Wednesday, June 26, 2013

13 ஆவது சட்டம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண சபை மேற்கொண்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மாகாண சபை பட்டியலில் சில அம்சங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது, சகல மாகாண சபைகளின் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு, பெரும்பான்மை மாகாண சபைகளின் இணக்கம் போதுமானதாகுமென குறிப்பிட்டு, இரண்டு அவசர யோசனைகள், சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியது.

சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற்று சபை பிரதித் தலைவர் துஷ்மந்த மித்ரபாலவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் அவசரமாக சபைக்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமான பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

இதன் போது, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையில் விவாதம் இடம்பெற்றது. மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் 13ஆவது திருத்திச்சட்ட பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது,

1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில், மாகாண சபைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகளை இணைப்பதே முதல் நோக்கமாகும் என்று அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 30 வருட காலமாக நாட்டில் இருந்த யுத்தத்தை முறியடித்து தற்போது நாடு அபிவிருத்தியடைந்துவரும் வேளையில், மாகாண சபைகள் மூலம் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது மாகாண சபைகள் அனைத்தும் இணைவதன் மூலம் சரியான தீர்மானங்கள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி, உறுப்பினர் நிஹால் பாருக் உரையாற்றுகையில், மாகாண சபைகளுக்கு மேலும் அதிகாரங்களை கூட்ட வேண்டும் என்றார். இதனையடுத்து மாகாண சபை உறுப்பினர்கள் இப்ளார், சிறிபாலகிரியெல்ல உட்பட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

ஐ.தே.க. எதிர்கட்சி தலைவர் துஷித்தா விஜேமான உரையாற்றுகையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவருவதன் மூலம் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த நாட்டில் மாகாண சபைகள் பல்வேறு அபிவிருத்திட்டங்களை செய்து வருகின்றது. எனவே அதை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

மேற்படி விவாதத்தின் இறுதியில் சபைத் தலைவரால் வாக்கெடுப்பு இடம்பெற்றது இதில் ஐ.தே. கட்சியை சேர்ந்த 9 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்த போதும், மேலதி 17 வாக்குகளால் ஆளும் கட்சி உறுப்பினர்களால் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாகாண சபைகள் அல்லது பல மாகாணசபைகள் ஒன்றிணைக்கப்பட்டால், மாகாண சபைகளை அமைக்கும் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படுவதில்லை. அத்துடன் மாகாண சபை விடயங்களில் சகல மாகாண சபைகளின் விருப்பமின்றி, பெரும்பான்மை விருப்பம் போதுமானதாகுமென, இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த, சப்ரகமுவ மாகாண சபையின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன், 17 மேலதிக வாக்குகளினால் இப்பிரேரணை நிறைவேறியது..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து, லங்கா சமசமாஜ கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உறுப்பினர்களும், இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Read more...

அரை நிர்வாணத்துடன் டுனீசிய நாட்டு பிரதமரின் வாகனத்தொடரணி மீது பாய்ந்து பெண்கள் அட்டகாசம்!

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸில் வைத்து டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட்டின் வாகனத் தொடரணி மீது பாய்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரை நிர்வாணப் பெண்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது சக பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வலியுறுத்தி உக்ரேன் நாட்டு பெண்கள் இயக்கமான "பெமென்" இயக்க உறுப்பினர்களே இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத் துள்ளனர்.



பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட் அங்கிருந்து திரும்பும் போதே அவரது வாகனத் தொடரணி மீது இரண்டு பெண்கள் பாய்ந்துள்ளனர். இவர்கள் மேலாடையின்றி இருந்ததுடன், அண்மையில் கைதுசெய்யப்பட்ட பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வாசகங்களை உடலில் எழுதியிருந்தனர்.

வாகனத்தொடரணி மீது பாய்ந்த இவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து இழுத்து உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்றியுள்ளனர். உலகின் கவனத்தினை இலகுவாக ஈர்க்கும் பொருட்டு 'பெமென்' இயக்கத்தினர் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மருந்துகள் தொடர்பில் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்கள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை!

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவு வதாக ஒரு சிலர் முன்னெடுத்து வரும் பிரச்சாரங்கள் முற்றுமுழுதாக உண்மைக்கு புறம்பானவை எனவும், வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப் பாடும் இல்லை என சுகாதார அமைச்சு வலியுறுத் தியுள்ளது.

அத்துடன், சகல வைத்தியசாலைகளுக்கும் முறையாக மருந்துகளை வழங்குவதற்கென விசேட செயற்திட்டம் ஒன்று அமுல்படுத் தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிகால் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்து பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான மருந்து பொருட்கள் அடங்கிய 13 ஆயிரம் வகையான ஒளடதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தினால் வருடந்தோறும் கேள்வி மனு கோரலின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு கொழும்பிலுள்ள பிரதான வைத்தியாசலைகளின் களஞ்சியங்களுக்கு இவை அனுப்பப்படுகின்றன எனவும், இங்கிருந்து கொழும்பிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நேரடியாகவும் மாகாண வைத்தியசாலைகளுக்கு அந்தந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலை களஞ்சியங்களின் மூலம் சிறுசிறு வைத்தியசாலைகளுக்கு இவை அனுப்பப்படுகின்றதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முறைமையின் கீழ் மருந்து பொருட்கள் அனுப்பப்படுவதனால் ஒரு சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதில்லை, ஏனென்றால் 13 ஆயிரம் வகையான மருந்து பொருட்களை பெற்று அவற்றை விநியோகிக்கும் ஒரு திட்டமாகும். மருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் கம்பனிகள் அவற்றை அனுப்புவதில் ஏற்படுத்துகின்ற தாமதம், விநியோகத்தில் ஏற்படுகின்ற சிரமங்கள் மற்றும் தாமதம், பேன்றவற்றால் ஒரு சில சந்தரப்பத்தில் வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள் காணப்படுவதில்லை. ஆனால் பிராந்திய களஞ்சியசாலைகளில் இவை காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரு சில குறைப்பாடுகள் ஏற்படலாம். இந்த குறைப்பாடுகள் கண்காணிக்கப்படுவதுடன் கொழும்பு பிரதான வைத்திய விநியோக பிரிவின் பணிப்பாளரும் குழுவினரும் இணைந்து எங்கு மருந்து பற்றாக்குறை நிலவுகின்றதோ உடனடியாக அவற்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர் எனவும் இது நாளாந்தம் நடைபெறுகின்றது எனவும் ஆகவே நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சகாதார பிரிவில் காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

