Friday, June 7, 2013

விமனத்தில் ஏற்பட்ட கோளாறினால் பரசூட் மூலம் விமானத்தை தரையிறக்கிய 76 வயது விமானி!

இங்கிலாந்தின் செல்டன்ஹம் என்ற இடத்தில் இன்று காலை 10.45 மணியளவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னர் பரசூட் மூலம் விமானத்தை தரையிறக்கி சிறுகாயங்களுடன் தப்பித்துள்ளார் இங்கிலாந்தைச சேர்ந்த 76 வயதான மைக் என்ற விமானி ஒருவர்.

இவ்விபத்தின் போது புத்தியசாதூர்யமாக செயற்பட்ட விமானி பரசூட் மூலம் தரையிறக்க முயற்சித்ததில் அப்பகுதியிலிருந்த வீட்டுத் தோட்டமொன்றில் விமானம் வீழ்ந்துள்ளது. இது குறித்த வீட்டின் உரிமையாளர் திருமதி. டீன் கூறுகையில், விபத்தின் போது நான் வீட்டிற்குள்ளே இருந்தேன். ஆனால் நான் சத்தத்தை மட்டுமே கேட்டேன். விபத்தினை காணவில்லை எனக்குறிப்பிட்டார்.

நல்லவேளை விமானம் வீட்டிற்குள் புகுந்துவிடவில்லை இதனால் நான் என்னை ஒரு அதிர்ஷ்டகாரியாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை விபத்து நடந்த சம்ப இடத்திற்கு அவசர உதவி அதிகாரிகள் விரைந்து விமானியை விமானத்திலுருந்து பாதுகாப்பாக வெளியில் எடுத்துள்ளார்.

சிறு காயங்களுடன் தப்பிய விமானிக்கு அவசர உதவிப்படை மருந்திட்டுள்ளது. குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து 2.5 மைல் தொலைவிலேயே விமான நிலையம் அமைந்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளான விமானம் 665600 அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது எனக் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

வட மாகாணத்தில் ஜூன் முதலாம் திகதி முதல் புகை பரிசோதனை!

ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து வட மாகாணத்திலும் புகை பரிசோதனை சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச்.ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வாகன பதிவு உள்ள அனைவரும் புகை பரிசோதனை சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புகை பரிசோதனை நிலையங்கள் தொடர்பில் ஏற்கனவே பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியுள்ளதாக எஸ்.எச்.ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

புகை பரிசோதனை நிலையங்கள் நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பில் சிக்கல் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுடன் புகை சான்றிதழை வழங்கும் உரிமையாளர்களுக்கு மாத்திரமே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுவரை வட மாகாணத்தில புகை பரிசோதனை மேற்கொள்ளப்படாததால் வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமற்போனதாக குறிப்பிட்ட எஸ்.எச்.ஹரிஷ்சந்திர தற்போது வட மாகாணத்திலும் புகை பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் அனைத்து வாகனங்கள் தொடர்பிலும் ஒரே நடைமுறையை பின்பற்ற முடியும் என தெரிவித்தார்.

Read more...

குழந்தைளை அலர்ஜிக் நோயிலிருந்து பாதுகாக்க வேண்டுமா? சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு........

மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் ஒவ்வாமை (அலர்ஜி) நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என விஞ்ஞானிகளின் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் உணவு பழக்கவழக்கள் தொடர்பில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிறுவயதில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜிக்கினால் பாதிக்கப்படாமல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். அத்துடன் இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன எனவும் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால் அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள் 1 வயது, 2 வயது,4 வயது 8 வயது மற்றும் 12 வயதுகளின் அடிப்படையில் குழந்தைகளை அவர்களின ஆய்வு செய்தனர்.

இவ்வாய்வுக்கிணங்க, இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள் எனவும் இவர்கள் மற்ற குழந்தைகளைவிட ஆரோக்கியத்தில் வளர்ச்சி உடையவர்களாக காணப்பட்டார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

வெளிநாடுகளில் இலங்கையர்கள் புரியும் குற்றத்திற்கு அரசு பொறுப்பல்ல: டிலான் பெரேரா!

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் அந்தநாடுகளில் புரியும் குற்றச் செயல்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் பொறுப்பேற்கமாட்டாது என அபு தாபியில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியச் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்ட தண்டனை அனுபவித்து வரும் பல தொழிலாளர்களின் குடும்பங்களிடமிருந்து எமது அமைச்சுக்கு தினமும் பல கடிதங்கள் வந்தவண்ணமுள்ளன. இருப்பினும் அவர்கள் தொழில்புரியும் நாடுகளில் உள்ள சட்டவிதிமுறைகளை மீறும்பட்சத்தில் அதுவிடயத்தில் எம்மால் தலையிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவர்களை மரண தண்டனையிலிருந்து பாதுகாக்கவும் எம்மால் முடியாது என குறிப்பிட்ட அமைச்சர் இருப்பினும் வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் எவரும் அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

Read more...

ஆசிரியைக்கு முத்தமிட்ட ஆசிரியரின் வழக்கு 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

சங்கீத ஆசிரியைக்கு முத்தமிட்டதாக கூறப்படும் உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இருதரப்பு விளக்கங்களையும் எழுத்து மூலம் எதிர்வரும் 13 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி தரப்பிலான சாட்சியமளிப்புகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. குற்றஞ் சாட்டப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் இது தனக்கெதிரான பொய்யான குற்றச்சாட்டாகும் என்றும் தனிப்பட்ட கோபம் காரணமாகவே தன்மீது இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியைக்கே, அதே பாடசாலையில் உடற்பயிற்சி கற்பிக்கும் ஆசிரியர் முத்தமிட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தான் வகுப்பறையில் தனியாக இருந்த சமையம் வகுப்பறைக்குள் உடற்பயிற்சி ஆசிரியர் வந்தார் எனவும் எனவே அவரை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு கூறிய போதே குறித்த ஆசிரியர் தனக்கு முத்தமிட்டதாக அந்த முறைப்பாட்டில் ஆசிரியை தெரிவித்துள்ளார்.

Read more...

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி கோரிக்கை!

