Saturday, January 16, 2016

ராஜீவ் காந்தியின் கொலையிலிருந்து அதிரடிப்படை கற்றுக்கொண்ட பாடம்.

பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி புலிப்பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுதாரியான தமிழ் பெண்ணொருவரால் தற்கொலைத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருந்ததும் கொலையாளி மலர்மாலையுடன் சென்று குண்டினை வெடிக்கவைத்திருந்ததும் யாவரும் அறிந்தது.

இந்த கொலையிலிருந்து இலங்கை அதிரடிப்படையினர் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தமது பிரமுகர்களை காத்து வருகின்றது. அதன் அடிப்படையில் யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு செலுத்தும் மாலை முதல் விருந்தினருக்கு அணிவிக்கும் பொன்னாடை வரை சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.

தேசிய பொங்கல் விழா, யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி ஸ்ரீ இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிலையில் பிரதமர் மட்டும் கலந்து கொண்டார். ஜனாதிபதி கலந்து கொள்ளாமைக்கான காரணம் யாழில் மஹிந்தவின் எடுபிடிகளான குதிரைக் கஜேந்திரன் , அனந்தி எழிலன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோா் மேற்கொண்ட ஆா்ப்பாட்டம் எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில், ஆலய வழிபாட்டுக்கு மக்களால் எடுத்துச்செல்லப்பட்ட மலர் மாலையில் இருந்து விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்கான பொன்னாடை வரை அனைத்தும் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தபட்டதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் மாலையில் இருந்து பாலலி வீதி, காங்கேசன்துறை வீதி ஆகியன விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகை தினம் என்பதால் மக்கள் பொருள் கொள்வனவில் அதிகம் ஈடுபட்டிருந்தபோதிலும் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் வீதிகளில் குவிக்கபட்டு தமது பாதுகாப்பு கடமைகளை செவ்வனே செய்திருந்தனர் என்பது சிறப்பம்சமாகும்.


Read more...

Friday, January 15, 2016

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : Hard Talk

ஹிரு-TV உடனான Hard-Talk நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் :

கேள்வி : உங்களுடைய பாட்டனாரோ அக்காலத்தில் 50 க்கு 50 ஐ கேட்டார். நீங்கள் முழுதையும் அல்லவா கேட்கின்றீர்கள்?

பதில் : எங்களுடைய கட்சி தெளிவாக சொல்வதென்னவென்றால் சிறுபாண்மையினருக்கு ஏனைய இனத்தவரைப்போல் அங்கீகாரம்
வேண்டுமென்பதாகும்.

கேள்வி : நீங்கள் முதலாவதாக பாராளுமன்றுக்கு தெரிவானது எந்த ஆண்டில்?

பதில் : 2001 ல்

கேள்வி : 2010 ற்கு பின்னர் உங்களுக்கு பாராளுமன்றுக்கு செல்ல முடியாதுபோனதுதானே?

பதில் : ஆம் போக முடியாது போனது.

கேள்வி : புலிகளியக்கமிருக்கும்போது பாராளுமன்றுக்கு செல்லக்கூடியதாகவிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு புலிகளியக்கம் அழிந்த பின்னர் பாராளுமன்று செல்ல முடியாதுபோனது ஏன்?

பதில் : இது புலிகளிக்த்துடன் சம்பந்தமானதோர் பிரச்சினை அல்லவே. நாம் புலிகளியக்கம் சமர்ப்பித்த வேண்டுதல்களை சமர்ப்பிக்கவில்லையே. நாங்கள் சமஸ்டி முறைக்காகவே முன்நிற்கின்றோம்.

கேள்வி : தமிழ் மக்கள் சமஸ்டி முறையை ஏற்றுக்கொள்கின்றார்களானால் ஏன் தமிழ் மக்கள் உங்களையும் உங்கள் கட்சியையும் ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் : த.தே.கூட்டமைப்பும் சமஸ்டி என்றுதான் கூறுகின்றது. வாக்குகளைப் பெறத்தான் அவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நாங்கள் கூறுவது யாதெனில் தமிழ் மக்கள் த.தேகூ வினரால் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப்படப்போகின்றார்கள் என்பதே!

கேள்வி : 1977 ல் தான் தமிழர் ஒருவர் இந்நாட்டில் எதிர்கட்சித் தலைவரானார். அமிர்தலிங்கம் அவர்கள் சிறந்தவரா அன்றில் சம்பந்தரா?

பதில் : அமிர்தலிங்கம் அவர்கள் அன்று ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களின் அரசிற்கு எதிர்ப்பைக் காட்டினார். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. இவர்கள் வாக்குறுதிகளை வழங்கியே பாராளுமன்றுக்கு வந்துள்ளார்கள்.

கேள்வி : அவ்வாறு வழங்கிய வாக்குறுதிகள் என்ன?

பதில் : முதலாவது - சமஸ்டி முறையூடாக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பார்கள் என்பது
இரண்டாவது - சர்வதேச விசாரணையை முன்னெடுப்பார்கள் என்பது.

கேள்வி : நீங்கள் அக்காலத்தில் மீகவும் பலமாக நம்பியிருந்த அமெரிக்கா கூட இப்போது அந்த நிலையில் இல்லையே?

பதில் : மஹிந்த ராஜபக்ச அவர்கள் இல்லாது போனதுடன் அந்த தேவையும் இல்லாது போயுள்ளது.

கேள்வி : அமெரிக்காவின் மாற்றம் தமிழ் மக்களுக்கு சாதகமானதா பாதகமானதா?

பதில் : பாதகமானது.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பிளவுகள் உண்டா? இல்லை ?

பதில் : பிளவு உண்டு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் பிரச்சினை உள்ளது.

கேள்வி : நீங்களும் விக்னேஸ்வரன் அவர்களும் இணைந்து „தமிழர் பேரவை' என்ற அமைப்பை வடக்கில் எதற்காக உருவாக்கி கொண்டீர்கள்?

பதில் : தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு வேண்டுமென்று அதற்காக முன்வந்துள்ளோம்.

கேள்வி : நீங்கள் உருவாக்கியிருக்கின்ற அமைப்பு ஓர் சிவில் அமைப்பு. அவ்வமைப்புக்கு விக்னேஸ்வரன் போன்ற அரசியல்வாதி ஒருவரை தலைவராக்கி கொண்டது ஏன்?

பதில் : விக்னேஸ்வரன் மக்கள் ஏற்றுக்கொள்கின்றதோர் நபர்.

கேள்வி : அவ்வாறாயின் சம்பந்தன் அவர்களை மக்கள் மிகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்களே. சம்பந்தன் அவர்களை பேரவைக்கு தலைவராக நியமித்திருக்கலாமே?

பதில் : உண்மையைக் கூறினால் சம்மந்தன் அவர்கள் இந்நாட்டில் ஐக்கிய இலங்கை என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கேள்வி : நீங்கள் அங்கம் வகிக்கின்ற பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன். அவரும் சமஸ்டி முறையையா கேட்கின்றார்?

பதில் : ஆம்.

கேள்வி :இந்த பேரவை த.தே.கூ வுக்கு எதிராக செயற்படுகின்ற அமைப்பா?

பதில் : எதிராக செயற்படுகின்ற அமைப்பல்லவே. த.தே.கூ விலுள்ள பங்காளி அமைப்புக்களான ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிறேமச்சந்திரன் புளொட் சித்தார்த்தன் ஆகியோரும் இங்குள்ளார்கள். த.தே.கூ
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அச்சமுறத் தேவையில்லை.

கேள்வி : அவ்வாறாயின் த.தே.கூ வை அச்சுறுத்தவா இவ்வாறானதோர் பேரவையை உருவாக்கினீர்கள்?

பதில் : அச்சுறுத்தவல்ல. மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.

கேள்வி : மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் உங்கள் பேரவை வரும் தேர்தலில் போட்டியிடுமா?

பதில் : நாங்கள் முன்னேறிச் செல்வோம். எதிர்காலத்தில் பார்போம் என்ன நடக்கப்போகின்றது என்பதை.


Read more...

Wednesday, January 13, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு. Peter Schwarz

இற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் பாரிய அழிவினுள் இருந்தன. வல்லரசு அபிலாஷைகள், தேசியவாதம் மற்றும் பாசிசவாதம் அக்கண்டத்தை இரண்டு உலக போர்களின் குவிமையமாக மாற்றியது, அவ்விரு போர்களிலும் ஒருசேர அண்மித்து 100 மில்லியன் பேர் பலியானார்கள். இப்போதோ, அதே போக்குகள் மீண்டுமொருமுறை பரவி வருகின்றன.

ஐரோப்பாவில் எங்கெங்கிலும், ஆளும் உயரடுக்குகள் கூர்மையாக வலதிற்கு நகர்ந்து வருகின்றன. அவை இராணுவ செலவினங்களை அதிகரித்து, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க ஏகாதிபத்திய போர்களில் பங்கெடுத்து வருவதுடன், அகதிகளுக்கு எதிராக எல்லைகளை மூடியும் மற்றும் வெளிநாட்டவர் விரோத உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. அவை ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களை அபிவிருத்தி செய்வதுடன், அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை ஒடுக்க ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கின்றன.

பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து, ஆயிரக் கணக்கான சிப்பாய்களை வீதிகளில் நிறுத்தியதுடன், சிரியா மீது குண்டுவீச பாரசீக வளைகுடாவிற்கு இராணுவத்தின் ஒரே விமானந்தாங்கி போர்க்கப்பலை அனுப்பியது. இக்கொள்கையிலிருந்து ஆதாயமடைந்தது வலதுசாரி தேசிய முன்னணியாகும், அது சமீபத்திய பிராந்திய தேர்தல்களின் முதல் சுற்றில் மிகப் பலமான கட்சியாக உருவெடுத்தது.

ஹங்கேரி மற்றும் போலாந்தில், அரசாங்கங்கள், 1920 கள் மற்றும் 1930 களின் ஏதேச்சதிகார ஆட்சிகளுக்கு பகிரங்கமாக அவற்றின் புகழுரைகளை அளிக்கின்றன.

ஜேர்மனியில், முன்னணி அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும், அந்நாடு மீண்டும் ஐரோப்பாவில் ஓர் "ஆதிக்க சக்தி" மற்றும் "ஒழுங்குமுறையாளர்" பாத்திரத்தை ஏற்க வேண்டுமென கோருவதுடன், ஏதோ நாஜி ஆட்சி குற்றங்கள் ஒருபோதும் நடந்திராததைப் போல உலகின் ஒரு பிரதான சக்தியாக அது மாற வேண்டுமென விரும்புகின்றனர். பொருளாதாரரீதியில் பலவீனமான ஐரோப்பிய ஒன்றிய அங்கங்கத்துவ நாடுகள் மீது பல ஆண்டுகளாக பேர்லின் திணித்துள்ள சிக்கனத்திட்ட கொள்கைகள், ஐரோப்பா எங்கிலும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.

ஒருவிதத்தில் அரசியலில் ஜேர்மன் சான்சிலரைப் பின்பற்றுபவரான இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சியே கூட, வெகுஜனவாதத்திற்கு எரியூட்டும் மற்றும் அக்கண்டம் எங்கிலும் ஆளும் ஆட்சிகளுக்கு கேடுவிளைவிக்கத்தக்க பொருளாதார கொள்கைகளுக்கு அழுத்தமளிப்பதற்காக, மற்றும் இத்தாலிக்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் ஜேர்மனிக்கு ஆதரவான இரட்டை நிலைபாட்டு அடித்தளத்தில் இருப்பதாக இவ்வாரம் பைனான்சியல் டைம்ஸில் அங்கேலா மேர்க்கெலை விமர்சித்தார். வார்சோ, ஏதென்ஸ், லிஸ்போன் மற்றும் மாட்ரிட் அரசாங்கங்கள் வேலைகளை இழந்துள்ளன, ஏனென்றால் அவை உண்மையான வளர்ச்சியில்லாமலேயே நிதிய ஒழுங்குமுறை கொள்கையைப் பின்பற்றின என்று ரென்சி குறைபட்டுக்கொண்டார்.

ஊடகங்களில் வெளியான எண்ணிறைந்த சமீபத்திய கருத்துக்கள், அதிகரித்துவரும் முரண்பாடுகள் மற்றும் பதட்டமான அழுத்தத்தின் கீழ், சாத்தியமான ஐரோப்பிய ஒன்றிய உடைவின் மீது குவிந்துள்ளன.

ராய்டர்ஸின் செய்தியாளர் பௌல் டெய்லர், “நரகம் என்பதிலிருந்து வரவிருக்கும் இன்னும் மோசமானவற்றிற்கு ஐரோப்பாவின் இந்தாண்டு அறிகுறி காட்டுகிறது" என்ற தலைப்பில் எழுதுகையில்: “2015 நெருக்கடிகள், ஒன்றியத்தையே உடைத்து, அதை சின்னாபின்னமாக சிதறடித்து, சீரழித்து, பலவீனப்படுத்தி மற்றும் புதிய எல்லைகளுடன் பிளவுபட்டு போகுமாறு அச்சுறுத்தி உள்ளன,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூல்ஸ், “ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஒரு தசாப்தத்திற்கு இவ்விதத்தில் நிலைத்திருக்கும்" என்று யாராலும் கூற முடியாதென Die Welt இல் எச்சரித்தார். அதற்கான மாற்றீடு, “ஒரு தேசியவாத ஐரோப்பாவாக இருக்கும், எல்லைகள் மற்றும் சுவர்களைக் கொண்ட ஓர் ஐரோப்பாவாக இருக்கும். அது அழிவுகரமாக இருக்கும், ஏனென்றால் அத்தகையவொரு ஐரோப்பா கடந்த காலத்தில் நமது கண்டத்தை மீண்டும் மீண்டும் பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது,” என்றவர் எழுதுகிறார்.

Süddeutsche Zeitung இல் வெளியான ஓர் தலையங்கம், ஐரோப்பிய ஒன்றியம் உடையக்கூடிய சம்பவத்திற்காக ஒரு "மாற்று திட்டத்தையே" (Plan B) கூட கோருகிறது. கிரேக்க நெருக்கடி மற்றும் அகதிகள் நெருக்கடியிலிருந்தோ அல்லது பிரிட்டன் வெளியேறுவதிலிருந்தோ வரும் முக்கிய அபாயத்தை விட, "நவ-தேசியவாதத்திலிருந்து" வரும் அபாயம் ஒன்றும் குறைந்ததில்லை என்று அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.

இக்கருத்துக்களும் மற்றும் ஏனைய கருத்துக்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவு மற்றும் அதனால் உண்டாகக்கூடிய விளைவுகளைக் குறித்து எச்சரித்தாலும், ஐரோப்பாவில் ஏன் தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் தூண்டிவிடப்படுகின்றன என்பதைக் குறித்த கேள்விகளுக்கு அவை பதில் அளிப்பதில்லை. உண்மையில், அவை அத்தகைய கேள்விகளை முன்வைப்பதும் கூட இல்லை.

