Tuesday, June 25, 2013

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு(2013) நேற்று மதியம் 2 மணியளவில் கைலாசபதி மண்டபத்தில் தலைவர் சி .தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாகபல்கலைக்கழக பீடாதிபதிகள், பதிவாளர, நிதியாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சேவை ஓய்வு பெற்ற அங்கத்தவர்கள், 25 வருட சேவையை நிறைவு செய்தோர், புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்த அங்கத்தவர்களின் பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் ஊழியர் சங்க நிதியில் இருந்து பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், விசேடமாக கடந்த காலம் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



(பாறூக் சிகான்)

Read more...

விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் உள்நாட்டில் இடம்பெயர்தோருக்கு மாத்திரமே! வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அல்ல!

வெளிநாடுகளில் அகதிகளாக் குடியிருப்பவர்களும், வெளி நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பவர்களும், வாக் காளர் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டத்திற்கிணங்க தங்களை உள்நாட்டில் வாக்காளர்களாக பதிவு செய்ய முடியாது எனவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2012 ஆம் ஆண்டிற்காக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்பாக குறை நிரப்பு வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 22 ஆம் திகதி கிராமசேவர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் ஜுன் மாதம் 28 பொறுப்பேற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தல் இடாப்பில் தங்களை பதிவு செய்துக்கொள்ளவேண்டுமாயின் அவர்கள் இலங்கை பிரஜையாக இருக்கவேண்டும் எனவும், வெளிநாடுகளில் தங்கியிருப்போர் வாக்காளர்களாக பதிவுசெய்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த திருத்த சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், நாட்டிலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளும், அரசியல் தஞ்சம் கோரியிருப்போரும் இந்த திருத்தச்சட்டத்தின் ஊடாக பதியப்படமாட்டார்கள் என்றும், வெளிநாட்டிலுள்ளோர் இலங்கை கடவுச்சீட்டை வைத்திருந்தால் அவர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்துக்கொள்ளப்படுவார்கள் எனவும், அவ்வாறு தங்களை வாக்காளர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமாயின் அவர்கள் கட்டாயமாக நாட்டுக்கு வருகைதரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

கரைநகர் ஈ.பி.டி.பி அலுவலகத்தின் மீது கல்வீச்சு!!

காரைநகரிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தின்மீது நேற்று திங்கட்கிழமை இரவு 9மணியளவில் இனம்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இத்தாக்குதல் தொடர்பாக நேற்றிரவு தமக்கு காரைநகரிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தொலைபேசியில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதாகவும் காரைநகர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

வர்த்தகரை கடத்தி கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்ட D.I.G யின் இடத்திற்கு எல்.ஜி. குலரத்ன நியமனம்! மேலும் பல D.I.G. .....!

திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் எல்.ஜி. குலரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வடமேல் மாகாண பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, பம்பலப்பிட்டி வர்த்தகரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அந்தப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட கபில ஜயசேகர திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி. இந்திரன் மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு மேலதிகமாக அம்பாறை பிராந்தியத்திற்கான பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பல பொலிஸார் கைதுசெய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

படுகாயமடைந்த கல்லடி விவேகானந்தா வித்தியால மாணவன் வைத்தியசாலையில் அனுமதி! தாய் ஸ்தலத்திலேயே பலி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றவாகன விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் பாடசாலை முடிந்து தனது மகனை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிச்சென்று கொண்டிருந்த போது நாவற்குடா பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக வைத்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதிய இந்த கோர விபத்து நடந்துள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஈஸ்வர ராஜ் நாகேஸ்வரி எனும் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவரது மகனான 10 வயதுடைய தனுஜன் படுகாயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் கல்லடி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்விகற்று வருவதுடன், இம்மாணவன் சகல குறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு திறமையான மாணவன் என பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

Monday, June 24, 2013

கோவில் மணியை பிடித்து உயிர் பிழைத்த நபர்!

