Tuesday, September 22, 2009

வவுனியாவில் இரு பெண் தற்கொலைதாரிகள் கைது ஒருவர் ஸ்தலத்தீலேயே தற்கொலை.

வவுனியா உப்புளும பிரதேசத்தில் தற்கொலைதாரிகள் என சந்தேகிக்கப்படும் இரு பெண்புலிகளை பொலிஸார் கைது செய்தபோது அவர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலிப்பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா விரைந்த காலி விஷேட பொலிஸ் பிரிவினர், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியுடன் குறிப்பிட்ட பெண்புலிகள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்தபோது ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இவ்வீடு புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் நெருப்பு என்பவருக்கு சொந்தமானது எனவும், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதைத்து வைத்திருந்த தற்கொலை அங்கிகள் 3, சீ4 ரக வெடிமருந்துகள் 6 கிலோக்கிராம், டெற்னேற்றர்கள் 10 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, September 21, 2009

ரிஆர்ஓ ரெஜியை பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவு.

புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜியை பிரித்தானியாவை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் பணித்துள்ளதாக தெரியவருகின்றது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்
மக்களிடமும், பல உதவி நிறுவனங்களிடமும் தமிழ் மக்களின் அவலங்களின் பெயரால் பல கோடி ரூபாய்களை வசூலித்து அப்பணத்தை கொண்டு உலகில் முதல்தர பயங்கரவாதிகளாக இனம்காணப்பட்டிருந்த புலிகள் அமைப்பிற்கான ஆயுதக்கொள்வனவிற்கு பயன்படுத்தியதான குற்றச்சாட்டு ரிஆர்ஓ அமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பல நாடுகள் ரிஆர்ஓ வின் சொத்துக்களை யும் பணத்தையும் முடக்கியுள்ள நிலையில் இலங்கையில் ரிஆர்ஓ அமைப்புக்கு எதிரான பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை நீதிமன்றில் இவ்வழக்குகள் தொடர்பாக நீதிமன்றில் ஆஜராகுமாறு ரெஜிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமது நியாயங்களை நீதிமன்றில் நிரூபிக்க முடியாதவர்களாக குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான ரெஜி பிரித்தானியா தப்பிச் சென்றதுடன் அங்கு அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.

மக்களுக்கான நிவாரணப் பணிகளின் பெயரால் அறவிட்ட பணத்தைக் கொண்டு புலிகளின் துணைப்படையாக செயற்பட்டு அதே மக்களினது உயிர் உடமைகளுக்கு அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த மேற்படி நபரை பிரித்தானியா அரசு வெளியேற உத்தரவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

உலகில் உள்ள பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்க உலக நாடுகள் கங்கணம் கட்டி நிற்கும் வேளையில், இலங்கையில் செயற்பட்டுவந்ததும் உலகில் முதல்தர பயங்கரவாதிகள் என இனங்காணப்பட்டிருந்ததுமான புலிகளியக்கம் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வியக்கம் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கான முழுப்பொறுப்பும் உலகநாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுள்ளபோதும் வெளிநாடுகளில் உள்ள புலிகள் தொடர்ந்தும் இலங்கையின் இயல்பு நிலையை குழப்பி மீண்டும் தலைதூக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர். அதற்காக வெளிநாடுகளில் உள்ள புலிகள் தமது முழுப் பணப்பலத்தையும் பிரயோகிப்பதற்கு தயராகவுள்ளனர். அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள புலிகளை கண்காணித்து அவர்களை அந்தந்த நாடுகள் முடியுமானவரை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களது பயங்கரவாதத்தை நோக்கிய செயற்பாடுகளை முடக்கவேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் மேற்கொண்டுவரும் போரில் வெற்றி கொள்ள முடியும்.

அந்தவகையில் பிரித்தானியா ரெஜி யை வெளியேறுமாறு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி உண்மையானால், பிரித்தானியா உலகில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் நேர்மையாக இருப்பதாக கருதமுடியும். ரெஜி போன்றவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்து மீண்டும் இலங்கையில் பயங்கரவாதம் வளர்வதற்கு அயராது உழைத்துவருவது தெளிவாகியுள்ள நிலையில் அவர்களது அச்செயற்பாடுகளுக்கு சுதந்திரமான தளம் வழங்காது, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் போது அவர்கள் இத்தனை காலமும் மனித குலத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்களுக்கு எதிராக சட்டம் அதன் வேலையை செய்யும்.

இவற்றை உணர்ந்து கொண்ட ரெஜி சில ஊடகங்களை நெருங்கி தனக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக காட்டி செய்திகளை வெளியிடும்படியும், பிரித்தானியா தனக்கு வெளியேற விடுத்துள்ள உத்தரவை விமர்சிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு இணங்க தேசம்நெற் இணையம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மனித குலத்திற்கு இழைத்த துரோகங்களை மறைத்து, ரெஜியை ஓர் சமூகசேவகனாக வர்ணிக்க முனைவது கேலிக்குரியதாகும். அத்துடன் இவ்வூடகத்தில் ரெஜி சார்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ள நபர் ரெஜி க்கு பிரித்தானியா விடுத்திருக்கு அறிவுறுத்தலுக்கு எதிராக மக்களை போராட்டம் நடாத்தவருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


பிரித்தானியாவின் குறிப்பிட்ட முடிவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதானது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது. எனவே உலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது மனித நேயம்மிக்கவர்களின் கடமையாகும். அந்தவகையில் பிரித்தானியா ரெஜி யை வெளியேற்ற முயற்சிக்குமாயின் அதற்கு அனைவரும் ஆதரவு வழங்கமுன்வரவேண்டும்.

