Sunday, February 5, 2012

இலங்கை மக்கள் கட்சியில் இணைகிறார் ஹிருனிகா பிரேமச்சந்திர

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமச்சந்திர இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபடப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா மஹஜன கட்சியின் 28ஆவது வருடாந்த கூட்டத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள் தமது அரசியல் வாழ்க்கையின் முக்கியமானதொரு தினமாகும் என ஹிருனிகா பிறேமசந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி எனும் ஒப்பற்ற பெரும் விருட்சத்தில் தாமும் இணைந்து கொள்ளவுள்ளமையே இதற்கு காரணம் என அவர் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான பாதர லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டார்.

பாரத லக்ஷ்மன் உயிரிழந்தபின் ஹிருனிகா பலராலும் அறியப்பட்டார். தந்தையின் மறைவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தனது தந்தையின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதனை தான் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

ஆயினும், தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதியான கருத்துக்களை வெளியாடிருந்த ஹிருனிகா இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை அறிவித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதியின் கணவரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான விஜய குமாரதுங்கவினால் இலங்கை மக்கள் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அக்கட்சியில் இணைந்தே பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். இன்று பாரத லக்ஷ்மனின் வழியில் அவரது மகள் ஹிருனிகா செல்ல முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Read more...

டோகோவில் இருந்து 28 பேர் இலங்கை திரும்புகின்றனர்: ஐ.ஓ.எம்.

கனடாவில் அகதிகளாக குடியேறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயணத்தின் வழியில் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவில் பிடிப்பட்டிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட இலங்கையரில் இரண்டாவது தொகுதியாக 28 பேர் இலங்கை திரும்புவதற்காக சனிக்கிழமையன்று டோகோவிலிருந்து கிளம்பியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் டோகோ அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 209 பேரில் 9 பேர் ஏற்கனவே அண்மையில் இலங்கை திரும்பிவிட்டிருந்தனர்.

டோகோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையரில் தற்போதைய நிலையில் மொத்தம் 164 பேர் நாடு திரும்ப முன்வந்துள்ளனர் என்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த சர்வதேச குடியேறிகள் உதவி அமைப்பான ஐ.ஓ.எம். தெரிவித்துள்ளது.

இவர்களில் 67 பேர் சுயமாக நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கும் படிவத்தில் கையெழுத்திட்டு அதற்குரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டுள்ளனர் என்றும், 45 பேர் விருப்பப் படிவத்தில் கையெழுத்திட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக காத்திருக்கின்றனர் என்றும், 3 பேர் டோகோவிலேயே அரசியல் தஞ்சம் கோர முடிவெடுத்துள்ளதாகவும், வேறு 42 பேர் தஞ்சம் கோருவதா, இல்லை நாடு திரும்புவதா என்று இன்னும் தீர்மானிக்காமல் இருக்கிறார்கள் என்றும் ஐ.ஓ.எம். தகவல் வெளியிட்டுள்ளது.

டோகோவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையரில் நான்கு பேர் தற்போது அங்கிருந்து தப்பிவிட்டார்கள் என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி பிபிசி

Read more...

கேஸ் வாயுவின் விலை அதிகரிக்கப்படலாம்!

கேஸ் வாயுவின் விலை இம் மாதக் கடைசியில் அதிகரிக்கப்படுமென கேஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கேஸ் விலை அதிகரித்துக் காணப்படுவதால் கேஸ் நிறுவனம் சில மாத காலமாக கேஸ் வாயு பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அதற்கேற்ப நாட்டில் கேஸ் விலை அதிகரிப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவ்வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் கேஸ் வாயுவின் விலை  கடந்த நாட்களில் மிக விரைவாக கூடியுள்ளது. அந்த வகையில் மெட்ரிக் டொன் ஒன்றின் விலை அமெரிக்கா டொலர் 880 முதல் 1031 வரை அதிகரித்துள்ளது.

அத்துடன் கேஸ் வாயுவின் விலை மீளாய்வுக்காக லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனம் என்பவை இதுவரை எந்தவிதமான வேண்டுகோளையும் விடுக்க வில்லை. எனினும் எதிர்ரும் நாட்களில் இந்த வேண்டுகோளை விடுப்பதற்கு சாத்தியப்பாடுகள் உள்ளதென  வர்த்தக அமைச்சின் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றது.

Read more...

