Wednesday, February 3, 2016

மைத்திரியின் முகாமில் உள்ள புரூட்டஸ் யார்? - கஜானி வீரக்கோன்

வரப்போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்களில் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை (எஸ்.எல்.எப்.பி) எவ்வாறு வெற்றியை நோக்கி வழி நடத்திச் செல்வது என்பது தனக்குத் தெரியும் என அவர் வலியுறுத்தியிருப்பதினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தான் அனுபவித்து வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் எனத் தோன்றுகிறது, அதனால் மற்றவர்கள் அவரது முதுகில் குத்த முயற்சி செய்யமால் அவர் அவரது வேலையை செய்ய விட்டுவிட வேண்டும்.

எஸ்.எல்.எப்.பி அங்கத்தவர்கள் மற்றும் அரசாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி சிறிசேன கடந்த ஒரு வாரத்துக்கு இடையில் அடுத்தடுத்து நடத்திய சந்திப்புகளில் அவர் ஒருமுறை மாத்திரமல்ல பல சந்தர்ப்பங்களில் உறுதியான ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறார் எனத் தெரிகிறது. கட்சியில் தற்போது இடம்பெற்று வரும் விரிசல்களைப் பற்றி அவர் பெரிதாகக் குரல்கொடுக்க வில்லை மற்றும் குறைந்தது அரசியல் அரங்கில் முன்னேறி வரும் விடயங்கள் தொடர்பான தனது எரிச்சலை அடக்கிக் கொள்ளப் போதுமான அளவுக்கு அவர் தன்னைப் பதப்படுத்தி உள்ளார், என்பதை நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள எஸ்.எல்.எப்.பி அமைச்சர்களிடம் தன்னை கட்சியை கொண்டு நடத்த விடுவது மற்றவர்களுக்கு நல்லது எனத் தெரிவித்திருப்பதன் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார், இது அடையாளப் படுத்துவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவரது பகுதியினரால் வெளிப்படுத்தும் அழுத்தங்களுக்கு அவர் அடங்கப் போவதில்லை என்பதையே.

ஜனாதிபதி சிறிசேன கடந்த செவ்வாயன்று (26.01.2016) காலை சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஒரு உடற்பயிற்சித் திட்டத்தில் கலந்துகொண்டபின், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேஜ் வீதியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியிருந்தார்.

எதிர்ப்பு பொறிமுறை தேவை

தற்போதைய அரசியல் விவகாரங்களைப்பற்றிய ஆரம்ப பேச்சுக்களின் பின்னர், கூட்டத்தின் கவனம் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதைப் பற்றிய கட்சியின் திட்டங்களைப் பற்றித் திரும்பியது. கூட்டு எதிர்க்கட்சி, உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை ஊடகங்களுக்கு முன்பாக வந்து முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கோரிக்கை விடும்படி தூண்டி வருகிறது என எஸ்.எல்.எப்.பி அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தப் பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கும் மற்றும் கட்சியின் செயற்பாட்டை அடிமட்டத்தினரிடம் கொண்டு செல்வதற்கும் ஒரு பொறிமுறை அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.

ஜனாதிபதியும் கூட கூட்டு எதிர்க்கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஒரு நுட்பமான பொறிமுறை இருக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டதுடன், இது தொடர்பான சந்திப்புகளை தேர்தல் அமைப்பாளர்களுடன் ஏற்பாடு செய்வதற்கான பணியை எஸ்.எல்.எப்.பி யின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்காவிடம் ஒப்படைத்தார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே துமிந்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் கலந்துரையாடல்களையும் மற்றும் கருத்தரங்குகளையும் நடத்துவதற்காக அமைச்சர்களிடம் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி சிறிசேன அமைச்சர்களிடம் முறையே அவர்களது தொகுதியில் அவர்கள் எதிர்கொள்ளும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் கூறும்படி கேட்டுக் கொண்டபோது, அமைச்சர் பிரியங்கர ஜயரட்னதான் முதலில் பேச்சைத் தொடங்கினார்.

ஆனமடுவ அமைப்பாளராக தான் இருந்த போதிலும் கூட, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ தனக்கு கூடத் தெரியாமல் ஒரு கூட்டத்திற்கு வந்திருந்ததாக அவர் சொன்னார். ஜயரட்ன மேலும் அந்தக் கூட்டம் அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவின் செயலாளரால் கூட்டப்பட்டது எனவும் வெளிப்படுத்தினார். ஜனாதிபதி இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சினைக்குரிய செயலாளரை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார், ஆனால் அமைச்சர் தனது செயலாளரை பாதுகாக்கும் விதமாக முன்வந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக அவருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார், ஜனாதிபதி சிறிசேனவும்கூட இதற்குச் சம்மதித்தார்.

மனக்குறைகளை தெரிவிப்பது அத்துடன் முடிவடைந்து விடவில்லை, அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே கூறுகையில், ஒரு சிறிய குழுவான உள்ளுராட்சி மன்ற அங்கத்தவர்கள் மட்டுமே ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்புகளை நடத்திய போதிலும்கூட ஊடகங்கள் அதை அளவுக்கு மீறிய விகிதத்தில் ஊதிப் பெருப்பித்து பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரித்துள்ளதாக ஒரு கருத்தைப் பரப்பியுள்ளன என்றார். அதில் இணைந்து கொண்ட சந்திம வீரக்கொடி, ஒரு சிறிய குழுவினரே கட்சிக்கு எதிராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள் மற்றும் அரசியல் தலைமையும் மற்றும் தேசிய மட்டத்திலான தலைவர்களும் இந்த தொகுதிகளுக்கு போய் மக்களுடன் நெருக்கமாக வேலை செய்ய ஆரம்பித்தால் இந்த விடயம் ஒரு முடிவுக்கு வந்தவிடும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பெர்ணாண்டோபுள்ளே பேசுகையில்,” பிரச்சினை முழுவதுமே மகிந்த ராஜபக்ஸ, தான் 8 ஜனவரி 2015ல் தோற்கடிக்கப் பட்டுவிட்டோம் என்பதை ஏற்றுக் கொள்ளாததினால்தான் உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார். அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த விடயத்தை தான் எப்படிக் கையாண்டேன் என்பதைப் பற்றிக்கூறினார். ஒரு சிறிய குழு ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்பை நடத்தியபோது, தானும்கூட ஜனாதிபதி மைத்திரியின் பின்னால் ஒரு பெரிய கூட்டமே உள்ளது என்பதைக் காண்பிக்கும் வகையில் ஒரு ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு செய்து காட்டியதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது ஒருமுறை இப்படியான விடயங்களை செய்ய ஆரம்பித்தால் மற்றக் கட்சியினர் தங்கள் கால்களை பின்னுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று.

இதற்கிடையில் உத்தேச பிக்கு கத்திகாவத்த மசோதா பற்றிப் பேசுகையில், அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பொறி எனத் தான் கருதுவதால் எஸ்.எல்.எப்.பி இதிலிருந்து தூரமாக விலகவேண்டும் என்றும் இதன்படி எந்த ஒரு எஸ்.எல்.எப்.பி அமைச்சரும் இந்த விடயத்தில் அறிக்கைகளை அல்லது கருத்துக்களை வெளியிடக்கூடாது எனத் தெரிவித்தார்.

எனினும் அமைச்சர் கலாநிதி. அமுனுகம இந்த விடயத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருந்தார். இந்த விடயத்தில் ஊமையாக இருப்பதற்குப் பதிலாக உண்மையில் கட்சி, மகா சங்கத்தால் ஒப்பக்கொள்ளப்படாத எந்த ஒரு சட்டத்தையும் எஸ்.எல்.எப்.பி பின்துணைக்காது என்று ஒரு அறிக்கையை விடவேண்டும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி சிறிசேனவும் அமுனுகமவின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அப்படிச் செய்வதற்கும் சம்மதித்தார்.

எஸ்.எல்.எப்.பியின் பாதீட்டு குழு

எஸ்.எல்.எப்.பி அமைச்சர்கள் மேலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தது, வரவு செலவு திட்டத்துக்கு தங்கள் கட்சி கொண்டுவந்த மாற்றுப் பிரேரணைகள் மற்றும் திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை அல்லது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் பக்கத்திலிருந்து அதை செயற்;படுத்துவதற்கான எந்த முன்னேற்றமும் காண்பிக்கப் படவில்லை என்பதை. அப்போது இந்த விடயத்தை பின்தொடருவதற்காக அமைச்சர்கள் எஸ்.பி திசாநாயக்கா, கலாநிதி. சரத் அமுனுகம, டிலான் பெரேரா மற்றும் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே ஆகியோரைக் கொண்ட ஒரு குழு நியமனம் செய்யப்பட்டது. எனினும் பின் ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் மற்றும் ஜனாதிபதி சிறிசேனாவையும் ஒரே மன்றில் வைத்து சந்தித்தபோது அவர்கள் இந்த விடயத்தை முன்வைத்தார்கள். பிரதமர் விக்கிரமசிங்கா தான் வரவு செலவு திட்ட திருத்தங்கள் அனைத்தையும்; மார்ச் மாதம் ஒன்றாக சபையில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வாக்குறுதி வழங்கினார், இதன்படி எஸ்.எல்.எப்.பி யினரது திருத்தங்களும்கூட அதில் ஒருங்கிணைக்கப்படும்.

பலசாலியான மைத்திரி

ஜனாதிபதி சிறிசேன எஸ்.எல்.எப்.பி அமைச்சர்களுடன் நடத்திய இந்தக் கூட்டத்தின்போதுதான் அவர் முதல்முறையாக கட்சியின் தலைமையை பற்றி வாய்திறந்துள்ளார். “இந்த அரசாங்கத்தை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. மறுபக்கத்தில் கட்சி என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதால் கட்சி விடயங்களைக் கவனிப்பதற்கான சுதந்திரத்தையும் அவர்கள் எனக்குத் தரவேண்டும். இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள்தான், நான் முன்னின்று நடத்தும் முதலாவது தேர்தல் மற்றும் தற்சமயம் கட்சியில் உள்ள அனைவருக்கும் நான் நியமனங்களை நிச்சயம் வழங்குவேன். இந்தக் கட்சியை எப்படி வெற்றியை நோக்கி இயக்கிச் செல்வது என்று எனக்குத் தெரியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று பல்வேறு அரசியற் கட்சிகளை ஆரம்பித்தவர்களுக்கு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். சந்திரிகா குமாரதுங்க உட்பட அனைவருமே கட்சிக்கு திரும்பியுள்ளார்கள். எனவே எஸ்.எல்.எப்.பி யின் வரலாறு தெரிந்தவர்கள் கட்சியைப் பிளவு படுத்த துணியமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் சொன்னார்.

இந்தக் கூட்டம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதி சிறிசேன, எஸ்.எல்.எப்.பியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலுள்ள மகாவலி மையத்துக்கு காலை 10 மணியளவில் சென்றார். எஸ்.எல்.எப்.பியின் போஷகர் மகிந்த ராஜபக்ஸ அங்கு சமூகமளிக்காத போதிலும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் மகிந்தவின் சகோதரர் சாமல் ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கு பல உறுப்பினர்களும் அங்கு சமூகமளித்திருந்தார்கள். ஜனாதிபதி தனது பேச்சின்போது “இந்தக் கட்சி உங்களால் என்னிடம் தரப்பட்டது. மற்றும் அது எனக்கு எதிராக எந்த வைராக்கியமும் பாராட்;டாது நல்ல நோக்கத்துடனேயே ஒப்படைக்கப் பட்டதாக நான் நம்புகிறேன். கடந்த வருடம், தங்களை கடந்த ஒரு தசாப்தமாக கட்சியில் இருந்து தூரமாக்கி வைத்திருந்த சிறுபான்மை சக்திகளை திரும்பவும் கட்சிக்குள் கொண்டுவர என்னால் முடிந்தது”. எனத் தெரிவித்தார்.

அவர் பேசும்போது அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரா எழுந்து நின்று மைத்திரி அவரது பேச்சில் மூன்று விடயங்களுக்கு பதிலளிப்பார் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அவையாவன புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் இராணுவப் படைகளைப் பற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணை, மற்றும் மூன்றாவதாக பிரேரிக்கப் படவுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என எழுந்திருக்கும் கவலைகள்.

சரத் வீரசேகராவின் மூன்று கேள்விகளுக்கும் மைத்திரியினால் உடனடியாக விரிவான பதில் வழங்கப்பட்டது. “ பல்வேறு தரப்பினரும் பல்வேறு விடயங்களை, அவை நடைமுறைக்கு சாத்தியமானதா என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு நிமிடம் கூட ஒதுக்காமல் சொல்வார்கள். ஒரு விடயத்தை என்னால் உங்களுக்கு உறுதிப்படுத்த முடியும். நான் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் காலம் வரை, இந்த நாட்டின் ஒற்றை ஆட்சி முறைக்கோ அல்லது வேறு எதற்கும் தீங்கு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டேன். மேலும் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பை கட்டாயம் கொண்டுவர வேண்டியுள்ளது மற்றும் அது அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை வழங்க வேண்டும். ஒரு சிலர் புதிய அரசியலமைப்பு தீமையான ஒன்று என பிரதானப் படுத்தினாலும் அதைக்கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவ படைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளபோது, அதற்கான சிறந்த பரிகாரம் அதைப்பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதே என்றார். “இந்தக் குற்றச்சாட்டுகள் முதலில் எழுந்தபோதே முன்னைய அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் விஷயம் இந்தளவுக்கு மோசமாகி இருந்திருக்காது. விஷயங்களை மறைப்பதற்கு முயற்சிப்பதால் நல்லது எதுவும் நடக்கப் போவதில்லை, மாறாக அமெரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள், எங்கள் படைகளுக்கு வழங்கும் இராணுவ பயிற்சிகளை நிறுத்திவிடும். நாங்களும் அதே பாணியில் தொடர்ந்தால் ஸ்ரீலங்கா இராணுவம் ஒரு சட்டபூர்வமான அமைப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐநா சொல்லிவிட்டால் என்ன நடக்கும்? அப்போது எங்கள் இராணுவப் படைகளுக்கு என்ன நடக்கும், அதன்பின் நமது நாட்டுக்கு என்ன நடக்கும்? ஆகவே குற்றம்; இழைத்துள்ளார்கள் என நிரூபிக்கப் பட்டவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்தது யுத்தக் குற்றச்சாட்டு பற்றிய விசாரணைகள் முற்றிலும் உள்ளுர் பொறிமுறைப்படியே நடைபெறும் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாது என்று. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் அதில் இணைந்து கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி சிலர் மக்களிடத்தில் தேவையற்ற பயத்தை பரப்பி வருகிறார்கள் எனக் கருத்து தெரிவித்தார். “இது ஒரு குழந்தை பிறக்கும் முன்பே அதன் வடிவத்தை பற்றி விளக்குவதைப் போலுள்ளது என அவர் சொன்னார். எனினும் இந்த உவமைக்கு பல நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் பதிலளித்தார்கள், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் குழந்தையின் வடிவத்தை மட்டுமல்ல அது ஆணா அல்லது பெண்ணா என்பதைக்கூம தாயின் கருவில் உள்ளபோதே ஒருவரால் தெரிந்து கொள்ள முடியும் என அவர்கள் அவருக்கு நினைவூட்டினார்கள்.

