Monday, April 11, 2016

நல்லாட்சியும் போராட்டமும்.

போராட்டமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதே "நல்லாட்சி" தான். உலகமயமாதல் எதுவோ அதுவே "நல்லாட்சியாக" இருக்கின்றது. உலகமயம் என்பது சொத்துடமையைக் குவிக்கும் உலகளாவிய வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதாகும். "நல்லாட்சி"யானது சுதந்திரமாகச் சொத்தைக் குவிக்க உள்ள தடைகளை அகற்றுவதும் அதற்கு ஏற்ற பண்பாட்டுக் கலாச்சார அடிப்படைகளை உருவாக்குவதுமாகும்.

மனிதன் சந்திக்கக் கூடிய சமூகப் பிரச்சனைகளுக்கு மாற்றம் (நடைமுறை) ஒன்றே தீர்வு. பிரச்சனைகளை அனுபவிப்பதாலோ, உணர்வதாலோ, கருத்துச் சொல்வதாலோ தீர்வு வருவதில்லை. மாறாக வாழ்வதற்கான நடைமுறைப் போராட்டம் ஒன்று தான் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. இதுவொரு பொது உண்மையாகும்.

வாழ்வதற்காக உயிரினம் போராடுவது இயற்கையின் நியதி. இந்த இயல்பான போராட்ட வாழ்வையே மகிழ்ச்சிக்குரியதாக கூறி, வாழ்ந்து காட்டியவர் கார்ல் மார்க்ஸ். போராட்டத்தை வாழ்க்கையாக்கி அதை மகிழ்ச்சியாக்காதவன் போராட்ட நடைமுறையில் பங்கு கொள்ளாதவனும், நேரடியாகவோ மறைமுகமாகவோ "நல்லாட்சியைக்" கொண்டாடுபவனாகவும், தனிவுடமையைக் குவிக்கும் சமூக அமைப்பை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான்.

கூட்டமாக (சமூகமாக) வாழும் மனித இயல்பு மகிழ்ச்சியாக தனித்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாததால் வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கின்றது. இதற்கு மாறாக பொருளை முதன்மைப்படுத்தி, அதை அடைவதைக் கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவதே சுயநலமாகும். இது தன்னைச் சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளவைப்பதில்லை. சமூக போராட்ட நடைமுறையில் பங்காற்ற வைப்பதில்லை.

தன்னலத்தை முதன்மையாகக் கொண்ட செயலற்ற தன்மையானது தேர்தலில் நம்பிக்கை கொள்வதும், ஆட்சியாளர்களை மாற்றுகின்ற முறைமையை மாற்றமாக முன்வைக்கின்றது. ஆட்சியாளர்கள் தான் மனித துயரங்களுக்கு காரணமென முன்வைக்கின்றது. தன்னலத்தை அடிப்படையாகக் கொண்ட சொத்தைக் குவிக்கும் தனிவுடமை வர்க்கங்களல்ல என்ற கருதும் இந்த சுயநலம் தேர்தலில் வாக்களிப்பு முறைமையை முன்னிறுத்தி இயங்குகின்றது. சமூக போராட்ட நடைமுறையை மறுதளிக்கின்றது.

தேர்தலில் வாக்கு போடுவதுடன் தனிமனிதனின் போராட்ட (ஜனநாயகக்) கடமையை முடித்து விடுகின்றது. இந்தச் சுயநலமானது இனம், மதம், சாதி, நிறம், பால் போன்றன மூலம் மனிதனை பிளந்து குதறுவதையும், மனித உழைப்பைச் சுரண்டுவதையும், வாழ்க்கையாகவும் ஜனநாயகமாகவும் கொண்டு இயங்குகின்றது.

தன்னலத்தை மறுத்த மனிதர்களின் நடத்தைதான் போராட்டம்

சுயநலமானது "நல்லாட்சியை" முன்னிறுத்த, பொதுநலமானது போராட்டத்தை முன்னிறுத்துகின்றது. இதில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு வாழ்க்கை முறை நிர்ப்பந்திக்கின்றது. எங்கும் வாழ்வுக்கான போராட்டமே நடைமுறையில் வாழ்க்கை முறையாகி இருக்கின்றது. போராடும் யாரும் "நல்லாட்சி" பற்றி கனவு காணவில்லை. நடைமுறைக்கு வெளியில் பேசிக்கொள்வதன் மூலமும், வாக்கு போடுவதன் மூலமும் தீர்வு வரும் என்று நம்பியிருக்கவில்லை. போராடுவது தான் ஒரே தீர்வு என்பது வாழ்க்கை முறையாகி வருகின்றது. போராட்டம் என்பது, வாழ்க்கைக்கு அன்னியமானதாக இருக்கவில்லை. "நல்லாட்சியோ" மக்களின் வாழ்க்கையை அழித்து, உரிமைகளைப் பறித்து வருகின்றது.

இந்த பின்னணியில் மாணவர்கள் தங்கள் இலவசக் கல்வி உரிமைக்காகப் போராடுகின்றனர். பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் வேலை கேட்டுப் போராடுகின்றனர். அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையைக் கோரிப் போராடுகின்றனர். காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்கள் உறவுகள் எங்கே என்று கேட்டுப் போராடுகின்றனர். மீனவர்கள் கடல் சார்ந்த தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் போராடுகின்றனர். நவதாராளமயத்திடமும், இலங்கை அரசு இயந்திரத்திடமும் இழந்த தங்கள் நிலத்தைக் கோரிப் போராடுகின்றனர். நிலமும் நீரும் நஞ்சானதையும், தொடர்ந்து நஞ்சாவதையும் எதிர்த்தும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலவச மருத்துவத்தைக் கோரியும் போராடுகின்றனர். பிறப்புரிமையிலான பிரஜாவுரிமையை அரசியல் காரணங்களுக்காக மறுக்கின்ற அரசின் சூழ்ச்சிகளுக்;கு எதிராகப் போராடுகின்றனர். விவசாயிகள் தங்கள் பொருளுக்குரிய விலையைக் கோரியும், அதைக் கொள்முதல் செய்யக் கோரியும், விவசாய மானியத்தை ரத்துச் செய்கின்ற சதிக்கு எதிராகப் போராடுகின்றனர். இனவாதத்துக்கு எதிராக மொழிகளுக்கு சமவுரிமையை முன்னிறுத்தியும், மொழி சார்ந்த ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுகின்றனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதுடன், சாதி ஒழிப்பைக் கோரிப் போராடுகின்றனர். மலையக மக்கள் தங்கள் அடிப்படைக் கூலியைக் கோரியும், தங்கள் வீடு மற்றும் நிலவுரிமைக்காகப் போராடுகின்றனர். புழமைவாத, அடிப்படைவாத மத, நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கலாச்சார திணிப்புக்கு எதிராகப் போராடுகின்றனர். தொடரும் ஆணாதிக்க பாலியல் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள், அரச படைகளின் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள், சுற்றுச்சூழல் நஞ்சாவதற்கு எதிரான போராட்டங்கள் ... என்று எங்கும் எதிலும், வாழ்க்கையானது இன்று போராட்டமாகி இருக்கின்றது. இது இன்றைய மனித வாழ்க்கையைச் சுற்றிய எதார்த்தம். இது போன்ற பலநூறு போராட்டங்கள் அங்குமிங்குமாக நடந்தேறுகின்றது. "நல்லாட்சிக்கு" எதிரான மக்களின் வாழ்க்கை போராட்டங்களாக மாறி இருக்கின்றது.

அரசுகளின் துணையுடன் செல்வத்தைக் குவித்து வருகின்ற பின்னணியில் கொடிய வறுமை மக்களை ஆட்டிப்படைக்கின்றது. பலம் பொருந்தியவர்களின் வன்முறையும் அதிகாரமும் நாட்டில் தலைவிரித்தாடுகின்றது. பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு, கலாச்சாரக் கண்காணிப்புக்கும் சதா உள்ளாகின்றனர். சாதிய கொடுமைகளும், புறக்கணிப்புகளும் மேலெழுந்து வருகின்றது. ஊழல் வாழ்க்கை முறைக்குள் புகுந்து தன்மானத்தை குட்டிச்சுவராக்கி விட வாழ்க்கை முறை அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றது. கல்வி வியாபாரமாகி மக்களை கசக்கிப் பிழிகின்றது. பெற்றோரின் வரட்டுக் கவுரவமும், சுயவிருப்பமும் முன்னிலைப்படுத்தப்பட்டு, குழந்தைகள் கல்விக்கூடங்களிலும் வீட்டிலும் வதைக்கப்படுகின்றனர். குடிநீர் இன்றி மக்கள் அல்லாடுகின்றனர். சுகாதாரமான சுற்றுச்சூழல் இன்றி மக்கள் உடல்ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். மருந்துவ வசதியின்றி வறியவர்கள் கால்கடுக்க மருத்துவமனைகளில் சாவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இனவாதம், மதவாதம் வாழ்க்கையில் சதா தலையிடுகின்றது. கலாச்சாரத் திணிப்புகளால் வாழ்க்கை நரகமாகின்றது. தனிவுடமை வாழ்க்கை சதா மனிதனை துன்புறுத்துகின்றது.

இதற்கு எல்லாம் தேர்தல் மூலம் மாற்றம் வரும் என்று நம்பிய "நல்லாட்சி" மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. நடந்த மாற்றம் வெறும் முகமாற்றமே என்பது எங்கும் எதிலும் இன்று உண்மையாகி இருக்கின்றது. அன்றாட வாழ்க்கையும் போராட்டமும் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. "நல்லாட்சி" சொத்தைக் குவிக்கும் வர்க்கத்தின் ஆட்சியே ஒழிய, மக்கள் ஆட்சியல்ல என்ற உண்மை அம்பலமாகி இருக்கின்றது. அது மக்கள் நலக் கூறுகளை அகற்றுவதை தனது கொள்கையாக பிரகடனம் செய்திருக்கின்றது.

"நல்லாட்சியின்" பொருளாதாரக் கொள்கை என்ன?

நாட்டின் பொருளாதாரத்தில் எஞ்சிய சோசலிசவாத பொருளாதாரக் கூறுகளை அகற்றுதலே, "நல்லாட்சியின்" நோக்கம் என்று இந்த வருடத்துக்கான (2016 க்கான) வரவு செலவுதிட்டத்தில் அரசு முன்வைக்கின்றது. இந்த சோசலிசவாத "இருட்டினை சபிப்பதனை விடுத்து ஒரு மெழுகு வர்த்தியினை ஒளியேற்றி இருட்டினை விளக்கி விடுவோம்" என்று தனிவுடமைக் கொள்கையை அறிவித்திருக்கின்றது.

மக்கள் சார்ந்த சோசலிசவாத பொருளாதார கூறுகளை இல்லாதாக்கும் போது ஏற்படும் தடைகளை (மக்கள் எதிர்ப்பை) அகற்ற, இருக்கின்ற 428 பொலிஸ் நிலையங்கள் போதாது என்று அறிவித்துள்ளது. இதற்கு பதில் 600 பொலிஸ் நிலையங்களாக அதிகரிக்கவுள்ளதும், அதற்கு தேவையான 1,000 மில்லியன் நிதியையும் "நல்லாட்சி" ஒதுக்கீடு செய்திருக்கின்றது.

சோசலிசவாத மக்கள் நலத்திட்டங்களை அகற்ற, அதற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காக, புதிதாக 172 பொலிஸ் நிலையங்களை அமைக்கவுள்ளதன் மூலம், "நல்லாட்சி" எது என்பது வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் பொருளாதாரத்தில் அதன் கொள்கையென்பது, செல்வத்தைக் குவித்து கொழுக்கும் வர்க்கம் மேலும் கொழுக்க உதவுவது தான்.

இந்த வகையில் பொருளாதாரத்தில் "சோசலிசவாத நலன்புரி பொருளாதாரம்" 1948 முதல் காணப்பட்டதாக கூறி அதை ஒழித்துக் கட்டுவதை முன்மொழிந்திருக்கின்றது. "நல்லாட்சி" அரசு இருப்பது "சோசலிசவாத நலன்புரி தனியார் பொருளாதாரம்" என்று கூறிய அதை ஓழித்துக்கட்டுவதை "ஒளியாக" முன்வைக்கின்றது.

"சோசலிசவாத நலன்புரி தனியார் பொருளாதாரம்" என்றால் என்ன?

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கில் கூர்மையடைந்த தொழிலாளர் வர்க்க போராட்டங்கள், 1917 இல் ருசியப் புரட்சிக்கு வித்திட்டது. அங்கு தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை உருவாக்கியதுடன், 8 மணி நேர வேலை, 8 மணி ஓய்வு, 8 மணி உறக்கம் என்ற தொழிலாளர் நலன் கொள்கையை அமுல் செய்தது. அனைவருக்கும் வேலை என்ற கொள்கை (உழைத்தால் உணவு) நடைமுறைப்படுத்தப்பட்டது. கடின வேலைக்கு அதிக ஓய்வு, ஆண் பெண் சமவுரிமை, பெண்ணின் வேலைப்பளுவைக் குறைக்க குழந்தைக் காப்பகங்கள், பொது உணவுக் கூடங்கள், வயோதிபர் பராமரிப்பு இல்லங்கள் என்று மனித தேவைகளை முன்னிறுத்தியது. ஓய்வைப் போக்க ஓய்வு மையங்கள், அனைவருக்கும் இலவசக் கல்வி, வீடு, மருத்துவம் உறுதி செய்யப்பட்டது. தொழிலாளராக இருப்பதே சமூகத் தகுதி என்று புதிய சமூகப் பண்பாடும், தொழிலாளர் நலன் முதன்மை பெற்றது. தனியார்துறையை இல்லாததாக்கி, பொதுத்துறை உற்பத்தி முறையாகியதுடன், அதை தொழிலாளர் வர்க்கம் கட்டுப்படுத்தியது.

இந்த பின்னணியில் உலகத் தொழிலாளி வர்க்கம் சோவியத் தொழிலாளர்களின் உரிமைகளை உதாரணமாக முன்னிறுத்தி தத்தம் நாடுகளில் போராடத் தொடங்கினர். முதலாளித்துவம் தனது தனிவுடமையிலான சொத்துடமை வர்க்க ஆட்சியைத் தக்கவைக்க, "சோசலிசவாத நலன்புரி" பொருளாதாரக் கூறுகளைத் தனிவுடமைக்குள் கொண்டு வந்தது. இந்த வகையில் இடது - வலது கட்சிகளும், அதன் கட்சிக் கொள்கைகளும் உருவானது.

தொழிலாளர் வர்க்கப் புரட்சியைத் தடுக்கும் வண்ணம் "சோசலிசவாத நலன்புரி" கொள்கைகளை முன்வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் என்பது, சோவியத் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் சிலவற்றை தன் தொழிலாளிக்கு கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதன் பொது வெளிப்பாடாகும்;. இதுவே சமூக நலத்திட்டங்களாக மாறின. இலவசக் கவ்வி-மருத்துவம் தொடங்கி தொழிலாளர் உரிமைகள் வரை அடங்கும்.

இன்று உலகில் தொழிலாளி வர்க்க ஆட்சிகளற்ற (சோசலிச நாடுகளற்ற) சூழலில், முன்னர் வழங்கிய "சோசலிசவாத நலன்புரி" திட்டங்களை அகற்றுகின்ற கொள்கையே, அனைத்து முதலாளித்துவ கட்சிகளின் கொள்கையாக மாறி இருக்கின்றது. உலகெங்கும் "சோசலிசவாத நலன்புரி" கொள்கைகள் அமுலாகிய அன்றைய பின்னணி இன்று இல்லாமையால், இலங்கை பொருளாதாரத்திலும் "சோசலிசவாத நலன்புரி" இல்லாதாக்குவதை "நல்லாட்சியாக" அரசு முன்வைத்திருக்கின்றது.

அனைவருக்கும் இலவசக் கவ்வி, மருத்துவம், இருப்பிடம் என்ற கொள்கையை இல்லாதாக்குவதும். 8 மணி நேர உழைப்பு என்ற கொள்கைக்குப் பதில் சுதந்திரமாக சுரண்டுவது, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை இல்லாதாக்கி விரும்பியவாறு சுரண்டும் உரிமை, அரசு துறைகளை இல்லாதாக்குவது, தொழிலாளர் நலச் சட்டங்களை இல்லாதாக்குவது... இவை இன்று உலகமயமாகி வருகின்றது. இந்தப் பின்னணியில் இவை "சோசலிசவாத நலன்புரி" பொருளாதாரமாகவும், இதை இருண்டதாகவும் அரசு அறிவித்திருக்கின்றது. மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உரிமைகள் மீது வெளிப்படையாக கையை வைத்திருக்கின்றது, இந்த "நல்லாட்சி" அரசு.

"நல்லாட்சி" அரசு கூறுகின்றது, "எமது அரசாங்கத்தின் கொள்கையானது, சந்தைகளில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான தடைகளை நீக்குவதனை மையமாகக் கொண்டுள்ளது. கொள்கைக்கூற்றின் சீர்திருத்தங்கள் இக்கூற்றில் பிரதான இடத்தைப் பெறுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தனியார் துறையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது மாத்திரமல்லாது முழுமையான பொருளாதாரச் செயல்முறையில் அவர்களின் பங்கையும் உறுதிப்படுத்துவதாக..." இருக்கும் என்கின்றது. இப்படி தனியார் மயமாக்கும் அரசின் கொள்கை விளக்கமே - 2016 வரவுசெலவு திட்டம் முழுக்க காணப்படுகி;ன்றது.

