Friday, June 28, 2013

வலம்புரி பத்திரிகைக்கு எதிராக யாழ் முஸ்லிம்கள் போராட்டம். பத்திரிகைகளை எரித்தனர். (படங்கள் இணைப்பு)

யாழ் குடாநாட்டு பத்திரிகை ஒன்றிற்கெதிராகவும் முஸ்லீம்கள் மீது அபாண்டமாக விமர்சிக்கும் ஊடகத்திற்கு எதிராகவும் யாழ் முஸ்லீம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (28.6.2013)மதியம் ஜீம்மா தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய முஸ்லீம்கள் ஊர்வலமாக இப்பத்திரிகைக்கெதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் நான்கு சந்தியில் வைத்து குறித்த பத்திரிகை பிரதிகளை எரித்தனர்.

நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வலம்புரியே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் செய்தியை வெளியிடாதே,வலம்புரியே முஸ்லீம் தமிழ் உறவை சீர் குலைக்காதே,முஸ்லீம்கள் மீது வீண் பழி சுமத்தும் ஊடகங்களை ஒழிப்போம்,பொதுபல சேனாவின் ஊதுகுழலா வலம்புரி ஊடகம்,கிழக்கு முஸ்லீம் தீவிரவாத அமைப்பு வடக்கு விஜயமா ஆதாரம் உண்டா வலம்புரியே என பல்வேறு வாசகங்கள் தாங்கிய அட்டைகளை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வைத்திருந்தனர்.

இறுதியாக அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

( பாறூக் சிகான்)

Read more...

பாராளுமன்றத்திற்கு அடுத்த வாரம் வருகிறது 19வது அரசியல் சீர்த்திருத்தம்!

அடுத்த வாரம் 19ஆவது அரசியல் சீர்த்திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கண்டி – திகனவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை முழுவதும் 13ஆம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் தொடர்பிலும், மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பிலும் பேசப்படும் நிலையில் அடுத்த வாரம் 19வது அரசியல் சீர்த்திருத்தம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

கிளிநொச்சி கல்விக் கண்காட்சியை பார்வையிட நிரம்பி வழியும் பார்வையாளர்கள்!

வடக்கு மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்குடன் கலை மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கல்விக் கண்காட்சியை இன்று(28.06.2013) யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அராசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

காலை 9மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா , கிளி.மத்திய கல்லூரி அதிபர், வடமாகாண பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இக் கல்விக் கண்காட்சியில் கிளி.மாவட்டம் மட்டுமல்லாது தென்பகுதியின் சில பாடசாலைகளும் கலந்து கொண்டுள்ளதடன், பல்கலைக்கழக மாணவர்களின் காட்ச்சிக்கூடம், இராணுவத்தினருடைய காட்ச்சிக்கூடம், கடற்படை காட்ச்சிக்கூடம், வமானப்படை காட்ச்சிக்கூடம் என பலதரப்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால் இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்கென தென்னிலங்கையச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

எனவே, இக்கல்விக் கண்காட்சி தென்பகுதி மற்றும் வடபகுதி மாணவர்களிடையே அறிவுப் பரிமாற்றம், நட்பு ஆகியவற்றுக்கு தொடர்புப் பாலமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்காட்சியில் கலந்துகொள்பவர்களுக்கான தேனீர், சிற்றுண்டி, போக்குவரத்து என்பவற்றை கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் ஏற்பாடுசெய்துள்ளது.

கண்காட்சி இன்று மாலை 5மணி வர நடைபெறவுள்ளதுடன், நாளையதினமும்(29.06.2013) காலை 8மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Read more...

மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்கு ஊடகங்கள்தான் காரணமாம். டக்ளஸ் கண்டுபிடிப்பு.

ஊடகங்கள் தொடர்ந்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வழங்கி வருவதனாலும் எதிர்காலம் தொடர்பான நம்பிக் கையை ஊடகங்கள் மக்களுக்கு ஏற்படுத்தாதனாலும், எதிர் காலம் பற்றிய நம்பிக்கை அற்ற நிலையிலே, இலங்கையர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றார்கள் என அமைச்சர் தேவானந்தா தெரிவித் துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரி வித்தார்.

