Thursday, June 27, 2013

தமிழ்ச்செல்வனுடைய நிலக் கீழ் சொகுசு பதுங்கு குழி(படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் மறைந்து வாழ்ந்த நிலக் கீழ் பதுங்கு குழியின் புகைப்படங்கள்.

போராளியாகவும், தளபதியாகவும் இறுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராகவும் இருந்து இறுதியில் இலங்கை அரசாங்கத்தின் விமானக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் நிலக்கீழ் பங்களா.

Read more...

புலிகளின் தற்கொலை குண்டுத் தொழிற்சாலை! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்டு வந்த தற்கொலை குண்டு தயாரிப்பு தொழிற்சாலையின் புகைப்படங்கள் இவை.

இந்த தொழிற்சாலையில் வைத்து கிளேமோர் குண்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு உள்ளது தற்போது இந்த இடத்தை அதிகமான சுற்றுலாப்பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

Read more...

கட்டாக்காலி நாய்கள்தொடர்பில் அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்படும்-டக்ளஸ்

யாழ் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்படும் என யாழ் மாவடடச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்டாக்காலி நாய்களினால் தற்போது பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இதனால் நாய்க்கடிக்கு இலக்காகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாள் தோறும் யாழ் போதனா வைத்தியசாலையில் குறைந்தது 15 பேர் நாய், பூனைக்கடிக்கு உள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஊசி மருந்து ஏற்றுவதற்கு பெருளவு பணத்தினை வைத்தியசாலை செலவு செய்து வருகின்றது.

இவ்வாறான கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்த உள்ளுராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் என இந்த கலந்துரையாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், நாய்களைக் கொல்லக் கூடாது என்பதில் அரசாங்கம் கொள்கையாக இருந்து வருகின்றது. இவ்வாறு யாழ் மாவட்டத்தில் பிடிக்கப்படும் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கதைத்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Read more...

தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு சுற்றுலா வீசா வழங்கப்பட முடியாது-இலங்கை

தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் இலங்கைக்கு வர இனி சுற்றுலா வீசா வழங்கப்பட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தன்னார்வ தொண்டுப் பணிகளை மேற்கொண்ட செயற்பாட்டாளர் ஒருவரை அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

சென்னையிலிருந்து விழுது என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அழைபின் பேரில் இலங்கைக்கு கடந்த 19ம் திகதி சுற்றுலா வீசா மூலம் வந்த தேவகுமாரி என்ற பெண் செயற்பாட்டாளரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் செயற்பாட்டாளர் நெடுங்கேணி பிரதேசத்தில் யுத்தத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு இவர் கருத்தரங்கு ஒன்றை நடாத்தியாதாக தெரிவித்தே இவர் நாடுகடத்த பட்டுள்ளார்.

Read more...

அம்பாறை திகவாபி பௌத்த தேவாலயத்தில் மோதல் விகாரையின் விகாராதிபதியும் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம் பெற்றது. பௌத்தர்களின் பொசன் களியாட்ட விழா அம்பாறை நகரில் நடாத்த அனுமதி கோரி அனுமதி வழங்கப்படாது போக நேற்று இரவு திகவாபியில் நடை பெற்றது. இதனை ஏற்பாடு செய்தவர் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே ஆகும் . இதனை தடுத்து நிறுத்த அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளார் எனினும் திட்டமிட்டபடி பொசன் களியாட்ட விழா திகவாபி மைதானத்தில் நடை பெற்று முடிந்துள்ளது.

எனினும் இன்று காலை அந்த பிரதேசத்துக்கு டிபன்டர் வாகனத்தில் சென்ற ஐந்து குண்டர்கள் எனக் கூறப்படும் சரத் வீர சேகரவின் அடியாட்கள் பௌத்த ஆலய வளவில் மது அருந்திய போத்தல்களை தாங்களே போட்டுவிட்டு அதனை தவறான வழிக்கு திசை திருப்ப வீடியோ படம் எடுத்துள்ளனர். இதனை கண்ட சிங்கள பொது மக்கள் இவர்களை தாக்க முற்பட்டுள்ளதுடன் விடயத்தை விகாராதிபதியிடமும் முறையிட்டுள்ளனர். உரிய இடத்துக்கு வந்த விகாராதிபதியை குண்டர்களில் ஒருவர் தள்ளிவிட்டதையடுத்து அவ்விடத்தில் கலவரம் மூண்டுள்ளது. குண்டர்களை பொது மக்கள் தாக்கத் தொடங்கியதும் அந்த ஐவரும் ஓடித் தப்ப முயற்சித்தும் பொது மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாதுகாப்பு தேடி திகவாபி பொலிஸாரிடம் ஓடிச் சென்றதும் பொது மக்கள் பின் தொடர்ந்து அவர்களை வெளியேறாதவாறு இன்னும் ரகளை இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக திகவாபி விகாராதிபதி தமணைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு சற்று முன்னர் குண்டர்கள் ஐவரும் அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

சுவீடனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்களை நாடு கடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியிருக்கும் இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதுடன் கணக்கெடுப்பின் முடிவில் அகதிக் கோரிக்கையை யாளர்கள் அனைவரையும் விசேட விமானமொன்றின் மூலம் நாடு கடத்தப்படவுள்ளதாக சுவீடன் அரசாங்கம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் சுவீடனில் தஞ்சமடைந்திருந்தனர் என குறிப்பிட்டார்.

Read more...

வெள்ளை மாளிகையில் புகுந்த பெண் கைது தீவிரவாதியா?

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பையும் மீறி புகுந்த பெண்ணை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உடையவரா என்று தீவிர விசாரணைகள் நடத்தப்படுவதுடன் இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் அரசு பணிகளை கவனித்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளை மாளிகையின் சுவர் ஏறி குதித்து பெண் ஒருவர் அத்துமீறி உள்ளே புகுந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள், பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கொலம்பியா போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், வெள்ளை மாளிகை அருகே பெண் உள்பட 17 பேர் நேற்று பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்களில் டயானி வில்சன் என்ற பெண் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் என்பதுடன் இவர் ஏற்கனவே சிறையில் இருந்தவர் என்பதும் தெரிய வந்தது. கைதான பெண் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடையவரா என்று விசாரணை நடக்கிறது என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more...

முதல் ரக நீரிழிவுக்கு தடுப்பு மருந்து!