போலி விசா தயாரிப்பு நிலையம் புத்தளத்தில் முற்றுகை! இருவர் கைது!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதாக தெரிவித்து, போலி விசாக்களை தயாரித்த இருவரை கைது செய்துள்ளதாகவும், போலி விசா தயாரிப்பதற்காக பயன்படுத்திய கணனியொன்றும், ஏனைய ஆவணங்களையும், கைப்பற்றியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி விசா தயாரிக்கும் அலுவலகமொன்று புத்தளத்தில் இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் புத்தளம் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இவ்வாறு தயாரித்த போலி விசாக்கள் மூலம் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்வதற்காக விசாவை ஒன்றிற்காக 2 இலட்ச ரூபா வரையில் அறவிட்டுள்ளார். இவ்வாறு பலரிடம் பல லட்சம் ரூபாவை மோசடி செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

யாழ் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு களனியிலுள்ள.......!

யாழ் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர், வீட்டுவேலைக்காக களனியிலுள்ள பெண்ணொருவரிடம் பிலியந்தலை பிர தேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி யாழ் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து 21 மற்றும் 22 வயது பெண்களுடன் மே மாதம் 24 ஆம் திகதி தப்பியோடியுள்ளார். அவர்கள் மூவரும் கொழும்பை நோக்கி பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தபோது, அதிலொரு யுவதி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த ஆணொருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். அவரின் கோரிக்கைக்கு அமைய மூவரும் பிலியந்தலைக்கு சென்று ஹோட்டலில் தங்கியதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சிறுமியை மட்டும் அங்கிருந்த இளைஞரிடம் ஒப்படைத்த இரண்டு யுவதிகளும், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியை சில நாட்கள் ஹோட்டலில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன், அதற்கு பின்னர் களனியிலுள்ள பெண்ணொருவரிடம் குறித்த சிறுமியை வீட்டுவேலைக்காக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

15 வயதான குறித்த சிறுமி அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் குறித்த சிறுமியிடம் தகவல்களை பெற்று, கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் தந்தைக்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டு உரிமையாளர் குறித்த சிறுமியை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமியுடன் தப்பியோடிய இரண்டு யுவதிகள் தொடர்பில் இதுவரையிலும் தகவல் எதுவும் இல்லை என தெரிவித்தார் பொலிஸார், சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேநபர் பிலியந்தலையை சேர்ந்த மேசன் எனவும் சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார், தெரிவித்தனர். .

Read more...

பிரபாகரனின் துப்பாக்கியில் நம்பிக்கை வைத்து, அன்று பொதுமக்களை வாக்களிக்க வேண்டாமென உத்தரவிட்டவர்களை நாம் இன்று .....!

அரசாங்கம் தேர்தலொன்றுக்கு தயாராகும்போது, எதிர்க் கட்சி அதனை நிராகரிப்பது, வியப்புக்குரியதாகும் எனவும், துப்பாக்கியின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்திருந்த வட பகுதியின் சிலரை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு, அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குண்டசாலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலை பற்றி எந்தவித நம்பிக்கையும் வைத்திராமல், பொதுமக்களை வாக்களிக்க வேண்டாமென உத்தரவு பிறப்பித்து பிரபாகரனின் துப்பாக்கியில் மாத்திரம் நம்பிக்கை வைத்து படுகொலைகளை புரிந்த பிரபாகரனின் நெருங்கிய சகாவான தயா மாஸ்டர், இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளப்போகின்றார் என அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்காகவே முயற்சிக்கின்றோம் எனவும், இனவாதத்தை ஒழித்து, குல பேதத்தை அழித்து, சகல பேதங்களையும் ஒதுக்கி, அனைத்து இலங்கையர்களும் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றோம் எனவும், இதற்கு பலமான அடித்தளம் இட நாம் முயற்சிக்கின்றோம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Read more...

சுவிஸ் உதயம் அமைப்பின் குறுந்திரைப்பட பரீட்ச்சார்த்த நிகழ்வும் புத்தகக் கண்காட்சியும்

உதயம் அமைப்பு சுவிஸ்சூரிச் மாநிலத்தில் 22 ஆம் திகதி 11.00 மணியளவில் ஒரு நிமிடஅஞ்சலி நிகழ்வை தொடர்ந்து குறுந்திரைப்பட பரீட்ச்சார்த்த நிகழ்வையம் புத்தகக் கண்காட்சியும் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதயம் அமைப்பின் அங்கத்தினர்களும் குறும் படத் தயாரிப்பாளர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட குறும் திரைப்படங்கள் மக்கள் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது.

குறும் திரைப்படங்களை கண்டுகளிப்பதற்காக வருகை தந்திருந்த மக்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பல்வேறு கோணங்களில் தெரிவித்திருந்தனர்.

கொட்டியாரம், கிழக்கு மக்களின் பண்டைய கால நாட்டுபுற பாடல்கள் அடங்கிய, சுவாமி விபுலானந்தர் வாழ்க்கை வரலாறு, கப்பலோட்டிய தமிழன் எனப் பல்வேறு படைப்புகள் அங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

(உதயம் நிர்வாகத்தினர்)

Read more...

வாஸ் குணவர்தனவின், பாதுகாப்பிற்கான வழங்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும், அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க!

D.I.G யின் மனைவி சாட்சியாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி அழுத்தங்களை பிரயோ கித்தார்! - இரகசிய பொலிஸார்!

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமின் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை, தொடர்ந்தும் எதிர்வரும் 9 ம் திகதி வரை வாஸ்விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு அவரது மனைவிக்கு எதிர்வரும் 9 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மஜிஸ்திரேட் நீதிமன்றம், அழைப்பாணை பிறப்பித்ததுள்ளது

குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமளித்த இரகசிய பொலிஸார், சந்தேக நபரான பிரதி பொலிஸ்மா அதிபரின் மனைவி, வழக்கின் சாட்சியாளர்களது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் இவ்வாறு சுமார் 25 தொலைபேசி அழைப்புகள், ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன், சந்தேக நபரான வாஸ் குணவர்தனவின், பாதுகாப்பிற்கான வழங்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகளையும், அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து, அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறும், உத்தரவிட்டார். படுகொலைக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து பெறப்பட்ட இரத்தக் கறைகள் தொடர்பாக, டி.என்.ஏ. விசாரணை நடாத்த, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read more...

