Wednesday, September 9, 2009

போலி விசாவில் பாரிஸ் செல்ல முயன்ற அறுவர் ஹைட்றாபாத் இல் கைது.

ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முயன்ற 6 இலங்கைத் தமிழர்கள் உட்பட ஏழுபேர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் யாழ்பாணத்தையும் ஏனையோர் இலங்கையின் இதர பாகங்களையும் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒரு பெண்ணும், ஒரு இந்தியரும் அடங்குகின்றனர்.

இன்று காலை பாரிசிற்கு புறப்படவிருந்த எமிறேட்ஸ் எயார் லைன் க்குச் சொந்தான விமானத்தில் புறப்பட இருந்த இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கையில் இருந்து தமிழ்நாடு சென்ற அவர்கள் அங்குள்ள பயண முகவர் ஒருவரின் துணையுடன் பொய்பெயர்களில் இந்தியக் கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அக்கடவுச் சீட்டுக்களுக்கு பிரான்சுக்கான போலி வீசாக்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இவர்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய நபரே இவர்களுக்கான பயண ஏஜென்ட என நம்பப்படுகின்றது.

Read more...

எந்த சூழ்நிலையிலும் மஹிந்தவை தோற்கடிக்க நாம் தாயாராக இருக்கின்றோம். ஜேவிபி.


ஜனாதிபதி மஹிந்தவிற்கு மேலுமொரு ஜனாதிபதித் தேர்தலை நாடாத்துவதற்கு அதிகாரம் கிடையாது. அவ்வாறு அவர் அதை நடாத்துவேரேயானால், அவரை எந்த சூழ்நிலையிலும் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி யினராகிய நாம் தயாராக இருக்கின்றோம் என கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதி ஆட்சி முறை ஏன் ஓழிக்கப்படவேண்டும்" என மக்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு நேற்று கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு முன்னால் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கும் நிகழ்வு ஒன்று ஜேவிபி யினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு கலந்து கொண்டு மக்களுக்கு உரையாற்றிய ரில்வின் சில்வா மேற்காண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ஜேவிபி யானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் நடைமுறைச்சாத்தியம் அற்றதுமான பேரம்பேசல்களுக்கு செல்வதில்லை. ஆனால் கட்சியினால் எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கான வெற்றிக்காக அது அயராது உழைக்கும்.

ஐக்கிய தேசியக்கட்சி நாட்டின் ஒருபகுதியை கூறுபோட்டு விற்க முற்பட்டபோது நாம் அவர்களை தோற்கடிப்பதற்கு முடிவு செய்தோம். அவ்வாறே 6 வருடங்களுக்காக ஆட்சிக்கு வந்த அவர்களை இரண்டே இரண்டு வருடங்களில் வீடுகளுக்கு அனுப்பினோம்.

யுத்த நிறுத்த ஒப்பதந்தத்திலிருந்து விலகுமாறு அரசைவேண்டினோம், அதை செய்து முடித்தோம்.

பி-ரொம் எனும் ஒர் முறையை ஜனாதிபதி சந்திரிக்கா கொண்டுவந்தார். அதை இல்லாமல் பண்ணுமாறு அவரை வேண்டினோம். ஆனால் அவர் இணங்கவில்லை, நாம் அமைச்சுப்பதவிகளை தூக்கியெறிந்து அரசில் இருந்து வெளியேறியதுடன் பி-ரொம் ஐ இல்லாது செய்தோம்.

இணைந்திருந்த வட-கிழக்கை பிரிப்பதற்கு முடிவு செய்தோம். அதுவிடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேசினோம், அவர் இணங்கவில்லை. நாம் மக்களுடன் சேர்ந்து எமது தீர்மானத்திற்கு சட்டரீதியாக வெற்றியை பெற்றோம்.

இவ்வாறு, ஏனையவர்கள் முடியாத காரியம் என நினைத்த விடயங்கள் பலவற்றில் நாம் வெற்றி கண்டுள்ளோம். அவ்வாறே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதிலும் வெற்றி காண்போம் என்று கூறினார்.


Read more...

தெனியாயவில் ஆடம்பரமாளிகை ஒன்று கட்டப்படுவதாக ஐ.தே. கட்சி குற்றச்சாட்டு.

தெனியாய பிரதேசத்தில் இருந்து 40 மில்லியன் ரூபாய்களுக்கு பெறப்பட்ட அரசிற்கு சொந்தமான காணி ஒன்றில் அரசின் பலம்வாய்ந்த நபர் ஒருவரால் மிகவும் ஆடம்பரமான மாளிகை ஒன்று அமைக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட மாளிகைக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வீதிக்காக அயல்கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் தெருக்களில் உள்ள நீர்குழாய்கள் என்பனவும் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நாகர்கோவிலில் இன்று குமரி மாவட்ட மீனவ இளைஞர்களை சந்தித்து பேசினார்.அப்போது இலங்கை கடற்படையால் ஏற்படும் இன்னல்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், "இதுபோன்ற தொல்லைகள் குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்படுகிறது. எனவே இந்த 2 நாடுகளின் பிரச்சினைகள் பற்றியும் மந்திரிசபையில் சொல்லி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன்'' என்று கூறினார்.