பிறேக் தொழிற்படாததால் மின்கம்பத்தில் மோதிய தனியார் பஸ் -நீர்கொழும்பில் சம்பவம்

திடீரென்று வேகத்தடுப்பு (பிறேக்) தொழிற்படாததன் காரணமாக தனியார் பஸ் வண்டியொன்று மின்சார கம்பத்தில் மோதி விபத்தக்குள்ளாகியுள்ளதுஎன்றஜ நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் (நேற்று) சனிக்கிழமை முற்பகல் 10.15 மணியளவில் நீர்கொழும்பு லுனுகொட சந்தியில் (கச்சேரி அருகில் ) இடம்பெற்றது. இந்த விபத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.ஆயினும் தெருவில் இருந்த மின்சார கம்பம் உடைந்த வீழ்ந்துள்ளதுடன் பஸ் வண்டியின் முன் பக்கம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மீரிகமை - நீர்கொழும்பு பேக்குவரத்து சேவையில் ஈடுபடும் 251 அம் இலக்க தனியார் பஸ் வண்டியை அதன் சாரதி ஆர் .ஏ. கிரான் சுமுது ரணசிங்க மீரிகமையிலிருந்து நீர்கொழும்பை நோக்கி செலுத்தி வந்துள்ளார் . நீர்கொழும்பு கொப்ப்ரா சந்தியில் வீதி சமிங்ஞை விளக்கு அருகில் வைத்து திடீரென்று பஸ் வண்டியின் வேகத்தடை செயலிழந்துள்ளது .அதே நேரம் தெய்வாதீனமாக சமிக்ஞை விளக்கின் பச்சை விளக்கு எரியவே சாரதி பஸ்ஸை தொடர்ந்து செலுத்தியவாறு பஸ்ஸை நிறுத்த முயற்சி செய்;துள்ளார்.

இந்நிலையில் வேகத்தடை செயற்படாததன் காரணமாக லுனுகட சந்தி அருகில் வைத்து மின்கம்பத்தில் மோதி பஸ் நின்றுள்ளது . விபத்து சம்பவத்தை அடுத்து பஸ்சில் இருந்த 25 இற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடித்தப்பியுள்ளனர். இவர்களில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவர் .

இதே வேளை மின்சார தூண் உடைந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் மின்சாரம் முற்றாக தடைப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போக்குரவத்து பொலிசார் வீதிப்போக்குவரத்தை சீர்செய்ததுடன் ,விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தினர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

Read more...

2012-2013 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம்பெறும் ஆண்டாக அமையும என்கிறார் மங்கள

2012-2013 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம்பெறும் ஆண்டாக அமையும் எனவும் விரைவில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை அமைக்கும் எனவும் ஐ தே. க.வின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது,

கஸ்டமான யுகம் ஒன்றுக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டி வரும். அதே போன்று மிகவும் குறுகிய காலத்தில் எங்களது அரசாங்கத்தை ஐ.தே.கட்சியின் கீழ் அமைப்பதற்கு பங்களிப்பு செய்ய வேண்டி வரும் .

2012-2013 என்பது வரலாற்றில் பதியப்டும் ஆண்டாக அமையும். இன்னும் ஒரு வருட காலத்தில் நாங்கள் திரும்பிப் பார்க்கும் போது, இதற்காக இதற்காக ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு அடித்தளமிட்டது என்பதை வரலாறு எழுதும் என்றார்.

Read more...

Saturday, February 4, 2012

யாழ் மற்றும் அம்பாறை மாவட்ட சுதந்திரதினக் கொண்டாட்டங்கள்.

இலங்கையின் 64 வது சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் நாடு பூராகவும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தாய்நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடினர். யாழ் மாவட்ட அரச அதிபர் எமில்டா சுகுமாரன் தேசியக் கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.



இதேநேரம் இலங்கையின் 64ஆவது சுதந்திர தின தேசிய விழா 'ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் இன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் இலங்கையின் 64ஆவது சுதந்திர தின தேசிய விழா கொண்டாடப்பட்டது.

இவ்நிகழ்வில் இலங்கை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதன்போது பீடாதிபதிகள், சிரேஸ்ட பதிவாளர்கள், திணைக்கள தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



Read more...

அமெரிக்க விமானிகளுக்கு விமானத்தில் ஏற்படும் மர்ம மயக்கம்!

அமெரிக்க விமானப்படையின் குறிப்பிட்ட ரக விமானங்களைச் செலுத்தும் விமானிகள் மயக்க நிலைக்கு செல்லும் மர்மம், தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானங்களில் மட்டும், இவர்கள் ஏன் மயக்க நிலைககு செல்கிறார்கள் என்பதை விமானப்படையால் இன்னமும் உறுதி செய்துகொள்ள முடியவில்லை என்றும் தெரியவருகிறது.

F-22 ரக போர் விமானங்களை செலுத்தும் அமெரிக்க விமானப்படை விமானிகளே, விமானம் பறக்கும்போது அதீத சோம்பல் நிலையையும், அதைத் தொடர்ந்து பாதி மயக்க நிலையையும் அடைகிறார்கள் என்று ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. சில சம்பவங்களில், விமானத்தில் இருந்து இறங்கியபின் விமானிகள் முழு மயக்க நிலைக்கும் சென்றுளளார்கள்.

விமானத்தில் உள்ள ஏர்-சப்ளையில் ஏதோ சிக்கல் இருப்பதாக விமானப்படை கருதியது. விமானிகள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜின், விமானத்துக்கு வரும் ஏர்-சப்ளை லைன் ஊடாகவே வருகிறது. ஆனால், பல சோதனைகள் செய்யப்பட்ட பின்னரும், அதில்தான் தவறு என்பதை இவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.