அடுத்து ரெஜி க்கு இலங்கையில் எவ்வித உயிர் அச்சுறத்தல்களும் இல்லை என்பது அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கேபி கையாளப்படும் விடயத்தில் இருந்து தெளிவாகின்றது. கேபி கைது செய்யப்பட்டு அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறே ரெஜி யும் இலங்கை சென்றால் சட்டம் அவரை கையாளுமே தவிர அவருக்கு அங்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அத்துடன் அவர் வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கும் போது அது மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்

Read more...

டக்ளஸ் பீரிசுக்கு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது:

1988-1989 காலப்பகுதியில் இரு சகோதரர்களைக் கடத்தி ஒருவரைக் கொலை செய்ததாக காலி நீதிமன்றினால் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் மற்றும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் நீதிமன்று 5 வருட சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.

அத்தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் மனுவை விசாரித்த கொழும்பு உச்ச நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருவரையும் பத்துலட்சம் ரூபா பிணையில் விடுவித்ததுள்ளது.

குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளான ஜோசப் டக்ளஸ் பீரிஸ், காமினி ரத்நாயக்க, இகல பண்டிதகெதர ஜெயரத்ன, மகாதுரகே ரணதுங்க, ரஞ்சித் ஜெயசேகர ஆகியோர் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, சந்தேக நபர்களான பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிருபிக்கப்படும் வரை நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்காக உழைத்தவர்கள் எனவும் தற்போது அவர்களது உடல் நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பிணைவழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அங்கு ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி, குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு பிணை வழங்க முடியாது என தாமோதரம்பிள்ளையின் வழக்கு தீர்ப்பைச் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது அவர்கள் புரிந்துள்ள குற்றத்தின் பாரதூரத்தை எடுத்தியம்புகின்றது. எனவே சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க நியமிக்கப்படடிருந்த பொலிஸ் அதிகாரிகள் அதை துஸ்பிரயோகம் செய்துள்ளனர். ஆகவே அவர்களுடைய குடும்ப நிலைமை மற்றும் உடல் நிலைமைகள் இங்கு கருத்தில் கொள்ளக்கூடியவை அல்ல. புணம் இருக்குமானால் எவரும் நாட்டைவிட்டு தப்பி ஓடி விடலாம். அவர்களுக்கு அவ்வாறு நோய்கள் இருப்பின் அது சிறைச்சாலை திணைக்களத்தினால் கையாளப்படும் எனவும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

எவரையும் சட்டத்தை தனது கையில் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நிமால் தம்புவாசம், குற்றவாளிகள் 2001ம் ஆண்டில் இருந்து 35 தடவைகள் தவறாமல் நீதிமன்றிற்கு சமுகமளித்திருக்கின்றனர். அத்துடன் சந்தேக நபர்களான பொலிஸ் அதிகாரிகள் நாட்டை பயங்கரவாதம் பீடித்திருந்தபோது தமது சேவையை நாட்டிற்கு வழங்கியுள்ளனர். அவர்களின் சேவையையும், அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்களையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கு பிணை வழங்குகின்றேன் என தெரிவித்தார்.

Read more...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளருக்கு விளக்கமறியல்.


தென்மாகாண சபைத்தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் நிசாந்த முத்துகெட்டிகமவை நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

காலி மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களான அனர்கலி அவர்களுக்கும் நிசாந்த முத்துகெட்டிகம அவர்களுக்கும் பிரதேசத்தில் ஏற்பட்ட போட்டி மோதல்களில், நிசாந்த முத்துகெட்டிகம தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக அனர்கலி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இம்முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றில் பொலிஸார் வழக்கு முத்துகெட்டிகமவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தபோது நிசாந்த முத்துகெட்டிகம நீதிமன்றில் ஆஜராகி இருக்காமையை இட்டு அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் ஆஜரான அவரை நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்திருந்தது.

நீதிமன்றில் பிணையை பெற்று வெளியேறிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நிசாந்த முத்துகெட்டிகம, பொலிஸார் தனது விடயத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தன்னை விளக்க மறியலில் வைக்க அவர்கள் முயற்சிப்பதாகவும் தெரிவித்த அவர், அவ்வாறு தன்னை ஒரு நாள்தன்னும் விளக்க மறியலில் வைத்திருப்பார்களேயானால் விளைவுகள் விபரிதமாக அமைந்திருக்கும் என ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தார்.

அத்துடன் பொலிஸார், லஞ்சம் வாங்குதல் சித்திரதைசெய்தல், பொய்குற்றஞ்சுமத்துதல், ஊழல்பேர்வழிகளுக்கு துணை புரிதல் போண்ற பல மோசடிகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட அவர் மாகாண சபைகளுக்கு உரிய பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்காவிட்டாலும் இன்னும் 21 நாட்களில் அவ்வதிகாரங்களை தென்மாகாணசபை தனது கைகளில் எடுத்து பொலிஸாருக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் என்பதை பொலிஸார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர் பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதாகவும் தனக்கு ஜனாதிபதி மஹிந்த அவசியமே தவிர பொலிஸ் மா அதிபர் அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் பொலிஸார் ஒழுகங்காக தமது கடமைகளை நிறைவேற்றாதவிடத்து காலி மாவட்டத்தில் உள்ள அனைந்து பொலிஸ் நிலையங்களுக்கும் கட்டாய லீவு வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இவருடைய மேற்படி கருத்துக்கள் தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டது. பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நிசாந்த முத்துகெட்டிகமவை கைது செய்த பொலிஸார் அவரை இன்று காலி நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது அவரை நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Read more...

உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வெற்றிக் கிண்ணத்தை தட்டிக்கொண்டது.

திருக்கோவில் பிரதேச வினாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற, அணிக்கு ஏழு பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கெற் சுற்றுப் போட்டியில் மொத்தம் 26 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. இறுதிப் போட்டிக்கு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகமும் தெரிவுசெய்யப்பட்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களை அபாரமாக குவித்தது. இதில் 14 பந்து வீச்சுகளுக்கு 47 ஓட்டங்களை சின்னத்தம்பி துஸ்யந்தன் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எதிரொளி அணியானது தயாநிதி சுதர்சன் அவர்களின் அதிவேக பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 3.4 பந்துவீச்சுகளில் சகல விக்கற்றுக்களையும் இழந்து 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இப் போட்டியில் ஆட்டநாயகனாக துஸ்யந்தன் மற்றும் தொடராட்ட நாயகனாக மின்னொளி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ்விறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனிய பாரதி அவர்கள் வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.
திருக்கோயில் நிருபர்


Read more...

நாடுகடந்த தமிழீழம் தாயக உறவுகளின் துயரினை போக்குமா? கனடாவில் புளொட் துண்டுபிரசுரம்!

நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் என்று புலிகள் கோரியபோது அங்கே வந்திருந்த புளொட் உறுப்பினர்களும் நாங்களும் ஜனநாயக முறையில் எமது கருத்துக்களை மக்களுக்கு தெளிவுட்டவே வந்துள்ளோம் என்று தெரிவித்து தாங்கள் கொண்டு வந்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகம் செய்தனர்.

அத் துண்டு பிரசுரங்களை வாங்கி கொண்ட மக்கள் இப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் கனடாவில் பிறந்துள்ளது என்றும், இதில் கூறப்பட்ட விடயங்களில் எந்தவொரு தவறினையும் காணவில்லை. நடந்த சம்பவங்களையும், தமிழீழம் என்ற பெயரில் மக்களிடம் சேகரித்த பணங்கள் தனிநபர் கைகளில் சிக்கியுள்ளதையும், தமிழீழத்திற்காக தம்முயிரை அற்பணித்த மாவீரர்கள் அவர்தம் குடும்பங்கள் வறுமையிலும், துன்பத்திலும் வாடும்போது இந்த பணம் அந்த மக்களை சென்றடையாமல் இங்கே வாழும் சில சுயநலவாதிகளின் கைகளிற்கு சென்றுவிடக்கூடாது. இதனைத்தானே புளொட் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர் இதில் தவறு எதுவும் இல்லையே என்று அங்கு கூடியிருந்த மக்கள் பலர் பேசிக்கொண்டதையும் காணமுடிந்தது.

முதன் முறையாக புலிகளின் ஆதரவாளர்களால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது இதுவே கனடாவில் இடம்பெற்ற முதல் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கனேடிய தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான மாற்றமாகும். முக்கள் தங்கள் கருத்துக்களை தாங்களே கூறுவதற்கும், மற்றைய செய்திகள், கருத்துக்கள், விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு விடுக்கப்பட்ட திறவுகோலகவும் அமைந்துள்ளது.

இத்துடன் புளொட் இயக்கத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரால் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் முழுமையான பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.


நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா?

அன்பார்ந்த தமிழ்மக்களே விழிப்பாக செயற்படுங்கள். யார் இந்த நாடுகடந்த தமிழீழத்தை பிரகடனப்படுத்தபவர்கள் என்பதை அறிந்து கொண்டு செயற்படுங்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழம் என்று கூறி நமது இனத்தை, சொத்துக்களை, சொந்தங்களை அழித்துவிட்டு இறுதியில் இங்கிருந்து கொண்டு பிழையாக வழிநடாத்தி விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழித்த இந்த கூட்டத்தினர் இறுதியில் இன்று 'நாடு கடந்த தமிழீழம்' என்ற போலி நாடகத்தை புலம்பெயர் தேசத்தில் அரங்கேற்றி மக்களின் பணத்தை அபகரிப்பதற்காக மேற்கொள்ளும் நாடகமே இந்த புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்ளும் புதிய நாடகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புலம்பெயர் நாடுகளில் தாம் தமது குடும்பம் என்று பாதுகாப்பாக இருந்துகொண்டு எமது மக்களையும், மக்களின் சுயகௌரவத்துடன் வாழ்தலுக்கான போராட்டத்தையும் சிதைவடைய செய்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அந்த மக்களை துன்பபடுத்த மேற்கொள்ளும் அரங்கேற்றங்களே இவ்வாறான அர்த்தமற்ற அறிக்கை போராட்டங்கள். தமிழீழம் என்ற போர்வையில் எமது மக்களை கடந்த இரு தசாப்த காலங்களிற்கு மேலாக உண்மையை பேசவோ, பிழையை தட்டிக்கேட்கவோ, விமர்சனங்களை வெளிப்படுத்தவோ முடியாத ஒர் இனமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒர் இனமாகவே நடாத்திவந்த இந்த கொள்ளை கூட்டம் மீண்டும் மீண்டும் நமது இனத்தை கூறி பிழைப்பு நடாத்துவதற்காகவும், தேடிய சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காக மேற்கொள்ளும் தந்திரங்களேயாகும்.