அத்துடன் வட மாகாண சபைத் தேர்தலில் தனித்தா அரசாங்கத்துடன் இணைந்தா? என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை எனவும். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம் கையளிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்றுவருகின்ற தென்னிலங்கை மாணவர்களுக் கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை துணைவேந்தரிடம் கையளித்துள் ளதாக பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலை வரும் மாணவர்களின் சிரேஷ்ட ஆலோசகருமான ப.புஷ்பரட்ணம் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவருகின்ற முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாகக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்றுவருகின்ற தென்பகுதியைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்குமிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரியகுளத்தில் அமைந்துள்ள விகாரை முன்றலில் மோதல் சம்பவம் ஒன்றும் யாழ் பல்கலைகழக வாயிலுக்கு முன்பாகவும் நடைபெற்றது.

முதலாம் வருட மாணவர்கள் 3ஆம் வருட மாணவர்களுக்கு கீழ் படிவதில்லை என்ற முரண்பாட்டினால் இரு குழுக்களுக்கிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் எனவே இதற்கமைய விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இக் கோஷ்டி மோதல் சம்பவத்துடன் சம்மந்தமானவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணை முடிவுகளை துணை வேந்தர் வசந்தி அரசரெட்ணத்திடம் கையளித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

பழப்பயிர் செய்கையாளர்களுக்கு வழிபிறந்துவிட்டது!

இலங்கையில் வாழைப்பழச் செய்கையை மேலும் ஊக்குவிப்பதற்கும் அதன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் ஜப்பானிய இட்டோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனதா்தின் ஆலோசகர் கொய் வெட்டநெபோ தலைமையிலான ஜப்பானிய தூதுக்குழுவினர் நேற்று(27.06.2013) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவை சந்தித்துரையபோதே மேற்படி தகவலை தெரிவித்தார்.

இலங்கையில் உற்பத்திசெய்யப்படும் பழ வகைகளுக்கு ஜப்பானில் நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இலங்கையில் பழச்செய்கையை ஆரம்பிக்க அரசின் ஒத்துழைப்பை தாம் பெற்றுத்தருவதாக தூதுக்குழுவினரிடம் தெரிவித்த அமைச்சர், வாழைப்பழம், அன்னாசி, றம்புட்டான் போன்ற பழ வகைகள் செய்கை பண்ணுவதற்கு இலங்கை சிறந்த இடம் என்றும் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகளின் கறுவா தேவையில் 95 சதவீத கறுவாவை இலங்கையே வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

Read more...

பிரிட்டனுக்கு செல்லும் இலங்கையரிடமிருந்து பிணை அறவிடும் திட்டத்தை நீக்க கோருகின்றார் கருணாதிலக்க.

பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர் களிடம் பிணை அறவிடும் திட்டத்தை இரத்து செய்யுமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர் பிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் இலங்கைக்கான பிரித் தானிய தூதுவர் ஆகியோருக்கு இடையே நடைபெற வுள்ளது.

பிரித்தானியாவுக்கு செல்லும் இலங்கையர்களிடம் பிணை அறவிடும் திட்டத்தை நீக்கிக்கொள்ளுமாறு இதன்போது வேண்டுகோள் விடுப்பதற்கு எண்ணியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித் துள்ளார்.

பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களிடமிருந்து பிரிட்டனுக்கான முன் விசாபிணையாக 3000 டொலர்களை அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 6 மாத பயண விசாவில் வரும் 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் 3000 டொலர்களை பிணைத் தொகையாக அறவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் பிணைத்தொகை விசா காலத்தையும் மீறி தங்குவோரிடம் அபராதமாக ஈட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

உதயன் பத்திரிகைமீதான அமைச்சரின் வழக்கு செப்ரம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு!!!

ஈழமக்கள் ஜனநாயக் கட்சிக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமை தொடர்பில் 1000 மில்லியன் ரூபா நஸ் ஈடு கோரி உதயன் பத்திரிகை மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 16 ஆம் திரை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவினால் மூன்று வழங்குகள் யாழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று வழக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த நிதிபதி அமைச்சர் பணத்திற்காக இந்த வழக்கைப் போடவில்லை அவர் மீதான அவமரியாதை ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளிடப்பட்டமைக்காகவே இந்த வழக்கு போடப்பட்டது என்றும், இது தொடர்பில் உதயன் நிர்வாகம் அமைச்சருடன் ஒரு இனக்கப்படாட்டுக்கு செல்லவேண்டும் என்று நீதவான் தெரிவித்தார்.

எனினும் இன்றையதினம் வழக்கிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எவரும் வருகை தராத காரணத்தினால் அவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் இது தொடர்பில் உதயன் நிர்வாகியுடன் கதைத்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more...

அமெரிக்காவின் குடிவரவு மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றம். 11 மில்லியனுக்கும் அதிகமானேருக்கு பிரஜாவுரிமை கிடைக்க வழி.