கடந்த வருடத்தில் இரு தடவைகள் அமெரிக்க விமானப்படையின் அனைத்து F-22 போர் விமானங்களையும் தரையிறக்கி, சோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். முதலில் அனைத்து F-22 போர் விமானங்களையும் ஆபரேஷன்களில் இருந்து அகற்றி, 140 நாட்கள் பறக்க அனுமதிக்காமல் தரையில் நிறுத்தியிருந்தார்கள். கடந்த செம்டெம்பர் மாதத்தில் இது முடிவடைந்தது.

சுமார் 5 மாதங்கள் F-22 போர் விமானங்கள் எதுவும் விமானப்படையில் இயக்கப்படாத நிலையில், அவை அனைத்துக்கும் ஏர்-சப்ளை சிஸ்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான செலவு 7 மில்லியன் டாலர்.

அதன் பின்னரும் விமானிகள் சோம்பல் நிலைக்கு செல்வதும், மயக்கமடைவதும் நிற்கவில்லை. இதையடுத்து மீண்டும் அனைத்து விமானங்களையும் தரையிறக்கினார்கள். இம்முறை விமானங்கள் 7 நாட்களுக்கு இயக்கப்படவில்லை. வர்த்தக விமானங்களில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜின் ஸ்டாட்டர் சென்சார் கருவி ஒன்று பொருத்தப்பட்டது. இது கடந்த மாதம் நடைபெற்றது.

இன்னமும் சிக்கல் முடிந்தபாடாக இல்லை! F-22 விமானிகளின் ரத்த சாம்பிள்கள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட ரிப்போர்ட், இவர்கள் சுவாசிக்கும் காற்றில் வழமையைவிட அதிகளவு நைட்ரஜின் இருப்பதாக வந்துள்ளது. இது விமானத்தில் உள்ள OBOG (OnBoard Oxygen Generating) சிஸ்டத்தில் உள்ள கோளாறாக இருக்கலாம் என்பதே தற்போதைய ஊகம்.

சமீபத்தில் விமானிகள் அதீத சோம்பல் அல்லது பகுதி மயக்க நிலைக்கு சென்ற 14 இன்ஸிடென்ட்டுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க விமானப்படையில் F-22 ரக விமானங்களைத் தவிர, F-16, F-15E, A-10, F-35, B-1, B-2, CV-22, மற்றும் T-6 ஆகிய ரக விமானங்களும் பாவனையில் உள்ளன. இந்த விமானங்கள் எதிலும், விமானிகள் மயக்கமடையும் சிக்கல் ஏதும் ரிப்போர்ட் செய்யப்படவில்லை.

அமெரிக்க விமானப் படையில் F-22 ரக போர் விமானங்கள் மொத்தம் 170 உள்ளன. விமானப் படையின் வான் தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிப்பவை இந்த ரக விமானங்கள்தான்.

Read more...

பேசுவோம், ஆனால் கூட்டமைப்புடன் கூட்டு கூடவே மாட்டோம்! பிள்ளையான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அண்மையில் முதலமைச்சர் பிள்ளையானால் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருந்தது, குறிப்பிட்ட கடித்தத்திற்கு இதுவரை சம்பந்தன் இதுவரை எதுவித பதிலும் வழங்கிராத நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் , தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான சந்தர்பம் ஒன்று கிடைத்தால் கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் இலங்கைநெற் கேட்டபோது, 'கூட்டமைப்புடன் கிழக்கு மக்களின் அபிலாஷைகளை மீறாத வரையறைக்குள் பேசுவோம், ஆனால் எந்நவொரு காலகட்டத்திலும் கூட்டுச்சேரமாட்டோம்' எனத் தெரிவித்தார்.

Read more...

நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர் சுதந்திரதினத்தில் சிறையில். அனோமா

இலங்கையின் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு நாடுபூராகவுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 1450 சிறைக்கைதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா விடுலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறு அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இதேவேளை, சிறைச்சலைக்குச் சென்று தனது கணவரை பார்வையிட்டு வந்த அனோமா பொன்சேகா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,விடுலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டு மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றார்.

Read more...

1450 சிறைக்கைதிகள் விடுதலை! யாழ் சிறைச்சாலையிலிருந்து எட்டுப்பேர்!

இலங்கையின் 64 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு நாடுபூராகவுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 1450 சிறைக்கைதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் யாழ் சிறைச்சாலையிலிருந்து வெளிவந்துள்ளனர்.

சிறுகுற்றங்களுக்காகவும் சிறைத்தண்டனை விதக்கப்பட்டவர்களும் அபராதம் செலுத்த முடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளும் விடுதலையானவர்களில் அடங்குகின்றனர்.

யாழ்.சிறைச்சாலையிலிருந்து 4 பேரும் பலாலி விவசாயப் பண்ணையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 4 சிறைக் கைதிகளுமே இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டார குறிப்பிட்டுள்ளார். இவர்கள் சிறு குற்றங்களுக்காக கடந்த ஆறுமாத காலமாக சிறைப்படுத்தப்பட்டுருந்ததுடன் தண்டப்பணத்தினை கட்ட முடியாமல் இருந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் வீடு செல்வதற்கு மனம் இல்லாதவர்களாக காணப்பட்டுள்ளனர். அதற்கான காரணத்தை தேடியபோது, சிலர் எங்கு சென்று தங்குவதது எனத் தெரியாதவர்களாகவும், தமது சொந்த இடங்களுக்கு செல்லதற்கு பஸ் கட்டணத்திற்கான பணம் கூட இல்லாதவர்களாக காணப்பட்டுள்ளனர்.