நமது இனம் சுதந்திரமாக, சுயகௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட எமது மக்களின் விடுதலைப் போராட்டம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் இவ் பிழையான கூட்டங்களின் வழிகாட்டுதலினால் திசைமாற்றப்பட்டு திசை தெரியாமல் இறுதியில் வன்னி மண்ணில் அஸ்தமித்துள்ளது. பணத்தையே கொள்கையாக கொண்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்த கூட்டத்தினர் வடக்கு கிழக்கு எமது தாயக தேசத்தில் என்ன நடக்கின்றது என்பதை சுதந்திரமாக அறிந்து கொள்ளமுடியாத நிலையை உருவாக்கி ஊடக சுதந்திரத்தையே மறுதலித்து சுதந்திரமான செய்திகளை வெளியிட்டுவந்த ஊடகங்களை பயமுறுத்தி ஒர் அச்சநிலையில் வைத்துக்கொண்டே தமது வசூலிப்புக்களை கனேடிய மண்ணில் மேற்கொண்டனர் என்பதை யாவரும் அறிவர்.

கடந்த ஆண்டு ஒரு வருடங்களுக்கு மேலாக வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான உண்மை செய்திகளை மழுங்கடித்து இராணுவத்தின் முன்னேற்றத்தை முறியடித்து போராளிகள் போரிடுகின்றனர் என்றும், அர்த்தமற்ற அரசியல் ஆலோசனைகளை கூறியும் எமது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திய இந்த கூட்டத்தினர் இறுதியில் வன்னியில் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் அழிக்கப்படும்வரை ஊடகம் என்ற பெயரில் உலாவரும் கொள்ளை குழுவினரின் ஊடகங்கள் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். விடுதலை என்ற பெயரில் சிங்கள அரசுகளுடன் புலிகள் கொண்ட இரகசிய பேச்சுக்கள், பேச்சுவார்த்தை நாடகங்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, நினைவுமீட்டி பாருங்கள்.

* 1980ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு காலப்பகுதிவரை சரியானபாதையில் சென்ற எமது மக்களின் விடுதலை போராட்டத்தையும், புலிகளின் விடுதலை பாதையையும் பிழையான பாதைக்கு இட்டுச்சென்றவர்கள்தான் இந்த கூட்டத்தினர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

* 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது மக்களிற்கு கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண அரசையும், 13வது திருத்த சட்டமூலத்தையும் பிரேமதாசா அரசுடன் கூட்டமைத்து குழப்பியவர்கள்தான் இந்த கூட்டத்தினர்.

* 1987ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சகல அரசியல் தீர்வுகளையும், பிரபாகரனையும் விடுதலைப்புலி அமைப்பையும் தூண்டிவிட்டு குழப்பியவர்கள்தான் இவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரபாகரன் தனது பிழைகளை திருத்தி கொள்வதற்கு விடாது தேசியத் தலைவர் என்ற மாஜையான பதவியை கொடுத்து தொடர்ந்து அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பாரிய பிழைகளை இழைக்க தூண்டி பிரபாகரனின் அழிவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவிற்கும் எமது மக்களின் அழிவிற்கும் வழிகோலியவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* தமிழ் மக்களின் ஒப்பற்ற அரசியல் தலைவர், புத்திஜீவிகள், சகல போராளிகள், சக போராளி அமைப்புக்களின் தலைவர்கள், நாட்டு பற்றுக்கொண்ட தமிழ்மக்கள் என எல்லோரையும் புலிகளைக்கொண்டு துரோகி என்ற பட்டம் கொடுத்து அழிப்பதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் இவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் மிரட்டியும், ஏமாற்றியும் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை தமது பெயர்களில் வைத்துக்கொண்டுள்ள இவர்கள், அவ் சொத்துக்களை தாமே அபகரிக்க ஆடும் நாடகமே இந்த நாடுகடந்த தமிழீழம் என்பதை மறந்துவிடாதீர்கள். இனியும் இலங்கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் வரவிடாமல் தடுப்பதற்கும், முகாம்களில் அல்லல்படும் எமது தமிழ்மக்களை மேலும் மேலும் துன்பப்பட வைத்து அதில் தமது அரசியல் இலாபம் தேட முயலும் கூட்டமே இவர்கள்.

* இவர்களின் இந்த நடவடிக்கை மூலம் சிங்கள கடும்போக்காளர்களை கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தைக்கொடுத்து எந்தவொரு அரசியல் தீர்வும் இலங்கையில் வராது தடுப்பதன் மூலம் தமிழ்மக்களுக்கு சொந்தமான புலிகளின் சொத்துக்களை தாம் தமது பெயர்களில் தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்கு ஆடும் நாடகமே இது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

* புலிகளிடம் இருந்த சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு புலிகளின் பிழையான போராட்டத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும், புலிகளினால் வலுக்கட்டயாமாக போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பத்திற்கும் அங்கவீனமாக்கப்பட்ட போராளிகளின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டும் என இந்த கூட்டத்திற்கு அந்த பணத்தினை உண்மையான போராட்டத்திற்கு என நம்பி இவர்களிடம் பறிகொடுத்த மக்களாகிய நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்றும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தாமல், அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும், வைத்தியசாலைகளிலும் அல்லும் பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கி, அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்துவோம். கடந்த பல ஆண்டுகளாக ஆயுததாங்கிய போராட்டம் ஊடாக எமது உரிமையை வென்றெடுக்கலாம் என்று நம்பி ஏமாற்றப்பட்டதுபோல் இனிமேலும் ஏமாராது சரியான பாதையில் சரியான இலக்கை நோக்கி செயற்படுவோம்.

சகல சௌபாக்கியங்களுடன் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு எமது மக்களை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்காமல் அவர்கள் பட்டவேதனைகள், துன்பங்களில் இருந்து விடுபட்டு ஒர் மனித இனமாக வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்போம்.


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-கனடா


Read more...

