Friday, February 3, 2012

யாழ்ப்பாணத்தில் 750 மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர ஹோட்டல் அமைக்கப்படவுள்ளது.

யாழ்.நகரில் 750 மில்லியன் ரூபா செலவில் புதிய ஆடம்பர ஹோட்டல் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை இன்றைய தினம் பிரதம டி.எம். ஜெயரட்ண நாட்டி வைத்துள்ளார்.

ஜெட்லிங் நிறுவனத்தினால் ஜெட்விங் யாழ்.ஹோட்டல் என்னும் பெயரில் அமைக்கப்படவுள்ள இக்ஹோட்டலானது.14 மாடிகளையும் 76 அறைகளையும் கொண்டு அமையவுள்ளது.

18 மாதங்களில் கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட இக்ஹோட்டலானது யாழ்.நகரிலேயே மணிக்கூட்டு வீதியில் அமையப்பெறவுள்ளது. இதன் ஆரம்ப கட்டுமானப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது

இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் மதியம் நடைபெற்றது. இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண அளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திர சிறி கொழும்பு மாநகர சபை எதிர்கட்சித்தலைவர் மிலிந்த மொறகொட யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே யாழ். அரச அதிபர் யாழ்.மாநகர மேயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Read more...

வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தென்பகுதி மீனவர்களை மீளப்பெற இணக்கம். லக்பிம

தென் பிராந்தியத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீன் பிடித்தொழில்களில் ஈடுபடும் மீனவர்களை எதிர் வரும் ஏப்ரல் மாதத்துடன் மீளத் தம் பிரதேசங்களுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து கடற்தொழிலாளர் அமைப்புக்களின் தலைவர் என்டன் விஜேந்திர தெரிவித்துதள்ளதாக லக்பிம பத்திரிகை தெரிவிக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிநாட்டு அமைச்சர் மற்றும் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆகியோ இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னணியிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

வடகிழக்கில் சிங்களக்குடியேற்றம் என தமிழர் தரப்பினர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு குறிப்பிட்ட மீனவர்களின் விவகாரங்கள் வழிவிடுவதாகவும், வடகிழக்கு மீனவர்களின் தொழிலுக்கு தென்பகுதி மீனவர்களின் பிரசன்னம் பாதிப்பு எற்படுத்துவதாகவும் இங்கு பேசப்பட்டதாகவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளதுடன் கசப்புணர்வுகளை தவிர்கும் பொருட்டு அவர்களை மீள் அழைத்துக்கொள்வதற்கு எற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றது.

பேசாலை, சவூத்பார், முல்லைத்தீவு, வாழைச்சேனை, மட்டக்களப்பு,  புடவைக்கட்டு, கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களில் தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலை செய்து வந்துள்ளனர் என்பதை இப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

Read more...

யாழ்-ஒமந்தை புகையிரதப் பாதையில் 63 கிலோ மீற்றர் தூரம் மிதிவெடி அகற்றப்பட்டுள்ளது

ஒமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு முதற்கட்டமாக மிதிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒமந்ததையிலிருந்து யாழ்பாணம் வரையான 138 கிலோ மீற்றர் புகையிரதப்பாதையில் மிதிவெடியகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் மிதிவெடியகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் 63 கிலோ மீற்றர் தூரம் மிதிவெடியகற்றப்பட்டுள்ளது.

இம்மிதிவெடியகற்றும் பணியில் புகையிரதப்பாதை அமைக்கும் இந்தியாவின் நிறுவனத்தோடு இலங்கையின் இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

யாழ்.ஊர்காவற்துறைக்கான புதிய பிரதேச சபைக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச சபை தலைமைக் காரியாலய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதி மகிந்த சிந்தனை வழிகாட்டலினூடாக உள்ளுராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் உள்ளுராட்சி உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இது நிர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் 520 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களில் முதலாவது கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் 27 மில்லியன் ரூபாவில் செலவில் கட்டிமுடிக்கப்பட்டள்ளது.

விருந்தினர்கள் பிரதான வீதியூடாக மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

முதலில் பெயர்ப் பலகையும், நினைவுக் கல்லும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

மேலும் ஊர்காவற்துறை பிரதேச சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களும், புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் பொறியியலாளர்கள் மற்றும் தற்போதைய தலைவர் உட்பட பலர் விருந்தினர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊர்காவற்துறை பிரதேச சபைத் தலைவர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழ மக்கள் ஜனாநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன்,

வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மரியசீலன் ஜெகு, பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன், ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகனன்,

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரஜீவ், வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, வேலணை பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Read more...

ஸ்ரீகொத்த புனரமைப்புக்கு நிதிசேகரிப்புக்கு தடை என்கிறார் ரணில்

ஸ்ரீகொத்த மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அதன் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிக்கும் பணிக்கு தடை ஏற்படுத்துபடுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் அந்த தரப்பினரால் மேற்கொள்ளப்படும் துரோகத்தனம் இரண்டு மடங்காகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பேரூவலை சீனக்கோட்டை பிரதேச ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் ஆதரவாளர்கள் தான் வரும் வழியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் குறிப்பிட்டார்.

. இந்த இல்லத்திற்கு ரணில் விக்கிரமசிங்க சென்ற போதே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Read more...