பின்னர் இவர்களுக்கான பஸ் கட்டணம் சிறைசாலைக் காவலர்களால் வழங்கப்பட்டுள்ளது.



Read more...

பல்வேறு பொய்களைச் சொல்லி பயங்கரவாத சக்கிகள் சதிவலைகளை பின்னுகின்றன. ஜனாதிபதி

இலங்கைக்கு எதிராக பல்வேறு பொய்களைச் சொல்லி சர்வதேசம் எங்கும் பரந்துள்ள பயங்கரவாத சக்திகள் சதிவலைகளைப் பின்னுகின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 64 வது சுதந்திரதினத்தை ஒட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு சொன்ன அவர் இங்குள்ள சிலரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் எனவும் சில நாடுகளில் இடம்பெற்ற பிரிவினைவாதத்தினை இலங்கைக்குள்ளும் நடத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளளார்.

'ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப் பொருளில் சுதந்திர தின பிரதான வைபவம் இன்று அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் புராதன வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் நடைபெற்ற இந்த சுதந்திர தின பிரதான வைபவத்தின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2700 பேர் பங்கு கொண்டனர்.

1500 இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள்- இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 320 வீரர்களும்- இலங்கை கடற்படையைச் சேர்ந்த 350 வீரர்களும்- பொலிஸ்- விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 250 வீரர்களும்- சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 250 வீரங்களும் தேசிய இளைஞர் படையணியைச் சேர்ந்த 200 பேரும் இதில் அடங்குவர்.

இதேவேளை- அநுராதபுரம்- பொலன்னறுவ- வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல இனத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் 45 கலாசார குழுக்களைச் சேர்ந்த 2552 நடன மற்றும் நாட்டியக் கலைஞர்களும் பாடசாலை மாணவ- மாணவிகளும் இன்றைய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

5ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம் நகரில் நாம் இன்று 64ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம். நாட்டுக்காக உயிரிழந்த படையினர் மற்றும் பொதுமக்களுக்கு இவ்விடத்தில் நின்று என் கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன்.
சுதந்திரம் என்பது இன்று எமது முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உள்ளது. யுத்தத்தைக் காரணம் காட்டி சுதந்திரத்தை மறக்கடித்த நிலைமை அன்று இருந்தது. இன்று யுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டாடுமளவுக்கு நாம் வந்துள்ளோம். கிராமத்தைப் பாதுகாக்க பதுங்கு குழிகளையும் துப்பாக்கிகளையும் கேட்டிருந்த மக்கள் இன்று அபிவிருத்தி- சுதந்திரம் மற்றும் பரிசுத்தமான நாட்டை வேண்டி நிற்கின்றனர்.

நாம் இன்று நீண்டதூரம் பயணிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். எமது பாரிய அபிவிருத்திகளில் 80 சதவீதமானவை கிராமங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. கிராமங்களிலிருந்து தேசிய அபிவிருத்திக்கு இவற்றை இட்டுச் செல்ல வேண்டுமாயின் கல்வி- தொழில்நுட்பம்- விஞ்ஞானம் என சகல துறைகளிலும் எமக்கு தோள் கொடுக்க வேண்டும். உலக பொருளாதார நெருக்கடி இலங்கைகையும் பாதிக்கும். இருப்பினும் எமது எழுச்சி அவற்றைச் சமாளித்துள்ளன. பாரிய உணவு நெருக்கடிக்குள் சிக்கியுள்ள உலக நாடுகளுக்கு உதவி செய்யும் சக்தியும் எமக்கும் எமது நாட்டு மக்களுக்கும் உண்டு. எமது சக்தியை தொடர்ந்து நாம் காட்ட வேண்டும். பொருளாதார சுதந்திரம் மூலம் அதனை எம்மால் செய்ய முடியும்.

இலவச கல்வி- சுகாதாரம் முறைமையை தொடர்ந்து பேணுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர இலவச கல்வித்திட்ட சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியபோது- எஸ்.ஏ. விக்கிரமசிங்க- என்.எம். பெரேரா- ஜே.ஆர்.ஜெயவர்தன- டி.ஏ. ராஜபக்ஷ உட்பட பலர் அதனை ஆதரித்தனர். எமது மக்களுக்கான இலவச கல்வியைiயும் இலவச சுகாதார திட்டங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல நாம் உறுதிபூண்டுள்ளோம்.