நீரிழிவு நோயின் ஒரு வகையான முதல்ரக நீரழிவு நோயை மாற்றுவதற்கான நோய்த் தடுப்பு மருந்தின் மாதிரியை வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டதில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

80 நோயாளிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை குறித்து நாடுகடந்த மருத்துவ விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான தகவல்கள், புதிய நோய்த்தடுப்பு மருந்து இதற்கேற்றவாறு உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு பயிற்சி கொடுக்கும் என்று கூறுகின்றன.

உடலைத் தாக்குகின்ற பக்ரீரியாக்கள் மற்றும் வைரசுக்களை தாக்குவதற்கான பயிற்சியை உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு பயிற்றுவிப்பதே நோய்த்தடுப்பு மருந்துகளின் செயற்பாடாகும். அந்தப் பயிற்சியின் மூலம் உடலைத் தாக்கவரும் கிருமிகளை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி தாக்கி அழித்துவிடும்.

ஆனால், நீரிழி நோயைப் பொறுத்தவரை, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உடலின் பாகங்களை தாக்குவதன் மூலம் அது உருவாகிறது. அதாவது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் கணயத்தில் உள்ள பீட்டா கலங்களை தாக்குவதால் அது ஏற்படுகிறது.

இந்த பீட்டா கலங்கள்தான் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கின்றன. ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தி அந்த பீட்டாக் கலங்களை தாக்கி அழித்துவிட்டால், இன்சுலின் சுரக்கமுடியாமல் போய் விடுகிறது இதன் மூலமே முதல் வகை நீரிழிவு நோய் உருவாகிறது.

ஆகவே இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய நோய்த்தடை மருந்து, உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு, கிருமிகளை தாக்குவதற்கான பயிற்சியை கொடுப்பதற்குப் பதிலாக, அந்த நோய் எதிர்ப்புச் சக்தி செயற்படாமல் இருக்க அது பழக்குகிறது. ஆகவே குறித்த நோய் எதிர்ப்புச் சக்தி கணயத்தின் பீட்டாக் கலங்களை தாக்காது. அதனால் இன்சுலின் தொடர்ச்சியாகச் சுரக்கப்பட, முதல் வகை நீரிழிவு நோயும் வராது.

இந்த புதிய நோய்த்தடுப்பு மருந்து இன்சுலினைச் சுரக்கும் குறித்த பீட்டா கலங்களைத் தாக்கும் வெண்குருதிச் சிருதுணிக்கைகளை செயற்படாமல் இருக்கச் செய்துவிடும்.

ஆனால், இரண்டாவது வகை நீரிழிவு நோய் ”கூடாத உணவுப் பழக்க வழக்கங்களால்” ஏற்படுவதால், அதனை இந்த நோய்த்தடுப்பு மருந்தால் தடுக்க முடியாது.

Read more...

நாட்டைக் காக்க முடியாத கழுதைகள் அரசியலில் இருக்கிறார்கள்! புத்த சாசன அமைச்சுக்கு இடுப்பில் சீவன் உள்ளவர் தேவை!! - ஞானஸாரர்

இடுப்பில் சீவன் உள்ள ஒருவரை புத்த சாசன அமைச்சராக நியமிக்குமாறு பொதுபல சேனா அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

அவ்வியக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் எசல போயா தினத்திற்கு முன்னர் இந்நாட்டில் செயற்படுகின்ற பிறமத அடிப்டைவாதங்களை இல்லாதொழிப்பதற்கு அதிகாரம்மிக்கவர்கள் முன் வரவேண்டும். அவ்வாறு அவர்கள் செயற்படாதவிடத்து, அதிகாரபூர்வமற்ற பொலிஸாராக தமது இயக்கம் மாறி கடின நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் தேர்ர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு உரையாற்றும்போது:

‘எங்கள் யாப்பில் பௌத்தர்களின் உரிமைகளை அழித்தொழிப்பதற்கே சட்டம் - சட்டதிட்டங்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு இதில் நீந்த முடியும். இது சர்வதேச அரசியல் சூழ்ச்சியாகும். சர்வதேச ரீதியாக எங்கள் நாட்டை நொறுக்க, அபகீர்த்தி ஏற்படுத்த சூழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படைவாதிகளுக்கு நாங்கள் ஒன்று சொல்லவிரும்புகின்றோம். பௌத்தர்களின் பொறுமையைச் சோதிக்க முற்பட வேண்டாம். எங்கள் பொறுமை எல்லை மீறியுள்ளது.

கறுப்பு வெள்ளையர்களின் சட்டங்களில் மதக் குளறுபடி, நிச்சயம் எதிர்காலத்தில் ஏற்பட்டே ஆகும். அதற்காகத்தான் அந்த அடிப்படைவாதிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரத்தை அழித்தொழிக்கிறார்கள். கலாச்சாரத்தை ஆக்கிரமிக்கிறார்கள். அதிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியாத கழுதை அரசியலாளர்கள் கொஞ்சம் பேர் எங்கள் நாட்டில் இருக்கிறார்கள்.
.
மறுமைக்காக எதுவுமே செய்யாமல் இருக்கின்ற புத்த சாசன அமைச்சரினால் நாட்டுக்கு எவ்விதப் பயனும் இல்லை. பிற மதத்தவர்களின் விடயத்தில் நீங்கள் என்னதான் செய்தீர்கள் என நான் புத்த சாசன அமைச்சிடம் கேட்கிறேன். .

யாப்பு என்ற வலையில் பௌத்த மக்களை சிறைப்படுத்தாகிவிட்டது. இலங்கை என்பது வங்காள விரிகுடா அல்ல. உலகிலுள்ள எல்லாவிதமான அசுத்தங்களும் இலங்கைக்குத்தான் கொண்டுவரப்படுகின்றது. பைபிளில் குறிப்பிடப்படுகின்ற கடவுள், பணியாட்கள், பேய்பிசாசுகளின் தொகைக்கேற்ப இங்கு கிறிஸ்த ஆலயங்களை நிர்மாணித்தால் எங்களுக்கு என்னாகும்? குறைந்தளவு இடுப்பை நேராக நிமிர்த்திக் கொண்டு வேலை செய்யமுடியுமானா ஒரு மனிதனை புத்த சாசன அமைச்சுக்கு நியமிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். காரணமில்லாமல் புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற ஒருவர் இல்லாதிருக்க வேண்டும்.

குணமும் இல்லை, குற்றமும் இல்லை போன்றவர்களை நியமித்து போதும் போதும் என்றாகியுள்ளது. அடுத்தது அமைச்சிலுள்ள பெரிய தலைகளுக்கு சரியாக ஒரு கணிப்பீடுகூட செய்யமுடியாது.