லண்டன் பங்குச் சந்தையைக் குண்டு வைத்துத் தகர்க்கும் சதி

கிறிஸ்மஸ் காலத்தின் போது லண்டன் பங்குச் சந்தையைக் குண்டு வைத்துத் தகர்த்து பேரழிவை ஏற்படுத்த சதி செய்த குற்றத்தை நான்கு பிரிட்டிஷ் ஆடவர்கள் (மேல்படம்: ஏஎப்பி) ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் சேர்த்து மேலும் ஐவர் அமெரிக்க முஸ்லிம் போதகரின் போதனையால் உந்தப்பட்டு, அல் காய்தாவின் ஆதரவோடு அந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைக் கண்காணித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் சோதனை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.
முதலில் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். ஆனால் 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வர் நேற்று அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் போலிசாருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி இது.

Read more...

யாழ்.சுன்னாகத்தில் சித்த ஆயுள்வேத மருத்துக் கல்லூரியின் மூலிகைக் கருத்தரங்கு

யாழ்.சுன்னாகம் லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் வீட்டு மூலிகை வளர்ப்பு தொடர்பான அறிமுகக் கருத்தரங்கொன்று இன்று (03.02.2012) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலையில் நடைபெற்றது.

லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களால் நடாத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில், மூலிகை வளர்ப்பு முறைகள், மூலிகைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன், பாடசாலையில் மூலிகைத் தோட்டத்தினை உருவாக்குவதற்கான மூலிகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Read more...

மாப்பிளைதேடுவது போல் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. பிரியதர்ஷன யாப்பா

இனப்பிரச்சினைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாகவே தீர்வுகாணப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தீர்வு விடயத்தில் அரங்கத்தில் இருப்போரை ஒருமித்த கருத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் எனவும் 'மணமகனை' தேடுவது போல் தீர்வை தேட முடியாது எனவும் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர், அங்கு மேலும் குறியதாவது...

காணி, காவற்துறை அதிகாரங்கள் தொடர்பிலான நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி சிந்திக்கவேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 13 பிளஸ் குறித்து மட்டுமல்ல. பல்வேறு விடயங்களை எடுத்தியம்பி இருக்கின்றார்.

13 ஆவது திருத்தம் வடக்கில் மட்டுமே இதுவரையிலும் செயற்படுத் ப்படவில்லை. எதிர்காலத்தில் அங்கும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நடைமுறை சாத்தியங்களை பார்க்கவேண்டும். காணி அதிகாரங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கொன்றும் இருக்கின்றது. அதுதொடர்பில் மாகாண காணி ஆணையாளர் தீர்மானிக்கவேண்டும் என்பதுடன் இறுதி தீர்மானத்தை நாட்டின் தலைவரே எடுப்பார்.

காவற்துறை அதிகாரம் தொடர்பில் நடை முறை சாத்தியங்களை பார்க்கவேண்டும் என்பதுடன் இது சுயாதீன நாடாகும். கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கையின் பரிந்துரைகள் நடை முறைப்படுத்தப்படுகின்றன. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது பொது அறிக்கையாகும்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகள் உரிய பிரிவுகளுக்கு அனுப்பிவைக் கப்படுகின்றன. ஜெனிவாவில் நடை பெறவிருக்கின்ற மனித உரிமை பேரவையின் மாநாட்டில் அவ்வறிக்கையை சமர்ப்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நியமிக் கப்பட்ட திஸ்ஸ விதாரண குழுவின் அறிக்கையின் யதார்த்தம் தொடர்பில் ஆராய வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வை மணமகனை தேடுவதை போல தேட முடியாது. அது இலகுவான விடயம் அல்ல.
தீர்வுகள் குறித்து கருத்து கூறுகின்ற உரிமை ஒவ்வொருக்கும் இருக்கின்றது. எனினும் தெரிவுக்குழுவில் முன் வைக்கப்படுகின்ற கருத்துக்களின் அடிப்ப டையில் அரசாங்கம் ஒருமித்த கருத்துக்கு முன்வரவேண்டும்.

அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அரசாங்கத்திற்கு பலவருட தொடர்புகள் இருக்கின்றன. மனித உரிமை பேரவை மாநாட்டில் எடுக்கவேண்டிய நிலைப்பாடு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.

இந்தியாவுடனான எங்களது தொடர்பும் அவ்வாறே இருக்கின்றது. அமைசச்ர்கள், அதிகாரிகள் இந்தியாவிற்கு விஜயங்களை மேற்கொள்வர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அவ்வாறே இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரது விஜயம் விசேடமானதொன்றல்ல.

பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்தும். தமிழ்நாட்டு பிரச்சினை இந்தியாவின் பிரச்சினையில்லை. பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியதில்லை எனவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.

Read more...

வெளிநாடுகளில் பணிபுரியும் வைத்தியர்களை அழைக்கத்திட்டம்.

வெளிநாடுகளில் பணிபுரியும் வைத்தியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக இலங்கை வைத்தியர் சங்கம் தெரிவிக்கின்றது. வேளிநாடுகளில் பணிபுரியும் வைத்தியர்களின் ஊடாக நவீன தொழில் நுட்பம் மற்றும் புதிய அறிவூட்டல் போன்ற முக்கிய சேவையை இலங்கையிலுள்ள வைத்தியர்கள் பெற்றுக் கொள்வதற்கும் பயிற்சி வழங்குவதற்குமே இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரழைக்கப்படும் வைத்தியர்கள் ஒரு குறிப்பிட்ட கால சேவையின் பின்னர் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் மீது செருப்பு வீச்சு

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எல்லை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சுமார் 7000 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பிடித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள காஸா முனை பகுதிக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று சென்றார்.