அரச மொழிக்கொள்கை தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது!

அரச மொழிக்கொள்கையினை அமுல்படுத்துவது தொடர் பாக 2007/1 கொண்ட பொது நிர்வாக சுற்றிக்கை மற்றும் அதன் சீர்திருத்தங்களை சமகாலபடுத்துவதற்க்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் அரச உத்தியோகத்தர்கள் மொழி தேர்ச்சியினை பெற்றுகொள்வது தொடர்பாக அமைச்சரவையின் செயலா ளரின் தலைமையிலான குழு சமர்ப்பித்த யோசனையும் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டது. இதற்கமைய அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை உள்ளடக்கி அரச மொழிக் கொள்கையினை அமுல்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி அபேகோன் தெரிவித்துள்ளார்.

Read more...

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் இன்று! இதுவரை இலங்கையில் 25000ற்கு மேற்பட்டோருக்கு புனர்வாழ்வளிப்பு!

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாடசாலை மாணவர்களையும், பொதுமக்களையும், அறிவுறுத்து வதற்கான பாதயாத்திரை ஒன்றை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவி திருமதி லேஷா டீ சில்வா சந்திரசேன தெரிவித்தார்.

இப்பாத யாத்திரை இன்று காலை 9 மணிக்கு மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமாகி, ஹைட்பார்க் வரை இடம்பெறும் எனவும், இதனைத்தொடர்ந்து போதை பொருள் தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், திருமதி லேஷா டீ சில்வா சந்திரசேன தெரிவித்தார்.

மேலும் 25 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையினால் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய நிறுவனம் என்ற வகையில் போதை பொருள் கட்டுப்பாட்டை மாத்திரமன்றி, நிவாரண நடவடிக்கைகளையும், புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர், சமூக மயப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது எனவும், போதை பொருளுக்கு அடிமைப்பட்டவர்களை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்வது இன்றியமையாததாகும் எனவும், இந்த சர்வதேச போதை பொருள் எதிரப்பு தினத்தையொட்டி, பாடசாலை மாணவர்களை மாத்திரமன்றி பொதுமக்களையும் அறிவுறுத்த திட்டமிட்டுள்ளோம் என, அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவி திருமதி லேஷா டீ சில்வா சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, June 25, 2013

நாட்டை விட்டு தப்பியோட முயன்ற சாகரிகா, 50 இலட்சம் ரூபா பிணை முறியுடன் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!!

பிரட்ரிக் நஓமான் மன்றம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு செய்த திடுக்கிடும் சூழ்ச்சிகள் அம்பலம்!!

50 இலட்சம் ரூபா பிணை முறியின் கீழ், மீண்டும் நாடு திரும்ப வேண்டுமென்ற உறுதி மொழியுடன் சாகரிகா தெல்கொடவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு தப்பியோட முற்பட்டபோது, சாகரிகா தெல்கொட, இரகசிய பொலிஸாரின் பிடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், சாகரிகா இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜரானார்.

பிரட்ரிக் நஓமான் மன்றத்தின் இலங்கை பிரதிநிதியென கருதப்படும் சாகரிகா தெல்கொட மீது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நாட்டுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், பிரட்ரிக் நஓமான் மன்றம், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து, எல்.ரி.ரி.ஈ புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கேற்ப, புலி ஆதரவு ஆட்சியொன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை நடாத்தும் போர்வையில், அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளை, மேற்கொள்ள திட்டம் தீட்ட, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயற்பட்டறைகளை நடாத்த, சாகரிகா தெல்கொட, செயற்படுவதாக, தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இதனடிப்படையில் சாகரிகா தெல்கொட, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்பான பல்வேறு தகவல்களை சாகரிகா தெல்கொடவின், பிரட்ரிக் நஓமான் மன்றத்தினூடாக அம்பலமாகியுள்ளதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

விசாரணைகளுக்கென ஏற்கனவே இரகசிய பொலிஸாரின் பிடியிலிருந்த சாகரிகாவிற்கு நாட்டை விட்டு வெளியேற முடியாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் ஜேர்மன் செல்வதற்காக கட்டுநாயக விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்துபோது, இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சாகரிகா தெல்கொட, இரகசிய பொலிஸாரின் பிடியிலிருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். சாகரிகா தெல்கொடவின் சட்டத்தரணிகள், இன்று நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில், தமது கட்சிக்காரர் கடந்த 23ம் திகதி வெளிநாடு செல்ல முற்பட்டபோது, இரகசிய பொலிஸாரினால் விமான நிலையத்தில் வைத்து அவர் தடுக்கப்பட்டார் என தெரிவித்தனர்.

எனினும் இவர் வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பாவிட்டால், அவருக்கு எதிராக உள்ள விசாரணைகளுக்கு தடை ஏற்படலாமென்ற காரணத்தினால், நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்ததாக, இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட பிரதம நீதவான் ஜிஹான் பிலபிட்டியவிற்கு, சாகரிகா தெல்கொடவிற்கு 50 லட்சம் ரூபா பிணை முறியை வைப்பிலிட்டு, மீண்டும் நாடு திரும்பும் உததரவாதத்தின் கீழ் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கினார்.

சாகரிகா தெல்கொட, வெளிநாடு சென்று நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபடும் முயற்சிகளில் இருந்ததாக, சந்தேகம் எழுந்துள்ளதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். பிரட்ரிக் நஓமான் மன்றம் உட்பட ஜேர்மனியிலிருந்து செயற்படும் பிரட்ரிக் ஈபட் மன்றமும், நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகளில் முன்னணி வகித்து செயற்பட்டு வருவதாக, தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவிலிருந்து கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நவநீதம்பிள்ளையுடன் பிரட்ரிக் ஈபட் மன்றம், நேரடி தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாகரிகா தெல்கொடவிற்கும், நவநீதம் பிள்ளைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாகவும், அம்பலமாகியுள்ளன. இந்நிலையில் பிரட்ரிக் ஈபட் மன்றத்தின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட்ட நோரா லங்கன்வாஹன் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை தமது அலுவலகததை மூடிவிட்டு, நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.