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட ஒரு நபர் கேதார்நாத் கோவில் மணியை சுமார் 9 மணி நேரத்திற்கு பிடித்து தொங்கி உயிர் பிழைத்துள்ளார். கேதர்நாத் கோவிலுக்கு தனது குடும்பத்தினரோடு விஜேந்தர் சிங் நேகி என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். அவர் கோவிலுக்குள் இருக்கும்போது அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டார்.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் அவர் கண்முன்னே பலியாவதை கண்ட விஜேந்தர், உயிர் பிழைக்க கேதார்நாத் கோவிலின் மணியை பிடித்து தொங்கியுள்ளார். 36 வயதான விஜேந்தர் சிங் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கேதார்நாத் கோவிலின் மாடத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியை பிடித்துக்கொண்டு கழுத்தளவு தண்ணீரில் சுமார் 9 மணி நேரம் தொங்கிய தனது துயர அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

Read more...

யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா (படங்கள் இணைப்பு)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது இத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லபயிரக்கணக்கான அம்பாளின் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

Read more...

வெலிண்டன் பாதுகாப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் வந்த, புலி ஆதரவாளர்களை விரட்டியடித்தனர் பொலிஸார்!

தமிழ்நாட்டின் ‘நான் தமிழர் கட்சி’ யைச் சேர்ந்த நூற்றுக்கு மேற் பட்டோர் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தி வெலிண்டன் பாதுகாப்பு கல்விக் கல்லூரிக்கு அருகில் உள்நுழைந்து அங்கு பயிற்சி பெறுகின்ற இலங்கையைச் சேர்ந்த இராணுவ வீர்ர்கள் இருவரையும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி பெருஞ் சத்தமிட்டுள்ளனர்.

கழகம் நடாத்தியவர்கள் வேறிடத்திற்குச் செல்வதாகக் கூறி, அங்கிருந்த பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி வேறோரு பாதையால் கல்விக் கல்லூரியின் அருகிற்கே சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் தேசியக் கொடியை எரித்துள்ள கழகக்காரர்கள் கல்விக் கல்லூரிக்கு 300 மீற்றர் அருகில் இருந்ததாகவும் பொலிஸார் புலி ஆதரவாளர்களை விரட்டியடித்ததாகவும் வெலிண்டன் செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர்களில் புலி ஆதரவுப் பெண்களும் இருந்திருக்கின்றனர்.

(கேஎப்)

Read more...

நெல்சன் மன்டேலாவுக்காக அனைவரும் பிரார்த்தியுங்கள்! தற்போதைய ஜனாதிபதி உருக்கமான வேண்டுகோள்!

94 வயதான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதாகவும், இதனால் நெல்சன் மன்டேலா எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலைமைக்காக பிரார்த்திக்குமாறு அந்நாட்டு மக்களையும், உலக மக்களையும் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா கேட்டக்கொண்டள்ளார்.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா நலன் பெற வேண்டி அந்நாட்டு தேவாலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறுகின்றன. தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களின் விடுதலைக்காக நெல்சன் மண்டேலா வெள்ளையின ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர், செயற்திறன் மிக்க அரசியல் செயற்பாடுகளில் விலகிய அவர் 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக பொது மக்கள் முன்னிலையில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தயா மாஸ்டர் நேர்முகத் தேர்வில்.....!

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் (வேலாயுதம் தயாநிதி) முன்வந்துள்ளார்.

வட மாகாண தேர்தலில் போட்டியிடும்பொருட்டு ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி 53 அபேட்சகர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தியது. அதில் தயா மாஸ்டரும் ஒருவர்.

இந்த 53 பேரில் 40 பேர் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கள் பெயர்ப் பிரேரணை செய்துள்ளனர். பெயர்ப் பிரேரணை செய்தோரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண நகரபிதா ரிமேடியஸ் முதியப்பு, சாவகச்சேரி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் குமார் சர்வேந்திரன், யாழ்ப்பாண முன்னணி வியாபாரிகளில் ஒருவரான சத்தியசிவம் ராமநாதன். யாழ்ப்பாண மீன்பிடிச் சங்கத்தின் உப தலைவர் பொன்னம்பலம் ஆகியோரும் பெயர்ப் பிரேரணை செய்துள்ளனர்.

