Friday, May 31, 2013

சூரிச் நகரில் உலக சோசலிச வலைத்தளத்தின் பதினைந்து ஆண்டுகள் நிறைவை ஒட்டி கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கி்ன்றது.

உலக சோசலிச வலைத் தளம் முதல் தடைவயாக சுவிஸில் ஒரு கலந்துரையாடலுக்குஅைழப்புவிடுகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவால் வெளியிடப்படும் உலக சோசலிச வலைத் தளம் நாளாந்தம் 50,000 வாசகர்கள் வரை உலகத்தில் அதிகளவு வாசிக்கப்படும் சோசலிச வலைத் தள பதிப்பாகும். நான்காம் அகிலத்தின் அனைனத்துலக் குழுவின் செயலாளரும் சர்வேதச ஆசிரியர் குழு அங்கத்தவருமான பீட்டர் சுவார்ட்ஸ்(Peter Schwarz) யூன் 1ம் திகதி உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் அடித்தளங்கள் பற்றி சூரிச் Volkshaus இல் உைர ஆற்றுகின்றார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதாகும். இதற்காக அதன் நாளாந்தக் கட்டுரைகளில் புதிய அரசியல் நிகழ்வுகைள வரலாற்றுரீதியான, சர்வேதச உள்ளடக்கத்தில் ஆய்வு செய்வதுடன், வர்க்கப் போராட்டத்தின் மீதான அதன் தாக்கங்கைள விளங்கப்படுத்துகின்றது.. அது கடந்த 15 வருட வெளியீடுகளில் கலாச்சார, இயற்கைவிஞ்ஞான துறைகளின் வளர்ச்சியினை மிக துல்லியமாக ஆய்வு செய்வதின் மூலம் இயற்கை, சமூகம் தொடர்பான ஒரு பரந்த விளக்கத்தையும் ஊக்குவிக்கின்றது.

உலக சோசலிச வலைத் தளம் தனது சேவையினை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ரோசா லுக்சம்பேர்க், ட்ரொட்ஸ்கி ஆகியோரின் பெரும் பாரம்பரியங்கைள அடித்தளமா கொண்டிருப்பதுடன், மார்க்சிசத்தின் பெறுபேறுகைள பாதுகாப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பலபத்து வருட போராட்டங்கைளயும் உறுதுணையாக கொண்டுள்ளது. இதன் மூலம் பாரிய நெருக்கடியும் அதிர்ச்சியுமான ஒரு காலகட்டத்தில் இந்த நிகழ்வுகைள விளங்க முயலும் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களின் ஒரு குரலாக ஒலிப்பதுடன் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழிவுகரமான பாதையினை ஒரு உண்மையான முற்போக்கான புரட்சிகரமான மாற்றட்டினால் எதிர் கொள்கின்றது.

ஒரு புதிய புரட்சிகர சகாப்தத்தில் தொழிலாளவர்க்கமும் சோசலிசமும்

இடம்: Volkshaus Zürich, Raum 24, Stauffacherstraße 60, Zürich
நேரம்: 01.06.2013, 18:00 மணி



Read more...

ஒடிசாவில் 11 வயது சிறுமியை உயிரோடு எரித்துக் கொன்ற பெண்கள் கைது!

ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டம், பாலிநல்லி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கி (வயது 11) என்ற சிறுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சேர்ந்து நேற்று முன்தினம், ஒரு வீட்டின் பின்புற தோட்டத்தில் இருந்த மாதுளை மரத்தில் பழங்களை திருட்டுத்தனமாக பறித்துள்ளனர்.

பழங்களை திருடியதால் மாட்டிக்கொள்வோம் என்று ரிங்கி பயந்தார். ஆனால், இதனை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மற்ற சிறுமிகளின் தாயார்களான மோலி சாகு, சுலோச்சனா சாகு ஆகியோர் விரும்பினர்.

எனினும், செய்த தவறை நினைத்து தொடர்ந்து வருந்திய ரிங்கி, நடந்த சம்பவத்தை, பழம் பறித்த வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டார். எனவே, மற்ற சிறுமிகளின் குட்டும் வெளிப்பட்டது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த சிறுமிகளின் தாயார், நேற்று ரிங்கியின் வீட்டுக்கு வந்து ரிங்கியை தாக்கியதுடன், அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது பாட்டி அங்கு வந்து, தீயை அணைத்தார்.

உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த ரிங்கி, மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

Read more...

ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? சுமந்திரன் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டாராம் மாவை!

ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பிரச்சினைக்கான தீர்வு நகல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நகலில் தீர்வானது ஒற்றையாட்சியின் கீழ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகலினை ஏற்றுக்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுமந்திரன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் சுமந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை அவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கையின் இறையாண்மையையும் அதன் ஒருமைப்பாட்டையும் காப்பேன் என சத்தியப்பிரமானம் செய்து , பாராளுமன்ற வரப்பிரசாதங்களையும் பின்கதவால் கிடைக்கும் சலுகைகளையும் அனுபவித்து வருகின்றார் மாவை என்பது யாவரும் அறிந்த விடயம்.


Read more...

அடித்தார் ஹிஸ்புல்லா ஆப்பு. கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு இன்று தனது பொதுக் கூட்டம் ஒன்றினை நடாத்த திட்டமிட்டிருந்தது. இன்று மாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடாத்தவிருந்த இப்பொதுக் கூட்டத்தினை நாடாத்துவதற்கு காத்தான்குடி பொலிசார் இறுதி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர்.

இதன்காரணமாக, இன்று நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு, அடுத்த கூட்டம் தொடர்பாக விரைவில் அறியத்தரப்படும் என அறிவித்துள்ளது.