புரூட்டஸ் அடையாளம் காணப்பட்டார்

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்காவின் வீட்டில் எஸ்.எல்.எப்.பி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் அவர் நடத்திய ஒரு கூட்டத்தின் ஒலிப்பதிவை கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழங்கினார் என நாங்கள் முன்னர் அறிவித்திருந்தோம். எனினும் அந்த பதிவு செய்யப்பட்ட இறுவெட்டில் எஸ்.பி.திசாநாயக்காவின் குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தில் நடைபெற்றவை மட்டுமன்றி, ஜனாதிபதி சிறிசேன எஸ்.எல்.எப்.பி குழுவினருடன் நடத்திய கூட்டத்தைப் பற்றிய பதிவுகளும் இடம்பெற்றிருந்தன. அதைப்பற்றிய சமீபத்தைய முன்னேற்றம் என்னவென்றால் பசில் அந்த இறுவெட்டை மகிந்தவிடம் கையளித்ததுடன் அதன் உள்ளடக்கங்களைப் பற்றியும் அவரிடம் விளக்கியுள்ளார். தனது கலந்தரையாடல்கள் வெளியில் கசிந்து விட்டது என்பதையும் ஜனாதிபதி சிறிசேனவும்கூட அறிந்து கொண்டார். அவர் அமைதியாக இந்த விடயம் பற்றிய ஒரு விசாரணையையும் முடுக்கிவிட்டார் மற்றும் தனது முகாமில் உள்ள புரூட்டஸை அடையாளம் காண்பதற்கு வேண்டிய போதிய ஆதாரங்கள் இப்போது அவரிடம் உள்ளதாகத் தெரிகிறது.

கம்பகா மாவட்டத்தை சேர்ந்த இந்த அமைச்சர்தான் புரூட்டஸ் ஆக மாறியுள்ளார், மைத்திரியின் நல்லவர்களுக்கான பட்டியலில் மட்டும் இவர் இடம் பிடித்துவிடவில்லை, ஆனால் இவர் தன்னை ஒரு விசுவாசியாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸவிடத்திலும் அதேபோல அவரது முன்னோடியான சந்திரிகா குமாரதுங்கவிடத்திலும் காட்டியுள்ளார்.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு இறுதி எச்சரிக்கை

கடந்தவார அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிடத் தக்கது என்னவென்றால், அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும் ஜனாதிபதி சிறிசேனவை பிரதமர் விக்கிரமசிங்கா தலைமையில் ஐதேக அமைச்சர்கள் பிரத்தியேகமாகச் சந்தித்ததுதான். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பு ஜனாதிபதி தெரிவித்தது இங்கு கலந்துரையாடப்படுவது யாவும் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அடங்கிவிடவேண்டும் மற்றும் இங்கு சமூகமளிக்காதவர்களின் காதுகளுக்குள் செல்லக் கூடாது என்று.

பிரதமர் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தது, மீண்டும் ஒரு முறை இன வன்முறையை பரப்பி நல்லிணக்கத்தை குழப்புவதற்கான ஒரு இயக்கம் ஆரம்பமாகியுள்ளது மற்றும் ஒரு பத்திரிகை நிறுவனம் மற்றும் ஒரு தொலைக்காட்சி சேவை என்பன இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்று. அவர் மேலும் தெரிவித்தது இதை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று, ஜனாதிபதி சிறிசேனவும் அதற்குச் சம்மதித்தார். முரண்பாடாக இந்தக் கூட்டம் முடிந்து 24 மணித்தியாலம் நிறைவடைவதற்கு முன்னரே பிரதமர் விக்கிரமசிங்கா, வெறுப்பை பரப்பி இன நல்லிணக்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டுவதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் பெயர்களைக் கூட வெளியிட்டு அந்த ஊடகத்தை பாரளுமன்றத்தில் வெளியிடும் பணியினை மேற்கொண்டார்.

ஜனாதிபதி சிறிசேன நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பாக எழுந்துள்ள கவலைகளைப் பற்றி தெரிவித்தார். நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு தனது விசாரணைகளை மெதுவாக நடத்துவது பற்றி எஸ்.எல்.எப்.பி நிறைவேற்றுக் குழுவிலும் விவாதிக்கப்பட்டது. நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு அவர்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதியின் எல்லைகளுக்கு அப்பால் சென்று விசாரணைகளை மேற்கொள்வதால் அது பலவிதமான பிரச்சினைகளில் சிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது என அவர் சொன்னார். குறைந்தது முக்கியமான விடயங்களிலாவது விசாரணைகளை நிறைவு செய்யும்படி அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவர் மேலும் ஐதேக அமைச்சர்களிடம் எஸ்.எல்.எப்.பி அங்கத்தவர்களுடன் இணைந்து அந்தந்த மாவட்டங்களுக்கான அபிவிருத்தி திட்ட வேலைகளை செயல்படுத்த ஒற்றமையாக வேலை செய்யுமாறு ஆலோசனை தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் மற்றும்; இணைத் தலைவர் ஆகியோர் ஒருமித்து பணியாற்ற வேண்டும் என அவர் சொன்னார்.

நாமல் எச்சரிக்கை செய்யப்பட்டார்.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு காள்ட்டன் விளையாட்டு வலையமைப்பின் (சி.எஸ்.என்) உயர் மட்டத்தினரை நேற்று விசாரணை செய்தபோது நிகழ்வுகளில் ஆச்சரியமான திருப்பம் நடந்தேறியது. அதன்படி அந்த தொலைக்காட்சி சேவையின் தவைரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளருமான றோகான் வெலிவிட்ட, மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி நிசாந்த ரணதுங்க ஆகியோர் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அதேவேளை அதன் பணிப்பாளர் யோசித்த ராஜபக்ஸ விசாரணைக்காக கடற்படை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு கிட்டத்தட்ட காலை 9.30 மணியளவில் யோசித்த ராஜபக்ஸாவை விசாரணை செய்ய ஆரம்பித்து தொடர்ந்து ஆறு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் விசாரணை செய்தது. கடற்படை வட்டாரங்களின் தகவல்களின்படி அவரது பொய்யான கல்வித் தகமைகள், வெளிநாட்டில் அவரது இராணுவப் பயிற்சிக்கான செலவுகளை மேற்கொண்ட வட்டாரங்கள் மற்றும் மேலும் பல நிதி விடயங்கள் சம்பந்தமாக யோசித்தவிடம் விசாரிக்கப் பட்டதாம். அவர் கடற்படைத் தலைமையகத்தில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவரது தாயாரும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஸ மற்றும் அவரது சகோதரர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் உட்பட அவரது குடும்ப அங்கத்தினர்கள் அவர் அன்று மாலை ஆஜர் படுத்தப்பட்ட கடுவெல நீதிமன்றின் முன்பாக காத்துக் கிடந்தார்கள்.

கடந்த வாரம் ஜனாதிபதி சிறிசேனாவை இரகசியமாகச் சந்தித்த நாமல் ராஜபக்ஸ, தன்னை அநேக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அதேபோல தனது தந்தையும் தானோ அல்லது தனது சகோதரனோ விசாரணைக்காக விரைவில் அழைக்கப்படுவோம் என எச்சரிக்கை செய்திருப்பதாக தெரிவித்தாராம். அவர் மேலும் தெரிவித்தது தனது தந்தை தன்னிடம் விசேடமாகத் தெரிவித்தது தான்(நாமல்) மற்றும் தனது சகோதரர்(யோசித்த) ஆகியோர் கம்பிகளின் பின்னால் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட அதை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. “ஒரு அரசியல் குடும்பம் அதுவும் முன்னாள் முதல் குடும்ப அங்கத்தவாகளாக இருந்தோம் என்பதினால் நாங்கள் அப்படியான ஒரு அனுபவத்தையும் அதேபோல பெறவேண்டியிருக்கும் என எனது தந்தை என்னிடம் தெரிவித்தார்” என்று அவர் சொன்னார்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

நான் டிஐஜி என்றால் இன்று விமல் வீரவன்ச உள்ளே இருப்பார். அனுர குமார திஸாநாயக்க

இந்நாட்டில் நான் ஓர் டிஐஜி யாக இருந்தால் இன்று விமல் வீரவன்ச உள்ளே இருப்பார் என்று தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர், மக்களில் பணத்தில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பத்து லட்சம் செலவில் 6 அதிசொகுசு வீடுகள் வீடுகள் அதிகார சபையினால் அமைக்கப்பட்டது. இவ்வீடுகளில் ஒரு வீடு முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரருக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 5 வீடுகளும் விமல் வீரவன்சவின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வீடுகளுக்காக அவர்களிடம் இருந்து தலா எட்டு லட்சம் பணமே அறவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் பணத்தை ஏப்பம் விட்டு விமல் வீரவன்ச இன்று வெளியே இருப்பது நல்லாட்சி என்று கூறுவோருக்கு அவமானமானது என்று தெரிவித்தார்.

மேலும் கடவுச் சீட்டு மோசடியில் விமான நிலையத்தில் விமல் கைது செய்யப்பட்டபோது மகிந்த ரணிலுடனும் மைத்திரியுடனும் பேசி விமலை விடுவித்து கொண்டதாகவும், இவ்விடயத்திற்கு துணை போன மைத்திரி மற்றும் ரணில் மீது அவரது குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

மேலும் விமல் தனது கட்சியை சேர்ந்த 49 பேருக்கு தனது அமைச்சிலும் வீடமைப்பு அதிகார சபையிலும் வேலை செய்வதாக சம்பளம் வழங்கி வந்தாகவும் ஆனால் அவர்கள் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தாகவும் தெரிவித்த அனுர குமார இவ்வாறு மக்களில் பணத்தை வீண்விரயம் செய்த விமலை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Read more...

பெண்டகன் லிபியாவில் மற்றொரு போருக்குத் தயாரிப்பு செய்கிறது. Bill Van Auken

ஐந்தாண்டுகளுக்கு சற்று குறைந்த காலத்திற்கு முன்பு லிபியாவிற்கு எதிராக எதிர்வருங்காலத்தில் நடக்கக்கூடிய படுகொலைகளை தடுப்பதற்காக என்ற "மனிதாபிமான" சாக்குபோக்கில் ஒரு போர் தொடங்கியதற்குப் பின்னர், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் எண்ணெய் வளம் நிறைந்த அந்த வட ஆபிரிக்க நாட்டுக்கு எதிராக "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற இரத்தக்கறைப்படிந்த பதாகையின் கீழ் ஒரு புதிய இராணுவ தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றன.

லிபியா சம்பந்தமாக வாஷிங்டன் "இராணுவ விருப்பதேர்வுகளை கருத்தில்கொள்வதாக" பெண்டகனின் பத்திரிகைத்துறை செயலர் பீட்டர் கூக் உறுதிப்படுத்தினார், மேலும் அம்மண்ணில் "நாம் முன்னோக்கி செல்கையில் யார் அமெரிக்காவின் ஆதரவைப் பெற மதிப்புடையவர்கள் மற்றும் நமது பங்காளிகள் சிலரது ஆதரவைப் பெற மதிப்புடையவர்கள், அந்த களத்தில் இருப்பவர்கள் யார் என்பதை அறியும்" முயற்சியில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகள் செயல்பட்டு வருவதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

இந்த பெண்டகன் செய்தி தொடர்பாளரது கருத்துக்கள் அமெரிக்க இராணுவத்தின் மூத்த தளபதியின் முந்தைய கருத்துக்களையே எதிரொலிக்கிறது. லிபியாவில் "அரசியல் நிகழ்வுபோக்கிற்கு இணங்க ISIS க்கு [ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு] எதிராக தீர்க்கமான இராணுவ நடவடிக்கை எடுக்க நாம் பார்த்து வருகிறோம் என்று கூறுவது நேர்மையாக இருக்கும்" என்று தலைமை தளபதி (chairman of the Joint Chiefs of Staff) ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் ஜூனியர் கடந்த வெள்ளியன்று தெரிவித்திருந்தார். “இராணுவ படைகளைப் பிரயோகிக்க நமக்கு அதிகாரம் இருப்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்திவிட்டார்,” என்றார்.

சிறப்பு நடவடிக்கை துருப்புகளின் பிரசன்னத்தைப் பொறுத்த வரையில், அந்த விடயம் பெருநிறுவன ஊடகங்களால் பெரிதும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட, அது இரகசியமாக ஒன்றும் கிடையாது. லிபிய விமானப் படையின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் பதியப்பட்ட ஒரு புகைப்படம், பொதுமக்களை போன்ற உடையணிந்த சுமார் 20 அமெரிக்க அதிரடிப் படையினர் தானியங்கி ஆயுதங்களை வைத்து நின்றிருந்ததைக் காட்டியது. அந்த விமானப்படை தளத்திற்குப் பொறுப்பான லிபிய படைகள் "அவர்களின் தலையீட்டை மறுத்து, அவர்களை நிராயுதபாணியாக்கி, லிபிய மண்ணிலிருந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்றியதாக" அப்படத்தின் கீழ் குறிக்கப்பட்ட வாசகம் குறிப்பிட்டது.

பெண்டகன் அதிகாரிகள் அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அதேவேளையில், அதுமாதிரியான அமெரிக்க படைப்பிரிவுகள் "இப்போதிருந்து சில காலமாகவே" “லிபியாவிற்கு உள்ளும் புறமும்" இருந்து வருவதாக NBC News க்குத் தெரிவித்தனர்.

2011 இல் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட "மனித உரிமைகள்" என்ற சாக்குபோக்கும், இன்று பிரயோகிப்பட்டு வருகின்ற "பயங்கரவாதம்" என்ற சாக்குப்போக்கும் சம அளவில் மோசடியானவை ஆகும். பாரிய எரிசக்தி வளங்களின் மீது அமர்ந்திருக்கும் நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் மீது—லிபியாவின் விடயத்தில் ஒட்டுமொத்த ஆபிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரிய எண்ணெய் வளங்களை அது கொண்டிருக்கிறது என்ற நிலையில் அமெரிக்க அரை-காலனித்துவ மேலாதிக்கத்தைத் திணிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இராணுவ தலையீடுகளின் சூறையாடும் உள்நோக்கங்களை மூடிமறைப்பதற்காகவே அந்த சாக்குப்போக்குகள் இரண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் அது தடையின்றி அமெரிக்க இராணுவவாதத்தை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும், மேலும் 2011 இல் ஒபாமா தேசியளவில் வழங்கிய ஒரு தொலைக்காட்சி உரையில் போருக்கு அவரது போலி நியாயப்பாடுகளை வழங்கிய பின்னர், அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு ஒரு சட்டபூர்வ மூடிமறைப்பாக ஐ.நா. பாதுகாப்பு அவை தீர்மானம் ஒன்றைப் பெற்றார் என்பதும், அதேவேளையில் 2016 இல் ஒரு கடற்படை தளபதி அவர் எப்போது பொருத்தமாக காண்கிறாரோ அப்போது ஒரு புதிய போரைத் தொடங்குவதற்கு அவருக்கு அதிகாரம் இருப்பதாக சர்வசாதாரணமாக கூறுவதும், அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

2011 இல், லிபியாவின் நீண்டகால ஆட்சியாளர் மௌம்மர் கடாபி கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் "அமைதியான அரசியல் போராட்டக்காரர்களை" ஒட்டுமொத்தமாக படுகொலை செய்யும் விளிம்பில் இருந்ததாக, அந்த கதை கொண்டு செல்லப்பட்டது. மேற்கத்திய தலையீடு மட்டுமே உயிர்களைக் காப்பாற்றும் என்றும், அங்கே வீணடிப்பதற்கு நேரமில்லை என்றும் ஒபாமா மற்றும் அவரது நேட்டோ கூட்டாளிகள் வலியுறுத்தினர்.