Sunday, September 20, 2009

ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை நவீன பிரபாகரன் என்று கூறிய ஈரோஸ் தலைவர்(?) பிரபாகரன் யார்..??

மீண்டும் ஒரு நவயுக பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. இவரது தலைமையிலான ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் செய்யும் கடத்தல்கள்இ கொலைகள்இ கொள்ளைகள் கட்டுக்கடங்காதவை. அதேபோன்று புளொட் அமைப்பினர் வவுனியாவில் செய்யும் கடத்தல்கள், கொலைகளும் கட்டுக்கடங்காதவை. இந்த அமைப்புக்கள் இரண்டுமே அராஜக ஆயுதக்குழுக்களாகும்.

புளொட்இ ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டு இயங்குபவர்களே. ஆனால் நாம் தனித்தே இயங்குபவர்கள். நாம் வெளிநாட்டில் செய்துள்ள சில முதலீடுகளால் பெறும் நிதிகள் மற்றும் சுயதொழில் மூலமும் பெறும் பணத்தினைக் கொண்டும்இ வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்கள் அனுப்பும் பணம் என்பவற்றின் ஊடாகவுமே எமது அமைப்பினை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஈரோஸ் அமைப்பின் தலைவரெனக் கூறிக் கொள்ளும் பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். (இதேவேளை ஈரோஸ் தலைவர் அமரர் சங்கர்ராஐன் மகனான லண்டனில் உள்ள நேசன் என்வரும் தானே ஈரோஸ் தலைவரென உரிமை கோருவது தனிக்கதை.)

மேற்படி ஈரோஸ்பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் பேட்டிக்காக ஊடகங்களின் பின்னால் கேட்டலைவதொன்றும் புதிய விடயமல்ல. ஊடகங்களுக்கு உதவிகளைப் புரிவது போன்று நடித்துக் கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல பல மாங்காய்களை அடிக்க முயலும் இவரை ஊடகங்கள் விரைவில் புரிந்து கொள்ளும். ஈரோஸ் பிரபா தனது பேட்டியில் தாம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்பது போலவும், தமது வெட்கக்கேடான தேர்தல் தோல்விகளை இன்னுமே ஒப்புக்கொள்ள முடியாத மனநிலையிலும் இருப்பதையே அவர் வெளியிட்டுள்ள பேட்டி எடுத்துக் காட்டுகின்றது.

அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாநகரசபையில் போடப்படாத 6ஆயிரம் வாக்குகள் ஈரோஸ் அமைப்பின் வாக்குகளே. அதனையும் புளொட் அமைப்பினரே தடுத்தனர். நாம் புலிகள் எனக் கூறியே அதனைப் புளொட் அமைப்பினர் தடுத்தார்கள். அந்த வாக்குகள் போடப்பட்டிருந்தால் நாம் வவுனியா மாநகரசபையைக் கைப்பற்றியிருப்போம். வவுனியா தமது கோட்டை எனக்கூறும் புளொட் அமைப்பு அங்கு போடப்பட்ட 22ஆயிரம் வாக்குகளில் 4ஆயிரம் வாக்குகளையே பெற்றிருந்தது. இதிலிருந்தே இவர்களது நிலைமை புரிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். (வவுனியாவில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் புளொட் அமைப்பினர் என்பதை இவர் குறிப்பிட மறந்து விட்டார்.)

அத்துடன் யாழ்ப்பாணத்தில் குருநகர்இ பாசையூர் போன்ற பகுதிகளில் ஈ.பி.டி.பியினர் மக்களை வாக்களிக்க விடாது பகிரங்கமாகவே தடுத்தனர். இதன் காரணமாகவே யாழ். நகரிலும் ஈரோஸ் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முழுக்காரணமும் ஈ.பி.டி.பியினரே. ஈ.பி.டி.பிக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் எமக்கு எழுத்துமூலமாக ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இதுவரையில் 242 குற்றச்சாட்டுக்கள் முழு ஆதாரங்களுடன் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுக்களாக எமக்குக் கிடைக்கப்பெற்ற கடத்தல்இ கப்பம்பெறுதல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவரே தற்போது யாழ். மாநகரசபையின் பதில் மேயராக பொறுப்பெடுக்கவுள்ள றேகன் என்பவராவார் எனவும் பிரபா தனது பேட்டியில் கூறியுள்ளார். (ஈபிடிபி குறித்து ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நீதிமன்றத்தையோ மனிதஉரிமைகள் அமைப்புக்களையோ ஏன் இதுவரை இவர் நாடவில்லை? என்பதும் எமக்குப் புரியாத புதிர் தான்.)

அத்துடன் அவர் தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தில் தமது வண்டவாளங்களை வெளிக்கொணர்ந்த ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஊடகங்கள் சிலவற்றைப் பற்றி அவர் பேட்டியளிக்கையில்இ அதிரடி இணையம் உள்ளிட்ட சில இணையங்கள் எமக்கெதிரான சில பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனினும் அவை தொடர்பில் ஊடகங்களிலோஇ பொலீஸ் நிலையத்திலோ பதிவுகள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்ல இவர் ஊடகவியலாளரின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் புளொட் மற்றும் ஈ.பி.டி.பியையும் தாக்கிப் பேசுவதையே தனது பதிலில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். (யாரைப்பற்றியாவது அன்றில் எந்தவொரு செய்திகளையும் ஊடகங்கள் வெளியிடும் போது அவை தவறென்றால் முதலில் அதனை நாகரீகமான முறையில் அவ்வூடகங்களுக்கே மறுப்புத் தெரிவிக்க வேண்டும் இரண்டாவதாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டு புலம்பித் திரிவது எந்தவகையில் நியாயம்??)