Read more...

Tuesday, September 8, 2009

அவசரகாலச் சட்டத்தை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றுசேரும். ஜேவிபி

அவசரகாலச் சட்ட நீடிப்பு பாராளுமன்றில் சமர்பிக்கப்படும்போது அதை தோற்கடிப்பதற்கு எதிர்கட்சிகள் ஒன்று சேரும் என ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர், தொற்சங்கங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசு அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் அவசரகாலச்சட்டத்தை தோற்கடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தாம் இறங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கதிர்காமர் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு நீக்கம்.

கதிர்காமர் கொலைவழக்கின் முக்கிய எதிரிகளாக கருதப்பட்ட புலிகளியக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் சண்முகநாதன் சிவசங்கர் ஆகியோரை வழக்கிலிருந்து நீக்கி விடுவதற்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக கூறி சட்ட மா அதிபர் திணைக்களம் இவ் அனுமதியை கோரியிருந்தது. ஆனால் இவர்களுக்கு உரிய மரணச் சான்றுதல்கள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. அத்துடன் இவர்கள் இருவரதும் மரணச் சான்றுதல்கள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்து வரும் ஆணைக்குழு இலங்கை அரசை கேட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ...............................

Read more...

தூண்டில்முள், தங்கூசி, தற்காப்பு அங்கிகளுடன் ஜே.வி.பி சபையினுள் வந்ததால் அமளிதுமளி

பாராளுமன்ற வளவிலிருந்து வெளியேறவிடாது ஜே.வி.பியை சோதனையிட பி. சபாநாயகர் உத்தரவு

மீனவர்களின் உயிர் காப்புக் கவசம் உட்பட பல மீன்பிடி உபகரணங்களைச் சபைக்குக் கொண்டுவந்து விளக்கமளித்த ஜே. வி. பி. எம்.பி.யின் நடவடிக்கைக்கு ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து எழுந்த சர்ச்சையையடுத்து சபையில் நேற்று பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டன.

அச்சமயம் சபைக்குத் தலைமை தாங்கிய உடவத்த நந்த தேரர் எம்.பி. மேற்படி பொருட்களை சபையிலிருந்து அகற்றும் படி உத்தரவிட்டதுடன் அச்சமயம் எழுந்த சர்ச்சைகளையடுத்து சபையை முதலில் 10 நிமிடங்கள் இதன் பின்னரும் சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போதும் சபையில் குழப்பம் ஏற்பட்டதால் ஐந்து நிமிடங்களுக்கு சபை ஒத்தி வைக்கப்பட்டது.

ஐந்து நிமிடங்களின் பின்னர் பிரதி சபாநாயகர் தலைமையில் சபை கூடியது. அப்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஜே. வி. பி. எம்.பி. பேமிசிறி மானகே தற்காப்பு அங்கி, தூண்டில், நைலோன் நூல் போன்றவை உயிராபத்து ஏற்படுத்தக்கூடியவை. அவ்வாறான பொருட்களை சபைக்கு எடுத்துவந்தவர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கிணங்க சபாநாயகரின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாத உறுப்பினரொருவரை தற்காலிகமாக பதவி நீக்கலாம். அதனை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதி சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான விவாதம் சபையில் நடந்து கொண்டிருந்த போதே மேற்படி சர்ச்சைகள் ஏற்பட்டன.

ஆளும் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எதிரொலித்தன.

இந்த வேளையில், சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியே சென்றுவிட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிடுமாறு அரசாங்க தரப்பு பிரதம கொறடா பிரதி சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து சபைக்குள்ளிருந்து வெளியேறிச் சென்ற ஜே. வி. பி. உறுப்பினர்கள் அனைவரையும் பாராளுமன்ற வளவிலிருந்து வெளியேறிச் செல்லவிடாது தடுத்து நிறுத்தி சோதனையிடுமாறும், அவர்களது அலுவலகங்களை சோதனையிடுமாறும் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண பாராளுமன்ற பொலிஸாருக்கும், படைக்கல சேவிதருக்கும் உத்தரவிட்டார்.

பாராளுமன்றத்தினுள் உயிர்காப்பு அங்கி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை ஜே. வி. பி. உறுப்பினர் பிரேமசிறி மான்னகே கொண்டுவந்து காண்பித்து அரசாங்கம், வரி மூலம் பெருந்தொகை பணத்தை அறவிடுகிறது என குற்றம் சுமத்தினார்.

