Monday, June 3, 2013

தாய்ப்பாலில் தேநீர் அருந்தும் இங்கிலாந்து குடும்பம்!

இங்கிலாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடகியாக வலம் வரும் மைலீன் கலாஸ் ஒரு அதிர்ச்சியான ஒரு விடயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தமது குடும்பம் தேநீரில் தாய்ப்பால் இட்டு குடிக்கிறார்களாம் அது மட்டுமல்லாது பாரம்பரியம் என்ற பெயரில் தமது தாய்பாலில் தான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தேநீர் போட்டுக் கொடுக்கிறாராம். அப்படியென்ன பாரம்பரியம் என்றால் அவருடைய தந்தையும் இப்படித்தான் செய்துள்ளாராம்.

மைலீன் கலாஸின் தந்தை ஒரு இராணுவ அதிகாரி என்பதுடன் அவர் தமது மனைவியின் தாய்ப்பாலில் தான் தேநீர் குடித்தாராம், அதைப் பார்த்து தாமும் அதையே பின்பற்றத் தொடங்கி விட்டாராம். இதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது தெரியுமா? இந்த பாரம்பரியம் என் பிள்ளைகளுக்கும் தொடரும்” என்கிறார் மைலீன்.

அத்தோடு நின்றுவிடவில்லை “மற்றவர்களும் கூட இதை பின்பற்றுங்களேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கைக்கு கேரள கஞ்சாவை கடத்தி வரும் பிரதான முகவர் உள்ளிட்ட மூவர் மன்னாரில் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சாவை கொண்டுவரும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பிரதான முகவர் உள்ளிட்ட மூவர் நேற்று மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்த 200 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் 30 கிலோகிராம் கேரளா கஞ்சா 3 கையடக்கத் தொலைபேசிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 38 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் மூன்று பேரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் கேரளா கஞ்சாவை விநியோகிப்பவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

1.2 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான புலிகளின் உடைமைகள் அரசுடைமையாக....

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குச் சொந்தமான ரூபா 1.2 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு குறிப்பிடுகிறது.

அந்தச் சொத்துக்களில் இடம், வீடுகள், வாகனங்கள்,வங்கிக் கணக்குகளை அச்சிடும் அச்சகம் உள்ளிட்ட பெருந்தொகையான சொத்துக்கள் உள்ளடங்குவதாகவும், அவற்றில் பெரும்பான்மையானவை கொழும்புக்கு வெளியே இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிடுகின்றது.

விசேடாக அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூபா 85 மில்லியன் தொகையை சென்ற வருட இறுதிப் பகுிதியில் கண்டுபிடித்து அரச உடைமையாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கணக்குகளிலிருந்த ரூபா 55 மில்லியனும் இந்நாட்டுக் கணக்குகளிலிருந்த ரூபா 55 மில்லியனும் அந்தக் கணக்குகளிலிருந்து அரச உடைமையாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எல்.ரீ.ரீ. ஈ இயக்கத்தினருக்குச் சொந்தமான இடங்களில் பெரும்பாலானவை கொழும்புப் பிரதேச இடங்களென்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்துகின்றது. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, கொள்ளுப்பிட்டிய, கொழும்பு, கொட்டஹேன, கிரேண்ட்பாஸ் கட்டுநாயக்க, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான இடங்கள் இருந்து, அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறாயினும், இன்னும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் எதிர்வரும் காலங்களில் கண்டுபிடிக்கப்படவுள்ளன எனவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

(கேஎப்)

Read more...

கைகுண்டொன்றை வெடிக்க வைத்து விமானப்படை வீரர் தற்கொலை!

அநுராதபுரம் விமானதளத்தில் கடமையாற்றிவந்த விமானப்படை வீரர் ஒருவர் நேற்று(02.06.2013)ஞாயிற்றுக்கிழமை இரவு கைகுண்டொன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விமான படைபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணை நடைபெற்று வரும் அதே வேளை விமானப் படையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Read more...

மொபைல் மூலம் உங்கள் கிரடிட் கார்ட் விபரங்கள் திருடப்படுகிறது கவனம்!

மொபைல் போன்களில் தரவேற்றப்பட்ட பிரத்தியேக மென் பொருள் மூலமாக திருடும் நூதன கும்பல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இந்தக்கும்பல் இதுவரை உலகெங்கும் உள்ள 30 மில்லியனுக்கும் மேலான கிரடிட் காட்டுக்களின் விபரங்களை திருடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த ஒரு மென்பொருளை மொபைலில் பதிவதன் மூலம் கிரடிட் கார்ட் வைத்திருப்பவரின் அருகில் சென்று அனைத்து விபரங்களையும் சில செக்கன்களில் எடுத்து விட முடியுமாம்.

பிரித்தானியாவில் மட்டும் 5.4  மில்லியன் பேர் மாதாந்தம் கிரடிட் காட்டை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இப்படியான திருடர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் என வாசகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.

Read more...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா உளவு விமானம்!

இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொறை மொரட்டுவ பல்கலைக்கழ பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தவிமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹனவும் இணைந்து இந்த ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்துள்ளனர்.

இந்த விமானம் 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது என பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அனுசரணையாளர்களின் உதவியுடன் விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Read more...

கருத் தடை மாத்திரைகளையும், கருவிகளையும் கொள்வனவு செய்வோரில் 50 வீதமானோர் பிரத்தியேக வகுப்பு மாணவர்களே!

கம்பஹா நகரில் உள்ள மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்ற கருத்தடை மாத்திரைகளில் 50 வீதமானவற்றைக் கொள்வனவு செய்பவர்கள் 16 - 24 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் என கம்பஹா நகராதிபதி எரங்க சேனாநாயக்க குறிப்பிடுகிறார். கம்பஹா நகர சபைக்குட்பட்ட பகுதிக்குள் அதிகாரம் வழங்கப்பட்ட 16 உல்லாச விடுதிகள் உள்ளன.

புதிதாக எந்தவொரு உல்லாசவிடுதியும் தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. எந்தவொரு நகரிலும் இவ்வாறான விடுதிகள் உள்ளன. அவை நாட்டுக்குத் தேவையானவை. ஆயினும், உல்லாசவிடுதிகள் என்ற பெயரில் தீயவிடயங்கள் நடைபெறுவதற்கு இடமளிக்க முடியாது. அவற்றை பல்வேறு முகாமைத்துவங்கள் மூலம் குறைத்துக்கட்ட வேண்டும். பொலிஸார் இங்கு நடைபெறும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த போதும், அவற்றைச் செயற்படுத்துகின்ற கீழ்மட்ட அதிகாரிகள் மிகவும் மந்த நிலையில் செயற்படுவதால் குற்றங்களைக் குறைப்பதற்கு மிகவும் சிரமமாகவுள்ளது.

அதிகாரம் அளிக்கப்பட்ட உல்லாச (வாடி) வீடுகள் தவிர, அதிகாரமளிக்கப்படாத திருட்டுத்தனமாக நடைபெறுகின்ற வீடுகளும் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இவற்றை இல்லாமற் செய்வதற்கு சட்டவாக்க நிறுவனங்கள் உள்ளபோதும், அவை சரிவர நிறைவேற்றுவதில்லை என்பது தெளிவு.

நகர சபை மாத்திரம் இவ்வாறான விடுதிகளுக்குள் புகுந்து குற்றங்களை இல்லாமற் செய்யவியலாது. இன்று கம்பஹா நகருக்குள் உள்ள மருந்தகங்களில் (பாமஸி) விற்பனை செய்யப்படுகின்ற கருத்தடை மாத்திரைகளில் , உபகரணங்களில் நூற்றுக்கு ஐம்பது வீதமானவற்றை கொள்வனவு செய்பவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் மாணவர்களே! இவர்கள் 16 மற்றும் 24 வயதிற்குட்பட்ட மாணவர்கள் என மருந்தக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர்களுக்கு இவ்வாறானவற்றை விற்பதை நிறுத்த முடியும். ஆயினும், நாட்டின்பாலுள்ள நற்குணங்கள் பணத்திற்கு அடிமையாகியுள்ளன' எனவும் குறிப்பிட்ட கம்பஹா நகராதிபதி, கம்பஹா வாடி வீடுகளுக்கு வருவோர் பற்றிய சரியான விபரங்களை, புள்ளி விபரங்களை அறிந்திருப்பவர்கள் கம்பஹா நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்களே என்றும் என்றும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! மனைவியை வெட்ட முயன்ற கணவன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் மினுவாங்கொட, எல்லங்கல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை செய்ய முற்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மினுவாங்கொட எல்லங்கல பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார், வீடொன்றின் அறைக்குள் வைத்து பெண்ணை கத்தியால் வெட்ட அவரது கணவர் முற்படுவதை அவதானித்துள்ளனர்.

அதனை நிறுத்துமாறு பொலிஸார் கோரிய போதிலும் அவர் அதனை மறுத்துள்ளதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். அதனையடுத்து குறித்த பெண்ணை அந்நபரிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு பொலிஸார் அந்நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Read more...

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தல் வேண்டாம்! கையெழுத்து வேட்டை!

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டாம் என வலியுறுத்தி மக்களிடம் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை இன்று களனி ஸ்ரீ புஞ்ஞானந்த பௌத்த மத்திய நிலையத்தில் மத அனுஷ்டானங்களுடன்அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கையெழுத்து பெறும் நிகழ்வு களனியில் ஆரம்பமாகி கடவத்தை, யக்கல, பஸ்யால, வரக்காபொல, பொல்கஹாவெல, குருநாகலை வரை சென்று அங்கு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், இவ் ஊர்வலம் செல்லும் அனைத்து நகரங்களிலும் மக்களிடம் கையெழுத்துகள் பெறப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கையெழுத்து பெறும் நடவடிக்கையானது நாட்டுக்காகச் செய்யும் மாபெரும் சேவை என்றும் நாடு பூராகவும் சென்று வட மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக கையெழுத்து பெற்று அதனை ஜனாதிபதியிடம் கையளிப்பதே தங்களது நோக்கம் என்றும் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read more...

பயங்கரவாத செயற்பாடுகள் ஏன் நினைவுகூரப்படுகின்றன? குரோதம் பகைமையை பரப்பு.....ஜனாதிபதி

இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காகவே கடந்தகால பயங்கரவாத செயற்பாடுகளை நினைவுகூர்வதாகவும், மாறாக குரோதம் பகைமையை பரப்புவதற்கு அல்ல எனவும், நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதம் ஏற்படாத வகையில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காகவே குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன எனவும், பௌத்தர்களும் தேரர்களும் ஒருபோதும், இந்நாட்டின் அடிப்படை வாதிகள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெலிமடை பொரலந்த ஹீங்நாராமகொல்ல ஸ்ரீசுதர்சனராம விகாரையில் வாகல்கட தாது மந்திர என்பவற்றை திறந்துவைத்ததோடு, விகாரையின் உத்தியோகபூர்வ பக்கமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1818 ம் ஆண்டில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ புரட்சியை தொடர்ந்து , 18 வயதுக்கும் மேற்பட்ட சகல ஆண்களும், பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளால் கொலை செய்யப்பட்டனர். அவர்களது நாசகார வேலைகளிலிருந்து பிழைத்த எஞ்சிய பரம்பரையிலிருந்து வந்தவரே விpஜயகோன் கெதர சுமன திஸ்ஸ தேரர் ஆவார். அவர் குறித்த பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

நாட்டுக்காக சேவையாற்றியவர்களை நினைவுகூர்ந்து சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிpட்ட ஜனாதிபதி, எமது இளம் பராயத்தினர் விகாரைகளுடன் இணைற்து செயற்பட வேண்டிய காலம் இதுவெனவும் நாட்டின் எதிர்காலம் இன்றைய இளம் பராயத்தினரின் கையில் தங்கியுள்ளதாகவும், இளம் பராயத்தினரை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

ரோஹண விஜயவீரவின் மகளுக்கு விளக்கமறியல்!

