Wednesday, June 12, 2013

கல்முனை சேனைக்குடியிருப்பு ஸ்ரீ கம்ப காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 15 திகதி ஆரம்பம்! - யு.எம்.இஸ்ஹாக்

கல்முனை சேனைக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ கம்ப காமாட்சி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா சனிக்கிழமை (15) அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் கர்மாரம்பம் புண்ணியாகவாசத்துடன் கிரியைகள் ஆரம்பமாக உள்ளது.

உண்மை அறிவும் இன்பமுமேயாக உருக்கொண்டு அண்டசராசரமெங்கும் பாலில் நெய் போலக் கலந்து உறைகின்ற அம்பாள் ஆன்மாக்கள் தன்னைச் சிந்தித்து வாழ்த்தி வணங்குதற்பொருட்டு எண்ணற்ற திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள் நிலையங்களே ஆலயங்களாகும்.

இந்த பெருமை பொருந்திய ஆலயங்கள் அனேகம் நிறைந்தும் சிவபூமி என திரு மூலரால் சிறப்பிக்கப்பட்டதும், புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் நிறைந்ததுமாகிய இலங்காபுரியின் கிழக்கே கல்முனை மாநகரின் மேற்றிசையில் சேனைக் குடியிருப்பு எனும் புண்ணிய பதியில் காஞ்சி மாநகரின் அதிபதியாக செங்கோலோச்சுகின்ற ஸ்ரீ காமாட்சி அன்னையானவள் ஸ்ரீகம்பகாமாட்சி எனும் திவ்ய நாமத்தோடு கோயில் கொண்டு உறைகின்றாள்.

அன்னையவளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் விஜய வருடம் சுபமுகூர்த்த வேளையில் ஆனித் திங்கள் 05ம் நாள் புதன் கிழமை ஏகதாசி திதியும் சித்திரை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய மு.ப 10.40 முதல் 11.48மணி வரையுள்ள சிம்மலக்கின சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக திருக்குட முழுக்குப் பெருஞ் சாந்தி விழா இடம்பெற அன்னை அருள்பாலித்துள்ளார்.

மஹா கும்பாபிஷேக கிரியைகளாக ஆனித்திங்கள் முதலாம் நாள் விநாயகர் வழிபாடு,கரமாரம்பம்,புண்ணியாகவாசனம்,ஸ்தலசுத்தி, பிரதிஸ்டா மஹாசங்கல்ப்பம், தேவ சிவாச்சாரியார் அனுஞ்ஞைகுபேரலக்ஷ்மி பூசை ,த்ரவ்யசுத்தி,த்ரவ்ய யாகம்,மகாகணபதி ஹோமம்,பேரிதாடனம்,ம்ருத்ஞ்ஜ ஹோமம்,சாந்தி ஹோமம்,மூர்த்தி ஹோமம், திசாஹோமம், யந்திர பூசை, பிரசாதம் என்பன இடம் பெற்று மாலை வழிபாடுகளும் இடம் பெறும்.

தொடர்ந்து நான்கு நாட்கள் காலை மாலை கிரியைகள் நடை பெற்று ஐந்தாம் நாள் ஆனித்திங்கள் புதன் கிழமை காலை 7.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகபூசை பிரதட்சணம் தீபாரதனை பாராயணம் நாதகீதாஞ்சலி இடம் பெற்று 10.45க்கு ஸ்தூபி அபிஷேகம் செய்யப்பட்டு 11.00 மணிக்கு ஸ்ரீகம்பகாமாட்சி அம்பாளுக்கும் பரிவார முர்த்திகளுக்கும் மஹாகும்பாபிசேகம் தேவ பூசை கும்பாபிசேக பல சமர்ப்பணம் நடந்தேறி மஹா அபிசேகத்துடன் விசேட பூசை பிரசாதம் வழங்கலுடன் கிரியைகள் நிறைவு பெறும்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 11 நாட்கள் மணடலாபிஷேகம் இடம்பெற்று 01.07.2013 அன்று 1008 சங்காபிசேகமும் இடம் பெறவுள்ளது. அருட் கவியரசு விஸ்வப் பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் ஜயா அவர்களின் குருவருள் நிறைந்த நல்லாசியுடன் தாழங்குடா நிஷப்தம் ஸ்ரீ மஹாவிஸ்ணு தேவஸ்தான சரீரம் சைவ நன்மணி கிரியாஜோதி தற்புருஷ சிவச்சாரியார் சிவஸ்ரீ வே.கு.கருணாகரக் குருக்கள் தலைமையில் ஆலய கிரயைகள் இடம் பெறவுள்ளது. கிரியைகளின் போது மங்கள வாத்தியம் கல்லடி லயஞானசுடர் பிறேம்குமார் குழுவினரால் இசைக்கப்படவுள்ளது.

Read more...

உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கைக்கு 110ஆவது இடம்!