அவருக்கு பிரட்ரிக் ஈபட் மன்றத்தின் கீழ் செயற்படும் இலங்கை நிறுவனமொன்றின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் ஆதரவு வழங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. நோரா லங்கன்வாஹன் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு தப்பி செல்வதற்கும், சாகரிகா தெல்கொடவின் தடையை கருத்திற்கொள்ளாமல், ஜேர்மனிக்கு தப்பி செல்ல முயற்சிப்பதனூடாக, இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் அறிகுறிகள் தென்படுவதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக் கின்றனர்.

இலங்கையின் தற்போதைய தலைமைத்துவம், யுத்த வெற்றிகளுக்கு அடிப்படையான பாதுகாப்பு பிரிவின் முக்கியஸ்தர்களை, சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு, நவநீதம் பிள்ளையின் சூழ்ச்சிகளுக்கு, சாகரிகா தெல்கொட, நேரடி பங்களிப்பை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன.

Read more...

கண்ணால் கண்ட சாட்சிகள் எதுவுமில்லை. ஆசிரியை முழங்காலில் நின்ற செய்தி உருமாற்றப்படுகிறது!

தான் முழந்தாழிட்டு நின்ற சம்பம் தொடர்பில் ஜனாபதி தலையிட்டு நியாயமான முறையில் அலசி தீர்வினைப் பெற்றுத் தருவார் என்று நம்பியிருந்தாலும், அதுதொடர்பில் அச்சுறுத்தல்கள் வராதிருக்கும் என்று நம்பாமல் இருக்க முடியாது என்று வடமேல் மாகாண சபை உறுப்பினரால் முழங்காலில் நிற்குமாறு ஏவப்பட்ட ஆசிரியை பிரியானி சுசீலா ஹேரத் குருணாகலையில்இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு குறிப்பிட்டார்.

குருணாகலை விக்கிரமசிங்க ரதகுரு கேட்போர் கூடத்திலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. சுசீலா ஹேரத் தான் முகங்கொடுத்த அந்த அசாதாரண நிகழ்வின் பின் முதன் முதலாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கருத்துரைத்தார்.

கல்வி ஊழியர்கள் சங்கம் இந்த ஊடகவியாலர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அச்சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிரியின் தலைமையின் கீழ் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தப்பட்டது.

தான் முகம் கொடுத்த நிகழ்ச்சி பற்றி தான் இன்னும் பெரும் கவலையில் இருப்பதாகவும் இந்தக் காரணத்திற்காக நவகத்தேகம பாடசாலைக்குப் பதிலாக தனது கணவன் சேவை புரியும் மஹஉஸ்ஸாவப் பாடசாலைக்கு இட மாற்றீடு எடுத்துள்ள போதும், ஒருநிலைப்படாத மனோநிலையில் இருப்பதால் புதிய பாடசாலைக்கு கரும மாற்றப் போகவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மஹஉஸ்ஸாகம பாடசாலைக்கு நவகத்தேகம பிரதேசத்தைக் கடந்தே செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு தான் போகும்போது மேலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவருமோ என்ற பயம் தன்னை ஆட்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் உரையாடி, தான் சிறந்ததொரு பரிகாரம் பெற்றுத் தருவதாகக் உறுதியளித்தார். அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையிலுள்ள முழு ஆசிரியர் குழு சார்பிலும் தனக்கு சிறந்ததொரு தீர்வைப் பெற்றுத் தருமாறு மீண்டும் நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் ஹேரத் ஆசிரியை மேலும் குறிப்பிட்டார்.

கல்வி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிரி உரையாற்றும் போது,

‘சுசீலா ஹேரத் ஆசிரியை அரசியல் ரீதியில் முழந்தாழிடச் செய்த செய்த கருமத்திற்கும் அப்பாற் சென்ற விடயமொன்று தற்போது வடமேல் மாகாணத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசியலுடன் தொடர்புடைய வலயக் கல்விப் பணிப்பாளர் இது தொடர்பில் நேரில் கண்டதாக குறிப்பிடக்கூடிய ஆறு ஆசிரியர்களும், பிரதி அதிபரும் ஆசிரியைக்குச் சார்பாக சாட்சியளிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதுவும் காணாதவர்கள் போல அவர்கள் தற்போது திசைமாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பில் சட்டம் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

பொலிஸ் உத்தியோகத்தர் வாங்கிய காணியில் வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் முஸ்லீம் வட்டாரம் ஆஸாத் வீதியிலுள்ள காணியை கொள்வனவு செய்த அதன் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் அதில் கைவிடப்பட்ட பாழடைந்த கிணற்றினை சுத்தம் செய்துள்ளார். அவ்வேளை திடீரென பல்வேறு ஷெல் ரகங்கள் உரப்பையில் இடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

உடனடியாக அண்மையிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்ததை அடுத்து, பாதுகாப்பாக அவைகள் மீட்கப்பட்டு இராணுவ பொறியியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டன. வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பிரதேசம் ஏற்கனவே இராணுவத்தினரின் முகாமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் சுவீகரிக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தை மீளளிக்க வாக்குறுதி. இனியபாரதி நடவடிக்கை.


திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய திலாவை வடகண்டம் போன்ற பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த வயற்காணிகளில் ஏறக்குறைய 1000 ஏக்கர் அளவில் வனவியல் எல்லைக்குட்பட்ட காணி எனும் பேரில் வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் சுவீகரிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.புஸ்பகுமார் அவர்களிடம் முறையிட்டனர். மக்களின் முறைப்பாட்டையடுத்து வனப்பாதுகாப்பு அதிகாரிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மாகாண ஆளுனர் ஆகியோருடன் இனியபாரதி; உரையாடியதையடுத்து மக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்று ( 25.06.2013 ) மாலை 3.00 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு வனப்பாதுகப்பு அதிகாரிகளை அழைத்த இனியபாரதி திருக்கோவில் பிரதேச செயலாளர் சகிதம் பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று வனப்பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அங்கு பிரதேச மக்களின் காணிக்கான ஆவனங்கள் காண்பிக்கப்பட்டது.

ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் 1000 ஏக்கர் நிலத்தையும் மக்களுக்கு மீளளிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக அம்பாறை மாவட்ட வனப்பாதுகாப்பு பொறுப்பதிகாரி வாக்குறுதியளித்துள்ளார்.

Read more...

இதய நோய் உங்களுக்கு வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்

இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40 களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்!

அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் மோசமான நோயாக இதய நோய் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும்.

ஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன?

அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது.

எனவே இத்தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

புகைப்பிடிப்பது இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படி என்றால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, ரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200 குறைவாக இருக்க வேண்டும்.

உடல் எடை இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடை யானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய் வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நீரிழிவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும்.

உணவுகள் குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதயநோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் “சி” நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.

ஆல்கஹால் ஆல்கஹாலை சரியான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.

ட்ரான்ஸ் கொழுப்புகள் பேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் பேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும்.

வைட்டமின்களில் கவனம் ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் B போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும்.

ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் B உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.

மனஅழுத்தம் அதிகமான வேலைப்பளுவின் காரணமாக நிறைய பேர் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் ரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

மருத்துவ ஆலோசனை குடும்ப நல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலையில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ளவேண்டும்.

கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல் ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறாமல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும்.

இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற் பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதயத்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.

Read more...

வாலுடன் பிறந்த குழந்தை (படங்கள் இணைப்பு)

தினமும் கற்பனை செய்து பார்க்கமுடியாத எத்தனையோ விந்தையான விடயங்கள் எம்மைச்சூழ இடம்பெறுவதால் மனிதனுக்கு வால் முளைப்பதொன்றும் அவ்வளவு பெரிய அதிசயமல்ல ஏன் எனில் ஏற்கனவே இருந்த வால்தானே!

சீனாவில் Xiao Wei என்ற பிறந்து சிலவாரங்களான குழந்தை ஒன்றுக்கு வைத்தியர்கள் வெற்றிகரமாக வால் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பிறக்கும் போதே பின்பகுதியில் நீண்ட தசையொன்று காணப்பட்டது. மேலதிக செல்கலங்களின் வளர்ச்சியே இதற்கு காரணமாக வைத்தியர்களால் கூறப்படுகிறது

Read more...

கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவர் மரம் முறிந்து விழுந்ததில் படுகாயம்!

யாழ். மாதகல், நுணாச முருகன் ஆலய 30 அடி உயரமுடைய கோபுர திருத்தப் பணியினை மேற்கொண்டிருந்தவேளை, சாரம் போடப்பட்டிருந்த மரம் முறிந்ததில் ஒரே வரிசையில் நின்ற மூன்று பேர் இன்று மதியம் கோபுர உச்சியில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளனர்.

இந்தச்சம்பவம் இன்று(25.06.2013) மதியம் நடைபெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பொன்னையா சற்குணம் (வயது 54) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும், பசுபதி சத்தியகுமார் (43) என்பவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் மேலும் ஒருவர் சிறு காயத்துடன் யாழ் போதனாலைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

காதலின் புனித தன்மையை கேள்விக்குறியாக்கிய இளைஞன்! 15 வயதான மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்!!

காதலிப்பதாக கூறி 15 வயதான மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேருகெலே, வதுரெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாடசாலையினுள் வைத்து, குறித்த மாணவியுடன் காதல் தொடர்பினை வைத்துக்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படும் இளைஞனால், மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவ தினமான கடந்த 22ஆம் திகதி, பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாக கூறி, வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ள மாணவி குறித்த இளைஞனை அப்பிரதேச பாடசாலைக்கு வருமாறு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார். அதற்கிணங்க குறித்த பாடசாலைக்கு வந்த அவ்இளைஞன் பின்னர் குறித்த மாணவியின் விருப்பத்திற்கு மாறாக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

கழுதையைப்போல் மாறிக்கிடக்கும் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக காத்திருந்து களைத்துப் போன அரசாங்கம் கடைசியில் வேறுவழியின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துவிட்டது. தீர்வு குறித்து பேசுவதற்கான இந்தக்கடைசி வாய்ப்பையும் தட்டிக்கழிக்கிறது கூட்டமைப்புத் தலைமை. இந்த நாட்டின் அனைத்துத் தரப்புகளையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களுடன் நமது பிரச்சினைகளைச் சொல்லி ஆறு மாதத்துக்குள் தீர்வொன்றுக்கு வரக்கூடிய இந்தச்சந்தர்ப்பத்தையும் எதிர்த்து ஏதோ ஞாயங்கள் பேசிவிட்டு எப்படி எமது மக்களுக்கான தீர்வைக் காணப்போகிறது இந்தத் தலைமை?

அங்கெல்லாம் போய்ப் பேசித் தீர்வைக் கண்டுவிட முடியாது என்பதை பேசிப்பார்க்காமலே மறுபக்கம் திரும்பிநின்று தெரிவித் துக்கொண்டிருக்கும் மர்மமென்ன? இந்தியாவும் உலகநாடுகளும் வற்புறுத்துவதுபோல் இந்த தெரிவுக்குழுவில் போய்ப்பங்கேற்று, அங்கு தங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வைக்கமுடியவில்லை என்பதைக் காட்டினால், அது தீர்வைப் பெறும் முயற்சிகளின் ஒரு படியாகத்தானே அமையும்? மாறாக, பங்குபற்றுவதால் என்ன குறைவு நமக்கு வந்துவிடப் போகிறது?

சரி, இலங்கை அரசுடனோ ஏனைய கட்சிகளுடனோ பேசாமல் எப்படித் தீர்வை எடுக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்? தமிழர்களின் தேவை என்ன என்பதற்கு தன்னாட்சி அலகு என்று ஒற்றை வார்த்தையில் பதிலைச் சொல்லிவிட்டு அலட்சியமாய்த் திரிவது போல, தீர்வு எப்படி வரும் என்பதற்கும் சர்வதேச அழுத்தம் என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு உலகச் சுற்றுலா போய்வருகிறார்கள்.

சொந்த புத்தியில் செயற்பட முடியாததால்தான் இவர்களால் சொந்தமாய் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாமலிருக்கிறது. புலம்பெயர்ந்தோர் என்ன சொல்வார்களோ, தமிழ்நாட்டுக்காரர் என்ன சொல்வார்களோ, அமெரிக்கா என்ன சொல்லும், இந்தியா எதையாவது சொல்லும் என்று காத்திருப்பதிலேயே இவர்களது அரசியல் முடிகிறது.

