Friday, October 15, 2010

போலி மக்களாட்சியும் மோசடியும்: 2010ம் ஆண்டு தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர். Patrick Martin

2010 தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கையில், ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெரு வணிகத்திற்கு எதிரான மக்கள் விரோதப் போக்கிற்கு கடைசி நிமிட மோசடித்தனமான அழைப்புவிடும் வகையில் பெரும் தேர்தல் தோல்வியைத் தவிர்க்க முற்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஆதரவில் திரட்டப்பட்ட பிலடெல்பியாவில் ஞாயிறன்று நடைபெற்ற அணிவகுப்பில், ஒபாமா “மில்லியனர்கள், பில்லியனர்கள்”, “வோல் ஸ்ட்ரீட் வங்கிகள்”, “பெருநிறுவனங்கள்”, “எண்ணெய்த் தொழிற்துறை”, “காப்பீட்டுத் தொழில்துறை” மற்றும் “கடன் அட்டை நிறுவனங்கள்” ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினார்

“AIG மற்றும் Exxon Mobil உடைய முன்னாள் செல்வாக்குத் திரட்டுபவர் ஒருவர்”, குடியரசுக் கட்சி ஏற்றுள்ள “அமெரிக்காவிற்கு உறுதிமொழியை” எழுதுவதற்கு உதவியுள்ளார் என்று ஒபாமா குற்றம் சாட்டினார். இதன் பின் “இந்த உறுதிமொழியின் மையத்தானத்தில் $700 பில்லியன் வரிக் குறைப்புக்கள் உள்ளன என்றும் இவை உயர்மட்ட 2 சதவிகிதமானது அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் 2 சதவிகிதத்திற்குச் செல்லும்” என்றும் அறிவித்தார்.

போலித்தனமாக மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு வணிகத்தினரை தாக்குவது கடந்த வாரத்தில் அமெரிக்க சோவனிசத்தின் இழிந்த தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒபாமாவும் காங்கிரஸில் உள்ள ஜனநாயகவாதிகளும் அவர்களுடைய எதிராளிகள் “வெளிநாட்டினர் உரிமை கொண்ட பெருநிறுவனங்களில்” இருந்து நிதி நலம் பெறுகின்றனர் என்று குறைகூறியுள்ளனர். இது குடியரசுக் கட்சிக்கு ஒற்றை மிகப் பெரிய நிதி திரட்டும் அமைப்பான அமெரிக்க வணிகக் குழு மூலம் செலுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணம் என்ற குற்றச்சாட்டு ஜனநாயகவாதிகளை அதை கொடியில் சுற்றியுள்ளதுடன், குடியரசுக் கட்சியனருடன் தேசியவாதம் மற்றும் குடியேறுபவர்களுக்கு எதிரான உணர்வுகளுக்கு அழைப்புவிட போட்டியி்ட வைத்துள்ளது. ஆனால் இதில் உண்மை ஏதும் இல்லை. ஜனநாயகக் கட்சியைப் போல் குடியரசுக் கட்சியும் உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கருவிதான்.

ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் போலித்தன மக்களைத் திருப்தி செய்யும் வனப்புரைகளை நிதிய பெருநிறுவன உயரடுக்கிற்கு நலன்களை அளிக்கும் வலதுசாரிக் கொள்கைகளுடன் இணைக்கின்றனர். வேலையின்மை மற்றும் வீடிழத்தல், வறியநிலை என்னும் பெரும் பேரழிவை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு இவர்கள் கொடுக்கக் கூடியது ஏதும் இல்லை.

தன்னுடைய நிர்வாகம் பெருமந்தநிலைக்குப் பின்னர் மிகப் பெரிய பொருளாதாரச் சரிவு ஏற்படக் காரணமாக இருந்த நிதிய அமைப்புக்களை “இறுதியில் பொறுப்பிற்கு உட்படுத்த உள்ளது” என்று ஒபாமா கூறுகையில், ஒபாமா-புஷ் பிணைஎடுப்பு கூட்டாட்சி அரசாங்கத்தின் முழு நிதிய ஆதாரங்களயும் வோல் ஸ்ட்ரீட்டின் மீட்புக்குக் கொடுத்தது.

ஒரு பெரிய பொதுப்பணிகள் திட்டத்தின் மூலமோ, இப்பொழுது மூன்றாவது முழு ஆண்டில் இருக்கும் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த வறிய நிலை, வெகுஜன இடர்களைக் குறைப்பதற்கு வேலைகளைத் தோற்றுவிக்கும் முயற்சியாக எந்தத் தீவிரத் திட்டத்தையோ நிர்வாகம் நிராகரித்துள்ளது. சராசரி வேலையின்மைக் காலம் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துவிட்டது.

இந்த வாரம் ஒபாமா வெற்றுத்தனமாக வெகுஜனத்திருப்தியளிக்கும் கோஷங்களைக் கூறிக்கொண்டிருக்கையில், அவருடைய செய்தித்தொடர்பாளர்கள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் வீடுகள் ஏலத்திற்கு விடுவது நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான முறையீடுகளை நிராகரித்துப் பேசினர். வங்கிகள் மற்றும் அடைமானக் கடன் கொடுப்போர் முறையாக மோசடி செய்துள்ளனர் என்பதற்குப் பெருகிய சான்றுகள் இருந்தும் இந்நிலைதான்.

அடுத்து மாதத் தேர்தல்களின் அடிப்படை விளைவு, நவம்பர் 2 தேர்தல்கள் குடியரசுக் கட்சியினருக்கு காங்கிரஸ் மீது கட்டுப்பாடு கொடுத்தாலும் அல்லது குறைந்த பெரும்பான்மையுடன் ஜனநாயகக் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் உறுதியானதுதான். ஒபாமா நிர்வாகம் இன்னும் வலதிற்கு நகரும்-இது பொதுமக்கள் கருத்திற்கு ஏற்ப என்று கூறப்படும்.

