Wednesday, September 2, 2009

வீடியோ போலியானது என்பதை இலங்கை நிருபிக்கவேண்டும் என்கின்றது ஐ.நா.

லண்டன் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டுள்ளதும் சர்வதேச ரீதியில் மிகவும் பேசப்படுவதுமான வீடியோ பதிவு பொய்யானது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அரசின் இக்கூற்று தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மரண தண்டனைகளுக்கான ஐ.நா வின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரென், குறிப்பிட்ட வீடியோ பொய்யானதாக இருந்தால் இலங்கை அரசு அதனை நிருபிக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.

அத்துடன் அவ்வாறு அதில் எவ்வித உண்மைகளும் இல்லையாயின், இலங்கை அரசு பொதுவான சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை இது தொடர்பாக விசாரணை செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்கள் லாபமடையலேயே அன்றி எவ்வித இழப்புக்களையும் சந்திக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, September 1, 2009

ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு. 7ம் திகதி விசேட சந்திப்பாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று எதிர்வரும் 7ம் திகதி இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சந்திப்பில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயமாக பேசப்படும் எனக் கூறப்படுகின்றது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஜனாதிபதி மஹிந்த அரசிற்று ஆதரவு வழங்குவோம் என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உயிர்வாழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இடைத்தங்கல் முகாம் மக்கள் மீழ்குடியயேற்றப் படவேண்டும் என நியாயமான திகதியை அறிவிக்காததுடன் தமிழ் மக்கள் சார்பாக தாம் எதிர்பார்க்கும் தீர்வுத்திட்டம் யாது எனவும் இதுவரை சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதியை சந்திக்க உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வாறான தீர்வினை அரசிடம் முன்வைக்கப்போகின்றார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என பலரும் எதிர்பார்கின்றனர்.

புலிகள் பேச்சுவார்த்தைகளை தம்தை வளம்படுத்திக்கொள்ள பயன்படுத்தியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அரசுடன் ஏதோ ஒப்பந்தத்தை செய்து தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றப் புறப்படுவதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.


Read more...

தமிழ்செல்வனின் உதவியாளர்களின் ஒருவரான பெண் புலி கைது.

புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் உதவியாளர்களில் ஒருவரான பெண் புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றிருந்த நிலையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தனது கணவர் புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளார்.

Read more...

வாஸின் மனைவி மகன் உட்பட சந்தேக நபர்கள் 14 பேரும் தொடர்ந்தும் விளக்க மறியல்.

தகவல் தொழில்நுட்ப்பக்கல்லூரி மாணவன் நிபுண ராமனாயக்க தாக்கப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி , மகன் மற்றும் 12 பேரையும் எதிர்வரும் 15 செப்டம்பர் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேச நபர்களை பிணையில் விடுவிக்குமாறு பிணைமனுத்தாக்கல் செய்தபோது, அவர்களுக்கான பிணையை உயர்நீதீமன்றிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என மஜிஸ்திரேட் நீதிமன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் வாஸின் மகன் மற்றும் நான்கு பொலிஸ்காரர்கள் தாக்கப்பட்ட மாணவனால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

Read more...

Monday, August 31, 2009

நோர்வேயில் தமிழ் குழுக்கள் மோதல்.

நோர்வேயில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட இரு தமிழ் குழக்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. அங்கு சென்றிருந்த புளொட் மற்றும் புலி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கருத்துமுரன்பாடு கைகலப்பில் முடிந்துள்ளது.

அங்கு இடம்பெற்ற கைகலப்பில் புளொட் அமைப்பைச் சேர்ந்த பாபுஜீ மற்றும் கழக உறுப்பினர்கள் சிலர் பாதிக்ககப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன் இவர்கள் மீது நோர்வேயில் தெரிச்சண்டியன் என அறியப்படும் ஜீவா என்பவர் தலமையிலான குழுவொன்று தாக்குதல் நாடாத்தியதாக தெரியவந்துள்ளது.

