Saturday, June 26, 2010

எந்த அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. டாருஷ்மன்

ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் மர்ஸுக் டாருஷ்மன் ஒஸ்ரேலிய வானொலிக்கு வழங்கியுள்ள நேர்காணலின் சில பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கை அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இடையே நடைபெற்ற இறுதிப்போரில் இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநா செயலாளர்நாயகத்திற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழு இது. போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முற்பட்டவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் இது விசாரணை நடாத்தும். எனினும் இந்த நடவடிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு கோபமூட்டியுள்ளது. இந்த ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு வர விஸா வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசு வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறது.

டாருஷ்மன்: இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி தனக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த ஒரு குழு இது.

லியாம்: இந்தக்குழு பெரும்பாலும் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையையே மேற்கொள்ளும் என்று ஐநாவின் பேச்சாளர்; தெரிவித்திருக்கிறார். ஆக, இந்தக்குழு இலங்கை அரசின் விசாரணைகளுக்கு உதவி வழங்குமா? அல்லது சுதந்திரமாக விசாரணையை மேற்கொள்ளுமா?

டாருஷ்மன்: இது ஐநாவின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடனான எந்த உறவும் தொடர்பும் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தூடாகவே இடம்பெறும்.

லியாம்: ஆக, நீங்கள் சொல்கிறீர்கள் இது இலங்கை அரசாங்கத்துடைய விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதென்பதல்ல சுதந்திரமாக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று?

டாருஷ்மன்: நாங்கள் ஒரு போதும் எந்த அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வழிமுறைகளிலேயே தங்கி நிற்கிறோம்.

லியாம்: இந்த ஆலோசனைக்குழுவின் விசாரணைகளுக்கு தாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தெரிவித்திருக்கின்றனரே? இது உங்களுடைய பணிகளை எவ்வாறு பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

டாருஷ்மன்: இதற்கு நான் அபிப்பிராயம் எதனையும் சொல்லப் போவதில்லை. நாங்கள் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பின்னரே எங்களுடைய பணி என்ன என்பது எங்களுக்குச் சரியாகத் தெரிய வரும்.

லியாம்: விசாரணைகளில் எவ்வாறான சவால்கள் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

டாருஷ்மன்: விடயங்களைச் சேகரிப்பதும் முன்வைப்பதுமான ஆலோசனைக்குழுவின் பணிகள் சவாலானவை தான். அது நாட்டுக்கு உள்ளே என்றாலென்ன. அல்லது நாட்டுக்கு வெளியே என்றாலென்ன? ஆனால் இதில் உள்ள துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்த ஆலோசனைக்குழு தனக்குக் கிடைக்கும் விடயங்களை இலங்கை அரசாங்கத்துடன் சரிபார்க்க வாய்ப்பில்லாது போய்விடுவது தான்.

லியாம்: எனக்குத் தெரியும் இந்தக் கேள்வி இவ்வளவு விரைவாகக் கேட்கப்படக் கூடியதன்று. ஆனாலும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா கள நிலைமைகளை அவதானிப்பதற்கு இலங்கை செல்வதற்கு உங்களுக்கு விசா கிடைக்குமென்று.

டாருஷ்மன்: நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். இந்த ஆலோசனைக்குழு தனது பணிகளைச் செய்வதற்கான வாய்ப்பு பெருமளவில் இருக்கும் என்று. ஆனாலும் மீண்டும் நான் இங்கே வலியுறுத்த விரும்புவது இலங்கைக்குப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ என்பதைப் பொறுத்தல்ல இவ்விடயத்தை நாங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தது. நாங்கள் போவதா இல்லையா என்பதை செயலாளர் நாயகம் தீர்மானிப்பார்.

லியாம்: எப்போது இந்தக்குழுவினரின் விசாரணைகள் ஆரம்பமாகும். அது முடிவடைய எவ்வளவு காலம் எடுக்கும்?

டாருஷ்மன்: நாம் இப்போதே பணிகளை ஆரம்பிக்கலாம். நான்கு மாதங்களுக்குள் இவ்வாலோசனைக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். எனவே நாம் உடனடியாகப் பணிகளை ஆரம்பித்தாக வேண்டும். ஐநா செயலாளர் நாயகத்தினதோ அல்லது அவருடைய அலுவலகத்தினதோ மேலதிக ஆலோசனைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதன்பிறகு ஆலோசனைக்குழுவின் முழுக்காலத்திற்குமான திட்டம் வரையப்படும் எந்தவிதமான அறிக்கைகளையும் நாம் வெளியிட முதல் ஆலோசனைக்குழுவின் பணிகள் திட்டமிடப்பட வேண்டும்.

லியான்: இவ்வாலோசனைக்குழு பாரியளவிலான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதென கண்டடையுமானால் போர்க்குற்ற நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என செயலாளர் நாயகத்திற்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?

டாருஷ்மன்: அதனைப் பின்னர் பார்ப்போம். ஒரேயடியாக நாங்கள் இப்போது குதித்துப் பாயத் தேவையில்லை. ஆனால் சரியான வழிமுறைகள் மூலம் உண்மை நிலவரத்தை உலகின் முன் வைப்போம்

நன்றி: ஒஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்

Read more...

பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை: இந்தியா

தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும், பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை என்றும் இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்று பேசுகையில் இதனைக் கூறிய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல், சார்க் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளதோடு, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.

சார்க் பிராந்தியம் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதை நாம் அனைவருமே சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயம் ஒப்புக்கொள்வோம்.

சார்க் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான ஒரே வழி, பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை பறிமாறிக்கொள்வதில் நம்மிடையே முழுமையான ஒத்துழைப்பு இருப்பதுதான் என்று சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

Read more...

சுவிஸில் தமிழ் பொது மக்களினால் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு............

Read more...

தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள ஊடக அறிக்கை 2010-06-25

அரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்?
யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள் புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூது குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?. சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும் அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.

திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள் கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூது குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியாவார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?

சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு கேபியோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும். இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஜீவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள் நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இவர்களுக்கு இதுவரை காலமும் கள நிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது. இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 பேர் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ போர் தமது பார்வைகளையும் கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள் ஒரு காலால் நடப்பவர்கள் தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஜீவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும் சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா மன்னார் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார் வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஜீவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எநத் ஒரு நாடும் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடீத்துள்ளன.

இத்தகைய நபர்களே நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவாகளை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் ஏன் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னனியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்ககுதல் கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.

இந்த நபர்களின் பல் வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுகந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.

இதுபலவிதத்தாலும் பாதிக்கப்ட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும. கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக் கோரி ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.


வீ. ஆனந்தசங்கரி

தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Read more...

Friday, June 25, 2010

யாழ் , வவுனியா நீதிபதிகள் இடமாற்றம். ஈபிடிபி மீதுகுற்றச்சாட்டு.

யாழ். சாவகச்சேரி நீதிபதி ரி.ஜே பிரபாகரன் , வவுனியா நீதிபதி அலெக்ஸ் ராஜா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விடமாற்றங்கள் ஈபிடிபி யினரின் அரசியல் அழுத்தம் காரணமாக இடம்பெற்றிருக்கவேண்டும் என பலராலும் எதிர்பார்க்கபடுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தம் காரணமாகவே இவ் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விரு நீதிபதிகளும் இக்கட்சி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாவக்சேரியில் கடத்தப்பட்டு கப்பத்திற்காக கொலை செய்யப்பட்ட கபில்நாத் எனும் மாணவனின் சம்பவத்துடன் ஈபிடிபியினர் சம்பந்தப்பட்டிருந்தாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இவ்வழக்கினை நீதிபதி பிரபாகரன் விசாரணை செய்து வந்தார்.

இவ்விடயத்தில் யாழ் நீதித்துறைக்கும் ஈபிடிபி யினருக்குமிடையே ஒர் பனிப்போர் மூண்டிருந்ததை மறுப்பதற்கில்லை.

சாதாரண மொட்டைக் கடிதம் ஒன்றினை வைத்து நீதிபதி சட்டத்துறையையும் பொலிஸாரையும் தவறான முறையில் வழிநடாத்தினார் என்ற குற்றச்சாட்டுக்களும் பிரதேச மக்களிடையே காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

Read more...

தமிழ் அகதிகள் புகலிட விவகாரம் கடும்போக்கை கைவிடுகிறார் புதிய பிரதமர்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் விடயத்தில் ஆஸ்திரேலியாவின் கடும் போக்கை புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தளர்த்துவார் என்று தெரிய வருகிறது. இலங்கை அகதிகள் ஏராளமானோர் வருடாவருடம் கடல்வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்றார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் அகதி அந்தஸ்து பெற அருகதை உடையவர்கள் ஆவர். ஆனால் இவருக்குமுன் பிரதமராக இருந்த கெவின் ரூட் தலைமையிலான இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரத்தில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறது. இதனால் இவருக்கும் இவருடைய ஆஸ்திரேலிய மக்களிடையேயான செல்வாக்குக் குறைய நேர்ந்தது. அத்துடன் எதிர்க்கட்சிகள் இவரின் இக்கடும்போக்கை கடுமையாக விமர்சித்து வந்தன. சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களும் இவரைக் கடுமையாக சாடியிருந்தன.

இவரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை அகதிகளுக்கு விசா வழங்குகின்றமைக்கான முன்னெடுப்புக்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் இக்கடும்போக்கை தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் அவரிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளியாகி உள்ளன.

அவர் பிரதமராகப் பதவியேற்று சில மணித்தியாலங்களில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் அகதிகள் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறி உள்ளார். அவர் இலங்கை விவகாரத்தை எடுத்துக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கிறன என்று அவர் குறிப்பிட்டார்.

Read more...

இலங்கைக்கான பான் கீ மூனின் நிபுணர் குழு: ரஷ்யா கண்டனம்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவுக்கு, ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் இவ்வாறான குழு ஒன்று நியமிக்கப்படும் பட்சத்தில் பான் கீ மூன், ஐ.நா.பாதுகாப்பு சபையில் அல்லது பொதுச்சபையில் யோசனை சமர்ப்பித்து அவர்களின் அலோசனையை பெற்றிருக்கவேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் நியமிக்கப்பட்ட குழுவானது இலங்கையின் யுத்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நாடத்தாது எனவும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பான் கீ மூனுக்கு ஆலோசனையை மாத்திரமே வழங்கும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த குழு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் அல்லது இலங்கை அதிகாரிகளின் அனுமதி இன்றி நியமிக்கப்பட்டுள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரி என்ற வகையில் பான் கீ மூன் தமது அதிகாரத்தையும், பொறுப்பையும் மீறியிருப்பதாகவும், இவ்வாறான குழு ஒன்று பான் கீ மூனுக்கு தேவை அற்றது என்றும் ரஷ்யா அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இலங்கை அரசாஙகத்திடமே காணப்படுகிறது.

குறிப்பிட்ட குழு இலங்கையினுள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் ஐ.நா.சபையின் நிபுணர்கள் குழு இலங்கைகான விஜயத்தை மேற்கொள்ள மாட்டாது என ஐ.நா அறிவித்துள்ளது.

அதேநேரம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிடம் இருந்து நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மார்க் டோனர் இது தொடர்பில் நேற்று கருத்துரைத்துள்ளார். இதன் போது குறித்த நிபுணர் குழுவின் மூலம் இலங்கை அவர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கான நன்மைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

திராவிடரா? தமிழரா? எது நமது அடையாளம்? தமிழகத்தில் துவங்கியுள்ள விவாதம்

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது. கோவையில் தமிழக அரசால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாடு குறித்து முரசொலியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு,கருணாநிதி எழுதிய கடிதம் மற்ற நாளிதழ்களில் திமுக, தலைமைக் கழகத்தால் விளம்பரமாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தை, திராவிடர் நாகரீகத்தை, அவர் தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, தென்னகப் பலாக்கனியான் - திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை...” என்று எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்க, அதுவே தமிழரின் அடையாளம் எது? திராவிடரா? தமிழரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த விவாதம் சென்னை, தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி மைதானத்தில் திங்கட்கிழமை மாலை ஒரு கருத்தரங்கமாக துவங்கி நடைபெற்றது.

கருத்தரங்கின் முதல் பேச்சாளராக வந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் புகழேந்தி, தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது என்பதை தேவநேயப் பாவாணர் உறுதி செய்துள்ளதை எடுத்துக் கூறி, ஒரு மருவு எப்படி தொன்மையான தமிழினத்தின் அடையாளம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

தனது கடிதத்தில் திராவிடர், திராவிடம் என்று கூறி அடையாளப்படுத்த முயற்சிக்கும் தமிழக முதல்வர், திராவிடத்தின் அங்கமாகவுள்ள கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ தேர்தலில் நிற்கத் தயாரா என்று கேட்டது மட்டுமின்றி, தனது அடையாளம் என்ன, தன்னை திராவிடர் என்கிறாரா அல்லது தமிழர் என்கிறாரா என்பதை முதலில் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தமிழர் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வர அனுமதி பெற எந்த முயற்சியும் தமிழக முதல்வர் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றினார்.

தமிழ் மொழியின் வளமையை ஆய்வு செய்த அறிஞர் பலர், அதிலிருந்து பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை நீக்கிவிட்டால் அந்த மொழிகளே இருக்காது என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினால் அது மேலும் சிறப்புப் பெறும் என்று கூறினார்.

திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை என்று கூறிய தமிழறிஞர் அருகோ, அது தாயுமானவர் பாடிய பாடல் ஒன்றில் மட்டும், அதுவும் எதிர்மறைப் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாடிக்காட்டினார்.

செம்மொழி என்று கூறுவதால் தமிழிற்கு பெருமை ஏதுமில்லை என்றும், இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்க உள்ளார் என்றும் அருகோ கூறினார்.

“நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” என்று அருகோ கூறினார்.

தமிழ் மொழிச் சொற்களே வடமொழியில் உள்ள பெரும்பான்மை சொற்கள் என்று கூறி தனது உரையைத் துவக்கிய தமிழறிஞர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மாலையை குறிப்பிட, சூரியன் மேற்கில் சாயும் பொருள்பட நாம் கூறும் சாயங்காலம் என்றத் தமிழ்ச் சொல் சாய்ங்கால் என்றும், புவியைக் குறிப்பிட தமிழில் உள்ள பழவி என்ற சொலை பிருத்வி என்றும், பவழம் என்ற சொல் பிரவாகம் என்றும், படி என்ற சொல் பிரதி என்றும், தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் வாயில் நுழையாத காரணத்தால் ஒலி மாறி வடமொழியாக புழங்கிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் எந்த ஒரு காலத்திலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பேசப்பட்ட ஒரு மொழியல்ல என்றும், தமிழ் உட்பட வழக்கில் இருந்த பேச்சு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே அது என்றும் கூறிய பேரா.தங்கப்பா, திராவிடம் என்பது பொய் என்றார்.

அப்படி ஒரு பகுதி வரலாற்றில் இல்லை என்று கூறிய பேரா. தங்கப்பா, தமிழை ஆய்வு செய்த மொழியியல் ஆய்வாளரான கால்டுவெல் தமிழையும், அதிலிருந்து பிறந்த மற்ற தென்னாட்டு மொழிகளையும் திராவிடக் குடும்பம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம் என்று கூறினார்.

ஈழத்தில் தமிழினப் படுகொலைக்குப் பின்னர், தமிழர்களிடையே உருவாகிவரும் தமிழ்த் தேசிய உணர்வைக் கண்டு அச்சமுற்றதாலும், எங்கே அந்த வரைமுறைக்குள் தன்னால் வர முடியாதோ என்கிற அச்சத்தாலுமே திராவிடர், திராவிடம் என்றெல்லாம் கருணாநிதி பேசுவதாக தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூறினார்.

“ஒரு மருந்து காலாவதியாகும் போது அது விஷமாகிறது, அதுபோலவே, திராவிடம் என்பது இப்போது பொருளற்றதாகிவிட்டது” என்று கூறிய புலமைப் பித்தன், தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லால் தமிழை மீட்டார். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திருக்காது என்றார்.

1956ஆம் ஆண்டுவரை தமிழுக்கு திராவிடம் அரணாக இருந்தது, இன்றைக்கு அது தேவையற்றதாகிவிட்டது என்று கூறிய புலவர் புலமைப்பித்தன், தமிழர் என்ற அடையாளத்தை கண்ட பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், ஆங்கில வரலாற்றாளர்கள் எழுதியுள்ளது போல், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

Read more...

வரிச் சலுகைக்காக 15 நிபந்தனைகளை விதித்துள்ளது.

மனித உரிமைகள் விகராத்தில் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக்கூறி இலங்கைக்கான ஏற்றுமதி வரிச்சலுகைளை இடைநிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அச்சலுகையினை 6 மாத காலங்களுக்கு நீடிப்பதாயின் தனது நிபந்தனைகளை ஏற்கவேண்டும் என 15 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆவ் நிபந்தனைகள் வருமாறு.

1. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு ஊறுபாடாக அமையும் இலங்கையின் செயற்பாடுகள் குறைக்கப்பட வேண்டும்;

2. இலங்கைச் சமுதாயத்தில் இருக்கின்ற சகல அரசியல் கட்சிகள், இன, மதக் குழுக்கள் மற்றும் சிறுபான்மையினங்களின் நலன்களைப் போதுமான அளவில் பிரதிபலிக்கக் கூடியதாக அரசியலமைப்புப் பேரவையை நிறுவி அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது முக்கிய அரச பதவிகளுக்குச் சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான நியமனங்கள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்;

3. 2005 அவசரகால ஒழுங்கு விதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள எஞ்சிய பகுதிகளையும் இரத்துச் செய்ய வேண்டும். குறிப்பாக, விசாரணையின்றித் தடுத்து வைத்தல், நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பிலான ஒழுங்கு விதிகளை இல்லாமற் செய்ய வேண்டும். 2006 அவசரகால ஒழுங்கு விதிகளையும் இரத்துச் செய்யவேண்டும்.

4. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை மற்றும் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகியவற்றுக்கு ஒத்திசைவான குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை, அதாவது ஆயுதங்களை வைத்திருத்தல் போன்றவை தொடர்பிலான ஏற்பாடுகளைத் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் கருதினால் அந்த ஏற்பாடுகள் குற்றவியல் கோவைக்கு மாற்றப்பட வேண்டும்;

5. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு ஒத்திசைவாக அமையாத (குறிப்பாக 9, 10, 11, 14, 15, 16 மற்றும் 26 பிரிவுகள்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பகுதிகள் இரத்துச் செய்யப்பட வேண்டும். அல்லது அந்த உடன்படிக்கைக்கு ஒத்திசைவான முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்;

6. பொதுப் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் வருகின்ற 8 ஆம் பிரிவில் உள்ள உடமை கைப்பற்றல் மற்றும் விடுபாட்டு உரிமை தொடர்பிலான ஏற்பாடுகளை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கைக்கு இசைவான முறையில் அதில் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்;

7. சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகச் சட்டத்தரணி ஒருவரைப் பார்ப்பதற்கான உரிமையை வழங்குவதற்கு வகைசெய்யும் உத்தேச திருத்தங்களை நிறைவேற்றவேண்டும்;

8. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகியவற்றின் கீழ் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தனிநபர்களை ஐ.நா. மனித உரிமைகள் குழுவுக்கு முறைப்பாடு செய்ய அனுமதிப்பதற்கு அவசியமான சட்ட ரீதியான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்;

9. தனிப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரங்களில் ஐ.நா. மனித உரிமைகள் குழு தெரிவித்திருக்கக் கூடிய அபிப்பிராயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்;

10. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் ஐ.நா. விசேட அறிக்கையாளர்களுக்கு (ஆட்கள், காணாமல் போதல் தொடர்பான ஐ.நா.செயற்குழு, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா.விசேட அறிக்கையாளர், கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.விசேட அறிக்கையாளர்) அமைப்பை விடுக்க வேண்டும்.

11. பலவந்தமான சூழ்நிலைகளில் காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா.செயற்குழு முன்னிலையில் உள்ள தனிப்பட்டவர்களின் விசாரணைகள் தொடர்பில் பதில் தரவேண்டும்.
2008 விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை முழுமையாகப் பிரசுரம் செய்ய வேண்டும்.

12. அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களினதும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளினதும் பெயர்ப்பட்டியலை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடக்கூடியதாக பிரசுரம் செய்ய வேண்டும்; அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்வதன் மூலம் அல்லது அவர்களை நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதன் மூலமாக தடுப்புக்காவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்;

13. ஆட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகல இடங்களுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழு போன்ற சுயாதீனமான மனிதாபிமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சென்று நிலைவரத்தை கண்காணிக்கக் கூடியதாக வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

14. தேசிய மனித உரிமைகள் செயல்திட்டமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

15. ஊடகவியலாளர்கள் எந்தவிதமான தொந்தரவும் இன்றி தங்களது கடமைகளைச் செய்யக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

மேற்படி நிபந்தனைகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு பதிலளித்துதள்ளது. அதன் பதிலில் கடந்த 17.06.2010 அன்று தங்களால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கருத்திற் கொண்டுள்ளதாகவும் அவை தொடர்பாக கடந்த புதன்கிழமை 23.06.2010 அன்று அமைச்சரவை கூடியபோது பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன். தங்கள் நிபந்தனைகள் பல நடைமுறையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலின் முழுவடிவம்.

Response from Ministry of External Affairs

STATEMENT CONCERNING THE EUROPEAN COMMISSION LETTER OF 17th JUNE TO THE MINISTER OF EXTERNAL AFFAIRS


The Government of Sri Lanka received a letter dated 17th June 2010 from the European Commission (EC) stating that the GSP+ preferences could be extended for a limited additional period, subject to a clear commitment by Sri Lanka to fulfill all of 15 conditions spelt out in a list attached to the Commission letter. The letter and its list were considered by the Cabinet of Ministers at their meeting on Wednesday, 23rd June. It is the view of the Government that the position taken up by the Commission, involves the imposition of a series of conditions, the cumulative effect of which is clearly inconsistent with Sri Lanka’s sovereignty.

The Government wishes to emphasize that it has, for its part, always acted on this issue in the best interest of the country, as well as of the longstanding partnership between Sri Lanka and Europe. When in October 2008 the European Commission decided to launch its “investigation”, Sri Lanka was facing the unprecedented turbulence of a severe terrorist onslaught. Given this situation it was inopportune for Sri Lanka to participate in such a process. The Government also pointed out that, despite the severe constraints being then encountered, there were nevertheless several other ongoing processes of engagement both between Sri Lanka and the European institutions and with the UN system, which could be drawn upon to clear up any matters of doubt. Moreover, the propriety of the “investigation” due to its per se discriminatory nature, was difficult to perceive.

However, with the “investigation” coming to a conclusion and the EC asking for comments on its report of October 2009, the Government provided a comprehensive response. Thereafter, on 15th February 2010, the EC announced its decision to withdraw the GSP+ trade benefits from Sri Lanka, with the decision taking place six months later with effect from 15th August 2010. In the Press Release conveying this decision, the Directorate General for Trade of the European Commission stated : “The EU remains open to a full dialogue with the Government of Sri Lanka, above all to encourage it to take the necessary steps towards an effective implementation of GSP+ relevant Human Rights Conventions”. The Press Release went on to add : “Once sufficient progress has been made, the Commission will propose to EU Member States that the decision taken today be reversed and GSP+ benefits restored”.

The Government of Sri Lanka immediately responded to the offer of dialogue by reaffirming that “Sri Lanka will therefore continue her engagement with the EU in the upcoming six months”. The Government also added that, for the engagement to be purposeful, “the setting of unattainable targets and the shifting of goal posts” should be avoided.

The Government followed up by on its pledge of engagement by sending delegations which included the Hon. Attorney-General, the Secretary of the Ministry of Finance and Planning, the Secretary of the Justice Ministry and the Secretary of the External Affairs Ministry, for two rounds of talks in Brussels in March and in May this year. The Sri Lanka delegation pointed out that the end of the extraordinary situation of terror faced by Sri Lanka for almost three decades, has enabled the authorities to scale down and roll back the laws and regulations specifically enacted to deal with the contingencies of that period. In the discussion in May, the delegation illustrated the actions being taken by the Government towards this end by pointing out the very significant scaling down by Parliament on 6th May 2010 of the Emergency Regulations and of the establishment of the Commission on Lessons Learnt and Reconciliation.

The other such examples were the rapid and sustainable reintegration of the internally displaced back to their places of livelihood, the successful and conclusive end to the issue of child soldiers recruited by the LTTE and the counseling and vocational guidance given to former LTTE cadres who had surrendered,
, with releases already of approximately 3,600.

The delegation also responded comprehensively to a host of issues raised with regard to the Code of Criminal Procedure Act, the Evidence Ordinance, the Prevention of Terrorism Act, the Public Security Ordinance, the Judicature Act, the independence of the judiciary and of legal practitioners and the proposed National Human Rights Action Plan. The delegation called upon the European Union (EU) and its Member States to give appropriate consideration to the manifold challenges pertaining to the development process faced by Sri Lanka and invited the EU to extend its partnership, in keeping with the longstanding tradition of friendly ties.

The letter of 17th June from the European Commission states : “We positively acknowledge the steps which the Government of Sri Lanka has taken to address the concerns raised in the European Commission report of 19th October 2009”. Notwithstanding this acknowledgement the conditions attached to the letter dated 17th June and addressed to the External Affairs Minister of Sri Lanka jointly by the High Representative, Vice President of the European Commission and by the Member of the European Commission, are so unacceptably intrusive as to require the public to be appraised of their implications of acceptance of these conditions. Accordingly, the full list is annexed.

It would be observed that condition number two relates to the 17th Amendment to the Constitution. The wording is such as to leave no discretion for the Government or the people of Sri Lanka, to decide on this issue of vital national importance. In fact, one possible result of such a mechanism might be the perpetuation of the fragmentation that terrorism sought to inflict, through encouraging mindsets based on perceived ethnic, religious and political divergences, instead of the more positive approach of all perceiving themselves as equal members of a wider Sri Lanka family. In any event, the Commission’s demands with regard to the 17th Amendment clearly represent an unacceptable intervention in the internal affairs of this country.

The third condition would, inter alia, result in those LTTE cadres who are now undergoing counselling and vocational training, having to be abruptly released without the necessary logistical support. This inevitably would have the impact of eliminating the opportunity for them to acquire civilian skills, whilst creating a conducive climate for those wanting to rekindle the embers of separatist terror.

The Prevention of Terrorism Act, which is referred to in item 4 of the list, was adopted on the basis of existent provisions already in force in several democratic nations, including those of Western Europe. It is observed that similar provisions adopted by certain developed nations, are far more stringent. Sri Lanka, too, might need to contemplate measures of a similar import, having regard to endeavours such as the formation of the so called “Provisional Transnational Government of Tamil Eelam”. Decisions relating to the need for vigilance in this regard are matters for the elected Government of Sri Lanka, and not for any external agency.

