5 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு பிரதிவாதிகள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அவர்களது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்குப்படுத்தி தருவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

ஐவருக்கும் எதிராக போதைப்பொருள் தடுப்பு கட்டளை சட்டம், நிதிச் சலவைத் தடுப்பு சட்டம் , பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கல் மற்றும் ஊக்குவிப்புக்கு எதிரான சட்டம் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்டவையின் கீழ் கிளிநொச்சி நீதிவான் மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் பின்னர் நீதிவான் மன்றின் உத்தரவில் 5 பேரும் 9 மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவித்தது யாவரும் அறிந்தது.

Read more...

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டு என்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு விளக்க மறியல்!

தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பிரதேசத்தில் சட்டவிரோத மண்ணகல்வில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் பொலிஸ் தடுப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மற்றும் வாகனத்தை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி விடுதலை செய்ததை எதிர்த்து குறித்த பொலிஸ் சார்ஜனட் போர்க்கொடி தூக்கியதுடன் நீதி யாவருக்கும் சமமானது என்றும் குறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவிடத்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உத்தியோகபூர்வ ஆயுதத்துடன் வீதிக்கு இறங்கியிருந்தார்.

அங்கு விரைந்த பொலிஸ் உயரதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் பலனளிக்காத நிலையில் வீசேட அதிரடிப்படையினர் அவரை மடக்கி ஆயுதத்தை பறித்ததுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட வீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்ட இலங்கையிலே சிலர் பாடுபடுகின்றனர் என்பதும் அதிகார வர்க்கம் அவற்றை துவம்சம் செய்கின்றது என்பதும் குறித்த விடயத்தினூடாக தெளிவாகியுள்ளது.

Read more...

நீர்வழங்கல் காரியலயப் பிரச்சினையும், பொறியியலாளரின் தகவல்களும் சில தெளிவுகளும். வை எல் எஸ் ஹமீட்

நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றது.

ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர் அலுவலகமுமோ (Area Engineer’s Office) அமையலாம்.

தற்போது அக்கறைப்பற்று பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின்கீழ் இரண்டு பிரதேச பொறியியலாளர் காரியாலயங்கள் இயங்குகின்றன. ஒன்று அக்கரைப்பற்றிலும் அடுத்தது சாய்நதமருதிலுமாகும். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிராந்திய. அலுவலகத்தின் கீழும் ஒரு Operation and Maintenance அலுவலகமும் இயங்கும். அது தற்போது அக்கரைப்பற்றில் இயங்குகிறது.

சாய்ந்தமருது அலுவலகம்

தற்போதைய மூன்றாவது கல்முனைப் பிராந்திய அலுவலகம் சாய்ந்தமருதில் இயங்க இருக்கின்றது. இதன்கீழ் சாய்நதமருதில் ஒரு பிரதேச பொறியியலாளர் அலுவலகமும் ஒரு Operation and Maintenance அலுவலகமும் இயங்கும். மேலதிகமாக சம்மாந்துறையில் எதிர்காலத்தில் இன்னுமொரு பிரதேச பொறியியலாளர் அலுவலகம் திறக்கப்படலாம்.

இதன் சுருக்கம் அக்கறைப்பற்றில் தற்போது இயங்குகின்ற பிராந்திய முகாமையாளர் காரியாலயம், பிரதேச பொறியியலாளர் காரியாலயம் மற்றும் Operation and Maintenance Office வழமைபோன்று அங்கு தொடர்ந்தும் இயங்கும். இதன்மூலம் அக்கரைப்பற்றில் இயங்குகின்ற அலுவலகங்களுக்கு எதுவித பாதிப்பும் இல்லையென்பது தெளிவாகின்றது.

புதிய அலுவலகத்தின் அனுகூலங்கள்

தற்போது சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுமார் 17000 இணைப்புகள் இருக்கின்றன. இவை அம்பாறை அலுவலகத்தின் கீழ் வருகின்றன. இவர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அம்பாறைக்குச் செல்லவேண்டி இருக்கின்றது. மொழிப்பிரச்சினை, தேவையற்ற தாமதம். குறிப்பாக ஒருவருடைய தண்ணீர் இணைப்புத் துண்டிக்கப்பட்டால் மீளிணைப்பிற்காக அம்பாறைப் பிராந்திய அலுவலகத்திற்கு செல்லவேண்டிய நிலை.

இவையெல்லாவற்றிற்குமேலாக, சமூர்த்தி பெறுநருக்கான சலுகைக்கட்டண இணைப்பு பிரதேச பொறியியலாளரால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளதால் அது அம்பாறைக்கு அனுப்பப்பட்டு தேவையற்ற தாமதங்களால் பலவித அசௌகரியங்களுக்கு அவ் ஏழைகள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, வருட இறுதி நெருங்கும்போது அவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தாமதத்தின் காராணமாக அடுத்த ஆண்டை அடைந்துவிட்டால் புதிதாக சமூர்த்தி பெறுவதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய தேவை ஏற்படுவதனால் வீணான சிரமமும் காலதாமதமும் ஏற்படுகின்றது.

இவ்வலுவலகம் அருகே அமைவதால் பல அசௌகரியங்கள் தவிர்க்கப்படுவதோடு வருட இறுதிப்பகுதியில் ஏற்படுகின்ற தேவையற்ற தாமத, மற்றும் சிரமங்கள் நம்மவர்களுடன் பேசி புரிந்துணர்வு அடிப்படையில் தவிர்க்கப்படக்கூடிய வாய்ப்பு சமூர்த்திபெறுநர் போன்ற ஏழைகளுக்கு இருக்கின்றது.

மட்டுமல்லாமல் எங்காவது Break down ஏற்பட்டால் கையாள்வதில் தூரத்தே உள்ள அலுவலகத்தைவிட, அதிக பாவனையாளர்களால் வேலைப்பழு கூடிய அலுவலகத்தைவிட அருகேயுள்ள வேலைப்பழுக்குறைந்த அலுவலகத்தால் கையாள்வது இலகுவானதும் துரிதப்படுத்தப்படக் கூடியதுமாகும்.

உத்தியோகத்தர்க்கான அனுகூலம்

சாதாரணமாக உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இடமாற்றம் பெறுவதுண்டு. அருகே அலுவலகங்கள் அதிகரிக்கும்போது வெளிப்பிரதே இடமாற்றங்கள் குறையவும் அதன்மூலம் அவர்களது சிறார்களின் கல்வி முதற்கொண்டு எத்தனையோ வகையான சிரமங்கள் தவிர்க்கப்பட வாய்ப்புண்டு. அதேநேரம் இன்னும் சிலருக்கு தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.

சுருங்கக்கூறின் மேலதிக அலுவலகத்தால் ஏற்கனவே இருக்கின்ற அலுவலகத்திற்கு எதுவித பாதிப்புமில்லாதபோது அடுத்தவர்களின் நன்மைக்காக புதிதாக உருவாக்கப்படுகின்ற அலுவலகத்தை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்; என நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு ஊருக்கு தீமைசெய்து இன்னொரு ஊரோ, பிரதேசமோ நன்மையடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் எந்த ஊருக்கும் பாதிப்பில்லாமல் கிடைத்தால் “ நன்மையே” என்கின்ற ஒரு விடயத்தை எதற்காக நாம் எதிர்க்க வேண்டும்; என்பதை அன்புக்குரிய சகோதர்கள் சிந்திக்க வேண்டும்.

வீண்வாதம்

மூன்று அலுவலகங்கள் வருவதால் பின்னர் அவற்றை மூடிவிட்டு எல்லாவற்றையும் அம்பாறைக்குக் கொண்டுபோய் விடுவார்கள்; என்று கற்பனையில் ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதேநேரம் சம்மாந்துறையில் DGM அலுவலகத்தைக் கொண்டுபோகத்தான் இந்த முன்னெடுப்பு என்று அம்பாறையில் சிங்களத்தில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு முன்வைக்கப்படும் கற்பனாவாதங்களை எவ்வாறு பகுத்தறிவிற்குள் நிறுவுவது. கற்பனையில் பேசுவதானால் எல்லையில்லாமல் பேசலாம். ஏனெனில் அது கற்பனையாகும்.