அப்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களின் உறவினர்கள் ஏராளமானோர் காஸா முனையில் திரண்டிருந்தனர். பா பான் கி மூன் சென்ற வாகனங்களை வழிமறித்து கோஷம் எழுப்பினர். திடீரென சிலர் அவரது கார் மீது செருப்பு வீசி ஆவேசமாக கோஷம் போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக ஐ.நா. செயல்பட்டது போதும், பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.

பான் கி மூன் வாகனம் தொடர்ந்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஹமாஸ் பாதுகாப்பு படையினர், போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின் தனது பயணத்தை தொடர்ந்தார் பான் கி மூன்.



Read more...

மணிக்கூட்டுக்காக இரட்டைக் கொலை செய்தவர் லண்டன் சிறையில் தற்கொலையாம்.

லண்டன் பிர்மிங்காமில் வசித்த இந்தியரும், அவரது பிரிட்டிஷ் மனைவியும் கடந்த மாதம் 11ம் திகதி மர்மமாக கொலைசெய்யப்பட்டிருந்த செய்தி யாவரும் அறிந்தது. தற்போது கொலை தொடர்பான மர்மம் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்தவரால் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் மகன் லண்டனில் ஓர் பொலிஸ் அதிகாரியாவர். அவர் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் பேரில் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த ரிம்விடேஸ் லிக்கோரன்ஸ், 37 என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தனது இறுதிக்குறிப்பில், மணிக்கூடு மற்றும் இரு தொலைபேசிகள் என்பவற்றுக்காகவே இக்கொலையைப் புரிந்துள்ளதாக எழுதி வைத்துள்ளாராம்.

எது எவ்வாறாயினும் இவ்வாறனதோர் சம்பவம் இலங்கையில் இடம்பெற்றிருந்தால், ஐந்துவாரங்களுக்கு இதுவே தலைப்புச் செய்தியாக இருந்திருக்கும், ஆனால் குருக்கள் செய்தால் அதுதவறில்லை என்ற பழமொழிக்கு இணங்க இவ்விடயம் மறைக்கப்பட்டுள்ளது என சில குசுகுசுப்புக்களை மாத்திரம் கேட்கக்கூடியதாகவுள்ளது.

Read more...

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் நாளை

நாளை இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினம் பிரமாண்டமாக கொண்டாடப் படவுள்ளது. 'ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப் பொருளில் இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தையிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு, அநுராதபுரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி.எம். ஜயரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. ஜோன் செனவிரத்ன, வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரட்ன திவுல்கனே வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க உட்பட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தவிர 200 வெளிநாட்டு தூதுவர்கள்,பிரதிநிதிகள், 300 மதத் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இரண்டாயிரம் பேர் உட்பட பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, அநுராதபுரம், பொலன்னறுவ, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 45 கலாசார குழுக்களைச் சேர்ந்த 2552 நடன மற்றும் நாட்டியக் கலைஞர்களும் பாடசாலை மாணவ, மாணவிகளும் பிரதான சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி

இதேவேளை, தந்திரிமலை, ஒயாமடுவில் நடைபெறவுள்ள (தயட்ட கிருள) தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிற்பகல் 4.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

4ஆம் திகதி ஆரம்பமாகும் இக்கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதி வரை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கண்காட்சியை முன்னிட்டு ஐயாயிரம் பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more...

களவாக நுழைந்த இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் மாட்டினர்.

இலங்கையினுள் செய்தி சேகரிப்பதற்காக களவாக நுழைந்த இரு இந்திய ஊடகவியலாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரிக்க நாட்டினுள் நுழையும்போது, தமது வருகை தொடர்பாக தெரியப்படுத்தி அதற்கான அனுமதியை ஊடக அமைச்சில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது வழிமுறை.

இவ்வழிமுறையை பின்பற்றாது, உல்லாசப்பிரயாணிகள் என்ற போர்வையில் நுழைந்த இரு இந்திய ஊடகவியலாளர்கள் இனம்காணப்பட்டதுடன், பின்னர் அவர்கள் தமது தேவையை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு, குடியகல்வு துறை அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இவ்வாறு இனம்காணப்பட்டவர்கள் புதிய தலைமுறை எனும் இந்திய தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

அகிம்சை என்னும் அற்புத ஆயுதம்!! (பாகம் 1) சித்திறெஜினா

இம்சையின் எதிர் பதமான அகிம்சையின் வரலாறு இது... இன்று நேற்று ஆரம்பமானதல்ல அகிம்சை.. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் பிறந்தது அது .. கிறிஸ்தவ, பௌத்த, சமண மதங்களின் கொள்கைகளில் இருந்து மலர்ந்தது அது... இந்த மதங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மகாத்மா காந்தி அவைகள் பின்பற்றி வந்த இந்த‌ அகிம்சை கொள்கைகளை சமூக வாழ்வில் மட்டுமல்லாது அரசியல் வாழ்விலும் பின்பற்றினால் நிட்சயம் வெற்றியடைய முடியும் என்பதை உணர்ந்து கொண்டு தான் தலைமை தாங்கி நடத்திய இந்திய விடுதலைப் போராட்டத்தில் இதை முதல் முறையாக‌ உபயோகித்து அதில் மாபெரும் வெற்றியுமடைந்து அகிம்சையின் வல்லமையை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்..