The request for repeal of Sections 8 and 9 of the Public Security Ordinance as per item 5, stems from a fundamental misunderstanding of the intent of the two sections. The provision of immunity for acts commissioned in good faith stems from an universally accepted dictum of governance, namely that acts are presumed to have been correctly performed. There is in no way any scope for mala fide acts being shielded through these sections. We cannot endorse the Commission’s demand for attribution of liability to public officers, who are constrained to act in good faith to protect life and limb in extremely challenging situations.

The conditions listed as items 7 and 8 would require an Act of Parliament to override a considered decision of the Supreme Court, which has proceeded to pronounce that the domestic laws and mechanisms have more than adequately provided for the protection and safeguarding of fundamental rights in keeping with national law and treaty obligations. In our view, it is hardly for the Commission to demand the reversal of a decision by the highest Court of Sri Lanka.

The matters referred to in item 12 are now superfluous given that the LTTE cadres in protective custody have been permitted access to their family members and to legal services. The majority of them have or will be released upon the completion of the counselling and rehabilitation programme, while a much smaller group, having regard to the gravity of their involvement, would be subjected to criminal proceedings. This process is well underway. In any event, whether all persons held under Emergency Regulations should be immediately released or not, is a matter which should be decided upon by the Government of Sri Lanka, and not by an external agency.

Item 13 of the list, which refers to a role for the International Committee of the Red Cross (ICRC) is under consideration. It has to be noted that the conditions under which the ICRC first began operations in Sri Lanka in 1989 have now ceased to exist, with the termination of the conflict situation in May 2009.

The reference in item 14 to the National Human Rights Action Plan is a matter upon which, as mentioned above, the EC has been fully briefed wherein the Government of Sri Lanka is keenly pursuing the initiative.

It must be appreciated that international law as well as the practice of multilaterism are based on the sovereign equality of nations, which principle Sri Lanka holds sacrosanct. It is therefore constitutionally imperative for the Government to leave no room for an usurpation of sovereignty. The possible expectation of the restoration of the GSP+, cannot be an exception to this cardinal principle. In taking this decision, the Government is conscious that there are some opposed, both to the economic recovery of Sri Lanka from the conflict as well as to the further strengthening of national amity. These extremist elements are bound to claim the decision to stop the GSP+ with effect from 15th August 2010, as an endorsement of their cause. The gist of the Government’s considered view is that the conditions imposed by the European Commission, under the guise of what is essentially a trade agreement, amount to an intervention, the range and depth of which inevitably erodes in every significant respects, the authority of the Government of Sri Lanka to decide upon, and to deal with, a variety of sensitive domestic issues which have a vital bearing on the wellbeing of our nation.

Sri Lanka appreciates the benefits that were received for a certain period while the GSP+ concession was in operation. At the same time, as His Excellency the President of Sri Lanka observed in his Address to the Nation on the 18th of June 2010, “We are not ready to accept aid under conditions that will betray the freedom of our land and people”. The Government is confident that the people of Sri Lanka who faced the challenge of terrorism, will also face and overcome equally successfully the challenges of ensuring economic progress and development. The Government will remain steadfast in prudently pursuing the path of restoring normalcy and of achieving rapid economic development, parallel to the progressive elimination of the threats of de-stabilization.


Ministry of External Affairs
Colombo

24 June 2010


Read more...

Thursday, June 24, 2010

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடிப்பேச்சு நடத்தினராம்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருதினை உருவாக்கும் நோக்கில் இன்று கட்சித் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்கள் ஒன்றுகூடி கல்துரையாடியுள்ளனர். ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இல்லத்தில் இவ் ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எனும் விடயத்தில் அனைவரும் ஒன்றுபட முடியுமான என பேசப்பட்டுள்ளதுடன் எவ்வாறான தீர்வொன்றுடன் உடன்படுவது என்ற விடயம் அங்கு பேசப்படவில்லை என கலந்து கொண்ட முக்கியஸ்தர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். அத்துடன் கலந்துரையாடல் முடிவில் தொடர்ந்து பேசுவது எனவும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் தலைவர் திரு சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம் திரு.சிறிகாந்தா சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன் சேவியர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



Read more...

பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம் : ஜெர்மனிய பல்கலை பேராசிரியை பெருமிதம்

தமிழ் இலக்கியங்களை படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியை கூறினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள "ஜூகொலின்' பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான "வுல்ரிக் நிக்லஸ்' அளித்த பேட்டி: ஜெர்மனிலுள்ள ஜூகொலின் பல்கலை கழகத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழ்ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரத்தை முற்றிலுமாக படித்து முடித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன். கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை எனக்கு அத்துப்படி. தமிழ், பாரம்பரியமான, முதன்மையான, தொன்மையான மொழி என்பதை கடந்த 5 ஆண்டுகால தமிழ் ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன். ஆனால் எனக்கு சிறுவயது முதலே தமிழில் ஈடுபாடு அதிகம். ஏனென்றால் நான் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். நடிகர் சிவாஜி கணேசனின் வீரம் செரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை திரும்ப திரும்ப பார்ப்பதுண்டு.

உ.வே.சா. தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. தமிழ் தனித்துவமான மொழியாக இருப்பதால் தனியானதொரு இலக்கணம் ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதிலுள்ள இலக்கணம் எந்த ஒரு மொழியிலும் இல்லை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன். அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களை படித்தால் நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அதனால் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவரை என்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டேன். பிறப்பில் ஜெர்மனியை சேர்ந்தவளாக இருந்தாலும், என்னுடைய புகுந்த வீடு தமிழகம். எனக்கு பாண்டிச்சேரியில் சொந்த வீடு உள்ளது. அதனால் ஆண்டுக்கொருமுறை தமிழகம் வருவேன். வரும்போதெல்லாம் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களை சந்திப்பது வழக்கம்.

தமிழில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையை பற்றியும் தெரிந்து கொள்வேன். புதிய புத்தகங்கள், புதிய கட்டுரைகளை வாங்கிப்படிப்பேன். எனக்கு நவீன கால கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துவிடுவேன். மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று பதிவு செய்து கொள்வதோடு, தமிழ் நண்பர்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வேன். இவ்வாறு பேராசிரியர் "வுல்ரிக்நிக்லஸ்' கூறினார்.

Read more...

புலிகள் மீதும் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை .

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படும் அதேவேளை யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளின் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான வல்லுனர் குழுவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள எம்.டரஸ்மன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் 2008 ஆம் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவில் எம்.டரஸ்மன் அங்கம்வகித்தவராக இருந்தமை குறிப்பிடதக்கது.

Read more...

ஆப்கானிலுள்ள அமெரிக்க இராணுவ தளபதி ஒபாமா நிர்வாகத்தை சாடுகின்றார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கூட்டணிப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் மெக்கிறிஸ்டல், ஒபாமா நிர்வாகத்தைப் பற்றி கேலிக் கூத்தாகவும் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் குறைகூறி பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அந்தச் செயல் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கோபத்தை உண்டாக்கியுள்ளது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ராபர்ட்ஸ் கிப்ஸ் தெரிவித்துள்ளார். அதனால் ஜெனரல் மெக்கிறிஸ்டலை வாஷிங்டன் வரும்படி வெள்ளை மாளிகை கட்டளை பிறப்பித்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில், ஜெனரல் மெக்கிறிஸ்டல் செய்தது மகா தவறு. இதில் ஒன்றும் சந்தேகமில்லை. அவர் எந்த உலகத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே அவர் இங்கு அழைக்கப் பட்டுள்ளார் என்றார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை இவரை மட்டுமே நம்பியில்லை. அப்படையின் போர் வல்லமை ஓர் ஆள் மட்டும் முடிவு செய்யப்படும் ஒன்றல்ல என்று சாடியுள்ளார்.

அமெரிக்க தற்காப்பு அமைச்சரான ராபர்ட்ஸ் கேட்ஸ், ஜெனரல் மெக்கிறிஸ்டலின் செயலை வன்மையாகச் சாடி கடுமையான வார்த்தைகளில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அச் செயல் தமக்கு வருத்தத்தைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜெனரல் மெக்கிறிஸ்டல் தவறு செய்துவிட்டார். அதற்காக அவர் என்னிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். அதே போல் யார் யாரைப் பற்றியெல்லாம் அவர் குறை கூறியிருந்தாரோ அவர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இருந்தாலும் அவரிடம் இதுபற்றி நேரிடையாக விவாதிப்பதே சரியானது என்பதால் அவரை வாஷிங்டனுக்கு வரும்படி கூறியிருக்கிறேன் என்றார்.