முழு பொருளாதாரச் சமூகக் கூறையும் தனியாருக்கு (செல்வத்தை குவிப்பவனுக்கு) ஏற்ற வகையில் மாற்றி விடுவதை "நல்லாட்சியாக" பிரகடனம் செய்திருக்கின்றது. இதற்கு எதிராக மக்கள் போராடாது இருக்க - மக்களை பிரித்தாள்வதை நடைமுறைக்குள்ளாக்கத் தொடங்கி இருக்கின்றது.

மக்களை பிரித்தாளும் "நல்லாட்சிக்" கொள்கை

தனிச் சொத்துடமையை கொண்டிராத மக்களுக்கும், தனிச் சொத்துடமையைக் குவிக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டமே, "நல்லாட்சியில்" முதன்மையான முரண்பாடாக மாறி வருகின்றது. இதை தடுக்க மக்களிடையே பிளவை ஆழப்படுத்துவதே "நல்லாட்சியின்" நடைமுறையாகி இருக்கின்றது.

இனரீதியாக மக்களைப் பிரித்தாண்ட அரசின் கடந்தகாலப் பொருளாதாரக் கொள்கைகள், பாரிய இனரீதியான யுத்தத்தைக் கொண்டு வந்தது. தனிவுடமை வர்க்கங்களின்; பொருளாதார குவிப்புக்கு உதவுவதற்காக கொண்டு வந்த இனவாதம் முதன்மையாக தனிக் கூறாக வளர்ந்து தனிச்சொத்துடமை குவிவதற்கு பதில் அதை இனரீதியாக குறுக்கி முடக்கியது.

உலகமயமாதலுக்கு அமைவாக தனிவுடமை குவிவதில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னணியில் பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய பொருளாதார முரண்பாடுகளே காரணமாகும். இனவாதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தலையிட்டதன் மூலம், நேர் எதிரான இனவாத சக்திகள் பலம் பெற்றதன் மூலம் தனிவுடமை குவிப்பதற்கு இனவாத யுத்தம் தடையை ஏற்படுத்தியது.

இந்த பின்னணியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமே - உலகளவில் செல்வத்தைக் குவிக்கும் தனிவுடமை வர்க்கங்களின் நலனை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் ஏகாதிபத்தியங்களின் துணையுடன் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

யுத்தத்துக்கு தலைமை தாங்கி அதை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள், தங்களின் தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியதால் யுத்தத்துக்கு பிந்தைய சூழல் உலக மூலதனத்துக்கு புதிய தடையாக மாறியது. இந்த தடையை அகற்றவே முகமாற்ற "நல்லாட்சி" முன்வைத்ததும் தனிவுடமை குவிவதற்கான தடைகளை இல்லாதாக்கியது. இதன் மூலம் உலக மூலதனங்களின் நலன்களையே முகமாற்ற "நல்லாட்சி" மூலம் கொண்டு வந்தார்களே ஒழிய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை. இன்றைய தொடர் போராட்டங்கள் இதைத்தான் பிரதிபலிக்கின்றது.

தனிச் சொத்துடமையைக் குவிக்கும் பொருளாதாரத்தை முன்னெடுக்க கடந்த காலத்தில் முன்தள்ளப்பட்ட இன முரண்பாடுகளும் அதன் விளைவுகளும், இன்று புதிய போராட்டத்துக்கு வித்திட்டுள்ளதே ஒழிய அவற்றைத் தீர்க்கவில்லை. தொடர்ந்தும் சமூகத்தை மென்மையான இன முரண்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் தான், மக்களை பிரித்தாள முடியும் என்பதே அரசின் கொள்கையாக இருக்கின்றது.

இந்த வகையில் இன்று இனம் - மதம் - சாதிய .. முரண்பாடுகள், குறுகிய பிரதேச மட்டத்தில் கூர்மையாக்கப்பட்டு வருகின்றது. சிறிய சிறிய முரண்பாடுகள் அடிப்படையில் மக்களை மோத வைப்பதும் அதற்குள் மக்களை முடக்குவதுமாக "நல்லாட்சிக்" கொள்கை மாறி இருக்கின்றது.

முன்பு இனமுரண்பாட்டை பிரதான முரண்பாடாக முன்னிறுத்திய அரசின் பிரித்தாளும் பொருளாதாரக் கொள்கை இன்று சிறு முரண்பாடுகளைத் தூண்டி மக்களை பிரித்தாளும் பொருளாதாரக் கொள்கையாக மாற்றி இருக்கின்றது. மக்கள் பொதுப் பிரச்சனைகள் மீது ஒன்றுபடுவது என்பது - தனிவுடமையை குவிக்கும் உலகளாவிய வர்க்கத்திற்கு எதிரானதாகி விடுவதால் அதைத் தடுக்க மக்களிடையே முரண்பாடுகளைத் தூண்டி விடுவதே அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதற்கு அமைவாக குறுந்தேசியவாதமும் அரசுடன் கூட்டுச் சேர்ந்து பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது.

எதிர்கட்சியற்ற "நல்லாட்சிக்" கொள்கை

எதிர்க்கட்சி என்பது என்ன? தேர்தலில் பெரும்பான்மை - சிறுபான்மையூடாக, அரசையும் எதிர்க் கட்சியையும் புரிந்து கொள்வது என்பது பொதுப் புத்தியாகும். இதுவொரு உண்மையல்ல. கட்சிகள் என்பது வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்தும் அதையே தங்கள் பொருளாதாரக் கொள்கையாகவும் முன்வைக்கின்றனர்.

தனிச் சொத்துடமையைக் குவிக்கும் பொருளாதார அமைப்பில் அரசின் துணையுடன் தான் சுரண்டும் வர்க்கங்கள் கொழுக்கின்றன. சுரண்டும் வர்க்கங்கள் தங்கள் வர்க்க ஆட்சிப் பிரதிநிதிகள் மூலம், தமக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வருவதையே தேர்தல் மூலம் செய்கின்றன.

உலகளாவில் சுரண்டும் வர்க்கங்களுக்கு இடையில் செல்வத்தைக் குவிப்பதிலுள்ள அக முரண்பாடு தனது பிரதிநிதியை ஆட்சிக்கு கொண்டு வர முனைகின்றது. இந்த வகையில் நிதி, பிரச்சாரம்.. என்று பல வழிகளில் தன் வர்க்கப் பிரதிநிதிக்கு தேர்தலில் உதவுவதும், அது தோற்கின்ற போது எதிர்க்கட்சியாக மாறுகின்றது. சுரண்டும் வர்க்கத்தின் முரண்பட்ட பிரிவுகளின் பிரதிநிதிகளின் வெற்றியும், தோல்வியும், தேர்தல் மூலம் நடந்தேறுகின்றது.

இது வர்க்க ரீதியான முரண்பாடல்ல, சுரண்டும் வர்க்கத்தின் அக முரண்பாடு சார்ந்து (இது ஏகாதிபத்திய முரண்பாடுடன் இணைந்து இயங்குகின்ற பொருளாதாரக் கூறாக இருக்கின்றது) தோற்ற எதிர்க்கட்சி, தன்னை மக்கள் பிரதிநிதியாக காட்டிக் கொண்டு அரசை எதிர்க்கின்றது. மக்கள் பிரச்சனையை முன்வைத்து, தன்னை ஆதாரிக்கும் சுரண்டும் வர்க்கப் பிரிவின் ஆட்சியை கொண்டு வரும் ஒரு எதிர்க்கட்சியாக இயங்குகின்றது.

இந்த சுரண்டும் வர்க்கம் சார்ந்த முரண்பட்ட பொருளாதாரக் கூறுக்கு இருக்கக்கூடிய அரசியல் அடிப்படையை அழிக்கும் வண்ணம், எதிர்க்கட்சி இல்லாத "நல்லாட்சியை" அரசு உருவாக்கி இருக்கின்றது.

இந்த வகையில் தமிழ் இனவாதம் பேசும் சாதியவாத மேற்கு ஆதரவு பொருளாதாரவாதக் கட்சியை எதிர்க்கட்சியாக்கியதன் மூலம் அரசு, தான் பிரதிநித்துவம் செய்யும் உலகளாவிய சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்ய வைத்துள்ளது.

இதன் மூலம் மூன்று விடையங்கள் சாதிக்கப்படுகின்றது.

1.உலகளாவிய சுரண்டும் வர்க்கத்தின் முரண்பட்ட பிரிவுகளின் செயற்பாட்டுக்கான அரசியல் தளத்தை இல்லாதாக்கி முரணான பொருளாதாரக் கூறை விழுங்கிவிட முனைகின்றது.

2.ஆளும் வர்க்கம் சார்ந்த வர்க்கத்தின் நலனுக்கு முரணான போட்டி மூலதனம் எதிர்க்கட்சி மூலம் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்கள் பிரச்சனைகளை பேசுவதை பாராளுமன்றத்தில் இல்லாதாக்கி இருக்கின்றது.

3.இனவாத-சாதியவாத கட்சியை எதிர்க்கட்சியாக்கியதன் மூலம் - இனப் பிரச்சனையின் வீரியத்தை மட்டுப்படுத்தி சாதியவாத முரண்பாட்டை தமிழர்கள் மத்தியில் முதன்மையாக்கி இருக்கின்றது.

எதிர்க்கட்சியும் - சாதியவாதமும்

மேற்குப் பொருளாதாரத்தை இலங்கையில் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பொருளாதாரக் கொள்கைக்கும் அரசுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. இந்த வகையில் தமிழ் இனவாதக் கட்சியான கூட்டமைப்பு அரசின் துணையுடன் எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அத்துடன் "நல்லாட்சி" அரசின் பவ்வேறு சலுகைகளைப் பெற்ற கட்சியாகவும் இருக்கின்றது.

கடந்த காலங்களில் இனவாதத்தை முன்வைத்து இயங்கிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடு ஒத்த சர்வதேச பொருளாதாரக் கொள்கைக்கு அமைவாக மட்டுறுத்தப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் தமிழ் மக்களைப் பிரித்தாள அரசியல் பொருளாதாரரீதியாக ஆதிக்கமுள்ள வடக்கில் சாதிய முரண்பாடுகள் முன்னுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

வடக்கில் சாதியம் கூர்மையடைந்து வருவதுடன், பண்பாட்டு கலாச்சாரக் கூறுவரை வீரியமடைந்து வருகின்றது. தமிழ் "கலாச்சாரம்" குறித்து மேலெழுகின்ற அண்மைய செயற்பாடுகள் சாதிய ஆணாதிக்கத் தன்மை கொண்டவை.

இந்த பின்னணியில் யுத்த காலத்தில் ஊரைவிட்டு ஓடியவர்களும் ஊரில் எஞ்சியவர்களும் இணைந்து, மீளவும் சாதிய ஊர்களைக் கட்டமைக்க முனைகின்றனர். சாதிய அடிப்படையில் ஊரைச் சுத்தப்படுத்தும் வண்ணம் சாதியத்தை முன்னிறுத்தியும், பழைய சாதிய பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கலாச்சாரக் கிராமங்களை உருவாக்க முனைகின்றனர். இந்த வகையில் கோயில்கள் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டு சாதிக்கொரு கோயில்களாக கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றது.

பேசிச் செய்யும் சாதித் திருமணங்களையும், சாதி பார்த்துக் காதலிக்கும் காதல் திருமணங்களையும், மீள உருவாக்க முனைகின்றனர். இந்தப் பின்னணியில் பெண்ணுக்கு பாரம்பரிய சாதிய ஆணாதிக்க மதக் கலாச்சார ஒழுங்குகள் புகுத்தப்படுகின்றது.

"நல்லாட்சி"யின் ஆதரவுடன் எதிர்க்கட்சியின் செயற்பாடு என்பது தமிழ் மக்களை சாதி மூலம் கூறு போட்டு மேற்கு சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க உதவுவதே எதிர்க்கட்சி அரசியலாக மாறியிருக்கின்றது.

உலகமயமாதலின் நடைமுறையே நல்லாட்சியாகின்றது

உலகமயமாதல் கொள்கையே "நல்லாட்சியாக" இருக்கின்றது. இந்த பின்னணியில் சர்வதேச சந்தைவிலைக்கு ஏற்ப, பொருட்களின் விலை அதிகரிக்க வைக்கப்படுகின்றது. கல்வி, மருத்துவம், குடிதண்ணிர் ... உள்ளிட்ட அனைத்தும் விற்பனைக்குரிய பண்டப் பொருளாகின்றது. மக்கள் தேசங்கடந்த சொத்துடமைக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் மாற்றப்படுகின்றனர். சிறு சொத்துடமையாக இலங்கை மக்களிடம் இருக்கக் கூடிய நிலம், வீடு... என அனைத்தையும் பறித்தெடுக்கும் வண்ணம், "நல்லாட்சித்" திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இந்த வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் சேரிகளை அகற்றுவதன் பெயரில் 100000 வீடுகளை கட்டுவதன் மூலம், நகர்ப்புற வாழ்விடங்கள் பறிக்கப்படவுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 150000 வீடுகளை கட்டவுள்ள அரசு, அதை மலிவுவிலையில் கொடுக்கவுள்ளது. இதன் மூலம் பாரம்பரியமான கிராமப்புற வாழ்விடங்களில் இருந்து மக்களை வெளியேற்றவுள்ளது. மற்றும் தொகுதிக்கு 5000 வீடுகள் என்ற திட்டம் மூலம் கிராமப்புற நிலங்களை கைப்பற்றவுள்ளது.

பாரம்பரியமான வாழ்விடங்களில் இருந்த மக்களை அகற்றுவது, அவர்களின் சிறு விவசாய உற்பத்தியை நசுக்குவதே இந்த வீட்டுத் திட்டத்தின் பின்னுள்ள சதியாகும். இதற்கு அமைய தொழிற்பேட்டைகளும் விவசாயப் பண்ணைகளும் அமைக்கப்படுகின்றது.

அரசு ஒரு பகுதி பணத்தைக் கொடுக்கும் இந்த வீட்டுத்திட்டத்தில், பணத்தைக் கொடுத்து வீட்டை சொந்தமாக மாற்ற முடியும். இந்த கொழுக்கி மூலம், தங்கள் பாரம்பரியமான நிலத்தை விற்றுவிடுமாறு ஒரு சூழலையே 2016 வரவு செலவு திட்டம் மூலம் "நல்லாட்சி" முன்வைத்திருக்கின்றது.

இதன் அடிப்படையில் இலங்கையில் முன்னெடுத்த உதாரணமாக இருப்பது யுத்தத்துக்கு பிந்தைய வடகிழக்கு மறுவாழ்வுத் திட்டமாகும். அரசும், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் மறுவாழ்வு திட்டமாகும். இது ஒரு பகுதி பணத்தை பெறுவதாக இருந்தால் மறுபகுதியை பெறுபவர் செலவு செய்ய வேண்டும். இந்த வகையில் அரசும், தன்னார்வ நிறுவனங்களும் வழங்கிய பணத்தையும் பொருளையும் பெற, யுத்தத்;தில் எஞ்சியதைக் கொண்டும் கடன் வாங்கியும் மறுவாழ்வு பெறுமாறு கோரியது. இலகுவாக கடன் கொடுக்கும் வண்ணம் வங்கிகளை யுத்த பிரதேசத்தில் குவித்தது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் சுயத்தை இழக்கும் வண்ணம், சார்ந்து இருக்கும் வண்ணம் மீள்கட்டுமானம் முன்வைக்கபட்டது. வீடு, விவசாயம்.. என அனைத்தையும் இந்த பொறிமுறைக்குள் சிக்கவைத்ததன் மூலம் சுயத்தை அழித்தனர். தன் வீட்டை முதன்மைப்படுத்தி அதற்குள் மூழ்கியவர்கள், விவசாயத்தை முதன்மைப்படுத்தி அதற்குள் புதைந்தவர்கள், இன்று தங்கள் பாரம்பரிய சுயத்தை இழந்துள்ளனர். உலகமயமாதல் முன்வைத்த மீள்கட்டுமானம் இதுவாகவே இருந்தது.

இந்த பின்னணியில் சுய அழிவைத் துரிதமாக்க விவசாயத்திற்கு இலவசமாக வழங்கிய ஒற்றைப் பயிர் விதைகள் மூலம், சந்தை வாய்ப்பற்ற மிகை உற்பத்தி மூலம் விவசாயத்தை அழித்தனர். விவசாயத்தில் இயந்திரத்தை புகுத்த வழங்கிய கடன்கள் மூலம், மிதமிஞ்சிய இயந்திர மயமாக்கல் மூலம் உற்பத்தியில் ஈடுபட முடியாத பயனற்ற இரும்பாக இயந்திரத்தை மாற்றினர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களிடம் எஞ்சியதை இழந்ததுடன் கடன்காரராகவும், சுய உழைப்பற்ற கூலிகளாகவும் மாறுவாழ்வு திட்டம் மாற்றியுள்ளது.

இந்த விளைவை உள்வாங்கக் கூடிய வண்ணம் வன்னிப் பரப்பில் உருவாக்கப்படும் பெரும் பண்ணைகள், கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டது. சுயத்தை இழந்தவர்கள் இங்கு கூலிகளாக மாறி வருகின்றனர். இந்தப் புதிய சூழலுக்கு அமைவான வீட்டுத்திட்டங்கள் மூலம் பாரம்பரிய குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை கைவிட்டு வெளியேறுமாறு செய்கின்றது. 2016 வரவு செலவுத்திட்டதில் வவுனியாவில் சிறப்பு கைத்தொழில் பேட்டை உட்பட, வடகிழக்கை இணைக்கும் புதிய அதிவேக பாதைகளை அமைக்கவும் அதை அண்டிய பிரதேசத்தில் விவசாய கைத்தொழில் பேட்டைகளை அமைக்க நிதியை ஒதுக்கியுள்ளது.