உத்தியோகபூர்வ பிரச்சார வாதங்களுக்கு முரண்பட்ட வகையில், இரண்டு உலக போர்களின் மையத்தில் ஐரோப்பாவைக் கொண்டு வந்த முரண்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் கடந்து சென்றிருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மக்களை ஒன்றிணைக்கவில்லை, மாறாக அது எப்போதுமே உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் வெளிநாடுகளில் சர்வதேச போட்டியாளர்களுக்கும் எதிராக மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நலன்களின் ஆயுதமாகவே இருந்துள்ளது. அது தேசியவாதம், சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போருக்குகான விளைநிலமாகவே அமைந்துள்ளது.

முதலாளித்துவ அடிப்படையில் கண்டத்தை ஒருங்கிணைப்பது சாத்தியமே இல்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழும் ஆதாரமாக விளங்குகிறது. ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளின் குவிமையமாக உள்ள முதலாளித்துவ தனிச்சொத்துடைமையைப் பாதுகாத்தல், மூலதன மற்றும் இலாபங்களின் சுதந்திரமான நகர்வு ஆகியவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை அவற்றின் குரலை எழுப்பவும் மற்றும் பலமான அரசுகள் அவற்றின் விருப்பங்களைப் பலவீனமான நாடுகள் மீது திணிக்கவும் கூடிய விளைவுகளைத் தவிர்க்கவியலாதவாறு ஏற்படுத்தி உள்ளன. தேசிய மற்றும் சமூக முரண்பாடுகளை ஒழிப்பதற்கு மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் அவற்றை அதீத அளவிற்குத் தீவிரப்படுத்தி உள்ளது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கிழக்கு ஐரோப்பாவிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவாக்கியமை, ஜனநாயகம் மற்றும் செல்வவளத்தைக் கொண்டு வரவில்லை. அந்த புதிய அங்கத்துவ நாடுகள் பிரதான ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு ஒரு மலிவு உழைப்பு ஆதாரமாக சேவையாற்றி உள்ளன. அவற்றின் மக்கள்நலத் திட்டங்கள் அழிக்கப்பட்டு, கூலிகள் குறைந்தளவில் வைக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, அதேவேளையில் ஒரு சிறிய ஊழல்பீடித்த உயரடுக்கு செல்வ வளங்களை அனுபவித்து கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம், முக்கியமாக ஜேர்மனி, நிதிநிலை பலப்படுத்தல் என்ற பெயரில் முன்னொருபோதும் இல்லா சமூக வெட்டுக்களைக் கட்டளையிட 2008 நிதியியல் நெருக்கடியை ஆதாயமாக்கிக் கொண்டுள்ளது. ஒரு முன்னுதாரணமாக்கப்பட்ட கிரீஸில், சராசரி வாழ்க்கை நிலைமை ஒரு சில ஆண்டுகளில் 40 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு இராணுவவாதம் மற்றும் அதிகரித்த ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுத்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்களின் நிஜமான அபாயமும் மற்றும் ஏற்படலாம் என கருதப்படும் அபாயமும், மேற்கொண்டும் ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்குப் போலிக்காரணமாக சேவையாற்றுகின்றன.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க ஏகாதிபத்திய போர்களது விளைவுகள், அகதிகள் நெருக்கடியாக ஐரோப்பாவிற்குத் திரும்பியுள்ளது. அகதிகள் பிரச்சினை ஐரோப்பாவை கூடுதலாக துருவமுனைப்படுத்தி உள்ளது. மக்களின் பெரும்பான்மை பிரிவுகள் நல்லிணக்கத்துடன் பிரதிபலிப்பைக் காட்டிய போதினும், ஆளும் வட்டாரங்கள் அகதிகளுக்கு எதிராக ஒரு சீற்றமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, எல்லையோர முள்வேலிகளை கட்டமைத்து, ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய உடைவிலிருந்து எழும் அபாயங்கள் மிகவும் நிஜமானவை. புதிய போர்களும் மற்றும் சர்வாதிகாரங்களும், ஐரோப்பாவிற்குள்ளேயே கூட, முளைத்தெழும். அந்த அபாயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதன் மூலமாக தடுக்க முடியாது, மாறாக அதற்கு எதிராக மற்றும் அது எதன் மீது நிற்கிறதோ அந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும்.

ஐரோப்பாவை அதன் மக்கள் நலன்களுக்காக ஐக்கியப்படுத்துவதற்கு, அதன் பரந்த ஆதாரவளங்களை அனைவருக்குமான நலன்களில் பயன்படுத்த மற்றும் வரவிருக்கும் போர்களைத் தடுக்க ஒரே வழி, ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் மூலமாக மட்டுமே முடியும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒன்றுதிரட்டலால் மட்டுமே வரவிருக்கும் பேரழிவுகளைத் தடுக்க முடியும்.

Read more...

'பிரா அமைப்பிற்கு' நான் ஆசிர்வாதம் வழங்கினேன் - ராஜித கூறுகிறார்

88-89ம் ஆண்டு பயங்கரமான காலத்தில் செயற்பட்ட மனித படுகொலை துணை இராணுவக்குழுவான 'பிரா அமைப்பிற்கு' தான் ஆசிர்வாதம் வழங்கியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலகுன நிகழ்ச்சியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு பயங்கரவாதத்தினாலேயே பதில் வழங்க வேண்டும் என கூறியுள்ள அவர், பிரா அமைப்பிற்கு எவ்வாறு ஆசிர்வாதம் வழங்கினீர்கள் என்ற கேள்விக்கு பதில் வழங்காமல் தொடர்ந்து நழுவிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

பிரா அமைப்பிற்கு தலைமை வகித்தீர்களா என்ற கேள்விக்கு 'இலலை' என்று தில் வழங்கியதுடன், அந்த அமைப்பிற்கு பட்டியல் வழங்கினீர்களா என்ற கேள்வியிலும் நழுவல் போக்கை அமைச்சர் பேணினார்.

அந்தக் காலத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ மாத்தளை மாவட்ட இராணுவ அதிகாரியாக இருந்ததுள்ளதுடன், அந்தப் பிரதேசத்திலேயே அதிகமான இளைஞர்களின் உயிரிழப்புக்கள் பதிவாகிய இருந்தததாகவும், எவ்வாறாயினும் அது தவறல்ல என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் கூறியுள்ளார்.

பிரா அமைப்பின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தீர்களா என்பதற்கு, அந்தக் காலத்தில் தான் களுத்துறையில் வசிக்கவில்லை என்று அமைச்சர் அதனை நிராகரித்தார்.

எவ்வாறாயினும் 88-89 பயங்கர காலத்தில் இளம் போராட்டக்காரர்கள் ஒவ்வொருவரினது தலைக்கு 50,000 ரூபா பெற்றுக் கொண்ட வைத்தியர் யார் என்ற கேள்வியை நிகழ்ச்சியை நடத்திய எந்த அறிவிப்பாளர்களும் அமைச்சரிடம் கேட்கவில்லை.பிரா அமைப்பின் வைத்தியர் ஒருவர் அன்றைய அரசிடம் 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டதாக, பிந்திய காலத்தில் சிலுமின பத்திரிகை பிரதான தலைப்பு செய்தியாக வௌியிட்டிருந்தது.

Read more...

Tuesday, January 12, 2016

அஸ்திரேலிய புலம்பெயர்வு வாய்ப்புகளால் 100,000 இலங்கையர்கள் பயனடைவு- அவுஸ்திரேலியா கேட்வே

அவுஸ்திரேலியா கேட்வே 2016 இல் பங்கேற்கும் விக்டோரியன் சட்டசபை சபாநாயகர் - டெல்மோ லங்குய்லர் எம்பி

சுகாதாரம் முதல் சொத்துவரை, வியாபாரத்துறையில் வெற்றி, கல்விக் கனவை நனவாக்குதல் என ஒவ்வொரு துறையிலும் உச்சத்தினைத் தொட்டு, சாதனை படைக்கும் வகையில் அவுஸ்திரேலியா இலங்கையர்களுக்கான இரண்டாவது தாய் வீடாக உள்ளது என்றார் அவுஸ்திரேலியாவின் முன்னணி குடிவரவு சட்டவல்லுனர் அவுஸ்திரேலியா கேட்வேயின் டொன் சுசந்த கடுகம்பல

'இந்த 100,000 பேரில் பெரும்பான்மையானோர் மெல்பேர்னில் வசிக்கின்றர். உலகில் மனிதர்கள் வாழத்தகு சிறந்த நகரங்களின் வரிசையில் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக 2015 ஆம் ஆண்டிலும் உயர் இடத்தினைப் பொற்றுள்ளது மெல்பேர்ண். உங்கள் குடும்பத்தவர்கள் நண்பர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியாவை உங்கள் இல்லமாக உணருங்கள்' என்று 2016 ஜனவரி 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய கேட்வேயின் பகிரங்க சந்திப்பு தினத்தில் உரையாற்றுகையில் கடுகம்பல மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள விக்டோரியன் சட்டசபை சபாநாயகர்- டெல்மோ லங்குய்லர் எம்பி இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் லங்குய்லருக்கு 2016 ஜனவரி 9 ஆம் திகதியன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் விசேட வரவேற்பு இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப்புறப் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுக்கிணங்க, 190,000 நிலையான குடிவரவு வெற்றிடங்கள் 2015- 2016 ஆம் ஆண்டில் கிடைக்கக் கூடியதாகவிருக்கும்.
' நிரந்த குடியேற்றத்துக்கான வெற்றிடங்கள் 2015 ஆம் ஆண்டில் உள்ளதைப் போலவே மாற்றமில்லாமல் காணப்படும். அவ்வகையான இடங்கள் 128,550 காணப்படுகின்றன. இதனுள் தொழில் தருனர் அனுசரணை, பொதுவான திறன் மற்றும் வியாபார பிரிவுசுகள் அடங்குகின்றன. 57,400 இடங்கள் குடும்ப குடிவரவுப் பிரிவுகளுக்கு காணப்படுகின்றன. இவற்றுக்கு நெருங்கிய குடும்ப உறவினர்களின் அனுசரணை எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தடன் 565 இடங்கள் விசேட தகைமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலியவுடன் நெருங்கிய வர்த்தக காலாசார மற்றும் பிரத்தியேக தொடர்புகளை பேணுவோருக்கானது.' என 2015 ஆம் ஆண்டின் மே மாதம் 12 ஆம் திகதியன்றைய வரவு செலவுத் திட்டத்தின் ஓரங்கமாக குடிவரவு மற்றும் எல்லைப்புறப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்திருந்தார்.

இவ்வாறு அபிவருத்தி நடவடிக்கைகளின் மூலம் பயன்பெறும் முகமாக, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் குடிவரவு ஆலோசகர்களான – அவுஸ்திரேலிய கேட்வே, மெல்பேர்னை தளமாகக் கொண்ட பெயார்பீல்ட் சட்டத்தரணிகள், உத்வேகத்துடனான ஊக்குவிப்பு, முதலீடு, வர்த்தகம், மற்றும் குடிவரவு வாய்ப்புகளை இக்கண்டத்தில் முடுக்கிவிட்டுள்ளனர்.

மெல்பேர்னில் வதியும் மதிப்புமிக்க புலம்பெயர் இலங்கையரான டொன் சுசந்த கடுகம்பல, இலங்கையின் நன்மைக்காக, அவுஸ்திரேலியாவில் வாழும் சகல பின்னணிகளையும் கொண்ட புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையிலான உறவுகளைப் பலப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சுசந்த கடுகம்பல மெல்பர்ன் மொனார்ஷ் பல்கலைக்கழகத்தில் தனது எல்.எல்.பி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் அவர் தெற்கு அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்திலும் அதேபோன்று விக்டோரியா மாநிலத்திலும் மெல்பர்னிலும் பயிற்சியினை மேற்கொண்டார். 1998 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இரண்டாவது பழமையானதும் தெற்கு அவுஸ்திரேலியாவில் 1838 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பழமையானதுமான சட்ட நிறுவனமான நொக்ஸ் மற்றும் ஹாக்ரேவ் சட்டத்தரணிகள் அமைப்பில் குடிவரவு மற்றும் வர்த்தக சட்டப்பிரிவில் இணைந்துகொண்டார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்வோரின் அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக ஃபெயார்.ஃபீல்ட் சட்டத்தரணிகள் 2005 ஆம் ஆண்டு இலங்கையில் அவுஸ்திரேலியா கேட்வே அலுவலகமொன்றை ஸ்தாபித்தனர். அது ஜெய்க் ஹில்டன் கோபுரத்தில் இயங்குகிறது. தொழில்திறனுடையவர்களும் வர்த்தகர்களும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கான நம்பகமான சேவைகளை திறமையான சட்டவல்லுனர்கள் மூலமாக உதவி வருகிறது.

இலங்கையர்களுக்கு உதவுவதன் மூலமாக அவுஸ்திரேலியா கேட்வே அமைப்பு கொழும்பில் உள்ள பிரசித்திபெற்ற குடிவரவு ஆலோசனை முகவர் அமைப்பாக திகழ்வதற்கு திரு.கட்டுகம்பல வழிவகுத்தார். அவுஸ்திரேலியாவுடனான முதல்தர குடிவரவு நேச நாடு என்ற வகையில் இலங்கையில் இருந்து பல தொழில்வாண்மையாளர்களும் வர்த்தகர்களும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் போக்கினை நாம் கொண்டுள்ளோம். ஆகவே பொதுமக்களுக்கு சரியான தகவல்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியமானது. இது விடயத்தில் பல தவறான அபிப்பிராயங்கள் உள்ளமை பற்றியும் அறிவுறுத்த வேண்டும். குடிபெயர்வு விடயத்தில் பெரும்பாலான இலங்கையர்களுக்கு சரியான தகவலைப் பெற்றுக்கொள்வதில் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன என்றும் திரு.கடுகம்பல தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து பொறியிலாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் கணக்காளர்கள் போன்ற தொழில்வாண்மையாளர்களுக்கு குடிவரவு மற்றும் தொழில்வாய்ப்புகள் காத்துள்ளன. அவுஸ்திரேலிய பட்டப்படிப்பும் இலங்கை அரச பல்கலைக்கழக பட்டப்படிப்பும் சமமானவை என்பதால் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தொழிவாய்ப்பைப் பெறுவதற்கும் குடியேறுவதற்கும் போதுமான தகைமைகள் உள்ளன.