முன்னர் இந்த ஈரோஸ் பிரபா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த காலகட்டத்தில் தமது அமைப்பின் அலுவலகத்தில் புலி உறுப்பினர்களை மறைத்து வைத்திருந்த காரணத்தினால் இராணுவத்தினர் அந்த அலுவலகத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது இவர் தனது ஒரு கையையும் தனது மகனாரையும் இழந்திருந்தார். இதனைத் தொடர்ந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுவிஸ் அரசின் உதவியுடன் சுவிஸ் தூதரகத்தின் அனுசரணையுடன் இவர் தனது மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சுவிஸ்லாந்திற்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.

இவர் சுவிஸில் இருந்த காலகட்டத்தில் சுவிஸ் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஏற்பட்ட தொடர்புகளினால் ஏற்பட்ட அதீத நட்பு காரணமாக மீண்டும் ஈரோஸ் அமைப்பைக் கட்டியெழுப்புவது என்று கூறிக்கொண்டு தனது மனைவி பிள்ளைகளை சுவிஸ் சோஷியல் பணத்தில் (கூப்பனில்) அங்கேயே தங்க வைத்து விட்டுஇ மீண்டும் இலங்கை வந்து விட்டார்.

தற்போதுகூட இவர் சுவீசிலுள்ள வவுனியாவைச் சேர்ந்த குடும்பமொன்றின் 70வயதுக்கு மேற்பட்ட வயோதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் பலவந்தமாக கையொப்பம் பெற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தின் வவுனியா வீட்டைப் பலவந்தமாகப் பறித்து அந்த வீட்டில் அலுவலகம் அமைத்துள்ளார். இதுபற்றி புளொட் அமைப்புக்கு எழுத்துமூலமான முறைப்பாடும் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து சுவிஸில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ இவர் மழுப்பலான பதிலையே வழங்கி வந்துள்ளார். இதன் காரணத்தினால், இவர் எப்போது சுவிஸ் வருவார்இ இவருக்கு 'நல்லபதிலை' வழங்க வேண்டுமென்று குறித்த வயோதிபரின் உறவினர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் பகிரங்கத்திற்கு வரவேண்டிய விடயமாகும்..

இலங்கைக்கு வருமுன் இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டு அவர்மூலம் ஏனைய தலைவர்களையும் சந்தித்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தான் சுகபோகமாக வாழலாம் என்ற மிகப்பெரும் கனவுடன்இ தனது மனைவியையும் பிள்ளைகளையும் சுவிஸ்லாந்தின் சோஷல் (உதவிப்) பணத்தில் வாழட்டும் என நட்டாற்றில் தவிக்க விட்டுவிட்டுஇ மீண்டும் இலங்கை சென்ற இவர். பெற்ற உதவிகளையும் உதவிகளைப் புரிந்த தலைவர்களையும் மறப்பதற்கு நீண்டநாட்கள் செல்லவில்லை. தனது குடும்பத்தை நட்டாற்றில் விட்ட இவர் தனது குடும்பத்தையே காப்பாற்ற முடியாத நிலையில் எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார் என்பது புரியவில்லை.

இவர் சுவிஸில் இருந்த காலகட்டத்தில் இவரது உயிர் நண்பராக இருந்த முஸ்லிம் அன்பரொருவரின் சிறு குழந்தையைக் கடத்திச் சென்று காசு பறிக்க முயன்ற குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டு தற்போதும் பொலீஸ், நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அதேபோன்று இவர் சுவிஸ்லாந்தின் சூரிச் சிவப்புவிளக்குப் பகுதியான லங்ஸ்ராசா என்னுமிடத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல்யமான இரவு விடுதியை அமைத்து செயற்பட்டு வந்தவர். பின்னர் இவருடன் அதில் இணைந்து செயற்பட்ட நண்பர் ஒருவரை ஏமாற்றி பணம் சொத்து உள்ளிட்ட அனைத்தையும் இவர் சுருட்டிக்கொண்டு இரவு விடுதியையும் மூடிவிட்டு சென்றார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்தப் பிரபா மீது நிறையவே உள்ளன.

இவர்கள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாமிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்களை விடுவித்தமையும் ஆதாரபூர்வமாக பொலீஸ் நிலையத்தில் இருந்து கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது. அந்த ஆதாரபூர்வமான தகவல்களை பெயர் விபரங்களுடன் வெளியிடவும் தயார்நிலையில் உள்ளோம். எனினும் இதனால் பொதுமக்கள் சிலர் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாதென்பதற்காக அது தவிர்க்கப்பட்டுள்ளது. இவர் அரசுடன் சேராமலா வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்? இவரது தேர்தல் பணிகளுக்கு யார் பணம் வழங்கியது? இவரை நாட்டுக்கு அழைத்தவர் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே. டக்ளஸ் தேவானந்தாவின் உதவியிலேயே நாட்டுக்கு வந்து அவரின் உதவியிலேயே தமது அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு தற்போது டக்ளஸ் தேவானந்தாவையே தாக்கி வருகின்றார்.