அவரைத் தொடர்ந்து அதை பலரும் பின்பற்றினார்கள்.. சிலர் வெற்றி கண்டார்கள்.. சிலர் தோல்வியடைந்தார்கள். மார்ட்டின் லூதர்கிங்.. நெல்சன் மண்டேலா போன்ற உலகப் பிரசித்தி பெற்ற‌ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் இந்த அகிம்சை என்னும் ஆயுதத்தை உபயோகித்து அமைதி வழியில் தங்கள் போராட்டத்தை நிகழ்த்தி அதில் மாபெரும் வெற்றி கண்டார்கள்.. அதே சமயத்தில் நமது இலங்கைத் தீவில் அன்றைய‌ தமிழரசுக் கட்சித் தலைவர்களும் அவர்களைத் தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் புலிகளும் தங்கள் சுயநலத்திற்காக‌ இந்த ஆயுதத்தை துர்ப்பிரயோகம் செய்து அதன் விளைவாக‌ தோல்வியை தழுவிக் கொண்டார்கள்.. ஏன் எதற்காக அந்த அகிம்சை வழிப் போராட்டம் அன்று வெற்றி பெறாமல் இப்படி தோல்வியை தழுவிக் கொள்ள நேரிட்டது என்ற காரணத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் அகிம்சை என்ற ஆயுதத்தின் ஆதிமூல வரலாற்றை ஆதியோடந்தமாக‌ அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது..

(இன்று தமிழர்களின் போராட்டத்தை தங்கள் கையிலெடுத்திருக்கும் தமிழர் தேசிய விடுதலை கூட்டணியினர் அந்த அகிம்சையின் அறவழிப் போராட்டத்தை சரியான வழியில் நடத்தி அதில் வெற்றி கண்டால், அத்துடன் தங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்து தங்கள் சகாப்தம் முடிந்து விடுமோ, என்ற அச்சத்தில் அதை ஏறெடுத்தும் பாராமல் சதா இலங்கை அரசுடன் மோதுவதையே தங்கள் கடைமையாக கொண்டிருப்பது வேறு விசயம்)

இங்கே கடந்த கால அரசியல் சரித்திரப் பின்னணிகளுடன் தொடர இருக்கும் அகிம்சை என்ற இந்த‌ அற்புத ஆயுத வரலாறு அது உருவான மதங்களின் ரீதியாக ஆராயப்படாமல்.. அது சமூக அரசியல் கண்ணோட்டத்தில் அறிவியல் ரீதியாக ஆராயப்படுகிறது.. ஆகவே எழுதப்படும் இந்தக் கட்டுரைத் தொடர் எந்த மதத்தவரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை என்பதையும் இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடர் மட்டுமே என்பதையும் இதைப் படிக்கின்ற வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.....

ஆச்சரியமான அகிம்சை என்னும் ஆயுதத்தின் வரலாற்றில் முதலாம் அத்தியாயம் இது..

இதோ இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளைஞனால் பாலஸ்தீனத்தில் பவ்வியமாக உருவாக்கப்படுகிறது அணு ஆயுத்தைவிட வலிமை வாய்ந்த அந்த அகிம்சை என்னும் ஆயுதம்..

எருசலேம் நகரத்தின் கிழக்கு வானத்தில் கம்பீரமாக உதயமாகிய உதய சூரியனின் காலைக் கதிரில் அந்த நகரத்தின் கிழக்குப் பகுதியில் படர்ந்திருந்த‌ ஒலிவ‌ மலைத் தொடரை மூடியிருந்த மாலைப் பனிக் கூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது...காலை வானத்தை அலங்கரித்ததுப் பறந்தன நீலவானப் பறவைகள்.. அவைகள் எழுப்பிய ஆரவாரத்துடன் சேர்ந்து ஒலித்தது நகரத்தின் மத்தியில் இருந்த‌ அந்த தேவாலத்தின் மணியோசை... வாரத்தின் இறுதி நாளான அந்த‌ ஞாயிறு காலையில் வழக்கத்திற்கு மாறாக பெரும் திரளான மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது தேவாலயம் ...

ஒருவன் உன் பல்லை உடைத்தால்.. அதற்குப் பதிலாக அவனது பல்லை உடைத்து விடு.. ஒருவன் உன் கண்ணை குத்திக் கெடுத்தால் அதற்குப் பதிலாக அவனது கண்ணைக் குத்திக் குருடாக்கி விடு.. கையும் மெய்யுமாக ஒரு திருடன் பிடிபடுகிறானா.. திருடிய‌ அவன் கைகளை வெட்டித் துண்டாடி விடு.. ஒருத்தி விபச்சாரம் செய்கிறாளா.. அவளை கூடி நின்று கல்லெறிந்து கொன்று விடு.. இப்படிப்பட்ட பல மனித நேயமற்ற‌ செய்கைகள் நிறைந்த‌ கட்டளைகளைத்தான் அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் கடவுளின் கட்டளையாக காலம் காலமாக தங்கள் தேவாலய பிரசங்கங்க‌ளில் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிருந்த‌ விடயங்கள்..