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மனைவியின் முறைப் பாட்டையடுத்து, ரோஹண விஜயவீரவின் மகள் கைது செய்யபப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் சகோதரனை தாக்கிய குற்றத்திற்காகவே ரோஹண விஜயவீரவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தனர்.

Read more...

படுகொலைச் சந்தேக நபர்களின் சடலங்கள் மயானத்திலிருந்து மாயம்! உறவினர்கள் முறைப்பாடு!

சுனந்தோபானந்தாரா விகாரையின் விகாராதிபதி மெடிகஹதென்னெ விமலவன்ச தேரரின் படுகொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சுஜீவ மற்றும் ருவன்ஜித் ஆகியோரின் சடலங்கள், அவர்களை அடக்கம் செய்த மயானத்திலிருந்து காணாமல் போயுள்ளது என சுஜீவ மற்றும் ருவன்ஜித்தின் உறவினர்கள் வாத்துவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களும் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்காகி உயிரிழந்த நிலையில், அவர்களது சடலங்கள் வாத்துவ பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தன. இன்நிலையில் இவ்வாறு புதைக்கப்பட்ட சடலங்களே காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Read more...

Sunday, June 2, 2013

மஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்! - பீமன்

‘புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி. இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமது சுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால், புலிகள் பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

‘கடைசிவரை விலைபோக மாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீர வசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால், பிரபாகரன் கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர் மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள் புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை.

புலிகள் இலங்கைக்குச் செல்வதும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுடன் உறவாடுவதும் தவறான விடயம் அல்ல. ஆனால், புலிகள் பின்கதவால் சென்று அரசிடம் பெறவேண்டியதை தங்களது சுயலாபங்களுக்காக பெற்றுக்கொண்டு, தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக்க முயல்வதும் அவர்களை அரசுக்கு எதிரான மாயையினுள் வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்குண்டிருந்த இலங்கை, பல்லாயிரக்கணக்கான உயிர்த்தியாகங்களால் விடுபட்டிருக்கின்றது. அதாவது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தாம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றோம் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களின் இந்த மன மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர் புலிகள் தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தமது பிரச்சாரப் பீரங்கியை இயக்கிக்கொண்டே இருக்கின்றனர்.

இவ்வாறான அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்சீஎன்என் எனப்படும் தளத்தை இயக்கிக்கொண்டிந்தவர் அல்லது தொடர்ந்தும் இயக்கிக்கொண்டிருப்பவர் கண்ணன் என அழைக்கப்படுபவர். இவர், தற்போது மஹிந்தரின் கோடிக்குள் நுழைந்துள்ளார். இவரை தொடர்பு கொண்டு இலங்கை நிலவரங்கள் தொடர்பாக கேட்டேன்.

இலங்கை உலகிலே சொர்க்கம் என்று சொல்லப்பட்டதை உணர்ந்துள்ளேன், இது ஒரு சொர்க்காபுரிதான் என்றார் தமிழ்சீஎன்என் கண்ணன்.

நீங்கள் இந்த நாட்டுக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள் தொடர்பாக என்ன கருத்து எனக்கேட்டேன், நான் செய்த தவறுக்காக வருந்துகின்றேன் என்றார்.

வடக்கிலே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரச்சாரம் செய்துள்ளீர்கள், நிலைமைகள் எவ்வாறுள்ளது என்றேன் : நாவற்குளி பிரதேசத்தில் சுமார் 35 சிங்கள மக்கள் உள்ளனர். அவர்கள் இப்பிரதேசத்திலே முன்னர் வாழ்ந்தவர்கள் அது தவிர இங்கு எந்த குடியேற்றமும் இல்லை. பௌத்த கோவிலும் இல்லை. அவ்வாறு இருந்தால்தான் அதில் என்ன தப்பு என்றும் கேட்டார். இவையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும், புலம்பெயர் தேசத்தில் தொடர்ந்தும் மக்களின் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலிப்பினாமிகளின் பொய்பிரச்சாரங்கள் என்றார்.

மேலும் தலதா மாளிகைக்கு சென்று சங்கைக்குரிய தேரரை சந்தித்ததாகவும் அவரது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதாகவும் கூறிய கண்ணன், பௌத்த பிக்குகள் கருணை உள்ளம் கொண்ட அன்பான மனிதர்கள் என்றும் அவர்களிடமுள்ள அன்பும் கருணையும் தமிழ் பூசகர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், நீங்கள் தமிழ் மக்களிடம் விதைத்த விஷம் இன்னும் அகற்றப்படவில்லை அதிதுடன் இலங்கை அரசு தொடர்பாக தமிழ் மக்களுக்கு சொன்ன அவதூறான செய்திகள் தமிழ் மக்களின் மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. எனவே, நீங்கள் எனக்கு கூறுகின்ற இந்தக்கருத்துக்களை மக்களுக்கு எப்போது தெரிவிக்கின்றீர்கள் என்றேன். தலையை சொறிய ஆரம்பித்து விட்டார். ஏன் இந்த தயக்கம் என்றேன். இல்லை இல்லை இதை மக்களுக்கு பெரியதாக சொல்ல வேண்டும் என்றார்.

பெரியதாக என்றால் என்ன? என்றேன். உலகத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் அச்செய்தி சென்றடையக்கூடியவாறு சொல்லவேண்டும் என்றார்.

அதற்குரிய ஏற்பாடுகளை செய்யவா எனக்கேட்டபோது வேண்டாம்.. வேண்டாம்.. என்னை இங்கு அழைத்து வந்தவர்களிடம் நான் கேட்கவேண்டும் என்றார் கண்ணன்.

தமிழ் மக்களை தாங்கள் தவறாக வழிநாடாத்தினோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் கண்ணன் , மக்களுக்கு காலம்கடந்தேனும் உண்மையை சொல்வதற்கு தயங்குவதை அவதானிக்க முடிகின்றது. கண்ணனின் இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவே திட்டமிட்டுள்ளனர் என்பதுடன் கண்ணன் தீய நோக்கோடு இலங்கையினுள் நுழைந்துள்ளான் என்ற முடிவுக்கு வரவிடுகின்றது.

இவ்வாறான தீயநோக்கோடு செயற்படுகின்றவர்கள் விடயத்தில் இலங்கை அரசு அவதானமாக இருக்கத் தவறும் பட்சத்தில் 30 வருடங்கள் பயங்கரவாதத்தின் பிடியில் மக்கள் அனுபவித்த அதே அவலங்களை மீண்டுமொருமுறை அனுபவிக்க நேரிடலாம்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுடன் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை முடக்குவதற்கு புலம்பெயர் புலிகள் பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வுத்திகளில் பிரதானமானது தமது முகவர்களை குறித்த திட்டங்களுள் நுழைப்பது. காரணம் புலிகள் ,இந்திருக்கின்ற ஒரு செயற்றிட்டத்தில் சாதாரண பொதுமக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்பது புலிகளுக்கு தெரிந்த விடயம்.

எனவே புலிகளையும் மக்களையும் இணைத்து நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர்ந்து கொண்டு புலிகளை தனிமைப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

புலிகளின் மேற்படி வியுகத்தை முறியடிக்கும் விடயத்தில் இலங்கைப் புலனாய்வுத் துறையின் சேவை மிக அத்தியாவசியமாகின்றது. இலங்கையினுள் நுழைகின்ற புலம்பெயர் தமிழர்களின் கடந்தகால மற்றும் தற்காலச் செயற்பாடுகள் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். புலம்பெயர் தேசத்திலில் புலிச்செயற்பாட்டாளர்களாக இருந்து ​இலங்கையின் இன நல்லிணக்க செயற்பாடுகளினுள் இணைய விரும்புகின்றோம் என வருகின்றவர்களை முதலில் புனர்வாழ்வு நடைமுறைக்கு உட்படுத்திய பின்னரே சாதரண மக்களுடன் இணைய அனுமதிப்பது சிறந்தது.

புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இலங்கை அரசினால் இன நல்லிணக்க இணைப்பாளர்களாக, செயற்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிலர் தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றனர் அல்லது ஏமாறுகின்றனர்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, புலிகள் என்றுமே தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும் அவர்கள் மரபுவழி படையணியையும், கடற்படையுடன் கூடிய விமானப்படையையும், பயங்கரமானதோர் தற்கொலைப்படையணியையும் வைத்திருக்கின்றார்கள் என இலங்கை இராணுவ வீரர்களை உளரீதியாக நலிவடைச் செய்து , புலிகள் தோற்கடிக்கப்படமுடியாதவர்கள் என்ற புலிகளின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்த சிங்கப்பூரினைத் தளமாக கொண்டுள்ள புளுகுமூட்டைக்கு புலிகள் ஓர் பப்படம் என்பதும் பப்படத்தை இறுகப்பிடித்தால் அது நொருங்கிவிடும், நொருங்கினால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தளம் அற்றுப்போய்விடும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த கால ஆட்சியாளர்கள் புலிப்பப்படத்தை மென்மையாக கையாண்டார்கள் என்பது தெரியாமல் போயிருந்தது கவலைக்குரியதே.

குறிப்பிட்ட புளுகுமூட்டையே கண்ணனை இலங்கைக்கு கொண்டுவந்தாக அறியக்கிடைக்கின்றது. இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் கண்ணில் மண்ணைத்தூவி கணணனை நேரடியாக ஜனாதிபதியின் இன நல்லிணக்க பிரிவினருடன் இணைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கண்ணனின் பின்புலம் தெரியாமல் கண்ணன் புலிகளுடன் எந்த தொடர்பும் அற்றவர் என்ற நம்பிக்கையில் நேரடியாக ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டாரா? அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவது லாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா? அவ்வாறாயின் அந்த லாபங்கள் தனிப்பட்டவையா ? தேசிய நலன் சார்ந்ததா?

கண்ணன் புலிகள் இயக்கத்தில் தான் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டவர் என்கின்றார். புலிகள் இயக்கத்தில் தான் இருந்தபோது அவ்வியக்கத்தினர் மேற்கொண்ட மனித விரோத செயல்களை சகித்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிச் சென்றேன் என்கின்றார். ஆனால், அவர் சுமார் 1995 களிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளில் புலிகளின் ஆட்கடத்தல் காரர்களுடன் இணைத்து செயற்பட்டு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அக்காலகட்டத்தில் புலிகளின் விநாயகம் அணியின் முக்கியஸ்தரான பாண்டியனுக்கு சுமார் இரண்டரைக்கோடி பணம் கொடுத்ததாகவும் அந்தப்பணத்தை கொண்டு பாண்டியன் கனடாவில் தனது உறவுக்காரர் ஒருவரின் பெயரில் வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் பலரிடம் தெரிவித்துள்ளார். பாண்டியனிடம் இந்த பாரிய தொகை கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு பண்டியனுடன் கண்ணன் வைத்திருந்த உறவு என்ன? குறித்த பணம் புலிகளுடையது என்றும் புலிகளின் பணத்தை தென்கிழக்காசியாவில்; கையாண்டவர்களில் கண்ணனும் ஒருவர் என்றும் பேசப்படுகின்றது.