புலிகள் முற்றாக அழிக்ப்பட்டுள்ள நிலையிலும் முன்னாள் ஆயுததாரிகள் கலந்து கொள்ளும் பொது நிகழ்வுகளில் இவ்வாறான வேண்டத்தகாத செயல்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் பெரிதும் விசனம் அடைந்துள்ளனர்.

Read more...

பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் பணம்பறிக்கும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்.

கல்கிசை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அப்பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் மாதாந்தம் 15000-25000 பணம் வசூலித்து வருவதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட உயர் அதிகாரியின் வசூலிப்புக்கு மாதாந்தம் பணம் கொடுக்க மறுத்த அதிகாரிகள் அப்பிரசேத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்ற அனுமதி மறுக்கப்பட்டு கஸ்டப்பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் மாதாந்த வசூல் பணத்தை கொடுப்பதற்காக பொலிஸ் பொறுப்பதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரிகள், மதுபாணக்கடைக்காரர்கள், பாதாளக்குழுத்தலைவர்கள், விபச்சாரவிடுதிகள் நாடாத்துவோர் மற்றும் இதர குற்றச்செயல்களைச் செய்வோர் பின்சென்று அப்பணத்தை பெறவேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இணையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

சரணடைந்த, கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு 20 நிலையம் வடக்கு, கிழக்கில் நிறுவ திட்டம்

புலிகள் இயக்கத்திலிருந்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் புதிதாக நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் இந்த 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஐநூறு பேர் வீதம் 20 நிலையங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கும் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்களின் தனித்தனி விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கு சுமார் மூன்று வாரங்கள் செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர்களில் 1777 பெண் உறுப்பினர்களும 565 பாடசாலை பருவ மாணவர்களும் அடங்குவர். இவர்களில் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல செயற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தற்பொழுது 10 ஆயிரம் பேர்களும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் நான்கு பாடசாலைகளாகும். இந்த பாடசாலைகளை கற்றல் நடவடி க்கைகளுக்காக வெகுவிரைவில் பொறுப்புக் கொடுக்க வேண்டியுள்ளதால் தற்காலிகமாக 5 முகாம்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ தேவையான வகையில் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்குவதே பிரதான நோக்கம் என்றும் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

பெருந்தொகையானவர்களுக்கு இது போன்ற புனர்வாழ்வு வழங்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவை என்று குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தை முறியடித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் இதுபோன்ற திட்டங்களை பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள், முன்னணி அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நன்நி தினகரன்

Read more...

ஜானகபெரேரா கொலைவழக்கின் பிரதான சந்தேக நபர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பிரதான நபர் அனுராதபுரம் நீதிமன்றில் வாக்குமலம் ஒன்றை அளிக்கவிரும்புவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர். இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்ட ரெரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுதாகரன் என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலில் உள்ளபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தாக்குதலின் பிரதான சந்தேச நபரான ரெரன் நீதிமன்றில் அளிக்க இருக்கும் வாக்குமூலம் குற்ற ஒப்புதல்வாக்கு மூலமாக கொள்ளப்படும். அத்துடன் இத்தாக்குதலுக்கு உதவிய முஸ்லிம் சந்தேக நபர்களிடம் இருந்து அவர்களுக்கு புலிகளியக்கத்தால் வழங்கப்பட்டிருந்த பரிசில் பொருட்களும் பெருந்தொகைப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களை ஆராரமாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தாக்குதலுக்கான விடயங்களை துரிதப்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

Read more...

திஸ்ஸஅத்தநாயகத்திற்கு 20 வருட கடும்காவல் சிறைத்தண்டனை.

பயங்ரகரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 500 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸஅத்தநாயகத்தின் வழக்கினை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்கு 20 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பிற்கு எதிராக அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. திஸ்ஸ மீது குமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், பிற தகவல்களையும் திரட்ட எதிர்பார்கின்றோம்.

Read more...

Sunday, August 30, 2009

கைசெய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியின் பின்னணியில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள்.

புலிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி புலிகளின் பல பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றஞ்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்எஸ்பி லக்ஸ்மன் கூரேயின் பின்னணியில் ஆழும் அரசின் மிகவும் சக்கிவாய்த அரசியல்வாதியும், பிரதமர் பதவியை இலக்கு வைத்து இருப்பவர் ஒருவரும் இருப்பதாக லங்கா இரிதா எனும் சிங்களப் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி யாழ்பாணத்தில் இருந்து கம்பஹா விற்கு இடமாற்றம் பெறுவதற்கும் அவருடைய பதவி உயர்விற்கும் குறிப்பிட்ட அரசியல்வாதியே தனது செல்வாக்கை பயன்படுத்தியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பத்திரிகை தெரிவிப்பதுடன், அமைச்சர்களான ஜெயராஜ் பெர்ணான்டோப்பிள்ளை, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீது புலிகளின் தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு குறிப்பிட்ட அரசியல்வாதியின் தூண்டுதலிலேலே பொலிஸ் அதிகாரி புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதியை கொல்வதற்காக அவர் விமானமூலம் சென்று இறங்கவிருந்த இடம்ஒன்றில் சக்திவாய்ந்த கிளேமோர் குண்டொன்றை புதைத்து வைத்திருந்தாகவும் அதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் சமையற்காரரான முஸ்லிம் இராணுவக்கோப்ரலின் உதவியையும் பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு லக்ஸ்மன் கூரே மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள புலிகளிடம் இருந்து கட்டளைகளைப் பெற்றுள்ளதாகவும், இதன்பொருட்டு அவர் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்பியாக பாராளுமன்றம் நுழைந்த ஒருவருடன் நெருங்கிய உறவைப்பேணி வந்தகாகவும், புலிகளின் பழைய கொலைப்பட்டியலில் உள்ள முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதே இவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்திட்டங்கள் என தெரியவருகின்றது.

Read more...

பாகிஸ்தான் தயாரித்த புதிய ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து

கடந்த 1985 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ரீகன் இருந்தபோது, பாகிஸ்தானுக்கு "ஹார்போன்" ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியது. மொத்தம் 165 ஏவுகணைகள் கொடுக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தான் நவீனமாக மாற்றி அமைத்து புதிய ஏவுகணையை தயாரித்துள்ளது. இதுபோல, பி-3 சி என்ற போர் விமானங்களையும் ரீகன் அரசு வழங்கியது. இவற்றையும் பாகிஸ்தான் மாற்றி அமைத்து இருக்கிறது. இந்த போர் விமானங்கள், வானத்தில் இருந்து தரையில் இருக்கும் குறியீட்டை மிகவும் சரியாக தாக்க கூடியது. இந்த போர் தளவாடங்கள் இரண்டிலும், மாற்றங்கள் செய்து இருக்கும் பாகிஸ்தானுக்கு, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தையும், ஒபாமா வெளியிட்டு இருக்கிறார்.


Read more...

10000 பேரளவில் இடைத்தங்கல் முகாமிலிருந்து ஒடியுள்ளனர். வவுனியா அரச அதிபர்.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 10000 பேரளவான மக்கள் தப்பியோடியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்கள் தொடர்பாக பல எண்ணிக்கையான கதைகள் உலாவுகின்றபோதும், அரசாங்க அதிபர் காரியாலய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ் எண்ணிக்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் பலர் வைத்தியசாலைகளுக்குச் செல்வதாக முகாமில் இருந்து வெளியேறி திரும்பி வரவில்லை எனவும், ஏனைய ஒருதொகுதியினர் முகாமிற்கு உணவு பொருட்கள் மற்றும் இதரதேவைகளுக்காக வரும் வாகனங்களில் அதன் ஊழியர்களின் உதவியுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், ஒரு தொகுதியினர் காவல் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தும் தப்பிச்சென்றுள்ளனர். அத்துடன் மேலுமொரு தொகுதியினர் லட்சக்கணக்கான ரூபாய்களை சில அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வழங்கி அவ்வாறு வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, August 29, 2009

அக்கரைபற்றில் துப்பாக்கிச் சூடு இளைஞர் ஒருவர் படுகாயம்.