ஆனால் கடந்த சில வாரங்களாக‌ அந்த தேவாலய பிரசங்க மேடையில் புதிதாக ஒரு பிரசங்கி முளைத்திருந்தார்.. இவ்வளவு காலமும் இருந்து வந்த‌ தேவாலய ஒழுங்கு முறைப்படி அங்கு கூடியிருப்பவர்களில் யாரோ ஒருவர் மேடைக்குச் சென்று பிரசங்கம் செய்யலாம் என்ற வழக்கத்தை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு அந்த மேடையில் பிரசங்கம் செய்ய முன் வந்திருந்தான் அந்த 33 வயது நிரம்பிய இளைஞன்..

உண்மையில் அந்த தேவாலத்திற்கு வருபவர்கள் அந்த நகரத்தில் இறைவனின் கட்டளைகளை மதித்து அதன்படி வாழ்பவர்கள் என்று அந்த மதத் தலைவர்களால் கருதப்படுவதால்தான் எவரும் பிரசங்கம் செய்யலாம் என்ற ஏற்பாடு அந்த தேவாலயத்தில் செய்யப்பட்டிருந்தது.. ஆம் அந்த தேவாலத்திற்குள் தீண்டத் தகாதவர்கள் என்று கருதப்படுவர்கள் எவருமே இதுவரை காலமும் அனுமதிக்கப்பட்டதில்லை.. அப்படிப்பட்டவர்களுக்கு தேவாலய வாசல் படிவரைதான் அனுமதி..

இப்படியாக தங்கள் இனத்திலேயே.. தங்கள் நகரத்திலேயே பிறிதொருவன் தாழ்த்தப்பட்டு கீழ் நோக்கிப் பார்க்கப்படுவதை அந்த தேவாலத்திற்கு வருகின்ற பலரும் வெறுக்கத்தான் செய்தார்கள்.. ஆனால் பாவம் அதைத் தட்டிக் கேட்பதற்குதான் அவர்களுக்கு தைரியம் இருக்கவில்லை.. காரணம் அந்த மதத்தின் தலமைப் பீடம் அப்படிப்பட்டது.. மகா வல்லமை பொருந்திய அவர்கள் மதபீடம் அப்படி தட்டிக் கேட்பவர்களை கடுமையாக‌ தண்டிப்பதற்கு சகல அதிகாரங்களையும் கொண்டிருந்தது..

அப்படி அந்த சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் இந்த தீண்டத் தகாதவர்கள் யார்? இதை அந்த மதபீடமே தீர்மானித்திருந்தது.. குஷ்டரோகிகள்.. சப்பாணிகள்.. குருடர் செவிடர் என்று வலது குறைந்தவர்கள் மட்டுமல்லாமல் அந்த நகரத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்களும் வரி வசூலிப்பவர்களும் கூட‌ தீண்டத்தகாத‌ பாவிகளாக கணிக்கப்பட்டிருந்தார்கள்.. அவர்கள் செய்த பாவத்தின் நிமித்தமே அவர்கள் அப்படிப் பிறந்தார்கள்.. படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது அந்த மதத்தின் அசைக்க முடியாத‌ நம்பிக்கை.. இதனாலேயே அவர்கள் அனைவரும் அந்த சமூகத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள்.. இரவு நேரங்களில் ஊருக்குப் புறம்பே வசிக்க வற்புறுத்தப்பட்டார்கள்... இதனால் இந்த பாவிகளாக கருதப்பட்ட அத்தனை பேருமே அந்த‌ வல்லமையுள்ள மத‌த் தலைவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள்..

இந்த அக்கிரமங்களைக் கண்டுதான் வெகுண்டெழுந்திருந்தார் அந்த இளைஞர்.. இது என்ன கொடுமை என்று கொதித்துப் போனார்.. புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதர்களுக்காக களத்தில் இறங்கினார்.. எந்த மனிதனும் இந்த உலக்கத்தில் தீண்டத்தகாத‌ பாவியல்ல‌.. அவர்கள் அனைவரும் மனிதர்களே.. அவர்களும் நம்மைப் போன்றவர்களே என்று அவர்கள் சார்பின் அந்த கொடுமையான‌ மதக் கொள்கைகளுக்கு எதிராக‌ போர்க்கொடி தூக்கினார்.. அந்த மதக் கொள்கைகளை பரப்பி அதன் மூலம் தங்கள் சொந்த‌ மக்களையே அடிமைகளாக்கிய‌ அந்த மதத் தலைவர்களை எதிர்த்துப் போராட அவர் முடிவு செய்தபோது அவர் ஏந்திய ஆயுதமே அகிம்சை... முதன் முதலாக‌ அதை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பின்னாளில் கடவுளின் குமாரனாக‌ கருதப்பட்ட இயேசு கிறீஸ்து என்னும் அந்த‌ இளைஞன்...