வன்னியில் பெரும் விவசாயப் பண்ணைகளும், கைத்தொழில் பேட்டைகளும் அமையவுள்ளது. இது போன்று தான், நாடு தளுவிய அளவில் "நல்லாட்சிக்" கொள்கை முன்வைக்கப்பட்டு இருக்கின்றது.

"நல்லாட்சி" மாற்றத்தைக் கொண்டு வந்ததா?

மேற்கின் நேரடி முதலீடு, மேற்குடனான கூட்டு முதலீடுகளுக்கேற்ப ஆள்வோரை மாற்றுமாறு உலகமயமாதல் கோரியது. இதைத்தான் ஆட்சி மாற்றம் மூலம் "நல்லாட்சியாக" முன்வைத்தனர். நல்லாட்சி என்பது மேற்குக்கேற்ற "முகமாற்ற" ஆட்சி தானே ஒழிய, வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் கொண்டதல்ல. இந்த உண்மையை தேர்தல் காலத்தில் மக்கள் முன் வைக்கப்பட்ட போதும், இன்று இந்த உண்மை எங்கும் நடைமுறையாக இருக்கின்றது.

சொத்தைக் குவிக்கும் தனிவுடமை அமைப்பு முறையை மாற்றாது "நல்லாட்சி" என்பது பொய். இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிலான உண்மையும் கூட. ஆட்சி மாற்றங்கள் மூலம் செய்கின்ற சீர்திருத்தங்கள், கெடுபிடிகளைத் தளர்த்தல் மூலம், வெளித்தோற்றத்தில் நடைபெறும் முகமாற்றங்கள் என்பது வெறும் மூகப்பூச்சு தான். இவை ஆழமாக புதிய தாக்குதலை நடத்தும் முன்தயாரிப்பாகும்.

இதற்கு பின்னால் இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கும் இனவாதம், பொருளாதார ரீதியாக ஒட்டச் சுரண்டும் புதிய கொள்கைகள்;. இது மட்டுமல்ல, கல்வி தனியார் மயமாக்கல், மீனவர்களின் வாழ்வியல் உரிமைகளை மறுத்தல், வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அவலங்கள், மலையக தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி சுரண்டும் கொடுமைகள், சாதிய ஒடுக்குமுறைகள், மதரீதியான துன்புறுத்தல்கள், சூழல் நஞ்சாகுதல், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்கள் ... என்று பற்பல மனித அவலங்கள். இவைகளை பாதுகாத்து முன்னெடுத்தல் "நல்லாட்சி"யாகத் தொடருகின்றது.

உலகளவில் சொத்தைக் குவிக்கும் வர்க்கத்துக்கு இலங்கையில் இருக்கும் தடைகளை அகற்றி அது சுதந்திரமாக எந்தக் கட்டுப்பாடுமற்ற வகையில் செயற்படுவதை உறுதி செய்வதே "நல்லாட்சியாக" இருக்கின்றது. இதனால் வாழ்க்கைக்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாதாகி இருக்கின்றது. மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை, எதைச் செய்ய வேண்டும் என்பதை, "நல்லாட்சி" கொள்கை தீர்மானிக்க, அது வாழ்வுக்கான போராட்டமாக மாறியிருக்கின்றது.

அண்மையில் பிரான்ஸில் இடம்பெற்ற 46வது இலக்கிய சந்திப்பில் "சமகால அரசியல் போக்கு அரங்கில்" தோழர் ரயாகரன் ஆற்றிய உரை .



நன்றி என்டிஎப்ஃப்ரொன்ட்


Read more...

போர், தீவிரவாதம் ஒருபோதும் ஓய்வதில்லை என்கின்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

கடந்த 1999-களில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக ஒபாமா பணியாற்றினார். அந்த பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவர்களுடன் கடந்த 7ம் திகதி அவர் கலந்துரையாடியபோதுபோர், தீவிரவாதம், பிரிவினை வாதம் ஆகியவை ஒருபோதும் ஓய்வதில்லை என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

அப்போது சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்க ராணுவம் நடத்தும் தாக்குதல் குறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒபாமா அளித்த பதில் வருமாறு:

போர், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை ஒருபோதும் ஓய்வதில்லை. அவற்றை கட்டுப்படுத்தவே ராணுவ பலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களில் சில நேரங்களில் அப்பாவிகளும் உயிரிழப்பது உண்மைதான். ஆனால் முடிந்தவரை அப்பாவி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு நல்ல சமுதாயம் உருவாக மக்களின் மனநிலையில் மாற்றம் உருவாக வேண்டும். அப்போது தான் அந்த நாட்டில் மாற்றம் உருவாகும். ஒவ்வொரு பல்கலைக் கழகம், கல்லூரி, பள்ளிகள் நல்ல குடிமக்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் அண்மையில் நியமிக்கப்பட்டார். நீதிபதி நியமனத்தில் குடியரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிபர் ஒபாமா அளித்த பதிலில் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற நியமனத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து 3 நீதிபதிகளின் பெயர்களை இறுதிசெய்தோம். அவர்களில் மெரிக் கார்லண்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சட்டம் பயின்றவன், சட்டத்தை நன்கு அறிந்தவன் என்பதால் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எளிதில் சமாளிக்க முடிந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்கு தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசனின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை.



சிகோகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அதிபர் பராக் ஒபாமா. படம்: ஏஎப்பி


Read more...

பிரபாகரனுக்கு சிலை வைக்க கோரி தனிமனித பிரேரணை கொண்டு வருவாராம் டக்ளஸ்

யுத்தத்தில் மண்கவ்விய எல்லாளனுக்கு துட்டகைமுனு சிலை வைத்தாராம், அந்த அடிப்படையில் சிலை ஒன்றை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனிமனித கோரிக்கை ஒன்று கொண்டுவர உள்ளாராம் என யாழ்.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

போரில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுவான ஒரு நாள் பிரகடனப்படுத்தவேண்டும் எனவும், இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த நினைவுத்தூபி ஒன்றும் புனித பூமி ஒன்றும் உருவாக்க பாடவேண்டும் என எதிர்வரும் ஆறாம் திகதி தனிமனித பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றில் கொண்டுவரவுள்ளேன்.

துட்டகைமுனு எல்லாளனை போரில் வெற்றிகொண்ட பின்னர் எல்லாளனின் வீரத்தை மதித்து எல்லாளனுக்கு சிலை அமைத்து மதிப்பளித்த போன்று சிலை அமைக்க வேண்டும் எனவும் அந்த பிரேரணையில் கோரவுள்ளேன் என தெரிவித்தார்.

அதன் போது எல்லாளன் என யாரை குறிப்பிடுகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது நீங்கள் யாரை சொல்கின்றேன் என புரிந்து கொண்டு உள்ளீர்கள் என நம்புகின்றேன் எனவே அவருடைய பெயரை நான் சொல்ல வேண்டியது இல்லை என சிரித்தவாறே பதில் அளித்தார்.


அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் கூட்டமைப்புடன் பேசுவேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்டவர்களுடன் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பேச்சுக்களை நடாத்த தீர்மானித்து உள்ளதாகவும் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இன பிரச்சனை தீர்வு தொடர்பில் அப்போது ஆட்சியில் இருந்தவர்களால் முன் வைக்கப்பட்டு வந்தன. அவை எதனையும் தமிழர் தரப்பு ஏற்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் இல்லை.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது சிறப்பான ஒரு தீர்வு திட்டத்தை முன் வைத்தார். அதனை அப்போது இருந்த எதிர்க்கட்சி எரிப்புக் கட்சியாக செயற்பட்டு அந்த தீர்வுத்திட்டத்தை எரித்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சில தமிழ் கட்சியும் அந்த தீர்வுத்திட்டத்தை எரித்து மகிழ்ந்தார்கள்.

அதேபோல ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போதிலும் ஒரு தீர்வுத்திட்டத்தை முன் வைத்தார். அதனையும் சரியான முறையில் ஏற்று தீர்வுகளை பெற்றுக்கொள்ள தவறி விட்டனர்.

தற்போது மீண்டும் அரசாங்கம் நல்லதொரு வாய்ப்பினை தந்துள்ளது. இதனை கடந்த காலங்கள் போல் குழப்பாது. சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

அரசியல் யாப்பு திருத்த செயற்பாடு குழுவில் உள்ள 21 பேரில் நானும் ஒருவன் அந்த வகையில் இந்த சந்தர்ப்பத்தை தவற விடாது சிறப்பான தீர்வினை பெற்றுக்கொள்ள முயற்சிப்பேன்.

கடந்த காலங்கள் போல இதனையும் குழப்ப அனுமதிக்க மாட்டேன். அதனால் தமிழ் கட்சிகள் அமைப்புக்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்து பேச்சுக்களை நடாத்தி வருகின்றேன்.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றுடனும் பேச்சுகளை நடாத்த தீர்மானித்து உள்ளேன். என தெரிவித்தார்.

தமிழர்கள் பிரச்சனையை கூட்டமைப்பு தீர்க்க முயலவில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நடவடிக்களை முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மத்தியில் , காணி அபகரிப்பு , காணாமல் போனோர், அரசியல் கைதிகள் , வாழ்வாதராம் ஆகிய பிரச்சனைகள் காணப்படுகின்றன. அவற்றினை தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.

தற்போது வழங்கவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் பொருத்தம் அற்றது என்கிறார்கள். குடிசைகளிலும் கொட்டில்களில் வாழும் அந்த மக்களுக்கு இந்த வீடுகள் தற்காலிகமாக ஆவது பொருத்தமானதே.

இந்த வீட்டுத்திட்டம் அறிமுகம் செய்ய முன்னரே அரசாங்கத்துடன் பேசி இருக்க வேண்டும் இந்த வீடுகள் எமது கலாச்சாரம் , சூழலுக்கு ஏற்ற வகையில் இல்லை எமது கலாச்சாரம் சூழலுக்கு ஏற்ற வகையில் வீடுகள் அமைக்க வேண்டும் என

அப்போது வீட்டுத்திட்டம் தொடர்பில் வாய் திறக்காதவர்கள். தற்போது அந்த வீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்திய வுடன் அது பொருத்தம் அற்றது என்கிறார்கள்.

அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ளது. இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தோம் என கூருகின்றாகள். அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களின் நலனுக்காக ஏன் அவர்களால் செயற்பட முடியாது உள்ளது.

ஆனால் தாம் அரசாங்கத்துடன் பேசி தமது தனிப்பட்ட நலனுக்காக எதிர்கட்சி தலைவர் பதவி , பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை ஆகியவற்றை பெற்றுக்கொண்டு உள்ளார்கள்.

புதிய அரசாங்கம் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பில் சாதகமான சமிஞைகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிய முறையில் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிராச்னைகளுக்கு தீர்வு காணாது தமது தனிப்பட்ட பயன்களை பெற்றுக் கொள்கின்றாகள்.என தெரிவித்தார்.


தமது குடும்ப நலனுக்காவே கூட்டமைப்பு பாடுபடுகின்றது.


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்பிலையோ சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலையோ கூட்டமைப்பு மௌனம் காக்க காரணம் இந்தியாவில் உள்ள தமது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காகவே ,

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள். அது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மீனவர்களுக்காக குரல் கொடுக்காது தொடர்ந்து மௌனம் காக்கின்றார்கள்.

அதேபோன்று சம்பூரில் அமையவுள்ள அனல் மின் நிலையம் தொடர்பிலும் கூட்டமைப்பில் உள்ளவர்கள் மௌனம் காக்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள தமது குடும்பங்களின் நலன் பாதிக்கப்பட்டு விடுமே அல்லது இந்தியா தம்முடன் கோபம் கொள்ளுமோ எனும் பயத்தினால் தான் அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்காது தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்கள்.

கூட்டமைப்பில் உள்ளவர்களை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் நலனை விட தமதும் , தமது குடும்பத்தினதும் நலனே முக்கியம் என தெரிவித்தார்................................

Read more...

விக்கிக்கு சுவாமிநாதன் சாட்டையடி

வடக்கு மாகாணசபை, செயற்பாடுகள் அற்ற கதைகளை சொல்ல மாத்திரமே தெரிந்த சபையாக மாறியுள்ளது என்று மீள்குடியேற்றத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீடுகள் திட்டத்தை நிராகரிப்பதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை தொடர்பிலேயே சுவாமிநாதன் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வடக்கின் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அதில் வடக்கில் அவசரமாக தேவைப்படும் வீடுகள், வாழ்க்கை முன்னேற்றம், அடித்தள வசதிகள், விவசாயம், மீன்பிடி மற்றும் பொருளாதாரத்தை மையமாகக்கொண்டே மத்திய அரசாங்கம் 65 வீடுகள் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்புக்காக நாட்டை இரண்டாக பிரித்து ஏனைய 7 மாகாணங்களையும் ஒன்றாக்கும் விக்னேஸ்வரனின் யோசனை தமிழ் மக்களுக்கு பயன்தராத ஒரு விடயமாகும் என்று சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை பொறுத்தவரை, அதனை வடக்கு மாகாணசபை முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அந்த சபையின் எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பதை சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விடயங்களுக்காக மக்களின் நலன்களை பாதிக்கும் விடயங்களுக்கு முடிவு கட்டவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் வை-பை வசதியுடனான முழுமை வசதிகளை கொண்ட வீடுகளை நிர்மாணிக்க முனைகின்றபோது விக்னேஸ்வரன், 30 வருடங்களாக இடைதங்கல் முகாம்களில் வருந்திக்கொண்டிருக்கும் மக்களுக்கு வசதிகளற்ற வீடுகளை கோருவதாக சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவுக்கு காட்டுவதற்காகவே அரசாங்கம் இவ்வாறான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டையும் சுவாமிநாதன் மறுத்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் இந்தப் பிரச்சினையை தீர்க்க அக்கறையுடன் செயற்படும் போது அதனை பயன்படுத்திக்கொள்ள குறித்த அரசியல் தரப்புக்கள் முனைய வேண்டும்.

இதனைவிடுத்து ஒருவரை நாளாந்தம் முட்டாளாக்க முடியாது என்றும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, April 10, 2016

"-வெருகல் படுகொலை 12 ஆண்டு நினைவுநாள்" --2016 சித்திரை 10- - மீன்பாடும் தேனாடான்.

பேரிகை ஆற்றின் கதறல்

கதிரவெளி ஒரு குருசேத்திரமாக

மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்

கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்

வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு

வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு

அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து

இரண்டாவது பெரியவெள்ளியை

எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.

வடக்கு வாரியடித்த புழுதியில்

வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல

கிழக்கு மண்ணும் சிவந்தது.

வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்

வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே

அதை நாம் அறிவோம் என்றும்

காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்

கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்

காடுகளுக்கு சொல்லிப்பறந்தது

கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.

2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் இருந்த பிரதேச ரீதியான பிரச்சனைகள் அம்பலத்துக்கு வந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் கிழக்கு பிளவு நிகழ்ந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சுமார் ஆறாயிரம் போராளிகளைக் கொண்ட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் சிறப்புத் தளபதியான கேணல் கருணா மார்ச் மாதம் 03 ஆம் திகதி இந்த கிழக்குப் பிரிவனை பகிரங்கமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய நிர்வாகக் கட்டமைப்பிற்காக நியமிக்கப்பட்ட 32 துறைச் செயலாளர்களிலும் ஒருவர் கூட கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை என்பது முதற்கொண்டு கிழக்கு மாகாணத்து போராளிகளும் கிழக்கு மாகாண மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுகின்றன எனும் பல அதிருப்திகள் கேணல் கருணாவால் முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள மறுத்த புலிகளின் தலைமை கேணல் கருணாமீது துரோகப்பட்டம் சூட்டி கிழக்கு மாகாணப் போராளிகள் மீது படைகொண்டு ஏவியது. வன்னியில் இருந்து சொர்ணம், பானு தலைமையில் திருகோணமலையை வந்தடைந்த புலிகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் வெருகல் ஆற்றினை கடந்து மட்டக்களப்பு மண்ணில் நிகழ்த்திய கொலைவெறியில் சுமார் 210 கிழக்கு போராளிகள் கொன்றொழிக்கப்பட்டனர். இந்த படுகொலையே வெருகல் படுகொலை என இன்றுவரை கிழக்குமாகாண மக்களால் நினைவுகூரப்படுகின்றது.

எதிரி இராணுவம் கூட செய்யத் தயங்குகின்ற முறையில் இந்த வெருகல்படுகொலை நிறைவேற்றப்பட்டது. பாலியல் கொடூரங்களை நிகழ்த்தி கிழக்குமாகாண பெண்போராளிகள் மீது வன்னிப்புலிகள் அரங்கேற்றிய இப்படுகொலையானது எழுத்துகளால் விபரிக்கத்தக்கனவல்ல. வெருகல் ஆற்றுப்படுக்கைகளில் கரையொதுங்கிய சடலங்களையும் கதிரவெளிக் கடற்கரையின் வெந்தமணற்பரப்பில் வெம்பிக்கிடந்த வெற்றுடல்களையும் கூட எடுத்து அடக்கம் செய்யக்கூடாதென்று அக்கிராமவாசிகளை துரத்தியடித்தனர் சொர்ணம்பானு தலைமையிலான புலிகள். இந்த துயர நினைவுகளின் ஒன்றிப்பாகவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் நாள் கிழக்கு மாகாணத்தின் கரிநாளாக நினைவுகூரப்படுகின்றது.

அன்றைய காலகட்டத்தில் இந்த படுகொலையை பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் மூடி மறைத்தன.விதியே விதியே இத்தமிழ் சாதியை என செய்ய நினைத்தாய் என்று நொந்து கொண்ட என்னால் ஒரு கவிதை மட்டுமே எழுத முடிந்தது அதை தேனீ இணையத்தளம் மட்டுமே பிரசுரித்து தன் கடமையை செய்தது பின்னர் தோழர் மனோரஞ்சன் தனது நிர்மாணம் இதழில் அதனை பிரசுரித்தார்

மீன்பாடும் தேனாடான்.

