Wednesday, October 7, 2009

16 வயது பெண்ணுடன் காதல்: 13 வயதில் தந்தை ஆன பள்ளி மாணவன்.

இங்கிலாந்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் 16 வயது பெண்ணை காதலித்தான். அவர்களின் காதல் எல்லை மீறியது. உல்லாச வானில் இருவரும் சிறகடித்து பறந்தனர்.
இதனால் அப்பெண் கர்ப்பிணி ஆனாள். இதை அறிந்ததும் இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பவில்லை. இந்த நிலையில் அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 13 வயதில் தந்தை ஆனது குறித்து அந்த மாணவன் மகிழ்ச்சி அடைந்தான்.

இதுகுறித்து அம்மாணவனின் தந்தை கூறியதாவது:-

தற்போது “டீன்ஏஜ்” பருவத்தினர் தங்களின் பொறுப்பில் மிகவும் கவனமாக உள்ளனர். எனது மகன் இந்த வயதிலேயே மனமுதிர்ச்சி அடைந்துவிட்டான்.

அவன் 25 வயது வாலிபரை விட மிகவும் பொறுப்பான நல்ல தந்தையாக இருப்பான். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார்.

Read more...

மாகாண சபை உறுப்பினரின் வாகனம் மோதியதில் பொலிஸ் அதிகாரியின் மகள் பலி.

தென் மாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் வாகனம் மோதியதில் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சனி பெரேராவின் மகள், தரணி தனஞ்சனா பெரேரா எனப்படும் பிரஜாபதி கோதமி பாடசாலையில் கல்வி பயிலும் 6 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை முடிந்து பாடசாலைச்சேவை வானில் வந்திறங்கிய சிறுமி வீடுசெல்வதற்காக வீதியை குறுக்கிடுகையில் காலிநோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த குறிப்பிட்ட பஜரோ வண்டி மோதியதில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

வாகனச்சாரதியும் வாகனமும் களுத்துறை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

தலிபான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ ஐ.எஸ்.ஐ., உத்தரவு

இந்தியாவுக்குள் ஊடுருவுமாறு, பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., அமைப்பு, தலிபான்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, இந்திய புலனாய்வுத் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவ, தலிபான்கள் 60 பேர் தயாராக இருப்பதாக, புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. "இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை எனில், கைது செய்து சிறையில் அடைக்கப் போவதாக, தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ., மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள 350 தீவிரவாதிகளில், இந்த 60 பேர் அடங்குவர்' எனவும், புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.

இந்த ஊடுருவலைத் தடுக்க, சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டு எல்லையிலும், இந்திய ராணுவம், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

"தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ள இந்திய வீரர்களுக்கு, எதிர்வரும் 15 நாட்கள், மிகக் கடுமையான நாட்களாக அமையப் போகின்றன' என, புலனாய்வுத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் காஷ்மீருக்குள் தலீபான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Read more...

இடைத்தங்கல் முகாமில் உள்ள கர்ப்பிணித் தாய்மாரது குடும்பங்கள் விடுவிப்பு.

கர்ப்பிணித்தாய்மார் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் என 300 பேர் இன்று காலை செட்டிக்குளம் முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 275 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மிகுதி 25 பேரும் கிளி- முல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் வவுனியா அரச அதிபர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Read more...

வாவிமகள் இணையத்தள நாடாத்துனருக்கு கருணாவால் உயிர் அச்சுறுத்தல்.

வாவிமகள் எனும் இணையத்தளம் கருணா சார்பாக அவரின் விசுவாசிகளில் ஒருவரால் நாடாத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் மற்றும் கருணா தொடர்பாக இணையங்களில் வெளியாகியிருந்த உண்மைகளில் அதிர்ச்சி அடைந்திருந்த குறிப்பிட்ட நபர் இணையத்தளத்தில் செய்திகளை பதிவேற்றுவதில் அக்கறை காட்டதாது தனது சொந்த விவகாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தனது குடும்ப நிலைமைகளை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் ஏமாற்றுப் பேர்வழிகளின் வலையில் சிக்குண்டிராது மத்திய கிழக்குநாடு ஒன்றிற்கு சென்று தனது குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நோக்கில் குறிப்பிட்ட இழைஞன் சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்துவிட்டு கருணாவினுடனான தொடர்பை சிறிது குறைத்து ஒதுங்கி இருந்துள்ளார்.