எமக்கு எதிராக வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத சக்திகள் பல்வேறு பொய் பிரசாரங்களையும் சதி வலைகளையும் பின்னி வருகின்றன. இங்குள்ள சிலரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். சில நாடுகளில் இடம்பெற்ற பிரிவினைவாதத்தினை இலங்கைக்குள்ளும் நடத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவது தனியொருவரினால் செய்யக்கூடியது அல்ல. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த உண்மையை புரிந்துகொள்ளவும் வேண்டும். வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்கும் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொதுவான நிரந்தரமான சமாதானக் கொள்கையொன்றை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் எந்தவொரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. முழுநாடுமே அனைத்து எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அறிக்கையில் கடந்தகால பிரச்சினைகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தது. எமது மனசாட்சியின்படி நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி இந்த ஆணைக்குழு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதன் பரிந்துரைகளை ஏற்று குறுகிய காலத்திற்குள். அதாவது கடந்த 6 வார காலங்களாக நாம் அவற்றை நிறைவேற்றியே வருகின்றோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்போது சர்வஜன வாக்குகளால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை ஒதுக்கி வைத்துவிட்ட எம்மால் முடியாது. நாட்டின் நீதி- சட்டம் அனைத்துக்கும் நாம் அடிபணிவதுபோன்றே ஜனநாயக சக்தியான நாடாளுமன்றுக்கும் நாம் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும்.

சர்வஜன வாக்குகளினால் மாத்திரமே ஓர் அரசாங்கத்தினை கவிழ்க்கும் கட்டுப்பாட்டுக்குள் நாம் உள்ளோம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். அந்தவகையில் ஜனநாயக நீரோட்டத்தில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மாத்திரமே உண்டு. இதில் கலந்துகொண்டு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் செவிமடுத்துஇ மக்கள் தேவைகளை கவனத்திற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. எனவே அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

கௌதம புத்தரின் போதனைப்படி குரோதம் காட்டுபவர்களுக்கு அன்பை செலுத்தி-துரோகம் செய்பவர்களுக்கு நல்வழி காட்டி - நற்பிரஜைகளாக நாட்டில் வாழ நாம் வழி சமைப்போம்.
அனைவருக்கும் சுபீட்சம் உண்டாவதாக

மேலும் அவர் விடுத்துள்ள சுதந்திரதின வாழ்த்துச்செய்தியில்..

சுதந்திரம் குறித்த உண்மையான மதிப்புணர்வுடன் 64 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்துள்ளமை எமது தேசத்தின் அதிர்ஷ்டமாகும்.

இன்று கம்பீரமாய்ப் பறக்கும் எமது தேசியக் கொடி புதியதோர் தேசத்திற்குக் கட்டியம் கூறுவதாயுள்ளது. சுதந்திரப் பொருளாதாரத்திற் கான வழிகள் திறக்கப்பட்டுள் ளன. ஒரு சுபீட்சமான எதிர்காலத்திற்கான தேசத்தின் அபிலாஷைகளுக்கு அது தினம்தோறும் வலிமையூட்டிக் கொண்டிருக்கின்றது.

வெளிச் சக்திகளுக்கு அடி பணியாது நாட்டினதும் தேசத்தினதும் கரிசனைக்குரிய பிரச்சினைகள் குறித்து சுயாதீனமாக முடிவெடுக்கின்ற சுதந்திரத்தை எமக்கு வழங்கியுள்ளது. எமது தேசம் எம்மிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்திருக்கும் மிக முக்கியமான பொறுப்பு இதுவாகும் என நான் உறுதியாக நம்புகின்றேன். உன்னதமான சுதந்திரத்தின் உறுதியான ஒன்றிணைவைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

சமாதானம்- நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்படுகின்ற போதே நாட்டின் அடைவுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நோக்கங்கள் எதிர்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சுதேச செயற் திட்டத்தின் ஊடாக தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் இனியும் தயங்கப் போவதில்லை. அதீத பொறுமையுடன் நாடு எதிர்நோக்கிய பல்வேறு சவால்களை நாம் வெற்றிக் கொண்டுள்ளோம்.

நட்பு ரீதியான தொடர்புகளின் ஊடாக சர்வதேச சமூகத்துடன் பயனுறுதிமிக்க வகையில் பொருளாதார- அரசியல்- பாதுகாப்பு- வர்த்தக மற்றும் கலாசார தொடர்புகளை கட்டியெழுப்பியுள்ளோம். முன்னெப்போதைப் பார்க்கிலும் நாம் மிகவும் அறிவுபூர்வமாகவும் நாட்டுப் பற்றுடனும் செயற்பட்டு இவற்றை பேணிப்பாதுகாக்க வேண்டும்.

அதே போன்று நாட்டை அதன் பெறுமான முறைமைகளை விருத்தி செய்து முன்னேற்ற பாதைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஒரு அமைதியான சூழலில் ஒரு சுபீட்சமான வாழ்க்கைக்கான வழியேற்படும்.
உயர் சுதந்திரத்திற்கான தேசத்தின் சவால்களை வெற்றிக் கொள்வதற்கு தமது உயிர்களைக் கொடுத்து உன்னத தியாகம் செய்த எல்லா நாட்டுப் பற்றுடையவர்களுக்கும் தேசத்தின் மதிப்பும் கெளரவமும் என்றும் உரித்தாகும்.

ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்.(எம்.ரி.977)

...............................

Read more...

கைதிகளுக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவு வகைகள் ஸ்கேன் செய்யப்படும்

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் உறவினர்களினால் கொண்டு வரப்படும் உணவு வகைகள் இனிமேல், அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பரிசீலிக்க புனர்வாழ்வு , சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது .

இதன்படி சிறைச்சாலைகளில் ஸ்கேன் இயந்திரங்கள் பொருத்தப்பட இருப்பதுடன் ,சிறைச்சாலை வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளும் விரைவில் தீர்க்கப்படவுள்ளன.

சிறைச்சாலை வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் ஒழுங்கான முறையில் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

Read more...

சுதந்திர தினத்தையொட்டி கல்குடாவில் இரத்ததானம்.

இலங்கையின் 64 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு கல்குடா அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பும், வாழைச்சேனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவும் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான நிகழ்வு சுதந்திர தினமான இன்று 04.02.2012 சனிக்கிழமை அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம். ஹாறூன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் வாழைச்சேனை பிராந்திய பதில் உதவி பொலீஸ் அத்தியட்சகர் ஆனந்த ரத்ன சூரிய, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயவீர மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி யூ.எல். இனாமுல்லாஹ், ஓட்டமாவடி பிரதேசபை தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், கிழக்குமாகாண சுகாதார அமைச்;சின் இணைப்பாளர் முகைதீன், வர்த்தக சங்க தலைவர் நியாஸ் ஹாஜி ஏன்போர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெண்களும், இரத்தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.






இதேநேரம் ஓட்டமாவடி கோ.ப.மே. பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 64 சுதந்திர தின நிகழ்வு ஓட்டமாவடி கோ.ப.மே. பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர், ஓட்டமாவடி கோ.ப.மே. பிரதித் தவிசாளர் ஏ.எம். நௌபர்ஆகியோர் கலந்து கொண்டதுடன் நான்கு இன மத குருமார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் தேசியக்கொடியினை முன்னால் அமைச்சரும், தேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஏற்றி வைத்தார்.






செய்தி எம்.ரி.எம். பாரிஸ் ஓட்டமாவடி

Read more...

விடயத்தை தெரிந்து பேசுமாறு பிள்ளையான் கருணாவுக்கு ஆலோசனை

13 ஆவது திருத்தம், பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் தொடர்பில் நன்றாக ஆராய்ந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மீள் குடியேற்ற அமைச்சர் முரளிதரனை கேட்டுள்ளார் .

ஒரு பகுதிக்கு மாத்திரம் பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் பயனில்லை என்றும், பிரதேச செயலாளர்கள் மற்றும் முதலமைச்சர்கள் ஊடாக காணி அதிகாரம் நன்றாக செயற்படுத்தப்படுவதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மீள்குடியேற்ற அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையிலேயே முதலமைச்சர் பிள்ளையான் இதனை தெரிவித்ததாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Read more...

ஆபாச புத்தகம் விற்பனை செய்த புத்தகசாலை உரிமையாளருக்கு 2500 அபராதம்

ஆபாச விடயங்கள் கொண்ட புத்தகம் விற்பனை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட புத்தகசாலை உரிமையாளர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் 2500 ரூபா அபராதம் விதித்துள்ளார் என்று லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொள்ளுபிட்டியிலுள்ள மேற்படி புத்தக விற்பனை நிலையத்துக்கு பொலிஸ் அதிகாரியொருவர் மாறுவேடத்தில் சென்ற போது, அவருக்கு ஆபாச புத்தகம் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பிலியந்தலையைச் சேர்ந்த லோரன்ஸ் பேர்னார்ட் ரஞ்சித் எனும் எனும் நபர், 3000 ரூபாவுக்கு அப்புத்தகத்தை விற்றதாகவும், ஆங்கில மொழியிலான இப்புத்தகம் 292 பக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் நீதிமன்றில் கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

புலம்பெயர் தமிழ்ப் பெண்களின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்கிறதாம் லங்காசிறி

தமிழ் தேசியத் தலைவர், தமிழ் தேசியத் தொலைக்காட்சி, தமிழ் தேசிய வானொலி, தமிழ் தேசிய நாளிதள், தமிழ் தேசிய இணையத்தளம் என்று ஏகப்பட்ட தேசியங்கள் தற்போது தேசிக்காய்களாக புளித்துப்போயுள்ளமை யாவரும் அறிந்தது. இந்நிலையில் அன்று தமிழ் தேசிய ஊடகம் என வர்ணிக்கப்பட்ட லங்காசிறி ஊடகம் தற்போது செத்தவீட்டு இணையத்தளம் என புலித்தேசியத் தலைமையால் நாமம் சூட்டப்பட்டுள்ளதுடன் அவ்விணையம் கலாச்சாரா சீரழிவிற்கு தளம் அமைத்துக்கொடுப்பதாகவும், அதனூடாக தமிழ் பெண்களின் நிர்வாணப்படங்கள் விற்பனையாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக புலிகளின் நெடியவன் தரப்பினரால் வெளியிடப்படுகின்ற ஒரு பேப்பர் என்கின்ற பத்திரிகை என்ன சொல்கின்றது என்பதனை கீழே தருகின்றோம். இச்செய்திக்கும் இலங்கைநெற் இற்கும் எந்த தொடர்பும் கிடையாது, புலிகள் தற்போது எவ்வாறு பிளவுபட்டு நிற்கின்றனர் என்பதற்கும், புலிகள் பிளவுபடும்போது , அவர்கள் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு நாசகாரச் செயல்களையும் எதிர்த்தரப்பு எவ்வாறு வெளிப்படுத்துகின்றது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஓருபேப்பர் செய்தியின் முழுவடிவம் கீழே.

