Saturday, September 18, 2010

மன்னார் பிரஜைகள் குழு – த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு.

மன்னார் மாவட்டத்தின் நிலைமைகள் , மற்றும் அரசியல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதற்கு மன்னார் பிரஜைகள் குழு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வொன்றுகூடல் இன்று காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு வன்னி மாவட்டத்தின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தபோதும் பா.உ அடைக்கலநாதன் , பா.உ வினோநோதராதலிங்கம் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர். அத்துடன் பிரைஜைகள் குழுசார்பில் அதன் முக்கியஸ்தர்களான 14 பேர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டது.




மன்னார் நிருபர் லெம்பேட்

Read more...

இலங்கையில் பொதுக் கூட்டங்கள் - By the Socialist Equality Party (Sri Lanka)

லியோன் ட்ரொட்ஸ்கியின் வரலாற்று மரபுரிமையும் உலக சோசலிச புரட்சிக்கான இன்றைய போராட்டத்துக்கு அதன் பொருத்தமுடைமையும் என்ற தலைப்பில், சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் இயக்கமும் இலங்கையில் தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளன.

1917 ரஷ்யப் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கி, முதலாவது தொழிலாளர்களின் அரசை பாதுகாத்த செஞ்சேனையின் தளபதியாகவும் இருந்தார். லெனின் மறைந்த பின்னர், அவர் சோவியத் அரசின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிரான போராட்டத்துக்கு அரசியல் ரீதியகவும் தத்துவார்த்த ரீதியாகவும் தலைமை வகித்தார். ஸ்ராலினின் காட்டிக்கொடுப்புக்கள் 1933ல் ஹிட்லரை ஆட்சிக்கு வர அனுமதித்ததை அடுத்து, மூன்றாம் அகிலம் செத்துவிட்டது என்ற முடிவுக்கு வந்த ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க அழைப்புவிடுத்தார். அது 1938ல் ஸ்தாபிக்கப்பட்டது.

1940 ஆகஸ்ட் 21 அன்று, மெக்ஸிகோ கோயோகானில் வைத்து ஒரு ஸ்ராலினிச ஏஜன்டால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார். அக்டோபர் புரட்சியை முன்னெடுத்த முழுப் பரம்பரையினதும் மிக நேர்த்தியான பிரதிநிதிகளை உடல் ரீதியில் அழித்த ஸ்ராலினின் சுத்தீகரிப்பு நடவடிக்கையின் உச்சகட்டமே ட்ரொட்ஸ்கியின் கொலையாகும்.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையும் வேலைகளும் ஒரு ஆழமான சமகால முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த பூகோள இலாப முறைமை, மீண்டுமொருமுறை அடிப்படை பொருளாதார அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ட்ரொட்ஸ்கியின் போராட்டங்களின் படிப்பினைகள், முதலாளித்துவத்தை தூக்கிவீசி உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிக்க தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு இன்றியமையாத அரசியல் ஆயுத்தத்தை வழங்குகின்றது.

முதலாளித்துவ அபிவிருத்தி தாமதமான நாடுகளில், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்துக்கான உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப முதலாளித்துவம் இலாயக்கற்றுள்ளதன் மூலம், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தம் இதற்கு ஒரு துன்பகரமான உதாரணமாகும்.

யுத்தம், ஒடுக்குமுறை மற்றும் வறுமையை எதிர்க்க ஒரு வழியை தேடும் தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை எமது பொதுக் கூட்டங்களுக்கு வருகை தருமாறு அழைக்கின்றோம்.

கண்டி
இடம்: ஜனமெதுர மண்டபம்
திகதியும் நேரமும்: செப்டெம்பர் 23 பி.ப. 3 மணிக்கு

யாழ்ப்பாணம்
இடம்: கூட்டுறவுச் சங்க மண்டபம்
திகதியும் நேரமும்: செப்டெம்பர் 26, பி.ப. 2 மணிக்கு

கொழும்பு
இடம்: புதிய நகர மண்டபம் திகதியும்
நேரமும்: அக்டோபர் 10 பி.ப. 3 மணிக்கு

ஹட்டன்
இடம்: தொழிலாளர் பொழில் மண்டபம்
திகதியும் நேரமும்: அக்டோபர் 24 காலை 10 மணிக்கு

பிரதான பேச்சாளர்: சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ்
.

Read more...

கறடியனாறு பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் ஆயித்தியமலையில். ஐஜிபி

நேற்று இடம்பெற்ற வெடிவிபத்தினால் கறடியனாறு பொலிஸ் நிலையம் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் யாவும் ஆயித்தியமலை பொலிஸ் நிர்வாகத்தினால் தற்காலிகமாக மேற்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய விசேட அறிக்கை ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் கரடியனாறு பொலிஸ் நிலையம் விரைவில் மீண்டும் கடமைகளில் ஈடுபடும் எனவும் வெடிப்புச் சம்பவத்தில் 12 பொலிஸாரும் 2 சீனநாட்டவர்களும் 7 பொதுமக்கள் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 என இராணுவப் பேச்சாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்

தோற்றம் 19.07.1930

மறைவு 18.08.2010


அச்சுவேலி வடக்கை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி இமையாணன் கிழக்கை வாழ்விடமாகவும் கொண்ட எமது தந்தையாரின் உயிர் 18.08.2010 இவ்வுலகைவிட்டு நீங்கி இறைபாதம் அடைந்த செய்தி கேட்டு அனுதாபமும், ஆறதலும் கூறியவர்களுக்கும். எமது தந்தையாரின் ஆத்மசாந்தி கிரிகைளில் கலந்து கொண்டவர்களுக்கும். மேலும் பல வழிகளில் உதவிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கும் அதேவேளை. சுவிற்சர்லாந்தில் (Swiss) 18.09.2010 சனிக்கிழமை லவுசான் (Lausane) மாநிலத்திலும் 19.09.2010
சூரிச் (Zürich) மாநிலத்திலும் மதியபோசனம் வழங்கி நன்றி தெரிவிக்கும் நினைவு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு பிள்ளைகளாகிய நாம் எமது குடும்பம் சார்பாக அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

இரதீஸ்வரன் (தீபன்) 044 462 60 91 , 076 583 84 10
இரதிகரன் (பூவன்) 021 601 34 53 , 076 396 39 15
இரதிராஜன் (ராஜன்) 044 563 84 85 , 079 338 39 95

Read more...