இந்தியா உட்பட வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசை நோக்கி அந்தந்த நேரத்துக்கு தமக்கு வசதிப்பட்டபடி விடுக்கும் கோரிக்கைகளை ஏந்திக்கொண்டு, ஏதோ நடக்கும் என்பதுபோல தமிழ்மக்களுக்கு அரசியல் படங்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக ஒரு கதையைச் சொல்லலாம். ஒரு தெருவில், தந்தை கழுதை மேல் அமர்ந்துவர, மகன் அருகே நடந்துவரப் பயணம் போய்க்கொண்டிருந்தார்கள். எதிரே வந்த ஒருவன், இப்படிச் சிறுபையனை நடக்கவிட்டு நீ கழுதை மேல் போகிறாயே, சிறுவன் பாவமல்லவா? என்று கேட்டதும், தந்தை கீழே இறங்கிக்கொண்டு மகனைக் கழுதைமேல் ஏற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அடுத்து எதிர்ப்பட்ட ஒருவன், என்ன அநியாயம் இது! வயசானவர் நடந்துவரச் சின்னப்பையன் குஷாலாகக் கழுதைமேல் போகிறானே என்று சிரித்தான். அப்பா பார்த்தார். பையனைக் கீழே இறக்காமல் தானும் அவனோடு மேலே ஏறி அமர்ந்துகொண்டார். எதிரில் இன்னொருவன் வந்தான். உங்கள் ரெண்டு பேருக்கும் இரக்கமே இல்லையா? இரண்டு போர் பாரத்தைக் கழுதை தாங்குமா? என்று கேட்டுப் போனான்.

தந்தைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மகனையும் இறக்கி தானும் இறங்கிக்கொண்டு, கழுதை அருகே இருவரும் நடந்துபோனார்கள். பிரச்சினை இத்தோடு முடிந்துவிடவில்லை. மீண்டும் எதிரில் வந்த ஒருவன், உங்களுக்கென்ன பைத்தியமா? கழுதை சும்மாதானே வருகிறது, நீங்கள் இரு வரும் மடையர்களைப் போல நடந்துவருகிறீர்களே என்றான். வேறுவழியின்றிக் கழுதையைத் தூக்கிக்கொண்டு ஓடினார்களாம் தந்தையும் மகனும். நாமும் தீர்மானங்களுக்கு மற்றவர்களில் தங்கியிருந்தால் இப்படித்தான் ஆகும்.

Read more...

நான்கு அணுகுண்டுகளை போல் பூமியைத்தாக்குகிறது வெப்பம்- அவுஸ்திரேலிய விஞ்ஞானி

எப்போதும் இல்லாத அளவு தற்போது பூமியின் மீது வெப்பத்தின் அளவுக்கு அதிகரித்து சொல்வதற்கு கார்பனீர் ஆக்சைடு பூமியின் மேற்பரப்பில் அதிகம் படிந்து இருப்பதே காரணமாகும் என அவுஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான்குக் பூமி வெப்பமயமாதல் குறித்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதைப்போன்று 4 அணுகுண்டு வீசினால் ஏற்படும் அளவுக்கு வெப்பம் இந்த வெப்பம் பூமியின் மீது ஒவ்வொரு வினாடியும் தாக்குகிறது. இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்ததால் நிலைமை என்னவாகும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்னார்.

பூமியை தாக்கும் வெப்பத்தில் 90 சதவீதமானவை கடலுக்குள் செல்வதனால் பனிமலைகள் மற்றும் விலங்கினங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

Read more...

18 வயது இளைஞர் உருவாக்கிய ஒருவர் பயணிக்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல்!

அமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் வசிக்கும் 18 வயதே நிரம்பிய ஜஸ்டின் பிக்மேன் என்ற இளைஞர் தனது ஆற்றலை பயன்படுத்தி ஒருவர் பயணம் செய்யக்கூடிய 9 அடி நீளமும் 30 ஆழத்தில் பயணிக்கக்கூடியதுமான சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

இந்த நீர்மூழ்கிக்கப்பலில் வயர்லெஸ், ரேடியோ தொடர்பு சாதனங்கள், சுவாசிக்க வசதி போன்றவை உள்ளடங்கலாக தயாரித்த இந்த கப்பலை அங்குள்ள ஏரியில் விரைவில் வெள்ளோட்டம் விட திட்டமிட்டுள்ளதுடன் இந்த நீர்மூழ்கிக்கப்பலை 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபா செலவில் 6 மாத இடைவிடாத முயற்சியில் இதை உருவாக்கியதாக ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

Read more...

தடயங்களை அழித்துவிட்டு சந்தேகநபர்கள் தலைமறைவு!!

வழக்கு ஒன்றில் சந்தேக நபர்களான புங்குடுதீவு ஜே-26 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் இருவர் உரிய தவணையில் நீதிமன்றில் ஆஜர் ஆகாத காரணத்தால் இவ்விருவருக்கும் நீதிமன்றத்தால் கிராமசேவகர் ஊடாக அழைப்பாணை விடுவிக்கப் பட்டுள்ளது. எனவே குறித்த பிரிவின் கிராம சேவகர் இவ்விருவரையும் வழக்கிற்குசெல்ல கூறுவதற்காக தம்மை வந்து உடனடியாக சந்திக்குமாறு கூறியிருந்தவேளையில், நேற்று மதியமளவில் மதுபோதையில் கிராமசேவகர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ள இவ்விருவரும் தமது ஆவணங்களை கிழித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குறித்த கிராம சேவகர் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார், இந்த முறைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த ஊர்காவற்துறை பொலிசார், குறித்த பிரதேசத்தில் இவ்விருவரும் தற்போது இல்லை என்றும் தாம் தொடர்ந்தும் இவ்விருவரையும் வெளிபிரதேசங்களிலும் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்- ஜீ.எல்.பீரிஸ்

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியா விலிருந்து நாடு கடத்தப்படும் அனைத்து இலங்கையர் களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலியா நோக்கி படையெடுப்பதாகவும் இவர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான ஆபத்து கிடையாது என்ற காரணத்தினாலேயே அவுஸ்திரேலியா அவர்களை நாடு கடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவைத் தொடர்ந்தும் பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் தஞ்சமடைந்து வருவதாகத் தெரிவித்த அவர் இலங்கையில் பூரண சமாதானம் நிலவி வருவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் போது உண்மை நிலைமைகளை உலகிற்கு உணர்த்த முடியும் எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

பரிசு யாருடையது? வெல்லப்பட்ட அதிர்ஷடலாப சீட்டுக்கு தனித்தனியாக உரிமைகோரிய கணவனும் மனைவியும்!