அவுஸ்திரேலியாவானது தரமான கல்வி மற்றும் சுகாதார முறைமைகளையும் கொண்டுள்ளதுடன் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஸ்திரத்தன்மையும் மிகுந்த ஒரு செல்வந்த நாடாகும். அதன் வலுவான பல்கலாசார தன்மையும் நேர வலயமும் ஆசியாவில் இருந்து அதுவும் விசேடமாக இலங்கையில் இருந்தும் குடியேறுவோரை கவரும் வகையில் அவுஸ்திரேலியாவை ஆகர்ஷித்துள்ளது. சிறந்த பொருளாதார செயற்பாடுகளைக் கொண்டிருந்ததால் உலக பொருளாதார மந்த நிலையில் இருந்து தவிர்த்துக்கொண்ட சில செல்வந்த நாடுகளுள் அவுஸ்ரேலியாவும் ஒன்றாக விளங்குகின்றது.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைப் புலம்பெயர் சமூகம் அவுஸ்ரேலியாவின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ளமையை பல வருடங்களாக அவுஸ்ரேலிய மக்கள் அங்கீகரித்துள்ளதுடன் நன் மதிப்பும் வைத்துள்ளனர். திரு.கடுகம்பல சிறந்த சட்டத்தரணிகளுக்கான விருதை பல முறை பெற்றுள்ளவர் என்பது குறிப்படத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டிகளின் போது, இலங்கையின் கிரிக்கெட் அணிக்கு, அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் பாராளுமன்றத்தில் விசேட வரவேற்பு வழங்கப்பட்டது. அம்முறை உலகக் கிண்ணப்போட்டிகளில் 14 சர்வதேச கிரிக்கெட் அணிகள் பங்குபற்றியபோதும், அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வரவேற்பளிக்கப்படும் கௌரவம் இலங்கை அணிக்கு மாத்திரமே கிடைத்து.

'இது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுக்கு நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் இலங்கை புலம்பெயர்வாளர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்துக்கான சான்றாகவும் இது விளங்குகின்றது. இலங்கையின் அபிவிருத்தி. முதலீடு, கல்வி, மற்றும் பயிற்சிகள், நல்லிணக்கம், என்பனவற்றில் பங்களிப்பதன் மூலம் எதிர்கால இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றக்கூடிய வகையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பங்காளியாக அவுஸ்திரேலியா காணப்படுகின்றது. இலங்கைக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் அவுஸ்திரேலியா நல்ல நண்பனாக உதவிக் கரம் நீட்டியிருக்கின்றது' என்றார் கடுகம்பல





Australia Gateway Pvt Ltd
Suite 602 Hilton Residencies (Jaic Hilton) 200, Union Place Colombo 2, Sri Lanka
Tel : +94 112 300627 / 0717347670 / 0777347670
Fax: +94 115 755811
Email: admin@australiagateway.com
Website: www.fairfieldlawyers.com


Read more...

Wednesday, January 6, 2016

சவூதி அரேபியாவில் பாரியளவில் தலைதுண்டிப்பு தண்டனைகள். Bill Van Auken

அரபு உலகில் வாஷிங்டனின் மிக நெருக்கமான கூட்டாளியான சவூதி அரேபியாவின் சர்வாதிகார முடியாட்சி, ஒரேதடவையில் 47 கைதிகளைக் கொன்று, இரத்தஆற்றுடன் இந்த புத்தாண்டை வரவேற்றது.

அரச படுகொலைகளின் இந்த அலை, அவ் அரசராட்சியில் 12 வெவ்வேறு சிறைசாலைகளில் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டு இடங்களில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார்கள், அதேவேளையில் வேறு நான்கு இடங்களில் துப்பாக்கிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் அரச குடும்பத்தின் முற்றுமுழுதான அதிகாரத்தை எதிர்க்க நினைக்கும் எவரொருவருக்குமான ஒரு பயங்கர எச்சரிக்கையாக, பின்னர் அந்த தலையற்ற சடலங்கள் சிலுவையில் அறையப்பட்டு பொதுவிடத்தில் தொங்கவிடப்பட்டன.

சவூதி அரேபியாவின் ஒடுக்கப்பட்ட ஷியைட் சிறுபான்மையின் ஒரு முன்னணி செய்தி தொடர்பாளரும் மற்றும் ஒரு முஸ்லீம் மதகுருவும் ஆன நிம்ர் அல்-நிம்ர், கொல்லப்பட்டவர்களில் மிக முக்கியமானவராக இருந்தார். சித்திரவதையின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் ஒரு கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்ட நிம்ர், “ஆட்சியாளர்களை மதிக்கவில்லை" மற்றும் "ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்து, தலைமை வகித்து, பங்குபற்றினார்" ஆகியவற்றை உள்ளடக்கிய குற்றச்சாட்டுக்களுக்காக தண்டிக்கப்பட்டிருந்தார்.

2011 இல் சவூதி அரேபியாவின் ஷியைட் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள கிழக்கு மாகாணத்தை மூழ்கடித்த பாரிய போராட்டங்களிலிருந்து முளைத்திருந்த இத்தகைய "குற்றங்கள்", ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான மக்கள் கோரிக்கைகளையும் மற்றும் சுன்னி முடியாட்சியின் பாகுபாட்டை மற்றும் ஷியைட் மக்கள் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் வெளிப்படுத்தி இருந்தன.

நிம்ர் உடன் சேர்ந்து ஏனைய மூன்று ஷியைட் கைதிகளும் கொல்லப்பட்டனர், அதில் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டபோது பருவ வயதடையாத சிறாராக இருந்தவர். கொல்லப்பட்டவர்களில் ஏனையவர்கள் சுன்னி இனத்தவர்கள், இவர்கள் 2003 மற்றும் 2006 க்கு இடையே சவூதி அரேபியாவில் நடந்த அல் கொய்தா தாக்குதல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

ரியாத் ஆட்சியால் நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான கொலை வெறியாட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச நோக்கங்களால் உந்தப்பட்ட ஒரு கணிப்பிடப்பட்ட அரசியல் நடவடிக்கையாகும். சவூதி முடியாட்சி அதன் ஆட்சிக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக அடையாளப்படுத்தும் அதன் உள்நாட்டு நடவடிக்கைக்காகவே, நிம்ர் இன் மரண தண்டனையை அல் கொய்தா அங்கத்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து நடத்தியது. முதல் சான்றாக, அதன் நோக்கம் மக்கள்தொகையில் அண்ணளவாக 15 சதவீதத்தை உள்ளடக்கிய, ஒரு முக்கிய எண்ணெய்-உற்பத்தி பிரதேசமாக விளங்கும் கிழக்கு மாகாணத்தில் ஒருங்குவிந்துள்ள ஷியைட் சிறுபான்மையை பீதியூட்டுவதாகும்.

அதேவேளையில், ஒருவிதமான இஸ்லாமிய பயங்கரவாதத்தை உள்நாட்டிற்குள் கொண்டு வரும் எந்தவொரு முயற்சியையும் அது இரக்கமின்றி ஒடுக்கும் என்பதற்கு சவூதி அரசகுடும்பத்தின் ஓர் இரத்தந்தோய்ந்த சமிக்ஞையை வழங்கியது. ஆனால் அத்தகைய பயங்கரவாதத்தை அதுவே தான் வேறு பல இடங்களில், குறிப்பாக சிரியாவில் கொடூரமான விளைவுகளுடன், தூண்டிவிட்டு, நிதியுதவி வழங்கி மற்றும் சித்தாந்தரீதியில் ஊக்குவித்தது. ISIS மற்றும் அல் நுஸ்ரா போன்ற குழுக்களின் வடிவில், இவற்றின் வஹாபி (Wahabi) மத சித்தாந்தமும் மற்றும் பாரிய தலைத்துண்டிப்பு நடவடிக்கைகளும் சவூதி அரேபியாவால் நடத்தப்படும் அரச கொடூரத்தை அடுத்தே முன்மாதிரியாக ஏற்கப்பட்டிருந்த நிலையில், அது கட்டவிழ்த்துவிட்ட பிரங்கன்ஸ்ரைன் அசுரனுக்கு (Frankenstein monster) அதுவே இரையாகக்கூடும் என்ற அதிகரித்த அச்சம் அந்த முடியாட்சியில் நிலவுகிறது.

மிகவும் பொதுவாக, சவூதி அரேபிய ஆளும் குடும்பத்தின் சொந்த தலைகளை தலைத்துண்டிக்கும் இடங்களாக முந்தைய அரச மாளிகைகளை கொண்டு வந்துவிடக்கூடிய சமூக வெடிப்புக்கான நிலைமைகள் கட்டமைந்து வருகின்றன என்று சவூதி அரேபிய ஆளும் குடும்பங்களின் தரங்கெட்ட எஜமானர்களும் ஒட்டுண்ணிகளும் அஞ்சுகின்றனர். ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டு பொருளாதாரங்களையும் பலவீனப்படுத்தும் நோக்கில், வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டு, எண்ணெய் உற்பத்தியில் எந்த குறைப்பையும் நிராகரிக்கும் ஒரு முடிவின் விளைவாக, வீழ்ச்சியடைந்துவரும் எண்ணெய் விலைகள் சவூதி பொருளாதாரத்தையே அதன் கணக்கில் எடுக்கத் தொடங்கியுள்ளது.

2015 வரவு-செலவு திட்ட கணக்கில் 98 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை இருந்ததாகவும், இந்தாண்டும் அதேபோன்றவொரு வீழ்ச்சியை எதிர்நோக்குவதாகவும் சவூதி ஆட்சி கடந்த ஆண்டின் இறுதியில் தகவல் வெளியிட்டது. வருவாயை அதிகரிக்கும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாக, அது எரிவாயு விலைகளில் 50 சதவீத உயர்வைக் கொண்டு வந்தது, மேலும், பொது செலவினங்களை, குறிப்பாக சவூதி சமூகத்தின் மிகப்பெரும் வறிய அடுக்குகளது வாழ்க்கையை குறைநிரப்ப அனுமதித்துள்ள பொருளாதார மானியங்களைக் கூடுதலாக வெட்டவதை நோக்கி அது பயணிக்கத் தொடங்கி உள்ளது. புதிய வரவு-செலவுத் திட்டக்கணக்கை "தீவிர சிக்கனத் திட்டத்தின்" ஒரு நடைமுறையாக பைனான்சியல் டைம்ஸ் விவரித்தது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், 2015 இல் தலைத்துண்டிப்பு தண்டனைகள் மூலமாக குறைந்தபட்சம் 158 பேராவது கொல்லப்பட்டிருக்கின்ற நிலையில், இந்நடவடிக்கைகள் கூர்மையாக உயர்ந்திருப்பதென்பது மக்களைப் பயமுறுத்தும் ஒரு வழிவகையாக சேவையாற்றுகிறது.

சர்வதேச முகப்பில், ஷேக் நிம்ர் இன் அரச படுகொலை ஒரு கணக்கிட்ட ஆத்திரமூட்டலையும் மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் வகுப்புவாத குழப்பங்களைத் தீவிரமாக தீவிரப்படுத்த வடிவமைக்கப்பட்டிருப்பதையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. அந்நடவடிக்கை ஈரானைத் தூண்டிவிட நோக்கம் கொண்டுள்ளது, அதன் ஷியைட் முஸ்லீம் தலைமை "பழிக்குப்பழி வாங்கும் புனித செயல்" எச்சரிக்கையைக் கொண்டு விடையிறுத்தது. தெஹ்ரானில் சவூதி தூதரகத்தின் மீதான மற்றும் ஈரானிய மஸ்ஹத் நகரத்தில் ஒரு தூதரக அலுவலகம் மீதான நெருப்புக்குண்டு தாக்குதல்கள் உட்பட அந்த படுகொலைகள் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டன. இராஜாங்க உறவுகளைக் கடுமையாக்கியதன் மூலமாக ரியாத் விடையிறுத்துள்ளது.

சவூதி முடியாட்சி, அதனுடைய மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளின் உடைய, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நிஜமான நோக்கத்தை முதலில் எட்டாமல், அந்நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்தவொரு முயற்சியையும் தகர்க்க தீர்மானகரமாக உள்ளது. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் இன் பிரதான நேசநாடான ஈரானுடன் பதட்டங்களை அதிகரிப்பதன் மூலமாக, அத்தைகய எந்தவொரு தீர்வையும் தடுக்க மற்றும் ஈரானுடனேயே கூட போருக்கான நிலைமைகளை உருவாக்க முடியுமென சவூதியர்கள் நம்புகின்றனர்.

அந்த பாரிய மரண தண்டனைகளின் அதே நாளில் மிக அரிதாக பொருந்தி இருந்ததென்னவென்றால், யேமன் போர்நிறுத்தம் என்று கூறப்பட்டதை ரியாத் நிறைவு செய்து கொள்வதாக அறிவித்ததாகும், யேமனில் ஷியா மக்களிலில் இருந்து திரட்டப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு கிளர்ச்சி இயக்கமான ஹோதியர்களது எழுச்சியை ஒடுக்க நோக்கங்கொண்ட ஒரு சட்டவிரோத மற்றும் மரணகதியிலான தலையீட்டிற்குச் சவூதி இராணுவம் தலைமை கொடுத்து வருகிறது.

சவூதி ஷியைட் மதகுருவின் மரண தண்டனை நிறைவேற்றம், மத்திய கிழக்கில் ஏற்கனவே சுழன்று கொண்டிருக்கும் பிராந்திய மோதலை இன்னும் விரிவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 1914 இல் ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச்ட்யூக் பெர்டினான்ட் இன் படுகொலையைப் போலவே, இச்சம்பவம் இறுதியில் பிரதான சக்திகளை அதைவிட இரத்தந்தோய்ந்த உலகளாவிய மோதலுக்குள் இழுத்துவரக்கூடிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.

சவூதி ஆட்சியின் குற்றங்களுக்கான முக்கிய பொறுப்பு அதன் பிரதான ஆதரவாளரான அமெரிக்க ஏகாதிபத்தியதின் மீது தங்கியுள்ளது. சவூதி அரேபியாவில் காட்டுமிராண்டித்தனமான முடியாட்சி வெறுமனே நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்தின் ஏதோ சில எச்சசொச்சங்கள் அல்ல. மாறாக அது 1930 கள் மற்றும் 1940 களில் டெக்சகோ மற்றும் ஸ்டாண்டர்ட் நிறுவனத்தால் பெறப்பட்ட விட்டுக்கொடுப்புகளிலிருந்து தொடங்கி சவூதி முடியாட்சியை இன்று அமெரிக்காவின் இராணுவ-தொழில்துறை கூட்டின் ஒரு முதன்மையான வாடிக்கையாளராக மாற்றியுள்ள தற்போதைய பாரிய ஆயுத விற்பனைகள் வரையில், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டின் நேரடியான விளைவாகும்.

சவூதி அரேபியாவின் பாரிய தலைத்துண்டிப்பு தண்டனைகள் ஒரு சிறிய விளைவுகளைக் கொண்ட ஒரு சம்பவம் என்றும், அதற்கும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாகவும் வாஷிங்டன் விடையிறுத்துள்ளது. வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுத்துறை இரண்டும் ஷேக் நிம்ர் இன் அரசியல் படுகொலையை நேரடியாக கண்டிக்காமல், மனித உரிமைகளை மதிக்குமாறு சவூதி ஆட்சிக்கு விசன அறிக்கைகளை "மீள-வலியுறுத்தும்" ஒரு சம்பிரதாயமான அழைப்புகளை விடுத்தன.