நல்லிணக்க ஆணைக்குழு கிளிநொச்சியில் கூடுகின்றது. ஊடகங்களுக்கு தடை இல்லையாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கடந்த கால பாடங்களை கற்றுக்கொள்ளலம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இன்று கிளிநொச்சியில் கூடவுள்ளது. இன்றும், நாளையும், கிளிநொச்சியில் விசாரணைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி முல்லைத்தீவிலும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு ஊடகங்களுக்கு சுதந்திரமாக அனுமதி அளிக்கப்படவில்லை என பிபிசி குற்றஞ்சுமத்தியுள்ள நிலையில் பிபிசி ஊடகத்திற்கோ, வேறு ஊடகங்களுக்கோ நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒருங்கமைப்பு செயலாளர் ஏ.ஜி.குணவர்த்தன அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில் எந்த ஊடகமும் நல்லிணக்குழுவின் ஆணைக்குழுவின் சாட்சியமளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனவும் அவர்களை வரவேற்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய ஆணையாளர் லக்ஷ்மன் உலுகல்ல அததெரணவிற்கு தெரிவிக்கையில் , ஊடகங்களுக்கு எதுவித தடையும் விதிக்கபடவில்லை எனவும் தேவையாயின் நேரில்சென்று அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Friday, September 17, 2010

மன்னார் மாணவர்களுக்கான கடற்படையினரின் றம்பேர்ட் பயிற்சி நிறைவு.

மன்னார் கல்விவலயத்திற்குட்பட்ட 20 பாடசாலைகளின் தெரிவுசெய்யப்பட்ட 90 மாணவர்களுக்கான 20 நாள் றம்பேட் பயிற்சி வகுப்புக்கள் மன்னார் வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றுவந்தது. இவர்களுக்கான பயிற்சிகளை கடற்படையினர் வழங்கி வந்தனர்.

பயிற்சிகளின் நிறைவுநாளான இன்று 20 பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் றம்பற் வாத்தியக்கச்சேரி நிகழ்த்தப்பட்டு பயிற்சிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் றிசார்ட் பதுயுதீன் வழங்கி வைத்தார். சிறப்பாக தேர்ச்சி பெற்ற 3 மாணவர்களுக்கு சிறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியளித்த கடற்படையினர் இம்மாணவர்கட்கு பரிசுப்பொதிகள் வழங்கிக் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், மன்னார் அரசாங்க அதிபர், தள்ளாடி பிரிகேடியர் மைத்திரி, டயஸ், கடற்படை உயர்அதிகாரி மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் கல்விப்பணிப்பாளர் இன்னும் ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.






Read more...

இலங்கைக்கான சீனத் தூதர் கறடியனாறு வெடிவிபத்து பிரதேசத்திற்கு விஜயம்.

கறடியனாறு பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ள வெடிவிபத்தில் இரு சீனப் பொறியலாளர்கள் உட்பட பலர் உயிரிழந்திருந்தனர். இப்பிரதேசத்திற்கு இன்றுமாலை இலங்கைக்கான சீனப்பிரதமர் விஜயம் செய்துள்ளார். இவருடன் இலங்கை பிரதமந்திரியும் சென்றுள்ளார். இவ்வெடிவிபத்து தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவில் தங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

Read more...

ஐ நா குழுவின் பணி ஆரம்பம்

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு சுமத்தும் வழி முறைகள் குறித்து ஐ.நா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஐ நா அறிவித்துள்ளது.

ஐ நா தலைமைச் செயலருடனான சந்திப்பு ஒன்றை அடுத்து இந்தக் குழு தனது பணிகளை ஆரம்பித்திருப்பதாக, ஐ நா தலைமைச் செயலர் பான் கீ மூனின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஐ நா குழுவை எதிர்த்து இலங்கையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று
இலங்கைப் போரின் இறுத்திக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனை கூறுவதற்காகவே இந்தக் மூன்று பேர் கொண்ட குழு கடந்த ஜூன் மாதத்தில் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் நியமனத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அதன் உறுப்பினர்கள் இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்தக் குழுவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான விமல் வீரவன்ஸவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார். ஆனால், அதனை அவர் பின்னர் கைவிட்டார்.

Thanks BBC

Read more...

இலங்கை – சீனா இராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கை – சீனா ஆகிய இருநாடுகளிடையேயான இராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனா சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் தலைமையிலான குழு மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதான அதிகாரி Chen Bingde ஆகியோருக்குமிடையான சந்திப்பின் பின்னர் இவ்ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இலங்கை அரசாங்கம் திபேத் , தாய்வான் ஆகிய நாடுகளுடனான விவகாரங்களில் சீனாவிற்கு அளித்துவந்த ஆதரவிற்கு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதான அதிகாரி Chen Bingde, நன்றியினை தெரிவித்துள்ளதோடு சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் நட்பு ரீதியிலான இராணுவ பரிமாறல்களை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கமும் , இராணுவமும் சீனாவின் உதவிகளை யிட்டு மனம் நெகிழ்வதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தொடர்ந்தும் இருநாடுகளுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

பாகிஸ்தான் அரசியல்வாதி லண்டனில் படுகொலை

பாகிஸ்தானில் ஒரு காலத்தில் இயக்கத்தில் இருந்த முத்தாகிதா குவாமி அரசியல் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த இம்ரான் ஃபரூக் என்பவர் லண்டனில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே மர்மமான முறையில் கொலையுண்டு கிடந்ததாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

1992ஆம் ஆண்டு முதல் இவர் லண்டனில் வசித்து வருவதாகவும் அதன் பிறகு அவர் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை என்றும் தெரிகிறது.