2010 தேர்தல் பிரச்சாரத்தின் உத்தியோகப்பூர்வ விவரம், பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தின் மூலம் படிப்படியே வெளிவருவது வெளிப்படையாக வலதுசாரியாகவும் பெயரளவிற்கு தாராளவாதமாகவும் இருக்கும்-இது ஒபாமா இடதிற்கு மிகவும் அதிகமாகச் சென்றுள்ளார் என்று கூறும். செய்தி ஊடகத்தின் கருத்துப்படி அவருடைய பெரும் கூட்டாட்சிச் செலவுகள் என்று கூறப்படுபவை பொதுமக்களிடையே ஆழ்ந்த சீற்றத்தை ஏற்படுத்தி, அவை தேநீர் விருந்துப் பிரச்சாரங்களுக்கு பெருகிய ஆதரவு வந்துள்ளதில் பிரதிபலிக்கிறது.

இப்படிப் பெறப்பட்டுள்ள அறிவு புஷ் மற்றும் குடியரசுக் கட்சியை இரு ஆண்டுகளுக்கு முன் நிராகரித்தவர்கள் இப்பொழுது போருக்குப் பிந்தைய காலத்தில் முன்னோடியில்லாத சமூக நெருக்கடிக்கு நடுவே இன்னும் கூடுதலான பெருநிறுவனச் சார்புடைய கொள்கைகளை விரும்புகின்றனர்-செல்வந்தர்களுக்கு வரிக் குறைப்புக்கள், கட்டுப்பாடுகள் அகற்றப்படுதல், சமூகத் திட்டங்கள் அகற்றப்படல்-என 2008ல் அவர்கள் முடிவிற்கு கொண்டு வர வாக்களித்த அனைத்தையும் விரும்புகின்றனராம்.

இக்கருத்தாய்வில் அமெரிக்க அரசியலானது குடியரசு வலது மற்றும் ஜனநாயக “இடது”க்கும் இடையே பிரிவு வழியில் பிளவுற்றுள்ளது. இருக்கும் கட்சிகள் பற்றி அதிருப்தி அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரு எதிர்முனைகளுக்கு நடுவே இருப்பதாகக் கூறப்படும். இத்தகைய மரபார்ந்த அறிவைச் சுருக்கமாகக் கூறுகையில் Los Angeles Times இன் டோய்ல் மக்மனஸ் தேர்தல்கள் பற்றி எழுதினார்: “மையத்தைப் பின்பற்றும் கட்சி வெற்றி அடையும்.”

ஒபாமா நிர்வாகத்தின் உண்மை வலதுசாரிச் சான்றுகளைச் சிதைக்கும் விதத்தில் அமெரிக்க அரசியல் வாழ்வின் சித்திரம் முக்கியமான உண்மையைப் புறக்கணிக்கிறது: மக்களில் பெரும்பாலானவர்களாக இருக்கும் தொழிலாளர் வர்க்க மக்களின் உண்மை உணர்வுகளை ஆகும்.

வரலாற்றில் ஒருபொழுதும் முதலாளித்துவ முறையின் ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் போது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வெகுஜனத்திடம் சார்பு மாற்றம் ஏற்பட்டதில்லை. மாறாக, கருத்துக் கணிப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வோல்ஸ்ட்ரீட் ஊகவணிகர்கள் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் மீது மக்கள் வெறுப்பைத்தான் காட்டியுள்ளன. இவர்கள் மிகச் சரியான விதத்தில் வேலைகள் இழப்பு மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்கள் ஆவர். அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள் இடதிற்கு நகர்கின்றனரே ஒழிய வலதிற்கு அல்ல.

அமெரிக்காவின் வினோதமான அரசியல் வழிவகைக்குள், உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இரு கட்சிகள் என்ற வரம்பிற்குள், இரண்டும் பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வலதுசாரிக் கொள்கைகளை மட்டுமே கொடுக்கும் நிலையில், மக்களுடைய இந்த மாற்றத்திற்கு அரசியல் வெளிப்பாடு ஏதும் கிடைக்கவில்லை. தற்பொழுதைய தேர்தல் பிரச்சாரத்திற்கு நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்கள் கூட, இருக்கும் அரசியல், சமுதாய அமைப்பு முறைகள் மாற்றத்தக்கன என்ற கருத்தில் உள்ளவைகூட, ஒபாமா நிர்வாகத்தின் மீது பெரும், அதிகரிக்கும் அதிருப்தி குடியரசு வலதிற்கு ஆதரவைத் தோற்றுவித்துள்ளது என்ற கூற்றை நிராகரித்துள்ளன.

Zogby International கருத்துக் கணிப்பு, சுதந்திர வாக்காளர்களைக் கருத்திற்கொண்டு நடத்தப்பட்டது, 13 சதவிகிதத்தினர் தான் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாகவும் 5 சதவிகிதத்தினர் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் எண்ணிக்கைகள் இரு பெரிய முதலாளித்துவக் கட்சிகளிடத்தும் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அதிருப்தியைக் காட்டுகின்றன.

அக்டோபர் 7-10 திகதியில் நடத்தப்பட்ட ப்ளூம்பெர்க் கருத்துக் கணிப்பானது ஒபாமாவிற்கு முன்பு ஆதரவு கொடுத்திருந்தவர்களில் 40 சதவிகிதம், 2008 ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்து இரண்டே ஆண்டுகளில் இப்பொழுது அந்த அளவு ஆதரவு கொடுக்கவில்லை, அல்லது அவரை ஆதரிக்கவே இல்லை என்று கூறியதாகக் கண்டறிந்துள்ளது. ஒபாமாவின் சமீபத்திய வெகுஜனத் திருப்தி தரும் வனப்புரை குடியரசுக் கட்சியினராலும், செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளாலும் “வணிகர்-எதிர்ப்பு” என்று தாக்கப்பட்டாலும், ப்ளூம்பெர்க் பேட்டி கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இக்குறைகூறலை நிராகரித்துள்ளனர். அவர்களில் பலரும் ஒபாமா நிர்வாகம் மிகக் கடுமை என்பதை விட மிக மிருதுவாகத்தான் வோல் ஸ்ட்ரீட்டிடம் நடந்து கொள்வதாகக் கூறியுள்ளனர்.

