Thursday, April 9, 2015

மாவையின் எழுதுவினைஞர் பொட்டுவால் நியமிக்கப்பட்ட புலிகளின் புலனாய்வாளன். போட்டுடைக்கின்றார் சங்கரியார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பதத்தை உயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையாளருக்கு மடல் ஒன்றை எழுதியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி மாவையின் எழுதுவினைஞர் புலிகளின் புலனாய்வாளன் என்றும் அவர் பொட்டு அம்மானால் தன்னை இலக்கு வைத்து நியமிக்கப்பட்டவர் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

'தமிழ் தேசிய கூட்டமைப்பு' அல்லது த.தே.கூ என்ற பதத்தை முதன் முதல் உபயோகித்து ஓர் கூட்டமைப்பாக இணைத்த தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றைத் தவிர வேறு எந்த அரசியல் அமைப்பும் இப்பதத்தை உபயோகிப்பதை மிக்க வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.

எனது ஆட்சேபனைக்குரிய காரணத்தை தங்களை இலகுவாக விளங்க வைக்க த.தே.கூ ஆரம்பித்த காலம் தொட்டு கடைசியாக உபயோகிக்கப்பட்ட வட - கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த வரை உள்ள அதன் வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கென உரிய சின்னம் இல்லாதமை பெருங் குழப்பத்தையும் தப்பபிப்பிராயங்களையும் ஏற்படுத்தும் வேட்பாளர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பங்களுக்கு இதுவே முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் தேதி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்சிகளாகிய தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தழிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முறையே த.வி.கூ, அ.இ.த.கா, த.வி.இ, ஈ.ம.பு.வி.மு ஆகியவை ஒன்றிணைந்து ஓர் பொதுத் திட்டத்துக்குள் இயங்க தீர்மானித்து திருவாளர்கள் இரா.சம்பந்தன், நா.குமரகுருபரன், சு.பிரசன்னா, க.பிறேமச்சந்திரன் ஆகிய செயலாளர்கள் ஒப்பமிட்டு சில ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதால் இவ் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு விடுத்தன.

அப்புரிந்துணர்வுக்கு அமைய நான்கு கட்சிகளும் அத் தேர்தலில் போட்டியிட்டு 5.12.2001 இல் நடந்த தேர்தலில் த.வி.கூ - 6, அ.இ.த.கா -.3 த.வி.இ- 4 ஈ.ம.பு.வி.மு - 1 தேசிய பட்டியலில் 1 பெற்றன. மாவை சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் இடத்தைப் பெற்றார்.

5.06.2002 காலமான தமிழர் வி.கூ தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களின் இடத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் வரை எல்லாம் நல்லபடியே நடந்தது. புதிய தலைவரின் தெரிவுக்கு கூட்டதினம் நிர்ணயிக்கப்பட்டு நானே அப்பதவிக்கு புதிய தலைவராக தெரிவானேன். அக்கூட்டத்திற்கு சமூகம் கொடுக்காத முக்கிய பேர்வழி திரு.மாவை. சேனாதிராசா அவர்களே. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 3,000 வாக்கு வித்தியாசத்தில் அவர் எனக்கு அடுத்ததாக தெரிவானார். அதற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டு காலியாக இருந்த திரு. அ.அமிர்தலிங்கம்; அவர்களின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அதன் பின் காலியாகிய கலாநிதி.நீலன் திருச்செல்வம் அவர்களின் காலியான இடத்துக்கும் திரு.மாவை சேனாதிராசாவையே நியமித்திருந்தோம் என்பதும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

திரு.மாவை சேனாதிராசா அவர்கள், அவருக்கு மட்டும் தெரிந்திருந்த காரணத்துக்காக அவர் அடிக்கடி வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து வந்தார். அப்படி ஒரு சந்திப்பின்போது 'மாவை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்தார்'. என்ற தலைப்பில் ஓர் செய்தி வெளியிட்டிருந்தது. அச் செய்தி இதுதான். 'தமிழரசுக் கட்சியை புனருத்தாரணம் செய்து கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உப தலைவர் தங்கனுடன் 14.10.2003 அன்று பல சந்திப்புக்கள் மேற்கொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் புனரமைப்பு விடுதலைப் புலிகளின் பணிப்பிலேயே நடைபெறுகிறது' என்பதே. அந்த வேளையில் அவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவருக்கு விசேட பணி கொடுக்கப்பட்டிருந்தது. 19.10.2003 அன்று ஞாயிறு ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகிய அவரின் பேட்டி ஒன்றில் அந்த நிருபரின் கேள்வியானது ' தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையை இல்லாது செய்வதற்காகவா தமிழரசுக் கட்சியை புதுப்பிக்குமாறு விடுதலைப் புலிகள் உங்களைப் பணித்துள்ளனர்'. என்று கேட்டபோது அவரின் பதில் 'அதில் உண்மை இல்லை. அக் குற்றச் சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன்' என்பதே. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் ஆங்கிலத்தில் உள்ள பகுதி எனக்கு தீங்கு விளைவிப்பதற்கு அவரை விடுதலைப் புலிகள் பாவிக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. 'கொழும்பில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள்' TOSTS தலைவர் பொட்டு அம்மானின் பணிப்புக்கமைய இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும் 1983ம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவருமான முருகன் கலைச்செல்வன் என்பவரை யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு எழுதுவினைஞராக கடமையாற்றவென கையளிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தெகிவளை, நெடுமால் 129ஃ9 கடவத்தை வீதியில் திருமதி.ளு.பாக்கியத்துடன் இருந்து கொண்டு கொழும்பு 3 இல் உள்ள 30ஃ1ஃயு அல்விஸ் பிளேசில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயத்திற்கு மாவை சேனாதிராசாவுடன் வருவார். அவருக்கு வழங்கப்பட்ட பணி திரு. வீ.ஆனந்தசங்கரி (தலைவர் தமிழர் வி.கூ.)யை இலக்கு வைப்பதே.

இச்சதியில் அவரை ஈடுபடுத்த வேண்டும் என்பதல்ல என் நோக்கம் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கிணங்கி செயற்படுகிறார் என்பதையும் எனக்கு இலக்கு வைத்து செயற்பட்டவர் தப்பியோடினார் என்பதையும் நிரூபிக்க எனக்கு அந்த பத்திரிகை செய்தியைவிட வேறு எதுவித ஆதாரமுமில்லை.

அவருக்கு வழங்கப்பட்ட கையாளின் முயற்சி தோல்வி கண்டதும் திரு.மாவை. சேனாதிராசா தன்னிச்சையாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அகற்றிவிட்டு அந்த இடத்திற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்த்துக் கொண்டு புதிய தமிழ்.தே.கூ உருவாக்கினார். ஆனால் அவரின் இச் செயலால் 22.10.2001 இல் உருவாக்கப்பட்டிருந்த த.தே.கூ. தானாக செயல் இழந்தவிட்டது. திரு. சேனாதிராசாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு முற்று முழுதாக புதிய அமைப்பாகும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரால் எதையும் செய்ய முடியாது என்பதே.

புதிய கூட்டமைப்பு மோசடி மூலம் முறையான அதிகாரமும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து அதன் பெயரில் 2004 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு ஓர் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து அதில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் தேசிய தலைமை என்றும் அவர்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரகடனப்படுத்தியுள்ளனர். 2004 ம் ஆண்டு சித்திரை மாதம் நடந்த தேர்தலில் மிகப் பெரும் அளவில் வாக்களிப்பில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது. தேர்தல் அவதானிப்புக் குழுவினாரால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாக்களிப்பு நிலைய முகவர்களால் தமது கடமைகளை செய்ய முடியவில்லை. தமக்குரிய வாக்குகள் அன்றி பிறரின் வாக்குகளை ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் தாராளமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலைமை கூட்டமைப்பு கட்சிகளுக்கு 22 ஆசனங்களைப் பெற உதவியது. இத்தேர்தலை நிராகரிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் விடப்பட்ட கோரிக்கை சட்டத்தினால் அதற்கு இடம் இல்லையென கூறி தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

மோசடி மூலமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு பிழையான ஓர் செயலை திரும்ப திரும்ப செய்தால் குறிப்பிட்ட ஓர் காலத்தின் பின் அதை சட்டபூர்வமான செயலாக உரிமை கொண்டாட முடியாதல்லவா. அவர்களால் அனுபவிக்கப்பட்டு வந்த வசதி அவர்களுக்கு சர்வதேச அரங்கில் புதியதோர் அந்தஸ்தை பெற்றுத்;தந்துள்ளது. அப்பாவித் தமிழ் வாக்காளர்கள்தான் இப்போது கிரிமினல்வாதிகள் என்ற அவப் பெயரை சுமக்கின்றனர்.

குற்றம் செய்தவர்கள் என்ற பெயரை அப்பாவித் தமிழ் வாக்காளர்களே தற்போது சுமந்து நிற்கின்றனர். ஏப்பிரல் 2004 தேர்தல் நடந்ததில் இருந்து திரு.பிரபாகரன் இறந்தது வரையான காலத்தில் செய்த குற்றங்கள் அத்தனைக்கும் பொறுப்பென நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றுள் திரு.லக்ஸ்மன் கதிர்காமர், யோசெப் பரராஜசிங்கம், சந்திரநேரு,, கிங்ஸி இராசநாயகம். சட்டத்தரணி ரவிராஜ், தியாகராசா மகேஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள் உட்பட இன்னும் பல அடங்கும்.

இந்த சூழ்நிலையில் தங்களுக்குரிய அதிகாரத்தை உபயோகித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காது தடைவிதிக்குமாறு வற்புறுத்தி வேண்டுகிறேன். நான் உங்களை மேலும் மன்றாட்டமாக கேட்பது இந்த நான்கு கட்சி கூட்டமைப்பினரால் அப்பாவி வாக்காளர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் புலி என்ற பட்டியும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் கடந்த காலத்தில் த.தே.கூ அளித்த வாக்குகள் புலிகளுக்கு அளிக்கப்பட்டவை என கணிக்கப்படாதுபோகும். இந்த வியாபாரத்தில் மிக்க பயன் அடைந்தவர்கள் தமிழ் அரசுக் கட்சியினரே என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எல்லா விடயங்களிலும் சிங்கத்தின் பங்குபோல் அவர்களுக்கு கிடைத்தன. தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே, அதன் ஸ்தாபகர் இறந்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்தாபகரும், அவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் தமிழரசுக் கட்சியை செயலிழக்கச் செய்து, அதன் வாரிசாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இயங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டனர் என்பதை, சுட்டிக் காட்டுவதில் தப்பில்லை என எண்ணுகிறேன். இந்த நிலைப்பாட்டை தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து அதன் பொதுச் செயலாளராக செயற்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பாரியார் மங்கையற்கரசி உறுதிசெய்கின்றார். திருமதி அமிர்தலிங்கம் தனது அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே எனது கணவர் தமிழரசுக் கட்சியின் பதிவைப் பாதுகாத்து வைத்தார். தமிழரசுக் கட்சியை அவர் ஒரு போதும் புனரமைக்க எண்ணவில்லை.

அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசுக் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யவும் அதனைப் புனரமைக்கவும் முயல்வது கவலைக்குரியது. இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையே இவர்கள் முறியடித்திருக்கிறார்கள்.

எனவே, தமிழரசுக் கட்சியின் புனரமைப்புக்கு நான் அங்கீகாரமோ அல்லது ஆதரவோ அளிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக்கொள்கின்றேன். அத்துடன் இது எமது பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒழித்துவிடும் ஒரு தந்திரோபாயம் என்ற கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது ஆதங்கம் அவர்கள் என்னை விடுதலைப் புலிகளை உபயோகித்து வெற்றிகரமாக சதி செய்து அரசியலில் இருந்து ஒதுங்க வைத்தனர் என்பதேயாகும். தமது சொந்த நலனுக்காக விடுதலைப் புலிகளாகவும், புலிகளின் ஆதரவாளர்களாகவும் இயங்கி வந்த சிலர் அப்பாவித் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளின் பெயரையும் பயன்படுத்தி பெரும் இலாபம் அடைந்துள்ளனர்.


நன்றி.

அன்புடன்,


வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

Read more...

Saturday, April 4, 2015

சர்வதேச தொழிலாளர் உரிமைகள் மாநாட்டில் சிறப்புரையாற்ற புறப்படுகின்றார் றக்கீப்.

மருதமுனைனைச்சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிஉயர் பீட உறுப்பினரும் சர்வசதே தொழிலாளர் உரினமகள் மையத்தின் ஆலோசகருமாகிய சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் எதிர்வரும் 7ம் ஆம் திகதி கட்டார் நாட்டில் சர்வதேச தொளிலாளர் உரிமைகள் மையத்தினால் அன்நாட்டின் வெளிநாட்டு தொளிலாளர்களின் உரிமைகள் சம்மந்தமாக நடைபெறவிருக்கும் தொளிலாளர் உரிமைகள் மாநாட்டில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதற்காக விசேட அழைப்பின் பேரில் எதிர்வரும் 6ம் ஆம் திகதி திங்கட்கிழமை கட்டார் நாட்டிற்கு பயணமாகின்றார்

மேலும் இவர் கட்டார் நாட்டில் தொளில் புரியும் இலங்கையர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாக இலங்கை தொளிலாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கை தொளிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனைகனளயும் அதற்கான தீர்வுகளையும் வழங்கவுள்ளார்.

கட்டார் நாட்டில் சட்ட ஆலோசனை வேண்டி நிற்கும் நம்மவர்கள் மேற்குறித்த சந்திப்புக்கள் இடம்பெறும் இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.


Read more...

Friday, April 3, 2015

அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனை. Nick Beams

சீன ஆதரவிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) ஸ்தாபக உறுப்பினர்களாவதற்கு கையெழுத்திட, நாடுகளுக்கு 31.03.2015 இறுதிநாளாக இருந்தது. அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெளியுறவு கொள்கை மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு ஒரு முக்கிய தோல்வியைக் குறிக்கும் வகையில், வரலாற்றில் இடம் பெறும்.

வாஷிங்டனின் கடுமையான எதிர்ப்புக்கு எதிராக, 40க்கும் மேற்பட்ட நாடுகள் அவை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இன் பாகமாக இருக்க விரும்புவதாக இப்போது சுட்டிக் காட்டியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட பிரதான ஐரோப்பிய சக்திகளும், அத்துடன் நோர்வே, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவையும் அவ்வங்கி குழுவில் இடம் பெற்றுள்ளன. சீனாவைத் தங்களின் பிரதான வர்த்தக பங்காளியாக கருதும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஏறத்தாழ எல்லா நாடுகளும், கூட கையெழுத்திட்டுள்ளன. தாய்வானுடன் சேர்ந்து, இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அதன் முதன்மை ஐரோப்பிய கூட்டாளியான பிரிட்டனால், அமெரிக்காவிற்கு எதிராக மிக முக்கிய அடி கொடுக்கப்பட்டது. பிரிட்டன் மார்ச் 12 இல் அதில் சேருவதற்கான அதன் முடிவை அறிவித்தது. அது, ஆசிய-பசிபிக்கில் உள்ள இரண்டு முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட ஏனையவையும் அதை பின்தொடர அணைமதகுகளைத் திறந்துவிட்டது. ஜப்பானும் அனேகமாக ஜூனுக்கு முன்னதாக இணைய பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தோல்வியின் முழு முக்கியத்துவமும் மற்றும் அதன் நீண்டகால தாக்கங்களும் ஒரு வரலாற்று முன்னோக்கில் இருந்து பார்க்கையில் மிக தெளிவாக வெளிப்படுகின்றன.

அந்த புதிய வங்கி மீதான ஒபாமா நிர்வாகத்தின் பிரதான ஆட்சேபணைகளில் ஒன்று, அது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக்கு குழிபறிக்கும் என்பதாகும். 1944 இன் பிரெட்டென் வூட்ஸ் உடன்படிக்கையுடன் ஒருங்கிணைந்து, அந்த அமைப்புகள் அமெரிக்காவினால் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்தாபிப்பதில் மையத்தூண்களாக இருந்தன. அமெரிக்கா 1920கள் மற்றும் 1930களின் சீரழிவுகள் மற்றும் அது உருவாக்கிய புரட்சிகர போராட்டங்களைத் தொடர்ந்து, உலக முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பு செய்வதில் மைய பாத்திரம் வகித்தது.