Read more...

பெண்களை தற்கொலைப் படையாக போகோஹாரம் மாற்றுவது எப்படி?- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

நைஜீரியாவின் போகோஹாரம் பயங்கரவாத அமைப்பு பெண்களை கடத்திச் சென்று நூதனமான உத்திகளை பயிற்சி அளித்து தற்கொலைப் படையாக அவர்களை மாற்றுகின்றனர் என்று நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இது குறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

போகோஹாரம் பயங்கரவாத அமைப்பின் பல்வேறு கொடுஞ்செயல்களில் நம் கவனத்துக்கு வருவது மசூதிகள், சர்ச்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவது ஆகியவையே. ஆனால் இவர்கள் ஒரு தாக்குதலை ஒரு கிராமத்தில் மேற்கொண்டால் அந்த கிராமமே சாம்பலாகிவிடும் என்பதுதான் எதார்த்த நிலை. இதில் வலுக்கட்டாயமாக பிடித்துச் செல்லும் பெண்களை தற்கொலை வெடிகுண்டாக மாற்ற அளிக்கும் பயிற்சிகள் அதிர்ச்சியளிப்பவையாகும்.

இது குறித்து நைஜீரிய போகோஹாரம் அமைப்பினால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்த ரஹிலா ஆமோஸ் (47) என்ற பெண்மணி கூறுவதாவது: “வெடிகுண்டுகளை கக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள், விரோதியின் கழுத்தை பின்பகுதியிலிருந்து அறுத்து எடுங்கள், ஏனெனில் பின் கழுத்தை அறுத்தால் விரைவில் மரணம் சம்பவிக்கும், மேலும் போராட்டத்தையும் தவிர்க்கலாம்” என்று தனக்கு அறிவுறுத்தியதாகக் கூறுகிறார்.

தற்கொலைத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் தங்கள் கூடைகளில் அல்லது தங்கள் உடைகளில் வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துச் சென்று மீன் சந்தை, அல்லது நெரிசலான மார்க்கெட் பகுதிகளில் வெடிக்கச் செய்ய வேண்டும். அதாவது பள்ளிகள் மட்டுமல்லாது, இந்த வன்முறைக்கு அஞ்சி முகாம்களின் தங்கியுள்ளவர்களையும் எப்படி தாக்கி அழிக்க வேண்டும் என்பதும் போகோஹாரம் கொடுஞ்செயல் திட்டங்களில் பிரதான பங்கு வகிக்கிறது.

இது குறித்து கேமரூன் தகவல்தொடர்பு அமைச்சர் இஸா சிரோமா பகாரி என்பவர் கூறும்போது, “இதனை அவ்வளவு எளிதில் தோற்கடித்து விட முடியாது. முற்றிலும் ஒழிக்கவும் முடியாது. பெண் தற்கொலைப் படையினரை நீங்கள் அடையாளம் காண முடியாது, ஒரு இளம்பெண் உங்களை நோக்கி வருகிறார் என்றால் அவர் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளார் என்றா நாம் நினைக்க முடியும்?” என்கிறார்.

பெண்களை தீவிரவாதிகளாக மாற்றும் போகோஹாரம் பயங்கரம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நைஜீரியாவில் பள்ளி ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்து 300 மாணவிகளைக் கடத்திச் சென்றனர், அவர்கள் நிலவரம் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. மேலும் பிற 100 பெண்களும் கடத்தப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சில வேளைகளில் புதிய தலைமுறை பயங்கரவாதிகளை உருவாக்க சில பெண்களை கர்ப்பிணிகளாக்குவதும் அங்கு நடந்து வருகிறது.

ரஹீலா ஆமோஸ் தொடர்கிறார், “என் கிராமத்துக்கு போகோஹாரம் வந்தனர், கார்களிலிருந்து இறங்கி பெண்களையும் குழந்தைகளையும் சுற்றி வளைத்தனர்” என்றார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இவரை அவர்கள் சுயமாக வியாக்கியானம் அளித்துக் கொள்ளும் இஸ்லாம் பாடங்களை வலுக்கட்டாயமாகக் கற்க செய்துள்ளனர். அதாவது தற்கொலை வெடிகுண்டாகும் முன்பாக இது முதல் படி.

இப்படியே பல மாதங்கள் போகோஹாரம் பிடியில் இருந்த ஆமோஸ், ஒருநாள் மாலை நேர பிரச்சாரத்துக்கு போகோஹாரமியர்கள் தயாராக இருந்த போது பின்னால் வந்த இவர் தனது 2 வாரிசுகளுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பி கேமரூன் வந்துவிட்டார்.

போகோஹாரம் பற்றி தப்பி வந்த மற்ற பெண்கள் கூறுவதும், ஆமோஸ் கூறுவதும் ஒரேமாதிரியாகவே உள்ளதாக கேமரூன் அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது பெண்கள் வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தச் செல்லும் முன் புனித இறுதிச் சடங்கும் நடத்தப்படுமாம்.

கேமரூன் ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோனல் திதியர் பாட்ஜெக் கூறும்போது, சமீப காலங்களாக கிராமங்களுக்கு வரும் போகோஹாரம் பயங்கரவாதிகளை ராணுவம் விரட்டி அடித்து விடுகிறது. அங்கு கிராமத்தில் வீடுகளையே கடத்திய பெண்களுக்கான பயிற்சி-வதை முகாம்களாக போகோஹாரம் பயன்படுத்தியது தெரியவந்தது. இங்குதான் பெண்களுக்கு குரான் பயிற்றுவிக்கப்படுவதோடு, வன்முறைகளும் பழக்கி வைக்கப்படுகிறது.

அதாவது பதின்ம வயது பெண்கள் தாங்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்படுகிறோம் என்பதை அறிந்துள்ளார்களா என்பதே தற்போது ஆய்வாளர்களுக்கு பெரிய விவகாரமாக எழுந்துள்ளது.

ஆனால் தற்போது போகோஹாரம் இந்தத் திட்டத்தில் விரிசல்கள் விழத்தொடங்கியுள்ளதாக கேமரூன் அதிகாரிகள் கூறுகின்றனர், கடந்த பிப்ரவரி மாதம், கேமரூனின் தொலை வடக்கு கிராமம் ஒன்றிற்கு பெண் ஒருவரை வெடிகுண்டுகளுடன் அனுப்பியது போகோஹாரம், ஆனால் அந்தப் பெண் அங்கு வந்து வெடுகுண்டுகளை போட்டு விட்டு அதிகாரிகளிடம் சரணடைந்ததையடுத்து போகோஹாரம் நிலைகள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த முடிந்தது என்கின்றனர் கேமரூன் அதிகாரிகள்.

இதே பிப்ரவரி மாதத்தில் மற்றொரு தாக்குதல் முயற்சியில் 3 இளம் பெண்கள் வெடிகுண்டுகளுடன் முகாமுக்கு வந்து தாக்குதல் நடத்த வந்தன்ர். இருவர் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 60 பேர் பலியாகினர், ஆனால் மற்றொரு பெண் குண்டுகளை வெடிக்கச் செய்யும் முன் முகாமில் தனது தாய் தந்தையரைக் கண்டவுடன் குண்டுகளை புதரில் விட்டெறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புடன் இணைந்ததாக அறிவித்துள்ள போகோஹாரம், 2012-ம் ஆண்டு முதல் சுமார் 2,000 பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கடத்தியுள்ளனர்.

இதில் பெண்களே ஆயுதம் தாங்கிகளாக போகோஹாரம் விரும்புகிறது, காரணம் அதிகாரிகள் இவர்களை முழுதும் பரிசோதனை செய்வதில்லை. அப்படி பரிசோதனை செய்தால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் வெடிகுண்டுகள் போகோஹாரம் கண்டுபிடிப்பல்ல, செசன்யா போரின் போது ‘கருப்பு விதவைகள்’ என்ற பெயரில் பெண் தற்கொலைப் படையினர் இருந்தனர். பாம் ஷெல்: பெண்களும் பயங்கரவாதமும் என்ற தலைப்பில் எழுதிய மியா புளூம் என்ற ஆய்வாளர் கருத்தின் படி, 1985 முதல் 2008 வரை நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் 25% பெண்கள் நடத்தியதே.

ஆமோஸ் கூறுகிறார், அதாவது, தன்னுடன் பயங்கரவாத பயிற்சி மேற்கொண்ட 30 பெண்களில் பெரும்பாலானோர் மிகவும் உற்சாகமாக இதனைச் செய்ய முன் வந்தனர் என்கிறார். இதுதான் சொர்க்கத்துக்குச் செல்லும் நேரடி வழி என்கிறதாம் போகோஹாரம். உணவு அளிக்காமல் பட்டிணி போட்டு, அமரத்துவம் எய்தும் மரண வாழ்வு குறித்து அவர்களுக்கு போதிக்கப்படுகிறது என்கிறார் ஆமோஸ்.

தன்னைப் பிடித்து சென்ற போகோஹாரம், நாளொன்றுக்கு ஒருமுறை சோளக்கஞ்சியை மட்டும் உணவாக அளிப்பார்கள் என்றார் ஒருநாள் வந்து ‘நீ கிறிஸ்துவ மதத்தில் இருக்க விரும்புகிறாயா அல்லது முஸ்லிமாக மாற விரும்புகிறாயா?” என்று கேட்டுள்ளனர். கொலை செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அனைவரும் இஸ்லாமுக்கு மாற ஒப்புக் கொண்டோம் என்கிறார் ஆமோஸ்.

ஆரம்பக் கல்வி 1, ஆரம்பக் கல்வி 2 என்று போகோஹாரம் பயிற்சி தொடங்குமாம். முதலில் குரானில் பயிற்சி. 3-வது பயிற்சி தலையைத் துண்டிப்பது மற்றும் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது பற்றி...அதாவது “ஒருவரை கொல்வது எப்படி, ஒரு வீட்டை வெடிவைத்து தகர்ப்பது எப்படி?” இது அடுத்தகட்டம்.

ஆனால் பிரைமரி 4,5, 6 ஆகிய பயிற்சி முறைகள் ரகசியாமானவை என்று கூறும் ஆமோஸ், ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன்னரே தான் தப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

தற்போது ஆமோஸின் கூற்றுகளை அமெரிக்க ராணுவம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.



நைஜீரியாவின் போகோஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தப்பி வந்த ரஹிலா ஆமோஸ் என்ற 47 வயது பெண்மணி. | படம்: நியூயார்க் டைம்ஸ்.


Read more...

ஒபாமாவின் அணுஆயுத உச்சிமாநாடு போர் அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது. By Peter Symonds

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அணுஆயுத பரவலைக் குறைப்பதில் அவரது ஜனாதிபதி காலம் எட்டியதாக கூறும் சாதனைகளை உயர்த்திக் காட்டும் ஒரு போலியான அறிக்கையுடன், 50க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்ற அணுஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டை கடந்த முதலாம் திகதி வாஷிங்டனில் நிறைவு செய்து வைத்தார். யதார்த்தத்தில் ஒபாமா நிர்வாகம் அணுஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான அபாயத்தைக் குறைத்திருக்கவில்லை, மாறாக பாரியளவில் அதிகரித்துள்ளது.

அல் கொய்தா அல்லது ISIS ஐ (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) அணுஆயுதங்களை பெறுவதிலிருந்து தடுக்க சர்வதேச ஒத்துழைப்பை உண்டாக்குவதற்காக என்ற நோக்கத்துடன், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" பதாகையின் கீழ் இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டது. “அணு குண்டுகளோ அல்லது அணுஆயுத தளவாடங்களோ இந்த பைத்தியக்காரர்களின் கைகளில் கிடைத்தால் அவர்கள் சாத்தியமான அளவிற்கு அப்பாவி மக்களைப் கொல்ல அவற்றைப் பிரயோகிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று ஒபாமா அறிவித்தார்.

ஆனால் மனிதயினம் முகங்கொடுத்திருக்கும் மிகப்பெரிய அபாயம் அல் கொய்தா அல்லது ISIS அணுஆயுதங்களை எடுத்து பிரயோகித்துவிடும் என்பதல்ல, மாறாக வெள்ளை மாளிகையில் உள்ள பைத்தியக்காரர்கள் அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான மோதலுக்குக் களம் அமைத்து, மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பொறுப்பற்ற விதத்தில் வெடிக்கும் புள்ளிகளை எரியூட்டி இருக்கிறார்கள் என்பது தான்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்து விட்டார் என்ற அளவுக்கு வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையிலான உறவுகள் குரோதமாக உள்ளன. அந்த ஒன்றுகூடலுக்கு முன்னதாக அமெரிக்க இராணுவம் அறிவிக்கையில், ரஷ்ய எல்லைகளை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பிய நேட்டோ நாடுகளில் பெப்ரவரி 2017 அளவில் அது ஆயுதங்தாங்கிய மூன்று படைப்பிரிவுகளது "நிரந்தர காலடியை" பேண திட்டமிடுவதாக அறிவித்தது.

மத்திய கிழக்கில், ISIS க்கு எதிராக சண்டையிடுகிறோம் என்ற போலிக்காரணத்தை பிரயோகித்து, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மாஸ்கோவின் கூட்டாளியான ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரியா ஆட்சியைக் கவிழ்க்க ரஷ்யாவுடன் ஓர் அபாயகரமான மோதலில் ஈடுபட்டுள்ளன. சென்ற நவம்பரில் நேட்டோ கூட்டாளியான துருக்கி, ரஷ்ய விமானம் அதன் வான் எல்லைக்குள் ஒன்று குறுகிய நேரத்திற்கு ஊடுருவியது என்று குற்றச்சாட்டி அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியபோது, ஓர் இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறு ஏற்பட்டிருந்தது.

அந்த உச்சமாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ளாதமை அதன் மோசடியான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உலகின் அணு குண்டுகளில் 90 சதவீதமான சுமார் 10,000 குண்டுகளின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கைச் சேவையில் கொண்டுள்ளன, இது ஒபாமாவின் "அணுஆயுதமில்லா உலகிற்கான தொலைநோக்குப் பார்வை" என்பதை கேலிக் கூத்தாக்குகிறது. வாஷிங்டனின் "அணுஆயுதப் பரவல் தடுப்பு" கொள்கையின் நோக்கம் உலகளாவிய அணு குண்டுகளைக் களைவதல்ல மாறாக ரஷ்யா உட்பட அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்கள் மீது அதன் மேலாதிக்கத்தை பேணுவதை உறுதிப்படுத்துவதாகும்.

அந்த அணுஆயுத உச்சி மாநாட்டில் வெள்ளை மாளிகையின் தலைவரது ஒருங்குவிப்பு சீனாவின் மீதிருந்தது. வியாழனன்று அக்கூட்டத்தின் பின்னர் ஒபாமா அவரது சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் ஐ சந்தித்தபோது, அந்த பதட்டங்கள் உணரக் கூடியதாக இருந்தது. அதற்கு முந்தைய நாள் வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு கருத்துரையில், அமெரிக்க ஜனாதிபதி "வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை" “இன்னும் முடியாத வியாபாரம்" என்று குறிப்பிட்டார். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமில்லா பகுதியாக்குவதற்கு சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ள போதினும், தென் கொரியாவில் Terminal High Altitude Area Defence இராணுவ ஆயுத அமைப்பை (THAAD) நிலைநிறுத்தும் பெண்டகனின் திட்டங்களை ஜி ஜின்பிங் "உறுதியாக எதிர்த்தார்.”

ஒபாமா, பதவிக்கு வந்ததில் இருந்து, வட கொரியாவின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ வசதிகளை அகற்றுவதற்கான ஆறு-தரப்பு பேச்சுவார்த்தைகளை எவ்விதத்திலும் மீண்டும் தொடங்குவதை முறியடித்துள்ளார். அதற்கு மாறாக அவர் சீனாவிற்கு எதிரான அதன் பரந்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக தென் கொரியா மற்றும் ஜப்பானில் அமெரிக்க இராணுவ ஆயத்தப்பாடுகளை நியாயப்படுத்த கொரிய தீபகற்பத்தின் சீற்றங்களை மீண்டும் மீண்டும் பற்றிக்கொண்டார்.

முன்னுக்குப் பின் முரணான அமெரிக்க வாக்குறுதிகளுக்கு இடையே, தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை பிரதானமாக வட கொரியாவிற்கு எதிராக அல்ல, சீனாவிற்கு எதிராக திருப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் இராணுவ விரிவாக்கத்தால் முன்னிறுத்தப்பட்ட "அச்சுறுத்தல்" குறித்து வாஷிங்டன் தொடர்ச்சியான முரசறிவித்தல்களை வைத்தாலும், அமெரிக்காதான் அதன் அணுஆயுத கிடங்குகளின் நவீனத்தன்மை மற்றும் அளவில் அதிகரித்தளவில் விஞ்சி நிற்கிறது. சீனாவிடம் 260 போர்கருவிகள் இயங்கும்நிலையில் இருப்பதாக மதிப்பிடப்படுவதுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா சுமார் 5,000 போர்க்கருவிகளைச் சேவையில் கொண்டுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, ஒரு தற்காப்பு ஆயுதமாக காட்டப்படுகின்ற போதினும், THAAD ஆயுத அமைப்புமுறை அதன் எந்தவொரு போட்டியாளர் மீதும் "அணுஆயுத தலைமையை" எட்டுவதற்கு பெண்டகனின் முயற்சிகளது பாகமாக உள்ளது. சீனாவை போல இல்லாமல், அமெரிக்கா ஒருபோதும் முதல் அணுஆயுத தாக்குதலை நிராகரித்திருக்கவில்லை. THAAD ஆயுத அமைப்புமுறை என்பது, ஒரு முன்கூட்டிய அமெரிக்க அணுஆயுத தாக்குதலை சீன ஆயுதங்கள் செயலிழக்க செய்யவில்லை என்றால் சீன ஆயுதங்கள் அவை அமெரிக்க இலக்குகளை எட்டுவதற்கு முன்னரே தகர்த்துவிடுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாகும். அதேவேளையில் தகைமை கொண்டவை அல்ல.