முத்தாகிதா குவாமி இயக்கம் கராச்சியில் பெரிய அரசியல் கட்சியாகவே ஒரு காலத்தில் இருந்தது. மேலும் இந்தக் கட்சி தாலிபன்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

1947ஆம் ஆண்டு நடந்த பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து உருது பேசும் இஸ்லாமிய மக்கள் கராச்சியில் குடிபெயர்ந்தனர். இந்தக் கட்சியில் இவர்கள் அதிகம் இருந்தனர்.

தாலிபானுக்கு எதிரான முத்தாகிதி குவாமி கட்சியின் நிலைப்பாடு பொதுவாக பாஷ்டூன் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் ஒரு விரிவே என்று அப்பொது இந்தக் கட்சி மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டனுக்குத் தலைமறைவான கொலையுண்ட இம்ரான் ஃபரூக், 1992ஆம் ஆண்டு தன்னை தவறாக பயங்கரவாதி என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது என்றும் இதனால் தான் லண்டனுக்குச் செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஜெனரல் பொன்சேகாவிற்கு 3 வருட சிறைத்தண்டனை.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேவிற்கு இராணுவ குற்றவியல் நீதிமன்றம் இன்று 3 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இராணுவ தளபாடங்கள் கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரங்களுக்கான குழுவின் தலைவராக பதவிவகிக்கும்போது அதன் கட்டுப்பாடுகளை மீறியதாக இவர்மீது குற்றச்சுமத்தப்பட்டது. இக்குற்றச்சாட்டினை விசாரணைசெய்த இரண்டாவது இராணுவக் குற்றவியல் குற்றவியல் நீதிமன்றம் இவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளதுடன் இக்குற்றத்திற்கு 3 சிறைத் தண்டனையும் வழங்கியுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக கேள்விப் பத்திரக் குழுவின் அங்கத்தவராக இருந்த மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய சாட்சியமளிக்கவிருந்த நிலையில் அவர் சாட்சியமளிப்பதை தவிர்த்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவரின் சாட்சியங்கள் இல்லாமல் விசாரணைகளைத் தொடர்ந்த நீதிமன்று இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இவருக்கான சிறைத் தண்டனை அதிபர் மகிந்த ராஜபக்சவின் அனுமதி கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முதலாவது குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பின்போது அவரது இராணுவப் பதவிகள் மற்றும் பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டு அவருக்கான ஓய்வூதியமும் ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

18 வது அரசியல் யாப்பு மாற்றதினூடான 7 சுயாதீனக் குழுக்ளும் ஜனவரி முதல் இயங்குமாம்.

பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 7 சுயாதீன ஆணைக்குழுக்களும் ஜனவரி மாதம் முதல் செயற்படும். அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (16) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,17வது திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபையோ சுயாதீன ஆணைக்குழுக்களோ நடைமுறைச் சாத்தியமற்றவையாக இருந்தன. இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

அரசியலமைப்பு சபைக்கு பிரதிநிதி ஒருவர் பிரேரிக்கப்படாவிடின் அதனை செயற்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. ஒரு சிறுபான்மைக் கட்சி பிரேரித்த உறுப் பினரை மற்றொரு கட்சி எதிர்க்கும் நிலை காணப்பட்டது.

17வது திருத்தத் தில் காணப்பட்ட குறைபாடுகள் நடைமுறைச் சாத்திய மற்ற விடயங்கள் என்பவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் 18வது திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு வாரத்தில் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை பிரேரிக்க வேண்டும். இல்லாவிடின் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பார்.

இதன் மூலம் உரிய காலத்தினுள் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதோடு சுயாதீன ஆணைக்குழுக்களும் செயற்படும்.

18வது திருத்தச் சட்டம் நிறைவேற்ற ப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற சபைக்கு உறுப்பினர்களை நிய மிக்கவும் சுயாதீன ஆணைக்குழுக் களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்படவுள்ளன.

அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் செயலி ழந்தது.

அடுத்த வருடம் முதல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வும் இயங்கும். அதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளதோடு ஆணைக்குழுவுக்கு 5 மாடிக் கட்டிடமொன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 155 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக துரிதமாக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றார்.

Read more...

கறடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் பாரிய வெடி விபத்து. 60 பேர் பலி. (இணைப்பு 2)

மட்டக்களப்பு கரடியனாறில் இன்று காலை பாரிய வெடிவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்றிப்பதாக தெரிவிக்கும் இராணுப் பேச்சாளர். அப்பிரதேச்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைகளுக்கு தேவையான வெடிபொருட்கள் கறடியனாறு பொலிஸ் நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தாகவும், சீன நிறுவனம் ஒன்றுக்கு தேவயான வெடிபொருட்களை அந்நிறுவனத்தின் சீனப்பிரஜைகளான இருவர் எடுத்துச் செல்லும்போது இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ்வெடிப்புச் சம்பவம் பொலிஸ் நிலையத்தினுள்ளளேயே இடம்பெற்றபோது அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வெடிபொருள் கொள்கலன்களும் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் பொலிஸ் நிலையத்திலிருந்த சுமார் 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்புகின்றோம் அத்துடன் வெடிபொருட்களை எடுத்துச் செல்லவந்திருந்த சீனப்பிரஜைகள் இருவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அனுமானிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