சொல்லப் போனால், போரால் நாசமாக்கப்பட்ட ஐரோப்பாவினது மறுஸ்திரப்பாட்டிற்கான மார்ஷல் திட்டத்துடன் ஒருங்கிணைந்து, அவ்விரு அமைப்புகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியதின் பொருளாதார மற்றும் மூலோபாய நலனுக்காக செயல்பட்டன.

ஆனால் போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பிலிருந்து அமெரிக்கா பெரும் ஆதாயங்களைப் பெற்ற போதினும், அவற்றை அது குறுகிய பார்வையில் கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க முதலாளித்துவம் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஏனைய முதலாளித்துவ அதிகாரங்கள், அனைத்தினும் மேலாக, அது எவற்றுக்கு எதிராக கடுமையாக இரத்தக்களரியிலான மோதலில் சண்டையிட்டதோ அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை உறுதிப்படுத்த, அதன் தரப்பிலிருந்து பெரும் ஆதாரவளங்களை உபயோகிக்க வேண்டும் என்பதை ஆளும் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் உணர்ந்திருந்தன.

போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு ஜேர்மனியின் விரிவாக்கத்திற்கு உதவியதுடன், அதை மீண்டுமொருமுறை ஐரோப்பாவின் தொழில்துறை அதிகாரமையமாக மாற்றியது. அதே நேரத்தில், ஜப்பானிய செலாவணி மதிப்பின் மீது —ஒரு டாலருக்கு 360 யென் என்றளவில் அது கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததில் இருந்து— அதற்கு வழங்கப்பட்ட விட்டுக்கொடுப்புகள், அதன் தொழில்துறைக்கு ஏற்றுமதி சந்தைகளைத் திறந்துவிட்டது. கொரிய போரின் போது, ஜப்பானில் டிரக்குகள் மற்றும் ஏனைய இராணுவ தளவாடங்களை உருவாக்குவதென எடுக்கப்பட்ட முடிவு, ஜப்பானின் வாகன தொழில்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததுடன், அது அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நவீன உற்பத்தி நுட்பங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு, பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பொருளாதார தகைமை, கொரிய போர் விடயத்தில் பிற்போக்குத்தனமான வடிவங்களை ஏற்றிருந்த போதினும் கூட, அது உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் புதிய கட்டத்திற்கு —அதாவது போருக்குப் பிந்தைய வளர்ச்சிக்கு— அனுகூலங்களைக் கொண்டு வர பயன்பட்டது.

தற்போதைய நிலைமையோடு என்னவொரு முரண்பாடு! அமெரிக்க முதலாளித்துவமோ இப்போது உலகின் தொழில்துறை அதிகாரமையமாக இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ பொருளாதார விரிவாக்கத்தையும் உறுதி செய்வதற்குரியதாக இல்லை. அதற்கு மாறாக, அது உலகளாவிய ஒட்டுண்ணித்தனத்தின்-தலைமையகமாக செயல்படுகிறது. அதன் பேராசைமிக்க வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்கள் புதிய செல்வத்தை உருவாக்குவதில் ஈடுபடாமல், ஏனைய இடங்களில் திரட்டப்படும் செல்வ வளத்தை, பெரும்பாலும் குற்றகரமான அல்லது பாதி-குற்றகரமான நடவடிக்கைகள் மூலமாக அபகரிப்பதில் ஈடுபட்டு, உலகில் இலாபம் தரும் வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.

அண்டைநாடுகளிடம் கையேந்தும் 1930களின் கொள்கைகள் மற்றும் தடையாணைகள் ஒரு பேரழிவை உண்டாக்கி இருந்தன என்பதை புரிந்து கொண்டு, போருக்குப் பிந்தைய உடனடிக் காலகட்டத்தில், அமெரிக்கா தடையற்ற வர்த்தகத்தின் பாதுகாவலனாக விளங்கியது. இன்றோ, பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்து உருவாக்கப்பட்டு வருகின்ற அதுபோன்ற ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, வாஷிங்டன் அமெரிக்க பெருநிறுவனங்களின் ஏகபோக அந்தஸ்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு பிரத்யேகவாத உடன்படிக்கைகளைப் (exclusivist agreements) பெற முயல்கிறது. 21ஆம் நூற்றாண்டிற்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உலகளாவிய விதிகளை அமெரிக்காவே எழுத வேண்டுமென ஒபாமா அறிவித்துள்ளார்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்க மேலாளுமை, உடனடி பொருளாதார செயலெல்லைக்குள் மட்டுப்பட்டு இருக்கவில்லை. தசாப்த கால போர், பாசிசம் மற்றும் இராணுவ ஆட்சி வடிவங்கள், அத்துடன் பொருளாதார சீரழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த உலகிற்கு, அதன் எல்லா முரண்பாடான அம்சங்களுக்கு இடையிலும், அமெரிக்க சமூகத்தால் ஏதோவொன்றை ஒட்டுமொத்தமாக வழங்க முடியும் என்பதாக தெரிந்தது.

மீண்டும், தற்போதைய நிலைமையுடனான இந்த முரண்பாடு இந்தளவிற்கு தெளிவாக இருக்க முடியாது. ஒருகாலத்தில் உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிய அமெரிக்க ஜனநாயகம், அதன் முந்தைய தன்மையிலிருந்து தேய்ந்துபோன கேலிச்சித்திரமாக, இப்போது நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்களின் சர்வாதிகாரத்தை மூடிமறைக்க தகைமையற்று உள்ளது.

அன்றாடம் பொலிஸ் படுகொலைகளில் குறைவில்லாமல் பிரதிபலிக்கப்பட்டு சமூக நிலைமைகள், இழப்புகளாலும் அரசு வன்முறையாலும் குணாம்சப்பட்டுள்ளன. உலகின் மிக உயர்ந்த சிறையடைப்பு விகிதத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவில், ஒருகாலத்தில் மிக உயர்ந்த ஊதியங்கள் வழங்கிய, மற்றும் அமெரிக்க தொழில்துறை பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய டெட்ராய்டில், குடிநீர் நிறுத்தப்படும் நடவடிக்கைகள் திணக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசாங்கம் அதன் சொந்த மக்களையும் மற்றும் உலகின் ஏனைய இடங்களிலும் சித்திரவதை, அத்துமீறல், படுகொலைகள் மற்றும் பாரிய உளவுவேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களது குற்றங்களுக்காக கணக்கில் கொண்டு வரப்படாத குற்றவாளிகளால் அந்நாடு ஆட்சி செய்யப்படுகிறது.

1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, அதன் உலகளாவிய எதிராளி காட்சியிலிருந்து நீங்கியதை அடுத்து, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இடம் கடுமையாக பலவீனப்பட்டிருந்த போதினும் —1987 பங்குச்சந்தை பொறிவு வரவிருந்த விடயங்களுக்கு ஒரு முன்னறிவிப்பாக இருந்த நிலையில்— அமெரிக்க மேலாதிக்கத்தை எவ்வாறாயினும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு பேண முடியும் என்ற சிந்தனை அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் பதிந்திருந்தது.

ஆனால் "படை தத்துவத்தின்" (force theory) மற்றொரு விளக்கவுரையாளரை மறுத்து பிரெடெரிக் ஏங்கெல்ஸ் முன்னரே விவரித்ததைப் போல, பொருளாதார அபிவிருத்திகளையும் —அதாவது தொழில்துறை, கடன் வழங்கல் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சியும்— அவை உயர்த்திக் கொண்டு வரும் முரண்பாடுகளையும் "குருப் (Krupp) துப்பாக்கிகள் மற்றும் மாசெர் ரக கைத்துப்பாக்கிகளைக்" கொண்டு அவை "பிழைத்திருப்பதை அழிக்க" முடியுமென்ற கருத்து ஒரு பிரமையாகும்.

பொய்களின் அடித்தளத்தில் நடத்தப்பட்ட படையெடுப்புகள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுடன் சேர்ந்து, ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்களையும் டிரோன்களையும் பிரயோகித்ததன் அடிப்படையில் அமைந்திருந்த, கடந்த 25 ஆண்டுகால அமெரிக்க வெளியுறவு கொள்கையானது ஒன்று மாற்றி ஒன்று என அழிவுகளை உண்டாக்கி உள்ளன.

கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தாக வேண்டும் என்பதைப் போல, இப்போது ஏனைய முதலாளித்துவ சக்திகள், அவை பெரிதோ அல்லது சிறிதோ, அமெரிக்க பலிபீடம் நாசப்படுவதற்குரிய நிச்சயமான பாதை என்று தங்களைத்தாங்களே அதிலிருந்து விடுவித்துக் கொள்வதென முடிவெடுக்க தொடங்கிவிட்டன. அது தான் AIIB இல் இணைவதென்று அவர்கள் முடிவெடுத்ததன் வரலாற்று முக்கியத்துவமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு விடையிறுக்கும்? உலகை மீண்டுமொரு முறை போருக்குள் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலுடன், அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களை அதிகரிப்பதைக் கொண்டு விடையிறுக்கும்.

1920களின் இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உயர்ந்தெழுவதை ஆவணப்படுத்தி லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், “வளர்ச்சிக் காலகட்டத்தை விட" நெருக்கடி காலகட்டத்தில், அதன் மேலாதிக்கம் "இன்னும் அதிக பகிரங்கமாகவும் அதிக பொறுப்பற்றரீதியிலும்" செயல்படும், மேலும் அதன் விரோதிகளை விலையாக கொடுத்து, அவசியமானால் போர் வழிவகையைக் கொண்டேனும், அதன் சிக்கல்கள் மற்றும் சீரழிவுகளிலிருந்து அது தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முயலும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் பகுப்பாய்வின் இறுதியில், நேற்றைய சம்பவங்களில் மிகவும் பலமாக எடுத்துக்காட்டப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியில், அங்கே மற்றொரு தீர்மானகரமான அம்சமும் உள்ளது.

தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பலம் —அமெரிக்காவின் "சிறந்த காலங்கள்" எப்போதும் முன்னால் உள்ளன— என்ற கருத்து, தசாப்தங்களாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை பிறழ செய்திருந்தது. எதார்த்தம் இப்போது முன்பினும் கூடுதல் பலத்தோடு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

கடந்த காலத்தின் பிரமைகளைச் சம்பவங்கள் உடைத்தெறிந்து வருவதுடன், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு நிலைமைகளை உருவாக்கி, அவை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்ட பாதைக்கு உந்திச் செல்லும்.

Read more...

மீனவர் பிரச்சினை:"சென்னை செல்லவும் இலங்கை ஜனாதிபதி தயார்"

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினையை தீர்க்கத், தேவைப்பட்டால் தமிழகம் சென்று அனைத்து தரப்புடனும் பேசத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்வந்துள்ளார் என சம்பந்தர் கூறுகிறார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படிப்பது தொடர்பில், நீண்ட காலமாக நிலவி வரும் சர்ச்சைகள் குறித்து விவாதிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் வேண்டுகோளை அடுத்தே இந்தக் கூட்டம் நடைபெற்றது என அதன் தலைவர் கூறுகிறார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாண சபையும் தமிழக அரசும் இந்த விஷயம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

இந்திய மத்திய அரசுடன் இலங்கை ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழகம் செல்லவும் அவர் தயாராக உள்ளார் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் கூறுகிறார்.

இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை சுரண்டுவது தொடர்பிலான சட்டங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து சில முடிவுகள் எட்டப்பட்டன எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினையில் அரசுடன் மீனவர்கள் பிரதிநிதிகள் நடத்தும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.

Read more...

திருடியோடும் போது கூடச் சில்லறையும் தொலையவிடார்! லோகநாதன் - ஜேர்மனி

இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்வு இலங்கைத் தமிழ் சாமான்யர்களுக்கு எந்த அனுகூலங்களையும் தரவில்லை. தம்மையும் தம் தனித்துவத்தையும் அழித்துக்கொள்ள மட்டுமே உதவியுள்ளது! இயக்கங்களுக்குப் பணம் சேர்த்தவர்கள், தூள் கடத்தல், ஆட்கடத்தல் என்ற 2ம் தர மோசடி வர்த்தகங்களில் ஈடுபாடு கொண்டு உழைத்த கறுப்புப் பணங்களை முதலீடாக்கி வர்த்தக நிலையங்கள் வைத்திருக்கும் சில புலம்பெயர் திருடர்கள் தொடர்ந்து தம்மைத் தக்க வைத்துக்கொள்ளவும் பணம் பண்ணவும் இந்தியப் பிரபலங்களைப் பாவிக்கிறார்கள். விளம்பரத்துக்கு தொலைக் காட்சிகளும் இவர்களுக்குத் தேவை. புலம் பெயர் புலிப் பினாமித் திருடர்கள் வாந்தியெடுத்தால் அதை வழித்து நக்குவதற்கென வைக்கோ சீமான், நெடுமாறன் என சில வகையறாக்கள் நாக்கைத் தொங்கப் போட்டு புலிக்கதை பேசி அலைகிறார்கள், அடிக்கடி விஜயம் செய்கிறார்கள்.

புலம்பெயர் தமிழர் விடும் தவறுகள் புலத்தில் வாழும் மக்களை எப்படிப் பாதிக்கின்றது என்பதை சுகிசிவம் சுட்டிக்காட்டி விமர்சித்தது போல் இவர்கள் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை பதிலாகத் தவறுகளை மேலும் தட்டிக்கொடுக்கிறார்கள். ஏனென்றால் தாம் வயிறு வளர்ப்பதற்கு! இது போல் நாமிருக்க முடியாது.

அதேவேளை தென் இந்தியச் சராசரி தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களை அவதானிக்கிறார்கள். தவறுகளைத் துல்லியமாகக் கணித்து வெறுக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்! புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாமுக்குப் போயிருந்த போது அயலில் நான் சந்தித்த ஒரு குடும்பப் பெண்ணின் உரையாடல் இது . . . .

„உங்க சிலோண்காரப் பொம்பிளைங்க தண்ணி பிடிக்க வருவாங்க சார், குடங்கள முதவே குடிக்க உதவாத தண்ணியில அலசி எடுத்து வரமாட்டாங்க இங்க வந்து குழாய் தண்ணியில இல்ல லாறித் தண்ணியில அலசுவாங்க கொஞ்சம் கூட மனசில்லாதவங்க . . . . . .' என்றார் வெள்ளந்தித் தனமாக. இதுபோல ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலிருந்து இந்தியா உலாவரும் இலங்கைத் தமிழரின் படாடோபங்களைப் பார்த்து முகம் சுழிக்கும் இந்திய மக்களிடம் அருவப்பான அன்னியப்பாடு தொனிக்குமே தவிர அனுதாபம் துளி கூட வராது.

என்றால், சுப்பர் சிங்கரில் திறமை மிக்க பிள்ளைகளை வஞ்சித்து! அவர்களின் நியாயமான வெல்லும் உரிமையை மறுத்து, கோடிக் கணக்கான வாக்குகளைப் அள்ளிப் போட்டு கனடிய இலங்கைத் தமிழ் அகதியான யசிக்காவை ஜெயிக்க வைத்த நிகழ்வு இலங்கைத் தமிழர் பற்றி எத்தகைய வெறுப்பையும் அருவருப்பையும் இத்தனை கோடி இந்தியத் தமிழர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் என எண்ணிப்பாருங்கள் தாக்கம் புரியும்?

தகுதிமிக்க நடுவர்களாகப் பணியாற்றிய சித்திரா, மனோ இவர்கள் கூட புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் முகப்புத்தகங்களிலும் இணையங்களிலும் பண்பற்ற வார்த்தைகளால் அணுகியதும், வாக்களிப்பால் திறமைக்கான அவர்களது மதிப்பீடுகள் தரம் தாழ்ந்து போனதுமான வேதனை அவர்களிருவரதும் இறுதிநேர முகபாவங்களே காட்டி நின்றன.

அதோடு எமது மக்கள் எக்கேடு கெட்டு என்ன கெட்ட பெயர் வாங்கினாலும் சரி. லாபம் மட்டுமே குறியாக இருந்த ஏதையல ரிவி நிறுவனத்தினரால் யசிக்கா என்ற பிள்ளை பாவிக்கப்பட்டிருக்கிறாள். முதல் தெரிவில் தரமிழந்த போதும் மீண்டும் உட்கொண்டு வருவதற்கான 14 இலட்சம்;, இறுதிப் போட்டியில் ஒன்றரைக்கோடி(15000,000) எனத் தொலைபேசி வாக்குகள். இவை அத்தனையும் ஏதையல க்கு ஒரு குவியல் பணம்! பித்தளை கலந்து கொடுத்த ஒரு கிலோத் தங்கத்தை(விளம்பரத்)விடப் பல மடங்கு பெறுமதியான வருமானம். இதே வேளை ஈழத் தமிழர்கள் பற்றிய கேவலமான எண்ணக்கரு உலகம் பூராவும் விதைக்கப்பட்டது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் சூட்டோடு சூடாக ஈழத் தமிழரிடம் உழைக்க கலைக் கழியாட்டத்துக்கு இன்று லண்டன் வந்திருக்கிறார்கள்?