இன்று எங்கள் பெளத்தர்களுக்குப் பாரிய இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அது பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தேவையில்லை. அரசியலாளர்கள் பொதுமக்களின் பலமான அதிகாரத்தை எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்குச் சென்றது வெறும் பலாக்காய் அவிப்பதற்காக அல்ல. ஏதேனும் ஒரு வேலை செய்வதற்கே! நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அமைச்சர்களுக்குக் கிடையாது.. நாங்கள் மதகுருமார்களாக இருந்து பொறுமை காத்த்து போதும்...போதும்... எங்களை அசைக்க யாராலும் முடியாது.

ஐயறிவுடையவர்களாக நின்று இதற்கு முடிவு காணவியலாது. இனமோ – மறுபிறப்போ இல்லாத மேற்கத்தேய செல்லங்களுக்கு இந்நாடு பற்றிய அக்கறை இல்லாமலிருக்கலாமி. ஆனால், எங்களுக்கு அக்றை இருக்கிறது. நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்தே ஆவோம்.’ என்று குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

தன்சானியா மற்றும் சீஷெல்ஸ நாடுகளுக்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்! இந்த இரு நாடுகளும் தான் .......!

ஜனாதிபதியின் தன்சானியா மற்றும் சீஷெல்ஸ் நாடு களுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி, தன்சானியாவின் ஜூலியஸ் நயரேரே சர்வதேச விமான நிலையத்தை, சென்றடைந் துள்ளார். தன்சானியா ஜனாதிபதி ஜகயா ரிக்கோ கிக் வெட்டே தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்றனர்.

ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது, தன்சானிய ஜனாதிபதி ஜகயா ரிசோர்வ் கிக்வத்தே மற்றும் சீஷெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் மிச்செல் ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அண்மைக்காலமாக இந்த இரு நாடுகளுடனும் மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது. அரச தலைவரின் விஜயம், சீஷெல்ஸ் ஜனாதிபதி கடந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், தமது நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தன்சானியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் சர்வதேச கூட்டங்களின்போதும், இலங்கைக்கு ஆதரவு வழங்கும் ராச்சியங்களாகும். 2009ம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமை பேரவையின் 2வது விசேட அமர்வின்போது, சீஷெல்ஸ் இராச்சியம், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.

அத்துடன் இவ்வருடத்தில் பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டு குழு கூட்டத்தின்போது, 2013ம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை வேறொரு நாட்டில் நடாத்த வேண்டுமென, ஒரு சில நாடுகள் தெரிவித்திருந்த போதிலும், இம்மாநாட்டை நவம்பர் மாதம் இலங்கையில் நடாத்த வேண்டுமென, தன்சானியா பூரண ஆதரவை வழங்கியிருந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்சானியாவின் பிரதான நகரான தாரெஸ் ஸலாமில் நடைபெறவுள்ள சர்வதேச புரிந்துணர்வு விவாதத்திலும், ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

Read more...

`கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' ஜூலை 07 இல்.....!

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு முஸ்லிம் நூலகமும், இளம் மாதர்முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாகித்யரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களும் சிறப்பதிதிகளாக அல்ஹாஜ் முஹம்மத் அக்ரம், கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல், உளவளவியலாளர் அல்ஹாஜ். யூ.எல்.எம். நௌபர், திரு. திருமதி. சிரிசுமண கொடகே, தேசமான்ய மக்கியா முஸம்மில் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கொம்பனித் தெரு முஸ்லிம் நூலகத் தலைவரும், அக்ரம் பவுண்டேஷனின் தவிசாளருமான அல்ஹாஜ் முஹம்மத் அக்ரம் அவர்கள் முதற்பிரதியை பெற்றுக்கொள்வார். சிரேஷ்ட எழுத்தாளர் நயீமா சித்தீக் அவர்களும், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பி.இப்திகார் அவர்களும் இந்நிகழ்வில் கௌவிக்கப்படவுள்ளார்கள்.

வரவேற்புரையை கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் அவர்களும், ஆசியுரையை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்களும், வாழ்த்துரையை கே.எஸ். சிவகுமாரன் அவர்களும் நிகழ்த்த, கவிமணி என். நஜ்முல் ஹூசைன் அவர்களால் கவி வாழ்த்தும் இடம் பெறவிருக்கிறது. கருத்துரையை எழுத்தாளர் திக்வல்லை கமால் அவர்களும், நூல் விமர்சனத்தை சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களும் நிகழ்த்தவுள்ளதுடன் நாகபூஷணி கருப்பையா அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி .. என்ர செல்லம்...

கள்ள மட்டை என்பது கனடாவில கனபேருக்கு கைவந்த கலை பாருங்கோ..! உந்த எழுத்து விபச்சாரிகளுக்கு கனடாவில மிண்டு கொடுக்கிற நம்பர் வண் பத்திரிகை காரரது வம்சமே ஒரு புறம் கனடிய அதிகாரிமாருடன் நல்லபிள்ளைக்கு நடித்துக் கொண்டு மறுபுறம் மட்டைத் தொழிலிலை கொடி கட்டிப்பறக்கினம்.. நம்பர் வண் பேப்பர்காரரின் மகனாரும் மருமகனாரும் 8 போரோடை மட்டையோடை பிடிபட்டு மலேசியாவில் 6 மாதம் கம்பி எண்ணினதை யாரும் கேள்விப்பட்டியளோ..! இல்லை... உவையள் எல்லாரும் செய்யுறது ஊரைச் சுத்திய பிழைப்புதான்..


உதைவிட உடலை விற்று வயிறு கழுவி சீவிக்கும் விபச்சாரிகள் மேலானவை பாரங்கோ...!

ஊடகத்துறை என்றதுக்கு பின்னாலை எவ்வளவோ துரோகங்களும் சுத்துமாத்துகளும் கண்கட்டுவித்தைகளும் உலகில நடக்குது...

அதில ஒண்டுதான் கனடால நடக்கிற உவையின்ரை நாடகமும் பாரங்கோ...

ஆயிரம்தான் பொய்களைச் சொல்லி என்ன சுத்துமாத்து யார் விட்டாலும் காலக்கிரமத்தில் எல்லாம் ஞாலத்தால் வெளிக்கும்..

- தயா -

Read more...

பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்குக் கொடுக்கவே மாட்டேன் - மகிந்தர்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க்க்கூடாது என்பதுடன் இரு மாகாணங்களுக்கு தங்களது விருப்பில் இணைந்து கொள்வதற்கும் இடமளிக்கப்படக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் தெரிவிக்கப்பட்டு ஆமோதிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திரிபால சிரிசேனா முன்வைத்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இவ்விடயத்தில் ஏகோபித்த முடிவுடையவர்களாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிராந்தியங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு ஆகும். எனினும், இலங்கை போன்ற சிறிய நாட்டில் அமைந்துள்ள மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்றும் தெளிவுறுத்தியுள்ளார்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால், நாட்டில் மீண்டும் ஈழமொன்று உருவாவதற்குரிய பாதையை அது காட்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அதனால் எந்தவொரு மாகாண சபைக்கும் காணி, மற்றும் பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு எந்தவொரு எண்ணமும் கிடையாது என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

(கேஎப்)

Read more...

சிங்கள ராவய அமைப்பினரின் மாடு அறுத்தலுக்கெதிரான பாதயாத்திரை நிறைவு!! கடைகளில் வைக்கப்பட்டிருந்த ......!

மாடு அறுத்தலை தடை செய்தல் உட்பட ஐந்து கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜரொன்று சிங்கள ராவய அமைப்பினரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டது. மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டும் என கோரி சிங்கள ராவய அமைப்பினரால் கடந்த வாரம் கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரையினை ஆரம்பித்திருந்தனர்.

பாணந்துரையிலிருந்து அலரிமாளிகை வரை காலிவீதியால், இவர்கள் பாதையாத்திரையாக வந்ததையடுத்து, பம்பலப்பிட்டிப் பகுதியிலுள்ள முஸ்லிம் உணவகங்களுக்கு சென்ற பொலிஸார் கடைகளில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி உட்பட, அனைத்து இறைச்சி வகைகளை ஒளித்து வைக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் அறிவித்தலை அடுத்து பம்பலப்பிட்டி சந்திப்பகுதியில் அமைந்திருந்த உணவகங்களில் பொறித்த கோழி இறைச்சி உட்பட அனைத்து இறைச்சி வகைகள் ஒளித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

Read more...

இங்கிலாந்து விட்பை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் வேற்றுகிரக பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளாராம்???

இங்கிலாந்து நாட்டில் உள்ள விட்பை என்ற பகுதியின் கவுன்சிலராக பணிபுரிந்து வருபவர் சீமோன் பார்க்ஸ். இவர் நேற்று தொலைக்காட்சியில் அளித்த பேட்டியொன்றில், தாம் அடிக்கடி வேற்றுகிரக பெண் ஒருவருடன் செக்ஸ் உறவு கொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் கூறுகையில், நான் வருடத்திற்கு நான்கு முறை வேற்றுகிரக பெண் ஒருவருடன் செக்ஸ் உறவு கொள்கிறேன். அதன் மூலம் வேற்றுகிரகத்தில் Cat Queen என்ற மனைவியும், Zarka என்ற மகளும் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் வேற்றுகிரக பெண்மணியால் ஐந்து வயதிலேயே கற்பை இழந்ததாகவும், ஒவ்வொரு முறையும், வேற்றுகிரக பெண்மணியால் அவர்கள் கிரகத்திற்கு தூக்கி செல்லப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபட வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். தன்னுடன் செக்ஸ் வைத்துள்ள வேற்றுகிரக பெண்ணின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கவுன்சிலராக உள்ள இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் படுதோல்வி! ஆட்சி மாற்றம் வருமா?

அவுஸ்திரேலிய தொழில் கட்சி தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பில் பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை முன்னாள் பிரதமர் கெவின் ருத் தோற்கடித்துள்ளார். மேற்படி தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பில் கெவின் ருத் 57 சதவீத வாக்குகளையும் ஜூலியா கில்லார்ட் 45 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் கட்சித் தலைமைத்துவத்துக்கான வாக்களிப்பை நடத்துவதற்கு அழைப்பு விடுத்த நிலையிலேயே மேற்படி தேர்தல் நடத்தப்பட்டது. கட்சிக் கூட்டமொன்றில் முன்னாள் பிரதமர் கெவின் ருத்தின் ஆதரவாளர்கள் வாக்களிப்பொன்றை நடத்துவதற்கு நிர்ப்பந்தித்ததை தொடர்ந்து அவர் மேற்படி அழைப்பை விடுத்திருந்தார்.

இதன்பிரகாரம் புதன்கிழமை. கட்சித் தலைமைத்துவத்திற்கான இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கட்சித் தலைமைத்துவத்துக்கான வாக்களிப்பில் ஜூலியா கில்லார்ட்டும் கெவின் ருத்தும் போட்டியிட்டனர். மேற்படி வாக்களிப்பில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் தாம் அரசியலிலிருந்து விலகுவதாக இரு போட்டியாளர்களுமே வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன் சூளுரைத்திருந்தனர். எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தொழிற்­கட்சி தோல்வியைத் தழுவ நேரிடலாம் என கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் ஊகங்களை வெளியிட்டதையடுத்து, இந்த வாக்களிப்பை நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் கெவின் ருத்தை தோற்கடித்து ஜூலியா கில்லார்ட் பிரதமராக பதவியேற்றார். எனினும் கெவின் ருத் வாக்காளர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலம் பெற்ற ஒருவராக விளங்குவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தொழிற்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக கடும் விவாதங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்படி வாக்கெடுப்பை கட்சித் தலைமைத்துவப் பிரச்சினை தொடர்பில் தீர்மானிப்பதற்கான இறுதி வாய்ப்பாக ஜூலியா கில்லார்ட் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது தொழிற்கட்சிக்கு ஒருவர் தலைமை தாங்க பிறிதொருவர் அக்கட்சியின் முக்கிய மாற்று தலைவராக இருக்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அரசாங்கத்தையோ அன்றி கட்சியையோ தாம் கொண்டிருக்க முடியாது எனக் கூறிய அவர், இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கும் எவரும் வெற்றி பெற்றால் அவர் தொழில் கட்சியின் தலைவர். தோல்வியடைந்தால் அரசியலைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