அமெரிக்காவின் குடிவரவு மறுசீரமைப்புச் சட்ட மூலம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடை பெற்ற வாதப் பிரதிவாதங்களில் 68 வாக்குகள் ஆதர வாகவும், 32 வாக்குகள் எதிராகவும், இச்சட்ட மூலத்திற்கு கிடைக்கப்பெற்றன. இதன் பிரகாரம் இந்த சட்ட மூலத்திற்கு செனட் சபை அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தப் புதிய சட்டத்திற்கிணங்க குடியுரிமை இல்லாத 11 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு அமெரிக்கப் பிரஜாவுரிமை கிடைப்பதற்கு வழி ஏற்படும் என்று கூறப்படுகின்றது. எனினும் இந்த சட்டமூலத்துக்கு பிரதிநிதிகள் சபையிலும் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

உடற்கட்டு வைத்துள்ள ஆண்களிடம் மனதை பறி கொடுக்கமாட்டாராம் நடிகை கங்கனா!

வாழ்க்கையில் காதலை விட முக்கியமான விஷயங்கள் ஏராளம் உள்ளன எனவும், காதலை யாராவது ஒருவரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், இப்போது காதல் பற்றி பேச எனக்கு நேரம் கிடையாது எனவும் யாரிடமாவது நான் காதல் வயப்பட்டால் அப்போது காதல் அனுபவங்களை கூறுவேன் எனவும், ஆனால் இப்போ தைக்கு நண்பர்களுடனேயே பொழுதை கழிக்க விரும் புகிறேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடற்கட்டு ஆண்களை திருமணம் செய்யமாட்டேன் எனவும், நான் புத்திசாலித்தனமான, அன்பான குணம் கொண்ட ஆண்களையே திருமணம் செய்து கொள்வேன் எனவும், சிக்ஸ்பேக் உடற்கட்டு வைத்துள்ள ஆண்களிடம் மனதை பறி கொடுக்கமாட்டேன். அவர்களை திருமணம் செய்யவும் மாட்டேன் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவில் கதாநாயகிகளை ஆபாசமாக பொம்மை போல காட்டுகிறார்கள். இது சரியானதல்ல. இந்த ஆபாச முத்திரை என் மீது விழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கிறேன். கிரிஷ் 3 என்ற படத்தில் ஒரு சாகச போராட்ட காட்சியில் நடித்து வருகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

த.தே.கூ. தலைவர் சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரின் மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மற்றும் விஜித ஹேரத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சே பனை மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஐந்து நீதியரசர்களை கொண்ட நீதியரசர் குழாம் த.தே.கூ. தலைவர் சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை மனுவை நிராகரித்தனர்.

முன்னாள் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானம் செல்லுபடியற்றது என, மேன் முறையீட்டு நீதிமன்றம் அறித்திருந்தது. இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவேண்டுமென சட்டமா அதிபர் விசேட மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட அனுமதிக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் ஆட்சேபனை மனுவென்றை முன்வைத்திருந்தனர். இந்த மனுவே இன்று உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Read more...

இரண்டு உக்ரேன் பிரஜைகளுக்கு 52 வருட சிறைத்தண்டனை ! கொழும்பு மேல் நீதிமன்றம்

இரண்டு உக்ரேன் பிரஜைகளுக்கு தலா 52 வருட சிறைத் தண்டனையம் இதற்கு மேலதிகமாக தலா 52 இலட்ச ரூபாவை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பிரீதி பத்மன் சூரசேன நேற்று தீர்ப்பளித்தார்.

உக்ரேன் பிரஜைகளான யூஷமார்க் என்ற நபரும் பியோஸ்கி மஸ்கின் என்ற நபருமே இவ்வாறு தண்டனைக் குள்ளாகினர். குறித்த இரண்டு உக்ரேன் பிரஜைகளும் போலியாக தயாரிக்கப்பட்ட 99 கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏ.ரி.எம். இயந்திரங்கள் ஊடாக பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதுடன் இவர்கள் ஒவ்வொருவர் மீதும் 26 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒவ்வொரு வருக்கும் தலா 2 வருடம் வீதம் 52 வருடகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 இலட்சம் ரூபா வீதம் 52 இலட்சம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது.