எது எவ்வாறாயினும் ஈரோஸ் பிரபாவுடன் சேர்ந்து கூட்டுஅரசியல் நடத்தலாம் என எதிர்பார்த்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவருடைய பின்புலம் பற்றி அறிந்து கொண்ட போது இவரைக் கைநழுவ விட்டுவிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவாகற்தாவின் முதுகில் சவாரி செய்யச் சென்றிருந்த ஈரோஸ் பிரபா அமைச்சர் டக்ளசினால் கைவிடப்பட்ட நிலையில் புளொட் அமைப்பின் கதவுகளைத் தட்டினார். அவர்களும் கதவுகளை இறுக்கி மூடிய போது இந்திய றோவிடம் ஒட்டிக் கொண்டார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல்கள் இடம்பெற்ற போது இந்திய றோவின் உதவியுடன் தேர்தலில் குதித்தவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (அரசுக்கு) எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆசனமொன்றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்ட போது குறுகியகால இடைவெளியில் இவருடைய சுயரூபத்தை அறிந்து கொண்ட மக்கள் இவரைத் தூக்கி எறிந்தனர்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரசுடன் இணைந்து கொண்டு வவுனியா உள்ளுராட்சி மன்றம் மற்றம் யாழ் தேர்தல்களில் பங்கு கொண்டு மண்கவ்வினார். தற்போது இவர்களுக்கு மக்களிடம் உள்ள ஆதரவை அறிந்து கொண்ட அரசு இவர்களை எட்டத் துரத்தஉள்ள நிலையில் அரசு போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் அவமானம் ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
திரு.துரியோதனன் -யாழ்ப்பாணம்.

Read more...

நோர்வே ஈழத்தமிழர் அவை பொதுக்கூட்டம்.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் பொதுக்கூட்டம் இன்று நோர்வேயில் புலிகளினால் நிர்வகிக்கப்படும் அன்னை பூபதி பாடசாலையில் இடம்பெற்றது. கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குதிரை கஜேந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் வட்டுக்கோட்டை சாதியப் பிரகடணத்தை அடிப்படையாக கொண்டு நோர்வேயில் தேர்தல் ஒன்றை நாடாத்தி நோர்வே தமிழீழ பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதென முடிவெடுத்துள்ளனர்.

நோர்வே அரசியல் யாப்பிற்கு முற்றிலும் முரணான இச்செயற்பாடுகள் நோர்வே அரசின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதுடன் நோர்வே அரசு இது தொடர்பாக தனது பார்வையை திருப்பும்போது இதன் ஏற்பாட்டாளர்களான புலிகள் வழமைபோல் இதன் முழுப்பழியையும் மக்கள் மீது போட்டு தப்பி விட அதன் எதிர்விளைவுகளை மக்களே சந்திக்கநேரும் எனக்கருதப்படுகின்றது. எனவே மக்கள் இவ்விடயங்கள் தொடர்பாக விழிப்பாக இருந்து புலிகளின் எச்ச சொச்சங்களின் சதிவலைகளில் சிக்காது தம்மை காத்துக்கொள்வது சிறந்தாகும்.

Read more...

தெகிவல பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு.

தெகிவல, மல்பிரட் கிரசென்ட் வீதியில் உள்ள வீடொன்றில் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரச புலனாய்வுதுறையினாரல் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

தேர்தல் சட்டதிட்டங்கள் ஜேவிபி க்கு மட்டுமா பொருத்தமானது?

தென்மாகாண சபைக்கான தேர்தலில், தேர்தல் சட்டதிட்டங்கள் யாவும் ஜேவிபி யினருக்கே செல்லுடியாகும் என லக்பிம பத்திரிகை குற்றஞ்சுமத்துகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகளில் ஜேவிபி விளம்பரங்கள் ஒட்டியமை நீதிக்கு புறப்பானதும் அரச உடமைகளுக்கு சேதம் விளைவிப்பதாக அமைவதுமான செயல் என, அம்மாவட்டத்திற்கான ஜேவிபி வேட்பாளர்கள் அனைவருக்கும் எதிராக தங்காலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் திணைக்களத்தின் பிரதான பொறியலாளரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்த போது, குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஜேவிபி வேட்பாளர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி சிறி அந்தரகெனந்தி, அதே குற்றத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்தோரும் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மன்றிற்கு தெரிவித்துள்ளார்.

Read more...

5000 இடைத்தங்கல் முகாம் மக்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம்.

இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த 1000 குடும்பங்களைச் சேர்ந்த 5320 மக்கள் இன்று தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 845 குடும்பங்கள் இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். குடியமர்த்தலுக்காக தெரிவு செய்யப்பட்ட 28 கிராமங்களில் கலவரங்கனால் அங்கிருந்து வெளியேறியிருந்த 155 சிங்களக் குடும்பங்களும் அவர்களுடன் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தலமையில் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Read more...

Saturday, September 19, 2009

கருணை கொலை: ராஜீவ் கொலை குற்றவாளி கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளி ராபர்ட் பயஸ், ""தன்னை கருணை கொலை செய்ய உத்தரவிடுமாறு'' முதல்வர் கருணாநிதிக்கு மனு அனுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பயஸ்.

14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் நபர்களை, ஆலோசனைக்குழு கூடி விடுதலை செய்வது வழக்கம். ஆனால், ராபர்ட் பயஸ் வழக்கில் 15 ஆண்டுகள் கழித்துதான் ஆலோசனைக் குழு கூடியது.

26.12.2006-ல் கூடிய ஆலோசனைக் குழுவில் சிறைக் கண்காணிப்பாளர் நன்னடத்தை சான்றிதழும், உளவியல் மருத்துவர் தகுதியான சான்றிதழும் அளித்திருந்தனர். ஆனால் இலங்கையில் போர் நடைபெறுகிறது. சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று பல காரணங்களை காட்டி விடுதலை தவிர்க்கப்பட்டது.