இந்திய கலைத்துறை என்றால் சினிமா அதிலும் தென்னிந்திய சினிமா, திரைத் தொடர் நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், உப விற்பனைகள் என்ற எண்ணக்கரு விதைக்கப்பட்டு நாளுக்கு நாள் இறுக்கமாகி வருகிறது. இது கூத்தாடித் தொழில் முதலாழிகள் தாமாகவே புலன் பெயர் தமிழர்களிடம் உருவாக்கிவிட்டிருக்கும் பாரிய-லாபமிக்க சந்தை. இந்தியாவில் எத்தனை மாநில மொழிகளில் சினிமாத் தொழிலும் கலைஞர்களும் இருந்த போதும் அடிக்கடி ஐரோப்பிய, கனடிய அரினா மண்டபங்கள் நிரம்பி வழியும் வருமானம் மிக்க கழியாட்டத் திருவிழாத் திருட்டை தென்னிந்திய கலைத்துறையால் மட்டுமே செய்ய முடிகிறது. காரணம் இலங்கைத் தமிழ் இழிச்ச வாயர்கள் பெறுமதி மிக்க பணமுலாவும் நாடுகளில் வாழ்வது.

அறம், நீதி, நேர்மை இவைகளைத் தள்ளி வைத்து இவைகளை ஏற்பவனைத் தண்டித்துக் கொன்று, பலாத்காரமாகக் குழந்தைகளை இழுத்து வந்து பயிற்சியே இல்லாமல் சுடுகலன்களைக் கையில் கொடுத்து அனுப்பியவனையும் தங்கள் தலைவனாக ஏற்றுப் போற்றிய வாத்துக் கூட்டமான ஈழத் தமிழர்கள் தானே? இசை நிகழ்ச்சியில் மட்டும் நீதியற்று வாக்களிக்கிறோம் சிறுவர் உரிமையை மீறுகிறோம் என்பதை எப்படி உணரமுடியும்? ஆண்ட பரம்பரை என்று சொல்வார்கள் முள்ளிவாய்கால் வரை தொடர்ந்து தோற்ற பரம்பரை! எதிலாவது வென்றுவிடவேண்டும் என்ற வேணவா! அதற்காக நேர்மையற்றாவது? என்பதன் விளைவாக விழுந்தது தான் யசிக்காவுக்கான வாக்கெண்ணிக்கை! இதை வாய்ப்பாக்கியது ஏதையலவுஏ.

„திருடாதே பாப்பா . . . . . . . . .'

தன்னுடைய நிகழ்ச்சி அட்டையின் அங்கீகாரமற்ற விற்பனையைத் தவிர்ப்பதற்காக இந்தப் பாடலை அடிக்கடி விளம்பரம் செய்கிறது ஏதையலவுஏ. ஆனால் மிகப்பெரிய திருடர்கள் இவர்கள் தான். இவர்களால் திருடப்படுபவை . .

• சுப்பர்சிங்கர் முதல் தேர்வில் சிறுவர்களின் எதிர்பார்ப்புகள்
• சரியான திறமையை வெளிப்படுத்தும் உரிமை
• கல்வி, கல்வி மீதான அக்கறை
• கல்வியில் காலவரையற்ற விடுப்பு(கல்யில் விடுப்பு உரிமை மீறலே)
• குழந்தைகளின் உழைப்பு
• எதிர்காலம் பற்றிய உண்மையற்ற எதிர்பார்ப்பு.

இப்படிப் பல விடயங்கள் குழந்தைகளிடமிருந்து திருடப்பட்டாலும் இலகுவான, செலவு குறைந்த, விளம்பரம் மிக்க நிகழ்ச்சி சுப்பர்சிங்கர் என்பதால் அதியுயர் வருமானம், விளம்பரங்கள் என அள்ளுகொள்ளை! குழந்தை தொழிலாரைக் கொண்டு உழைக்கும் தீப்பெட்டித் தொழில் போல இது சுருதிப்பெட்டித் தொழிலில் சிறுவர் உழைப்பு! சிறுவர்கள் சுரண்டப்படுகிறார்கள்!

• சினிமா, சினிமா, சினிமா என முழுமையும் அதுவாகவே! தமிழ் சினிமாவில் சமூகம் முன் செல்லவென வைக்கப்படும் அம்சம்? நூறாண்டாகியும் இன்றுவரை கேள்வியே தான்!

• சினிமாக் கலைஞர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக்கிப் போற்றுதலுக்குரிய அளவு முக்கியத்தும் கொடுக்கிறது ஏதையல ஏனோ?

• புறக்கணிக்கக் கூடிய சிறிய பிரச்சனைகளைப் பெரிது படுத்தல், சதா ஒட்டுக்கேட்டல், சாப்பாட்டில் விஷம் வைத்தல், கொலை, வில்லத்தனம் ஒருத்தி புருசனை ஒருத்தி பிடிக்கிறது இவைகளிலெல்லாம் அனேகம் பெண்களையே காட்டும் சின்னத்திரைத் தொடர்கதைகள் தேர்வு ஏதும் இன்றி ஒளிபரப்பிப் பெண்களைக் கேவலப்படுத்துகின்றது! . . . . .

அதோடு தொலைக் காட்சித் தொடர்கள் சினிமா மோகம் என்பன குடும்பப் பெண்களின் ஓய்வைத் திருவதோடு, குழந்தைகளை நேர்த்தியாகப் பராமரிக்க, வீட்டுப் பாடம், கல்விக்குதவுதல் போன்ற அனைத்துக் கடமைகளும் திருடப்படுகின்றன.

„ஒரு வார்த்தை ஒரு லட்சம்' வாரமொரு தமிழ் வளர்க்க „கனெக்ஸன்' னில் தினமும் தமிழ்ப் படுகொலை அரங்கேறுகிறது. தமிழ் நடிகர்களை மட்டுமே உள்வாங்கும் „நடுவிலகொஞ்சம் . . .' அவர்களின் தரத்துக்கான கேள்விகளின் மூலம் தமிழ் நடிகர்களின் அறிவுத்திறனை உலகறிய வைக்கிறது. „அது இது எது' அதிலும் சினிமாக் கலைஞர்களே! இது நோக்கமற்றிருப்பதோடு அது பேசும் வார்த்தைகள் பகிடிகள் பண்பு கடந்து போவது பல தடவைகள் நடந்திருக்கிறது.

படங்கள், சின்னத் திரைத் தொடர்கள், தினசரி நிகழ்சி பூராவும் சினிமாக் கலைஞர்களையே உள்வாங்கல் முலம் சினிமாக் கலைஞர்களின் அமைப்புக்களால் நடத்தப்பட்ட பெரு விழாக்கள், வெளிநாட்டுக் கழியாட்ட வருகைகள், விளம்பரங்கள் என ஒட்டுமொத்தமாகத் திருடிவிட்டது ஏதையல!.

சார்பு நிலையற்ற எந்த ஊடகமும் இருக்கமுடியாது. அந்த வகையில் ஏதையல யின் சார்பு மக்களை நோக்கியதல்ல. ஒரு நலவாழ்வு நிகழ்ச்சியோ, குறைந்த படசம் தினச் செய்தியோ கூடக் கிடையாது. „நீயா நானா' இது கூட மத்திய தர மேல் தட்டு மக்களின் பிரச்சனைகள் பிணக்குகளே தலைப்புகளாகவே தேடப்படுகிறது. ஆங்கிலம் கலந்தோ முழுமையும் ஆங்கிலத்திலோ பேசுவது மதிப்புகுரியதாக ஒரு பாணி பழக்கப் படுத்தப்பட்டதால் கீழ்த்தட்டு அனுபவங்கள் பங்கிடப்படுவது அரிதாகவேயுள்ளது.

எது எப்படியோ சுமைகள் மிகுந்த இன்றைய மனிதன் பொழுபோக்கு எனும் இருட்டுக்குள் அழைத்துத் திருடப்படுகிறான். இதைத் திறம்படச் செய்கிறது ஏதையல. எனவே „திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது . . . „ என்ற பாடல் வரியைப் பயன்படுத்தும் இவர்கள் தாமே திருந்துவார்களா? இல்லை! தவறு சிறிதாக இருக்கும் போதே நாம் இவர்களைத் திருத்த வேண்டும்.

தொலைக்காட்சி, அட்டைகள், கழியாட்ட நிகழ்வுகள், விளம்பரங்கள் புலம் பெயர் தமிழர்களிலேயே பெருமளவு தங்கி நிற்கும் இவர்களை முடக்கும் ஆயுதமும் நாமே! நாம் பகிஸ்கரித்தால்? சினிமா மோகம், தவறான வழி நடத்தல் என்பவற்றிலிருந்து சமூகத்தை காப்பாற்ற முடியும்! செய்வீர்களா? யசிக்கா மூலம் உழைத்து உருசி கண்டவர்கள் இனிவரும் ஒவ்வொரு சுப்சிங்கரிலும் புலம் பெயர் ஈழத் தமிழரை இடம் பெற வைப்பார்கள்.

ஓடியோடித் திருடுகிறார்களே தவிர திருடும் பணத்தில் சிறு துளி கூடநலப்பணிகளுக்காக ஏதையல செலவிட்டதாக அறியமுடியவில்லை.

(தொடர்)


Read more...

Wednesday, March 25, 2015

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் நச்சு மாசுகள் இல்லை - எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி

யாழ் குடாநாட்டின், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நச்சு மாசுகள் இல்லை என்று அந்தப் பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு தெரிவித்திருக்கின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் த.ஜெயசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கு.வேலாயுதமூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த டாக்டர் நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத்தின் தலைவர் டாக்டர் அ.அற்புதராஜா ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவறான முடிவுகளை மேற்கொண்டால் வதந்திகள் உருவாகி உணர்வுகள் கிளர்ந்தெழுவதன் ஊடாக யாழ் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினை மேலும் மோசமாகும் என்று வரையறுக்கப்பட்ட நொதர்ன் பவர் தனியார் நிறுவனத்தின் தாய் அமைப்பான எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

“நாம் சுற்றாடலுக்கும் வடக்கில் தற்போது நிலவும் வருந்தத்தக்க நீர் மாசடைந்த பிரச்சினை தொடர்பிலும் எந்தவிதமான தீங்கினையும் இழைக்கவில்லை என்பதில் மிகுந்த நம்பிக்கைகொண்டுள்ளோம். சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தார்மீகப் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் கடந்த காலத்திலும் குறைந்த அளவு பாதிப்பை அல்லது தீங்கையேனும் இழைத்திருக்கவில்லை” என்று எம்ரிடி வோல்கர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லால் பெரேரா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கையினை மீள சமீபத்தில் வலியுறுத்தினார்.

எவ்வாறெனினும், எதிர்காலத்தில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பையும் இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்தப் பிரச்சினைக்கான உண்மையான மூல காரணம் அல்லது தோற்றுவாய் மறைக்கப்பட்டு எமக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வருத்தமளிக்கிறது. எனவே, உணர்ச்சி மேலீட்டால் மேற்கொள்ளப்படுகிற தவறான முடிவுகள் நீர் மாசடைதல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பாதிக்கும் என்பதுதான் எமது அச்சமாக உள்ளது.

நொதர்ன் மின்சார நிறுவனம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில், 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, இலங்கை மின்சார சபையின் நிலையம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள எண்ணெய்க் குளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சுன்னாகத்தைப்பற்றிய சிற்றறிவு உள்ள எந்த ஒரு நபரும் அறிவார்.

துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணெய்க் குளம் பற்றி கேள்வி எழுப்பவோ விசாரணை நடத்தவோ எந்த ஒரு நபரும் முன்வரவில்லை. ஆகவே, நீர் மாசடைதல் பிரச்சினையில் நாம் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை எந்தத் தீங்கையும் செய்யவில்லை என்ற திடமான நம்பிக்கை எமக்கிருப்பதால், அதன் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக சுற்றுச்சூழல் பற்றிய சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனவே, சுயநலமிக்கவர்களின் வதந்திகளுக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் செவிசாய்க்காது ஐரிஐ மேற்கொள்ளும் சுயாதீனமான விசாரணைகளின் பெறுபேற்றுக்காகவும் நீதித்துறையின் தீர்ப்புக்காகவும் பொறுமையுடன் காத்திருக்குமாறு இந்த விடயத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் விசேடமாக எமது வடக்கின் சொந்தங்;களையும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் உள்நாட்டுப்போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, குடா நாடு இருளில் முழ்கியதால் குழந்தைகள் குப்பி விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது நொதர்ன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்திற்குக் கை கொடுத்தாகவும் திரு.பெரேரா கூறினார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு வலுசக்தி தேவையை நிறைவேற்றும் ஒரே நோக்கத்திற்காகவே எமது நிறுவனம் வட மாகாணத்திற்குப் பிரவேசித்தது. உண்மையில், மின்னுற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிக்க முன்வந்த ஒரு நிறுவனம், வடக்கில் அபாயமான நிலைமை உச்ச கட்டத்தில் இருந்ததால், அந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டவேளையில், நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கத்தில் வட பகுதி மக்களுக்கு மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தின் வர்த்தகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் முதலானவற்றின் நலன் கருதி எமது சேவையை ஆரம்பித்தோம்.

எமது பங்குதார்களுக்குப் பதில் அளிக்கக் கடப்பாடு உடையதும் பொறுப்புக்கூறக்கூடியதுமான எமது நிறுவனத்தின் செயற்பாடுகளால் யாழ் பொது மக்கள் பாதிப்படைய இடமளிக்கமாட்டோம்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான நீர் மாசடைதல் பிரச்சினைக்கு நாம் எந்த வகையிலும் காரணமல்லர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் யாழ் பொது மக்களுக்கும் வழங்குவோம் என உறுதியளிக்கின்றேன்.

நொதர்ன் பவர் நிறுவனம் பத்திரிகையில் வெளியான செய்தியொன்றையும் சுட்டிக்காட்டியுள்ளது. (அதாவது, 2015 ஜனவரி 25 ஆம் திகதிய பதிப்பில்) ‘2007இல் இந்த நிறுவனம் மின்சார நிலைய நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டிலேயே நீரில் எண்ணெய் கலந்தமை கண்டறியப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’


Read more...

Tuesday, March 24, 2015

புலம் பெயர் தமிழர்களே . . . ஆபத்தான நோய் !!!

நோய்க்கான காரணிகள் : முதுமை, பாரிசவாதம், தலையில் அடிபடுதல், அன்பு கிடைக்காமை, உறவுகளைப் பிரிதல், குடும்பச்சச்சரவு, பயந்தான் கோழித்தனம், மாதவிடாய்க்கோளாறு, தனிமையில் இன்பங்காணுதல் . . . . . பல வேறு காரணிகளால் ஏற்படக் கூடிய இந்த நோயானது இலத்தீன் சொல்லான “Dementia” என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்

சிந்திக்கும் ஆற்றலில் ஏற்படும் பாதிப்பு அல்லது அற்றுப் போதல், மொழிவெளிப்பாட்டில் ஏற்படும் இடர்பாடு, சற்றுமுன்னர் செய்த வேலையை, பழகிய நபரை, சம்பவத்தை, இடத்தை மறத்தல், உடல் அசைவியக்கத்தில் ஏற்படும் தாமதம், திக்குத்திசை தெரியாது தடுமாறுதல், மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, சரியான தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அற்றுப் போதல், ஏமாற்றியவர்களையே திரும்பவும் திரும்ப நம்புதல், தனக்கு நிகழக் கூடாததையும் கூசாமல் பிறருக்கு நிகழ்த்தல், மனஉளைச்சல், சிறுவர்-பிறர் உரிமைகளுக்கு மதிப்பறியாமை, புலன் உணர்வுகளில்(கேட்டல், பார்த்தல், சுவைத்தல், உணர்ந்தறிதல்) ஏற்படும் மாற்றங்கள், நேர்மையான சிந்தனையின்மை, தனியான வெற்றிகளில் அதிக நாட்டம், தோல்வியை ஏற்க மறுத்தல், நேர்மையற்ற கட்சிகள் - தலமைகளை இனம் காண முடியாமல் ஏற்றுக் கொள்ளலும், நிபந்தனையற்றுப் போற்றுதலும், துறை சார் திறனறியாமை(பாட்டு சிறுமி யசிக்காவுக்குப் பல கள்ள ஓட்டுப் போட்டது போன்ற செயற்பாடுகள்) , என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் என்று தெரியாமல் செயல்களை செய்தல் (கொடி பிடித்தல்) இப்படியானவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

குறிப்பு:-

இது கேலிக்காக எழுதியதல்ல . . . . . . உண்மையில் இப்டியொரு நோய் உண்டு என்பதும் உலகளாவியரீதியில் 44 மில்லியன் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருவதாகவும், இந்நோய் ஆகக்குறைந்தது 40 வயதிலும் ஏற்படலாம் என்றும், குணப்படுத்தமுடியாத நோயாகக் கருதப்படுகிறது என்றதான அனைத்துத் தகவல்களும் கனடாவிலிருந்து தளமேற்றும் பிரபல தமிழ் மின் அஞ்சல் சஞ்சிகை வானவில்லின் தகவலிலிருந்து தொகுக்கப்பட்டது! நன்றி!