எனவே, அன்புள்ள சகோதரர்களே, தமக்குப் பாதிப்பில்லாதபோது அடுத்த பிரதேசத்திற்கு கிடைக்கின்ற நன்மைகளை அரசியல் காரணங்களுக்காகவோ, அறியாமையினாலோ பிரதேசவாத உணர்வுகளைத் தூண்டி தடுக்க முற்படுவது முறையல்ல.

அடுத்த சமூகங்களில் ஜாதிவாதம் இருக்கின்றது. நம்மிடம் அது இல்லை. அதற்க்குப்பதிலாக பிரதேச வாதத்திற்குள் சிக்கித் தவிக்கிறோம். இனவாதமோ, பிரதேசவாதமோ! அவற்றுக்குப்பின்னால் இருப்பது இரு காரணிகள். ஒன்று- அரசியல். அடுத்தது- அறியாமை, புரியாமை. ஆனால் இதன்விளைவுகள் பாரதூரமானவை.

கலிமாவின் பெயரால் ஒன்றுபட்ட சமுதாயம், “வஃதசிமூ” வை ஓதிய சமுதாயம் பிரதேசத்தின் பெயரால் பிரிகின்ற கொடுமையை நிறைய அனுபவித்துவிட்டோம். போதும் சகோதரர்களே!

Read more...

Wednesday, October 3, 2018

ஈழதமிழரின் ரத்தத்தில் இங்கு யார் அரசியல் ஆதாயம் பெறுவது? தமிழகத்திலே முட்டி மோதினால், இலங்கை எப்படி இருக்கும்?

அவர்களுக்கு அது தீவிரவாத ஒழிப்பு. யார் புலிகளை தைரியமாக ஒழித்தது? என அந்த பெருமையினை தக்க வைக்க படாதபாடு படுகின்றார்கள்.

முதலில் பொன்சேகாவும் ராஜபக்சேவும் மோதினார்கள், பின் ராஜபக்சே நானே புலியினை துரத்தி துரத்தி மண்டையில் போட்டவன் என சொல்லிகொண்டார்.

கோத்தபாயா, மகிந்தா இருவரும் கடைசி வாரத்தில் இலங்கையிலே கிடையாது, நானே புலிகளுக்கு அஞ்சாமல் அவர்களை கொன்றேன் என்றார் பொன்சேகா

இதில் பொன்சேகா சிறை செல்லும் வரை சிக்கல் வந்தது.

இப்பொழுது இலங்கை அதிபர் சிறிசேனா இந்த கோதாவில் குதிக்கின்றார். புலிகளை ஒழித்தது நானே என்கின்றார்

எப்படி?

முள்ளிவாய்க்கால் நடக்கும்பொழுது இவர்தான் பாதுகாப்புதுறை அமைச்சர், கொழும்பில் புலிகள் எப்பொழுதும் தாக்குதல் நடத்தலாம் எனும் நிலையில் ராஜபக்சே ஜோர்டானுக்கு பறந்தார், கோத்தபாயா கடலுக்குள் பாய்ந்தார்

யுத்தநடத்தல் பாதுகாப்பு அமைச்சர் சிரீசேனா வசமே இருந்தது, அதைத்தான் இப்பொழுது சொல்லி "நானே சகலகலா வல்லவன், ராஜபக்சே ஒன்லி ஆக்டிங்" என பகிரங்கமாக சொல்கின்றார்

அத்தோடு விட்டாரா? புலிகள் சென்னையில் இருந்தும் வன்னியில் இருந்தும் கொழும்பினை விமானம் மூலம் தகர்க்கும் திட்டத்தில் இருந்தனர் , நானே அதை தைரியமாக எதிர்கொண்டேன் என்கின்றார்

ஏன் சொல்லவேண்டும் என்றால் இலங்கை பொருளாதாரம் இந்தியாவினை விட மோசம், பின் எதை சொல்லி தேர்தலை சந்திப்பது?

இதில் மறைமுகமாக சிறீசேனா சொல்வது என்னவென்றால் முள்ளிவாய்க்கால் படுகொலையினை நடத்தியது நானே, ராஜபக்சேக்கு பங்கு இல்லை என்பது.

இந்த சிரிசேனாவிடம் தான் அதிமுக அமைச்சர்கள் சென்று பல்லைகாட்டி பரிசு பெற்று வந்தனர் என்பது சமீபத்திய செய்தி.

சிரீசேனா விவகாரம் இன்னும் தமிழகத்து ஈழ அழிச்சாட்டிய கும்பலுக்கு, குறிப்பாக அங்கிள் சைமனுக்கு தெரியாது போல‌.

தெரிந்தால் என்னாகும், அந்த விமான விஷயத்தை பிடித்துகொள்வார், சென்னையில் இருந்து புலிகள் தாக்கும் ஆபத்து இருந்தது என்றால் போதாதா?

"ஆமாம், நான் அண்ணனை பார்க்க சென்றபொழுது வாடா நாம வான்புலி விமானத்தில் பறப்போம் என்றார், எப்படின்னே விமானமே இல்லையேன்னே, புலிடா இது இப்போ பாரு என சிரிச்சார்

டிராக்டர்ல இருந்து டயரை கழட்டுனாங்க, கண்டெய்னெர் ல இருந்து இரும்பு தகடை சைஸா வெட்டுனாங்க, தோட்டத்தில ஓடிகொண்டிருந்த ஆயில் மோட்டார் ஒன்னை கொண்டு பொருத்தினாங்க, கொஞ்ச நேரத்தில் விமானம் ரெடி. வாடா தம்பின்னார், நானும் ஓடி போய் ஏறிகிட்டேன், ரன்வே இல்லியண்ணே என்றேன் சிரிச்சார்

விமானத்தில் பறக்கும் போது சாப்பிட 6 வகை இறால், கணவாய் எல்லாம் இருந்தது,

திடீர்னு ஒரு அறிவிப்பு வான்புலி கிளம்புதுன்னு சொன்னாங்க, அவ்வளவுதான் தெரு எல்லாம் அமைதி அண்ணன் அப்படியே தெருவில ஓடி ரோட்டில ஓடி ஒரு குளத்தில ஓடி அப்படியே மேலே எழுப்பினார், நாங்க ஆஸ்திரேலியா வரை பறந்தோம், அவனுக நீங்க யாருண்ணு கேடானுக போடா ஓ..தா ன்னு சொன்ன்னேன் சுட்டானுக‌

ஆனா விமனாம் பல்டி எல்லாம் அடிச்சி அட்டகாசமா வந்துட்டு, ஆஸ்திரேலியாகாரனே பயந்துட்டான். இன்னுவரைக்கும் அவனுக்கு அது யாருண்ணு தெரியாது.

மறுபடி வன்னிக்கு வந்தோம், 2 செகன்ட்ல எல்லாம் பிரிச்சாச்சி, டிரக்டர் கண்டெய்னர்னு எல்லாம் செட் ஆயிட்டு, விமான எந்திரம் தண்ணி மோட்டார் ஆயிட்டு

எப்படி அண்ணே இப்படி என அதிர்ச்சியாய் கேட்டேன், தம்பி சீவகசிந்தாமணி, ராமயணம் எல்லாம் விமானம் பற்றி சொன்னதை நீ படிக்கவில்லையா? இதெல்லாம் தமிழனுக்கு சாதாரணம் என்றார். அடுத்து விமான தயாரிப்பு பறத்தல் , மண்ணெண்ணயில் விமானத்தை இயக்குதல் போன்ற பயிற்சி எல்லாம் வழங்கினார்.