அந்த இளைஞரும் அந்த சமுதாயமும் சார்ந்திருந்த மதமாகிய‌ யூத‌மதம்... நீங்கள் அனைவரும் இறைவனால் விதிக்கப்பட்ட அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியது.. ஆனால் அவரோ எவரும் அந்தக் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.. அவற்றை உங்களுக்கு பதிலாக நானே நிறைவேற்றுகிறேன்.. வேண்டுமானால் உங்களுக்குப் பதிலாக அவர்கள் என்னைத் தண்டிக்கட்டும் என்று கூறினார்.. அந்த‌ யூதமதம் தாழ்த்தப்பட்டவர்களை பாவிகள் என்று முத்திரை குத்தி நீங்கள் அனைவரும் இறைவனின் அடிமைகள் என்ற சிந்தனையை அவர்களுக்கு ஊட்டி அவர்களை தங்களுக்கு அடிமைகளாக்கியிருந்தது.. ஆனால் அவரோ இல்லவேயில்லை நீங்கள் அனைவருமே இறைவனின் பிள்ளைகள் ஆகவே உங்களை எவருமே அடிமைகள் என்று குறிப்பிட முடியாது என்று அவர்களுக்கு தைரியமளித்து உற்சாகமூட்டி அந்த அடிமைத்தனமான சிந்தனைகளிலிருந்து அவர்களுக்கு விடுதலையளித்தார்.. இப்படியாக யூதமதக் கொள்கைகளால் குருடர்களாக்கப்பட்டிருந்த அவர்கள் கண்களை தான் உருவாக்கிய கொள்கைகளால் விழிப்படையச் செய்தார் அவர்.. மூட நம்பிக்கைகளில் முடங்கி முடமாகிக் கிடந்தவர்களை நிமிர்ந்தெழுந்து ஒரு சீரான பாதையில் நடக்கச் செய்தார்.....

இப்படியாக உருவாக்கப்பட்ட அந்த இளைஞனின் புதிய புரட்சிகரமான‌ சிந்தனைகளால் பெருந்திரளான இஸ்ரவேலர் கவரப்பட்டு அவரை பின்பற்றத் தொடங்கினார்கள்.... இது அவர்கள் இதுவரை காலமும் பின்பற்றி வந்த யூதமதக் கொள்களுக்கு எதிரானதாகவும் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவும் இருந்தது...

அந்த இளைஞன் தனது சமூகத்தை சேர்ந்த உயர்ந்த வர்க்கத்தினரால் தாழ்த்தப்பட்டவர்களின் சம‌ உரிமைக்காக குரல் கொடுத்து தனக்கென்று ஒரு மக்கள் கூட்டத்தை சேர்த்ததைபோல மகாத்மா காந்தியடிகளும் அந்த இளைஞனின் வழியைப் பின்பற்றியே தனது அகிம்சை வழிப் போராட்டங்களை ஆரம்பித்தார்.. மகாத்மாவின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தவர் இயேசு கிறிஸ்து என்ற அந்த இளைஞரே..

மகாத்மா காந்தி தான் எழுதிய "சத்திய சோதனை" என்னும் சுயசரிதை நூலில் தான் இங்கிலாந்தில் தன் பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் தனக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பைப் பற்றியும்.. அந்த உறவினால் அவர் அடிக்கடி அவர்கள் பிரார்த்தனை கூட்டங்களில் பங்கு பற்றியது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.. மேலும் அவர்களிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட பைபிளை முற்று முழுதாக‌ படித்தறிந்ததாகவும் அதில் இயேசுவின் மனித நேயம் நிறைந்த அந்த‌ மலைப் பிரசங்கம் தன்னை மிகவும் கவர்ந்து சிந்திக்க வைத்த பகுதி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.. இவைகளை வைத்துப் பார்க்கும்போது அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அந்த இயேசு என்ற இளைஞனின் சாத்வீக சிந்தனைகளைப் பின்பற்றித்தான் அகிம்சை என்னும் ஆயுதத்தை உருவாக்கியிருக்கலாம் என்று எண்ணக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன..

இயேசு என்ற அந்த இளைஞர் யூத மதத்திற்கு எதிராக வன்முறையற்ற‌ தனது பிரச்சாரங்களை ஆரம்பித்த காலப் பகுதியில் அவர் பாலஸ்தீனத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமல்லாது பல பின் தங்கிய கிராமங்களுக்கும் கால் நடையாகவே பிரயாணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கும் தனது சிந்தனைகளை ஊட்டத் தவறவில்லை.. மேலும் அவர்களையும் பாலஸ்தீனத்தில் உள்ள மற்றவர்களைப் போன்று சமநிலைப்படுத்தும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.. அதே போன்று மகாத்மா காந்தியும் எடுத்தவுடன் தடாலடியாக அகிம்சை வழிப் போராட்டங்களில் இறங்கி விடாமல்.. முதலில் அவர் இந்தியா முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்திய மக்கள் அனைவரையும் ஏற்றத் தாழ்வுகளின்றி சமநிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.. குறிப்பாக அவருடைய இந்த பயணத்தில் அவர் இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில் வாழும் மக்களைச் சந்தித்து அவர்களுக்கும் தேசிய உணர்வை ஊட்டுவதில் சிரத்தை காட்டினார்.. இப்படி அனைவரையும் கூட்டுச் சேர்த்த‌ பின்னர்தான் அவரது அந்த சாத்வீக அகிம்சைப் போர் ஆரம்பமாகி வெற்றி நடை போட்ட‌து...

இயேசு என்ற அந்த இளைஞன் தன்னைத் தானே தாழ்த்தி அந்த தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டது போல... இவரும் இந்தியாவில் வாழ்ந்த ஏழை மக்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டு எளிய உடையை அணிந்து ஒரு சாதாரண இந்திய ஏழை குடிமகனைப் போலவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மறைந்தார்.. இயேசு உயர்குடி இஸ்ரவேலரால் தாழ்த்தப்பட்டவர்களை "கடவுளின் குழந்தைகள்" என்று அழைத்ததைப் போல காந்தியும் இந்தியாவின் உயர் குடியினரால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு "ஹரிஜன்" என்று பெயரிட்டார்.. குஜராத்தி மொழியில் ஹரிஜன் என்பது கடவுளின் குழந்தைகள் என்று அர்த்தமாகிறது என்பதும் அவரது அகிம்சை வழிப் போராட்டங்கள் அனைத்திலும் கணிசமான அளவு இந்த கடவுளின் குழந்தைகள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..