இலத்தீன் மொழியில் De என்பது தேய்வடைதலையும், Mens என்பது புரிதலையும் குறிப்பிடுதலால் மொத்தத்தில் சிந்தனையாற்றல் தேய்வடைதலால் ஏற்படும் “Dementia” எனும் இந் நோய் தமிழில் 'புலன்(அறளை)பெயர்தல்' என்று அழைக்க உகந்தது.

இதன் குணங்குறிகள், பெருமளவு காரணிகள் புலம்(புலன்) பெயர்ந்துள்ள 90 வீதமான இலங்கைத் தமிழருக்கு அப்படியே அச்சொட்டாகப் பொருந்துவது காணப்பட்டதால் அலறியடித்துக்கொண்டே எனது போக்கில் இந்தத் தகவலைத் தொகுக்கத் தொடங்கினேன் . . . !

புலம் பெயர் தழிழீழ உறவுகளே நீங்களாகவே பரீட்சித்துப் பாருங்கள்! இந்த அறிகுறிகளில் ஒன்றோ பலவோ உங்களிடம் காணப்பட்டாலும். . . . . ? என் செய்வது? ஈழத் தமிழர் மரபணுவோட ஒட்டியிற்றுது... இனிக் குணப்படுத்தமுடியாது! கஸ்டமே தான்!


-லோகன்-

Read more...

Monday, March 23, 2015

தேசியக் கொடியும், தேசிய கீதமும் . தங்க. முகுந்தன்

இன்று பாராளுமன்றத்தில் முக்கியமாகப் பேசப்படும் தேசிய கீதப் பிரச்சினையை எண்ணி அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. மனித உரிமைகள் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளன.

வாழும் உரிமை,
உணவுக்கான உரிமை,
நீருக்கான உரிமை,
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,
பேச்சுரிமை,
சிந்தனைச் சுதந்திரம்,

ஊடகச் சுதந்திரம்,
தகவல் சுதந்திரம்,
சமயச் சுதந்திரம்,
அடிமையாகா உரிமை,
சித்தரவதைக்கு உட்படா உரிமை,
தன்னாட்சி உரிமை,
சுயநிர்ணயம்,
ஆட்சியில் பங்குகொள்ள உரிமை,
நேர்மையான விசாரணைக்கான உரிமை,
நகர்வு சுதந்திரம்,
கூடல் சுதந்திரம்,
குழுமச் சுதந்திரம்,
கல்வி உரிமை,
மொழி உரிமை,
பண்பாட்டு உரிமை,
சொத்துரிமை.....
இதில் எமது நாட்டில் எந்த ஒரு உரிமையும் சிறுபான்மையினத்துக்கு செல்லுபடியற்ற நிலையில் தேசிய கீதத்தை ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது தனிச் சிங்களத்தில் பாடவேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்திருந்தார். இதன் காரணமாக கல்வி சார் அறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதும் எமது சரித்திரத்தில் வரலாறு. இன்று மைத்திரியின் புதிய அரசு தமிழிலும் பாடலாம் என்று கருத்துக்கூறி அதைப்பற்றி விவாதித்து வருகிறார்கள்.

நாட்டு வணக்கப் பாடல்கள் பெரும்பாலும் அரசு ஏற்பு பெற்ற ஒரு மொழியில் இருந்தாலும், சில நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அரச ஏற்பு பெற்ற மொழிகளாக இருக்கும்பொழுது, அவற்றில், 2 மொழிகளிலோ, சில நாடுகளில் பல மொழிகளிலோ நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். கனடாவில் நாட்டுப்பண் ஆங்கிலம், பிரெஞ்ச்சு ஆகிய இரு மொழிகளில் அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அவர்களின் நாட்டு வணக்கப் பாடல் அந்நாட்டின் நான்கு நாட்டுமொழிகளில் (பிரெஞ்ச்சு, டொச், இத்தாலியன், ரோமன்சு) அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் நாட்டு வணக்கப் பாடல், ஒரே பாடலில் அந்நாட்டின் 11 மொழிகளில் ஐந்து மொழிகளில் தனிப்பகுதிகளாக அமைந்துள்ளது. எசுப்பானிய நாட்டுப்பண்ணில் இசை மட்டுமே உள்ளது, சொற்கள் ஏதும் இல்லை.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கெனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
ஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கெனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும் சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்றுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

இதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950 இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.

1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.

1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என 'ந' என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும், ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை. இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.

இலங்கையின் தேசிய கீதம் 3 மொழிகளிலும் அர்த்தம் பிசகாமல் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வந்துள்ளது.

நான் அனுராதபுரத்தில் கல்விகற்ற காலத்தில் 1975 – 1977வரை எமது பாடசாலையான அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்லூரி நிகழ்வுகளில் முதலில் பாடசாலைக் கீதம் பாடப்பட்டு நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு வந்தது. நாம் சங்கீதம் கற்றதனால் அடிக்கடி எல்லா நிகழ்வுகளிலும் பாடுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நேரத்தில்

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

என்ற தற்போது பழக்கத்தில் உள்ள பாடலின் முதல்பந்தி மட்டுமே இருந்தது. நான் நினைக்கின்றேன் 1978 புதிய அரசியலமைப்பின் பின்னர் தேசிய கீதத்தில் கீழ்க்கண்ட 2 பந்திகள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

ஏனெனில் 1977 இன்பின் இன்றுவரை நான் தேசிய கீதத்தைப் பாடவுமில்லை. அதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. மேலும் யாழ்ப்பாணத்தில் தேசிய கீதம் ஒரு சில இடங்களில் இசைக்கப்பட்டாலும் எல்லோருக்கும் தேசிய கீதம் தெரிந்திருக்கவில்லை.

2 தடவைகளுக்கு மேல் மாற்றஞ் செய்யப்பட்ட தேசியக்கொடி!



இலங்கை சுதந்திரமடைந்தது 4-2-1948ல். அப்போது நாட்டின் தேசியக் கொடி கண்டி அரசனின் சிங்கக்கொடி. சிறுபான்மையினத்தவர்களின் பெரும்போராட்ட எதிர்ப்புக்களின் பின்னர் 1952இல் மாற்றப்பட்ட கொடியும் 1972ல் சிறு மாற்றத்திற்குள்ளானது! எத்தனைபேருக்கு இது தெரியும்? இதனால்தான் சிறுபான்மையினத்தவர்கள் இன்றுவரை இக்கொடியை ஒட்டுக்கொடி என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வருகிறார்கள்.

வாழும் உரிமை – மறுக்கப்பட்ட ஒரு சமுதாயம் கொடியையோ – நாட்டின் தேசிய கீதத்தையே ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்கள் அனைவரும் சில உறுதிமொழிகளை எடுத்திருந்தாலும் அவர்களும் தமது மனச்சாட்சிப்படி நடக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். தேசியக் கொடியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறு கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் சிறுபான்மையினத்தவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை அவர்களிடம் நாட்டின் கொடியைப் பற்றியோ அல்லது தேசிய கீதத்தைப் பற்றியோ எதிர்பார்ப்பது முட்டாள்தனமானதாகும்.




Read more...

Friday, March 20, 2015

சித்தாண்டி யுவதியின் சோகக்கதை ! நடந்தது என்ன ?

ஒருநாள் விடுமுறை என்றாலே ஒரு குதுகலம்தான் அதிலும் சுற்றுலா என்றால் சொல்லவா வேண்டும். அதுவும் வேலைத்தளத்தில் ஒன்றாக கடமையாற்றுவோருடன் செல்வதாயின் அந்த நாளையே மறக்கமுடியாது. அந்த நாளை எவ்வாறு மறக்கமுடியாதோ, அதேபோல சென்ற இடங்களை ஞாபகப்படுத்துவதற்காக வாங்குகின்ற ஞாபகசின்னங்களை பார்க்கும் போதெல்லாம். அந்த நாள் நினைவில் ஓடும். சென்ற இடங்களிலும் சிலர் நினைவுகளை பதித்துவிட்டு வருவர். நினைவுத்தடங்கள் நீங்காதவைதான் ஆனால், சில நினைவுகளையும் நினைவு தடங்களையும் எம்மால் மறக்கவே முடியாது. அவ்வாறான சம்பவமொன்றே மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை யுவதியான உதயசிறிக்கு இடம்பெற்றுள்ளது. அவர் பதித்த நினைவுத்தடம் இரண்டு வருடங்கள் சிறைவாசத்துக்கு வித்திடும் என்று அவள், தனது கொண்டை பின்னை கழற்றும்போதோ, நாமத்தை பதியும் போதோ நினைத்திருக்கவே மாட்டாள். ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒரு மாதம் கழிந்து விட்டது. கடந்த மாதம் 14ஆம் திகதி, சிகிரியா அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட உதயசிறி, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது அனுராதபுரம் சிறையில் வாடுகின்றாள் மட்டக்களப்பிலுள்ள இரத்தினக்கல் பட்டை தீட்டும் தொழிற்சாலையில் பணிபுரியும் உதயசிறிக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினமான சனிக்கிழமையன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டது.

அந்த விடுமுறை தினத்தில் எங்காவது சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவெடுத்த தொழிலாளர்களின் தெரிவாக, அன்றைய நாளுக்குள் மட்டக்களப்பிலிருந்து போய்த் திரும்பக் கூடிய இடமாக காணப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரியாதான் இருந்தது. காலை 6.40 மணியிருக்கும் அவர்கள் மட்டக்களப்பிலிருந்து கலகலப்பாகப் புறப்பட்டார்கள்.

உதயசிறியும் தனது சொந்த இடமான சித்தாண்டியில் வைத்து நண்பர்களோடு வந்த பஸ்ஸில் எறிக்கொண்டாள்

ஒரு பிஸ்கட் பக்கற்றோடு போகின்றேன் என்று அதைக் கையில் எடுத்து உயர்த்திக் காட்டினார் எனது மகள். வழமையாக போயிற்று வாறனம்மா என்று சொல்லிவிட்டு போவாள். ஆனால், அன்றைய தினம் இந்த பிஸ்கட்டோடதான் போறனம்மா என்று மட்டும்தான் சொன்னாள்.

அவளின் வாயிலிருந்து வந்த அந்த கடைசி வார்த்தையும் ஒரு அறிகுறிதான். ஆனால் அதன் அர்த்தம் அவள் திரும்பி வராமல் சிறையில் இருக்கும்போதுதான் விளங்குகின்றது

அந்த பிஸ்கட் பக்கெற்று திறக்கப்படாமலே திரும்பி வந்தது. கூடப்போன பிள்ளைகள் அந்த பிஸ்கட் பக்கெற்றைக் கொண்டு வந்தாங்க. ஆனால் என் மகள் வரவில்லை.

மகளைப் பிடித்து விட்டார்கள் என்று மாலை ஐந்து மணிக்குத் தகவல் வந்தது. எனது மற்ற மகளுடன் உதயசிறி தொலைபேசியில் பேசினார். எனக்குத் தொண்டை வறளுகிறது அக்கா, என்னால் பேச முடியாமல் இருக்கிறது எனக்கு ஐந்து வருடம் சிறையும் ஐந்து இலட்சம் தண்டப்பணமும் விதிக்கப்போகின்றார்களாம் என்று கூறி அழுதாள். தலையிலடித்துக் கதறினாள். நாங்களும் அழுதோம்.’ இப்படி அழுதழுது தனது மகளின் துயரக் கதையை விவரித்தார் பார்வையிழந்து உடலாற்றல் குன்றியுள்ள அந்த ஏழை யுவதி உதயசிறியின் தாய். 61 வயதை கடந்திருக்கும்; அந்த வயோதிப தாயின் பெயர் சின்னத்தம்பி தவமணி.

உதயசிறியின் உயிர்த்தோழி ரவிச்சந்திரன் வனத்தம்மா

எனக்கு உதயசிறியை 2 வருடங்களாக தெரியும். மட்டக்களப்பு கூழாவடியிலுள்ள டயமன்ட் ஆபரணக் கற்கள் வெட்டும் தொழிற்சாலையில் நான் 3 வருடங்களாக வேலை செய்கின்றேன். உதயசிறி இந்த நிறுவனத்தில் 4 வருடங்களாக வேலை செய்கிறாள்.

இந்த நிறுவனத்தில் ஆரம்பச் சம்பளம் மாதமொன்றுக்கு 5,500 ரூபாய் தந்தார்கள். இப்பொழுது 13,000 ரூபாய் தருகிறார்கள். இருவேளைச் சாப்பாடும் தேநீரும் மேலதிகமாகத் தருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் ஓய்வு. சிலவேளை, அந்த நாளிலும் வேலை செய்யச் சொல்வார்கள்.

நான் மலையகத்தின் நாவலப்பிட்டியை சேர்ந்தவள். எனக்கு தந்தை இல்லை. தாயார் மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். அம்மா போன பிறகு வீட்டில் தனியே இருக்க முடியாது. எனது மாமா முறையானவரின் இம்சை தாங்க முடியாமல் எனக்குக் கடவுளால் கிடைத்த நண்பி நிறோஜியிடம் வந்து சரணடைந்து மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது வீட்டிலேயே சொந்தப் பிள்ளை மாதிரி தங்கியிருக்கின்றேன்.

இப்படியிருக்கும்போதுதான் உதயசிறியும் எனது துயரக் கதைகளோடு இணைந்து உயிர்த்தோழியானாள். அவளிடம் நல்ல குணமும் சிறந்த பண்புகளும் இருப்பதால் நான் அவளோடு நெருங்கிப் பழகினேன். எங்களுக்கு பெப்ரவரி 14ஆம் திகதி கிடைத்த விடுமுறையில் சிகிரியாவுக்குப் போக முடிவெடுத்தோம்.

எங்களது தொழிற்சாலை மேற்பார்வையாளர் செல்வகுமாரும் அங்கு பணிபுரியும் டிலக்ஷனும் சேர்ந்தே இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி எங்களை அழைத்துச் சென்றார்கள். பகல் 11 மணிக்கெல்லாம் எங்களது பஸ், சிகிரியாவை சென்றடைந்தது. சிகிரியா மலையில் நாம் ஏறும்போது பகல் 12.30 மணியிருக்கும்.

சிகிரியாவைப் பற்றியோ அங்கு நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியோ எங்களுக்கு எதுவிதமான முன்னறிவும் இருக்கவில்லை. அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் எவரும் தந்திருக்கவுமில்லை. மற்றவர்கள் மலையில் மேலேறும் போது நானும் எனது நண்பியும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தோம்.

அப்பொழுது ஏற்கெனவே கீறப்பட்டிருந்த நீற்று சுண்ணாம்பு சுவருள்ள இடத்தில் என் நண்பி உதயசிறி தனது பெயரை அவளது கூந்தலில் இருந்த கிளிப்பை எடுத்து ‘உதயா தேங்க்ஸ்’ என்று எழுதி முடியும் தறுவாயில் 4 பேர் படியிலேறி ஓடிவந்தார்கள். நீற்று சுண்ணாம்பு சுவரில் அவள் எழுதி முடிக்கும்வரை அந்த இடத்தில் எந்தக் காவலரும் இருந்திருக்கவில்லை. வந்தவர்களில் இருவர் அவ்விடத்தில் நின்று கொண்டு பொலிஸாருக்கு அழைப்பை எடுத்தனர். இது நடக்கும்போது மாலை 3.30 மணியிருக்கும்.