உலகமெங்கும் உள்ள 162 நாடுகளில் வன்முறைகள் இல்லாத பண்புகள் மற்றும் அளவீடுகள் போன்ற 22 தரக் கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் வருடாந்தம் உலகளாவிய சமாதான சுட்டெண் அடிப்படையில் இலங்கைக்கு 110 ஆவது இடம் கிடைத்துள்ளது.

உலகளாவிய சமாதான சுட்டடெண்ணில் முதலாவது இடத்தை ஜஸ்லாந்தும், இரண்டாம், மூன்றாம் இடங்கள் முறையே டென்மார்க் மற்றும் நியுசிலாந்துக்கு கிடைத்துள்ளதுடன் இந்தியா 141வது இடத்தையும் பிரித்தானியா 44 வது இடத்திலும், பிரான்ஸ் 53வது இடத்திலும், அமெரிக்கா மற்றும் சீனா என்பன முறையே 99 மற்றும் 101வது இடத்தில் உள்ளதுடன் ரஷ்யாவுக்கு 155வது இடம் கிடைத்துள்ளது.

தெற்காசிய வலயத்தினை கருத்தில் 20வது இடத்தைப் பெற்றுள்ள பூட்டான் முன்னிலையில் காணப்படுவதுடன் இலங்கையை விட பங்களாதேஷ், நேபாளம் என்பன முன்லை பெற்றுள்ளன.

Read more...

30 பேருடன் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த அதிகள் படகு 7 நாட்களாக மாயம்!

இலங்கை அகதிகள் 30 பேருடன் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதுடன் கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் 55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகியதுடன் அதில் பயணம் செய்த பலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது மடடுமல்லாது அவுஸ்திரேலியா அரசாங்கம் தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றமை கவலை தருவதாக வெளியிட்டுள்ளதுடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Read more...

யாழ் நயினாதீவில் சித்தவைத்தியசாலை ! (படங்கள்)

தீவக மக்களின் நன்மைகருதி யாழ் நயினாதீவுப் பகுதியில் சுதேச வைத்திய அமைச்சினால் 3.5மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையானது நேற்றைதினம் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் சாலிந்த திஸ்ஸநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் சுதெச வைத்திய அமைச்சின் செயலாளர் கன்னங்கரா, வடமாகாண கடற்படைத்தளபதி றியல் அட்மிரல் உடவத்த ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமுகமாக நயினாதீவிற்கு விஜயம் செய்த அமைச்சர்கள், அங்குள்ள நாகதீபவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன், நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கும் விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டதுடன் அங்குள்ள மக்களின் தேவைகளையும் கேட்டறிந்தனர்.

Read more...

2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தந்தையாக பில் கிளின் தெரிவு!

உலக தந்தையர் தினம் வரும் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வருடத்திற்கான சிறந்த தந்தைக்கான விருது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு வழங்கப்பட இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ‘லாப நோக்கமற்ற தேசிய தந்தையர் தின குழு‘ தகவல் வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு அவர் மகள் செலஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கிளின்டன் அதிபராக இருந்த போது, அவருடைய 12 வயதான மகள் செலஸ்-சை தனது பணியையும் தந்தை பொறுப்பையும் சரிவர நிறைவேற்றியதை பாராட்டும் விதமாக இந்த விருதை அவருக்கு அளிப்பதாக அக்குழு கூறியுள்ளதுடன் இந்த விருது ஜான் கென்னடி, ரோனால்ட் ரீகன், கோலின் பாவெல் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தந்தைக்கான விருதை ‘பாதர் ஆப் த இயர்‘ என்ற பெயரில் 1941-ம் ஆண்டு முதல் விருதினை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Read more...

மனைவியுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து! யாழில் சம்பவம்!

திரையரங்கு ஒன்றில் மனைவியுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த கள்ளக்காதலன் கத்திக் குத்துக்கு இலக்கான சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கூலித்தொழிலாளியாக வேலைசெய்யும் குறித்த பெண்ணின் கணவன் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தான் வீடு திரும்புவார். இதனைத் சாதகமாக பயன்படுத்திய குறித்த பெண் தனது கள்ளக்காதலுடன் திரையரங்குக்கு சென்று படம் பார்க்க சென்றுள்ளார்.

இதனை அறிந்த குறித்த பெண்ணின் கணவன் திடீரென கத்தியுடன் திரையரங்குக்குள் புகுந்து மனைவியின் கள்ளக்காதலனுக்கு கத்தியால் குத்திவிட்டு, முகத்தை துணியால் போர்த்தியபடி நின்ற தனது மனைவியை அவரது தலைமுடியில் பிடித்து இழுத்து வீட்டிற்கு கொண்டுசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

ஜனாதிபதி வடமாகாண சபை தேர்தலை நடத்தினால் வரலாற்றில் தவறிழைத்தவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பிடிக்கும்!

"13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் இல்லாவிட்டால் நாட்டில் சிங்கள பௌத்தர்களின் போராட்டம் வெடிக்கும்" - சிங்கள பௌத்த அமைப்புக்கள்!