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தற்போதைய சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்து கால நேரத்தை விரயம் செய்யாது 13ம் திருத்தச் சட்டத்தையே ரத்து செய்வது புத்திசாதூரியமான தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தேச மாகாணசபைத் திருத்தச் சட்டத்தில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் மாகாணசபை முறைமையானது இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என அவர் குறிப்பிட்ட அவர் மாகாணசபை முறைமைக்கு எதிர்ப்பை வெளியிடும் தமது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

முதலில் அரசாங்கம் மாகாணசபை முறைமையை இல்லாதொழித்துவிட்டு பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், தேவைகளுக்கும் தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இன்று வீதியில் நடக்கவும் முடியாதவர்களே தூதுவர்களாக இருக்கின்றனர்! - ராவண பலய

இன்று தூதுவர்களாக சேவைபுரியக்கூடியவர்கள் வீதியில் நடக்கவும் முடியாதவர்கள், தள்ளாடுபவர்கள். அதனால், வீதியில் நடந்து செல்ல முடியுமான புத்திசாதுர்யமானவர்களை தூதுவராலயங்களுக்கு நியமிக்குமாறு தாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக ராவண பலய அமைப்பின் இத்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பியர் வகையொன்றில் விளம்பரப் பலகை வைப்பதற்காக சீகிரியா தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதனை அவசரமாக நிறுத்துமாறு எச்சரிக்கைவிடுத்து ஜப்பான் அரசாங்கத்திற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தை, இலங்கையில் இயங்கும் ஜப்பான் தூதுவராலயத்திற்குக் கையளித்துவிட்டே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

'வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க சீகிரியா உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகின்றது. அது பாதுகாக்கப்பட வேண்டிய, ஆச்சரியம்மிக்க இடமாகும்'

அது எங்களுக்கு மிகவும் தேவைப்பாடானது. சீகிரியாவைப் பாதுகாப்பது இலங்கையர் அனைவரினதும் பொறுப்பாகும். அதற்குக் களங்கம் விளைவிக்கும் நாடு எதுவாகவிருப்பினும் அதற்கெதிராக ராவண பலய தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கும். ராவண பலய அமைப்பினராகிய நாம், இலங்கையராகிய நாம் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இதற்கெதிரான நடவடிக்கைளை வெகுவிரைவில் ஏற்பாடு செய்யுங்கள்' என்பதே என்றும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

சட்ட ரீதியற்ற கருக்கலைப்புக் குற்றத்திற்காக கலாநிதி சிரில் ரந்தெனியவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

பெண்ணொருவருக்கு கருக்கலைப்புச் செய்வதற்காக வேண்டி மருந்துகள் வழங்கிய குற்றத்திற்காக, வைத்தியக் கலாநிதி சிரில் ரந்தெனிய மற்றும் அவரது தாதிக்கு எதிராக சட்ட மா அதிபரினால் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு எதிராக கருக்கலைப்பு நிலையம் ஒன்று நடாத்திச் செல்வதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கர்ப்பவதியான பெண் பொலிஸ் அதிகாரிக்கும் கருக்கலைப்புக்கான மருந்துகள் வழங்கப்பட்டதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.

த சொய்ஸா மகளிர் மருத்துவமனை மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கலாநிதி சிரில் ரந்தெனியவு மாத்திரமன்றி அவரிடம் தாதியாகப் பணிபுரிந்த காலோச்சனா மெனிக்குமாரி என்பவருக்கெதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

(கேஎப்)

Read more...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர முடியுமே தவிர, அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு.... பாரதீய ஜனதா கட்சி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு இந்தியா தயாராக உள்ள அதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பிரச்சினைகளில் இந்தியா தலையிட்டு தீர்க்க முடியாது என பாரதீய ஜனதா கட்சி தூதுக்குழுவின் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்தியக்குழு வடக்கிலுள்ள அரசு பிரதிநிதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், படைத்தரப்பினர், சமூகக்குழுக்களின் உறுப்பினர்கள் என்று பல தரப்பையும் சந்தித்து இலங்கையின் நிலைப்பாடுகளை தெரிந்து கொண்டனர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைப்பற்றி முழுதாக தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிய குழுவினர் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

போரின் மறைமுக உண்மைகள்

தமிழீழ விடுதலை புலிகள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, பல இளம் தமிழ் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மனதில் விஷமூட்டி நாட்டை அச்சுறுத்தும் பயங்கரவாத இலக்குகளுக்காக அவர்களை பயன்படுத்திவந்தனர். இளம் ஜெயவதனியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவள் அனாதைச் சிறுமிகள் இல்லமான செஞ்சோலையில் வசிக்க நேர்தமையால் விடுதலை புலிகளுக்கு மிக சுலபமாக பிரச்சாரங்களூடாக அவள் மனதை விஷமூட்ட முடிந்தது.

ஜெயவதனிக்கு ஒரு தாயின் அன்பான அரவணைப்பை பெறும் அதிஷ்டம் கிட்டவில்லை. அவள், பெற்றோர்களை இழக்காமல் இருந்திருந்தால் ஒரு குடும்பமாக வாழும் வாழ்க்கையும், வாழ்க்கை ஒரு கனவாக மட்டுமாகவே இருந்திருக்காது.

அவள் எப்போழுதும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டால். ஆனால் அவளின் நிஜ வாழ்க்கை அவ்வாறு அமையவில்லை. ஆதரவற்ற அனாதைகளுக்காக புலிகளால் பராமரிக்கப்பட்ட செஞ்சோலையே அவள் அறிந்த ஒரே குடும்பமாகும். அவள் கல்வி கற்ற அவ் இல்லத்துக்கு, மிகுந்த கடமைப்பாடுடையவளாகவும் அவள் திகழ்ந்தாள்.

விஷமூட்டப்பட்ட உள்ளம்.

அவளுக்கு, தங்க இடம் கொடுத்து கல்வியும் வழங்கிய புலிகளுக்கு அவள் நன்றி உணர்வுடையவளாக இருந்தாள். இலங்கை இராணுவம் மற்றும் சிங்களம் மக்கள் கொடுமையானவர்கள் என்றும் நம்பத்தகாதவர்கள் என்றும் ஜெயவதனி விஷமூட்டி வளர்க்கப்பட்டாள். தமிழர்களை அழிக்கவே அவர்கள் செயற்படுவதாகவும் விஷமான கருத்துக்கள் அவள் மனதில் விதைக்கப்பட்டன. இவ்வாரான வெறுப்புக்களே பிற்காலத்தில் பயங்கரவாத்த்தில் இணைந்து செயற்பட வழிவகுத்தது.