இத்தகைய வலியுறுத்தல்களை போலி-இடதுகளின் ஒட்டுமொத்த கூட்டமும் ஊதிப்பெரிதாக்கி எதிரொலித்தன. அவற்றில் சில, பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்றவை, “லிபிய புரட்சியைப்" பாதுகாப்பது பிரச்சினைகள் அனைத்தினும் மேலானது என வலியுறுத்தி, ஏகாதிபத்திய சக்திகளின் வாதங்களை அலங்கரித்தன. NPA இன் பிரபல செய்தி தொடர்பாளரான கல்வியாளர் ஜில்பேர்ட் அஷ்கார் வார்த்தைகளில், “அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை ஏகாதிபத்திய-எதிர்ப்பு கோட்பாட்டின் பெயரில் எதிர்க்கக்கூடாது,” என்றார்.

அதேபோல ஓரளவிற்கு தகுதிவாய்ந்த விதத்தில் ஈராக் போருக்கான எதிர்ப்பிலிருந்து அவரது "இடது" நற்சான்றை பெற்றிருந்த மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல் அறிவிக்கையில், “முட்டாள்தனமான வழியில் ஏனைய சகல மதிப்புகளையும் 'ஏகாதிபத்திய-விரோத' துருப்புச்சீட்டாக ஆக்குவது வெளிப்படையாக அர்த்தமற்ற நிலைப்பாடுகளுக்கே இட்டுச் செல்கிறது" என்றார். “நேட்டோவிற்கு நான் அவசியப்பட்டால், அதனோடு நான் இருப்பேன்,” என்பதையும் அழுத்தத்திற்காக அவர் சேர்த்துக் கொண்டார்.

அதுமாதிரியான ஆதரவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், “R2P” (அதாவது, பாதுகாப்பிற்கான கடமைப்பாடு) என்ற நவகாலனித்துவ கோட்பாட்டை கொண்டு வந்து, பெங்காசி மீதான குண்டுவீச்சைத் தடுப்பதற்காக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை அங்கீகரிக்கும் ஐ.நா. இன் தீர்மானத்தை ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போருக்கு வரம்பில்லா அதிகாரம் வழங்கும் ஒன்றாக மாற்றிவிட்டன. அந்த ஆட்சி மாற்றத்திற்கான போர், பாரிய அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சுக்களையும், சுமார் 30,000 லிபியர்களின் உயிரிழப்பையும் மற்றும் அக்டோபர் 2011 இல் கடாபியின் மீது ஒரு கூட்டு கும்பல் சித்திரவதையையும் மற்றும் படுகொலையையும் கண்டிருந்தது.

இதெல்லாம் முடிந்ததற்கு பின்னர் தான், சர்வதேச நெருக்கடி குழு மற்றும் சர்வதேச மன்னிப்புசபை -ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்- போன்ற அரசுசாரா அமைப்புகள் மற்றும் மனிதஉரிமை குழுக்கள், "படுகொலையின்" அச்சுறுத்தலில் பெங்காசி இருந்தது என்ற வாதங்களுக்கு உள்ளவாறே எந்த அடித்தளமும் இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டன.

எவ்வாறிருந்தாலும் அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் அந்த லிபிய மக்கள் ஒரு நிஜமான மற்றும் நரகத்தனமான மனிதாபிமான பேரழிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ இரண்டு மில்லியன் லிபியர்கள், அதாவது போருக்கு முந்தைய மக்கள்தொகையில் சுமார் மூன்று பங்கினர், அண்டைநாடுகளான துனிசியா மற்றும் எகிப்துக்கு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். கடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னரில் இருந்து எதிர்விரோத போராளிகள் குழுக்களுக்கு இடையே நடந்துவரும் சண்டைகளால் இடம்பெயர்த்தப்பட்ட நூறாயிரக் கணக்கானவர்களோடு எஞ்சியிருப்பவர்களும் நாசகரமான நிலைமைகளை முகங்கொடுத்துள்ளனர்.

Human Rights Watch அமைப்பு, இது 2011 அமெரிக்க-நேட்டோ போரை ஆதரித்திருந்தது, இம்மாதம் அறிவிக்கையில், அந்நாட்டை ஆட்சி செய்யும் போராளிகள் குழுக்கள் "கண்மூடித்தனமாக மக்கள்வாழ் பகுதிகளில் குண்டுவீசியுள்ளனர், ஏதேச்சதிகாரமாக மக்களைப் பிடித்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர், கொள்ளையடித்துள்ளனர், தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர் மற்றும் தாக்குதல்களின் போது வேறு விதத்திலும் படைத்துறைசாரா சொத்துக்களை அழித்துள்ளனர், சில விடயங்களில் இது போர் குற்றங்களாக உள்ளன,” என்று குறிப்பிட்டது. இப்படைகள் "மக்களைத் தாக்கி, கடத்திச் சென்று மறைத்து வைத்து, பலவந்தமாக அவர்களின் வீடுகளிலிருந்து மக்களை இடம்பெயர்த்துகின்றன,” அதேவேளையில் "அந்நாட்டின் பெரும்பகுதிகளில் உள்நாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பு பொறிந்து போயுள்ளது, மனித உரிமைகள் நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது,” என்பதையும் அந்த அறிக்கை சேர்த்துக் கொண்டது. ஆயிரக் கணக்கான லிபியர்கள், அத்துடன் வெளிநாட்டவர்கள், குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்குகளோ இல்லாமல், பலர் 2011 இல் இருந்தே கூட, எப்போதும் சித்திரவதை செய்யப்படும் போராளிகள் குழுக்களது சிறைச்சாலை அமைப்புகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் 2011 மார்ச்சில் இருந்ததை விட இன்று வர்ணிக்க முடியாதளவிற்கு மோசமடைந்துள்ள நிலைமைகளின் கீழ், யாரும் "R2P” ஐ கொண்டு வரவில்லை. அதற்கு முரண்பட்டரீதியில், ISIS ஐ எதிர்த்து சண்டையிடுவதற்காக என்று இப்போது சாக்குப்போக்குத் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2011 இல் ஒரு நீடித்த முற்றுகையில் பெரிதும் நாசமாக்கப்பட்டுவிட்ட கடாபியின் முன்னாள் சொந்த ஊரான கடற்கரையை நகர் சிர்ட்டே மீது ISIS ஒரு பலமான பிடியை ஸ்தாபித்துள்ளது.

லிபியாவில் ISIS இன் வளர்ச்சியை 2011 அமெரிக்க-நேட்டோ தலையீட்டுடன் இணைக்க முயற்சித்துவரும் அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களுக்குள் இருப்பவர்கள், வழமைமானரீதியில் அவ்விடயத்தை அலட்சியத்தால் உண்டான தீய விளைபயனாக, அதாவது வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஒரு "தேசத்தைக் கட்டமைக்கும்" ஆக்கிரமிப்புடன் குண்டுவீச்சு நடவடிக்கையை தொடராததால் ஏற்பட்டதாக முன்வைக்கின்றனர்.

இது உண்மையில் நிஜமான நடந்த குற்றங்களையே திட்டமிட்டு மூடிமறைப்பதாகும். ISIS, லிபியா குழப்பத்திலிருந்து ஏதோ தற்செயலாக ஆதாயமடைந்ததல்ல. அதன் சொந்த வளர்ச்சியும் அபிவிருத்தியும் அமெரிக்க-நேட்டோ போருடன் மிக நெருக்கமாக பிணைந்துள்ளன. அதில் அதேபோன்ற அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்கள் படை துருப்புகளாக சேவையாற்றுவதற்காக ஆயுதமேந்த செய்யப்பட்டு அவற்றிற்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

கடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், இத்தகைய இதேமாதிரியான கூறுபாடுகள், லிபிய அரசாங்க கிடங்குகளிலிருந்து கொள்ளையடித்த பெரும் எண்ணிக்கையிலான ஆயுதங்களுடன், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரைத் தூண்டிவிட சிஐஏ-முடுக்கிவிட்ட முயற்சியின் பாகமாக சிரியாவிற்குள் திருப்பிவிடப்பட்டன. இந்த நடவடிக்கை ISIS மற்றும் அதுமாதிரியான அமைப்புகளைப் பெரிதும் பலப்படுத்தியது, அதேவேளையில் சிரியாவிற்குள் சண்டையிட அனுப்பப்பட்டிருந்த லிபியர்கள் நாட்டிற்கு திரும்பி இருந்தனர், இதன்விளைவாக லிபியாவின் வடக்கு கடற்கரையோரங்களை ஒட்டி இஸ்லாமிய குழுக்கள் பரவின.

இவ்விதத்தில், அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இரத்தக்களிரிக்குள் மற்றும் குழப்பதிற்குள் மூழ்கடித்து, அதேவேளையில் ஓர் உலகளாவிய மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்தி வருகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவில்லாத மற்றும் தீவிர அடுத்தடுத்த இராணுவ தலையீடுகளே, போருக்கு மற்றொரு போலிக்காரணமாக கூறப்படும் லிபியாவில் ISIS பயங்கரவாத அச்சுறுத்தல் என்பதன் ஆதாரமாகும்.

Read more...

ஏஎஸ்பி மற்றும் பொலிஸ் பிரதம பரிசோதகருக்கு விளக்க மறியல்.

கொலைக்குற்றச்சாட்டில் ஏஎஸ்பி க்கும் பணப்பை திருட்டுகுற்றச்சாட்டில் பிரதம பொலிஸ் பரிசோதகருக்கும் விளக்க மறியல் எம்பிலிப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எம்பிலிப்பிட்டியவின் முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.தர்மரத்ண விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அத்தியட்சகர் நேற்று பிற்பகல் குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டிருந்தாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட சந்தேநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.
இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக நீதிவேண்டி பல்வேறு அமைப்புக்கள் இணைந்து பெரும் மக்கள் போராட்டத்தை நாடாத்தியே இக்கைதினை சாத்தியமாக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மட்டக்களப்பு வங்கி ஒன்றில் நபர் ஒருவரின் பணப் பையை திருடிய, காங்கேசன்துறை பகுதியில் கடமையில் உள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் கந்தையா ஜீவன் குமார மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, எரகம பிரதேசத்தைச் சேர்ந்த தாஜுதீன் ரபாய்தீன் என்பவர், தனியார் வங்கி ஒன்றில் வைத்து தனது பணப்பை காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவுக்கமைய, மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கெமரா காட்சிகளை வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் கந்தையா ஜீவன் குமார மட்டக்களப்பு மாவட்ட நீதவான் கணேஷ ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read more...

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைகின்றார் பொன்சேகா! விருப்பம் இல்லை என்கின்றார் ஹரேன் பெர்ணாண்டோ!

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சற்று முன்னர் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ள இவ்வொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை, தனிப்பட்ட வகையில் விரும்பவில்லை எனவும், தான் அதனை எதிர்ப்பதாகவும், அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சியின் கொள்கைக்கு தலை வணங்கி தான் இதற்கு இணக்கம் தெரிவிப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்

பொன்சேகா கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர் எனவும், அவரை தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது, மக்களின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் காலஞ்சென்ற அமைச்சர் குணரட்ணவின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு நுழையவுள்ள சரத் பொன்சேவுக்காக இராணுவத்திருக்கான நலன்பேணும் அமைச்சு என்று புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக அவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அமைச்சுக்களின் எண்ணிக்கையை குறைப்போம் என ஆட்சியை பிடித்த நல்லாட்சியில் இடம்பெறப்போகும் இவ்விடயம் மக்களில் பாரிய விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதில் சந்தேகம் இல்லை.


Read more...

Tuesday, February 2, 2016

அதிகார பகிர்வு தேவை? இணைத்தலைமை தேவை இல்லை! - ராம் -

மாகாணசபை உறுப்பினரின் ஒலிவாங்கியை கைப்பற்ற சென்ற மத்திய அமைச்சரின் மேலதிக செயலாளர், அதை தடுக்க வந்தவரை பார்த்து கூ ஆர் யு [ who are you ] எனகேட்க, மற்றவர்கள் அவரைப் பார்த்து அதையே திருப்பி கேட்க, ஆரம்பித்த தள்ளுமுள்ளு, அடிதடி, தண்ணீர்ப் போத்தல் ஏறி எனத் தொடர்ந்து, மாகாண அமைச்சர் உதடு வெடித்து இரத்தம் பெருக, மாகாணசபை உறுப்பினர்கள், மத்திய அமைச்சரின் கட்சி உறுப்பினர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் த.தே.கூ உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தவேளை, முதல்வரை பாதுகாப்பாக அவரது காவலர்கள் அழைத்து சென்றனர். அதன் பின் முதல்வர் அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட தேவையற்ற கருத்தால் பிரச்சனை உருவானது என்றும், அவரால் கூட்டிவரப்பட்ட இனம்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது, என்றும் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டார்.

அது நடந்து 13 மாதங்களின் பின் இந்த வாரம் தான் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. புதிய அரசில் அமைச்சுப்பதவி கொடுக்கப்படாததால் இணைத்தலைவர் பதவி இம்முறை திரு தேவானந்தாவுக்கு வழங்கப்படவில்லை. அந்த பதவி கௌரவ முதல்வர், கௌரவ பிரதி அமைச்சர், மூத்த பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் தெரிவான திரு அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தான் முதல்வரின் ஒவ்வாமை வெளிப்பட்டது. தனது ஆரம்ப வரவேற்பு உரையில் தான் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்ததில் இணைத்தலைவர் பதவி இருவருக்கு மட்டுமே உரியது என தெளிவு படுத்தியதாக கூறி தன்னைத்தவிர ஒரு அமைச்சர் அல்லது மூத்த பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே தலைமை தாங்கும் உருத்துடையவர் என்ற கருத்துப்பட பேசினார்.


பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். ஆழ்மனதில் இருப்பதுதான் வார்த்தையில் வெளிப்படும். முதல்வர் கூற்றுப்படி அவரும், பிரதி அமைச்சரும் மட்டுமே தலைமை தாங்க வேண்டும். திரு மாவை, திரு அங்கஜன் வேண்டா விருந்தாளிகள், என கூற விளைந்தது வெள்ளிடை மலை. வடக்கு மாகாணசபைக்கு அதிகாரம் பகிரப்படவில்லை, என உள்ளூர் முதல் போகும் நாடெல்லாம் புகார் பட்டியல் வசிக்கும் முதல்வர், இந்த மாவட்ட மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவரும், இவரின் நியமனம் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு பயன் கொடுக்கும் என்பதால், தேசிய பட்டியல் மூலம் உறுப்பினரானவரும், தன் அருகே சமமாய் அமர்வது, அவர்களுடன் தனது தலைமையை பகிர்வது முதல்வருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது, என்பது முரணான செயல் அல்லவா?


மக்கள் நலன்சார்ந்த விடயங்களை கலந்து முடிவெடுக்க ஒன்று கூடும் இடத்தில், தலைமை பதவியை பங்குபோடும் விடயத்தை பேசி, அதற்கு பதில் உரைத்தவரின் சீற்றத்துக்கு ஆளாகும் சந்தை அரசியலை, ஒரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஆரம்பித்து வைத்தது, தன்னை சிறுமைப்படுத்தி கொண்டதே நடந்தேறிய நிகழ்வு. அன்று மகிந்தர் ஆட்சியில் அருகிருந்த மத்திய அமைச்சர் பேசிய பேச்சை, அவரது கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்தை, தட்டிக்கேட்ட திராணியின்றி மௌனமாய் வெளியேறி பத்திரிகையில் கண்டன அறிக்கை விட்ட முதல்வர், இன்று தன் கருத்தை துணிந்து சபையில் கூறும் சூழ்நிலையை உருவாக்கியவர்கள், அவர் அருகில் அமர்ந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் தான் என்பதை எண்ண மறந்து அவர்களை இணைத்தலைவர்களாய் நியமித்ததற்கு தன் விசனத்தை வெளியிட்டார்.