அன்றைய கால கட்டத்தில் தங்கள் புகழுக்காக அகிம்சையின் போர்வையில் அறப்போர் நிகழ்த்திய தமிழரசுக் கட்சியினர் காந்தி செய்ததைப் போன்று எந்த விதமான முன் ஆயத்தங்களையும் செய்து அந்த போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருக்கவில்லை.. யாழ்ப்பாண மேட்டுக் குடியினரின் தலைமையில் நடத்தப்பட்ட‌ அந்த போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி சற்றேனும் சிந்திக்கப்படவில்லை.. அவர்களும் சராசரி தமிழர்களுக்கு நிகராக மேம்படுத்தப்படவில்லை.. அது மட்டுமல்ல இலங்கையில் தங்களையும் தமிழர்களாக எண்ணி தமிழர்கள் மத்தியில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லீம் இனத்தவர்கள் அந்தப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.. ஆகவேதான் அந்த அகிம்சை வழிப் போராட்டம் ஒரு முதுகெலும்பற்ற போராட்டமாக உருப்பெற்று உருவழிந்து போனது..

இதேபோன்றுதான் புலிகள் காந்தியின் முகமூடியணிந்து அதன் மூலம் தங்கள் சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திலீபனையும் பூபதி அம்மாவையும் அன்று உண்ணாவிரத மேடையில் அமர்த்தி அவர்களை வேண்டுமென்றே அந்த மேடையில் பலி கொடுத்த வரலாறு என் அடுத்த பாகத்தில்.. (தொடரும்)

அன்புடன் சித்திறெஜினா.

Read more...

கண்டியில் விபச்சாரம் செய்த 18 பெண்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டள்ளனர்

கண்டி நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பெண்களை தாம் கைது செய்துள்ளதாக கண்டி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ. எஸ். இந்திராணி தெரிவித்துள்ளார்.

கண்டியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தத நிலையிலேயே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் மாத்தளை கம்பளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் மத்திய சந்தை பாதையோராங்கள் படகுச் சேவை நடைபெறும் குளத்திற்கு அருகிலும் கண்டி குட்செற் மற்றும் பஸ் நிலையங்களுக்கு அருகில் வைத்துகைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 30 வயது முதல் 50 வயது வரையானவர்கள் என்றும் இவர்களை கைது செய்வதற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸாரே நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்ட பொறுப்பதிகாரி இவர்களிடம் பாடசாலை மாணவர்களும் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

Read more...

திடீர் புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் பாதிப்பு-பொது மக்கள் பெரும் அவஸ்தை

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுச்சென்ற கடுகதிபுகையிரம் திடீர் புறக்கணிப்பு காரணமாக கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு அண்மை நிறுத்தப்பட்டது.

கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு முன்பதாக ஒரு கிலோமீற்றர் தூரத்;தில் இப்புகையிரம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதில் பிரயாணம் செய்த பிரயாணிகள் தொடர்ந்த பிரயாணம் செய்ய முடியாத வண்ணம் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளானதாக தெரியவருகின்றது

குறிப்பாக வவுனியாவிலிருந்து நேற்றைய தினம் புறப்பட்டுசென்ற அனைத்து புகையிர வண்டிகளும் அநுராதபுரத்திலேயே தரித்து நின்றன. அதற்கு அப்பால் அவை சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

ஈராக்கிற்கான இலங்கை தூதுவராலயத்தை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

ஈராக்கிற்கான இலங்கை தூதுவராலயத்தை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் சரத் திசாநாயக தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஈராக்கில் நிலவிய அரசியல் பிரச்சினை மற்றும் யுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஈராக்கிற்கான இலங்கைத் தூதுவராலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு அரசியல் பிரச்சினை தற்போது இல்லை எனவும் நல்ல சூழ் நிலை காணப்படுகின்ற காரணத்தினாலும் மீண்டும் அந்நாட்டில் தூதுராலய அலுவலகத்தை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஈராக்கில் தூதுவர் அலுவலகத்தை விரைவாக திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அமைச்சர் ஒருவரை அந்நாட்டுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

சீனாவுடன் போருக்கு தயாராகிறது இந்தியா என்கிறது அமெரிக்கா.

சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் அந்நாட்டு மேலவை புலனாய்வுக் குழு கூட்டத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 ஆசிய நாடுகளும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது இருதரப்பு உறவில் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, அருணாச்சல மாநிலத்தில் எல்லை பிரச்னை, காஷ்மீர் மக்கள் சீனா செல்வதற்கு தனி விசா, இந்திய ராணுவ அதிகாரி சீனா செல்வதற்கு விசா மறுப்பு என பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனால் எல்லைப் பகுதியில் அவ்வப்போது போர் பதற்றம் ஏற்படுகிறது. போர் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு வசதியாக, இந்தியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இவ்விரு நாடுகளிடையே உடனடியாக போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதுபோல், கிழக்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

Read more...

டெங்கு அபாயம் : கடைசி இடத்தில் யாழ் மாவட்டத்தில்.