நாட்டை பிரிக்கும் 13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும், இல்லாவிட்டால் நாட்டில் சிங்கள பௌத்தர்களின் போராட்டம் வெடிக்குமென்று 29 சிங்கள பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

"ஒற்றையாட்சியை பாதுகாப்போம் மாகாண சபை முறையை ஒழிப்போம்" என்ற தொனிப் பொருளில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பௌத்த மகா சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணா தேசிய சங்கம் சம்மேளனம் உட்பட 29 சிங்கள பௌத்த அமைப்புகளைச் சோர்ந்த பௌத்த குருமார் உட்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இந்தியாவுடன் சேர்ந்து மேற்குலக நாடுகள் பிரிவினைவாத விஷத்தை வடமாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் பரப்ப ஆரம்பித்துள்ளன. வத்திக்கானும் மேற்குலக நாடுகளும் சேர்ந்து வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் நடத்தப்பட வேண்டுமென்றும் அறிவித்துள்ளது.

பிரபாகரனின் ஆயுத போராட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபை இயங்குவதாக இந்தியாவின் யுத்தம் தொடர்பான விசேட நிபுணர் அசோக் சிங் தெரிவித்திருந்தது. இன்று இது உண்மையாகியுள்ளது எனவும், கத்தோலிக்க சபை 13 இற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், 1987 இல் ஜே.ஆரின் அடக்குமுறைக்கு மத்தியில் சிங்கள இளைஞர்கள் 66,000 பேரை கொலை செய்து, இந்தியாவினது தேவைக்காக பலாத்காரமாக எம்மீது சுமத்தப்பட்டதே 13 ஆவது திருத்தமாகும். இதன்போது விடுதலை புலிகளை நிராயுதபாணியாக்குவோம் என இந்தியா உறுதியளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவும் இல்லை மாகாண சபை முறைமையினால் எந்தவிதமான நன்மையும் கிடைக்கவும் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும் இல்லை.

26,000 படையினர் உயிர்த்தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி மீண்டும் பிரிவினைவாதத்திற்கு தள்ளவா அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது மனச்சாட்சியை இக் கேள்வியை தட்டிக்கேட்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் அதற்கெதிரான அமைப்புக்களை நடத்தியோர் இன்று அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு 13 ஆவது திருத்தத்தை ஆதரிக்கின்றனர். வடமாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென்கின்றனர். இத் தேர்தல் நடத்தப்படக்கூடாதென்று கூறும் தேசியவாதிகளும் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். இவ்வாறான முரண்பாடுகளை கொண்டவர்களுடன் இணைந்து அரசாங்கம் நடத்திய வல்லமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது.

13 ஐ ஆதரிப்பவர்கள் இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளதா என்று தமது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும். ஏனென்றால் கொழும்பில் மடடும் 280,000 அதாவது நூற்றுக்கு 11 வீதம் தமிழ் மக்கள் வசிக்கின்றனர். நாடு பூராவும் பரந்து வாழ்கின்றனர். இனப்பிரச்சினை இருக்குமானால் இப்படி வாழ முடியுமா?

வீதிகள் புனரமைப்பு, பாலங்கள் அமைத்தல் என்பதை விட வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்ப்புகளை மீறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமாகாண சபை தேர்தலை நடத்தினால் வரலாற்றில் தவறிழைத்தவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பிடிக்கும் என்றும் காலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

Read more...

சட்டத்தின் மூலம் மக்களின் மனங்களை கட்டியெழுப்ப முடியாது! முஸ்லிம்களே கிழக்கு மாகாணத்திலுள்ள .......... ஜனாதிபதி

இந்த நாட்டின் வரலாற்று உரிமைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரித்தானது எனவும் சட்டத்தின் மூலம் மக்களின் மனங்களை கட்டியெழுப்ப முடியாது எனவும் மக்களின் மனங்களை சிறந்த பழக்கவழக்கங்கள் மூலமே கட்டியெழுப்ப முடியும் என்றும் இதை மதத்தலைவர்களால் நிசைவேற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாப்பாவல ஸ்ரீ சுமங்கலராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிற்கு இன்நாட்டிக்குசொந்தமானவை ஒரு இனத்திற்கோ சொந்தமானது அல்ல எனவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள முஹூது விகாரையின் வரலாற்று பொக்கிஷங்களை முஸ்லிம் மக்களே பாதுகாத்தனர் என்றும், முஸ்லிம் மக்கள் அவற்றை பாதுகாத்திருக்காவிட்டால், குறித்த பொக்கிஷங்கள் இன்று அழிந்து போயிருக்கும் என தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் வரலாற்று பொக்கிஷங்கள் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது என்பது உறுதியாகின்றது எனவும் அவற்றை பாதுகாப்பது அனைத்து மக்களதும் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் மூலம் பெற்ற வெற்றியை எதிர்கால பரம்பரையினர் அனுபவிக்க அனைவரும் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், நாட்டில் மீண்டுமொரு இரத்தம் சிந்தும் யுத்தம் தேவையில்லை உயிர்களை தியாகம் செய்து பெறப்பட்ட வெற்றியை பாதுகாக்க அனைவரும் அரப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

வானிலை சார்ந்த பணிகளைச் செய்யாமல் பந்து கைமாற்றுகிறது வளிமண்டலவியல் திணைக்களம்!!