இதை எதிர்த்து ராபர்ட் பயஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ""அரசு சார்பற்ற அதிகாரிகளை நியமித்து சட்டப்படி மீண்டும் ஆலோசனைக் குழுவைக் கூட்ட வேண்டும்'' என்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பளித்து ஓராண்டாகியும், ஆலோசனைக் குழு கூட்டப்படவில்லை. ஆலோசனைக் குழுவை விரைவில் கூட்டக் கோரி மாவட்ட ஆட்சியர், சிறைத்துறை தலைவருக்கு பல தடவை ராபர்ட் பயஸ் மனு செய்தும் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய, மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ராபர்ட் பயஸ் மனு அனுப்பியுள்ளார்.

அதில், "கடந்த 18 ஆண்டாக குடும்பத்தைப் பிரிந்து தனிமைச் சிறையில் உள்ளேன். தற்போது எனது குடும்பம் இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியாமல் தவிக்கிறேன்.
ஏழு ஆண்டுகள் முடிவடைந்த சிறைவாசிகளை கூட விடுதலை செய்தீர்கள். நானோ 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன்படி மாநில அரசு, மத்திய அரசிடம் விடுதலை செய்வதற்கு முன் ஆலோசனை செய்தல் வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் சாசனம் 161 பிரிவின்படி மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியதில்லை என்று கூறிய பின்னரும், மத்திய அரசிடம் தெரிவிக்காமல் விடுவிக்க முடியாது என்று மாநில அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இவைகளை பார்க்கும்போது அரசியல் உள்நோக்கங்கள் காரணமாகவே நியாயமும், நீதியும் மறுக்கப்படுகிறது என்பது வெளிச்சமாகிறது.

எனது நீண்ட கால சிறைவாசம், குடும்ப சூழ்நிலையைக் கொண்டு விடுதலை செய்யுங்கள். இல்லையெனில் கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது பட்டினி சாவு மேற்கொள்வதையாவது இடையூறு செய்யாமல் விட்டுவிடுங்கள்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் எம்.ஏ. வரலாறு: இவர் சிறையில் இருந்தபடியே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு, இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சி, ஊட்டச்சத்து, தந்தை பெரியார் பாலிடெக்னிக் மையத்தின் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகளை முடித்துள்ளார்.

நன்றி தினமணி

Read more...

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை.

இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதாக பலதரப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தபோதிலும், இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரம் அத்தேவையை நிவர்த்தி செய்ய முடியாது என கருதும் துறைசார்ந்தோரும், புத்திஜீவிகளும் இவ்வாறான தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியம் என வலியுறுத்தி வருகின்றனர்.

Read more...

Friday, September 18, 2009

விடுவிக்கப்படும் இடைத்தங்கல் முகாம் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். மாவை.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் மக்கள் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர் எனவும், இது ஒரு சிறையில் இருந்து மற்றுமோர் சிறைக்கு அனுப்புவது போன்ற செயலாகும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

கடந்த சுமார் 2 தசாப்தங்களாக புலிகள் இம்மக்களை வெளி உலகைக் காட்டாமல் வன்னியில் அடைத்து வைத்திருந்தனர். அக்காலகட்டங்களில் புலிகளுடன் இணைந்து நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அம்மக்களின் வாக்குகளை ஆயுத முனையில் பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்று புலிகளின் நலன் காப்பாளர்களாக செயற்பட்டு வந்திருந்தனர். இன்று புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுடன் பின்கதவால் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக பேரம்பேசலில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பினர், மக்களை தொடர்ந்து குழப்ப நிலையில் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் எனக்கூறப்படுகின்றது.

குறிப்பாக புலம்பெயர் நாடுகள் பலவற்றிற்கும் சென்று புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்திருந்தனர். இன்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் மக்கள் எவ்வித வாழ்வாதாரங்களும் அற்றவர்களாக முகாம்களில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் அன்று புலம்பெயர் தமிழர்களிடம் சென்று புலிகளுக்கு நிதிவழங்குங்கள் என இரந்து கேட்ட கூட்டமைப்பினர், இன்று முகாம்களில் இருந்து வெளியேறும் மக்களின் எதிர்கால பொருளாதார நலன் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை.

இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக ஆரம்ப காலகட்டங்களில் முதலைக்கண்ணீர் வடித்த புலம்பெயர் தமிழருக்கு அம்மக்கள் தொடர்பாக உண்மையான ஆர்வம் இருந்தால் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறும்போது அம்மக்களுக்கு ஏதாவது சுயதொழில் செய்துவாழக்கூடிய வழிவகைகளை அமைத்துக்கொடுக்க முன்வரவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சி செய்யாது அம்மக்களின் அவலங்களை உலகுக்கு கூறி தொடர்ந்து அரசியல் செய்ய முனைந்து வருகின்றனர்.

Read more...

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காரியாலயத்தை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

திருக்கோவில் மத்திய சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கின்ற நான்கு இளைஞர்களுக்கு ஆதரவு கொடுக்குமகமாக அக்கரைப்பற்று , கோமாரி , கல்முனை போன்ற பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சாகும்வரை உண்ணாவிரதத்தில் இருக்கின்ற நான்கு இளைஞர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதுவரை இவ் உண்ணாவிரதம் இருக்கும் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன் தனது பார்வையை திருப்பவில்லை என தெரியவருகின்றது.

அகிம்சை வழியில் போராட்டம் ஒன்று தொடர்கின்றபோது, ஜனநாகயக வழிமுறைப்படி போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது வழக்கமாகும். ஆனால் மக்களுக்காக அரசியலில் இறங்கியுள்ளதாக கூறுகின்ற குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு அகிம்சைப் போராட்டத்தின் தார்ப்பரியம் தெரியாமல் அவற்றை உதாசீனம் செய்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.





Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com