இக்குண்டுவெடிப்பினால் பொலிஸ் நிலையம் முற்றாக நிர்மூலமாகியுள்ளதுடன் அண்மையில் உள்ள குடிமனைகள் கட்டிடங்களும் சேதமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குண்டுவெடிப்பில் 100 மேற்பட்டோர் காய மடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே நேரம் 9 பேர் மட்டக்களப்பு ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அத்துடன் கவலைக்கிடமான நிலை யில் 4 பேர் கொழும்பு தேசிய வைத் திய சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

Thursday, September 16, 2010

அருட் சகோதரர் எஸ் ஏ ஐ மத்தியு அடிகளாரின் துறவற வாழ்விற்கு 50 ஆண்டுகள்.

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரியின் முன்னாள் அதிபர் அருட் சகோதரர் கலாநிதி எஸ்ஏஜ. மத்தியு அடிகளாரின் 50வது ஆண்டு துறவற சேவையின் நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை (15.9.10) கல்முனையில் அருட் தந்தை யூட் ஜோன்சன் அடிகளாரால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அருட் சகோதரர் மத்தியு அடிகளார் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் வழர்சிக்கு ஆற்றிய பணிகள் அளப்பெரியதாகும்.

திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.





(படங்கள் வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர் )


...............................

Read more...

டேவிட் கிங்கின், 1917 முதல் ஜோசப் ஸ்ராலின் மரணம் வரையிலான சோவியத் ஒன்றியத்தின் ஒரு புகைப்பட வரலாறு. By Adelbert Reif

அடெல்பெர்ட் ரெய்ஃப்பின் அனுமதியுடன், Red Star over Russia புத்தகத்தின் ஒரு மதிப்பாய்வை இங்கே நாங்கள் பதிப்பிக்கிறோம். இது ஜேர்மன் இதழ் Universitasஇல் இம்மாத புகைப்படமாக பெயரிடப்பட்டது. இதன் மதிப்பாய்வு ஆகஸ்ட் இதழில் வெளியிடப்பட்டிருந்தது.

டேவிட் கிங்கின் Red Star Over Russia உண்மையிலேயே ஓர் அற்புதமான புகைப்பட புத்தகம் என்று கூறினால் அது மிகையாகாது! மூன்றரை தசாப்த கால சோவியத் ஒன்றியத்தின் வரலாறு—அதன் தொடக்கத்திலிருந்து ஸ்ராலினின் மரணம் வரையில்—இதுவரை ஒருபோதும் அளிக்கப்பட்டிருக்காத அளவிற்கு இந்த புத்தகத்தில் கலைநயத்துடன் புகைப்பட தொகுப்புகளாக அளிக்கப்பட்டிருக்கின்றன.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வந்த பின்னரும், மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஆரம்பகால ஒருசில தொடர்ச்சியான சோவியத் ஆவணத்தொகுப்புகளுக்குப் பின்னரும், சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்து பல புகைப்படத்தொகுப்பு புத்தகங்கள் (photo books) வெளியாகி இருக்கின்றன. இதில் நினைத்துப் பார்க்கக்கூடியதாக இருப்பது, பீட்டர் ரடெட்ஸ்கியால் (Peter Radetsky) பிரசுரிக்கப்பட்ட Russia and the Soviet Union (2007) என்பதாகும். முக்கியமாக இதில் அவர், ரஷ்யா மற்றும் சோவியத் வரலாறின் ஒரு நூற்றாண்டை எடுத்துக்காட்ட TASS அரசு செய்தி நிறுவனத்தின் புகைப்படங்களைப் பயன்படுத்தி இருந்தார்.

இவற்றில் பெரும்பாலும் எதுவுமே டேவிட் கிங் அளித்திருக்கும் அளவிற்கு வரலாற்று ஆவணங்களின் பிரத்யேகதன்மைகளையும், பரந்த நோக்கத்தையும் ஆவணப்படுத்தி தொகுக்கப்பட்டவையாக இல்லை. இதற்கான காரணத்தை அந்த ஆசிரியரின் தனிப்பட்ட வளர்ச்சியில் காண முடிகிறது. The Commissar Vanishes, The Falsification of Photographs and Art in Stalin’s Russia, The Victims of Stalin (2003) ஆகியவற்றுடன் சோவியத் ஒன்றியம் குறித்து ஏனைய பல புத்தகங்களையும் எழுதியுள்ள எழுத்தாளர் கிங், 1965 முதல் 1975 வரை இலண்டன் Sunday Timesஇன் கலாச்சாரத்துறைக்குத் தலைமையேற்று இருந்தார். ரஷ்ய புரட்சிகர கலையைக் குறித்த அவருடைய தனிப்பட்ட சேகரிப்புகளில் சுமார் 250,000 பொருட்கள்—அதாவது, முக்கியமாக சுவரொட்டிகள், செய்தியிதழ்கள், துண்டறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவை—உள்ளடங்கும் என்பதுடன் இவை உலகின் மிக விலைமதிப்பற்ற மற்றும் முக்கியமானவைகளில் ஒன்றாக கருதப்படுகின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த தொகுப்பில், கிங்கின் சுருக்கமான வரலாற்று-அரசியல் கருத்துக்களுடன் (இப்போது வரையில், அந்த கருத்துக்கள் விளங்க வைக்கப்பட்டிருக்கும் திறனில் முற்றிலும் நினைத்துப் பார்க்க கூடியவையாக உள்ளன) 500க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உயர்ந்த தரத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றிருக்கும் பலவற்றை இதில் தான் முதல்முறையாக பார்க்க முடிகிறது—காலகிரயத்தில் புகைப்படங்களை அடுக்கி வெளியிட்டமைக்காக அவருக்கு நன்றி—மேலும் எந்தவொரு முந்தைய வரலாற்று புத்தகமும் கிங்கின் தொகுதி காட்டியிருப்பது போல, 1917 முதல் 1953 ஆண்டுகள் வரையிலான அதிரடியான நிகழ்வுகளை இந்தளவிற்கு நேரடியாகவும், நேர்மையாகவும் உயர்த்திக் காட்டியிருக்கவில்லை.