ப்ளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டாட்சித் திட்டத்தில் முக்கிய குறைப்பு ஒவ்வொன்றையும் அநேகமாக நிராகரித்தனர்: அதாவது சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, சாலைகள், பொதுப் போக்குவரத்து, நோய்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குதல், கல்வி ஆகியவற்றிற்கான செலவுக் குறைப்புக்களை ஆகும். சமூகப் பாதுகாப்பு தனியார் மயமாக்கப்படல் அல்லது அதற்கான வயதுத் தகுதி அதிகமாக்கப்படுவது ஆகியவற்றை அவர்கள் முற்றிலும் எதிர்த்துள்ளனர். பெரும்பாலானவர்கள் புஷ்ஷின் புதிய செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்புக்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதை எதிர்த்துள்ளனர்.

அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் நிதியப் பிரபுத்துவம் மற்றும் அதன் இரு கட்சிகளின் கொள்கைகளுடன் மோதல் போக்கில் நகர்ந்து கொண்டு வருகின்றனர். நவம்பர் தேர்தலைத் தொடர்ந்து சிக்கனக் கொள்கைகள் நடவடிக்கைகள் வரும். இவற்றில் சமூகப் பாதுகாப்பு, மருத்துவப்பாதுகாப்பு, பொதுக் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பெறல் ஆகியவை அடங்கும். மேலும் ஆப்கானியப் போர் தீவிரமாவது அடையாளம் காட்டப்படும். ஈராக்கிலும் ஏனைய இடங்களிலும் அமெரிக்க இராணுவத் தலையீடுகள் தொடர்தலும் அடையாளம் காணப்படும். உள்நாட்டிலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் முடுக்கிவிடப்படும்.

வேலைகள் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு என பெருநிறுவனத் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தின் எழுச்சி ஒன்றுதான் ஒரே வழியாகும். சோசலிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் திட்டம் ஒன்றை சோசலிசச் சமத்துவக் கட்சி முன்வைக்கிறது. உலக சோசலிச வலைத்தள வாசகர்கள் இத்திட்டத்தைப் பரிசீலித்து சோசலிசச் சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டியமைக்குமாறு நாம் அழப்பு விடுகிறோம்.

Read more...

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டோர் நாடுகடத்தப்படும் சந்தர்ப்பம் குறைவு..

தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்ட 130க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடிய சந்தர்ப்பமில்லை என தாய்லாந்து நாட்டிற்கான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதி சுனை பாசுக் தெரிவித்துள்ளார். தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த தாய்லாந்து வெளிவிவகாரத்தறை ஊடகப்பேச்சாளர் தனி தொங்பஹாடி, கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறியமையாலேயே கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்கடத்தல்களை தவிர்க்கும் முகாமாகவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றில் 500 மேற்பட்டவர்கள் கனடாவிற்கு சென்றிருந்மை குறிப்பிடத்தக்கது. ...............................

Read more...

500 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுதலை.

ஒரு வருட காலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு பிரதேச முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும் இந்த புனர்வாழ்வு நிகழ்வுகள் வவுனியா கலாச்சார நிலையத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இதன் போது புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் கலை திறமைகள் அரகேற்றப்படவுள்ளதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

Read more...

இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம் : செல்வி எம்.ஐ.எப் நபீலா தமிழ்த்துறை இறுதியாண்டு,
சப்பிரகமுவை பல்கலைக்கழகம்.

இணையத்தள பாவனை சர்வதேச அளவில் வெகு தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும்கூட, எமது இலங்கையில் அதன் வேகம் மந்தகரமான நிலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையில் இணையத்தளம் பற்றிய அறிவு அல்லது விளக்கம் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதும் இணையத்தள சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக 20ஆம் நூற்றாண்டுகளில் இறுதிக்கட்டங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் இணையத்தள இணைப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட, டவுண்லோட் - தரவிரக்கத்திற்கேற்ப கட்டணங்கள் அறவிடப்பட்டமையினால் பாவனையாளர்களுக்குப் பெருந்தொகையான பணத்தினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புரோட்பேண்ட் இணையத்தள இணைப்பு வசதியை ஸ்ரீலங்கா டெலிகொம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரதான நகரங்களை மாத்திரம் மையப்படுத்தியிருந்த இவ்விணைப்பானது தற்போது அகில இலங்கை ரீதியில் வியாபிக்கப்பட்டு வருகின்றது. புரோட்பேண்ட் இணையத்தள சேவைக் கட்டணம் நிலையான கட்டணத்தைக் கொண்டிருப்பதினால் தரவிரக்க பரப்பளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தினால் தற்போது படிப்படியாக இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தொகை பல மடங்குகளாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். அதேநேரம், இலங்கையில் போட்டியாக செயல்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் எஸ்.எல்.ரி. சிட்டிலிங்க், மொபிடெல், மற்றும் சன்டெல், லங்காபெல், டயலொக், எடிசலாட், எயாடெல், ஹட்ச், டயலொக் சீ.டி.எம்.எ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையினை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருவதை அவதானிக்கின்றோம்.

மத்திய காலத்தில் உருவான அறிவியல் எழுச்சியுடன் படிப்படியாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) தோன்றியது. அதற்கு தமிழ்மொழியும் ஈடுகொடுத்தது, அதன் விளைவாகவே இன்றைய தமிழ் உயர்ந்த நிலையில் உள்ளது. தொடர்தேர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியில் 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனியுகம் (Age of Computer) ஆகும். இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.