ஜி மற்றும் ஒபாமா தென் சீனக் கடல் மீதான இராஜாங்க மோதல்களையும் பேசினர். அவர்களது சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்க அதிகாரிகள், சீனா அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவுக்குன்றுகளை “இராணுவமயப்படுத்துவதாக” மீண்டும் அதை குற்றஞ்சாட்டியதுடன், வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) அறிவிக்கப்படுவதற்கு எதிராகவும் எச்சரித்தனர். புதனன்று பாதுகாப்புத்துறை துணை செயலர் ரோபர்ட் வோர்க் ஒரு ADIZ ஐ அமெரிக்கா அங்கீகரிக்காது என்று கூறி, அது அப்பிராந்தியத்தை "ஸ்திரமின்மைக்கு" உட்படுத்துவதாக முத்திரை குத்தினார். 2012 இல், கிழக்கு சீனக் கடலில் பெய்ஜிங் ஒரு ADIZ ஐ அறிவித்த பின்னர் அப்பகுதிக்குள் பெண்டகன் அணுஆயுத தகைமை கொண்ட B-52 ரக குண்டுவீசி விமானங்களை பறக்கவிட்டது.

தென் சீனக் கடலில் அதிகரித்துவரும் ஸ்திரமின்மை வாஷிங்டன் நடவடிக்கைகளது ஒரு நேரடி விளைவாகும். அது சீனாவிற்கு எதிராக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அவற்றின் கடல்போக்குவரத்து உரிமைகோரல்களை ஆக்ரோஷமாக அழுத்தமளிப்பதற்கு அவற்றை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஆண்டின் போது, அமெரிக்கா மீண்டும் மீண்டும் சீனாவின் நில சீரமைப்பு நடவடிக்கைகளையும் மற்றும் தென் சீனக் கடலில் "விரிவாக்கவாத" நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளது. இரண்டு சம்பவங்களில்—கடந்த அக்டோபர் மற்றும் மீண்டும் ஜனவரியில்—அமெரிக்கா சீன-நிர்வாகத்தில் உள்ள தீவுக்குன்றுகளைச் சுற்றி 12 கடல் மைல்தூர கடல் எல்லைக்குள் "சுதந்திர கப்பல் போக்குவரத்து" நடவடிக்கைகளை நடத்த அமெரிக்க கடற்படை சிறுபோர்க்கப்பல்களை அனுப்பியது.

நியூ யோர்க் டைம்ஸ் தகவல்படி, ஒபாமா வியாழனன்று மீண்டும் "தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ வசதிகளின் கட்டமைப்பு மீது" ஜி க்கு அழுத்தமளித்தார். அதற்கு விடையிறுப்பாக, ஜி ஒபாமாவிற்குக் கூறுகையில், கடல் எல்லை பிரச்சினையில் வாஷிங்டன் ஒருதரப்பு நிலைப்பாட்டை எடுக்காது என்ற அதன் பொறுப்பை "உறுதியாக" அனுசரிக்கும் என்று அவர் நம்புவதாகவும் மற்றும் "ஒரு புறநிலைரீதியிலான மற்றும் பாரபட்சமற்ற மனோபாவத்தை ஏற்குமென்று" நம்புவதாகவும் தெரிவித்தார். சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனச் செய்தியின்படி, “கடல் போக்குவரத்து சுதந்திரம்" என்ற பெயரில் அதன் இறையாண்மையை மீறுவதை பெய்ஜிங் ஏற்காது என்று ஜி எச்சரித்தார்.

தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பலில் இருக்கும் ஒரு செய்தியாளரிடம் இருந்து வந்த நம்பகரமான செய்திகளுடன், இவ்வாரம் நியூ யோர்க் டைம்ஸ், இதழியல் என்பதாக காட்டி அப்பிரச்சாரத்திற்கான மற்றொரு சான்றை வழங்கியது. அமெரிக்க இராணுவம் சீனப் படைகளை எதிர்கொள்வது இப்போது தென் சீனக் கடலில் வழமையான ஒன்றாகி விட்டது என்பதை அந்த இடத்திலிருந்தே வந்த அச்செய்தி தெளிவுபடுத்தியது. ஒரு பிழையான கணக்கீட்டிற்கான அபாயம் ஓர் ஆயுத மோதலுக்கு மற்றும் ஒரு பரந்த மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதையே இத்தகைய ஒவ்வொரு எதிர்நடவடிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.

“சர்ச்சைக்குரிய கடலில் ரோந்து நடவடிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா மேலாதிக்கத்திற்காக போட்டியிடுகின்றன,” என்று தலைப்பிட்டு வியாழனன்று வெளியான நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை, முப்படை தளபதிகளின் தலைமையக தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டு மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ் க்கு இடையே இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த உரையாடல் ஒன்றைக் குறிப்பிட்டது. “[சீனா மற்றும் பிலிப்பைன்ஸால் உரிமைகோரப்படும் கடல்குன்றுகளான] Scarborough Shoals விடயத்தில் நீங்கள் போரில் இறங்குவீர்களா?” என்று டன்ஃபோர்டிடம் கேட்கப்பட்டது. அதற்கான பதில் அவரால் வழங்கப்படவில்லை.

அதற்கான பதில் ஆம் என்பதோ அல்லது இல்லை என்பதோ என்னவாக இருந்தாலும், அமெரிக்க இராணுவத்தின் மிகவும் மூத்த தளபதிகளான அவ்விருவரும் சீனா உடனான போரைச் சர்வசாதாரணமாக விவாதிப்பதே அதன் தன்மையை எடுத்துக்காட்டி விடுகிறது. அனைத்திற்கும் மேலாக ஆசியாவில் வாஷிங்டன் பதட்டங்களை தீவிரப்படுத்துவதில் ஓர் உள்ளார்ந்த தர்க்கமும் உள்ளது. அமெரிக்கா Scarborough Shoals விவகாரத்தில் பிலிப்பைன்ஸை, அல்லது சென்காயு/தியாவு தீவுக்குன்றுகள் விவகாரத்தில் ஜப்பானை, அல்லது வட கொரியா சம்பவத்தில் தென் கொரியாவை ஆதரிக்க மறுத்தால், ஆசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அமெரிக்க கூட்டணிகளின் ஒட்டுமொத்த வலையமைப்பும் கேள்விக்கு உள்ளாகும்.

அணுஆயுத உச்சி மாநாட்டில் ஒபாமாவின் தோரணை என்னவாக இருந்தாலும், அடித்தளத்திலுள்ள இந்த இயக்கவியல் தான் மிகவும் நிஜமான அணுஆயுத போர் அபாயத்தை முன்னிறுத்துகிறது.

Read more...

Saturday, April 9, 2016

மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னமும் “புலிகளின்” குடும்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன- ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவிக்கிறார்- சமிந்திர பேர்டினான்டோ

வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடந்த வியாழனன்று, யுத்தம் முடிவடந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றன எனத் தெரிவித்தார். பத்தரமுல்லவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களிடம் உரையாற்றிய ஆளுனர் குரே, எல்.ரீ.ரீ.ஈயும் கூட மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை கைப்பற்றி இருந்தது எனத் தெரிவித்தார். எனினும் இன்று கவனம் முழுவதும் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களைப் பற்றி மட்டுமே உள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதேபோல ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களும் மோதல் நடைபெற்றபோது இராணுவம் மட்டுமே அவர்களது ஒரே இலக்காக இருந்தபோதும் அவர்கள் கண்மூடித்தனமான ஆட்கடத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். இராணுவத்துக்கு எதிராக பாரபட்சம் காட்டக்கூடாது என ஆளுனர் தெரிவித்தார். யுத்தம் நடைபெற்றபோது, எல்.ரீ.ரீ.ஈ கூட வன்னிப் பிரதேசத்தில் அதன் விமான ஓடு பாதைகள் மற்றும் முக்கிய இராணுவத் தளங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவியிருந்தன.

மோதலின்போது இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நிலங்களுக்கு திரும்பவேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறார்கள் என சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டியிருப்பதாக ஆளுனர் குரே தெரிவித்தார். இந்தப் பிரச்சினையில் தற்பொழுது இராணுவம் பிடித்துள்ள காணிகள் பற்றியே கவனம் எடுக்கப்பட்ட போதிலும் எல்.ரீ.ரீ.ஈயினால் கைப்பற்றப்பட்ட காணிகளின் விடயங்கள் கூட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாடசாலை ஒன்றை சமீபத்தில் திரும்பக் கையளித்தது தொடர்பாகவும் விளக்கிக்கூறிய ஆளுனர் குரே, சில வாரங்களுக்கு முன்னால் கச்சதீவு, புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு கடற்படையினர் உதவிகள் வழங்கியதாகவும் சொன்னார். தனது கடமைகளுக்கு அப்பால் சென்று தேவாலயத்துக்கு உதவியதற்காக அந்த கத்தோலிக்க தேவாலயம் கடற்படையினருக்கு பெரும் புகழாரத்தை வழங்கியிருந்தது. இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த 3,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட கிட்டத்தட்ட 8,000 கத்தோலிக்கர்கள் அங்கு நடைபெற்ற புனித திருப்பலி பூசையில் பங்கெடுத்ததாக ஆளுனர் குரே தெரிவித்தார்.

சிங்கள தமிழ் புதுவருடப்பிறப்பு மற்று வெசாக் பண்டிகை தொடர்பாக வட பகுதியில் திட்டமிட்டுள்ள செயற்பாடுகளைப் பற்றி விளக்கமளிககையில், நிலமை தொடர்ந்து சீராகி வருவதாக ஆளுனர் குரே தெரிவித்தார். வட மாகாணத்தில் பிரதான வீதி வலையமைப்பிலிருந்து தொலைவில் வசிப்பவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு இன்னும் ஏராளமானவற்றை செய்யவேண்டி உள்ளது. குடி தண்ணீரைப் பெறுவதில் வட பகுதியினர் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள், என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கூட கொழும்பிலிருந்து தண்ணீரை கொண்டு செல்லும் நிர்ப்பந்தத்தில் உள்ளதாக கூறினார். “நான் எனது வாகனத்தில் தண்ணீரைக் கொண்டு செல்கிறேன், மற்றும் சமீபத்தில் நான் சிறிதளவு நீரை தொடரூந்து மூலம் அனுப்பி வைத்தேன்”. எனினும் ஊடகங்களில் ஒரு பகுதியினர் தனது பயன்பாட்டுக்காக தண்ணீர் பவுசர்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதாக ஒரு பொய் பிரச்சாரத்தை பரப்பியிருந்தனர் என ஆளுனர் சொன்னார்.

முந்தைய அரசாங்கத்தின் தவறாக திட்டமிடப்பட்ட கொள்கைகள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் பேசும் மக்களின் ஆதரவை இழந்துள்ளதாக குரே குற்றம் சாட்டினார். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் சமூகத்துடன் உறவுகளை மேம்படுத்துவதற்காக உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என குரே தெரிவித்தார். சிரேஷ்;ட அரசியல்வாதிகள் முந்தைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைப் பீடத்தின் கொள்கைகளை பரப்பி வந்ததின் காரணமாக கடந்த இரண்டு தேசிய வாக்கெடுப்பிலும் கட்சிக்கு தமிழ் வாக்காளர்கள் வழங்கிய ஆதரவில் பாரிய சரிவு ஏற்பட்டிருந்தது.

வட பகுதி தமிழ் சமூகம் தங்கள் வாக்குரிமைகளை, 2010 ல் யுத்தத்தை வெற்றி கொண்ட இராணுவ தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் மற்றும் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டில் இல்லாத சமயங்களில் பாதுகாப்பு அமைச்சராக பதில் கடமையாற்றிய எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏன் பெருமளவில் வழங்கினார்கள் என்பதை விளக்க முடியுமா என த ஐலன்ட் அவரிடம் கேட்டது, அதற்கு ஆளுனர் குரே, அவர்களின் வாக்குகள் அவர்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை எனப் பதிலளித்தார். வாக்காளர்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கிற்கு பெருமளவு ஆட்பட்டிருந்தார்கள் என ஆளுனர் தெரிவித்தார். நவம்பர் 2005 ஜனாதிபதி தேர்தலின்போது, எல்.ரீ.ரீ.ஈ சார்பாக ரி.என்.ஏ வட பகுதி தமிழர்களை தேர்தலை பகிஷ்கரிக்கும்படி வழிகாட்டியதைப் பற்றி கருத்துக் கூறுவதை அவர் தவிர்த்துக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பு எந்தவித விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப் படக்கூடாது என ஆளுனர் குரே தெரிவித்தார். “யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர். ஜெனரல். மகேஷ் சேனநாயக்காவுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகிறேன். உண்மையில் இன்றுகூட அவருடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் என அவர் வியாழனன்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியல் ரீதியாக வேறுபட்டவர்களாக இருந்த போதிலும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருபோதும் தனது பணிகளுக்கு தடையாக இருக்கவில்லை என குரே சென்னார். அனுபவம் வாய்ந்த இராஜதந்திரியான எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்காரவின் இடத்திற்கு சமீபத்தில் குரே தெரிவானார்.

அவர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் பற்றி கருத்து nதிரிவிக்கையில், அத்தகைய நடத்தைகள் அவர்களது பலவீனத்தை பிரதிபலிக்கிறது என ஆளுனர் குரே சொன்னார். குழப்பம் ஏற்படுத்துவதால் அவர்கள் ஆதரவு பெற முடியும் என நம்புவது அவர்கள் பக்கம் உள்ள ஒரு தவறாகிவிடுகிறது என ஆளுனர் குரே சொன்னார்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

Friday, April 8, 2016

நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே! நோர்வே நக்கீரா

தமிழ்த்தேசியத்தின் சின்னமாகவும், ஒன்றைக்குரலாகவும், ஆணிவேராகவும், ஆதிசக்தியாகவும் வாழ்ந்த மங்கையர்க்கு அரசியாக அன்றே இயற்பெயர் கொண்டு மங்கையற்கு அரசியாகவே வாழ்ந்த தேசியத்தின் குரல் அடங்கி 31நாட்கள் ஆகின்றது. 8.04.2016 அவருடைய அந்தியேட்டி கிரியை முன்னிட்டே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

30வருடங்களுக்குள் தமிழ்த்தேசியத்தைக் கட்டி எழுப்பிய ஒற்றைப்பெண்மணியை முக்கியமாக தமிழினம் எப்படி மறந்தது. நன்றி கெட்ட சமூகத்தில் ஒருவனாகவே நின்று கொண்டு இதை எழுதுகிறேன். இதன் விளைவுதானா முள்ளிவாய்கால்? இன்னும் எத்தனை முள்ளிவாய்கால்கள் வந்தபின்னர் நன்றியுள்ளவர்களாக மாறுவீர்கள் 500வருடங்களுக்கு மேல் அடிமையுணர்வேறி அமிழ்ந்து கிடந்த தமிழினத்தை, தமிழ் பெண்ணினத்தை மங்கையற்கரசியெனும் ஒற்றைப் பெண் முன்னணியில் நின்று தட்டி எழுப்பினார்கள். திருமதி மங்கையற்கரசியின் இறப்பை பலதமிழ் ஊடகங்கள் பேசவே இல்லை. சில தமிழ் ஊடகங்களைத் தவிர மற்றையவை இதை வெறும் செய்திபோல் சொல்லிச்சென்றன. இவரது இறுதியாத்திரையில் பலநாடுகளில் இருந்து பிரமுகர்களும், 1500 மேற்பட்ட மனிதர்களும் சமூகமழித்திருந்தும் இவரின் இறுதி ஊர்வலம் ஊடகங்களால் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும், அவமானத்துக்கும் உரியதே. அன்னை கூட்டணிமேடைகளில் கூறிய வசனம்

"ஓடையிலே என்சாமல் ஓடும் போதும் ஒண்டமிழே சலசலத்து ஓடவேண்டும்
பாடையிலே ஊரைச்சுற்றிப் பவனிவரும் பொழுதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க
வேண்டும்"


அவரது ஆசையை நிறைவேற்றினோமா? தமிழ்கேட்டுச் சாக நினைத்து அந்த ஆத்மாவை ஊட்டிய கைகளை வெட்டி, அன்னியதேசம் அனுப்பி, நாடற்ற, நாமற்ற, நாதியற்ற அனாதைப்பிணமாகவே அனுப்பி வைத்தோம். தவறுவிடாத மனிதனும் இல்லை அரசியலும் இல்லை. ஆனாலும் அதற்கு அவருக்குக்காலம் கொடுத்த தண்டனை மிகப்பெரிது. அதைவிட நன்றி கெட்டசமுதாயமாக நாம் நின்றது அதைவிடக் கொடியது.
இவர் அமிர்தலிங்கத்தைத் திருமணம் செய்ததால் மட்டும் அரசியலுக்கு வந்தவர் அல்ல. தமிழரசுக்கட்சியின் கூட்டங்களிலேயே சிறுவயதில் தன் கணீர் என்ற குரலால் எழுற்சிப்பாடல்களைப் பாடி செத்துக்கிடந்த தமிழ்ச்சமூகத்தை தட்டியெழுப்பியவர். இதற்காகவாவது இவரின் இறுதிச்சடங்கில் ஊடகங்களின் காணொளிக்கண்கள் திறந்திருக்கலாமல்லவா? மறுத்திருக்கவே கூடாது. அவரின் தேவைக்கு தமிழர்கள் கொடுத்த பரிசு என்ன? ஆம் அன்னியநாட்டில் அனாதைப் பிணம்??? தன்னுடைய ஈமைக்கிரியைகள் தன்மண்ணில் நடைபெறவேண்டும் என்பதே அவரின் இறுதிகால ஆசையாக இருந்தது என்பதை அறிந்தேன். நடந்ததா...? நன்றி கெட்ட சமூகமே திருப்பிப்பார். நாளை உனக்கும் உன்தேசியத்துக்கும் இப்படி நடக்கலாம்.