ஜேர்மன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பியுள்ள கருணா குறிப்பிட்ட நபரை விலகிச் செல்வதற்கு எத்தனிப்பதை அறிந்து கொண்டதுடன் இளைஞனை அழைத்து, இணையத்தள செயற்பாடுகளை தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பாரிய விளைவுகளைச் சந்திக்கநேரும் எனவும் மிரட்டியதாகவும் தெரியவருகின்றது.

Read more...

புலம்பெயர்ந்த இலங்கையர் சம்மேளனம் நடாத்தும் கருத்தரங்கிற்கான அழைப்பிதழ்.

உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிகழ்கால, எதிர்கால வாழ்வு குறித்தும், இலங்கைவாழ் சிறுபான்மை மக்களின் சமஉரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்தும், புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் கடமைகள் மற்றும் ஒத்துழைப்புக்களின் அடிப்படையிலான
அழைப்பிதழின் மேல் கிளிக்செய்யுங்கள்

Read more...

Tuesday, October 6, 2009

சுவிஸ்வாழ் புங்குடுதீவு சுரேஸின் சுத்துமாத்துக்கள் ஆதரங்களுடன் சட்டத்தின் முன்..

புலிகளுடன் இணைந்து போராட்டத்தின் பெயராலும் மக்களின் பெயராலும் பல கோடி ரூபாய்களை சுருட்டிய பேர்வழிகளில் சுவிஸ்வாழ் புங்குடுதீவு சுரேஸ் எனப்படுபவரும் குறிப்பிடத்தக்கவர் ஆகும். இவர் கடந்த காலங்களில் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களிடம் பலவகையான செயற்திட்டங்களைக் கூறி பல லட்சத்கணக்கான சுவிஸ் பிராங்குகளை கையாண்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

சுரேஸினுடை ஏமாற்று வித்தைகள் தொடர்வதை அவதானித்த இணையத்தளங்கள் மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு இவர் கடந்தகாலங்களில் மேற்கொண்டாக கூறப்படும் ஏமாற்றுக்களை நிரப்படுத்தி செய்திகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இச்செய்திகள் உண்மைக்கு புறப்பானவை என மக்களுக்கு விளக்கம் கொடுக்க முற்பட்ட சுரேஸ், இவர் தொடர்பான செய்திகளை தொடர்ச்சியாக வெளிக்கொணர்ந்த அதிரடி இணையத்தளத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக, மக்களுக்கு தெரிவிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்கம் இலங்கையில் செயலிழந்த பின்னர், இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு உதவபோவதாக சுரேஸ் சுவிஸ்வாழ் மக்களிடம் நிதிதிரட்டி மோசடி செய்துள்ளார். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் என்ற அமைப்பின் பெயரால், இவரிடம் வழங்கப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்பதை உணர்ந்த மக்கள் அவரை நெருங்கி வழங்கிய பணத்திற்கு நேர்ந்த கதி என்ன என கேட்டபோது, அந்நிதி வவுனியா கோவில் குளத்தில் உள்ள சிவன் கோயில் நிர்வாகத்தினர் ஊடாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனுக்கு செலவிடப்படுவதாக தெரிவித்தள்ளார். இவற்றை அறிந்த சுவிஸில் உள்ள பொதுநலன் விரும்பிகள் சிலர் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட புங்குடுதீவு சுரேஸ் என்பவரால் ஆலய நிர்வாகத்தினருக்கு இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளதா என வினவியபோது அவர்கள் அவற்றை முற்றாக மறுத்துள்ளனர்.

அதையடுத்து ஆலய நிர்வாகத்தினருக்கு சுரேஸின் ஏமாற்று வித்தைகள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பெயரால் ஏமாற்றும் இப்பேர்வழிகள், தமது ஏமாற்று வித்தைகளுக்கு புனித ஆலயங்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வதை ஏற்க முடியாது என தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர், குறிப்பிட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சுவிஸ்வாழ் நலன் விரும்பிகளை கேட்டுள்ளனர்.