மேலும், கண்ணன் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பிரயாண முகவர் நிலையம் ஒன்றை நடாத்திவந்தாகவும், அந்நிலையத்தில் புலிகளுக்கான புலனாய்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக பேசப்படுகின்றது.

2004ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ‘கப்டன்’ தர அதிகாரி ஒருவர் , புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழைய முற்பட்டபோது, ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவத் கப்படனை கையாண்டது கண்ணன் என்றும் அவரை புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டுவை சந்திக்க அழைத்துச் சென்றபோதே கப்படன் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கப்டனின் கோப்பை புரட்டினால் கண்ணனுக்கு புலிகளுடனான தொடர்பு தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரே தமிழ்சீஎன்என் எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னணி நெடியவன் குழு என நம்பப்படுகின்றது. இணையத்தளைத்தினை மக்கள் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதற்கு கண்ணன் அயராது உழைத்தார். தமிழ் இளைஞர் யுவதிகளின் முகப்புத்தகங்களினுள் சென்று மில்லியன்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்தார். இம்மின்னஞ்சல் சேகரிப்புக்கு புலம்பெயர் தேசத்தில் நெடியவன் கட்டுப்பாட்டிலுள்ள இளையோர் அமைப்புக்கள் உதவியதாகவும் அறியக்கிடைக்கின்றது. குறித்த மின்னஞ்சல்முகவரிகளுக்கு நாளாந்தம் தமது பொய்பரப்புரைகளை அனுப்பிவந்தார் கண்ணன். அத்துடன் தமிழ்சீஎன்என் இணையதத்தின் நடாத்துனராக தன்னை அறிமுகப்படுத்திய அவர் பல்வேறு தொடர்புகளை உருவாக்கி கொண்டதுடன் அத்தொடர்புகள் ஊடாக அரசுக்கு எதிரானது மாத்திரமல்ல நெடியவன் குழுவிற்கு எதிராளிகளான விநாயகம் குழுவிற்கும் எதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் கண்ணன் புலிகளின் ஊடுருவலாளனாக அல்லாமல் நல்ல நோக்கத்துடன் இலங்கை வந்துள்ளாராகவிருந்தால், அவர் தனது தமிழ்சீஎன்என் இணையத்தளம் ஊடாக இலங்கையில் தனது அனுபவங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அத்துடன் , தான் எத்தனை மின்னஞ்சல் முகவரிகளுக்கு போலிப்பிரச்சாரங்களை அனுப்பி வந்தாரோ அத்தனை முகவரிகளுக்கும் தனது தற்போதைய மனமாற்றத்தையும் தான் கண்டுகொண்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்துக்களையும் உண்மைகளையும் தொடர்ச்சியாக தெரியப்படுத்தவேண்டும்.



Read more...

நானூறு வருடங்களாக உறைந்திருந்த தாவரங்கள் உயிர் பெறுகிறது

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் உலகில் 'லிட்டில் ஐஸ் ஏஜ்' (Little Ice Age) என்று சொல்லப்படும் பனிப்பருவம் ஏற்பட்ட சமயத்தில் உறைந்துபோனதாகக் கூறப்படும் தாவரங்கள் சில தற்போது மீண்டும் உயிர்ப்பித்து துளிர்க்கத் தொடங்கியுள்ளன.

கனடாவின் வட துருவ நிலப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் அழிவடைந்திருந்த சில பாசி வகைகளை பனிப் படலங்கள் கரைந்த இடங்களில் இருந்து எடுத்து வந்து பரிசோதனைக் கூடத்தில் வைத்து அண்மையில் ஆய்வுகளுக்கு உட்படுத்தியபோது அவை மீண்டும் உயிர்ப்பெற்று துளிர்த்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

'Proceedings of the National Academy of Sciences' என்ற பிரசுரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Read more...

செவ்வாய்க்குச் செல்லும் விண்வெளி வீரர்களை கதிரியக்கம் தாக்கலாம்-நாசா

செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் எதிர்காலத்தில் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்றும் இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.

கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலமே நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாயின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டு செல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிக காலம் எடுத்து என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Read more...

இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் சிங்கப்பூரில் கைது!

வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக இலங்கை யுவதிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவே உபுல் என்பவர் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் மலேசியாவில் சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபடும் முக்கியஸ்தர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட் இவர்களிடம் மலேசிய பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இறுதியாக இலங்கையில் இருந்து ஐந்து பெண்களை அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்துள்ளார்.

Read more...

மட்டக்களப்பில் மூன்று ஆலையங்களின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன: நகையும் அபகரிப்பு

மட்டக்களப்பு, கல்முனை, குருக்கல்மடம் பிரதான வீதியிலுள்ள களுவாஞ்சிக்குடி ஸ்ரீ செல்லக் கதிர்காமம் ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் நேற்று (01.067.2013) இரவு 10 மணிக்கு பின் இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திலிருந்த விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 19 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு பத்து மணிக்குபின் இடம்பெற்றிருக்கலாம் என கூறும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை அம்பாறை, பாண்டிருப்பில் அமைந்துள்ள திரௌபதியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பாபிஷேக கலசம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் மூல விக்கிரகம் மற்றும் நவக்கிரகங்கள் என்பன உடைக்கப்பட்டுள்ளது் அது தொடர்பாகவும் பிரதேச பொலிசார் விசாரைணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

மக்களைப் பணயக்கைதியாக வைத்து பதவிகளைக் காப்பாற்றும் அரசியல்

வடமாகாண சபைத் தேர்தல் கதவைத் தட்டுகின்றது. இந்தத் தேர்தல் நடக்குமா அல்லது நடக்காதா என்று சந்தேகக் கேள்விகள் எழுகின்றபோதிலும் தேர்தல் நடப்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. மாகாண சபைத் தேர்தலின்போது வழமையான பாணியில் ஒப்பாரிப் பிரசாரம் செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதே தயாராகின்றது.

தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பாதிப்புகளைத் தேர்தல் மேடைகளில் பட்டியல் போடுவார்கள். பாதிப்புகள் இருப்பதை இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. தமிழ் மக்களுக்கு அது தெரியும். பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைக் காட்டுவதற்கே தலைவர்கள் தேவை. அந்த வழியைக் காட்டாமல் பாதிப்புகளைப் பட்டியல் போட்டு உசுப்பேற்றும் பேச்சுக்களைப் பேசுவது வாக்குகளுக்காகவேயொழிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவல்ல.

நான்கு வருடங்களாகக் கூட்டமைப்புத் தலைவர்கள் எதிர்ப்பு அரசியல் நடத்துகின்றார்கள். நிலம் பறிபோகின்றது. தமிழினம் அழிகின்றது என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசுகின்றார்கள். எடுத்ததற்கெல்லாம் மக்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றார்கள். இவற்றினால் ஏதாவது பலன் கிடைத்ததா என்று தமிழ் மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இராணுவப் பிரசன்னம், சிங்களக் குடியேற்றம், நில அபகரிப்பு என்று நீளமாகப் பட்டியல் போடும் கூட்டமைப்புத் தலைவர்கள் இவற்றுக்கெல்லாம் தாங்களே பிரதான பொறுப்பாளிகள் என்பதைத் தமிழ் மக்களிடமிருந்து கெட்டித்தனமாக மறைத்துவிடுகின்றார்கள். அரசாங்கத்தின் மீது முழுப்பழியையும் போட்டுத் தப்பித்துக்கொள்கின்றார்கள். சந்திரிகாவின் அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வரமுடியாமற்போனதற்கு இந்தத் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். அந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ் மக்கள் இப்போது முகங்கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கமாட்டா.

புலிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வர முடியாத நிலையை உருவாக்கிய கூட்டமைப்புத் தலைவர்களே தமிழ் மக்களின் இன்றைய அவலங்களுக்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளிகள். தமிழ் மக்களுக்குத் தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைப்பதற்காக வீரவசனங்கள் மூலம் மக்களைத் திசைதிருப்பி ஏமாற்றுகின்றார்கள்.

தலைவர்களின் வீரவசனங்களில் மயங்கி ஏமாறுபவர்களாகத் தமிழ் மக்கள் இருந்தது போதும். தேசியவாதத் தலைவர்களால் தாங்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையும் இனப்பிரச்சினையின் தீர்வுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் இத்தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக இழந்தார்கள் என்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அறுபது வருடங்களுக்கு மேலாகக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தவறியதற்கான விளக்கத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கவேண்டிய கடப்பாடு தேசியம் பேசும் தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு. இச்சந்தர்ப்பங்களில் தாங்கள் விட்ட தவறுதான் தமிழ் மக்களுக்கு அவல வாழ்க்கையைக் கொடுத்திருக்கின்றதென்பது இவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் இத்தவறுகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதால் ஆக்ரோஷமான எதிர்ப்பு அரசியலை நடத்தி மக்களைத் திசை திருப்புகின்றார்கள்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் பற்றி இன்று கூட்டமைப்புத் தலைவர்கள் அதிகம் பேசுகின்றார்கள். அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் இனப்பிரச்சினை தீந்திருக்கும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தன் கூறினார். ஆனால், 1965இலும் 1972இலும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப்பத்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. தமிழ்த் தேசியத் தலைவர்கள் அவற்றைப் பயன்படுத்தவில்லை. அதன் பின்னர் கிடைத்த மற்றைய சந்தர்ப்பம் சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். புலிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தமிழ்த் தலைவர்கள் இத்தீர்வுத் திட்டத்தை எதிர்த்தது தமிழ் மக்களுக்குச் செய்த மிகப் பெரிய துரோகம்.

இப்போதாவது தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதையில் செல்வதற்குத் தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை. எதிர்ப்பு அரசியல் நடத்தி அரசாங்கத்துக்கு எதிராக வசைபாடுவதன் மூலம் தங்கள் துரோகத்தை மறைப்பது தான் இவர்களின் நோக்கமாக இருக்கின்றதேயொழியத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதல்ல. பிரச்சினையின் தீர்வில் உண்மையாகவே அக்கறை உண்டென்றால் இதுவரையில் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும்.

இனப்பிரச்சினையாக இருந்தாலும் மக்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினையாக இருந்தாலும் அரசாங்கமே தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். வெளியிலிருந்து யாராவது தீர்வைக் கொண்டுவர முடியாது. எனவே, தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசுவதைத் தவிர்க்க முடியாது. கூட்டமைப்புத் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச விரும்பவில்லை. அரசாங்கத்துடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று மொட்டையாகக் கூறுகின்றார்கள்.

கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துபவர்கள் தந்தை செல்வாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்கள். பதிவு விடயத்தில் தந்தை செல்வாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்றால் பேச்சுவார்த்தை விடயத்தில் பின்பற்றக்கூடதா?