இன்னுமொரு ஆக்கப்பூர்வமான கூறுபாட்டையும் குறிப்பிட்டாக வேண்டும். ஸ்ராலின் ஆட்சியின் போதிருந்த குலாங்குகளில் (Gulags) உயிரிழந்த அல்லது கொல்லப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் பல சோவியத் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் புகைப்பட நிபுணர்களின் கைவிடப்பட்ட படைப்புகளை மறுஆக்கம் செய்திருப்பதன் மூலமாக, அவற்றை கிங் காப்பாற்றி இருக்கிறார்.

பாரம்பரிய வார்த்தைகள் அளிக்கும் "அற்புதமான" ஒரு வாசிப்பு அனுபவத்தை இப்புத்தகத்தால் அளிக்க முடியாது என்பதை கிங் முற்றிலும் நன்றாகவே அறிந்திருக்கிறார் என்பது உண்மையே. அவருடைய அறிமுக உரையில் அவர் எழுதுகையில், “இதன் வழியாக செல்வது அவ்வளவு எளிதல்ல என்று வாசகர் எச்சரிக்கப்படுகிறார். இந்த பக்கங்களில் கொண்டு வரப்பட்டிருக்கும் நான்கு தசாப்தங்களில், மூன்று யுத்தங்கள், இரண்டு பஞ்சங்கள் மற்றும் ஒரு சர்வாதிபத்திய சர்வாதிகாரம் ஆகியவற்றின் விளைவுகளால் மில்லியன்கணக்கான ரஷ்யர்கள் பாதிக்கப்பட்டார்கள். லெனின் மரணத்திற்குப் பின்னர், ஸ்ராலின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதைக் கொண்டு சாதாரண குடிமக்களின் வாழ்க்கை அவரால் சின்னாபின்னமாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, ஓர் உயர்மட்ட கம்யூனிஸ்ட்டை கைது நடவடிக்கைகள், விசாரணைகள், சித்திரவதைகள் போன்ற கொடுமைகளுக்குள் உள்ளாக்கினார்—அதைத் தொடர்ந்து குலாங்கில் அல்லது துப்பாக்கிப் படையின் முன்னிலையில் பல கொடூரமான ஆண்டுகள் கடந்தன.” துல்லியமாக, இந்த சூழ்நிலைகளைத் தான் தம்முடைய வாசகர்கள் அவர்களுக்குள்ளாக கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்று கிங் விரும்புகிறார்.

ஒரு புகைப்பட புத்தகத்திற்குத் தேவையான அனைத்து தகுதிகளுடன் இந்த தொகுதி தொடங்குகிறது. 1900இல் இருந்து தொடங்கும் ஒரு புகைப்படத்தில் 澱arge haulers” அல்லது 天olga boatmen” என்றழைக்கப்பட்ட நைந்துபோன மக்கள், வோல்கா ஆற்றங்கரையோரம் நீண்ட பெரிய கயிறுகளால் ஆற்றிலிருந்து கப்பல்களை இழுக்கும் வேலையைச் செய்கிறார்கள்; அதேநேரத்தில் நேரடியாக அதைத் தொடர்ந்து வரும் புகைப்படங்களில், 1909இல் இரண்டாம் ஜார் நிகோலஸூம், ஜாரினா அலெக்சாண்டர் பியோடொரொவ்னாவும் அவர்களுடைய இரண்டு மூத்த மகள்கள் ஓல்கா மற்றும் தாட்ஜானாவுடன் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. கண்களைக் கசக்கும் இந்த சமூக முரண்பாடு ரஷ்யாவில்—அப்போது ஐரோப்பாவில் இது பெரும்பான்மை நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தது—வரவிருக்கும் புரட்சியை, உலகத்தையே உலுக்கவிருக்கும் ஒரு மாபெரும் எழுச்சியை வெளிப்படுத்திக் காட்டுகிறது. இங்கே, சோவியத் வரலாறின் பிந்தைய தசாப்தங்களின் "படக்காட்சி" மூலமாக அவருடைய முக்கிய கருவுருவைக் கொண்டு வர, 1917 பெப்ரவரி புரட்சி மற்றும் அக்டோபர் புரட்சி ஆகிய இரண்டையும் கொண்டு, முழு சக்தியைச் செலவிட்டுள்ளார்.

புரட்சிகர நாட்களின் புகைப்படத் தொகுப்பு என்பதால் மட்டும், இதுபோன்றதொரு மிகப் பலமான தாக்கம் உருவாகவில்லை. பல்வேறு செய்தியிதழ்களின் தலைப்பு பக்கங்கள், ஜோன் ரீட்டின் Ten Days That Shook the Worldஇல் இருக்கும் புத்தக மேலட்டைகள் மற்றும் ஒரு புரட்சிகர முற்போக்கு சிந்தனையாளர்கள் சங்கத்தின் பாத்திரத்தை அகழ்தெடுக்கும் புரட்சிகர எழுச்சிகளின் கலைத்துவ வடிவங்களை வெளிக்காட்டும் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகள் வாயிலாக கிங் நமக்கு கலைத்துவமான ஆதாரங்களையும் அளிக்கிறார்.