நீண்ட கொடிய யுத்தம் எம்மண்ணை இன்னொரு கம்போடியா ஆக்கியது. 1992ல் என் பத்திரிகை நண்பர் அழைப்பில் கம்போடியா சென்ற நான் கண்ட காட்சியை இன்று எம் மண்ணில் காண்பேன் என அன்று நினைக்கவில்லை. கண்ணிவெடிகளின் விதை நிலமாய் அந்த மண் மாறி காணும் இடமெல்லாம் கால் இழந்த உடல் அவயங்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கமுடிந்தது. தினம் தினம் அந்த கோரத்தை பார்த்த என் நண்பனும் மனத்தாக்கத்தில், வேலையை விட்டு நாடு திரும்பிவிட்டான். இன்று நான் சொந்த நாட்டில் இல்லாவிட்டாலும் சக்தி தொலைகாட்சியில், தினம் தினம் காட்டப்படும் எம் மண்ணின் அவலங்களை பார்க்கையில், கம்போடியா என் மனக்கண் முன் வந்தது. கால் இன்றி கைகள் இரண்டும் இன்றி வாழும், எம் உறவுகளுக்கு எத்தனை தலைமைகள் இணைந்தாலும், எப்போது வாழ்வு வரும் என்ற கேள்வி எழும் வேளையில், இணைத்தலைமை எனது உருத்து என உரிமைக்குரல் எழுப்பும் முதல்வரின் செயல், பிரபாகரனிசத்தை இவர் வரித்துக் கொண்டாரோ என எண்ணத் தூண்டுகிறது.


எண்பதுகளில் உக்கிரமடைந்த ஆயுதப்போராடத்தில், தமது அறிமுகம் மற்றும் கொள்கை அடிப்படையில், வெவ்வேறு இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் நோக்கம், குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், எம் உரிமைக்காய் உயிர் துறக்க தயாராகியே, அவர்கள் ஆயுதத்தை கையேந்தினார்கள். தமது கல்வியை, காதலை, உறவுகளை. ஊரை விட்டு தொலைதூரம் சென்று, தாயக மீட்பிற்க்காக தம்மை வருத்தி, கடும் பயிற்சிகள் எடுத்தனர். விடுதலை கனவு சுமந்த அவர்களின் மனதில், விரோதத்தை விதைத்தவர் பிரபாகரன். தன்னுடன் இணைந்த ஏனைய இயக்க தலைவர்களின் கரங்களை உதறி, ஏக தலைவன் நான் என்ற மமதையில், ஏனைய இயக்க தலைவர்களை, போராளிகளை போட்டுத்தள்ளும்படி கட்டளையிட்ட பிரபாகரன் போல, இணைத்தலைவர்கள் இத்தனைபேர் எதற்கு என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர்.


தானைத் தலைவன் நானே எனும் மனப்போக்கில், முன்னைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரை பேச அனுமதிக்காத அமைச்சரின் செயலை, பத்திரிகை அறிக்கை மூலம் விமர்சித்த முதல்வர், இன்று தானும் அதுபோல் செயல்படுவது இவரும் ஊருக்கு தான் உபதேசம் உனக்கில்லையடி தங்கரத்தினம், என கூறிய பிரசங்கியின் செயல் போலவே பார்க்கப்படும். பதவி வந்தால் பணிவு வேண்டும். அனைவரையும் அணைத்து செல்லும் பண்புவேண்டும். எம் மண்ணின் புனர்நிர்மாணத்துக்கு, மக்களின் புனர்வாழ்வுக்கு பலரது பங்களிப்பு தேவை. பலரது தலைமைத்துவம் தேவை. சில கைகள் மட்டும் இணைவதை தவிர்த்து பல கைகள் இணைந்ததால் தான், மகிந்தவை வெல்ல முடிந்தது. அதனால் தான் முதல்வரால் இன்று தலைமை தாங்க முடிந்தது. இல்லை என்றால் முன்னாள் அமைச்சர் அருகமர்ந்த, மௌனசாட்சி நிலை இன்றும் தொடர்ந்திருக்கும்.


தனிபட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்க, இணைந்து செயல்ப் படுவதால் நன்மையே விளையும். பிரபாகரன் கூட தேசிய தலைவராக தன்னை நினைத்தாலும், தன் தளபதிகளுடன் இணைந்து தான் அந்த இடத்துக்கு வந்தார். பின் தான் என்ற அகங்காரம் அவரிடம் தோன்றியதும், மாத்தையா மண்ணுக்குள் போனார். கருணா பிரிந்து சென்றார். அன்டன் பாலசிங்கம் ஒஸ்லோவில் கையொப்பமிட்ட பின் உறுமலுக்கு பயந்து இங்கிலாந்து திரும்பினார். அதன் பின் நடந்த நிகழ்வுகள் நாம் அறிந்தவை. தன்னை சுற்றி இருப்பவர் ஆலோசனை கேட்காமை, அவர்களை அனுசரித்து செல்லாமை, கூட்டு முடிவுகள் எடுக்காமை என அடுக்கடுக்கான விமர்சனங்கள் அவர்மீது உண்டு. நான் என்ற அகங்காரம்தான் அவருக்கு நந்திக்கடலில் முடிவுரை எழுதியது என்பதை பிரபாகரன் ஒரு மாவீரன் என கூறிய முதல்வர் அறிவார்.


சுண்ணாகம் நீர் பிரச்சனை தொடங்கி, அகதிகள் மீள் குடியேற்றம்வரை நாமெல்லாம் கூடி பேசி கூடிய விரைவில் ஒரு தீர்வு காணவேண்டும், என பிரதி அமைச்சர் கூறியதும், நாங்கள் இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் என்பதால் தான், ஜனாதிபதி எம்மை இணைத்தலைவராய் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நியமித்தார், அதை நீதிமன்ற தீர்ப்பு போல் மாற்றமுடியாது, என திரு மாவை சீறியதும், நாம் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. எமது இணைத்தலைமை பதவி என்பது எம்மக்களுக்கு அதிகளவு பயனை கிடைக்க செய்யவே, என திரு அங்கஜன் இராமநாதன் தெரிவித்ததும் முதல்வருக்கு நிச்சயம் உறைத்திருக்கும். அரசியலுக்கு முதல்வர் புதியவர் என்றாலும் சைவ சித்தாந்த கோட்பாடுகளை ஏற்று நடப்பவர் என்பதனால், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றி, நிதானமான செயல்பட்டு ஏனையவர்களுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, மக்களுக்கு பலனும் மண்ணுக்கு அபிவிருத்தியும் கிடைக்கும். முரண்பாடுகள் நாசத்தை தான் விளைவிக்கும்

நன்றி தேனி

Read more...

கிழிகின்றது மஹிந்த-பிரபாகரன் முகத்திரை! வருகின்றார் எமில் காந்தன்.

2005 ஆம் ஆண்டு தேர்தலில்போது தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்ததன் ஊடாகவே முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தில் அமர்ந்தார் என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. தமிழ் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்காக மஹிந்த புலிகள் அமைப்பிற்கு பணம் வழங்கினார் என்றும் அக்கொடுக்கல் வாங்கல்களில் பிரதான நபராக எமில் காந்தன் எனப்படுகின்ற புலிகளின் முகவர் ஒருவர் செயற்பட்டு வந்தார் என்றும் பேசப்பட்டது யாவரும் அறிந்ததே.

இப்பணம் அமைச்சரவை அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டிருந்தாக ஆதாரங்களுடன் பேசப்பட்டபோதும் அவற்றை தெளிவாக நிரூபிப்பதற்கு குற்றஞ்சாட்டியவர்கள் திணறிக்கொண்டே இருந்தனர். இவ்விடயத்தை சந்தேகத்திற்கு அப்பால் மக்களுக்கு நிரூபிப்பதாயின் பணத்தினை புலிகள் சார்பாக பெற்றுக்கொண்டவர் எனக்கூறப்படுகின்ற எமில் காந்தனில் ஒப்புதல் வாக்குமூலம் இங்கு அவசியமாக நிற்கின்றது.

புலிகளுக்கு எதிராக போராடினார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் வெற்றியின் நாயகர்களாக நிற்கின்ற மஹிந்த குடும்பத்தினரின் அந்த அந்தஸ்தை பறிப்பதற்கு எமில் காந்தனின் ஒப்புதல் வாக்குமூலத்தை பயன்படுத்த மங்கள சமரவீர தொடர்சியாக மேற்கொண்ட முயற்சி பலசுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெற்றியளித்திருக்கின்றது. இதன்பொருட்டு எதிர்வரும் சில வாரங்களில் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார் எமில் காந்தன்.

இதன்பொருட்டு எமில்காந்தனின் வருகைக்கு தடையாக அவர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ்பெறப்பட்டுள்ளது. எமில்காந்தனின் சட்டத்தரணி கொழும்பு நீதிமன்றில் விடுத்து வேண்டுகோளை அடுத்தே குறித்த பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அந்தனி எமில் காந்தனுக்கு எதிராக சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்ப்படிருந்தபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை.

இதனால், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி நீதிமன்றம் இண்டர்போல் ஊடாக உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

இந்தப் பின்னணியில், சந்தேகநபரான எமில்காந்தன் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஆனால் இண்டர்போலின் பிடியாணை காரணமாக, எமில் காந்தன் இலங்கை வந்து நீதிமன்றத்தில் சரண் அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவரைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை வாபஸ் பெறுமாறும் அவரது வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன்படி, கைதுசெய்யுமாறு இண்டர்போலுக்கு பிறப்பித்திருந்த ஆணையை வாபஸ் பெற்றுள்ள நீதிமன்றம், சந்தேகநபரான எமில் காந்தனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எமில் காந்தன் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதித்துறையில் ஒரு முக்கிய தலைவராக இருந்துள்ளதாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

தமிழீழத்தை கைவிடுகின்றாராம் சிறிதரன்!

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

‘தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிடவில்லை. தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர்.

கிடைக்கப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலுள்ள அரசியலமைப்புக்களை போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை ஆதரிக்க வேண்டும். தமிழீழம் பற்றி பேசி, புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Read more...

டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை.

கொலை வழக்கை காணொளிக்காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் விசாரணை நடத்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இலங்கையின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா 1986-ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்தார். அப்போது, தீபாவளிக்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் சிலர் சுட்டனர். இதில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக டக்ளஸ் தேவனானந்தா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதியப்பட்டு, சென்னை 4-ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சாந்தி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரச வழக்கறிஞர் எம்.பிரபாவதி கூறியதாவது:

பொலிஸார் போராடி, சாட்சிகளைத் தேடி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர். முதல் சாட்சியான குருமூர்த்தி, சுட்டவரை அடையாளம் காட்ட முடியும் என்று கூறியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிப்பதால், இலங்கையில் உள்ள அவரை காணொளிக்காட்சி மூலம் விசாரிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டு வர, வாரத்தில் 3 நாள்கள் விசாரிக்க வேண்டும் என்றார்.

அப்போது, டக்ளஸ் தேவானந்தா சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.ராஜன், ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, "விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க டக்ளஸ் தேவானந்தா தயாராக உள்ளார். இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கிறோம். அங்கு எந்த வகையான வசதிகள் உள்ளன என்பது உள்ளிட்ட விவரங்களை கடிதம் மூலம் நீதிமன்றம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.

மின்னஞ்சல் முகவரியை பெற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பெப்ரவரி 18-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

(தினமணி)

Read more...

Sunday, January 31, 2016

ஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகளுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. By Marianne Arens

இவ்வார ஆம்ஸ்டர்டாம் கூட்டத்தில், ஐரோப்பிய உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரிமார்கள் நிராதரவான மத்திய கிழக்கு அகதிகளின் உள்வரவை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான பரிந்துரைகளைக் கொண்டு ஒருவரையொருவர் விஞ்சி நிற்க முயன்றார்கள். எந்த நடவடிக்கையும் இல்லையென்றாலும் பரிசீலினைகளே கொடூரமாக இருந்தன.

உள்நுழையவியலாதவாறு எல்லைகளை மூடுவதில் தொடங்கி, தேசிய அரசாங்கங்களின் விருப்பம் இல்லையென்றாலும் கூட, Frontex துருப்புகளை நிலைநிறுத்துவது, அத்துடன் நூறாயிரக் கணக்கான அகதிகளுக்கு கொடுஞ்சிறைக்கூடங்களை எழுப்புவது வரையில் பரிந்துரைகள் இருந்தன.

பல்வேறு மந்திரிமார்கள் கிரீஸைத் தொடர்ச்சியாக தாக்கினர், ஏதென்ஸ் அந்நாட்டின் வழியாக ஐரோப்பாவிற்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை என்றால், அதை செங்கென் வலையத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென அவர்கள் கோரினர், இம்மண்டலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சுதந்திர-நகர்வுக்கு உத்தரவாதமளிக்கிறது.

மத்திய கிழக்கிலிருந்து வரும் அகதிகளில் பெரும் விகிதத்தினர், கிரீஸிற்கு அருகே கடந்து செல்வதற்கு முன்னதாக மற்றும் மாசிடோனிய எல்லையில் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடுவதற்கு முன்னதாக, துருக்கியிலிருந்து கிரேக்க தீவுகள் வரையில் அபாயகரமான மற்றும் பெரும்பாலும் மரணகதியிலான பயணத்தை மேற்கொள்கின்றனர். மாசிடோனியா மற்றும் சேர்பியா வழியாக பயணித்த பின்னர், அவர்களில் பலர் ஜேர்மனியை அடையும் முயற்சியுடன், ஹங்கேரி, குரேஷியா மற்றும் ஸ்லோவேனியா வழியாக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைகிறார்கள்.

உறையும் குளிர் மற்றும் சீற்றமான கடல்களுக்கு இடையே, இப்போதும் 2,000 வரையிலான அகதிகள் நாளாந்தம் கிரேக்க தீவுகளை அடைய ஏகியன் கடலைக் கடந்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 23 வாக்கில், 44,000 பேர் ஏற்கனவே இந்த வழியாக 2016 இல் துருக்கியிலிருந்து ஐரோப்பாவை எட்டியிருந்தனர். உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போன அகதிகளின் எண்ணிக்கை 149 ஆக இருந்தது. ஜனவரி 22 இரவு மட்டுமே, 42 பேர் அப்பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியில் மூழ்கி இறந்தனர், அதில் 18 குழந்தைகளும் உள்ளடங்கும்.

இந்த பாதை அடைக்கப்பட உள்ளது. Frontex படைகளைக் கொண்டு மாசிடோனியாவை ஒட்டிய கிரீஸின் வடக்கு எல்லையைக் குறிப்பிடத்தக்க அளவில் பலப்படுத்துமாறு மந்திரிமார்கள் கோரினர், அத்துடன் 2017 இறுதிக்குள் செங்கென் வலையத்திற்குள் எல்லை கட்டுப்பாடுகளைப் பலப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.

அகதிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அல்லது செங்கென் வலையத்திலிருந்து நீக்கப்படுவதை முகங்கொடுக்க கிரீஸிற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் அக்கூட்டத்திற்குப் பின்னர் கூறுகையில், “நிரந்தரமாக, குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த அகதிகள் எண்ணிக்கை குறைப்பு நமக்கு அவசியம், மேலும் இது வரும் வாரங்களில் புலனாகக்கூடியதாக இருக்க வேண்டும்,” என்றார்.