அக்கரைபற்றுப் பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அக்கரைப்பற்று ஆர்.டி.ஏ வீதியைச் சேர்ந்த சுரேஸ்குமார் வயது 31 என்பவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இரு அரசியல் கட்சிகளிடையே அங்கு கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுவரும் போட்டா போட்டிகளின் பிரதிபலனாகவே குறிப்பிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.

காயமடைந்த நபர் அக்கரைப்பற்று எழுவட்டுவான் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவருகின்றது.

Read more...

Friday, August 28, 2009

ஆசியாவில் இடம்பெற்றுவந்த மாபெரும் கிரடிட்காட் மோசடி முறியடிப்பு. விருகோதரன்.

இலங்கையில் இருந்து செயற்பட்டுவந்த கிரடிற்காட் மோசடி குழு ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த counterfeit foreign currency பிரிவினர் கைது செய்துள்ளனர். உலகரீதியாக பல நாடுகளிலும் இவ்வாறான குழுக்களை முறியடிப்பதில் விசேட பயிற்றப்பட்ட பொலிஸார் முழுநேரமும் விழிப்பாக இருக்கும் நிலையில் கொழும்பில் இடம்பெற்றிருக்கின்ற கைதும், கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள், தகவல்கள், உபகரணங்கள் ஒப்பீட்டளவில் ஆசியாவிலே இடம்பெற்றிருக்கின்ற மாபெரும் மோசடி முறியடிப்பாக கொள்ளப்பட்டுள்ளது.

கிறடிற்காட் மோசடிகளின் முக்கிய புள்ளி வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டிருந்த பல பிரபல வர்த்தகர்களும் மாட்டிக்கொண்டுள்ளனர். இம்மோசடிகளின் பிரதான நபரான நேசநாயகம் முருகானந்தன் வெள்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டள்ளார். குறிப்பிட்ட ஆடம்பர தொடர்மாடியில் இருந்து முருகானந்தன் மேற்படி மோசடிகளுக்காக பயன்படுத்திவந்த கணனிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீட்டில் இருந்த கிறடிற்காட்களை உருவாக்கும் data encoding machine, skimmer, credit cards 421 உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டள்ளது. இங்கு ஸ்கிம்மர் என்பது கிறடிற்காட் உரிமையாளர்களது சகல தரவுகளையும் அவர்களுக்கு தெரியாது பதிவு செய்துகொள்ளும் ஒர் உபகரணமாகும்.

Skimmers பல வடிவங்களை கொண்டுள்ளது. கிறடிற்காட் மோசடியை பாரிய அளவில் செய்கின்ற தகவல் தொழில்நுட்ப துறையில் கைதேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஸ்கிம்மர் மூலம் கிரடிற்காட் பாவனையாளர்களுடைய தகவல்ளை பெற்றுக்கொள்கின்றனர்.

எங்கெங்கு கிறடிற்காட் மெசின்கள் பாவனையில் உள்ளதோ அங்கங்கெல்லாம் தம்மால் முடிந்த வரை உள்நுழைந்து அங்குள்ள உழியர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து அவர்கள் கைகளில் குறிப்பிட்ட Skimmer கள் கொடுக்கப்படும். (உணவு விடுதிகளில் வேலை செய்யும் சிப்பந்திகள், பெற்றோல் நிலையங்களில் வேலைசெய்வோர் பிரதானமாக இவர்களின் வலைகளில் சிக்குவதுண்டு) கிறடிற்காட் அளவிலும் சற்று தடிப்பமான கருவி. (3.5 அங்குலம் நீளம் அரை அங்குலம் தடிப்பு) குறிப்பிட்ட வேலையாட்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து காட்டை பெறும்போது எவ்வாறாவது அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஒருதடவை தங்களிடம் உள்ள Skimmer இல் ஒர் உரசல் உரஞ்ச வேண்டியதுதான் காட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் ஸ்கிம்மரில் உள்ள மெமொரி காட்டில் பதிவாகிவிடும்.