மேற்படி அமைப்பு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊழல்களை வெளிக்கொணர்வதில் தனது பங்களிப்பை செலுத்தியிருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

விமானத்தை சுட்டுவீழ்த்திய இரு புலிகளுக்கு எதிராக வழக்கு - உபாலி ஆனந்த

அன்ரோனேவ் விமானத்தை சுட்டுவீழ்த்திய புலிப்பயங்கரவாதிகள் இருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அன்ரோனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்தி அதிலிருந்த ரஷ்ய விமானி, விமான உதவியாளர்கள் இருவர் மற்றும் 29 படைவீரர்கள் இறப்பதற்கு இவ்விருவரும் காரணமாக இருந்தனர் என்றும் அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அன்ரோனோவ்-32 எனும் விமானம் தலாவ எனுமிடத்திலுள்ள கிரிவௌவுக்கு மேலாக பறந்துக்கொண்டிருந்த போதே ஏவுகணையினால் தாக்கப்பட்டமையினால் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவம் தொடர்பில் புலிகள் அமைப்பைச்சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ராசதுரை ஜெகன்,நல்லான் சிவலிங்கம் ஆகிய இருவர் மீதே அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

இந்த சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை கருவியை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள தாக பயங்கரவாரத புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Read more...

மட்டக்களப்பில் பௌத்த நிர்மாணப் பணிகளுக்குத் தடை! தானும் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிடுகிறார் சுமனரத்ன தேரர்!

மட்டக்களப்பில் பௌத்த மத நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதை தடைசெய்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட மனுவை கருத்திக்கொண்டே நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது. மேலும் இந்தத் தடைஉத்தரவு மட்டக்களப்பு ஸ்ரீ மங்கலாராமாதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

சுமனரத்ன தேரரால் மட்டக்களப்பு பிள்ளையார் வீதியில் நிர்மாணிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட புத்த சிலைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதனது கட்சி உறுப்பினர்கள் மூலம் நேற்று முன்தினம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 'பௌத்த சிலைகள் மூலமாக நாட்டைக் கைப்பற்ற முனைகிறார்கள்' எனவும் அவர்கள் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள எம்பிட்டியே சுமனரத்ன தேரர், இந்நடவடிக்கை மூலம் தான் பெரும் சோகத்திற்குள்ளாகியிருப்பதாகவும், தீக்குளித்தல் அல்லது வேறேதெனும் முறையினால் தன் உயிரை நீக்குவதல்லாமல் தனக்கு செய்யக் கூடிய மாற்றுவழிகள் ஏதும் இனி இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.

(கேஎப்)

Read more...

Thursday, May 30, 2013

யாழ்ப்பாண தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது!

ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது நேற்று காலைவழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை இம்முறை 11 பேர் பெற்ற போதும் அவர்களிகளுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளதுடன் “சிவானந்தன் ஆய்வு மையம்” என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இவர் யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டதுடன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

அதிகார குரல் யாரை குத்தும்

ஆல் போல் தழைத்து அறுகுபோல் பெருகிவாழச் சொல்லி வாழ்த்துகிறார்கள் அல்லவா! ஆல் போல பெருவிருட்சமாகி விடுவதுதான் இயலாவிட்டால் போகட்டும், அறுகம்புல் போல உயிர்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் இயல்பு நமக்கு இன்றியமையாத் தேவையாகிறது.

அழிந்துவிடாமல் மீள்வதில் அறுகம்புல்லுக்கொரு ஆற்றல் உண்டு. ஏழுமுறை உழுதுழுது அதன் வேர்முனை ஈறாகப் பொறுக்கியெடுத்த பின்னும், மண்ணிடை நுணுங்கி மறைந்து கிடந்த அணுவளவு கணுவிலிருந்து அது மீண்டெழுந்து முளைத்து நிலம் மூடிப்படர்ந்துவிடும்.

தமிழ் மக்களுக்கு அந்த ஆற்றல் இயல்பாயமைந்தது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், தமிழ் மொழிக்கு அந்தத் தகவமைப்பு இருந்திருக்கிறது. வடமொழியின் பல்முனைத் தாக்குதலில் தமிழின் கிளைமொழிகளாகிய மற்ற திராவிட மொழிகள் யாவும் தேவநாகரி எழுத்தொலித் தாக்கத்தை உள்வாங்கி இணங்கிப் போயிருக்கின்றன.

தமிழ் மட்டும் காலமாற்றத்திற்கேற்ற தகவமைப்போடு தன் வேர்த்தன்மையை இழக்காமல் மக்களின் நாவில் காலத்தை ஊடறுக்கும் மொழியாகத் தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட இலக்கிய எழுத்து வாழ்வையும் அது கொண்டிருக்கிறது. இவ்வளவு புராதனமான நீண்ட ஒரு பண்பாடு, இன்றைய பிரச்சினையில் எல்லாவற்றையும் கறுப்பு-வெளுப்பாய் மட்டுமே எப்படிப் பார்க்க முடிகிறது?

மறுபக்கத்தை மறைத்து வெறுத்து விரோத நிலையில் வைத்துக்கொண்டு, தனது பக்கத்தை மட்டும் ஒரே வாய்பாடாக உருப்போட்டுக் கொண்டும் ஒற்றைத் தேசிய உருவாடியபடியும் இருப்பது எங்ஙனம்? கண் மூடி எதிர்ப்பதும் அல்லது கண்மூடி ஆதரிப்பதும் என்ற இரு நிலைப்பாடுகளுக்கிடையில் நம்மை இறுக்கிக் கொண்டிருப்பதை எப்படித்தான் விளக்க முடியும்?

இப்படி பன்மைத்துவத்தை மறுத்து ஒற்றைப்படையான சிந்தனைக்குள் மனிதர்களை மாட்டுவிக்கும் ஒரு கலாசாரம் எப்படித் தற்காலப் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும்? உலகின் சமகாலப் போக்கிற்குள் எப்படிப் பொருந்திக் கொள்ளும்? தன்னை எப்படிப் புதுப்பித்துக் கொள்ளும்? தன்னை எப்படி விமர்சித்துக் கொள்ளும்? தன்னை விமர்சிக்க சக்தி இல்லாத கலாசாரம் உயிருடன் இருக்க முடியுமா?

நம் சமூகத்திற்கென்று பிரத்தியேகமாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு குணாம்சம் இதற்குக் காரணமோ என்று தோன்றுகிறது. நம்மை அறிவுச்சமூகமாகச் சொல்லிக் கொள்வதில் முனைப்புக் காட்டுகிறவர்களிடம் மரபாயிருந்து வரும், மற்றவர்களைச் சமமாய்க் கருத மறுக்கும் போக்குதான் அது. இவ்வாறு சிலர் நினைத்துக்கொண்டிருக்கும் அறிவுரீதியான மேலாதிக்கமும், மற்றோரைக் கீழ்நிலைப்படுத்தி அவர்கள் மீது அதிகாரம் செலுத்த விரும்பும் மனோபாவத்தையே கொண்டிருக்கிறது. நான் இந்த சமூகத்தின் மதிப்புக்குரிய உயர்ந்த பிரஜை. எனவே நான் சொல்வதையே கேள்! என்கிற அதிகாரக் குரலைத் தன்னிடம் வைத்திருக்கிறது.