பெண்கள் வாசலுக்கு வரமுடியாத காலத்தில் கூட மேடையேறி எழுச்சிப்பாடல்கள் பாடி தமிழர்களைப் புரட்சியடையச் செய்த பெண்மணி எம்மணி அவர்கள். கொண்டானேமா? கேவலப்படுத்தாது இருந்தோமா? நாவில் ஒன்றும் நெஞ்சில் ஒன்றும் கொண்டு திரியும் சமூகமே! சாதியில்லை என்று பேசியவர்களின் வீடுகளில் சாதியிருந்தது. இவர்களின் வீட்டில் யாரும் போய்வரலாம். சாதியில்லை என்பதைச் சாதித்துக் காட்டியவர்கள் இவர்கள். சொல்வதைச் செயலாகவும் செயலையே வாழ்வாகவும் கொண்டவர்கள் அமிர்தலிங்கம் தம்பதியினர். ஊட்டிய கைகளே தீட்டியன கத்தியை. வளர்த்துகடாக்களே மார்ப்பில் பாய்ந்தாலும், தன் பூவும் பொட்டும் அழிந்தாலும் அவரின் ஊட்டிய கைகள் எதிர்த்து ஓங்கவில்லை. இதையாவது புரிந்து கொள்வீர்களா? அன்னமிட்ட அன்னையை தேசியத்தின் அடிநாதத்தை ஒழித்தீர்களே அழித்தீர்களே.

பாதுகாப்பாக இருந்து கொண்டு பெண்விடுதலை பேசப்படுகிறது. ஆனால் பாதுபாப்பற்ற சூழலில் கூட வீரப்பெண்ணாக வீறுநடைபோட்ட மங்கையற்கரசி அம்மாவின் இடத்தை நிரப்ப இன்னும் ஒருவர் வரவில்லை. வரப்போவதும் இல்லை. பாதுகாப்பான நாடுகளில் இருந்த பக்கம் பக்கமாக எழுதலாம். அம்மாவுக்கு இணையாக இன்மொரு சகாப்தம் இன்னும் பிறக்கவே இயலாது. பிறக்கப் போவதும் இல்லை.

ஆரம்பகாலத்தில் ஆயுதப்போராட்டத்தின் காரண கர்த்தாக்கள் அனைவருமே அன்னையின் கைகளால் அன்னமுண்டவர்கள். உண்ட தட்டில் ......களே! அவரை விதவையாக்க எப்படி முடிந்தது? இருந்தும் தாய் தாய்மையுடன எதிர்த்து ஒரு சொல் இயப்பவே இல்லை. வேதனையுடன் வழிவிட்டு விலகிக் கொண்டார். தட்டிவளர்த்துபிள்ளையைத் தட்டிக் கொட்டுவதா என்று நினைத்தாரோ என்னவோ? எதிரிகள் துரோகிகள் கூடக் கண்கலங்கி நின்றபோது கூட எமது கமாரக்கண்கள் திறக்கவே வில்லையே.

அன்றும் இன்றும் தமிழீழம் என்ற சொல்லை உலகெங்கும் உச்சரிப்பதற்கு அடிநாதமாக இருந்தவர்கள் திரு திருமதி அமிர்தலிங்கம் என்பதை யாரும் மறுக்க இயலாது. தமிழ்தேசியத்தின் சின்னங்களாகவும் அதன் வாரிசுகளாகவும் தம்மை காட்டிக்கொள்ளும் பொய் முகங்களே! உங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் புதைக்கப்போகிறீர்கள். திரு அமிர்தலிங்கத்தைப் போல் ஒரு அறிவாளியையும், தீட்சணியரும், திறமைசாலியும், மங்கை அம்மாவை போன்ற பெண்விடுதலைப் போராளியையும் இனித்தமிழினம் சந்திக்காது. இதுதான் சாபமோ என்னவோ?

தமது இயக்கதில் இறந்த அனைவருக்கும் உலகெங்கும் ஒளியேற்றுவித்த பெருமகன் பிரபாரகனுக்கே ஒரு மெழுகுதிரி ஏற்ற வக்கற்ற, மனமற்ற, வக்கிரகம் கொண்ட வெட்கம் கெட்ட சமூகமே நீ தேசியத்தின் குரலான மங்கையற்கரசிக்கா தீபம் மேற்றப்போகிறீர்கள். தேசியத்தலைவன் என்று கொண்டாடியவருக்கே இது தேசியம் இல்லை வேசியம் என்பதைக் காட்டி தேசியப்போர்வைக்குள் கொள்ளையடித்து, தமிழர்களை ஏமாற்றி, தேசியத்தை விற்று வயிறு வளர்த்து சுகபோகங்களை அனுபவிக்கும் வீணர்களே மறக்காதீர்கள் தீட்டியவாள் கூட நீட்டியவனை வெட்டிப்பார்க்கும் மறந்து விடாதீர்கள்.

தாய், தந்தை, மகன் ஒருகுடும்பமே ஒரேநேரத்தில் சிறைவாசம் அனுபவித்தது திரு திருமதி அமிர்தலிங்கத்தின் குடும்பம் ஒன்றுதான். இது கூட நினைவிருக்கிறதா நன்றி கெட்டசமூகமே. ஆயுதப்போராட்டத்துக்கு எதிராக இவர்கள் என்றும் இருந்ததில்லை. மாறாக உதவியாகவே இருந்தார்கள். பல வளக்குகளை இலவசமாகவே நடத்தியவர் திரு அமிர்தலிங்கள் அவர்கள். தமிழினத்தைக் களமாடவைத்த கோமனை கொன்று நன்றி கெட்டு சமூகத்தின் வாரிசுகளாக நின்று முள்ளிவாய்காலில் தன்னையே கவிட்துக் கொட்டி பின்னருமா நன்றிக்கு அர்த்தம் புரியவில்லை.

தன்கணவர் வஞ்சமாக நன்றிகெட்ட தனமாகக் கொல்லப்பட்ட பின்னரும் அரசியலில் தலைப்பதவியை ஏற்று எதிராளிக்கு எதிராக நடந்திருக்கலாம். அம்மா அதைச் செய்யவில்லை. அதுவும் தன்பிள்ளை என்று நினைத்தாரோ என்னவோ? மறைமுகமாக அத்தனை போராளிக்குழுக்களுக்கும் நிறைமுகத்துடன் உதவிய இவர்களை எதிர்த்து, நிமிர்ந்து பேசுவதற்கு திராணியும் உரிமையும் எப்படி வந்தது. யார் தந்தது? மறந்து போன, இறந்து போன என்சமூகத்துக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். தமிழீழம் என்பது வட்டுக்கோட்டை தொகுதி பண்ணாகத்தில் கூட்டணியே "தமிழீழப்பிரகடனம்" செய்தது. மக்களும் கூட்டணிக்கே தமது வாக்குகளை இட்டு திரு அமிர்தலிங்கத்தை அதுவும் சிறுபான்மை இனத்தில் இருந்து தூக்கி எதிர்கட்சித்தலைவர் ஆக்கினார்கள் என்பதை அறிக. இது கூட்டணிக்கு மக்கள் கொடுத்த அங்கிகாரம். இதை வேற்றமைப்புகளுக்கு அல்ல என்பதையும் அறிவது அவசியம். இத்தமிழீழம் என்பதை தன்நெஞ்சிலும் தோழிலும் சுமந்து வந்த முன்னோடிகளில் முதன்மைப் பெண் திரு மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என்பதை மறுத்து விரல் காட்டி விமர்சிக்கக் கூட யாருக்கும் தகுதி, உரிமை, அதிகாரம் கிடையாது.

தமிழ்தேசிய இனத்தின் தாயை அனாதைப்பிணமாக அனுப்பிவிட்டு தம்மைத் தேசியத்தின் ஊடகம் என்று காட்டிக் கொள்ளும் போலிமுகங்கள் இன்றும் தேசியம் பேசுகின்றன. இதைதான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதா? தமிழ்தேசியத்தை தேசம் தேசமாய் பேசிவிற்று இன்றும் தம்மைத் தேசியவாதிகளாக முகம்காட்டும் உலகில் இவர்களின் கண்கள் அம்மையாரின் பிணத்தில் கூட படாமல் போனதே தமிழ்த்தேசியம் என்றாவது மிளிரும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

தமிழ்தேசியத்தின் ஒற்றைச்சின்னமான பெண்மணி, தேசியத்தின் உயிர்நாதம், ஈடுகொடுக்க முடியாத அகல் மங்கை அம்மா என்று கூறி அவரின் அந்தியேட்டி தினத்தில் கண்ணீர் மலர்கொண்டு அவரின் ஆத்மசாந்திக்காக ஆராதிக்கிறோம்.



Read more...

Wednesday, April 6, 2016

ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு.

ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்களின் வாளைக் குறித்த செய்தி வெளியீடு.

பண்டைய காலத்தில் ஆளுகைக்கு அடையாளமாக அரச வாள் ஒரு சின்னமாக திகழ்ந்தது. இவ் வாளானது யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் முக்கியமான ஓர் வரலாற்று இடத்தையும் கொண்டுள்ளது.

அது பரம்பரை பரம்பரையாக மாபெரும் போர் வீரர்களால் கைக்கொள்ளப்பட்டு நீதியையும் வெற்றியையும் பிரகடணப்படுத்தப்பட்டது.

ஒரு யுத்த வீரனுடைய மரணத்திற்குப் பின்பு அவர் உபயோகித்த வாளானது இனிமேலும் எவ்வித போர்களுக்கும் பயன்படுத்தப்படாது, அது கனத்துக்குறிய கருவியாக மாறுகின்றது. பண்டையகாலங்களில் ஒரு யுத்த வீரனை ஏற்படுத்துவதும், அவ் வீரனுடைய பதவி பிரமாணத்திற்கும் அவ் வாளானது பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டு, இவ்வாறான சம்பிரதாய காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக ஒரு வாளானது காலாகாலமாக மதிப்போடும் கனத்தோடும் பயன்படுத்தவேண்டிய ஒன்றாகும்.

வீரமாகாளி அம்மன் கோவிலானது யாழ்ப்பாண வட்டாரத்தில் பிரசித்திபெற்ற கோவிலாகும். ஆரிய சக்கரவத்திகளான யாழ்ப்பாண அரசர்கள் போர்களுக்கு போகமுன், அக் கோவிலில் அவர்கள் வாளை விரமாகாளி அம்மன் சந்நிதி முன் வைத்து அவர்களுக்காக விஷேட பூஜை செய்யப்பட்டது.

யாழ்ப்பாண அரசர்களான ஆரிய சக்கரவத்திகளின் அரச வாள்களில் ஒன்றான வாளானது வீரமாகாளி அம்மன் கோவிலில் பல வருடங்களாக வைத்து கொள்ளப்பட்டு வந்தது. அவ் வாளானது விலை மதிக்க முடியாத இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. வீரமாகாளி அம்மன் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த அவ் இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்த வாளானது 15 வருடங்களுக்கு முன் ஒரு கண்காட்சிக்காக கொண்டுசெல்லப்பட்டு, அது மறுபடியும் அக் கோவிலுக்கு வந்தடையவில்லை. பிற்பதாக அக் கோவில் அவ் வாளைப்போன்று ஒரு மாதிரியைச் செய்து வைத்துள்ளது. அது மூன்றரை அடி அளவு கொண்ட வாளாகும்.

இரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டிருந்த அரச வாள்களில் ஒன்றான அவ் வாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து காணப்படவில்லை. இவையாவும் வாள் கொடுக்கும் தருணம் சாட்சியாயிருந்து அக்காலத்து வீரமாகாளியம்மன் கோவில் தர்மகர்த்தாவினால் எனக்கு அறிவிக்கப்பட்டது. அரச வால்களுக்கு உரித்தான வீரமாகாளியம்மன் கோவிலிலிருந்த வாளை பாதுகாப்பாகவும் கனத்துடனும் பராமரிக்கவேண்டிய கோவில் குருக்கள் அவ் வாளை கொடுத்தது சரியான காரியம் அல்ல. இப்பேற்பட்ட அசதியான காரியங்களால் யாழ்ப்பாண இராச்சியத்தின் முக்கியமான வரலாற்று ஆவணத்தை இழந்தது மட்டுமல்லாது, நம் பின் சந்ததியார்களுக்கு நம் வரலாற்று சிறப்பினை பாதுகாத்து காண்பிக்கத் தவறிவிட்டோம். இனிவருங்காலங்களில் நம்முடைய வரலாற்று ஆவணங்களை அசதியாய் விட்டுவிடாது அதனை நம் எதிர்கால நோக்கோடு பாதுகாப்போம்


யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள்.


யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.

ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

பலர் அமைச்சர்களாக பதவிக்கு வருமுன் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். பின் பதவிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை பொருட்படுத்தாது விட்டுவிடுவார்கள். பதவியில் இருக்கும் பல தமிழ் அரசியல் அதிகாரிகளும் பல தமிழ் கல்வித்துறைகளில் உள்ள அதிகாரிகளும் இவையாவற்றிலும் எவ்வித ஆர்வமும் காட்டுவதில்லை.

இன்று யாழ்ப்பாண வட்டாரத்து சைவ கோவில்கள் நீதிமன்றத்தில் பல வழக்குகள் சம்பந்தமாக பதிவாகியுள்ளது. இவையாவும் சீக்கிரத்தில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். எல்லா சைவ கோவில்களும் தங்கள் பழைய அனுதின நிலைக்கு திரும்பி தமது முக்கிய இடத்தை சிவத்திற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் யாவரும் யாழ்ப்பாணத்து அரசர் ஆரிய சக்கரவர்த்திகளின் காலங்களில் எவ்வண்ணம் இயங்கி வந்தீர்களோ அவ்வண்ணம் சிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே என் ராஜ உத்தரவு!

நம் தமிழ் வரலாற்று வளத்தைக் குறித்து நான் மிகவும் வருத்தத்துடன் உள்ளேன். யாழ்ப்பாணத்திற்கூட அனேகர் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது உள்ளனர். கல்வி சாலைகளிலும் 1948ம் ஆண்டிற்கு பின்னர் நிகழ்ந்தவற்றையே கற்றுக்கொடுக்கின்றனர். அவற்றிற்கு முன் நிகழ்ந்த தமிழ் வரலாற்றுக்களை அவர்கள் கற்றுக்கொடுக்க அலட்சியமாக உள்ளனர்.

அதுமட்டுமல்லாது இன்று வாழும் நம் இளைய சமுதாயத்தினரும் தங்கள் சொந்த வரலாற்றினை அறியாது தங்கள் சொந்த தாய் மொழியையும் பேசாது உள்ளனர். இதற்கு பல வகையில் அவர்களது பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். ஏனெனில் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் தமிழ் வரலாற்றில் உள்ள பெருமைகளை சொல்லிக்கொடுக்க தவறிவிட்டார்கள். நாம் இவ்வண்ணம் கவனக் குறைவின்றி இருப்போமேயானால் தமிழ்மொழியும் அதிகம் பேசப்படாது தமிழ்மொழி அமிந்துபோகும் அபாயம் உள்ளது. மேலும் பல மக்கள் சமூச வலைத்தளங்களில் தமிழ் அரசியல்வாதிகளை குறித்து குறைகூறி எழுதுவதும் பதிவதுமாக உள்ளனர். இவ்வாறாக செய்வதைக் காட்டிலும் யாழ்ப்பாணத்தைக் குறித்த வளமான சரித்திரங்களை மற்றும் யாழ்ப்பாணத்து கலாசாரங்களை பண்பாடுகளை என நல்ல அறிவுபூர்வமான தகவல்களை போட்டால் அவை அனேகர்களுக்கு பயனுடையதாக இருக்கும்.

எமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்க தவறுவோமேயானால் இவையாவும் பிற்காலங்களில் ஆதாரங்கள் இல்லாது இன்றைய நாட்களில் எவ்வண்ணம் பல இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறதோ அவ்வண்ணம் யாழ்ப்பாணமும் பெயர் மாற்றப்பட்டு ஒரு சிங்கள பட்டணடமாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. நாம் எக்காலமும் நடந்த யுத்தத்தை குறித்து இனி பேசாது வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை ஓர் அழகான சுற்றுலா தளங்களாக மாற்றியமைப்பது நன்மையாக அமையும்.

எம் முன்னோர்களான யாழ்ப்பாணத்து அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் நாட்டு நட்பை ஆராய்ந்து அறிந்து செயற்படுவதைப் போன்று இம் முறை நான் என் அரச குடும்பத்திலிருத்து எனது பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்த நாட்களில் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகள் யாவையும் அவர்கள் பார்வையிட்டு எனக்கு அறிவித்தார்கள். எனவே நான் யாழ்ப்பாணத்து தற்போதைய நிலையைக் குறித்து நன்கு அறிந்திருக்கின்றேன்!