நீர்கொழும்பு, கடற்கரை வீதியிலமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்கள் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து போலி கிரடிட் கார்ட்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அரசுடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

2012 மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக் குள் வென்னப்புவ, சீதுவ, ஜாஎல, நீர் கொழும்பு, நிட்டம்புவ, யக்கல, கட்டு நாயக்க, சிலாபம் போன்ற பகுதிகளில் ஏ.ரி.எம். இயந்திரங்களில் பண மோசடிகள் செய்துள்ளனர் கொமர்ஷியல் வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கிக்குரிய கிரடிட் கார்ட்டுகளையே பயன்படுத்தி 111 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்படும் போது போலியாக தயாரிக்கப்பட்ட 99 கிரடிட் கார்ட்டுகளும் வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read more...

பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்காத கட்சியினர் ஜனநாயக விரோதிகள் - ரம்புக்வெல்ல!

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்காத கட்சியினர் ஜனநாயக விரோதிகளாகவே கருதப்படுவர் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது அமர்வு எதிர்வரும் ஜுலை 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனநாயக ரீதியாக இதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் உச்ச அளவில் எடுத்துள்ளது.

அத்துடன் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு ஐ. தே. க., ஜே. வி. பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் சமுகமளிப்பதில்லை என தெரிவித்துள்ளதுடன் அதற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

இந்நிலையில் அக்கட்சிகள் பங்கேற்காமல் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட இடமுள்ளதா என அமைச்சரிடம் கேட்டபோது, வெற்றி தோல்வி என்பது வேறு, ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அவர்கள் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியம் எனவும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பதற்கே அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவு குழுவை நியமித்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும் எனவும், அவர்கள் இத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read more...

கனடாவிலுள்ள இந்துக்களின் கோயில்களை தாக்கியவர்கள் ரகசிய கமராவில் பதிவு!

கனடாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வரும் நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயண் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் தேதி அடித்து உடைத்து சென்றனர். இது கனடாவில் வாழும் இந்துக்களை மிகவும் பாதித்தது.

இந்நிலையில் அங்குள்ள ரகசிய கமராவில் இருவர் பேஸ்பால் பேட்டை வைத்துக்கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்துவிட்டு பேட்டை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், சர்ரே போலீசார் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் இருந்தும் இந்த தாக்குதலுக்கு குடியுரிமை அமைச்சர் ஜெசன் கென்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more...

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரூட் பதவியேற்பு.

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரூட் இன்று காலை கான்பெராவில் உள்ள அரசு மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஜெனரல் குயின்டின் பிரேய் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

துணை பிரதமராக அந்தோணி அல்பானிசே, நிதி மந்திரியாக கிறிஸ் போவென் ஆகியோரும் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்கள். அவுஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் 14–ந் தேதி பொதுத்தேர்தல் நடாத்தப்பட இருந்தது. புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள கெவின் ரூட் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளார். எனவே ஆகஸ்டு 3–ந் தேதி தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை வேட்டையாடும் சாரதிகள்! பொலிஸார் எச்சரிக்கை

முச்சக்கரவண்டிக்குள் கண்ணாடியை பொருத்தும் முச்சக் கரவண்டி சாரதிகள், முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை பார்த்து ரசிக்கின்றார்கள் எனவும், அவ்வாறு முச்சக்கரவண்டிற்குள் கண்ணாடி பொருத்தப் பட்டிருந்தால், அவ்வாறான முச்சக்கரவண்டிகளில் பெண் களை அவதானத்துடன் பயணம் செய்ய வேண்டுமென மத்துகம பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

முச்சக்கரவண்டிக்குள் கண்ணாடியை பொருத்தும் முச்சக்கரவண்டி சாரதிகள், முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை பார்த்து ரசிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முச்சக்கரவண்டியில் பக்கவாட்டு கண்ணாடிகள் இரண்டும் நடுவில் ஒரு கண்ணாடி இருப்பது மட்டும் போதுமென்றும் தெரிவித்த பொலிஸார், இவ்வாறு கண்ணாடி பொருத்தப்பட்ட 19 முச்சக்கரவண்டிகளை தாம் மத்துகம பகுதியில் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

அமைச்சர் டியூ குணசேகரவுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலர், புளொட் தலைவர், அவசர சந்திப்பு!