கச்சேரியடிச் சத்தியாக்கிரகம் நடைபெற்ற வேளையில் அரசாங்கத்தின் சார்பில் அன்றைய நீதி அமைச்சர் சாம் பி.சி. பெர்னாண்டோ பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தைக்குப் போவது போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்று அமிர்தலிங்கமும் நாகநாதனும் எதிர்த்தார்கள். அப்போது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பின்வருமாறு கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு எந்தச் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதைக் கைவிடலாகாது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என்பது தெளிவாகத் தெரியும் சந்தர்ப்பங்களிலும் பேச்சுவார்த்தைக்குப் போய் அது தோல்வியில் முடிவதைக் காண்பதே சிறந்தது. எடுத்ததற்கெல்லாம் தந்தை செல்வாவின் முன்மாதிரி பற்றிப் பேசும் தமிழ்த் தலைவர்கள் இந்த முன்மாதிரியைப் பின்பற்றத் தயங்குவது ஏன் என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்டுச் சிந்திக்க வேண்டும்.

அரசியல் தீர்வை நிராகரிக்கும் புலம்பெயர் அமைப்புகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே தேசியம் பேசும் தமிழ்த் தலைவர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வந்தால் புலம் பெயர் அமைப்புகளின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்துவிடும் என்று இவர்கள் அஞ்சுகின்றார்கள். அதனாலேயே பேச்சுவார்த்தையைத் தவிர்க்கின்றார்கள். புலம் பெயர் அமைப்புகளின் பாராட்டைப் பெறுவதற்கும் தங்கள் அரசியல் பதவிகளைக் காப்பாற்றுவதற்கும் இது சிறந்த வழி என்று கருதுகின்றார்கள்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறுவது பாரதூரமான விளைவுகளுக்கு வழிவகுத்துவிடும். தமிழ் மக்களின் அரசியலில் இது தான் நடந்தது. சந்தர்ப்பங்களை உதாசீனம் செய்த தலைவர்கள் சகல சுகபோகங்களுடன் வாழ்கின்றார்கள். தமிழ் மக்கள் துன்பங்களையும் துயரங்களையுமே அனுபவிக்கின்றார்கள். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த இன்றும் தலைவர்கள் தயாராக இல்லை. மக்கள் இப்போது விழிப்படையாவிட்டால் அடுத்த சந்ததிக்கும் இந்தச் சோகம் தொடரும்.

தலைவர்களின் வீரவசனங்களில் மயங்கி ஏமாறுபவர்களாகத் தமிழ் மக்கள் இருந்தது போதும். தேசியவாதத் தலைவர்களால் தாங்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையும் இனப்பிரச்சினையின் தீர்வுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் இத்தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக இழந்தார்கள் என்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மாகாண சபைத் தேர்தலின்போது வழமையான பாணியில் ஒப்பாரிப் பிரசாரம் செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதே தயாராகின்றது. தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பாதிப்புகளைத் தேர்தல் மேடைகளில் பட்டியல் போடுவார்கள். பாதிப்புகள் இருப்பதை இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. தமிழ் மக்களுக்கு அது தெரியும். பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைக் காட்டுவதற்கே தலைவர்கள் தேவை. அந்த வழியைக் காட்டாமல் பாதிப்புகளைப் பட்டியல் போட்டு உசுப்பேற்றும் பேச்சுக்களைப் பேசுவது வாக்குகளுக்காகவேயொழிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவல்ல.

- சங்கர சிவன்

Read more...

Saturday, June 1, 2013

வடக்கின் வசந்தம் மெய்யறிவையும் சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசு திரிய வேலைத்திட்டம்.

மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசு திரிய தேசிய வேலைத்திட்டம் இதுவரை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளிற்கு குறுகிய கால ஆறுதலை வழங்கி இனங்களுக்கிடையில் சமய ரீதியான மனித நேயத்தை வலுவூட்டுதலும், தலைமைத்துவப் பயிற்சியையும் நோக்கமாகக் கொண்டு மூன்று வருடங்களிற்கு அதிகமாக செயல்பட்டன.

இரண்டாம் கட்டமாக இளைஞர் யுவதிகள் மத்தியில் மனித நேயத்தை நிலைப்படுத்தும் நோக்கோடு சிசுதிரிய கழகங்கள் அமைக்கப்பட்டன. இதனூடாக மனித நேயத்தினை வளர்க்கும் பல செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மூன்றாம் கட்டமாக ஒவ்வொரு கல்வி வலயங்களையும் சேர்ந்த மாணவ தலைவர், தலைவிகளிற்கு சிறந்த பயிற்சியை வழங்கி, நடத்தை மாற்றமடைந்த பிரதிநிதிகளாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் செயற்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

நற்பண்புகளை மதிக்கின்ற ஒழுக்கமுள்ள, தேசப்பற்றுள்ள, ஆத்மீக வளர்ச்சியைக் கொண்ட இளைஞர் யுவதிகளின் வலையமைப்பொன்றை மேற்கொண்டு சமூக அபிவிருத்தியில் சக்தி வாய்ந்த முன்னோடிகளாக மாற்றி யதார்த்தபூர்வமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மூன்றாம் திட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ளன.

1.0 அறிமுகம் - மெய்அறிவையும் சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசு திரிய வேலைத்திட்டம்

2006ம் ஆண்டு கெபிடிகொல்லாவையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இடம் பெயர்ந்த மாணவ மாணவிகளிற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் சிந்தனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் திட்டமாகும். இத் திட்டத்தின் கீழ் மோதல்கள் நிலவிய பிரதேசங்களிலும், கஸ்டப் பிரதேசங்களிலும் வாழ்கின்ற பல இனங்களைக் கொண்ட க.பொ.த சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும் கல்வி கற்கும் மாணவ மாணவிகளிற்கு பயங்கரவாதத்தால் ஏற்பட்ட உள தாக்கங்களை குறைப்பதற்கும், பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள கல்வியை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இத் திட்டத்தின் கீழ் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற மோதல்கள் நிலவிய கஸ்டமான மாவட்டங்களில் மாணவர்களிற்கு சிறந்த பலன் கிடைக்கப் பெற்றுள்ளன.

2.0 நோக்கம்

பல தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாத செயல்களால் தேசத்தின் சமூக, கலாசார அமைப்புக்கள் முழுவதிலும் பரவிக்காணப்பட்ட வஞ்சனை, நம்பிக்கையின்மை, சந்தேகம் போன்றவற்றை அகற்றி ஒவ்வொரு இனங்களிற்கிடையே அவரவர்களை மதிக்கின்ற அவரவர்களின் தனித்துவத்தை பாதுகாக்கின்ற ஒரு திட்டத்தை இத் திட்டம் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்வந்துள்ளது. புரிந்துணர்வை மேம்படுத்துவதனூடாக பல தசாப்தங்களாக அடக்கு முறையில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற சமூக தன்மைகளை சீராக்குதலும், இத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும். இன ரீதியாகவும், சமயரீதியாகவும், வகுப்பு ரீதியாகவும் ஏற்பட்டுள்ள பிளவுகளை இனங்கண்டு, இவைகள் சமூக அபிவிருத்திக்கு பாதகமாக இருக்கின்றன என்பதனை இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நோக்கமாகும். பல குழுக்களாக பிரிந்து அதனூடாக ஒரு தனித்துவத்தை
உருவாக்கி இருப்பினும், அவற்றை அனைத்தும் மனிதர்களிற்கிடையில் நிலவுகின்றது என்பதனை விளக்குவதும் இன்னொரு நோக்கமாகும்.

நற்செய்திகளை வழங்கி, நேர் சிந்தனைகளை உருவாக்கி, ஆளுமை விருத்தியை ஏற்படுத்தி இளைஞர் யுவதிகளின் நடத்தைகளை நல்வழிப்படுத்தி, சமாதானத்திற்கும், சமூக அபிவிருத்திக்கும் அர்ப்பணிக்கும் சிறந்த இளைஞர் யுவதிகளை உருவாக்கி, அவர்களை ஒவ்வொரு மாவட்டங்களிற்கும் சமாதான தூதுவர்களாக ஈடுபடுத்தல் இத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

அத்துடன் பொருளாதார வசதிகள் தேவைப்படும் இளைஞர், யுவதிகளை இனங்கண்டு அப்பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதும், இளைஞர் யுவதிகளிற்கும், நிர்வாகிகளிற்கும் இடையில் கலந்துரையாடலை ஏற்படுத்தி பொது நிர்வாகம் தொடர்பான கொள்கைகளை தயாரித்தல் மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்துவதற்கும் இத் திட்டம் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றது.

3.0 சிந்தனை மறுசீரமைப்பு பகுதிகளும் அதற்காக பங்களிக்கும் வளவாளர்களும்

மோதல்கள் இடம் பெற்ற பிரதேசங்களில் மாணவ மாணவிகளின் மெய்யறிவை விருத்தி செய்வதன் மூலம் விளைதிறன், சுயகௌரவம், ஆளுமை விருத்தி, தேசிய பொறுப்பு, தலைமைத்துவம், நாடகங்களை இரசித்தல், மோதல்களை சமநிலைக்கு கொண்டு வருதல், மன அழுத்தத்தை குறைப்பதற்கான உளவள ஆலோசனைகள், நோக்கம், மற்றும் எதிர்பார்க்கும் இயற்கை, அழகியல் போன்ற துறைகளிற்கு புறம்பாக உயர்தரப் பாடப் பரப்புகளோடு, விரிவுரைகளிலும் பங்கு கொண்டு தமது அறிவு மற்றும் புரிந்துணர்வை விருத்தி செய்து கொள்ள முடிகிறது.

வணக்கத்திற்குரிய பேராசிரியர் கம்புறுகமவே வஜிரநாகிமி அவர்கள், மாதுறுவாவே சோபித சாகிமி, பண்டாரவளை நமிதநந்தநாகினி கொட்டபொல, அமரகீர்த்தி, நாகிமி லுனுகம்வேகர, விமலாந்த நாகினி, மினுவாங்கொட, ஆரிய மைத்திரிய கிமிநாகிமி, விரிவுரையாளர் மிரிஸ்வத்தே, விமல ஞானநாகினி, உடுவதம்மாலோக நாகிமி, சிக்டஸ்நிக்கலஸ் பெர்னாண்டோ, குருகுலசூரிய பங்குத் தந்தை அவர்கள், ஜெயநாத் பண்டித ரத்தன பங்குத் தந்தை அவர்கள், மௌலவிநியாஸ் அவர்கள், தாசீம் மௌலவி அவர்கள், பஸ்ருள் ரகுமான் மௌலவி அவர்கள், பாலசுப்பிரமணியம்
குருக்கள் அவர்கள், நித்தியநாதன் குருக்கள் அவர்கள், பேராசிரியர் ஓ.ஏ.அளையபெரும அவர்கள், பேராசிரியர் பியசீலி விஜயமான்ய அவர்கள், பேராசிரியர் சரத்பொடகம அவர்கள், பேராசிரியர் ர்.ஆ.னு.சு.கெரத் அவர்கள், கலாநிதி சிறிமல் அபேரத்னஅவர்கள், பேராசிரியர்.வி.நந்தகுமார் அவர்கள், கலாநிதிபுஞ்சிநிலமே மிக்கஸ்வத்தே அவர்கள், கலாநிதி சரத்கம்லத் அவர்கள்,சிறந்த விரிவுரையாளர் து.சு.P சூரியபெரும அவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர் அத்தநாயக்க ஆ கரத் அவர்கள், சிரேஸ்டவிரிவுரையாளர் நவரத்தன ரம்புக்வெல அவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர் தயாரோகண அத்துக்கோரள அவர்கள், சிரேஸ்டவிரிவுரையாளர் ளு.ஆ.ரு.ஏ.ளு சுபசிங்க அவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர் கருணாதிஸ்ஸ அத்துக்கோரள அவர்கள், இலங்கைமன்ற கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் சமன்வீரவன்ஸ அவர்கள், விரிவுரையாளர் கான்த்திகெட்டிகொட அவர்கள்,

