Friday, August 28, 2009

கேபி யை துலாவுவதற்கு சிபிஐ அதிகாரிகள் இலங்கை விரைகின்றனர்.

இலங்கை அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்பட்டுவருகின்ற புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்தமநாதனை விசாரணை செய்வதற்கென இந்திய சிபிஐ அதிகாரிகள் அடுத்தவாரம் அளவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ராஜிவ் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிபிஐ இன் எம்டிஎம்ஏ (multi- disciplinary monitoring agency) அதிகாரிகள், கேபி ராஜிவ் கொலையுடன் தொடர்புடைய தனு, சிவராசன் ஆகியோருக்கு தேவையான பணம், ஆயுதங்கள், வெடிபொருட்கள், தற்கொலை அங்கி, தொலைத்தொடர்பு சாதனங்கள் உட்பட கொலைக்கு தேவையான சகல உதவிகளையும் செய்துள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

ராஜிவ் கொலையுடன் கே.பி சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற விடயம் துலங்கியதில் இருந்து கே.பி க்கு வலைவிரித்திருந்த எம்டிஎம்ஏ அதிகாரிகள் அவரை கைது செய்ய 27 நாடுகளிடம் எழுத்து முலம் உதவி கோரியிருந்தனர். இறுதியாக ஜேர்மன் நாட்டில் உள்ள கே.பி யின் வங்கிக்கணக்குகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு எம்டிஎம்ஏ அதிகாரிகள் குழு ஒன்று ஜேர்மன் நாட்டிற்கு சென்றிருந்ததுடன் அவற்றில் அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றிருக்கவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் தமக்கு தேவையான தகவல்களை கேபி யிடம் இருந்து பெற்றுக்கொள்ள இலங்கை அதிகாரிகள் ஒத்துழைப்பர் என எம்டிஎம்ஏ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Read more...

மேலும் 3 பாதளங்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மத்திய கொழும்பு பிரதேசத்தின் பிரபலம்வாய்ந்த பாதளஉலக கோஷ்டியின் தலைவன் பாஜி மற்றும் அவரது சகாக்களான ரொஜி, சாதிக் ஆகியோர் விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை மாளிகாவத்தை ஜூம்மா வீதியில் உள்ள இவரது வீட்டை சுற்றி வளைத்த விசேட அதிரடிப் படையினர் அவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பாஜி பிரதேசத்தின் முடிசூடா மன்னனாகவும் நீதிபதியாகவும் செயற்பட்டுவந்தாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டில் சிறிய நீதிமன்று ஒன்றை வைத்து அப்பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளுக்கு நீதிபதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

பிரதேசத்தில் சச்சரவுகள் இடம்பெறுகின்றபோது அங்குள்ள மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதிலும் பார்க்க இவரது நீதிமன்றிற்கே சென்று வந்துள்ளனர். பிரதேசத்தில் சுயமாக சட்டம் ஒன்றை இயற்றி செயற்படுத்தி வந்த இவர் அங்குள்ள சகல வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களிடம் மாதாந்தம் கப்பம் வாங்கி வந்ததாக கூறப்படுகின்றது. இவருக்கு கப்பம் கொடுக்க மறுத்த பலர் தமது வீடுகளை விட்டுவிட்டு ஓடி பல இடங்களில் தலைமறைவாக வாழந்து வருவாகவும் தெரியவந்துள்ளது.

Read more...

Thursday, August 27, 2009

புலிகளின் சொத்துக்களை பெறுவது குறித்து சர்வதேச மட்டத்தில் இலங்கை பேச்சு.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து தூதுவர்களுடன் பேச்சு நடத்தி வரும் அதேநேரம் வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்தின் கரங்களுக்கு கிட்டும்படி செய்ய அந்நாடுகளின் அரசாங்கங்கள் உதவ முன்வர வேண்டுமெனக் கோரி உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் போகொல் லாகம கூறினார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் :-

பயங்கரவாதமென்பது தனியே ஒரு நாட்டிற்குள் மாத்திரம் கட்டுப்பட்டதல்ல.

சர்வதேசம் முழுவதும் பரவி காணப்படுவதொன்றாகும். புலிகள் சர்வதேச வலையமைப்பை கொண்டிருப்பது மாத்திரமன்றி எமது அண்டைய நாடான இந்தியாவின் முன்னாள் பிரதமரையே கொலை செய்துள்ளனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து நாம் தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுகளை நடத்தி வருகின்றோம். உலக நாடுகளும் எமது கோரிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்களினால் ‘செனல் – 04’ அலைவரிசையில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வீடியோக் காட்சிகள், குறித்து எழுப்பப்பட்ட வினாவுக்கு அமைச்சர் பதிலளிக்கையில் :-

அதில் எவ்வித உண்மையும் இல்லை. புலி ஆதரவாளர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகித்து காட்டியுள்ளார்கள் எனக் கூறினார்.