அதிர்ஷடலாப சீட்டு ஒன்றின் மூலம் பத்து இலட்சம் ரூபா வெல்லப்பட்டதையடுத்து அவ்அதிர்ஷடலாப சீட்டுக்கு கணவனும், மனைவியும் தனித்தனியாக உரிமைகோரி யுள்ளதால், குறித்த அதிர்ஷடலாப சீட்டு யாருடையது என கண்டறிந்து உறுதிப்படுத்தும் வரையில், பரிசு வழங் குவதை ஒத்திபோடுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

குறித்த அதிர்ஷடலாப சீட்டு மூலம் பரிசை வென்றதையடுத்து, வெற்றிக்குரிய அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு கணவனும், மனைவியும் உரிமை கோரி கம்பொல பொலிஸில் முறையிட்டுள்ளனர். வெற்றியீட்டிய அதிர்ஷ்டலாப சீட்டானது, தனது மகனுக்கு ஏடுதொடங்கிய நல்லநேரத்தின் பிரகாரம் குறித்த அதிர்ஷ்டலாப சீட்டை கொள்வனவு செய்ததாகவும், அதற்கிணங்கவே தனக்கு இப்பரிசு கிடைத்ததாக மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இல்லை, இல்லை தன்னால் கொள்வனவு செய்யப்பட்ட அதிஷ்டலாப சீட்டே மனைவியினால் லொத்தர் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த அதிர்ஷடலாப சீட்டு யாருடையது என கண்டறிந்து உறுதிப்படுத்தும் வரையில் பரிசு வழங்குவதை ஒத்திபோடுவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

Read more...

கலாச்சார சீரழிவைத் தடுக்க யாழில் புதிய நடிவடிக்கை விரைவில்!!

கடந்த காலங்களைவிட யாழ்ப்பாணத்தில் தற்போது கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துவருவதாகவும், இவ்வாறு கலாச்சார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறையிடுவதற்கென தனியான பிரிவு ஒன்று விரவில் ஆரம்பிக்கப்படும் என்று யாழ் பொலிஸ் நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்துள்ளார்

குறிப்பாக தகுந்த காரணங்கள் இன்றி தனியார் விடுதிகளில் 18வயதுக்கு குறைந்தவர்களை அனுமதித்தல், அனுமதியில்லாமல் இயங்கும்விடுதிகள்,பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள்,அனுமதியின்றி இயங்கும் மதுபானநிலையங்கள் தொடர்பாக தாம் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், இவ்வாறாக கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் தொடர்பில் மக்கள் அறியும் பொருட்டிலோ, இவ்வாறான தீங்குகளுக்கு நீங்கள் உட்பட நேரிடும் பொழுதிலோ எந்த வித தயக்கமும் இன்றி பொலிஸில் முறையிடலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

"செக்ஸ்" குற்றச்சாட்டுக்கு உள்ளான இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டுகள் சிறை!

76 வயதுடைய இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 2010–ம் ஆண்டில் இரவு விடுதியில் நடனமாடும் 17 வயது மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும், ஒரு முறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த பெண்ணை பொலீஸ் காவலில் இருந்து மீட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்ததோடு, அவர் அரசு பதவி வகிக்கவும் தடை விதித்துள்ளார்கள்.

மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்து உள்ளனர். இத்தாலியில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறையில் குறைந்த காலம் தண்டனை அனுபவிக்க அந்த நாட்டு சட்டம் வகை செய்கிறது. அதன்படி பெர்லுஸ்கோனி மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அவருக்கான தண்டனை மிகவும் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது.

Read more...

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்கள் மேற்கொள் வதற்கோ, விடமாட்டோம்! - வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ......!

13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் கச்சதீவு உடன்படிக்கை தானாகவே செயலிழந்துவிடும்!

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத் தங்கள் மேற்கொள்வதற்கோ, மாகாண சபை முறைமையை இல் லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை எனவும், அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும் பான்மை கிடைக்கப்போவதுவுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கூட்டாக சூளுரை விடுத்தனர்.

"மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக ஐக்கிய இலங்கையை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சமசமாஜக்கட்சி அலுவலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே இது தெரிவிக்கப்பட்டது.

அங்கு சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர கருத்து தெரிவிக்கையில் , 13ஆவது திருத்தம் மக்கள் ஆதரவுடன் கொண்டுவரப்படவில்லை. எனவே, அதனை ஒழிக்கவேண்டுமென அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச உட்பட சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குரல் எழுப்பஆரம்பித்துள்ளனர். ஆனால், இத்திருத்தங்கள் எதற்கும் மக்கள் ஆதரவு பெறப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவே பெறப்பட்டுள்ளன. அன்று இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தீர்த்துவைத்தார். அதன் பின்னர் 1983 வரை இந்தியா எமது பிரச்சினையில் தலையிடவில்லை. ஸ்ரீமாவோ அன்று அந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் இன்று ஈழப்பிரச்சினை அகலவத்தைவரை வந்திருக்கும்.

இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவின் தலையீடு இருக்கத்தான் செய்கிறது. பிரபாகரன் உயிரிழக்கும் வரை இந்திய மத்திய அரசாங்கமோ கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இலங்கைக்கு எதிராக எதனையும் பேசவில்லை. யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவு அளப்பரியதாகும். அன்று இதனை புகழ்ந்தனர். ஆனால், இன்று இந்தியாவின் 13ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

13ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் கச்சதீவு உடன்படிக்கை தானாகவே செயலிழந்துவிடும். இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா உதவியளிக்கும் என்பதில் எந்தவிதமான நிச்சயமும் இல்லை. ஏனெனில், அண்மையில் இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட சீனாவின் புதிய பிரதமர், வரலாற்று நட்புறவுடனான இரண்டு நாடுகள் இணைந்துள்ளன. இனிமேல் நாம் இருவரும் இணைந்து தீர்மானங்கள் எடுப்போம் என கூறியுள்ளார். எனவே, சீனா எமக்கு உதவுமென்பதில் எந்தவித உண்மையும் இல்லை. 26 வருடங்களுக்கு பின் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை எதிர்ப்பதன் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுவதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

வாஸ் குணவர்தனவிற்கு விளக்கமறியலில் நீடிப்பு! D.I.G குணவர்தனவின் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தர விட்டுள்ளார்.