எனக்கு போதிய நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த நிபந்தனையை நானாக முன்வைத்திருக்கமாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். ஜூலியா கில்லார்ட் மேற்படி கருத்தை வெளியிட்டு சிறிது நேரத்தில் கெவின் ரூத் ஊடகவியலாளர்ளுக்கு விளக்கமளிக்கையில், இது இந்த விடயம் குறித்து தீர்மானிப்பதற்கான தருணம் என நான் நம்புகிறேன். அவுஸ்திரேலிய மக்கள் சாத்தியமான மாற்றுவழியொன்றை தேர்ந்தெடுப்பார்கள் என நான் இதயபூர்வமாக நம்புகிறேன். நான் இந்த வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவினால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அதே உறுதியை ஜூலியாவும் எடுத்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வாக்கெடுப்பிலான வெற்றியானது கெவின்ருத்தை அவரது கட்சியின் தலைவராக்கியுள்ள போதும், அவர் பிரதமராக மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தான் பதவி விலகுவதாக ஆளுநர் நாயகம் குயன்ரின் பிரைஸுக்கு கடிதம் எழுதிய பிற்பாடே கெவின் ருத் பிரதமராக பதவியேற்க முடியும். தலைமைத்துவ மாற்றத்துடன் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல அமைச்சர்கள் கெவின் ருத்தின் கீழ் பணியாற்ற விருப்பம் கொண்டிராதவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

யாழில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் யாழ் முஸ்லீம்களின் ஆதங்கம்!

யாழ் மாவட்ட முஸ்லிம் ஒருவரின் பாழடைந்த கிணற்றி லிருந்து அண்மையில் இராணுவத்தால் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பாக சில இணையத்தளங்கள், பத்திரி கைகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியீட்டு வருகின்றன எனவும் இவ்வாறான செய்திகள் திரிவு படுத்தப்பட்டமை என தெரிவித்து முஸ்லீம்கள் தங்களது ஆதங்கத்கங்களை தெரிவித்துள்ளனர் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

சியானாஸ் தாஹிர் (தலைவர் கே.கே.எஸ் வீதி முகம்மதியாத் மஸ்ஜீத்)

முஸ்லீம் வட்டாரத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து சில பத்திரிகைகள் திரிபடுத்திய செய்தியை வெளியிட்டுள்ளன. அதுவும் கிழக்குத்தீவிரவாத அமைப்புக்கும் மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கு தொடர்புள்ளதாகவும், எதிர்வரும் மாகாண சபை தேர்தலையும் தொடர்புபடுத்தி கூறப்பட்டுள்ளது. இதற்கும் யாழ் முஸ்லிம்களும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்தச் செய்தி மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ஒரு செயலாகவே கருதுகிறோம். முஸ்லீம் தமிழ் சகோதரர்களை சீண்டும் இவ்வாறான செய்திகள் தவிர்க்கப்படவேண்டும். இப்போது யாழில் எல்லா இரும்புக்கடைகளிலும் கைவிடப்பட்ட ஷெல் குழாய்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறான ஷெல் பொருட்கள் இராணுவத்தால் கைவிடப்பட்டவையாகும். இவைகள் கழிவுப்பொருட்கள் என்ற ரிதியில் அவர்களே வெளியே போடுகின்றனர். இது சாதாரண விடயமே. எனவே அநாவசியமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி செய்திகளை திரிவு படுத்தவேண்டாம் என கேட்டுக் கொள்வதுடன், எமது பள்ளிவாசல் நிர்வாகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்றார்.

கே.எம்.நிலாம் (சமூக சேவகர், அல் அஸ்ஹர் முன்பள்ளி ஸ்தாபகர்)

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வெடிபொருட்கள் பழைமை வாய்ந்தவை. 10 வருடங்களுக்கு முன்னர் பாழடைந்த கிணற்றில் போடப்பட்டிருந்தவை. இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்படுவது வடகிழக்கில் புதிதல்ல என்பதை உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கைவிடப்பட்ட இவ்வாறான ஆயுதங்கள் தற்போது மீட்கப்படுவது சாதாரண விடயம். இதனை வேறு கோணங்களில் சோடித்து தற்போது உள்ள சமாதான சூழலை குழப்பவேண்டாம் என கேட்டுக்கொள்வதுடன், ஊடக தர்மத்துடன் தற்களது செய்திகளை வெளியிடுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

மௌலவி எம்.ஐ மஹ்முத் பலாஹி (பேஷ் இமாம்-முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல்)

குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்ட திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை கேட்டு கவலை அடைந்தேன். ஏனெனில் மக்களுக்கு நல்ல விடயங்களை கூற வேண்டிய இவைகள் ஏன் இப்படி செய்கின்றன என கவலை அடைந்தேன். ஊடகங்கள் அதன் தர்மத்தை கடைபிடித்து செய்திகளை வெளியிட வேண்டும். இனங்களுக்கிடையே மனக்கசப்பை வளர்ப்பது ஊடக தர்மமாகாது.

மனிதம், மனித நேயம் ஊடகங்களுக்கு தேவை. இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது ஊடகவியலாளர்கள் சமூகநலனை கருதி செயற்பட வேண்டும். தற்போதைய சூழலில் சகல மக்களும் சமாதானமாக வாழ்கின்றனர். ஆனால் சில ஊடகங்கள் இந்நிலைமையை குழப்ப்புவதன் ஊடாக பயங்கரவாதத்தை மேற்கொள்கின்றன. மேலும் இவ்வாறான ஊடகங்களே மேற்படி செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுகின்றன. இச்செய்திகள் வட முஸ்லீம்கள் மீள குடியமர்வதை விரும்பாததன் காரணமாக இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றன. இதனை சம்பந்தப்பட்ட ஊடகங்கள் புரிந்துகொண்டு மக்களின் அக்கறையில் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாப் எம்.எல் லாபீர்(தலைவர் -பெரிய முகைதீன் ஜும்மா மஸ்ஜீத், ஊடகவியலாளர்)

மேற்படி செய்தி தொடர்பாக குடாநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. ஏனெனில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஏற்கக்கூடியதல்ல. பிழையான தகவல்களை வெளியிடும் இவர்கள் உண்மையான ஊடகவியலாளர்களா என என்னத் தோன்றுகிறது. கைவிடப்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்படுவது புதிய விடயமல்ல. புதிய கண்டுபிடிப்பு போன்று முஸ்லீம் பகுதி சம்பவத்தை சித்தரித்து எழுதப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. இவ்விடயத்தை நியாயப்படுத்த முடியாது. இங்குள்ள முஸ்லிம்கள் தற்போதைய சமாதான சூழலை குழப்புவதாக இல்லை. எனவே செய்தியை திரிவுபடுத்தி வெளியிடும் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். சு.மு.சுவர்கஹான் (பொதுச்செயலாளர் யாழ் கிளிநெச்சி முஸ்லிம் சம்மேளனம்)

26.06.2013 அன்று வெளியான நாளிதழில் 'முஸ்லிம் தீவிரவாதிகளால் வடக்கிற்கு வெடிபொருட்கள்' என்ற தலைப்பில் அப்பட்டமான திரிவுபடுத்தப்பட்டசெய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதுமட்டுமன்றி எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல் பிரசாரத்தினையும் சுட்டிக்காட்டி'தேர்தல் களத்தில் பயன்படுத்துவதற்காக கிழக்குமாகாணத்தில் இருந்து முஸ்லிம் தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்களால் கொண்டுவரப்பட்டது'என்ற ஆதாரமற்ற இப்பொய்யான கூற்றினை யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் வண்மையாகக் கண்டிக்கின்றது.