சபைக்குள் உயிர் காப்பு அங்கி மற்றும், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் தூண்டில் முட்கள், கூரிய முட்கள் போன்றவற்றை கொண்டுவந்தது எப்படி? என்றும் உடனடியாக அவர்களை சோதனையிட வேண்டும் என்றும் அரசாங்க தரப்பு பிரதம கொரடா பிரதி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

ஜே. வி. பி. உறுப்பினர்கள் ஆளும் தரப்பினரை நோக்கியும், பிரதி சபாநாயகரை நோக்கியும் தகாத வார்த்தைகளால் பேசியவாறு வெளியேறினர்.

வெளியேறிச் செல்லும் ஜே. வி. பி. உறுப்பினர் பேசிய வார்த்தைகளை வாபஸ்பெற வேண்டும் என்றும் பிரதி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். எனினும் செவிமடுக்காது வெளியேறிச் சென்றனர்.

இதேவேளை, அரசாங்க தரப்பு பிரதம கொறடா ஜே. வி. பி. உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத்திலிருந்தும், வளவிலிருந்தும் வெளியேறிச் செல்லாதவாறு நுழைவாயில்களை மூடி சோதனையிட வேண்டும் என்றும் பாராளுமன்றத்திலுள்ள அவர்களது அலுவலகங்களை சோதனையிட வேண்டும் என்றும் அதற்கான உத்தரவை பிரதி சபாநாயகர் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய பாராளுமன்ற பொலிஸாருக்கும், படைக்கல சேவிதருக்கும் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண பணிப்புரை வழங்கினார்.

நன்றி தினகரன்

Read more...

திரவ வெடிபொருட்களை பயன்படுத்தி விமானங்களை தகர்க்க திட்டம்: 3 பேர் குற்றவாளிகள் என பிரிட்டன் கோர்ட் தீர்ப்பு

கடந்த 2006 ஆம் ஆண்டு திரவ வெடிபொருட்களை சிறிய பாட்டில்களில் அடைத்து சென்று, லண்டனில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களை நடுவானில் தகர்க்க தற்கொலைப்படை தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருந்தனர். இது பிரிட்டன் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் லண்டனில் உள்ள எரிவாயு டெர்மினல்கள் மற்றும் மின்சக்தி மையங்களை தகர்க்க திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கில் லண்டன் போலீசார் பல் குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களில் அப்துல்லா அகமது அலி, ஆசாத் சர்வார், தன்வீர் உசேன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இப்ராகிம் சாவந்த், அராபத் வாஹீம் கான், வாஹீம் சமான், டொனால்டு ஸ்டீவர்ட் ஒயிட் ஆகிய நால்வரையும் இந்த வழக்கிலிருந்து கோர்ட் விடுவித்துள்ளது.


Read more...

ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரண பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க பதிலளித்தபோதே இவ்விடயம் வெளிவந்துள்ளது.

ஜனாதிபதி ஆலோசகர்களாக எத்தனைபேர் ஜனாதிபதியினால் நியமனம் பெற்றுள்ளனர் என்ற கேள்வி அங்கு எழுப்பப்பட்டபோது, பதிலளிக்கும் பொருட்டு பிரதமர் ஆலோசகர்கள் பட்டியல் ஒன்றை சமர்ப்பித்து பேசினார். குறிப்பிட்ட அந்த பட்டியலில் 38 பேரது பெயர்கள் காணப்பட்டதுடன் அதில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் பெயர் காணப்படவில்லை என தெரியவருகின்றது.

Read more...

எஞ்சியுள்ள புலிகளின் நடவடிக்கைகளில் அவதானமாக இருங்கள். பொலிஸ் மா அதிபர்.

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளபோதும் அவர்களினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் 100 வீதம் முடிவுறவில்லை என பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாண எல்லையில் உள்ள மின்னேரியப் பிரதேசத்தில் பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை திறந்து வைத்து பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், எஞ்சியுள்ள புலிகளின் இரகசிய செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

புலிகள் கிழக்கில் இருவருடங்களுக்கு முன்னர் தோற்கடிக்கப்பட்டபோதும் அவர்களின் சில செயற்பாடுகள் விசேடமாக இப்பிரசேங்களிலேயே காணப்படுகின்றன. எனவே சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் நிலைநாட்டும் பொலிஸாரின் கடமைகளுக்கு மக்களாகிய உங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Read more...

காலியில் ஆயுதம்தாங்கிய ஐ.ம.சு. முன்னணி ஆதரவளர்களிடையே மோதல்.

தென் மாகாணசபையின் காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களான சஜித் வாஸ் குணவர்த்தன மற்றும் நிசாந்த முத்துஹெட்டிகம் ஆகியோரது ஆதரவாளர்களிடையே நேற்று 07 செப்டம்பர் மோதல் வெடித்துள்ளது.