டு மஸியர் தொடர்ந்தார், எல்லை பாதுகாப்பு முகமை Frontex எல்லைகளைப் பாதுகாப்பதில் ஓர் அங்கத்துவ அரசின் இடத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். ஜேர்மனியின் உள்துறை மந்திரியும் செங்கென் வலையத்திலிருந்து கிரீஸை வெளியேற்றுவதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. “கிரீஸ் அதன் வீட்டுப்பாடத்தை செய்ய நாம் அதற்கு அழுத்தமளிப்போம்,” என்றவர் அச்சுறுத்தினார்.

அகதிகள் மற்றும் புலம்பெயர்வோருக்கான பெல்ஜிய அரசு செயலர் Theo Francken கிரீஸில் 300,000 அகதிகளுக்கான ஓர் "அடைக்கப்பட்ட இடத்தின்" சாத்தியக்கூறை எழுப்பினார். அது ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும், ஏனென்றால் கிரீஸின் "அரசு கட்டமைப்புகள் வெளிப்படையாகவே மிகவும் பலவீனமாக [இருந்தன],” என்று அந்த பெல்ஜிய அரசியல்வாதி தெரிவித்தார்.

Francken இன் பரிந்துரை, ஒரு நடுத்தர நகர அளவில் அகதிகளுக்கான ஒரு சேரிப்பிரதேசத்தை உருவாக்கி, கிரீஸை ஒரு பிரமாண்டமான கொடுஞ்சிறைக்கூடமாக மாற்றுவதற்கு ஒத்திருக்கிறது. நாஜி யுகத்திற்குப் பின்னர் ஐரோப்பாவில் இதனுடன் ஒப்பிடுவதற்கு ஒன்றும் கிடையாது.

Frontex படைகளின் ஒத்துழைப்புடன் மாசிடோனியா-கிரீஸ் எல்லையை மூடுவதற்கு ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் ஆதரவு தெரிவித்தார், இவர் பல மாதங்களாக கிரீஸின் வடக்கு எல்லையில் பாரியளவில் எல்லை வேலிகளை ஸ்தாபிக்க கோரி வந்துள்ளார். ஸ்லோவாக்கிய பிரதம மந்திரி ரோபர்ட் பிகோவும் அவரது ஆதரவை வழங்கினார். Der Spiegel செய்தின்படி, ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஏற்கனவே இந்த எல்லைக்கு அவற்றின் சொந்த பொலிஸ் படைகளை அனுப்பியுள்ளன, ஹங்கேரி ஒரு நிரந்தர வேலியைக் கட்டமைக்க அதிகளவில் கட்டுமானப் பொருட்களை அனுப்பியுள்ளது.

செவ்வாயன்று, டேனிஷ் நாடாளுமன்றம் தஞ்சம் கோருவோரின் உடைமைகளை பறிமுதல் செய்ய சட்டமசோதா நிறைவேற்றியது. குடும்ப மற்றும் உணவு செலவுகளுக்காக 10,000 குரோனெர் (1,340 யூரோ) மதிப்புக்கு அதிகமான உடைமைகளை இனிமேல் பொலிஸ் அகதிகளிடமிருந்து பறிமுதல் செய்யலாம். நிஜமான பரிந்துரையோ, 3,000 குரோனெர் மதிப்பிற்கு அதிகமிருந்தாலே அனைத்தையும் பறிமுதல் செய்யலாம் என்றிருந்தது. அதற்கும் கூடுதலாக, புலம்பெயர்வோர் அவர்களது உறவினர்களுடன் இணைய அவர்களுக்கு விண்ணப்பிப்பதற்காக முன்னதாக காத்திருக்க வேண்டியிருக்கும் காலம் ஓராண்டில் இருந்து மூன்றாண்டாக நீடிக்கப்படும், தற்காலிக வசிப்பிட அனுமதிகள் குறைக்கப்படும் மற்றும் ஒரு நிரந்தர அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படும்.

இரண்டாம் உலக போரின் போது யூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு, டேனிஷ் அரசாங்கம், இப்படி தான் வேலைவாய்ப்பற்ற டேனிஷ் பிரஜைகள் முன்னர் கையாளப்பட்டார்கள் என்று விவரித்து விடையிறுத்தது! எவ்வாறிருப்பினும் அத்தகைய பாசிசவாத நடவடிக்கைகளை எடுப்பதில் டென்மார்க் மட்டும் இப்போது தனியாக இல்லை.

டென்மார்க்கினது விதிகளைப் போன்ற அதேமாதிரியான விதிமுறைகளின் கீழ், ஆனால் 900 யூரோவிற்கும் குறைவாக மட்டுப்படுத்தி, சுவிட்சர்லாந்து 2015 இல் 100 மக்களிடமிருந்து உடைமைகளைப் பறித்தது. ஜேர்மனியில் உள்ள தெற்கு மாநிலங்கள் ஏற்கனவே அதுபோன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன, பாவேரியா 750 யூரோவிற்கு அதிகமான எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்கிறது, Baden-Württemberg வெறும் 350 யூரோவிற்கு அதிகமிருந்தால் பறிமுதல் செய்கிறது.

கிரீஸில் சிரிசா அரசாங்கம் ஏற்கனவே உழைக்கும் மக்களுக்கு எதிரான கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியில் முன்னிலையில் உள்ளது. இப்போது அது அகதிகளுக்கு எதிராக அதேமாதிரி கொடூரமாக நடந்துகொள்ளுமாறு கூறப்படுகிறது.

கிரேக்க புலம்பெயர்வு மந்திரி Ioannis Mouzalas, சில ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் அகதிகள் மூழ்கி சாகட்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளன, அதேவேளையில் வெளியுறவு மந்திரி Nikos Kotzias ஜேர்மனியின் TAZ பத்திரிகையிடம் குறைகூறிய போது அவர் புரிந்து கொண்டிருந்தவாறு என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார் என்று அறிவித்து விடையிறுத்தார். “அகதிகளை நாம் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும். அவர்கள் மீது நாம் குண்டு வீசி, அவர்கள் படகுகளைக் கவிழ்க்க வேண்டும், அவர்கள் மூழ்கி இறந்து போகட்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.

கிரீஸ்-மாசிடோனியா எல்லையை கடப்பதென்பது அகதிகளுக்கு ஏற்கனவே ஒரு கடுமையான அனுபவம். புலம்பெயர்வோர் வழமையாக பொலிஸால் மிரட்டிப் பணிய வைக்கப்படுகிறார்கள், அடிக்கப்படுகிறார்கள். ஜேர்மனியின் அகதிகள் ஆதரவு அமைப்பு ProAsyl இன் சமீபத்திய அறிக்கை ஒன்று, பால்கல்களின் மூடப்பட்ட எல்லைகள் நாசகரமானது என்பதை மற்றும் அகதிகளுக்கு மரணகதியிலான விளைவுகளைக் கூட கொண்டு வந்திருந்ததை எடுத்துக்காட்டியது. இந்த விளைவு விருப்பத்திற்குரியது என்பதையும், பரிசீலிக்கப்படும் அணுகுமுறைகளுடன் பொருந்தி இருப்பதையும் ஆம்ஸ்டர்டாம் கூட்டம் தெளிவுபடுத்துகிறது.

அந்த அறிக்கையின்படி, பத்து ஆயிரக் கணக்கான அகதிகள் ஏற்கனவே மாசிடோனியாவில் கைவிடப்பட்டு, வீதிகளில் வசிக்க நிர்பந்திக்கப்பட்டு, அவர்கள் கிரீஸிற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஏதென்ஸிலேயே ஏறத்தாழ தஞ்சம் கோரும் ஒருவரைப் பதிவு செய்வது சாத்தியமில்லை. வருடாந்தர சராசரியாக 10,000 தஞ்சம் கோரும் விண்ணப்பங்களில் வெறும் 1,150 க்கு மட்டுமே ஏதென்ஸில் இடம் கொடுக்கப்படுகிறது என்பதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் கமிஷனர் அறிவார். தஞ்சம் கோரி ஒருவர் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு, கிரேக்கத்தை விட்டு வெளியேற்றும் கூடத்தில் அடைக்கப்படுவார்.

ஏகியன் கடலைப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்து வருவதற்காக ஏதென்ஸ் அங்காராவில் உள்ள அரசாங்கத்தைக் குறை கூறியுள்ளது, அதேவேளையில் துருக்கிய அரசாங்கம் ஒட்டுமொத்த கடற்பகுதியையும் பாதுகாக்கும் தகைமைகள் அதற்கு இல்லை என அறிவித்துள்ளது. அகதிகள் பிரச்சினைகள் சில காலம் துருக்கிய ஒத்துழைப்பைப் பெற ஐரோப்பிய ஒன்றியம் முயன்றிருந்ததுடன், அது 3 பில்லியன் யூரோ உதவி வழங்கவும் உத்தரவாதம் அளித்திருந்தது, அத்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் போர்களில் இருந்து தப்பியோடி வந்த 2.5 மில்லியன் பேர் இப்போது துருக்கியில் உள்ளனர். இவர்களில் சுமார் வெறும் 250,000 பேர் மட்டும் ஏற்கனவே இருக்கும் முகாம்களில் உள்ளனர். துருக்கி முழுமையாக ஜெனிவா அகதிகள் மாநாட்டு உடன்படிக்கையை அங்கீகரிக்கவில்லை, மேலும் அங்கே அகதிகள் வேலை செய்ய முடியாது அல்லது அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியாது.

ஐரோப்பாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்று மிகைமிஞ்சியும், வரவேற்கப்படாமலும் உள்ளனர். அரசியல்வாதிகளும் இதழாளர்களும் எந்தளவிற்கு சிறப்பாக அகதிகளை வெளியேற்றலாம், கைது செய்யலாம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளிவிடலாம் என்று ஏதோ விலங்குகள் அல்லது பண்டங்களைக் குறித்து விவாதிப்பதைப் போல பகிரங்கமாக விவாதித்து வருகின்றனர். உண்மையில் அவர்கள், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவைச் சீரழித்துள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளது ஏகாதிபத்திய போர்களால் உருவாக்கப்பட்ட அவலத்திலிருந்து தப்பிப்பதற்கு நாட்டை விட்டு வெளியேறுவதை மட்டுமே ஒரே வழியாக காணும் அந்த மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


Read more...

சிங்கத்தின் வாலில் ஏறி விட்டீர்கள். இனி துண்டு துண்டுதான். ராஜபக்சவின் மூன்றாம் மகன் எச்சரிக்கை.


முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் மகன் லெப்டினன் யோசித்த ராஜபச்ச நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜபக்சவின் முன்றாம் மகன் றோஹித்த ராஜபக்க தனது முகநூலினூடாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவ் எச்சரிக்கையில் :

'நல்லாட்சி அரசு சிங்கத்தின் வாலில் ஏறிவிட்டதாகவும், தற்போது சிங்கம் உங்களை துண்டு துண்டாக கிழித்தெறியாது என எதிர்பார்க்க வேண்டாம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இதேநேரம் தம்மை பழிவாங்கவே யோசித்த கைது செய்யப்பட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனும் அரசாங்கத்துக்கு பக்கபலமாகவே இருப்பதாக, சாடியுள்ள அவர் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரே தற்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே வி பியும் அரசாங்கத்தை விமர்சிப்பதைப் போன்று அரசாங்கத்தின் பக்கமே இருக்கிறது என்றும் ஜே வி பி கேள்வி எழுப்பும் போது, அரசாங்கம் அதற்கு பதில் வழங்குவது போன்ற திட்டமிட்ட நடைமுறையொன்றை செயற்படுத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்:

யோசித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமையானது, தம்மை பழிவாங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட செயலென்பது நான்காம் திகதிக்கு முன்னர் இரண்டு ராஜபக்ஷவினரை கைது செய்யவிருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போன்றோர் கூறியதிலிருந்து தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் எத்தனை கைதுகளை மேற்கொண்டாலும் ராஜபக்ஷக்களின் பயணத்தினை நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற கூட்டமொன்று மற்றும் யோசித்த ராஜபக்சவை சிறையில் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

தமிழர் ஓர் தேசிய இனமா? அன்றில் இனக்குழுமமா? யாழ் மேலாதிக்கம் மட்டக்களப்பாருடன் மோதல்.

ஈழத்தமிழ் மக்களை ‘தேசம் என்று அழைப்பதா? இல்லையேல் ‘மக்கள் குழுமம்’ என்று அழைப்பதா? இத்தகைய ஒரு நீண்ட சர்ச்சையில் நேற்று சனிக்கிழமை முழுநாளும் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டது தமிழ் மக்கள் பேரவை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படவேண்டிய ஒரு தீர்வு யோசனையின் முதல் நகல் வடிவம் ஒன்றைத் தயாரிப்பதற்காக தமிழ் மக்கள் பேரவை தனது பிரதிநிதிகளைக் கொண்ட உப ஒன்றை நியமித்திருந்தது.
அந்த உப குழு தயாரித்திருந்த நகல் வடிவயோசனை நேற்றுக் காலை நல்லூரில் இடம்பெற்ற பேரவையின் பொதுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போதே மேற்படி வாதப் பிரதிவாதம் தீவிரமாக முழுநாழும் தொடர்ந்தது.
தீர்வு யோசனையின் நகல் வடிவத்தைத் தயாரித்த உபகுழு, அதில் தமிழ்மக்களை ‘மக்கள் குழுமம்’ (Peoples) என்று குறிப்பிட்டிருந்தது. தேசம் (Nation) என்ற சொல் தவிர்க்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் அதனைக் கடுமையாக ஆட்சேபித்தனர்.


ஒரு தேசிய இன மக்கள் குழுமத்துக்கு சொந்தமான ஒரு தாயகப் பிரதேசம் தொடர்ந்து அவர்கள் வசம் இல்லாவிட்டால் மட்டுமே அவர்களை ‘மக்கள் குழுமம்’ (Peoples)என்று அழைக்கலாம் என்றும் – ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை நீண்ட வரலாற்றுப் பின்னணியுடன் தாயகப் பிரதேசத்தில் அவர்கள் தொடர்ந்து வசித்து வருவதால் ‘தேசம்’ (Nation) என்ற பதத்துக்கு அவர்கள் உரிமையுடையவர்கள் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

“ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட அண்மைக் காலங்களில் தமிழர்களை ஒரு ‘தேசம்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு ‘மக்கள் குழுமம்’ (Peoples) என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்தப் பின்புலத்தில் இந்த நகல் யோசனைத் திட்டத்தில் ‘தேசம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தமிழ் மக்கள் பேரவையை வழிப்படுத்தும் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை தேவையற்ற நெருக்குவாரங்களுக்குள் தள்ளும். எனவே அந்த ‘தேசம்’ என்ற சொல்லை தற்போதைய கட்டத்தில் தவிர்ப்பது நல்லது” – என்று யோசனை நகலை தயாரித்த பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

நேற்றைய கூட்டத்துக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சமுகம் தந்திராத போதிலும் அவரை நெருக்கு வாரத்திற்குள் தள்ளுவதை உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

‘ஒரு நாடு; இரு தேசம்’ என்ற கொள்கையை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட ‘தேசம்’ என்ற சொல்லைத் தவிர்த்து ‘மக்கள் குழுமம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை சிலாகித்து வரவேற்றார்.

“ஈழத் தமிழ் மக்கள் ‘ஒரு தேசம்’ என்பதை தொடர்ந்து விடாப்பிடியாக வலியுறுத்தி நிற்பவர்கள் நாங்கள். எனினும் சுமுகமான முறையில் இந்த முயற்சி முன்நகர்வதற்காக இதில் சற்று விட்டுக் கொடுப்புடன் இறங்கிவர நாம் முன்வந்திருக்கின்றோம். எனவே ஏனையோரும் அதற்கு இணங்க வேண்டும்” – என்று கோரினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஆனால் சில பிரதிநிதிகள் – குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்த வந்த பிரதிநிதிகள் – அதற்கு இணங்க மறுத்தனர். அவர்கள் தமிழர்கள் ‘தேசம்’ என்ற சொல்லுக்கு உரித்துடையவர்கள் ஆதலால் நகல் யோசனையில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுவது அவசியம், அதை நாம் கைவிடமுடியாது என்று வாதிட்டனர்.