இன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவைகள் முதல், விண்வெளியில் செயற்படுகிற ஏவுகணைகளை மாத்திரமல்லாமல் விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கூட பூமியிலிருந்து கட்டுப்படுத்தி, செயற்படுத்தக்கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறிவிட்டது. இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல்லது பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இருக்கட்டும் கணனியின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான தகவல்களைத் தரவுகளாகச் சேமித்துவைத்தல் (Database Development), தேவைப்படும்போது தகவல்களைத் தேடியெடுத்தல் (Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail)வினாடிகளில் உலகெங்கும் இணையத்தளம் (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்றைய காலகட்டத்தில செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.

இலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங்கள் இணையங்களை பயன்படுத்துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களினூடாக செய்திகளை உடனுக்குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன்னணித் தேசிய தமிழ் பத்திரிகைகளான தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற (தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும்) தத்தமது இணையத்தளங்களினூடாக செய்திகளை தரவேற்றம் செய்து வருகின்றன. இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ - பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக்கூடியதாக இருக்கும். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகங்கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.

இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media) கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை பின்வருமாறு

ஆண்டு பாவனையாளர்கள். சனத்தொகை வீதம்
2000 121,500 19,630,230 0.5 %
2007 428,000 19,796,874 2.2 %
2008 771,700 21,128,773 3.7 %
2009 1,163,500 21,324,791 5.5 %
2010 1,776,200 21,513,990 8.3 %
http://www.internetworldstats.com/asia/lk.htm


மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டின் பிறகு இணையத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான காரணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும் போது இணையத்தளப் பாவனை 30% மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனைப் பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் வருமாறு

WORLD INTERNET USAGE AND POPULATION STATISTICS

உலக வலயங்கள் சனத்தொகை டிச.31, 2000 நிகழ்காலம் வீதம்
Africa 1,013,779,050 4,514,400 110,931,700 10.9 %
Asia 3,834,792,852 114,304,000 825,094,396 21.5 %
Europe 813,319,511 105,096,093 475,069,448 58.4 %
Middle East 212,336,924 3,284,800 63,240,946 29.8 %
North America 344,124,450 108,096,800 266,224,500 77.4 %
Latin America
/Caribbean 592,556,972 18,068,919 204,689,836 34.5 %
Oceania
/ Australia 34,700,201 7,620,480 21,263,990 61.3 %
WORLD TOTAL 6,845,609,960 360,985,492 1,966,514,816 28.7 %


இங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச சனத்தொகையாகும்.
டிச.31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள். நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது. http://www.internetworldstats.com/stats.htm

உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டெம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரணமாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் அன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு http://www.w3.org/history/19921103-hypertext/hypertext/ www/theproject.html

உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப்பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.

இத்தகைய பின்னணிகளின் மத்தியில் இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக தமது படைப்புகளை முன்வைப்பதில் இலங்கை தமிழ் எழுத்தாளர் புன்னியாமீனின் பங்களிப்பு விசாலத்துவமிக்கதாக அமைகின்றது. இதுவரை இவரின் 300க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சர்வதேச ரீதியிலான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் சர்வதேச ரீதியில் தமிழ் இணையத்தள வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெயராகவே இவரின் பெயர் பிரபல்யம் பெற்றுள்ளது. அண்மையில் புன்னியாமீன் இணையத்தளங்களில் பிரசுரமான 70 கட்டுரைகளை தொகுத்து சர்வதேச நினைவு தினங்கள் எனும் பெயரில் 03 பாகங்களை வெளியிட்டிருந்தார். இம்முயற்சி பற்றி இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “…உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் (புன்னியாமீன்) இணையத்தளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்…". இதிலிருந்து இணையத்தளங்களில் புன்னியாமீனுக்குள்ள ஈடுபாடு பற்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் பெயர் பதிந்திருப்பதற்கு இணையத்தளங்களில் வெளிவரும் அவரது ஆக்கங்களே ஒரு பிரதான காரணியாக அமையலாம். இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், விஞ்ஞானம், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக சர்வதேச நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவரின் எழுத்துக்கள் முத்திரை பதித்து வருகின்றன. இலங்கை எழுத்தாளர்களிடையே இணையங்களில் எழுதுவதில் தற்போதைய நிலையில் இவர் முதன்மை இடத்தில் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டங்களில் இவரின் ஆக்கங்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. கூகூல் http://www.google.lk, Yahoo http://www.yahoo.com, எம்.எஸ்.என்.http://www.msn.com திரட்டிகளிலிருந்து இணையத்தள தேடல்களின் அடிப்படையில் இதுவரை 183 இணையத்தளங்களில் இவரின் ஆக்கங்களையும், இவர்பற்றிய ஆக்கங்களையும் காண முடிகின்றது. இவரின் ஆக்கங்கள் பிரசுரமான இந்த இணையத்தள முகவரிகளின் ஆங்கில அகரவரிசைப்படி கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