இதுபற்றி கருத்துக் கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெனரல் மெக்கிறிஸ்டலின் இந்தச்செயல் தவறான ஒன்று என்று கூறியுள்ளார். இது பற்றி அவரிடம் நேரிடையாகப் பேசிய பிறகுதான் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஜெனரலின் பதவி பறிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகை இது பற்றிக் கருத்துச் சொல்ல மறுத்து விட்டது. ஆனால் அதற்கு முன்னதாக ஜெனரல் மெக்கிறிஸ்ட், தம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

ஐ.நா வின் விசாரணைக்குழு நாட்டினுள் கால்வைக்க அனுமதிக்கப்படமாட்டாது. G.L

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டுள்ள குழுவினை நாட்டினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய அமைச்சர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் , குறிப்பிட்ட குழுவினர் இலங்கையினுள் நுழைவதற்கான வீசா வழங்கப்படமாட்டாது எனவும் , இக்குழு நியமனம் தொடர்பாக தாம் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்த தருணத்தில் ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்னர் ஐ.நா குழுவினை நியமனம் செய்துள்ளது என தெரிவித்த அவர் இக்குழுவின் நியமனம் அவசியமற்றது எனவும் இதன் செயற்பாடுகள் எந்தவிதத்திலும் பயனள்ளதாக அமையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென தாம் ஒரு விசாரணைக் குழுவொன்றினை நியமித்துள்ளதாகவும் , ஐ.நா வின் விசாரணைக்குழு ஒன்றுக்கொன்று முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Read more...

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமரான ஜூலியா

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கில்லர்ட் இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் கெவின் ருட் பிரதமராக இருந்து வந்தார்.

ஆனால், சமீப காலமாக நாடு முழுவதும் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதையடுத்து அதை சரிகட்ட பிரதமரை மாற்ற கட்சி முடிவு செய்தது. இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்ய எம்பிக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தற்போதைய துணை பிரதமர் ஜூலியா கில்லர்ட் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கெவின் கண்ணீர் மல்க தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலியா இன்று பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

பிரதமர் பதவி ஏற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், இது மிகப் பெரிய கெளரவம். நாட்டை வழிநடத்தி செல்லும் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த தேர்தலில் கட்சியை சிறப்பான வெற்றிக்கு இட்டுச் செல்லும் வகையில் செயல்படுவேன் என்றார்.

Read more...

கொழும்பில் குண்டு வெடிப்பு

கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். இன்று காலை 5.10 மணி அளவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கை இராணுவத்தினர் 5 பேர் மற்றும் ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

தவறுதலாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.படையினரை வாகனங்களில் சோதனை சாவடிகளுக்கு அழைத்து வந்து இறக்கிவிடும்போது படைவீரர் ஒருவர் கையில் இருந்த கைக்குண்டு வெடித்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Read more...

ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு பெறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மனித உரிமை தொடர்பில் முன்னெடுத்துள்ள விடயங்களை எழுத்து மூலம் ஜூலை 1ம் திகதிக்கு முன்னர் வழங்கினால், இலங்கைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய கவுன்சில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பரிந்துரைக்குமென அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 200 பொருட்களை வரி விலக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, June 23, 2010

இலங்கை இறைமையுள்ள நாடு என்பதை ஐ.நா உணரவேண்டும். கேகலிய சீறிப்பாய்கின்றார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் தமது எதிர்பினை தெரிவித்து வருகின்றனர்.

இவ்நியமனம் தொடர்பாக கருத்துரைத்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, இலங்கை போன்ற இறைமையுள்ள நாடொன்றின் மீது ஐ.நா வின் பொருத்தற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான இச்செயற்பாட்டை தாம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா இலங்கையை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் இன்று உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளிவிடும் எனவும் கூறியுள்ளார்.

Read more...

மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க புலிகளிடம் மாதாந்தம் ஊதியம் பெற்று வந்தவர்?

யாழ் பிராந்திய கட்டளைத் தளபதியாகவும் கடமையாற்றி வருபவரும் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதியாக செயற்படுபவருமான மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க புலிகளிடம் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா ஊதியம் பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகியிருப்பதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைக் கொலை செய்யும் சூழ்ச்சி தொடர்பாக 2009ம் ஆண்டு மே மாதம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கேர்ணல் ரஞ்சித் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் அத்துருசிங்க புலிகளிடம் ஊதியம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது என அந்த சிரேஸ்ட இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

கேர்ணல் ரஞ்சித் பெரேரா, அவரது மனைவி கரிமா மொஹமட், வர்த்தகர் ராமசாமி பிரகாரன், சண்முகலிங்கம் நவமணி, சானக்க கல்தேரா ஆகியோர் ஜனாதிபதியின் கொலை முயற்சி தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க கொழும்பு பாதுகாப்பிற்குப் பொறுப்பாக கடமையாற்றியதோடு, வர்த்தகர் ராமசாமி பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் அவர் ஊடாக 80 ஆயிரம் ரூபா தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் கொள்வனவு செய்ய கார் ஒன்றை தனது அலுவலக வாகனமாக பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தான் விரும்பிய வாகனத்தை அலுவலக வாகனமாக பயன்படுத்த முடியும். இதற்காக இராணுவம் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவை வழங்குகிறது. மேஜர் ஜெனரல் அத்துருசிங்கவின் தவணைப் பணமான மேலதிக 50 ஆயிரம் ரூபாவை ராமசாமி பிரபாகரனே செலுத்தி வந்துள்ளார்.

புலிகளின் கொழும்பிற்கான புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள வர்த்தகர் ராமசாமி பிரபாகரன், கொழும்பு பப்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிற்றி சந்தைத் தொகுதியின் உரிமையாளராவார். அவர் பயன்படுத்தி கையடக்கத் தொலைபேசியான 777 398117 என்ற இலக்கத்தைக் கொண்ட தொலைபேசிக்கு அதிகமான அழைப்புக்களை அத்துருசிங்கவே மேற்கொண்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ராமசாமி பிரபாகரன் 2008 ‐ 2009ம் ஆண்டுகளில் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கே.பியைச் சந்தித்து புலிகளுக்கான விநியோக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

யுத்தம் நடைபெற்றபோது கொழும்பின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக தினமும் தீர்மானங்களை எடுக்கும் கூட்டு நடவடிக்கை தலைவர்களின் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளும் மேஜர் ஜெனரல் அத்துருசிங்க, ராமசாமி பிரபாகரனுடன் மதுபான விருந்துகளிலும் கலந்துகொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். அத்துருசிங்க பொறுப்பாக இருந்தபோது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.

மேஜர் ஜெனரல் அத்துருசிங்க தொடர்பாக முழுமையான விபரங்கள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் அரச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் அமல் கருணாசேக்கர ஆகியோர் 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும். இதுவரை வரை அதுகுறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இராணுவத் தலைமையகத்தில் 90ம் ஆண்டு காலப்பகுதியில் கேர்ணலாக பணியாற்றியபோது, அப்போது கப்டனாக மகிந்த அத்துருசிங்க கேர்ணல் ராஜபக்ஸவின் கீழ் பணியாற்றியுள்ளார். அந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரைத் தப்புவிப்பதற்காக கோதாபய ராஜபக்ஸ பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் .

Read more...

கனடாவில் ஜி8, ஜி20 மாநா‌ட்டு‌க்கு வரலாறு காணாத பாதுகாப்பு

கனடாவில் நடைபெறவுள்ள ஜி8, ஜி20 மாநாடுகளுக்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்த 3 நாள்கள் இந்த மாநாடு ஆன்டாரியோ. டொரண்டோ நகரங்களில் நடைபெறவுள்ளது. ஜூன் 25, 26ஆம் தேதிகளில் ஹன்ட்ஸ்வில் நகரிலும், ஜூன் 26, 27ஆம் தேதிகளில் டொரண்டோ நகரிலும் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி8, ஜி20 மாநாடுகளுக்காக இரு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கனடாவுக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டின்போது அசம்பாவிதச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகளை கனடா அரசு மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் கூறுகை‌யி‌ல், மாநாடு நடைபெறும் வளாகத்தைச் சுற்றி 3 மீட்டர் உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகள் மூலம் டொரண்டோ, ஆன்டாரியோ நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படையில் கனடா ராணுவம், கடற்படை, விமானப் படை அதிகாரிகள், டொரண்டோ போலீஸôர், ஆன்டாரியோ காவ‌ல்துறை‌யின‌ர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Read more...

ஐ.நா வினால் போர்குற்ற விசாரணை கமிட்டி நியமனம். கிளம்பும் எதிர்ப்பலைகள்.

இலங்கையில் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக்குழு பல தரப்பட்ட சர்ச்சையின் மத்தியில் நியமனமாகின்றது. இது தொடர்பான உத்தியோபூர்வ அறிக்கை இன்று (23) வெளியிடப்படவுள்ளது. நிபுணர்கள் குழுவின் பொறுப்புகள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இக்குழுவின் தலைவராக இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மார்சூசி டாருஸ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் மூன்று பேர் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த யாஸ்மின் சூகா மற்றும் அமெரிக்க சட்டத்தரணியான ஸ்டீவன் ராட்னர் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களாகும்.

இக்குழு நியமனம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு நியமனம் குறித்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற போதிலும், நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரையில் கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

2009ம் ஆண்டில் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பும், இலங்கை அசராங்கமும் கூட்டாக வெளியிட்ட இணக்கப்பாடு தொடர்பில் நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கவுள்ளது.

குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும், அவற்றுக்கு எவ்வாறு தண்டனை வழங்குவது என்பன தொடர்பாக கடந்த கால அனுபவங்கள் மற்றும் சர்வதேச நியமங்களை கருத்திற் கொண்டு நிபுணர்கள் குழு, பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவுள்ளது.