விரிவுரையாளர் விஜிதா சிவபாலன் அவர்கள், விளைதிறன் ஆலோசகர் லால்பொன்சேகா அவர்கள், புகழ்பெற்ற விரிவுரையாளர் மொகான்சமரநாயக்கா அவர்கள், திரு திமுதுபியசேனா அவர்கள் திரு.பாலசூரியா ஆராய்ச்சி அவர்கள், ஜனாப்சபீர் ஆ கசீம் அவர்கள், திரு கேமந்த புஸ்பகுமார் அவர்கள், மேஜர் பிரியந்த விக்கிரமசூரிய அவர்கள், திரு சந்தனகுணவர்த்தன அவர்கள், திருமதி அரோசா பெரேரா அவர்கள், திருமதி பிரபா பிரியதர்சினி அவர்கள், திரு வசந்த விமலசேன அவர்கள், திரு பிரதீப் பத்தபெரும அவர்கள், புகழ்பெற்ற ஓவியர் தயாராஜபக்ச அவர்ர்கள், திரு பலாங்கொட சரத்மது அவர்கள், திரு ஜனகரட்ணாயக்க அவர்கள், திரு பந்துலகரிஸ்சந்திர அவர்கள், திரு விஜயந்த உப்பத்த திரு வசன்த சிறிநாத் அவர்கள் போன்றோர் போதனைகளின்
மூலம் பங்கு கொள்வர்.

4.0 பயன் பெற்ற பாடசாலைகள்

இதுவரை காலம் மோதல்கள் இடம்பெற்ற மற்றும் பின்தங்கிய பாடசாலைகள் பலவற்றின் மாணவ மாணவிகளின் மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தல் சிசுதிரிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு, அதற்கமைய அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவ மாணவிகள் இத்திட்டத்தின் பயனை அடைந்துள்ளார்கள்.

சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுடன் நல்லுறவை விருத்தி செய்வதனூடாக கொழும்பு ஆனந்தா வித்தியாலயம், கிராண்ட்பாஸ் சங்கபோதி வித்தியாலயம், ஹோமாகம மகா வித்தியாலயம், கேஃமத்தமகொட ரத்னாவளி ம.வி, கேஃருவன்னெல்ல ராஜசிங்க மத்திய ம.வி, கஃகண்டி உயர்மகளிர் பாடசாலை, கஃமகாமாயா மகளிர் பாடசாலை, கஃகிங்ஸ்வுட் வித்தியாலயம், கஃசுவர்ணமாலி மகளிர் பாடசாலை, கஃசீதாதேவி மகளிர் பாடசாலை, கஃதர்மராஜா ம.வி, கஃசில்வெஸ்டர் வித்தியாலயம், கஃதிருத்துவக்கல்லூரி, கம்பளை சார்ந்த மகளிர் வித்தியாலயம், தஜ்கர விஜேதுங்க தேசிய பாடசாலை, கம்பளை விக்கிரமபாகு வித்தியாலயம், கஃதெனு ஈரியகம சிறிபேராதனை ஆதார வித்தியாலயம், நுகவெல மத்திய ம.வி
போன்ற பாடசாலைகளின் சந்திப்புக்களை நடாத்தி சகோதரத்துவம், நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்வதற்கு இளமைப்பருவத்தில் கழிக்கும் மாணவ மாணவிகளுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மோதர ஆனந்த வித்தியாலயம், கொழும்பு நாலந்தா வித்தியாலயம், கஃஸ்ரீசுமங்கள வித்தியாலயம், இச் செயற்திட்டத்தில் விரிவுரைகள் மற்றும் துறை வெளிக்கள பயணங்களிற்கும் பங்களிப்பைச் செய்கின்றனர்.

5.0 நென குண வெடும: சிசு திரிய மாணவ கழங்களை அமைத்தல்

நென குண வெடும சிசுதிரிய தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக இது வரைக்கும் தொடர்பு கொண்ட இளைஞர்களான, மாணவ மாணவிகளிற்கிடையில் ஏற்பட்ட சகோதரத்துவத்தை இடைவிடாது தொடர்ந்து முன்னெடுத்து செல்வதும்இ அதனூடாக தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வலயமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதும், சிசுதிரிய மாணவ மாணவ கழகங்கள் அமைப்பதின்முக்கிய நோக்கமாகும். நென குண வெடும சிசுதிரிய கழகங்கள் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, அநுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய முரண்பாட்டுக்குள்ளானதும் கஸ்டப் பிரதேசங்களிற்குமான பல பிரதேசங்களில் நிறுவப்பட்டதோடு, உற்சாகமுள்ள இளைஞர் யுவதிகள் மீது தலைமைத்துவ ஆற்றல்களையும் விளைதிறன்களையும்
ஊக்குவிப்பதற்கு, மேற்கூறிய மாணவ கழகங்கள் பயனளித்துள்ளன. நென குண வெடும சிசுதிரிய கழகங்களுடாக ஒழுங்கு செய்யப்படுகின்ற சிசுதிரிய கண்காட்சிகள் மூலம் இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கு, அவர்களாகவே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

மேலும் நென குண வெடும வெளியீடுகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மூலமாக இளைஞர் யுவதிகளின் ஆக்கங்களை வெளிக்கொணர்ந்து அகில இலங்கை சமூகங்களுக்கு மத்தியில் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தத்திற்காக நடாத்தப்படுகின்ற நென குண வெடும சிசுதிரிய வேலைத்திட்டங்களிற்காக வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற வடமாகாண மாவட்டங்களில் வாழ்கின்ற பாடசாலை மாணவ மாணவிகள் அதிகமானோரை கலந்து கொள்ள வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நற்சிந்தனை வளர்ச்சி ஆத்மீக வளர்ச்சி விளைதிறன்களை மேலும் மேம்படுத்தல் போன்ற பல வேலைத்திட்டங்கள் வெளிக்களச் சுற்றுலாக்கள் மற்றும் விரிவுரைகள் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

திறமை மிக்க வளவாளர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களிற்குச் சென்று இத் திட்டங்களை அமுலாக்குவதால் அதிகமான இளம் சந்ததியினருக்கு இத் திட்டத்தின் கீழ் நற்பயன்கள் கிடைக்கவுள்ளன. ஒவ்வொரு கல்வி வலயத்திற்குள்ளும் இருக்கின்ற மாணவ மாணவிகளும் முறையான பயிற்சிகளினூடாக சிந்தனை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.

அடுத்ததாக அவர்கள் சிந்தனை மறுசீரமைப்பு பிரதிநிதிகளாக பயங்கரவாத பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிற்கும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களிற்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நென குண வெடும சிசுதிரிய (இளைஞர் ஊக்குவிப்பு) விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பயங்கரவாதத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை சமூக மேம்பாட்டிற்கான சிந்தனைகளை ஏற்படுத்தி, சமூக அபிவிருத்திக்கான பங்காளர்களாக அவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசுதிரிய வடக்கின் வசந்தம் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பயங்கரவாத செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்த இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் மத்தியில் சமூக நட்புறவை ஏற்படுத்தலும், அவர்களில் சிறப்புமிக்க உழைப்பை சமூக அபிவிருத்திக்கான பங்களிப்பாக மாற்றுவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் திட்டத்தினூடாக பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளை நடத்தை சீராக்கல் பிரதிநிதிகளாகக் கொண்டு, அவர்களை முகாம்களில் வாழ்கின்ற இளம் சமுதாயத்துடன் சேர்த்து இத்திட்டத்தினூடாக பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம், இவ் வேலைத்திட்டத்தின் வளவாளர்கள்
சிறந்த வழிகாட்டல்களை பெற்றுத் தருவதன் ஊடாகவும், வடக்கில் வாழ்கின்ற பல குழுக்களுக்கு நேரடிப் பயனை பெற்றுத் தருவதற்கு யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசுதிரிய மாணவர் கண்காட்சி ஒன்றை வவுனியாவில் அமைந்துள்ள நலன்புரிக் கிராமங்களிலே வசிக்கின்ற இளம் சமுதாயத்தினர் கண்டு களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதோடு, அக்கிராமங்களில் வாழ்கின்ற சித்திரக்கலை, ஆக்கத்திறனை மேம்படுத்தி பங்கு கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