www.24dunia.com/tamil, www.360news.in, www.abc.net,www.ads.clicksor.com, www.alaai.co.cc, www.alaikal.com, www.amalathaselroy.blogspot.com, www. andamansaravanan.blogspot.com, www.anonasurf.com, www.aruvi.com, www. asafardeen.blogspot.com, www.athirady.info, www.bestestsite.info, www. Best queen12.blogspot.com, www.bit.ly, www.blogcatalog.com, www.blogcop. com, www.blogger-index.com, www.blogs.oneindia.in, www.bogy.in, www. bname.ru, www.chat.oneindia.in, www.cmr.fm, www.comedy fans.wordpress. com, www.content.usatoday.com, www.dazy.sk, www. deccannetwork.com, www.de-de.facebook.com, www.dekrizky.us, www.dillee pworld.blogspot.com, www.thedipaar.com, www.eelamtoday.com, www.eera anal.org, www.encyk. fotelikisamochodowe.net, www.engaltheaasam. com, www.en.wordpress. com,www.ethamil.blogspot.com www.facebook.com, www. faroo.com, www. fetna.org ,www.firmy24.podhale.pl, www.flexalution. com, www.freer.info, www. friendfeed.com. www.google.com, www.geotamil. com, www.groups. google.co.in, www.groups.google.com, www.groups. google.dk, www.groups. google.fr, www.groups.google.ge, www.groups. google.gr, www.groups. google.to, www.ikmahal.com, www.ilakkiyainfo.com, www.ilankainet.com, www.ilayamalar.blogspot.com, www.ilbts.org , www.india everyday.com, www. indiantoday.com, www.infokarirterkini.co.cc, www.inioru. com, www.kalai mahan.blogspot.com, www.kalanjiam.com, www.kannadi puthagam.blogspot. com, www.karuthurimai.net, www.kattankudi.info, www.kavi mathy.wordpress. com, www.kevins.nl, www.kingwebnewspaper .blogspot.com, www.komsc. com, www.koodal1.blogspot.com, www.kopi-welcomemyblog.blogspot.com, www.kulantamil.com, www.lakehouse.lk, www.lankamuslim.org, www.linux 24web.info, www.live.athirady.org, www. maatru.net, www.manitham.net, www.masdooka.wordpress.com, www.meel parvai.net, www.meettal.blogspot. com, www.mixx.com, www.mnmanas. blogspot.com, www.muelangovan. blogspot.com, www.mulaggam.com, www.mullivikkaal.com, www.mykathi ravan.com, www.mytoday.com, www.namathu.blogspot.com, www.nayanaya. mobi, www.nerudal.com, www.neruppu.com, www.newathirady.com, www. news.writeka.net, www.news.thiratti.com, www.nkl4u.in, www.noolaham.org/, www.ns3.greynium.com, www.onlineinet.com, www.oodaru.com, www.ottran. com, www.penniyam.com, www.puhali.com, www.push2check.com, www. puzha.com, www.radio.ajeevan.com, www.ragil.info, www.rammalar. wordpress.com, www.ramnadinfo.com, www.rasigancom.blogspot.com, www. rizardview.blogspot.com, www.sangamamlive.com, www.search.webdunia.com, www. singakkutti.blogspot.com, www.sitedossier.com, www.shaseevanweblog. blogspot.com, www.shakthienews.com, www.space2world.com, www.spider. com.au, www.srisagajan.blogspot.com, www.sumanasa.com, www.supperlinks. blogspot.com, www.surfblocked.net, www.sri.lanka.asia, www.ta.indli.com, www.tamil10.com, www.tamilalai.org, www.tamilauthors.com, www.tamil. bingra.com, www.tamil.com, www.tamilalai.org, www.tamilexpress. webnode.com, www.tamilkudumbam.com, www.tamilnirubar.org, www.tamil newsnetwork.com, www.tamilnews.cc, www.tamil.net, www.tamilsguide.com, www.tamilish.com, www.tamilmanam.net, www.tamilsguide.com, www.tamil velibkp.blogspot.com, www.tamil.webdunia.com, www.ta.wikipedia. org, www. taweet.com, www.ta.wordpress.com, www.techtamil.in, www. teleindia. comm, www.thakval.info, www.thatstamil.oneindia.in, www.thaynilam. com, www.thedipaar.com, www.theendlessinfo.com, www.thenee.com, www.thenee. eu, www.thesamnet.co.uk, www.thinakaran.lk, www.thinakaran. lk/vaaraman jari, www.thinakkural.com, www.thiru2050.blogspot.com, www. thoora.com, www.tmpolitics.net, www.twitter.com, www.twurl.nl, www.ubervu. com, www. udaru.blogdrive.com www.usa-learning.blogspot.com, www.ustamil. blogspot. com, www.valaipookkal.com, www.vallinam.com, www.viyapu.com, www. wap.orlingo.com, www.webjosh.com, www.webmanikandan.blogspot.com, www. worldub.blogspot.com, www.xna.no, www.yarl.com

செப்டம்பர் 26. 2010இல் சுவிஸ் அரசின் கலாசார வானொலியான கனல்கா சர்வதேச வானொலி நிகழ்ச்சியில் குறுந் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அ. ஜீவன் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது “…தான் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையத்தளத்திலும், சங்கமம் லைவ் இணையத்தளத்திலும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற், தமிழ்நிரூபர் போன்ற இணையளத்தளங்களிலும், பிரான்ஸை மையமாகக் கொண்டியங்கும் இலங்கைநெற் இணையத்தளத்திலும் மூலமாக எழுதுவதாக குறிப்பிட்டார். அதேநேரம், அதிரடி, புதிய அதிரடி, முழக்கம், எங்கள் தேசம், நெருப்பு, கண்ணாடி, ஊடரு, பெண்ணியம் போன்ற பல இணையத்தளங்களும் இவரின் ஆக்கங்களை முதன்மையாக பிரசுரித்துள்ளன.

இணையத்தளங்களிலுள்ள ஒரு பொதுவான பண்பு ஒரு இணையத்தளத்தில் வெளிவரக்கூடிய தரமான ஆக்கங்கள் வேறும் இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுவதனை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீனின் அண்மைக்கால சில ஆக்கங்கள் 20 தொடக்கம் 30 வரையிலான இணையத்தளங்களில் மறுபிரசுரமானதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2010 செப்டம்பரில் பிரசுரமான அன்னை தெரேசா நூற்றாண்டுவிழா எனும் கட்டுரை 24 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல 14 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த உலகிலே தரையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் எனும் கட்டுரை 20 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. 24 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் எனும் கட்டுரை மொத்தம் 16 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல சர்வதேச இளைஞர் ஆண்டைப் பற்றி இவரால் ஆகஸ்ட் 2010ல் எழுதப்பட்ட கட்டுரையும் 34 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.