அத்துடன் நிபுணர்கள் குழுவின் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் தேவையென்றால் இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழு, இலங்கை அதிகாரிகளுடன் கூட்டிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்படுவதுடன் நான்கு மாத காலப்பகுதிக்குள் பூரணமாக ஆலோசனை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நிபுணர்கள் குழு உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இக்குழுவின் உருவாக்கம் பற்றி கருத்துரைத்த ஐ.நா வின் பொதுச் செயலாளர் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நிபுணர்கள் குழுவின் ஆலோசனை பெரும் பயனுள்ளதாக அமையும் எனவும் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதன் மூலம் இலங்கை விவகாரத்தில் ஆக்கபூர்வமான உள்ளீடுகளை செலுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இக்குழு நியமனம் தொடர்பான விபரங்களை ஐ.நா அலுவலகம் வெளிவிடுதற்கு முதல்நாளே இன்னர் சிற்றி பிரெஸ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டியதில்லை எனவும் சாட்சியங்கள் எவரையும் நேர்காண வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக்குழு போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பொது மக்கள் கொல்லப்படுவதற்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்தாக வெளியாகியுள்ள செய்திகள் பற்றி சரத் பொன்சேகாவை நேர்காண வேண்டியிருந்தால் என்ன செய்வது என ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நேர்ஸ்கியிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோது பதிலளித்த நேர்ஸ்கி இவ்விடயங்களை யார் எப்படிக் கையாள்வது என்பது குறித்து இனிமேல் தான் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், தொடர்புடைய அதிகாரிகளுடன் இது குறித்துப் பேச வேண்டும் எனவும் அத்தோடு நான்கு மாதங்களுள் அவற்றைப் பூர்த்தியாக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்களான பசில் ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, அவருடைய ஐநாவுக்கான தூதுவர் பாலித கோகண, பான் கீமுனின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் ‐ இவர் தான் சரணடைபவர்கள் சர்வதேச சட்டவிதிகளின் கீழ் நடாத்தப்படுவார்கள் என உத்தரவாதம் வழங்கியவர்‐ இவர்களைத் தவிர வேறு எந்த அதிகாரிகள் அதிகம் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

தற்போது இலங்கையின் ஐக்கியநாடுகள் ஸ்தபனத்திற்கான நிரந்தர பிரதிநிதி பாலித கொஹண, கைப்பற்றப்பட்ட பலஸ்தீன் பிரதேசங்கள் தொடர்பாக நியமிக்கப்பட் டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் முந்திக் கொண்டு அதன் சொந்த விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது. இது ஒரு கபட நாடகமா? என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் வினவியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், அவர்கள் சர்வதேச சட்டத்திற்கமைய நடத்தப்படுவார்கள் என்று கொஹண உறுதிமொழி வழங்கினார் என்று செயலாளர் நாயகத்தின் பிரதான அதிகாரியான விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.

கொஹண தற்போது தாம் நம்பியாருடன் தொடர்பு கொண்ட நேரம் குறித்து பிரச்சினையை எழுப்புகிறார். இதனை நிரூபிப்பதற்கான உரையாடல் நாடாக்களையும் இன்னர் சிற்றி பிறெஸ் ஒலிபரப்பிக் காட்டியுள்ளது.

பாகிஸ்தானில் பெனாஸிர் பூட்டோ கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட பான்கீ மூனின் குழுவில் இருந்தவா மர்ஸ{கி தாருஸ்மன். அந்தக்குழுவின் அறிக்கை பொது மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. அத்தோடு அது வெளியிடப்பட்ட அன்று தாருஸ்மான் ஐநாவின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

ஆனால் இலங்கை விடயத்தில் இக்குழவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் என்பது பற்றியோ ஊடகவியலாளர்களை இக்குழு சந்திக்குமா என்பது பற்றியோ ஐநாவின் பேச்சாளர் நேர்ஸ்கி எதுவும் தெரிவிக்கவில்லை.

விமல் வீரவன்ச எதிர்ப்புக்குரல்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இரட்டை நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியதென வீடமைப்பு மற்றும் பொறியியல் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுக்களின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிரான சக்திகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், மீண்டும் இலங்கைக்கு எதிராக செயற்படும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர் குலைப்பதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது சிவிலியன் இழப்புக்களை தவிர்த்த காரணத்தினால் படையினர் பாரியளவு உயிர் மற்றும் உடமைச் சேதங்களை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குலக நாடுகளினால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர்

குழுவின் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஐ.நா நிபுணர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு டாரூஸ்மான் நியமிக்கப்பட்டமை முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என அரசாங்க உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபரான டாருஸ்மான் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டவர் என பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட சர்வதேச முதன்மையாளர் குழுவிலும் டாருஸ்மான் அங்கம் வகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியிலும் டாருஸ்மான், உள்நாட்டு அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டாருஸ்மானை நிபுணர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பிற்காக நியமித்ததன் மூலம் ஐக்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு நியமனம் அவசியமற்றது எனவும், இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

செம்மொழி மாநாட்டிற்கு இலங்கைநெற் இன் வாழ்த்துக்கள்.

"தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த
தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"


உயிருக்கு மேலான – உன்னதமான
உலகாழும் தமிழே !
உன்னை இன்னும் உயர்த்தி வைக்க
உயர்ந்தவர்கள் - தமிழ்
உணர்வு கொண்ட உத்தமர்கள்
உருவாக்கும் செம்மொழி மாநாடு
உலகெங்கும் செவிகொண்டு
உறங்காத கண்கொண்டு – உன்
உயர்வான நிலைகண்டு – நாம்
உற்சாகம் பெறவென்று
உயிர் கொண்டு பிறந்தோமோ?
உலகில் தமிழரென்று தலைநிமிர்ந்து நடவோமோ?

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய தமிழே! யாதும் ஊரே யாவரும் கேளீர் என ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உலகக்கவி படித்த உயர் மொழியே! பல வடிவில் கிளைபரப்பி மனிதத்தை மாசற்ற காற்று சுவாசிக்க வைக்கும் இனிய தமிழ் தென்றலே!

"இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்"
என்று தமிழ் விடு தூது சொல்ல .. தமிழின் இனிமை , பொருள்செறிவு , கம்பீரம் , ஒழுக்கம் , சுவை , ஒளி , குளிர்ந்தநடை இவற்றிற்கு கம்பனது இராமகதையும் , உலகளாவிய பொது நெறி முறைகளுக்கு திருக்குறளும் அணியாக இருக்க .. தமிழ் புகழ் சொல்லும் பல நூல்கள் , பல அறிஞர்கள் உலகெங்கும் உலாவர .. இன்னும் தமிழ் மொழியின் சிறப்பை என்னவென்று நாம் சொல்ல?
வாழிய தமிழ்! வாழிய தமிழ் வளர்க்கும் நெஞ்சங்கள்!!

49 க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பேரறிஞர்களும் , இந்திய மண்ணிலிருந்து ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழறிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதையிட்டு பெருமிதமும் மகிழ்ச்சியும் அடையும் நாம், இம்மாநாட்டை ஏற்பாடு செய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கட்கும் மாநாட்டை நாடாத்திக்கொண்டிருக்கும் பெரியோர்கள் , அறிஞர்கள் அனைவருக்கும் இம்மாநாடு சிறப்புற இனிய வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் இலங்கைநெற் இன்புறுகின்றது.

இலங்கைநெற் ஆசிரியர் குழு.

Read more...

Tuesday, June 22, 2010

தமிழை வாழ வைக்கும் கலைஞர் கருணாநிதி நீடூளிகாலம் வாழ வாழ்த்துகிறோம்!

பண்டைய மொழிகளில் ஒன்றாக இருக்கும் தமிழ் மொழியை சுவாசிக்கும் எவரும் இன்றைய நூற்றாண்டிற்கு நிகராக தமிழை தாங்கி நிற்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை மறந்துவிட முடியாது. தமிழகத்தில் மட்டும் அல்லாது இந்திய அரசியலில் முக்கிய பாகம் வகிக்கும் கலைஞர் அவர்களுக்கு போதிய அளவில் நேரம் இல்லாத போதும், போதும் என்ற அளவிற்கு அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிவரும் தொண்டினை அளவிட முடியாது. உலக வழற்சிக்கு ஏற்ப எமது தாய்மொழியான தமிழை இமயம் அளவிற்கு அவர் உயர்த்தி வைத்திருக்கின்றார். தமிழ் மொழி மீது மட்டும் அல்லாது அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தாழ்ந்து போய்விடக் கூடாது என்பதற்காக அவர் அயராது உழைப்பவர்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்ததில் ஒரு தடைவ அவர் தனது முதல்வர் பதவியையே இழந்தவர். தமிழ் அவருக்கு உயிர், அந்த உயிரை காப்பாற்றுவதற்காகவே அவர் தனது பதவியை பயன்படுத்தி வருகின்றார் என்று உரைத்தால் அது மிகையாகாது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்கள் 1984ம் ஆண்டளவில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்துவிட்டு அவர் குறித்து கருத்து கூறுகையில் “தமிழகத்தில் நான் பல தமிழ் தலைவர்களை சந்தித்து பேசியிருந்தேன்” அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள்தான். ஆனால் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தமிழ்மொழி மீது இருக்கும் அளப்பரிய பற்று எனக்கு அவர் மீது இருந்த மரியாதையினை இரட்டிப் பாக்கியது என்று தனது அமைப்பின் தோழர்கள் மத்தியில் கூறியிருந்தார்.

ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேரும் போது எல்லாம் அரசியல் லாபம் தேடாத அவர் குரல் ஒலிக்க தவறியது இல்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் கூறுவார். தமிழ் வாழ அந்த மொழியை பேசும் இனம் வாழ அந்த தலைவன் நீடூளி காலம் வாழவேண்டும் என்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச அமைப்பு வாழ்த்துகின்றது.

தனது 14 வயதில் இந்திமொழி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைஞர் அவர்கள், மாணவர் நேசன் என்ற பெயரில் கையெழுத்து பிரதி ஒன்றினை வெளியிட்டதுடன், தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பினை ஸ்தாபித்து இருந்தார். திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அமைப்பு இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 1969ம் ஆண்டு இறந்ததன் பின்னர் முதலமைச்சராக பதவியேற்ற கலைஞர் எந்த துறையினையும் தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்குமாகவே பயன்படுத்தி வந்துள்ளார்.

திரைப்படத்துறை, நாடகத்துறை, எழுத்துதுறை, இலக்கியதுறை எல்லாவற்றிலும் அவரின் தமிழ் ஆழுகை ஆழப்பதிந்து இருப்பதினை பார்க்கலாம். தற்பொழுது உலகெங்கிலும் இருக்கும் தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழகத்தில் மாபெரும் அளவில் தமிழ் செம்மொழி மகாநாட்டினை நடத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச கிளை வாழ்த்தி வரவேற்கின்றது.

உலக வளர்ச்சிகளுக்கு எற்ப தமிழ் ஒங்கி நிற்க, பண்டைய மொழிகளின் ஒன்றான தமிழ் மொழி பேசும் மக்கள் பயனடைய, உலகெங்கும் தமிழ்மொழி ஒங்கி ஒலிக்க, ஈழத்தமிழினம் தன்மானத்துடன் வாழ, அவர்களுக்கு அரசியல் அக்கீகாரம் கிடைக்க முதல்வர் கலைஞர் கருணாநிதி காலமெல்லாம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
People’s Liberation Organization of Tamileelam

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (சர்வதேச ஒன்றியம்)
Democratic People's Liberation Front

Email:info@plote.org Tel: : 416-613 2771, 049-713130722, 041-765838410

Read more...

இலங்கையருக்கு பிரிட்டன் நீதிமன்றம் நாலரை வருட கடூழிய சிறைத் தண்டனை

பிரித்தானியாவில் போலியான கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பெருந்தொகை மில்லியன் பவுண்ட் நிதி மோசடிகளில் தேசிய ரீதியில் ஈடுபட்டு வந்த இலங்கைப் பிரஜை ஒருவருக்கு பிரிட்டன் நீதிமன்றம் நாலரை வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

ரீ.டீ.மொன்ட்போர்ட் என்பவரே தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர் ஆவார். இவர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் இவர் நாடு கடத்தப்படுவார். இவரின் உடைமையில் இருந்து 35000 கடன் அட்டைகள் மீட்கப்பட்டிருந்தன.

இவர் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இவ்வாறான நிதி மோசடிகளில் பெரிதும் குறைந்து விட்டன என்று பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தார்கள். இவர் 2001 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்திருந்தார். இதே வழக்கில் இவருடைய சகாக்கள் மூவரை நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டு தலா மூன்றரை வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

Read more...

தோல்வியடைந்த நாடுகளில் இலங்கை 25வது இடத்தில்

உலகில் தோல்வியடைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை 25வது இடத்தில் இருப்பதாக அமெரிக்க வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான சஞ்சிகை மேற்கொண்டு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் இலங்கை 22வது இடத்தில் இருந்தது.

சோமாலிய உலகில் மிகவும் தோல்வியான நாடு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக மற்றும் பொருளாதார சுட்டெண்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டதாக அமெரிக்க வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான சஞ்சிகை கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி உலகில் மிகவும் வெற்றிகரமான நாடாக நோர்வே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Read more...

GST + நிபந்தனைகளுடன் நீடிக்கப்படும் EU.

ஐரோப்பிய ஒன்றியித்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழு இலங்கைக்கான GST+ வரிச் சலுகையினை நிபந்தனைகளுடன் மேலும் ஆறுமாத காலத்திற்கு நீடிக்க முடியுமெனவும், அதற்காக இலங்கை அரசு மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் எழுத்து மூலமான உறுதி தரவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

அறிக்கையின் முழுவடிவம்.

Press Release

The Delegation of the European Union to the Democratic Socialist Republic of Sri Lanka & the Maldives would like to clarify information which has appeared in several press articles related to the ongoing dialogue on GSP plus between the European Commission and the Government of Sri Lanka.

Contrary to these articles, the date of 15 August on which Sri Lanka would cease to benefit from GSP+ will not be extended unconditionally.

Actually, the European Commission has informed the Government of Sri Lanka of its readiness to propose to the Council of the European Union to maintain GSP plus preferences for Sri Lanka for a limited additional period, subject to a clear and written commitment by the Government of Sri Lanka to undertake a well defined number of human rights related actions, within a 6 months time frame beginning in July of this year, and to provide reassurances as to the sustainability of progress registered under the GSP plus dialogue.

Only if a written commitment to this effect has been made by the Government of Sri Lanka, by 1 July 2010, would the European Commission put such a proposal to the Council of the European Union, without prejudice to the final decision.


Read more...

இலங்கையில் மிக முன்னேற்றகரமான நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படும்.

இலங்கையில் மிகவும் முன்னேற்றகரமான நகராக யாழ். நகரை மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். யாழ். மாவட்டத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்திற்கு மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான பெருமளவு இலக்கிய நூல்களை அன்பளிப்புச்செய்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பௌதீக வளங்களையும் மேம்படுத்த வேண்டும். பல வருடங்கள் நீடித்த யுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளிவைத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அடித் தளமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்து வதற்கு மனித வள முகாமைத்து வம் மிகவும் முக்கியமாகும்.

பல வருடங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த யாழ். மாவட்டம் இன்று சுதந்திர பூமியாக மாறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டம் நாட்டில் முன்னேறிய நகரமாக முன்னேற் றப்படும். இன, மத அடித்தளத்தில் இருந்து ஒதுங்கி செயற்படுவதன் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கல்வி நிலையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். சிங்கள மற்றும் தமிழ் கலாசார பெறுமானங்களை மதித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்ற சகலரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார். அமைச்சர், சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையம், யாழ் மின்சார சபை என்பவற்றிற்கும் விஜயம் செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார், ஹெல உருமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் தனது இனத்தினை சேர்ந்தோரால் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டமைக்காக தான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, June 21, 2010

பிரெட்றிக்காவின் LapTop நீதிமன்ற பாதுகாப்பில்.

வெள்ளைகொடியுடன் சரணடைய வந்த புலிகளின் முக்கியஸ்தர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச களமுனைத் தளபதி ஒருவருக்கு கட்டளையிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக செய்தி வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் இன் மடிக்கணனி நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகாவின் மேற்படி கருத்து அவசரகால சட்ட விதிமுறைகளை மீறியது என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல் ஒன்றினை எந்தவொரு சந்தர்பத்திலும் தான் தெரிவிக்கவில்லை என ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவித்தமைக்கான குறிப்பு குறிப்பிட்ட பத்திரிகையாளரின் மடிக்கணனியில் உள்ளது என குற்றப்புலனாய்புப் பிரிவினர் மன்றுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பத்திரிகையாளரின் கணனியை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி சம்பா ஜானகி கட்டளை பிறப்பித்திருந்தார். கட்டளையினை ஏற்ற பத்திரிகையாளர் தனது சட்டத்தரணி ஊடாக கணனியை மன்றில் பாரமளித்துள்ளார். வழக்கு எதிர்வரும் ஜுலை 12ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மன்றில் சமர்பிக்கப்பட்ட கணனியில் 89 பக்கங்கள் உள்ள கோவை ஒன்று காணப்பட்டுள்ளது. அவற்றில் சில வெற்றுப்பக்கங்கள். கோவையிலுள்ள விடயங்கள் தொடர்பாக எவ்வித உரையாடல்களும் இடம்பெறவில்லை. வழக்கு நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது தடுப்புக்காவலிலுள்ள ஜெனரல் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

அதேநேரம் மேற்படி வழக்கு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் வாய்முறைப்பாடு பெறப்பட்டுள்ளதாக சீஐடி யினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஈரான்: சன்னி முஸ்லிம் தலைவருக்கு தூக்குத் தண்டனை

ஈரானின் தென்கிழக்கு மாநிலமான சிஸ்டென் பலுஜிஸ்தானத்தில் ரத்தக்களறி கலவரத்தை நடத்தியவர் ஜுந்தல்லா என்ற சன்னி முஸ்லிம் கலகக் குழுவின் தலைவர் அப்துல் மாலிக் ரிகி. அவரை ஈரானிய அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது என்று இர்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான் புரட்சி நடுவர் மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப அப்துல் மாலிக் ரிகி, ஈவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

அப்துல் மாலிக் ரிகியின் கும்பல் ஆயுதக் கொள்ளை, படுகொலை முயற்சிகள், ராணுவத்தைத் திட்டமிட்டுத் தாக்கியது, போலிஸ் மீது தாக்குதல் நடத்தியது, சாதாரண மக்களைக் கொன்றுகுவித்தது ஆகிய வன்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்ற அறிக்கை ஒன்று தெரிவித்தது. அப்துல் மாலிக் ரிகி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து கிர்கிஸ்தானுக்குத் தப்பி ஔட முயன்றார். வழியில் அவரை ஈரான் கைது செய்தது. - ஏஎப்பி

Read more...