சவூதி முடியாட்சியின் உள்நாட்டு ஒடுக்குமுறையில் பெண்டகன் மற்றும் சிஐஏ முழு பங்காளிகளாகும், அதேவேளையில் அமெரிக்கா குண்டுகளையும் மற்றும் இலக்குகள் குறித்த தகவல்களையும், அத்துடன் சவூதி குண்டுவீசிகளுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புதல்களையும் வழங்கியுள்ளது, இது தான் யேமனில் ஒன்பது மாத போரைச் சாத்தியமாக்கியது—அந்த குற்றகரமான தாக்குதல் ஆயிரக் கணக்கான யேமனிய அப்பாவி மக்களைக் கொன்றுள்ளதுடன், நூறாயிரக் கணக்கானவர்களை வீடற்ற அகதிகளாக ஆக்கியுள்ளது.

இரத்தத்தில் ஊறிய சவூதி முடியாட்சி, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றும் சூறையாடும் கொள்கையின் ஒரு வெளிப்பாடாகும். இந்த அதிதீவிர-பிற்போக்குத்தன ஆட்சியை வாஷிங்டன் பாதுகாப்பதும் மற்றும் அதைச் சார்ந்திருப்பதும், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்றழைக்கப்படுவதில் தொடங்கி "ஜனநாயகம்" மற்றும் "மனித உரிமைகளை" ஊக்குவிக்கிறோம் என்று கூறப்படுவது வரையில், அப்பிராந்தியத்தின் அடுத்தடுத்த அமெரிக்க இராணுவ தலையீடுகளுக்கு வழங்கப்படும் எல்லா சாக்குபோக்குகளையும் அம்பலப்படுத்துகிறது.

பகுப்பாய்வின் இறுதியாக, சவூதி அரசகுடும்பத்தினுடனான கூட்டணி மீது ஏற்றப்பட்ட எந்தவொரு கொள்கையும் ஒரு சீட்டுக்கட்டு மாளிகை தான், அது மத்திய கிழக்கின் வர்க்க போராட்டம் மறுமலர்ச்சி பெறுகையில் உடைந்து நொருங்கிப் போகும்.

Read more...

போர் குற்றங்கள் பற்றிய சிறப்பு நீதிமன்றம் குறித்து அவசரப்படப் போவதில்லை!- ஜனாதிபதி

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மm.srisenaனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இலங்கை அரசாங்கம் இதனை செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை. எனினும் அரசாங்கம் தேவையான அனைத்தையும் மேற்கொள்ளும் என, அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து மற்றுமொரு அமைப்பு செயற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனவரி 9ம் திகதி பாராளுமன்றத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளதை நினைவுபடுத்தியதோடு, தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தௌிவுபடுத்தினார்.

இந்தியாவின் உதவியுடனான 13வது அரசியலமைப்பின் நடைமுறை குறித்து இதன்போது வினவப்பட்டது, இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, வாதவிவாதங்களின் பின்னர் அதனை புதிய அரசியல் அமைப்பில் சேர்த்துக் கொள்வது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Read more...

Tuesday, January 5, 2016

தர்மபுரம் முன்பள்ளியை மூடினார் மாகாண கல்வி அமைச்சர். மாணவர்களின் கல்விக்கு நடந்தது என்ன? வி.வதனி

2016ஆம் ஆண்டு சனவரி மாதம் 04ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்தக் காலைப்பொழுதில் சிறகுகள் விரிக்கப்பட்ட பட்டாம் பூச்சிகளாய் எதிர்கால சின்னச் சின்னக் கனவுகளுடன் பெற்றோரின் கரம் பிடித்து பிஞ்சுக்கால்களை மண்ணில் பதித்து முன்பள்ளிக் கல்வியைத் தொடர்வதற்காக தர்மபுரத்தில் அமைந்துள்ள முன்பள்ளிக்கு வருகை தந்தபோது அந்தச் சின்னஞ்சிறுசுகளின் எதிர்காலக் கனவில் மதகுருவானவர் புயலாக வந்தார்.

அன்றையதினம் குறித்த முன்பள்ளிக்கு பெற்றோர்களுடன் மாணவர்கள் வருகை தந்தபோது யாரையும் உள்ளே செல்லவிடாது மதகுருவானவர் தடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல முன்பள்ளியைப் பூட்டி திறப்பினையும் எடுத்து விட்டார். முன்பள்ளி அமைந்துள்ள பகுதிக்கு புதிதாக வருகை தந்துள்ள மதகுருவானவர் அங்கே கல்விநடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களை கல்வி கற்பிப்பதாக இருந்தால் இராணுவத்துடன் தொடர்புடைய நீங்கள் அத்துறையில் இருந்து வெளியேறி எமது வேதனத்தில் கல்வி நடவடிக்கை தொடரலாம் எனவும் அப்படி இல்லாவிட்டால் , நீங்கள் இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பெற்றோர் அனைவரும் மதகுருவிற்கு எதிராகச் செயற்பட்டனர். அதுமட்டுமல்ல இம்முன்பள்ளி கட்டடம் வடமாகாண கல்வியமைச்சர் திரு.குருகுலராசா அவர்களுக்குச் சொந்தமானது. மதகுரு தொடர்பாக கல்வியமைச்சருக்கு கூறப்பட்டபோது அவரும் மதகுருவின் கருத்தையே தெரியப்படுத்தினார்.
கடந்த மூன்றுவருடங்களாக இதே ஆசிரியர்களால் கல்வி நடவடிக்கை நடைபெற்றபோது மௌனமாக இருந்த கல்வியமைச்சர் ஏன் இன்று மாணவர்களின் கல்விக்கு எதிரியாகஇருந்தார்.

முன் அறிவித்தலின்றி இவ்வாறு மதகுருவுடன் இணைந்து தமக்கு சொந்தமான இடம் என்பதற்காக நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டது சரிதானா? அத்திவாரத்தை உறுதியாகப் போடவேண்டிய நீங்கள் அடிப்படை கல்வி அறிவின்றி நடந்தது சரிதானா?

மனதையும் சமயத்தையும் போதிக்கும் உங்களுக்கு எவ்வாறு இரக்கமற்ற மனது வந்தது. இவற்றிற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்.




Read more...

Thursday, December 31, 2015

வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! நக்கீரன் கனடா

பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற வித்தையை யாராவது பழக விரும்பினால் திரு சிறிதரன், நா.உ அவர்களிடம் பாடம் கேட்க வேண்டும். சிறிதரனின் சில இணையங்கள் வெளியிட்டுள்ளது. கேட்டுப் பாருங்கள்.

தலைவர் பிரபாகரனே பல இயக்கங்களை ஒன்று சேர்த்து கட்சி அமைத்தார் என்கிறார். அது உண்மை. அதே சமயம் சேர்த்தார் என்பதை விட சேர்ந்தபோது அதற்கு ஒப்புதல் அளித்தார் என்பதுதான் சரி. ஆனால் தலைவர் பிரபாகரன் கூட புளட், இபிடிபி இயக்கங்களைச் சேர்க்கவில்லை. காரணம் இந்தக் குழுக்கள் அரசோடு சேர்ந்து விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள். போர் முடிந்த போது "வி.புலிகளைத் தோற்கடித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு உண்டு" என்று சித்தார்த்தன் மார்தட்டிக் கொண்டவர்.

"ததேகூ உம் ஒரு தீர்வினை முன்வைக்கலாம் தமிழ் மக்கள் பேரவையும் ஒரு தீர்வினையைத் தயாரிக்கட்டும். எங்களுடைய கட்சியும் தீர்வுத் திட்டங்ளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதே போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சியாக எல்லோரும் ஒரே புள்ளியில் சந்தித்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்வதுதான் மிக முக்கியமானது" என சிறிதரன் சொல்கிறார். அதன் பொருள் என்ன?

அப்படியென்றால் சென்ற தேர்தலில் ததேகூ க்கு மக்கள் கொடுத்த ஆணை என்னாகிறது? ஒரு நாடு இரு தேசம் கேட்கும் ததேமமு, தமிழீழமே முடிந்த முடிவு என்று நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படி ஒரு புள்ளியில் வருவது? ஒரு நாடு இரு தேசக் கோட்பாட்டை, தமிழீழக் கோரிக்கையை சர்வதேசம் ஆதரிக்குமா? சர்வதேச நாடுகளது ஆதரவு இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமா?

பெரும்பான்மைத் தமிழ்மக்கள் தங்கள் சார்பாக பேசுவதற்கு ததேகூ க்கு மட்டுமே ஆணை கொடுத்துள்ளார்கள். ஏனைய அமைப்புகளையும் அவற்றின் கொள்கை கோட்பாட்டுக்களையும் அவர்கள் நிராகரித்துள்ளார்கள். இனச் சிக்கலுக்கான தீர்வுத் திட்டத்தை ததேகூ தான் முன்வைக்க வேண்டும்.

நிற்க. இந்த தமிழ் மக்கள் பேரவை யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது? அதற்கான விடையை ரெலோ கட்சித் தலைவர் மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தமிழ் மக்கள பேரவை என்பது கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியிருக்கிறார். (பின்னர் யாரோ கொடுத்த நெருக்கடி காரணமாக தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்துள்ளார்)

அரசோடும் சர்வதேச சமூகத்தோடும் ஒரே குரலில் பேசுவது நல்லதா அல்லது ஆளுக்கொரு குரலில் பேசுவது நல்லதா?


கடந்த தேர்தலில் ஒரு நாடு இரு தேசம் என்ற மலட்டு முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளார்கள். அதே சமயம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைப்பாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு என்ற கோட்பாட்டுக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் (70 விழுக்காடு) வாக்களித்தார்கள். அப்படியிருக்க பதவி ஆசை பிடித்தவர்களும் அதிருப்தியாளர்களும் குடைச்சல்காரர்களும் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை இன் தேவை என்ன? மக்களை குழப்ப நினைப்பதன் நோக்கம் என்ன?

சிறிதரன் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் எல்லாம் எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகச் சொன்னார். அவரது அறியாமை கண்டு நான் வருந்துகிறேன்.

சென்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை (ததேமமு) அவர் குறிப்பிடும் தேசிய மக்கள் அவைகள் ஆதரித்தன. அதன் குடை அமைப்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (International Council of Eelam Tamils (ICET) ததேமமு யை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தது. அதில் "தமிழர் தாயகமே, எமது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அடித்தளம். ஆதலால், அனைத்துலகளவில் நாம் தொடரும் போராட்டங்கள் வெற்றியடைவதற்கு, தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓங்கி ஒலிக்கின்ற உறுதியான குரலொன்று எமக்குத் தேவை. அந்தக் குரல் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதே எமது நிலைப்பாடு.

‘நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம், சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும், தமிழின அழிப்புக்கு நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வல்லமை பொருந்திய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதனால், உங்களுடைய வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

"புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்."

இந்த அறிக்கையோடு நில்லாமல் 5 1/2 கோடி பணமும் திரட்டிக் கொடுத்தார்கள். ஆனால் எமது மக்கள் புத்திசாலிகள். அவர்களை பகட்டு வார்த்தைகளாலும் மலட்டு கோட்பாடுகளாலும் ஏமாற்ற முடியாது. மக்கள் ததேமமு முற்றாக நிராகரித்தார்கள். அதற்கு வாக்களிக்குமாறு கேட்ட அனைத்துல ஈழத்தமிழர் மக்களவையின் (அஈதம) முகத்தில் கரி பூசினார்கள். மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு புள்ளடி போட்டார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எல்லாம் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்கின்றன என சிறிதரன் பேசுவது சரியா? ததேமமு க்கு ஆதரவாகவும் ததேகூ க்கு எதிராகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (அஈதம) படாது பாடு பட்டது என்பது சிறிதரனுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று?

இப்போது முளைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையை அஈதம அமைப்பு வரவேற்றிருக்கிறது. இது எதிர்பார்த்ததே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் / அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் இன்னொரு முகம்தான் இந்த அஈதம அமைப்பு. இந்த அமைப்பு வன்னியின் எச்சங்கள் மே 2009 க்குப் பின்னர் உருவாக்கிய அமைப்பு. முன்னைய உலகத் தமிழர் அமைப்புகளுக்கு ஈடாக உருவாக்கப்பட்டவை.

அஈதம அமைப்பு ததேமமு இன் இன்னொரு முகம் என்பதற்குச் சான்றாக தமிழ் மக்கள் பேரவையை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை வரவேற்கும் அதே வேளை சிறிலங்கா அரசும் வேறு சில சுயநல சர்வதேச அரசியல் சக்திகளும் தங்கள் நலத்துக்காக எமது மக்களின் வேட்கைகளையும் அவர்களது உரிமைகளையும் கணக்கில் எடுத்து அவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அரசியல் தீர்வினை எட்டுவதற்குப் பதில் தமிழ்மக்களைக் கட்டாயப்படுத்தி ஒரு அரசியல்தீர்வை திணிக்கப் பார்க்கிறார்கள். (While welcoming the formation of the Tamil Peoples Council, Sri Lankan State and some international powers with vested interest are actively seeking to force a compromised political solution on Tamils instead of finding a sustainable political solution based on the aspirations and inalienable rights of our people) என ஒப்பாரி வைத்துள்ளது.

சர்வதேச அரசியல் சக்திகள் என இந்த அமைப்பு குறிப்பிடுவது அமெரிக்க, கனடா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைத்தான். இந்த நாடுகள் தங்களது நலனுக்காக ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழ்மக்கள் மீது திணிக்கின்றனவாம். தெரியாமல்தான் கேட்கிறோம்? இந்த நாடுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு வேறு எந்த நாடுகளது உதவியோடு தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர அஈதம யோ வேறு அவையோ நினைக்கிறது?

இதே அமைப்பு ஐநாமஉபேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானமானது நீதியைப் படுகொலை செய்து மானுட தர்மத்தை குழிதோண்டிப் புதைத்து அந்தக் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்று பாமரத்தன்மையோடு விமர்ச்சித்திருந்தது. மேலே கூறியவாறு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2010 இல் கட்டுக்காசை இழந்த காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு எதிராக புள்ளடி போடுமாறு அறிக்கை மூலம் கேட்டது. ஆனால் எமது மக்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் முகத்தில் பென்னாம் பெரிய நாமத்தைப் போட்டார்கள்.

வேதாளத்தை பிடிக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மறுபடியும் முருக்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை தனது உடைவாளால் வீழ்த்திய கதை மாதிரி சல்லிக்காசுக்குப் பெறுமதியில்லாத அறிக்கைகளை அஈதம என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

உண்மையில் தமிழர்களை ஒன்றுபடுத்த என்று சொல்லிக் கொண்டு உருவாக்கப் பட்ட தமபே யை புலம்பெயர் நாடுகளில் உள்ள அஈதம, தமிழ்நெட் போன்ற அமைப்புகளே பின்னால் இருந்து கொண்டு பொம்மலாட்டம் நடத்துகின்றன. இந்த அமைப்புகளே ததேமமு மற்றும் தமபே இன் சூத்திரதாரிகளாகவும் நிதியுதவி செய்யும் வள்ளல்களாகவும் இயங்குகின்றன. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் தமபே க்கு ஆன அத்திவாரம் 3 மாதங்களுக்கு முன்னர், தேர்தல் தோல்வியை அடுத்து ஜெனிவாவிலும் சுவிசிலும் போடப்பட்டது. அதில் முக்கியமானவர்களில் தமிழ்நெட் ஜெயச்சந்திரன் ஒருவர். மற்றவர் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற கடிதத் தலைப்பை வைத்திருக்கும் குமாரவடிவேல் குருபரன்.