இப்படி பயிற்சி அளிச்சிட்டு என்னிடம் சொன்னார், தம்பி தமிழகம் முழுக்க இப்படி விமானம் மாறுவேடத்தில் இருக்க வேண்டும், நான் சொல்லும்பொழுது நீ தயாராகி பறந்து வந்து கொழும்பை தகர்க்க வேண்டும்

நானும் 2008ல் தயாரானேன், எங்க ஊர்பக்கம் நான் பறந்தபொழுது பனையேறிட்டு இருந்த சிலர் பார்த்துட்டாங்க, விஷயம் கருணாநிதி காதுக்கு போயிட்டு

அவர் உடனே எல்லா விமான என்சினையும் பறிமுதல் செய்து அறிவாலயம் பக்கம் வச்சிருந்தார், மாமல்லபுரத்துக்கு வந்த சில பிரெஞ்ச்காரன்ட இந்த திமுககாரன் எல்லாம் அத‌ வித்துட்டானுக‌

அந்த விமானம்தான் இப்பொழுது ரபேல் என இந்திய அரசு வாங்கியிருக்கின்றது என் உறவே, எப்படிபட்ட அநீதி இது , எப்படிபட்ட கொடுமை இது

நானும் என் அண்ணனும் அசால்ட்டா செய்த விமானம் இப்பொழுது டசால்ட் ரபேலாம்..

இத மாதிரி கேணத்தனம் ஏதாவது உண்டா என் சொந்தமே"

தமிழகத்திலிருந்து ஸ்ரான்லி ராஜன்.

Read more...

தீர்வையற்ற வாகனம் கோரிச்சென்ற விக்கிக்கு அடித்தார் மங்கள ஆப்பு!

முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் எம் மக்களுக்கு சலுகைகள் வேண்டாம் உரிமைதான் வேண்டும் என்று அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நீதியை திறைசேரிக்கு திருப்பி அனுப்பி மா பெரும் தேசியவாதியாக உயர்ந்து நிற்கின்றார்.

ஆனாலும் மக்களுக்கு சலுகைகள் வேண்டாம் என்ற விக்கி தனக்கு வாகனவரிச் „சலுகை" வேண்டும் என்று அமைச்சரவையை கேட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவைப் பத்திரத்தை, சமர்பித்துள்ளார் இதனூடாக விக்கிக்கும் அரசிற்கும் இடையேயான பின்கதவு உறவு அம்பலமாகியுள்ளது.

இங்கு மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம் யாதெனில், ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையை ஒத்த சலுகை வழங்கப்பட்டபோது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அதை ஏற்க மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்.

மற்றவர்களுக்கு வழங்கப்படும் சலுகையைவிட சற்று வித்தியாசமான சலுகைக்கான கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட போதிலும், நிதியமைச்சர் மங்கள சமரவீர, வாகனக் கொள்வனவு தொடர்பான தன்னுடைய அறிக்கையை மீறும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்தை வலியுறுத்தினார். அமைச்சர் மங்களவின் இந்த எதிர்ப்பையடுத்து, வடமாகாண முதலமைச்சருக்கான தீர்வையற்ற வாகனக் கோரிக்கையை, அமைச்சரவை நிராகரித்துள்ளது.

Read more...

குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு செல்வீர்! ஹிஸ்புல்லாவிற்கு நீதிமன்று உத்தரவு.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் சவூதிஅரேபிய நிதி உதவியின் கீழ் தனியார் பல்கலைக் கழகமொன்று நிர்மானிக்கப்பட்டு வருகிறது.

குறித்த கட்டிடப்பணிகளுக்காக லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து பிறிதொரு கட்டுமானப் பணிகள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த பிரதி அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்மாணப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பிரதிவாதிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நால்வரும் எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 9.00 மணிக்கு சமூகமளித்து தங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் 2018.08.14 ஆம் திகதி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோத்தாவுடன் ஒப்பந்தம் அடித்துக்கூறுகிறார் டக்ளஸ்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் செல்வராசா கஜேந்திரன் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு பெருந்தொகைப் பணத்தை கையாடியவர் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

இந்தியா சென்ற டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் வே.பிரபாகரனை விச ஜந்து எனக் கூறியதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பாக கருத்துரைத்த கஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் அவர் ஒரு துரோகி என்றும் கூறியிருந்தார்-

கஜேந்திரகுமாரின் குறித்த விமர்சனம் தொடர்பில் நாளேடு ஒன்றுக்கு பதிலளிக்கையேலேயே மேற்படி ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படுத்தியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா.

அவர் குறித்த நாளேடுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் கஜேந்திரனுக்கு என்னைப்பற்றி பேச தகுதி இல்லை. 40 ஆயிரம் சவப்பெட்டிகளை தயார் செய்து வைத்திருங்கள் என்று பாராளுமன்றில் கூறிவிட்டு தப்பித்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர். அவர் பிரச்சினைகள் எல்லாம் முடிந்தபின்னரே யாழ்ப்பாணத்திற்கு வந்தார்.

நாடு திரும்ப முன்னர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தகொண்டார். அதில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது சகோதரனை விடுவிக்குமாறு கேட்டிருந்தார். சகோதரன் விடுவிக்கப்பட்டால் தான் மீண்டும் நாட்டிற்கு வந்து தமிழ் தேசியக் கூட்டமைபை பிளவுபடுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார் எனவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

தப்பித்து தலைமறைவாக உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களை காட்டிக்கொடுப்பதாகவும் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சில செயற்பாடுகள் நடைபெற்றிருந்தமை எல்லோருக்கும் தெரியும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வர முன்னர் கொழும்பில் பதுங்கிவைக்கப்பட்டிருந்த சொத்துக்கள் புலிகளின் மறைவுக்கு பின்னர் விற்று பணமாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக கஜேந்திரன் என்னை தமிழ் மக்களின் துரோகி என்றும் கூறியுள்ளார். தமிழ் மக்களின் துரோகி யார்? என்பதை அந்த மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

கொலைச்சதி தொடர்பாக தன்னிடமும் தகவல்கள் உண்டாம்! பொலிஸ் மா அதிபர்.

பொலிஸ் திணைக்களம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்கின்றார் ஜனாதிபதி.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோரை மட்டக்களப்பிற்கு செல்கின்றபோது அங்கு கொலை செய்து புஸ்பராஜ் என்கின்ற அரசியல்வாதி ஒருவர் மேல் பழியை போடமுடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, மோசடி ஒழிப்பு முன்னணி எனப்படுகின்ற அமைப்பொன்றின் தலைவரான நாமல் குமாரவிற்கு ஆலோசனை வழங்கினார் என்ற தகவல் நாட்டில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டிய பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் மக்கள் கடும் விசனமடைந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக தன்னிடமும் பல்வேறு தகவல்கள் உள்ளதாகவும் அவை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர.

இந்நாட்டின் பொலிஸ் மா அதிபராக இவ்விடயம் தொடர்பில் தனது வாய்முலத்தை வழங்குவது தனது கடமை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனது வாய்மூலத்தையும் பெற்றுக்கொள்வேண்டுமென விரும்புவதாக அரச செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பொருத்தமற்ற செயற்பாடுகளினால் மக்கள் பொலிஸ் திணைக்களம் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த நிலைமையை துரித கதியில் சரி செய்து கொள்ள வேண்டுமெனவும், பொலிஸார் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழப்பானது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் குற்றச் செயல்கள், கொள்ளைகள், ஊழல் மோசடிகள் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்தா என்பதனை மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உருவாகியுள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை அந்த குற்றச் செயல்களை ஊக்குவிப்பதற்கு நிகரானதாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்த போது அமைச்சர்கள் எவரும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Read more...

Tuesday, October 2, 2018

சிறையினுள் ஞானசாரரின் உயிருக்கு ஆபத்தாம்!

நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காக 6 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் உயிருக்கு சிறையினுள் ஆபத்தேற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் சிலர் சிறைச்சாலையின் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

இக்கடிதத்தை நேற்றுக்காலை சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் கையளிக்க சென்றபோது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் தேரர்களுடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதேநேரம் இன்று ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி பொதுபலசேனா தேரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று வேண்டுதல் ஒன்றை கொடுத்தனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், எதிர்வரும் காலங்களில் தேர்தல்கள் பல வருவதாகவும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாதவிடத்து பௌத்த சிங்களவர்களை தேரருக்கு எதிரானவர்களுக்கு எதிராக திரட்டவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Read more...

நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை இப்போதே தொடங்கிவிட்டார்களாம் ராஜபச்சர்கள்.

தாம் மேற்கொண்டுவந்த சகல அவிபிருந்தி வேலைத்திட்டங்களும் ஆட்சி மாற்றத்தினூடாக சிதைக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்துவரும் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் திட்டமிடுதலுக்கு காத்திராமல் தாம் தற்போதே அவ்வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கோட்டபாய ராஜபக்ச.

”எளிய” அமைப்பின் மாநாடு நேற்று கடு­வல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்ற தெளிவு இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இல்லை. எம்மைப் பழி­வாங்­க ­வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்­டுமே நல்­லட்­சி­யா­ளர்­க­ளிடம் உள்­ளது மீண்டும் எமது ஆட்­சியில் பொதுமக்கள் ஜன­நா­ய­கத்தை உண­ரு­வார்கள். நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வருவது உறுதி.

யுத்­தத்தின் பின்னர் இந்த நாட்­டை சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல அவ­சி­ய­மான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களைச் செய்ய வேண்டும். அதற்­கான நேர்த்­தி­யான அபி­வி­ருத்­தியில் விமான நிலையம், துறை­முகம் என்­பன மிகவும் முக்­கி­ய­மா­னவை. அதனால் தான் நாம் விமான நிலையம், துறை­முகம் ஆகி­ய­வற்றை உரு­வாக்­கினோம். எனினும் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் அவற்றை நிறுத்தும் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

பிர­தமர் இந்த அபி­வி­ருத்­தி­களை தடுக்­கின்றார். விமான நிலையம், துறை­முகம் அமைத்­தது நாமாக இருந்­தாலும் அவை அனைத்­துமே இந்த நாட்­டிற்­கான வளங்­க­ளாகும். ஆனால் நாம் அவற்றைச் செய்த ஒரே கார­ணத்­தினால் எம்மைப் பழி­வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் இந்த அபி­வி­ருத்­தி­களை பிர­தமர் தடுத்து வரு­கின்றார். இதனால் தான் எமது நாட்டில் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் உரு­வா­கி­யுள்­ளன. இந்த அர­சாங்கம் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசு­கின்ற போதிலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தத் தெரி­ய­வில்லை. இன்­று­ வரை பேசிக்­கொண்டே உள்­ளனர். ஆனால் நடை­மு­றைக்கு ஒன்றும் வர­வில்லை.

எமது ஆட்­சியில் சுய­மா­கவும், தைரி­ய­மா­கவும் தீர்­மானம் எடுக்­கக்­கூ­டிய தலை­மைத்­துவம் எமக்கு இருந்­தது. யுத்­தத்தை நாம் முன்­னெ­டுத்த வேளையில் அதற்குத் தேவை­யான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க பாது­காப்பு குழுக்­கூட்­டத்தில் ஜனா­தி­பதி தீர்­மானம் எடுத்தார். பாது­காப்பு படை­க­ளுக்­கான உணவுப் பற்­றாக்­குறை ஏற்­பட்ட வேளையில் அதனைத் தீர்க்க சர்­வ­தேச உத­வி­களைப் பெற்று நட­வ­டிக்கை எடுத்தார். நாட்­டுக்­காக சுய­மாக, சுயா­தீ­ன­மாக தீர்­மானம் எடுக்க முடிந்­தது. ஆனால் இந்த ஆட்­சியில் அவ்­வாறு ஒன்றும் இல்லை. கடந்த மூன்று ஆண்­டு­களில் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளர்கள் மூவர் மாற்­றப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு பல­வீ­ன­மான முறையில் எவ்­வாறு ஆட்­சியைக் கொண்­டு­செல்ல முடியும் என்ற கேள்வி எழு­கின்­றது.

பாது­காப்பு அமைச்சில் இருந்த முக்­கி­ய­மான நபர்கள் அனை­வரும் மாற்­றப்­பட்­டுள்­ளனர். இதேபோல் ஏனைய அமை­ச்சு ­க­ளிலும் இடம்­பெற்­றுள்­ளது. மேலும் அரச அதி­கா­ரி­களை விசா­ரணை என்ற பெயரில் நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு கொண்டு சென்று விசா­ரித்து வரு­கின்­றனர். விசேட நீதி­மன்­றங்­களை உரு­வாக்­கி­யுள்­ளனர். ஆனால் மறு­புறம் நாட்டின் பொரு­ளா­தாரம் மோச­மான நிலையில் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அதனை மீட்­டெ­டுக்க எந்த நட­வ­டிக்­கையும் எடுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இந்த ஆட்­சியில் வேலைத்­திட்டம் என ஒன்றும் இல்லை. மாறாக அர­சியல் பழி­வாங்கல் மட்­டுமே இவர்­க­ளிடம் உள்­ளது. நான்கு ஆண்­டு­களைக் கடக்­கின்ற போதிலும் இவர்­களின் வேலைத்­திட்டம் நடை­மு­றைக்கு வரா­துள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் அடுத்து நாம் உரு­வாக்­கப்­போகும் எமது ஆட்­சியில் அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளையும் நேர்த்­தி­யாக செய்­யக்­கூ­டிய வகையில் இப்­போதே நாம் எம்மை தயார்­ப­டுத்தி வரு­கின்றோம். அர­சாங்­கத்தைக் கைப்­பற்­றிய பின்னர் அடுத்த கட்­டத்தைப் பற்றி சிந்திக்காது இப்போதே அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். சகல துறைசார் நிபுணர்களையும் சந்தித்து இவற்றை ஆராய்ந்து வருகின்றோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை இனியொரு போதும் நாம் விடப் போவ தில்லை. மீண்டும் எமது ஆட்சி உருவாகும் போது மக்கள் ஜனநாயகத்தை உணரும் சூழலும் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

வியாபாராமாகிப் போன Montessori - அஹமட்

ஒரு சமூகத்தின் சொத்து உண்மையில் பௌதீக வளங்களல்ல. சமூகம் அடைய விரும்பும் இலக்குகளுக்கான சாதனங்கள் மட்டுமே ஒரு சமூகத்தின் சொத்தாகும். அந்த வகையில், சமூகத்தின் மிகப்பெரும் செல்வமாக கல்வியே கருதப்படுகிறது.

கல்வியற்ற சமூகம் - கண்கள் இல்லாதவர்களுக்கு ஒப்பானவர்களாகும்.

"கல்வியை தேடிக் கற்றுக்கொள்வது கடமை" என்கின்ற கருத்து மதங்களில் ஆழப்பதிந்துள்ளது. கல்வியை போதிப்பதற்கு இன்று பலர் தங்களை தயார்படுத்தியுள்ளனர். ஆனால் அந்தக் கல்வியின் தரங்கள் பற்றி நம்மில் அதிகம்பேர் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

ஆரம்பக் கல்வியை வழங்கும் இடங்களாக பாலர் பாடசாலைகள் விளங்குகின்றன. பெற்றோர்கள், பலவாறு ஆரம்பக் கல்விக்கான நிலையங்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் அந் நிலையங்கள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதில் எம்மால் காட்டப்படுகின்ற அக்கறை மிக அரிதானதாகவே உள்ளது.