பெயர்ப் பிரேரணை செய்தோரை நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் காலங்களிலும் நடாத்தப்படவுள்ளதுடன், ஈ.பீ.டீ.பீ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா தேசிய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோரும் தங்களது உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒன்றிணைப்பது பற்றிய அவதானத்தில் இருக்கின்றனர்.

(கேஎப்)

Read more...

தமிழ் மக்களை தொடர்ச்சியாக அழைக்கும் இலங்கை அரசாங்கம்!

வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் தமிழ் மக்ககளை மீண்டும் தாயகம் திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத் துள்ளதுடன், இவ்வாறு தாயகம் திரும்பும் மக்களுக்காக அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவுஸ்திரேலிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யுத்தம் இடம்பெற்ற காலக்கட்டத்தில் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ந்தும் அந்நாடுகளில் வசித்து வருகின்றனர்.

பயங்கரவாதம் கூண்டோடு அழிக்கப்பட்டதன் பின்னர் தற்போது வடக்கு, கிழக்கில் அமைதி நிலவுகின்றது. பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தியடைந்துள்ள இப்பிரதேசங்களில் மக்கள் வாழ்க்கை உண்மையாக வழமைக்கு திரும்பியுள்ளது.

வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்த பெரும்பாலோனோர் மீண்டும் தாயகம் திரும்பி, தமது சொந்த இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அகதிகளாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மக்கள் தொடர்ந்தும் அவ்வாறு தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அகதிகளை மீண்டும் தாயகம் திரும்புமாறு அழைப்பு விடுத்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

செப்டெம்பர் 21 அல்லது 28 இல் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்! தேர்தல்கள் ஆணையாளர்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி குறித்த மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று திங்கட்கிழமை (24) அறிவித்துள்ளார்.

தற்போது மாகாணசபை வேட்பாளரகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கம் சார்பாக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மிஹிந்தலை ரஜ மஹா விஹாரையில் மின்னொளியேற்றியதுடன் தூபராமவில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி

மிஹிந்தலை ரஜ மஹா விஹாரையில் லேக் ஹவுஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த ‘ஆலோக்க பூஜா’ நிகழ்வை மின்னொளியேற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

தொடர்ந்து இன்றைய தினம் அநுராதபுரம் தூபராம விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு நடைபெற்ற சமய வைபவங்களில் கலந்துகொண்டதுடன் பொது மக்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.

வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே- முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more...

உயிருடன் கடலில் இருந்த கடல் கன்னி காணொளி!

கடல் கன்னிகள் கற்பனை என்று சொல்பவர்களும், நிஜம் என்று வாதடுகின்றவர்கள் என பலர் இந்த உலகத்தில் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கடல் கன்னிகள் குறித்து சொல்கின்ற பல அதிர்ச்சிக் கதைகளையும் செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட காட்சியால் திக்குமுக்காடிப் போனதுடன் இவர் கண்ட இக்காட்சியை வீடியோ பிடித்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார்

Read more...

அவுஸ்ரேலிய சட்டவிரோத பயணத்தால் ஏற்பட்ட விபரீதம்!

"சர்வதேச புலம்பெயர்ந்த நபர்களுக்கான அமைப்பு தங்களால் எதுவும் செய்ய முடியாது எனக்கூறி கைவிரித்தது" - மனைவி

அவுஸ்திரேலியாவிற்கான சட்டவிரோத கடல் வழி பயணம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விதவைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறான சட்டவிரோத பயணம் காரணமாக தமது கணவனை இழந்த பொருமளவிலான பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளார்கள்.

இதேபோல் இந்த பயணத்தின் போது காணாமல் போயுள்ள தமது கணவன்மார் என்றாவதொரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பல பெண்கள் காத்திருக்கிறார்கள் இந்த வகையில் மட்டக்களப்பு- கருவேப்பங்கேணியைச் சேர்ந்த 39 வயதான இரண்டு குழந்தைகளின் தாயான விஜயராஜா கவிதா தனது சோக கதையை தெரிவிக்கையில்,

கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தோனேசியா சென்றிருந்தார். அவர் அவுஸ்திரேலியா செல்வது பற்றி என்னிடம் கூறவில்லை. அவரது சகோதரி மூலமே அது பற்றி அறிந்து கொண்டேன். அவரது பயண முகவர் யார் என்று தெரியாது. பணக்கொடுக்கல் வாங்கல் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது.

இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி எனது கணவர் படகு விபத்தில் இந்தோனேசியா கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தியை இணையத்தளம் மூலம் அறிந்தேன். இணையத்தளத்தில் பெயருடன் தகவல் வெளிவந்துள்ளதாக எனக்குத் தெரிந்தவர் கூறினார். நான் சென்று பார்த்த போது இணையத்தளத்தில் எனது கணவனின் பெயர் தம்பாபிள்ளை விஜயராஜா என்பதற்கு பதிலாக தம்பாபிள்ளை விஜயகட்டா என்று இருந்தது. இது பற்றி எனக்குத் தகவல் தந்தவரிடம் கேட்டபோது, தான் தான் இதுபற்றி தகவல் கொடுத்ததாகவும் பெயர் பிழையாக போட்டிருக்கலாம் என பதிலளித்தார். எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என தெரியாது. எனக்குத் தெரிந்த செங்கலடி இளைஞர் ஒருவரும் எனது கணவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.

எனது கணவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் எம்முடன் தொடர்பு கொண்டிருப்பார். அவருடன் பயணம் மேற்கொண்டவர்கள் தொடர்பு கொண்டு இந்தோனேசியாவில் வள்ளம் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அவர்களது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் எனது கணவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொண்டிருப்பார். ஏற்கனவே ஒரு தடவை இந்த பயணத்திற்கு முயற்சி செய்திருந்தார். பணம் இல்லாமல் கைவிட்டார். ஆனால் இந்த பயணத்திற்கான முடிவை திடீரென எடுத்துள்ளார்.

எனது கணவர் மரணமடைந்த நிலையில் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வருவதற்காக சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்புகொள்ளப்பட்டது. சர்வதேச புலம்பெயர்ந்த நபர்களுக்கான அமைப்பு தங்களால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி கைவிட்டது. இது சட்டவிரோத பயணம் என காரணம் கூறப்பட்டது.

வெளிவிவகார அமைச்சின் உதவியை நாடியபோது எவ்வாறு தகவல் கிடைத்தது என வினவினார்கள். நாட்டுக்கு சடலத்தைக் கொண்டு வருவதென்றால் 13 இலட்சம் ரூபா செலவாகும். அந்தச் செலவை நாம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்கள்.

இதற்கு எங்களுடைய குடும்ப பொருளாதார நிலைமை இல்லையென்பதை அதிகாரிகளுக்கு கூறிய போது அப்படியானால் சடலத்தை அங்கு தகனம் செய்து விட்டு சாம்பலை பெற்றுத் தருவதற்கு எழுத்து மூலம் விண்ணப்பம் ஒன்று தாருங்கள் என்று கேட்டார்கள். இதற்கான கடிதம் கொடுத்தும் 6 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் அதற்கான பதிலும் கிடைக்கவில்லை. எனது கணவர் சாதாரண உழைப்பாளி தற்போது நானும் எனது இரண்டு குழந்தைகளும் உறவினர்களின் பராமரிப்பில் இருக்கிறோம் என தெரிவித்தார்.

Read more...

யாழில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு 10 மணியுடன் தடை!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் நடைபெறுகின்ற இசை நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்கிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால் கோயில்களில் இரவு 10மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்தாக யாழ்.பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி குறிப்பிட்டார்.

யாழ்.குடாநாட்டில் உள்ள இந்துக் கோயில்களின் திருவிழாக் காலங்களில் நடாத்தப்படும் இசை நிகழ்ச்சியின் போது இளைஞர்களிடையே ஏற்படும் வாள் வெட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் இறுதிநாள் நிகழ்வின் போது நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்குப் பின்னர் நடைபெறுவதினால் அவ் இசை நிகழ்ச்சி முடிவடைய இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகின்றன இதனால் இசை நிகழ்ச்சியைப் பார்க்க வரும் இளைஞர்கள் மதுபானம் அருந்தி விட்டு தகராறுகளில் ஈடுபட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் ஏற்படுகின்றன எனவே இவ்வாறான சம்பவங்களை தடுக்கவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Read more...