இலங்கை அரசாங்கம் சார்பாக வெளிவிவகார அமைச்சு இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக ‘செனல் – 04’ தனியார் அலைவரிசைக்கு இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கி கூறியிருக்கிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சரென்ற வகையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் தொடர்புகொண்டு நான் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளேன்.

மோதலின் போது இடம்பெற்ற சூழ்நிலைகளை நாம் நன்கு அறிவோம். எம்மால் இந்தக் காட்சிகளில் உண்மை யிருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இணைய தளத்தினூடாக தற்காலத்தில் வேண்டிய மாயாஜலங்களை மேற்கொள்ளலாமென்பது சகலருக்கும் தெரிந்த விடயமேயெனவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

Read more...

காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸாரை அனுமதிக்க முடியாது. நீதவான்.

அங்குலான பிரதேசத்தில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அங்குலான பொலில் காவல் சாவடியின் பொறுப்பதிகாரி நீயுட்டன் மற்றும் 8 பொலிஸாரும் கல்கிஸை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் அச்சட்டத்தை மீறி செயற்படும் போது அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் பொலிஸார் காட்டுச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கல்கிஸை நீதிவான் தெரிவித்தார்.

நீதிமன்றில் ஆஜராகியிருந்த குற்றபுலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்சித் குணசிங்க, இளைஞர்களின் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெற்றுத்தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களை கொலை செய்வதற்கு கூட்டிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து கொல்லப்பட்டுள்ள இளைஞர்களின் இரத்த மாதிரிகள் மீட்கப்பட்டள்ளதாகவும், இளைஞர்கள் காணமல்போயுள்ளதாக பெண் ஒருவரால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டு பிரதி பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தான் குறிப்பிட்ட தினம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது நேரில் கண்ட சம்பவங்களை சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும், அதே நேரம் மேலும் 16 நபர்கள் சம்பவம் தொடர்பாக சாட்சி சொல்ல முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களில் அனேகமானோர் குறிப்பிட்ட பொலிஸ் காவல் நிலையத்தில் பணி புரிந்த பொலிஸ்காரர்கள் என தெரியவருகின்றது. சாட்சிகளில் இரு இளைஞர்களும் பொலிஸாரால் குறிப்பிட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவதை கண்டவர்களும் அடங்குகின்றனர்.

Read more...

இருசிறுமிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர் பெற்றோர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட இரு சிறுமிகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். உடல்கள் மீது பிரேதபரிசோதனை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள் தற்கொலை என தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் அத்தீர்பினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றறோர் தமது குழந்தைகள் எஜமானர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக திட்டவட்டமாக கூறுவதுடன் நியாயமான விசாரணை ஒன்றை நாடாத்துமாறு வேண்டி நிற்கின்றனர்.

இது தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தமது பார்வையை திருப்பியுள்ளதுடன் புதைக்கப்பட்ட இரு உடல்களையும் தோண்டி மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ள நிலையில் பெற்றோர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ள கருத்துக்களின் ஒளிவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலை பார்வையிட (தமிழ் ) இங்கே அழுத்தவும்.


Read more...

Wednesday, August 26, 2009

அமெரிக்க கிறீன் கார்ட் மோசடி. கணவனும் மனைவியும் கைது.

அமெரிக்க கிறீன் கார் லொட்டறி மூலம் அமெரிக்க நிரந்தர வதிவிடவுரிமை பெற்றுத்தருவதாக பெரும் எண்ணிக்கையான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்று ஏமாற்றியுள்ள பிரதான நபரும் அவரது மனைவியும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மோசடிப்பேர்வழி உப்பாலி ராஜபக்ச என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் இவரது இம்மோசடிகளுக்கு உதவிய நபர்கள் பலர் உள்ளதாகவும் அவர்களை தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளதுடன் அவர்கள் இம்மோசடிகளுக்காக பயன்படுத்திய பல வகையான போலி ஆவனங்கள், போலி வதிவிட அனுமதிகள், போலி வாகனசாரதிபத்திரங்கள் உட்பட பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

சனல்4 வின் அதிர்சி வீடியோ : இலங்கை அரசு மறுப்பு

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் பெரும் மனிதப்பேரவலம் இடம்பெற்றுள்ளதாக தொடர்ச்சியா இலங்கை அரசைக் குற்றஞ்சாட்டிவரும் இலண்டன் சனல்4 தொலைக்காட்சி வன்னியில் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோ பதிவு ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பினர் தமக்கு வழங்கியதாகவும், அவ்வீடியோ கடந்த ஜனவரி மாதம் களமுனையில் நின்ற சிப்பாய் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் அக்காட்சியை பதிவு செய்திருந்தாகவும் கூறப்படுகின்றது.