இதனால் காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் மாலை 6 மணிவரை நீடித்தது. இறுதியில் எந்தச் சொல்லை பயன்படுத்துவது என்ற விடயத்தை மக்கள் கருத்தறிய விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட நகல் வடிவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் பகிரங்க பொதுக் கூட்டத்தில் வைத்து வெளியிட்டு வைப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டது.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இவ்விவாதங்களில் கலந்து கொள்ளாத பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் நகலை வெளியிட்டு வைத்தமையாகும்.

மீனுக்கு வாலையும் முதலைக்கு தலையையும் காட்டிக்கொண்டு அரசியல் செய்யும் இந்த மேதாவியால் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்க முடியுமா என்ற கேள்வி இங்கு மேலெழவே செய்கின்றது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கான முன்மொழிகள்,

1. இலங்கை அரசின் தன்மை


1.1. இலங்கை ஓர் பல்தேசிய, கலாசார, மொழித்துவ, மத அரசாகும். அது தனது அங்கத்துவ மக்கள் கூட்டங்களையும் , சமூகங்களையும்கொண்டமைந்தது ஆகும். மத்தியும் மாநிலங்களும் மக்கள் கூட்டங்களின், சமூகங்களின் பன்மைத்துவத்தை மதித்து, அங்கீகரித்து, பாதுகாக்கும் கடப்பாட்டை கொண்டவை.

1.2. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் பல்தேசிய இலங்கையை உருவாக்குகின்றன.

1.3. 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த் தேசத்தின் பாரம்பரிய தாயகமாக இருக்கும் காரணத்தினால் அதன் ஆள்புலபரப்பாக அமையப் பெறும்.

1.4. தமிழ் மக்கள் பாரதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையைக் கொண்ட மக்கள் கூட்டமாவர். தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்கும் இடத்து பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசிற்கு தமிழ் மக்கள் தமது பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்.

2. இறைமை

2.1. இறைமை தனித்துவாமான மக்களுக்குரியதும் பாரதீனப்படுத்த முடியாததும் ஆகும். முழு சமஷ்டி அரசின் இறைமையும் அதன் அங்கத்துவ மக்கள் கூட்டங்களின் இறைமை மூலம் உய்த்தறியப்படுவதாகும்.

2.2. சட்டவாக்க இறைமையானது மத்திய பாராளுமன்றத்தாலும் மாநில சட்டவாக்க அவைகளாலும் தமக்கென அரசியலமைப்பால் குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலமாக தனித்துவமாக பிரயோகிக்கப்படும்.

2.3. நிறைவேற்று அதிகார இறைமையானது மத்திய அரசாங்கத்தின் பிரதம மந்திரியாலும் அமைச்சரவையாலும் மாநில அரசாங்கத்தின் முதலமைச்சராலும் மாநில அமைச்சரவையாலும் அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு ஏற்ப பிரயோகப்படுத்தப்படும்.

2.4. நீதித்துறை சார் இறைமை அதிகாரங்கள் அரசியலமைப்பு நீதிமன்றத்தாலும் மத்திய, மாநில நீதித்துறையாலும் அவற்றுக்கென விதந்துரைக்கப்பட்ட நியாயாதிக்கங்களுக்கு ஏற்றவாறு பிரயோகிக்கப்படும்.

2.5. இவ்வரசியலமைப்பால் விதந்துரைக்கப்படும் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் மத்திய மாநில அரசாங்கங்கள் மதித்து, பாதுகாத்து அவை மக்களால் அனுபவிக்கப்படுவதை உறுதி செய்யப் படுதலும் வேண்டும்.

மத்தியாலோ மாநிலத்தாலோ அரசியலமைப்பால் விதந்துரைக்கப்பட்ட வழிகளால் அன்றி அடிப்படை உரிமைகள் சுருக்கப்படவோ, நிராகரிக்கப்படவோ, மட்டுப்படுத்தவோ முடியாது.
2.6. வாக்குரிமயானது மத்திய பாராளுமன்றம், மாநில சட்டவாக்க சபை தேர்தல்களிலும், பொது ஒப்பங்கோடல்களிலும் 18வயது நிரம்பிய ஒவ்வொரு பிரஜைக்கும் உரியதாகும்.

2.7. ஒவ்வொரு மாநில அரசும் தனது மாநிலத்திற்குட்பட்ட சிறுபான்மையினரது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் கடப்பாடுடையது.

3. அரசியலமைப்பின் மீயுயர்வுத் தத்துவம் மத்தியினதும் மாநிலத்தினதும் அதியுயர் சட்டமும் அத்திபாரமுமாக அரசியலமைப்பு இருக்கும். மத்தியினதும் மாநிலத்தினதும் அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்போடு இயைந்ததாக இருத்தல் வேண்டும்.

4. மொழி, மதம், பிரஜாவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்

4.1. இலங்கை ஒரு மதச் சார்பற்ற குடியரசாக இருக்கும். அரசு அனைவரினதும் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை மதிப்பதோடு எல்லா மதங்களையும் சரிசமனாக நடாத்தும்.

4.2. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியன அரசின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கும்.

4.3. வடக்கு கிழக்கில் தமிழும் ஏனைய இடங்களில் சிங்களமும் நீதிமன்ற மொழியாகவும் பொது ஆவணங்களின் மொழியாகவும் இருக்கும்.

4.4. தமது மொழி, நிர்வாக மொழியாக இல்லாதவிடத்தும் அனைத்து பிரஜைகளும் தமது மொழியில் நீதிமன்றத்தையும் பொதுச் சேவையையும் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் ஆவார்கள்.

4.5. 04 பெப்ரவரி 1948 அன்று இலங்கையை இயல்பாக வதிவிடமாகக் கொண்ட அனைவரும் அவர்களது வழித் தோன்றல்களும் இலங்கைப் பிரஜாவுரிமைக்கு உரித்துடையவர்கள் ஆவார்கள். பிறப்பால், பதிவால் பிரஜா உரிமை என்ற வித்தியாசம் இருக்க மாட்டாது.

4.6. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனையின்அண்மித்த பிரதியாக அமையும் அடிப்படை உரிமைகள் சாசனம் ஒன்று அரசியலமைப்பில் இருத்தல் வேண்டும்.

இவை நீதிமன்றங்களால் வழக்காடப்படக் கூடிய உரிமைகளாக இருக்க வேண்டும். தென்னாபிரிக்க அரசியலமைப்பில் இருப்பதற்கு ஒப்பான பொருளாதார, சமூக, கலாசாரம் சார் உரிமைகளும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

5. ஆட்சி முறைமை

5.1. இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்கும்.

5.2. அதில் இரண்டு மட்டத்திலான அரசாங்கம் இருக்கும்: மத்தி மற்றும் மாநிலம்.

5.3. சமஷ்டியின் கூறுகளாக மாநிலங்கள் இருக்கும். அத்தகைய மாநிலங்களில் ஒன்றாக தற்போதைய 1978 அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கொண்ட வடக்கு கிழக்கு மாநிலம் அமையப் பெறும்.

5.4. மத்திய அரசாங்கமானது வெஸ்ட்மினிஸ்ரர் முறையிலான ஆட்சி முறையில் இருத்தல் வேண்டும்.

5.5. அரசாங்கத்தின் இரு மட்டத்திலும் உள்ள தேர்தல் முறைகள் ஜெர்மனியில் இருப்பது போன்ற கலப்பு தேர்தல் முறையை பின்பற்றியதாக இருக்க வேண்டும்.

5.6. சமஷ்டி அரசின் சனாதிபதி பாராளுமன்றின் இரண்டு அவைகள் மற்றும் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கல்லூரியொன்றினால் தெரிவு செய்யப்படுவார்.

5.7. தத்தமது சட்ட வரையறைகளின் ஊடாக மாநிலங்கள் தமது ஆட்சி முறைகளை சமஷ்டி அரசியலமைப்போடு முரண்படாத வகையில் உருவாக்கிக் கொள்ளலாம்.

5.8. 1978 அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை ஒட்டிய அரசியலமைப்பு பேரவை ஒன்று இருத்தல் வேண்டும்.

குறிப்பு:

அ) வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம் சமூகத்தால் இணைந்த வடக்கு கிழக்கில் தமது குழு சார் உரிமைகளை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு எடுக்கும் முன்வைப்பு எதுவாயினும் அது தொடர்பில் அவர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாராக இருக்கின்றோம் என பற்றுதியுடன் கூறிக் கொள்கிறோம்.

ஆ) வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள பிரஜைகள் யாவரும் அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் யாவற்றினையும் வடக்கு கிழக்கில் அனுபவிக்கும் உரித்துடையவர்கள் ஆவர். மேலும் வடக்கு கிழக்கு மாநிலத்தால் மேலதிகமாக வழங்கப்படும் மனித உரிமைப் பாதுகாப்பு அவர்களுக்கும் உரித்துடயதாக இருக்கும்.

இ) அதேவேளையில் தமது வாழ்விடங்களில் அவர்களது ஒன்றுபட்ட அக்கறையை பாதுகாப்பதற்கான அமைப்புமுறைசார் உரிமைகளுக்கான வழிமுறைகளை நோக்கிய மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான எமது அர்ப்பணிப்பை நாம் வெளிப்படுத்துகின்றோம்.

இது தொடர்பில் மலையக அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகங்களுடனும் வேலை செய்வதற்கு நாம் முழுமையாக எம்மை அர்ப்பணிக்கின்றோம்.

மத்திய மட்டத்திலான பகிரப்பட்ட ஆட்சி

6. இரண்டாவது அவை

6.1 செனட் என்று அழைக்கப்பட வேண்டிய இரண்டாவது அவையில் அனைத்து மாநிலங்களும் சமமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும். ஒவ்வொரு மாநில சட்டவாக்க சபைகளும் விகிதாசார வாக்கு அடிப்படையில் தலா 9 உறுப்பினர்களை செனட் அவைக்கு தெரிவு செய்யும்.

6.2 ஒவ்வொரு சட்டமூலமும் ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக கீழவை மற்றும் செனட் அவை ஆகிய இரண்டு சபைகளினாலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஏதேனும் சட்டமூலமானது செனட் அவையினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அது சட்டமாக ஆக்கப்பட முடியாது.

6.3 ஒரு சட்டமூலமானது தமது மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைவதாக வடக்கு - கிழக்கு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருதுமிடத்து குறித்த சட்டமூலமானது அதன் இரண்டாவது வாசிப்புக்காக விடப்படலாகாது.

ஒரு சட்டமூலமானது வடக்கு கிழக்கு மாநிலத்தின் நலன்களுக்கு குறிப்பாக குந்தகமாக அமைகின்றதா என்பது தொடர்பான விடயமானது பிணக்கிற்குட்படுத்தப்படும் போது, அது தொடர்பிலான விவாதமொன்றைத் தொடர்ந்து அவைத்தலைவர் குறித்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க முடியும்.

அவைத்தலைவரின் குறித்த தீர்மானமானது அரசியலமைப்பு நீதிமன்றினால் மீளாய்வுக்குட்படுத்தப்பட முடியும்.

7. மாநில ஆளுநர்

7.1 முதலமைச்சரின் ஆலோசனையின்மீது ஆளுநரானவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும்.

7.2 ஆளுநரின் பதவியானது அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சம்பிரதாயபூர்வமானதாகும்.

7.3 மாநில சட்டவாக்க சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறும் உறுப்பினரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்க வேண்டும். முதலமைச்சர் மாநில அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.

8. மத்தியினதும் மாநிலத்தினதும் அதிகாரங்கள்

8.1. அரசாங்க அதிகாரங்கள் மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையே பகிரப்படும்.

8.2. சமஷ்டி நிரல் என அழைக்கப்படும் நிரல் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை கொண்டமையும்.

8.3. சமஷ்டி நிரலில் இல்லாத அனைத்து அதிகாரங்களும், மாநில நிரலில் நிரல்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்கள் உள்ளடங்கலாக, மாநிலத்தின் அதிகாரங்கள் ஆகும்.

8.4. மத்தியும் மாநிலமும் தத்தமது அதிகார தத்துவங்களில் மீயுயர்வானவை.

குறிப்பு:

கீழே காணப்படும் மாநில நிரல் வடக்கு கிழக்கிற்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் எவை என்ற பார்வையில் முன் வைக்கப்படுகின்றது. பல்கூறு சமஷ்டி ஏற்பாட்டிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல என்றாலும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவான அதிகாரங்கள் இருக்க வேண்டுமா (சமச்சீரான சமஷ்டி) என்பது தொடர்பில் நாம் இங்கு கருத்துக்கூறவில்லை.

வடக்கு கிழக்கு மாநிலத்தைப் போலல்லாது இலங்கையின் வேறெந்தப் பாகமும் சுயாட்சியைக் கோரவில்லை. மேலும் நாங்கள் இலங்கையின் மற்றைய மாநிலங்கள் குறைந்த அதிகாரங்களை வைத்திருப்பது போலல்லாது வடக்குக் கிழக்கு மாநிலமானது சமச்சீரற்ற அதிகூடிய அதிகாரங்களை அனுபவிப்பதை அங்கீகரிக்கின்றோம்.

மாநில நிரல்

1. காணி

2. சுகாதாரமும் சுதேச மருத்துவமும்

3. உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலாக கல்வியும் கல்விச் சேவைகளும்

4. கமத்தொழிலும் கமநலசேவைகளும்

5. நீர்ப்பாசனம்

6. விலங்குவேளாண்மை

7. கண்டமேடு மற்றும்பொருளாதார வலயம் உள்ளிட்ட வரலாற்றுநீர்ப்பரப்புகள் மற்றும் ஆள்புலநீர்ப்பரப்புக்கள் உள்ளடங்கலான கரையோரவலயங்களுடன் தொடர்புபட்ட மீன்பிடித்தொழில், கனிப்பொருள்கள், சுரங்கங்கள் உள்ளடங்கலான பொருளாதார வளங்கள்.

8. மாநிலத்திற்குள்ளான வனங்கள், சரணாலயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

9. கைத்தொழில்களும் கைத்தொழில் அபிவிருத்தியும்

10. எரிபொருள், மின்சாரம் மற்றும் மின்வலு வழங்கல்

11. சுரங்கங்களும் கனியவளங்களும் குவாரிகளும்

12. போக்குவரத்து

13. மாநில கணக்கெடுப்பும் புள்ளி விபரவியலும்

14. விமான நிலையங்களும் துறைமுகங்களும் இறங்குதுறைகளும்

15. ஆறுகளும் நீர்நிலைகளும்

16. வீதிகளும் பெருந்தெருக்களும்

17. வீடமைப்பும் நிர்மாணத்துறையும்

18. நகர திட்டமிடலும் அபிவிருத்தியும்

19. கிராமிய அபிவிருத்தி

20. உள்ளுராட்சிமன்றங்கள்

21. கூட்டுறவுகள்

22. மாநிலத்திற்குள்ளான உணவு விநியோகமும் பகிர்ந்தளிப்பும்

23. சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

24. பொது ஆற்றுகைகள் உள்ளடங்கலாக கலாச்சாரச் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்,

25. தொலைக்காட்சி உள்ளடங்கலான ஒலிபரப்பும் ஊடகமும்

26. நிவாரணங்கள், புனர்வாழ்வு, புனர்நிர்மாணம்

27. சமூகப் பாதுகாப்பு

28. காவல்துறையும் சட்டமும் ஒழுங்கும். (மீன்பிடி உரித்துகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும் கரையோர வளங்களை பாதுகாக்கும் பொருட்டும் காவல்துறை ஒரு கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்கமுடியும்)

29. சீர்திருத்தும் நிலையங்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை நிறுவனங்களின் நிர்வாகம்

30. மாநில பொதுச்சேவைகள்

31. விளையாட்டுத்துறை

32. மாநிலத்திற்குள்ளான கூட்டிணைக்கப்படாத சங்கங்களையும் மன்றங்களையும் ஒழுங்குபடுத்தல்

33. மாநிலத்தின் கடன்

34. உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன் மற்றும் உதவி பெறுதல் (சர்வதேச கடன் பெறுதலின் போது குறித்த வரையறையை மீறும் பட்சத்தில் மத்தியின் ஒருங்கியைவு தேவைப்படும்)

35. மாநிலத்துக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு, சர்வதேச நன்கொடைகள், அபிவிருத்திக்கான உதவிகளை ஒழுங்குபடுத்தலும் ஊக்குவித்தலும்.