அத்துடன், சாட்சியத்தை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலே பிரியதர்சினியை எதிர்வரும் ஜுலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more...

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து பலி!

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தில் மீனபிடித்துக் கொண்டிருந்த முறிகண்டி இந்துபுரத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான பொன்னையா தாசா வயது 52 குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பிற்பகல் 4 மணியளவில் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read more...

செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சந்தேகம்! மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்!

மனைவி அடிக்கடி செல்போனில் பேசியதால் சந்தேகம் கொண்டு மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 35 வயதான பெருமாள் சேலம் புதுப் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பாக்கெட் சிப்ஸ் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மனைவி பெயர் உஷாராணி வயது 29. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பெருமாளுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வரும். உஷாராணி செல்போனில் மற்றவர்களுடன் பேசுவதை அறிந்து பெருமாள் அவரை சத்தம் போட்டு வந்தார். இவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் சமாதானம் செய்து வந்தனர். நேற்று இரவு வீட்டில் பெருமாள், அவரது மனைவி, குழந்தைகள் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது 10.30மணி அளவில் நள்ளிரவில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த பெருமாள், உஷாராணியை அடித்து உதைத்தார். இதனால் உஷாராணி அலறினார். இதை கேட்டு 3 குழந்தைகளும் எழுந்து அவர்களும் அழுதனர். இவர்களை பெருமாள் மிரட்டி விட்டு வீட்டுக்குள் இருந்த கொடுவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக தாக்கி வெட்டிக்கொன்றார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த உஷாராணி அதே இடத்தில் துடிதுடித்து இறந்து விட்டார்.

இதை பார்த்த குழந்தைகள் சத்தம் போட்டு அழுதனர். பின்னர் அவர்கள் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓட முயன்றனர். ஆனால் முடியவில்லை. பிறகு அவர்கள் கதவை தட்டி சத்தம் போட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்தனர். இதனால் அருகில் வசிப்பவர்கள் அங்கு ஓடி வந்து கதவை திறக்க முயன்றனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இந்த நிலையில் பெருமாள் தனது மனைவியின் சேலையை எடுத்து வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

அன்று மாணவர்களுக்கு முழங்காலில் நிற்குமாறு ஆசிரியர்கள் சொன்னார்கள்! இன்று ஆசிரியர்கள் முழங்காலில் நிற்க வேண்டுமென்று பெற்றோர் சொல்கின்றனர்!!

‘அன்று மாணவர்களுக்கு முழங்காலில் நிற்குமாறு ஆசிரியர்கள் சொன்னார்கள். ஆயினும், இன்று ஆசிரியர்கள் முழங்காலில் நிற்க வேண்டும் என்று பிள்ளைகளின் பெற்றோர்கள் சொல்கிறார்கள். இது மிக இழிந்த செயலாகும். நாங்கள் இவ்வாறான இழிந்த செயல்களை மிக மிக வெறுக்கிறோம். அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.’ என தென்மாகாணமுதலமைச்சர் சான் விஜய லால் த சில்வா குறிப்பிட்டார்.

அம்பலங்கொட நகர சபையில் அம்பலங்கொட கல்விப் பிரிவிற்குட்பட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கொன்றின் போதே தென் மாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்:

‘ஆசிரியர் என்ற உத்தம புருஷரை நான் அன்று கண்டது போலவே இன்றும் காண்கின்றேன். அவர்களுக்கு அன்று கொடுத்த மரியாதையை இன்றும் நான் கொடுக்கின்றேன். ஆசிரியத் தொழிலுக்கு ஈடான எந்தவொரு தொழிலும் உலகில் இதுவரை தோன்றவில்லை. ஆசிரியர்களினால் தான் நாங்கள் இன்று உயர் பதவிகளில் நிற்கின்றோம். அவ்வாறான பெறுமதிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு யாரோ ஒரு தந்தை தண் டனை வழங்கப் போகின்றார். அவ்வாறு அவர் செய்ய முற்படுவது மிகவும் இழிவான செயலாகும். அவ்வாறு ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்க எந்தப் பெற்றோராலும் முடியாது. அதிகாரமும் இல்லை’

(கலைமகன் பைரூஸ்)

Read more...

ரயிலின் மிதிபலகையில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் லொறியுடன் மோதுண்டு விபத்து! இருவர் பலி!

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயிலின் மிதிபலகையில் பயணித்துக்கொண்டிருந்த போது, அங்குலானை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறியுடன் மோதுண்டு உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் வெலிபென்ன பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த மற்றைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுபோவில மற்றும் லுணாவ வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

14 வயது மாணவியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் மாணவரகள்!

குருனாகல் தெல்­கந்த உட­கந்த பிர­தே­சத்தில் பாட­சாலை முடித்து வீடு செல்லும் வழியில் 14 வயது மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்துக்குட்­ப­டுத்­திய அதே பாட­சா­லையைச் சேர்ந்த இரு மாண­வர்­களை வாரி­ய­பொல கல்­கந்­த­யி­லுள்ள சிறுவர் இல்­லத்தில் ஒப்­ப­டைக்­கும்­படி ரம்­ப­ட­கல நீதி­மன்ற நீதிவான் டி. எம். டி. பி. பண்­டார உத்­த­ர­விட்டார்.

இச் சம்­பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இந்த பாலியல் துஷ்­பி­ர­யோ சம்பவத்தில் இரண்டு மாணவரகள் சம்மந்தப்பட்டுள்ளதுடன் ஒரு மாண­வனின் உத­வி­யுடன் மற்ற மாணவன் மாண­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ரிதி­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மாண­வியின் பெற்றோர் பிரிந்து வாழ்­வ­துடன் தாய் மறு­மணம் செய்து கொண்­டதால்மாணவி தனது பாட்­டி­யுடன் வசித்து வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.மாணவி குரு­நாகல் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் வைத்­திய பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com