மற்றவர் கமெராவை சூம் செய்து, இவள் சுவரில் எழுதியவற்றை புகைப்படம் பிடித்தார். உங்களை நாங்கள் பொலிஸூக்கு அழைத்துச் செல்லப் போகின்றோம் உங்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையோடு நீங்கள் இரண்டரை இலட்சம் ரூபாய் பணமும் செலுத்த வேண்டி வரும் என்று தமிழில் சொன்னார்கள்.

அந்த இடத்தில் நாங்கள் இருவர் மாத்திரமே நின்றிருந்தோம். நண்பி வைத்திருந்த அலைபேசி மற்றும் அவளது கைப்பை என்பவற்றை என்னிடம் ஒப்படைக்குமாறு கூறினார்கள். நான் அவற்றை அவளிடமிருந்து வாங்கி கொண்டு எங்களை அழைத்து வந்த மேற்பார்வையாளர் செல்வகுமாரிடம் அலைபேசி ஊடாக நடந்தவற்றைக் கூறினேன்.

எங்களை கீழே அவர்கள் அழைத்து வரும்போது நான் சாகப்போகின்றேன் என்று மலையிலிருந்து குதிப்பதற்கு அவள் முயற்சித்தாள் அப்பொழுது நான் அவளது கைகள் இரண்டையும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டேன். என்றாலும் அந்தப் படிகளில் அவள் பாய்ந்து பாய்ந்தே நடந்து கீழிறங்கி வந்து சேர்ந்தாள்.

உங்களை சிகிரியா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப் போகின்றோம் என்று கூறி, என்னையும் நண்பியையும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்றனர். ‘இதைக் கேள்விப்பட்டால் என் அம்மா ஏங்கிச் செத்துவிடுவார் என்று மட்டும் அழுதழுது சொல்லிக் கொண்டு வந்தாள் உதயசிறி. என் குடும்பமே இப்போது என்னால் அவமானப்படப்போகுது என் வாழ்க்கை இனி என்னவாக போகிறதோ? என்று சொல்லி அழுது கொண்டே வந்தாள்.

என் அம்மா என்னை நம்பித்தானே இருக்கின்றார் என் வாழ்க்கையில் நான் இதுவரை பொலிஸ் நிலையத்துக்குப் போனது கிடையாதே. எனக்கு ஐந்து வருடங்கள் சிறை என்றால் என் அம்மாவின் நிலைமை என்னவாகுமோ என்று கலங்கியவாறே இருந்தாள். பின்னர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.
பொலிஸ் நிலையத்துக்குள் விழுந்து புரண்டு புரண்டு அழுதாள். பொலிஸார் பயப்பட வேண்டாம் என்று சொன்னவுடன் சிறிது நேரம் அமைதியானாள்.

அவளின் சகோதரி தொலைபேசி அழைப்பு எடுத்தவுடன் இங்கு எனக்கு நடக்கும் ஒன்றையும் அம்மாவிடம் சொல்லாதே என்று அலறினாள்.
எங்களைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற பின்னரே, எங்களது மேற்பார்வையாளர் செல்வகுமார் அங்கு வந்து சேர்ந்தார்.

மாலை ஆறு மணியாகும்போது உதயசிறியை சிறையில் வைக்க போகின்றோம் என்று கூறி அவளுடன் என்னை இருக்க விடாது பொலிஸார் வெளியே அனுப்பி விட்டனர். பின்னர் மாலை ஆறரை மணியளவில் பொலிஸார் என்னை அழைத்து அவளோடு தங்குமாறு கூறினர்.

சிங்கள மொழியில் வாக்குமூலம் எழுதிய பின்னர். என்னை சாட்சிக்கு கையெழுத்துச் போடச் சொன்னார்கள். எங்களோடு வந்தவர்கள் இரவு எட்டரை மணிக்குத் திரும்பி விட்டார்கள். நான் மட்டும் அன்றிரவு அவளோடு பொலிஸ் நிலையத்திலேயே தங்கி இருந்தேன். எங்களோடு ஒரு பாட்டியையும் தங்க வைத்தார்கள்.

உதயசிறி தனக்கு தலையிடி என்று கூறி கண்ணயர்ந்து விட்டாள். எங்களது நண்பர்கள் வாங்கித் தந்த சோற்றை நான் அவளுக்கு ஊட்டி விட்டு விழித்திருந்து அவளைக் கவனித்துக் கொண்டேன். அதிகாலை ஐந்து மணிக்கு அவள் விழித்துக் கொண்டு மீண்டும் ஓவென்று அழ ஆரம்பித்தாள். அழாதே விட்டுவிடுவார்கள் என்று சொன்னவுடன் சிரித்தாள்.

காலையில் பொலிஸார் சோறு தந்தார்கள். அதையும் நான் அவளுக்கு ஊட்டி விட்டேன். காலை 10 மணியளவில் அவளது சகோதரி, சித்தாண்டியிலிந்து சிகிரியா பொலிஸ் நிலையம் வந்து சேர்ந்தாள். தனது சகோதரியைக் கண்டதும் மீண்டும் அழ ஆரம்பித்தாள் உதயசிறி.

பின்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். 12 மணிவரை அங்கே இருந்தோம். நீதிபதி இல்லை என்பதால் பதில் நீதிபதி, விசாரணையை 18ஆம் திகதி வரைத் ஒத்திவைத்தார்.

18ஆம் திகதியும் பதில் நீதிவான்தான் கடமையிலிருந்தார். அன்றைய தினம் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திடமிருந்து அறிக்கை பெற வேண்டும் என்று நீதிபதி பொலிஸரிடம் கூறினார். அதனால், அடுத்தநாள் 19ஆம் திகதிக்கு விசாரணை பிற்போடப்பட்டது. 19ஆம் திகதியும் பதில் நீதிபதிதான் கடமையிலிருந்தார். தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து பெக்ஸ் மூலமாகத்தான் அறிக்கை வந்திருந்தது. ஆயினும் புராதன சின்னத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மீளமைப்புச் செய்ய முடியுமா முடியாதா என தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அறிக்கை பெற்று அதனை மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

உதயசிறியின் மற்றொரு நண்பியான ராஜ்குமார் நிறோஜின் கூறுகையில், 21ஆம் திகதி, அனுராதபுரம் சென்று உதயசிறியைப் பார்த்தோம் எலும்புந்தோலுமாகி மெலிந்திருந்தாள். சிறைக்கூட ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்து எங்களைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழுதாள்.
பரிதாபமாக இருந்தது. நானும் உதயசிறியின் அம்மாவும் வனத்தம்மாவுமாக நாங்கள் மூன்று பெண்கள் மட்டும்தான் அங்கு போனோம். எங்களுக்கு சிங்கள மொழியே தெரியாது.

பின்னர் மார்ச் மாதம் 02ஆம் திகதி விசாரணைத் தீர்ப்பன்று சென்றோம். அன்றைய தினம் இறுதியாகதான் இவளது விசாரணை இடம்பெற்றது. கடவுளை மன்றாடிக் கொண்டிருந்தோம் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எமக்கு மொழி தெரியாது.

சட்டத்தரணி அஸ்மி, 2 வருடங்கள் சிறை என்று சொன்னார். நாங்கள் நிலைகுலைந்து போனோம். அந்த நீதிமன்றத்துக்கு அன்று வந்திருந்த அத்தனை சிங்கள மக்களும் துயரப்பட்டு வாயடைத்துப் போய் நின்றார்கள்.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நண்பி தலையிலடித்துக் கொண்டு உருண்டு புரண்டு அழுதாள். என்ன செவ்வதென்றே எங்களுக்குப் புரியவில்லை நாதியற்றுப் போய் நின்றிருந்தோம். அவர்கள் எல்லோரும் ஏதேதோவெல்லாம் பேசினார்கள் மொழி தெரியாததால் எமக்கு எதுவுமே புரியவில்லை.
‘சிறைக்குள்ளே இருந்தால் எனது வாழ்க்கை, எனது எதிர்காலம் எல்லாமே பாழாய்ப் போய்விடும் என்னை விடுதலை செய்யப்பாருங்கள் என்று கட்டிப்பிடித்து அழுதாள். மனத்தளவில் அவள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அப்படியான வார்த்தைகள்தான் அவளது வாயிலிருந்து வெளிப்பட்டன.

அவளது குடும்பத்தில் ஐந்து பேரும் பெண் பிள்ளைகள். அவர்களது குடும்ப நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி, உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். நடந்த சம்பவம் பற்றி நாங்கள் எல்லோரும் வருந்துகின்றோம். இது அறியாமையால் நடந்த தவறு.

சட்டத்திட்டங்களும் தண்டனைகளும் பற்றி முன் கூட்டியே தெரிந்திருக்குமாக இருந்தால் பெரும்பாலானவர்கள் அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள். அப்படித்தான் இதுவும் நடந்தது. தன் தவறை அவள் பின்னர்தான் விளங்கி அதனை ஒப்புக் கொண்டுள்ளாள். அதற்கு இருக்கும் ஒரேயொரு வழி மன்னிப்புத்தான்.

இனிமேல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்வோர் அவர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் இவ்வாறான துயரத்திற்கு முகம் கொடுக்கக் கூடாது. இது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். எங்களது நண்பி சிறைக்குள் இருக்கும்போது நாங்கள் இங்கே படும் துயரத்தை போன்று இனி இந்த நாட்டில் யாருக்கும் நேர்ந்து விடக் கூடாது.

கற்றறிந்த நிபுணர்கள்தான் சிகிரியா மலைக்குன்றையும் ஓவியங்களையும் பார்வையிட வருவார்கள் என்றில்லை. பாமர மக்களும் அந்த இடத்திற்கு வருகிறார்கள் என்பதால் குறித்த பகுதியின் சரித்திர முக்கியத்துவத்தைப் பாதுகாக்க, பாதுகாப்பு அதிகாரிகள் உரிய இடத்தில் எந்நேரமும் கடமையில், கண்காணிப்பில் இருந்திருக்க வேண்டும்.

அறிவித்தல்களையும் மீறி அந்த சரித்திர இடங்களை அறியாத்தனமாக சேதப்படுத்தி விடுவார்கள் என்பதற்காக அந்தந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் நிற்க வேண்டும்.

அறிவித்தல்களை வாசித்தறிந்து கொள்ள முடியாத எத்தனையோ பேருக்கு இது காவலர்கள் அங்கே நிற்பது உதவியாக அமையும். இவள் தனது பெயரையும் தேங்க்ஸ் என்ற சொற்களை எழுதி முடியுமட்டும் காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

உரியவர்கள் அந்த இடத்திலே இருந்திருந்தால் இவள் எழுதுவதற்கு கை வைக்குமுன்பே தடுத்திருக்கலாம்’ என்று சோகம் தழும்ப கூறுகின்றாள் உதயசிறியின் மற்றொரு நண்பியான ராஜ்குமார் நிறோஜினி.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று சிகிரியா. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கின்றது. இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கென நாடாளுமன்ற சட்டமூலமும் இருக்கிறது.

தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் ஐத் என்பவர் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 3.45 மணியளவில் தொலைபேசியூடாக அழைத்து, யுவதி ஒருவர் சிகிரிய ஓவியத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் 6 ஆங்கில எழுத்துக்களை எழுதியதாக கூறியதன் அடிப்படையிலேயே சிகிரிய தொல்பொருள் அபிவிருத்திக் காரியாலயத்தின் அலுவலரான கே. நிரஞ்சலா சறோஜினி, பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதற்குச் சாட்சியாக கிறுக்கியதற்குப் பயன்படுத்திய கொண்டை கிளிப் (கவ்வி) கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பதியப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சின்னத்தம்பி உதயசிறி (வயது 27) என்பவர் சிகிரிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக்க, சார்ஜன் நவரெத்தின ஆகியோரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விடயத்தில் தனது கட்சிக்கார் தரப்பில் பரிந்து பேசிய சட்டத்தரணி அஸ்மி, ‘எனது கட்சிக்காரர் 27 வயதுடையவர். தொழிற்சாலையொன்றில் பணிபுரிகின்றார். அவர் உழைக்கும் அந்த ஊதியமே அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வாழ்வாதாரமாக உள்ளது.

அவருக்குத் தந்தையும் இல்லை. வதியோதிபத் தாயோடு காலம் கழிக்கும் அவருக்கு குடியிருக்க வீடும் இல்லை. அடுத்த மாதம் திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றார். நடந்த சம்பவம் பாரதூரமானது என்பதை அவர் ஏற்றுக் கொள்கின்றார்.

எனவே அவரது எதிர்காலம், அவரது வயோதிபத் தாயின் நிலைமை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு அவரது எதிர்காலம் பாதிக்காத வகையில் அவரை மன்னித்து கருணைகாட்டி தீர்ப்பை வழங்குமாறு மன்றை வேண்டி நிற்கின்றேன்’ என்று வாதாடியிருந்தார்.

இந்நிலையிலேயே விசாரணை முடிவில் தம்புள்ளை நீதிவான் சஞ்ஜீவ ரம்யகுமாரவினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. உதயசிறிக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ‘விஷேடமாக வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கும்போது பிரதிவாதியின் குடும்ப நிலைமை, அவர் தவறு செய்யத் தூண்டிய காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படல் வேண்டும். பிரதிவாதியால் செய்யப்பட்ட குற்றத்தின் பாரதூரம் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
இந்தப் பிரதிவாதியால் செய்யப்பட்டுள்ள குற்றமானது உலக பாரம்பரிய சின்னமான சிகிரியாவின் கவி வரிகள் மீது கொண்டைப் பின்னால் கிறுக்கியமையாகும். புராதன முக்கியத்துவம் மிக்க நாட்டின் கடந்த காலம் தொடர்பில் சாட்சி சொல்லும் விலைமதிக்க முடியாத இடத்திலேயே இவர் இவ்வாறு நடந்து கொண்டு அச்சின்னங்களுக்குச் சேதம் விளைவித்துள்ளார்.

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரிடமிருந்து மன்று பெற்றுக் கொண்டுள்ள அறிக்கையில் அந்த சேதத்தை மீளமைக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், எந்தவொரு சேதத்தையும் அதன் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி தொடர்பாகத் தண்டனை அளிக்கும்போது அவரை புனர்வாழ்வளிக்கும்முகமாக தண்டனையளிப்பது ஒரு முறையாகும். குற்றத்தின் பாரதூரத்தினை உணர்த்துவது அவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் வகையில் தண்டனை வழங்குவது இன்னொரு முறையாகும். அதனால் இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளையும் கருத்திற்கொண்டே இந்தப் பிரதிவாதிக்கு தண்டனையை நாம் நிர்ணயம் செய்கின்றோம்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளின் பிரகாரமும் சட்டத்தரணிகளால் மன்றுக்குச் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஊடாகவும் பிரதிவாதியான யுவதி, கட்டிளம் பருவத்தை உடையவர் என்பதைக் கருத்திற் கொண்டும் குற்றத்தின் பாரதூரத்தைக் கருத்திற் கொண்டுமே தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

அதன்படி குறித்த குற்றம் தொடர்பில் 1988ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தொல்பொருள் திருத்தச் சட்டத்தின் (15) ஆ அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்சத் தண்டனையை வழங்கத் தீர்மானிக்கின்றேன். அதன்படி குற்றவாளிக்கு 2 வருட சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளிக்கின்றேன்.’ எனத் தனது தீர்ப்பை அறிவித்தார்.

இவ்வேளையில் யுவதி தலையில் அடித்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்தில் ஓலமிட்டு உருண்டு புரண்டு அழுதார். இதனடிப்படையில் உதயசிறி அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

-ஹூஸைன்-

Read more...

Monday, March 16, 2015

விஜயங்களும் விமர்சனமும்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் குறுகியகாலத்தினும் பல அரச விஜயங்களை மேற்கொண்டுள்ளார். காரணம் என்ன? இவை எமக்குச் சொல்வது என்ன? அடுத்து சீனாவுக்கும் பயணம் செய்யவுள்ளார். ஒரு வாரத்துக்குள் இரண்டு முக்கிய விஜயங்களும் அதன் எதிர்வினைகளையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்க்க இருக்கிறோம். 1) மைத்திரியின் லண்டனுக்கான அரசவிஜயம் 2) இந்தியப் பிரதமர் மோடியினுடைய இலங்கை விஜயம்.