திரும்புகின்ற இடமெல்லாம் பாலர் பாடசாலைகள் முளைத்துள்ளன. இது, இன்றைய காலகட்டத்தில் எழுந்திருக்கின்ற முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாகும். பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்கள் வேறு. ஆனால் தற்கால பாலர்பாடசாலைகள் வியாபார நோக்கங்களை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது என்கிற கருத்து சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிரம்பிப்போயுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

ஆரம்பக் கல்வியை வழங்கும் பாலர் பாடசாலை திட்டமானது, 1907ம் ஆண்டு மரியா மொண்டசூரி அம்மையாரால் ஆரம்பிக்கப்பட்டது. இதனாலே அம்மையாருடைய பெயர் இந்த கல்விக்காக சூடப்பட்டது.
'பாலர்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு பூரண சுதந்திரத்தையும், அவர்கள் விரும்பியவற்றை செய்வதற்கான அனுமதியை, சில கட்டுப்பாடுகளுடன் கொடுப்பதற்காகவுமே' பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்கிற வரலாறு அதில் புதைந்துள்ளதனை கண்டுகொள்ளமுடிகின்றது.

மரியா மொண்டசூரி அம்மையார் பாலர்களையும், சுற்றாடலுடனான தனது அனுபவத்தையும் மையமாக கொண்டே இக் கல்விமுறையை நெறிப்படுத்தினார். பாலர் பாடசாலைக் கல்வியானது 1911ஆம் ஆண்டு காலப்பகுதியில், அமெரிக்காவில் பிரபல்யம் அடைந்து காணப்பட்டது. அக்காலத்தில், ஏனைய தொழில்களை விடவும் மொண்டசுரி ஆசிரியர்களுக்கு சிறந்த வருமானம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

பாலர்களின் திறமைக்கு இடமளிக்க கூடிய வகையில், அவர்களின் வயதுக்கு தகுந்த செயல்முறைக் கல்வியினை புகட்டுவதே மொண்டசூரி கல்வியினுடைய நோக்கமாகும்.

ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து 05 வயது வரையில், நல்வழிப்படுத்தி கல்வி வழங்குவதற்கு சிறந்த செயல்முறையாக மொண்டசுரி காணப்படுகின்றது. இக்காலப் பருவமே உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் வளர்ச்சி அடைகின்ற பருவமாக திகழ்கின்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

பாலர்களுக்கு கல்வி புகட்டுகின்ற பாலர்பாடசாலைகளில் (மொண்டசசூரி), செயல்முறை பற்றி நன்றாக கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்தான் கற்பிக்க வேண்டுமென மரியா மொண்டசுரி அம்மையார் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், துரதிஷ்டவசமாக இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது நாட்டிலும் மொண்டசுரியினுடைய உண்மை, தாற்பரியம் புரிந்துகொள்ளப்படவில்லை. பயிற்சி, அனுபவம் மற்றும் திறமையற்ற ஆசிரியைகள் அக்கல்வி முறையை சீர்குலைப்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

பாலர் பாடசாலை நிலையங்கள் - இன்றைய சமூகத்தில் மிக முக்கியமானவை. அதுவே கல்விக்கான அடிப்படை தளமாகவும் விளங்குகின்றது.

பாலர் கல்வி (மொண்டசூரி) என்றால் எமது மனக்கண் முன் தோன்றுவது, விழாக்களுடன் தொடர்பான ஒரு சில விடயங்கள் மாத்திரம்தான். ஆனால் அவை இக்கல்வி முறைக்கு புறம்பான செயற்பாடுகள் என்கின்றார் மரியா அம்மையார்.

எமது நாட்டில், நாம் வாழுகின்ற சூழலில் திரும்புகின்ற இடமெல்லாம் பாலர் பாடசாலைகள் (மொண்டசுரி) தோற்றம் பெற்றிருக்கின்றன. ஒரு காலத்தில் பாலர் பாடசாலைகள் நிறுவப்படுவதாக இருந்தால், கல்வி அமைச்சிடம் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் இல்லாமல் போனதன் காரணத்தினால், குக்கிராமத்தில் கூட, தெருவுக்கொரு பாலர் பாடசாலை நிறுவப்படும் 'அபாயம்' ஏற்பட்டுள்ளது.

இங்கு கற்பிக்கின்ற ஆசிரியைகள், சாதாரணதரக் கல்வியை பூர்த்தி செய்யாத, 18, 20 வயதுக்குட்பட்ட பெண்களாக உள்ளனர். இவர்களுக்கு குறைந்தளவு சம்பளமே வழங்கப்படுகின்றது. பாலர் பாடசாலை கற்கை நெறியை பூர்த்தி செய்த, தரமிக்க ஆசிரியைகளை நியமித்து கல்வி போதிக்கின்ற பாலர் நிலையங்கள், மிக அரிதாகவே காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கைச் சமூகத்தில்; முன்னெப்போதும் இல்லாதவாறு, கல்விக்கான பணங்கள் அதிகளவில் செலவிடப்படுகிறது. ஆனால், இந்த நிலையினை பாலர் கல்வி நிலையங்கள் பிழையாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது.

நவம்பர், டிசம்பர் மாதங்கள் வருடத்தின் இறுதிக் காலப்பகுதி. பாலர் பாடசாலைகளில் கல்வி பெற்ற பாலகர்கள், தாம் கற்ற கல்வியை மேடையேற்றுகின்ற விழாக் காலமாகும். இந் விழாக்களினூடாக பல லட்சம் ரூபாய்களை பாலர் பாடசாலை நடத்துநர்கள் வருமானமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். ஏலவே கற்கும் பிள்ளைகளிடமிருந்து மாத வருமானமாக பல ஆயிரம் ரூபாய்களை பெற்றுக் கொண்டு வருகிறார்கள். விழாக்கள் நடாத்தி, ஏட்டிக்குப் போட்டியாக வருமானம் உழழைக்கின்ற நிலையங்களாக பாலர் பாடசாலைகள் இருக்கும் நிலை, இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

60 வீதமான பாலர் பாடசாலைகளில் கற்கை நெறிக்கோவைகள் பின்பற்றப்படுவதில்லை. இவ்வாறான பாலர் நிலையங்களுக்கு செல்கின்ற பிள்ளைகளுக், கல்வி கற்பதற்குரிய சரியான அடித்தளம் அமைவதில்லை.

வெறுமனே அங்கு கற்பிக்கப்படுகின்ற ஓரு சில ஆங்கில வார்த்தைகளையும், கவிதைகளையும் மனனமிட்டு பேசுவதற்கும், பாடுவதற்கும் கற்கொள்ளகின்றனர். இதைக் காணுகின்ற கணிசமான பெற்றோர்களும் திருப்தியடைகின்றனர். பாலர் பாடசாலைக் கல்வி என்பது இதுவல்ல. சூழல்களை புரிந்துகொள்ளாமல் பாலர் பாடசாலைகளுக்கு செல்கின்ற கணிசமான பாலகர்களை எம்மால் அவதானித்துக்கொள்ள முடிகின்றது.

தற்போது இலங்கை அரசினால் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்காக ஒரு தொகை கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஆனால், முறையான அடிப்படை பேணப்படுவதாகத் தெரியவில்லை. இங்கு கற்பிக்கின்ற ஆசிரியைகள் பாலர் கல்வி தொடர்பாக அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் டிப்ளோமா அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி நிலையை பூர்த்தி செய்யவேண்டும். இவ்வாறான நிபந்தனைகள் இது விடயத்தில் எடுக்கப்படுகின்ற போதுதான், பாலர் கல்வி சிறப்பானதாக மிளிரும். அப்போதுதான் அறிவுத்திறன் கூடிய சமூகமொன்று, உருவாவதை எதிர்பார்க்க முடியும்.

ஆரம்பக்கல்வியை போதிக்கின்ற பாலர் பாடசாலைகள் முறையான திட்டங்களுக்குள் கொண்டுவரப்படல் வேண்டும். முறையான திட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாடசாலைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுதல் அவசியமாகும். சமூகத்தினுடைய எழுச்சியும் வீழ்ச்சியும், பாலர் கல்வியிலேயே தங்கியுள்ளது.