இதற்கும் கூடுதலாக, வெற்றிபெற்ற போல்ஷ்விக்குகளுக்கு அவர்களின் தலைவர்களின் நகலோவியங்களை (photographic portraits) உருவாக்குவது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறிருந்த 1918இல், பிரபல நகலொவிய நிபுணர் மோசெய் நப்பெல்பௌம் (Mosei Nappelbaum) அவர்களுக்காக லெனினின் மிக பிரபலமான ஓவியங்களில் ஒன்றை உருவாக்கினார். பின்னர் இதன் மில்லியன்கணக்கான நகல்கள் செய்யப்பட்டன. (1919இல் கிரெம்ளினில் எடுக்கப்பட்ட லெனினின் மற்றொரு நினைவில் இருத்தக்கூடிய ஓவியம், விக்டர் புல்லாஸிடமிருந்து வந்தது.) லெனின் புகைப்படங்களுக்கு அப்பாற்பட்டு, 1918 நவம்பரில் "Leaders of the Proletarian Revolution” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புகைப்படத் தொகுப்பையும் நப்பெல்பௌம் செய்தார். இதில் லெனின், ஜினோவெவ், லூனார்சார்ஸ்க்கி, டிரொட்ஸ்கி, கேமெனெவ் மற்றும் ஸ்வெர்ட்லொவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பின்னர் 1919இல், உள்நாட்டு யுத்தத்தின் போது தம்முடைய முழு சக்தியின் உச்சத்திலிருந்த செம்படையின் ஸ்தாபகரும், தலைவருமான டிரொட்ஸ்கியின் ஓர் அற்புதமான ஓவியத்தை அவர் உருவாக்கினார். ஒரு பெயர் அறியப்படாத கலைஞரால் தீட்டப்பட்ட 1920க்கு பிந்தைய ஓர் அரிய கூம்புவடிவ-கற்பனை ஓவியம் உட்பட, டிரொட்ஸ்கியின் அரசியல் வாழ்வின் பல்வேறு கட்டங்களிலிருந்து அவரைப் பற்றிய பல சுவாரசியமான வரலாற்று புகைப்படங்களையும் கிங் அளிக்கிறார். 1920களின் இறுதியிலிருந்து—லெனின் 1924இல் இறந்தார், படிப்படியாக, ஸ்ராலினைச் சுற்றியிருந்த குழுவால் டிரொட்ஸ்கியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன—டிரொட்ஸ்கியுடன் அல்லது "மக்களின் எதிரிகள்" என்றழைக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய எந்த விஷயமும் கைது நடவடிக்கையை, குலாங்கை அல்லது மரண தண்டனையையே குறித்தது.

டேவிட் கிங் அவருடைய பணியின் கணிசமான பகுதியைச் சோவியத் ஒன்றியத்தின் கலாச்சார மற்றும் கல்வித்துறை நிறுவனங்களுக்கு அர்பணிக்கிறார். இந்த விஷயத்தில் அனாடொலி லூனாசார்ஸ்க்கி ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். அவரும் அவர் மனைவியும் (பேசா பட நட்சித்திரம் நடாலியா ரோசேனெல்) சேர்ந்திருக்கும், 1920களின் மத்தியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் கிங் இதில் அளிக்கிறார். “நன்கு படிப்பறிவு பெற்ற, தீவிரத்தன்மை கொண்ட சமுதாய சூழலில் இருந்து லூனாசார்ஸ்க்கி வந்தார். மேலும் அவருடைய வித்தியாசமான பெரும் திறமைகள் அவரை புரட்சியின் மையத்தில் கொண்டு சென்று நிறுத்தியது・ என்று கிங் விளக்குகிறார்.

1917 நவம்பரில், கல்வித்துறையின் மற்றும் அறிவொளியின் முதல் கமிஷனராக லெனின் ஆவார் என்பதாக தெரிந்தது. ரஷ்யாவின் பரந்த எழுத்தறிவின்மைக்கு எதிராக ஒரு தீவிர பிரச்சாரத்தைத் திருப்பிவிட லூனாசார்ஸ்க்கி அவருடைய பதவியை முறையாக பயன்படுத்தினார். அவர் கல்விமுறையைச் சீர்திருத்தினார்; கற்பிற்கும் முறைகளை நவீனப்படுத்தியதுடன், வெகுஜன மக்களிடையே இசை, நாடகம், இலக்கியம், படக்கலைகள் ஆகியவற்றில் ஆர்வங்களை வளர்க்க ஊக்கப்படுத்தினார். 1929இல் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது, போதிய வயதடைந்திருந்த ஒவ்வொருவரும் படிக்க, எழுத, கணக்கிடத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.