"நான் அறிந்த ஒரே குடும்பம் இல்லத்தில் இருந்த சக அனாதைகள். அத்துடன் புலிகள் எம் மக்களை விடுவிக்க போராடிய ஹீரோக்கள் என்றும் அனாதை இல்லத்தில் எங்களுக்கு அக்கறைகாட்டியவரே நான் அறிந்த ஒரே அம்மா" என்றும் அவள் நினைவு கூர்ந்தாள்.

அவள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து, அரச படைகளுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடினாள். “நான் என் வாழ்வில், அனாதை குழந்தைகள் மற்றும் என்போன்ற சக போராளிகளை தவிர வேறு எவருடனும் பழகியிருக்கவில்லை. அரச படைகள் குறிப்பாக இராணுவம் நம்மை கொல்வதற்காக செயற்படுவதாகவும் அவர்கள் கொடூரமான கொலையாளிகள் என்றும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம்” என அவள் குறிப்பிடுகின்றாள்.


ஜெயவதனியைப் போலவே ஏனைய பல போராளிகளும் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு தவறான கருத்துக்களுடன் புலிகளியக்கத்துக்கு இணைக்கப்பட்டுருந்தனர். ஜயவதனி போன்றே, ஏனையவர்களும் கொலையாளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் மாறியதற்கான கதைகளை தம்முள் சுமந்துள்ளனர்.

அவள் பிற்காலத்தில் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருந்த, தன்னைவிட மூத்த போராளியான சிதம்பரநாதன் நாகநாதன் என்பவரை சந்திக்க நேர்ந்தது அவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் மலர்ந்தது. பல தடங்கல்களுக்கு மத்தியில்,  திருமணத்துக்கு பின்னரும் இயக்கத்துக்காக தமது பங்களிப்பை வழங்கும் ஒப்பந்தத்தில் இருவரும் திருமணம் செய்து முரசுமோட்டையில் குடியமர்ந்தனர். அவ்வாறே திருமணத்தின் பின்னரும் இயக்கதுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

புலிகளின் கொடுமைகளை உணர்தல்

காலம் நகர்ந்தது, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர் அத்துடன் ஜெயவதனி மூன்றாவது மகனை கருத்தரித்திருந்தாள். பயங்கரவாதிகள் மீது நம்பிக்கை கொண்ட ஏனையவர்களைப் போலவே, பயங்கரவாதத்துவமானது அவர்களுள் ஆழமாகப் பதிந்திருந்ததுடன் அவர்களது தலைமை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களுள் தனி ஈழம் என்ற கனவு ஊறியிருந்ததுடன், தலைவர்கள் முற்று முழுதாக அவர்களுக்காக பாடுபடுவதாகவும், எந் நேரமும் துன்பங்களில் இருந்து பாதுகாக்கவே செயற்படுவதாகவும் எண்ணியிருந்தனர்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் கடைசித் தறுவாயில், அவர்களது உயரதிகாரிகளினதும் தலைவர்களினதும் கடுமையான செயற்பாடுகள் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு தமது குழந்தைகளையும் குடும்பத்தினரையும் இயக்கத்தின் சம்மதத்துடன் அனுப்ப முயன்றனர். ஆனால் அவர்களது இயக்கம் தமது சொந்த இனத்தை நோக்கியே செல்களை எறிந்தன. தமது இனத்துக்காகவே செயற்படுவதாக கூறியவர்கள், அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக்காக அவர்களது மக்களையும் அழிக்கத் தொடங்கினர்

சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் தம்முடன் போராடி ஊனமுற்ற ஆண், பெண் போராளிகளுக்குக் கூட அவர்கள் வாழ்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அவர்களை உயிருடன் வாகனங்களில் ஏற்றி வெடிக்கச் செய்தனர். என நாகநாதன் நினைவு கூர்ந்தார்.


இராணுவம் எக்காரணம் கொண்டும் மனிதாபிமானமற்ற முறையில் யுத்த முனையில் அப்பாவிகளை கொல்லவில்லை. யுத்தத்தின் கடைசி கட்டத்தில், இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வருமாறு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்தனர். ஆனால் புலிகளின் பிடியில் இருந்து இராணுவத்தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவித் தமிழ் மக்களை இந்தக் கொடிய பயங்கரவாதிகளே சுட்டுக் கொன்றனர். என ஜெயவதனி நினைவு கூர்ந்தார்

மனித கேடயம்

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 300,000க்கும் அதிகமான தமிழ்மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் மனித கேடயங்களாக துப்பாக்கி முனையில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இக்காலப்பகுதியில் ஜெயவதனி தனது மூன்றாவது மகனை ஈன்றெடுத்தாள். புலிகளியக்கத்தின் அனுபவம் வாய்ந்த ஒருவராக மட்டும் ஜெயவதனி இருக்கவில்லை. அவ்வியக்கத்தின் விடுதலைப் போராளியாக பல வருடங்கள் இருந்துள்ளார். ஆயினும் அரண்களுக்கு அப்பாலுள்ள உண்மையான சுதந்திரத்தை ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ந்தபோது அவளுக்கு அந்த சுதந்திரம் தேவைப்பட்டது. ஆனால் தமிழர்களின் சுதந்திரத்துக்காக போராடுவதாக செயற்பட்ட புலிகள் அதை மறுத்தனர்.

என் மனைவியும் பிறந்து ஏழு நாளேயான பிள்ளையும் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்காக மண் அரணை நெருங்கும் போது புலிகளே செல் எறிந்தனர். என் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டதாக நினைத்து நான் மற்ற இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு இராணுவகட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டேன். ஆனால் இராணுவத்தினரின் மகத்துவமான செயற்பாடுகாரணமாக ஜெயவதனியும் குழந்தையும் உயிர்பிழைத்தனர். அவர்களை காப்பாற்ற இராணுவத்தினரும் மருத்துவர்களும் கடுமையாக பாடுபட்டனர். என்று நாகநாதன் நினைவு கூர்ந்தார்.

புலிகளின் ஆதரவாளர்கள் அறிந்திராத உண்மைகளை இவர்களது கதை விளக்குகின்றது. ஜெயவதனி தனது சுய அனுபவம் மூலம் இவற்றை விபரிக்கின்றாள். ஒரு போராளியாக தனது மனச்சாட்சியினுள் இறக்கின்றாள். தற்போது மீண்டும் உயிர்பெற்று நாட்டுக்காக செயற்படுவது அவளுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவள், வேதனை மிகுந்த கடந்த காலத்தைக் கொண்டிருந்தாலும் இன்று அன்பான தாயாகவும், மனைவியுமாக இருக்கிறாள்.