செத்தவீட்டு இணையத்தளத்தில் பலான சங்கதிகள்!

Posted by admin on December 27, 2011 in Blogs, பூராயம் · 0 Comments

உங்கள் கணவன், மனைவி, பிள்ளைகளை கண்காணியுங்கள்!!

நான் எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சொந்தக்காரர் யாரும் மண்டையை போட்டிட்டினம், இல்லாட்டி போட்டிருப்பினம் எண்டு விபரம் பாக்கிறதெண்டால் உடனை லங்கா சிறி இணையத் தளத்தைத்தான் திறந்து பாக்கிறனான். பிறகு அப்பிடியே ஊர்செய்தி தமிழ்ப்படம் பாட்டு எண்டு அதிலையே கேக்கிறதாலை அந்த இணையத் தளத்தைதே என்ரை கணணியிலை முதல் பக்கமாய் (home page)மாத்தி வைச்சிருந்தன். ஆனால் உந்த கொம்பியூட்டர் பற்றி கொஞ்சம் விபரம் தெரிஞ்ச சினேகிதன் ஒருத்தன் போனடிச்சு என்ரை கொம்பியூட்டரின்ரை முதல்பக்கத்திற்கு இடியை போடுறமாதிரி ஒரு செய்தியை சொன்னான். அது என்னவெண்டால் லங்காசிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi2world தமிழ் அரட்டை சேவை பற்றியது.

அந்த காணொளி அரட்டையூடாக பலநூறு தமிழர்கள் தமிழிச்சிகள் ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதைப்பற்றி அறியலாமெண்டு நினைச்சு அந்த இணையத்திலை அடிக்கடி கடலை போடுற ஒரு பெடியனிட்டை போனடிச்சு விபரத்தை கேட்டன். அவர் அண்ணை என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்னது மட்டுமில்லாமல். அவற்றை அனுப்பியும் வைத்திருந்தார். அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும் இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலி தொங்கிக்கொண்டிருந்தது. அதுக்குள்ளை ஆக அநியாயம் என்னவெண்டால் ஒரு 50 தாண்டின அம்மா வேறை கழட்டிப்போட்டு நிண்ட படம். உந்தக் கொடுமையை எங்கை போய் சொல்லுறது இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு மேற்பட்ட படங்கள் என்றால் இதுவரை மொத்தமாக அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை படங்கள் பரிமாறப்பட்டிருக்கும். .நினைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி அரட்டையடிப்பதும். ஆடையை கழற்றுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம் கெடுகின்றது என்று புலம்பும் தமிழ்வின், லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும் சிறிதரனின் சகோதரரால்; இயக்கப்படும் இணையத்தளத்தில் பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற்கு அவர்களும் உடந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது.

அதே நேரம் இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால். இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை பெரும்பாலும் (90 வீதம்) பாகிஸ்தானிலிருந்து இயங்கும் நிறுவனங்களே குறைந்த விலையில் வழங்குகின்றார்கள். இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது. இவர்கள் தங்கள் இணைய வழங்கியினுடாக பரிமாறப்படும் நிர்வாண காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல். இந்தியா பாகிஸ்த்தான், .மலேசியா .சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும் விற்பனை செய்கிறார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்களின் அந்தரங்கம் (நிர்வாணப்படங்கள்) வியாபாரமாகின்றது. ஏதோ மண்ணுக்கு போகிற உடல் இப்படியாகவாவது பிரயோசனப்படுகிறது, அந்த வகையில் வேண்டுமானால் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

தன்னுடைய மகனோ மகளோ தனியறையில் கணணியில் பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள். சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில் உலாவுகிறார்கள் கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே உலாவுது அதுகளின்ரை தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என நினைக்கும் பெற்றோர்கள் தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய இது போன்ற தமிழ் இணையத்தளங்கள் தேவைதானா என்பதனையும் தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும். அதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம். அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.
இது கேள்விப்பட்ட கையோடை நான் முதல் வேலையாய் என்ரை கணணியிலை இருந்து லங்காசிறி முதல் பக்கத்தை மாத்திப்போட்டன். ஏனெண்டால் ஆராவது அதை பாத்தால் நானும் அந்த குறூப்பிலை உடுப்பை கழட்டிற ஆள் எண்டு நினைச்சிடுவாங்கள். நீஙகள் என்ன செய்யப்போறியள்?

Tags: Issue 160

Read more...

வீடற்ற ஆடவரைக் கொன்று அவரது மூளையைத் தின்றவர்


அமெரிக்காவை உலுக்கிய விசித்திரமான வழக்கில், வீடற்ற ஆடவர் ஒருவரை வெட்டிக் கொன்று, அவரது மூளையைச் சாப்பிட்ட டைரி லிங்கன் ஸ்மித் (படத்தில்) மனநலப் பரிசோதனைக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறார். அந்தக் குற்றத்திற்காக அவர் கடந்த வாரம் ஃபுளோரிடாவில் கைது செய்யப் பட்டார். ஸ்மித்தின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மனநலப் பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவிட்டார். 1.25 மில்லியன் டாலர் பிணை விதித்து, ஸ்மித் போலிஸ் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அவரது வழக்கு இம்மாதம் 14ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

Read more...