அஷ்ஷெய்க் பி.எஸ் சுபியான் மௌலவி (யாழ் மாநகர சபை உறுப்பினர், மக்கள் பணிமனை தலைவர்)

முஸ்லீம் பகுதியில் பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்ட ஷெல் வெடிபொருட்கள் அண்மையில் வீட்டு உரிமையாளரால் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. இதுவே உண்மையான செய்தி. இந்த செய்தியை பல செய்தி ஊடகங்கள் பல கோணங்களில் திரிவுபடுத்தி செய்தியை வெளியிட்டுள்ளன. இது கவலைக்குரிய விடயம். யாழ் மாவட்டத்தில் 30 வருடங்களின் பின்னர் முஸ்லீம்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இனங்களுக்கிடையில் குரோதங்களை தூண்டக் கூடிய வகையில் இவ்வாறான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

நாட்டில் மீண்டும் இரத்த வெள்ளத்தைப் பார்க்க முயல்கிறது ஹெல உறுமய!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முப்பது வருட யுத்த்த்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்குப் பெற்றுத்தந்த சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அழித்தொழித்து இனவாத்த்தையும், மதவாத்த்தையும் மீண்டும் கிளறி இந்நாட்டில் மீண்டும் இரத்த வெள்ளம் பாய்ந்தோடச் செய்யவே சிங்கள உறுமய மற்றும் ஜாத்திக ஹெல உறுமய முயல்கிறது என தென்மாகாண சபையின் சமூகசேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யூ.ஜீ.டீ. ஆரியத்திலக்க குறிப்பிடுகிறார்.

ஹக்மீமன தொடகொட பஞ்சதூபாராம விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றிற்குச் சமுகமளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:

மாகாண சபையை வெள்ளை யானையாக மாற்ற முடியாது என்று ஹெல உறுமயவும் விமல் வீரவன்சவும் குறிப்பிடுகின்றனர். ஆயினும், இந்நாட்டு மக்களின் பில்லியன் கணக்கான பணத்தை அழித்தொழிக்கின்ற மக்களை துன்பியலுக்குள் சிக்க வைக்கின்ற நிறுவனங்கள் பற்றி இவர்கள் வாய் திறக்காமலிருப்பது அதிசயமாகும்.

நாங்கள் மாகாண சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் நாங்கள் பிச்சை வாங்கி வயிறு வளர்த்து அரசியலுக்குள் வந்தவர்கள் அல்ல. இலங்கையிலுள்ள 8 மாகாண சபைகளிலும் 11 விடயங்கள் உள்ள ஒரே அமைச்சர் நான்மட்டும்தான்! இந்தப் 11 வது விடயத்திலிருந்து மக்களுக்குச் சேவை செய்வதற்காக மாகாண சபையென்ற இந்த வெள்ளை யானையினால் தான் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைக்காதவர்களாக அரசியல்வாதிகளே இருக்கின்றனர்.

சிற்சில அரசியலாளர்கள் செய்கின்ற வேலைகள்தான் இதற்குக் காரணம். இந்நிலை வருவதற்கு காரணமாக அமைந்த அரசியலாளர்களே இதற்குப் பொறுப்புச் செல்ல வேண்டும். இந்நாட்டு மக்களின் எண்ணங்களைக் குழப்புகின்ற தன்மையை மிக விரைவில் இல்லாமற் செய்ய வேண்டும். மீண்டும் எங்கள் நாட்டுக்குத் தேவையானது யுத்தமல்ல. கடின உழைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரத்தை சமாதானத்தை பாதுகாக்கக்கூடிய அனைத்து இனங்களையும் மதிக்கக்கூடிய சமுதாயத்தை நிர்மாணிப்பதே!

முப்பது வருட யுத்தத்தினால் உயிரிழந்த வலது குறைந்திருக்கின்றவர்களில் 99 வீதமானவர்கள் இந்நாட்டுச் சிங்கள பௌத்தர்கள். அதனால் இன்றும் அந்த வீடுகளில் சந்தோசம் என்பதில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளறி இந்நாட்டை மீண்டும் யுத்தத்திற்குட்படுத்தினால் அதிலிருந்து பெரும் பாதிப்பைப் பெறுவது இந்நாட்டு அப்பாவிப் பொதுமக்களின் பிள்ளைகளே. பெரிதாகக் குரைக்கின்ற தலைவர்களின் பிள்ளைகளை யுத்தத்திற்கு அனுப்புவதில்லை. எதற்காகவும் இந்நாடு எக்காரணத்திற்காகவும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்த ஆறாகா மாற்றுவதற்கு இடமளிக்கவே கூடாது’

(கலைமகன் பைரூஸ்)

Read more...

Wednesday, June 26, 2013

13ஆவது திருத்தச் சட்டத்தை சாட்டாக வைத்து மகன் விமுக்தியை அரசியலிற்குள் நுழைக்க முயல்கின்றார் சந்திரிக்கா!-விமல்!