Read more...

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தோரின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த குறைநிரப்பு வாக்காளர் இடாப்பொன்று தயாரிப்பு!

வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள சட்ட மூலமானது வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரகாரம் இடம்பெயர்ந்த மக்களுக்கென குறைநிரப்பு வாக்காளர் இடாப்பொன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த ஒரு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டு 2009 - 2012 காலப்பகுதியில் வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வேறு ஒரு மாவட்டத்தில் தங்கியிருந்தமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்தச் சட்டமூலத்துக்கு அமைய இடம்பெயர்ந்து தற்காலிகமாக ஒரு இடத்தில் தங்கியுள்ளவர்கள் தமது சொந்த மாவட்டத்திற்குச் சென்று வாக்களிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Read more...

Thursday, June 6, 2013

பட்டம் பெற்றதை 250 கோடி ரூபா செலவழித்து கொண்டாடிய சவூதி அரேபிய இளவரசர்களில் ஒருவர்!

சவூதி அரேபிய இளவரசர்களில் ஒருவரான அல் சவூத் சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்தார்.தான் பட்டம்பெற்றதை நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக 19.5 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதி 250 கோடி ரூபா) செலவழித்துள்ளார்.

இதற்காக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள “டிஸ்னிலேண்ட்” பொழுதுபோக்கு பூங்காவை மூன்று நாட்களுக்கு பதிவு செய்தார். தன் நண்பர்கள் 60 பேருடன் இந்த பூங்காவில் மூன்று நாட்களாக பொழுதை கழித்தார். இவருக்கு தனி பாதுகாப்புப் பிரிவுப் பணியில் அமர்த்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் இளவரசர் சவுத் 19.5 மில்லியன் டொலர் செலவிட்டதாக “டிஸ்னிலேண்ட்” நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

காலஞ்சென்ற சவூதியின் முடிக்குரிய இளவரசரான நயப் பின் அப்துல் அஸிஸ் பின் சவுத்தின் மூன்றாவது மனைவியின் மகனே பஹ்த் அல் சவுத் ஆவார். இவரது தாயான மாஹா பின்த் மொஹமத் பின் ஆஹமத் அல் சுதைசி பிரான்ஸின் ஆடம்பர ஹோட்டலான ஷங்ரி லாவில் 5 மில்லியன் பவுண் தொகை வில்லை வைத்துவிட்டு நள்ளிரவில் தப்பிச்சென்றார். இது தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் கடந்த மார்ச்சில் பிரான்ஸ் நீதிமன்றம் அல் சுதைசியின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றில்

இடம்பெயர்ந்த வடபகுதி வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று (6.6.2013) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் மேற்படி வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை பிரதான தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வரவேற்றுள்ளன.இதனூடாக யுத்தம் காரணமாக வாக்காளர்களாக தம்மை பதிவு செய்யாத சுமார் 18 ஆயிரம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கவுள்ளதாக பெப்ரல் மற்றும் கபே ஆகிய அமைப்புகள் தெரிவித்தன. இதனை சகல கட்சிகளும் ஆதரவு அளித்து ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன.

மேற்படி சட்டமூலத்தை வரவேற்பதாகக் கூறிய பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி யுத்தத்தினால் தம்மை எங்கும் பதிவு செய்யாத வடபகுதி மக்களுக்கு தாம் முன்பிருந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் கிடைப்பதாகக் கூறினார். மேற்படி சட்டமூலம் வடபகுதி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் என கூறிய அவர் இதனை அமுல்படுத்த தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தமது அமைப்பு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடபகுதி இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை உறுதி செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தினூடாக மக்களின் இறைமை உறுதி செய்யப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்தது.வடக்கில் வாழ்ந்த பெருமளவு மக்கள் பல காரணங்களால் இடம்பெயர்ந்தனர். சுமார் 15,000 பேர் நாட்டில் எங்கும் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க முடியாதுள்ளது. அந்த மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை வரவேற்பதாகவும் கபே கூறியுள்ளது.

புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதனூடாக 18 ஆயிரம் பேருக்கு தம்மை வாக்காளர்களாக பதிய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மேற்படி அமைப்பு இதற்கு எதுவித எதிர்ப்புமின்றி சகல கட்சிகளும் ஆதரவளித்து நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளது.

இதனூடாக வடபகுதி மக்களுக்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடைக்கும் எனவும் கபே குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வடபகுதியில் அடையாள அட்டை இல்லாத சுமார் ஒரு இலட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக பப்ரல் அமைப்பு வடக்கில் நடமாடும் சேவை நடத்திவருகிறது.

வட மாகாண தேர்தலை இலக்குவைத்து நடத்தப்படும் இந்த வேலையினூடாக பெருமளவு மக்கள் பயனடைந்து வருவதாக பப்ரல் அமைப்பு கூறியது.

Read more...

ஆட்கடத்தல், பரஸ்பர சட்ட உதவிகள் குறித்து நீதிபதிகளுக்கான செயலமர்வு!

ஆட்கடத்தல் மற்றும் நாடுகளுக்கிடையிலான குற்றச்செயல்கள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆட்கடத்தல் மற்றும் குற்றச்செயல் ஒழிப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு என்பன சம்மந்தமாக 39 இலங்கை நீதி பதிபளுக்கென நீர்கொழும்பில் மே 31 தொடக்கம் ஜூன் 02 ஆம் திகதி வரை கருத்தரங்கு ஒன்றினை நடத்தியிருந்தது.

Read more...

21 வயது மகள் ஓடிச் சென்று 19 வயது காதலனுடன் பதிவுத் திருமணம்: தாய் தீக்குளிப்பு!

மகள் காதலனுடன் ஓடிச் சென்று பதிவுத் திருமணம் செய்ததை அறிந்த யாழ். வல்வெட்டித்துறைப் பகுதியை சேர்ந்த தாய் உடலில் எண்ணையூற்றி தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த குறித்த பெண்ணின் தந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இறந்துள்ளார். இந்த நிலையில் 21 வயதுடைய தனது ஒரே மகள் 19 வயது பையனை காதலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து மகள் தனது 19 வயது காதலனுடன் ஓடிச் சென்றுள்ளார். இதனை தாங்க முடியாது தாய் தன்னைத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ மூட்டி உயிரிழந்த தாயின் சடலம் மந்திகை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு வடமாகாண ஆளுநருடன் சந்தித்துப்பு!