அமெரிக்காவில் இந்தியர் படுகொலை

அமெரிக்காவில் இந்திய மென்பொருள் பொறி யாளர் ஒருவர், ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவால் கொள்ளையடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த திரு வெங்கட சுப்ப ரெட்டி குட்டமஞ்சி (35) என்ற அவர், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 23 வயதுப் பெண் ஒருவரைச் சந்திப்பதற்காக கடந்த புதன்கிழமை மதியம் 2.00 மணிக்கு டெட்ராய்ட் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர் ஒரு குண்டர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று வட அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சங்கம் தெரிவித்தது.

இந்தக் கொலை தொடர்பாக ஐந்து பேரை அமெரிக்கப் போலிசார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட அந்த ஐந்து பேரில் ஒருவர் வெங்கட சுப்ப ரெட்டி சந்திப்பதற்காகச் சென்ற மெக்சிகோ நாட்டுப் பெண்ணின் காதலன் என்று கூறப்படுகிறது.

காதலர்களுக்கான இணையத்தளத்தின் மூலம் திரு வெங்கட சுப்ப ரெட்டிக்கு பழக்கமானார் அந்த மெக்சிகோ நாட்டு மங்கை. கொலை செய்யப்பட்ட அன்றைக்கு திரு வெங்கட்டுக்கும் அந்த மெக்சிகோ நாட்டு மங்கையும் ஔர் உணவுவிடுதியில் மதிய உணவு சாப்பிட்டனர்.

சாப்பிட்ட பின் இருவரும் அருகேயுள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றிருக்கின்றனர். விடுதியின் வாயிலை யடைந்ததும் அங்கு காத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் காதல னும் அவரது நண்பர்கள் நான்குபேரும் சேர்ந்து திரு ரெட்டியை சுட்டுக் கொன்று விட்டு அவரது உடைமைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

சிரித்துப் பேசிக் கொண்டு உல்லாசமாகக் காரை விட்டு இறங்கிய ஒரு சில நிமிடங்களில் எல்லமே முடிந்து போய்விட்டது. காத்துக்கொண்டு நின்றவர்கள் திரு ரெட்டியை எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. எதுவும் கேட்கவில்லை. பார்த்ததும் படபடவென சுட்டுத் தள்ளினர். சுட்டுக் கொன்றுவிட்டு கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு காரில் பறந்துவிட்டனர்.

சம்பவம் நடந்ததைப் பதற்றத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் உடனடியாகப் போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலிஸ், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தது.

Read more...

யாழ் மக்கள் தொடர்பாக ஜேவிபி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. கோத்தபாய

யாழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாக ஜேவிபி யினர் முதலைக்கண்ணீர் வடிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஐலண்ட பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் வடபகுதிக்கு விஜயம் செய்திருந்த ஜேவிபி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மக்கள் மத்தியில் பேசும்போது யாழ் குடாநாட்டில் நிலை கொண்டுள்ள படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்ததுடன் படையினர் தமிழ் மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிற்கு ஆதரவாகவும் செயற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தியிருந்தார். இவ்விமர்சனம் தொடர்பாக பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலர் தான் இரண்டாம் லெப்டினண்டாக 1970 களின் ஆரம்ப பகுதியில் யாழ் குடாநாட்டிற்கு கடமைக்கு சென்றிருந்தபோது யாழ் குடாநாட்டு மக்கள் அங்கிருந்த அரசியல் கட்சிகளால் எவ்வாறு நடாத்தப்பட்டார்கள் என்பதை அவதானிக்க முடிந்திருந்தாக தெரிவித்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் சச்சரவுகள் அற்ற தேசம் உருவாவதை தடுப்பதே ஜேவிபி னரின் நோக்கம் என அவர் மேலும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

Read more...

அரசியல் சாசனத் திருத்தங்கள் பாராளுமன்றம் வருகின்றது

அரசியல் சாசனத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பிலான வரைவுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கடந்த 9ம் திகதி அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தவணைக்காலம், தேர்தல் முறைமை, 17 ஆவது திருத்தச் சட்ட மூலம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பான வரைவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு விரைவில் விளக்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தவணைக் காலத்தை நீட்டிக்கும் முனைப்புக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கப்பட மாட்டாது என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வன்னிமக்களின் உணர்வுகளை யாழ் மக்கள புரிந்து கொள்ள வேண்டும். சங்கரி

யூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தருகின்றது. தம் உறவினர் இறந்த சோகமும் பல சொத்துக்களை இழந்த கவலையிலும் மூழ்கியிருக்கும் வன்னி மக்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து மீள முன்பு யாழ் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபடுவது வருந்தத்தக்க விடயமாகும். குழு அங்கதினர் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள இவ் வேளை இதுபற்றி அவர்களுக்கு கூறியமைக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஒரு தடவை உறுப்பினர்கள் வன்னிக்குச் சென்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உளள வீதிகளுக்கூடாகச் சென்று அங்கே ஏற்பட்டுள்ள பெரு அழிவுகளையும் இடம் பெயர்ந்து மீள் குடியமர்ந்த மக்கள் ஒருவருடத்தின் பின்பும் எத்தகைய பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் மீளக் குடியமர்ந்தவர்களாகத் தெரியவில்லை. மீண்டும் இடம் பெயர்ந்தவர்களாகவே தெரிகின்றனர்.

வன்னி மக்களின் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் காணமுடியாது. கடந்த வருடம் வீட்டை விட்டு தம் குடும்ப அங்கத்தவர்கள் சுமக்கக் கூடிய பொருட்களோடு சென்றவர்கள் இன்றுவரை ஒரு நாளேனும் நிம்மதியாக உறங்கியதில்லை. தம் வீடுகளுக்கு அவர்கள் வந்து பார்த்த போது வீடுகள் தரை மட்டமாகவும் சில பெரிய அளவில் தகர்க்கப்பட்டும் சில வீடுகள் கூரை இன்றி யன்னல்கள் இன்றியும் உள்ளன. அவர்களின் வீடுகளில் எந்த ஒரு பொருளும் இருக்கவில்லை.

சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஒட்டாண்டியாக வாழும் கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் மத்தியில் யாழ் மக்களுக்கு தம்மீது அனுதாபம் இல்லை என்று எண்ணம் பரவியுள்ளது. பலர் தமது உறவுகளை இழந்தும் சில குடும்பங்கள் முற்றாக அழிந்துமுள்ளன. சிலரை மக்கள் இன்னும் தேடிக் கொண்டுமிருக்கின்றனர். இரு கால்களையும் இரு கைiளையும் இழந்தவாகள் தம் வீடுகளை எவ்வாறு கட்டுவோம் என ஏக்கம் ஒரு புறம் புலி உறுப்பினாகள் என பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளைப் பற்றி கவலை அவர்களுக்கு. இக்கட்த்தில் தான் அங்கு சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். இடிபாடுகள் நிறைந்த அவர்களின் கிணறுகளை சுத்தம் செய்து அவர்களின் உறைவிடம் திருத்த உதவ வேண்டும்.

இன்று அவர்களின் வீடுகளை கட்டுவோமா என்ற பயம். கட்டப் பொருட்கள் உதவியாக கொடுத்தாலும் கட்ட முடியுமா என்ற பயம் அவர்களுக்கு. முழு அளவிலான நட்ட ஈட்டு பெறத்தகுதியுடையவர்கள். அரசோ சர்வதேச சமூகமோ அத்தனை நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. வெறும் விவசாயிகளுக்கு உதவியை மட்டுமே கொடுப்பதாகவே அரசு முன்வருகிறது, இந்த நிகழ்சியை நடத்துவா விடுவதா என்கின்ற விடயமாக முடிவை எடுக்க வேண்டியவர்கள் நாடகக் குழுவினர்ரே. நான் ஒரு நாடக கூத்து இரசிகன். இந்த விடயத்தில் வன்னி மக்களின் உணர்வுகளை யாழ் மக்களுக்கு உணரவைப்போன். இதற்கு முன்பும் சில சங்கீத நிகழ்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை அனைத்துமே வேறு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. இந்த விடயத்தில் பொருத்மான ஆலோசனையை பெருத்தமான நேரத்தில் வழங்கப்படாமை வருத்தத்திற்குரியதே. இவ்விடத்தில் இளைளுர்கள் மற்றும் மக்களும் ஒரு தீர்வை எடுக்கலாம். எந்த முடிவும் நல்ல முடிவாக தெரியவேண்டியது அவர்களே. இந்நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் நான் பாதித்திருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.


வீ. ஆனந்தசங்கரி

தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com