ஜெயச்சந்திரன் என்பவர் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு திரட்டுமுகமாக நோர்வேயில் கூட்டம் நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி மக்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

எனவே இந்த அமைப்புகள் எல்லாம் ததேகூ எதிராக சர்வதேச மட்டத்தில் ஒரு வலைப் பின்னலை உருவாக்கி செயற்பட்டு வருகின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. அர்தத்தோடுதான் ஆடுகின்றது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த அமைப்புக்கள் திரு சம்பந்தரையும் திரு சுமந்திரனையும் பரம விரோதிகளாகவும் துரோகிகளாகவும் பார்க்கும் போது சிறிதரனை நேசத்தோடும் பாசத்தோடும் பார்க்கின்றன. அவரது காணொளி நேர்காணல் அந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. மரத்தை வளர்க்கிறவனையும் மரத்தை வெட்டுகிறவனையும் ஒன்றாக பார்க்க முடியாது.

உண்மையில் தமபே அரசியல் அமைப்பு அல்ல அது ஒரு சமூக அமைப்பு என முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது சரியென்றால் அரசியல்வாதிகள் ஏன் அழைக்கப்பட்டார்கள்? தமிழ் அரசுக் கட்சி ஏன் அழைக்கப்படவில்லை? மூடிய கட்டிடத்துக்குள் ஏன் கூட்டம் நடந்தது? இந்த அமைப்புக்கு ஒன்றுக்கு மூன்று இணைத் தலைவர்களை நியமித்தது ஏன்? அது சொல்லும் செய்தி என்ன? அதற்குள் ஒற்றுமை இல்லை, தலைமைப் பதவிக்கு சிலர் நாயாய் பேயாய் அலைகிறார்கள் என்பதுதானே?

அதிதீவிர தமிழ்த் தேசியம் பேசுகிற இந்த அமைப்புக்களைச் சார்ந்தவர்களே ஜெனிவாவில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானங்களை எரித்தார்கள். அமெரிக்காவின் தேசியக் கொடியை வீதியில் போட்டு எரித்தார்கள். நொவெம்பர் 2013 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய இராஜ்சியத்தின் பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக நூல் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சுமந்திரனின் உருவப் பொம்மையை தனது வண்டியில் கொண்டுவந்த அனந்தி அதனை நிலத்தில் போட்டு எரித்தார். பின்னர் இலண்டனில் திரு சம்பந்தர், திரு சுமந்திரன் உருவப் பொம்மைகளை எரித்தார்கள். திரு சுமந்திரன் மீது அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ் கனடா போன்ற நாடுகளில் வன்முறையை கட்டவுழ்த்து விட்டார்கள்.

கனடா ஐயப்பன் கோயில் அரங்கில் ததேகூ (கனடா) ஒழுங்கு செய்த கூட்டத்தில் சுமந்திரன் பேசுவதை விரும்பாத ஒரு மாபியா கூட்டம் ஐயப்பன் ஆலய அறங்காவலர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது. பயந்து போன கோயில் முதலாளிகள், கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரமிருக்க எந்த வெட்கமோ துக்கமோ இன்றி மண்டபத்தைத் தரமுடியாது என்று கையை விரித்தார்கள்.

இங்குள்ள ஒரு சமூக வானொலி, ஊரார் வீட்டுச் சேலையில் கொய்யகம் கட்டும் வானொலி ஒன்று சுமந்திரனின் பெயர் இருப்பதால் கூட்டம் பற்றிய அறிவித்தலை ஒலிபரப்ப மறுத்தது. இவை என்னத்தைக் காட்டுகிறது? யதார்த்த அரசியல்வாதி திரு சுமந்திரனைக் கண்டு இந்த மாபியாக் கூட்டம் அச்சம் அடைகிறதைக் காட்டுகிறது. சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என இந்த மாபியாக் கூட்டம் நினைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கனடா நாட்டின் சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தங்களது அடாவடித்தனத்துக்கு தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஓகஸ்ட் 17 இல் நடந்த தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு ததேமமு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் என்ற முக மூடிகளுக்கு அப்பால் தமபே என்ற முகமூடி தேவைப்படுகிறது. இதே போல் விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் தனக்குப் போற்றி பாடவும் தன்னை பல்லக்கில் வைத்துத் தூக்கித் திரியவும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.

வட மாகாணசபை தேர்தலைப் புறக்கணித்தவர்கள்தான் இப்போது விக்னேஸ்வரனை பல்லக்கில் வைத்து ஊர்வலம் வருகிறார்கள். மாகாண சபையா? அது அதிகாரம் அற்ற அலங்கார மாநகர சபைக்குச் சமம், 13ஏ திருத்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, வட - கிழக்கு மாகாணங்களைப் பிரித்ததை ஏற்றுக் கொள்வில்லை என எள்ளி நகையாடியவர்கள் அவரை தமபே இன் இணைத் தலைவராக நியமித்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் காலத்தில் ஒரே தலைமை ஒரே கொடி ஒரே இயக்கம் என்று முழங்கியவர்கள் இப்போது தமிழ் அரசுக் கட்சியின் முதன்மை (ஏக அல்ல) இடத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மொத்தம் 10 இடங்களில் ஆறு இடங்களில் 1 - 3 மற்றும் 5 - 6 இடங்களை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே கைப்பற்றினார்கள். தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு மொத்தம் 288,890 (70.70%) விருப்பு வாக்குகளும் புளட்டுக்கு 53,740 (13.15%) வாக்குகளும் இரண்டு இடங்களுக்குப் போட்டியிட்ட இபிஎல்ஆர்எவ் க்கு 45,314 (11.09%) வாக்குகளும் ரெலோவுக்கு 20,684 (5.06%) வாக்குகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் 207,577 (69.12%) வாக்குகளும் இபிடிபி க்கு 30,232 (10.07%) வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 20,025 வாக்குகளும் (6.67%) ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் முன்னணிக்கு 17,309 (5.76%) வாக்குகளும் கிடைத்தன. ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ததேமமு 15,022 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எண்ணி 6 வாக்குகளால் கட்டுக்காசை காப்பாற்றிக் கொண்டது. அந்த 6 வாக்குகள் ததேகூ க்கு விழுந்திருந்தால் ததேகூ மேலும் ஒரு இருக்கை கிடைத்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் விஜயகலா வெறுங்கையோடு வெளியேறியிருப்பார்.

இவை சொல்லித்தரும் பாடம் என்னவென்றால் தமிழ்மக்களில் பெரும்பான்மையோர் ஒவ்வொரு தேர்தலிலும் ததேகூ க்கு வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.

இப்போது முளைவிட்டுள்ள தமபே ஒரு சமூக அமைப்பு என்று சொல்லிக் கொண்டாலும் இந்த அமைப்பு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புத்தான். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திரு செல்வம் அடைக்கலநாதனுக்கு இருக்கிற இருக்கின்ற அரசியல் அறிவை சிறிதரனிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். சம்பாதிப்பதற்கென்றே அரசியலுக்கு வந்தவர். அதுவும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் ஊடாக த.தே.கூ வினுள் நுழைந்து கொண்டவர். இவரது சகோரர்களின் ஊடகங்களின் மாயாஜாலங்களால் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார். எவ்வளவு காலத்திற்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர் இரண்டு தோணிகளில் கால் வைக்கப் பார்க்கிறார். அரசனை நம்பி புருசனை கைவிட நினைக்கிறார். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்.

இன்றைய புவிசார் அரசியல் ஒழுங்கில் இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர, நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய, வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் பேசும் மக்களது வரலாற்று வாழ்விடத்தில் அவர்களுக்கு உள்ள உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு இணைப்பாட்சியை உருவாக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராஜ்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஒரு கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டுகின்றன. அமெரிக்க இராஜதந்திரிகள், ஐநாமஉ பேரவை இராஜதந்திரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். ஐநாமஉ அவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம் ஒரு வாள் போல் சிறிலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு சனவரி 9, 2016 அன்று பிரதமர் விக்கிரமசிங்கா நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் யாப்பு அவையாக மாற்றுவதற்கும் 24 பேர் கொண்ட நடவடிக்கைக் குழுவை நியமிக்கவும் கோரும் தீர்மானத்தை முன்மொழிகிறார். இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 உறுப்பினர் வீதம் சென்று மக்களது எண்ணங்களை கேட்டறிவார்கள். அதன்பின் புதிய யாப்பு ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதையிட்டு ஒரு பொது வாக்கெடுப்பும் நடத்தப் படவேண்டும்.

எனவே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்க தமஅ மெத்தப் பாடுபடுகிறது. தமிழ் மக்கள் பேரவை போன்ற காளான் அமைப்புக்களினால் எந்தப் பலனும் இல்லை. ததேகூ யும் அதன் தலைவர் திரு சம்பந்தரையுமே அனைத்துலக சமூகம் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய தரப்பாக அங்கீகரித்துள்ளது.

2016 இல் இனச் சிக்கலுக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு முறைக்குப் பலமுறை தெரிவித்துள்ளார். எனவே அவருக்குக் கால்தடம் போட்டு விழுத்த எண்ணாமல் தேசியத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் ததேகூ யும் தலைவர் சம்பந்தனின் கைகளைப் பலப்படுத்த முன்வரவேண்டும்.

வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

Read more...

Friday, December 25, 2015

கொழும்பின் சதியா? யாழின் விதியா? என கம்பவாரிதி ஜெயராஜுவுக்கு தெரியாதாம்.

வட மாகாண சபைக்கு வேட்பு மனுக்கோரப்பட்டு அதன் வேட்பாளர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றபோது விக்கினேசுவரனை விடச்சிறந்த தெரிவு கிடைக்கவே கிடைக்காது என்றும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்றும் ஒற்றைக்காலில் நின்றவர்களில் முதலாமவர் கம்பவாரிதி.

தற்போது முதலமைச்சர் என்ற பூனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பைக்கு வெளியே பாய்ந்துவிட்டது. கூட நின்ற புனைக்குட்டிகள் கீயா மீயா என கத்துகின்றன. ஆனால் கம்பவாரிதியோ ஒப்பாரியிடுகின்றார். அவரது ஒப்பாரியில் நான் கொண்டுவந்து நிறுத்தியவர் நல்லவர்தான், ஆனால் இது அவருடைய தப்பல்ல யாழின் விதியாக அல்லது கொழும்பின் சதியாக இருக்கவேண்டுமென, இத்தனை காலமும் அத்தனை அரசியல் பித்தலாட்டக்காரரும் தமிழ் மக்கள் காதில் சூட்டி காய்ந்து சருகாகிய பூவைத்தூக்கி மீண்டுமொருமுறை வைக்கப்பார்க்கின்றார்.

கம்பவாரிதியின் இக்கட்டுரைக்கு பதிலுரைக்க நேரத்தை செலவிடுவதிலும் பார்க்க அக்கட்டுரையை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே விட்டு எனது கருத்தை தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்.

கொழும்பின் சதியா? யாழின் விதியா? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை, ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான்.

கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து,
தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன, பேராசிரியர் சிற்றம்பலமும் என, கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து, இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி, இரட்டைவேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில், இரகசியக் கூட்டம் போட்டு, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை, உருவாக்கியிருக்கிறார்கள்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். முதலமைச்சருக்கும் குறுகுறுத்திருக்கிறது. அதனாற்றான் ‘தமிழ்மக்கள் பேரவை’ அரசியல் கட்சியல்ல, மாற்றுத்தலைமைக்கான ஆரம்பமுமல்ல என்று, ‘அப்பா குதிருக்குள் இல்லை’ என்றாற்போல், அறிக்கை விட்டிருக்கிறார் அவர்.

குறுகுறுக்காமல் எப்படி இருக்கமுடியும்? கடந்த மாகாணசபைத் தேர்தலில், கட்சிகளைக் கடந்த, சமூக அந்தஸ்துடைய, தக்க ஒருவரை, தம் சார்பாகத் தேர்தலில் நிறுத்துவதன் மூலம், கூட்டமைப்புக்குள் எழ ஆரம்பித்திருந்த, சிறு சிறு வெடிப்புக்களை நீக்கலாம் என்றும், மக்கள் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பதாய்க் காட்டலாம் என்றும், ஒரு உயர்ந்தவரை வைத்து உலகுக்கு உண்மை உரைக்கலாம் என்றும்,
சமூகப் பிரமுகர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில், சம்பந்தனும் சுமந்திரனும் கணக்குப்போட, விடையாய் வந்தவர்தான் நம் விக்னேஸ்வரன்.

முதலில் மாட்டேன் என்று ‘பிகு’பண்ணி, பிறகு எல்லோரும் சேர்ந்து அழைத்தால், ‘மாட்டுவேன்’ என்று அறிக்கைவிட்டு, இனமானத்தைக் காக்க, தன்மானத்தை உறுதி செய்துகொண்டு, அரசியலுள் நுழைந்தார் விக்னேஸ்வரன்.

இவர் வருகையின் போது, கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட அதிர்வுகள், கட்சியைப் பொறுத்தவரை ‘சுனாமி’க்கு ஒப்பானவை. தமிழ்மக்களுக்குத் ‘தொண்டு’(?) செய்வதற்காய், முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த, கூட்டமைப்புக்குள் இருந்த பெருந்தலைகள் பல, இவருக்குப் பதவி என்றதும், ஆடி, அசைந்து பின் சம்பந்தனின் ஆற்றுகையில் அடங்கிப்போயின. வஞ்சகம் இல்லாமல் வழிவிட்ட, மாவை போன்றோரைப் போற்றி, ‘அவர்கள் ஆலோசனையைப் பெற்றே இயங்குவேன்’ என்று, அப்போது விக்னேஸ்வரன் விட்ட அறிக்கை, இப்போதும் நினைவில் இருக்கிறது. அவ் அறிக்கை சத்தியத்தால் விளைந்தது என நினைந்தோம். அது சாமர்த்தியத்தால் விளைந்தது என இப்போதுதான் புரிகிறது.

கூட்டமைப்புத் தலைவர்கள் விக்னேஸ்வரனை, சந்தி, சந்தை, சத்திரம் என, பல இடங்களிற்கும் அழைத்துச் சென்று, நடத்திய வாக்கு வேட்டைப் புகைப்படங்கள், பல பத்திரிகைகளிலும் அப்போது வெளியாகின. அவரது தேர்தல் செலவுக்கென சம்பந்தனும் சுமந்திரனும், வெளிநாட்டுத் தமிழர்களைச் சந்தித்துத் திரும்பினர். கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் நீக்கி, தமது வாக்காலும், வளத்தாலும், விக்னேஸ்வரனது வெற்றியை உறுதி செய்து, அவரைப் பெருமளவு வாக்குகள் பெறவைத்து, முதலமைச்சராக்கிய பெருமை, கூட்டமைப்புக்கே உரியது என்பதை, எவரும் மறுக்கத் துணியார்.
இவரும் மறுக்கத் துணியார்.