இவ்வாறாக ஒரே ஆக்கம் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடிய பல நாடுகளை தளமாக அமைத்து இயங்கும் இணையத்தளங்களில் பிரசுரமாகும்போது எழுத்தாளரின் முக்கியத்துவம் அதிகமாகின்றது. அதேநேரம் மேற்குறிப்பிட்ட உதாரணப்படி மீள்பிரசுரம் செய்துள்ள இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

இணையத்தளங்களில் காணப்படக்கூடிய மற்றுமொரு சிறப்பம்சமாக வாசகர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். குறித்த கட்டுரை தொடர்பில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக இணையத்தளத்துக்குத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் புன்னியாமீனின் ஆக்கங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள பின்னூட்டங்களை அவதானிக்குமிடத்து இவரது எழுத்துக்குக் சர்வதேச மட்டத்தில் காணப்படும் வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது.

அதேநேரம், தற்போதைய நிலையில் இலங்கை எழுத்தாளர்களிடையே இணையத்தள பயன்படுத்தல்கள் குறைவாகக் காணப்பட்ட போதிலும்கூட, 2007 முதல் 2010 வரை தமிழ் மொழி மூல இணைய எழுத்துக்களை ஆராயுமிடத்து புன்னியாமீனின் பெயர் தனியிடத்தில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உசாத்துணை:

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 1, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-43-6

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 2, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-44-3

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 3, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-45-0

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை சிறப்பு மலர் 2010. தமிழ் நாட்டு அரசு


Read more...

அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற இலங்கையர் இருவர் கைது

இலங்கையர் இருவர் உட்பட மீன்பிடிபடகு ஒன்றில் அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற சட்டவிரோத பயணிகள் 31 பேரை கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு கடலோர காவல் துறையினர் இடைமறித்துப் பிடித்துள்ளார்கள். இச்சட்டவிரோத பயணிகளில் 19 பேர் ஹெய்ட்டியையும்,06 பேர் பிறேசிலையையும் மற்றும் 04 பேர் ஜமெய்க்காவையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத பயணிகள் தெற்கு புளோரிடா மாநிலத்தைச் சென்றடைய முயன்றபோது பொயன்டன் கடற்கரையை அண்டிய கடல் பரப்பில் வைத்து காவல்துறையினரின் படகுகளால் சுற்றி வளைக்கப்பட்டார்கள்.

சட்டவிரோத பயணிகள் மாத்திரம் அன்றி அவர்களை படகில் அழைத்து வந்த கணவன் - மனைவி இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். படகு இவர்களுடையது எனவும், அவர்கள் மியாமி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் இதற்கு முன்பும் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் எனவும் சட்டவிரோத பயணிகள் இப்பயணத்துக்காக தலா 5000 அமெரிக்க டொலர் வரை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Read more...

Thursday, October 14, 2010

இனப்பிரச்சினை தொடர்பில் மன்மோகன் - மஹிந்த பேச்சுவார்த்தையாம். வை.கோ கைது.

டெல்லியில் இன்று நடைபெறும் காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய அரசின் அழைப்பை ஏற்று இன்று காலை 10.45 மணியளவில் இந்தியா புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இனப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பின்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமர்த்தப்படாமலுள்ள மக்கள் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு விடயமாக பேசப்படுமென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களுடன் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ இன்று கைது செய்யப்பட்டார். கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதையும் மீறி ம.தி.மு.க., இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் நூற்றுக் கணக்கானோர் கருப்பு கொடியுடன் அங்கு திரண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர்.

மேலும் 4 உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தொண்டர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, அர்ஜூன் சம்பத் உள்பட 143 தொண்டர்களை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read more...

மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியாவில்.

பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரதானியாக நியமனம்பெறவுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா லண்டன் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. கடமையினை எப்போது பொறுப்பேற்பார் என்பதனை உறுதிப்படுத்தி கொள்வதற்காக பிரித்தானியாவில் இலங்கை தூதரகத்தினை பலமுறை தொடர்பு கொண்டபோதும், சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் எதிர்வரும் சில நாட்களில் அவர் கடமையினை பாரமெடுப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவ அதிகாரிகளை தூதரகங்களில் அமர்த்துவதற்கு எதிராக புலிகள் பலத்த எதிர்ப்புக்களை காட்டிவந்தபோதும் , அவர்களின் எதிர்ப்புக்கள் சர்வதேச சமூகத்தினால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ஆழ ஊடுருவி தாக்குதல் : சார்க் நாடுகளுக்கு இலங்கை இராணுவம் பயிற்சி

ஆழ ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ளும் யுத்த உத்தி குறித்து இலங்கை இராணுவம் சார்க் நாடுகளின் படையினருக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் சார்க் நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் குழுக்கள், ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என இச்செய்தியை வெளியிட்டுள்ள கொழும்பிலிருந்து வெளியாகும் "திவயின" பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் உத்தி தொடர்பாக அமெரிக்காவும் இலங்கையிடம் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தி வருவதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் ஆழ ஊடுருவும் படையணியினரின் செயற்திறன் அவ்வியக்கத்தை நிலைகுலையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் தொடர்பாக இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்த்தர் ஒருவர் தலைமையில் குழுவொன்று இன்றிரவு இந்தியா புறப்படுகின்றது என தெரியவருகின்றது.

Read more...

ஜனாதிபதி கொலை சூழ்ச்சியாளர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

ஜனாதிபதி மற்றும் அவருடைய குடும்பத்தவர்களை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு சமர்பித்த விடயங்களை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த 17 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். கொழும்பு நகரில் தங்கியிருந்து ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியமானவர்களை கொலை செய்ய இவர்கள் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.

இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஆலோசனைக் கிடைத்தவுடன் சந்தேகநபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

இந்த விடயங்களை கருத்திற் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more...

மேலுமோர் பாராளுமன்ற உறுப்பினர் கைது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் பிட்ட கோட்டே பகுதியில் வைத்து இன்று இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை ஆசிரியை ஒருவர் இவருக்கு எதிராக மேற்கொண்டுள்ள பணமோசடி முறைப்பாட்டினை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, நாளை இவரை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தற்போது கண்டிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்:

ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் உள்வீட்டு மோதலில் ரணில் தரப்பில் முக்கிய பாத்திரம் வகிக்கும் இவர் : ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சஜித் பிறேமதாஸவிற்கு எதிரான பிரச்சாரங்களில் முழுமையாக ஈடுபட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஆழும் தரப்பினரை குறிப்பாக ஜனாதிபதியை கடந்த காலங்களில் மிகவும் விமர்சனம் செய்திருந்த நிலையில் இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, October 13, 2010

வரலாறு காணாத ஓட்டுக்களுடன் ஐ.நா. பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு

மொத்தம் உள்ள 190 ஓட்டுக்களில் 187 ஓட்டுக்களைப் பெற்று வரலாறு காணாத ஓட்டுக்களுடன் ஐ.நா. பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்தியா. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நாடும் இதுபோல அதிகபட்ச ஓட்டுக்களைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா போட்டியிட்டது. இதற்காக நடந்த வாக்கெடுப்பில் இந்தியாவுக்கு மொத்தம் உள்ள 190 உறுப்பினர்களில் 187 பேர் வாக்களித்து அமோகமான முறையில் இந்தியாவை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இது மிகவும் சிறப்பான வெற்றி. பல செய்திகளை இது கூறுவதாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நாட்டுக்கும் இவ்வளவு அதிக அளவிலான வாக்குகள் கிடைத்ததில்லை என்பது முக்கியமானது என்றார்.

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தேர்வானதைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் ஐ.நா. அலுவலகத்தில் சாம்பெய்ன் பாட்டிலை திறந்து கொண்டாடினர். மேலும், சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது - அதில் சைனீஸ் வகை உணவுகள்தான் அதிகமாக இருந்ததாம்.

ஐ.நா.வின் நிறுவன உறுப்பினரான இந்தியா, 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பு கவுன்சிலுக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மொத்தம் 6 முறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்துள்ளது இந்தியா. தற்போது 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, ஜெர்மனி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் பாதுகாப்பு சபைக்கு தேர்வு செய்யப்பட்டன.

பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கனடாவுக்குத்தான் மிகக் குறைந்த வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து 2வது கட்ட வாக்கெடுப்பின்போது அது போட்டியிலிருந்து விலகி விட்டது.

ஏற்கனவே உறுப்பினராகஇருந்து வந்த ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டாவுக்குப் பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகியவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பினர் பதவிக்காக கடுமையாக முயன்று வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர் பதவிக்கான போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு அவை சார்ந்த பிராந்தியங்களிலிருந்து எந்தப் போட்டியும் இல்லை. அதேசமயம் ஜெர்மனி, கனடா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு அவை சார்ந்த பகுதியில் கடும் போட்டி நிலவியது.

இதில் ஜெர்மனி முதல் ஓட்டிலேயே (128 வாக்குகள் பெற்றது) தேர்வாகி விட்டது. கனடாவுக்கு மிகவும் குறைந்த வாக்குகள் கிடைத்ததால் அது விலகியது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தியா பாதுகாப்பு சபை உறுப்பினராக பதவி வகிக்கும். சர்வதேச அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டதுதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இது 1946ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பு நாடுகளாகும். இவற்றுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் உண்டு. அதாவது இந்த ஐந்து பேரில் ஒரு நாடு, தான் நினைத்தால் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானம் அல்லது முடிவை நிராகரிக்க முடியும்.

மற்ற பத்து நாடுகளும் பிராந்திய வாரியாக தற்காலிகமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில்தான் தற்போது இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது உறுப்பினர்களாக உள்ள 10 தற்காலிக உறுப்பினர்களில் ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டா ஆகியவற்றின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடத்திற்குத்தான் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள போஸ்னியா-ஹெர்ஸகோவினா, பிரேசில், கபான், லெபனான், நைஜீரியா ஆகியவை 2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றன.

Read more...

காலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.

மாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளமடு கிராமத்தை சேர்ந்த ராசகுமாரி நவமணி தம்பதிகளின் 3 வது புதல்வி கிரிஷா, நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தனது கால் ஒன்றை கடந்த 06.12.2008 ம் திகதி இழந்துள்ளார். 9 வயதான இச்சிறுமிக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வருவாயிழந்து தவிக்கும் குடும்பத்திலிருக்கும் இச்சிறுமி காலை இழந்தபோதும் தான் படித்து ஒரு வைத்தியராக வருவதே தனது ஆசை என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

தற்போது 04ம் தரத்தில் கல்விகற்கும் இச்சிறுமிக்கு பாடசாலைச்சீருடைக்கே துன்பப்படும் நிலைதான் எஞ்சியுள்ளது என எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கல்விக்காக கெஞ்சிநிற்கும் இச்சிறுமிக்கு உதவவிரும்புவோர் நேரடியாக பிரதேச செயலகத்தை அன்றில் சிறுமி கல்வி க ற்கும் மன்-கல்லியடி மகாவித்தியாலய அதிபரை அல்லது கிராமசேவகரை தொடர்பு கொண்டு தங்கள் உதவிகளை வழங்கமுடியும். அத்துடன் சிறுமியை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புவோர் , நெருப்பு அல்லது எமது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளமுடியும்.


Read more...