வளிமண்டலவியல் திணைக்களம் சொல்வது போல எந்தவொரு அறிக்கையும் மாலை 5.00 மணிக்கு அமைச்சுக்குக் கிடைக்கவில்லை எனவும், அவர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மீனவப் படகுகளுக்கு மீனவத் திணைக்களம் அறிவித்தல் வழங்குகின்றன எனவும் மீனவ மற்றும் நீர்வள அபிவிருத்தி பிரதியமைச்சர்சரத்குமார குணரத்ன குறிப்பிட்டார்.

வானிலை பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டியது அந்நிறுவனத்தின் பணி எனவும் அது மீனவத் திணைக்கள பணியல்ல எனவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வளிமண்டலத் திணைக்களம் இன்று 'பந்து கைமாற்றுகின்றது' என்றும் குறிப்பிட்டார்.

வளிமண்டலத் திணைக்களம் தனது தேசிய ரீதியிலான தனது கடப்பாடுகளைச் செய்யாது ஒவ்வொருவருக்கும் பந்து கைம்மாற்றுவதானது கவலைக்குரிய விடயமெனவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சரத்குமார, அவர்கள் எந்தவொரு ஊடகத்திற்கும் அதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

பலநாள் மீனவப் படகுகளுக்கு தெளிவுறுத்த முயற்சிசெய்ய முடிந்தாலும் ஒருநாள் மீனவப் படகுகளுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் கொடுக்கமுடியாத நிலையில் வானொலி மூலமேனும் தெளிவுறுத்தியிருந்தால் இவ்வாறானதொரு துன்பியல் நிலை தோன்றியிருக்காது என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(கேஎப்)

Read more...

Tuesday, June 11, 2013

தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்குமாறு விஷ்ணு தெய்வத்திடம் வேண்டுகிறார் ரணில்....!

மக்கள் மனங்கொள்ளும் அரசொன்றை அமைப்பதற்காக தமக்கு ஒருமுறையேனும் உதவுமாறு வேண்டியும், தற்போதைய அரசின் இலஞ்சம் மற்றும் ஊழல்களினால் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் மக்களைப் பாதுகாக்குமாறும் வேண்டி நாடளாவிய விஷ்ணு தேவ பூசைகள் ஆயிரத்தை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதன் முதற்கட்ட விஷ்ணு தேவபூசை நேற்று (10) தெவுந்தர தேவாலயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

நாடெங்கிலும் உள்ள 100 விஷ்ணு தேவாலயங்களில் இந்தப் பூசை நடைபெறவுள்ளதோடு, இலங்கை நாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவுள்ள விஷ்ணு தெய்வத்திடம் இந்த வேண்டுகோள் பூசைமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ள இவ்விடயம் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அதனை ஒழுங்கு செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் தயா கமகே குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

மாத்தறையிலிருந்து கொழும்புக்கு 1 1/2 மணித்தியாலங்களே...! காலி - மாத்தறை நவம்பர் 18 இலிருந்து...

தெற்கின் அதிவேகப் பாதையில் காலி பின்னதுவையிலிருந்து மாத்தறை வரையான பகுதி நவம்பர் மாதம் 18 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகின்றார்.

இந்தப் பகுதியையும் திறந்துவைத்ததன் பின்னர் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு ஒன்றரை மணித்தியாலங்களில் பயணம் செய்யலாம் எனவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

நேற்று முன்தினம் (09) மாத்தறையில் இடம்பெற்ற மாத்தறை - கொடகமை வரை உட்பிரவேச வீதி நிர்மாணிப்புப் பணிகளை ஆரம்பிக்குமுகமாக நடைபெற்ற விழாவின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மாத்தறையிலிருந்து கொடகமை வரையிலான நுழைவுப் பாதையை அமைப்பதற்காக, அரசாங்கம் பெற்றுக்கொண்ட இடங்களுக்காக 420 பேருக்கு 437 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

இராணுவ வீரர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஹிங்குரக்கொடையிலமைந்துள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் 50 பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் ஹிங்குரக்கொட மற்றும் பொலன்னறுவ வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் உட்கொண்ட உணவு விஷமானதன் காரணமாகவே அவர்கள் சுகவீனமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

ரணில் விக்கிரமசிங்க - விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல்!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று (11) செவ்வாய்க்கிழமை பிற்பகல் சராமரியான கல்வீச்சு மற்றும் கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய - மீகெட்டுவத்தபிரதேசத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடும்போது, நூற்றுக்கணக்கானோர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலுக்குச் சென்று கடும் காற்றுக் காரணமாக அனர்த்த்த்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்குச் சென்றபோதே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(கேஎப்)

Read more...