ஆயுதம்தாங்கிய ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட இம்மோதலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் பொருட்டு பிரதேசத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட இரு குழுவினரும் பரஸ்பரம் இருதரப்பு அரசியல் பணிமனைகளையும் தாக்கியழித்துள்ளனர். அத்துடன் இரு குழுவினரும் இலக்கத் தகடுகள் இல்லாத வாகனங்களைப் பயன்படுத்தி கடத்தல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

குஷ்டரோக வைத்தியசாலைப் பிரசேத்தில் தீ. நோயாளிகளை விமானப்படையினர் வெளியேற்றினர்.

மட்டக்களப்பு மாந்தீவுப் பிரதேசத்தில் உள்ள காடுகளில் தீப் பற்றிக்கொண்டுள்ளது. இன்று காலை 05.30 மணியளவில் ஏற்பட்ட தீடீர் அனர்த்தத்தில் சிக்கியிருக்கக் கூடிய மக்களை இலங்கை விமானப்படையினர் உரியநேரத்தில் செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர்.

தீவுப் பகுதியான இப்பிரதேசத்தில் குஷ்டரோக வைத்தியசாலை ஒன்றுள்ளது. அங்கிருந்த 13 நோயளிகளையும் வைத்தியசாலை ஊழியர்களையும் விமானப்படையினர் ஹெலிக்கொப்டர்கள் மூலமும் படகுகள் மூலமும் வெளியேற்றியுள்ளதுடன், ஹெலியில் இருந்து நீரை ஊற்று வைத்தியசாலையை அண்டிய தீயையும் கட்டுப்படுத்தியுள்ளனர்.

காடுகளில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. மட்டக்களப்பு அரச அதிபர் காரியாலய அதிகாரிகளும், பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் சேதங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது. எது எவ்வாறாயினும் உயிர்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் பொருட்சேதங்களும் குறிப்பிடத்தக்களவு இல்லை எனப்படுகின்றது.

Read more...

மஸ்கெலிய யுவதிகளின் கொலைச் சந்தேக நபர்களுக்கு பிணை.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தை கால்வாய் ஒன்றினுள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்ட மஸ்ககெலிய யுவதிகள் இருவரதும் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நபருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் வயது குறைந்த இருவரையும் தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தியமை மற்றும் இறந்தவர்களின் சகோதரி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்தமைபோன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் இறந்த யுவதிகளின் பெற்றோர் மரணம் தொடர்பாக தமது பலத்த சந்தேகத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் சந்தேக நபர்மீது கொலைக்குற்றஞ் சுமத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பில் மிகவும் செல்வாக்கு மிக்க குறிப்பிட்ட நபர் தனது செல்வாக்குகளைப் பிரயோகித்து கொழும்பு மரண வைத்திய பரிசோதனை அதிகாரிகள் முதல் சகல தரப்பினரையும் விலைக்கு வாங்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.

Read more...

Monday, September 7, 2009

ஈரானின் அணுசக்தி உரிமையை யாரும் பறிக்க முடியாது: அதிபர் அகமதிநிஜாத்

ஈரான் அணுசக்தி ஆயுதங்களை தயாரித்து வைத்திருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து ஈரான் அதிபர் அகமதிநிஜாத் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரானைப் பொறுத்தவரை அணுசக்தி என்ற கேள்வி முடிந்து போன ஒன்று. எங்களின் அணுசக்தி உரிமையை யாராலும் தடுக்க இயலாது. இது தொடர்பாக வேண்டுமானால் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அது நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். அணுசக்தி மின்சாரம் மற்றும் அணு ஆயுத பரவல் தடை ஆகியவை தொடர்பாக பேசினால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம். பேச்சு வார்த்தை தொடர்பான சந்திப்பு இந்த மாதம் நடக்கும் ஐ.நா.சபையில் கூட்டத்தில் நடத்தப்படவேண்டும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Read more...

கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் தரை இறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்:


ஊழியர்களை கைது செய்து விசாரணை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபியில் இருந்து சீனாவில் உள்ள ஹன்யாங் நகருக்கு ஒரு ராணுவ விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது.

செல்லும் வழியில் எரிபொருள் (பெட்ரோல்) தேவைப்பட்டது. எனவே அவற்றை நிரப்ப கொல்கத்தாவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அந்த விமானத்தில் ஊழியர்கள் 9 பேர் இருந்தனர். தகவல் அறிந்ததும் சுங்க துறை அதிகாரிகள் விரைந்து சென்று விமானத்தில் சோதனை நடத்தினர்.

அதில் ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நள்ளிரவில் விமான நிலைய அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதைத் தொடர்ந்து நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு அந்த விமானம் நேற்று காலை திரும்பி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com