மைத்திரியின் இந்திய விஜயம்

மைத்திரி ஜனாதிபதியாகிய உடன் இந்திய விஜயமொன்று மேற்கொண்டதை யாவரும் அறிந்ததே. இந்தியா தனது இராஜதந்திர நடவடிக்கைகள், உறவுகளை தம்நலன் கருதி மகிந்தருடன் தாமரையிலைத் தண்ணீர்போல் உறவுகொணடிருந்தார்கள். மகிந்தரின் சீன உறவு இந்தியாவின் அடிவயிற்றைக் காலக்கியது என்பதில் ஐயமேயில்லை. இலங்கைக்கு இறுதிப்போரில் இந்தியா உதவியது கூட மைந்தர் வைத்த செக்கில் அரக்க முடியாமையே. இருபுறமும் அணுவாயுதம் கொண்ட பிராந்திய வல்லரசுகள் எதிராகவும், இலங்கையுடன் பலமான நண்புறவைக் கொண்டிருப்பதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு என்றும் அச்சுறுத்தலே. இதை முறியடிக்கவே இந்தியாவும், தமது கொள்கை கோட் பாடுகளுக்கு இணங்காத சீனாவைப்புறம்தள்ள மேற்குநாடுகளும் முயன்று மைத்திரியை முன்னிறுத்தி வெற்றிகண்டுள்ளனர். இவை அனைத்தும் சுயநலன்களின் வெளிப்பாடே அன்றி தமிழர்கள், தமிழர்களின் அரசியல், சுயநிர்ணயம், எதிர்காலம், போர்க்குற்றமும் அதன் விசாரணைகளும் என்று எண்ணுவது மிகத்தவறானது. போர்குற்றம் என்பது மகிந்தர் கொம்பனியை வெருட்டிப்பணிய வைக்கும் ஒருகருவியாக மட்டமே உள்ளது.

மைத்திரியும் தன் வெற்றிக்கான நன்றியையும், அடுத்து என்ன செய்யவேண்டும், செய்யப்போகிறேன் என்பன பற்றிய உரையாடல் ஒன்று தேவைப்பட்டது. இதற்கு இந்த விஜயம் முக்கியமானது. அங்கே ஈழத்தமிழர்களுக்கான அரசியல், அரசியல்தீர்வு எதுவுமே பெரிதாகப் பேசப்படவில்லை என்பது கவலைக்குரியது. அதை நாம் எதிர்பார்த்ததும் கூட. மைத்திரி ஒருவிடயத்தை நன்கு கவனத்தில் கொள்வது மிக முக்கியமானது. மேற்குறிப்பிட்ட நாடுகள் இலங்கையைச் சுற்றியுள்ள பிராந்திய அதிகாரத்திலும், புதிய முதலீடுகளிலும், முதலீடுகளின் இலாபத்திலுமே அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும். இவர்களின் இந்த ஆர்வத்தை இலங்கை நாட்டின் வளர்ச்சி க்கும், இனப்பிரச்சனைத் தீர்வுக்கும் சாதகமாக, இராஜதந்திர முறையில் காய்நகர்த்துவது இன்றை ஜனாதிபதியின் சவாலாக அமைந்துள்ளது. மைத்திரி இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் கருத்தாகவும் இனப்பிரச்சனைத் தீர்வை பக்கவாட்டில் போடுவார் என்றுமே எண்ணத்தோன்றுகிறது

தமிழர்கள் பிரச்சனை என்றும் தீர்க்கப்படாது இருப்பதே இந்தியாவிற்கு நன்மை பயக்கும். இலங்கையரசு இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் நிற்கத்தவறித் திமிறும் போது தமிழர்களின் பிரச்சனை துரும்புசீட்டு மேசையில் அடிக்கப்படும். ஆதலால் தமிழர்களின் பிரச்சனை தீர்வுக்கு வருவதை இன்றல்ல என்றுமே இந்தியா விரும்பாது. ஆனால் இந்தியாவைத் தாண்டி ஒரு தீர்வையோ தீர்மானங்களையோ எடுக்க மற்றநாடுகளும் விரும்பாது. இதுவே இற்றைவரை தமிழர்களின் பிரச்சனை ஆண்டாண்டு காலமாகத் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணம். இது போன்றதே மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைகள். இந்திய ஈழத்தமிழர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்ப்பது முழு முட்டாள்தனமாகும்.

மைத்திரியின் இலண்டன் விஜயம்

சென்றவாரம் பொதுநலவாய நாடுகளின் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மைத்திரி இலண்டன் வந்ததும், தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததும், பிரித்தானியப்பிரதமர் கமரூண் மைத்திரிக்கு " தீர்வுகள் பேச்சளவில் இல்லாமல் செயலள வில் இருக்கவேண்டும்" என்று வலியுத்தியதும் அனைவரும் அறிந்ததே. இந்த வலியுறுத்தலூடாக தமிழர்களுக்குச் சொல்வது என்ன? நாங்கள் சொல்லியிருக்கிறோம் அவர் செய்வார் நீங்கள் அமைதியாக இருங்கள் என்பதே. இதுவேதான் இறுதிப்போர் காலத்திலும் நடந்தது. முடிவு என்னவாக இருந்தது? இது முழுமையான வெறும் கண்துடைப்பு அறிக்கை மட்டுமே. இவர்களின் அரசியல் உரையாடல்களில் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஆளமாக அலசப்பட்டிருக்கும் என்பது சந்தேகமே. போர்க்குற்ற விவகாரத்தில் ஊடகங்கள் கொடுத்த , கொடுக்கிற அழுத்தத்துக்கு நிகரான எந்த அழுத்தத்தையும் பிரித்தானிய அரசு கொடுத்திருக்கவில்லை.

பிரித்தானியாவில் மைத்திரிக்கெதிரான போராட்டம் சரியா? பிழையா?

மைத்திரிக்கு எதிராக புலிப்பின்னணி கொண்ட அமைப்பின் ஆதரவில் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இது எதற்கு? அவசியமா? எட்டியது என்ன? இதன் எதிர்கால தாக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு ஒழுங்க மைப்பாளர்கள் சொல்லும் காரணங்கள் பலவாக இருந்தாலும் அவற்றில் சில
1)சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு எந்த ஒரு நல்லதீர்வையும் தரமாட்டார்கள்.
2) தமிழர்கள் மைத்திரியை ஏற்றுக் கொண்டார்கள் என்ற மாயையை உடைக்கவேண்டும்.
3) ஜனாதிபதியாகி இவ்வளவு நாட்களாகியும் தமிழர்களுக்கே தமிழர் பகுதிகளிலோ எதையும் செய்யவில்லை
4)ஆட்கடத்தல் கைது போன்றவை தொடர்ந்து நடக்கின்றன.
5) சிறைக்கைதியகள் இன்னும் விடப்படவில்லை.

முதலாவது தமிழர்களுக்கு நல்ல தீர்வும் கிடைக்காது என்பது ஊகமானாலும் அதற்கே சாத்தியம் அதிகம் உள்ளது? அடுத்துச் செய்யவேண்டியது என்ன? இந்தவகை எதிர்ப்பார்ப்பாட்டங்களை காலம் பூராய் செய்து வந்துள்ளீர்கள். அப்போது கிடைக்காத பலன் இப்போ கிடைத்துவிடுமா? ஈழத்தமிழர் அரசியல்வாதிகள் ஆரம்பங்களில் இணக்கவரசியலைக் கைக்கொண்டனர் சேர் பொன் இராமநாதன், அருணாசலம், மகாதேவன் போன்றோர். இவர்கள் கொழும்பு ரோயல்கல்லூரி மாணவர்கள், சிங்கள அரசியல் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். முதலாளித்துவ அரசியல் கொள்கை உடையவர்கள், அனைவரும் ஒரே குடும்பத்தினர். இந்த இணக்கவரசியலின் ஏமாற்றமும், எதிர்வினையுமே இன்று எதிர்பரசியலாக மாறி தமிழினத்தை இந்நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது. இனி எதிர்பரசியல்தான் எமது அரசியல் என்று பிரகடனப்படுத்தப் போகிறீர்களா? எதிப்பரசியலில் விளைவை நாம் நேரியாக் கண்டுள்ளோம். இணக்கவரசியிலும் சாத்தியம் இல்லை. இது துரோகவரசியலாகவே முத்திரை குத்துப்படும்.

எதிர்பரசியல் பல துரோகவரசியலை உருவாக்கியது. சுருங்கச் சொல்லின் சோறா சுதந்திரமா? என்பதில் சோறு என்பது துரோகமாகக் கருதப்பட்டது. அதை ஆதரித்தவர்கள் துரோகியிகளாகக் கருதப்பட்டனர். வேறுவளியின்றி இவர்கள் இரண்டும் கெட்ட நிலையில் தமிழ்மக்களுக்கான துரோகவரசியலை நடத்தினர் என்று கருதப்பட்டனர். உ.ம் துரையப்பா

டக்லஸ் தேவா, கருணா போன்றவர்களின் அரசியலை இணக்க அரசியலாகப் பார்க்க முடியாது. சுதந்திரம்தான் வேண்டும் என்ற பக்கத்தினர் தமக்கும் தமது சுயநலங்களுக்கு எதிரான அனைவரையும் துரோகிகள் எனக்கருதத்தொடங்கி இளைஞர்களை உசுப்பி விட்டு தம்மைத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு தமிழினத்துக்கான துரோக அரசியலையே நடத்தினர். ஆனால் இவர்களே தமிழர்களின் தானைத்தளபதிகளாக வலம்வந்தனர். இதன் படிமானங்களைப் புலிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல புலிகளுக்கு எதிரான நல்ல தேவையான கருத்துக்களைக் கூறியவர்களும் துரோகிகளாகவே கருதப்பட்டனர். இதனால் நற்கருத்துக்களும் தேவையான அறிவுரைகளும் கேட்கப்படாமல் போனதன் விளைவே முள்ளிவாய் முடிந்தது. உ-ம் ஒஸ்லோ உடன்படிக்கை

இந்த அரசியல் வியாபாரத்தில் பல அரசியல் வடிவங்கள் இருந்தாலும் வெற்றிகரமானதும் உறுதியானதும் இராஜதந்திர அரசியல் ஆகும். நோர்வே போன்ற தந்திரோபாயம் கொண்ட நாடுகள் தமது விடுதலையைக் கூட கத்தி இரத்தம் இன்றி வென்றெடுத்தன.

இராஜதந்திர அரசியல்

அப்படி என்றால் என்ன? தந்திரோபாயம் என்பதால் ஏமாற்றுவதா? உறவாடிக் கெடுப்பதா? இதை சரியான தமிழில் சொல்வதாயின் சாதுரியம், அரசியல் தந்திரம்> அரசியல் விவகாரங்களை நடத்தும் சாமர்த்தியம். எதிரிக்கும் நோகாமல் எமக்கும் நோகாமல் தந்திரமாக எமது அரசியல் தேவைகளை, அபிலாசைகளைப் பூர்த்தி செய்தல் எனவும் கொள்ளலாம்.

இதற்கு அரசியல் தெளிவு, ஞானம், அணுகுமுறை, விட்டுக் கொடுத்தல், விட்டுப்பிடித்தல், எதிரியை அனுபவிக்கவிடுதல், போக்குக் காட்டல், காலம்கனியும் வரை காத்திருத்தல், உரிமை நோக்குக்காக இணக்க உடன்பாடுகள், நோக்கில், கருத்தில் எதிர்கால முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் இருத்தல் போன்ற பலகாரணிகளில் இது தங்கியிருக்கும். எமது அரசியல் தலைவர்களில் இராஜதந்திர அரசியலைச் செய்தவர் ஜி ஜி பொன்னம்பம் எனக்கொள்ளலாம். இவரின் அரசியலும் முழுமையாக வெற்றியடையாது போனதற்கு மற்றைய தலைவர்களின் பாராளுமன்ற ஆசன ஆசைகளும் உணர்ச்சி அரசியலுமே. இவ்வாசனங்களுக்காக எதிர்பரசியல் கையில் எடுக்கப்பட்டு, உணர்ச்சியரசியல் பேசப்பட்டு பாராளுமன்றத் தளபதிகளாய் தங்களைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு தமிழ்மக்களின் உரிமைகள், தேவைகள் அனைத்தும் அரசியில் சந்தையில் விற்கப்பட்டன.

எல்லோரையும் கூட்டிவைத்து முளங்குவதல்ல இராஜதந்திர அரசியல். எதையும் சொல்லியபின் செய்வது இராஜதந்திரமே ஆகாது. இதை மாகாபாரதத்தில் அழகாகக் காணலாம். கிருஸ்ண அவதாரத்தின் நோக்கமே பூமியின் பாரம் குறைப்பது. ஆனால் அதுபற்றி எந்தப்பேச்சும் இன்றி அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதை நோக்கியே இருந்தது. பெரும் தொகைமக்கள் அழியவேண்டும் என்றால் அதற்கெதிராக கிருஸணர் இருக்கவேண்டும். பலமானது தொகையில் குறைந்தவர்களுக்கு அதிகம் சேரவேண்டும். தனது பெரும்படையையும் கெளரவர்பக்கம் கொடுத்துவிட்டு தான்மட்டும் தனியாக பாண்டவர் பக்கம் நின்றார் பரமாத்மா. எத்தனை பலவான்கள், சிறந்த வீரர்கள் இருந்தும் கிருஸ்ணரின் இராஜதந்திரத்தின் முன் தவிடுபொடியாயினர். பரமாத்மாவான கிருஸ்ணர் கெளரவருடன் என்றும் எதிரிபோல் நடந்துகொள்ளவில்லை. எம்தமிழ் எமக்கு இப்படியான பல படிப்பனைகளைத் தந்தும் நான் எதைப் பயன்ப டுத்தினோம்?

எதிர்ப்பரசியில்

மக்களின் அபிலாசைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், அரசியல் எதிர்காலம் என்ன என்பதை வைத்தே இணக்கவரசியில் தீர்மானிக்கப்படும்.

இராமநாதன் காலத்து இணக்கவரசியலின் தோல்வி எதிர்பரசியலை வளர்ந்து உணர்ச்சியரசியல் மேலோங்கியது. இது இராஜதந்திர அரசியலையும் சேர்த்தே புதைத்தது. எதிர்பரசியலால் உணர்ச்சியரசியல் வெகுவேகமாக வளர்ந்தது. இது துவேசத்தை இன பாகுபாட்டை வகுத்தது. இந்த உணர்ச்சியரசியலில் வளர்தவர்கள் நிதானத்தை மறந்தனர். அரசியல் படங்காட்டல்கள் இறுதியில் ஆயுதங்களுடன் அக்கசன் படங்களாக, ஸ்டண் படங்களாகி முள்ளிவாய்காலில் முடிந்தது. ஐக்கிய இலங்கையை நோக்கிய அரசு இப்படியான தமிழரசியலை தடுத்திருக்க முயன்றிருக்க வேண்டும் அவர்களும் தமது பங்குக்கு பெளத்த இனவாத உணர்ச்சியரசியலில் இறங்கினார்கள். விளைவு காலம்பூராக நடந்து கலவரங்கள், இலங்கைக் பொருளாதாரத்தைத்தின்ற போர்.

முக்கிய குறிப்பு:- ஆயுதம், ஆயுதப்போராட்டங்கள் வெறும் கருவியே தவிர அது அரசியலாக முடியாது. அரசியலை வென்றெடுக்க ஆயுதம் என்ற கருவி பாவிக்கப்படலாம். அரசியலே ஆயுதத்தை வழிநடத்து வேண்டுமே தவிர ஆயுதம் அரசியலை வழி நடத்தினால் முடிவு புலிகளைப் போன்றே அமையும். இதுவரலாற்று உண்மை

அரசியல்கட்டமைப்புகள்

அரசியல் விஞ்ஞானம் படித்தவர்களுக்கு இக்கட்டமைப்புகள் பற்றிய அறிவு இருக்கும். தேர்தலில் மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறிதிகளை பலகட்சிகள் நிறைவேற்ற முடியாது போவதற்கு இக்கட்டமைப்போ காரணம். வெளியில் சொல்வது மிக மிகச்சுலபமானது. ஆனால் இலங்கையைப் போல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உலகில் எங்கும் கிடையாது. இது தமிழ்மக்களை அடியோடு அழிப்பதற்கு உருவானது என்பதை யாரும் மறுக்கவும் இயலாது. நிறைவேற்று அதிகாரம் கையில் இருந்தாலும் அதை ஒழிப்பேன் என்று கூறி வந்தவர் அதை உடனடியாக நீக்காது இருப்பதற்கும் காரணம் உண்டு. நிறைவேற்ற அதிகாரத்தை நீக்கிவிட்டால் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தல் சறுக்கினால் இந்த அதிகாரத்தை மைத்திரி பயன்படுத்தலாம் அல்லவா. சர்வதியாரம் கொண்ட ஜனாதிபதியின் முன்னால் பாராளுமன்றம் ஆடுபொமமையே. தன் அரசியல் எதிர்காலம் கருதி மைத்திர ஜனாதிபதி முறைமையை 100 நாட்களினுள் நீக்கமாட்டார் என்பது திண்ணம்.