36. மாநில நிதி மற்றும் கடன் நிறுவனங்கள்

37. மதுவரி தீர்வைகள்

38. பிராந்தியத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள் மீதான விற்பனைப் புரள்வுவரிகள் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகள்.

39. தேசிய லொத்தர்கள் தவிர்ந்த பந்தய வரிகளும், பரிசுப்போட்டிகளும், லொத்தர்களும் மீதானவரிகள்.

40. மோட்டார் வாகன உரிமம் மற்றும் கட்டணங்கள்.

41. மோட்டார் வாகன மற்றும் ஆதன விற்பனைகள் மீதான முத்திரைக் கட்டணம்.

42. நீதிமன்றங்களினால் அறவிடப்படும் தண்டப்பணங்கள்

43. நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மீதானமுத்திரைக் கட்டணம் உள்ளடங்கலாக நீதிமன்ற கட்டணங்கள்.

44. இறைவரியினை மதிப்பிடுதல், அறவிடுதல் உள்ளடங்கலான காணி வரி அறவீடு மற்றும் வரி அறவிடும்; நோக்கங்களுக்காக காணி பதிவேடுகளை பேணுதலும்.

45. கனிப்பொருள் உரிமைகள் மீதானவரிகள்.

46. மாநில கணக்காய்வு

47. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்டவிடயங்கள் தொடர்பில் சட்டங்களை ஆக்குதல்.

48. மாநில நிரலில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தண்டப்பணம்

49. மாநில மட்டத்திலான திட்டமிடல்

50. மாநிலத்துக்கான சட்ட சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்

51. தொல்பொருள் மற்றும் பாரம்பரிய அமைவிடங்கள், நூதனசாலைகள், சுவடிகள்

52. மாநிலத்துக்குள்ளான நிர்வாகம்

53. மாநிலத்துக்குள்ளான நீதிநிர்வாகம்

54. மாநில திரட்டுநிதியம்.

மத்திய நிரல்

1. பாதுகாப்பு, மத்திய பந்தோபஸ்து மற்றும் ஆயுதப்படைகள்.

2. மத்திய புலனாய்வுத் திணைக்களம் சமஷ்டி நிரலுக்குட்பட்ட எல்லா விடயங்கள் தொடர்பிலான காவல்துறை அதிகாரங்கள்.

3. குடிவரவு, குடியகல்வு

4. வெளி விவகாரங்கள்

5. தேசிய குடிசன மதிப்பும் புள்ளி விபரமும்

6. நாணயமும் வெளிநாட்டு நாணய மாற்றும், சர்வதேச பொருளாதாரத் தொடர்புகள் நாணயக் கொள்கை.

7. மத்திய அரசுக்கான பொதுக்கடன்கள்

8. மத்திய அரசுக்கான வெளிநாட்டுக் கடன்கள்

9. வங்கி மற்றும் நிதியில் நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல்கள்.

10. காப்புறுதி

11. பங்குப் பரிவர்த்தனையும் எதிர்காலச் சந்தை வாய்ப்பும்

12. மத்திய அரசின் கணக்காய்வு

13. தனியாட்களினதும் கம்பனிகளினதும் கூட்டுத்தாபனங்களினதும் வருமானம் மூலதனம் செல்வம் என்பவற்றின் மீதானவரிகள்.

14. மாநில வரிகள் தவிர்ந்த மத்திய அரசுக்கான மொத்த விற்பனை வரவு வரிகளும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிகளும்

15. இறக்குமதி ஏற்றுமதி தீர்வைகள் உள்ளிட்ட சுங்கத் தீர்வைகள்

16. மத்திய அரசினால் அல்லது மத்திய திரட்டு நிதியினால் செலுத்தப்படக் கூடிய ஓய்வூதியம்

17. அணுசக்தி

18. தேசிய மின் உற்பத்தி பராமரிப்பும் முகாமைத்துவமும்

19. சர்வதேச போக்குவரத்து மத்திய அரசின் போக்குவரத்து மற்றும் மத்திய அரசின் புகையிரதப் போக்குவரத்தும்

20. விமானப் போக்குவரத்து

21. மத்திய அரசின் அதிவேக நெடுஞ்சாலைகள்

22. கடலோர வலயம் தொடர்பிலான கடலோரப் பாதுகாப்பு வரலாற்று நீர்ப்பரப்புகள், ஆட்புல நீர்ப்பரப்புகள் உள்ளடங்கலாக பொருளாதார வலயங்கள் கண்ட மேடுகள் உள்ளடங்கலாக, சர்வதேச கப்பற் தொழிலும்; கப்பல் போக்குவரத்தும்

23. மத்திய அரசுக்கான தேர்தல்கள்

24. தபால் மற்றும் தொலைத்தொடர்புகள்

25. மத்திய அரசின் பொதுச்சேவைகள் மற்றும் மத்திய அரசின் பொதுச்சேவைகள் ஆணைக்குழு

26. மருந்துகள், நஞ்சுகள் மற்றும் போதைவஸ்துகள்

27. நீதி நிர்வாகம்

28. மத்திய அரசுக்கான கைத்தொழில் ஆராய்ச்சியும் பயிற்சியும்

29. தரநிர்ணயம் மேம்பாடு சம்பந்தமான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்

30. ஆக்கவுரிமைகள், புத்தகக்காட்சிகள், வடிவமைப்புகள், பதிப்புரிமை, புலமைத்துவ வியாபாரக் குறிகள், வணிகக் குறிகள்.

31. ஏகபோகவுரிமை இணைப்புகள்

32. மத்திய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

33. மத்திய தொல்பொருள்கள் மற்றும் நூதனசாலைகள்

34. மத்திய விளையாட்டுத்துறையின் நிர்வாகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி

35. இயற்கை அழிவு, பேரிடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தலையீடு செய்தல்

36. தொழில் தரம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள்

37. பிரஜாவுரிமை

9. காணி

9.1 காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'அரச காணி' என வரையறுக்கப்பட்டவை மாநிலங்களிற்கு உரித்தாகும்.

9.2 மத்திய நிரலின் கீழான விடயங்கள் தொடர்பில் நியாயமாக தேவைப்படும் காணிகள் தவிர தற்போது மத்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் அனைத்தும் மாநிலங்களுக்கு உரித்தாகும்.

இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.3 தற்போது மத்திய நிரலில் இல்லாத விடயம் ஒன்று தொடர்பான அரச காணி மத்தியின் கட்டுப்பாட்டில் இருப்பின் அது மாநிலத்தைச் சேரும்.

9.4 மத்தியின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் உள்ள தனியார் காணிகள் அனைத்தினதும் உடமை அவற்றின் சட்டபூர்வ உரித்தாளரிற்கு கையளிக்கப்படல் வேண்டும்.

9.5 காணி கைமாற்றம், காணி அபிவிருத்தி, காணிச் சீர்திருத்தம், காணி பயன்பாடு, காணி விற்பனை, உள்ளடங்கலாக காணி தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மாநிலங்களிற்கு பூரண உரித்து உண்டு.

9.6 நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் அல்லது சுற்று நிருபங்கள் போன்றவை மாநிலத்திற்கு உரித்தாகிய காணி அதிகாரங்கள் தொடர்பில் முரணாக இருக்குமிடத்து அவை வலிதற்றவையாகும்.

9.7 மாநிலத்தினுள் உள்ள காணி ஒன்றை மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு பயன்படுத்த மத்தி விரும்புமிடத்து, அதனை மத்திய அரசாங்கம் மாநிலத்திடம் கோரலாம். இது தொடர்பில் பிணக்கு ஏதும் இருப்பின் அப்பிணக்கானது மத்தியஸ்தத்திற்கு விடப்பட்டு இறுதியாக அரசியலமைப்பு நீதிமன்றினால் தீர்க்கப்படலாம்.

9.8 மத்திய நிரலில் உள்ள விடயம் ஒன்றிற்கு மாநிலத்தினால் காணி ஏதாவது வழங்கப்பட்டிருக்குமிடத்து மத்திய அரசாங்கம் அத்தேவைக்கு மாத்திரமே அதனைப் பயன்படுத்தலாம்.

10. உள்ளூராட்சி மன்றங்கள்

10.1 உள்ளூராட்சி சபைகளின் கட்டமைப்பு, அதிகாரங்கள், அமைவு போன்றவை தொடர்பில் மாநிலம் சட்டங்களை இயற்றும்.

10.2 அவ்வுள்ளூராட்சி சபைகள் குறிக்கப்பட்ட மாநிலத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பதுடன் அச்சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஒதுக்கப்பட்ட விடயங்களை செயற்படுதுவதுடன் அவ்விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட மாநிலத்தின் முகவராகவும் தொழிற்படும்.

10.3 உள்ளூராட்சி சபைகள் உட்பட நிர்வாக அலகுகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மாநிலங்கள் அதிகாரமுடையதாக இருக்கும்.

11. பொலிஸ், சட்டம் மற்றும் ஒழுங்கு

11.1 பொது ஒழுங்கு உள்ளிட்ட சட்டம் மற்றும் ஒழுங்கும் பொலிஸ் அதிகாரங்களும் மாநிலங்களின் அதிகாரங்களாக இருக்க வேண்டும். ஆயினும் கொழும்புத் தலைநகரப் பிராந்தியத்துக்கும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே உள்ளிட்ட அதன் சுற்றுப்புறங்களுக்குமாக மத்திக்கும் ஒதுக்கப்படலாம்.

11.2 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் படையொன்று இருக்க வேண்டும் என்பதுடன் அது மாநிலத்துக்குள் பொது ஒழுங்கைப் பேணுவதற்கும்; அத்தகைய குற்றங்களைத் தடுத்தல், கண்டுபடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.

11.3 பொலிசுக்குள் கரையோரப் பாதுகாப்பு பிரிவொன்று உருவாக்கப்படுவதுடன் குறித்த பிரிவானது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மீன்பிடி உரிமைகளை உறுதிப்படுத்தவும் கரையோர வளங்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.

11.4 மத்திய அரசுக்கான நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், கண்டுபிடித்தல் புலன்விசாரணை செய்தல் மற்றும்; வழக்குரைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் சர்வதேச குற்றங்கள் மற்றும் தலைநகரப் பிராந்தியத்தில் இடம்பெறும் குற்றங்கள் போன்றவற்றுக்கு பொறுப்பாக மத்திய புலனாய்வுத் திணைக்களமொன்று உருவாக்கப்படுதல் வேண்டும்.

11.5 ஒவ்வொரு மாநிலத்திலும் பொலிஸ் ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் மத்திய அளவில் மத்திய பொலிஸ் ஆணைக்குழுவொன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.

11.6 மத்திய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும். மாநில பொலிஸ் ஆணைக்குழுவிற்கான அங்கத்தவர்கள் மாநில நல்லாட்சிச் சபையினால் நியமிக்கப்பட வேண்டும்.

11.7 மாநில அரசுக்குள்ளாக ஒரு கடுமையான நிலை ஏற்படுகின்ற போது இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டி, குறித்த மாநில அரசின் முதலமைச்சர் மத்திய அரசின் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரலாம்.

இரண்டு வாரங்களுக்கிடையில் மாநில சட்டவாக்க சபை குறித்த முடிவினை பலப்படுத்தாது விட்டால் முதலமைச்சரின் வேண்டுகோள் காலாவதியாகிவிடும்.

12. வெளியுறவுக் கொள்கை

12.1 வெளியுறவுக் கொள்கை மத்திய நிரலுக்குரிய விடயமாக இருக்கும். எப்படி இருப்பினும் மாநில நிரலுக்குரிய விடயம் ஒன்று வெளியுறவுக் கொள்கைத் தீர்மானத்திற்குரிய விடயமாக உள்ளபோது, மாநில அரசின் அத்தியாவசிய நலன்கள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பிலான குறித்த விடயம் பற்றி வெளியுறவுக் கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மாநில அரசு அதில் பங்கெடுக்கும்.

மாநில அரசுகளின் அதிகாரங்கள் பற்றியதாக ஒரு விடயம் உள்ளபோது, மாநில அரசின் பங்களிப்பு காத்திரமானதாக இருத்தல் வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாநில அரசுகள் பொருத்தமான வகையில் சர்வதேச இணக்கப்பாடுகளில் பங்கெடுக்கும்.

12.2 வடகிழக்கு மாநில அரசு தனது பொருளாதார, கல்வி, கலாச்சார நலன்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசுக்குரிய தூதுவராலயங்கள் உயர் ஸ்தானிகராலயங்களில் தனக்கான ஒரு அலகினை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கும்.

13. பொதுச் சேவை

13.1 பிரதம செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர்கள் ஆகியோர் முதலமைச்சரினால் மாநில அமைச்சரவையின் ஆலோசனையுடன் நியமனம் செய்யப்படுவர்.

13.2 மாநிலத்தின் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களை மேற்கொள்வதற்கு மாநில பொதுச் சேவைகள் ஒன்று ஏற்படுத்தப்படும்.

13.3 அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும். ஒவ்வொரு மாநில பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்று கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு இவ்வாணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நல்லாட்சிக்கான அவையின் பரிந்துரையின் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்படுவர்.

13.4 மாநிலத்திற்குட்பட்ட கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் நியமனங்கள், இடமாற்றம், மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் என்பவற்றை மாநில பொதுச் சேவைகள் ஆணைக்குழு கொண்டிருக்கும்.

மேற் குறித்த உத்தியோகத்தர்கள் பிரதம செயலாளர் அல்லது மாநில அரசாங்கத்தின் ஊடாக மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்வர்.

13.5 மத்திய பொதுச் சேவைகள் ஆணைகுழு மத்திய அரசாங்கத்தின் செயற்பரப்பினுளடங்கும் மத்திய நிரலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தும்.

13.6 மத்திய பொதுச் சேவைகளிற்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு, பதவி விலக்கல், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழு பொறுப்பாக இருக்கும்.

மத்திய பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் மீது பிரதம மந்திரியால் நியமிக்கப்படுவர்.

14. ஆட்சேர்ப்புக் கொள்கை

14.1 மத்திய பொதுச் சேவைகளுக்கும் பாதுகாப்பு படைக்குமான ஆட்சேர்ப்பானது முழு நாட்டினதும் இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

14.2 மாநில பொதுச் சேவைகளுக்கும் காவல்துறைக்குமான ஆட்சேர்ப்பானது அப்பிராந்திய இன விகிதாசாரத்தினைப் பிரதிபலித்தல் வேண்டும்.