இவர்கள்தான் நமது சமூகத்திற்காக, மக்களுக்காகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதுதான் நமது பிரச்சினையில் அவிழ்க்க முடியா முடிச்சாக தொடர்ந்து வதையளித்துக் கொண்டிருக்கிறது. இவர்களிடமிருந்தும், இவர்கள் உருவாக்கி அளிக்கும் சிந்தனையிலிருந்தும் மீண்டு வந்தே, இன்றைய பிரச்சினைக்கும் எமது மக்களின் துக்கங்களுக்கும் விடை தேடியாக வேண்டும்.

Read more...

முதலாவது தொடர்பாடல் செய்மதியை இலங்கைக்கு வழங்க சீனா ஒப்பந்தம்!

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செய்மதியை வழங்குவது தொடர்பான உடன்பாடு பீஜிங்கில் நேற்று முன்தினம் கையெழுத்திடப்பட்டதை அடுத்து, இலங்கையில் சீனா தனது செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ளவுள்ளதாக சைனா டெய்லி நாளிதழ் தெரிவித்துள்ளது.

சீனாவின் வர்த்தக செய்மதி சேவைகளை அனைத்துலக சந்தையில் வழங்கும் அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமான சீன கிரேட்வோல் நிறுவனம் இலங்கையின் சுப்ரீம்சற் நிறுவனத்துக்கு எதிர்காலத்தில் செய்மதியை வழங்கவுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் முன்னிலையில், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் இரு நாடுகளும், வர்த்தகம், முதலீடு, விவசாயம், விண்வெளித் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவுள்ளன.

இரு நாட்டு மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில், இலங்கையின் பொதுவான அபிவிருத்திக்கு சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சீன அதிபர் தெரிவித்துள்ளார். DFH-4 செய்மதித் தளத்தில் இருந்து சீன நிறுவனம் இலங்கைக்கான தொலைத்தொடர்பு செய்மதிக்கான சேவைகளை வழங்கவுள்ளது.

இதன்மூலம் இலங்கை மற்றும் அதன் அயல்நாடுகளுக்கான தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்புச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. செய்மதி எப்போது விநியோகிக்கப்படும் என்பதையோ, இதன் முதலீடு எவ்வளவு என்பது குறித்தோ சீன நிறுவனம் தகவல் வெளியிடவில்லை. செய்மதிகளை ஏற்றுமதி செய்யும் போது, அவற்றைக் கட்டுப்படுத்துபவர்களுக்கான பயிற்சிகளையும் சீன கிரேட் வோல் நிறுவனமே வழங்கிவருகிறது.

சுப்ரீம் சற் நிறுவனத்துக்காக, ஒலிபரப்புச் சேவைகளை வழங்குவதற்கு சீன நிறுவனம் கடந்த நவம்பரில் தொலைத்தொடர்பு செய்மதி ஒன்றை ஏவியது. மே மாதம், ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்த 18 நாடுகளுக்காக 43 செய்மதிகளையும், 37 ஏவும் சேவைகளையும் மே மாதத்தில் சீன நிறுவனம் வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தை அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், இந்த ஆண்டுக்குள் அது செயற்படத் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது பூகோள பெய்டோ கடலோடல் சேவைகளை சீனாவுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பெய்டோ கடலோடல் முறையின் ஐந்தாவது வெளிநாட்டு பயனாளராக இலங்கை மாறியுள்ளது. இந்த உடன்பாட்டின்படி, பெய்டோ கடலோடல் முறையைப் பயன்படுத்தி இருநாடுகளும் மீன்பிடி, போக்குவரத்து, தகவல் சேகரிப்பு போன்ற விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுவதென்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

Read more...

பொதுபல சேனா வழக்கொன்றில் தோல்வி.... 'மெத்செவன' வை உடனடியாக அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பொது பல சேனா இயக்கத்தினால் சென்ற மார்ச் மாதம் காலி ரங்வாவில பிலானவில் திறந்துவைத்து 'மெத் செவன - பௌத்த தலைமைத்துவ கல்விக் கல்லூரி' என்ற பெயரில் இயங்கிவந்த கட்டடத்திலிருந்து அவசரமாக வெளியேறுமாறு காலி மேலதிக நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கின்றது.

படகொட கமகே அஸங்கஅமரசிரி என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்த நீதவான் குணேந்திர முனசிங்க இந்த ஆணையை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கடகொடஅத்தே ஞானஸார தேரர், எம்பிலிப்பிட்டியே விஜித தேரர், விதாரன்தெனியே நந்த தேரர் மற்றும் லிட்ல் ஸ்மைல் எஸோஸியேஷன் எனும் பெயரில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த ஷிரான் லக்ஷித்த ஆகியோருக்கே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பொது பல சேனாவினர் தமக்குச் சொந்தமான இடத்திலிருந்து 3 ஏக்கர் நிலத்தை பலாத்காரமாகக் கைப்பற்றியுள்ளதாகவும், இதுபற்றி பல முறை தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்தப் பரிகாரமும் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டு மனுதாரர் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்திருந்தார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

நீதிபதிக்கு வழங்கப்பட்டது காவற் சிறை......!!

தமது முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கொன்றில் பக்கச்சார்பாக நின்று நீதிவழங்குவதற்காக வழக்கிற்கு முகங்கொடுக்கும் ஒருவரிடமிருந்து நீதிபதியொருவர் மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளஹோமாகம மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்கவை, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைகள் ஆணைக்குழு கைதுசெய்து அடுத்த மாதம் மூன்றாம் திகதிவரை காவற் சிறையில் வைத்துள்ளது.

(கேஎப்)

Read more...