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரச் செயற்திட்டம்  யாழ்ப்பாணத்தில் முழுவதும் மேற்கொளளப்;பட்ட  போது ஆகக் குறைந்த டெங்கு நோயாளர் உள்ள பகுதியாக இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளதாக இவ்வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் பீ. ஜே. ஆர். பட்டுபந்துடாவ தெரிவித்தார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் கடந்த மாதம் 16 ம் திகதி முதல் 22 ம் திகதி வரை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டன. அந்த வேலைத் திட்டம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மிகக் குறைந்த நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதியாக  பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 2011 ஆம் ஆண்டு கூடுதலான நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதியாக கொழும்பு நகர எல்லை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வார தினத்தில்  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 49429 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 13010  நுளம்பு விளையும் இடங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வீடுகள் மற்றும் கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது 948 டெங்கு பூச்சிக்குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நுளம்பு விளையும் இடங்களை வைத்திருந்த 237 பேருக்கு எதிராக மனுக் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சித் திட்டம் கம்பஹா, கண்டி  . காலி, புத்தளம், மாத்தறை , கல்முனை, குருநாகல், புத்தளம், கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. அதில்  20,000 , 40,000 தொகை அளவிலான வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

Thursday, February 2, 2012

சி.ஐ.ஏ.யிடம் பின்லேடனின் 52 போட்டோக்கள்! இமேஜ் விபரங்கள் இதோ!!

சி.ஐ.ஏ.-யின் எதிர்ப்பையும் மீறி, பின்லேடனின் ‘கொல்லப்பட்ட’ போட்டோக்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்க அரசுக்கு ஏற்படப் போவதாக கூறப்படுகின்றது. சி.ஐ.ஏ. வசமுள்ள போட்டோக்களில் எத்தனை போட்டோக்களை வெளியிட்டால் பாதிப்பு ஏற்படாது என்ற டிஸ்கஷன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நீதிமன்றம் சென்றுள்ள இந்த போட்டோ விவகாரம் தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அனைத்து போட்டோக்களையும் கிளாசிஃபைட், சீக்கிரெட் என்ற போர்வைக்குள் கொண்டுவர சி.ஐ.ஏ. கடுமையாக முயற்சிக்கிறது.

இந்த வழக்கில் சி.ஐ.ஏ.-யின் வசம் மொத்தம் எத்தனை போட்டோக்கள் உள்ளன என்ற விபரத்தை தாக்கல் செய்யுமாறு, சி.ஐ.ஏ. கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த விபரங்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சி.ஐ.ஏ.-யின் தேசிய ஆபரேஷன் டைரக்டர் ஜான் பென்னட்டால் எழுதப்பட்ட குறிப்புகளின்படி, சி.ஐ.ஏ.-யிடம், பின்லேடன் கொல்லப்பட்டபின் எடுக்கப்பட்ட மொத்தம் 52 போட்டோக்கள் உள்ளன. இவற்றில் சில போட்டோக்கள் போஸ்ட்மோட்டம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட முழு உருவப் படங்கள் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட்மோர்ட்டம் போட்டோக்களில் ஒன்றில் பின்லேடனின் தலையில் துப்பாக்கி தோட்டாவால் ஏற்பட்ட காயம் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் பென்னட்டின் குறிப்பில் உள்ளது.

பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட உடனே நிச்சயமாக சில போட்டோக்கள் எடுக்கப்பட்டிருக்கும். அந்த போட்டோக்கள் தொடர்பான விபரங்கள் இந்தக் குறிப்பில் இல்லை. (லைவ் ஆபரேஷனில் எடுக்கப்பட்ட போட்டோக்களை சி.ஐ.ஏ. கணக்கு காட்டாது என்பது எமது ஊகம்)

பின்லேடனின் உடல் இஸ்லாமிய மதச் சடங்குகள் செய்யப்பட்ட பின்னரே கடலில் போடப்பட்டது என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. அந்த போட்டோக்களும், இந்த 52 போட்டோக்கள் என்ற எண்ணிக்கையில் அடங்குகின்றன. அமெரிக்க பிரைவஸி சட்டத்தின்படி, மதச் சடங்குகள் தொடர்பான போட்டோக்களை, அதில் சம்மந்தப்பட்ட மதத்தைச் சேர்ந்த அதிகாரபூர்வ நபர் ஒருவர் ஒரு ரிட் போடுவதன் மூலம், வெளியாகாமல் தடை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல, போஸ்ட்மாட்டம் இமேஜ் போட்டோக்கள் வெளியிடப்படுவதை யாரும் விரும்பப் போவதில்லை. அதற்காகதான் ‘போஸ்ட்மோட்டம் செய்யப்படும்போது எடுக்கப்பட்ட முழு இமேஜ் போட்டோக்கள்’ என்று சி.ஐ.ஏ. அழுத்தம் கொடுத்துள்ளது.

சி.ஐ.ஏ. தம்மிடம் உள்ளதாக கணக்கு காட்டியுள்ள 52 போட்டோக்களில் இவை எல்லாவற்றையும் தவிர்த்து விட்டால் எத்தனை போட்டோக்கள் மிஞ்சும் என்பதே தற்போது உள்ள கேள்வி.

அமெரிக்க நீதித்துறையின் Office of Information and Privacy முன்னாள் தலைவர் டான் மட்காஃப், “இந்த போட்டோக்களை வெளியிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நான் கவனமாக பார்த்தேன். போட்டோக்கள் வெளியிடப்படுவதை தடுக்க முடியாதபடி அந்த மனு திறமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏதாவது போட்டோக்களை சி.ஐ.ஏ. வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பதே எனது ஊகம்” என்று கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com