15. கல்வி

15.1 கல்வி என்னும் விடயமானது மாநிலங்களுக்கு பாரப்படுத்தப்படல் வேண்டும். இது ஆரம்ப, இடைநிலை மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கலான மேல்நிலைக் கல்வி ஆகியவற்றையும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் சார் கல்வி போன்றவற்றை வழங்கும் நிறுவகங்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

15.2 ஏதேனும் பாடசாலை, பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் மேல்நிலைக் கல்வி நிறுவகம் என்பனவற்றை ஆரம்பிப்பதோ அல்லது கொண்டு நடாத்துவதோ மாநிலங்களின் விடயப்பரப்புக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

15.3 கல்வி நிறுவகங்களில் ஆளணியினரை வேலைக்கமர்த்தல் மற்றும் அவர்கள் மீதான ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு போன்றவை மாநில கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

16. அரசிறை சமஷ்டி

16.1 மாநிலங்கள்; தமது அதிகாரங்களை சுயாதீனமாக பிரயோகிக்ககூடியதாக இருப்பதை அரசிறை ஏற்பாடுகள்; உறுதிப்படுத்த வேண்டும்.

16.2 அரசிறை சமநிலைப்படுத்துகை மற்றும் சமாந்திர சமத்துவம் ஆகியவற்றை அமுல்ப்படுத்துவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் போது வடக்குக் கிழக்கில் போரினால் ஏற்பட்ட தாக்கம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

16.3 அரசிறை உறவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு பிணிக்கும் தன்மை வாய்ந்த சிபாரிசுகளை மேற்கொள்ளும் அதிகாரங்களைக் கொண்ட மத்திய நிதி ஆணைக்குழு உருவாக்கப்படல் வேண்டும்.

16.4 வடக்குக் கிழக்கு மாநிலமானது சர்வதேசத்திடமிருந்து நேரடியாக கடன் மற்றும் உதவி பெறுவதற்கான அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கின் கடன் சுமையானது மத்திய அரசாங்கத்தின் பொறுப்புடைமையாக இல்லாத வேளையில் மத்திய அரசாங்கத்தில் தலையீடு இன்றி சர்வதேச உதவிகளை நேரடியாகப் பெறுவதற்கான உரிமையையும் கொண்டிருத்தல் வேண்டும்.

கடன்பெறுதலானது மத்திக்கு தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும் தருணத்தில் மாநிலமானது மத்திய அரசாங்கத்துடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.மத்தி - மாநிலத்திற்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்தல்

17. அரசியலமைப்பு நீதிமன்றம்

17.1 அரசியலமைப்பு தொடர்பான சகல விடயங்கள் சம்பந்தமாக தீர்ப்பு வழங்குவதற்கான முழுமையான நியாயதிக்கத்தை கொண்டதாக அரசியலைப்பு நீதிமன்றமொன்றானது இருக்க வேண்டும் என்பதுடன் அடிப்படை உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பான இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகவும் அது அமைந்திருக்க வேண்டும்.

17.2 மத்திய பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டவாக்க மன்றங்களினால் ஆக்கப்படும் சட்டவாக்கங்களை நீதிமுறை மீளாய்வு செய்கின்ற நீதிமன்றமாகவும் அரசியலமைப்பு நீதிமன்றம் அமைந்திருக்க வேண்டும்.

17.3 அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மேற்கொள்ளப்படும் நியமனங்களானவை இலங்கையின் பன்மைத்துவ தேசியத் தன்மையை பிரதிபலிப்பதாக அமைந்திருத்தல் வேண்டும்.

17.4 பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்களைக் கொண்ட அமையமானது (Colloquium) புலமைவாய்ந்த சட்டவாளர்களிலிருந்து 9 உறுப்பினர்களை அரசியமைப்பு நீதிமன்றத்துக்கு நியமனஞ் செய்ய வேண்டும்.

முதலமைச்சர்களும் பிரதமரும் முறையே மாநில நல்லாட்சி பேரவையினதும் அரசியலமைப்புச் சபையினதும் ஆலாசனைகளின் பேரில் செயற்பட வேண்டும்.

17.5 வடக்கு-கிழக்கு மாநில முதலமைச்சரானவர் சமஷ்டி ஏற்பாடுகளின் சமச்சீரற்ற தன்மையின் அடிப்படையில் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு 3 உறுப்பினர்களை நியமித்தல் உரித்துடையவராதல் வேண்டும்.

வடக்கு-கிழக்கு மாநிலம் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பில் வடக்கு கிழக்கு மாநில முதலமைச்சரால் பிரேரிக்கப்பட்ட 3 நீதிபதிகளில் குறைந்தது 2 பேராவது ஒத்துப் போயிருத்தல் வேண்டும்.

17.6 பாராளுமன்றம் அல்லது மாநில சட்டசபையினால் சட்டம் ஒன்று ஆக்கப்படும் போது அதன் அரசியலமைப்புக்கமைவாந்தன்மை பற்றி எவரேனும் ஒரு பிரஜை அரசியலமைப்பு நீதிமன்றில் வழக்கிடலாம்.

18. நீதித்துறை

18.1 ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்க வேண்டும். முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் கையாண்ட வழக்குகள், வழக்குரைப்புகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் மேன்முறையீடு, மீளாய்வு மற்றும் முன்னிலை மீட்பு செய்வதற்கான நீதிமன்றாகவும் முதனிலை நீதிமன்றங்கள், மேல் நீதிமன்றங்கள், நியாய மன்றங்கள் மற்றும் நீதி நிறுவனங்கள் விடுகின்ற சட்ட மற்றும் நிகழ்வுப் பிழைகளை சீர் செய்கின்ற மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தை கொண்ட நீதிமன்றாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் செயற்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கம் தொடர்பில் மாநிலத்துக்குள் முதனிலை நீதிமன்றாகவும் செயற்படும்.

18.2 பாராளுமன்றமும் மாநில சட்டவாக்க சபையும் சட்டத்தால் அளிக்கப்படுகின்ற தத்துவங்கள் தொடர்பில் முதனிலை மற்றும் மேன்முறையீட்டு அதிகாரங்களை பிரயோகிக்கின்ற நீதிமன்றமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளங்கும்.

18.3 மத்திக்கான நீதித்துறை உயர் நீதிமன்றத்தை மாத்திரம் கொண்டதாகவும் அது மேன்முறையீட்டுக்கான ,றுதி நீதிமன்றமாகவும் விளங்கும்.

18.4 மாநிலத்துக்கான மாநில முதலமைச்சருடன் கலந்துரையாடி நல்லாட்சிக்கான மாநில அவையினால் நியமிக்கப்படும் மாநில நீதிச்சேவை ஆணைக்குழு தன்னகத்தே மேன்றையீட்டு நீதிமன்றத் தலைவரோடு மேன்முறையீட்டு நீதிமன்றின் அடுத்த ,ரண்டு சிரேஷ்ட நீதிபதிகளைக் கொண்டிருக்கும்.

18.5 மாநிலத்தக்கான ஏனைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளையும் அதன் கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளையும் நியமிக்கின்ற பொறுப்பினை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது கொண்டிருக்கும். நீதிபதிகளுடைய ,டமாற்றம் தொடர்பில் மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவானது மத்திய நீதிச்சேவை ஆணைக்குழுவோடு கலந்துரையாடல் செய்யும்.

19. நல்லாட்சிக்கான மாநில சபை

19.1 முக்கியமான அரசாங்க பதவிகள், அரசாங்க அமைப்புக்களிற்கான நியமனங்கள் சுயாதீனமாக இருப்பதை உறுதிப்படுத்த நல்லாட்சிக்கான மாநில சபை ஒன்று இருத்தல் வேண்டும்.

19.2 அமைவு : முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர்,மாநில சபையின் முதல்வர், முதலமைச்சராலும், எதிர்கட்சித் தலைவராலும் கூட்டாக நியமிக்கப்படும் திறமை வாய்ந்த துறை சார் நிபுணர்கள் எட்டுப் பேரும் கொண்டதாக அமையும். மேற்கூறிய எட்டு சிவில் அமைப்பைச் சார்ந்தவர்களில் ஆகக் குறைந்தது மூன்று பெண்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

19.3 சபையின் பொறுப்பானது :மாநில நீதிச் சேவை ஆணைக்குழு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், பொது சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு,மாநில மன்றாடியார்,மாநில பொலிஸ் ஆணையாளர்,மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றிற்கு உறுப்பினர்களை நியமித்தல்.

20. மாநில சட்டமா அதிபதி

20.1 நல்லாட்சிக்கான மாநில சபையினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் முதலமைச்சரினால் மாநில சட்டமா அதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் மாநில சட்ட சபையினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு அமைவான தன்மை பற்றிய ஆலோசனைகளை முதலமைச்சருக்கு வழங்குவார்.

20.2 பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணானதாகக் கருதுமிடத்து மாநில சட்டமா அதிபதி முதலமைச்சருடனான கலந்தாலோசனையின் பின்னர் அரசியலமைப்பு

21. அவசர கால அதிகாரங்கள்.

21.1 மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து பிரிவதற்கான மாநில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து,

அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலமைகளுக்கு ஏற்றவாறு, கையகப்படுத்தலாம்.

21.2 அவசரகால நிலைப் பிரகடனமெதுவும் அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் தன்னியக்கமாகவே பிரகடன தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தினுள் மீளாய்விற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

அரசியலமைப்பு நீதிமன்றம் அவசரகால நிலைப் பிரகடனம் சரியானது எனக் தீர்மானிக்குமிடத்து மத்திய அரசின் தலைவர் மாநில சட்ட சபையைக் கலைத்து அவசரகால நிலைப் பிரகடனத் தினத்தில் இருந்து ஆறு மாத காலப்பகுதியினுள் தேர்தலை நடாத்துதல் வேண்டும்.

அவசரகால நிலைப் பிரகடனம் நியாயப்படுத்த முடியாது என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்மானிக்குமாயின் அவசர கால நிலை உடனடியாக அதன் சட்ட அந்தஸ்தையும் வலுவையும் இழந்து விடும்.

21.3 மேலே கூறியவாறு அவசரகால நிலை வலுவிழந்ததும், முதலமைச்சரும் மாநில அமைச்சரவையும் தொடர்ந்து பதவியில் இருப்பதோடு அவர்கள் இடைக்காலப் பகுதியில் நடைபெற்ற எந்த செயல், செயற்பாடுகளுக்கும் கட்டுப்பட மாட்டார்கள்

22. மத்தி-மாநிலங்கள், மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு

22.1 மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கும் மத்திக்கும் இடையேயும் ஏற்படும் பிணக்குகளை கலந்தாலோசித்து சுமூகமான தீர்வு காண்பதற்கு விசேட சபைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படல் வேண்டும்.

22.2 பிணக்குகளைத் தீர்ப்பதற்கான வெளி ஒன்றை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசினால் முதலமைச்சர்களின் நிரந்தர மாநாடு ஒன்று கூட்டப்படல் வேண்டும்.

22.3 கல்வி, போக்குவரத்து போன்ற விடயங்களிற்கு தேவை ஏற்படும் இடத்து விசேட சபைகள் உருவாக்கப்படலாம்.

23. அரசியலமைப்புத் திருத்தங்கள்

23.1 மாநில த்தின் புவிசார் ஆள்புலம், மாநிலத்தின் அதிகாரம் மற்றும் பிராந்தியம் தொடர்பான அனைத்து விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றம் அரசியல் அமைப்பில் மாற்றம் எதனையும் முன்மொழியுமிடத்து அத்திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அனைத்துப் மாநிலங்களினதும் சட்டவாக்க சபைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவும் வேண்டும்.

மேலே விபரிக்கப்பட்டவாறு மத்தியில் ஏதாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு அத்திருத்தம் ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் நிறைவேற்றப்படாது விடின் அம் மாநிலத்திற்கு அல்லது மாநிலங்களுக்கு ஏற்புடையதாகாது.

23.2 ஏனைய அரசியலமைப்புத் திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படின் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்..

24. வடகிழக்குப் மாநில ஆட்சி நடைமுறைக்கான சில முன் மொழிவுகள்.


மேலே குறிப்பிடப்பட்டது போல் தங்கள் மாநிலங்களில் ஆட்சியினைக் கொண்டு நடாத்துவதற்கு அந்தந்த மாநிலங்கள் ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.

1. சட்டவாக்க சபையிலும், மாநில அமைச்சரவையிலும் ஆகக் குறைந்தது 1/3 பங்கு ஆசனம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

2. முதலமைச்சர் தவிர்ந்த ஆகக் கூடுதலாக 14 அமைச்சர்களைக் கொண்ட மாநில அமைச்சரவை. உப அமைச்சர் அல்லது அது போன்ற அமைச்சர்கள் இடம் பெற மாட்டார்.

3. ஐக்கிய நாடுகள் சபையால் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுக்கு என வகுக்கப்பட்ட நியமங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுவதுமாகியதும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வலுவாக்கக் கூடியதுமான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை உள்ளடக்கிய மாநில மனித உரிமைகள் பட்டயம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

4. மக்களின் ஆலோசனைகளுடன் சாதி பாகுபாட்டை இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகள் மாநிலத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் ஆவணத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

5. ஊழலுக்கெதிரான இந்திய செயற்பாட்டாளர்களால் முன் வைக்கப்பட்ட இந்திய ஜன் லோக்பல் சட்டமூலத்தை மாதிரியாகக் கொண்ட சுயாதீன பிரஜைகள் குறைகேள் அதிகாரி நியமிக்கப்படுவார்.

6. நிலையான அபிவிருத்தியையும் பசுமை வளர்ச்சியையும் உறுதிப்படுத்தக்கூடிய அதிகாரங்களை உடைய சுயாதீன பிராந்திய சுற்றுப் புறச்சூழல் அதிகாரசபை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

ஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக அறிவிப்பு.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் தரீனா ஷகீல் (26). கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த 2014 அக்டோபரில் துருக்கிக்கு சுற்றுலா செல்வதாக கைக்குழந்தையுடன் தரீனா ஷகீல் புறப்பட்டார். அங்கிருந்து சிரியா எல்லையில் உள்ள காஸியன்டப் நகருக்கு சென்றார்.

அவரையும் அவரது குழந்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விடுதியில் தரீனா தங்க வைக்கப்பட்டார். சுமார் 30 பெண்கள் அந்த விடுதியில் இருந்தனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மனைவிகளக மாற அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் தரீனாவும் அவரது குழந்தையும் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கொடூரமாக இருந்ததால் அங்கிருந்து தப்பி 2015 ஜனவரியில் அவர் பிரிட்டனுக்கு திரும்பினார். அவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் மீதான வழக்கு பர்மிங்ஹாம் நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

ஐ.எஸ். அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்றது நான் செய்த மிகப்பெரிய தவறு. ட்விட்டரில் என்னை தொடர்பு கொண்ட ஐ.எஸ். தீவிரவாதி, நான் லண்டனில் வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு செல்ல மாட்டேன் என்றும் சிரியாவில் ஜிகாத் போரில் இணையுமாறும் அறிவுறுத்தினார்.

அதை நம்பி சிரியாவுக்கு சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் விபரீதம் புரிந்தது. ஒரு டாக்ஸி டிரைவருக்கு அதிக பணம் கொடுத்து துருக்கி எல்லைக்குள் நுழைந்து அங்கிருந்து பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், தரீனா 3 மாதங்கள் சிரியாவில் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணையவே கைக்குழந்தையுடன் அவர் சிரியா சென்றிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளியாக தீர்ப்பளிக்கிறேன். அவருக்கான தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த சுமார் 56 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களின் நடமாட்டம் குறித்து அந்த நாட்டு உளவு அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.







Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com