பயன்பெற்ற பாடசாலைகள்

கனுகஹவௌ வித்தியாலயம், யாகவௌ வித்தியாலயம், விகாரஹல் மில்லாவௌ வித்தியாலயம், கெபிரிகொல்வேவ வித்தியாலயம், ஹல்மில்லவெடிய வித்தியாலயம், ஹொரவபொதான வித்தியாலயம், வெலிமுவபதான வித்தியாலயம், வாகல்கடதெமடவ வித்தியாலயம், மதவாச்சி முஸ்லிம் வித்தியாலயம், வெலிஓயாப் பிரதேசத்தில் சம்பத்நுவர வித்தியாலயம், பலுகஸ்வங்குவ வித்தியாலயம், மற்றும் பதவி பராக்கிரமபுர வித்தியாலயம், ருவன்புர வித்தியாலயம், புத்தங்கல வித்தியாலயம், பதவிமகாசென் மகா வித்தியாலயம், தம்மன்னா அலவக மகா வித்தியாலயம், கிரிகல்வௌ வித்தியாலயம், மற்றும் அசேலபுர வித்தியாலயம், வெலிகந்தமகா வித்தியாலயம், நவகினிதமன மகா வித்தியாலயம், திம்புலாகலநெலும்வௌ மகா வித்தியாலயம், மற்றும் செவனபிடிய மகா வித்தியாலயம், விலயாய மகா வித்தியாலயம் மற்றும் புல்மோட்டை முஸ்லிம் வித்தியாலயம், நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம், சேருநுவர மகாவெலிகம நவோதயா பாடசாலை, கோமரங்கடவெல வித்தியாலயம், மகாதிவுல்வௌ வித்தியாலயம், தோப்பூர் அல்ஹம்ரா முஸ்லிம் வித்தியாலயம், தோப்பூர் அல்ஹம்ரா பாத்திமா மகளிர் பாடசாலை, D.S சேனநாயக்கா தேசிய பாடசாலை, பண்டாரநாயக்கா மகளிர் மகா வித்தியாலயம், உகன மகா வித்தியாலயம், திவுலான மகா வித்தியாலயம், சென்னல் சாகிரா வித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம், கணேச மகா வித்தியாலயம், சம்மாந்துறை அல்மர்ஜான் மகா வித்தியாலயம், மற்றும் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடிமாத்திய மகா வித்தியாலயம், மற்றும் ஓட்டமாவடி பாத்திமா மகா வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா மகா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், மகாஜென வித்தியாலயம், காத்தான்குடி முஸ்லிம் மகா வித்தியாலயம், மீரா முஸ்லீம் மகா வித்தியாலயம், வாகரை மகா வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் நேரியகுளம் முஸ்லிம் வித்தியாலயம், மடுகந்தை ஸ்ரீதர்மரத்ன பிரிவேனா மடுகந்த மாமடு மகா வித்தியாலயம், மடுகந்த வித்தியாலயம், சிரிசுமன மகா வித்தியாலயம், ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலயம், நேரியகுளம் அல்-ஹாமியா வித்தியாலயம், செட்டிகுளம் நவோதயா வித்தியாலயம், பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்தா கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், செட்டிகுளம் வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் மகா வித்தியாலயம், வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயம், பாவற்குளம் கணேஸ்வரா மகளிர் வித்தியாலயம், பூவரசன்குளம் மகா வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் மற்றும் அல்-அசார் நவோதயா மகா வித்தியாலயம், புனித சேவியர் மகளிர் மகா வித்தியாலயம், புனித சேவியர் ஆண்கள் பாடசாலை, அல்-மீரா மகா வித்தியாலயம், சித்திவிநாயகர் இந்து வித்தியாலயம், பாத்திமா மத்திய மகா வித்தியாலயம், உயிலங்குளம் வித்தியாலயம், தலைமன்னார் வித்தியாலயம், புனிதவளனார் வித்தியாலயம், புனிதலூசியா மகா வித்தியாலயம், புனிதமேரி கான்தா வித்தியாலயம், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம், ரிசாட்பதியுதீன் மகா வித்தியாலயம், புனித அனீஸ் மகா வித்தியாலயம், முருங்கன் மகா வித்தியாலயம், பரிகரிகண்டால் பாடசாலை, மன்னார் அரிப்பு வித்தியாலயம், உசித்தரன்குளம் மகா வித்தியாலயம், இலுத்தோரி வித்தியாலயம், லோறன்ஸ் வித்தியாலயம், கரிசல் வித்தியாலயம், தோட்டவேலி வித்தியாலயம், இலகற்பிட்டி வித்தியாலயம், மொட்டகடாய் வித்தியாலயம், கற்கடந்தகுளம் வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், உடுவில் மத்திய மகா வித்தியாலயம், விக்டோரியா மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்து வித்தியாலயம், அருணோதயா வித்தியாலயம், யாழ்ரன் வித்தியாலயம், வைத்திய தியாகராஜ மத்திய மகா வித்தியாலயம், புனித அந்தோனியார் வித்தியாலயம், டெல்பிற் மகா வித்தியாலயம், டெல்பிட்றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயம், காரம்பொன்குடாமல் மகளிர் வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், அனலைதீவு மகா வித்தியாலயம், டெல்பிற் சைவப்பிரகாசா வித்தியாலயம், வேலணை மகா வித்தியாலயம், நயினாதீவு மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம், மல்லாவி மகா வித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், முத்தையன்கட்டு மகா வித்தியாலயம், கற்சிலைமடு அ.த.க பாடசாலை, யோகபுரம் வித்தியாலயம், பலிநகர் மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம் , கிளிநொச்சி மகா வித்தியாலயம் இபுனித திரேசாமகளிர் வித்தியாலயம், கிளிநொச்சி இந்து வித்தியாலயம், உருத்திரபுரம் மகா வித்தியாலயம், கனகபுரம் மகா வித்தியாலயம், பரந்தன் இந்து வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், முழங்காவில் மகா வித்தியாலயம், குருக்கள்தீவு மகா வித்தியாலயம், வட்டகச்சி மகா வித்தியாலயம், முழங்காவில் மகா வித்தியாலயம், ஜெயபுரம் மகா வித்தியாலயம், வீரவில மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், திருவையாறு மகா வித்தியாலயம், பளை மத்திய மகா வித்தியாலயம், அக்கராயன்குளம் மகா வித்தியாலயம், போமந்தனாறு மகா வித்தியாலயம், முருகநாதா மகா வித்தியாலயம், பூநகரி மகா வித்தியாலயம் போன்றன ஆகும்.

நந்தன விஜயசிங்க

Read more...

1000 தசாப்தங்கள் உறையா குருதி!

ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உடல் கண்டுபிடிக்கும் வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது மட்டுமல்லாது தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதுடக் இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது.

குறித்த இந்த மெமத் 60 வயதாக இருக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிப்பதுடன் ஆராய்ச்சியாளர் செம்யொன் கிரிகோர்யெவ் தலைமையிலான ரஸ்ய மற்றும் கொரிய நாட்டுக் குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது. 

தென்கொரியாவும், ரஸ்யாவும் அழிந்து போன மெமத்தினை மீண்டும் உருவாக்கும் கூட்டு ஒப்பந்தமொன்றில் கடந்த வருடம் கையெழுத்திட்டிருந்தன. மெமத்தின் உடலை மூடியிருந்த பனிக்கட்டியை அகற்றியதும் அதன் வயிற்றிலிருந்து இருண்ட நிறத்தில், கனமான இரத்தம் வடிந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். இரத்தம் திரவ நிலையிலேயே இருந்தமை, அதன் தசை இழையமும் புதிய இறைச்சியைப் போல சிகப்பு நிறத்திலேயே இருந்தமையும் தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக செம்யொன் கிரிகோர்யெவ் தெரிவித்துள்ளார்.



பொதுவாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் வாழும் சில உயிரினங்கள் பனியில் தமது உடல் இழையங்கள் உறைவதைப் பாதுகாக்கும் பொருட்டு கிரயோபுரடெக்டன்ட் ‘cryoprotectant’ எனும் இரசாயனத்தை உடலில் சுரக்கும் இயல்பினைக் கொண்டுள்ளன. மெமத்தின் குருதியிலும் கிரயோபுரடெக்டன்ட் இராசயனம் அடங்கியிருக்கக் கூடுமெனவும் அதன் காரணமாகவே தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மெமத்தில் குருதி உறையாமல் திரவ நிலையில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இரத்தத்திற்கு மேலதிகமாக பற்கள், எலும்புகள், தசை இழையங்கள் ஆகியவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் மெமத்தை குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு புத்துணர்வு அளிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி ‘மெமத்’ இனை குளோனிங் முறையில் தம்மால் உருவாக்க முடியுமென ஜப்பானிய விஞ்ஞானியொருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஜப்பானிய கொயாட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகிரா இரிடானியே ஒரு மெமத்தினை வெறும் 4 வருடங்களிலேயே உருவாக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டார். இதற்காக சிதைவடையாத நேர்த்தியான மெமத்தின் கருவை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் இதனை ஆபிரிக்க யானைகளின் கரு முட்டைகளில் செலுத்துவதன் மூலம் உருவாக்கமுடியுமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதே போன்று 1990 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சைபீரிய நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்துபோன மெமத்தின் உடல் தோல் மற்றும் தசை இழையத்திலிருந்து கருவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியானது தோல்வியடைந்தது.

கடும் குளிரினால் கருவானது சிதைவடைந்திருந்தமையே அதற்கான காரணமாகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாக விஞ்ஞானிகளால் கூறப்படும் இந்த இராட்சத விலங்கினம் பின்னாளில் முற்றாக அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது

Read more...

தீவிரவாத அமைப்பின் பட்டியலில் தொடர்ந்தும் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதால் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா அந்த அமைப்பைத் தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கை, அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட போதே அதில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாலேயே இந்த தடை நீடிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் விடுதலைப் புலிகளின் எச்சங்களை முற்றாக அழிப்பதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை பயன்படுத்துகின்றது. இதனால் தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்புகளை இலங்கையுடன் மட்டுப்படுத்தியுள்ளோம். என குறிப்பிட்டுள்ள அமெரிக்கா இலங்கை இராணுவத்தால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஏற்று தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றுடன் இலங்கை தனது கடல்சார் எல்லைப் பாதுகாப்பில் தொடர்பில் கடந்த காலத்தில் இணைந்து செயற்பட்டுள்ளது என்றும் இது தொடர்ந்தும் நீடிக்கும் என குறிப்பிட்டார்.

Read more...

கண்டி – கொழும்பு அதி சொகுசு கடுகதி ரயில் சேவை 3 ஆம் திகதி ஆரம்பம்!

இம்மாதம் 3 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் அதிசொகுசு கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவிததுள்ளார்.

1864 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக கண்டிக்கும், கொழும்புக்கும் இடையில் அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரிவித்த அமைச்சர் இந்த அதிசொகுசு ரயிலின் 10 பெட்டிகளில் 44 இருக்கைகள் மட்டும் இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் இதன் ஒரு வழிப்போக்குவரத்து கட்டணமாக ஒருவரிடம் இருந்து 500 ரூபா அறவிடப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாது குறித்த சொகுசு ரயில் வண்டி வாரத்துக்கு ஒருநாள் மாத்திரமே பயணத்தை மேற்கொள்ளுவதுடன் இது ராகம, கம்பஹா, பேராதனை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரமே தரித்து நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Read more...

மட். நகர நுழைவாயிலில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன்! சுமணரத்தின தேரர்

மட்டக்களப்பில் கடந்த 16 வருடங்களாக நான் விகாராதிபதியாக இருந்து இன ஐக்கியத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் சமய பணி செய்து வருகின்றேன். அதற்கிணங்க மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காக மட்டக்களப்பு நகர நுழைவாயில் அமைந்துள்ள பிள்ளையாரடி பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விளம்பர பலகை ஒன்றை போடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதியை கேட்டு அந்த விண்ணப்பித்தினை அதன் கொழும்பு தலைமையகத்திற்கு அனுப்பியதுடன் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரைக்கம் அதற்கான எந்த பதில்களோ அனுமதியோ வரவில்லை என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப் படுத்துவதற்காகவே அந்த புத்தர் சிலையை வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். ஆனால் நான் இன்னும் புத்தர் சிலையை வைக்கவில்லை. அதற்கான அனுமதி இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. இலங்கையில் எங்கும் எவரும் தங்கு தடையின்றி தமது மத வழிபாட்டு தளங்களை அமைக்கமுடியும். இலங்கையில் மதவழிபாட்டு தளங்களை அமைக்கமுடியாது என யாரும் கூறமுடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதப்பிரச்சினையை இனங்களுக்கிடையே தோற்றுவிக்க முயல்கின்றனர். அதனடிப்படையிலேயே கடந்த புதன்கிழமையன்று மக்களை பிழையாக வழிநடாத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். எனவே மக்களை பிழையாக வழிநடாத்த வேண்டாமென நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இவர்கள் மக்களை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் திசை திருப்ப முயசிக்கின்றனர் என குறித்த பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் வழியில் அனைத்து இடங்களிலும் நான் புத்தர் சிலைகளை நிறுவுவேன். நாட்டில் புத்தர் சிலைகளை நிறுவி நாட்டை பிடிக்க போகின்றோம் என்று கூறுகின்றனர். இது ஒரு பௌத்த நாடு, நாங்கள் நாட்டை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் நிலை எதற்கு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர்.

அப்படியானால் கண்டி, கரலியத்த உடிஸ்பத்துவ எனும் இடத்தில் இந்து கோவிலுள்ளது அங்கு எத்தனை தமிழ் குடும்பங்கள் உள்ளன. அதே போன்று திகன கெங்கல்ல எனுமிடத்தில் இந்து கோவிலுள்ளது அங்கு எத்தனை தமிழ் குடும்பங்கள் உள்ளனர் என நான் கேட்கவிரும்புகின்றேன். அங்குள்ள கோவில்களை ஒரு போதும் அகற்றுமாறு நாங்கள் கூறவில்லை.