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகரவுக்கும். புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியோருக்கு இடையே நேற்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

13ஆவது திருத்தத்தினை மாற்றியமைக்கக் கூடாதென்பதில் அமைச்சர் டியூ குணசேகர தீவிரம் காட்டுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், 13ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையினைத் தோற்கடிப்பதற்கான வழிமுறைகள் உபாயங்கள் தொடர்பிலும் அமைச்சருடன் மிகவும் ஆழமாக இருவரும் கலந்துரையாடினர் என்று புளொட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தினை மாற்றும் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் காட்டிவரும் முழுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் மேலும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 1987 ஆம் ஆண்டு அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினால் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லாது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகொண்டு அதற்கு ஆதரவாக அமைச்சர் டியூ குணசேகர வாக்களித்தமையையும் இவ்விருவரும் நினைவு கூர்ந்துள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த இரண்டு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!- மு.கா.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த எஹியா ஆப்தீன் மற்றும் குருநாகலை சேர்ந்த றிஸ்வி ஜவகர்ஷா ஆகிய இரண்டு உறுப்பினர்களே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 13ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பிலான பிரேரணை வட மேல் மாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமாபிக்கப்பட்ட பிரேரணை ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குறித்த இரண்டு உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இதனையடுத்தே இவர்களை உடனடியாக கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார். இந்த இடைநிறுத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நாளை!

வெலிகம ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நாளை (29) பிற்பகல் 4 மணிக்கு வெலிகம நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஹப்ஸா அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் அஷ்ஷெய்க் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வெலிகம நகரபிதா அல்ஹாஜ் ஹுஸைன் ஹாஜியார் முஹமட் கலந்துகொள்ளவுள்ளார்.

காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) சிறப்புரையாற்றவுள்ள இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் தலைவர் காலித் பின் ஸாலிஹ் அத்தாவூத் கலந்துகொள்ளவுள்ளார்.

நிகழ்வில் பட்டம் பெறவுள்ள மௌலவியாக்கள்:

ஆயிஷா அமீன் (வெலிகம), பஸ்னா பாயிஸ் (திக்குவல்லை), ஷிஹ்னாஸ் பாயிஸ் (திக்குவல்லை), ஸாஜிதா பௌஸுல் ஜெஸீம் (திக்குவல்லை), நுஸ்ரா அலி (திக்குவல்லை), ரிம்ஸா ஹுஸைன் (வெலிகம), அஸ்மா ஸரூக் (கிந்தோட்டை), ஸிஹ்னா அப்துல் ஹபீழ் (வெலிகம), பஸ்னா குல்ஸார் (தர்கா நகர்), பஸ்னா முஸம்மில் (தர்காநகர்), பர்ஸானா பாரிஸ் ( களுத்துறை), சப்னா நஸார் (வெலிகம), சனப் யெஸூர் (வெலிகம), ஸல்மா முஹம்மத் (திக்குவல்லை)

(‍கலைமகன் பைரூஸ்)

Read more...

காதலித்த சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திவிட்டு சீதனம் கேட்டு துன்புறுத்திய இளைஞன் தலைமறைவு!

காதலித்த சிறுமியொருவரை கடத்திச் சென்று 9 மாதங் களாக அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்திவிட்டு தனக்கு சீதனம் வேண்டுமென அச்சிறுமியை துன்புறுத்திய இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொழுஞ்சாவாடி பிரதேசத்தைச் சேர்ந்த 15வயதுடைய சிறுமியே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேகநபருடன் குறித்த சிறுமி காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இதன் நிமித்தம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சிறுமியின் காதலனான இளைஞன் சிறுமியை அவளது பெற்றோரிடமிருந்து கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் குளியாபிட்டியில் உள்ள இளைஞனின் தந்தையின் வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளனர். அவ்வீட்டில் குடும்பம் நடத்திய இருவரும் ஒருமாதத்திற்கு பின் குருநாகலில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சில காலங்கள் தங்கியிருந்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் வென்னப்புவ கொழுஞ்சாவாடி பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ்வாறு இருக்கையில் சந்தேகநபரும் அவரது தாயும் சீதனம் கேட்டு சிறுமியை துன்புறுத்தியுள்ளதுடன் அடித்துமுள்ளனர். இந்த துன்புறுத்தல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே குறித்த சந்தேகநபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இந்நிலையிலேயே, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

மட்டக்களப்பிலிருந்து வவுனியா, குருநாகல், வென்னப்புவ, களுவாஞ்சிக்குடி பிரதேசங்களை சேர்ந்த 23 பேர் கைது!

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா விற்கு செல்ல முயற்சித்த 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளயம் கடற்கரை யிலிருந்து இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குருக்கள்மடம் இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அப்பகுதிக்குச் சென்ற இராணுவத்தினரும், பொலிஸாரும் இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 9 சிங்களவர்களும், 14 தமிழர்களும் அடங்குகின்றனர். 5 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகளும், இதில் அடங்குவதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச். சுஜத் பிரியந்த தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் பெண்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள், வவுனியா, குருநாகல், வென்னப்புவ, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அரிசி, சீனி, சோயா மீட் உட்பட பெரும்பாலான உணவு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

13வது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு ஊவா மாகாண சபையில் 19 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!

13வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில், இரண்டு மாகாண சபைகளை ஒருங்கிணைப்பதற்கு இடமளிக்காமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை, ஊவா மாகாண சபையில் 19 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தினால் ஏற்படுத்தப் பட்ட மாகாண சபைகளில், இரண்டை அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகளை ஒன்றிணைக்கப்பட்டால், அம்மகாண சபைகளை அமைப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவேறாது என, ஊவா மாகாண சபையில் வலியுறுத்தப்பட்டது.

இதனால், இரண்டு மாகாண சபைகளை ஒருங்கிணைக்க இடமளிக்க முடியாதென தெரிவித்து, ஊவா மாகாண சபை உறுப்பினர் விமல் கலகம ஆராச்சி சபையில் பிரேரணையை சமர்ப்பித்தார், அதற்கிணங்க அப்பிரேரணைக்கு ஆளுங்கட்சியின் சார்பாக 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதேநேரம் இப்பிரேரணை, தெற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாண சபைகளில் மேலதிக வாக்குகளினால் நிறைவேறியமை, குறிப்பிடத்தக்கது.

Read more...

ஒரே சூலில் 5 குழந்தைகள்! கண்டியில் சம்பவம்!

பெண் ஒருவர் கண்டி வைத்திய சாலையில் ஒரே சூலில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதுடன், குழந்தைகளின் தாய், சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்டி, மடவளை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பாத்திமா பேர்ஜிசியா, கண்டி வைத்தியசாலையில் வைத்து இந்த 5 குழுந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இந்த 5 குழந்தைகளில் ஒரு குழந்தை பெண்யெனவும், மற்ற ஏனைய 4 குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என்றும், கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அநுர திசாநாயக தெரிவித்துள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் நரம்பியல் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டொக்டர் கபில குணவர்தன தகவல் தருகையில், இந்த பிள்ளைகள் 600க்கும் 700க்கும் இடைப்பட்ட கிரேம் எடை கொண்டவர்கள் என்றும், இவர்கள், கண்டி, பேராதனை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக வைத்தியசாலைகளின் சிறுவர் பிரிவுகளில், அதிதீவிர கண்காணிப்பின் கீழ் இருப்பதாக, தெரிவித்தார்.

Read more...

Thursday, June 27, 2013

அறையில் ஆணும் பெண்ணும் தனியாக இருப்பதை விபசாரமாக எடுக்க முடியாது-சமன் சிகேரா

ஆண்ணொருவரும் பெண்ணொருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என இன்று நடைபெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு ஒரு ஜோடியினர் யாழ். பிரதேச செயலாளரினால் பிடிக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக, விடுதி முகாமையாளரினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் பிரதேச செயலரின் நடவடிக்கை தவறானது என சுட்டிக் காட்டப்பட்டது.

மேற்படி விவகாரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்போது குறித்த விடுதி முறையற்ற ரீதியில் நடத்தப்படுவதாக யாழ். பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் சுட்டிக் காட்டியுள்ளார்.

மதுபானசாலைக்கான வரி அனுமதியின்றி விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து அவ்விடயம் தொடர்பாக ஆராய சென்ற வேளையிலேயே குறித்த யுவதி இளைஞருடன் தனியாக இருந்ததாகவும் யுவதியிடம் அடையாள அட்டை இல்லாமல் இருந்தார் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

எனவே அங்கிருந்த யுவதியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தேன், பெண்கள் அமைப்பின்படி தான் செய்தது சரியென்றும் பிரதேச செயலாளர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதிலளித்த சமன் சிகேரா என்னை பொறுத்தவரையில், 18 வயது பெண்ணும், 21 வயது ஆணும் தனியாக அறையில் இருப்பது விபசாரமல்ல, காசுக்காக பெண்ணொருவர் பல இளைஞர்களுடன் இருப்பது தான் விபசாரமாகும்.

அவ்வாறு யாழ்.நகரில் விபசாரம் நடக்கின்றது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அது உறுதிப்படுத்தப்படுமாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

வடக்கில் வேறு கலாசாரம், தெற்கில் வேறு கலாசாரம் ஆனால், வடக்கிலும், தெற்கிலும் சட்டம் ஒன்று தான், நாங்கள் சட்டத்தின்படி பார்க்கின்றோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com