13ஆவது திருத்தச் சட்டத்தை துரும்பாகக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசாங் கத்தையும் பிரிப்பதற்காக அரசாங்க தரப்பு அமைச்சர்கள் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தூண்டிவிடுகிறார் என்றும், இவ்வாறு கட்சிக் குள் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம், மகன் விமுக்தி குமாரதுங்கவைக அரசியலிற்குள் நுழைப்பதற்கு சந்திரிக்கா முயற்சி செய்து வருகின்றார், என அமைச்சர் விமல் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய சுந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் தொடர்பில் எமது நிலைப்பாடு உறுதியானதே. இந்த நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்கும் வரை எமது போராட்டம் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை,இந்தியாவுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் விடயத்துக்கு எதிராக இருந்தவர்கள் இப்பொழுது அதற்கு ஆதராவாக பேசுகின்றனர் என்றும், அமைச்சர்களான ராஜித்த மற்றும் ரெஜினோல்ட் குரே போன்றோர்கள் சந்திரிகாவின் கணவரின் கட்சியான மஹஜன கட்சியில் இருந்தவர்கள். அவர்கள் அன்றும் ஆதரவாக இருந்தார்கள் இன்றும் ஆதரவாகப் பேசுகின்றனர் என அமைச்சர் விமல் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே என்றும், ஒப்பந்தம் கைச்சாத்திட்டால் விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பார்கள் என்று சொல்லி இந்தியா மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியானது எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் செய்யும் தீர்மானத்திலேயே உள்ளது. அதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக ஐ.தே.க. செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாம் இது குறித்து ஜாதிக ஹெல உறுமய மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் நீக்கப்படும் வரை நாம் தொடர்ந்தும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவ உடைமையாக்குமாறு கோத்தபாய பணிப்பு!

புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் உட்பட புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதே வேளை புலிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வாகனங்கள், வங்கிகளின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள் என்பன அரச உடைமையாக்கப்பட்டுள்ள நிலையில் புலிகள் பயன்படுத்திய காணிகள், வீடுகள் என்பவற்றையும் இராணுவ உடைமையாக்க கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

Read more...

அரசியல் கைதிகள் என எவரும் தடுத்து வைக்கப்படவில்லை: புனர்வாழ்வு அமைச்சர்

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் தடுத்து வைக்கப் படவில்லை என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

இதே வேளை புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களும் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய புலி உறுப்பினர்கள் 810 பேர் மடடுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகள் யாரும் கிடையாது எனவும், கொலை உள்ளிட்ட பாரிய குற்றச் செகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்கள் உடைய புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதனை மனித உரிமை மீறலாக கருத முடியாது என அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்

Read more...

வவுனியாவில் தனிமையில் நின்ற சிறுவன் மீட்பு!

வவுனியா பூங்காவீதியில் இன்று(26.6.2013) மதியம் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் தனிமையில் நின்றதை கண்ட பிரதேசமக்கள் சிறுவனை மீட்டு வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி எஸ்.ஜெயக்கெனடியிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இருந்து எந்தவிதமான தகவல்களையும் பெற முடியாதுள்ளதால் சிறுவனை மீட்கப்பட்டது தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யவுள்ளதுடன் தற்காலிகமாக வவுனியா கோவில்குளம் சிறுவர் இல்லத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி எஸ்.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

மேலும் சிறுவனுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் தொடர்பு கொண்டால் சிறுவனை அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என குறிப்பிட்டார்.

Read more...

எல்.ரி.ரி.யின் அரசியற்துறை மகளிர் பிரிவின் முன்னாள் தலைவி தமிழினி விடுதலை!

எல்.ரி.ரி.யின் அரசியற்துறை மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி என அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி ஒரு வருடகால புனர்வாழ்வின் பின்னர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டி யாராச்சி தெரிவித்தார்.

இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எல்.ரி.ரியின் முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினியை பொறுப்பேற்பதற்காக அவரின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

Read more...

ஒரு பொருள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கவேண்டுமா?

பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர் மற்றும் நோர்மன் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரது முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சில்லரைக் கடைகளில் கிடைக்கும் தீன்பண்டங்கள் முதல் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு குறியீட்டின் மூலமே முறைபடுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

இந்த பார்கோட்டை வைத்து ஒரு பொருள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பதை இலகுவாக அடையாளம் காண்பதுடன் எமது சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்ளலாம். இதற்கிணங்க அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம். அதேபோல் உலகிலுள்ள நாடுகளின் பார்கோட்டை எண்களை பார்ப்போமேயானால்,

00-13: USA & Canada, 20-29: In-Store Functions 30-37: France 40-44: Germany 45: Japan (also 49) 46: Russian Federation 471: Taiwan 474: Estonia 475: Latvia 477: Lithuania 479: Sri Lanka 480: Philippines 482: Ukraine 484: Moldova 485: Armenia 486: Georgia 487: Kazakhstan 489: Hong Kong 49: Japan (JAN-13) 50: United Kingdom 520: Greece 528: Lebanon 529: Cyprus 531: Macedonia 535: Malta 539: Ireland 54: Belgium & Luxembourg 560: Portugal 569: Iceland 57: Denmark 590: Poland 594: Romania 599: Hungary 600 & 601: South Africa 609: Mauritius 611: Morocco 613: Algeria 619: Tunisia 622: Egypt 625: Jordan 626: Iran 64: Finland 690-692: China 70: Norway 729: Israel 73: Sweden 740: Guatemala 741: El Salvador 742: Honduras 743: Nicaragua 744: Costa Rica 746: Dominican Republic 750: Mexico 759: Venezuela 76: Switzerland 770: Colombia 773: Uruguay 775: Peru 777: Bolivia 779: Argentina 780: Chile 784: Paraguay 785: Peru 786: Ecuador 789: Brazil 80 – 83: Italy 84: Spain 850: Cuba 858: Slovakia 859: Czech Republic 860: Yugoslavia 869: Turkey 87: Netherlands 880: South Korea 885: Thailand 888: Singapore 890: India 893: Vietnam 899: Indonesia 90 & 91: Austria 93: Australia 94: New Zealand 955: Malaysia 99: Coupons

(பி. கே)

Read more...

பெண்கள் தங்களுக்கெதிரான வன்முறைகளில் இருந்து ஓரளவிற்காவது விடுபடவேண்டுமானால்....( காணொளி)

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகும். வன்முறை என்றவுடன் வெறும் உடல் தொடர்பான புறத்தாக்கம் மட்டுமல்லாமல், நிரந்திர மனக் காயங்களைத் தரக் கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தகைய வன்முறை களை பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுபவர்கள் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான். குறிப்பாக உளவியல் ரீதியான வன்முறைகள் பெண்கள் மீது பெண்களே அதிகமாகப் பிரயோகம் செய்கிறரர்கள் என்று சொல்லாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் தாண்டி முன்னுக்கு வரக் கூடிய பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண்களை மட்டுமன்றி, முழுக் குடும்பத்தையுமே பாதித்து விடக் கூடியன. ஆக முழு உலகமுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஏதோ ஒரு ரூபத்தில் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. பெண்களுக்கெதிரான வன்முறைகளை பல வடிவங்களில் சந்திக்கின்றனர். பாலியல் வன்முறை, விபச்சாரம், மானபங்கம் செய்தல், தாக்குதல்கள், மனைவியைத் துஷ்பிரயோகம் செய்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றின் விளைவாக பெண்கள் சொந்தத் தைரியத்தையும், துணிவையும் பாதிக்கின்றது. வன்முறையின் விளைவாக அவர்கள் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான உடல் ரீதியான வன்முறைளை பொண்கள் ஓரளவிற்காவது குறைத்து கொள்ள சுய தற்பாதுகாப்பானது இன்றியமை யாததாகும்!