தாய்லாந்தின் குற்றச்சாட்டுகளை மறுத்தது கம்போடியா

பேங்காக் தாய்லாந்து அரசாங் கத்தை எதிர்க்கும் சிவப்புச் சட்டை இயக்கத்தினர், தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட உயர் தாய்லாந்து அதிகாரிகளைக் கொலை செய்வதற்குக் கம்போடியாவில் பயிற்சி அளிக்கப்பட்டதாகத் தாய்லாந்தில் கூறப்படும் குற்றச் சாட்டுகளுக்கு கம்போடியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் சென்ற வாரம் 11 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர் களையும் சேர்த்து மொத்தம் 39 பேருக்கு “அண்டை நாட்டில்” சித்தாந்த போதனையும் சண்டைப் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக மூத்த தாய்லாந்து பாதுகாப்பு அதிகாரி திங்கட்கிழமை குற்றம் சாட்டினார்.

சிறப்பு விசாரணைப் பிரிவின் மூத்த விசாரணை அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பாயாவ் தொங்சென் செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டபோது, அண்டை நாட்டின் பெயரைக் குறிப் பிடவில்லை. ஆனால், பயிற்சித் தளத்தை அடைய ஆடவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படும் பாதையை அவர் வர்ணித்தார். அவரது வர்ணனை கம்போடிய எல்லைக் கடப்பைச் சுட்டிக்காட்டியது.

இந்தக் குற்றச்சாட்டை கம்போடியா மறுக்கிறது.
“நாங்கள் எதற்காக இதைச் செய்யவேண்டும்? இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் கம்போடி யாவுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது” என்று கம்போடிய அரசாங்கப் பேச்சாளர் கியூ கன்ஹரித் செவ்வாய்க்கிழமை கூறினார்.

“இந்தக் குற்றச்சாட்டைக் கம்போடியா வன்மையாக நிராகரிக்கிறது” என்றும் அவர் சொன்னார். கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உறவில் பல ஆண்டுகளாகவே பூசல் நிலவுகிறது. எல்லைத் தகராறு இதற்கு முக்கிய காரணம். கம்போடிய எல்லையில் உள்ள ஒரு பழங்காலக் கோயில் தொடர்பில் கம்போடியாவுக்கும் தாய்லாந் துக்கும் இடையில் பூசல் நீடிக்கிறது. சென்ற ஆண்டு இந்தப் பூசல் இன்னும் மோசமடைந்தது.

இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன. அத்துடன் கம்போடியப் பிரதமர் ஹூன் சென் தக்சினை பொருளியல் ஆலோசகராக நியமித்தது முதல் இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது. தாய்லாந்தின் குற்றச்சாட்டால், ஏற்கனவே குழப்பத் திலிருக்கும் அரசியல் போராட்டம் மேலும் பாதிப்படையக்கூடும்.

முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ரா 2006ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில் வெளியாக்கப்பட்டது முதல் தாய்லாந்தில் அரசியல் குழப்பநிலை நிலவி வருகிறது. தாய்லாந்து அரசியலில் ராணுவம் தலையிடுவதற்கு சிவப்பு சட்டையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசாங் கத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பேங்காக்கில் பாதுகாப்பு வலுப் படுத்தப்பட்டுள்ளது.



Read more...

இலங்கைத் தமிழர் நாடு திரும்பிச் செல்ல மறுப்பு.

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 130 பேரையும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கை திரும்ப விரும்பினால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யத் தயாரென்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இலங்கைக்குத் திரும்பிச் செல்லப்போவதில்லையென அவர்கள் மறுத்துவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாய்லாந்து குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள பொலிஸார், குடியிருப்புத் தொகுதிகளைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடத்தி குடிவரவுச் சட்டத்தை மீறியவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் இலங்கைத் தமிழர்கள் 130 பேர் அடங்குவர். இவர்களுள் பலர் வீசா காலாவதியாகி நான்கைந்து வருடம் இருந்துள்ளனர். இதில் 34 பேர் பெண்கள் என்றும் பாங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தூதரக அதிகாரிகள் தடுப்பு முகாமுக்குச் சென்று இலங்கைத் தமிழர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் வீசா சட்டத்தை மீறி உள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தூதரகத்திற்குத் தகவல் வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள், அவர்கள் வீசா சட்டத்தை மீறியிருப்பதாக கூறியுள்ளனர்.

அதேவேளை, புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிடவில்லை எனவும் பாங்கொக் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது தொடர்பில் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Read more...

Tuesday, October 12, 2010

யாழ் பல்கலைக்கழக மாணவிக ளுக்கு பாலியல் துன்புறுத்தல் அச்சுறுத்தலாகவுள்ளது.

யாழ்க்குடா நாட்டில் குறிப்பாக பல்கலைக்கழக சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தற்கொலை முயற்சிகள் என்றுமில்லாவாறு அதிகரித்திருப்பதாக யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் எச்சரித்திருக்கின்றார். நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கவலையை வெளியிட்டிருந்தார். பிராந்திய சுகாதார திணைக்கள வைத்திய பெண் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்தத் திடுக்கிடும் தகவல்களை யாழ் அரச அதிபர் வெளியிட்டிருந்தார்.

பல மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக குறித்த வைத்திய அதிகாரி தன்னிடம் விபரங்களை வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாக அவர் குற்றம்சாட்டி இருந்தமை பெரும் பரபரப்பையும் திடுக்கிடுதல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அண்மையில் யாழ் மாவட்ட சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே சுகாதார திணைக்களப் பெண் வைத்திய அதிகாரி இந்தத் தகவல்களை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அண்மைக்காலங்களில் மட்டும் 77க்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்கின்றமை தொடர்பான பதிவுகள் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே சுயாதீன சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் அண்மைக்காலங்களில் இவை வேகமாக அதிகரித்திருக்கின்றமை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிர்ச்சியை தருவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com