அவ்வாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாட்சியங்கள் திரட்டப்பட்டு சுரேஸை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சுவிற்சர்லாந்தில் ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வவுனியா சிவன் கோவில் நிர்வாகத்தினர் ஊடாக தான் மக்களுக்கு உதவி புரிவதாக சுரேஸ் மக்களிடம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் பலவும் திரட்டப்பட்டுள்ளதுடன், பல மக்கள் சுரேஸூக்கு எதிராக சாட்சி சொல்லவும் ஆர்வமாக உள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் ஓருவர் சுட்டுக்கொலை.

பூந்தோட்டம் சீநகர் பிரதேசத்தில் சந்தேத்திற்கு இடமான மூவர் நடமாடியுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் அவர்களைச் சுற்றிவளைத்தபோது, ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை மக்களுக்கு காட்டி விரட்டி விட்டு, அம்மூவரும் அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளனர்.

சம்பவம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது அப்பிரதேசத்தை சுற்றி வளைத்த பொலிஸார் அம்மூவரையும் இனங்கண்டு அவர்களை அணுகிய போது, துப்பாக்கிதாரி பொலிஸாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது, திருப்பி பொலிஸார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கிரேனேட் ஒன்றை பொலிஸார் மீது வீசியபோது, அக்குண்டு வெடிக்கவில்லை எனவும் அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

பிரிட்டிஷ் அமைச்சர் /போஸ்டர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம்

மன்னாருக்கும் சென்று நிலைமைகள் ஆராய்வு.
சரணடைந்த புலிகளுடனும் கலந்துரையாடல்.


இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபோஸ்டர் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு முகாம்களுக்கு விஜயம் செய்தார்.

சர்வதேச அபிவிருத்திக்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் மைக்ஃபோஸ்டர் நேற்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

எம். ஏ. ஜி. என்ற அமைப்பினர் நிலக்கண்ணி வெடி, மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதிக்கும் சென்று அவற்றின் பணிகள் குறித்தும் ஆராய்வார். மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான முன்னேற்பாடுகளாக நடைபெறும் மிதிவெடிகள் அகற்றும் பணியின் முன்னேற்றங்கள் குறித்து கண்டறியும் அவர் மெனிக் பாஃம் வலயம் இரண்டுக்கும் விஜயம் செய்வார்.

இங்கு பிரிட்டனின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வடிகாலமைப்பு மற்றும் சுகாதார சேவைகளின் நடவடிக்கை கள் பற்றியும் ஆராய்வார்.

பிரிட்டனின் நிதி உதவியின் கீழ் இயங் கும் சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு முகாம்களுக்கும் விஜயம் செய்தார். இறுதியாக பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு சென்ற அவரை அங்குள்ள சிறுவர், சிறுமியர்கள் வரவேற்ற னர்.

சரணடைந்தவர்களுள் சிறுமிகள் மற்றும் யுவதிகளின் தையல் கண்காட்சிகளையும் பார்வையிட்டார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் மைக் போஸ்டருடன் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் கலாநிதி பீட்டர் ஹேய்ஸ் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் தள்ளாடி முகாமுக்குச் சென்றார்.

நன்றி தினகரன்

Read more...

புளொட் தலைவர் சித்தார்த்தனது பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சித்தார்த்தன் அவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று நண்பகல் உடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திரு. சித்தார்த்தன் அவர்களது பாதுகாப்பிற்காக நான்கு பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தனர், அவர்களில் ஒருவர் கடந்த 14 வருடங்களாக சித்தார்த்தன் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது. அத்துடன் வடகிழக்கில் இயங்கிவரும் ஈபிஆர்எல்எப், புளொட் அமைப்பு காரியாலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Read more...

ஐ.தே.க வேட்பாளர் ஆயுதமுனையில் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

தென்மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கப்படன் உதய திசாநாயக்க இனந்தெரியாக ஆயுததாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள அவர் மாத்தறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.

Read more...

இடைத்தங்கல் முகாம்களில் 1207 குழந்தைகள் பிரசவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இரு சிப்பாய்களை கைது.
வவுனியா இடைத்தங்கல் முகாமொன்றில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இரு சிப்பாய்களை இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சகத்தின் செயலர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இடைத்தங்கல் முகாக்களில் உள்ள மக்களில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இடைத்தங்கல் முகாம்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கிய பத்திரிகையாளர் மாநாட்டில், இதுவரை இடைத்தங்கல் முகாம்களில் 1207 குழந்தைகள் பிரசவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Read more...