பாலியல் சேட்டை ஆசாமியை வெளியேற்றக்கோரி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவிகளுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட முயலும் பொருளியல் துறை விரிவுரையாளர் செ. இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்பாட்டமொன்றினை மாணவர்கள் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்தனர். இவ்வார்ப்பாட்டத்தில் குறித்த விரிவுரையாளருக்கெதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் விரிவுரையாளரின் கொடும்பாவி மாணவர்களினால் எரியூட்டப்பட்டது.

மேலும் இவரின் பல்கலைக்கழக தனியறை மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமளவான மாணவ இமாணவிகள் பங்குகொண்ட இவ்வார்ப்பாட்டம் ஒரு மணித்தியாலம் நீடித்ததுடன் இறுதியாக துணைவேந்தருக்கு கலைப்பீட மாணவ ஒன்றியத்தினால் மகஜர் அனுப்பப்பட்டது.

குறித்த பேராசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான தொல்லைகள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பேராசிரியர் மீது மாணவர்களால் முன்வைக்கப்பட்ட 25 குற்றசாட்டுக்களில் முக்கியமானவை,

01) மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல், பெண்களை தனியாக அறைக்கு வருமாறு கூப்பிடுதல், பரீட்சை வினாத்தாள்கள் எடுப்பதற்கு ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக வரவேண்டும் என வற்புறுத்துகின்றமை.

02) தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு குறுந்தகவல் அனுப்பியமை, தனக்கு எதிராக செயற்படுபவர்களை காட்டித்தருமாறு வற்புறுத்தியமை, தன்னுடைய பாடத்தை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியமை, இதனோடு பரீட்சை வினாத்தாளில் பெயர் எழுதும்படி வற்புறுத்தியமை.

03) குறைந்த புள்ளி எடுப்பவர்களைத் தனது பிரத்தியேக அறையில் வந்து சந்திக்கும்படியும் சந்தித்தால் மட்டுமே புள்ளி வழங்குவேன் என்றும் கூறியமை, தனது பிரத்தியேக அறைக்கு 2 மணிக்குப் பின்னர் தனியாக வந்து சந்திக்க கூறுகின்றமை.

04) தன் செயற்பாடுகளுக்கு உடன்பட்டால்தான் நல்ல புள்ளிகளை வழங்குவேன் என அச்சுறுத்துகின்றமை, தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்கு இறுதியாக புள்ளிச் சான்றிதழ் வழங்கும் போது இது முழுமையான பட்டம் அல்ல என எழுதி விடுவேன் எனப் பயமுறுத்தியமை.

05) துணைப் பாடமாகத் தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்குத் தற்காலிக விரிவுரையாளர் பதவியை வழங்க மாட்டேன் எனக் கூறியமை, துணைப் பாடத்தனை வேறு துறைகளிலோ வேறு பாடங்களிலோ எடுக்க கூடாது என வற்புறுத்துகின்றமை.

06) தனியாக சந்திக்கும் மாணவிகளிடம் பரீட்சை விடைத் தாள்களின் பின்னர் வெற்றுத் தாளைகளைச் சேர்த்துக் கட்டுமாறு தனக்கு இசைவாக நடக்கும் பட்சத்தில் உயர்ந்த புள்ளிகளை வழங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என கூறுகின்றமை.

07) தொலைபேசி எண் கேட்டபோது தொலைபேசி இல்லை எனப் பதில் கூறியமைக்கு புதிய தொலைபேசி வாங்கித்தரவா? எனக் கூறியமைஇ தொலைபேசி எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பியபோது அதற்கு பதிளிக்காத மாணவிகளை அறைக்குள் அழைத்து மிரட்டியமை.

08) அனைத்து மாணவிகளுடைய விபரங்களையும் பதிவாளர் அறையில் சென்று முகவரி உட்பட அனைத்து விடயங்களையும் பெறுவேன் என மிரட்டியமை, தனக்கு இசைவாகாத எந்தவொரு மாணவியையும் சிறப்புக் கலைப் பாடத்தலிருந்து பொதுக்கலைப் பாடமாக மாற்றி வெளியேற்றுவேன் என கூறுகின்றமை.

09) தொலைபேசி எண் கேட்டுக் கொடுக்காத பெண் பிள்ளைகளுக்கு இறுதிப் பரீட்சைக்கு கையொப்பம் இடமாட்டேன் என்று மறுத்துள்ளமை.

10) வகுப்பறையில் பரீட்சையில் குறைந்த புள்ளி எடுத்த ஆண் மாணவர்களை ரியூட்டோரியல் எழுதித் தரும்படியும் பெண் பிள்ளைகளைத் தனித்தனியாக தனது அறையில் சந்திக்கும்படியும் கூறியமை.

11) அவருக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட பொது அதற்குக் காரணம் பொருளியல்துறை மாணவிகளே எனக் கூறி அதற்காகவே முதலாம் பருவ Mathematics Paper பரீட்சையில் மிகக் கடினமாகப் போட்டேன் என வகுப்பறையில் கூறியமை.

12) தான் கூறும் விடயங்களை வெளியில் கூறக் கூடாது என்றும் அப்படிக் கூறும் பட்சத்தில் நீங்கள் எப்படி சித்தியடைந்து போவீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன் எனவும் வகுப்பில் கூறியமை.

13) பீடாதிபதிக்கோ ஏனையோர்களுக்கோ தான் கட்டுப்பட மாட்டேன் என்றும் ஏனைய விவுரையாளர்களைக் கூடப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்றும் அதற்கேற்ப மாணவர்களை நடந்து கொள்ளும்படியும் கூறியமை.

மேற்குறித்த பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் ஒன்றியதினால் இவ்விடயம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பேராசிரியர் அவரது பதவியில் கடந்த மாதம் 16ஆம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்தன.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்திடம் உள்ளக விசாரணையை மேற்கொள்ளுமாறே முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இப்பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டு மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் விரிவுரையாளர்கள் உள்ளடக்கிய ஐந்து பேர் மாணவிகளுடன் தொடர்ந்தும் பாலியல் ரீதியான தொல்லைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இரு பேராசிரியர்களது பெயரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நேற்று காலையும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் நுண்கலைக்கழக இசைத்துறை தலைவர் பாலியல் குற்றச்சாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக 3ம் வருட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

(பாறூக் சிகான்)


Read more...