அடித்தளம் உறுதியாக இடப்படுகின்ற போதுதான், அதன்மேல் கட்டப்படுகின்ற கட்டிடமும் உறுதியானதாக இருக்கும். எனவே, இது விடயத்தில் பெற்றோர்கள் அவதானிப்புடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவை. ஆன்மீகம், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற விடயங்களில்தான் சமூகங்கள் அதிகமாக ஏமாற்றப்படுகின்றன. அவ்வாறான ஒரு காலத்தில் நாம் இருக்கின்றோமோ என்கின்ற அச்ச உணர்வு எம்மில் பலருக்கு இல்லாமலில்லை.

நமது சிறார்களின் கல்வி விடயத்தில், காலங்கடந்து சிந்திப்பதனை தவிர்த்து விழிப்புடன் நடந்துகொள்வோம்.


Read more...

மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலர் யோகராஜன் அடித்து விரட்டப்பட்டார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தவர் யோகராஜன். பொது நிர்வாக சேவை உத்தியோகித்தர் என்பதை விட மக்கள் விரோத உத்தியோகித்தராகவே அடையாளம் காணப்பட்டிருந்தார் என மண்முனை பிரதேச செயலகத்திற்கு சேவைநாடிச் சென்ற பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரதேச செயலகத்திலுள்ள ஊழியர்களுடனும் யோகராஜன் அதிகார வெறியுடன் செயற்பட்டு வந்துள்ளார். யோகராஜனின் மேற்படி செயற்பாடுகளுக்கு மண்முனை வடக்கில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய குணநாதன் என்பவர் உறுதுணையா இருந்ததாக பிரதேச செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

குணநாதன் இடமாற்றம் பெற்றுச்சென்று, புதிய பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ள தயாபரன் அவர்களுடன் ஒத்துழையாமையால் இருவரிடையே முரண்பாடு வலுப்பெற்ற நிலையில், யோகராஜன் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகவும் யோகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

தற்காலிகமாக கிரான் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக தஞ்சம் புகுந்துள்ள யோகராஜனது நிரந்தர இடமாற்றம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் சுற்றுலாச் சென்றுள்ள மாவட்ட செயலாளர் நாடுதிரும்பியவுடன் முடிவெடுக்கப்படும் என மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யோகராஜன் மண்முனை பிரதேச செயலகத்தில் காணப்படும் அரச காணிகள் தனது தாயதிச்சொத்து என்ற ரீதியில் செயற்பட்டுவந்ததாகவும், அரச காணிகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கட்டு அவற்றை வழங்குவதில் பெரும்முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளதாகவும் குறைபாடுகள் கூறப்படுகின்றன. காணிப்பங்கீட்டு விடயத்தில் குணநாதன் மற்றும் யோகராஜன் இணைந்து மேற்கொண்ட மக்கள் விரோத அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் இலங்கைநெட் ஆதாரங்களுடன் மிகவிரைவில் அம்பலப்படுத்தும் என்பதை வாசகர்கட்கு அறியத்தருகின்றோம்.

Read more...

இந்தியாவிற்கு காட்டிக்கொடுக்கும் கஜேந்திரகுமார் கொம்பனியின் ரகசியக் கடிதம்! இதோ படியுங்கள்..

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முண்டியடித்துக்கொண்டு இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் உறுப்பினரும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான க.சிவராசா என்பவர் இந்திய தூதரகத்திற்கு பிரதேச சபையை காட்டிக்கொடுத்து எழுதிய கடிதம் ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இக்காட்டிக்கொடுப்பு தொடர்பாக தெரியவருவதாவது:

இந்திய சிதம்பர ஆதீனத்திற்கு சொந்தமான காணிகள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றது. இவற்றை பராமரிப்பதற்காக ஆதீனத்தால் நியமிக்கப்பட்டுள்ள நபரொருவரால் குறித்த காணிகளுக்கான வருவாய்கள் அறவீடு செய்யப்பட்டு வருகின்றது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சந்தை ஆதீனத்திற்கு சொந்தமான காணியில் செயற்பட்டு வருகின்றது என்பதுடன் அதற்காக வருடாந்தம் ஒரு லட்சம் குத்தகையும் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆதீனத்தினரால் குத்தகை தொகை பத்து மடங்காக அதிகரித்து வருடத்திற்கு 10 லட்சம் ரூபா கோரப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபா வருட வருமானம் கொண்ட சந்தைத் தொகுதிக்கு வெறும் நிலத்திற்கு மாத்திரம் 10 லட்சம் வாடகை கொடுக்க முடியாமையால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் பணத்தை ஆதீனத்திற்கு வழங்குவதை தவிர்க்கும்பொருட்டு ஆதீனத்திற்குரிய காணியை சுவீகரிப்பது என்றமுடிவு பிரதேச சபையினால் எடுக்கப்பட்டுள்ளதுடன், காணி சுவீகரிப்பு தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது சர்வ கட்சிகளையும் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. இக்குழுவின் சிபார்சின் அடிப்படையிலேயே காணி சுவிகரிப்பு விடயங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் அங்கத்தவர்களாக உள்ள கட்சியொன்றின் உறுப்பினரான க.சிவராசா தனது காட்டிக்கொடுப்பினை நிறைவேற்றியுள்ளார். மக்களின் அபிவிருத்திக்கென குறித்த காணியை பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட உள்ளகத்திட்டத்தை அவர் இந்திய தூரகத்திற்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.

மக்களின் நலனை கருத்தில்கொண்டு சிலர் செயற்படுகின்றபோது அரசியல் மற்றும் சுயலாபங்களுக்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான காட்டிக்கொடுப்புக்கள் மிகவும் கண்டனத்திற்குரியனவாகும்.

இக்காட்டிக்கொடுப்புக்கான பின்னணி தொடர்பில் இலங்கைநெட் விசாரணைகளை மேற்கொண்டபோது, நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு பின்னால் ஆதீனத்திற்கு சொந்தமான 10 பரப்பு காணி காணப்படுகின்றது. அக்காணியில் பலர் அத்துமீறி கடைகளை அமைத்துள்ளனர். அவ்வாறு அமைத்துள்ளவர்களில் மேற்படி காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ள பிரதேச சபை உறுப்பினரான சிவராசாவின் மைத்துனர் பூமா டெக்ஸ் என்ற ஜவுளிக்கடை ஒன்றை நடாத்தி வருகின்றார்.

பஸ்தரிப்பு நிலையத்தை விஸ்தரிக்கும் நோக்கில் குறித்த பத்து பரப்பு காணியும் சுவிகரிக்கப்படவேண்டும் என்று பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறித்த காணி சுவிகரிக்கப்படுமாயின், தனது மைத்துனரின் ஜவுளிக்கடையும் பறிபோகலாம் என்ற குறுகிய நோக்கத்திற்காகவே கீழ்காணப்படும் கடிதத்தை அவர் இந்திய தூதரகத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.




Read more...

50 கோடி ரூபா ஊழியர் சேமலாப நிதியிலிருந்து மாயம். ஆணைக்குழுமுன் கைகட்டி நிற்கும் அதிகாரிகள்

எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடமிருந்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனப் பங்குகளைக் கொள்வனவு செய்ய ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 500 மில்லியன் ரூபாவை சட்ட விதிகளை மீறிப் பயன்படுத்தப்பட்டதாக மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பதிகாரியான நாளினி மல்காந்தி பண்டார ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பல ஆவணங்களையும் அவர் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார். கடந்த 2010 இல் இந்தப் பங்குகளை மீட்டெடுக்கப் பணம் பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேற்றுக்காலை கூடிய போது ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பதிகாரி நாளினி மல்காந்தி பண்டார நேற்று சாட்சியமளித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவவின் கோரிக்கையின் பேரில் சாட்சியமளித்த நாளினி மல்காந்தி, மேற்படி நிதியை பயன்படுத்த விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் எந்தவித சிபாரிசும் இல்லாமல் நிதி அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பான எந்தவிதமான ஆவணங்களும் கிடையாதெனவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை வங்கியின் மேலதிக பொது முகாமையாளரான பி. ஏ. லயனல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலரது நிலைப்பாட்டுக்கு அமையவே இது இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழியர்களுக்குச் சொந்தமான ஊழியர் சேமலாப நிதியிலிருந்து ஏதாவதொரு தேவைக்காக முதலீடு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் அதனை செய்ய மத்திய வங்கி ஆளுநருக்கே உரியது. அன்றைய காலகட்டத்தில் அதனைச் செய்ய வேண்டியவர் ஆளுநராகவிருந்த அஜித் நிவாட் கப்ராலாவார் என்றும் அவர் தெரிவித்தார். ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்னவின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே சாட்சி இவ்வாறு கூறினார்.