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரெஸ் பாபு ஆகியோருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப் மற்றும் இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன்,அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாண அமைச்சுக்களின் கீழ் உள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read more...

பிரபாகரனின் முல்லைத்தீவு காட்டு மாளிகையை பார்வையிட அனுமதி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் மூன்று அடுக்காக சுமார் 40 அடிக்கு மேல் நிலத்தின் கீழ் பாரிய பதுங்கு குழி வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் இந்த வீட்டின் முகப்பு தோற்றம் சாதாரண வீட்டின் தோற்றத்தை உடைய போதினிலும் உள்ளே மூன்று அடுக்கு மாளிகையாகவும் அத்துடன் வாகன தரிப்பிடமும் நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டை சுற்றி பல காவலரண்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இந்த வீடு அமைந்திருந்துள்ளது.

Read more...

பிரதி பொலிஸ் மா அதிபரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை! கொலைச் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மூவர் கைது

பம்பலப்பிட்டியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு பொலிஸ் கான்ஸ்ரபிள்களும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

தொம்பே பகுதியில் வர்த்தகர் கடத்திக் கொலைசெய்யப்பட்டமை தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

"தீ" யினால் மசூதி முற்றாக சேதம்! இராணுவ வீரரின் கொலைக்கு பழிக்குப் பழியா?

இலண்டனில் கடந்த மே மாதம் 22 ஆம் திததி, இராணுவ வீரர் ஒருவர் புரட்சியாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இஸ்லாமியர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசு ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்நிலையில் நேற்று வடக்கு இலண்டனில், முஸ்வெல் ஹில் பகுதியில் உள்ள சமுதாய மையம் ஒன்று தீப்பற்றி எரிவதாகக் பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் தீயினால் அங்கிருந்த மசூதி முற்றிலும் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தீயினால் அருகில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், அந்த கட்டிடத்தில் சோமாலிய வீரர்களுக்கான நல்வாழ்வு மையம் இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

எனினும் குறித்த கட்டிடங்களில் இருந்தவர்கள் பத்திரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் அமைப்பின் ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கையில், முஸ்லிகளுக்கு இடையிலான எதிர்ப்பும் பெருகி உள்ளதாகவும், அதுகுறித்த கவனம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சோமாலியர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பாதுகாப்பும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Read more...

ஆப்பிழுத்து மாட்டிய புலிக்கொடி தளபதி! – அருள் அம்பலம்.

லண்டன் புலிக்கொடி வீரர்களுக்கு பிரிசித்தி பெற்ற இடம். தமிழ் தேசிய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் ஆளை விட்டால் காணும் என்று திறந்த விசாவிலும், கள்ள விசாவிலும், விசாவே இல்லாது கையை உயர்த்தி வந்த கோழைகள் பலர்தான் இன்று லண்டனில் புலிக்கொடி வீரர்களாக மாறியுள்ளனர். வந்த புதிதில் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் திட்டித் தீர்த்த இந்த பெருந்தகைகளே, இன்று புலிகள் அழிந்த பின்னரும் புலிகளின் தலைவர் எங்களிடம் போராட்டத்தை தந்து விட்டு போய்விட்டார், நாங்களே இனி தமிழ் தேசியத்தை காக்கும் தூண்கள், தமிழீழத்தை பெறாது நாங்கள் தூங்க மாட்டோம் என்று கூச்சலிட்டபடி, தங்கள் பெரும் ஆயுதமாக புலிக்கொடியை தூக்கியபடி, பகுதி நேர போராளிகளாக இவர்கள் மாறியுள்ளனர். ஆனையிறவு முகாமை புலிகள் வெற்றி கொண்ட பின்னர் புலிகள் பக்கம் தாவிய இந்த புலிக்கொடி வீரர்கள் கல்யாணம், கருமாதி, சாமத்தியவீடு, ஊர் விழா, உலக்கை விழா தவிர்ந்த ஏனைய தமது வெட்டியான நேரத்தில் மட்டும் புலிக்கொடி ஏந்தி ஊர்வலங்களுக்கு போவதே இவர்களின் பொழுது போக்கு புலிக்கொடி போராட்டம்.

இந்த போராட்த்தில் தொண்டை கிழிய கத்துவதற்காக மட்டும் சில ஆங்கில வார்த்தைகளை தெளிவாக படித்து டிப்பிளமோவும் எடுத்துள்ளனனர். 'அவர் லீடர் பிரபாகரன், வீ வோண்ட் தமிழ் ஈழம்' போன்ற அங்கில வார்த்தைகளில் டிப்பிளமோ எடுத்த இந்த புலக்கொடி வீரர்களில் பலர் வேலைக்கு பேவதே இல்லை! அரச பணத்தில் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் கறந்து சாட்டு மேனிக்கு ஒரு மினிக் கப் அல்லது கடையில் பகுதி நேர வேலை என்று வாழ்க்கை ஓட்டுவார்கள். இந்த பகுதி நேர வேலை கூட அண்மையில் பிரித்தானிய அரசு வேலையற்றோருக்கு கொடுக்கும் கொடுப்பனவுகளில் பல இறுக்கங்களை கொண்டு வந்ததை அடுத்தே செய்து வருகின்றனர். ஆனால் இந்த புலக்கொடி வீரர்கள் பண விசயத்தில் வலு கறார்! வட்டிக்கு கொடுத்தல் பினாமி பெயரில் வியாபாரம் செய்வது போன்ற பல கில்லாடி வேலைகளை செய்து வருகின்றனர்.