நாட்டில் அதிகூடிய குளங்களை அமைத்தவர் ஜே.ஆர்! - ரணில்

இலங்கையில் அதிகூடிய குளங்களைக் கட்டியெழுப்பியர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன என, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புத் திட்டம் பற்றி பொதுமக்களின் கருத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக புதியதொரு இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, ரணில் விக்கிரமசிங்க, தாதுசேன, மகாசேனன், பராக்கிரமபாகு ஆகிய மூவரும் ஒன்றிணைந்து கட்டிய குளங்களை விடவும், அதிகூடியளவு குளங்கள் ஜே.ஆர் நிர்மாணித்தார் எனக் குறிப்பிட்டார்.

மகாவலி போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தைத் தொடங்குவதற்கான சக்தி நிறைவேற்றதிகாரமுடைய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருக்கு இருந்ததென்பதை ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டினார்.

1978 இல் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஆரம்பித்து அரசாங்கத்தின் தலைமை, நிறைவேற்றதிகாரத்தின் தலைமை, அரசாங்கத்தின் தலைமை ஆகிய மூன்று அதிகாரங்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியில் பாரியதொரு முன்னேற்றத்தைக் காண்பதற்குத் தேவையான சூழல் அன்று அமைந்திருந்தது.

அவ்வாறே, காலத்திற்குத் ஏற்றாற்போல சேவைபுரிந்து, நாட்டுக்குப் பொருத்தமான பிரதமரையும், நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதிமுறையையும் அறிமுகப்படுத்திய கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியையையே சொல்ல முடியும். எதிர்வரவுள்ள நாட்டின் அரசியலை மக்கள் விரும்பும் வண்ணம் மாற்றியமைப்பதற்கு ஆவன செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜயவர்த்தனவினால் தொடங்கப்பட்ட மக்களாட்சி காணாமற் போய், பல தசாப்தங்கள் ஆகின்றன என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதியும், நீதிமன்றமும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை பலம் குன்றச் செய்ததாகவும், பின்னர் பாராளுமன்றம் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை பலமில்லாமல் செய்தது என்பதையும் அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.

அதற்கேற்ப, நீதிமன்றம், பாராளுமன்றம், மனித உரிமைகள், வாக்களிக்கும் அதிகாரம் அனைத்தும் பலம் குன்றியிருப்பதாகவும் ஜனாதிபதி மாத்திரம் வெற்றிபெற்றுள்ளார் என்றும் மக்கள் தோல்வியைச் சந்தித்துள்ளார்கள் என்றும் விக்கிரமசிங்க தெளிவுறுத்தினார்.

(கேஎப்)

Read more...

தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் வாழும்போது, வாழ வேண்டிய தேரர்கள் தீக்குழிக்கிறார்கள்!

'தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் வாழ்ந்துகொண்டிருக்க, வாழ வேண்டிய தேரர்கள் தீக்குளிக்கிறார்கள்' என ராவண பல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.

'இந்நாட்டின் சில தேரர்கள் காலையுணவைப் பெற்றுக்கொண்டு, பாகலுணவைப் பெற்றுக் கொள்வதைப் பற்றிச்சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு பற்றிய கவலையில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எங்களை விமர்சிப்பதே தவிர வேறொன்றும் இல்லை.

போவத்தே இந்திரரத்ன தேரர் சிறந்த, நற்குண, சக்திமிக்க தேரர்களில் ஒருவர். அவர் வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவர். அவர் தீர்மானித்ததொரு விடயம் உள்ளது. மாடுகளை அறுப்பதற்கு எதிராக அவர் எழுந்துநின்றார். ராவண பல அமைப்பினராகிய நாங்களும் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராக எழுந்து நிற்போம். அதுபற்றி வெகுவிரைவில் பார்த்துக்கொள்ளவியலும்' என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகை! விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது!

புத்தளத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை அதிரடியாக பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளனர்.

குறித்த விபச்சார விடுதியை இயக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும், விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட 32 வயதுடைய பெண்ணொருவரையுமே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்கென புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் எனவும், பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

நீதிபதி சுணில் அபேசிங்க கைது!

ஹோமாகமை மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நபர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஹோமாகமை மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

நான்கு பிள்ளைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை!

நான்கு பிள்ளைகளின் தாயை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு கேகாலை உயர்நீதிமன்றம் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், 20,000 ரூபா அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறியதால் மேலும் ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை என தீர்ப்பளித்துள்ளது

குறித்த பெண் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வீட்டில் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த குறித்த நபர் பலாத்காரமாக குறித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துச் சென்று பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்

கிந்துலை, தென்னபிட்டவத்த என்ற இடத்தைச் சேர்ந்த அஜித் பாலித என்ற நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Read more...

தனிமையில் செல்லும் பெண்களை மேற்பார்வை செய்கின்றது சவுதி அரசு! கணவர் அல்லது தந்தையின் துணை.........

சவுதி அரேபியாவில் பெண்கள் தமது கணவர் அல்லது தந்தையின் துணை இல்லாமல் நாட்டை விட்டு வெளியே செல்கிறார்களா என்பதை, சவுதி அரசு இலத்திரனியல் முறையில் மேற்பார்வை செய்யும் திட்டத்தை கடந்த வாரம் முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலத்திரனியல் மேற்பார்வை முறையை சவுதி அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை இருந்தாலும், அப்படியொரு மேற்பார்வை முறை உள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்து சவுதி பெண்கள் நாட்டை விட்டு வெளியே செல்லும்போது, அந்த பெண்களின் ஆண் பாதுகாவலர் கணவர் அல்லது தந்தைக்கு சவுதி விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திலிருந்து இருந்து குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படுகின்றது. இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், அந்த பெண் நாட்டை விட்டு வெளியே சென்றது அவரது கணவருடன் என்றாலும், எஸ்.எம்.எஸ். வருகிறது.

கடந்த ஆண்டு சவுதி பெண்களுக்கு கார் செலுத்தும் உரிமை வேண்டும் என்று குரல்கொடுத்த பெண்ணுரிமைவாதி மனால் அல்-ஷெரீஃப், இந்த விவகாரத்தை போட்டு உடைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு தெரிந்த தம்பதிகள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள ரியாத் விமான நிலையம் சென்றிருந்தபோது, விமானம் ஏறுமுன், கணவருக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. சவுதி விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த எஸ்.எம்.எஸ்.ஸில், 'உங்கள் மனைவி, ரியாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்கிறார்' என குறிப்பிடப்பட்டிருந்தது' என்று தமது ட்விட்டரில் தகவல் வெளியிட்டிருக்கிறார், மனால் அல்-ஷெரீஃப்.