மைத்திரி நிலை

மைத்திரியின் நகர்வுகளில் இராஜதந்திரம் தென்பட்டாலும், அது தமிழ்மக்களுக்குச் சாதகதமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் எதிர்பரசியலை உடனடியாக முன்னிறுத்தாது "நம்பநட நம்பிநாடவாதே" என்ற தமிழ்பழமொழிக்கிணங்க நாம் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மைத்திரி இலண்டன் வந்த போது எதிர்ப்பைக் காட்டியது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இது எந்தவித அரசியலுக்கு இழுத்துச் செல்லப்போகிறது என்பது கேள்விக்குறியே.

படுதோல்வி அரசியல்வாதியான இரணில் தனது அரசியல் வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான முன்நடவடிக்கைகளில் பலமாக ஈடுபட்டு வருகிறார். இது இவர்களின் கூட்டமைப்புக்குள் முறிவுகளை ஏற்படுத்தி முடமாகும் நிலையை உருவாக்கலாம். இங்கே த.தே.கூ நிலை என்ன என்பது பற்றியும், அதற்கான முன்னநடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், இப்போதே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள். இப்படியான முடநிலை நாளை மகிந்தரை மிக இலகுவாக துாக்கிவந்து அரசியலில் முன் நிறுத்தும். இனியும் மகிந்தர் தமிழ்பேசி தமிழர்களைத் தாஜா பண்ணும் அரசியலை கடசிவரை நடத்தமாட்டார். சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. இந்நிலையைத் தடுப்பதற்காக ஊழல்குற்றச்சாட்டு, போர்குற்றம் போன்ற சுத்தியல்களால் தலையில் அடித்தாலும் ரணிலின் நரித்தன அரசியில் துணைபோகிறது போன்ற உருவப்பாடு தென்படுகிறது. மைந்தர் கொம்பனியை வைத்தே பாராளுமன்றத் தேர்தல் அசையவிருக்கிறது

இன்று மைத்திரியின் அரசின் அசைவுகளை நாம் நோக்கும் போது ஏதோ ஒரு பொறிக்குள் இவர்கள் அகப்பட்டவர்கள் போலவே உள்ளார்கள். இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் இது அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலை நோக்கியதாகவே இருக்கிறது. அத்துடன் வாக்களிக்கும் மக்களுக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமே இல்லாமல் பிராந்திய நலன்சார்ந்த, முதலீடுகள் சார்ந்த விடயங்களே பலமாக முன்னெடுக்கப்படுகிறது. இதைத்தான் மேற்குலகமும் இந்தியாவும் எதிர்பார்க்கிறது. இதன் விளைவுகளை தேர்தலின் பின்புதான் எம்மால் வெளிச்சத்தில் பார்க்க முடியும். மகிந்தகொம்பனியின் ஊழல்கள் அப்பட்டமானவையாக இருந்தாலும் இது வரை அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கும் காரணங்களுண்டு. இதை செயற்படுத்தும்போது மகிந்தர்கொம்பனியின் எதிர்ப்புகளால் இரக்கவாக்குக்களை இழக்க நேரலாம் என்ற பயமும் இவர்களுக்கு உண்டு. காரணம் இவர்கள் சிங்களவர்களின் பகுதியில் உண்மையில் தோற்றவர்களே.

தற்போது தமிழ்கைதிகளை விடுதலை செய்வதாலும், தமிழர் நலன்சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதாலும் சிங்களப் பகுதியிலுள்ள தமது வோட்டுக்களையே தக்கவைக்க முடியாது போகலாம். அடுத்து ஐநாவில் வெளியாக இருந்து அறிக்கையையும் நாட்டுக்குள்தான் போர்குற்றவிசாரணை என்பதும் மகிந்தகொம்பனிக்கு விடுமெச்சரிக்கையே. இது மகிந்த கொம்பனியின் ஆவேசமான அரசியலை தடுக்கும் என்பது உறுதி. அத்துடன் மைத்திரியின் கூட்டும் கூட ஸ்திரத்தன்மை அற்றது என்பதே இதற்கு முக்கிய காரணமாம். சர்வஅதிகாரம் கொண்ட அல்லது சர்வாதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் மைத்திரி செய்யவே மாட்டார் என்பது உறுதி. தற்போது தன்னைக்காக்க வைத்திருக்கும் துரும்பு வீணாக்க மைத்திரி விரும்பமாட்டார் முடிந்தவரை தனது இறுதிநாள்வரை இந்த அதிகாரத்தை மைத்திரியே வைத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

மோடியின் இலங்கை விஜயம்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்ததாக இருந்தாலும் மோடி தனது நிலையை சொல்லாமல் சொன்னார். அதுவும் சுப்பிரமணியபாரதியார் பாடலாகச் சொன்னார். "சிங்களத் தீவினிற்கோர் பாலமைப்போம்" இதன் பிரகாரம் இலங்கை சிங்களத்தீவு என்பதை சொல்லாமல் சொல்வதுடன் எமது உறவு உதவி என்றும் சிங்கள அரசுக்கு இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். தமிழ்கவிஞனை தன்பேச்சில் இழுப்பதனூடாக தமிழர்களை தாஜாப்படுத்தாலாம் என்றும் எண்ணியிருக்கலாம். இப்படிப்பட்ட சின்னச்சின்ன இராஜதந்திரநடவடிக்கைளால் தமிழினம் காலம்பூராக ஏமாற்றப்பட்டு வந்ததை இவர்கள் நன்கு அறிவது. அதை இன்றும் பாவிக்க முயல்கின்றனர். இப்பாடலின் கருத்தை சரியாகப் புரிந்து உணர்ந்துதான் மோடி பேசியிருந்தால் இது எமக்கு எந்தச்சாதகமான தீர்வையும் எமக்குத்தராது.

சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம் தமிழர்கள் நாம் தூணாக இருப்போம் என்ற மோடியின் கருத்துப்படியே இன்றுவரை இந்திய-இலங்கை அரசியல் நடந்தது. இதுதான் தொடரப்போகிறது என்பதை இந்தப்பேச்சு குறிகாட்டியது. இது தமிழர்களின் எதிர்கால அழிவையே குறி கூறி நிற்கிறது.

வேதனையுடன் விடைபெறும்
நோர்வே நக்கீரா 14.02.2015

Read more...

Sunday, March 15, 2015

நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அதுரலிய ரத்ன தேரர்.

தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோபலம் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற சிங்கள பௌத்த கலாசார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

வடக்கு யுத்தத்தில் தமிழ் மக்கள் பெருமளவு துயரத்துக்குள்ளானார்கள். சிங்கள மக்களின் விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களின் இழப்பு அதிகம். தமிழ் சமுதாயம் கடந்த தசாப்தத்தில் சிங்களவர்களுக்கு எதிராக போர் புரிவதாகவே நினைத்தது. சிங்கள, தமிழ் சமுதாயங்கள் மிகத் தெளிவாகப் பார்க்கவில்லை. சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளின் பிழையான அரசியல் கொள்கையே இந்த சமூகக் கிளர்ச்சிக்கு அடிப்படையானது.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் ஆகும். சிங்களவர்களின் எதிரி தமிழர்களோ தமிழர்களின் எதிரி சிங்களவர்களோ இல்லை.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த யுத்தம் இந்தளவுக்கு வீரியமடைவதற்கு காரணம் வெளிநாட்டவர்களின் தலையீடாகும்.

எமது அரசியல் தலைவர்கள் பிழையான வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்றினர். நாங்கள் அமெரிக்கர்களில் தங்கியிருந்த வேளை, இந்தியா சோவித் தேசத்தின் பாதையில் சிந்தித்தது. சோவியத் தேசம் இன்று இல்லாததனால் உலகச் சந்தை தொடர்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டி நடைபெறுகின்றது. நாங்கள் பொம்மலாட்டக்காரர்களாக இருப்பதால், விபரீதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

விவசாய பொருட்களில் இரசாயன பாவனையால் ரஜரட்ட பிரதேத்தின் நீர் உவர்நீராக மாற்றமடைந்து, அங்கு சிறுநீரக நோய் பரவியுள்ளது. 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில், வடமாகாண சபை இரசாயனமற்ற விவசாயக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தலாம்.

யாழ்ப்பாணம், எதிர்காலத்தில் கடல்நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. அதிகபடியான காபனீரொட்சைட்டு வாயு காரணமாக கடல்நீர்மட்டம் அதிகரிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சூழல் ரீதியாக அழிவடையாத நாடு. அதனை பாதுகாக்கவேண்டும்.

மது, போதைப்பொருள் பாவனை, விபசாரம் என்பன சிங்கள, தமிழ் சமூகத்தில் அதிகரித்துள்ளது. இவற்றிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கவேண்டும். எமது நாடு தற்போது பெரும் கலாசார சீரழிவுகளை எதிர்நோக்கியுள்ளது. கொழும்பிலிருந்து போதைப்பொருள் பாவனை தற்போது வடக்குக்கும் பரவி வருகின்றது. வடக்கு தெற்கு என்ற பாகுபாடின்றி எமது கலாசாரங்களை பாதுகாக்க குரல் கொடுக்கவேண்டும் என்றார்.

Read more...

Tuesday, March 10, 2015

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜெயஜீவன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்த எனக்கு பதவிகளுக்கு ஆசை கிடையாது. அது தானாக வந்தது.

நான் இரண்டாவது முறை மாகாண சபையில் போட்டியிட்டு எதிர்பார்த்த வாக்கு கிடைக்காவிட்டால் ஒரு அமைச்சராக வரமுடியாது என்று பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் சொன்னேன். நான் நினைத்திருந்தால் அதிலே ஒரு அமைச்சராக வந்திருக்க முடியும்.

மாகாண அமைச்சராக இருந்து செய்யும் அபிவிருத்தியை விட அதிகமான வேலைத் திட்டத்தினை வெளியே இருந்து செய்திருக்கிறேன்.

கிழக்கு மாகாணம் முஸ்லிம், தமிழ், சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று சொன்னாலும், இந்த நாட்டிலே ஒரு அதிகாரப் பகிர்வு முறைமை தேவை என்று போராடியவர்கள் தமிழர்கள் தான். அதற்கு உயிர் கொடுத்தவர்கள் பலர். அந்த அடிப்படையில் தமிழர்களுக்கு உரித்தான விடயத்தை சந்தர்ப்பம் வருகின்ற போது பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக நாம் அரசியலுக்கு வந்து பிராந்திய அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கிறோம். இந்த மாகாணத்திலே வருகின்ற மாற்றத்திலே அதிகமாக தமிழர்களுக்கு செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள்ளே இருக்கின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக இருந்தால் அதற்கு தார்மீகமாக நாங்கள் பொறுப்பெடுத்து செய்து காட்ட வேண்டும் என்று எண்ணினோம்.

குறிப்பாக அரசியல் மாற்றத்திற்கு அப்பால் முஸ்லீம் காங்கிரஸ் மிகப் பெரிய சுருக்குவலையைப் போட்டது என்று சொல்லலாம். அது எங்களது அரசியல் சாணக்கியம் என்று முதலமைச்சர் சொன்னாலும், சம்மந்தன் அவர்களை இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன்.

முதலாவது முறையாக நான் சம்பந்தனை சந்தித்த போது அவர் என்னிடம் சொன்னார், தம்பி நீங்கள் எங்களிடம் இருந்தால் மகிழ்ச்சி முடிந்தால் முதலமைச்சர் எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்.

நான் சொன்னேன். ஐயா ஆளுந்தரப்பில் 22 பேர் இருக்கின்றோம். அதில் 19 பேர் முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் வழங்குவதற்கு கைச்சாத்து இட்டுள்ளார்கள். இன்று நான் ஜனாதிபதியைச் சந்திக்கிறேன் அவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னேன்.

அவரைச் சந்தித்த போது அவர் சொன்னார், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டிருக்கலாம். தற்போது நான் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஏற்கனவே 19 பேர் கைச்சாத்திட்டுள்ள அடிப்படையில் நான் வெளியில் நின்று ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் கைச்சாத்திட்டேன்.

இதை இங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதை பிழையான விடயமாக நாங்கள் அங்கும் பேசி இங்கும் பேசி கூத்தடிக்கிறோம் என்று சொன்னார்கள்.

இப்படியே இருக்க, முஸ்லீம் காங்கிரஸ் கையொப்பத்தை எடுத்து விட்டு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இருந்த சிலரை அகற்ற வேண்டும் என்ற முடிவு பூதாகரமாக வெடித்து, பத்து உறுப்பினர்கள் வெளியேற வேண்டிய சூழல் வந்தது.

நாங்கள் பத்து உறுப்பினர்கள் வெளியேறினால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த ஐந்து உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரசில் ஏழு உறுப்பினர்கள் சேர்ந்து பணிரெண்டு பேரும் எதுவும் செய்ய முடியாது.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தீர்மானங்களை எடுக்கின்ற கட்சியாக இருக்க முடியும் என்றால், பதினொரு ஆசனங்களைக் கொண்ட கட்சி எவ்வாறு முடிவுகளை எடுக்கின்ற கட்சியாக இருக்க வேண்டும்.

அப்படியிருந்தும் இரண்டாவது தடவையாக சம்மந்தன் ஐயாவைச் சந்தித்துப் பேசினோம். நன்றாக வரவேற்று நீங்கள் கூறுவது நல்ல விடயம் எங்களுக்கு முதலமைச்சர் தருவீர்களா என்று கேட்டார்.

நான் சொன்னேன் முதலமைச்சர் மாத்திரம் அல்ல, அதனுடன் இன்னுமொரு அமைச்சையும் தருகின்றோம். அதே போன்று முஸ்லீம்களுக்கு இரண்டு அமைச்சுக்களும் சிங்களவர்களுக்கு ஒரு அமைச்சும் கொடுத்து சமத்துவமான ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று.

இதனை திரிவுபடுத்தி யோகேஸ்வரன் எம்.பி. கூறியிருக்கின்றாராம். அவரது தலைவரிடம் நாங்கள் போய் கெஞ்சியதாக நான் ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறேன்.

இந்தப் பதவிகளுக்காகப் போய் பேசுகின்ற நிலை வருமாக இருந்தால் அதனை விட மரணிப்பது மேல் என்று நினைக்கின்றவன் நான் எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.குலேந்திரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவை உத்தியோகத்தர் கே.கிருஸ்ணகாந்தன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரீ.ரமேஸ் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

Sunday, March 8, 2015

உலகமகளிர் தினம் 2015 . நோர்வே நக்கீரா

தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டா டுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை கொண்டாடுகிறார்கள். இம் முறையாவது பெண்கள் தினம் எதற்காக, எப்போது உருவானது என்பதையும் இது தோன்றியதன் காரணத்தையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்ப்போம்.

பக்கம் 1 ஆண்களுக்கெதிரானது அல்ல

உலகமகளிர் தினத்தில் அதிகமாகப் பேசப்படும் சொற்பதங்கள் பெண்ணியம் பெண் விடுதலை, ஆணாதிக்கம், சமவுரிமை, அடக்குமுறை என்பனவாகும். இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பலர் புரிந்து கொண்டதில்லை. இதை ஒரு கொண்டா ட்டம் போல் எண்ணுபவர்கள் பலருண்டு. இது ஆண்களுக்கு எதிரானது, ஆண்களுக்கு எதிராகப்போராட வேண்டும், ஆண்கள் போல் எமக்கு உரிமைவேண்டும், ஆண்கள் மாதிரி நடக்கவேண்டும் என்ற உணர்வுகளுடன் கொண்டாடுபவர்களை நாம் பார்த்திரு க்கிறோம். இதுவல்ல உலகமகளிர் தினத்தின் நோக்கமும் குறியீடும்.