இப்படியான ஒரு புலிக்கொடி வீரர்தான் அண்மையில் இலங்கை சென்ற போது இவரது கில்லாடி வேலையாலேயே இலங்கை உளவுத்துறையிடம் மாட்டிக்கொண்டு விட்டார். லண்டனில் வட்டிக்கு பணம் கொடுக்கும் இந்த புலிக்கொடி வீரர் அண்மையில் தன் குடும்ப சகிதமாக வன்னி சென்றுள்ளார். வட்டிக்கு பணம் கொடுப்பது பாவச் செயல் என்பதாலோ என்னவோ தனது பாவங்களை கழுவ ஒரு கோயிலில் நேர்திகடனை முடிக்கவே அங்கு பயணமானார். நேர்த்திக்கடன் எல்லாம் முடிந்து லண்டன் திரும்ப இருக்கையில் இலங்கை உளவுத்துறை புலிக்கொடி வீரரை மடக்கிப் பிடித்தது.
வழமை போல புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் குய்யோ முறையே என்று கூச்சலுடன் அப்பாவித் தமிழனை மடக்கிய இலங்கை அரசு தமிழரை அழிக்கும் இலங்கை அரசு என்ற தலையங்கத்துடன் செய்திகளை வெளியிட்டனர். லண்டன் வாழ் புலிக் கொடி ஜனநாயக வாதிகளோ உடனே ஐயோ அப்பாவி தமிழர்களை இலங்கை அரசும் இராணுவமும் துன்புறுத்துவதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேணும் என்று ஒப்பாரி வைத்தனர். பிரித்தானிய தமிழனுக்கே இந்த கதி என்றால் இலங்கை தமிழனின் கதி என்ன என்று இந்திய தமிழ் தேசிய விசிலடிச்சான் குஞ்சுகள் ஓலம் இட்டனர். ஆனால் தற்போது உண்மைகள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்ததும் அனைவரும் ஓட்டுக்குள் போன ஆமை போல அடங்கி விட்டனர்.

நடந்தது இது தான்! கைது செய்யப்பட்ட புலிக்கொடி வீரர் புலிகள் ஊர்வலம் எதற்கும் தவாறது போய் வருபவர். ஜெனிவா முதல் பெல்ஜியம் வரை, பிரித்தானியா கொடுக்கும் வேலையற்றோர் கொடுப்பனவில் இருந்து பெற்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்த குட்டிக்காசில் பயணம் செய்து வருபவர். இவரிடம் ஒரு அப்பாவி தமிழர் தனது அவசரத்திற்கா குடும்ப சொத்தான நகைகைள் அனைத்தையும் கொடுத்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். அந்த அப்பாவியின் கஷ்டகாலம் பணத்தை திருப்பி கொடுக்க சிறுது தாமதமாகி விட்டது. அப்பாவியும் இந்த புலிக்கொடி வீரரிடம் கெஞ்சி மன்றாடி தனது நகைகளை எப்படியாவது வெகு விரைவில் திருப்பி எடுத்து விடுவேன் கொஞ்சம் பொறுங்கள் என்று கேட்டுள்ளார். விடுவாரா இந்த புலிக்கொடி வீரர்! தனது புலி வீரத்தை காட்ட இதுதான் தருணம் என்று தங்க விலை மிக உச்சமாக இருந்த கட்டத்தில் அனைத்து நகைகளையும் விற்று வட்டிக்கு கொடுத்த பணத்தை விட முன்று மடங்கு லாபத்தை பெற்றார்.

அண்மiயில் இந்த புலிக்கொடி வீரர் ஊருக்கு போவதை அறிந்த அந்த அப்பாவி தன் வன்மத்தை தீர்க்க இதை விட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்து இலங்கை உளவுத்துறைக்கு புலக் கொடி வீரரை பற்றி நன்றாக போட்டுக் கொடுத்து விட்டார். இந்த அப்பாவி போட்டுக்கொடுத்த முக்கியமான ஒரு விடயம் லண்டனில் புலிகளுக்கு பணம் சேர்த்த முக்கிய நபரின் சகோதரர் தான் இந்த புலிக்கொடி வீரர் என்றும் புலிகளுக்கு சேர்த்த பணத்தில் பெரும் பங்கை இவர்தான் வட்டிக்கு கொடுத்து வருவகிறார் என்று மிக துல்லியமாக தெரிவித்துள்ளார்.

வட்டிக்கு கொடுத்த பணத்தில் அரைவாசியை இப்போது புலிக்கொடி வீரரின் விடுதலைக்கு இலங்கையில் அள்ளிக்கொடுக்க வேண்டி வந்துள்ளதாம். ஆனால் இந்த புலிக்கொடி வீரர் விடுதலை செய்து இங்கிலாந்து வரும் போதுதான் ஆப்பு இன்னும் இறுக்கப் போகிறதாம். பகுதி நேர வேலை பாரத்தபடி பிரித்தானியாவில் வருமானம் போதாது என்று உதவித்தொகை பெற்ற படி ஆயிரக்கக்கான பவுன்ஸ் செலவு செய்து எவ்வாறு குடும்பத்துடன் இலங்கை சென்று வந்தீர்? என்ற கேள்விக்கு புல்ககொடி வீரர் என்ன பதில் கொடுக்க போறாரே தெரியவில்லை. ஆனால் அது மட்மல்லாது இலங்கை உளவுத்துறையும் இவரின் வட்டி விவகாரங்களையும் ஜெனிவா மற்றும் பெல்ஜியம் பயணங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் பிரித்தானிய உளவுத்துறையிடம் கையளித்துள்ளனர்! புலிக்கொடி வீரர் இலங்கையில் இருந்து இலண்டன் திரும்பியதும் மிண்டும் சிறை செல்வதோடு தனது சொத்துகள் அனைத்தையும் பறி கொடுக்க வேண்டிய கட்டாயமும் இதனால் வரலாம்! இந்த புலிக்கொடி வீரர் இழுத்துள்ள ஆப்பு சாதாரண ஆப்பல்ல அகில உலக ஆப்பான ஆப்பு!

Read more...

ஹலால் பிரிவினைவாதத்தைக் கொண்டு செயற்படுத்த முனைந்த விடயங்களை இன்று............பொதுபல சேனா!

ஹலால் பிரிவினைவாதத்தைக் கொண்டு செயற்படுத்த முனைந்த விடயங்களை இன்று வேறு விதமாக விதைப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், அரசாங்கம் முஸ்லிம் மத்ரசா நிறுவனங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மாற்றுவழிமுறையில் இரண்டு அரச சார்பற்ற அமைப்புகள் நாட்டினுள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன எனவும், அதனூடாக ஹலால் பிரிவினைவாதத்தைக் கொண்டு செயற்படுத்த முனைந்த விடயங்களை இன்று வேறு விதமாக விதைப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதற்கான ஒரு உதாரணமாக மத்ரசா பாடசாலைகளை கூறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் பள்ளிவாயல்களில் அறநெறி பாடசாலைகளை நடத்தினார்கள். தற்போது எல்லா இடங்களிலும் மத்ரசா நிறுவனங்களை ஸ்தாபித்து பாடசாலைகளை நடத்துகின்றனர். இதனை யார் நிர்வகிக்கின்றார்கள் என கேள்வி எழுப்பினார்.

எனவே, அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தேசிய கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் யோசனை தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Read more...

மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் தற்கொலைக்கு முயற்சி! உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15வயது) கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கலிபோர்னியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி, அதிகாலை 1.27 மணியளவில் "911" அவசர உதவி பிரிவுக்கு தகவல் வந்ததாகவும், 2.00 மணியளவில் கலபாசஸ் பகுதியில் இருந்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தனது "டிவிட்டர்" ல் கருத்து தெரிவித்திருந்த பாரிஸ் ஜாக்சன், "எனது துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன என்று நினைத்திருந்தேன். ஆனால், அவை இன்னும் என்னை விட்டு விடைபெறவில்லை" என எழுதியிருந்தார்.

Read more...

அனுறுத்திகவின் கருத்து பாரிய பிரச்சினைக்குரியதாம்! அவரிடம் CID விசாரணை நடாத்த வேண்டுமாம்!

அனுறுத்திக பெர்னாண்டோவின் கருத்து தொடர்பில், அவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடாத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஹரீன் பெனாண்டோ அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனுறுத்திக பெர்னாண்டோவின் இக்கருத்து பாரிய பிரச்சினைக்குரியது என்பதால் அவரிடம் விசாரணை நடாத்த வேண்டும் எனவும், இக்கருத்து குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் ஹரீன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனார் என தெரிவிக்கப்பட்ட, லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, என்பவர் தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருகின்றார் எனவும் ஒருமுறை குறித்த ஊடகவியலாளரை சந்தித்துள்ளதாகவும் அனுறுத்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

துப்பாக்கிமுனையில் தாயும் மகளும் பாலியல் துஷ்பிரயோகம்!

துப்பாக்கிமுனையில் தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் எல்பிட்டிய, குருந்துகஹாதலா என்ற இடத்தில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குருந்து கஹாதலா பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு அத்துமீறிப் புகுந்த நால்வர் துப்பாக்கியை காண்பித்து அந்த வீட்டிலுள்ள தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

65 வயதான தாயும் 21 வயதானவ மகளுமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தாயும் மகளும் எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை!- பொன்சேகா

1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கதுங்கவின் வலது கண் முழுமையாக செயலிழந்திருந்த போதிலும் அவருடைய மூளை எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் வைத்திய நிபுணராக கடமையாற்றிய சரித் பொன்சேகா சாட்சியமளித்தார்.

1999ல் கொழும்பு மாநகர சபைத்திடலில் டிசெம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி பிரசாரக்கூட்டத்தின் போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பந்தமன வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

குறித்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல் வழக்கில் வேலாயுதன் உதயராசா ரகுபதி சர்மா, மற்றும் சந்திரா சர்மா ஆகியோர் மீதே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜி.ஜெயக்குமார், சாட்சியமளித்த கண் வைத்திய நிபுணரின் சாட்சியத்தை நான் குறுக்கு விசாரணை செய்யவிரும்பவில்லை என்று நீதிமன்றுக்கு தெரிவித்தார். வழக்கு விசாரணையை யூன் மாதம் 19 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். குறித்த தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட 110 பேர் காயமடைந்ததுடன் 31 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது

Read more...

காதலிப்பதாகக் கூறி யுவதியை கொன்று கிணற்றுக்குள் போட்ட இளைஞன் கைது! மாங்குளத்தில் சம்பவம்!

மே மாதம் 24ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த துரைசாமி சரோஜா 25 வயதுடைய யுவதி, குறித்த இரு சந்தோக நபர்களாலும் கொலை செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மேற்படி யுவதியை காதலிப்பதாகக் கூறி வந்த இளைஞன் அவரை திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கி குறித்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். யுவதி அங்கு சென்றதையடுத்து, தனது நண்பனுடன் சேர்ந்து யுவதியை பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்ற காதலன் பின் தனது நண்பனுடன் இணைந்து காதலியை வல்லுறவுப்படுத்த முயன்றுள்ளார்.

இதற்கு குறித்த யுவதி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே சந்தேக நபர்கள் இருவருமாக சேர்ந்து யுவதியை அடித்துக் கொலை செய்த பின்னர் சடலத்தை கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் போட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் இன்று முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

சவூதிஅரேபியாவின் முதலீட்டுடன் 2ஆவது கப்பல் கட்டுமான நிலையம் காலியில்!

சவூதிஅரேபிய முதலீட்டுடன் கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல் தொடர்பான 2ஆவது நிலையம் காலி துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 44 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த வேலைத்திட்டத்தில், ஆயிரத்து 500 நேரடி வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும், 2ம் கட்டத்தின் போது 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடுவதற்கு சவூதி அரேபியாவின் ஹாதி அஹமட் அல் ஹமாம் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும், இதன்மூலம் 5 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகஅவர் தெரிவித்துள்ளார்.

Read more...

'13' ஆவது திருத்தச் சட்டம் மறுசீரமைக்கப்படுமானால், கச்சதீவை இந்தியா கைப்பற்றும்...?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி ஆகியோரிடையே 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்து - இலங்கை உடன்படிக்கைக்கு ஏற்ப, வட மாகாணத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் இல்லாமற் செய்யப்பட்டால் 1974 ஜூன் மாதம்இலங்கை - இந்தியாவிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்போது இலங்கை நாட்டுக்குரியது என நிச்சயிக்கப்பட்ட கச்சதீவுடனான உடன்படிக்கையை நீக்க வேண்டும் என இந்திய அரசுக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தூதுவரலாயத்திலிருந்து வெளிவருகின்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.

இலங்கை அரசு வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைக்குரித்தானது எனக் குறிப்பிடப்படுகின்ற இடம் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு முடிவுசெய்தால், அது இந்து - இலங்கை உடன்படிக்கையை நிராகரிக்கும் தான்தோன்றித்தனச் செயலாக மாறும் என இந்திய சட்ட வல்லுநர்களினால் தெளிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வாறான ஒரு விடயத்திற்கு எவ்வாறு விருப்புத் தெரிவிப்பது என்றால், 1974 ஜூன் மாதம் 18 ஆம் திகதி பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா - இந்திரா காந்தி ஆகியோர் கைச்சாத்திட்ட கச்சதீவைக் கையளிக்கும் உடன்படிக்கையை நீக்குதாகும் எனவும் அவர்கள் மேலும் தெளிவுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை மேலெழுந்த கையுடன் இந்திய அரசும் பெரும் இராசதந்திர பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இதுபற்றி உரையாடுவதற்காக எதிர்வரும் சில நாட்களில் புதுதில்லியில் விசேட மாநாடொன்றை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலிடத்து அரச அநுசரணையுடன் இம்மாநாட்டை ஒழுங்கு செய்துவருபவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சுதர்சன் நாச்சியப்பன். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், இந்து - இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தால் அதற்கான மாற்றுவழிபற்றி தீர்க்கமான முடிவு இம்மாநாட்டில் எடுக்கப்படவுள்ளதால், கூட்டமைப்பு அதில் கலந்துகொள்வதை விரும்பாத நிலையில் இருப்பதையே காணக்கூடியதாயுள்ளது.