பதவியும், பவுசும் வந்ததும், முதலமைச்சர் மெல்ல மெல்ல மாறத்தொடங்கினார். தனது இயல்பான சண்டைக் குணத்தாலும், நிர்வாகத்திறமையின்மையாலும், மாகாணசபைத் தேரை, அங்குலக் கணக்கிலும் அசைக்க முடியாமல் போக, அதிமானம் கொண்டவரான முதலமைச்சர், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் துணிவின்றி, அனைவர் கவனத்தையும் திசைதிருப்ப, தமிழ்மக்களது உணர்ச்சியைக் கிளப்பி, அரசியல் செய்யும் புதுவழியைக் கண்டுபிடித்தார். அதற்கு எழுந்த ஆதரவு அலையில், அற்புதமாய்த் தனது பலயீனங்களை மூடி மறைத்தார்.

கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும் சிந்தனை வேறாகிவிடும் என்றான் கம்பன். ‘அறம் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்
பெறல் அரும் திரு பெற்றபின் சிந்தனை பிறிதாம்’

கம்பனின் இக்கருத்திற்கு ஏற்ப, முன்னாள் நீதியரசரின் சிந்தையும் சில கூனிகளின் ஆலோசனையால், கைகேயியின் மனம்போல் திரிந்தது. அது தூய சிந்தையா? என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம்.

குறுக்கு வழியில் நடக்கத்தலைப்பட்ட முதலமைச்சர், அதன் உச்சக்கட்டமாக, கடந்த தேர்தலில், கூட்டமைப்பின் எதிரிகளுடன் மறைமுகமாய்க் கைகோர்த்து, கூட்டமைப்பிற்கு எதிராய்ச் செயற்படத் தலைப்பட்டார். அக் கள்ளத்தொடர்பு ஓரளவு பகிரங்கமாக, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் உரைக்க முடியாமல், தான் ஊமையாவதாய்ச் சொல்லி, உறைந்து போனார் முதலமைச்சர்.
அது அப்போது நடந்த செய்தி.

தேர்தல் முடிவில் அவர் மறைமுகமாய் ஆதரித்த கட்சி அடி அறுந்து போக, ‘ஆப்பிழுத்த குரங்கின் கதையாய்’ ஆனது முதலமைச்சரின் கதை. தான் சோரம் போன கதையை வெளிப்படுத்தத் தயங்கி, தனது ஊமைத்தனத்தைத் தொடர்ந்த முதலமைச்சர், மாகாணசபையில் இன அழிப்புப் பிரேரணையை நிறைவேற்றியும், ஐ.நா.சபைத் தீர்வில் முரண்பட்டும், மக்கள் மத்தியில் தன் கற்பினை நிரூபிக்க முனைந்தார்.

ஐ.நா.சபைத்தீர்வில் உலகத்தோடு ஒத்து, யதார்த்த நிலையைக் கடைப்பிடிக்க முனைந்த, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மேல், வெற்றுணர்ச்சியாளர்களால் பகை பரப்பப்பட, அப்பகைத்தீயில் தன்னை மெருகேற்றி வெளிவந்தார் முதலமைச்சர். தேர்தலின் போது குழப்பம் ஏற்படுத்திய தன்மேல், நடவடிக்கை எடுக்காத கட்சித்தலைவரின் தயக்கம், முதலமைச்சருக்கு மேலும் பலம்தர, அந்நேரம் பார்த்து,
முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென கோரியிருப்பதாய், சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட அறிக்கை, முதலமைச்சரை மேலும் பலப்படுத்திற்று. அப்போது சுமந்திரனுக்குப் பதிலுரைத்து, முதலமைச்சர் வெளியிட்ட நீண்ட அறிக்கை, அவர், கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழ்மக்களின் தனித்தலைவராய் உருவாக விரும்புகிறார் என்பதை, வெளிச்சம் போட்டுக் காட்டிற்று.

அப்போதும் முதலமைச்சர், தான் சோரம் போகவில்லை என்று கூறியபடியே இருந்தார். ஆனால் அவரது அப்பொய்ப் புலம்பல், நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’க் கூட்டத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டமைப்பின் எதிராளிகளுடன் கைகோர்த்து, கூட்டம் நடத்திவிட்டு வெளி வந்த முதலமைச்சர், குற்றம் செய்த குறுகுறுப்பில் மீண்டும் தான் ஊமையாவதாய் உரைத்து, ஊடகவியலாளரிடமிருந்து ஒதுங்கி ஓடியிருக்கிறார்.

எவர் தூண்டினார்களோ தெரியவில்லை. மறுநாளே அவரது ஊமைத்தனம் உடைந்திருக்கிறது. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும், போருக்குப் பிந்திய தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பிலான, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான, ஓர் உறுதியான செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்குமான செயற்பாடாகும் என, நேற்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை நகைப்பைத் தருகிறது.



சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பவர்கள் யார்? தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை, சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாய்க் கொள்ளமுடியாதா? அத்தகையோரைப் புறந்தள்ளி,
மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, இக்கூட்டம் நடத்தப்பட்டதன் மர்மம் என்ன? நடந்துமுடிந்த தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று, முதன்மை உறுப்பினராய் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பிரச்சினையின்போதேல்லாம் முதலமைச்சருக்கு ஆதரவளித்தவருமான, சிறீதரன் (பா.உ.) போன்றோர்கூட, இச்சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பட்டியலில் வரமாட்டார்களா?
அவர்கள் எல்லாம் இவர்தம் செயலால் மனம்நொந்துபோய் இருக்கிறார்கள்.

போருக்குப் பின்னராக, தமிழ்ச்சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகத்தான், அரசியல் அனுபவமே இல்லாத முதலமைச்சர் கையில், வடமாகாணசபை தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை அதை வைத்து, உருப்படியாய் அவர் ஏதும் செய்ததாய்த் தெரியவில்லை. அதுபோலவே அரசியல் தீர்வு சம்பந்தமாக, இதுவரை தன் கட்சித்தலைமைக்கு, இவர் ஏதும் ஆலோசனை வழங்கியதாயும் தெரியவில்லை. இந்நிலையில் சிவில் சமூகத்துடன் சேர்ந்து, இவ்விரண்டையும் செய்யப்போவதாய், அவர் வெளியிட்டிருக்கும் செய்தி, நகைப்புத்தராமல் வேறு என்ன செய்யும்?

பொதுவாக அவரது அறிக்கைகள் பெரும்பாலும் நகைப்புக்குரியவைதான். வடமாகாணசபைக்கென 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அறுபது சதவீதமான தொகையை பாவிக்காமல் திரும்பச் செல்ல விட்டுவிட்டு, 2016 ஆம் ஆண்டு செலவுக்கு தாம் கேட்ட தொகையில், நாற்பது சதவீதத்தையே அரசு ஒதுக்கியிருக்கிறது என்று ஒப்பாரிவைத்து, சில தினங்களுக்கு முன் வந்த அவரது அறிக்கை,
யாருக்குத் தான் நகைப்பை ஏற்படுத்தாது?

தமிழர் பிரச்சினைபற்றி, வடக்கிலிருந்து பார்ப்பதற்கும், தெற்கில் இருந்து பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற, அவரது மற்றொரு அறிக்கை சிரிப்பின் அடுத்த அத்தியாயம். துன்பக் காலத்தில் வடக்கோடு எந்தத் தொடர்புமின்றி சுகித்து வாழ்ந்த, தனது சுயநலத்தை மறைக்க அவர் இட்ட புதிய திரை இது என்பதும், கொழும்பில் வாழும் தலைவர்களைத் தமிழ்மக்களிடம் இருந்து பிரிக்க, அவரது சட்டமூளை செய்த சதி இது என்பதும், அறிவுள்ள எவர்க்கும் புரியக் கூடிய ஒன்றே.

தமிழர் பிரச்சினையை வடக்கிலிருந்து பார்ப்பது, தெற்கிலிருந்து பார்ப்பது என்று தொடங்கினால், அடுத்து மட்டக்களப்பிலிருந்து பார்ப்பது, திருகோணமலையிலிருந்து பார்ப்பது என்றும், கிளிநொச்சியிலிருந்து பார்ப்பது, வவுனியாவிலிருந்து பார்ப்பது என்றும், கனடாவிலிருந்து பார்ப்பது, லண்டனிலிருந்து பார்ப்பது என்றும், பிரிவுகள் பெருகி நீளும். உலகறிந்த ஒட்டுமொத்த தேசிய இனப்பிரச்சினையை, எங்கிருந்து எவர் பார்த்தால் என்ன? விடயம் ஒன்றுதான்.

அதனை, பிராந்தியப்பார்வைகளாய்ப் பிரிக்கும் இவரது புதிய கண்டுபிடிப்பு, உணர்ச்சியாளர்களுக்கு உவப்பாய் இருக்குமேயன்றி, உண்மையாளர்களுக்கு நிச்சயம் உவப்பாய் இருக்க வாய்ப்பில்லை.

மொத்தத்தில், நடந்து முடிந்த ‘தமிழ்மக்கள் பேரவை’ கூட்ட நிகழ்வோடு, ‘சத்தியவித்தகர்’, சத்தியம் வித்தவராய், தமிழர் மத்தியில் பதிவாகிவிட்டார் என்பது உண்மை. ‘சீசரின் மனைவி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கவேண்டும்’ என்பது, மேலைத்தேயத்து அரசியலார் போற்றும் ஒரு தொடர். இது நம்மவர்க்கும் பொருந்துமாம். முதலமைச்சர் ஐயத்திற்குரியவராகி விட்டார். தமிழின அழிப்பை விரிவாய்ச் செய்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன், இன்றும் கைகோர்த்து நின்று, இலங்கை தனிச் சிங்களநாடாக இருக்கவேண்டும் என்று, பிடிவாதம் பிடித்து நிற்கின்ற, சம்பந்தி வாசுதேவநாணயக்காரவுடனான அவரது நெருக்கமான உறவு, குடும்ப உறுப்பினர்களின் பேரின திருமண உறவுத்தொடர்புகள் என்பவையும், அவ்வுறவுகள் புடைசூழவே முன்னாள் ஜனாதிபதியின்முன்
பதவிப்பிரமாணம் எடுத்த அவரது செய்கையும் முதலமைச்சரின் தனிவாழ்வுப் பின்புலத்தை, ஐயத்திற்கு அப்பாற்பட்டதாய்க் காண இடமளிக்கவில்லை.



தமிழர்தம் உரிமை விடயத்தில், உலகம் தரும் அழுத்தத்தை நிராகரிக்க முடியாது, முழுமனதுடன் அதனை ஏற்கவும் முடியாது, அந்தரிக்கும் பேரினத்தலைவர்கள், தமிழ்த் தலைமைகளின் உடைவை எதிர்நோக்கி, ‘சப்புக்கொட்டிக்’ காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதற்குப் பாதை திறக்க முயலும், முதலமைச்சரின் முன் முயற்சிகள், சீசரின் மனைவியை, சந்தேகத்திற்கு ஆளாக்கவே செய்கின்றன.

முதலமைச்சர் தலைமையில் நடாத்தப்பட்ட, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ க்கூட்டம், தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கும் கேள்விகள் பலப்பல. அவற்றைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

☛ முதலமைச்சர் சொன்னது போன்ற நோக்கங்களுக்காகத்தான் மேற்படி கூட்டம் நடாத்தப்பட்டதெனின் அதனை இவ்வளவு ரகசியமாக பூட்டிய அறைக்குள் ஊடகவியலாளர்கள் இன்றி நடத்தியதன் மர்மம் என்ன?

☛ கூட்டம்முடிந்து வெளிவந்த முதலமைச்சரும் மற்றவர்களும் ஏதோ குற்றம் செய்தவர்கள்போல் ஊடகவியலாளர்களைத்தவிர்த்து ஓட நினைந்ததன் காரணம் என்ன?

☛ கூட்டத்திலிருந்து வெளிவந்த முதலமைச்சர் தான் மீண்டும் ஊமையாவதாய் ஏன் சொன்னார்?

☛ வெளிவந்த அனைவரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ‘ஏற்பாட்டாளர்களைக் கேளுங்கள்’ என்றே பதிலளித்தனர். கடைசிவரை சொல்லப்படாத அவ் ஏற்பாட்டாளர்கள் யார்?

☛ நடந்த கூட்டத்தில் பதவி முதலியவை தெளிவாய் தீர்மானிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அங்ஙனமாயின் அதற்கான முன்னாயத்தங்கள் எங்கு எவரால் செய்யப்பட்டன?

☛ இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் எதிராளிகளாய்க் கருதப்பட்ட முக்கியஸ்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டதன் ரகசியம் என்ன?

☛ தேர்தல் வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்புத் தலைமை தன்னோடு ஆலோசிக்கவில்லை என்று குறைசொன்ன முதலமைச்சர் இக்கூட்டம் பற்றி கூட்டமைப்புத் தலைமையோடு ஆலோசித்தாரா? இக் கூட்டத்தினை முன்னின்று ஒழுங்கு செய்தது யார்?

☛ தேர்தலில் மக்களால் முற்றுமுழுதாய் நிராகரிக்கப்பட்டவர்களே இக்கூட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். அங்ஙனமாயின், ஜனநாயக ரீதியான மக்கள் கருத்துக்கு மதிப்பில்லை என்று முதலமைச்சரும், அவரைச் சார்ந்தோரும் கருதுகின்றனரா?

☛ முதலமைச்சர் பதவிக்கு விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதனைக் கடுமையாய் எதிர்த்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின்னர் மாகாண அமைச்சர்கள் தேர்வின் போது தனது தம்பிக்குப் பதவி வழங்கப்படாமையைக் கடுமையாய்க் கண்டித்து பத்திரிகை மாநாடு நடத்தியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஜனாதிபதியின் முன்பாக முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்ததைக் கடுமையாய் விமர்சித்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இன்று அவரே முதலமைச்சரை ஆதரித்து அறிக்கை விட்டும், அவரோடு ஒன்றிணைந்து கூட்டம் நடத்தியும் உறவு காட்டுகிறார். முதலமைச்சரும் ‘ஆயுதக்குழுக்களோடு தன்னால் ஒன்றிணைந்து இயங்க முடியாது’ என்று முன்பு சொல்லிவிட்டு இன்று அவர்களுடனேயே இணைந்து நிற்கிறார். இந்த உறவுகளின் அடிப்படை சுயநலமன்றி வேறு எதுவாய் இருக்கமுடியும்?