பெண்கள் தமது உரிமைகளை முன்வைக்கும் போது அதிகாரவர்க்கம் அதைமறுத்தும், எதிராகவும் நடந்து கொண்டது. அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆண் ஆதலால் ஆண்களுக்கு எதிராகவே போராடவேண்டி இருந்தது. அதற்காக போராட்டமானது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். கறுப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளையரான ஆபிரகாம் லிங்கன் போன்றோர் போராடியிருக்கிறார்கள். இதேபோல் பெண்களின் கோரிக்கைகளுக்கு உடன் நின்ற பல ஆண்களும் இருந்திருக்கிறார்கள். இப்பெண்களின் போராட்டம் ஆண்களால் கட்டப்பட்ட கட்டுமைப்புக்கும், மனநிலைக்கும் எதிரானது என்பதே பொருத்தமா னது. இந்த பெண்களின் மீதான அடக்குமுறை எப்படி உருவானது என்பதை அறிய மனிதன் மிருகமாக இருந்தகாலத்தில் இருந்து ஆய்வுகள் தொடங்கப்படவேண்டும்.

பக்கம் 2 எதற்காக போராட்டம்

1857ற்கும் அதற்கு முன்னரும் போர்களால் ஆண்களே அழிவைச் சந்தித்தனர். இதன் காரணமாக பெண்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வேண்டி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாயினர். ஆலைகள், நிலக்கரிச்சுரங்கங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றபோதும் வேலையின் இவர்கள் அதிக பழுக்களைச் சுமக்கவேண்டியவர்களாகவும் குறைந்த ஊதியத்தையே கொண்டவர்களா கவுமே இருந்தனர். தொழிற்சாலைகளில் 25சதவீதமான பெண்கள் 75சதவீதமான ஆண் களுடன் வேலைபார்க்கும் போது அடக்குமுறைக்கும், சீண்டல்களுக்கும், ஏளனங்களுக் கும், வல்லுறவுகளுக்கும் உள்ளாயினர். சமவுரிமையும், சமவாய்ப்புக்களும், சமஊதிய
மும் மறுக்கப்பட்டன.

இவர்களுக்கு ஆரம்பக்கல்வி, மருத்துவம், வாக்குரிமைகள் அனைத்தும் எட்டாக் கனிகளாகவே இருந்தன. இவர்கள் வீட்டுவேலைக்காரியராகவும் பிள்ளைப்பேறும் இயந் திரங்களாகவுமே மதிக்கப்பட்டனர். வாக்குரிமை என்பது கருத்துரிமை என்பதே ஏற்பு டையது. ஆக பெண்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டது என்பதே சரியானது. இந் நிலையில்தான் பெண்கள் போராடவேண்டிய காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டனர்.

பக்கம் 3 இலங்கையில்

உலகின் முதற்பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா என்பதும், ஐரோப்பிய அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்னரே இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பது பெருமைக்குரியதானாலும் அதை சரியாக நடைமுறைப்படுத்தும் கலாச்சாரப்பொறிமுறை போதாது என்பதே எனது கருத்து. மேல்மட்ட, நடுத்தரவர்க்க பெண்களுக்கு இருந்த இவ்வுரிமைகள் கீழ்தட்டு மக்களுக்கு வளங்கப்படவில்லை என்பது மறுக்க முடியாதது. இதற்கு சமூக, கலாச்சார வர்க்க சாதியப்பாகுபாடுகளும் காரணமாயின.

பக்கம் 4 போராட்டம்

8ம் திகதி பங்குனிமாதம் 1857ல் அமெரிக்காவிலுள்ள நியூயோக் மாகாணத்தில் ஆடை ஆலைகளில் பணிபுரிந்த பெண்கள் ஒன்று திரண்டு அதிகவேலைச்சுமை குறைந்த ஊதியம் என்பவற்றுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர். அந்தப்போராட்டம் அதிகாரபீடங்களின் உதவியுடன் நசுக்கப்பட்டது. பெண்கள் போரா ட்டம் அடக்கப்பட்டு விட்டது என்று கனவு கண்டு கொண்டிருக்கும் வேளை அக்கினி குஞ்சுகளாய், அனல்பிளம்புகளாய், நீறுபூர்த்திருந்த நெருப்புக்களாய் பெண்களின் உணர்வுகள் உரிமைகோரி மீண்டும் உயிர்பெறத் தொடங்கின.

இந்த நீறுபூர்த்த நெருப்புக்கள் அமெரிக்காவில் மட்டுமல்லாது ஐரோப்பா, இரஸ்யா எங்கும் வேராடி விழுதுவிட்டு எரியத் தொடங்கின. பெண்களைப் புறம்தள்ளி தொழிற்சாலைகள் இயங்கமுடியாத நிலையை எட்டின. 1907ல் மகளிர் போராட்டம் உக்கிரமாக தலை தூக்கியது. ஐரோப்பா, இரஸ்யா அமெரிக்கா எங்கும் இப்பெண்கள் போராட்டம் ஆண்களின் அதிகாரவர்க்கத்தால் மீண்டும் அடக்கப்பட்டது.

பக்கம் 5 உலகமகளிர் தினம் அங்குரார்பணம்

1910ல் டென்மார்க்கில் பெண்களின் உரிமைக்கான மகாநாடு கூட்டப்பட்டது. உலமெங் கணும் உள்ள பெண்கள் அமைப்புக்கள் ஒன்று கூடினர். இந்த மகாநாட்டில்தான் உலகமகளிர்தினமாக அமெரிக்காவில் பெண்கள் மேற்கொண்ட முதற்போராட்டத்தை நினைவுகூரும் அல்லது மையப்படுத்தும் முகமாக பங்குனி 8 இரஸ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலனரா முன்மொழியப்பட்டது. இந்நாளே மகளிர்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

இத்தினம் 1921ல்தான் இது மிகக்கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இது 105 வருடங்களாகக் கொண்டப்பட்டு வந்தாலும் ஒரு சிலஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இத்தினம் அறிமுகமானது. இன்னும் பல இஸ்லாமியநாடுகளில் இப்படி ஒரு தினம் இருப்பதாகவே அறியப்படவில்லை என்பது படுவேதனைக்குரிய விடயமாகும்.

பக்கம் 6 சமவுரிமைப் போராட்டம்

சமவுரிமை, பெண்விடுதலை என்பன புலத்தில் பலரால் குருட்டுக் கண்களாலேயே பார்க்கப் படுகிறது. இது இலவசமாகக் கிடைத்ததன் காரணமாகவே என்னவோ துர்பிரயோகமும் செய்யப்படுகிறது. இதற்கான விலையை அன்று பலர்பெண்கள் கொடுத்து ள்ளனர் என்பது குறித்தற்குரியது. உரிமை இருக்கு என்தற்காக சிறுபிரச்சனைக்கும் விவாகரத்துக் கேட்டு குடும்பங்களைப் பிரிக்கும் முயற்சியில் பெண்ணியவாதிகள் ஈடுபட்டமை வருந்துதற்குரியதே. சமவுரிமை என்றாலும் சரி பெண்ணுரிமை என்றாலும் சரி அது குடும்பங்களை சீர்பெற ஊக்குவித்து பெண்களின் குடும்பப்பழுக்களை குறைக்கும் நோக்காக அமையவேண்டும். ஆண்களுக்கு பெண்ணின்நிலையை புரியவைப்பதும் அதனூடாக குடும்பத்தை ஸ்திரமாக்கி நிறுவுவதும் சமவுரிமை பெண் ணுரிமைப்போராட்டங்களின் நோக்காக அமையவேண்டும்.

சமவுரிமை என்பது ஆண்களைப்போன்று நடப்பது ஆண்களின் கெட்ட பழக்கங்களில் உரிமை கோருவது என்று ஆகாது. ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சமவாய்ப்புக்கள் பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்;பதற்காக ஆண்களின் தீயபழக்கங்களிலும் சமவுரிமை வேண்டும் என்பது வேடிக்கைக்குரியதாகும். உ.ம்:- ஆண்கள் மதுவரு ந்துகிறார்கள் புகைக்கிறார்கள் என்தற்காக அதிலும் உரிமை வேண்டும் என்று போராடுவது பெண்ணுரிமைப் போராட்டத்தின் நோக்கத்தை பெண்களே நசுக்குவதாக அமையும். பெண்ணின் உடலில் இயற்கையின் படைப்பில் நீர்தன்மை அதிகம் காரணம் இனப்பெருக்கம் (பிள்ளைப்பேறுதலுக்காக தேவை). இதனால் மதுவின் தாக்கம் அவர்களுக்கு மிக மிக அதிகம். ஒரு குப்பியுடனே கவிண்டு விடும் சந்தர்ப் பங்களில் கற்பிணியாக்கப்பட்டவர்களும் வேண்டா உறவில் கர்ப்பமும் நாம் நாளுக்கு நாள் கேட்கும் சம்பவங்களாகி விட்டன. இந்த மது என்பது ஆணாதிக்கத்திற்கு ஊட்ட ச்சத்தாக அமைந்துவிடுகிறது. இருவரும் மதுபோதையில் இருந்தார்கள் என்று ஆண் மன்னிக்கப்படுகிறான். இது போன்றதே புகைத்தலும். பெண்களின் புகைத்தலால் ஏற் படும் படிவுகள் எக்காலத்திலும் குழந்தைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கி அவளின் பரம்பரை நாசத்தையும் ஏற்படுத்துகிறது. இதை சமவுரிமைப்போரட்டுமே பெண்ணுரிமைப் போராட்டமோ ஊக்குவிக்காது. இவை பெண்விடுதலையின் பக்கவிளைவுகள் என்றே பார்க்கவேண்டியுள்ளது. தெரிவு பெண்களுடையதாக இருப்பது தவறில்லை அது பரம்
பரை சமூகப்பாதிப்புக்குரியதாக இருத்தலாகாது.

பாதுகாப்பை அளிக்கவேண்டியவர்கள் ஆண்கள் என்ற நிலைமறந்து தப்பிக்கொண்டவர் களாக பக்கவிளைவுகளை நுகர்வோர்களாக ஆண்கள் மாறிவருவது பெண்விடுத லையைக் கொச்சைப்படுத்துவதாகவும் மனிதநேயத்தை மறுப்பதாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.

பக்கம் 7 புலத்துப்பெண்களின் நிலத்தின் தாக்கங்கள்.

இன்றைய பொருளாதரா நெருக்கடிகளைச் சமாளிக்கும் முகமாக பெண்களும் சரி சமமாக வேலைக்குப்போக வேண்டியவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் வீட்டு வேலை குழந்தை பராமரிப்பு என்னவற்றில் பங்கெடுக்க வேண்டிய நிலையில் ஆண் கள் உள்ளனர். இது பலவிடங்களில் தவிர்க்கப்படுகிறது. அன்று எமது மூத்தகுடியினர் ஆண் வேட்டைக்குப் போய் போரிட்டு களைத்து உணவு கொண்டுவர பெண் சமைத்து பிள்ளைகளையும் பார்த்தாள். இன்று ஆண்களின் பொறுப்பான பொருளாதாரச் சுமைக்கு தாக்குபிடிக்க முடியாது போகையில் பெண்களே முண்டு கொடுத்துத்தாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஆனால் பெணகள் பாரம்பரியாமாக செய்து வந்த சமைப்பது பிள்ளைபராமரிப்பது போன்ற தொழில்களை ஆண்கள் தரக்குறைவாக எண்
ணித் தன்வீட்டிலேயே செய்வதில்லை.

புலத்தில் எம்பெண்கள் பலர் வேலைக்குப்; போய்வந்து சமையலும் செய்து பிள்ளைக ளையும் கணவனையும் பராமரிக்கும் நிலையில் உள்ளார்கள். இவிரட்டை நிலையில் ஆண்கள் சுகம்காண்கிறார்கள். அதேவேளை பல ஆண்கள் பெண்களைவிட சமைய லில், பிள்ளைபராமரிப்பதில் திறமையானவர்களாக இருப்பது பெருமைக்குரியதே.

பக்கம் 8 பெண்விடுதலை பெண்ணியம்

பெண்ணியம்காக்கவோ பெண்விடுதலைக்காகவோ பெண்கள்தான் போராட வேண்டும் என்பதில்லை. இதற்கு ஆண்களின் பங்களிப்பும், புரிதலும் இருந்தாலே பெண்ணியமும் பெண்விடுதலையும் வெற்றி கண்டுவிடும். பெண்கள் ஆண்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்லர். படைப்பின் தத்துவமே ஒருவருடன் மற்றவர் இணைந்துதான் வாழ வேண்டும் என்றிருக்கிதே. படைப்பில் பெண் உடல், உணர்வு ரீதியாகப் பலவீனமா னவர்களாகவும் உள்ளரீதியாக பலமானவளாகவுமே படைக்கப்பட்டுள்ளாள். இந்த இயற்கையின் நியதி மாற்ற முடியாது. ஒரு பெண்ணை பெண்ணாக அவளின் பலவீனங்களுக்குப் பலமாக ஆண்களை உருவாக்குவதிலேயே பெண்ணுருமையின் முழுவெற்றியும் தங்கியுள்ளது.

ஆண்கள் பெண்களைப் பலம், பலவீனங்களைப் புரிந்து, அறிந்து கொள்வதன் மூலமாகவே சமவுரிமை, பெண்விடுதலை பெண்ணுரிமை என்பன சாத்தியப்படும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு பெண் பூப்பு எய்துவதற்கு முன்னரே அவள் தாய்மைக்காகத் தயார்படுத்துப்படுகிறாள். இது ஒரு வேதனை வெட்கம் வலி கொண்ட ஒர் உணர்வுப் போராட்டம் என்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும்? நாம் ஒரு திறந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் பெண்களைப்பற்றிய அறிவுரீதியாக நாம் மூடப்பட்டே உள்ளோம். மாதம் மாதம் அவர்களினுள் நடக்கும் மாற்றங்கள் என்ன? உணர்வு போராட்டங்கள், உடல்மாற்றங்கள் என்ன என்பன பற்றிய தனிமையான படிப்பும் அறிதலும் ஆண்களுக்கு அவசியம் என்பது என்பது எனது முன்மொழிவு.

எமது பெற்றோர் பாட்டன் பீட்டனுக்கு பெண்கள் ஆண்கள் போன்றவர்கள் ஆனால் மென்மையானவர்கள் என்பது மட்டுமே புரியும். வைத்தியசாலை சென்று மலசலம் கழிப்பதுபோல் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என்றே எண்ணுவார் கள். அதன் வலி பேதனைகளை பார்தது கூட இல்லை. 3, 3.5கிலோ அரிசியை அல்லது பொருளை வயிற்றில் கட்டிக்கொண்டு எத்தனை மணித்தியாலங்கள் இருக்க முடியும் என்று கேளுங்கள்? அத்துடன் பிள்ளை வெளியே வருவதற்கான தயாரிப்புகளில் பெண்ணுடல் வலுவிழந்து கொண்டிருக்கும் என்பதையும் அறியார்கள். பிள்ளைப் பேற்றின் போது 32 எலும்புகள் முறியும் வேதனை ஒருதாய்க்கு இருக்கும் என்பதை அறிந்து கூறுகிறது விஞ்ஞானம்.

புலம்பெயர் நாடுகளில் பாலியல் படிப்பு 12வயதில் ஆரம்பித்தாலும் அதன் பிரதி பலன்கள் இன்னம் சரியா அமையவில்லை என்பது மிகவேதனைக்குரியது.

பக்கம் கடமை

இந்த உலகமகளிர் தினத்தில் பெண்களை, அவர்களின் தன்மையை, வேதனைகளை, வலிகளை புரிந்து கொண்டு நடப்பதே பெண்ணியத்தின் வெற்றியும், எம்தாய்க்கும், எம்மைத் தந்தையாக்கிய பெண் தெய்வங்களுக்கும் செய்யும் அன்புப்பரிசுமாகும். ஆண்கள் பெண்களை புரிந்து, உணர்ந்து கொள்வதற்காக, எனது கடமையாக ஒரு காணொயை தருகிறேன். இங்கே பிள்ளைப்பேறின் போது ஏற்படும் வலி 32 எலும்புகள் முறிவதற்குச் சமமானது. இதை இரண்டு ஆண்கள் இலத்திரன் முனைகளில் அனுபவிக்கிறார்கள் பாருங்கள். இதைப் பார்த்துவிட்டாவது உங்கள் தாயையும் மனைவியையும் ஒருதடவை முத்தமிடுவீர்களாயின் அது போதும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள் என்பதற்கு ஒரு ஆதராமாகும்

வாழ்க உலகமகளிர்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com