ஆணைக்குழுவின் உறுப்பினரொருவரான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சாட்சி தெரிவிக்கையில், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து எந்த முதலீட்டுக்கும் அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவைக்குக் கூட முடியாது. அதனை மத்திய வங்கியின் நிதிச்சபை மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீல் உனம்புவ, விசாரணையில் மேலும் சாட்சியமளித்த நாளினி மல்காந்தி பண்டார மேலும் தெரிவித்ததாவது-

ஊழியர் சேமலாப நிதியிலிருந்து எமிரேட்ஸ் பங்குகளை கொள்வனவு செய்ய பயன்படுத்துமாறு அமைச்சரவையோ திறைசேரியோ அனுமதி வழங்கவில்லை.

2010ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எமிரேட்ஸ் பங்குகளை கொள்வனவு செய்ய அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விபரம், 43.63 வீதமான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை வங்கியும், காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஊழியர் சேமலாப நிதியின் மூலம் கொள்வனவு செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

2010 ஜூலை 6ஆம் திகதி இலங்கை வங்கியின் மேலதிகப் பொது முகாமையாளர் பி. ஏ. லயனல் எழுத்து மூலம் இலங்கை மத்திய வங்கியின் நிதி முகாமைத்துவ குழுவுக்கு ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 500 மில்லியன் ரூபாவை பங்குகளைக் கொள்வனவு செய்ய இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் நடைமுறை கணக்குக்கு செலுத்துமாறு கூறியிருந்தார். அதன் பிரகாரமே அது நடந்துள்ளது. உடன்படிக்கையோ சட்டபூர்வமான எழுத்தாவணங்களோ அதில் காணப்படவில்லை. அத்துடன் இது நடந்ததா என்பது குறித்த ஆவணங்களும் கோப்புகளில் கிடையாது. 1.8 மில்லியன் பங்குகளை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பெற்றுத் தரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற உயர்நிதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன தலைமையில் ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எச். ஜி. ஏ. ஹெரல்ட் உட்பட ஸ்ரீலங்கன் விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரிங், மிஹின் லங்கா நிறுவனம் உள்ளிட்ட உயரதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சாட்சியம் வழங்கப்பட்டது. அரச சட்டத்தரணி சஜித் பண்டார ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

Read more...

Monday, October 1, 2018

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பூட்டு, அதன் இயக்குனரை கொல்ல திட்டமாம். கம்பன்பில

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதிப் பெலிஸ் மா அதிபர் நாலக சில்வா நாமல் குமார என்ற நபர் ஒருவரை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய வை கொலை செய்ய தூண்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்து அவர், தொடர்ந்து பேசுகையில் :

ஜனாதிபதி படுகொலை சதித்திட்டம் என்பது மற்றுமொரு கொலை முயற்சி கிடையாது. அரச விரோத சதித் திட்டமாகும். அரச விரோத சதித்திட்டம் பற்றி கேள்விப்பட்ட உடன், சந்தேக நபர்களை கைது செய்வதனையே செய்திருக்க வேண்டும்.

இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் இதே நிலைமையேயாகும். எனினும் இந்த உலக நெறிமுறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிற்கு அமுல்படுத்தப்படுவதில்லை.

நாலக சில்வா வாய் திறந்தால் இன்னும் எத்தனை பேர் சிறைக்கு செல்ல நேரிடுமோ தெரியவில்லை. இதனால் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு நாலக சில்வாவை படுகொலை செய்வது தவிர வேறு வழியில்லை.

நாலக சில்வாவை படுகொலை செய்வதுடன் அவருக்கு தெரிந்த அனைத்து இரகசியங்களும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடும். கைது செய்யாது இருப்பதற்கான காரணம் நாலக சில்வாவை படுகொலை செய்யும் நோக்கிலாகும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


ஆனாலும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் பிரதிப் பெலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் அலுவலகம் சட்டரீதியாக மூடப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாகவே. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸ் தரப்புக்கள் அவருடைய பயன்பாட்டில் இருந்த இரண்டு மடிக்கணணிகள் விசாரணைகளுக்காக எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றது.

இவ்வாறான மென்போக்குடனான விசாரணைகளை மூலம் குறித்த நடவடிக்கை தொடர்பான விசாரணைகளில் முன்னேறிச்செல்ல முடியுமா என்ற சந்தேகத்தை மக்கள் எழுப்புகின்றனர்.

Read more...

போலித்தேசிய வாதிகளை ஒதுக்காவிட்டால் தமிழ் மக்கள் முன்னைய நிலைக்கு செல்ல வேண்டுமாம். சுமந்திரன்

போலி தேசியவாதிகளை மக்கள் அடையாளம் காணவேண்டும் என்றும் அவ்வாறு இனங்கண்டு மக்கள் ஒதுக்காவிட்டால், முன்னைய நிலமைக்கு தள்ளப்படும் ஆபத்து இருக்கின்றதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரணி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிகழ்வில் உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், ஆசிரியராக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் கடமையாற்றினேன்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துதான் சென்று வந்தேன். அப்போது இராணுவச் சோதனை சாவடியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து வருமாறு சொல்லுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதைக் கேட்டார்கள். ஒரு நாள், இராணுவச் சீருடையுடன் இராணுவச் சோதனைச் சாவடியில் ஒருவர் நின்றார்.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னர் நின்றிருந்தவர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து வருமாறு அவரும் கூறினார். யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பதே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாகாணசபை உறுப்பினர் சயந்தன் குறிப்பிட்டதைப் போன்று யார் எந்தப் பக்கம் நிற்கின்றார்கள் என்பது அன்று மட்டுமல்ல இன்றும் தெரியவில்லை.

அதிகமாக தேசியம் கதைப்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். விளையாட்டில் 'சேம் சைட்' கோல் போடுவதைப் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள்.

நாங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால் எதிர்பக்கம் இருக்கும் கோல் கம்பத்துக்குள் பந்தை தள்ள வேண்டும். எங்கள் கோல் கம்பத்துக்குள் பந்தைத் தள்ளினால் எதிர் தரப்புத்தான் வெற்றி பெறும். கிரிக்கெட்டில் 'ஹிட் விக்கெட்'உம் இதைப் போன்றுதான். அப்படிச் செய்பவர்கள் பலர் இங்கிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒரு விடயத்தைச் சொல்கின்றேன். திலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை விதித்து பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூர்வதாக அவர்கள் குறிப்பிட்டனர். நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்டபோது, நாங்கள் முன்னிலையாகினோம்.

அகிம்சை வழியில் போரடியவரையே நினைவுகூர்கின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினோம். ஆனால் அங்கு இன்னொரு சட்டத்தரணிகள் குழு வந்திருந்தது.

அவர்கள் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்க முற்பட்டபோதும் நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

நாங்கள் 'கோர்ட்டில்' வாதங்களை முன்வைத்தோம். அவர்கள் 'ரோட்டில்' தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூர்வது தொடர்பில் பேசுவதற்காக கிடைத்த வாய்ப்பை மன்றில் பேசிய சட்டத்தரணிகள் வீணடித்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டனர்.

பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதற்கு எதிராகவே வழக்கைத் தாக்கல் செய்தனர். அந்தச் சட்டத்தரணிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர்வது பற்றி பேசவே வந்துள்ளனர். யார் யாரோடு நிற்கின்றார்கள் என்றே தெரியவில்லை.