☛ கஜேந்திரகுமாருடனான உறவை முதலமைச்சர் மறுத்து வந்தார். இப்போது அவர்கள் உறவு வெளிப்பட்டிருக்கிறது. இந்த உறவு உண்டானது எப்போது? சென்ற தேர்தலின் முன்னரே இவ்உறவு ஏற்பட்டதா? அதனாற்றான் சென்ற தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்க முதலமைச்சர் மறுத்தாரா? ‘வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’ என்ற முதலமைச்சரின் அப்போதைய அறிக்கைக்குப் பின்னால் சுமந்திரன் சொன்னது போல, இவ் உறவால் விளைந்த வஞ்சகம் இருந்ததா? இருந்தது உண்மையென்று இப்போது தெரிந்திருக்கிறது. அப்படியானால் இல்லை என்று முதலமைச்சர் முன்பு சொன்னது தமிழ்மக்களை ஏமாற்றவா?

☛ உலக வல்லரசான அமெரிக்கா, பிராந்திய வல்லரசான இந்தியா, பேரின அரசான தற்போதைய இலங்கை அரசு என்பவை இன்று கூட்டமைப்பை அங்கீகரித்து இனப்பிரச்சினைத்தீர்வில் அதனோடு இணைந்து செயற்படவே தயாராயிருக்கின்றன. இவற்றை எதிர்த்து அல்லது இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் உரிமை பற்றிய நகர்வுகளில் தமிழ்மக்கள் பேரவையால் எதனை முன்னெடுக்க முடியும்?

ஒரு கட்சியிடம் மட்டுமே தமிழர் தலைமையினை முடக்கிவிட்டால், கேட்பாரின்றி அக்கட்சி நடக்கத்தொடங்கிவிடும் என்பதால், மாற்றுத்தலைமைகளும் உருவாகவேண்டுமென, நடந்து முடிந்த தேர்தலின்போது நானே எழுதியிருக்கிறேன். ஆனால் நான் சொன்னது, மக்களால் தேர்தலில் தேர்ந்தேடுக்கப்படவேண்டிய தலைமைகளையே. இன்று மக்கள் கருத்தை மறுத்து, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களோடு கூட்டுச்சேர்ந்து, சதிகள் மூலம் உருவாக்க நினைக்கின்ற மாற்றுத்தலைமையை அன்றாம்.

கடந்த காலங்களில் தமிழ்மக்கள் மத்தியில், புலிகள் பெற்றிருந்த எழுச்சியை உலகம் அறியும். அவர்கள் காட்டும் ஒரு புல்லுக்கும் வாக்களிக்க, தமிழ்மக்கள் தயாராய் இருந்த நிலையிலும், இடைக்காலத்தில் அவசியம் கருதி, அரசியல் தலைமையையும் உருவாக்க நினைந்த புலிகள், தாம் வெறுத்த கூட்டணித்தலைவர்களின் அரசியல் அனுபவத்தை, முற்றாய் நிராகரிக்க நினைக்காமல் தாம் வகுத்த அரசியல் வட்டத்திற்குள், அவர்களையும் ஈர்த்துக் கொண்டனர் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. அஃது அவர்தம் அனுபவச் செறிவின் அடையாளம். ஆனால் இன்று தமிழ்மக்கள் பேரவை அமைத்தவர்கள்,
அனுபவசாலிகளை முற்றாய் நிராகரித்து, தொழிற்தொடர்பின்றி சமூகத்துடன் வேறெந்த தொடர்புமில்லாத, டாக்டர்கள் போன்ற புதியவர்களையும், மக்களால் நிராகரிக்கப்பட்ட சில தலைவர்களையும் உள்வாங்கி, புதிய வழி சமைக்க முயல்கின்றனர். இவர்தம் அறியாமையை என் சொல்வது?

எல்லாம் முடிந்துவிட்டது. கூட்டமைப்பிற்குள் கிளர்ச்சியும், கொந்தளிப்பும் கிளம்பும் என்று பார்த்தால், எந்த ‘அசுமாத்தத்தையும்’ காணவில்லை. சம்பந்தன் பழையபடி தூங்கத் தொடங்கிவிட்டார். ஆனந்த சங்கரி ஏதாவது பேசினாற்றான், அவருக்கு உணர்ச்சி வரும்போல, இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. இனம் பிரிவதற்குமுன்னர் ஏதாவது செய்தாகவேண்டும். ஒன்று முதலமைச்சரை அழைத்து விசாரித்து, தவறுகள் திருத்தப்பட்டு அவரைத்தம்மோடு இணைக்க வேண்டும், அல்லது அவரை கட்சியிலிருந்து விலக்கி, அவர் விரும்பும் பாதையில் செல்ல அவரை அனுமதிக்கவேண்டும். ‘வாசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை’ என்றாள் ஒளவை. அன்பில்லாத உறவை விட, பகை நல்லது என்பது அத்தொடருக்காம் அர்த்தம். உறவா? பகையா? என்று உறுதி செய்யும் நாள், வந்துவிட்டது என்றே உலகம் கருதுகிறது. உரியவர்கள் உணருவார்களா?

தமிழ்மக்கள் தெளிவானவர்கள். தமது உண்மைத் தலைவர்களை அவர்களால் இனம் காணமுடியும் என்று, இன்றும் உலகம் நம்புகிறது. முதலில் தந்தை செல்வா. பின்னர் அமிர்தலிங்கம். பின்னர் பிரபாகரன் என, தம் தலைவர்களை ஒருமித்து அங்கீகரித்தவர்கள் நம் தமிழர்கள். மேற்சொன்ன தலைவர்கள், தம் வாழ்நாள் முழுவதையும் இனத்திற்காக அர்ப்பணித்தவர்கள். அவர்கள் பற்றிய சில மாற்று விமர்சனங்கள் இருந்தாலும், அவர்களது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், இனவிடுதலை ஈடுபாட்டினையும் எவரும் ஐயுற மாட்டார்கள்.

ஆனால் திடீரென முளைத்து, காகம் கஷ்டப்பட்டுக் கட்டிய கூட்டில், களவாய் முட்டையிட்டு, குஞ்சு பொரித்துப் பயன்பெறும் குயிலின் கதையாய், தமிழ்த்தலைமையை, இதுவரை எந்தத் தியாகமோ, அர்ப்பணிப்போ செய்யாமல், வெறும் பதவிப் பவுசையும்,தோற்றப்பொலிவையும் முதலாய் வைத்து, வஞ்சனை வலைவீசி அபகரிக்க நினைக்கும் ஒருவரை, முன்னைத்தமிழ்த் தலைவர்கள் வரிசையில், தமிழினம் தலைவராய் ஏற்றுக்கொள்ளுமா? விதியின் விளையாட்டை யார் அறிவார்? அத்தவறு நிகழ்ந்தால், அது நம் இனத்தின் தவக்குறைவாகவே அமையும்.

என்னவோ தெரியவில்லை. தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகளின் அவதானிப்பால், சில உண்மைகளை நாம் எதிர்வு கூறவேண்டியிருக்கிறது. காலாகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக் காலங்களில், தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை உடைக்கப்பட்டிருக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத் தொடக்கத்தில், தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவராய் இருந்து, கிழக்கில் அக்கட்சியை வளர்த்தெடுத்த இராஜதுரை, கட்சியிலிருந்து விலகி அரசில் அமைச்சுப் பொறுப்பேற்றார். பின்னர் இடையில் சிலகாலம் ரணில் ஆட்சிப்பொறுப்பேற்ற பொழுது, தமது பலத்தால் உலகையே வியக்க வைத்திருந்த புலிகளின், முக்கியத் தலைவர்களில் ஒருவரான, கருணா பிரிக்கப்பட்டு, பின்னர் அவரும் அரசுடன் இணைந்து அமைச்சரானார். இன்று மீண்டும் ரணிலின் ஆட்சி?

வேறு வேறு கொள்கை, வேறு வேறு பாதை என்றிருந்தாலும், இன எழுச்சிக்காய் ஒன்றுபட்டு, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி, ஆயிரம் பிரச்சினைகளைத் தாண்டி ஒன்றுபட்டிருந்து, தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, ஏகத்தலைமையாய் நிமிர்ந்து நின்ற கூட்டமைப்பை, இன்று ஒரு தனிமனிதர் உடைக்கத் தலைப்படுகிறார். சென்ற ரணிலின் ஆட்சியில் புலிகளை உடைக்க ஒரு கருணா. இந்த ரணிலின் ஆட்சியில் கூட்டமைப்பை உடைக்க ?, இது கொழும்பின் சதியா? யாழின் விதியா? யார் அறிவார்?

இக்கட்டுரை தொடர்பில் நான் முதலாவதாக ஜெயராஜுக்கு சொல்ல வருவது யாதெனில், விக்கினேஸ்வரனை முன்மொழிந்ததில் தமிழ் மக்களுக்கு துரோமிழைத்த ஜெயராஜ், தகுந்த ஒருவனை தெரிவு செய்வதற்கு நான் தகுதியற்றவன் என்பதை முதலில் மக்களுக்கு தெரிவித்து, வாழ்நாளில் இன்னொரு தெரிவின்போது எனது மூக்கை நுழைத்து முன்மொழிவுகளை செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டு கொண்டால், அது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பேருதவியாக இருக்கும்.

இயல்பான சண்டைக்குணமும் நிர்வாகத்திறையற்றவர் என்றும் கூறும் ஜெயராஜ் அவர்களே விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்து என்று ஒற்றைக்காலில் நின்றபோது இவர் சண்டைக்குணம் கொண்ட நிர்வாகத்திறனற்றவர் என்பதை அறிந்திருக்கவில்லையா? மேலும் மக்களின் உணர்சியை கிளப்பி, அரசியல் செய்யும் புதுவழியை கண்டு பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டீர்களே? தமிழ் அரசியல் வாதிகள் காலாகாலமாக மேற்கொண்டு வருகின்ற உணர்ச்சியை கிளப்பும் அரசியல்வழியை விக்னேஸ்வரனும் கடைப்பிடிக்கத்தொடங்கினார் என்றால் பொருத்தமற்றதாகுமா?

மேலும் கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், நிரம்பிய அறமும் அருளும் உடைய அரிய தவ முனிவர்க்கும் சிந்தனை வேறாகிவிடும் என்ற கம்பனின் கூற்றுக்கு விதிவிலக்கில்லாமல் தனது சகாவும் மாறிவிட்டார் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் ஜெயராஜ் அதற்கு கூனிகளின் ஆலோசனையால், கைகேயியின் மனம்போல் விக்கினேசுவரனின் மனம் திரிந்தது என்றெல்லாம் பல்வேறு வியாக்கியானங்கள் கூறமுற்படுவது அருவருப்பை உண்டுபண்ணுகின்றது.

தந்தை செல்வா , அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களின் வரிசையில் பிரபாகரன் என்ற உலகப்பயங்கரவாதியும் பாசிஸ்டுவுமான கொலைகாரனை வைத்து மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் என்கின்றார் ஜெயராஜ். இவ்வாக்கியமானது ஜெயராஜ் எதை நோக்கி பயணிக்கின்றார் என்பதை தெளிவுறுத்துகின்றது. கம்பன் கழகம் அமைத்து பணம் சம்பாதித்துக்கொண்டிருந்த ஜெயராஜுக்கு பிரபாகரன் மக்களை கொன்றொழித்தமை, அவர்களது உரிமைகளை அப்பட்டமாக மீறியமை, ஆயுதத்தை காட்டி மிரட்டி மக்களது ஜனநாயக உரிமைகளை அப்படியே சூறையாடியமை எவ்வாறு நினைவிருக்கப்போகின்றது? அமிர்தலிங்கத்தை கொன்ற பிரபாகரனை அவரது வரிசையில் வைத்து தலைவர் எனப்போற்றும் இவரின் போக்கிரித்தனம் தமிழ் மக்களுக்கு அடுத்த தலையிடி ஒன்றை உருவாக்கப்போகின்றது என்பதை தெட்டத்தெளிவாக கூறமுடிகின்றது.

ஜெயராஜ் புத்தகம் ஒன்றை பிரபாகரனுக்கு அனுப்பி அதற்கு பிரபாகரன் அனுப்பிய பதில் தொடர்பில் என்னிடம் நிறைய பேச இருக்கின்றது. அது தொடர்பில் விரைவில் விவாதிக்கப்படும்.

தனது கட்டுரையில் பதவியும் பவுசும் வந்ததும் மெல்ல மெல்ல முதலமைச்சர் மாறத்தொடங்கினார் என்றும் அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்துள்ள இக்கட்டுரையை முடித்துரைத்த ஜெயராஜ், இராஜதுரை மற்றும் கருணா ஆகியோரின் உதாரணங்களை காட்டி, இது சதியா அன்றில் விதியா என்று முடித்துள்ளார்.

இன்று நாம் 21 நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதி என்று சொல்லை உச்சரிப்பதே இயலாமையின் வெளிப்பாடாகும் என்பதுடன் நாகரிகமற்றதுமாகும்.

தமிழ் தலைவர்கள் சுயலாபங்களுக்காக மக்களின் தேவைகளை கிடப்பில்போட்டு எழுந்தமானமாக செயற்பட்டு குட்டு உடைபடுகின்றபோது, சதிவலையில் சிக்கிவிட்டார்கள் என்று அவர்களது விசிறிகள் சாட்டுபோக்கு சொல்வது வழமை. அதே பல்லவியை பாடி ஜெயராஜ் அற்ப ஆசைகளுக்காக சோரம்போவோர்க்கு, நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்றும் மீண்டும் தைரியம் கொடுக்கின்றார்.

ஆகவே ஆன்மீகவாதியாக இனம்காணப்பட்டுள்ள ஜெயராஜ் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெள்ளையடித்தல், நற்சான்றுதல் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தி, நாங்கள் வாழுகின்ற இதே காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு ஒப்பற்ற போராளியான சேகுவேராவின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களையும், அவர் மக்களுக்காக எவ்வாறு உழைத்தார் என்பதையும் தான் சாமரம் வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

ஆஜென்டீனாவில் ஓர் மேட்டுக்குடியில் பிறந்த சேகுவேரா தனது செல்வந்த மற்றும் சுகபோக வாழ்க்கையை கைவிட்டு கியூபா மக்களுக்காக போராடி மாபெரும் வெற்றிகாண்கின்றார். கியுபாவில் புதிய அரசு அமைகின்றது. கீயூபா மக்கள் சேகுவேராவை உன்னதபோராளியாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அவருக்கு கியூபாவில் குடியுரிமை வழங்கி அந்நாட்டின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சுப்பதவியையும் வழங்குகின்றார்கள். வெளியுறவு அமைச்சுக்கு அப்பால் பல்வேறு துறைகளில் தனது நிபுணத்துவங்களை சேகுவேரா வழங்கிக்கொண்டிருந்தார்.
ஆனால் இத்தனை வேலைப்பழுவுக்கும் மத்தியில் அவர் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து தானும் ஒரு பாட்டாளியானர். தனது நாளில் 4 மணித்தியாலயங்களை உடலுழைப்புக்கு ஒதுக்கினார். கட்டுமானப்பணிகளில் சிற்றூழியனாக, கப்பலிலிருந்து மூடையிறக்கும் நாட்டாமையாக உடலால் மேற்கொள்ளப்படும் கடின உழைப்புகள் யாவற்றிலும் பங்காளியானார்.

ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து நெருக்கப்படும் மக்களுக்காக போராடி ஒர் பிரபுவாகவே வாழ்வதற்கு வழியிருந்தும், அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை இப்படம் எடுத்துரைக்கின்றது.





ஆனால் இன்று கள்வர்கள், கடைந்தெடுத்த காவாலிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலைகாரார்கள், நயவஞ்சகர்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானோராக உள்ளதுடன் இவர்கள் பிரபுக்களாகவே இன்றும் வலம்வருகின்றனர். மக்களின் வாக்கில் பிரதிநிதிகளாகி அதற்கு சம்பளம் வாங்கும் பேர்வழிகளை ஊதியத்திற்குரிய உழைப்பை வழங்க கேட்கவேண்டும்.

பீமன்

Read more...

Sunday, December 20, 2015

தமிழ் மக்கள் பேரவை: 'மாற்றுத் தலைமையை உருவாக்கும் நோக்கம் இல்லை'

'ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது'

இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மருத்துவ நிபுணர் டாக்டர் லக்ஸ்மன், மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் வசந்தராஜா ஆகியோர் இந்த அமைப்பின் இணைத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரையில் தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் எல்லையைக் கடந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்கின்ற ஒரு பொது முடிவின் அடிப்படையில் தீர்வு காண்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் துணைத் தலைவருமான பேராசிரியர் சிற்றம்பலம், புளொட் அமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன, நல்லை ஆதீன முதல்வர், கிறிஸ்தவ மத குருமார்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த அமைப்பின் ஆரம்ப கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

'மாற்றுத் தலைமையினை ஏற்படுத்தும் கூட்டம் இல்லை'


'ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது'

'இந்தப் பேரவை அரசியல் கட்சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே அகும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருக்கின்றார்.

'தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ்மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். இத்தகையதொரு நிலைமையில், தனிமனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது' என்று தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கை கூறுகின்றது.

'ஒரு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுகின்ற தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற தீர்வுகளே தேவையானவையாகும். எனினும் இத்தகைய தீர்வை வழங்குவதில் இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமோ, பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சிகளோ முன்வரவில்லை' என்றும் 'இத்தகையதொரு நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லையை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுகிறது' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'அந்த இலக்கை ஈடு செய்யக்கூடியது என்ற நம்பிக்கையோடு மதபீடங்கள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது' என்று அந்த அறிக்கை விபரித்துள்ளது.

'தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், பொருளாதாரத்தை- வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Thanks BBC

Read more...

Friday, December 18, 2015

இலங்கை: வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை எதிர்த்து போராட ஒரு சோசலிச வேலைத் திட்டம். By the Socialist Equality Party (Sri Lanka)

இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இணைந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெட்டுக்கள் வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதிய உரிமைகள் மற்றும் மானியங்களை கடுமையாக பாதிக்கவுள்ளன.

தனியார்துறை, பொதுத்துறை மற்றும் அரை அரசாங்கத் துறைகளையும் சேர்ந்த 50 தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான தொழிற்சங்கங்களின் கூட்டு (TUC), அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் பெருகி வரும் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக தயக்கத்துடன் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தொழிற்சங்கங்களின் கூட்டு, அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்தையும் எப்படியாவது திசைதிருப்பிவிட முயல்வதோடு முன்மொழியப்பட்ட 24 மணி நேர வேலைநிறுத்தத்தை கூட அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை ஊடாக நிறுத்திவிடும் கடைசி முயற்சிகளில் இறங்கியுள்ளது என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு தொழிலாளர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

2016ல் இருந்து பொதுத்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய உரிமையை இரத்து செய்து, ஊழியர்கள் பங்களிப்பு செய்யத் தள்ளப்படும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீட்டியுள்ள திட்டத்தை கைவிட வேண்டும் என்பதும் தொழிற்சங்கங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளில் அடங்கும். தனியார்மயமாக்கல், அரசு நிறுவனங்களை வணிகமயப்படுத்தலை நிறுத்துமாறும் மற்றும் தற்போது மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படுகின்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு புதிய முகவரமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

தனியார் துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா மாத சம்பளம் உயர்வு வேண்டும், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் 1,000 ரூபாவால் உயர்த்தப்பட வேண்டும் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா சம்பள கொடுப்பனவை அவர்களது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும் போன்றவை ஏனைய கோரிக்கைகளாகும்.

அரசாங்கம் விவசாயிகளுக்கு மானிய உரங்கள் வழங்கும் தற்போதைய திட்டத்தையும் வெட்டித்தள்ள முன்மொழிந்துள்ளது. இது ஒட்டு மொத்த மானியங்களையும் இல்லாமல் ஆக்குவதற்கான முதல் படியாகும் -இது கிராமப்புற ஏழைகளுக்கு பெரும் அடியாக இருக்கும். கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

எந்தவொரு போராட்டத்தையும் கவிழ்ப்பதற்கு வடிவமைக்கப்பட்ட அரசாங்கத்துடனான அவர்களின் உத்திகளில் ஒன்றாக, தொழிற்சங்கங்களின் கூட்டின் தலைவர்கள் சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். அவர்கள் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தத்தை இரத்து செய்யும் பொருட்டு, சில பயனற்ற வாக்குறுதிகளைப் பெற எதிர்பார்த்தனர். தொழிற்சங்கங்களின் கூட்டின் அழைப்பாளரான அரசாங்க தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, "அரசாங்கம் குறைந்த பட்சம் ஓய்வூதிய திட்டத்தை உள்ளவாறு தொடர்வதைப் பற்றி பரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டால் தொழிற்சங்க நடவடிக்கையை இரத்து செய்ய தயாராக இருப்பதாகக்," கூறினார். மற்றொரு தொழிற்சங்க தலைவர், கலந்துரையாடலின் பின்னர் "கோரிக்கைகள் எதற்கும் [விக்கிரமசிங்கவிடம் இருந்து] சாதகமான பிரதிபலிப்பு எதுவும் கிடைக்கவில்லை" என்று புலம்பினார்.

தொலைக்காட்சி நிகழ்சிகளிலான உரையாடல்களில், அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பதாக ரட்னபிரிய தெளிவுபடுத்தினார். இந்த கோரிக்கை மூலம் "நாங்கள் போராடி ஆட்சிக்கு கொண்டுவந்த" அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யு.சி.), துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் மறியல் போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இன்றுடன் முடிவுக்கு வரும் ஒரு எதிர்ப்பு வாரத்துக்கு அழைப்பு விடுப்பதாக அறிவித்தது. ஜே.வி.பி மற்றும் என்.டி.யூ.சி.யும் அரசாங்கத்தை அச்சுறுத்தக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் எதிர்ப்பதோடு, அதற்குப் பதிலாக தொழிலாளர்களின் சீற்றத்தை தடுத்து திசைதிருப்ப முயல்கின்றன.

வரவு-செலவு வெட்டுக்களை எதிர்த்துப் போராட தொழிலாளர்களால் இந்த தொழிற்சங்கங்கள் அல்லது அரசியல் ஸ்தாபனத்தின் கட்சிகளின் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. தொழிலாளர்கள் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தையே எதிர்ப்பதற்கான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

இதே தொழிற்சங்கங்கள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய நிர்வாகத்தினால் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் வறியவர்களின் விரோதத்தை திசை திருப்பிவிடப்பட்டன. ஜனவரி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர உதவிய இந்த தொழிற்சங்கங்கள், இப்போது தொழிலாளர்களின் அதிருப்தி வெடித்து ஆட்சியை நெருக்கடிக்குள் தள்ளிவிடும் என்று பீதியடைந்துள்ளன.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைகளை அமுல்படுத்த தீர்மானித்துள்ளனர். வியாழக்கிழமை, தொழிற்சங்கங்களை விமர்சித்து ஒரு அச்சுறுத்தும் உரையை நிகழ்த்திய விக்கிரமசிங்க, அரசாங்கம் வேலைநிறுத்தங்களை கண்டு அஞ்சாது என்று அறிவித்தார். அவர், டிசம்பர் 3 அன்று ஒரு அடையாள வேலை நிறுத்தம் செய்தமைக்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தை கண்டனம் செய்தார். விக்கிரமசிங்கவின் உண்மையான இலக்கு, தொழிற்சங்கத் தலைவர்கள் அன்றி, யாருடைய எதிர்ப்பை கட்டுப்படுத்த தொழிற்சங்கள் முயற்சித்து வருகின்றனவோ அதே தொழிலாள வர்க்கமாகும்.

தனது கையை வலுப்படுத்தும் முயற்சியில், சிறிசேன வியாழக்கிழமை அதிக பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற எத்தனிக்கின்றார். அவர் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் பங்காளியான தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) எதிர் போக்கைக் கடைப்பிடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு நெருக்கி வருகின்றார்.

உலகப் பொருளாதார பின்னடைவு மற்றும் நிதி நெருக்கடியினால் உருவாக்கப்பட்டுள்ள ஆழமான பொருளாதார மற்றும் நிதி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசாங்கம், பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான எல்லா சலுகைகளையும் வழங்கும் அதேவேளை, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் நெருக்கடியின் சுமைக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது.

இதே போன்ற வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் வணிக சார்பு நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இலங்கை ஆளும் தட்டின் ஒரு பகுதியினர், கடும் கடன் சுமை காரணமாக நாடு கிரேக்கத்தை ஒத்த ஒரு நெருக்கடியில் மூழ்கிப் போகலாம் என விவாதித்து வருகின்றனர். கிரேக்கத்தில் சிரிசா அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றது.

கொழும்பு பங்கு சந்தை நிகழ்வு ஒன்றில் பேசிய விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் "வரி குறியீட்டை மீண்டும் எழுதுவதற்கு உதவுமாறு" சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டதாகவும் அரசாங்கத்துக்கு ஒரு நீண்ட கால கடன் ஒப்பந்தம் தேவை என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இலங்கையை "முதலீடுகளை ஈர்க்கும் ஒரு போட்டி களமாகவும் இடமாற்று மையமாகவும்" ஆக்குவதே அரசாங்கத்தின் கொள்கை என அவர் கூறினார். சமூக உரிமைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளையும் வெட்டித்தள்ளுவதன் மூலமாக மட்டுமே அரசாங்கத்தால் நாட்டை ஒரு "போட்டி மையமாக" ஆக்க முடியும்.

அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி, தொழிலாளர்களால் தமது போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அரசாங்கம் ஏற்கனவே அதன் நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பை நசுக்குவதற்கு பலத்தைப் பயன்படுத்தும் என்பதை நிரூபித்துள்ளது. அது இலவசக் கல்வியை பாதுகாக்க போராடிய மாணவர்கள் மீது கொடூரமான பொலிஸ் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது, அதிக வேலைச் சுமையை திணிப்பதை எதிர்த்த தோட்டத் தொழிலாளர்களை கைது செய்தது மற்றும் சுத்தமான குடிநீர் கோரிய ஏழை விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது.

முதலாளித்துவ இலாப அமைப்பை ஒழிக்கும் போராட்டத்தில் மட்டுமே தொழிலாளர்களால் தங்கள் தொழில்கள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக உரிமைகளை பாதுகாக்கவும், ஏழை விவசாயிகளைப் பாதுகாக்கவும் முடியும். முதலாளித்துவ அமைப்பு முறை இந்த அடிப்படை உரிமைகளுடன் இயைந்து இருக்க முடியாது.

வங்கிகள், பெரிய தொழிற்துறைகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் பெருந் தோட்டங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். சகல வெளிநாட்டு கடன்களையும் திருப்பிச் செலுத்துவது நிராகரிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களின் நன்மைக்காக, பொருளாதாரம் சோசலிச வழியில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

தனியார் இலாப அமைப்பை பராமரிக்க உறுதிபூண்டுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் தலைவிதியை நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. அவர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தமது சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

போராடிப் பெற்ற தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீதான தாக்குதலை இந்த அரசாங்கம் உக்கிரமாக்கும் என, ஜனவரி ஜனாதிபதி தேர்தலிலும் ஆகஸ்ட் பொதுத் தேர்தலிலும் விளக்கியது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சி தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு புதிய புரட்சிகர கட்சி தேவை. இந்த போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை உருவாக்க அதில் இணைந்துகொண்டு உதவுமாறு நாம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Read more...

சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களின் தியாகத்தை நம்மவர்களாலும் செய்ய முடியுமா?

காணமல் போனதாக தேடப்படுகின்ற ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள சில இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இராணுவ வீரர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டால் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகளின் குடும்ப அங்கத்தவர்கள் அநாதராவாக்கப்பட்டுள்ளதாக உணரும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்குடும்பங்களுக்கு தமது சம்பளங்களை தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் மாதம் முதல் தங்களது சம்பளங்களை குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் போரை இல்லாமல் செ;யய புலனாய்வுப் பிரிவினர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

அன்று மிலேனியம் சிட்டி சம்பவ காட்டிக் கொடுப்பினால் 97 புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களில் சிலரும் இதில் அடங்குகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது நகைப்பிற்குரியது.

இவ்வாறு வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் மனித வேட்டை நிறுத்தப்படும் வரையில் நாம் போராடுவோம்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் சுருட்டிக்கொண்டு வடகிழக்கிலிருந்து 16 ஆசனங்களை பெற்று பாராளுமன்று சென்றுள்ள உறுப்பினர்கள் இதுவரை தமிழ் மக்களுக்கு செய்தது யாதெனக்கேட்டால்? மக்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்து இனவாத வெறியையூட்டி வாக்குகளை பெற்று அதனூடாக கிடைக்கும் வரப்பிரசாதங்களை தங்களது குடும்பங்களுடன் பகிர்ந்து கொண்டதை தவிர ஏதுமில்லை என்று அச்சமறக்கூறமுடியும்.

இந்நிலையிலேயே இந்நாட்டில் அமைதியை கொண்டுவர போராடிய இராணுவ வீரர்களது குடும்பங்கள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றார்கள் என்றபோது அவர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தமது சம்பளத்தை தியாகம் செய்ய முன்வந்துள்ளனர்.

ஆனால் இன்றும் வன்னியில் மக்கள்படும் அவலங்களை பிச்சைகாரன் புண்ணாக வைத்து அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் மேற்படி சிங்கள அரசியல் தலைவர்களை முன்னுதாரணமாக கொண்டு முழுச்சம்பளத்தையும் வழங்காவிட்டாலும் ஒரு தொகையையாவது தியாகம் செய்து ஒரு தொகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவேனும் உதவ முன்வருவார்களா?

16 பராளுமன்ற உறுப்பினர்களும் மாதாந்தம் 25000 ரூபா பணத்தினை ஒருக்கினால் மாதமொன்றுக்கு நான்கு குடும்பங்களுக்கு சுயதொழிலை ஆரம்பிக்க உதவ முடியும்.

இவ்வாறான உதவியை வேண்டி நிற்கும் நபர்களின் அவலங்களை இங்குள்ள இணைப்பை சொடுக்கி அறிந்து கொள்ள முடியும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com