பல்வேறு துறைகளில் கலையையும், வடிவமைப்பையும் ஒருங்கிணைப்பதற்கான யோசனையையும் லூனாசார்ஸ்க்கி ஊக்கப்படுத்தினார். எல் லிஸ்ஸிட்ஸ்கி, ஜூபோவ் பொபோவா, அலெக்சாண்டர் ரோட்சென்கோ, வார்வரா ஸ்டெபனோவா, விளாடிமீர் டாட்லின் மற்றும் அலெக்சாண்டர் வெஸ்னென் ஆகியோர் முற்போக்கு படைப்பாளிகளின் மத்தியில் முன்னனியில் இருந்த கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ஆவார்கள். இவர்கள் 1920களில் குறிப்பாக உயர்கலை மற்றும் தொழில்நுட்பத்திற்காகவே உருவாக்கப்பட்டதும், Vkhutemas என்ற பெயரில் அறியப்பட்டதுமான மாஸ்கோவிலிருந்த உயர்கலை மற்றும் தொழில்நுட்ப கலைக்கூடத்தில் படிப்பிக்கப்பட்டவர்கள். எவ்வாறிருப்பினும், முற்போக்கு படைப்பாளிகளின் இந்த முதலிட பரிசோதனைரீதியிலான கலைஞர்களும், எழுத்தாளர்களும் "சமுதாய யதார்த்தவாதம்" (social realism) என்றழைக்கப்பட்டதன் பிரதிநிதிகளால் விரைவிலேயே தொடர்ந்து விரோதமாக கருதப்பட்டார்கள். அத்துடன் 1930இல் Vkhutemas மூடப்பட்டது. முற்போக்கு படைப்பாளிகளில் இடம்பெற்றிருந்த பல சோவியத் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைப் போலவே, கலாச்சாரப் பிரச்சினைகள் என்று வந்த போது, லூனாசார்ஸ்க்கியும் அடிக்கடி குறுகிய-மனம் படைத்த போல்ஷ்விக்குகளுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டி இருந்தது. 1933இல் கடுமையான இதய கோளாறால் அவர் மரணமடைந்தார். வெகு விரைவிலேயே அதன்பின்னர் தொடங்கப்பட்ட ஸ்ராலினிய கொடூர நடவடிக்கைகளுக்கு ஆளாவதிலிருந்து அவருடைய தலைவிதி சந்தேகத்திற்கிடமின்றி அவரைக் காப்பாற்றியது.

இந்த கொடூரங்களை ஆவணப்படுத்துவதில் டேவிட் கிங் அவருடைய புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை ஒதுக்கியுள்ளார். இந்த தொகுதியின் தொடக்கத்தில், “The Butcher” என்ற தலைப்பில், ஸ்ராலினின் உள்ளதுஉள்ளபடியான ஒரு புகைப்படத்தை ஒருவர் பார்க்கலாம். இதைத் தொடர்ந்து, உஜ்பெக்கின் கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் புகைப்படங்களையும் மற்றும் (1930களின் தொடக்கத்தில்) பால்டிக் கடலையும், வெள்ளை கடலையும் இணைக்கும் திட்டமாக இருந்த ஸ்ராலின் பெலோமோர் கால்வாய் (Stalin Belomor Canal) கட்டமைப்பின் போது, பூஜ்ஜியத்திற்கும் கீழே இருந்த வெப்பநிலையில் வேலை செய்யும் தொழில் அடிமைகளின் ஒரு துருப்பையும் காணலாம்.

இந்த கால்வாயைக் கட்டும் போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். இது ஸ்ராலினால் பிரத்யேகமாக திறந்துவைக்கப்பட்டது. ஆனால் அது கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படாமலேயே போனது. 1930களில் இரகசிய போலிஸால் அமைக்கப்பட்ட ஒரு குழந்தைகள் காப்பகத்தில், "சோசலிச தாய்நாட்டு துரோகிகளின் குழந்தைகளைக்" காட்டும் போலிஸ் புகைப்படங்களின் ஒரு பக்கம், குறிப்பாக ஒரு சோக நிகழ்வை ஆவணப்படுத்துகிறது: தங்கள் பெற்றோரைக் குற்றஞ்சாட்ட (அவர்கள் உயிரோடு இல்லையென்றாலும் கூட) அவர்களுடைய ஆசிரியர்களால் இந்த குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆரம்பகால சோவியத் வரலாறின் அந்த காலக்கட்டத்திலிருந்த ஒட்டுமொத்த முரண்பாடுகளையும் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக, கலைத்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட முழு-வண்ண பிரச்சார சுவரொட்டிகளின் அப்போதைய முழக்கங்களை—சோவியத்・ ஒன்றியம் சர்வதேச சோசலிசத்தின் மையத்தில் இருக்கிறது", “சோவியத் அதிகாரமும், மின்வேக இயக்கமுமே கம்யூனிசம்" அல்லது "நம்முடைய மகிழ்ச்சியான சோசலிச நாடு வாழ்க! நம்முடைய அன்புக்குரிய, தலைச்சிறந்த தலைவர் ஸ்ராலின் வாழ்க!” என்பன போன்ற முழக்கங்களை—கிங் தொடர்ந்து உள்ளே நுழைக்கிறார். இவ்வாறு சோவியத் சோசலிச சர்ரியலிசத்தின் (Soviet socialist surrealism) இணை உலகை அடிக்கடி படம்பிடித்துக் காட்டுகிறார்.

1920களில் பேரழிவுமிக்க பஞ்ச அவலத்தையும், குலக்குகளைத் (kulaks) தூக்கிலிடுதலையும் சித்தரித்துக்காட்டும் புகைப்படங்களுக்கும் கூடுதலாக, 1936, 1937, 1938இல் மாஸ்கோவில்—இரகசிய போலிஸால்—குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களின் வழக்குகள் உட்பட, ஸ்ராலினிய கொடூரங்களின் மிக நாசகரமான எடுத்துக்காட்டுகளுக்கும் இதிலிருக்கும் படங்கள் ஆதாரமளிக்கின்றன. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான படங்களை முதன்முறையாக பார்க்க முடிகிறது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களை முறுக்கி, முற்றிலும் முட்டாள்தனமான, பகுத்தறிவிற்குப் பொருந்தாத வாக்குமூலங்களை அவர்களிடமிருந்து பெறுவதற்கு முன்னால், பாதிக்கப்பட்ட அவர்கள் சித்திரவதையால் படும் வேதனையின் அறிகுறிகளை முகங்கள் தெளிவாக காட்டுகின்றன. 1936 ஆகஸ்டில் நடந்த முதல் வழக்கில் (“டிரொட்ஸ்கி-ஜினோவெவ் பயங்கரவாத கரு・ என்று நன்கு அறியப்பட்ட வழக்கு) முதன்மை குற்றவாளியாக நிறுத்தப்பட்ட க்ரீகோரி ஜினோவெவ் போன்றவர்களின் முகங்கள் தெளிவாக தெரிகின்றன. இந்த முகங்கள் சிலநேரங்களில் கொடூரத்தன்மையையும், சிலநேரங்களில் சந்தேகத்தன்மையையும், ஆனால் சிலநேரங்களில் ஸ்ராலின் உத்தரவின் பேரில் நடந்த நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்றி பார்க்கும் பார்வையையும் கூட வெளிப்படுத்துகின்றன. ஆனால் இதில் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு இருந்தார்கள்.