இச்சர்சைக்குரிய விடயத்தை பூரணமாக நிராகரித்திருக்கும் இலங்கை அரசு தமது படைகள் வன்னியில் புலிகளுக்கு எதிராகவே போராடியதாகவும் மக்களுக்கு எதிரான எவ்வித செயற்பாடுகளிலும் இறங்கியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

Tuesday, August 25, 2009

சப்பரகமுவ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைக் ரியுசன் வகுப்புகள் தடைசெய்யப்படுகின்றது.

ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் போயா தினங்களில் சப்பரகமுவ மாவட்டத்தில் இடம்பெறுகின்ற பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வதற்கான சட்டமுலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்டவரைவு வரையப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ முதலமைச்சர் ஜனக்க பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Read more...

ஒரிசாவில் ரெயில் நிலையம் தகர்ப்பு: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் அனில், மத்திய கமிட்டி உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பீகார், மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மாநிலங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 2 நாள் முழு அடைப்பை அறிவித்து உள்ளனர். இந்தநிலையில் ஒரிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்திலுள்ள ராக்ஸி ரெயில் நிலையத்தை மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர். மேலும் அங்கிருந்த ரெயில்வே நிலைய அதிகாரி உள்பட 3 பேரை கடத்தி சென்றனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

ராமேஸ்வரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை இலங்கை பொலிஸார் கோருகின்றனர்.

ராமேஸ்வரம் கையோரப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ் இழைஞர்களை இலங்கை பொலிஸாரிடம் பாரளமளிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். அனுசன், சரத்தபாபு, திருக்குமரன் ஆகிய இவர்கள் யாழ்பாணத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டிருந்தவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராக நீதி மன்றினால் பிடிவிறாந்து பிறபிக்கப்பட்டள்ளதாகவும் தெரியவருகின்றது.

பொலிஸாரின் வேண்டுதலை கருத்தில் எடுத்துள்ள இந்திய பொலிஸார் இவர்களை நாடுகடத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

Read more...

கொள்ளையில் ஈடுபட்ட விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கைது.

அனுராதபுரம் பிரதேசத்தில் வங்கி ஒன்றிற்கு பெருந்தொகைப் பணத்தை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை இடைமறித்து ஆயுதமுனையில் பணத்தை கொள்ளையடிக்க முற்றப்பட இருவர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும் மற்றயவர் விமானப்படைச் சிப்பாய் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்று, மகசின்கள் 2, தோட்டாக்கள் 30 என்பன மீட்கப்பட்டுள்ளது.

Read more...

ஒவ்வொரு மாதமும் 10 வங்கிகள் திவால்

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையிலும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 வங்கிகள் திவாலாகி வருகின்றன.
நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான சுமார் எட்டு மாத காலத்தில் அமெரிக்காவில் சுமார் 81 வங்கிகள் திவாலாகி உள்ளன. பொருளாதார சீர்குலைவு உச்சகட்டத்தில் இருந்த சென்ற 2008-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 25 வங்கிகள் திவாலாகி இருந்தன. அதேசமயம், நடப்பு 2009-ஆம் ஆண்டில் முதல் எட்டு மாதங்களில் திவாலான வங்கிகளின் எண்ணிக்கை இதைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

குறிப்பாக, இம்மாதம் 21-ந் தேதி அன்று ரூ.57,600 கோடி மதிப்பிற்கு (1,200 கோடி டாலர்) டெபாசிட்டுகளை திரட்டி இருந்த கேரண்டீ பேங்க் என்ற அமெரிக்க வங்கி திவாலாகி உள்ளது. இது, இன்னும் அமெரிக்க பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

Read more...

Monday, August 24, 2009

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளோரின் பெயர்ப்பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படுகின்றது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படால் உள்ளோரது பெயர்ப்பட்டியல் இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதியின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. மரண தண்டைனை நிறைவேற்றும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி இறுதி முடிவை அறிவிப்பார் என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

தற்கொலை அங்கியும் ஆயுதங்களும் மீட்பு. கோத்தபாய இலக்காம்.

கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கி, தானியங்கி துப்பாக்கி ஒன்று, அதற்கு பயன்படும் 135 தோட்டாக்கள் என்பன நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆயுதங்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து தாக்தல் ஒன்றை மேற்கொள்ள அங்கு கொண்டுவரப்பட்டதாக புலிச் சந்தேக நபர் ஒருவர் தகவல் கொடுத்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

காலித் துறைமுகத் தாக்குதலின் பிரதான நபர் கைது:

கடந்த 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காலித்துறைமுகத்தில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி கைது செய்யதப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கண்டிப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றதாகவும் தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்த லொறி மற்றும் றோலர்படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com