அதிதீவிரமாக தேசியம் பேசிக் கொண்டு எதிர்தரப்புக்கு 'ஸ்கோர்' செய்கின்றார்கள். அதிதீவிரமாக தேசியம் பேசுவர்கள் எதிர்தரப்புடன் இருப்பார்கள். அதை மறைக்க, மக்கள் முன்பாக தாங்கள் தீவிரமாகத் தேசியப் பேசுபவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். இது இங்கு மட்டுமல்ல தெற்கிலும் உள்ள விடயம்தான்.

பண்டாரநாயக்க, ஜெயவர்த்தன போன்றவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் இந்த நாட்டை ஆண்டபோது அதி தீவிர பௌத்தர்கள் போன்று காட்டிக் கொண்டார்கள். புத்தரை மிஞ்சும் அளவுக்கு செயற்பட்டார்கள். தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை மறைப்பதற்காக அதிதீவிரமான பௌத்தர்கள் போன்று செயற்பட்டார்கள்.

அதிதீவிரமான தேசியவாதிகளை மக்கள் அடையாளம் காணவேண்டும். அப்படியானவர்களை அடையாளம் காணாவிட்டால் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும். முன்னைய நிலமைக்கு, அதாவது போருக்கு தள்ளப்பட வேண்டி ஏற்படும்.

நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும். அதற்காக எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றில்லை. எங்கள் உரிமைகளையும் பெற்றுக் கொண்டு ஏனையோரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Read more...

பயங்கரவாத சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளை விடுதலை செய்! வரதர் – சந்திரகுமார் கூட்டு கோரிக்கை.

சொல்! சொல்! டக்ளஸை கொல்லவந்ததாக அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யச் சொல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பு என முழக்கமிட்டவர்களில் முன்னணியில் நின்றவர்களில் முக்கியமானவர் வரதராஜபெருமாள் பின்னணியில் ஒழிந்திருந்து புலிகள் பயங்கரவாதிகள்தான் என்றவர்ளில் முக்கியமானவர் சந்திரகுமார். இவ்விருவரும் 2009 மே 17 வரை வடகிழக்கிற்கு செல்வதாக இருந்தால் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே சென்று வந்தனர் என்பது யாவரும் அறிந்தது. அதற்கான காரணம் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தங்களை கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதுவுமாகும்.

தற்போது யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ள நிலையில், யாரை பயங்கரவாதிகள் என்று விரலை நீட்டினார்களோ அவர்களை விடுவிக்கும் பொருட்டு பயங்கரவாத சட்டத்தை நீக்க கோருகின்றனர் வரதராஜபெருமாள் மற்றும் சந்திரகுமார் ஆகிய இருவரும்.

இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் முன்னர் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டவர்களை விடுதலை செய் என வலியுறுத்திய போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு

அரசியல் கைதிகளை விடுதலை செய்

சட்டப் பூட்டினை உடை, அரசியல் தீர்மானம் எடு

அரசியல் கைதிகளை விடுதலை செய்

நல்லிணக்கத்துக்கான முதலாவதுபடி அரசியல் கைதிகளின் விடுதலையே,

மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் , தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே இலங்கயில் நல்லிணக்கம்

எதற்காக இன்னும் அரசியல் கைதிகளுக்குத் தண்டனை?

ஏன் இன்னும் அரசியல் கைதிகள்?

விடுதலை செய் அரசியல் கைதிகளை, வெற்றி கொள் தமிழர் மனங்களை

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததோடு கோசங்களும் எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

மு. சந்திரகுமார் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் வைத்துக்கொண்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்டுத்த முடியாது என்று தெரிவித்தபோது, சொல்! சொல்! டக்ளஸிடம் சொல் டக்ளஸை கொல்லவந்ததாக சிறையிலடைத்தவர்களை விடுதலை செய்ய சொல்! என்று மக்கள் முணுமுணுத்ததை கேட்க்கக்கூடியதாக இருந்தது.

குறிந்த நிகழ்வில் கலந்துகொண்ட வரதராஜபெருமாள், போரை நடத்திய மகிந்த ராஜபக்ஸவால் 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் இந்த அரசினால் முடியாது? தமிழ் மக்களின் அதிக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் அநீதியான செயற்பாடாகும் எனக் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் இரண்டு தாய்மார் தங்களின் பிள்ளைகளை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சிறைகளில் நாளாந்தம் மிக மோசமான மன ரீதியான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர் எனவே அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு, அவர்களின் நலனக்கள் கருதி விடுவிக்குமாறு மிகவும் உருக்கமாக வேண்டிக்கொண்டனர்



Read more...

நல்லாட்சி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதாம். அழுகிறார் செல்வம் அடைக்கலநாதன்.

எங்களால் கொண்டுவரப்பட்ட இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வெள்ளை வேன்கள் இன்றி, காணாமல் ஆக்குதல்களை மேற்கொள்ளாமல் எமது காணிகளை அபகரித்து, இராணுவ ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகின்றதோர் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார் செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய மாநாடு என்ற பெயர் கொண்ட விழா நேற்று 30ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், நல்லாட்சி அரசாங்கமானது வன்முறையில்லாத இனப்பிரச்சினையினை தூண்டுகின்ற, இனப்பிரச்சினைக்கு வித்திடுகின்ற, எமது மக்களை மூன்றாம் தரப்பாக பார்க்கின்ற அரசாங்கமாகவே இருந்துவருகின்றதே தவிர மக்கள் நலன் தொடர்பில் செயற்படவில்லை.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையிலும் நாங்கள் அவர்களை தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றோம்.
தென்னிலங்கையில் இந்த அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்கள் வருகின்றதோ இல்லையோ, வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினைத் தான் வசைபாடுகின்றனர்.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதற்கான வலுவான காரணங்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

மேற்கண்டவாறு தெரிவித்துள்ள, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்றில் வகிக்கின்ற பிரதி சபாநாயகர் பதவியை ராஜனாமா செய்வது தொடர்பில் இதுவரை எதுவும் பேசவில்லை என்பது அரசியல் அவதானிகளது விமர்சனமாக காணப்படுகின்றது.

Read more...

சர்வதேச நீதிமன்றுக்கு இராணுவத்தினரை கொண்டு செல்லாது காப்பாற்றியவர் எங்கள் தலைவர் ரணில் விக்கரமசிங்கவே.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்பது தமிழர் தரப்பின் கோரிக்கை. மறுபுறத்தில் இக்கோரிக்கையால் இலங்கைப்படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்று கொண்டு செல்லவுள்ளனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் உட்கார வைக்கவுள்ளனர் என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் யுத்த குற்றங்களுக்காக இருக்கும் ரோம் சாசனத்தில் 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் கையொப்பம் இடாத காரணத்தால் எந்தவொரு இலங்கை குடிமகனையும் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ அல்லது இராணுவ நீதிமன்றங்களுக்கோ அழைத்துச் செல்ல முடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

ஒருபுறத்தில் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து பேசிக்கொண்டு , மறுபுறத்தில் யுத்தக்குற்றம் ஒன்று இலங்கையில் இடபெறுமாயின் அதற்காக சர்வதேச நீதிமன்றில் தமது படையினரை தண்டிக்க முடியாதவாறு தங்கள் தலைவர் எவ்வாறு காய் நகர்த்தி இருக்கின்றார் என்பதை இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் 29 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது விளக்கியுள்ளார் அமைச்சர் அத்துகோரல.

தற்போதைய அரசாங்கம் புத்த சாசனத்தை அழித்து தேரர்களை கைது செய்து வெளிநாட்டு நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலர் பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தன்னை மின்சார கதிரைகளுக்கு அழைத்துச் செல்வதாக மஹிந்த ராஜபக்ஷ பொய் பிரச்சாரம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் தெரிவித்தது போன்று எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தினமும் காலை எழுந்ததும் அவரது உயிரை காப்பாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com