தேரரை தாக்கிய 17 பிக்கு மாணவர்கள் கைது!

மாத்தறை சுதர்ஷி பிரிவெனா உயர்க்கல்லூரியில் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த தேரர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய அதே கல்லூரியைச் சேர்ந்த 17பிக்கு மாணவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான அக்குரஸ்ஸ தம்மபால தேரர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

யாழில் ஆயுர்வேத மாநாடும் கண்காட்சியும்! (படங்கள்)

சித்த மருத்துவ மாநாடும் கண்காட்சியும் நேற்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுனரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சுதேச ஆயுர்வேத வைத்திய அமைச்சின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்மாநாடு மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியை முன்னிட்டு ஆயுர்வேத அமைச்சினால் யாழ் நிலாவரை ஆயர்வேத மத்திய மருந்தக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத்தோட்டம் ஒன்றும் ஆளுனரினால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 25 ற்கும் மேற்பட்ட சித்த மருத்துவ உற்பத்தி நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ கண்காட்சி ஒன்றும் இங்கு இடம் பெற்றுவருகின்றது இதன்போது சித்தமருத்துவத்துறையில் நீண்டகாலம் சேவையாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர்களும் ஆளுனரினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாண சுதேச வைத்தியப் பணிப்பாளர் சியாமா துரைரட்ணம், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்,மற்றும் வடமாகாணத்தைச்சேர்ந்த சித்த மருத்துவர்கள் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த ஒருவர் கழிவகற்றும் தொழிலுக்கு முன்வருவாரா? - எச்.ரஹ்மான் ஆளுநருக்கு கடிதம்!

கல்முனை மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றும் 112 ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்! .

கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற 112 ஊழியர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிப்பதோடு, அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கும் ஆவன செய்யப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இசட்ஏ.எச்.ரஹ்மான் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்கிரமவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற ஊழியர்களின் நியமனம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அவர் ஆளுநரிடம் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த பல வருடங்களாக போதிய சம்பளமின்றி தியாக மனப்பாங்குடன் கடமையாற்றி வருகின்ற இந்த ஊழியர்களின் சேவை இந்த மாநகர சபைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதபடுகிறது. இவர்களுள் பெரும்பாலானோர் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளிகளாவர். இவர்களின் பங்களிப்பின்றி கல்முனை மாநகரப் பிரதேசங்களை சுத்தமாக வைத்திருப்பதோ அன்றாடம் குப்பை கூளங்களை அகற்றுவதோ முடியாத காரியமாகி விடும். இதனால் இப்பிரதேசங்கள் யாவும் நாற்றமெடுக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது கிழக்கு மாகாண சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆட்சேர்ப்புத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் காரணமாக குறித்த தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீண்ட காலம் கடமையாற்றியும் எவ்வித பயனுமின்றி அவர்களின் தொழில் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படப் போகிறது என்பதையும் நாம் மனிதாபிமான அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது.

இதனால் ஒருபுறம் கழிவகற்றல் பணி ஸ்தம்பிதமடைந்து கல்முனை மாநகரப் பிரதேசங்களில் சுகாதார சீர்கேடுகளும் துர்நாற்றமும் வீசும் என்பதோடு, மறுபுறம் இந்த ஏழைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நடுத்தெருவில் நிற்க வேடியேற்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் 2013.05.29ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் புதிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை தகைமையாக க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டு பாடங்களில் "C" அடங்கலாக ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் தரம் 08ஆம் ஆண்டு என்பது வேலைத் தொழிலாளிகளின் அடிப்படை கல்வித் தகைமையாக காணப்பட்டது.

உண்மையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த ஒருவர் கழிவகற்றும் தொழிலுக்கு முன்வருவாரா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நிச்சயமாக க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு தனியார் நிறுவனத்திலாவது இலிகிதர் அல்லது அதற்குச் சமமான ஒரு தொழிலையே நாடிச் செல்வார்கள்.

இந்நிலையில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள இப்புதிய சுற்று நிருபம் இந்த சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

சிலரின் தனிப்பட்ட அரசியல் குரோதங்களுக்காக செய்யப்பட்ட முறைப்பாடுகளைக் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநகர சபையின் அசாதாரண சூழ்நிலைக்கும் கழிவகற்றும் பணியை முடக்குவதற்கும் ஏழைத் தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பதற்கும் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆகையினால் குறித்த 112 ஊழியர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிப்பதோடு, அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கும் ஆவன செய்யுமாறு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட்ஏ.எச்.ரஹ்மான் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பி.எம்.எம்.ஏ.காதர்

Read more...

என்னை எவராலும் அழிக்க முடியாது. என்னை அழிப்பதற்கு ஆண்டவன் ஒருவனால் தான் முடியும்!

யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரும்பியது.