பொலிஸார் மீது கொள்ளையர் கைக்குண்டுத் தக்குதல்! அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட .......!

அநுராதபுரம் நொச்சியாகம லிதவௌ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், நபர் ஒருவர் காணமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்ககியுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றிரவு வாடகைக்கு முச்சக்கர வண்டியொன்றில் சென்ற சந்தேகநபர் குறித்த முச்சக்கர வண்டி உரிமையாளரின் பணத்தையும் கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, லிதவௌ பிரதேசத்திற்கு குறித்த நபரை கைது செய்வதற்காக பொலிஸார் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த சந்தேகநபர் பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

உத்தரகாண்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் கற்பழித்து கொலை! மக்கள் அதிர்ச்சியில்!

"உத்தரகாண்ட வெள்ளத்தில் சிக்கிவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி சிலர் கோரத் தாண்டவம்"!

உத்தரகாண்ட வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே அடைக்கலம் புகுந்திருக்கும் பக்தர்களை உள்ளூர்வாசிகள் மிரட்டி அவர்களின் நகை, பணம் ஆகியவற்றை பறித்து செல்கின்றார்கள் எனவும், வெள்ளத்தில மிதந்து செல்லும் பிணங்களில் உள்ள நகைகளுக்காக உடல் உறுப்புக்களை வெட்டி சிலர் கோரத் தாண்டவம் ஆடி வருவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சவுகாசி என்ற இடத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் என 3 பேரை வெட்டிக்கொன்ற கும்பல் அவர்களிடமிருந்து ரூ.17 லட்சத்தை பறித்துச் சென்றாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொடுமைகளைவிட எல்லாம் உச்சகட்ட கொடுமைகயாக கவுரிகண்ட் பகுதியில் ஒதுங்கி நின்ற ஒரு பெண் பக்தர் மற்றும் அவரது மகளை ஒரு கும்பல் கற்பழித்துக் கொன்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. அவர்களது பிரேதங்கள் கோந்தலு பாணி கிராமத்தில் இன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே பகுதியில் பீகாரை சேர்ந்த இன்னொரு பெண்ணும் கற்பழிக்கப்பட்டுள்ளார். இராணுவத்துடன் இணைந்து உள்ளூர் போலீசாரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், இதைப்போன்ற குற்றங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குறை கூறுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

பத்து மாதக் குழந்தையென்று கிணற்றில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயிடம் விசாரணை!

"குழந்தையை தொட்டிலில் உறங்கச் செய்து சமையலில் ஈடுபட்டிருந்தேன் பின்னர் பார்த்த போது குழந்தையைக் காணவில்லை"

மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் பத்து மாதக் குழந்தையை கிணற்றில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயார் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அருளானந்தன் அனுஷன் என்ற குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை அயல் வீட்டுக்கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் மரணம் தொடர்பாக தந்தை மற்றும் அயலவர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

"சம்பவ தினம் குழந்தையை தொட்டிலில் உறங்கச் செய்து சமையலில் ஈடுபட்டிருந்தேன். பின்னர் தொட்டிலைப் பார்த்த போது குழந்தையைக் காணவில்லை" எனவும், அயலவர் மற்றும் பொலிஸாரின் உதவியோடு தேடிய போது அயல் வீட்டுக்கிணற்றில் சடலமாக எனது குழந்தையை காண முடிந்தது என தாயார் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை மேற்கொண்டார் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

நல்லிணக்க முயற்ச்சிகளை புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் தடுக்கின்றனர்! - ரவினாத்

நாட்டின் நல்லிணக்க முயற்ச்சிகளை புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் தடுத்து வருகின்றார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் "புலம் பெயர் மக்களும் அபிவிருத்தியும்" என்ற தொனிப்பொருளில் உரையாற்றியபோதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் இலங்கையைச் சேர்ந்த மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும், புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க நடவடிக்கைகளை சீர் குலைப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர் எனவும், இவர்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித் துள்ளார்.

Read more...

கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட வர்தகரின் கையடக்க தொலைபேசி காய்வாயிலிருந்து மீட்பு!

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் கையடக்க தொலை பேசியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் புளுமென்டல் வீதியிலுள்ள கால்வாயில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

இந்தக் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இப்படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பலர் பொலிஸார் கைதுசெய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்தும் விசாரணைக் குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், வாஸ் குணவர்தனவின் கீழ் சேவையாற்றிய பொலிஸாரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

பிளாஸ்டிக் போத்தலால் வீடு கட்டும் மக்கள்!

தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளதால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட ஆரம்பத்துள்ளனர்.

பொலிவியாவில் உள்ள சாண்டா குரூஸ் நகரில் வசித்து வரும் இன்கிரிட் வாகா டியாஸ் என்ற பெண்மணியே இந்த புதுவிதமான மாற்றீடினை கண்டுபிடித்துள்ளார்.

பொலிவியாவில் மட்டும் இதுவரையில் பாவித்துவிட்டு குப்பைகளில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து பத்துக்கும் அதிகமான வீடுகளை பிளாஸ்டிக் போத்தல்களால் குறைந்த செலவில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Read more...

முண்டியடித்து இலங்கையில் காணிகளை வாங்க விரும்பும் வெளிநாட்டவர்கள்!

"காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதனை தடைசெய்வதற்கான ஜனாதிபதியின் புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்"

அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளையோ, அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளையோ, வெளிநாட்ட வர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிணங்க வெளிநாட்டவர்களுக்கு காணிகளை வழங்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய சட்டதிட்டங்களை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சட்டமூலம் உருவாக்கப்பட்டதன் பின்னர் நீதிபதியினதும் அமைச்சரவையினதும் அனுமதியினை பெற்று அதனை பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இத்துடன் நாட்டில் நிலவும் சமாதானம், மற்றும் துரித அபிவிருத்தியின் காரணமாக அண்மைக்காலமாக வெளிநாட்டவர்கள் காணிகளை பெற்றுக்கொள்ளும் அளவு அதிகரித்துள்ளது. அவற்றை விற்பனை செய்வது தொடர்பில் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்நோக்கப்படுவதன் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பதற்கான கொள்கையில் மாற்றம் செய்வதற்கு வேண்டிய தேவை ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வது தொடர்பில் திறந்த கொள்கை ஒன்று வகுக்கப்படவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்வைத்த அந்த யோசனைக்கு விரிவாக ஆராய்ந்து சட்டமூலத்தை உருவாக்க அதிகாரத்தை வழங்குவதற்கும், நீதிபதியினதும், அமைச்சரவையினதும் அனுமதியின் பின்னர் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், பரிசு, விற்பனை, மற்றும் நன்கொடை உள்ளிட்ட வகையில் எவ்விதத்திலேனும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது எனவும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இனி சட்டத்தில் இடமில்லை எனவும், இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

.

Read more...

சிரிய கிளர்ச்சியாளருக்கு அமெரிக்க செய்யம் இராணுவ உதவி போர்க்குற்றத்திற்கு வழிவகுக்கும் -ஐ.நா

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா செய்யும் ராணுவ உதவி அளிப்பது என்ற அமெரிக்க அரசின் முடிவு அங்கு மேலும் போர்க்குற்றங்கள் நிகழ வழிவகுக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணையக நிர்வாகி பாலோ பினிரோ எச்சரித்துள்ளது.

அது மட்டும்லாது அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கும் அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் கூடுதல் உத்வேகத்துடன் சண்டையிடுவார்கள் இது அங்கு மேலும் பிரச்னைகளை உண்டாக்குவதுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவி, கூடுதல் ஆயுத பலம் போன்றவை தங்களுக்கு இருப்பதால் அதிபர் பஷார் அல்-அஸாத் ராணுவத்தை எப்படியும் வென்று விடலாம் என கிளர்ச்சியாளர்கள் எண்ணுவர்.

இதனால் கிளர்ச்சி ஆளர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை புறக்கணிப்பார்கள். எனவே சிரியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என ஆணையக நிர்வாகி பாலோ பினிரோ சுட்டிக் காட்டியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com