(கேஎப்)

Read more...

Wednesday, June 5, 2013

பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை அரசு நீக்குமானால் அதை நான் எதிர்ப்பேன்-டக்ளஸ் அதிரடி

இன்றையதினம்(05)ரில்கோ விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரித்தார், அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தச்சட்டம்தான் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வாக அமையும் எனவே அரசு ஒருபோதும் அதை நீக்காது. அவ்வாறு ஒருநிலை வருமானால் தாம் அதை முழுமனதாக எதிர்ப்போம் என்று அவர் தெரிவித்தார்.

வடமாகாணசபை தேர்தல் தொடர்பாக அவரிடம் வினவியபோது, வடமாகாண தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாகவும் உள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர்மாதம் அதற்கான அறிவிப்பை அவர் அறிவிப்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம். வடமாணசபை தேர்தலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து தென்பகுதிகளின் முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் தாண்டி அரசாங்கம் இவ்வருடத்தில் தேர்தலை நடத்தும் என்பதே எமது முழுஎதிர்பார்ப்பாகவுள்ளது.

வடமாகாணசபைத்தேர்தலுக்கு ஆளும் கட்சியிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தேர்தல் நடப்பது சாத்தியமா ? என கேள்யியெளுப்பியபோது, அவைகள் எல்லாம் ஒரு தடையாக ஒருபோதும் இருக்காது, எவ்வாறான தடைகள் வந்தாலும் தேர்தலை நடத்துவதில் அரசும் உறுதியாகவுள்ளது.

அரசு சார்பாக நான்கு பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் நான் தேர்தலில் அரசுடன் இணைந்தோ அல்லது தனித்தோ போட்டியிடுவேன்.

தேர்தலில் மக்கள் எனக்கு சரியான ஆணை வளங்குவார்களானால் ஜந்து வருடங்களுக்குள் வளம் கொழிக்கும் பகுதியாக வடபகுதியை நான் மாற்றுவேன்.

நான் தனித்தோ அல்லது அரசுடன் இணைந்தே ஏதோ ஒரு வகையில் முதலமைச்சர் வேட்பாளராக வருவேன் மிகுதியை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





Read more...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறைந்தபட்ச தகுதியுடையவர்களையும் ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங் களை துரிதமாக நிரப்புவதற்காக குறைந்தபட்ச தகுதியை கொண்டோர் உள்வாங்கப்படுவார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்றது. இதனால் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமை கொண்டோரை இனங்காணுவது இலகுவான விடயமல்ல. இதுவொரு யதார்த்தமான உண்மை. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுள்ளோர் இல்லாவிட்டாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதனிலும் பார்க்க குறைந்த கல்வி தகைமை உள்ளோரை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன் அவர் தெரிவித்துள்ளார்

மேலும், இவர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் ஆசிரியர் உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், இது தொடர்பான தகவல்களை அனுப்புமாறு நாங்கள் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும், எதிர்காலத்தில் எப்படியாவது ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read more...

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜனாதிபதி இணங்கியிருப்பது, நாடு பெற்ற.........-விமல் வீரவன்ச

மாகாண சபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், ஜனாதிபதி சரியான முடிவை எடுப்பார் எனவும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்திற்கு ஜனாதிபதி இணங்கியிருப்பது, நாடு பெற்ற வெற்றியாகும் என, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியாவுடன் செய்து கொண்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்த்திருத்தம் என்பதனாலும், அந்த அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஈன்றெடுத்த மாகாண சபையின் அதிகாரங்களை சீர்த்திருத்துவது என்ற வார்த்தையை கூட, பயன்படுத்த அஞ்சிய ஒரு காலம் இருந்தது எனவும், அவ்வாறான ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதன் முதலாக ஜனாதிபதி, நேற்றைய அரச தலைவர்கள் கூட்டத்தில் வட மாகாண தேர்தலை நடாத்துவதற்கு முன்னர், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை பாதிக்கும் சரத்துகளை, சீர்த்திருத்துவதாக கூறினார். இது முக்கியமான ஒரு முன்னெடுப்பாகுமென, நாம் நினைக்கின்றோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானத்திற்கு ஏற்ப, எதிர்காலத்தில் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அதுபோன்ற மேலும் பல பாதிப்பான விடயங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தையும், ஒரே முறையில் சீர்த்திருத்துவார் என, நாம் நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

1000 கிலோ எடையுள்ள பாரிய குண்டுகள் கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது! எல்.ரி.ரி.ஈ உறுப்பினரின் வாக்குமூலம்!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கிணங்க எல்.ரி.ரி.ஈயினரால் கொண்டு வரப்பட்ட 1000 கிலோ கிராம் எடையுள்ள பாரிய குண்டுகள் கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பிரதான நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

போர் நடந்த காலத்தில், எல்.ரி.ரி.ஈ யினரால் கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட 1000 கிலோ கிராம் எடையுள்ள பாரிய குண்டுகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தனக்குத் தெரியும் என எல்.ரி.ரி.ஈ யினரின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் ராஜேந்தரகுமார் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்ததை அடுத்து, இது சம்பந்தமாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் குண்டுகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக குறித்த நபரை மூன்று நாட்கள் தம்மிடம் ஒப்படைக்க அனுமதியளிக்குமாறும் நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்தே கொழும்பு மேலதிக நீதிவான் நிரோஷா பெர்ணன்டோ எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் பாலசுப்ரமணியம் ராஜேந்திரகுமாரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட பிரதான நீதவான் அவருக்கு பாதுகாப்பளிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read more...

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் மனைவியுடன் உள்ளார்! - அனுறுத்திக பெர்னாண்டோ!

காணாமல் போனார் என தெரிவிக்கப்பட்ட, லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, என்பவர் தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் அனுறுத்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் காணாமல் போனார் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com