60 வருட கால அரசியல் அனுபவத்தினை கொண்டுள்ள நான் இந்த அரசியலில் நிறைய அடிவாங்கயிருக்கின்றேன். என்னை அழிப்பதற்கு பலர் முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் என்னை அழிக்க முடியவில்லை. என்னை எவராலும் அழிக்க முடியாது. என்னை அழிப்பற்கு ஆண்டவன் ஒருவனால் தான் முடியும் எனவும், இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றதோ அதற்குட்பட்டவனாகவே நான் வாழந்து வருகின்றேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் இதை மாற்றி அமைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் 'இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று ஒரு இனத்தினர் இல்லை என ஜனாதிபதி சொல்லி வருகின்றார் அவ்வாறு சிறுபான்மை இனத்தினர் இல்லை என்ற உணர்வை அரசாங்கமே தனது நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்' என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் கிளிநொச்சி இன்று ஒரு சிறந்த நகரமான விளங்குவதற்கு நானும் ஒரு காரணம். நான் இல்லாவிட்டால் கிளிநொச்சி இந்தளவிற்கு வந்திருக்காது என்றும் நேர்மையாக இருந்த காரணத்தினால் பல வாய்ப்புக்களை நான் இழந்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் என கேட்ட போது அதற்கு த.தே கூட்டமைப்பு ஒத்துவரவில்லை. த.தே கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த பயணங்களின் போது எனக்கு ஒரு அழைப்பையேனும் விடுப்பது கிடையாது. அல்லது வெளிநாட்டில் கதைப்பதற்கு ஏதாவது யோசனை வைத்திருக்கின்றீர்களா என்று கூட சம்மந்தன் கேட்பது கிடையாது. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும் போதும் மட்டும் ஆனந்த சங்கரி இவ்வாறு ஊடகங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று தெரிவிப்பார்' என அவர் ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டினார்.

'கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இருப்பினும், யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரும்பியது. என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டில் இருபது வருடங்களாகவே ஜனநாயகம் இல்லை எனவும், காசு கொடுத்து அனைவரையும் அழைத்துவந்து மூன்றில் இரண்டைக் காட்டி ஆட்சி நடத்துப்படுவதாக தெரிவித்த ஆனந்த சங்கரி, "நாட்டை நீர் பாதுகாக்க வேண்டுமே தவிர உமது சீடர்கள் பாதுகாக்க கூடாது நாட்டை உம் சீடர்கள் அழிக்கின்றார்கள்" என்று ஜனாதிபதியிடம் தான் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஊடகத்தொழில் என்பது இன்று ஒரு பயங்கரமான தொழிலாக இந்த நாட்டில் மாறிவிட்டது. இங்கு நடக்கும் அனைத்து விடயங்களையும் 10 நிமிடங்களில் உலகம் பூராகவும் வெளிப்படுத்தக்கூடிய நிலையில் இன்றைய விஞ்ஞான உலகம் வளாந்து நிக்கின்றது. இந்த வகையில் ஊடகங்கள் உண்மையான விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும். இவ்வாறான பயங்கரமான தொழிலை மேற்கொள்பவர்கள் தாங்கள் எழுதுவதை நன்றாக யோசித்து எழுத வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Read more...

13ல் மேற்கொள்ள வேண்டிய ஐந்து மாற்றங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாம்!

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய ஐந்து மாற்றங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணசபை அமைக்கப்படும் முன்னர் யாப்பிற்கு இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியமானவை என ஜாதிக ஹெல உறுமைய முன்வைத்த 5 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களினால் 13ம் திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் நேற்று மாலை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாகவும், இந்த ஐந்து மாற்றங்களில் இரண்டு அமைச்சரவையில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய மூன்று மாற்றங்களும் உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு முன்வைப்பதாக ஜாதிக ஹெல உறுமய தலைவர்களிடம் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும், அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெறும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய செயற்பட வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read more...

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையருக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரட்டைப் பிரஜாவுரிமை!

ஐரோப்பா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று அங்கு வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு, எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடிய கல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்ற 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர், ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்ற நிலையில் அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க ஆரம்பத்தில் ஒரு இலட்சம் பேருக்கு இரட்டைப் பிரஜாஉரிமை வழங்கப்பட இருப்பதாக குடிவரவு, குடிய கல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read more...

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன கைது!

கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். பம்பலப்பிட்டியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாஸ் குணவர்தனவிடம் நேற்றிரவு வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டதன் பின்னரே அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் தொடர்பில் இலங்கையிடம் மன்னிப்பு கோரியது ஜ.சி.சி!