நான் ஒரு பௌத்த பிக்கு என்ற வகையில் விகாரைகளை அமைப்பது புத்தர் சிலைகளை வைப்பது மக்களுக்கு நல்ல போதனைகளை செய்வதுதான் எனது வேலை அந்த வகையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி இன நல்லுறவை கட்டி வளர்க்க நான் பாடுபட்டு வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

இந்திய மருத்துவ மனையில் இடம்பெற்ற கொடுமையா? சிறுமியின் உள்உறுப்புகள் நீக்க.... பெற்றோர்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோக் சிங் என்பவர், இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார் இன்நிலையில் இவர் கடந்த ஏப்ரல் மாதம், பஞ்சாபில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக இந்தியா வந்திருந்தார். வந்த இடத்தில், அவரது 10 வயதுடைய மகள் குர்கிரன் கவுர், நீர்சத்து குறைந்து, வறட்சி நோயால் பாதிக்கப்பட்டாள். இதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, அங்குள்ள மருத்துவ ஊழியர் மருந்து ஒன்றினை ஊசி ஒன்றினை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்குள், குறித்த சிறுமி இறந்துவிட்டார்

அதனையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிறுமியின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்ற பெற்றோர்கள், மகளுக்கு இறுதிக் கிரிகைகள் செய்வதற்கு முன் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் மற்றொரு பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் குறித்த சிறுமியின் உள்உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பிரிட்டிஷ் கவுன்சிலர் மூலம், சிறுமியின் உடல் உறுப்புகளைப் பெற்றுத்தருமாறு இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

தனது மகளின் இறுதிக்கிரிகைகள் முழுமை நடைபெறவேண்டுமெனில், அவளது உறுப்புகள் அனைத்தும் வேண்டும் என்று குறித்த சிறுமியின் தெரிவித்துள்ளார். தன்னுடைய பெண்ணிற்கு செலுத்திய ஊசிமருந்து குறித்த விபரத்தை டாக்டர்கள் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் மற்ற மருத்துவ செலவுகள் எதற்கும் பணம் வாங்கவில்லை என்றும் குறித்த சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குர்கிரனின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய தவறினை மறைக்க மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பெற்றோர் கருதுகின்றனர்.

Read more...

இலஞ்சம் பெற்ற நீதிபதி பற்றிய தேடல் நீளுகிறது.....!

இலஞ்ச ஊழல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஹோமகம மாவட்ட நீதிபதி தொடர்பான தேடல்கள் மேலும் தொடர்கிறது என இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆ​ணைக்குழு குறிப்பிடுகிறது.

ஏற்கனவே அந்த நீதிபதி வழங்கிய வழக்குத்தீர்வுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமா? என இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆணையகத்தின் தலைவர் ஜகத் பாலபட்டபந்தி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நிச்சயம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்டுள்ள மனுவை வைத்துக்கொண்டு அதனுடன் தொடர்புபடுத்தி ஏனைய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் அதிகாரிகள் பற்றிய பல்வேறு மனுக்கள் நாளுக்கு நாள் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு வந்தவண்ணம் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், சில மனுக்களை தொடர்ந்து நடாத்த முடியாதவண்ணம் உள்ளன எனவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவிக்கிறது.

அவ்வாறே, மேலும் தேடல்களி்ல் ஈடுபடுவதற்காக வெகுவிரைவில் அதிகாரிகள் குழு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜகத் பாலபட்டபெந்தி குறிப்பிட்டார்.

ஆய்வுப் பகுதிக்கும் அதிகாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

இலங்கை இராணுவம் தமிழரின் தாய்நிலத்தை அபகரித்ததே உண்மை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, எல்.ரீ.ரீ. இயக்கம் தமிழர்களுக்காக எழுந்துநின்றது என்றும் ஸ்ரீலங்கா இராணுவம் அந்த இயக்கத்தை அழித்து தங்களது தாய்நிலத்தை ஆக்கிரமித்து வருவதாகவும் குறிப்பிட்டதற்காக, தேசிய சுதந்திர முன்னணி தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

அதுவிடயமாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

எல்.ரீ.ரீ.யினரில் அபரிமித இன்னல்களுக்கு மத்தியில் உயிர்நீத்தோர் பல்லாயிரக்கணக்கானோராவார். மற்றையவர்களுக்கு மனிதாபிமான முறையில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது முப்படையினராகும். இப்படியான உண்மை ஒருபுறமிருக்க மாவை சேனாதிராஜா நன்றி மறந்து பேசுவது நகைக்கத்தக்கது. ஆயினும் தற்போது வடக்கில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் செய்ந்நன்றி மறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மேலும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது, தங்களது கட்சி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான கட்சிகள் கடந்த காலகட்டத்தில் எல்.ரீ.ரீ. இயக்கத்தினருடன் பெரும் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டதாகவும், தாம் அதற்கு ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கேற்ப, எல்.ரீ.ரீ. கொலைகார, பிரிவினைவாத பயங்கரவாதிகளுடன் தாம் நெருங்கிய தொடர்புகொண்டிருந்ததாகவும், தமது ஆசிர்வாதத்துடன் அது முன்னணியிற் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ள சேனாதிராஜா இனவாதத்தைத் கட்டியெழுப்புவதற்கு தமது கட்சி பங்குகொண்டதென்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

தமிழ் முஸ்லிம்கள் வாழ்கின்ற தங்களது தாய்நிலத்தில் தேவையில்லாமல் இராணுவம் உட்புகுந்து தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பறித்துவருவதாகவும், அதற்கு அரசாங்கம் உடந்தையாக இருப்பதாகவும், அதற்காக சீனாவின் உதவி பெறப்படுகின்றது என்றும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

சீனாவையும் அருகழைத்துக் கொண்டு, இவ்வாறு சேனாதிராஜா பேசுவதிலிருந்து தெளிவாக விளங்குவது என்னவென்றால், அவர்கள் இவ்வாறு செயற்படக் காரணம் மேற்கத்தேயத்தினதும், இந்தியாவினதும் விருப்பத்தை நிறைவேற்றவேயாகும்.

இந்நேரம் மாவை சேனாதிராஜாவினதும் பிரிவினைவாத எண்ணம், மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகளினதும், இந்தியாவினதும் அபிலாஷைகளுடன் ஒன்றிணைவதைக் காணலாம். இவ்வாறான தகாத இனவாதப் பேச்சுக்களை இந்நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்படுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒருசேர நிராகரிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.'

(கேஎப்)

Read more...

சர்வதேச கவிதைப் போட்டியில் கலைமகனுக்கு ‘கவித்தீபம்’ பட்டம்

இலங்கை வெலிகம, மதுராப்புரையைச் சேர்ந்த கவிஞர் கலைமகன் பைரூஸ் தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் ‘கவித்தீபம்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஸலாஹியா சர்வதேசப் பாடசாலையின் தமிழாசிரியரும், இரண்டாம் மொழி (தமிழ்)வளவாளரும், மொழி பெயர்ப்பாளருமான பைரூஸ்,தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் மாதாந்தம் நடாத்தும் கவிதைப் போட்டியில் ‘காசேதான் பேறாமோ?’ எனும் தலைப்பில் எழுதிய கவிதை சிறப்புக் கவிதையாக தேர்வுக் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்டு ‘கவித்தீபம்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்மாயில் எம். பைரூஸ் எனும் இயற்பெயர் கொண்ட கலைமகன் பைரூஸ், ஏற்கனவே அரச, மாகாண, மாவட்ட, வலயக் கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்துகொண்டு முதலிடங்களைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

மீன்பாடும் தேனாட்டின் பெரிய கதிரைக்கு நீயா? நானா?

மீன்பாடும் தேனாடு என வர்ணிகப்படுகின்ற மட்டக்களப்பில் தற்போது மீன் பாடுகின்றதோ.. தேன் ஒடுகின்றதோ என்பது தெரியாது. ஆனால் அம்மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதலாவது மாவட்டமாக பதிவாகியுள்ளது. இந்த சீத்துவத்தில் அம்மாவட்டத்தின் பெரிய கதிரைக்காக இருவர் முட்டி மோதுகின்றனர் என்பது மாத்திரம் உண்மை.

பெரிய கதிரை என்றால் சிலருக்கு விளங்கியிருக்கும் , சிலருக்கு இருக்காது. அதாவது இலங்கையின் இருபத்தைந்து நிர்வாக மாவட்டங்கள் உண்டு. இந்த இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் 25 கதிரைகள். இதுதான் மாவட்டத்தின் பெரிய கதிரை. அதாவது அரசாங்க அதிபர் கதிரை. வவுனியா மாவட்டத்திற்கான கதிரையில் குந்தியிருந்த அம்மையார் தற்போது மட்டக்களப்பு கதிரையில் குந்தவைக்கப்பட்டுள்ளார். இந்த அம்மாவை இழுத்து விழுத்தி கதிரையில் குந்த படாதபாடு படுகின்றார் அம்மாவுக்கு அடுத்த கதிரையில் இருக்கின்ற பாஸ்கரன்.

ஜனாவின் ஒன்றுவிட்ட சகோதரனான இவர் எவ்வாறு நிர்வாக சேவையில் இணைந்தார் என்பது சுவாரசியமான கதை. இலங்கையிலே இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தபோது, இணைந்த வட கிழக்கின் மாகாண சபை ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்டிஎல்எப் என்ற மூன்று கட்சிகளின் கூட்;;டான த்றீ ஸ்ராரின் கையிலிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரெலோ அமைப்பு சார்பாக பாராளுமன்றுக்கு தெரிவாகியிருந்தார் ஜனா. அன்றைய ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸவிற்கு நெருக்கமாகவும் இருந்தார். இக்காலகட்டத்தில் நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புக்கான பரீட்சை இடம்பெற்றது, தனது அண்ணாச்சி பரீட்சை எழுதுகின்றார் என்பதற்காக பரீட்சாத்திகள் அனைவரையும் சேவைக்கு உள்வாங்குமாறு பிறேமதாசவிடம் வேண்டினார் ஜனா. யாவரும் நிர்வாக சேவையில் இணைக்கப்பட்டனர். (இவ்வளவுதான் கதை அண்ணாச்சி சோதினை பாஸ்பண்ணவில்லை என்று நேரடியாக சொலவது நாகரிகம் இல்லை பாருங்கோ)

இலங்கை நிர்வாக சேவைக்கு பின்வழியால் நுழைந்த இவர் சென்ற இடங்களெல்லாம் மக்களுக்கு தலையிடியாகவே இருந்துள்ளார். காலத்திற்கு காலம் மாறி மாறி வருகின்ற இயக்ககாரன்களுக்கு எடுபிடியாக தன்னை மாற்றிக்கொண்ட இவர் தொடர்ந்து மக்கள் தலையில் மிளகு அரைத்தே வந்துள்ளார்.

இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளராக இருந்தபோது, மக்கள் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். உடனடி இடமாற்றம் கிடைக்கப்பெற்றது. கருணாவின் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன் கருணாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக மாறினார்.

மட்டக்களப்பு கச்சேரிக்கு மேலதிக அரசாங்க அதிபராக பாஸ்கரனை அழைத்துவந்த முரளிதரன் இவர் எனது அப்பன் வழி உறவினர் என்றாராம். மட்டக்களப்பு அரசாங்க அதிபராக வருவதற்கு விநாயமூர்த்தியின் உறவினராக இருக்கவேண்டும் என எந்த வர்த்தமானி ஊடாக கோரப்பட்டுள்ளது?