ஸ்ராலினால் நடத்தப்பட்ட நான்காவது வழக்கு, இந்த முறை சோவியத் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் எதிராக நடத்தப்பட்டதாக கருதப்பட்டது. “சமுதாய யதார்த்தவாதத்துடன்" தம்மைத்தாமே இணைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்ததற்காக, 1936 ஜூனில் விசெவொலொட் மெயர்ஹோல்டு (Vsevolod Meyerhold) கைது செய்யப்பட்டார். கிங்கால் அளிக்கப்பட்டிருக்கும் மெயர்ஹோல்டின் போலிஸ் புகைப்படமும் கூட காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த சித்திரவதை, மிகச் சிறந்த நாடக இயக்குனரால் மெலோடோவிற்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் மிக துல்லியமாக விளக்கப்பட்டது. அதுவும் கூட இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது. மெயர்ஹோல்டு கைது செய்யப்பட்ட ஒருவாரத்திற்குப் பின்னர், அவரது மனைவியான நடிகை சினாய்டா ரெய்ச் கொலை செய்யப்பட்டார். மெயர்ஹோல்டும் 1940 பெப்ரவரி 2இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல தசாப்தங்களாக சைபீரிய ஆவணக்கிடங்கில் கிடந்த புகைப்படங்கள், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் ஜனநாயக இரகசிய சேவைப்பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. “ஒரு சிறப்பு இரயிலில் அவை மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டு, மீண்டும் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டது என்ற உண்மையிலிருந்து—இந்த புகைப்பட தொகுப்பைத் தொகுப்பதற்காக—அவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்பதை அளவிட முடியும்・ என்று கிங் எழுதுகிறார்.

1941 ஜூன் 22இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஹிட்லரின் தாக்குதலுடன், இந்த பரந்த நாட்டின் வரலாற்றில் மற்றொரு இரத்தந்தோய்ந்த காலக்கட்டம் தொடங்கியது. யுத்தத்திற்குத் தேவையான மக்களைத் திரட்ட வடிவமைக்கப்பட்ட அப்போதைய பல சுவரொட்டிகளுடன், “தந்தைநாட்டின் மிகப் பெரிய யுத்தம்" என்பதிலிருந்து கிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள், 18 மில்லியன் ரஷ்யர்களின் மரணத்துடன் (சில மதிப்பீடுகள் இதை 24 மில்லியனாக குறிப்பிடுகின்றன) முடிவுக்கு வந்த ஒரு கொடூர சம்பவத்தை ஆவணப்படுத்துகிறது. கிங் எழுதுகிறார்: “தொழில்துறை மற்றும் விவசாயத்தின் மறுகட்டமைப்பு நாட்டில் மிக பரந்த தேவையைத் தோற்றுவித்தது. சோவியத்தின் உள்கட்டமைப்பு நாசமான நிலையில் இருக்கிறது. 1700க்கும் மேலான நகரங்கள்/பெருநகரங்கள், அத்துடன் 65,000 கிலோமீட்டர் இரயில்பாதை, மருத்துவமனைகள், பாடசாலைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என்று நாஜிகள் முற்றிலுமாக அழித்திருந்தார்கள். ஒவ்வொன்றையும் புதிதாக உருவாக்க வேண்டி இருந்தது.” 1953இல் ஸ்ராலினின் மரணத்திற்குப் பின்னரும் கூட, ரஷ்யா பலவந்தமாக எதிர்கொண்ட கொடூரங்களில் இருந்து தன்னைத்தானே மெதுவாக மீட்டெடுக்க தொடங்குவதற்கு முன்னர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கால அவகாசம் தேவைப்பட்டது.

கிங்கின் சோவியத் ஒன்றிய "புகைப்பட" வரலாறிலிருந்து சில முக்கிய விபரங்கள் குறைவதாக சில வாசகர்கள் நிச்சயமாக வருந்தக்கூடும். எடுத்துக்காட்டாக, சோவியத் கலையின் சினிமாத்துவ பக்கத்தை ஆசிரியர் பெரும்பாலும் முற்றிலுமாக விட்டுவிட்டார் என்பதே இதற்கு போதுமானது. ஆனால் இதில் நின்றுவிடாமல், RedStar Over Russia அதன் படங்கள் மற்றும் எழுத்துக்களின் மூலமாக இருபதாம் நூற்றாண்டில் (நடெஜ்டா மென்டெல்ஸ்டம் குறிப்பிட்டது போல, “ஓநாய்களின் நூற்றாண்டில்・ அல்லது கண்ணீரின்・ நூற்றாண்டில்・) ரஷ்ய-சோவியத் வரலாறின் ஒரு முக்கிய பகுதியின் ஒப்பற்ற தோற்றப்பாட்டை அளிக்கிறது.

பதிப்புரிமை: அடெல்பெர்ட் ரெய்ப் மற்றும் Universitas இதழ். வெளியீடு: ஸ்டுட்கார்டின் எஸ். ஹெர்ஜெல் (http://www.hirzel.de/universitas/)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com