அதனையடுத்தே இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. சவுதி அரசு இது பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Read more...

சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!

சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன உட்பட 17 பேருக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் எதிர்வரும் யூன் மாதம் 05 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

துல்கிரிய நீதவான் முன்னிலையில் நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கை யூன் மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கையை அன்றையதினம் கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

வறக்காப்பொல, நீர் விநியோகத்திட்டம் 2012 ஆம் ஆண்டு யூலை 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டபோது சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சிரேஷ்ட அமைச்சர் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

டாக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார்!

சுகயீனமுற்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானாதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் திகதி பிறந்த ஜயலத் ஜயவர்தன தனது 59வது வயதில் காலமானார்.

Read more...

வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதால் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு மும்மடங்காகுமாம்!

வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதன்மூலம் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு மும்மடங்காக அதிகரிப்பதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல காலங்களாக நீடிக்கின்ற நோய்கள், மற்றும் அதிக வலிகளை ஏற்படுத்துகின்ற நோய்கள் வரும் சந்தர்ப்பத்தில், பலர் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர் இதன்போது வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை விட அதிகளவான மாத்திரைகளை உற்கொள்வது உடலுக்கு பாரியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களின்மூலம் நோவு அல்லது அதிகப்படியான வலிகள் ஏற்படும்போது உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மாறான வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவு உட்கொள்வதன் காரணமாக வாழ்நாள் நோயாளிகளாக மாறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுமென குறித்த ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, May 29, 2013

வவுனியா தாண்டிக்குளத்தில் மூன்று சிறுமிகளின் கொலை புதிய திருப்பம்... பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி நழுவுகிறது பிரதேச செயலகம். போலி வேடம் போடும் அரச அதிகாரிகள்.

வவுனியா தாண்டிக்குளத்தில் கடந்த இரு வாராங்களுக்கு முன் (16.05.2013) ஒரு தாய் தன் மூன்று சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை (4 வயது, 3வயது, 1வயது) கிணற்றில் வீசி எறிந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச் சம்பவத்தை தொடர்ந்து அந்த இடத்துக்கு சில அரசியல்வாதிகளும், மக்களும் திரண்டனர். அந்த அளவு இச் செய்தி வவுனியாவில் பெரும் சூடு பிடித்தது. அவ்விடத்துக்கு சிறி ரெலோ கட்சியின் தலைவர் திரு.உதயராசா என்ற அரசியல்வாதி விரைந்து சென்றுள்ளார். ஊர் மக்கள் பலர் அவ்விடத்தில் கூடி வேடிக்கை பார்ப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர். ஆனால் பிரச்சினை நடப்பதற்கு முன் எவ்வித செயற்பாடுகளையும் இவர்கள் செய்ய முன்வரவில்லை.

இது தொடர்பான மனதை உலுக்கும் புகைப்படங்கள் பல இணைய தளங்களிலும், செய்தித் தாள்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் செய்திகளில் பிரதேச செயலகம் மற்றும் அதனுள் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள், சிறுவர் அமைப்புக்கள் உட்பட சிறுவர் காப்பகங்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் 27.05.2013 திங்கட்கிழமை வீரகேசரி பத்திரிகையில் பிரதேச செயலாளரால் இச் செய்திக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும், 5 வருடங்களாக குறித்த பெண்ணான சந்திரகுமாரி மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், அவருக்கு தாங்கள் உதவ முன்வந்திருந்ததாகவும் ஆனால் காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு தற்கொலை முயற்சியிலும், கொலை முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் மேலும் அவர் தெரிவிக்கையில் ஊடகங்கள் உண்மையை அறியாது தம் மீதும், தம் அலுவலகம் மீதும், அலுவலகர்கள் மீதும் குற்றஞ்சாட்டியதாகவும் கூறியுள்ளார்.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பான உண்மைகள் பலவற்றை நாம் இங்கு முன்வைக்கி்ன்றேன். அவற்றை முன் வைப்பதனூடாக இச் சம்பவத்தின் உண்மைத் தன்மைகளையும், சமூக நிறுவனங்களின் போலித்தனமான அக்கறைகளையும் வெளிக் கொணரலாம் என்று நினைக்கின்றேன்.

பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரம் குறிப்பிட்ட செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் காணப்படவில்லை. உண்மைத் தன்மைகளை மறைத்து தம் மீதுள்ள குற்றத்தை திசை திருப்ப முனைகின்றார். நடந்த சம்பவங்கள் அவருடைய அலுவலகத்திலிருந்து எம்மால் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணாண சந்திரகுமாரி சம்பவம் நடைபெறும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் வவுனியாவில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவர் காப்பகங்களுக்கு சென்று தம் பிள்ளைகளை பொறுப்பேற்குமாறு கேட்டிருக்கின்றார். ஆனால் அந் நிறுவனங்கள் பெற்றோர் உள்ள குழந்தைகளை தாம் பொறுப்பேற்க முடியாது என்று தட்டிக் கழித்திருக்கின்றனர். அவ்வேளையிலும் மன்னார் வீதியில் அமைந்துள்ள ஓர் காப்பகத்தில் இரண்டு மணி நேரமாக தன் பிள்ளைகளின் மறு வாழ்வுக்காக போராடியிருக்கின்றார். அனால் அங்கும் அவர்களுடைய சட்டங்கள் இப் பெண்ணுக்கு எதிராகவே காணப்பட்டதால் அங்கும் ஏமாற்றத்துடனேயே திரும்பியதாக அவரை மனிதாபிமான முறையில் இலவசமாக அங்கு ஏற்றிச் சென்ற ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்பு அவ் ஆட்டோ உரிமையாளர் கூறிய அறிவுறுத்தலின் படி அப் பெண் கிராம சேவையாளரிடம் சென்று பிரச்சினையை கூறியுள்ளார். அவர் பிரதேச செயலகத்தக்கு செல்லுமாறும், சிறுவர் பிரிவு உத்தியோகத்தரிடம் செல்லுமாறும் அறிவுறுத்தியிருக்கின்றார். அடுத்த நாளே அப் பெண் பிரதேச செயலகத்துக்கு இறுதி முயற்சியாக விரைந்திருக்கின்றார். அங்கு சிறுவர் பிரிவு பொறுப்பாளர் திரு.கனடி, பெண்கள் பிரிவு பொறுப்பாளர் திருமதி ஜெயசித்திரா ஆகியோர் இதை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் இவரையும், இவருடைய குழந்தைகளையும் காட்டி நகைத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிரதேச செயலாளரான திரு.சிவபாதசுந்தரத்திடம் நேரடியாக அப் பெண் பிரச்சினையை முன்வைத்த போது அவரை பேசியிருக்கின்றார். அவ் வேளை அப் பெண் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தாம் தற்கொலை செய்வதாக கூறியிருக்கின்றார். ஆனால் அதற்கு அங்கிருந்த பெரு மதிப்பு மிக்க ஊழியர்கள் சிறிதும் சிந்திக்காமல் முதலில் அதைச் செய் என்று கேலி செய்திருக்கின்றனர். இச் சம்பவம் உண்மையில் நடைபெற்றதாக பிரதேச செயலக அலுவலர் ஒருவர் தெரிவித்து கவலைப்பட்டார்.