மட்டக்களப்பில் நிர்வாக சேவையில் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை தனது ஆட்களை நியமிப்பதன் ஊடாக தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கின்றார் கருணா. முன்னாள் அம்மானின் இந்த முயற்சி திருவினையாகாது என்பதை கட்டியம் கூறிவைக்க விரும்புகின்றேன்.

ஒரு பிரதேச செயலகத்தை நிர்வகிக்க முடியாதவர் அல்லது அங்கு கொள்ளையடித்தார் என்று குற்றச்சாட்டில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட நபர் ஒருவரை அதே மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களுக்கும் பிரதானியாக நியமிக்க கருணா மேற்கொள்ளும் முயற்சியானது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

இதில் சுவாரசியமான விடயம் யாதெனில் கருணாவும் ஜனாவும் ஒரு காலத்தில் பரம எதிரிகள். ஜனாவை கொல்வதற்கு கருணாவும் , கருணாவை கொல்வதற்கு ஜனாவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர்கள். இன்று ஜனா கருணாவினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கதிரை பிச்சை வாங்கியுள்ளார். இவர்கள் அரசுக்கு எதிராக வார்த்தைகளை சரமாரியாக பொழிந்தாலும், தங்களது விடயங்களை சாதித்துக்கொள்வதற்காக அரசுடனும் அதன் பங்காளிகளுடனும் உறவாளிகளாகவே இருக்கின்றனர் என்பது பாஸ்கரன் விடயத்தில் புரிகின்றது. தனது அண்ணாச்சியை பிறேமதாசவின் உதவியுடன் நிர்வாக சேவையில் இணைத்தார். தற்போது கருணாவின் கருணையில் மாவட்ட அரச அதிபராக்க முயற்சிக்கின்றார்.

இதில் இறுதியாக தோல்வியடையப்போபவர் கருணா என்பது கவலைக்குரிய விடயம். பாஸ்கரன் கதிரையை பிடிப்பதற்காக கருணாவின் காலடியில் கிடந்தாலும் கதிரையை பிடித்த பின்னர் அண்ணன் தம்பி உறவு , நிர்வாக சேவையினுள் நுழைத்த நன்றிக்கடன் என ஏகப்பட்ட கடமைகள் இருக்கும்போது கருணா கைவிடப்படலாம்..

கருணாவின் விசுவாசி எனச் சொல்லப்படுகின்ற பாஸ்கரனுக்காக பொன் செல்வராசா வக்காலத்து வாங்கிய பதிவொன்றும் மக்கள் அறியவேண்டியது. மட்டக்களப்பு கச்சேரியின் முக்கிய அதிகாரி ஒருவரை சந்தித்த பொன்செல்வராசா „பாஸ்கரனுக்கான கடமைகள் அரச அதிபரினால் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளதேன்' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அவ்வாறாயில் பாஸ்கரன் கருணாவின் விசுவாசியா அன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உளவாளியா? இந்த நிலைகளை பார்க்கின்றபோது, பாஸ்கரன் அரச அதிபராக நியமிக்கப்பட்டால் மட்டக்களப்பு கச்சேரி கட்சிக்கிளைகளின் கட்டிடத்தொகுதியாக மாறும். அதாவது அங்குள்ள ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு கட்சிகிளைகளின் அலுவலகங்களாக மாறும்.

எனவே இத்தனை அரசியல் கட்சிகளுடனும் பின்னிப்பிணைந்திருக்கின்ற ஒரு நபரால் மக்களுக்கு சுயாதீனமாக சேவையாற்ற முடியுமா? அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள். அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்குமான உறவு இன்றியமையாததுதான். ஆனால் அதற்கென்ற ஒரு வரையறை உண்டு. கட்டுப்பாடு உண்டு. உயர் பதவி ஒன்றில் அமர்ந்திருந்துகொண்டு உத்தியோகபூர்வ வாகனத்தை சட்டத்திற்கு புறம்பாக எடுத்துச்சென்று அரசியல்வாதிகளுடன் குடித்து கும்மாளம் அடித்துவிட்டு ஊரவனின் மதிலில் மோதியிருகின்றார் பாஸ்கரன். இவ்வாறான ஒருவரின் கையில் மாவட்ட நிர்வாகம் சென்றால் மாவட்டத்தில் கட்டிடத்தொழிலாளிகன் தேவை அதிகரிக்குமே தவிர வேறு முன்னேற்றம் ஏற்படும் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.

இலங்கையிலே அரச சேவையில் இருக்கின்ற அத்தனை பேரும் இலங்கை குடிமக்களின் வேலையாட்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். அரசாங்கங்களை மக்கள் தெரிவு செய்கின்றார்கள். அரசாங்கங்கள் உங்களை மக்களின் வேலையாட்களாகவே அமர்த்துகின்றார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் யாசிகன் ஒருவனுக்கும் கூலியாள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். யாசிகன் ஒருவன் ஒரு சீனிப்பக்கட்டை வாங்கும்போது அதற்கான வரியினை செலுத்துகின்றான். அந்த வரிப்பணத்தில்தான் உங்களது பிள்ளை நாளாந்தம் உணவுண்ணுகின்றது என்பது மறுக்க முடியாதது. இவ்வாறு இருக்கும்போது மக்களுக்கு சொந்தமான வாகனத்தை கொண்டுபோய் மோதுவது மன்னிக்கமுடியாதது. இதற்கு விளக்கம் கோரப்பட்டபோது பாஸ்கரன் நடந்து கொண்ட விதம் வியப்புக்குரியது. (மேலும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை நிறுத்துகின்றேன்)

இறுதியாக கதிரைக்காக ஒருவனை ஒருவன் இழுத்து வீழ்த்துவது ஒன்றும் இலங்கை தமிழர் வரலாற்றில் புதிது அல்ல. முதலாம் இரண்டாம் கதிரைகளுக்கிடையில் தொடர் பனிப்போர்தான். தமிழர்களுக்கெல்லாம் தந்தை எனப்படுகின்ற செல்வநாயகம் தொடக்கம் இறுதியில் முள்ளிவாய்காலில் மண்டையில் கொத்துவாங்கின தேசியத் தலைவர் எனச் சொல்லப்பட்ட பிரபாகரன் வரை நிகழ்ந்த கதைதான். முன்னுக்கு இருக்கின்றவர்களை போட்டுத்தள்ளிவிட்டு கதிரையில் குந்தியதும், பின்னுக்கிருக்கிறவன் கதிரையை பார்க்கின்றான் எனக்கு ஆப்பு வைத்து விடுவானோ என்ற சந்தேகத்தில் போட்டுத்தள்ளியதும் நாம் அடிக்கடி கேள்விப்பட்ட கதைகள்தான்.

அது அரசியல் சாக்கடையில் நடந்தவை. மக்களின் வரியில் சம்பளம் வாங்குகின்றவர்கள், சட்டத்தை ஒழுங்கை நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் நீதிக்கு புறம்பாக செயல்பட்டு கதிரை பிடிக்க முற்படுவது நியாயமா? என்ற நியாயமான கேள்வி உங்களிடம் எழலாம். ஆனால் நேர்வழியில் வந்தவர்களிடம் நீங்கள் மேற்கண்ட கேள்வியை கேட்கலாம். குறுக்கு வழியில் வந்தவர்கள் நேர்மையாக சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடிப்பார்கள், அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் இவர்களிடம் நீதி, நேர்மை, கடமை , கன்னியம் , கட்டுப்பாடு என்பன இருக்கும் என்று எதிர்பார்ப்பது எத்தனை முட்டாள்தனமானது.

Read more...

Friday, May 31, 2013

மறைந்த டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன நினைவாக லண்டனில் இரு நிகழ்வுகள்.

நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டிருந்து சிங்கப்பூர் வைத்தியசாலையில் உயிரிழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுபினருமான டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தவின் நினைவாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானிய கிளை இரு நிகழ்வுகளை நடாத்துகின்றது. அன்னாருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கட்சியின் பிரித்தானியக் கிளையினர் கேட்டுக்கொள்கின்றனர்.


Two events in London in memory of late UNP MP Dr Jayalath Jayawardena

Dr Jayalath Jayawardene (Dr JJ) will be sadly missed by all members of the United National Party UK Branch as a true friend and a great supporter of the UNP UK BRANCH....May he Rest in Peace.

The United National Party UK Branch has arranged the following:

1. Mathaka Wasthra Puja in Remembrance of Dr Jayalath Jayawardena MP will
be held on:

Date: Saturday 1 June 2013
Time: 7.30PM
Venue: London Buddist Vihara
Dharmapala Building
The Avenue, Chiswick
London W4 1UD

2. A Catholic Mass will be held on:
Date: Sunday 2 June 2013
Time: 8.00PM
Venue: St Mary Magdalene's Catholic Church
No:1, Peter Avenue, Willesden Green
London NW10 2DD

Your Attendance at both services will be very much Appreciated.

Dinesh Kapukotuwa
President- United National Party
United Kingdom Branch

(M) 07545573343 - Dinesh
(M) 07957209998 - Azahim
(M) 07956569786 - Brixtious



Read more...

மருத்துவகுணம் படைத்த பூசணிக்காய்

பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. இந்த பூசணிக்காயை சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் போன்ற நோயகள் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீக்குவது மட்டுமல்லாது அடிக்கடி உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை தினமும் சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீருவதுடன் ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் குடித்தால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும். அதே வேளை பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய்யும் கட்டுப்படுத்தப்படும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். அது மட்டுமல்லாது பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைகவைதது எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

Read more...

இலங்கையை சுற்றி பார்க்க அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அதிகரிப்பு எண்ணிக்கை நூற்றுக்கு 14.7 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுடன்
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 79 ஆயிரத்து 829 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புள்ளி விபரத்தில் குறிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 3 இலட்சத்து 68 ஆயிரத்து 627 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை மேலும் அதிகமாக வரவளைக்கும் நோக்குடன் நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் சிலவற்றை புணரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கை விஐயம்!

சுற்றுலா வர்த்தகம் நிர்மாணத்துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதை நோக்கமாக கொண்டு தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஐயத்தின் போது தாய்லந்து பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதுடன். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

அது மட்டுமல்லாது கண்டிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர் சியம் மாக பீடத்தின் 260 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

நாளை இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் மாலைத்தீவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Read more...

விமானத்தில் ஆசிய நாட்டுப்பெண் தற்கொலை முயற்சி. அலாஸ்காவில் தரையிறங்கி்யது விமானம்.

UA 851 என்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, புதன்கிழமை அன்று, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததைக் கண்ட பணிப்பெண்கள் கதவைத் தட்டியுள்ளனர். வெளியே வர மறுத்த அந்தப் பயணி, அறைக்குள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனால் விமானத்தை அலாஸ்காவில் உடனடியாகத் தரையிறக்க நேரிட்டது. விமானம் தரையிறங்கியவுடன், அந்தப் பயணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

மற்ற பயணிகள் அனைவரும் அன்று இரவு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் வியாழன் அன்று, அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. மற்றபடி, அவரது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை. பயணிகளில் சிலர், இணையதளத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆசிய நாட்டுப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். மருத்துவ உதவி தேவைப்பட்டதால் விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது என்று தெரிவித்திருந்தனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com