ஆகையால் என் தமிழ் மக்கள் அனைவரிடம் நான் விரும்புவது யாதெனில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் முன்வந்து தங்கள் கரங்களை இணைத்து நமது வளமான பாராம்பரிய ஆவணங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே.

Read more...

Thursday, March 24, 2016

புலிகள் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட தியாகங்களை விபரிக்கின்றார் டாக்டர் நடேசன்.

ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் - நடேசன்

அவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் இருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன் வெளியாகியது.

ஒவ்வொரு வருடமும் வியாபாரரீதியில் நட்டத்தையே எதிர்நோக்கியது. விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வெளியானபோதிலும் நட்டம் தவிர்க்கமுடியாதிருந்தமைக்கு அவ்வேளையில் இங்கு புலிகள் இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பிரசாரங்களும் முக்கிய காரணம். உதயத்திற்கு விளம்பரம் தருபவர்களை எச்சரித்தல், அதில் எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தல், கடைகளில் இருந்து உதயம் இதழ்களை ஆட்களை அனுப்பி துக்கிவீசச்செய்தல் முதலான தமக்குத்தெரிந்த அராஜக கைங்கரியங்களில் ஈடுபட்டனர்.

வருடாந்தம் கிட்டத்தட்ட 5000 டொலர்கள் வரையில்; நட்டம் வந்தது..உதயம் மாத இதழாக வெளியாகியதுடன் இலங்கை தமிழக படைப்பாளிகளும் அதில் எழுதினார்கள். தமிழ்நாட்டிலிருந்து எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா உட்பட வேறு சிலரும் எழுதினார்கள். ஒரு கம்பனியாக பதிவுசெய்து அதன் நிருவாகப்பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தமையால் எதிர்நோக்கப்பட்ட நட்டத்தையும் ஏற்றுக்கொண்டேன்.

உதயத்தின் தொடர்வருகையை சகித்துக்கொள்ளமுடியாத புலி ஆதரவாளர்கள் பின்னர் தாமே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தனர். அதன் பெயர் ஈழமுரசு. இதேபெயரில் ஐரோப்பியநாடுகளிலிருந்தும் கனடாவிலிருந்தும் புலிகள் பத்திரிகை வெளியிட்டனர்.

உதயம் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மனித உரிமை ஆர்வலர் லயனல்போப்பகே, பொருளியல் விரிவுரையாளர் அமீர்அலி ஆகியோரையும் அழைத்து காலத்துக்கு காலம் உதயம் தொடர்பாகவும் அரசியல் இலக்கியம் தொடர்பாகவும் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் மெல்பனில் நடந்தமைபோன்று சிட்னயில் கவிஞர் அம்பி தலைமையில் பத்திரிகைளில் சுயதணிக்கை பற்றிய கருத்தரங்கும் நடத்தியிருக்கிறது.

இதில் மனிதஉரிமை ஆர்வலர் கலாநிதி பராக்கிரம செனவிரத்தினவும் உரையாற்றியிருக்கிறார். உதயம் பத்திரிகை வெளியீட்டில் மட்டும் அக்கறைகொண்டிராமல் வாசகர் கருத்துக்களுக்கும் பொது அரங்கில் களம் தந்தது.

இவ்வாறு தொடர்ச்சியாக உதயம் வெளியானபோதிலும் என்னுடன் உதயம் இதழில் இயங்கிய சிலருக்கும் புலிகள் பலவிதங்களில் அழுத்தங்களை பிரயோகித்தார்கள். இதனாலும் உதயம் வெளியீட்டில் நட்டங்கள் எதிர்நோக்கப்பட்டது.

மருத்துவரான எனது மனைவிக்கும் நட்டம் வந்தது. தமிழ் நோயாளர்கள் சிகிச்சைக்காக அவரிடம் செல்லக்கூடாது என்ற பிரசாரத்தையும் கட்டவிழ்த்தனர். நண்பர் எழுத்தாளர் முருகபூபதி உதயம் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உதயம் பத்திரிகையில் தமிழ்ப்பக்கங்களை ஒப்புநோக்கினார். இதனால் அவர் மீதும் அவதூறு பொழிந்தனர். அவர் இலங்கையில் பத்திரிகையாளராக இருந்தவர். இங்கு ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு தமது உழைப்பிலும் வங்கியில் கடன் பெற்றும் தமது குடும்பத்திற்கு ஒரு வீட்டை வாங்கியிருந்தமையால் அந்த வீடு இந்திய மத்திய அரசு வாங்கிக்கொடுத்த வீடு என்று ஒரு அவதூறு பிரசாரத்தையும் முன்னெடுத்தனர் இந்த புலி ஆதரவாளர்கள். இதே போன்று உதயம் பத்திரிகையில் சம்பந்தப்பட்டிருந்த நண்பர் இராஜரட்ணம் சிவநாதன் நடத்திய பயண முகவர் நிறுவனத்திற்கும் தமிழ் வாடிக்கையாளர்களைச்; செல்லவிடாது தடுத்தனர்.

உதயம் பத்திரிகையின் சட்ட ஆலோசகராக இருந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனுக்கு எதிராகவும் அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்து அவருடைய தொழிலுக்கும் பதிப்பு ஏற்படுத்தினர்.

உதயம் பத்திரிகையில் ஆங்கிலப்பக்கங்களை கவனித்த மாவை நித்தியானந்தன் முன்னின்று நடத்திய பாரதி பள்ளிக்கு பிள்ளைகளை செல்விடாது தடுக்கும் புண்ணியகருமங்களிலும் ஈடுபட்டனர்.

இவ்வாறு உதயம் பத்திரிகையுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தவர்களுக்கு புலிகள் நட்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உதயம் பத்திரிகையால் பயன் அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள்:

பத்திரிகையை பதிப்பித்த அச்சகத்தினர். பக்க வடிவமைப்பு செய்தவர்கள். பத்திரிகை பிரதிகளை கடைகளுக்கு விநியோகித்தவர்கள். அத்துடன் உதயத்தில் எழுதிய சிலருக்கு பணமும் கொடுத்திருக்கின்றேன். அவர்கள் பணத்துக்காக எழுதியவர்கள் அல்ல. பொதுவாகவே பத்திரிகைகளில் எழுதும் நிருபர்கள் படைப்பாளிகளுக்கு பத்திரிகை நிறுவனங்கள் வழங்கும் சன்மானத்திற்கு ஒப்பானது.

இப்படியாக ஒரு சிறிய வியாபாரத்தால் அதனை நடத்துபவர்கள் சிலர் நட்டப்படுவதும் மேலும் சிலர் லாபமடைவதும் வழக்கம்தான்.

இந்நிலையில் சுமார் நாலு பில்லியன் டொலர் பெறுமதியான வியாபாரம் நட்டமடைந்தால் எத்தனை பேர் அதனால் நட்டமும் இலாபமும் அடைவர்கள்?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் 8 வீதமான உற்பத்தி பொருளாதாரத்தை கொண்டன. கிட்டத்தட்ட 3 பில்லியன் (GDP) உள்ளது அதைவிட விடுதலைப்புலிகளின் நியாயமான வியாபாரங்கள் வெளிநாட்டு மக்களின் பணம் மற்றும் போதை மருந்து கடத்தல் என் குறைந்த பட்சம் 700 மில்லியனில் இருந்து 1 பில்லியன் வரையில் நடந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள். இந்தப்பணம் சில சிறியநாடுகளின் மொத்த வருமனத்துக்கு ஒப்பானது.

இந்த வியாபாரம் வங்குரோத்தானதால் எத்தனை பேர் வருமானம் இழந்திருப்பார்கள்?

இதற்கப்பால் இலங்கையில் 30 வருடத்திற்குள் குறைந்தது ஒரு இலட்சம் பேர் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் 5 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இவர்களில்; இந்தியாவில் இருப்பவர்கள் தவிர்ந்த மற்றவர்கள் வசதிவாய்ப்புகளோடு இருக்கிறாரகள்.

இதனை எழுத்தாளர் தேவகந்தன் தமது கனவுச்சிறை நாவலில் அழகாக படம் பிடிக்கிறார்.இலங்கைத் தமிழரான முதியவர் ஒருவர் சென்னையில் இருந்து பேசுகிறார்:

“தம்பி சண்டை தொடங்கிவிட்டது. எப்படியும் தங்கச்சியையும் அம்மாவையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடலாம்’’.

இது மட்டுமா?

முப்பது வருடங்கள் வெளிநாடுகளில் புலிகளின் செயல்பாட்டாளர்கள் ஒருவிதத்தில் குட்டி இராஜாக்களதான். அவர்களால் ஒருவரை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். ஏன் அடுத்த உலகிற்கே அனுப்பவும் முடியும். தனிமனிதர்களை பயமுறுத்தி காரியம் சாதிக்கமுடியும். கணவன் மனைவி தகராறில் தலையிடமுடியும்.

அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் உதாரணங்கள் பலவுண்டு.

இவையெல்லாவற்றையும் கடந்த காலங்களில் அனுபவித்தோம் அதையெல்லாம் சுமார் 1000 பக்கத்தில் எழுதவும்முடியும்

விடுதலைப்புலிகளின் அதிகாரம் அன்று வட கிழக்கு மாகாணத்தில் எந்த சர்வாதிகாரிக்கும் மேலானது

இப்படியான நிலையில் 2009 இல் இயக்கத்தின் அழிவில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நிலை குலைந்துவிட்டார்கள். மன அழுத்தங்களினால் குடும்பங்களைப் பிரிந்தவர்கள் சிலர். பலர் குடி போதைக்கு அடிமையானார்கள். மேலும் சிலர் சித்தசுவாதீனத்தால் பாதிக்கப்பட்டனர். அந்த அழிவின் விடை இப்படி இருக்க, சந்தர்ப்பவாத விடுதலைப்புலி ஆதரவாளர்கள்; மாத்திரம் – தம்பி எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தங்களது பைகளை நிரப்பிவிட்டார்கள்.

ஒரு சிலர் மனச்சாட்சியையும் மக்களையும் போக்கு காட்ட தாம் எடுத்த பணத்தில் சீமான் அழைப்பு மாவீரர் தின நிகழ்ச்சி என திருடன் ‘திருப்பதி உண்டியலில் போடுவதுபோல்” நடக்கிறார்கள்.

இவைக்கெல்லாம் முக்கிய காரணம் விடுதலைப்புலிகளின் பணம் எந்த ஒரு ஸ்தாபனத்திலும் இருக்கவில்லை .வெளிநாடுகளில் தனியார் கணக்குகளில் வெவ்வேறு வங்கிகளிலிலும் வீடுகளாகவும் வியாபார நிறுவனங்களாகவும் உருமாறிவிட்டது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலின் எதிரொலியாக வெளிநாடுகளில் பணம் பரிவர்த்தனையை கண்காணித்ததால் புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணம் தனியார் வசமாகியது. அதாவது சிலருக்கு மட்டும் ‘யானை இறந்தாலும் ஆயிரம்பொன் இருந்தாலும் ஆயிரம் பொன்னாகியது”

பெரும்பாலானவர்களுக்கு பணம் – பதவிகள் விடயத்தில் இது பெரிய இழப்பே.

உள்நாட்டில் மக்கள் மத்தியில் புலிகள் அற்றுபோனது அங்கு பலருக்கும் சந்தோசம். இந்த நிலைமையை அங்கு அகதி முகாம்களை நான் பார்க்கச்சென்றபோது பார்க்க முடிந்தது. காரணம் அகதிமுகாம்களில் இருந்தவர்களில் 75 வீதமானவர்கள் ஏழைகள். அவர்களிடம் இருந்தது குறைந்தளவு உடமைகளும் அவர்களது உறவுகளும்தான். இதிலும் இந்த ஏழைகளில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். மற்றவர்கள் காலம்காலமாக வன்னி மன்னார் மாவட்டத்து விவசாயிகள்.

விடுதலைப்புலிப்போராளிகளிலும் அதிலிருந்து வெளியேவந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தாம் நம்பியிருந்த இயக்கத்தின் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதை நான் இலங்கையில் சந்தித்தவர்களை வைத்து உறுதியாகச் சொல்லமுடியும். மேலும் அந்த இயக்கத்திலிருந்து வெளியே வந்த இலக்கியவாதிகளில் அகதிமுகாமில் இருந்தபடியே கள நிலைமையை உடனே எழுதிய கவிஞர் கருணாகரனை அப்பொழுது சிலர் கரித்துக் கொட்டினார்கள். அதன்பின்பு வெளிநாடுகளில் இருந்து எழுதியவர்களில் பலர் விடுதலைப்புலித்தலைமையை விமர்சித்தார்கள்.

போரின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகளாலும், மற்றும் செய்யத் தவறியவற்றாலும் மக்களின் துன்பத்தை மீண்டும் ஒரு முதலாக வைத்த தமிழ் அரசியல்வாதிகள் தமது வியாபாரத்தை தொடர்ந்தனர். புலிகளை ஆதரித்த இந்த தமிழ் அரசியல்வாதிகள் போரில் புலி தோற்றாலும் தமிழ்த்தேசியம் தோற்கவில்லை என்று பாவனைகாட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் இருக்கும் சில விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் நாடுகடந்த தமிழ் ஈழம், சர்வதேச விசாரணை போர்க்குற்ற விசாரணை என அறிக்கை விடுத்து தங்களுக்குள் இன்புறுகிறார்கள்

இந்த நிலையில் பதினெட்டு வருடங்களை போர்க்காலத்தில் தொலைத்துவிட்ட பெண்போராளியான சிவகாமி எனும் தமிழனியின் நினைவுகளின் தொகுப்பான கூர்வாளின் நிழலில் நூல், பகல்கனவு காணுபவர்களின் முகத்தில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி எழுப்பியது போல் திடுக்கிட வைத்துள்ளது. உண்மையில் இந்தப்புத்தகத்தில் இருப்பன எதுவும் புதிய செய்திகள் அல்ல.

விடுதலைப்புலிகளை காலங்காலமாக விமர்சித்தவர்கள் முன்னர் எழுதியதைத்தான் அதில் பார்க்க முடிகிறது. கடைசி யுத்தம் பற்றி காலச்சுவடு இதழில் கருணாகரன் அகதி முகாமில் இருந்து எழுதியவை இதைவிட விளக்கமானவை.

ஆனால், தமிழினி எழுதியதுதான் விடுதலைப்புலி எச்ச சொச்சங்களுக்கு தாங்க முடியாமல் போயிருக்கிறது. காரணம் புலிப்பூச்சாண்டி காண்பித்து வியாபாரம் செய்யமுடியாது என்பதால்தான். பிரபாகரனதும் பொட்டம்மானதும் பிழையான வழிகாட்டல்களினால் விருப்பமற்று சண்டையிட்டார்கள் என தமிழினியே எழுதியிருக்கும்போது மாவீரர்கள் என எப்படிச் சொல்லமுடியும்? போற்றிப்புகழ முடியும்?

சாதாரண மக்கள் இராணுவத்தின் குண்டுகளால் இறந்தார்கள். அதேபோன்று யுத்தகளத்தில் இருந்து வெளியேற முற்பட்டவர்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் எனக்கு அவ்வேளையில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. புலிகளிடத்திலிருந்து தப்பிச்சென்ற ஒரு குடும்ப்பப் பெண் லண்டன் பி.பி.சி வானொலிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செயலைத் திட்டிப்பேசியதையடுத்து, மெல்பனில் மருத்துவராக பணியாற்றும் ஒருவர் இங்குள்ள உள்ளுர் வானொலியில் அந்தப்பெண்ணை கடுமையாக கண்டித்தார். அவ்வளவுதூரம் அவர் பகல் கனவு கண்டுகொண்டிருந்தார். எல்லாம் அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.

அவ்வேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் இருபக்கத்திலும் இரையாகினர். இதேபோல் புலிப்போராளிகளை இலக்கற்று யுத்ததிற்கு இழுத்துச்சென்ற பிரபாகரனும் பொட்டமானும் இறுதியில் கிழக்கில் மாவிலாறில் அவர்கள் தொடக்கிய இறுதிப்போரில் வடக்கில் வன்னியில் இரையாகினர்.

மாரியம்மனில் பக்தர்கள் மட்டுமல்ல பலிகடாக்களும் பக்திகொண்டது எமது வரலாறு

இந்த நிலையில் எப்படி இவர்களை மாவீரர்கள் என கொண்டாடுவது? கொள்கைக்காக உயிரை விட்டவர்கள்தானே மாவீரர்கள்?

ஒரு பழக்கடைக்காரனுக்கு ஒரு காலில் யானைக்கால் வியாதிவந்து உரல் மாதிரி இருந்தது. பாடசாலை முடிந்ததும் சில குறும்புக்கார சிறுவர்கள் பழக்கடையில் தொங்கிய வாழைக்குலையில் இருந்து பழத்தை பறிக்க முயன்றபோது கடைக்காரன் தனது யானைக்காலை தூக்கி அவர்களை விரட்டும்போது சிறுவர்கள் மிரண்டு ஒடுவார்கள்.

ஒருநாள் ஒரு குறும்புக்கார சிறுவன் துணிந்து பழத்தை பறித்தபோது பழக்கடைக்காரன் யானைக்காலால் அந்த சிறுவனை அடித்தபோது அவனுக்கு மெத்தென்றிருந்து. அந்தச்சிறுவன் மற்றவர்களை நோக்கி கத்தினான் ‘டேய் இவனது கால் வலிக்காது’

வாழைப்பழக்குலை மட்டுமல்ல முழு பழக்கடையும் அந்தச் சிறுவர்களால் காலியானது

தமிழ்த்தேசியம் மட்டுமல்ல தமிழர்களின் சகல விடயங்களும் யானைக்கால் வந்தவனது பெரியகால் மாதிரி பெரிசாகத்தான் இருக்கிறது.