இத் தொடர் தோல்விகளாலும், தொடர் கேவலங்களாலும் பாதிக்கப்பட்ட அப் பெண் தற்கொலை மற்றும் கொலை முயற்சிக்கு தூண்டப்பட்டிருக்கின்றார் என்பது அறியப்படுகின்றது. கொலை செய்தவரை விட அக் கொலைக்கு தூண்டுகோலாக இருந்தவரே பெருங்குற்றவாளி என்று சட்டம் கூறுகின்றது. அவ்வாறாயின் இங்கு முதற் குற்றவாளி யார்?

இங்கு எமக்கு கிடைக்கப்பட்ட செய்திகளின் படியும், பிரதேச செயலாளர் குறிப்பிட்ட செய்திகளின் ஊடாகவும் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதை இங்கு முன்வைக்கின்றோம்.

5 வருட காலமாக சந்திரகுமாரி என்ற அப் பெண் மன நோய் பாதிக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார். அவ்வாறானால் அப் பெண் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பெறெடுத்தாரா?

அந் நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்திருந்தால் அவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தன் செக்ஸ் உணர்வை தீர்த்திருக்கின்றாரா? அப்படியானால் அவருக்கு என்ன தண்டனை?

இறந்த பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு வயது 4. அப்படியானால் அப்பிள்ளை பிறக்கும் போது சந்திரகுமாரி மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பது பிரதெச செயலாளரின் கருத்து. இதை வைத்தியர்கள் கணவரிடம் அறிவிக்கவில்லையா? என்றால் இதில் ஆழ்ந்திருக்கும் மர்மம் என்ன?

தன் பிள்ளைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டு இருந்த போது ஒரு வாரமாக தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக போராடிய நிலையை பைத்தியம் என்று கொள்ளலாமா?

ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் காப்பகங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குச் சென்று இத்தகைய நிலையில் தன்னந்தனியாக போராட முடியுமா?

குழந்தையை கிணற்றில் வீசி இறந்த போது விளையாட்டுப் பொருட்கள் சில கிணற்றில் கிடந்தன. முதலில் கிணற்றில் அவை வீசப்பட்டு பிள்ளைகளின் பதட்டத்தை போக்கியிருக்க முனைந்திருக்கலாம். இது ஒரு பைத்தியம் செய்யக்கூடிய வேலையா?

இவர் உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால் பிள்ளைகளின் நன்மை கருதி உடனடியாக பிள்ளைகளை பொறுப்பேற்க ஏன் குறித்த நிறுவனங்கள் முன்வரவில்லை? கூடியிருந்த அயல் மக்கள் இப் பெண்ணின் நிலை மோசம் என்று கருதியிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருப்பர். இவற்றிலிருந்து உண்மையில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதை அறியலாம். ஆனால் அவர் உளவியல் ரீதியாக தற்போது பாதிக்கப்பட்டிருப்பதற்கு மேற்குறிப்பிட்ட அனைவருமே காரணகர்த்தாக்கள் ஆவர்.

இவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று எங்கு தாம் குற்றவாளி இல்லை என்று கூறினாலும் சமூகம் ஏற்கப்போவது இல்லை.

இவற்றை ஆராய்கின்ற போது பிரதேச செயலாளரும், உதவி பிரதேச செயலாளரும், மற்றும் பொறுப்பான பதவியில் உள்ள அதிகாரிகளும் பாரிய குற்றம் நிகழ்வதற்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது தம் பதவியை பயன்படுத்தி வழக்கை திசை திருப்புகின்றனர்.

எனவே உயர் அதிகாரிகள் இப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், தான்தோன்றித்தனமாக தம் வேலைத் தளங்களை விபச்சார பூமியாக்கிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட அசர அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோருகின்றோம்.

இது போன்ற ஒரு கேவலமான நிலை இனி இவ் இலங்கைத் திருநாட்டில் நடைபெறாமல் இருக்க வேண்டாம் என்றால் இத்தகைய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் வெறும் கண்துடைப்புக்காக இருக்கின்றனர். குற்றம் செய்ததாக காட்டப்பட்டுள்ள பெண்ணின் கணவர் சிறி ரெலோவுடன் நெருங்கிய உறவில் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவ்விடத்துக்கு அக் கட்சியின் அமைப்பாளர் சென்றதன் மர்மம் என்ன? இதையும் அரசு கண்டறிய வேண்டும்.

5 பிள்ளைகளை பெற்றெடுத்தவருக்கு பிள்ளைகளை வளர்க்க முடியாமல் இன்னொரு திருமணம். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?