ஆனால் சில இடங்களில் குறிப்பிட்ட ஸ்கிம்மர் ஆனது கிறடிற்காட் மெசின்களுடன் இணைக்கப்பட்டிருக்கும், கிறடிற்காட் மெசினில் ஒருதடவை காட் இழுக்கப்படும் போது அதன் தரவுகள் யாவும் ஸ்கிம்மரிலுள்ள மெமொரி காட்டிலும் பதிவாகி விடும். பின்னர் மெமொரி காட்டிலுள்ள தரவுகள் தமக்கு தேவையானவாறு தரவிறக்கம் செய்து கொள்ளப்படும்.

பல வகை ஸ்கிம்மர்கள் இனம்காணப்பட்டு கிரடிற்காட் வாடிக்கையாளர்கள் விழிப்படைந்துள்ள நிலையில் நவீன ஸ்கிம்மர்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இவை data cable இல்லாமல் ரிமோட் கொன்றோல் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. இவை சில சமயங்களில் கிறடிற்காட் மெசின் உள்ள கடைகளில் மெசினில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அல்லது அங்குள்ள ஊழியர்களின் சேட், காற்சட்டை பைகளில் காணப்படும். இவற்றுக்கும் அப்பால் நபர்கள் கூட இவற்றை தம்முடன் எடுத்துச்சென்று ATM Mechine அருகில் அல்லது சிறடிற்காட் மெசின் அருகில் நின்று தரவுகளை அபேஸ் பண்ணிக்கொண்டு சென்று விடுவார்கள்.

இச்செயற்பாடுகளில் லண்டன், தென்ஆபிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள புலிகள் அந்நாட்டு கிரடிற்காட் பாவனையாளர்களின் தரவுகளை அவர்களுக்கு தெரியாமல் திருடி பெரும் மோசடிகளில் ஈடுபட்டுவருவதாக அந்நாடுகளின் பொலிஸார் பலமுறை தெரிவித்துள்ளனர்.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நேசநாயகம் முருகானந்தன் புலிளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர். இவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது தான் உருவாக்கும் கிறடிற்காட்டுக்களுக்கான தரவுகள் லண்டன், தென்னாபிரிக்கா, மலேசியாவில் உள்ள நபர்கள் மூலமாகவே கிடைப்பாதாக தெரிவித்துள்ளார். அவர் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலில் உள்ள செயற்பாட்டாளர்களிடம் இருந்தே இவருக்கு உபகரணங்கள் மற்றும் தரவுகள் கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும் என counterfeit foreign currency பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் குறிப்பிட்ட கும்பலில் கைதுசெய்யப்பட்டுள்ள லக்ஸ்மி பவான் உணவக உரிமையாளரின் மகனான நித்தி எனப்படும் அம்பலவாணன் நித்தியானந்தனிடம் இருந்து 418 கிரடிற்காட்டுக்களும், கிரடிற்காட் பாவனையாளர்களின் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த Laptop ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் கொழும்பில் பல லொட்சுக்கள், கடைகளை வைத்திருந்து தனது வியாபார ஸ்தாபனங்களின் ஊடாக உள்ளுர் கிறடிற்காட் பாவனையாளர்களின் தரவுகளைப் பெற்று போலிக்காட்டுக்களை உருவாக்கியிருந்தமை தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கை கிறடிற்காட் பாவனையாளர்களின் தரவுகளுடன் உருவாக்கப்பட்ட போலிக்காட்டுக்கள் அதிகளவில் பாவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

அவ்வாறு அவை பாவிக்கப்பட்டிருந்தால் இலங்கையில் கிறடிற்காட் காப்புறதி வசதிகள் இல்லாத நிலையில் பாவனையாளர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்க நேரிட்டிருக்கும். காரணம் இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினரான மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பலர் தற்போது கிறடிற்காட் பாவனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறானவர்களின் தகவல்களே நித்தியானந்தனால் களவாடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு அவை பாவிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பின் அவற்றின் சுமையை மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்து அச்சிறிய சம்பளத்திலேயே வாழ்கை நாடாத்திவரும் நடுத்தரவர்க்கத்தினரால் சுமப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.