கீழே உள்ள காணொளியைப் பார்க்கவும்!



(பி. கே)

Read more...

காதலிப்பதாக கூறி பலபெண்களின் வாழ்கையில் விளையாடிய நபரை பிடிக்க பொலிஸ் செய்த சூட்சுமம்! வலையில் சிக்கினார்.....!

புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த ராயப்பு ஜேசுரட்ணம் என்ற 32 வயதான இளைஞன் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவரை அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவரால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் வவுணதீவு நாவற்காட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் மட்டக்களப்புப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார் அந்த முறைப்பாட்டில், தன்னை திருமணம் செய்துக்கொள்வதற்காக 40 ஆயிரம் ரூபா பணத்துடனும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான நகையுடனும் குறித்த நபர் அழைத்து சென்றார்.

இருவரும் கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தோம். கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் கொண்டு சென்றிருந்த நகைகளில் ஒரு தங்க மாலையை கொழும்பில் அடகுவைத்தார். அதற்கு பின்னர் நுவரெலியாவிற்கு என்னை அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்ததுடன் அங்கும் ஒரு மாலையினை அடகுவைத்தார். இந்நிலையில், திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதியளவு பணம் இன்மையினால் கையிலிருந்த இரண்டு காப்புகளை தருமாறு கேட்டார். அதனையும் கழற்றிகொடுத்தேன். வாங்கிச் சென்றவர் பல நாட்களாக திரும்பவேயில்லை அவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மட்டக்களப்புக்கு திரும்பினேன் என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவின் ஆலோசனையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் தமிழ் பெண் பொலிஸார் ஒருவர் அடங்கலாக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் அந்த தமிழ் பெண் பொலிஸ் குறித்த இளைஞருடைய தொலைபேசி இலக்கத்திற்கு Missed Call விடுத்துள்ளார். தவறிய அழைப்புக்கு தொடர்பினை ஏற்படுத்திய குறித்த நபர் காதல் மொழிகளை பேசி உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார். பெண்ணும் பஸ்நிலையத்திற்கு உரியநேரத்திற்கு சென்றுள்ளார். கையடக்கதொலைபேசியுடன் காதலியை வரவேற்பதற்காக ஓடோடிசென்ற இளைஞனை அங்கு சிவிலுடையில் ஏற்கனவே தயாராகவிருந்த பொலிஸார் கைதுசெய்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் அனுராதபுரத்தில் சிங்களப் பெண்ணொருவரையும் இவ்வாறு ஏமாற்றியமை தெரிய வந்துள்ளதாக தெரிவித்த மட்டக்களப்புப் பொலிஸார் மோசடி செய்யப்பட்ட நகைகளை நீதிமன்ற அனுமதியைப் பெற்று மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Read more...

பெரும்பாலான மாணவர்களின் உரிமைகள் எல்.ரி.ரி.ஈ.யினரால் பறிக்கப்பட்டுள்ளது! கட்டாயக் கல்வி 11 வரை! - பந்துல

"மாணவர்கள் சிறுவர் போராளிகளாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆரம்ப வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பது குறைவடைந்தது"

தரம் 8 வரை கட்டாயமாக்கப்பட்டிருந்த பாடசாலை கல்வி, கல்வி பொது தராதர சாதாரண தரம் வரை நீடிக்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலவசக் கல்வியின் மூலம் உயரிய பலன்களை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு செல்ல வேண்டிய வயதை எட்டிய, ஆனால் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிடும் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் உதவியுடனும், யுனிசெப், யுனேஸ்கோ நிறுவனங்களின் பங்களிப்புடன் இம்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. நூற்றில் ஒரு வீதமான குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதில்லையென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் 0.8 வீதமானவர் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பந்துல மேலும் தெரிவிக்கையில், புலிப்பயங்கரவாதம் காரணமாக கடந்த 30 வருடங்களாக மாணவர்களின் கல்வி உரிமை அழிக்கப்பட்டதாகவும், வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் எல்.ரி.ரி.ஈ.யின் செயல்பாடுகளால் பாதிப்படையவில்லை எனவும், பெரும்பாலான மாணவர்களின் உரிமைகள் எல்.ரி.ரி.ஈ.யினரால் பறிக்கப்பட்டன எனவும், மாணவர்கள் சிறுவர் போராளிகளாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆரம்ப வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பது குறைவடைந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன, யுனிசெப் நிறுவனத்தின் கல்வி பிரிவிற்கான தலைவர் சாரா பொல்மன் ஆகியோர் பங்குபற்றினர்.

Read more...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பெற பொலிஸாருக்கு அனுமதி!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் தொடர்ந்தும் வாக்கு மூலம் பெறுவதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸார் முன்வைத்த வேண்டுகோளுக்கு அனுமதி வழங்கும் வகையிலேயே கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

கோடீஸ்வர வர்த்தக மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வாஸ் குணவர்தனவிடம் தொடர்ந்தும் வாக்கு மூலம் பெறவேண்டியுள்ளதாகவும், இதற்காக சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் வேண்டுகோளை முன்வைத்திருந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட மேலதிக நீதவான், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக பொலிஸாருக்;கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

Read more...

யாழ் பசையூரில் புதிய இறங்குதுறை!! (படங்கள் இணைப்பு)

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ் பாசையூர் பகுதியில் நிர்மானிக்கப்பட்டுவந்த இறங்குதுறை இன்றையதினம் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது அவுஸ்ரேலிய அரசாங்கமானது ஐ.ஓ.எம் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்திற்கென 58மில்லியன்ரூபா நிதியை செலவுசெய்துள்ளது இதன் ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்ரேலியத்தூதுவர் றொபின் மூடி மற்றும் ஜ.ஓ.எம் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யூசேப்பி லொப்ரோற்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com