ஜூன் 6ம் திகதி ஆரம்பமான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கைத் தேசியக் கொடி மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்ட போது ஹிந்தி மொழிப் பாடலொன்று ஒலிபரப்பப் பட்டிருந்தது இந்த விடயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு ஏற்பட்ட அசாதாரண சம்பவத்திற்கு சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கைக்யிடம் மன்னிப்புக்கோரியுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுமென சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்ததுடன், அது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தது. இதற்கிணங்க இலங்கை கிரிக்கெட் சபை அனுப்பிய கடிதத்திற்குப் பதிலனுப்பியுள்ள ஜ.சி.சி சுற்றுத்தொடர்களுக்கான நிர்வாகி கிறிஸ் ரெட்லீ, இவ்விடயத்திற்காக மன்னிப்புக் கோருவதாகவும், குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்ய நியமிக்கப்பட்ட நிறுவனத்திடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read more...

சோபித்த தேரரின் அமைப்பு ஜனாதிபதி அபேட்சகரைத் தெரிவுசெய்துவிட்டது...!

நீதியான சமூகத்திற்காக செயற்படும் தேசிய அமைப்பின் அநுசரணையோடு எதிர்வரும் ஜனாதிபதிக்கான பொது அபேட்சகர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மாதுலுவாவே சோபித்த தேரரின் தலைமைத்துவத்தோடு செயற்படுகின்ற இவ்வமைப்பு, தேர்தலில் முன்னிறுத்தவுள்ள ஜனாதிபதியை அபேட்சகர் யார் என்பதை முன்னணி மதத் தலைவர்களிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.

அரசியல் கட்சியொன்றில் உயர்பதவிகள் பல வகித்த பௌத்த தலைவர் ஒருவரே ஜனாதிபதி அபேட்சகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த அபேட்சகர் நியமிக்கப்படுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை... தாம் எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தக் குளறுபடுகளும் ஏற்படாது என்றும் குறிப்பிடப்படுகின்றன.

(கேஎப்)

Read more...

Monday, June 10, 2013

இளவரசர் ஹாரி என்னை காப்பாற்றிருக்காவிட்டால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் - ஜேம்ஸ

10 ஆண்டு இராணுவ சேவைக்கு பின் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து இராணுவ வீரர் ஜேம்ஸ் வார்டன் தனது இராணுவ பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து "கால்டு அவுட் இன் தி ஆர்மி" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அப்புத்தகத்தில் தனது அனுபவத்தை தெரிவிக்கையில், நான் ஆப்கானிஸ்தானில் பாஸ்டியன் முகாமில் தங்கியிருந்தேன் அப்போது எங்களுடன் இளவரசர் ஹாரியும் இருந்தார். இந்த நிலையில் ஓரின சேர்க்கையாளனாகிய என் மீது சில இராணுவ வீரர்கள் கடும் வெறுப்பில் இருந்தனர். சம்பவத்தன்று, 6 வீரர்கள் சேர்ந்து என்னை அடித்து உதைத்து கொலை செய்ய முயன்றனர்.

இதை பார்த்த இளவரசர் ஹாரி என்னை அவர்களிடம் இருந்து மன உறுதியுடன் காப்பாற்றினார். மேலும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, என்னை தொடர்ந்து மிரட்டினாலோ ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அன்று இளவரசர் ஹாரி என்னை காப்பாற்றி இருக்காவிட்டால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் இந்த நடவடிக்கையை போஸ்னியாவில் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி உட்பட இங்கிலாந்து இராணுவ அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.

Read more...

இலங்கையில் மேலும் 13 பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ நடவடிக்கை!- டலஸ் அழகபெரும

இலங்கையில் மேலும் 13 பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவுவதற்கு அமைச்சர் டலஸ் அழகபெரும அமைச் சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், அதற்கிணங்க பல்கலைக்கழக கல்லூரிகளை நிர்மானிப்பதற்காகன நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டத்திற்கிணங்க பெல்வூட் அழகியற்கலை மையத்திலும், சபுகஸ்கந்த தொழில் பயிற்சி மையத்திலும் இரண்டு பல்கலைக்கழக கல்லூரிகள் நிறுவுவதற்கும், ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார கல்விக்கான பல்கலைகழக கல்லூரியையும், அத்துடன் இரத்மலான, குளியாபிட்டிய, தலல்ல, பத்தேகம, கட்டுநாயக்க, அநுராதபுரம், பொரல்ல, கட்டுபத்த அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

06 வயதுக் குழந்தையை நாசமாக்கிய 60 வயதுக் கிழடு கைது!

சம்மாந்துறை வளத்தாப்பட்டி பிரதேசத்தில் சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் 06 வயது சிறுயெருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 60 வயது வயோதிபர் ஒருவரை பெற்றோரின் முறைப்பாட்டிற்கிணங்க இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, அம்பாறை சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்துச் சென்று வயோதிபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடி சென்றவர்களின் படகு விபத்துக்குள்ளானது - 13 பேர் பலி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய சென்றவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். படகு மூழ்கியதால் மாயமாகி விட்ட கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர். இந்தோனீசியா வழியாக ஆஸ் திரேலியாவிற்குள் கள்ளத்தனமாக குடியேற கிட்டத்தட்ட 60க்கும் அதிகமானோர் படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.