இத் தற்கொலை முயற்சியின் பின்னாலும், கொலையின் பின்னாலும் பெரும் மர்மம் ஒழிந்திருப்பது உண்மை. இவ் வழக்கில் பொலிசார் நீதியாக நடந்து கொண்ட உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

இச்சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள பிரதேச செயலாளர் கிரவல் குவாரி, கருங்கல் குவாரி என்று எடுத்து பல சொத்துக்களை சேர்த்துள்ளார் மக்கள் பேசுகின்றனர். இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆராய வேண்டும். அரச கேள்விகள் இவர்கள் ஊடாக வெளியே விற்கப்படுவதாகவும் தெரிவுக்கப்படுகின்றது. இது தொடர்பான கட்டுரையை ஆதாரங்களுடன் வரும் வாரம் வெளியிடுகிறேன்.

---சித்தன்---







Read more...

மாடுகள் அறுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியே!

போவத்தே இந்திரரத்ன தேரர், தனது தனது ஆடைக்குத் தீவைத்து தற்கொலை செய்துகொண்டதானது ஏற்கமுடியாததும், எந்த வேளையிலும் கடைசியாகச் செய்ய வேண்டியவற்றை முற்கூட்டியே செய்வது பொருத்தமற்றது எனவும் தேசாபிமானி தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணவங்ச தேரர் குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது,

மாடுகள் அறுப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் கூட ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சியாகவே இருக்கும்.

தேரர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டின், இதற்கு முன் எத்தனையோ முறைகள் இருந்தன. ஸ்ரீமாபோதியை பயங்கரவாதிகள் குறிவைத்தது, அரந்தலாவில் பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்டமை, தலதா மாளிகைக்கு குண்டு வைத்தல் போன்ற பலவற்றை உதாரணத்திற்குச் சொல்லலாம். என்றும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

இன்னும் ஆயிரக்கணக்கான பிக்குகள் தீக்குளிக்க முன்வந்துள்ளனர்!

அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடாத்துவது போன்ற இழிசெயல்களைச் செய்தால், அதற்கு எதிராக தீக்குளிப்பதற்கு போவத்தே இந்திரரத்ன தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் முன்வருவார்கள் என பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்தே ஞானஸார தேரர் குறிப்பிடுகிறார்.

அந்த உத்தம தேரர் தன்னுயிரைத் தியாகம் செய்த செயலினால் வெட்கப்படத் தேவையில்லை. அவரது தீக்குளிப்பு பசுவதைக்கு எதிராக இருந்தபோதும், அன்னார் உயிர்த்தியாகம் செய்தது பௌத்த உயர்பீடத்தை உயர்த்தும் நோக்குடனேயே என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆயினும், ஊடகங்கள் அவர் பசு வதைக்கு எதிராகத் தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிடுவதானது, அவரை அகௌரவப்படுத்துவதாகும்.

போவத்தே இந்திரரத்ன தேரரின் சாவுக்கான பொறுப்பை அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்க முடியாது என்றும், கட்டங்கள் கட்டும் கருமத்தை சற்றுவிட்டுவிட்டு இப்போதாவது நாட்டை நேசிக்கக் கூடிய மக்களை உருவாக்க வேண்டியது கடமையாகும் எனவும் ஞானஸார தேரர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்! ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக ...... நபீல் நயீம்

அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலாவரும் நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை ஒசாமாவின் மெய்காப்பாளர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் "சீல்" படையினர் நெருங்குவதற்கு முன்னரே ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா "கல்ப் நியூஸ்" என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதை மறுத்துள்ள ஒசாமாவின் மெய்காப்பாளர் ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து, மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை என்றும் எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் தெரிவித்த அவர், அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட்டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா தெரிவித்துள்ளார்.

Read more...

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவரை மீண்டும் நியமியுங்கள். யாழ் பல்கலை்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ் பல்கலைக்கழக இசைத்துறை 3 ம் வருட மாணவர்கள் இன்று காலை 11 மணியளவில் மருதனார்மடம் இராமநாதன் நுண்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சுமார் 60 மாணவர்கள் பங்குபற்றிய இவ்வார்ப்பாட்டத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் முன்னாள் இசைத்தறை தலைவர் தர்சானந்தை மீள நியமிக்க கோரி பல்வேறு கோசங்களுடன் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு இசைத்துறையின் ஒருசில விரிவுரையாளர்கள் ஆதரவு தெரிவித்ததை காணமுடிந்தது.

மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியம், பொதுமாணவ பிரதிநிதி ,கலைப்பீடாதிபதிக்கோ எதுவித முன்னறிப்பும் செய்யப்படவில்லை என பல்கலைக்கழக உள்ளக வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

ஏற்கனவே இசைத்துறை தலைவராக இருந்த தர்சானந் தொடர்பாக ஊடகங்களில் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக செய்திகள் வெளிவந்திருந்தன.

இதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் அவர் மீது விசாரணை மேற்கொண்டு அதில் இருந்து குற்றமற்றவர் என தீர்மானித்து விடுவித்திருந்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இன்று ஆர்பாட்டம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் மீளவும் துணைவேந்தரினால் இசைத்துறை தலைவருக்கான மீள் நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை கலைப்பீடாதிபதி சிவநாதன் கிழித்தெறிந்ததாக தெரிவித்தனர்.

மேலும் எமது இசைத்தறை தலைவரின் காலத்தில் தான் தங்கள் துறை வளர்ச்சி கண்டது, இதனை சகிக்க முடியாத சில விரிவுரையாளர்கள் தவறாக மாணவர்களை வழிநடத்தி இசைத்துறையின் வளர்ச்சியை குழப்ப முயல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்,கலைப் பீடாதிபதியை தொடர்பு கொண்டபோது பலனளிக்கவில்லை.

ஆனால் இராமநாதன் நுண்கலை கழக பொது மாணவப் பிரதிநிதி விதுசன் கருத்து தெரிவிக்கையில், குறித்த ஆர்பாட்டம் தொடர்பாக எனக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும் இவ்வார்ப்பாட்டம் முன்னாள் இசைத்துறை தலைவருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் இசைத்தறை தலைவர் தனது மாணவிகளுடன் எவ்வாறு நடந்து கொண்டிருந்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அவர் அப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை மீள நடத்தப்படல் வேண்டும் என்றார்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரை மணித்தியாலம் வரை சுலோகங்களை தாங்கி கோஷங்களை எழுப்பி தாங்கிச் சென்றனர்.

(பாறூக் சிகான்).
































Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com