Friday, February 3, 2012

நீதிமன்ற கைதியறையில் கைதி மரணம்: மக்கள் ஆர்ப்பாட்டம். பதட்டத்தை தணிக்க இராணுவம்!

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் கைதி அறையில் கைதியொருவர் மரணமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் எதிப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை யில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை அக்கரைப்பற்று பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று நீதிமன்ற கைதிகளின் அறையில் வைத்து மரணமடைந்துள்ளார்.

.இம்மரணம் பொலிஸாரின் தாக்குதலினாலேயே ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பாரிய எதிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்டாளைச்சேனையை சேர்ந்த 40 வயதான இந்த நபர் மாரடைப்பால் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சந்தேக நபர் இன்று காலை 8 மணியளவில் 8 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை நீதவான் முன் ஆஜர்படுத்துவதற்காக 10 மணியளவில் நீதிமன்றக் கைதிக்கூண்டில் வைக்கப்பட்டதாகவும், 11 மணிக்கு அவர் நீதவான் முன்னிலையில் ஆஜராகுவதற்கு அழைக்கப்பட்டபோது, அவர் வரவில்லை எனவும், அதன்பின் அதிகாரிகள் கைதி அறைக்குள் சென்று பார்த்த போது, அச்சந்தேக நபர் இறந்த நிலையில் காணப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதுவாயினும் அட்டாளைச்சேனைப்பகுதியில் நிலவும் பதட்டத்தினை தணிக்க அங்கு மேலதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

பிரதமரின் நிகழ்வில் அழையா விருந்தாளியாக விஜயகலா எம்.பி காரை நகர் மக்கள் கடுப்பில்

ஊடகங்களில் அரசாங்கத்தை சாடிக்கொண்டு அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார் ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் என காரைநகர் மக்கள் கடுப்படைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த பிரதம டி.எம்.ஜெயரட்ண காரைநகரிலுள்ள ஈழத்து சிதம்பரத்தின் கோகிலம் பிருந்தாவனம் ஆகிய திட்டத்திற்கு அத்திவராம் இட்டு இத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்

இந்நிகழ்வுகளுக்கு ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக அவர் பிரதமருக்கு அருகிலேயே எப்பொழுதும் காணப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்ட போதும் அவரையும் இவர் விலத்தி விட்டு பிரதமருடன் நெருக்கமாக கதைத்துக்கொண்டிருந்தது பொது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்து ஊடக அறிக்கைகளை விட்டுக்கொண்டு பின்னர் அரசாங்கத்தோடு சேர்ந்து மக்கள் முன்னிலையில் தோன்றி அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களில் தனக்கு பங்கு இருப்பது போன்று பாசாங்கு செய்யும் இவரது செயற்பாடுகள் தொடர்பாக பொது மக்கள் கடும் வெறுப்படைந்துள்ளனர்.



Read more...

கால்பந்து போட்டியில் கலவரம் எகிப்து நாட்டில் 75 பேர் பலி

எகிப்து நாட்டில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. கால்பந்து விளையாட்டு அணி ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. வன்முறைக்கு 75 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள், இந்த போட்டியில் பங்கேற்று வருகின்றன. போர்ட் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியும், உள்ளூரை சேர்ந்த அல் மஸ்ரி அணியும் மோதின. அதில் உள்ளூர் அணி அபார வெற்றி பெற்றதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அதனால் வெளியூர் ரசிகர்கள் மற்றும் அல் அலி கிளப் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். போட்டி முடிவு தெரிந்த அடுத்த விநாடியில் மைதானத்தை நோக்கி ரசிகர்கள் ஓடினர். இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தடுப்பு கம்பிகள், கோல் போஸ்ட், நாற்காலிகளை பிடுங்கி எடுத்து சரமாரியாக வீசினர். ஸ்டேடியத்தில் இருந்த நாற்காலிகள், கண்ணாடி கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.

மோதல் ஏற்படும் என எதிர்பாராததால் போலீசார் குறைந்த அளவிலேயே இருந்தனர். வன்முறையை அவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்த மோதலில் 75 பேர் பலியாயினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் பரவியதால், தலைநகர் கெய்ரோவில் கால்பந்து நடக்கும் மைதானத்திலும் ரகளை ஏற்பட்டது. குண்டுகள் வீசப்பட்டதால், மைதானம் போர்க்களம் போல மாறியது. ரசிகர்கள் சிதறி ஓடினர்.

கலவரத்தை அடக்க ராணுவ விமானங்களில் வீரர்கள் அனுப்பப்பட்டனர். மற்ற போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, எகிப்து நாடாளுமன்றம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. கால்பந்து போட்டிகளில் கலவரம் வெடித்தது வரலாறு காணாத நிகழ்வு என்று அமைச்சர் ஹேஷம் ஷேகா கூறினார். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்ட இடங்களில் போலீசார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com