அப்படி அவர்கள் சென்ற படகு கடந்த வெள்ளிக்கிழமை கிறுஸ்துமஸ் தீவிலிருந்து 65வது கடல் மைலில் விபத்துக்குள்ளா னது. இதுவரை மீட்புப் பணிகள் மூலம் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள் துறை அமைச்சர் ஜேசன் கிளார் கூறியுள்ளார். இது தவிர கடலில் மூழ்கிய மற்றவர்களைத் தேட 15 படகுகள், 10 விமானங்கள் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சொன்னார். படகு விபத்தில் சிக்கி கடலில் மிதந்த உடல்களை விபத்து நடந்த மறு நாள் மதியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட விமானம் கண்டுபிடித்தது. அதன்பிறகு 9 பேரின் உடல்கள் மட்டும் அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்தது.

Read more...

பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

கடந்த சில நாட்களாக நிலவிய சீரறற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணமானவர்களை தவிர மேலும் 31 பேர் காணாமல் போய்யுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read more...

இணைய சேவை வழங்கிகளில் ரகசியமாக தகவல்கள் சேகரிக்கும் அமெரிக்கா

ரகசிய தகவல் தேடு­த­லின் ஒரு பகு­தி­யாக அமெ­ரிக்க உள­வுத்­துறை கூகுள் போன்ற 9 பெரிய இணைய சேவை வழங்­கிகளை அணு­கு­வ­தாக ‘வாஷிங்­டன் ரிபோர்ட்’ தின­ச­ரிப் பத்­தி­ரிக்கை அறி­வித்­துள்­ளது. ‘நேஷனல் செக்­கி­யூ­ரிட்டி ஏஜென்சி (என்­எஸ்ஏ)’ மற்றும் ‘எஃப்­பிஐ’ இணைய சேவை வழங்­கிகளை நேர­டி­யாக அணுகி தனி நபர்­களின் இணைய தள நட­வ­டிக்கை­களான மின்னஞ்சல், உரையாடல் ஆகியவற்றைக் கண்­கா­ணிப்­ப­தாக அந்த செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.


‘மைக்­ரோ­சா­ஃப்ட்’, ‘யாகூ’, ‘கூகுள்’, ‘ஃபஸ்­பௌக்’, ‘ஆப்பிள்’, ‘பால்டாக்’, ‘ஏஓஎல்’, ‘ஸ்கைப்’, மற்றும் ‘யூ டியூப்’ போன்ற பெரிய நிறு­வ­னங்கள் இதில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக செய்­தி­கள் தெரி­விக்­கின்றன. மிகவும் ரக­சி­ய­மா­கக் கையா­ளப்­படும் ‘PRI­SM’ என்றழைக்­கப்­படும் இத்­திட்­டம் என்­எஸ்­ஏ­யின் சைகை உளவு இயக்­கு­ந­ர­கத்­தில் ஆய்­வுக்கு பயன்­படுத்­தக்­கூ­டி­யது ஆகும். 2007ம் ஆண்டு துவங்கப்­பட்ட இத்­திட்­டம் தற்போது அதீத வளர்ச்சி கண்டு அமெ­ரிக்க அதிபர் ஒபா­மா­வுக்கு தினமும் வழங்கப்­படும் மிக ரக­சி­ய­மான மற்றும் முக்கியமான தக­வல்­களுக்கு செய்தி வழங்கக்­கூ­டிய முக்கிய பங்களிப்­பாக இருக்­கிறது.

Read more...

ரோஹண விஜயவீரவின் மகளை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவும் - நீதவான்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மனைவியின் முறைப்பாட்டையடுத்து, கைதுசெய்யப்பட்ட ரோஹண விஜயவீரவின் மகளை, மனநல பரிசோதனைக்கு உட்படுத்தி முழுமையான அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தாய் மற்றும் சகோதரனை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள ரோஹண விஜயவீரவின் மகளின் வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் வைத்திய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதன் போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Read more...

பிரகீத் எக்னெலிகொட எமது நாட்டில் இல்லை! - பிரான்ஸ் உயர்ஸ்தானிகராலயம்

'இலங்கையில் 2010ல் காணாமல்போன 'லங்கா ஈ நியூஸி'ன் செய்தியாசிரியரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலிகொட எமது நாட்டில் இல்லை. அதற்கான எந்த ஆதாரமும் பதிவுகளும் எம்மிடமில்லை' என்று இலங்கைக்கான பிரான்ஸ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன பிரான்ஸில் பிரகீத் எக்னெலிகொடவை தனக்கு அறிமுகப்படுத்தியதாக பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் ஊடகங்களில் பலத்த சர்ச்சையை குறித்த விடயம் தோற்றுவித்திருந்தது.

இதனிடையே, குறித்த கூற்று முழுமையான பொய் என்று ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே, தமது நாட்டில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வசிப்பதற்கான எந்த பதிவும் இல்லை என்று பிரான்ஸ் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com