மேற்படி கிறடிற்காட் மோசடிக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் உண்டு என்பது நித்தியானந்தன் தொடர்புபட்டிருப்பதுடன் மேலும் தெளிவாகின்றது. காரணம் நித்தி புலிகளின் தீவிர விசுவாசி என்பதுடன் கொழும்பில் உள்ள புலிகளின் ஏஜென்டுக்களில் இவரும் ஒருவர் என மக்களால் மிகவும் அறியப்பட்டவர். சில வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவரை கைது செய்து இவருக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு சம்பந்தமாக விசாரணைகளை நாடாத்தியிருந்தனர். அத்துடன் இவருக்கு எதிராக போலிக்கிறடிற் காட் வழக்குகள் மூன்று கொழும்பு நீதிமன்றில் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்றுவருகின்றது.

அத்துடன் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள இப்றாகிம் எனப்படும் முஸ்லிம் நபரிடம் இருந்து 308 காட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ள 1147 போலிக்கிறடிற் காட்டுக்களாலும் மேற்கொள்ளப்பட இருந்த பாரிய மோசடி தடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மலேசியப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் இவ்வாறானதோர் பாரிய மோசடி முறியடிக்கப்பட்டது. மலேசியப்பொலிஸாரின் அச்செயலுக்காக மலேசியாவில் உள்ள கிறடிற்காட் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து மலேசிய பொலிஸாருக்கு பாரிய சன்மானம் ஒன்றை வழங்கியிருந்தனர்.

ஆனால் இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள skimmers , laptop மற்றும் Sim காட்டுக்களில் வெளிநாட்டு கிறடிற்காட் பாவனையாளர்கள் பலரின் தரவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை சம்பந்தப்பட்ட கிறடிற்காட் நிறுவனங்கள் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்த counterfeit foreign currency யினர் நடவெடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறு அவர்கள் பிறநாட்டு காவல்துறை மற்றும் வங்கிகளை தொடர்பு கொள்ளும்போது நித்தி, முருகானந்தம் ஆகியோருக்கு தரவுகளை வழங்கியோர் பிடிபட வாய்புகள் உண்டு.

Read more...

தற்கொலைத் தாக்குதலில் சவூதி இளவரசர் மயிரிழையில் உயிர் தப்பினார்

சவூதி அரேபிய இளவரசரும் துணை உள்துறை அமைச்சருமான முகம்மது பின் நயிப்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்று சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் விபரம் வருமாறு, அல்-கொய்தா தீவிர வாதிகளுக்கு எதிராக சவூதி அரேபியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் சவூதி அரேபியா குற்றவியல் நீதிமன்றம் 330 அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு பல்வேறு தண்டனை, அபராதம் போன்றவற்றை விதித்தது. சிலர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

சவூதி அரேபிய அரசின் இந்த நடவடிக்கை அல்-கொய்தா தீவிரவாதிகளை கோபம் அடையச் செய்தது. இந்த நிலையில் கடந்த 19ந் திகதி சவூதி அரேபிய அரசு 44 அல்-கொய்தா தீவிர வாதிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான எந்திர துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அல்-கொய்தா தீவிரவாதிகளிடம் இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சவூதி அரேபிய உள்துறை தான் இதற்கு காரணம் என்று நினைத்து பழிவாங்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இந்த நிலையில் நோன்பு மாத கூட்டுப் பிரார்த்தனைக்கு சவூதி அரேபிய இளவரசரும் துணை உள்துறை மந்திரியுமான முகம்மது பின்நயுப் ஏற்பாடு செய்திருந்தார். பிரார்த்தனை முடிந்ததும் இளவரசரிடம் வாழ்த்து தெரிவிக்கவும் மனு கொடுக்கவும், பலர் அவர் அருகில் சென்றனர்.

அப்போது அல்-கொய்தா தற்கொலை தீவிரவாதி ஒருவன் திடீரென தன் உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டான். இதில் சவூதி இளவரசர் முகம்மதுக்கு காயம் ஏற்பட்டது.

மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அல்-கொய்தா தீவிரவாதிகள் தற்போதுதான் முதன் முதலாக சவூதி அரச குடும்பத்துக்கு எதிராக தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நன்றி தினகரன்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com