ஆனால், அப்பாவி மக்கள் ?

Read more...

Wednesday, March 23, 2016

இலங்கை மாவோவாதக் கட்சி "முற்போக்கு தமிழ் தேசியவாதத்தை" பரிந்துரைக்கின்றது. By Subash Somachandran and S. Jayanth

இலங்கையில் மாவோவாத குழுவான புதிய ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி (பு.ஜ.மா.லெ.க.), "பிற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு" எதிராக "முற்போக்கு தமிழ் தேசியவாதத்துக்கு" ஆதரவை வெளிப்படுத்துவதன் மூலம், அழுகிப்போன தமிழ் இனவாத அரசியலுக்கு புத்துயிரூட்ட முயற்சிக்கின்றது. பு.ஜ.மா.லெ.க., மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாக இருக்கும் வட இலங்கையையும் தமிழ் பேசும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மத்திய மலையகப் பிரதேசத்தையும் தளமாகக் கொண்டு செயற்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.மு.) மற்றும் பல சிவில் அமைப்புகளும் சேர்ந்து புதிதாக ஸ்தாபித்த தமிழ் மக்கள் பேரவையைப் பற்றி, தமிழ் பத்திரிகையான உதயன், பு.ஜ.மா.லெ.க. பொதுச் செயலாளர் எஸ்.கே. செந்திவேலிடம் பெற்ற பேட்டி ஒன்றை டிசம்பர் 29 பிரசுரித்திருந்தது.

செந்திவேல் அறிவித்ததாவது: "மக்களுக்கு மாற்றம் வேண்டும். அவர்கள் அடிப்படை கொள்கையில் இருந்து மாற்றுக் கொள்கைக்கு வர வேண்டும். பிற்போக்கு தமிழ் தேசியவாதம் தான் உள்ளது. முற்போக்கு தமிழ் தேசியவாதம் வரவேண்டும்." தமிழ் கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணியும் "பிற்போக்கு தமிழ் தேசியவாத கொள்கைகளை” பின்பற்றுவதாக கூறிக்கொண்ட அவர், பு.ஜ.மா.லெ.க. "முற்போக்கு தமிழ் தேசியவாதத்தை" முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வேறுபடுத்தல் பொய்யானதாகும். எந்த வடிவத்திலும், தமிழ் தேசியவாதத்தில் அல்லது உண்மையில் தேசியவாதத்தில் எந்தவித முற்போக்கும் கிடையாது. 1980களில், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பி.எல்.ஓ.), இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் அனைத்தும், கூர்மையாக வலதுபக்கம் திரும்பி, சகலவித ஏகாதிபத்திய-விரோத நிலைப்பாடுகளையும் கைவிட்டு, பெரும் வல்லரசுகளிடம் சரணாகதி அடைய முயன்றன. இந்த அரசியல் மாற்றமானது இந்த அமைப்புக்கள் அனைத்தும் அடித்தளமாக கொண்டிருந்த தேசிய பொருளாதார ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்துக்கு முழுமையாக குழிபறித்த, உற்பத்தியின் பூகோளமயமாக்கலின் தாக்கத்தை பிரதிபலித்தது.

2009ல் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டமை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தமிழ் முதலாளித்துவ அரசை அமைக்கும் அதன் திவாலான தேசியவாத முன்னோக்கின் விளைவே ஆகும். அதன் இரக்கமற்ற ஜனநாயக-விரோத வழிமுறைகளால் தமிழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அந்நியப்பட்ட போதிலும் கூட, கொழும்பு அரசாங்கத்தின் குற்றங்களுக்கு முழு சிங்கள மக்களையும் கண்டனம் செய்தமை, புலிகள் இயக்கம் இலங்கையில் அல்லது மிகவும் பரந்தளவில் தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுக்க இலாயக்கற்றது என்பதை உறுதி செய்தது. இலங்கை இராணுவம் புலிகளின் கடைசி கோட்டைகளையும் சுற்றிவளைத்த போது கூட, அவர்கள் கொழும்பை ஆதரித்த அதே பெரும் வல்லரசுகளுக்கே பயனற்ற வேண்டுகோள்களை விடுத்தனர்.

கூட்டமைப்பில் இருந்தும் அதன் "பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தில்" இருந்தும் தன்னை தூர விலக்கிக்கொள்ள பு.ஜ.மா.லெ.க. மேற்கொள்ளும் முயற்சியானது புலிகளை ஆதரித்த இந்த அனைத்து அமைப்புக்களுக்குள்ளும் நிலவும் நெருக்கடிக்கு மற்றொரு அடையாளமாகும். ஏதாவதொரு வடிவத்தில் அவர்கள் தமிழ் பிரிவினைவாதத்தை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்துவது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஜனநாயக உரிமைகளுக்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பதை தடுப்பதற்கே சேவை செய்கிறது.

இப்போது வட மாகாண சபையை ஆட்சி செய்யும் தமிழ் கூட்டமைப்பு, தமிழ் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் தொழில் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அதே சமயம், கொழும்பு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள தமிழ் கூட்டமைப்பு, விலைபோகும் தமிழ் முதலாளித்துவத்தின் நன்மைக்காக வடக்கு மற்றும் கிழக்கில் கூடுதலான அதிகாரப் "பரவலாக்கலுக்காக" அமெரிக்க, இந்தியா மற்றும் ஏனைய சக்திகளுடன் சதியில் ஈடுபட்டுள்ளது.

பு.ஜ.மா.லெ.க., தமிழ்த் கூட்டமைப்பு மீதான எதிர்ப்பை "முற்போக்கு தமிழ் தேசியவாதம்" என்ற முட்டுச் சந்துக்குள் திருப்பிவிட முயற்சிக்கின்றது. அதன் 2015 காங்கிரஸ் ஆவணத்தில், இந்த மாவோவாதக் கட்சி, "பிற்போக்கு தமிழ் தேசியவாத தலைமைத்துவத்தை" உயர் சாதி மேலாதிக்கத்தையும் ஏகாதிபத்திய விசுவாசத்தையும் கடைபிடிக்கின்ற ஏனைய இனத்தவர்களுடனான ஐக்கியத்தை எதிர்க்கின்ற "மேலாதிக்க சித்தாந்தம் கொண்ட ஒரு உயர் தட்டு" என்றும் குற்றம் சாட்டுகிறது.

இதற்கு எதிராக, "முற்போக்கு தமிழ் தேசியவாதமானது" “அனைத்து உழைக்கும் மக்களதும் ஜனநாயகத்தை காக்கவும், பொருளாதார ரீதியில் சுயமாக தங்கியிருப்பதற்கும் மற்றும் உற்பத்தி தொழில் துறையை அபிவிருத்தி செய்வதையும் வலியுறுத்துவதற்கு முன்னுரிமை” கொடுக்க வேண்டும், "இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மேலாதிக்க சக்திகளுக்கு தலைகுணிய” மறுப்பதோடு ஏனைய சமூகத்தோடு ஐக்கியப்பட வேண்டும் என்று பு.ஜ.மா.லெ.க. பிரகடனம் செய்கின்றது.

ஸ்ராலினிச / மாவோவாத இரண்டு கட்ட கோட்பாட்டின் வழியில், பு.ஜ.மா.லெ.க. வேலைத்திட்டம் சோசலிசத்துக்கானது அல்ல, மாறாக, "முற்போக்கு" முதலாளித்துவம் என்று அழைக்கப்படுவதற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதை அர்த்தப்படுத்தும் ஒரு "புதிய ஜனநாயகப் புரட்சி" ஆகும். யதார்த்தத்தில், இந்த மாவோவாதிகள் ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை கண்காணிக்கும் வகிபாகத்தை ஆற்றுவர்.

பு.ஜ.மா.லெ.க.யின் முன்னோக்கின் இனவாத பண்பு, இன மற்றும் மத அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை மேலும் பிளவுபடுத்தும் அதன் பிரேரணைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மாநாட்டு ஆவணம், “ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகத்திற்கு சுயாட்சி” வழங்க அழைப்பு விடுக்கின்றது. “மலையக தமிழர்கள் ஒரு தேசிய இனமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்," என அது கூறுகின்றது.

சுயாட்சி அலகுகளுக்கான பிரேரணைக்கும், தொழிலாளர்களின் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாறாக, அது இனவாத பதட்டங்களைத் தூண்டுவதற்கான முன்மொழிவாகும். இது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் தமது பங்கை பெரிதாக்கிக்கொள்ளும் வழிமுறையாக, சுயாட்சியைக் கோருவதற்கு பல்வேறு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை மேலாதிக்கம் செய்யும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தட்டுக்களுக்கு விடுக்கும் ஒரு அழைப்பாகும்.

இலங்கை முதலாளித்துவத்தின் முற்போக்கு என்று அழைக்கப்படும் பிரிவுடன் கூட்டுச் சேரும் போர்வையின் கீழ், பு.ஜ.மா.லெ.க. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய பிரதான கட்சிகளுடன் சூழ்ச்சியில் ஈடுபடும் ஒரு நீண்ட, இழிந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

1964ல் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவில் ஸ்தாபிக்கப்பட்ட (பெய்ஜிங் சார்பு) மாவோவாத சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்தே பு.ஜ.மா.லெ.க. 1978ல் உருவாக்கப்பட்டது.

பு.ஜ.மா.லெ.க., ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீ.ல.சு.க. நோக்கி ஈர்ப்புகொண்டிருந்தது. 1988ல் அது புலிகளை நிராயுதபாணிகளாக்க வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்திய இராணுவத்தின் "அமைதிப்படையை அனுப்புவதற்கு" புது தில்லி மற்றும் கொழும்பு அரசாங்கங்களுக்கு இடையில் முந்தைய ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக, ஸ்ரீ.ல.சு.க. முன்னெடுத்த பேரினவாத இந்திய-விரோத பிரச்சாரத்தை ஆதரித்தது. மறுபக்கம் தமது பாசிச பிரச்சாரத்தை எதிர்த்தவர்களை கொன்று தள்ளிய சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உடன் ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி வைத்திருந்தது.

1994ல், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதன் பேரில், பு.ஜ.மா.லெ.க. வெளிப்படையாகவே ஸ்ரீ.ல.சு.க ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆதரவாக போலி இடது நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) உடன் சேர்த்து பிரச்சாரம் செய்தது. சமாதானத்துக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த பின்னர், குமாரதுங்க யுத்தத்தை உக்கிரமாக்கியதோடு தனது முன்னோடியின் சந்தை சார்பு கொள்கைகளையும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களையும் விரிவாக்கினார்.

அதன் ஏகாதிபத்திய-விரோத தோரணைகள் ஒருபுறம் இருக்க, பு.ஜ.மா.லெ.க. இடைவிடாமல் பெரும் வல்லரசுகளின் சூழ்ச்சிகளுக்கு பின்னால் அணிசேர்ந்தது. 2002ல், ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் போரை முடிவுக்கு கொண்டுவந்து, கொழும்பு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு இளைய பங்காளியாக புலிகளையும் பட்டியலில் சேர்க்கும் ஒரு வழிமுறையாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானின் ஆதரவுடன், யு.என்.பி. அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போலி சமாதான முன்னெடுப்புகளை பு.ஜ.மா.லெ.க. ஆதரித்தது.

உள்நாட்டு யுத்தத்தின் போது, பு.ஜ.மா.லெ.க. 2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வி வரை அதை அரசியல் ரீதியில் ஆதரித்தது. கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்த புலிகளின் "ஒடுக்குமுறை வழிமுறைகளை" இது எப்பொழுதாவது விமர்சித்திருந்தாலும், அதுவும் புலிகளின் மீது தமிழர்கள் மத்தியில் குவிந்துவந்த எதிர்ப்பில் இருந்து தப்புவதற்கான ஒரு வடிகாலாகவே உதவியுள்ளது.

புலிகளின் தோல்வியை அடுத்து, பு.ஜ.மா.லெ.க. இம்முறை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வலதுசாரி ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிப்பதன் பெயரில் யு.என்.பி. பின்னால் அணிதிரண்டது.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், பு.ஜ.மா.லெ.க. அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்றத்தில் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேனவை மறைமுகமாக ஆதரித்தது. இராஜபக்ஷவுக்கும் சிறிசேனவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று அறிவித்த அதே நேரம், இராஜபக்ஷவின் "பாசிச ஆட்சி" மீது தனது கோபத்தைக் குவித்த செந்திவேல், "இன்றைய சூழ்நிலையில் தேர்தலை பகிஷ்கரிப்பதோ புறக்கணிப்பதோ அரசியல் ரீதியில் புத்திசாலித்தனமானதாக இருக்காது” என்று எச்சரித்தார்.

மறைமுகமாக சிறிசேனவை ஆதரிப்பதன் மூலம், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத வழிமுறைகளின் காரணமாக அன்றி, அவர் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக அணிசேர்ந்திருந்ததன் காரணமாக, அவரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்றத்துக்கு, பு.ஜ.மா.லெ.க. ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னர், தேர்தல் பெறுபேறுகள் “வெறும் பிரமுகர்களின் மாற்றமே” என அறிவிப்பதன் மூலம், அவற்றின் முக்கியத்துவத்தை அது மூடி மறைத்தது. சிறிசேன தேர்வு செய்யப்படுவதற்கு அது ஆதரவளித்ததன் மூலம், பிராந்தியம் முழுவதும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா ஏற்பாடு செய்யும் போர் தயாரிப்புகளுக்குள் இலங்கையும் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்துள்ளது.

பு.ஜ.மா.லெ.க. வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கை, "நாடும் மக்களும் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினைகளை நிவர்த்தி செய்தற்காக," "இடது, முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒரு பரந்த ஐக்கிய முன்னணிக்கு" அழைப்பு விடுவதன் மூலம், அது இப்போது இன்னொரு சந்தர்ப்பவாத கூட்டை அமைக்க முயன்று வருகின்றது. இது, யு.என்.பி. தலைமையிலான அரசாங்கத்தின் மீது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் குவிந்துவரும் எதிர்ப்பைத் தடம்புறளச் செய்து, அதை பாராளுமன்ற சூழ்ச்சித்திட்ட முட்டுச் சந்துக்குள் திசைதிருப்பிவிடுவதற்காக நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புகளை உள்ளடக்கிய, கிரேக்கத்தில் சிரிசா பாணியிலான ஒரு அமைப்பை உருவாவதற்கான அழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அல்ல.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு தீர்வு கிடையாது. இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீகளுமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள தீர்க்கமான விடயம், எல்லா விதமான இனவாத அரசியலில் இருந்து அடிப்படையில் பிரிந்து, வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோக்கின் பக்கம் திரும்ப வேண்டியதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) தமிழர்-விரோத பாரபட்சங்களுக்கும் ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய போருக்கும் எதிராக சளைக்காத போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்றைக் கொண்டுள்ளன. நாம் தேசிய ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களின் தோற்றுவாயான முதலாளித்துவ முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்காக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு இடைவிடாமல் போராடியுள்ளோம். உலகம் பூராவும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்திற்கு எமது வேலைத் திட்டம் அழைப்பு விடுக்கின்றது.

நாம் எமது முன்னோக்கை படிக்குமாறும் எதிர்வரும் போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Read more...

Tuesday, March 15, 2016

சிறுமி சேயா வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை

கொடதெனியாவ பகுதியில் சிறுமி சேயா சவ்தமி பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சமன் ஜெயலத் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, குற்றம் நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் கைதான சமன் ஜெயலத் (துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர்) என்பவர் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

Saturday, March 12, 2016

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு- க.கிஷாந்தன்

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளதால் தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன் காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சூழ்நிலையில் திடீரென 7.20 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம்மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.

அத்தோடு இலகுவான முறையில் உணவுகளை தயாரித்துக்கொள்வதற்கு கோதுமை மா மிக முக்கியமான பங்கினை வகிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கும் இதேவேளை கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுப்பதோடு தற்போது கூட்டு ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடங்கள் ஆகின்ற போதிலும் இன்னும் தமக்கான சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்காமல் இவ்வாறான அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிப்பது நியாயமற்ற செயல்பாடு என இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலகட்டத்தில் அரிசி மானிய விலையில் கொடுத்த போதிலும் குறித்த திட்டம் மக்களை சென்றடையவில்லை. ஓர் இரு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது.

இத்திட்டத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது அதிகரித்துள்ள குடும்ப பொருளாதார பிரச்சினையில் மற்றுமொரு பிரச்சினையாக மாவின் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.

எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளதாரத்தை நலன் கருதி வரட்சிக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Read more...

Thursday, March 3, 2016

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க ,கருணா அம்மான் மற்றும் கே.பி ஆகியோரை கைது செய்வதாக கூறி மார் தட்டிக்கொண்ட அரசாங்கம் இன்று மௌனித்து இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேர்தே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது . அதற்கு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார். நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைத்து பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். இதனை மனதில் வைத்து கொண்டு செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை பழிவாங்க அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டது. இதன் பின்னணியிலேயே பிள்ளையான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கருணா அம்மான் தேரர்களை கொலை செய்ததாக கூறினாலும் அதற்கு போதிய சாட்சிகள் இல்லை. ஆனால் அவர் யுத்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கடந்த அரசாங்கத்துடன் நாட்டின்அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். இந்த நிலையில் அரசாங்கத்துடன் கடந்த தேர்தலில் பங்காளிகளாக இணைந்து கொண்ட சகோதரர்கள் கே.பியை மற்றும் கருணாவை கைது செய்வதாக கூறிவந்தனர். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது. அனைத்திலும் அரசியல் நோக்கங்கள் என அவர் குறிப்பிட்டார்.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com