த.தே.கூ - மு.கா கூட்டுமன்னணியுடன் இணையும் நோக்கம் இல்லை என்கின்றார் பிள்ளையான்.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ளதாக கூறப்படும் கூட்டுடன் சேரும் நோக்கம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என்ற அடிப்படையில் ரவுப் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நாடாத்தியுள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்முயற்சி கலந்துரையாடல் நிலையிலேயே இருக்கின்றபோதும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தமிழ் கட்சிளுடன் இணைவதிலும் பார்க்க எதிர்கட்சி அல்லது ஆளும் கட்சிகளுடன் இணைவது மிகுந்த பலனை கொடுக்கும் என்பது அவர்களது கருத்தாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read more...

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் ஒத்துழைக்கும். (திருத்தம்)

இலங்கையின் நிலமைகள் மோசமடைந்து வருகின்றபோதிலும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒத்துழைக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான இராஜதந்திர குழுவின் தலைவர் Bernard Savage தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற CIMA வர்த்தக கருத்தரங்கில் பேசும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார் .

Read more...

Monday, October 5, 2009

நோர்வே உளவுத்துறையினரின் வலையில் புலிகள்.

நோர்வேஜியர் இனவாதிகள் என்கின்றனர் நோர்வே தமிழர் அவையினர்:

நோர்வே மக்கள் இனவாதிகள் எனும் தொனியில் சிறுபாண்மை இனங்களுக்கான நோர்வேஜிய மொழியில் வெளிவரும் உத்துறுப் எனும் பத்திரிகையில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களால் எழுதப்பட்டதை தொடர்ந்து, நோர்வேஜிய மக்கள் நோர்வே தமிழரை உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் மனித நாகரிகம் அற்ற பிறவிகள் எனும் தொனியில் அந்நாட்டு ஊடகங்களில் வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட பத்திரிகை நோர்வே நாட்டில் வாழுகின்ற சகல சிறுபாண்மை இனங்களுக்குமான தமது சுதந்திரமான கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கான தளமாக அமைந்துள்ளது. இப்பத்திரிகைக்கான பூரண ஆதரவும் அனுசரணையும் அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தம்மை முன்னிறுத்திய புலிகள், தமிழ் மக்களின் கருத்துக்களாக தமது கருத்தினை இப்பத்திரிகையூடாக அந்நாட்டு சமூதத்திற்கு வழங்கி வந்திருந்தனர். புலிகள் சார்பாக புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் மயூரன் என்பவர் உத்துறுப் பத்திரிகையில் கடந்த பல வருட காலங்களாக செயலாற்றி வருகின்றார்.

இப்பத்திரிகையின் தமிழ் செய்தி நிர்வாகப் பொறுப்பாளரான மயூரன் நோர்வேயில் புலிகளால் நிறுவப்பட்டுள்ள நோர்வே மக்களவையின் முன்னணிச் செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். அதேநேரம் குறிப்பிட்ட மக்களவையில் பேச்சாளர் கந்தையா நோர்வேயில் கடந்த இரண்டுவாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது என தமிழ் மக்களை மிரட்டியிருந்தார். இவருடைய இவ்வேண்டுகோளானது சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் நோர்வே பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

தமிழ் தலைமைகள் இலங்கை மக்களுக்கு இனவாதம் கற்றுக் கொடுத்தாற்போல் குறிப்பிட்ட நோர்வே தமிழர் அவை நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய எதிர்ப்பு வாதத்தை புகட்ட முனைகின்றதா என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் தமது பார்வையை திருப்பியுள்ளனர்.

இவ்வாறு புலிகள் தமிழ் மக்கள் தஞ்சம் பெற்றுள்ள நாடுகளில் பொறுப்புணர்சி அற்று செயற்படுகின்றபோது அவற்றை மக்கள் தக்க சமயத்தில் இனம் கண்டு தடுத்து நிறுத்தாது அல்லது தட்டிக்கேட்காது போனால் இலங்கையில் புலிகளியக்கத்திற்கு நிகழ்ந்த வரலாறு ஐரோப்பிய மண்ணில் வாழும் அனைத்துப் புலிகளுக்கும் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, என்பதுடன் அது தமிழ் மக்களின் இருப்பையும் காவு கொள்ளும் நிலை தோண்றும் எனவும் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com